1.காப்பு / பாயிரம்
2.ககரவெதுகை
3. ஙகரவெதுகை
4 சகரவெதுகை
5 ஞகரவெதுகை
6 டகரவெதுகை
7 ணகரவெதுகை
8 தகரவெதுகை
9 நகரவெதுகை
10 பகரவெதுகை
11 மகரவெதுகை
12 யகரவெதுகை
13 ரகரவெதுகை
14 லகரவெதுகை
15 வகரவெதுகை
16 ழகரவெதுகை
17 ளகரவெதுகை
18 றகரவெதுகை
19 னகரவெதுகை
20 பிரதிபேதம் - ககர வெதுகை
|
** திருச்செந்தூர் அருமருந்தைய தேசிகர் இயற்றிய
** அரும்பொருள் விளக்க நிகண்டு
@1 காப்பு - பாயிரம்
#1
மகிழ்ந்து உலகு எவையும் போற்ற வன்புரங்குன்றம் வென்ற
திகம்பரன் அணங்கோர்பாகத் தெய்வநாயகன்சேய் தந்தி
முகன்தனது அடியை ஏத்தி மூது அரும்பொருள்விளக்க
நிகண்டு எனும் மணித்தீபத்தை நிலம் மிசை நிகழ்த்தலுற்றாம்
** பாயிரம்
#2
பொன் ஒளிர் கமலப் புத்தேள் நறும் துழாய்ப் பெருமான் போற்றும்
கன்னி அம் புரிசைத் தில்fலைநாதன் தாள் கருத்தில் சேர்த்திப்
பன்ன அரும்பொருள்விளக்கத்தீபிகை பகர்வேன் பாரில்
செந்நெறியுளத்தோர் யாரும் செவிமடுத்து இனிது கேள்மின்
#3
குளிர் மணி வட நீழல் கீழ்க் குலவும் எம் அடிகள் தொல் நாள்
எளிதிலா முதனூல் செப்ப இலக்கணர் இயையும் தூக்கால்
தெளி ஒரு வழிநூல் செப்பச் சிலர் சார்புநூலும் போற்றத்
தளிர்பெற இந்நூல் மூன்றும் சகம்தனில் திகழ்ந்ததன்றே
#4
ஆங்கு அது நிற்கப் பின்னும் அலகில் நூல் உதித்தவாற்றில்
தாங்கொரு சொற்பொருள் பல்விதத் தொகைதான் ஒன்றுக்கொன்று
ஓங்கி மிக்குங்கு உறைந்தும் ஒத்திடாதிருக்கைதன்னால்
பாங்கு உயர் சின்னூல் சேரும் பொருள்கூட்டும் பண்பை எண்ணி
#5
இலக்கணம் முழுது உணர்ந்தோன் இறை இரும் சிவாகமத்தின்
துலைக்கடல் முற்றும் கண்டோன் தொல்லையாம் தில்லை மூதூர்
கலக்கற விளங்கும் பச்சைக் கந்ததேசிகனாம் எம் கோன்
சொலத் திகழ் இகபரத்தை வேண்டியே தொல்லோர் கேட்க
#6
மாவியல் சிறக்கும் வீரை மண்டலவன் காங்கேயன்
ரேவணசித்தன் செஞ்சொல் கயாகரன் இவரால் சொற்ற
பாவியல் நூற்கூறு ஓர் சொல் பல்பொருள் தொகை எலாம் சேர்த்து
ஓவிலா வளம் சிறப்ப ஒரு பெரு நூலதாக
#7
நவையறு ககரம் ஆதி னகர ஈறு எதுகைதன்னால்
நுவல் அடிக்கு இரண்டும் ஒன்று நுண்பொருள் ஒருங்கு சேர்த்திச்
சுவை திகழ் சொல் விருத்தத்தொகை எழுநூறுதன்னால்
அவை நலோர் குற்றம்சொல்லார் என்பதை அகத்தின் எண்ணி
#8
சொற்றனன் அறாத் துளிக்கும் தோட்டு அலர் கடம்பின் திண் தோள்
கொற்றவேள் முருகன் செந்தில் குமரவேட்கு அடிமைபூண்ட
நற்றவ வீராசார நல் சிவப்பிரகாசன் சேய்ப்
பெற்றிசேர் அருமருந்ததேசிகப் பெயரினானே
#9
இரும் சகாத்தம் ஈரைஞ்ஞூறு இருமுந்நூறுடன் எண்பத்தஞ்சு
ஒருங்கு சித்திரபானுப் பேர்ச் சமை மகத் திங்கள் ஒப்பில்
பொரும் சிவநிசி வெள்ளிப் பேர் புனை தினம் தில்லை மன்றில்
பெருங்குணத்தோர்க்கு அரங்கேறுற்ற நூல் பெற்றிதானே
** பாயிரம் முற்றும்
** நூல்
@2 ககரவெதுகை
#1
அகவலே அழைத்தல் ஆடல் ஆன்ற ஆசிரிய முப்பேர்
தகவு அறிவுடன் ஒழுக்கம் தெளிவும் சற்குணமும் சாற்றும்
பகவதி உமையே துர்க்கை தருமதேவதைப் பேர் பன்னும்
முகவு மாளிகைமுகப்பே மொள்ளுதல் காந்திக்கும் பேர்
#2
உகம் என்ப உரகம் பூமி ஊழியே முதலே நாற்பேர்
சுகம் என்ப கிளியே நன்மை சுவர்க்கம் இன்பம் மைமைப் பேர்
முகம் என்பது இடமே துண்டம் மோகமே மயக்கம் காதல்
நுகம் என்ப மகநாள் சோதிநாள் நுகத்தாணி முப்பேர்
#3
அகலுளே பெருமை நாடு ஊர் அகலம் என்று ஓதல் நாற்பேர்
இகல் வலி பகை போர் மேவல் இகுளையே தோழி நட்பு ஆம்
புகல் உடல் குதிர் சொல் வெற்றி பொக்கமே மிகுதி பொய் ஆம்
நகல் ஒளி சிரித்தலின் பேர் நகமே வெற்பு உகிர் மரப்பேர்
#4
அகம் மான் மா மனையுள் உள்ளம் அகலம் வெற்புடன் பா அப்பேர்
சகமே மாநிலமே பாதி தகருடன் சட்டை நாற்பேர்
பகமே பெண்ணின்சின்னப்பேர் வாலமும் அதுவே பன்னும்
மகமே ஓர் நாள் யாகப்பேர் வை கூர்மை வைக்கோல் பைம்புல்
#5
பகடு என்ப கடாச் சேத் தந்தி பஃறியே பெருமை ஐம்பேர்
அகடு என்ப உதரம் நாப்பண் ஆன்ற தீங்குரையே முப்பேர்
சகடு என்ப பொய்ம்மை யோகம் சாகாடே போர்ப்பறைப் பேர்
முகடு என்ப கொடி விடங்கம் மோக்கமே தீர்தல் முத்தி
#6
அகழ் என்ப அகழி தொட்டல் அகிலமே சகம் அனைத்தாம்
பகழி ஆசுகம் குழிப் பேர் பகண்டை சில்லைப்புள் சிவேதை
புகழ் என்ப அகத்தி வாகை போற்றுறும் சீர்த்தி முப்பேர்
சிகழிகை மயிர்முடிப் பேர் வாசிகை திகழ் தேம் மாலை
#7
ஆக்கையே உடலத்தின் பேர் அயில் கணை வீக்கும் பாசம்
சேக்கையே முலை தழும்பு திகழ் பாயல் கடகராசி
சாக்கையே நிமித்திகன் பேர் பேய் உண்டி அதற்கும் சாற்றும்
தீக்கையோன் சிவனே ஆசான் சிகண்டி கேகயம் அலிப் பேர்
#8
ஆக்கமே பொன் செல்வம் பேறு அதிகம் பூ மின் மெய் கேடு ஆம்
தூக்கமே நிவப்புத் தொங்கல் துயில் எனும் முப்பேர் செப்பும்
பூக்கமே வலியின் நாமம் புரியுடன் கமுகும் போற்றும்
நோக்கமே அழகு பார்வை நொய்திலா உயர்ச்சிக்கும் பேர்
#9
அகரம் ஓர் எழுத்தே சேரி அகப்பா வேணகையுள்மேடை
மகரமே இராசி காதல் மலர்த்தூளே சுறவே நாற்பேர்
தகரமே மயிர்ச்சாந்து ஈயம் தகரம் தண் மணம் புன்கின் பேர்
ஒகரம் ஓங்காரம் மஞ்ஞை ஊகித்தல் நினைத்தல் ஓர்ப்பு ஆம்
#10
தகையே ஏர் கவசம் பண்பே தளர்வு அன்பே பெருமை நீளம்
முகையே பூமொக்குளின் பேர் மொழிந்த நீர் மிடாவும் போற்றும்
தொகையே ஆசிரியம் கூட்டம் சோகம் மால் கவான் திரட்சி
நகையே பல் ஒளி மலர்ச்சி நகையுடன் இகழ்ச்சி ஐம்பேர்
#11
அகளமே மிடா ஆம் அப்பேர் ஆகவம் புவி போர் வாசி
துகளாதல் தூளே குற்றம் தொக்கே கூட்டம் துவக்கு ஆம்
சகளியே கருமுகைப் பேர் தராதலம் இருபேர் காட்டும்
உகளமே இரண்டு இட்டப்பேர் ஊக்கலே நினைத்தல் ஊர்தல்
#12
மகடு பெண் குழலிசைப் பேர் மகன் மைந்தன் புருடன் மாக்கள்
தகடு இலை ஐம்மைக்கும் பேர் தக்கை ஓர் பறையே தெப்பம்
முகடி என்பதுதான் தவ்வை முழுமகன்தனக்கும் பேசும்
மகுடமே முடியுறுப்பு மவுலி என்று இரண்டும் ஆமே
#13
தகைமையே குணமே ஆட்சி சான்றாண்மை எனவே முப்பேர்
புகை என்ப தூமம் காதம் பூக்குதல் நினைத்தல் தோன்றல்
திகை திசை சுணங்கின் நாமம் சேகு என்ப வயிரம் மாசு ஆம்
பகை இகல் அடித்தல் சாதல் பகர்தலே விற்றல் பேசல்
#14
அக்கு எனும் நாமம் சங்கோடு அம்பகம் விடைமுரிப்பு ஆம்
நக்கனே விடையோன் பிண்டி நாதன் நிர்வாணிக்கும் பேர்
பக்கணம் வேடர்வீதி பட்டணம் சிற்றூர் முப்பேர்
தக்கன் எண் பாம்பில் ஒன்று மால்மகன் தனையன் சாற்றும்
#15
எக்கலே ஊர்தியேறல் சொரிதல் என்று இரண்டும் ஏற்கும்
சிக்கலே இளைத்தலின் பேர் கிடைத்தலும் தடையும் செப்பும்
ஒக்கலே குடி சுற்றப்பேர் ஒப்புறல் அதுவும் போற்றும்
முக்கோல் அந்தணர்தம்கைக்கோல் சிராவணநாள் மொழிப் பேர்
#16
ஆகமே காயம் மார்பம் அகர் பெரு மரம் அகில் பேர்
யோகமே தியானம் கூட்டம் உச்சாயம் போர்க்கு உபாயம்
சாகமே தாழை தேனீ தேக்குச் சாகினி வெள்ளாடு ஆம்
காகமே அரிட்டம் கீரி கற்பகம் அவிட்டநாள் பேர்
#17
மேகராகப் பேர் ஓர் பண் மிளிர் சிறுகீரைக்கும் பேர்
மாகதர் ஓடர் பாடவல்லோர் மற்றொருதேயத்தோர்
கேகயம் அசுணம் மஞ்ஞை கிளர்ந்தபாட்டு ஓர் தேயம் வில்
பாகனே வலவன் புந்தி பக்கியே குதிரை பல் புள்
#18
வேகமே அகறல் கோபம் விரைவுடன் உடம்பே கீழ் ஆம்
பூகமே திரட்சி கூந்தல் பூகம் பூங்கமுகும் போற்றும்
கோகமே அற்பம் நேமிக் குருகு என்றும் கூறற்பாலாம்
மாகமே படையெழுச்சி வான் தலை திரு வாழ்வு ஐம்பேர்
#19
நோக்கலே காத்தலின் பேர் காணலும் நுவலற்பாற்றே
பாக்கு இடைச்சொல் துவர்க்காய் எதிர்காலப்பண்பே முப்பேர்
போக்கு உரை நடத்தல் குற்றம் பொய் பதடிப் பேர் என்ப
மீக்கோள் ஏறுதலின் நாமம் மேற்போர்வை பொலிவும் ஆமே
#20
ஆகரம் கடலே ஆகம் ஆர்ந்திடும் உணவே முப்பேர்
சீகரம் கரகம் வீசு திவலை வெண் கவரிக்கும் பேர்
சாகரம் துயில்தணத்தல் தண் கடல் எனவும் சாற்றும்
சேகரம் சிகார் தேமாச் செம்பொன் மா மவுலிக்கும் பேர்
#21
சாகினி சேம்பு சாகம் சகி என்ப பொறை சேடிப் பேர்
போகில் கொப்பூழ் பூமொட்டுப் புள்பொது எனவும் போற்றும்
கோகிலம் உள்துளைப் பேர் குயில் பல்லி குரக்கும் செப்பும்
போகி இந்திரனே பாந்தள் புகுதியே வருவாய் வட்டை
#22
அகறலே குதித்தல் ஓர்ப்புக் கழிவுடன் அகலம் நாற்பேர்
சிகரி கோபுரமே நாரை சீறு எலி வரை கிரீடம்
இகரம் ஓர் எழுத்தே சந்தம் ஏகலே போதல் நாவாய்
ககனம் விண் படை கான் பல் புள் ககமே வெம் கணை புள் ஆமே
#23
இக்கு என்ப கரும்பின் நாமம் இரதம் ஆர் கள்ளுக்கும் பேர்
குக்குடம் கோழியின் பேர் சிறகுடைப் பாந்தள் கூறும்
சிக்கமே குடுமி உச்சம் சிறை உறி ஓர் புள் சீப்பு ஆம்
சுக்கையே உடு தே மாலை சுகியே புள் சுகமும் ஆமே
#24
நக்கலே ஒளியே சொன்றி நகைத்திடலுடன் உண்டல் பேர்
மொக்குளே புற்புதப்பேர் குமிழ்ப்புப் பூமுகை என்று ஆகும்
கைக்கிளை யாழ்நரம்பு ஓர் பா ஒருதலைக்காமப்பேர்
வக்கிரம் கொடுமை மீளல் மடங்கல் போய் நிமிர்தல் வட்டம்
#25
மகிழ்நனே கொழுநன் நாமம் மருதத்தின்தலைவன் வைக்கும்
சகுனமே கிழங்கு நாரை சாற்றிய நிமித்தம் புள் பேர்
எகினமே புளிமா நாயே கவரிமா வனப்புள் நீர்நாய்
சகுனி புள்நிமித்தம்பார்ப்போன் சகுந்தம் மீன்பொதுப் புள் பூகம்
#26
அகி அரா இரும்பின் நாமம் ஆகாரம் வடிவம் நெய் ஊண்
திகிரியே வட்டம் ஆழி தேருருள் தேர் யாழ் வெற்பு ஆம்
துகிரிகை பூசும் சாந்தே சொற்ற சித்திரமே என்றாம்
நெகிழியே சிலம்பும் தீயும் நெருப்புறு கொள்ளிக்கும் பேர்
#27
துகிலிகை எழுதுகோலே சொல் துகில்கொடியும் கூறும்
வகிர் வகிர்ந்திடலே வார் ஆம் வகுப்பு என்பது அழகே வர்க்கம்
சிகி பரிபுரமே மஞ்ஞை தீதுறு கேதுத் தீ ஆம்
சுகிருதம் நேயம் நன்மை சுகரே ஓர் முனி சொர்க்கத்தோர்
#28
மேகலை உடுத்த ஆடை விளங்கு அரைப்பட்டிகைப் பேர்
பாகலே காரவல்லி பலா என்றும் பகரற்பாற்றே
போகலே பொலிவு நீளல் அளவின்மை அதற்கும் போற்றும்
சாகளம் தகரின் நாமம் சமர்செய்பூமிக்கும் ஆமே
#29
வாகுவே அழகு தோள் பேர் மகிழே ஓர் மரம் களிப்பு
ஆகுவே எலி கொப்பூழும் ஆம் பெருச்சாளிக்கும் பேர்
காகுளி வில்பூட்டோசை களத்தொலி தவிசே முப்பேர்
ஆகுலம் ஒலி நடுக்கம் அருச்சனை துன்பம் நாற்பேர்
#30
வீக்கு என்ப விசித்தலின் பேர் மிகுதி ஓர் கணிதம் முப்பேர்
தேக்கு என்ப கழுகு ஓர் தாரு திகழ் உளத் தெகிட்டற்கும் பேர்
தாக்கு என்ப சமரே வீரம் சாகையே சினை வேதப்பேர்
மேக்கு என்ப மேல்திக்கின் பேர் மேல் உம்பர்தனக்கும் ஆமே
#31
மாகதி அதிக வேகம் அதிமதுரப்பேர் வைக்கும்
சாகசம் மெய்ம்மை நாமம் சத்துவம் மதகும் சாற்றும்
போகர் ஓர் முனிவன் வீரர்புணர்ப்பு உயர் விடரும் போற்றும்
ஆகையே ஆகலின் பேர் அவாமமும் பலத்துக்கும் பேர்
#32
சகுலி மீன் ஒலி ஆம் காகோதரம் பாம்பு ஓர் புண் மோடின் பேர்
குகுமதி மறையிராவே குலவும் ஓர் நாடிக்கும் பேர்
புகுடியே அணிகலன் பேர் பொற்பு உயர் புரூரும் போற்றும்
வெகுளியே அடங்காமைப் பேர் வெம் சினம் அதுவும் ஆமே
#33
தொகுதியே நெருக்கம் கூட்டம் சொற்றிடு திரட்சி முப்பேர்
பகுதியே கொடிப்படைப் பேர் பகுத்திடல் இரண்டும் பன்னும்
தகுதியே பொறை ஒழுக்கம் தக்க நல் அறிவும் போற்றும்
நகுலியே கீரி ஓர் கோ நகாயுதம் குரங்கே சிங்கம்
#34
புகர் என்ப ஒளி கேழ் குற்றம் புற்கென்றல் எழில் மழைக்கோள்
பகர் சொன்றி அருவியோடு பற்று உயிர் கொக்கு ஒன்பான்பேர்
தகர் என்ப அகிலம் ஆடு தகர்த்தல் என்று ஓதல் முப்பேர்
மகரந்தம் மலர்ப் பராகம் வரு நறாவுடன் வண்டு ஆமே
#35
உக்கமே மருங்கின் பக்கம் ஒண் மருங்கு ஆலவட்டம்
குக்குடம் சுரபி செந்தீ கொழு விடை முகம் ஏழ்பேர் ஆம்
பக்கமே அருகு நட்புப் பறை திதி அடைக்கலப்பேர்
ஒக்கமே அகலம் அற்பம் ஒழிவுறாப் பொலிவும் ஆமே
#36
சக்கரம் பெருமை ஓர் புள் தரணி தேருருளே ஆழி
மிக்கரு வரை சூழ் வட்டம் மிளிர் நகை பிறப்பு ஒன்பான்பேர்
கொக்கரை வளையே சங்கே குதை வில் வெம் பணியே நாற்பேர்
அக்கரம் எழுத்தின் நாமம் அயரும் நோய் ஒன்றும் ஆமே
#37
ஊக்கமே வலி தாளாண்மை உளம்மிகுத்திடலே உண்மை
நீக்கம்இல் விரிவு உயர்ச்சி ஆறுமே நிகழ்ந்த நாமம்
பாக்கமே புறம்பணைக்கு ஆம் பதி பெரும் கிராமம் பன்னும்
சூக்கமே சுரும்பே அற்பம் சோகு பேயுடன் பேய்ச்சோறு ஆம்
#38
பகலே ஓர் முகுர்த்தம் நாளே பலபாடே நடுவே தேசு
பகலவன் செயலே பாகு நுகத்தாணி ஒன்பான்பேர் ஆம்
இகலனே நகுலம் ஓரி ஏகம் ஒன்று உயர்ந்த முத்தி
அகலம் மார்புடனே பூமி விரித்துரை அகலம் நாற்பேர்
#39
தோகையே வால் முன்றானை சுற்றாரல் தூவி மஞ்ஞை
வாகை சேர் எழில் பதாகை மயிற்பீலியுடன் ஏழ்பேராம்
ஈகையே கொடை காற்றுப் பொன் இண்டை கற்பகம் இல்லாமை
ஓகையே வருவசொல்லல் உவகைக்கும் புகலற்பாற்றே
#40
சிகரமே குவட்டினுச்சி திவலை வெற்புடனே சென்னி
எகினமாக் காக்கை தெண்ணீர் எறி திரை என ஏழ்பேர் ஆம்
பகவன் மால் ஈசன் புத்தன் பங்கயன் சினனோடு ஐம்பேர்
நிகர்தலே நிறைதல் ஒப்பு ஆம் நெகிழ்தலே குழைவே விள்ளல்
#41
சக்கிரியே குலாலன் தராபதி தறுகண் பாந்தள்
இக்கு வேள் தாதை செக்கு ஆன் கருப்பு ஆலை கதலி ஏழ்பேர்
கொக்கு அயம் செந்நாய் மூலம் குரண்டம் மாக் குருக்கத்திப்பேர்
சொக்கு ஒளிர் பசும்பொன் சோர்வு சொல்லரும் எழில் முப்பேரே
#42
பொகுட்டு என்ப முளரிப் பைம்பொன் பூங்கொட்டை துளையும் சேற்றின்
மிகுத்திடு கொப்புள் நீண்ட மால் வரை விளங்கும் முப்பேர்
பகுத்திடல் பாதிசெய்தல் தறித்திடல் எனவும்பாற்றே
முகிழ்த்தல் வாளாகிடத்தலொடும் கற்கும் மொழி பேர் ஆமே
#43
பாகமே பாதியின் பேர் பல கூறு ஓர் கணிதம் பிச்சை
வேகம் ஆர்பதம் பட்டாடை விளங்கும் நாமங்கள் ஆறாம்
சூகரம் கரம் பன்றிப் பேர் துகிரே செம்பவளம் சேப்பு ஆம்
நாகரம் ஓர் தேயச் சொல் சீவன் ஒன்று எனவே நாட்டும்
#44
கை கரம் படையுறுப்புக் கருத்துடன் ஒழுக்கம் தங்கை
மொய்வு இடம் ஒப்பனைப் பேர் முதிர் கீழ்மை சார்பு ஒன்பான்பேர்
மை கறை மேகம் ஆடு மலடே அஞ்சனம் குற்றப்பேர்
வைகல் வைகறை நாள்தங்கல் உரியன கழிவும் வைக்கும்
#45
கோகனகம் சரோரம் குளிர்கையாம் தகரை வெய்ய
மோகம்செய் நிலக்கடம்பு என்று உரை அபிதானம் மூன்றாம்
பாகவன் தழல் தீத்தேவு ஆம் பாகர் கண் மதில் சூதர்க்கு ஆம்
சூகை என்பதுவே யானை சொற்ற சிற்றிற்கும் பேரே
#46
இகுத்தலே அழைத்தல் ஈதல் எறிதலே செகுத்தல் வீழ்த்தல்
வகைப்படத் துடைத்தல் தாழ்த்தல் வருத்திடல் எண்பேர் ஆகும்
அகைத்தலே நோய் ஒடித்தல் அறுத்திடல் உயர்த்தலோடே
மிகைப்படும் எழுச்சி மோதல் விளம்பு பேர் இருமூன்று ஆமே
#47
நாகமே குரங்கு புன்னை ஞாழல் வெற்பு யானை தூசு
மாகம் கால் அகி காரீயம் வளர் சொர்க்கம் பன்னொன்றேபேர்
ஊகமே கருங்குரங்கோடு உடற்குறை விலங்கின் கூட்டம்
போகிலாத் தர்க்கம் சங்கை பொருபடை வேங்கை ஏழ்பேர்
#48
பாகு என்ப பருப்புப் பாக்குப் பரணி பால் பகிர்ச்சி பாகன்
பாகம் சர்க்கரை ஆறு ஆணம் பரை கரை ஈராறேபேர்
நாகு என்ப சங்கு காரான் நத்தை ஆன் நீர்வாழ்சாதி
மோகம்கொள் பெண்பால் ஈனா இளமை முள்மரம் எண்பேரே
#49
தூக்கு என்ப ஒலி பாண் கூத்துத் துலாம் தொங்கல் அயல் ஆராய்தல்
தூக்கணங்குருகே பாரம் சொற்றிடும் உவமை விற்றல்
நீக்கம்இல் நிவப்பினோடே நிறுத்திடல் குரவன்தன்னோடு
ஆக்கிய சிக்கம் என்னும் அபிதானம் மூவைந்து ஆமே
#50
வாகையே திறம் முயற்சி வனப்பு உயர் வெற்றி சால்போடு
ஈகை நல்லொழுக்கம் கல்வி இயல் அறத்துறையே உண்மை
போகை சேர் மிகுதி பண்போடு ஒரு மரம் அரும் தவங்கள்
மோகம் ஆர் முடமே என்று மொழி நாமம் ஈரெட்டு ஆமே
#51
வழுத்துறு மெய் மூவாறின் வருகின்ற ககரமாதி
எழுத்து எதுகையினில் செய்யுள் ஐம்பான் என்று இசையச் செய்தான்
பழுத்த செஞ்சுடர் வேலால் சூர் பக எறிந்தோன் பொன் பாதம்
அழுத்துறும் இதையன் செந்தில் அருமருந்தையன்தானே
** ககரவெதுகை முற்றும்
@3 ஙகரவெதுகை
#1
அலங்கு பல் மணி கொழிக்கும் அணி கிளர் சரவணத்தின்
இலங்கு மூவிருமுகத்தோன் எம்பிரான் தேவர்சேனை
கலங்குறாவண்ணம் காத்த காரணன் பாதம் போற்றித்
துலங்கியே வரு ஙகாரவெதுகையின் தொடையைச் சொல்வாம்
#2
அங்கியே ஆன்மாச் செந்தீ ஆரல் நாள் அரைச்சட்டைப் பேர்
பைங்கதிர் பனி வெண்திங்கள் பகர் நெல் ஆதிய குரல் பேர்
சிங்கி ஓர் மருந்தின் நாமம் தீம் கடுவுடன் ஓர் ஆடல்
பங்கியே ஆண்மயிர்ப் பேர் பல் பிற மயிரும் ஆமே
#3
தேங்கலே மெலிவின் நாமம் திகழ் அச்சக்குறிப்பு எனும் பேர்
வாங்கலே கொளல் அழைத்தல் வளைதலோடு இசைத்தல் நாற்பேர்
தாங்கலே படுகர் தாங்கல் சாற்று உளக்குறையே முப்பேர்
ஏங்கலே மிகுந்த ஓசை இசைக்கும் ஏக்கப் பேர் ஆமே
#4
மங்கலி சுமங்கலிப் பேர் மஞ்சிகன் எனவும் ஆமே
சங்கரி துமித்தல் நாமம் தாணுவின்தேவி மாயோன்
அங்கதம் வசைச்சொல் வெந்தீ அரவு தோளணி மார்பம் பொய்
புங்கவம் நந்தி அம்பு பூங்கற்றே செவ்வி பூதம்
#5
சுங்கனே மழைக்கோள் ஆயத்துறைபவன் பேரும் சொல்லும்
மங்களன் செவ்வாயின் பேர் மணம்பொருந்திடுவோன் வைக்கும்
அங்கமே என்பு தேகம் ஆறங்கம் கதுப்பே யூகம்
சிங்கமே யாளி சீயம் செங்கை ஆதிரைநாள் கைப் பேர்
#6
அங்கையே அத்தநாள் பேர் ஆன்ற கைத்தலமும் செப்பும்
கங்கமே எருவை பாறு கழறும் சீப்புடனே முப்பேர்
கொங்கு ஒரு தேயம் தாது குளிர் மணம் தேறல் நாற்பேர்
கிங்கரம் தணவா அன்பும் கிளத்து தூதுக்கும் பேரே
#7
பொங்கலே பொலிவு உயர்ச்சி பொருந்துறு நிறைவே முப்பேர்
மங்கலம் பொலிவின் நாமம் மடப்பமோடு எழில் குணப்பேர்
பிங்கலம் பொன்மை பூசை கபிலம் ஆன் நிறமும் போற்றும்
இங்குலிகப்பேர் சாதிலிங்கமும் சிவப்பும் ஏற்கும்
#8
பொங்கரே இலவு சோலை புறம்பே பூஞ்சினையே வெற்பு ஆம்
அங்கிதம் உடல் தழும்பே அங்கிகாரமுமே என்ப
மங்குல் விண் இருள் மேகப்பேர் மங்கை ஓர் பருவம் பெண் ஆம்
பிங்கலை ஓர் வாய்வின் பேர் பிறழ் ஆந்தைதனக்கும் ஆமே
#9
புங்கமே உயர்ச்சி அம்பே பொரும் அம்பின் குதையே தூசு ஆம்
திங்கள் அம்புலி மாதப்பேர் தெங்கே தாழை தித்திப்பு ஆம்
வங்கரே கொலைஞர் கற்றோர் வழுத்தும் ஓர் தேயத்தோர்க்கு ஆம்
அங்கணம் முற்றம் சேறே ஆம் சலதாரைக்கும் பேர்
#10
கங்கபத்திரமே வாளி கழுகின்தன் சிறகும் காட்டும்
சுங்கமே திறையளத்தல் சொற்ற ஆயத்துறைப் பேர்
வங்கணம் கத்திரிப் பேர் கேண்மைக்கும் வழுத்தற்பாலாம்
கங்கணம் கமண்டலப்பேர் கரத் தொடி அதுவும் ஆமே
#11
சங்கு என்ப வளைகோடே புள் சங்கை பேயுடனே ஐயம்
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் ஏற்கும்
கங்கு என்ப வரம்பின் பக்கம் கருந்தினை கழுகு பாறு
இங்கு என்பது இவிடம் காயம் இலிங்கமே குறி குலிங்கம்
#12
செங்கோடே ஓர் மலைப் பேர் செருந்திக்கும் பொருந்தி நிற்கும்
அங்காரகன் பேர் செவ்வாய் அடர்த்த செந்தழற்கும் போற்றும்
செங்காவி அலர் சேதாம்பல் சீரைதோய்த்திடுஞ்செங்கல் பேர்
பைங்கூழே பயிர் நோயின் பேர் பாங்கர் என்பது இடம் பக்கம்
#13
பாங்கு என்பது அலங்கரித்தல் பகர் எழில் முயற்சி ஆட்சி
ஞாங்கர் வேல் பக்கம் முன்பே மேலிடம் நவிலற்பாலாம்
சோங்கு நாவாய் மறப்புச்சொல் குருகு எனவே முப்பேர்
வேங்கை பொன் மரம் புலிப் பேர் வெங்கோலே கொடுங்கோல் பல்லம்
#14
ஓங்கலே வரை மேடு யானை உயர்வு பாயம் வேய் நாவாய்
இலாங்கலி தெங்கு காந்தள் உழுபடை எனவே முப்பேர்
தூங்கல் கூத்து யானை தூக்கம் சோம்பு சாத் தாழ்வு ஓர் ஓசை
காங்கயம் செவ்வேள் ஆண்மை கனத்தவன் பணி பொன் நாற்பேர்
#15
பங்கமே தூசு பின்னம் பதிந்த சேறுடனே குற்றம்
தங்கு தொல்வினையே என்னச் சாற்றும் ஐம்பேரும் சொல்லும்
வங்கம் ஓர் தேயம் வெள்ளி வழுதலையுடன் கருத்துப்
பொங்குறு நாவாய் ஈயம் போற்றும் பேர் இருமூன்று ஆமே
#16
சங்கமே கணைக்கால் ஓர் எண் சவை சங்கு புலவர் நெற்றி
பொங்கு கைவளையினோடு பொருந்துறக் கூடல் எண்பேர்
தொங்கலே பீலிக்குஞ்சம் தூக்குடன் துயில் பூமாலை
சிங்கல்இல் கவிகை தெய்வவுத்தி என்று அறுபேர் செப்பும்
#17
நூங்கரே நுறுங்கல் தேவர் நுங்கலே விழுங்கல் நோய் ஆம்
வீங்கலே மிகுதி வீக்கம் வெம் கதிர் அழல் வெய்யோன் ஆம்
தீம் களே நறவம் சோரம் சிங்கலே எஞ்சல் கேடு ஆம்
ஈங்கு ஓர் முண்டக அல்லிப் பேர் இவ்வுழை எனலும் ஆமே
#18
துதிபெறும் இரண்டாம் மெய்யாய்ச் சொற்பெற வரு ஙகார
எதுகையின் உற்ற செய்யுள் இசைய ஈரெட்டாய்ச் செய்தான்
கதிர் விரி தடக்கை வேலான் கந்தவேள் மணிப் பொன் தண்டை
அதிர் கழல் வணங்கும் செந்தில் அருமருந்தையன்தானே
** ஙகரவெதுகை முற்றும்
@4 சகரவெதுகை
#1
கொலை கிளர்ந்து ஒளிரும் செய்ய கூர் இலை வடிவேல் தாங்கும்
மலை செறி கடகத் திண் தோள் மஞ்ஞை வாகனத்து எம் பெம்மான்
முலை முகிழ்க் குறமின்கேள்வன் மூவிருமுகனைப் போற்றிக்
கலைவலோர் புகழ் சகாரவெதுகையின் கவியைச் சொல்வாம்
#2
கோசரம் சிவல் இப் புள் பேர் கூர்மைக்கும் புரிக்கும் வைக்கும்
ஊசலே உஞ்சல் ஊசல் ஒசிவே நுண்மை சாயல் பேர்
கூசலே வெஃகல் அச்சம் குசம் என்ப விருக்கம் தெர்ப்பை
கேசரம் மகிழ்மரப்பேர் கிளத்து பூந்துணர் தேனீ ஆம்
#3
அசதி ஈரெட்டாண்டின்பெண் அயர்வுடன் ஓர் கோவைப் பேர்
கசிவே ஆகுலம் இரங்கல் காதல் வேர்வுடன் அன்பு ஆகும்
பிசிவே ஒட்டல் நடத்தல் பிசிதம் பொய் இறைச்சி வேம்பு
நொசிவே நோய் வருத்தத்தின் பேர் நுண்மைக்கும் புகலலாமே
#4
ஆசையே திசை பொன்னே மால் ஆசுகம் அம்பு காற்று ஆம்
காசையே நாணல் காயா கசை என்ப கவசம் நாண் ஆம்
பூசையே பூனை பூசை பொச்சை என்பது கான் வெற்பு ஆம்
ஓசையே கதலி சீர்த்தி ஒலி எனும் முப்பேர் ஆமே
#5
முசலியே கோம்பி தாழை மொய் வலி உடும்பே முப்பேர்
அசம் மறி மூவாண்டின்நெல் அசனியே உருமு வச்சிரம்
கசம் நறுந்தாது இரும்பு களிற்றுடன் அளவுஒன்று ஆகும்
கசடு ஐயம் மலினம் குற்றம் சகடு எனும் நாற்பேர் காட்டும்
#6
பாசமே பேய் நூல் ஊசிப்படுதுளை கயிறு என்று ஆமே
வேசரி கருத்தபம் கோவேறு எனும் கரம் விளம்பும்
காசறை மயிர்ச்சாந்தின் பேர் கஸ்தூரி மணிப்பொதுப் பேர்
ஈசன் மால் அரனே வேதன் எவற்றுக்கும் இறை என்று ஆமே
#7
உசிதமே நீர் வளைத்தல் அதிசயம் அழைத்தல் ஓதும்
இசி ஒன்றை இணுங்குதல் பேர் இசித்திடல் சிரித்தல் முப்பேர்
பசி உதரக்கனற்கும் பரசுதற்கும் பேர் வைக்கும்
மசி மதித்திடல் கார் மை ஆம் வசந்தன் ஓர் கவி வேள் தென்றல்
#8
மூசல் மொய்த்திடல் சாவு என்ப முசுவே ஓர் வளல் முசுப் பேர்
கீசகம் குரங்கு தட்டை கிளர்த்திய தலைத்திராணம்
வீசலே எறிதல் ஈதல் மிகுத்திடல் பரத்தல் நாற்பேர்
பாசறை பன்னசாலை பாடிவீடு இரண்டும் ஆமே
#9
உச்சி நண்பகல் முடிப் பேர் ஒசித்திடல் முறித்தல் சாய்த்தல்
வச்சிரம் சதுரக்கள்ளி வயிரம் வெம் குலிசம் முப்பேர்
நொச்சி சிற்றூர் மதில் பேர் நுவல் சிந்துவாரம் என்ப
மிச்சில் போம்பொருளே எச்சில் வீசம் ஓர் கணிதம் வித்து ஆம்
#10
ஆசிடை கூட்டம் சீரை வாழ்த்தும் என்று அறைதல் முப்பேர்
தேசிகம் எழில் நல் காந்தி செம்பொன் ஓர் நடம் திசைச்சொல்
ஆசினி பலா விசேடம் மரவுரி மரம் விண் சேகு ஆம்
தாசி சொல் பரணிநாள் பேர் அடிமைக்கும் சாற்றலாமே
#11
விசுவமே நெடுமால் பூமி விசாலமே பொலிவு தாவல்
வசு என்ப செம்பொன் தேவர் வன்னி கோதனம் நாற்பேரே
பசு என்பது இடபம் சீவன் பற்று உறும் பெற்றம் முப்பேர்
பிசுனம் கொண்டியமே கோளே பேசுறும் பொய் என்று ஆமே
#12
குச்சு என்ப சிற்றில் குற்றி குலவும் பாவாற்றி முப்பேர்
நச்சு என்ப விடம் புண்மூக்கு நவின்றிடு விருப்பம் முப்பேர்
கச்சு என்ப கைப்பே மீனே கனல் முலைக்கச்சு எனும் பேர்
அச்சு என்ப கழற்காய் கூட்டல் கம்பி வாங்கற்கு ஓர் அச்சு ஆம்
#13
பாசியே நாரம் ஞாளி பசாசு எனும் முப்பேர் ஓதும்
வாசி மா ஓதல் தெற்கு ஆம் மச்சம் பொன்னுரை மச்சப்பேர்
தேசியே எழில் சுணங்கன் திசை திக்குத் திகிரி என்று ஆம்
கோசிகம் சாமவேதம் கோடுஇல் நல் படாமும் ஆமே
#14
பசும்புல் பைங்கூழே சட்பம் பசுமையே கேசம் பைம்மை
விசும்பு விண் ககுபம் மேகம் விளங்கிய துறக்கம் நாற்பேர்
தசும்பு செம்பொன் குடப்பேர் தாசு சேகண்டை வல் ஆம்
அசும்பு பைம்புல் கூவல் பேர் அசூசமே நாசம் நாய் ஆம்
#15
கொச்சி ஓர் புதரே தீவு ஆம் குச்சம் கொண்டியம் தெர்ப்பைப் பேர்
பிச்சியே கருமுகைப் பேர் பித்துளோன்தனக்கும் வைக்கும்
துச்சிலே ஒதுக்கிடத்தோடு அணிந்திடு சூட்டும் சொல்லும்
சச்சையே இகழ்ச்சி தேய்வை சட்டை வெற்பகம் குற்றப்பேர்
#16
அசி படைக்கலம் வாளின் பேர் அவமதி சிரிப்பும் சாற்றும்
நிசி இரா மஞ்சள் பொன் ஆம் நேசம் கொந்தளம் நேயப்பேர்
பிசிபே பொய் வெண்சோறோடு பேசும் நூற்பொருளே முப்பேர்
சுசி கோடை சுத்தம் வெண்மை சுடர்த் தழல் எனும் நாற்பேரே
#17
குசை பரி சுவலில் தோன்றும் கூந்தல் கூர் கலினம் தெர்ப்பை
வசை பழிமொழிப் பேர் குற்றம் மாசி ஓர் புதரே மாதம்
அசை நிலை மேம்பாடு ஓதல் எழுத்து இரண்டு உறழ்தல் ஆகும்
விசை விரைவுடனே வெற்றி மிசை சேடம் உயர்வே சோறு ஆம்
#18
அச்சுதன் மால் கேடில்லான் அசைத்தல் சொல்லுலாவல் கட்டல்
எச்சமே குறை சேய் ஆகம் ஏசியே கிளி இகழ்ச்சி
கச்சையே தழும்பினோடு கயிறு மெய்க்கவசம் முப்பேர்
பொச்சாப்பே மறவியின் பேர் பொல்லாங்கு என்று இரண்டும் ஆமே
#19
ஊசியே சூசி கண்டம் உசாத் தேர்ச்சி உலாவல் என்று ஆம்
பூசல் ஆயோதம் ஓசை புலர்த்தல் ஒப்பனையே நாற்பேர்
தேசிகன் ஆசான் தேசாந்திரி எனும் இருபேர் செப்பும்
நாசி சார்விடமே மூக்கு ஆம் நசை இச்சை ஒழுக்கத்தின் பேர்
#20
மிச்சமே பொய்ம்மை மிஞ்சல் விசித்திரம் அழகு மேன்மை
கொச்சை வெள்ளாட்டின் நாமம் இளைத்தலின் பேரும் கூறும்
அச்சமே அகத்தி ஐம்மை அஞ்சலி எனவே முப்பேர்
நிச்சயம் என்னும் நாமம் துணிவும் மெய்ம்மையும் நிகழ்த்தும்
#21
ஓச்சலே எதிர்த்துவீசல் உலகு ஓம்பல் ஓய்தல் முப்பேர்
பாச்சலே எழுச்சி பாய்தல் பசும்பிடி இலை தமாலம்
காச்சலே காய்தலின் பேர் கோபமும் கழறற்பாற்றே
தோச்சலே பிரைசேர்வெண்பால் புனலாடல் துவளல் முப்பேர்
#22
கோசமே மதிலுறுப்பு ஆண்குறி முட்டை முறை பண்டாரம்
காசுஇல் பொத்தகம் நீள் வீதி கரு கூலம் என்று ஒன்பான்பேர்
பாசனம் சுற்றம் பாசம் பாண்டம் உண்கலனே நாற்பேர்
வாசமே இருப்பிடம் பூமணம் பல் புள் சிறகே தூசு ஆம்
#23
கச்சமே கரிக்கழுத்தில்கயிறு அளவொடு மரக்கால்
நிச்சயத் துணிவு கூர்வாள் நினைத்தல் அங்கவடி ஏழ்பேர்
பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையும் பேசும்
இச்சையே பொய்த்தல் ஆசை இடித்தல் அஞ்ஞானம் நாற்பேர்
#24
இசை உரைக்கிளவி பாட்டோடு இசைப்புடன் புகழே வண்மை
திசை ஒளிர் பணத்தினோடே தித்திப்பு என்று எண்பேர் வைக்கும்
விசையமே பருதிவட்டம் வெற்றி சர்க்கரை வையப்பேர்
அசைதலே தங்கல் நோதல் அசனம் பட்டினி பல் உண்டல்
#25
ஆசானே புகர் பொன் சுவாமி அயர்வுஇல் பாலைத்திறப்பண்
தேசாரும் செவ்வேள் என்றே செப்பும் நாமங்கள் ஐந்தாம்
ஆசாரம் அறிவு ஒழுக்கம் ஆடை பெய் மழை காட்சிப் பேர்
தாசோகம் ஒட்டகப்பேர் தருமம் என்று இரண்டும் ஆமே
#26
ஆசு கைக்கருவி குற்றம் அற்பமே கவசம் ஓர் பாட்டு
ஏசுஇலாச் சடுதி ஆசோடு எல்லாம் என்று உரைத்தல் எண்பேர்
தூசு போர்ப்படைவகுப்புத் துகில் யானைப்புரசை முப்பேர்
காசு நல் செம்பொன் கோழை கதிர்மணிப்பொதுக் குற்றப்பேர்
#27
செச்சையே வெட்சி ஆடு செறி சந்தக்குழம்பு நீறு
பொச்சை ஆம் காடு சோடு புகன்ற இப்பேர்கள் ஆறாம்
பச்சையே தோல் இலாபம் பரிமளம் புதன் மால் புந்தி
மெச்சு பை ஒளி விரிக்கும் மென் மரகதமும் ஆமே
#28
சசி நிலவு இந்திராணி தவளம் கற்பூரம் பற்றும்
நிசி உறழ் கடலினோடு நிறத்த கார் மழை என்று ஏழ்பேர்
வசி வசியம் வாள் கூர்மை வாசித்தல் திரட்சி குற்றம்
கசியுற வருட்டல் போழ்ந்தே வடுப்படல் எண்பேர் காட்டும்
#29
வழுவில ஒலி சிறக்கும் வல்லினமாம் சகார
மொழி எதுகையினில் செய்யுள் மூவொன்பதாகச் செய்தான்
கழுது உண அசுரர் சேனைக் கடல் தொலை குகனைப் போற்றும்
அழகியல் செந்தில் மேவும் அருமருந்தையன்தானே
** சகரவெதுகை முற்றும்
@5 ஞகரவெதுகை
#1
நற்றவ முனிவர் விண்ணோர் நான்முகன் நெடியோன் ஏத்தும்
பெற்றம் ஊர் கடவுட்கு அன்று பேசரும் பொருள் உரைத்த
வெற்றிவேல் குருசில் செங்கேழ் மென் மலர்ப் பாதம் போற்றிச்
சொல் திகழ்ந்திடு ஞகாரவெதுகையின் தொடையைச் சொல்வாம்
#2
கஞ்சுகி அங்கியே மெய்காப்பாளர் பாந்தள் முப்பேர்
மிஞ்சிகை குண்டலப்பேர் விளங்கு பேழைக்கும் வைக்கும்
வஞ்சுளம் காரிப் புள்ளே வல்லி சாதகக்கொடிப் பேர்
அஞ்சனி இராமன்தூதன் அன்னை காயாவுக்கும் பேர்
#3
மஞ்சமே கட்டில் தூசு ஆம் வாஞ்சையே விருப்பம் ஓர் புல்
கஞ்சிகை மணிக்கால் பள்ளி திரை ஆடை துகிலும் காட்டும்
குஞ்சரக் கிளவி யானை குளிர் நறும் குவளைக்கும் பேர்
ஐஞ்சை நல் எழிலே ஆடு ஆம் அஞர் துக்கம் அறிவிலாமை
#4
கஞ்சனம் வலியன் கல்வாய்ப்புள்ளே கண்ணாடி முப்பேர்
நெஞ்சமே மனம் மார்பின் பேர் நீஞ்சலே குடித்தல் நீந்தல்
மஞ்சரி அத்தநாள் பூங்கொத்துத் தார் தளிர் ஓர் மன்னூல்
அஞ்சலி பேதை வாவல் அங்கைகூப்புதல் என்று ஆமே
#5
தஞ்சம் மால் எளிமை தாழ்வு தருப் பற்றுக்கோடே ஐம்பேர்
துஞ்சலே நிலைபேறு ஆகும் துயில் சோம்பு சாவே நாற்பேர்
கஞ்சமே தாளம் குல்லை கமலம் வெண்கலம் வட்டப்பம்
அஞ்சமே எகினப்புள் பேர் அச்சம் என்று இரண்டும் ஆமே
#6
இஞ்சியே மதிளே அல்லம் இலங்கு தோற்பலகைக்கும் பேர்
வஞ்சி மேற்செலவே ஓர் பா வல்லி பெண் கருவூர் ஐம்பேர்
பஞ்சி பஞ்சாடை தூறு ஆம் பஞ்சரம் செருந்தி கூடு ஆம்
கஞ்சியே அனம் குழம்பு காஞ்சிமாநகரும் ஆமே
#7
குஞ்சம் ஈச்சோப்பி நாழி குறளைச்சொல் குறள் கூன் குன்றி
விஞ்சு தூய்க் கவரிக் குஞ்சி விளம்பிய நாமம் ஏழாம்
கஞ்சனை அத்தம் பானை காஞ்சனம் பொன் புன்கே பேர்
வஞ்சம்இல் உஞற்று உத்தியோகம் வழக்கோதல் மனவெழுச்சி
#8
காஞ்சியே கச்சி எட்டி கருமை மேகலை உணர்ச்சி
பாய்ஞ்சு எதிரூன்றலோடே நிலையின்மை பகர் ஏழ்பேரே
ஆஞ்சி கூத்து அழுங்கல் ஏலம் அஞ்சலே அயர்வு அச்சப்பேர்
நாஞ்சிலே மதிலுறுப்பும் நவிற்று உழுபடையும் ஆமே
#9
வஞ்சமே அற்பம் கள்ளம் வஞ்சனை சபதம் பொய்யோடு
எஞ்சல்இல் கொடுமை வாள் என்று இயம்பிய நாமம் ஏழாம்
நஞ்சு கார் விடம் நைதல் பேர் நவின்ற பஞ்சானனம்தான்
விஞ்சு சங்கரனார் துண்டம் விளங்கு சீயப்பேர் ஆமே
#10
அஞ்சனம் திசைக்கார்வேழம் மணியும் மை இருள் கறுப்பு
விஞ்சும் ஓர் கல் பிறப்பு விழிக்கிடுமருந்து ஆறேபேர்
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானைமுதுகே ஓடம்
மிஞ்சுதல் இளமை சூளை மேடு அளி பன்னொன்றேபேர்
#11
விரியுறும் ஒளி சிறந்த மெல்லினம்தனில் இரண்டாம்
வரி எதுகையினில் செய்யுள் மும்மூன்றாய் வகுத்தல் செய்தான்
திரிபுரம்தன்னைச் செற்ற செம்மலின் செம்மல் செந்தாள்
அருண் முடி சூடும் செந்தில் அருமருந்தையன்தானே
** ஞகரவெதுகை முற்றும்
@6 டகரவெதுகை
#1
வலி சிறந்து ஒளிர் பராரை வரைச் சிறகு அரியும் கொற்றக்
குலிசிதன் மருகன் ஆய குருபர முருகவேளின்
கலின் ஒலி பரிபுரப் பொன் கமல மென் பாதம் போற்றி
ஒலி சிறந்திடும் டகாரவெதுகையின் கவி ஓதுற்றாம்
#2
வடம் என்ப சிலைநாண் ஆலே மணிக்கோவை நகர் தாம்பு ஐம்பேர்
திடம் என்ப வலியே மெய்ம்மை திட்டி கண் உளக்குறிப்பு ஆம்
குடம் என்ப நகர் ஓர் கூத்துக் கும்பம் கோக் கரும்பின்கட்டி
முடம் என்ப வெய்யோன் பாகன் முதுமகன்தனக்கும் ஆமே
#3
அடலே போர் ஆற்றல் கோறல் அணுகலே உடன்படல் பேர்
மடல் எழு தோடே பூவின் மட்டு இதழ் ஓர் நூற்கும் பேர்
கடல் பசு உவரியின் பேர் கட்சி துஞ்சிடம் கான் கூடு ஆம்
உடல் பொருள் வலி காயப்பேர் ஓடமே அறிவு தோணி
#4
கோடலே முறிதல் காந்தள் கொள்ளுதல் வளைதல் நாற்பேர்
ஆடலே வார்த்தை கூத்தோடு ஆண்பெண்கூடுதல் குனித்தல்
சூடலே மூடல் வேய்தல் சுடுவே சும்மாடு சுட்டல்
பாடலே இராகம் செய்யுள் படாகை நீள்கொடி படர்த்தல்
#5
விடலையே வெற்றியாளன் விளங்கும் பாலைத்தோன்றல் பேர்
தொடலையே மகளிர் ஆடல் சொற்ற தே மாலைக்கும் பேர்
படலையே படர்ச்சி தொங்கல் பரந்திடும் வடிவின் நாமம்
நடலையே நுடக்கம் பொய்ம்மை நாட்டும் வஞ்சனையே முப்பேர்
#6
கடை சொரி வாயில் அப்பக்கடை ஈறோடு இடம் அங்காடி
விடை எதிர்மொழி ஏற்றின் பேர் விடுதல் என்று உரைத்தல் முப்பேர்
தொடை கணை பாவுறுப்புச் சொற்றொடர் தொடுத்தல் மாலை
முடை பொதி திரட்சி நாற்றம் முடை பெட்டி தவிடே கோளி
#7
விடரே கான் தூர்த்தரோடு விடத்தொழில்செய்வோர் முப்பேர்
தொடரே சொல் பழமை தாரி துவக்குடன் நிகளம் ஐம்பேர்
படரே நோய் நடை நினைப்பு பரப்பு அன்பு கொடி வீரர்க்கு ஆம்
அடரே மல்கலின்பேர் ஐயம் மலங்குறும் தகடே முப்பேர்
#8
தடை குடம் கவசம் பாரி தடுத்தல் பூண் கடை புணர்ப்பு ஆம்
தொடையல் வாசிகை தேம் மாலை தொடர்பே கட்டுதல் நட்பும் பேர்
படைமரம் பரிக்கலன் பேர் படாம் சுற்றும் பலகை என்ப
கடையம் இந்திராணி ஆடல் கங்கணம் இருபேர் ஆமே
#9
குடைதலே கடைதல் தோய்தல் குட்டியே குருளை எச்சம்
இடையலே இடைதல் பட்டு ஆம் இட்டியே ஈட்டி யாகம்
மிடைதலே நிறைவின் நாமம் மிகுத்திடல் நெருங்கலும் பேர்
புடை இடம் பாரிசப்பேர் பூட்கை மேற்கோள் தோல் சிங்கம்
#10
அடி என்ப அடிமை செண்டுவெளியே தாள் அண்டம் நாற்பேர்
கொடி என்ப வல்லி வஞ்சி நீளம் திண் கொடி காக்கைப் பேர்
வடி என்ப கூர்மை ஓடல் மாட்டல் மாட்டிடுதல் முட்டல்
பிடி என்ப நெடுங்கழுத்தல் குஞ்சரம் கவரிப் பெட்டை
#11
படி அங்கவடி சோபானம் பார் நாழி குணம் படிப் பேர்
வெடி என்ப வெளி கள் அச்சம் மென்புகை வெள்ளி இடிக்கு ஆம்
செடி என்ப விளக்கம் பாவம் குணமின்மை புதரும் செப்பும்
குடி என்ப குலம் புரூரம் குடித்தலே நகரே நாற்பேர்
#12
அடை இலை நகம் அடுத்தல் அப்பம் இ முப்பேர் செப்பும்
கிடை உவமைப் பேர் வேதக்கிளரொலி கிடை கிடைத்தல்
படை நிரை படுக்கை தானை பல்லணம் படை கலப்பை
நடை வழியுடன் ஒழுக்கம் நல் செல்வம் முப்பேர் ஆமே
#13
கடிஞை பாத்திரம் சூதாடுகருவி என்று இருபேர் காட்டும்
மடி பகை அடங்கல் சோம்பு வயிறு நோய் புடைவை தாழை
படிதலே புணர்தல் தோய்தல் படலம் அத்தியாயம் மூடல்
பொடிதல் என்று உரைத்த நாமம் பொடித்தல் அங்குரித்தல் ஆமே
#14
படிகமே நிருத்தம் பிச்சை பளிங்கு எனும் முப்பேர் செப்பும்
கடிகை நாழிகையே துண்டம் கதவிடுதாழே முப்பேர்
சுடிகையே மகுடம் உச்சி சுட்டியும் திலகமும் பேர்
நொடி பிதிர் கிளவி பிட்டு நூவல் என்று ஓதல் நாற்பேர்
#15
அடலை வெண்பொரி சாம்பல் பேர் ஆட்டி பெண் ஆட்டற்கும் பேர்
கெடவரல் மகளிர்கூட்டம் அவர் ஆடல் இவை கிளத்தும்
படலிகை கைம்மணிப் பேர் பதாகை பீர்க்குடனே முப்பேர்
கடவுளே தெய்வம் நன்மை கடனே உன்னல் பின்வாங்கல்
#16
குடிலமே ககனம் வஞ்சம் சடையுடன் வளைவே கோட்டம்
தடி வயல் உலக்கை வில்லுத் தண்டு மீன் தசையும் உடும்பு ஆம்
தொடி வளை ஒரு பலப்பேர் சூழ்ந்த கங்கணமும் சொல்லும்
சடிலமே குதிரை துன்றல் சாற்றிடும் வேணி முப்பேர்
#17
முடி என்ப சிமிலி சென்னி முடிநாற்று முடிகிரீடம்
குடிஞை புள்பொதுவும் யாறும் கூகையும் பதியும் வைக்கும்
படிவம் நல் செவ்வி நோன்பு ஆம் பட்சியே குதிரை பல் புள்
இடி தருப்பணம் சுணம் நெல்மாத் தகரம் இடிச்சொல்
#18
மிடலே சேய் வலி வெண்திங்கள் வேட்டலே விவாகம் இச்சை
தடறே தொண்டானாரைப் பேர் படையுறை பதகன் சாற்றும்
கொடிறே பூசம் கதுப்பு ஆம் குடம்பையே முட்டை கூடு ஆம்
கடறே கான் வழி வாள் புட்டில் காட்டியே பிரட்டி பன்றி
#19
தடா என்ப மிடாவின் பேரும் தக்க நல் பெருமைக்கும் பேர்
கடாவலே எதிர்மொழிப் பேர் ஊர்தி தூண்டற்கும் காட்டும்
கிடாவலே வேலனாடல் எறிதற்கும் கிளத்தற்பாலாம்
படாம் இடு திரையே ஆடை பட்டே பட்டாடை சிற்றூர்
#20
வட்டிகை ஓவியம் நால்வகையில் சாந்தொடு கூடைப் பேர்
கொட்டியே புறவாயில் பேர் கூட்டம் ஓர் மூலம் கூறும்
பட்டிகை அரைநாண் இல்லம் பயோதரக் கச்சே தெப்பம்
தட்டியே பரிசை காவல் சாற்றுறும் பலகை முப்பேர்
#21
இடக்கரே மறைச்சொல் கும்பம் இடங்கழி நெருங்கல் தூர்த்தர்
கிடைத்தலே எதிர்தல் ஒன்றைக் கிடைத்தல் என்று ஓதற்கும் பேர்
கடைப்பிடி மறப்பிலாமை கருதிய தேற்றம் சொல்லும்
படப்பையே தோட்டம் நாட்டில் புறம்பும் என்று ஓதற்பாலாம்
#22
கட்டலே இறுக்கல் ஆர்த்தல் களைதலே தடைகள் அப் பேர்
தொட்டல் கைதீண்டல் உண்டல் தோண்டல் என்று ஓதல் முப்பேர்
தட்டலே தடையே கிட்டல் தட்டம் நச்சுப்பல் தாலம்
கொட்டலே அப்பல் மொத்தல் குடத்தி முல்லைப்பெண் ஓர் மா
#23
நாடு என்ப மறுகு வையம் நவிர் பின்னல் அணி பார்வைப் பேர்
தாடு என்ப தலைமை கோவில் தளிர் தூறல் பெருமை ஆற்றல்
ஏடு என்ப மகியே குற்றம் இயன்ற கண்ணிமை பூத்தோடு ஆம்
பீடு என்ப குழைவே ஒப்பே வலியொடு பெருமைக்கும் பேர்
#24
ஏடகம் பலகை பெண்ணை நல் ஆடை இலாங்கலிப் பேர்
பாடகம் சிவப்பு நீழல் ஒலி பாதகடகம் பன்னும்
கோடகம் முடியுறுப்பும் குலவுறு பரிக்கும் கூறும்
மாடகம் சகோடயாழ்ப் பேர் வலி முறுக்காணிக்கும் பேர்
#25
ஆடு என்ப மேடம் வெற்றி ஆடவர் நிருத்தம் நாற்பேர்
சேடு என்ப பெருமை நன்மை திரட்சியோடு அழகும் செப்பும்
சூடு என்ப கண்ணில் சூடே சூட்டே புள் தலைச் சூட்டுப் பேர்
மோடு என்ப உதரம் போழ்தல் பெருமை மேடு எனும் மொழிப் பேர்
#26
மாடு பொன் செல்வம் பக்கம் வட்டணை அறுத்தல் மொத்தல்
கோடிகம் துகில் பூந்தட்டே குண்டிகை அதற்கும் கூறும்
பாடிடம் பெருமை ஓசை படுதல் பக்கம் பண்பு என்றாம்
ஓடு எனல் அலவும் ஆம் என்று உரைத்தல் ஓடுதல் கெடல் பேர்
#27
ஊட்டியே விலங்கின்கன்றுஊண் ஒளிர் மழை மிடறே முப்பேர்
கோட்டி கண் பார் குறிப்பு ஏர் கூட்டம் வாயிற்கும் கூறும்
பாட்டியே நரி நாய் பன்றி பாணிச்சி பாட்டி ஐம்பேர்
நாட்டியம் குறிப்பே ஆடல் நல் வடிவம் முப்பேரே
#28
மட்டு என்ப நறவே எல்லை வாசம் ஆயுதமும் வைக்கும்
கட்டு என்ப மிகுதி கட்டுக் களைதலே குறிக் காவல் பேர்
புட்டம் கோடிகமே காகம் பொருந்துறு நிறைவும் போற்றும்
குட்டம் பூந்தடம் நோய் ஆழம் கொடிஞ்சி தேர் தேர்க்கூம்பு ஆமே
#29
ஒட்டு என்ப படைவகுப்பும் அற்பமும் உரைக்கற்பாற்றே
பட்டடை அடைகுறட்டின்பால்விளைபண்டராசி
கட்டளை நிறைகல் ஒப்பே இட்டிகை இயற்றல் ஆணி
சட்டகம் தட்டம் பாயல் சாடு விற்பன்னர் பாண்டில்
#30
ஒடுக்கமே அடக்கம் பாந்தல் ஒடுங்கியே முளை கூம்பல் பேர்
கடுத்தல் ஒப்பு ஐயம் வேகம் கலங்குறச் சிந்தற்கும் பேர்
தொடுப்பு உழுபடை வளைப்புச் சொல் புறங்கூறல் நாற்பேர்
வடுச் செம்பு தழும்பு குற்றம் வண்டு மாவடு ஏச்சு ஆமே
#31
உடுக்கை ஓர் பறையே ஆடை ஒடித்தலே சொரிவு ஒசித்தல்
கடத்தலே நடத்தல் தூண்டல் காணுறத் தாண்டல் முப்பேர்
தொடுத்தலே வளைத்தல் பற்றல் சொற்கூட்டல் பிணித்தல் நாற்பேர்
அடுப்பு உயர் பரணிநாள் பேர் அச்சம் சுல்லிப் பேர் வைக்கும்
#32
படுகரே பள்ளம் கேணி பகர் கமண்டலமே முப்பேர்
முடுகலே விரைவே மல்லல் மூட்டுதல் மிகுதி அச்சம்
கடுமையே மிகுதி வல்லை கொடுமையே அகறல் காட்டும்
வடுகு உயர் இந்தளப்பண் மருதயாழ்த்திறத்து ஓர் ஓசை
#33
மாடமே உழுந்தோடு இல் ஆம் வட்கலே நாண் கேடு ஆகும்
பாடமே கலைபயிற்றல் பிறங்கு ஒளி இரண்டும் பன்னும்
கூடம் இல் மறைவு வஞ்சம் குவட்டுச்சி கொல் சம்மட்டி
சேடன் ஏவல் பேர் பாங்கன் அனுசன் பாம்பு ஓர் சாதிப் பேர்
#34
கூடலே பொருந்தல் ஊடல் மதுரைமாநகரும் கூறும்
பாடை வாள் தீட்டும் சாணை தேயச் சொல் பகர் இரண்டாம்
கீடமே அளியே கேழல் கோல்புழு எனக் கிளத்தும்
பீடிகை ஆவணம் பூண்கொள்கலம் பீடம் முப்பேர்
#35
ஆடவர் இளைஞர்தம் பேர் ஆம் புருடற்கும் கூறும்
பேடு அலி காமனாடல் பிறங்கிய நகரே முப்பேர்
பாடலி கள்ளே ஓர் ஊர் பட்டிமை கரவே வஞ்சம்
கோடணை வாச்சியப்பேர் கொடுமைக்கும் ஒலிக்கும் பேரே
#36
சுட்டியே பட்டம் சுட்டி சொற்ற நாவுடனே பங்கி
செட்டி வாணிகன் செவ்வேள் பேர் தெட்டியே நாய்கன் யானை
பட்டியே இடம் சுவாப் பேர் பகர்ந்த கள்ளுக்கும் வைக்கும்
வட்டிலே புட்டில் நாமம் வழி கூடையுடன் முப்பேரே
#37
கட்டியே மகிழ்ச்சி ஓர் புள் கருப்புவட்டுடனே முப்பேர்
கிட்டியே தலையீற்றாவும் கிளத்திய தாளத்தும் பேர்
தொட்டியே அழகு வாயில் சொற்ற கள் எனவே முப்பேர்
விட்டிலே கொலையின் நாமம் விளக்குறு பதங்கமும் பேர்
#38
முட்டையே தவிடு அண்டப்பேர் முடுவல் பெண்நாய் செந்நாய் ஆம்
திட்டையே உரலும் மேடும் திண்ணையும் நண்ணும் அப் பேர்
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனைக்கடிகோல் தீ முண்டம்
ஒட்டையே நெடுங்கழுத்தல் ஒரு மரம் சாண் முக்கோல் ஆம்
#39
இடங்கரே குடங்கர் தூர்த்தர் எய்தும் நீர் முதலை முப்பேர்
முடங்கலே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஆங்கு நாற்பேர்
படங்கு மேற்கட்டி சேனை பகர் பெரும் கொடி புள்ளோசை
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை மேன்முகடு இளமை ஆண்மை
#40
சூடிகை கிரீடம் உச்சி சுடர்க்கடை மின்மினி மஞ்ஞை
சேடி விஞ்சையரூர் ஏணி செப்பிய இகுளை முப்பேர்
மோடி உள்ளத்து வஞ்சம் காடுகாள் மூதேவிப் பேர்
தாடிமம் என்ப தாதுமாதுளை சந்தானும் பேர்
#41
ஆடி ஓர் மாதம் காற்றே கண்ணாடி படி ஆணிப் பேர்
சாடியே ஆடை தாழி சடை வேணி வேர் ஓர் பூடு ஆம்
தேடியே தொழில் இலாபம் சேடமே சிறுமை மிச்சில்
காடி சோறு ஊறுகாய் நெய் காட்டமே சமித்து வாசி
#42
மாட்சியே திருந்தல் குற்றம் அமைதியே நிரப்பே மானம்
காட்சியே அறிவின் நாமம் இன்புறக் காணற்கும் பேர்
பூட்சியே உரிமையின் பேர் பொருந்துறும் உடற்கும் போற்றும்
ஞாட்பு எனும் பேரே கூட்டம் நல் பாரம் படை போர் நாற்பேர்
#43
விடம் விடத்தொழிலே ஆலம் மேவுறும் தியாக்கியப்பேர்
சடம் உடல் இருமூன்றே பொய் சாற்றுறும் கொடுமைக்கும் பேர்
சுடர் ஒளி தளிர் விளக்குத் தூய்க்கனல் வெய்யோன் திங்கள்
மடம் அறியாமை சத்திரம் மனை முனிவாசம் நாற்பேர்
#44
வேட்டுவன் மகநாள் வேடன் விளங்குறும் குளவி முப்பேர்
சேட்டையே விசாகம் கேட்டை சீர்கேடி முற்றில் நாற்பேர்
கேட்டையே கலதி ஓர் நாள் கிழத்தி என்று அறைதல் முப்பேர்
நாட்டம் ஓர் பண் கண் நாடல் நாந்தகம் உளப்பாடு அச்சம்
#45
நடு மையம் நடல் ஓர் நாடி நட்டமே கேடும் கூத்தும்
கடு விடம் விரைவு முள்ளோடு அரிதகி கசப்போடு ஐம்பேர்
கிடுகு ஒரு பறையே சட்டம் கிடக்கை பூதலம் பாயல் பேர்
படுதலே ஒலியின்றாதல் பகர்தல் உண்டாதல் பூத்தல்
#46
சடரமே வயிறு ஓந்திப் பேர் தடாரி பல் பறை முழா ஆம்
தொடரே நூல் செய்யுள் ஆகும் துடுப்பே கை முலை இரண்டாம்
விடரே கல்பிளப்பு விள்ளல் மேடு மேம்பாடு உயர்ச்சி
அடகே ஒன்று ஈடாக்கொள்ளல் இலைக்கறி இரண்டும் ஆமே
#47
இடும்பரே நிருதர் கீண்பர் ஈட்டி ஓர் படை வளர்த்தல்
கிடங்கு நீர்நிலை பல்பண்டம்கிளர்சாலை கிளத்தற்பாலாம்
குடந்தம் அஞ்சலி திரட்சி குடம் சுட்டே சுரபி மேதி
மடங்கல் கூற்று இடி நோய் சீயம் வடவை தூசு ஊழி தாழை
#48
தடவு என்ப பெருமை ஓமகுண்டமே வளைவும் சாற்றும்
விடபமே மரக்கொம்பு ஏறு விளங்கு தூறு எனவே முப்பேர்
துடவையே தோட்டம் சோலை துடா என்பது உழவே மஞ்ஞை
வடவை தீ குதிரைப்பெட்டை உவாப் பிடி எருமை வைக்கும்
#49
துடி ஏலம் பறை நுண்போது துடிப்புடன் ஏழுமாதர்
நடியாடல் செவ்வேளாடல் நாட்டியம் வற்பம் ஏழ்பேர்
படிறே பொய் கொடுமை கள்ளம் பட்டாரகன் தேவு ஆசான்
வடிவே நல் மேனி மெய்ச்சொல் வடிதலே ஒழுகல் நீளம்
#50
கோடு ஆம் குதிரை பெட்டி குரங்கு கொம்புடனே சோலை
நாடுறு மயிர்ச்சாந்து ஆலம் நவிற்று நாமங்கள் ஏழாம்
பாடலம் சபதம் வாசி பாதிரி களிப்புச் சோணம்
கேடகம் பரிசை வேறு கேடில் ஊர் பலகை செப்பும்
#51
ஓடையே நீர்க்கிடங்கோடு ஒளிர் மலைச்சரி மால் யானை
மாடையில் குயிற்றும் பட்டம் மரம் ஒன்றோடு இருமூன்றேபேர்
கோடை மேல்காற்றினோடே குதிரை வெண்காந்தள் வேனில்
வாடையே நீடும் வீதி வடகாற்றுத்தானும் ஆமே
#52
கடகமே சேனை வட்டம் கைவளை பரிசை ஓர் கூத்து
அடகு அருந்திடும் யானைக்கூட்டம் மதில் படைவீடு எண்பேர்
படகம் ஓர் வாச்சியப்பேர் கவரிமாப் பதலை பண் ஆம்
வடகமே சருமம் அத்தவாளம் என்று இரண்டும் ஆமே
#53
பாடி பாசறை நாடு ஆயர்பாடியே செறி பதாதி
வாடிலாப் பேரூர் மெய்க்கே வனை கவசங்கள் ஆறு ஆம்
நாடி நா சிகை நரம்பே நவிற்றுறு துணை பெண்கூந்தல்
கோடி எண் புதுமை தூசு ஆம் குடுமியே வெற்றி உச்சி
#54
முடலையே பெருமை வெய்ய முடைநாற்றம் திரட்சி உண்டை
எடு முரடுடன் குறட்டோடு எய்துறும் கழலை ஏழ்பேர்
பிடகம் நூல் வேதத்தின் பேர் பெட்டலே விரும்பல் வேட்டல்
மடை வயல் மடையே அன்னம் மணிப் பணி கடைப்பூட்டும் பேர்
#55
புட்கரம் நிறைவு வாள் நீர் புள் குழு மருந்தே நீத்தம்
முள்கமலம் இபக்கைநுனி பாண்டமுகம் பத்தேபேர்
கொட்புறல் திரிதலோடு சுழற்சி என்று இருபேர் கூறும்
பெட்பு உயர் விருப்பம் பீடு ஆம் பிடரே தோள்மேல் எருத்தம்
#56
தட்டே தேர் நடுப் பேர் முட்டுச் சாற்றிய பரிசை முற்றில்
வட்டமோடு உயர்ந்த குற்றம் வளைவுடன் ஏழ்பேர் ஆகும்
சுட்டலே பொறாமை எண்ணம் தோட்டி அங்குசம் கபாடம்
எட்டு ஒரு கணிதம் எட்டல் எட்டி காஞ்சிரம் ஓர் சாதி
#57
கோடு என்ப வயல்வரம்பு ஊதும் கொம்பு விலங்கின் கொம்பு
நீடும் சங்கு அசலத்துச்சி நெடுங்கரை மரக்கொம்பு எண்பேர்
தோடு என்ப தொழுதி பூவின்தோடு அணி குழைப் பேர் தானும்
நாடும் பச்சிலையினோடே வளைவு எனும் நாமம் ஆறே
#58
கடமே வான் சுரம் மதம் தோல்கணம் கயிறு உவாக்கதுப்பு
குடம் நீதி உடல் பொன் வெற்பின் கொழும் சாரல் பன்னொன்றேபேர்
தடமே செல்வழி தடாகம் தடக்கரை பெருமை யானை
நடவிய சரி விளைச்சல் நவில் வளைவுடன் ஏழ்பேரே
#59
பட்டமே வழி விலங்கின் பாயல் கேடகம் தூசு ஓடை
திட்டம் நல் பதவி எஃகம் கவரிமாத் திகழ் எண்பேரே
வட்டமே பரிசை தாழ்வு வலையம் கைம்மணித் தூசு ஓர் கோள்
ஒட்டு நீர்ச்சால் எழுத்துத்திரட்சி ஓட்டம் பேர் பத்தே
#60
இடமே மூவிடம் விசாலம் இடப்புறம் பெருமை செல்வம்
திடம் மேவ நெருங்கல் என்னச் செப்பிய நாமம் ஆறாம்
படமே சம்படம் சிம்புள் செய்படம் யானை முகபடாத்தோடு
இடம் ஆர் பாந்தள்படப்பேர் எழுதுறு படம் ஐந்தேபேர்
#61
உடை என்ப குடை வேல் செல்வம் உடுக்கையே முள் பூராடம்
நடை சரண் கலனை வாசி நல் கவசம் ஒன்பான்பேர்
குடை என்ப கவிகை கல்லை குமரவேளாடல் நாமம்
அடை மிதி அடி மேல் இட்ட கொட்டை ஈகை ஐம்பேரே
#62
உடு விண்மீன் கிடங்கே நாவாயோட்டுக்கோல் அம்பின்நீர்க்கோடு
அடு கணை இளம்பிஞ்சு என்ன உரைக்கும் நாமங்கள் ஆறாம்
படு மரக்குலையே கள்ளுப் பரவு நீர்நிலை சம்பத்தோடு
எடு நன்மை வெள்ளிலைப் பேர் இயம்புறும் பொய்கை ஏழ்பேர்
#63
கோட்டமே படப்பை நாடு கோயில் அவ்வியம் ஆன்கொட்டில்
நீட்டு உவாத் தருமம் பாசம் நீர்நிலை மருதத்தூர் யாழ்
நாட்டு கோண் குரங்கே வாவி நல் வயல் மூவைந்தேபேர்
ஓட்டம் மேலுதடே தோல்வி ஒழுங்குறும் வீதி முப்பேர்
#64
கடி மணம் விரைவு கூர்மை காப்பு அச்சம் எழில் விளக்கம்
வடிவு அகல் அல்குல் காலம் வரைவு பேய் கடிப்பு வெம்மை
வெடி கரிப்பே சிறப்பு மிகுதி நல் புதுமை ஐயம்
ஒடிவுஇல் விம்மிதம் புணர்ச்சி ஒன்றுஒழி இருபான்பேரே
#65
தகைசெறி டகரம் ஆய எழுத்து எதுகையினில் சார
நிகரறு கவிதை ஏழொன்பான் என நிகழச் செய்தான்
முகிழ் முலைக் குறமின் கேள்வன் மொய் மலர்ப் பாதம் போற்றும்
அகல் நிலம் ஏத்தும் செந்தில் அருமருந்தையன்தானே
** டகரவெதுகைமுற்றும்
@7 ணகரவெதுகை
#1
வளம் கிளர் ஒளிர் பசும்பொன் வரை உறழ் தோளும் கண்ணும்
உளம் கிளர் பன்னிரண்டோடு உரைக்கும் ஈராறுக் கொண்ட
தளம் கிளர் நெடிய வேலோன் தண் மலர்ச் சரணம் போற்றிக்
களங்கற வரு ணகாரவெதுகையின் கவியைச் சொல்வாம்
#2
இணரே பூப் பூம்பராகம் இயன்ற பூங்கொத்தே முப்பேர்
புணர்வே தோய்ந்திடல் இசைப்புப் பொருப என்று ஓதற்கும் பேர்
துணரே போதுப்பராகம் துண்டில் வேய் சூழ்தற்கும் பேர்
உணர்வே நல் அறிவே ஊடல் தீர்தற்கும் தெளிவுக்கும் பேர்
#3
மிண்டலே நிறைவின் நாமம் நெருக்குதற்கும் விளம்பும்
கண்டல் கேதகை முள்ளிப் பேர் கணிச்சி ஒண் மழு உளிப் பேர்
கொண்டல் மேகம் கீழ்காற்று ஆம் கொண்மூ என்பது விண் மேகம்
வண்டல் பெண்கூட்டம் ஆடல் மாண்பு மாட்சிமைப் பேர் நன்மை
#4
சண்டனே அலி கால் வெய்யோன் தணித்தல் சேமித்தல் தீர்த்தல்
குண்டம் ஈரெட்டாண்டின்பெண் குளம் ஆழம் கும்பம் பன்றி
புண்டரம் நுதல்குறிப் பேர் பொலிவுறு கழுகும் போற்றும்
கண்டகம் வயிரம் முள் வாள் கதிர்விடு சுரிகை நாற்பேர்
#5
பேணலே கருதல் ஆசை பிணர் கோங்கு நெருக்கம் கட்டி
கோணலே மாறுபாடே கூன் சிந்து வளைவே நாற்பேர்
காணலே குறித்தல் பார்த்தல் கழலிணை பணிதல் முப்பேர்
மாணலே நன்மையின் பேர் மாட்சிமைதனக்கும் ஆமே
#6
ஆணமே குழம்போடு அன்பு ஆம் அணில் வரிப்புறம் காற்று என்றாம்
ஓணம் மாயோன்நாள் ஆறு ஆம் உண்மையே நியதி சொல்லே
காணமே பரியூண் செக்கு ஓர் கண்ணர் பொன் அளத்தல் கொள் ஆம்
கோணமே குதிரை வாள் அங்குசம் வளைவுடனே மூக்கு ஆம்
#7
வண்மையே வளம் கொடைப் பேர் வலி புகழ் குணமே வாய்மை
ஒண்மையே அறிவு நன்மை ஓங்கிய அழகே முப்பேர்
வெண்மையே அறிவிலாமை விளர் தன்மை கற்கண்டு என்ப
எண்மையே இறுமாப்பு ஏந்தல் எண்டோளி துர்க்கை காளி
#8
அண்டம் வான் பறவை முட்டை அமரர்தம் இருக்கை மத்து ஆம்
பண்டம் பொன் பரிகாரப்பேர் பணவையே பரண் துடிப் பேர்
துண்டம் சாரைப்பாம்பின் பேர் துணியொடு வதனம் மூக்கு ஆம்
கண்டு என்ப கரும்பின்கட்டி கழலை கண்டித்தற்கும் பேர்
#9
மண்டலம் பருதி நாடு வட்டம் இ முப்பேர் வைக்கும்
அண்டரே பகைவர் வானோர் ஆயர் என்று ஆக முப்பேர்
சுண்டனே சதையநாளும் சூறனும் வேறு காட்டும்
குண்டலம் விசும்பே வட்டம் குழை எனும் முப்பேர் ஆமே
#10
இண்டையே பதுமம் மாலை ஏணம் மான் வலி இரண்டாம்
தொண்டை ஆதொண்டை கோவை சொற்களம் உவாத்துதிக்கை
உண்டையே திரளை பிச்சை உறு திரள் படையுறுப்பு ஆம்
கொண்டையே மயிர்முடிக்கும் இலந்தையின்கனிக்கும் கூறும்
#11
திண்டியே களிறு பூமி தெழித்திடும் படகம் முப்பேர்
பிண்டி பிண்ணாக்கு அசோகு தருப்பணம் புணர்தம் நெல்மா
சுண்டியே சுக்கு ஓர் பூடு ஆம் துணி அறை சேறே தூக்கு ஆம்
கண்டிகை பதக்கம் வாகுவலையமே கலன்பெய்செப்பு ஆம்
#12
பண்டே முன்பே பழப்பேர் பணிலம் சஞ்சலம் வெண்சங்கு ஆம்
கண்டூதி காஞ்சொறிப் பேர் தினவு இருபேரும் காட்டும்
வண்டே வெண்சங்கம் குற்றம் வளை அளி வாளி ஐம்பேர்
செண்டே கூர்மைப் பேர் வாசிஊர்வெளி பூச்செண்டே பேர்
#13
உண்ணல் ஐம்பொறிஅருந்தல் ஊட்டல் பூட்டுதலே முப்பேர்
தண்ணுமை பறைப்பொதுப் பேர் நிசாளம் சாற்றிடும் உடுக்கை
கண்ணுளர் நிருத்தர்தம்பேர் கண்ணாளர்தனக்கும் காட்டும்
அண்ணலே பெருமைபெற்றோன் அரசன் முல்லைத்தோன்றல் பேர்
#14
பண்ணவன் அருகன் நீத்தோன் பகர்ந்த புத்தேளே முப்பேர்
தண்ணம் ஓர்கண்பறைப் பேர் தறித்திடும் மழுவும் வைக்கும்
திண்ணமே மெய்ம்மை திட்பம் திணி புவி திண்ணியன் பேர்
நண்ணுதல் அணுகல் போகல் பொருந்துதல் நவிற்றும் முப்பேர்
#15
காணியே உரிமை ஓர் எண் கண்ணுதல் சிவன் உள்ளல் பேர்
வாணியே ஓர் நிருத்தம் வாக்கு நாமகட்கும் வைக்கும்
தோணி ரேவதிநாள் ஓடம் தொடை மதிலுறுப்பே சேறு ஆம்
நாண் இலச்சைப் பேர் தானே கயிறு பூண் எனவும் நாட்டும்
#16
தூணி ஓர் அளவை ஆவம் சுண்டை ஓர் புதர் நறா ஆம்
வேணி நீள்சடையின் நாமம் விசும்பு ஆறே முப்பேர் செப்பும்
ஆணியே எழுதும் கண்டம் ஆன்ற காலாணிக்கும் பேர்
ஏணியே உலகோடு எல்லை இறவை மான் என்றும் சொல்லும்
#17
வாணிகன் துலாராசிப் பேர் வசியற்கும் வழுத்தற்பாலாம்
வேணவா மிகுதி வேட்கை விண் ஒளி முகில் ஆகாயம்
பாணமே மேகவண்ணக் குறிஞ்சி எய்கணை பூம்பட்டு ஆம்
சேண் உயரம் நீளப்பேர் சேய்மையோடு அகலம் ஐம்பேர்
#18
சேணரே ஊழிகாலம் சேகரம் எழுவாய் பூமி
பாணரே சிலதர் பாட்டோர் பாணித்தல் நெடும்போழ்தே சொல்
வாணரே கவிஞர் கூத்தர் மாண்டல் மாட்சிமையே பொன்றல்
யாணரே புதுமை தச்சர் அழகுடன் வளம் நன்மைப் பேர்
#19
துணங்கறல் என்னும் நாமம் விழவு இருள் இரண்டும் சொல்லும்
கிணுங்கல் ஓர் ஓசை துன்றல் கேண்மை கண்ணோட்டம் நட்பு ஆம்
குணுங்கர் தோற்கருவியாளர் குயிலுவர் இழிஞர் முப்பேர்
கணம் பரன் உடு நோய் வட்டம் திரட்சி பேய் காலநுட்பம்
#20
உணர்தலே ஒற்றறுத்தல் நினைத்தற்கும் உரைக்கற்பாற்றே
குணவு கீழ்த்திசை குணக்கு ஆம் கொண்கனே துறைவன் வேட்டோன்
புணரியே கடல் ஒலித்தல் புரப்பு உயர் கரை தனிப் பேர்
அணவலே எழுச்சி புல்லல் அணுக்கம் சந்தனமே பாம்பு ஆம்
#21
கண்ணி தார் முகுளம் வெய்ய உயிர்படு கயிறே முப்பேர்
புண்ணியம் தருமம் சாணி புணையே வேய் விலங்கு தெப்பம்
மண்ணீடு வேயர்கூட்டம் வயங்கு வேதிகை இரண்டாம்
தண் நீர்மை குணம் தெருட்சி தணத்தலே பிரிதல் பையுள்
#22
அணை என்ப அமளி சேதாம் ஆண்டாரே உடையோர் தேவர்
பிணை என்ப உழை விலங்கின்பெண்ணுடன் பெட்பே முப்பேர்
கணையம் பொன் யானைக்கம்பம் எழுவுடன் காவற்காடு ஆம்
துணைவன் தோழன் பின் மந்திரி தோயுறும் கொழுநன் நாற்பேர்
#23
அணல் மிடறுடனே கீழ்வாய்ப்புறம் என அறைதற்பாலாம்
உணவு வெண்புழுக்கல் நாமம் ஒளிர் மாரி இரண்டும் செப்பும்
பிணவலே சுனகத்தின் பேர் பெண்களில்பொதுவும் பேசும்
தணியலே கள்ளின் நாமம் சாற்றுறும் கமையும் ஆமே
#24
ஆண்டகை சிறப்பின் மிக்கோன் அப்பவர்க்கப்பேர் என்ப
ஈண்டு என்ப விரைவு இவ்வண்ணம் இவிடமே புலிதுடக்கி
பாண்டு வெண்மை நோய் ஓர் கோ பணித்தலே நல்கல் பேசல்
தூண்டலே நடத்தல் பார்த்தல் சுண்ணமே சுதை நறும்தூள்
#25
உண்டியே உண்ணல் சோறு ஆம் உண்டாட்டு ஆடல் பெண்ஆடல்
தெண்டிகை உளம் ஆர்ப் பாகம் தெவரம் எனவும் செப்பும்
பண்டிதர் கவி பார்ப்பு ஆயுள் பண்டாரம் துறவு ஓர் கூலம்
மண்டிலம் குதிரை வட்டம் வளாவு சாரிகையே முப்பேர்
#26
சண்டமே கொடுமையின் பேர் விரைவினில்குறிப்பே தாழ்வில்
மண்டுறு பெருமை மற்றைத் திரணமும் வழுத்தற்பாலாம்
முண்டமே பிட்டுச் சென்னி மொழி நுதல்குறி திரட்சி
பிண்டமே திரளை பிச்சை பிறழ்கருவுடனே முப்பேர்
#27
குணம் என்ப சிலை நாண் புந்தி கும்பம் முக்குணமே சீர்மை
உணர்வு இன்பம் கயிறே ஒன்றை விசேடித்தல் ஒழுக்கமே பேர்
மணம் என்ப வதுவை வாசம் மணுங்கு ஒரு கணிதம் தாழி
பணம் என்ப துரகம் பாம்பின்படம் இசை பகர் முப்பேரே
#28
தண்டு என்ப குழாயே வீணை தடிப் படை மிதுனராசி
கொண்டு எழும் சிவிகையே செய்வரம்பு எனக் கூறு ஏழ்பேரே
தொண்டு ஒன்பான் தொழும்பு ஓர் பூடே உருவிடு சுருக்கே தொன்மை
விண்டு என்ப மாயோன் வெற்பே மேகமே மூங்கில் காற்று ஆம்
#29
அண்டசம் தவளை ஓந்தி அரணை மீன் உரகம் பல்லி
நண்டு உடும்பு ஆமை பக்கி நவில் கராப் பன்னொன்றேபேர்
குண்டலி என்பதே முத்தாபலம் கூறு ஓர் சத்தி
மண்டலி பாம்பு பூனை மகிதலம் நாய் என் நாற்பேர்
#30
வண்ணமே அழகு சந்தம் வருணம் ஒப்பனையே பண்பே
பண் அமர் கவியே ஓசை பகர் செய்மை எண்பேர் பன்னும்
நுண்ணல் வாக்குள்ளோன் மந்திரி நுண் என்ப மிகுதி நுட்பம்
மண் அணு முழவமண் ஒப்பனை கழுவுதற்கும் வைக்கும்
#31
பாணி நீர் ஒலி நாடு ஓதல் பண்டம் தார் பாடல் கை பற்று
ஏணு பல்லியம் நொடித்தற்பொழுது கா ஈராறேபேர்
கோணி தைப்பையே பன்றி குறி மதிலுறுப்பும் கூறும்
கேணியே மடுக் கிடங்கு கிளர் உலகுடனே முப்பேர்
#32
மணி என்ப விதை பருக்கை வனப்பு உயர் கருமை நன்மை
தணி நவமணியே கண்டை சாற்று மாமணியே எண்பேர்
அணிகமே சிவிகை நாமம் ஆன்ற நாவாய்க்கும் செப்பும்
பிணிமுகம் எகினம் மஞ்ஞை புள்பொது எனும் முப்பேரே
#33
பணி மொழி தொழிலே ஏவல் பாம்பு தோற்கருவி பூணோடு
அணுகிய பெருமை மிக்க அளி கொடை ஒன்பான் பேரே
கணி ஒரு சாதி செண்பகம் வேங்கை மருதம் வேலி
பிணி மெலிவுடன் நோய் கட்டல் பிணிகை மேற்போர்வை கச்சு ஆம்
#34
அணி அழகு அணிதல் பூணோடு அலங்காரம் அணிவகுத்தல்
நணுகிய முன்னற்சென்று நடத்தல் ஓர் அசை என்று ஏழ்பேர்
குணில் குறுந்தடி கடிப்பு ஆம் குண்டு என்ப குதிரை சட்டி
துணி சவி துணிவு துண்டம் சோதிநாள் இ நாற்பேரே
#35
தாணுவே நிலைபேறு ஓங்கல் சங்கரன் சிஙுவை குற்றி
தூண் உயர் சாலே என்னச் சொற்ற நாமங்கள் ஏழாம்
வேணுவே சிலை வாள் மூங்கில் வெய்ய உட்டுளைப்பொருள் பேர்
ஆணுவே இரதம் நன்மை அணு ஆன்மா இரேணு நுட்பம்
#36
ஆணையே மெய்ம்மை வென்றி சூள் ஏவல் இலாஞ்சனைப் பேர்
பூணுறு விதியே ஒன்றைப் பொருந்துறச் செய்தல் ஏழ்பேர்
கோணையே அழிவிலாத இளமைக்கும் இசைக்கும் கூறும்
தூணம் ஆற்பதமே தம்பம் சொற்றன பகையும் ஆமே
#37
கண் என்ப அகலம் பொற்புக் கருத்துக்கண் பெருமை மூங்கில்
எண் நயப்பு உணவு ஏழாம்வேற்றுமை அருள் இடப்பேர் பத்தாம்
தண்ணடை மருதத்தூர் கான் தழைத்த நாடு உடுக்கை பன்னம்
எண் எளிமை விசாரம் எள் வலி சோதிடப்பேர்
#38
பண்ணையே மருத வேலி பதனம் நீர்த் தாழ்வே பொய்தல்
விண்ணவர் குழாங்களே கான்மிருகம் துஞ்சிடம் பூடு ஏழ்பேர்
பெண்ணையே ஓர் நதிப் பேர் பெரும் பனை அதற்கும் பேசும்
மண்ணையே இளமை வெம் பேய் அறியாமை வழுத்தல் முப்பேர்
#39
அணங்கு பெண் கொலை வருத்தம் ஆசை நோய் அழகே தெய்வம்
குணம் கிளர் விழாவே அச்சம் வெறியாடல் குறி பேர் பத்தாம்
துணங்கை ஓர் நாளே கூத்தே விழவு எனச் சொல் முப்பேரே
நுணங்கலே நுண்மை தேறல் நுணவை எண்ணோலை பிண்டி
#40
துணையே தோள் துரிதம் நட்புச் சொற்பிணை அளவு கூத்துப்
பணை தாருக்கடுத்தல் வெற்றி பாட்டு எனும் பேர் பன்னொன்றாம்
இணையே நேரிரண்டு மாதர் இயல் கண் வேல் பனிச்சை ஓதி
கணையே போர்முரசம் வாரி பூரநாள் திரட்சி காட்டும்
#41
பாண்டில் ஏறூர்தி கஞ்சம் பரியங்கம் வட்டம் தீபம்
காண்ட நல் தகளி வாகை கழை இடுதிரை ஒன்பான்பேர்
தோண்டலே முகத்தல் தொட்டல் துணிதலே வலித்தல் வெட்டல்
ஆண்டே அவ்விடம் சமைப் பேர் அறைந்த பைம்புல் நெற்கும் பேர்
#42
புண்டரீகம் சரோசம் புலி திசைக்கரியே வண்டே
உண்ட நோய் ஒன்றோடே பூடு ஒன்று எனும் நாமம் ஆறாம்
தண்டமே குடைக்கால் ஊர்தி தண்டித்தல் கதை பண்டாரம்
மண்டலம் வரம்பே தானை வனகரிதடம் ஒன்பான்பேர்
#43
திணை நிலம் குலம் ஒழுக்கம் மருதத்தின்பறை அகம் சேர்
திணை புறத்திணை உயர்ச்சித்திணையே அஃறிணையே எண்பேர்
பணை வயல் பரியின் பந்தி பருத்தல் வேய் பெருமை போதி
பிணை மரக்கோடே எற்றும் பறை புறம் ஒன்பான்பேரே
#44
கண்டமே கவசம் வெல்லம் கழுத்து இடுதிரை வாள் துண்டம்
மண்டலம் பூமி யானைதுயிலிடம் வழுத்து ஓர் எண்பேர்
முண்டகம் தாழை கள்ளு முளரி மத்தகம் உள்மூலம்
கொண்ட திண் கடலே சென்னி குறித்த பேர் ஏழென்று ஆமே
#45
காண்டம் நூல் முடிவே தூசு சுனை நீர் வெம் காடே புந்தி
மாண்தகு படைக்கலம் பூண் கொள்கலம் வானோர்கூட்டம்
நீண்ட ஒண் கோலே தீர்த்தம் நிறை கமண்டலம் திரட்சி
பூண்ட ஆர் திரையே என்னப் புகன்ற பேர் மூவைந்து ஆமே
#46
நண்ணரும் ணகாரமாய எதுகையின் நடாத்தும் செய்யுள்
எண்ணவையை ஒன்பானாய் இசைத்தனன் நீர்ங்கடல் சூர்
விண் அடைந்திட வேல் தொட்ட வீரன் தாள் துணையைப் போற்றும்
அண்ணல் அம் செந்தில் மேவும் அருமருந்தையன்தானே
** ணகரவெதுகை முற்றும்
@8 தகரவெதுகை
#1
பூம் கமுகு உறழ் கிரீவப் புலோம் மிசை தடம் தோள் தோயும்
பாங்கு உயர் குலிசி துன்பம் துடைத்த பன்னிரு தடக் கைக்
காங்கயன் சிகி ஊர் செவ்வேள் கமலப் பொன் பாதம் போற்றி
ஓங்கிய எழில் தகாரவெதுகையின் தொடை ஓதுற்றாம்
#2
வித்தகம் பெருமை கல்வி வித்தகர் வினைஞர் ஆயர்
பொத்தகம் கோசம் என்ப சித்திரப்படாமும் போற்றும்
மத்தகம் நெற்றி சென்னி வத்திரம் வதனம் தூசு ஆம்
உத்தரம் வடக்கு நூலில் ஒன்று எதிர்மொழி மேலும் பேர்
#3
உத்தரி உரகம் யானை உவர்ப் பொதி கடற்கே ஆகும்
பத்திரி குதிரை அம்பு பறவை பாசடை காளிப் பேர்
கத்திரி வங்கம் பாந்தள் காதம் யோசனை பயப்பேர்
சித்திர புங்கம் பாணம் திகந்த ஓவியத் தூசு ஆமே
#4
அத்தியே கொலை எலும்போடு ஆர்கலி மரம் ஒன்று யானை
சத்தியே கவிகை கான்றல் சத்துவம் உமை வேல் சூலம்
பத்தியே முறை ஒழுக்கம் பகர் வழிபாடு அடைத்தல்
சுத்தி ஓர் கருவி சங்கம் சுடர் அகல் சுத்தம் நாற்பேர்
#5
மத்திகை விளக்குத்தண்டே வாசிஓட்டுறும்படைப் பேர்
கத்திகை தொடைவிகற்பம் துவசமே கமழ் வாசந்தி
பித்திகை கருமுகைக்கே பெயர் சுவர்த்தலமும் பேசும்
பத்திரை இலையே ஆவே பகர் மையம் திதி என்றே பேர்
#6
அத்தனே மூத்தோன் தாதை ஐம்முகன்தானே முப்பேர்
சுத்தனே அருகன் தாணுத் துளி நறாப் பதுமத்துஅண்ணல்
புத்தன் சாக்கியனே மாலே புகன்றிடும் அருகன் முப்பேர்
முத்தனே விடையோன் புத்தன் முடுவலோன் அனகன் நாற்பேர்
#7
நத்தமே இருளும் ஊரும் நந்தொடு உண்மை ஆக்கப்பேர்
துத்தம் யாழிசை பால் குக்கி சுனகம் கண்மருந்தே பற்று ஆம்
அத்தம் பொன் வழி பாதி கைஆடி சொற்பொருள் காடு ஓர் நாள்
மத்தம் ஊமத்தை மோகம் மதயானை மகிழ்ச்சி மத்து ஆம்
#8
ஆதாரம் உடலே மாரி அதிதியே புதியர் யோகர்
மாதா அம்பிகையே அன்னை மதுரை ஓர் புரி நறா ஆம்
சேதாரம் தேமாவின்பேர் செய்ய பொன்னுரை தேய்மானம்
பாதாளம் துவாரம் தென்தீ பதிகம் நூன்முகத்திரிப் பேர்
#9
அதம் உயர் கொலையே அத்தி அதிகமே பொலிவு மிச்சம்
இதழ் பனையேடு பூவினிதழ் உதடு என இ முப்பேர்
கதழ்வு வேகம் சிறப்புக் கடுத்தலே பெருமை நீளம்
சிதடன் அந்தகன் மூடன் பேர் திதி பக்கம் நிலைபேறும் பேர்
#10
பத்திரம் இலை வனப்புப் படை நன்மை சிறகே ஆனம்
குத்திரம் வஞ்சமே பொய் விரைவினில்குறிப்பே குன்று ஆம்
சித்திரபானுச் செந்தீ திவாகரன் ஆண்டு ஒன்றே ஆம்
சத்திரம் குடை இரும்பே சாலை கைவிடாவேல் வேள்வி
#11
மதலையே பாவை கொன்றை மரக்கலம் தூண் கொடுங்கை
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிர் மேகப்பேர்
பதலை ஓர்கண்பறைப் பேர் பருப்பதம் தாழி என்ப
கதலி வாழைப் பேர் தேற்றா காற்றாடி துவசம் நாற்பேர்
#12
பீதகம் பொன்மை சாந்தே பிறங்கு பொன் இருவேலிப் பேர்
சூதகமே ஆசூசம் தோகைமார் தோயாப் பூப்பு ஆம்
போதகம் இளமை நாவாய் புகல் பனை களிற்று ஆன் கன்று ஆம்
சாதகம் வானம்பாடிப்புள் பூதம் சனனம் முப்பேர்
#13
ஏதமே துன்பம் குற்றம் எளிமை என்று இசைக்கும் முப்பேர்
சூதம் மாமரமே பாதரசம் பிறப்புடன் சுரும்பு ஆம்
போதமே பஃறி ஞானம் புதுமையே நவம் மிகுத்தல்
கீதமே தவளை வண்டே கிளத்து மெல்லிசை வேய் நாற்பேர்
#14
அதர் வழி நுண்மணல் பேர் ஆதண் மெல்லெனல் சூழ் நோய் ஆம்
புதர் செடி அறிஞர்தம் பேர் புத்தேளே புதுமை தெய்வம்
சிதர் மழை தூறல் சிக்கம் சிந்துதல் நுணுக்கு அணுப் பேர்
மதர் களிப்புடனே வீரம் மதாணி பூண்பொதுப் பதக்கம்
#15
கதம்பமே கூட்டம் நீபம் கலவைச் சேறுடன் சபைப் பேர்
நிதம்பமே அல்குல் என்ப நெடு மலைப்பக்கமும் பேர்
பதங்கம் வீப்பொது விட்டில் பேர் பதாயுதம் கூர்வாள் கோழி
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப்பட்டதாமே
#16
விதி செயல் வான் முறைப் பேர் விரிஞ்சன் நல் குணம் தொன்னூல் ஆம்
சதி உரோகிணி கற்பாட்டி தவிராத வட்டம் போனம்
பதி அரன் கேள்வன் ஊர் ஆம் பதுக்கை கற்பாறை தூறு ஆம்
விதியுளி விவாகம் யாகம் வேட்டற்கும் இட்ட பேரே
#17
வெதிர் செவிடுடன் கம்பித்தல் விளங்கு பைங்கழையே முப்பேர்
பிதிர் கதை நொடியே தூவல் பேசரு நுணுக்கு அணுப் பேர்
கதிர் ஒளி இரவி திங்கள் களி நெல் ஆதிய குரல் பேர்
எதிர்தலே மலர்தல் தோன்றல் எதிர் தொடர்ப் பூ எதிர்த்தல்
#18
மாதவம் தவமே கள்ளே வசந்தகாலமுமே முப்பேர்
சேதகம் செங்கேழ் சேறு ஆம் சேது செய்கரை சிவப்பு ஆம்
பாதவம் விடபி வெற்பு ஆம் பதகம் புள்பொதுவே பாவம்
நாதம் மெய்ப்பொருளே ஓசை நதி ஆறு மாலை ஆமே
#19
மாதர் பெண் இடைச்சொல் வேட்கை மதர் வீரம் அழகு உலாவல்
சாதனம் படைப்பொதுப் பேர் தடம் தோய் பீடிகை தொண்டு ஓலை
சூதரே வலவர் பாணர் சூதாட்டம்வல்லோர் கூத்தர்
ஈதலே கடை கொடைப் பேர் இறகரிதற்கும் பேரே
#20
மாதே பெண் குற்றத்தின் பேர் மதன் சிலைவேள் வனப்பு ஆம்
சூதே கூத்தாடரங்கம் சொற்ற வல் நளினம் தீச்சொல்
போதே பூப் பொழுது இரண்டாம் பொதி கிழி பொதிதல் மன்றம்
கேதே திண் பதாகை மஞ்ஞை கிளத்து ஒரு கோள் நாள் நாற்பேர்
#21
குதையே வில்குதை மொட்டம்பு கொம்புறும் பசியே முப்பேர்
சுதையே ஈன்றிடாஆ வெண்மை சுண்ணம் சாந்து அமுதே ஐம்பேர்
புதையே வெம் கணையின்கட்டுப் புதுமையே மறைவே தேகம்
கதையே தண்டப்பேர் வார்த்தை காரணம் இ முப்பேரே
#22
ஓதையே ஒலி மதில் பேர் உரைத்த மோதகமும் செப்பும்
சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்தேவி
மேதை தோல் புதன் இறைச்சி மிக்க பேரறிவு கள் ஆம்
பேதை ஓர் பருவம் மூடம் பெண் தரித்திரனே நாற்பேர்
#23
வீதியே செவ்வண்ஏகல் வெருவுதல் தெருவே முப்பேர்
சோதியே விடையோன் காந்தி சுடரோன் மால் அருகன் ஓர் நாள்
பூதியே துர்க்கந்தப்பேர் பொலிவுறு நரகும் போற்றும்
ஏதி வாள் படைப்பொதுப் பேர் எதிர்ப்பே சொல்லடுத்தலும் பேர்
#24
மாதிரம் நிலம் ஆகாயம் மலை திசை உவாவே ஐம்பேர்
சோதினி துடைப்பம் செத்தை துதி ஏத்தல் அகில் நுதிப் பேர்
போதியே அரசோடு ஆசான் பொதிர்ப்புப் பீடுடன் அடுக்கம்
வேதியே அயன் கேட்டைப் பேர் வேதியர் ஆயுள் விப்பிரர்
#25
உதியனே மாறன் சேரன் ஒலிக்கும் ஈரங்கொல்லிப் பேர்
மதி அசைச்சொல் தெருட்சி மாதம் முன்னிலை திங்கள் பேர்
கதி உயர்கதி நான்காயகதி ஐந்துகதிக்கும் காட்டும்
வதி தளர் சேறே பாதை மதுகரம் ஒலி வண்டே கள்
#26
அத்து என்பது அசைச்சொல் செம்மை அரைநாணோடு இசைப்பே நாற்பேர்
தித்தே கூத்தின்விகற்பம் தித்துதல் பகைத்தல் முப்பேர்
தொத்தே பூங்கொத்துத் தொண்டு ஆம் சுதனே வெண்திங்கள் தோன்றல்
தத்தை மூத்தாள் கிளிப் பேர் சதம் சிறகு இலை நூறு ஆமே
#27
அத்தவாளம் காடே உல்லாசம் ஆம் போர்வைக்கும் பேர்
உத்தரியம்மே காசம் ஒண் பரிப் பேரும் செப்பும்
சித்தனே வயிரவன் பேர் சினேந்திரன் எண்சித்துள்ளோன்
குத்தலே பறித்தலின் பேர் குத்தற்கும் உரித்ததாமே
#28
கூத்தனே உயிர் நடன் பேர் கோது ஓதல் குற்றம் கோதல்
போத்தே ஆண்விலங்கு பாயல் பொங்கர் செம்போத்தே நாற்பேர்
பாத்து என்ப கஞ்சி சோறு பகுத்திடல் விளிதல் முப்பேர்
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வி உறுபதன்அழிவு என்றாமே
#29
சாத்தனே புத்தன் ஐயன் சினவரன் முப்பேர் சாற்றும்
சேத்து ஐயம் உறுப்பு அசைச்சொல் திகழ் கருத்து உவமை சோணம்
நீத்தம் நீர் திகழ் வெள்ளிப் பேர் நிதியே பண்டாரம் சேனை
தீத்தமே விழாவும் நீரும் தீத்தனே அருகன் ஆசான்
#30
மாத்திரை நொடிக்கும்காலை மருந்து ஒரு குருவில் பாதி
காத்திரி இருப்பு முள் பேர் உரகம் கீரிக்கும் காட்டும்
கோத்திரம் வரகு பூமி குலமுடன் மலையே என்ப
சூத்திரம் உபாயம் நன்னூல் சுதம் இறங்குதல் பிள்ளைப் பேர்
#31
ஒத்தலே நடுவோடு ஒப்பு ஆம் உதி ஊதும் துருத்தி விஞ்சை
தைத்தல் ஒப்பனையே துன்னல் ததைதலே மிடைதல் விள்ளல்
பைத்தலே உருத்தல் பச்சை பாத்தி செய் பகுத்தல் இல்லம்
கைத்தலே கசப்பு உற்பத்தி கைதவம் பொய்துன்பப்பேர்
#32
முத்தமே உவகை ஓட்டம் முத்தம் தண் மருதவேலி
சத்தம் ஏழ் குணம் ஒலித்தல் சத்தியம் சபதம் மெய் ஆம்
பித்தமே தெளிவிலாமை பிணங்கும் ஓர் நாடிக்கும் பேர்
சுத்தமே தருப்பை உள்ளம் சுசி எனும் முப்பேர் ஆமே
#33
முதுவரே அமைச்சர் மூத்தோர் முத்தி பேறு அலர் மின் தேமல்
வதுவையே கடி நாற்றம் காவல் புள் ஆணின் பேர் வைக்கும்
பொதுளலே தழைத்தலின் பேர் செறிதலும் போற்றும் அப் பேர்
மதுகமே இலுப்பை எட்டி மதுரம் ஆம் தராவும் ஆமே
#34
மதவு இடம் புலவி காமர் வலியுடன் மிகுதி வையம்
கதவமே புதவம் காத்தல் காவல் என்று ஓதல் முப்பேர்
பதனமே அரணம் யானை பதவி தாள் வதியே மோக்கம்
மிதவையே தெப்பம் சோறு ஆம் மெத்தை பூணை சட்டைப் பேர்
#35
விதப்பே கம்பிதம் மிகுத்தல் வேணகைஉறுப்பு ஆசைப் பேர்
கதுப்பே ஆண்மயிரே மஞ்சள் கவுளுடன் முப்பேர் காட்டும்
செதுக்கே மந்திப் பேர் பூதம் சேறுடன் செதுக்கல் நாற்பேர்
இதக்கே நல் புளிப்பின் நாமம் இசைக்கும் அப்புக்கட்டு ஆமே
#36
விதவை கைமணியின் நாமம் திருவிலிக்கே விளம்பும்
நுதல் புருரம் சீர் நெற்றி நுதம்பு சோறு எள் இரண்டாம்
மதம் மிகு செருக்கே யானை வழுத்துறும் சமயம் முப்பேர்
உதகமே தெண்ணீர் பூமி உதும்பரம் அத்தி செம்பு ஆம்
#37
ஊதியம் இலாபம் கல்வி ஒதுக்கமே மறைவு மார்க்கம்
பாதியே பகிர்தல் தூறு பருதிதேர்வலவன் முப்பேர்
சேதி ஒற்றுரை சேதித்தல் சித்தாந்தம் கடுகே சின்னூல்
போதியே இரதத்தின் பேர் போதம்செய்வதற்கும் ஆமே
#38
ஆதவர் வெய்யோர் பார்ப்பார் ஆதல் தேர்தல் நுண்மைப் பேர்
மூடு என்ப முதுமை ஈதல் முத்தே வெண்குருகு முத்தம்
வேதண்டம் வெள்ளி வெற்பு ஆம் விளங்குறு, கிரிக்கும் வைக்கும்
வாதுவர் யானைப்பாகர் வாசிமாவடிப்போர்க்கும் பேர்
#39
விதனமே களை விசாரம் வித்து என்ப விதை விதைத்தல்
சதனமே புள்ளின் தூவி தழைக் குறும்இலைக்கும் சாற்றும்
கதனமே கலக்கம் காடு குதிரையின்கதி முப்பேரே
மதனமே மிகுதி வேட்கை மத்தனம் காமநோய் ஆம்
#40
அதிகாரம் சாத்திரப்பேர் அதன் முகம் அரசுசெய்யல்
சதகோடிப் பேரே வச்சிரம் சாற்றுறு நூற்றுக்கோடி
சிதலே நல் சிதாய்கனித்தோல் சிதவலே துவசம் ஓர் புள்
மதுவே ஓர் நிருதன் தீம் கள் வசந்தகாலப்பேர் ஆமே
#41
இதை காராமணி கலப்பை எழில் புதுப்புனம் நாவாய்ப்பாய்
புதரே புல் புருவம் பூடு ஆம் பொதி மூடை பொதிதல் ஆகும்
முதலே மூலிகை தன் கையின் முதலிடம் முதல் மும்மூர்த்தி
இதலே நல் கவுதாரிப் பேர் இசை சிவலிப்புட்குப் பேர்
#42
காது என்ப கொலையே காது ஆம் கைதூவாமை இடாமை
ஓதும் வேல் விகற்பமே கையொழியாமை முப்பேர் கூறும்
பீதமே மஞ்சள் பொன்மை கத்தூரி பொன் நாற்பேரே
வேதமே பாழ் இயல் பேர் விளங்கு ஆதிநூற்கும் ஆமே
#43
துத்தி நெய் விழவே தேமல் துணங்கையாடல் நாளோடே
பத்திசெய் ஞானம் பாந்தள்படப்பொறி இருமூன்றேபேர்
தித்தியே குரங்கு தோற்பை தித்தல் தேம் சுணங்கும் செப்பும்
மித்திரன் இரவி நட்பு ஆம் வேதிகை பலகை திண்ணை
#44
உத்தி செந்திருவுறுப்புச் சுணங்கு உரகப்படத்தின்
தொத்துறும் பொறியே தொங்கல் துவசம் ஓர் உரையே ஏழ்பேர்
குத்தி மண் அடக்கம் என்ப குதிரையே மரை வாசிப் பேர்
பத்தியம் கடுக்காய் பூவாக்காய் நோயுற்றோன்ஊண் பன்னும்
#45
பூதம் மால் இறந்தகாலம் புவி முதல் ஐந்தே சீவன்
பாதம் ஆர் பரணிநாள் வெம் பாரிடம் புனிதம் ஏழ்பேர்
ஆதன் ஆருயிரே பேதை ஆதரம் சிலம்பே வேட்கை
ஓதனம் பெருமை வெண்சோறுடன் உண்டல் எனவே முப்பேர்
#46
ஆதியே முதல் நேரோடல் அருகன் மால் இரவி ஈசன்
ஓதிமம் உயர்த்தோனே மண்டிலமாய்ஓடல் பேர் எட்டாம்
பாதிரி பாடலப்பேர் பணைத்து எழு மூங்கிற்கும் பேர்
ஓதி பெண்மயிர் வெற்பு ஓந்தி உதி பூனை எகினம் ஞானம்
#47
சாதியே பிரம்பு கள்ளுத் தாருத் தேக்கு அமுதவல்லி
ஓது சண்பகம் திணைப் பேர் உரைக்கும் நாமங்கள் ஏழாம்
பூதியம் புவி உடல் பேர் பூதரம் பன்றி வெற்பு ஆம்
ஓதிமம் அசலம் அன்னம் ஒளிர் மயிர்க் கவரி முப்பேர்
#48
கோதை முன்கைத்தோல்கட்டே குழல் தார் காற்றொழுங்கு சேரன்
பேதை நெல்சுமையே கோதாவிரிநதி எண்பேர் பேசும்
காதை சொல் கதையின் நாமம் கைதொடல் தீண்டல் துய்த்தல்
பாதை செல் தாரி நாவாய் பைதலே இளை துன்பப்பேர்
#49
காத்திரம் அவயவப்பேர் களிற்றின்முன்காலே சீற்றம்
பூத்த நல் திரையே கூற்றே பூதியம் இருமூன்றேபேர்
பாத்திரம் கடிஞை மானார் பாதுகாத்திடல் வருத்தம்
நேத்திரம் கண் பட்டாடை நீதி மந்திரி நெறிப் பேர்
#50
அத்திரி உலைத்துருத்தி அசுவம் ஒட்டகம் வாலேபம்
குத்திரம்தருவோர் யோகம் முனிவன் ஏழ்பேரும் கூறும்
சித்திரம் அழகு ஓர் பாடல் சிறந்த பொய் மணி ஏரண்டம்
அத்திரி ஓவியத்தோடு அதிசயம் எண்பேராமே
#51
பதம் அடி வரிசை சோறு பகர் வழி செவ்வி போழ்தோடு
இதமறு கொடுசொல் காலம் இயல் வீரம் குழைவு சேமம்
நிதமுறு கடிகை ஆடை நிகழ்த்துறு மூவைந்தேபேர்
உததி தெண்திரை நதிப் பேர் உதையமே புலரி தோன்றல்
#52
தாது மண் முதலாம் ஐந்தும் தமனியமாதி ஏழும்
தீதறும் இரதமாதி ஏழும் செங்காவிக்கல்லும்
போதுறு துணரும் தொண்டும் புகன்றிடு கலை காராவும்
ஏதமில் பொடியும் சீவனில்லன கொடியும் ஆமே
#53
மணி திகழ் வலித் தகாரவெதுகையின் வழுத்தும் செய்யுள்
எணில் ஓரைம்பானொன்று என்ன இசைத்தனன் கமலத் தோன்றல்
திணி திகழ் முடிபு உடைத்த சேவலங்கொடியோன் போற்றும்
அணி திகழ் செந்தில் மேவும் அருமருந்தையன்தானே
** தகரவெதுகை முற்றும்
@9 நகரவெதுகை
#1
காமுறும் ஒளிர் வெண்திங்கள் கற்றை அம் சடிலத்து அண்ணற்கு
ஓமுறு பொருளை ஓதும் உலகு எலாம் உணர்ந்த மூர்த்தி
ஏமுறும் எழில் கலாபத்து இரும் சிகிக் கடவுள் போற்றித்
தோம்அறும் உயர் நகாரவெதுகையின் தொடையைச் சொல்வாம்
#2
இந்தனம் இசையே காட்டம் எரியிடுங்கலன் புகைப் பேர்
சந்தனம் இரதம் சாந்தம் சாந்து சந்தனம் சுண்ணப்பேர்
பந்தனை புதல்வி கட்டல் பந்தி தேர்க்கால் நிரைப் பேர்
மந்தனம் தயிரின்தாழி மதயானை முகபடாப்பேர்
#3
விந்தம் ஓர் வெற்பே மேலோர் விந்தை ஆச்சரியம் துர்க்கை
சந்தம் ஏர் நிறம் வனப்புச் சாற்றிய கவிதை சாந்தம்
குந்தமே நெடிய கைவேல் குதிரை நோய் குருந்தம் நாற்பேர்
பந்தமே திரட்சி கட்டுப் பாவம் கைவிளக்கே நட்பு ஆம்
#4
நந்தியே சிவன் செக்கான் பேர் நவிற்றும் ஓர் பறையே ஏறு ஆம்
புந்தியே புதன் மதிப் பேர் போந்தை மால் யானை பெண்ணை
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கம் ஓர் இசை கன்னல் பேர்
குந்தி பாண்டவர்தம்அன்னை குடித்த தீம் கள்ளும் ஆமே
#5
மந்திரி குபேரன் எள்நீர் மந்தி வண்டொடு குரங்கு ஆம்
சந்திரம் மயிலின்தோகை தயங்கு பொன் வட்டம் முப்பேர்
முந்திரி ஓர் இலக்கம் முதிர்சுவைக் கனித்தார் ஒன்றாம்
தந்திரி சேனைகாப்போன் சாற்றும் யாழ் யாழின் தந்தி
#6
சிந்துரம் ஓர் புள் யானை சிந்தி சிந்தித்தல் சிந்தல்
கந்துகம் குதிரை பந்து ஆம் காந்தாரம் இசை கான் தேயம்
பந்து கந்துகமும் மட்டுப் படர் நீர்தூஉம் துருத்தியும் பேர்
துந்துமி ஓர் ஆண்டின்பேர் துவைக்குறும் பறையும் ஆமே
#7
இந்து என்ப மதியம் காரி இயங்குறும் கரடி முப்பேர்
செந்து என்ப நரகம் ஓர் ஈ சீவனொடு அணுவே நாற்பேர்
தந்து என்ப சாத்திரம் நூல் தந்திரம் பனுவல் தண்டம்
மைந்து என்ப வலி மயக்கம் மைந்தனே மதலை பூமான்
#8
காந்தனே இறைவன் வேட்டோன் காந்தியே எழில் இமைத்தல்
சாந்தமே கமையும் சாந்தும் சாற்று கோமயமும் கூறும்
கூந்தலே மாதர் ஓதி கொழு மயில் பீலிக்கும் பேர்
வேந்து வெண்மதியே வெய்யோன் வியாழம் இந்திரனே மன்னன்
#9
ஏந்தலே பெருமை மேடோடு ஏந்துதல் வேந்தன் வெற்பு ஆம்
சாந்தை பூதலம் கங்கைப் பேர் சந்ததம் சதம் மகிழ்ச்சி
காந்தம் ஓர் புராணம் வன் கல் கடை மருந்து ஓர் புதல் பேர்
தீந்தொழில் வேள்வி பாவம் செந்தழல் எரி கேட்டைநாள்
#10
அந்தில் ஆங்கு அசை இடப்பேர் அந்தணர் அறவோர் பார்ப்பார்
வந்திகை வந்திப்பட்டம் மலடி பூண்பொதுச் சுணங்கு ஆம்
கந்திருவம் பண் வாசி கடவுளர்சாதி முப்பேர்
எந்திரம் இரதம் மாலை எயிலுறுப்பு எழுத்தே நாற்பேர்
#11
அந்தரம் இடை விசும்போடு அளவுடன் மேகம் நாற்பேர்
கந்தரம் முழை கழுத்தே கரும் புயல் அழகே என்றாம்
நந்தரம் முல்லைமாக்கள் நவிற்றுறும் புதல்வர்க்கும் பேர்
கொந்தளம் மாதர் ஓதி குழல்கொத்துக் குருளே முப்பேர்
#12
அந்தரி துர்க்கை நாமம் அகிலம் ஈன்றிடும் உமைப் பேர்
கந்தனே அருகன் செவ்வேள் காந்தாரி நூற்றோர்தாய் பண்
சுந்தரி இந்திராணி சுண்டன் என்று இருபேர் கூறும்
மந்தனே கதிரோன்மைந்தன் மதிகூர்மையிலனும் ஆமே
#13
எந்தையே அப்பன் சுவாதி ஈசன் என்று ஓதற்கே ஆம்
சிந்துவாரம் வெண்நொச்சி தெண்திரைக்கடல் வில் முப்பேர்
தந்தமே நகை வெண்கோடு தத்தம் என்று ஓதற்கும் பேர்
நந்தல் கேடுடனே ஆக்கம் நந்தை முன்திதி கொற்றான் ஆம்
#14
சந்தானம் தேவதாரு சந்ததி எனவும் சாற்றும்
மந்தாரம் செம்பரத்தம் வானவர்தரு இரண்டாம்
சிந்தூரம் திலகம் செம்மை செங்குடை புளிமரப்பேர்
சந்தாரம் வழிமுடக்கு ஆம் சாந்தாற்றி விசனம் பீலி
#15
கந்தமே கிழங்கு நாற்றம் கழுத்துஅடி பகுத்தல் செம்பொன்
வந்த இந்திரியம் அன்பு என்றே வகுத்த பேர் ஏழும் வைக்கும்
கொந்தமே சவளம் வேள்வி குறித்திடும்படியே முப்பேர்
அந்தம் ஈறு அழகே என்றாம் அந்தகன் குருடன் கூற்று ஆம்
#16
சிந்து வாமனமே முச்சீர் தெண்கடல் நதி ஓர் தேசம்
உந்து நீர் வெட்சி என்றே ஓதுறு நாமம் ஏழாம்
கந்து பண்டியுள் இரும்பும் கம்பமும் யாக்கை மூட்டும்
வந்துறு பற்றுக்கோடும் வகுத்த பேர் இ நான்கு ஆமே
#17
உந்தி தேருருள் யாழ்க்கண் ஒன்று உயர்ச்சி கொப்பூழ் பறத்தல்
நந்திலாப் பசுவின்கூட்டம் நதிப் புனல்சுழி அளக்கர்
புந்திசெய் ஆறே என்னப் புகலுறும் ஒன்பான்பேராம்
மந்திரம் விசாரம் கோயில் வாசியின்குழாம் வீடே கள்
#18
தெளிவினின் உயர் நகாரவெதுகையில் சிறக்கும் செய்யுள்
எளிதிலா எண்ணிரண்டு என்று இன்புற உரைப்பச் செய்தான்
பளிதமார் தடம் தோள் செவ்வேள் பங்கயப் பாதம் போற்றும்
அளி திகழ் பொழில் சூழ் செந்தில் அருமருந்தையன்தானே
** நகரவெதுகை முற்றும்
@10 பகரவெதுகை
#1
கண் கை கால் முகம் வாய் செங்கேழ்க் கமல நேர் மலரின் மாது
கொண்கன் வார் கராசலத்தைக் குறித்து அடு பகுவாய்ச் செங்கண்
வண் கராச் செகுத்த வாழி மால் மருகோனைப் போற்றிப்
பண்பினால் உயர் பகாரவெதுகையின் தொடை பணிப்பாம்
#2
விபுலமே பெருமை பூமி விரிவு எனும் முப்பேர் செப்பும்
தபுதலே கேடும் சாவும் சபலையே சலிவு மின்னல்
கபிலை ஓர் நிறம் பசுப் பேர் கைப்பே கைத்தல் வெறுத்தல்
சுபம் அழகுடனே வெண்மை சோபனம் இ முப்பேரே
#3
அபரமே கவசத்தின் பேர் யானைப்பின் கால்பின்பக்கம்
தபனன் தீ ஆதவன் பேர் சபதி சீக்கிரமே வெம் போர்
இபம் என்ப மரக்கோட்டின் பேர் யானை என்று இசைக்கும் அப் பேர்
அபரங்கம் கடைக்கணித்தல் அணி நகர் கவசம் ஆமே
#4
விபூதியே கொடுமை குற்றம் விடக்கு வெண்ணீறே செல்வம்
கபோதமே புறாப்பொதுப் பேர் கரும்புறவுக்கும் காட்டும்
குபேரனே அளகை வேந்தன் குளிர் அலர் மதி இரண்டாம்
அபாரமே அளவின்மைப் பேர் அறை பரம்பொருளும் ஆமே
#5
நீபமே கடை அயல்சொல் நாளும் நீர்க்கடம்பும் ஆகும்
சாபமே அங்கதச்சொல் தனு வரையாடே முப்பேர்
கோபமே சீற்றம் ஈதல் குறிக்கும் இந்திரகோபப்பேர்
யூபமே வேள்வித்தம்பம் உறு படைவகுப்பே மட்டை
#6
தாபரம் முனிவர்வாசம் தரு உடல் மலையே சார்வு ஆம்
ஞாபகம் அரும்பொருள் பேர் நவிற்றும் நல்லறிவுமே ஆம்
சோபமே கள் ஆல் சீயம் சோம்பும் என்று ஓதல் முப்பேர்
தீபர் வாணிகரே நீர் ஆம் தீபம் நல் சுடர் பல் தீவு ஆம்
#7
காப்பு என்ப கதவே நீறே காவல் தூசுடனே வேய் ஆம்
யாப்பு என்ப நகை போர் செய்யுள் ஏணியின் பழுவே கட்டு ஆம்
சீப்பு என்ப கதவின் தாழும் செப்பிய கங்கமும் பேர்
பூப்பு என்ப மகளிர் தோயாப் பூப்பொடு பூத்தல் ஆமே
#8
பாப்பு வெம் பணியே பார்ப்பார் பப்பே சூபகம் விசாலம்
நாப்பண் யாழ்கண்ணுறுப்பே நடுவுடன் உருள் தேர்த்தட்டு ஆம்
தூப்புவாய் அங்கணப்பேர் மதகின் உள்துளைக்கும் சொல்லும்
சாப்பை புல்பாய் பணித்தோல் தைப்பை சட்டை பொதிப் பேர்
#9
உப்பு மெல்லியலார்ஆடல் உவர்க்கடல் அராகம் இன்பம்
கப்பு இளங்கொம்பு உயர்ச்சி கருதிய மிகுதி முப்பேர்
சுப்பிரம் தூய்மை வெண்மை துப்பை வெற்றிலையே போர் ஆம்
செப்பு உரை கரண்டகப்பேர் சிவப்புச் செம்புடன் நாற்பேரே
#10
ஒப்புரவு அது கடைப்பாடு உண்மை ஒப்புரவே முப்பேர்
செப்பமே நடுநிலைப் பேர் தெருவுடன் வழியே நெஞ்சு ஆம்
துப்புரவு உணாவே வேண்டற்பாடே சொற்பொறிநுகர்ச்சி
கப்பணம் இரும்பில் செய்யும் நெருஞ்சின்முள் கைவேல் ஆமே
#11
வைப்பு என்பது இடம் பதிப் பேர் வைத்தல் ஊணுண்டல் நாற்பேர்
கொப்பு என்ப கூந்தல் கொம்பு ஆம் குப்பையே ஆகு கூட்டம்
வெப்பு என்ப மால் கால் வெம்மை விபுதரே நிபுணர் விண்ணோர்
ஒப்பு என்பது இசை பொருத்தல் உவமை கட்டழகே நாற்பேர்
#12
ஆபீனம் சிற்பர்வீதி ஆன் திகழ் செருத்தற்கும் பேர்
சோபானம் தாழ்வாரப்பேர் சொற்ற கற்படையும் வைக்கும்
காபாலி விடைஊர்நாதன் அவன் ஆடல் இருபேர் காட்டும்
பூபாலன் வேந்தன் செவ்வாய் பூபதி அரசன் சேடன்
#13
அப்பல் சாந்துஅணிதல் மொத்தல் அபயன் செம்பியனே சூரன்
கொப்பரம் ஒரு தேயம் மெல்லடைவின்மை முழங்கைக்கும் பேர்
தப்பலே குற்றம் தப்பல் தபதி தச்சன் இடப்பேர்
மைப்புயல் அது விண்மேகம் மாபெலி அவுணன் யாளி
#14
உபம் என்பது இரண்டின் நாமம் உபமானம் எனவும்பாற்றே
விபரீதம் வேறுபாடு மிகுதி என்று இவை இரண்டாம்
உபதானம் உதவும் பிச்சை உறக்கம்கொள் தலையாணிப் பேர்
அபரமிதம் பெருமையின் பேர் அளவின்மைதானும் ஆமே
#15
குப்பமே சிற்றூர் பொன் ஆம் கோபுரம் சிகரி தானம்
ஐப்பசி ஓர் திங்கள் பேர் அசுபதி நாட்கும் வைக்கும்
கைப்புலி மதமால் யானை கதித்த வாள் உழவர்க்கும் பேர்
சுப்பிரதீபம் திக்கு ஓர் யானை நல் சுடர் விளக்கு ஆம்
#16
கைபுனை என்பதே பூத்தொடுத்தல் கான மலரே செப்பம்
மெய் புணர்ந்துற்ற கண்கள் அணிதல் ஆடவர் மின்னாரை
ஐபெற அலங்கரித்தல் அபிதானம் இவை ஆறேபேர்
எய் புகல் பேரே பன்றியே எய்தல்தனக்கும் ஆமே
#17
துப்பு நெய் பகை அரக்குத் துகிர் ஊற்றம் அனுபவம் சோறு
ஒப்பின் நல் பொலிவே உண்டல் ஒளிர் படைப்பொது விலங்கு ஊண்
தப்பில் சொற்பிணையே முற்றம் சாற்றிய தூய்மை வன்னம்
செப்புடன் தெளி துணைக்காரணம் ஒருபான் ஏழ் செப்பும்
#18
தெள்ளிதாய் உயர் பகாரவெதுகையின் உரைக்கும் செய்யுள்
உள்ளம் ஆர் ஈரெட்டு என்ன உலகினில் புகலச் செய்தான்
கள் அறா மலர்ப் பூங்கொந்து ஆர் கடம்பு அணி குகனைப் போற்றும்
அள்ளறாச் செந்தில் மேவும் அருமருந்தையன்தானே
** பகரவெதுகை முற்றும்
@11 மகரவெதுகை
#1
மாண் கிளர் ஒளி சிறந்த மரகதக் கலாப மஞ்ஞைச்
சேண் கிளர் பரி துரக்கும் தெய்வ குஞ்சரி மணாளன்
பூண் கிளர் தாள் துணைப் போது உளத்திடை நினைந்து போற்றிக்
காண் கிளர் கவின் மகாரவெதுகையின் கவியைச் சொல்வாம்
#2
சமம் களிப்புடனே ஒப்புச் சங்கிராமமும் அப் பேரே
கமம் திகழ் நிறைவே மூசல் காமாரி சிவன் ஓர் சாலி
தமம் திமிரம் இராகுத் தம்பம் என்று உரைப் பேர் சாற்றும்
சுமங்கலை வறள் சுண்டிப் பேர் சொல் வண்ணமகளும் ஆமே
#3
அமலையே மிகுதி சோறோடு அம்பிகை முப்பேர் வைக்கும்
விமலையே துர்க்கி கங்கை வெற்பு இறைமகட்கும் என்ப
கமலையே திரு விதாதா கம்பை ஓர் நதி பணைத்தல்
நிமலை பார்ப்பதியே சேவூர் நிருமலன்தனக்கும் ஆமே
#4
சாமமே யாமம் வேதம் சாமளம் வனம் உபாயம்
வாமமே குறள் இடப்பால் வயங்கல் ஓர் சமயம் ஊர் ஆம்
காமமே குடி ஊர் வேட்கை கதிர் இறை ஒழுங்கே கொன்றை
நாமமே பெருமை நல் பேர் நம்பி அர்ச்சகனே ஏந்தல்
#5
அம்மையே வருபிறப்போடு அம்பிகை அழகே தாய் ஆம்
சும்மையே படுக்கும் நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும்
செம்மையே சிவப்புச் செப்பம் செவ்வை நல் பெருமை நாற்பேர்
கொம்மை ஏர் இளமை வட்டம் குயம் திரட்சி கைகொட்டல்
#6
அம்பு என்ப தளிரே தண்ணீர் ஆசுகம் இ முப்பேரே
சம்பு என்ப நரியே நாவல் சங்கரன் அருகன் வேதா
வம்பு என்ப புதுமை கச்சு மணம் நிலையின்மை மேற்கோள்
தும்பு என்ப சிம்பே தோடு ஆம் தும்பி வண்டுடன் மால் யானை
#7
உம்பரே தேவர் ஆகும் உயர்நிலமுடன் மேலும் பேர்
கும்பமே குடம் இராசி கும்பி மத்தகமும் கூறும்
தம்பமே கவசம் தூண் ஆம் தாம்பே தாமணி நாண் ஆகும்
விம்பமே உருவம் காந்தி விரிந்து எழும் கோவை முப்பேர்
#8
அம்பலே சிலர் அறிந்தே அறைமொழி பழிமொழிப் பேர்
உம்பலே ஊற்றம் யானை உற்ற நல் குலனே முப்பேர்
பம்பலே நிறைவே ஆற்றல் படர்ச்சி பொன் அணவல் ஓசை
நம்பலே வேட்கை நம்பல் நாம் என்ப வெருவல்தானாம்
#9
அம்பலம் சித்திரகூடம் ஆன்ற பேரவையும் ஆகும்
கம்பலம் மேற்கட்டிப் பேர் சிம்புளின் படாமும் காட்டும்
செம்புலம் பாலை வேலி செருக்களம் வகுக்கல் ஆகும்
சம்பளம் தகர் கிடாய்ப் பேர் சேவகத்தில் லாபம் சாற்றும்
#10
வாமனம் குறளே ஓர் நூல் மாதிரக்களிறே முப்பேர்
காமனே மதன் சுரும்பு பிப்பிலி முப்பேர் காட்டும்
சோமன் ஓர் ஏந்தல் கட்டும் தூசு வெண்திங்கள் சொல்லும்
வீமனே கலுழன் நாமம் விளங்கும் ஓர் ஏந்தல் ஆமே
#11
அம்பி நாவாயே தெப்பம் ஆன்தொடர் பூட்டே முப்பேர்
கும்பியே நரகம் யானை கோம்பி சக்கரப்புள் ஓந்தி
உம்பியே இளவல் விண்ணோர் ஓம்பலே புரத்தல் காத்தல்
கம்பியே கலன்செய்கம்பி காதணிப்பொதுவும் ஆமே
#12
அம்பரம் கடலே விண்ணே ஆன்ற தூசுடனே முப்பேர்
கொம்பர் கொம்புடன் வெம் காற்று ஆம் கோமானே மூத்தோன் சாத்தன்
சம்பரம் குலிசம் வெய்யோன் சாபமோடு எலுமிச்சைப் பேர்
பம்பரம் செம்பொன் மேரு கறங்கும்ஓர்கலனும் பன்னும்
#13
கம்புளே சம்பங்கோழி கதிர் சங்கம் வானம்பாடி
கிம்புரி தந்தப்பூண் பேர் கிளர் முடி அங்கம் ஆகும்
சிம்புள் எண்கால்புள் சிம்புள் செம்பு காவல் பொன் செம்பு ஆம்
கம்பளம் மயிர்ப்படாம் செய் கமை சாந்தம் உரிமை ஆமே
#14
அம்புதி கடல் கால் பாட்டின் அத்தம் என்று உற்ற நாமம்
கம்பலை ஒலி நடுக்கம் கருது அச்சம் படை துன்பப்பேர்
வம்பலர் புதியரோடே அயலவர்க்கும் வழுத்தும்
பம்பை முல்லைப்பறைப் பேர் நதி அருந்தவப்பெண் பன்னும்
#15
அம் அழகு அசைச்சொல் நீர் ஆம் ஆம்பிரம் புளிப்பே சூதம்
கம் மயன் தலை கால் வெண்மை ககனம் நீர் நதி கார் ஆடு ஆம்
பொம்மலே பொலிவும் சோறும் பொருந்து போருடனே முப்பேர்
கிம்மையே உரிமை உப்புக் கிளர்த்தும் பண்பு எனும் முப்பேரே
#16
இம்மியே நுண்மை செம்பொன் இயல்மதியுடன் ஓர் எண் ஆம்
தொம் ஒலி குழு எனும் பேர் தோம் அரி ஓர் எண் கூத்து ஆம்
வெம்மையே வெருவுதல் பேர் விருப்பம் உட்டணமும் சொல்லும்
கம்மியர் கைவினைப் பேர் கண்ணாளர்தமக்கும் ஆமே
#17
தாமரை புலி சரோரம் சமன் யமன் நடுவோடு ஒப்பு ஆம்
தேம் விரை அகில் தேன் தித்தித்தல் செம்பை சிக்கடி ஓர் பூடு ஆம்
காமரம் அத்தநாள் ஆல் கடி பொழில் இசை அடுப்பு ஆம்
பூமரம் அறிகுறிச் சொல் ஓரும் பூமரமும் ஆமே
#18
நேமி தேருருள் பார் வட்டம் நெடும் கடல் அமை புள் ஆழி
சாமி பொன் இறையின் நாமம் சம்மட்டி குறடாக் கூடம்
பாமினி விறலி கா ஆம் பைம்பொன்னே இமயம் செம்பொன்
ஏமினி இடுதிரைப் பேர் கிடை ஆடை இருபேர் ஆமே
#19
நிமிர்தலே உயர்ச்சி ஓட்டம் நீட்டித்தல் சோறே நாற்பேர்
திமிர்தமே ஒலி திமிர்த்தல் சேமம் காவல் பேர் சேமம்
ஞெமிர்தலே பரப்பு இறுத்தல் வளைத்தலும் என நிகழ்த்தும்
குமிழ் ஒரு மரமே சேற்றில் குமிழியும் குவித்தலும் பேர்
#20
சிமிலியே குடுமி பூனை திருவிலி உறி தோணிப் பேர்
அமுதமே இனிமை வெண் பால் அமரர்ஊண் மழையே நாற்பேர்
குமுதமே குசை அடுப்புக் குளிர் ஆம்பல் ஒலி திக்குயானை
அமை அழைத்திடுதல் மூங்கில் அம்பகம் விழி எழுச்சி
#21
அமரரே விபுதர் தெவ்வர் அமையம் சம்மதித்தல் போழ்து ஆம்
குமரனே இளையோன் செவ்வேள் கூறிடும் தோன்றல் முப்பேர்
தமரமே அரக்கு ஓசைப் பேர் சமழ்ப்பு நாண் வருத்தம் தாழ்தல்
அமர்தலே பொலிவும் ஆழி அமரே போர் அமர்தல் ஆமே
#22
சாம்புவே பறை பொன்னின் பேர் சமை குணம் வருடம் என்றாம்
தூம்பு வேய் துளை மரக்கால் தொகு நிதி வழிதல் தூம்பு ஆம்
தேம்பலே இளைத்தல் சோம்போடு அலையலும் செப்பற்பாற்றாம்
கூம்பு தேர்ச்சிகரம் கூம்பல் கொம்பே பீள் சினையே முட்டை
#23
சேம்பு சாகினியே சேம்பு ஆம் திமிரமே நிசி அறைப் பேர்
ஆம்பி காளானே சத்தம் அமோகமே மிகுதி வேட்கை
தேம்பியே வருத்தம் யானை சிமையம் திண் மலை வெற்புஉச்சி
காம்பிரம் முருக்கு வீரம் கம்பமே நடுக்கம் தம்பம்
#24
குமரமே கொம்பிலாதமிருகமும் குழவும் கூறும்
இமை மயூரம் நிமைப் பேர் எண்குடன் அற்பம் நாற்பேர்
அமரம் நோய் பொருள் சொல் ஓர் நூல் அம்பிகை உமை காளிப் பேர்
கமர் எனும் நாமம் வெள்ளில் காய் நிலவெடிப்பும் ஆமே
#25
ஆமலகம்தான் நெல்லி அவிர் ஒளிப் படிகமும் பேர்
ஈமமே மயானம் காட்டம் ஏமாப்பே இறுமாப்பே மால்
ஊமையே கீரி மூகை உம்மை முன்பின்பிறத்தல்
மாமையே நிறம் வனப்பு மாழ்கு இரக்கக்குறிப்பு ஆம்
#26
கூம்பலே குமிழ் கூம்பல் பேர் கோமளம் இளமை பால்ஆன்
சோம்பு சோபம் மழுங்கல் துமி துளியுடன் துணித்தல்
பாம்பு பாந்தள் அணைப் பேர் பம்பு உடுக்கு உத்திரப்பேர்
நாம் பல் சொல் பேர் இளைத்தல் நவிற்றுடன் மெலிநோய் ஆமே
#27
விமானமே ஊர்தி வெய்ய விண்ணவர்உலகு எனும் பேர்
தமாலமே பசும்பிடிப் பேர் தழைத்த பச்சிலை இரண்டாம்
இமாசலம் பனிநீர் மேரு இமமே தண் பனி பொன்னின் பேர்
சமாதியே விளிவு யோகம் சம்பை ஓர் தாளம் மின்னல்
#28
குமரியே கௌரி கன்னி கொற்றவை ஆற்றின் ஒன்றோடு
அமர்வரி கற்றாழைப் பேர் அழிவின்மையுடன் ஏழேபேர்
சுமடு சும்மாடு மூடம் தோமரம் படை ஓர் வாச்சியம்
கமலம் நீர் செம்படாமும் கடி கமழ் முளரிக்கும் பேர்
#29
ஆம்பல் தீம் கள்ளே கவ்வை அல்லி அம் கயம் வேய் திங்கள்
தூம்பு சேர் ஊதும் கொம்பே சொற்ற எண் பண் ஒன்பான் பேர்
காம்பு வேய் மலர்த்தாள் பட்டுக் கடி மலர்க்கொம்பே நாற்பேர்
சாம்பலே பழம் பூக் கூம்பல் தமிழ் தமிழ் இனிமை நீர்மை
#30
செம்மல் ஆதவன் பழம்பூச் சிவன் வாரி சிறந்தோன் மைந்தன்
பொம்மல் வாடாப்பூ வீரர் பொழில் தலைமைப் பேர் பத்தாம்
கைம்மமே கடல்நீர் நன்னீர் காணிய கைம்மை முப்பேர்
விம்மல் ஏங்குதல் ஒலித்தல் விளங்கிய நிறைவும் ஆமே
#31
ஏமமே சேமம் காவல் ஏமாப்பு இன்பம் பொன் மையல்
நாமம் ஆர் கலையோடு ஆற்றல் நள்ளிரவு ஒன்பான்பேரே
ஓம் எனும் நாமம்தானே ஓங்காரம் சம்மதித்தல்
ஆம் என்னல் இடைச்சொல் இன்றோடு அன்று எனல் ஈரம் நீர்மை
#32
அம்படலம்தான் ஓடம் வெளி வெள்ளி மரக்கால் அம்மி
செம்பொன் செய் இரதம் ஈயம் செப்பும் பேர் ஏழ் என்று ஆகும்
அம்பணம் துலாக்கோல் வாய் அம்பி துப்பு ஆமை வாழை
அம்புயப்பேரே புட்டில் அலர்ந்த தாமரைக்கும் பேரே
#33
தாமமே எழில் பூமாலை தயங்கல் ஊர் கடுக்கை யானை
வாமம் நீள் முடி அங்கப்பேர் வரை அமர்க்களம் ஒழுங்கோடு
ஏமம் ஆர் மணியின்கோவை இடம் கயிறு ஈரேழேபேர்
யாமமே இரவும் தெற்கும் சாமமும் இயம்பலாமே
#34
முரண் தொகும் எழில் மகாரவெதுகையில் செய்யுள் முப்பான்
இரண்டு என உலகில் போற்றி இசைத்தனன் திட்டமாகிக்
கரண்டகம் கவிழ்த்த வேழத்து இளவலாம் கடவுள் போற்றும்
அரண் தொகும் செந்தில் மேவும் அருமருந்தையன்தானே
** மகரவெதுகை முற்றும்
@12 யகரவெதுகை
#1
மணி திகழ் தரங்க வாரி சுவறிட வயங்கு செம்பொன்
திணி திகழ் மேருக் குன்றம் குலுங்கிடச் சிறகடிக்கொள்
தணி திகழ் மயூரம் ஊரும் சண்முகன் தாளைப் போற்றி
அணி திகழ் யகாரமாயவெதுகைப் பா அறையலுற்றாம்
#2
ஆய்தமே நீளம் புள்ளி அக்கரம் இவை இரண்டாம்
காய்தலே புலர்வு வேட்டல் கடுங்கோபம் இ முப்பேரே
வேய்தலே சூடல் மூடல் வீடு கோயில் பொன் தீட்டல்
பாய்தலே பரப்புப் பாய்தல் பயினேபொய் பிசின் பயிற்சி
#3
இயமமே வார்த்தை ஓசை ஈயே வாச்சியமே நாற்பேர்
பயன் மிகும் அறிவு இலாபம் பயிர்ப்புக்கு உச்சிதம் பயிற்றல்
அயர்தலே அயர்ச்சிசெய்தல் ஆய்வே நுட்பம் வருத்தம்
வயவன் ஓர் புள்ளே வீரன் வயங்கு காதலற்கும் பேரே
#4
வயா என்ப கருப்பம் காதல் மாழ்கிய பிணியே முப்பேர்
பெயர் என்ப பெருமை நாமம் அபிதானப்பேரும் போற்றும்
வியர் என்பது அறிஞர் வேர்வை வீ நீக்கம் பூப் புள் சாவு ஆம்
அயர்வு சோம்புடன் வருத்தம் தெளிவின்மை இடம் என்றாமே
#5
வியல் என்ப அகலம் கானம் மேம்பாடே பெருமை நாற்பேர்
மயல் என்ப மயக்கம் செத்தை மருட்டு பேய் நெருப்பு என்றாகும்
செயல் என்ப வினையே காவல் சேறுடன் ஒழுக்கம் என்றாம்
முயல் என்ப சசம் முயற்சி மொய்ம்பு தோள்வலி எழில் பேர்
#6
அயில் என்ப நாஞ்சில் கோரை அழகுடன் கூர்மை வேல் ஆம்
கயில் என்ப பிடர்த்தலைப் பேர் கலன் கடைப்புணர்ப்பும் ஆகும்
குயில் என்ப துளை முகில் பேர் கோகிலம் இ முப்பேரே
எயில் என்ப மதிள்புரப்பேர் இயைபே பாஉறுப்பு இசைப்பு ஆம்
#7
அயிரே சர்க்கரை நுண்மைப் பேர் ஆன்ற நுண்மணற்கும் வைக்கும்
செயிரே குற்றம் சினத்தல் தேயம் நாடு உடல் திருட்டு ஆம்
வயிரே கூர்மைப் பேர் ஊதும்கொம்பு என வழுத்தற்பாற்றே
துயிலே தூங்கல் பேர் மாளல் தோயுறல் புணர்தல் மூழ்கல்
#8
மயிலையே மீன் இராசி மலர்ந்திடும் இருவாட்சிப் பேர்
கயினியே அத்தநாளும் கைம்மையும் இருபேர் காட்டும்
குயிறலே குதித்தல் செய்தல் கூவல் நீர்குடைதல் நாற்பேர்
வயின் இடப்பேர் வரம்பே வயிறுடன் பிணை என்றாமே
#9
வையம் யாழ் உரோணி பண்டி வயங்கல் ஆன்ஏறே பூமி
சையகம் சயனம் வெற்பு சை ஓர் அக்கரம் இகழ்ச்சி
நை அரிவாளே துக்கம் நைதலே மிகுதி நாற்பேர்
தெய்வம் ஊழ் கடவுளின் பேர் தீயோர் வேதியரே தீம்பர்
#10
தையே ஓர் மதி நூல் நீவல் தாளச்சீர் தைத்தல் ஐம்பேர்
மெய்யே ஒற்று உடல் மெய் கூட்டம் வியம் சாதல் வில் மழுப் பேர்
பையே மெத்தென்றல் பைம்மை பணிப்படம் அழகே நாற்பேர்
ஐயே ஏர் இருமல் சுவாமி அசைச்சொல் மந்தாரம் பொள் ஆம்
#11
உய்யலே பிழைத்தல் உஞ்சல் உயிர் என்ப காற்றே சீவன்
ஐயே பெண் துர்க்கை காளி அம்பிகையுடன் ஆசாள் பேர்
தொய்யலே எழுதல் சேறு துயர் எழில் மகிழ்வு ஓர் பூடு ஆம்
பையுள் நோய் சிறுமையின் பேர் பையம் கோரைப் பேர் கூடை
#12
வாயில் ஐம்புலன் திறம் காரணம் தூதே மனைக்கடைப் பேர்
ஆயுதம் படையே கூத்துப்பயிலிடம் இரண்டும் ஆகும்
தீ அரு நரகே தீங்கு ஆம் தித்திப்பும் தழலும் செப்பும்
மாய்தலே மறைவே சாவு ஆம் வாய்க்காலே மகநாள் நீர்க்கால்
#13
பாயசம் படர் ஓர் பூடு மட்ட பால்சோறும் பன்னும்
வாய் இடம் வாய்மை ஊதும்குழல் வருவாய் வாய் வாக்கு ஆம்
சாயல் என்பது வனப்புச் சமம் நுண்மை மேம்பாடு என்றாம்
மாயமே உயர்தல் நீளம் வஞ்சம் பொய் தொகை ஐம்பேரே
#14
நாய் என்ப சுனகம் சாரி நயம் நன்மை மகிழ்ச்சி மேதை
தாயமே உரிமை ஆடும் கவற்றுருள் தமரே முப்பேர்
தோயமே புவனம் நீர் ஆம் சுயம்பே தானாதல் முந்தை
ஞாயமே வழக்கம் நன்மை நாயகம் தலைமை மையம்
#15
வேயே யாழ் கவனம் மூங்கில் வேய்தல் ஒற்றுத் துளைப் பேர்
சாயே கோரை சாயல் பேர் தையல் பெண் அழகே காந்தி
ஆயே தாய் வருத்தம் ஆய்தல் ஆயுள் வாணாள் நோய்தீர்ப்போன்
சேயே வேள் இளமை தூரம் சிவப்புச் செவ்வாய் மகப்பேர்
#16
நெய்தலே வேலை சாரும் நிலம் ஓர் பூச் சாப்பறைப் பேர்
பொய்தலே மாதர்கூட்டம் அவர் ஆடல் மீள்தல் போற்றும்
பைதலே சிறுமை பைம்மை பயோதரம் புயல் பாரப்பேர்
கைதையே பழனம் தாழை கயவு கீழ் பெருமை கள்ளம்
#17
அய்யனே மூத்தோன் சாத்தன் அப்பன் இ முப்பேர் செப்பும்
வெய்யவன் கொடியோன் பானு விரும்பினன் பேரும் வைக்கும்
கையனே கொடுக்கும் பாரி கருதில் கீழ்மகற்கும் காட்டும்
எய் கணைஎய்தல் பன்றி இயாமம் தெற்கு இரவே சாமம்
#18
ஐயமே பிச்சை ஏற்கும் ஓடு அனுமானம் பிச்சை
மொய் செருக்களம் திரட்சி மூசு வண்டு யானை தாய் ஆம்
மையமே நடு வெண்ணெய்ப் பேர் வயமாச் சிங்கம் தோல் வேங்கை
குய் எனும் பேருள் வைப்பும் கொழு மணப் புகையும் ஆமே
#19
அய்யரே முனிவர் தேவர் அயிறலே செய்தல் உண்டல்
மெய்யர் வேதியர் திடத்தோர் வியாதன் ஓர் முனி வேடன் பேர்
நெய் அவிஆடை நெய்தல் நிகழ்த்து சித்திரைநாள் முப்பேர்
ஐ விரல் அத்தநாள் பேர் அங்குலி ஐந்தும் ஆமே
#20
இயக்கனே நாயே அக்கன் ஈயே ஓர் பறவை ஈதல்
உயிர்த்தல் மூச்சுடன் வருத்தம் உய்த்தல் ஓட்டுதல் பிழைத்தல்
பயத்தலே ஒன்றைத் தன் கைக் கிடைத்தலும் ஒளியும் பன்னும்
மயக்கமே தெளிவிலாமை விரகநோய் அதற்கும் ஆமே
#21
சயிந்தவம் தலை இந்துப்புத் தலைமை வாசிக்கும் பேரே
வியங்கோள் மால் யானை மேவல் வியாளமே புலி பாம்பின் பேர்
பயம்பு என்ப பள்ளம் யானைப்படுகுழி இரண்டும் பன்னும்
இயங்கலே நடத்தல் காந்தி இயம்பல் சொல் பழிமொழிப் பேர்
#22
இயவு காடு ஊர் வழிப் பேர் இயல்பே நற்குணம் ஒழுக்கம்
வயல் வெளி வினையுறும் செய் மயிடமே பெருமை மேதி
இயல் நடை அகலம் சாயல் இசைத்திடும் தமிழே நாற்பேர்
வயறு உரை கயிறே குக்கி வாய்த்தல் ஓர் அசை நுணுக்கம்
#23
அயம் என்ப தடாகம் நீரே ஆடு வெம் பரி இரும்பு
முயல் நிலம் விழவு சேறு மொழிந்த சூதனப்பேர் பத்தாம்
நியமம் ஆலயம் ஊர் வீதி நிச்சயம் நியதி ஈமம்
அயனமே ஆண்டில்பாதி நடவை என்று இரண்டும் ஆமே
#24
கயம் என்ப குளம் நோய் ஆழம் களிறு கீழ் பெருமை ஊதும்
உயர் சின்னம் இளமை தேய்தல் ஓதும் ஒன்பான்பேரே ஆம்
பயம் என்ப சுதை நீர் அச்சம் பால் புயல் குணம் விதாதா
புயம் என்ப முலையும் தோளும் பொய்யே பொத்துப் பொக்கப்பேர்
#25
ஆயமே கவற்றில் ஆயம் ஆ தாயம் மகளிர்கூட்டம்
தாயொடு நீளம் சுங்கம் சாற்றும் மல்லரியே ஏழ்பேர்
காயமே விண் வெங்காயம் பெருங்காயம் உடல் பண் கார்த்தல்
நேயம் நெய் எண்ணெய் அன்பே நிகழ்ந்த நன்மை நாற்பேரே
#26
வயம் வலி தொந்தம் மேடம் வாசி புள்பொது மருப்பு
முயலுடன் இரும்பே நீரே மொழியுறும் ஒன்பான்பேரே
சயம் உயர் வெற்றி மாலை சருக்கரை இரவி அல்லி
குயம் முலை அரிவாளின் பேர் கொழுமை சேர் இளமை ஆமே
#27
பயிர் ஒலி பயிலே பைங்கூழ் பறக்கும் புள் மிருகம் கூடிப்
பயில் குரல் ஓர்விதம் கட்டுறும் வழக்கு ஐம்பேர் பன்னும்
வயிரமே கிம்புரிப் பூண் வச்சிரம் மணியே செற்றம்
அயிலொடு குலிசம் வன்மை ஆன்ற தூரியம் ஏழ்பேரே
#28
ஏய்ந்த சீர்பெறும் யகாரவெதுகையின் இசைக்கும் செய்யுள்
வாய்ந்த ஒன்று ஒழி மூவொன்பான் என்னவே வழங்கச் செய்தான்
காய்ந்த சூர் அற முருக்கும் கந்தவேள் பாதம் போற்றும்
ஆய்ந்த சீர்ச் செந்தில் மேவும் அருமருந்தையன்தானே
** யகரவெதுகை முற்றும்
@13 ரகரவெதுகை
#1
செகம் முழுது இறைஞ்சும் தொல்லைச் சிகர வெற்பரசன் தந்த
மகவு உமை பயந்த செவ்வேள் வள்ளிநாயகிதன் கேள்வன்
குகன் நெடு வடிவேல் தாங்கும் கொற்றவன் மலர்த் தாள் போற்றித்
துகளறு ரகாரமாயவெதுகையின் தொடையைச் சொல்வாம்
#2
சுரதமே மதநீர் சூதம் சொல் மருந்து இழி சாரப்பேர்
இரதம் நீளம் புணர்ச்சி சுவை சூதம் இரதம் வீணை
பரதம் ஓர் சாத்திரப்பேர் பாரதப்பேர் ஓர் கண்டம்
விரதம் நீர் தவம் வட்டித்தல் வீரட்டானம் கூத்து ஓர் ஊர்
#3
சரகு என்ப தேவர்தம் ஊண் தரு உதிர் சரகே சோறு ஆம்
சிரகமே கரகம் தூறல் சென்னியில் கோடுக்கும் பேர்
கரகமே துளி நீர் கங்கை கமண்டலம் ஆலாங்கட்டி
துரகம் ஊர்திப் பரிப் பேர் சூரணம் பொடியே கந்தம்
#4
மரபு என்ப முறைமை தொன்மை மருவும் நற்குணம் குடிப் பேர்
சரபம் எண்கால்புள் ஒட்டை வரையாடுதானே முப்பேர்
பரதரே திமிலர் நாய்கர் குருகுலத்தோர்க்கும் பன்னும்
வரதம் நற்றுகில் கடாக்கம் மருமானே மருகன் சேய் ஆம்
#5
முரண் வலி பகை போர் தூக்கின் மொழியுறுப்பு ஒன்றே நாற்பேர்
கரணமே கலவி கூத்தோடு அகம் துணைகாரணப்பேர்
அரண் எயில் கவசம் காடே அடிதொடும் கழலே மஞ்சம்
சரணமே மறைபுகல் தோகைப்பீலி தாளே முப்பேர்
#6
அரிதல் பிற்கிடலே கொய்தல் அரிட்டம் கள் காக்கை கேடு ஆம்
பரிதலே அறுத்தல் அன்பு பகர் குற்றம் இரங்கல் நாற்பேர்
வரிதலே வரித்தல் ஊர்தல் வரைதலே கொளல் நீத்தல் பேர்
இரிதலே நெரிதலின் பேர் எற்றுறு பயமும் ஆமே
#7
பரி முதல்நாள் சேண் சும்மை பருத்தி மாப் பெருமை வேகம்
அரிதமே பசுமை திக்கு ஆரம் ஆர்கலி புயல் கடல் பேர்
சொரிதலே பொழிதல் நீட்டல் சுழன்றிடல் முப்பேர் செப்பும்
நெரிதரல் பிறகிடல் பேர் நெருங்குற முருங்கல் ஆமே
#8
திரிபுரி சாரடைப் பேர் சிறந்த முப்புரமும் செப்பும்
பரிபவம் அதிக வீரம் பழித்திடும் இகழ்ச்சியும் பேர்
சரிதையே பூசை பிச்சை சாத்திரம் இ முப்பேர் ஆம்
தெரிசனை முகுரம்காணல் தெரித்தலே சொல்தீட்டல் பேர்
#9
அரிசனம் திருமால்தொண்டும் அழகு எறி மஞ்சட்கும் பேர்
திரிசரம் பகழி யானைப் பிறப்பு எனச் செப்பற்பாற்றே
பரிசனம் ஏவல்செய்வோர் பற்றினர் துவளலும் பேர்
சரி சமம் கரவளைப் பேர் சாற்றுறு வழியும் ஆமே
#10
உரையே பொன் கிளவி நாமம் ஓர் அசை உரிஞ்சுதல் பேர்
புரையே இல் உயர்வு குற்றம் புழையுடன் உவமையும் பேர்
சுரையே கள் புழை அம்பின்கூர் சுரை ஆவோடு அதன் முலைப் பேர்
நரையே ஏறு இவுளி வெள்ளை நாட்டிய கவரி நாற்பேர்
#11
மரையே கான் குதிரை தேரை வனசம் என்று ஓதல் முப்பேர்
விரைவே பீர் வேண்டல் வேகம் விளங்கு உபசாரம் நாற்பேர்
சிரையே வானரம் முசுப் பேர் செப்பிய நரம்பும் சொல்லும்
வரையே கை வரை நெல் வெற்பு மட்டு இறை கடல்நீர்த்தீரம்
#12
கரமே கை கிரணம் நஞ்சம் கழுதை கார்க் கிளி இறுத்தல்
சிரமே சென்னிப் பேரோடே செப்புறு நெடுங்காலப்பேர்
புரமே மெய் புரி முந்நூல் பேர் புரவலன் வள்ளல் வேந்தன்
உரமே மார்பு ஊக்கம் ஞானம் ஓதுறும் வலி நாற்பேரே
#13
பரம் என்ப கவசம் செய்தி பழமை மெய் கலனை அத்தி
குரம் என்ப பரிக்குளம்பும் கோணலும் என இரண்டாம்
சரம் அம்பு மணியின்கோவை தாமம் ஓர் நூல் நாணல் பேர்
சுரம் என்ப தடவி மார்க்கம் சொற்ற நோய் இசை நாற்பேரே
#14
அரவம் நூபுரம் பாம்பு ஓசை ஆயில் குங்குமம் விருக்கம்
குரவமே குதிரை மேல்வாய் கோவி தாரம் கோட்டப்பேர்
சரவணம் அறுமுகத்தோன் சனனம் காயா நாணல் பேர்
பரவலே தொழல் பரத்தல் பரித்தலே பொறுத்தல் அன்பு ஆம்
#15
இரவு என்பது இரவு இரத்தல் இராசியம் மறைவே யோனி
பரவை வாருதி பரப்பே பங்கயம் மாதின்கூத்து ஆம்
குரவையே கடல் ஓர் கூத்து குரங்கியே சிவன் வெண்திங்கள்
தரவே ஓர் பாவுறுப்புத் தலைவன் உத்தரவே முப்பேர்
#16
புரசு வாம்பரிக் கழுத்தில் புரி கயிறு ஓரு மரப்பேர்
அரசு மன் இராச்சியப்பேர் அரசன் பூபதி வியாழம்
பிரசமே அளியும் கள்ளும் பேசு தேன் தேனீயும் பேர்
முரசம் உத்திரட்டாதிப் பேர் முழக்கும் மும்முரசும் ஆமே
#17
அரம்பையே கதலி தெய்வ ஆயிழையவர்க்கும் ஏற்கும்
குரம்பை மெய் சிறுகுடில் பேர் குருளையே மழவு குட்டி
முரம்பு மேடொடு கற்பாறை முதிர் பரல் கழி நிலப்பேர்
பிரம்பு வேத்திரம் நெய் மூங்கில் பெருங்கடல் அரிசி ஐம்பேர்
#18
முருந்து இறகடிக் குருத்தே முறியே முத்தே குருந்து ஆம்
குருந்து ஒரு தருவே தொத்தே குருத்தும் என்று அறைதல் முப்பேர்
விருந்து இனியவர்வரத்தும் புதுமையும் விளம்பற்பாற்றே
மருந்து அமுது அருமருந்து ஆம் வரிக் கடை மின்மினி வண்டு ஆம்
#19
கரும்பு என்ப சுரும்பே கன்னல் கரடகம் கபடம் தூசு ஆம்
குரும்பையே தென்னம்பாளை புற்றாஞ்சோறு எனவும் கூறும்
நரந்தம் என்பது நாரத்தை நாறும் கத்தூரி காக்கை
சுருங்கையே கரந்து பண்ணும் கற்படை நுழைவாய்தல் பேர்
#20
பூரமே பொன் கற்பூரம் புகல் ஓர் நாள் பூரான் நாற்பேர்
வாரம் நீர்க்கரையோடு அன்பே மலைச்சாரல் கிழமை பங்கு ஆம்
சாரமே கிரகசாரம் சாற்றுறும் இனிமை மேடு ஆம்
காரமே காழ்த்தல் பொன் ஆம் கருமான் மான் மனுப் பன்றிப் பேர்
#21
ஈரமே குளிர்ச்சி அன்பு ஆம் இரதனே கிள்ளை கண் ஆம்
கீரமே தீய வெண் பால் கிள்ளை காரிப்புள் முப்பேர்
பீரமே பீர்க்கும் வாகைப் பேரும் பூவரசும் என்றாம்
தீரமே புனல்கரைப் பேர் திட்பம் என்று இரண்டும் ஆமே
#22
வராகனே அருகன் மாயன் வயங்கு பொற்காசே முப்பேர்
பராகமே பொன் இரேணுப் பரிமளம் மலர்த்தூட்கும் பேர்
அராகமே நிறம் பொன் பண்ணே அகங்காரம் முடுகியல் பேர்
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஏற்கும்
#23
அராமமே நறும் பொழில் கூழ் அரை நூல் மேகலை சதங்கை
உரோமமே மயிர் வெம் பாணம் உருளே ரோகிணிநாள் பாண்டில்
இராமமே அழகு ஓர் வேந்தன் இளமை என்று இசைக்கும் அப் பேர்
துரோணமே பதக்குக் காக்கை தும்பை வில் சிம்புள் ஐம்பேர்
#24
அரிவை ஓர் பருவமாதர் ஆரி சோழன் பேர் மேன்மை
கரியவன் சனியே சோரன் கண்ணன் இந்திரனே நாற்பேர்
சுரியல் நீர்ச்சுழி சுரித்தல் தோகையர் கருங்கூந்தல் பேர்
கிரி பருப்பதம் வராகம் கிரிட்டி ஓர்ஈற்றுஆப் பன்றி
#25
துருவம் ஓரிடத்து இலக்கம் சலிவின்றி நிற்றல் சொல்லும்
பருவம் ஆனியம் கார்ஆதிக்காலம் பெண்பருவம் முப்பேர்
தரு என்ப மரம் கரும்பு தராசு கோல் பரணிநாள் ஆம்
உரு என்ப நிறமே அட்டை உரியர் மூதறிந்தோர் சுற்றம்
#26
அருகனே அமணர் தேவும் நிலையாமையதுவும் காட்டும்
விருகு என்ப மிருகம் பூனை விருடகம் எலி மார்ச்சாலம்
முருகன் பாலைக்குவேந்தன் முருகவேள் தேவராளன்
மருகன் என்பதுவே தோன்றல் மருமான் என்பதுவும் ஆமே
#27
ஊர் என்ப நகரே ஊர்தல் ஓதுறும் கவானே முப்பேர்
பார் என்ப தேர்ப்பரப்புப் படி பொன்றலுடன் கற்பாறை
வார் என்ப கவசம் நேர்மை மங்குல் நீர் நெடுமை கச்சு ஆம்
சூர் என்ப நோய் அஞ்சாமை அணங்கு அச்சம் சூரன் வஞ்சம்
#28
பரிசு என்ப குணம் கொடைப் பேர் பருவரல் அருவல் துன்பம்
குரிசிலே பெருமைபெற்றோன் கோதுஇல் வேந்தற்கும் கூறும்
இருசு பண்டியுள் இரும்பு செவ்வை என்று இருபேர் வைக்கும்
துருசு ஒரு மருந்தே வேகம் துருஞ்சில் சீக்கிரி வவ்வால் பேர்
#29
இருமையே பெருமை துக்கம் இம்மையும் மறுமையும் பேர்
தருமையே மிகுதி மேன்மை சாரசம் குருகு நாரை
கருமையே பெருமை நஞ்சம் கறுப்புடன் வலியே நாற்பேர்
தெருமரல் வெருவலோடே சுழற்சியும் செப்பலாமே
#30
அருத்தியே பாதம் கள் கூத்து ஆசை ஊனூட்டல் ஐம்பேர்
விருத்தி பொன் தொழில் இலாபம் உரைப்பொருள் விளர்ச்சி தொண்டு ஆம்
கிருத்திமம் விட்ட பூதம் கெட்ட பொய் தோலே பண்ணல்
துருத்தி தோல் சிவிறியே ஆற்றிடைக்குறை சொல் முப்பேரே
#31
மருத்து என்ப மருந்தே காற்றே மால் யானைப்பிறப்பே முப்பேர்
குருத்தம் ஓர் மரமே கோபம் குருக்குதல் எனவும் கூறும்
எருத்து என்பது உரல் கிளிஞ்சல் ஈரே பங்கியின் இரத்தல்
ஒருத்தல் வல்விலங்குஏறு யானை ஒண் பரி புலி நாற்பேரே
#32
விருத்தமே மனைவி செய்யுள் மிருகக்கூட்டம் வட்டப்பேர்
திருத்தலே திருந்தல் தாங்கல் திருவே பொன் தெய்வவுத்தி
அருத்தம் சொற்பொருள் பொன்னின் பேர் ஆர்த்தலே அருந்தல் கட்டல்
உருத்தலே முளைத்தல் கோபம் மிகுதி என்று ஓதல் முப்பேர்
#33
அருப்பம் ஊர் நோய் கான் துக்கம் அயின்ற மோர் பிட்டு ஆறேபேர்
கருப்பு என்ப விளை பல்பண்டக் குறுவிலைக்காலம் சோறு ஆம்
உருப்பமே வெப்பம் துர்க்கம் உயரும் மால் ஐயம் பவப்பேர்
மருப்பு என்ப சிருங்கம் இஞ்சி மருள் களம் மடமை ஆமே
#34
எருக்கலே பரித்தல் கோறல் எறிவெட்டுக்கட்டை முப்பேர்
துருக்கமே விடர் அரண் கத்தூரி குங்குமம் கலக்கம்
முருக்கு என்ப கவிர் கொலைப் பேர் முரித்தலே நகை இலங்கல்
பருக்கையே பரல் அக்கு ஆகும் பாரகம் புவி திரைப் பேர்
#35
ஆர்தலே குடித்தல் உண்டல் நிறைதல் என்று அறைதல் முப்பேர்
ஊர்தலே பரத்தல் உண்டல் சிந்தல் உற்று எழுதலும் பேர்
வார்தலே உயர்ச்சி நீளம் வரித்தல் பூசுதல் பொறித்தல்
தீர்தலே நிவிர்த்தி நீளம் திரையல் வெற்றிலை திரைத்தல்
#36
ஊரியே இளமை மேகம் ஒளிரும் வெண்சங்கே முப்பேர்
மூரி ஏறு எருமை ஆற்றல் முரிவே ஊழ் பெருமை சோம்பு ஆம்
சாரியே கவற்றின் சாரி சடுதியின் ஓடல் சாற்றும்
மாரி நோய் வடுகி கள்ளே மங்குல் சீமூதம் நீர் ஆம்
#37
ஆரை புல் பாய் மதில் பேர் அருந்தலே அருமை துய்த்தல்
தாரை கண் உடு நேரோட்டம் தரை கூர்மை மழை மார்க்கப்பேர்
தோரையே நெல் விகற்பம் சுடர்த்த பொன் நூல் கைரேகை
ஓரை பெண் குழு இராசி அவர் ஆடல் கலம் ஓதும் பேர்
#38
குருதியே சிவப்புச் செவ்வாய் சோணிதம் முப்பேர் கூறும்
பருதியே ஊர்கோள் வட்டம் பகலவன் திகிரி நாற்பேர்
சுருதியே ஒலி வேதப்பேர் சொற்றன செவியும் கூறும்
திருதியே திரும்பல் மூன்றாம் செருந்தி ஓர் மரம் வாட்கோரை
#39
உருக்கமே குழைவே ஊரு ஓர்வு உன்னல் குறிக்கொளல் பேர்
திருக்குகம் முற்றம் தூசு திருட்டி இ முப்பேர் செப்பும்
சுருக்கு என்ப நெய்த்துடுப்புச் சுரித்திடல் இரண்டும் சொல்லும்
பெருக்கமே செல்வம் ஆற்றுப்பெருக்கொடு பெருமை ஆமே
#40
எருவையே கழுகு கோரை இரத்தம் நல் கொறுக்கை செம்பு ஆம்
புருவை யெவ்வனமே மேடம் புரத்தலே காத்தல் ஈகை
கருவை கோத்திரத்தின் வைக்கோல் கருப்பம் உட்கருத்தே முப்பேர்
தெரிவை ஓர் பருவம் பெண் பேர் திரை திரை தரங்கம் பூமி
#41
மருதம் ஓர் மரம் வயல் பேர் மருத நன்னிலப்பாட்டே ஆம்
பொருதலே நிகர்ப்புப் பூசல் பூரிப்பே மிகல் களிப்பு ஆம்
இருதுவே பருவம் மாதர் இருது கார்ஆதிக்காலம்
மிருதுவே மென்மை சாவு ஆம் விரையே சாந்தம் கமழ்த்தல்
#42
வேரலே வேர்த்தல் மூங்கில் விரோதம் மல் வேறுபாடு ஆம்
கூரலே மாதர் ஓதி குருகின் வன் சிறகு இரண்டாம்
தோரலே அணங்கு தோர்வை சுரி என்ப நரி சுரிப் பேர்
நேர்தலே எதிர்தல் ஈகை நேருதல் வேண்டலும் பேர்
#43
போரே நெல் முதலாம் சும்மை சதையநாள் பொருதல் முப்பேர்
ஏரே சொல் மாலை செவ்வி உழு பெற்றம் இவை செப்பும் பேர்
தூரே தூர்த்தல் வேரின் பேர் சுரித்தல் நீர்ச்சுழியே தாங்கல்
கூரே கூர்மைப் பேரோடே மிகுதியும் கூறலாமே
#44
சூரனே இரவி தீயே சொற்ற நாய் மீளி நாற்பேர்
சாரணர் சித்தர் தூதர் சரித்திரம் ஒழுக்கம் காதை
ஞேர் ஒலி விரைவு இரண்டாம் நீர்வாரம் குளநெல் வெள்ளி
மார்கழி ஓர் மதிப் பேர் மான் தலைநாட்கும் ஆமே
#45
பூருவம் கிழக்கே முன்பே போற்றுறு முதுமை முப்பேர்
பீருவே புருவம் அச்சம் பிரமாணம் அளவே சூள் ஆம்
காருகம் தானைநெய்தல் கருங்குரங்கு இவை இரண்டாம்
தூர்வகம் அறுகோடு ஏறு ஆம் சுரிகையே கவசம் பத்திரம்
#46
இருள் என்ப கருமை அல்லோடு இசைக்குறு நரகே முப்பேர்
அருள் என்ப தகைவின் நாமம் அரும்பொருள்தனக்கும் சொல்லும்
சுருள் என்ப சொருகும் கூந்தல் துவர்த்தல் பாகு இலைச்சுருள் பேர்
முருடு என்ப ஞெகிழியோடு முதிர் பெரும் குறடும் ஆமே
#47
வருணம் நீர் குலம் ஓர் திக்கே மறி திரைக் கடலே நாற்பேர்
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரப்போர் கானவரே வீரர்
இருபிறப்பு எயிறே பார்ப்போடு இரும் சிறைப் பறவை முப்பேர்
அருணம் நல் சிவப்பே நவ்வி ஆடு எலுமிச்சை நாற்பேர்
#48
ஊர்தி செங்கதிர் விமானம் உவாப் பரி சிவிகை பாண்டில்
பார்வை தீவகம் மதிப்பு பார்த்திடும் விழியே முப்பேர்
போர்வை தோலொடு முட்டாக்குப் புகன்ற மீக்கோள் எனும் பேர்
ஆர்வம் வில் நரகம் காதல் அன்பு எனும் நாற்பேராமே
#49
ஆரிடம் வதுவை முன்னூல் அருந்தவர் பூசைக்கும் பேர்
சார்பு இடம் ஒற்றுப் பற்று ஆம் தணப்பிலாப் புணர்ப்பே நாற்பேர்
பார் இடம் புடவி பூதம் பாரதி வாணி நாவாய்
நார் வடம் அன்பின் நாமம் நவிற்று நாயதற்கும் ஆமே
#50
கரி என்பது இருந்தை சான்றே களிற்றொடு ஆதவன் கரித்தல்
பரிசமே கிடங்கு மேடை பகர் மதில் அரணம் நாற்பேர்
உரிமை நற்குணமே ஆட்சி ஓதுறு மனைவி முப்பேர்
பரிபுரம் எனும் பேர் பாத கிண்கிணி மணிப் பேர் பன்னும்
#51
அரசியல் வெற்றி தோற்றம் வரைவின்மாதர்க்கும் ஆகும்
கரடம் வாயசம் களிற்றின்மதம் பொழி கவுட்கும் கூறும்
பிரமரி சுழலலோடே பேசு கூத்து ஒன்று எனும் பேர்
தரளம் நித்திலம் உருட்சி சஞ்சலம் முப்பேர் ஆமே
#52
மருவே ஓர் இடத்து ஊண் வாசம் வருடமே சமை மழைப் பேர்
தருமராசன் பேர் புத்தன் சினவரன் சமனே முப்பேர்
கரு உரை நடுமேட்டின்பேர் கருப்பொருள் கருப்பம் நாற்பேர்
இருடியே முனிவன் ஆந்தை இரும்பே செம்பொன் கரும்பொன்
#53
கரீரமே மிடா அகத்தி களிற்றின்பல் அடி எனும் பேர்
மரீசியே புது வரம்பின் வழி மிளகு ஒரு முனிப் பேர்
விராடம் ஓர் தேயம் கூவும் வேசரி அதற்கும் செப்பும்
கரோடியே பெருஞ்சூட்டும் சொல் கவின் முடி மாலைக்கும் பேர்
#54
ஆரியம் விளை ஓர் பண்டம் மறைந்திடும் தேசம் ஒன்றாம்
பூரியம் வேந்தர் வீதி போற்றுறு நகர் இரண்டாம்
தாரியே வழி உதாரி தருப்பணம் பிண்ணாக்கு ஆடி
வேரி கள் இருவேலிப் பேர் விரியல் பாய் விரிவும் ஆமே
#55
சாரதி கவிஞர் சூதர் தரித்தலே நடத்தல் வேய்தல்
சோரனே கள்வன் ஆட்டின்சொற்பறழ் இரண்டும் சொல்லும்
காரகம் நரகு ஓர் நூல் சொல் கரேணுவே பிடி தந்திப் பேர்
மாருதி அனுமன் வேழம் இடும்பி கேள்வன் பேர் வைக்கும்
#56
அருணனே புந்தி வெய்யோன் அவன் தேர் ஊர் பாகற்கும் பேர்
தருணியே இளமை நாரி சார்தல் பொய் பிறவி ஒத்தல்
கருணியே முழையும் வெற்பும் களிற்றொடும் பிடி எனும் பேர்
விரணமே விழலே யாக்கை மேவுறும் இரணமும் பேர்
#57
மராமரம் அரசே ஆச்சா வளர் நீபம் முப்பேர் செப்பும்
குரால் கபிலைநிறப்பேர் கூறும் பால்பசுவும் வைக்கும்
தராலயம் கயிலை மேரு சருமமே தோல் களிப்பு ஆம்
மராளமே உரகம் அன்னம் மராடம் ஓர் தேசம் கூந்தல்
#58
அரக்கு என்ப சிவப்பு அரக்கு ஆம் ஆர்வலர் கொழுநர் அன்போர்
நிரப்பு ஐயம் மிடியே தேய்தல் நிரம்பல் என்று ஓதல் நாற்பேர்
மரக்கால் ஆயிலியம் சோதி வரு துர்க்கையாடல் முப்பேர்
பருப்புச் சூபகம் மின்னல் பேர் பராடியே யானை பன்றி
#59
சீர்மையே விழுமம் கண்ணே செறிவே துன்பம் சிறப்பு ஆம்
நீர்மையே தெளிவு நேயம் நிகழ் குணம் இவை முப்பேரே
ஆர்மையே மதில் கூர்மைப் பேர் அரேணுகம் வாள் மருந்து ஆம்
வார்மையை ஒழுக்கம் நேர்மை வருடையே சிம்புள் குன்று ஆம்
#60
பேரே சொல் பெருமை நாமம் அபிதானப்பேரும் பேசும்
நீரே நற்குணம் பூராடம் நிரியாணம் வீய்வு ஆனைக்கண்
பாராவாரம் கடல் பேர் பார் கடற்கரைக்கும் பன்னும்
ஆரோகணம் தாழ்வாரம் அகன்ற கற்படையும் ஆமே
#61
அரங்கம் ஆற்றிடைக்குறைக் கூத்தாடிடம் அமர்க்களப்பேர்
தரங்கம் நீர்த்திரை திரைப் பேர் சராவமே அகல் சலாகை
துரங்கமே பரியே நாவாய் சொற்ற ஆய்தல் முப்பேரே
குரங்குதல் குனித்தல் ஆடல் உறங்குதல் நடுக்கம் கூறும்
#62
அரணி தீக்கடையுறுங்கோல் அணி மதிள் கவசம் முப்பேர்
இரணியம் பொரல் மாணிக்கம் ஈர்ங்கடல் அரவே பொன் ஆம்
கரணியே கணிக்கும்வல்லோன் காட்டும் நாற்காணிக்கும் பேர்
தரணியே இரவி பூமி சயிலம் என்று அறையலாமே
#63
இரிசியே வழக்கு நாயாய் இரட்டு இரட்டித்தல் சாதி
சரிதையே பூசை பிச்சை சாற்றுறும் காதை முப்பேர்
திரிதலே உலாவல் கேடு ஆம் சீர் உளியம் செம்பு ஆகும்
மரு இதழ் ஏடே தழை மடலானது எவைக்கும் ஆமே
#64
நுரை நவநீதம் நீரின் நுரை திரை எனவும்பாற்றே
கரை குளக்கரை கரைத்தல் கரவீரம் அலரி தேசம்
நிரை ஒழுங்கு அசைச்சொல் ஆனே நிரைக்கூட்டம் இவை நாற்பேரே
குரை மிகும் ஒலியின் நாமம் நிறைவு என்றும் கூறலாமே
#65
வீரையே துயரம் வேலை விருக்கம் ஒன்றின் பேர் ஆகும்
சீரையே சிறுக்கொடிப்பேர் திகழ்ந்த நல் துகிலும் கூறும்
கீரை பாசடகே வைக்கும் கிளத்து சாகினிக்கும் என்ப
பாரதம் பொதுவின் நாமம் பரம்பரம் அதுவும் ஆமே
#66
அருவியே மலையின் சாரல் அரி புனம் கழிமுகப்பேர்
பரிகாரம் பலபண்டப்பேர் படர் மெலிவு அகற்றல் செப்பும்
உரியே தோல் கணித்தது ஒன்று முரித்தலும் விரித்த நாமம்
அருவே நுண் பழம்பொருள் பேர் அணு நுணுக்கறிவும் ஆமே
#67
கரண்டகம் கமண்டலப்பேர் கருது நீர்க்காக்கைக்கும் பேர்
தெருண்டலே அறிவு தேற்றம் சீர் மானே நெடுமால் செய்யோள்
பருந்து மாடப்புறாப் பேர் பகர் சேனம் இவை இரண்டாம்
கரண்டையே முனிவர்வாசம் கற்பாழி இரண்டும் ஆமே
#68
இரதி பித்தளையே காந்தள் எழில் மாரன்தேவி ஆசை
விரதம் நல் சிவன் வாழ் வெள்ளி வேதண்டம் பிடி யானைப் பேர்
இரதனப்பேரே ஓசை கிண்கிணி அரைஞாண் என்றாம்
சரசம் ஒப்பில் வினோதம் சாற்றுறும் கணையும் ஆமே
#69
குரல் என்ப மிடறு எழுத்துக் கூந்தலோடு அலகே தூவி
முரலின் பண்ணரம் பேய் ஏனல் மொழிந்த பாதிரியே எண்பேர்
அரலை திண் கடலே கன்னி ஐ எனும் நோய் காழ் நாற்பேர்
இரலை மான் கலை ஊதும் கொம்பு இரண்டுடன் முதல்நாள் ஆமே
#70
அரில் பகை பிணக்குக் குற்றம் ஆசினி பாயல் சந்தி
புரி குழல் சிறிய தூறு பொருந்திய குரல் ஒன்பான்பேர்
கரில் உயர் குற்றம் காழ்த்தல் கரைத்தலே விளித்தல் ஓசை
பரிவு மெய் விரும்பல் வேறுபடலுடன் செயலும் ஆமே
#71
கோரமே வெருவல் வெப்பம் கொடுமை பூமுகையே வட்டில்
வீரம் மேவுவ திண் வாசி விரைவினில்குறிப்பே ஏழ்பேர்
ஆரமே பதக்கம் மாலை ஆத்தி சந்தனமே முத்தம்
நாரமே தெண்ணீர் பாசி நாரத்தைப் பேரும் ஆமே
#72
பாரம் நீர்க்கரையே நாவாய் பல்லணம் பெருமை பூமி
ஏர் பொறை கவசம் ஆடல் ஈராறு எண் நிறை ஒன்பான்பேர்
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யாழிசை நல் பண்டம்
ஓரமே சகாயம் ஓரம் உருசியே சுவை மின்னல் பேர்
#73
சாரல் தண் மருதயாழின்திறத்து ஓசை சயிலப்பக்கம்
வேரல் ஆர் சயிலம் கிட்டல் விளங்கும் இ நாற்பேர் வைக்கும்
ஆரல் கார்த்திகைநாள் செவ்வாய் அரணமோடு ஒரு மீன் நாற்பேர்
மூரல் சொல் பல்லே சோறே முதிர்சிரிப்பு எனும் பேராமே
#74
வரி நிறம் எழுத்துப் பாட்டு வடிவம் நெல் இறை இராகம்
சரி அறிவு ஒழுக்கம் நீளம் தழல் வேலை சுணங்கு ஈரேழ்பேர்
புரி அளி விரும்பல் சேறல் புரம் சங்கு கயிறே கட்டு ஆம்
துரியம் ஓர் அவத்தை தேடல் சொல் பொதிஎருதும் ஆமே
#75
பொருள் என்ப சொற்பொருள் பல்பண்டம் பொன் புதல்வன் நீதி
அருள் பண்பே தலைமை ஒண்மை அனம் எனும் பேர் ஈரைந்தாம்
குருள் என்ப குட்டி ஓதி கூர்ப்பு இடம் கூர்மை கார்த்தல்
மருள் வெம் பேய் மயல் குறிஞ்சி மருவும் யாழ்த்திறம் இருட்டு ஆம்
#76
குரு என்ப பெருமை பாரம் குரவன் மாத்திரை இரண்டோடு
உருவம் நன்னிறம் வியாழம் ஓதும் ஆசானோடு எண்பேர்
பரு என்ப உருக்கு உருப்புப் பகருறும் பெருமை முப்பேர்
செரு என்ப அடிசில் ஏரி செங்களப் போரும் ஆமே
#77
தூரியம் முரசம் வீட்டம் துகிலிகை இடபம் வெற்றி
கூரிய படைக்கலங்கள் கோசிகம் ஈயம் ஏழ்பேர்
ஓரி ஆண்மயிர் ஓர் வள்ளல் உயர் முசு முதுநரிப் பேர்
நாரியே பெண் பன்னாடை நறவு வில்நாணி நாற்பேர்
#78
தருமம் மாநில வழக்கம் தட்பம் நல்லறங்கள் ஈதல்
கருமமோடு இயல்பே வீதி அருள் தவம் பேர் ஒன்பானாம்
பருமமே கலை உயர்ச்சி கவசம் தூசு இளமை பண் ஆம்
துருமமே மான் நடுக்கம் சுருங்கலே தூக்கம் தேய்தல்
#79
அரத்தமே இரத்தம் செம்பொன் அரக்கொடு உற்பலம் கடம்போடு
உரத்த செம்பரத்தம் செம்மை ஒள் இரும் செந்துகிர் எண்பேரே
இரத்தமே பவளம் நெய்த்தோர் இலங்குறும் சிவப்பே முப்பேர்
கரத்தலே மறைவு கள்ளம் கருணை சூரணம் அன்பு ஆமே
#80
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரகம் கள்ளே கூந்தல்
வாரி ஆர் கடலே இல்லாள் வத்திரம் கனம் எண்பேரே
சூரி சண்டிகை விற்பன்னர் சுரிகை ஓர் பூச்சி வெய்யோன்
ஆரியன் ஐயன் மேலோன் ஆதித்தன் முப்பேர் ஆமே
#81
ஆர் கூர்மை சோதி பாகோடு ஆத்தியே நிறைவே பூமி
தேர் சேர் ஐந்து உருவாணிப் பேர் செப்பிய ஏழும் ஆகும்
பீர் சூர் வெம் முகுள் முலைப்பால் பீர்க்கொடு பசலை நாற்பேர்
கார் நீர் நெல் ஆடு மேகம் கருங்கவி கறுப்பு ஓர் காலம்
#82
சாரிகை சுங்கம் பூவை சார் சுழற்காற்று அசைச்சொல்
ஏர் இசை கொட்புற்றுஓடல் எழுத்தின்சாரிகை ஆறேபேர்
பூரிகை ஊதுகாளம் உக்காரி பூரகப்பேர்
காரிகை ஓர் நூல் மாதர் கலித்துறை அழகே நாற்பேர்
#83
அருச்சுனம் என்ப வெள்ளை அரிசியோடு அறுகு கூட்டி
விரித்து அணிந்திடுதலின் பேர் வெண்மையும் மருதும் ஏற்கும்
குரத்தியே நுளைச்சியோடு தலைவிக்கும் கூறற்பாலாம்
இரத்தியே இறலி வள்ளி இருத்தையே திதி கன்னல் பேர்
#84
பிரமமே துருதம் ஆடு பிறழ்பொருள் நடுக்கலக்கம்
அரி அயன் கிரது வேதம் அறவர் முச்சுடர் பன்முப்பேர்
இரவியே மலையே வெய்யோன் இரங்கலே அழுங்கல் ஆர்வம்
பிரமசாரியம் தவப்பேர் பெரு மறையவற்கும் ஆமே
#85
வாரணம் சங்கு கோழி மலி கடல் தடை மால் யானை
கார் இணங்குறு வராகம் கவசம் உன்மத்தம் அங்கி
பேர் இணங்குறு நல் தானம் பிறழ்படை ஈரைந்தேபேர்
சீரணம் குணமின்மைப் பேர் செம்பு பித்தளையும் ஆமே
#86
வாரியே யானைக்கூடம் வாய்தல் நீர் மதில் நூல் வட்டை
பாரிய மடை கபாடம் பரவை நல் தகைமை வெள்ளம்
ஏரியை வரும் வாயல் பேர் மிகுதி ஒன்று ஒழி ஈரேழ்பேர்
பூரியே பொன் வில் நாணி புராணமே தொன்மை முன்னூல்
#87
குருகே கைவளை புள் நாரை குக்குடம் மிளை வெண்மை கொல்
உருகுஉலைமூக்கே மூலநாளே மாதவி ஒன்பான்பேர்
முருகே கள் இளமை நாற்றம் முருகவேள் விழா வனப்புப்
பெருக்கில் எழுச்சி பீரம் பேசும் ஒன்பான்பேர் ஆமே
#88
சீர் துணி சதியின் ஒத்துச் சீர்த்தி காத்தண்டே செல்வம்
ஏர் பொறை ஒல்கல் பாரம் யாப்புறுப்பு ஈரைம்பேரே
தார் கொடிப்படைப் பூ தாமம் சத்திரம் பரிமாக் கூட்டம்
ஓர் வில் கிண்கிணியின் கோவை ஒழுங்கு எனும் இருமூன்றேபேர்
#89
காரி ஓர் வள்ளல் காக்கை கடுச் சனி வடுகன் சாத்தன்
தேரிலாக் கீழ்மை ஓர் புள் முதுநிலம் கருமம்செய்தல்
நேரிலாக் களர் கறுப்பு நிகழ்த்திய பேர் ஈராறாம்
சோரியே விடாமழைப் பேர் ஓணம் சோணிதம் முப்பேரே
#90
நேர் என்ப சமமே ஈதல் நெடில் உடம்பாடே பாதி
தேர் மஞ்சம் நுட்பம் செப்புத் திகழ் தனிப்பாட்டினோடே
ஓரும் செம்பத்தி என்றே ஒன்று ஒழி ஈராறேபேர்
சாரங்கம் வில் மான் வண்டு சாதகப்புள் நாற்பேரே
#91
கருவியே தொடர்பே மேகம் கவசம் பல்லியம் போர் ஈட்டம்
புரி துணைக்காரணங்கள் படைக்கலம் கலனை பூணோடு
அரு வினை பலவே யாழ் என்றாகப் பேர் ஈராறு ஆகும்
குருவி புள் மூலநாள் ஆம் குருடன் அந்தகனே வெள்ளி
#92
அரியே விண் மணி முராரி அரிதல் பொன் காற்றுச் சீயம்
பரி தேரை கிள்ளை காந்தி பகை செந்நெற்கதிர் குரங்கு
கிரி தேரை மை வலாரி கிளர் நிறம் கூற்றுக் கண் ஆர்
வரி சோலை பாயல் பன்றி மரீசி வேய் வண்டு சேகு
#93
விறல் கூர்மை திகிரி ஈர்வாள் விசி தகர் புகரே எற்றும்
பறை போகி சிலம்பில் பெய்த பரல் கடல் புரையே பச்சை
பொறி வார் தீ படைக்கலங்கள் பொறியிலொன்று அரிசி தூமம்
அறைவார் கள்ளுடன் இ நாமம் ஐயொன்பது ஒன்றும் ஆமே
#94
தெருண்டுளோர் உரை ரகாரவெதுகையில் சிறந்த செய்யுள்
இரண்டோடு ஒன்பது பத்து என்ன இருநிலம் புகழச்செய்தான்
கரண்டை வாள் இலங்கை வாட்டும் கரு முகில் மருகன் போற்றும்
அரண் திரு விளங்கும் செந்தில் அருமருந்தையன்தானே
** ரகரவெதுகை முற்றும்
@14 லகரவெதுகை
#1
அளந்திட அரிய வேத புராண ஆகமங்களாலும்
உளம் தெற இசைத்துப் போற்றும் ஒருவனாய் நின்ற சோதி
வளம் கிளர் வடிவேல் தாங்கும் வள்ளல் சீர் பாதம் போற்றிக்
களங்கற வரும் லகாரவெதுகையின் கவிதை சொல்வாம்
#2
ஆலமே வடவிருக்கம் அப்புக்கூடு அலர் நீர் நஞ்சம்
மூலமே ஏது ஓர் நோய் முதல் கிழங்கு ஒரு நாள் தாரு
சீலமே குணம் தண்டித்தல் திகழ் சரித்திரம் உணர்ச்சி
தூலமே பருமை பஞ்சு ஆம் துல்லியம் தூ ஒப்பு ஆமே
#3
அலவன் ஞெண்டொடு பூனைப் பேர் அலர் மதிதனக்கும் வைக்கும்
வலவனே வெற்றியாளன் மருவும் தேர்ப்பாகனும் பேர்
இலவம் ஓர் தருவே பூசை இலக்கு அகில் எழுத்துக் கேண்மை
நிலவு ஒளி மதி நிலைப் பேர் நிலைபேறே மானம் முத்தி
#4
புலவர் பாடுநர் கண்ணாளர் புதன் உம்பர் கவி வேள் கூத்தர்
கலவலே துழாவலின் பேர் கலத்தல் என்று அறைதற்பாலாம்
புலவு செம்புலால் முடைப் பேர் புலி சாந்தம் வயமாச் சீயம்
மலைவு போர்புரிதல் ஒப்பு ஆம் வல்லரி தளிர் பூங்கொத்து ஆம்
#5
அலங்கலே தளிர் பூமாலை அசைவுடன் அகல் இரங்கல்
பலம் கனி பயன் காய் பள்ளம் பல்லவர் விடர் கீழ்மக்கள்
கலம் கலன் அலம் யாழ் தட்டம் கச்சம் ஒன்று அம்பி பாண்டம்
இலங்கை ஆற்றிடைக்குறைப் பேர் ஈரைந்துகளன்வைப்பும் பேர்
#6
வலம்புரி நந்தியாவர்த்தம் வால் வளை வலஞ்சூழிப் பேர்
புலம்பல் துன்பு ஒலித் தண்டாமை புயல் துளி தனிமை அச்சம்
சிலம்பு வேதண்டம் ஓசை செப்பிய பரிபுரப்பேர்
இலம்பகம் அத்தியாயம் நுதல்சூட்டு என்று இருபேர் ஆமே
#7
கலிங்கமே வானம்பாடிப்புள் தூசு ஓர் தேயம் காட்டும்
குலிங்கமே ஊர் சிவப்புக் குலிகம் ஊர்க்குருவி வாசி
புலிங்கம் ஓர் எழுத்து அழல் சேர் பொறியே ஊர்க்குருவி முப்பேர்
விலங்கு காண் மிருகம் காலின் வீழ் தளை குன்றும் ஆமே
#8
அலி என்ப நமனே பேடி அடிசில் தீ நறுவிலிப் பேர்
பலி என்ப பூசை பிச்சை பகர் பேடி வெண்ணீற்றின் பேர்
ஒலி என்பது இடியே காற்றே ஓசை என்று ஓதல் முப்பேர்
கிலி என்ப வெருவல் பேடி கீல் சந்தே பிசின் நாணிப் பேர்
#9
ஒலியல் வெம் தோல் நோய் ஆறே உடையே பூத்தொடையே ஐம்பேர்
பொலிவு என்ப பொற்பு எழுச்சி அகலம் செம்பொன்னே நாற்பேர்
வலி என்ப கந்து பாயல் மதுகையும் வலித்தலும் பேர்
கலி என்ப வலியே ஓசை கடையுகம் வஞ்சனைப் பேர்
#10
தலை ஆதி இடமே சென்னி சால்பு மாட்சிமை சான்றாண்மை
சிலையே வில் கல்லே மூலநாள் மரம் திண் மலைப் பேர்
அலைவேதான் மிகுதி அச்சம் ஆலாலம் விடமே வவ்வால்
உலைவே ஈறுடன் தீரல் பேர் உலூகமே உரல் கோட்டான் பேர்
#11
வலையமே வாவி ஓர் பூண் வட்டம் வாயினில் ஒன்றேயாம்
இலையமே கூத்துக் கூத்தின் விகற்பமும் இசைக்கும் நாமம்
மலையனே உதவும் வள்ளல் வானே கானகநாடன் பேர்
தலைவனே கொழுநன் ஈசன் தராபதி முருகவேள் ஆம்
#12
வாலி வாசவன்சேய் தூறல் மதி தெரி கலை இரா ஆம்
காலி ஆன்கூட்டம் காற்று கலாம் என்ப கொடுமை கோபம்
பாலியே வடவிருக்கம் பசு அளித் தலங்கள் நாற்பேர்
நீலியே கருமை துர்க்கை நிகழ்த்தும் ஓர் பூடும் ஆமே
#13
ஆலியே ஆலாங்கட்டித் துளி காற்றோடு அமுதநீர் ஆம்
பாலிகை உதடே வட்டம் பட்ட வாள் முட்டியும் பேர்
சாலியே வடமீன் கள்ளுச் சாற்றரும் கவசம் நெல் பேர்
மோலியே சடை கோடீரம் மணிமுடி முருகு ஆர் மாலை
#14
மாலையே குணம் ஒழுங்கே மாலிகை இரவந்திப் பேர்
சாலையே புரவிப்பந்தி அறப்புறம் தருவின்சோலை
வேலையே தொழில் அளக்கர் வேலையின் கரை ஓர் காலம்
சேலையே அசோகு தூசு ஆம் சில்லிகை ஆடை சிள்ளான்
#15
செல் இடி சிதலை ஏவல் செழும் முகில் ககனம் ஐம்பேர்
அல் இரா இருளே என்ப அலர் மலர் புனல் பழிச்சொல்
பல்லியம் புரவிப்பந்தி பாணி வாச்சியமே தொங்கல்
வல்லியம் கொடி புலிப் பேர் மலைப்பே ஆகவம் ஓர் கூத்து ஆம்
#16
எல்லையே இரவி ஈறோடு இடம் பகல் குரோசம் நீளம்
ஒல்லை மாத்திரையே தொல்லை கடுப்புடன் இறுதி ஓதும்
சில்லையே பிரண்டை என்ப சிள்வீடு தூர்த்தை முப்பேர்
வல்லை கான் விரைவே ஓர் நாள் நோய் காலவரவு உம்பல் பேர்
#17
முல்லை ஓர் நிலமே கற்பே முதிர் வென்றி இசையே மவ்வல்
குல்லையே துளவம் கஞ்சாக் கோந்து அடர் சிந்துவும் பேர்
தொல்லையே துன்பம் முந்தை சொலோம்பியே உலோபம் கள் ஆம்
கொல்லையே புனப்பூந்தோட்டம் கோலம் கோல்பழம் எழில் பேர்
#18
வல் வலி விரைவே சூது ஆம் மலர்தலே எதிர்தல் தோன்றல்
கல் ஒலி அருவி வெற்பு ஆம் கலகமே கலக்கம் ஓசை
எல் ஒளி பகல் இகழ்ச்சி இரவி யாதெனல் கங்குல் பேர்
நெல் உயர் வாகை சாலி நீலே காற்று ஓர் நிறப்பேர்
#19
வில் என்ப மூலநாளே வெம் சிலை ஒளியே முப்பேர்
சொல் என்ப புகழ் நெல் கள்ளே சொல்லுடன் எழுச்சி மல்கல்
ஒல் என்ப விரைவொலிப் பேர் ஒலித்தல் நீட்டித்தல் ஓசை
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலையேவல் வருத்தம் ஐம்பேர்
#20
அல்லி தாது ஆம்பல் காயா அகவிதழ் அழலியே ஐம்பேர்
சில்லியே வட்டம் கீரை தேருருள் சிள்வீடே பேர்
கொல்லி ஓர் நோயே வெற்பே குலவும் ஓர் இசையே முப்பேர்
வல்லி நீக்கம் பெண் பாடி கொடி புணை வரைவு வள்ளி
#21
மல் என்ப வலியே கூத்தின்வகுத்ததொன்றே வளப்பேர்
பல்சந்தி வேய் கரும்பே பதி பதி வாழ் தரைப் பேர்
இல் என்பது இல்லையே வீடு இராசி சாவு இடன் இல்லாள் பேர்
புல் சங்கம் புலி சொம்பு ஓர் புள் புதல் பனை பனுடம் புன்மை
#22
அலமே சஞ்சலம் கலப்பை அமைவு எனும் முப்பேர் செப்பும்
சலமே நீர் வயிரம் பொய்ம்மை சாற்றும் முள்பன்றி முப்பேர்
திலமே எண்ணுடன் அற்பப்பேர் திகழும் மஞ்சாடி முப்பேர்
பிலமே பாதலம் வலிப் பேர் பீலிகம் அதுவும் ஆமே
#23
வலமே ஊற்றம் இடம் பார் வலம் வாகை திரண்ட கற்பே
குலமே இல் சாதி கூட்டம் குடிமை ரேவதிநாள் ஐம்பேர்
நிலமே பொன் நிலைமை பூமி நிலை குணம் பொழுது நேயம்
தலமே பாசடை நிலப்பேர் சலதரம் புயல் வாவிப் பேர்
#24
கலாவமே மஞ்ஞைப்பீலி கவிகை மேகலையே முப்பேர்
உலா என்ப பவனிபோதல் உரைக்கும் ஓர் பனுவற்கும் பேர்
பலாசம் ஓர் மரம் பை வண்ணம் பாசடை எனவும் போற்றும்
விலாசமே நீபம் வாழை வேலன் சேய் வெறியாட்டாளன்
#25
சலாகை நல் மணி நாராசம் சவளம் இ முப்பேர் காட்டும்
இலாடம் ஓர் தேயம் நெற்றி எலி ஆகு பூரம்நாள் ஆம்
கலாவல் சேருதல் அளாவல் கலங்கலே இரங்கல் சோம்பு ஆம்
சிலீமுகம் முலைக்கண்ணின்பேர் சிறை உளர் சுரும்பும் ஆமே
#26
மாலதி சாதி முல்லை மல்லிகை சொல்லும் முப்பேர்
சோலயர் என்னும் நாமம் சோனகர் பூரியர்க்கு ஆம்
மாலரே புலையர் வேடர் வழுத்துறு கவசம் முப்பேர்
காலசம் ஆலவட்டம் காற்றுடன் வட்டம் முப்பேர்
#27
அல்கல் நாள் சுருங்கல் தங்கல் அல் மதிள் ஆவி ஐம்பேர்
மல்கலே நெருங்கல் பொற்பே சொரிதலே மிகுதி வைக்கும்
கல்வியே கலை பயிற்சி கருதுறும் அறிவே முப்பேர்
செல்வமே சுவர்க்கம் கல்வி சீர் எனும் பேரும் ஆமே
#28
மல்லலே பொலிவு வட்டம் வளம் வலி பெருமை ஐம்பேர்
பல்லமே கரடி ஓர் எண் பகழி மாக்கலனை நாற்பேர்
புல்லமே கண்ணோய் சே ஆம் பொலம் செம்பொன் அழகும் ஆகும்
சல்லமே பன்றி முள்ளும் சாற்று சீதளமும் ஆமே
#29
ஆலோலம் புள்ளோச்சல் பேர் ஆற்றுநீரோசைக்கும் பேர்
சேலேகம் சந்தனம் செஞ்சிந்துரம் இரண்டும் செப்பும்
கீலாலம் உதிரம் காடி கிளத்திய நீரே முப்பேர்
காலேயம் களபத்தோடே கறக்கும் மான் குழவுக்கும் பேர்
#30
கலித்தலே பொலிவு எழுச்சி தழைக்குதல் முப்பேர் காட்டும்
வலித்தலே கட்டல் கோணல் மலர்ச்சியோடு உடன்படல் பேர்
இலிர்த்தலே சிலிர்த்தல் ஒன்றல் ஏல்வையே போழ்தே பொய்கை
மலர்ச்சியே இறுமாப்பின்பேர் மலர்வுடன் பொலிவும் ஆமே
#31
சல்லாபம் உட்புறம்பொத்துளபொருள் தலைமைக்கும் பேர்
உல்லாசம் அத்தவாளம் உள்ளத்தின் களிப்பு இரண்டாம்
கல்லாரம் குளிரி மஞ்சள் கடி கமழ் கழுநீர் முப்பேர்
நல்லார் மெய்த்தவர் கற்றோர் ஆம் நவ்வி வாள் விழியார்க்கும் பேர்
#32
உலகு என்ப அளவே பூமி ஒல்கலே குழைவு தேய்தல்
பல என்ப மிகுதி பாகல் பலகாரம் இலகடம் ஊண்
பிலவங்கம் குரங்கே தேரை பேசும் ஆண்டு ஒன்றே முப்பேர்
செலவு என்ப வழியின் நாமம் கழிதற்கும் செப்பலாமே
#33
இலஞ்சியே மகிழ்மரப்பேர் ஏரி கொப்பூழும் ஆகும்
கலம்பகம் துழாவலின் பேர் ஒரு பனுவற்கும் காட்டும்
துலங்கலே விளங்கல் தூய்மை சூலியே சிவன் காளிப் பேர்
இலம்பாடே வறுமை துக்கம் இல்லமே வீடு தேற்றா
#34
ஓலமே கடல் பாம்பு ஓசை உலமரல் அளுக்கல் துக்கம்
யாலமே ஆச்சாத்தாரோடு இரும் கரு நிசி இரண்டாம்
ஏலமே மயிர்ச்சாந்து ஏலம் இலிங்கம் ஆண்குறி குலிங்கம்
சூல் எனும் பேர் பீள் சூலை தோலி தூசு அழிவிலாமை
#35
உலைதலே உருங்கல் நாமம் அழிதற்கும் உரைக்கற்பாற்றே
புலையர் பூரியரே மற்று அச் சண்டாளர்தமக்கும் போற்றும்
தொலை தராக்கோலே ஏற்றம் தோற்றமும் துலையும் ஏற்கும்
கலுழியே கான்யாற்றின்பேர் கலங்கியநீரும் ஆமே
#36
மல்லிகை விளக்குத்தண்டே மாலதி இரண்டே ஆகும்
கல்லோலம் நீர்த்தரங்கம் கருகிய ஒலியும் காட்டும்
சொல்லேரினுழவர்தானே துலங்கு மந்திரி கற்றோர்கள்
வில்லேரினுழவர் பேரே வீரர்க்கும் வேந்தர்க்கும் பேர்
#37
மலைத்தலே பொருதல் சூடல் மறுத்திடல் ஒலித்தல் நாற்பேர்
உலக்கையே ஓணம் உரோங்கல் ஊடல்தீருதலே நிந்தை
கலக்கமே கதனத்தோடே புரோதனம் கழறற்பாற்றே
இலக்கம் ஓர் எண்குறிப் பேர் இலாஞ்சனம் பேரே புள்ளி
#38
தாலமே கூந்தல்பூகம் தராதலம் பனையே நாவே
சீலம் ஆர் பண்பே நாப்பண் உண்கலம் செப்பும் ஏழ்பேர்
பாலமே நெற்றி பூமி மழுப்படை நடக்கும் பாலம்
நீலமே பனை கால் நெய்தல் நிறத்தில் ஒன்று இருள் மணிப் பேர்
#39
சாலம் மாக்குழு அரக்கு ஆம் மராமரம் வலை சாலேகம்
மேல் எயில் கூட்டம் தாரு விச்சை பூமுகை பத்தேபேர்
கோலம் நீரோட்டம் பாகு ஒப்பனை பன்றி குழவு பீர்க்கு ஆம்
காலம் முக்காலம் வைகல் கடி மதில்தனக்கும் ஆமே
#40
கூலம் நீர்க்கரை வால் ஆன் மாக்குழுப் பாகல் முசுப் பல்பண்டம்
ஏலும் ஆவணம் வரம்பே முதுரை என்று ஈரைந்தேபேர்
சாலகம் காலதர்ப் பேர் சாற்று பூமுகை வலைப் பேர்
ஆலலே ஒலி ஆடல் பேர் அலந்தை நீர்நிலையே துன்பம்
#41
உலவையே ஒட்டை கொம்போடு ஊர் குடி குலமே காற்றே
நிலவு பாசடையே வள்ளி நிகழ் நாமம் இருநான்கு ஆகும்
வலவை வஞ்சப்பெண் வல்லோன் மலமே மும்மலம் ஆசின் பேர்
கலவை சேருதல் சாந்தின்பேர் கால் ஆழ் சேறு அதுவும் ஆமே
#42
அலகு நெற்கதிரே ஆதி ஆரம் சோதினி புண் மூக்குப்
பலகறை எண் உளம்பு மகிழின்பால் எண்பேர் பன்னும்
திலகம் மஞ்சாடி சுட்டி சிறுநுதல் குறியே முப்பேர்
உலகமே திசை விண் பூமி உயர்குணம் சனம் உயர்ந்தோர்
#43
கலையே மீன் இரலை காஞ்சி கல்வி கால் காலநுட்பம்
நிலை ஆர் காழ் முசு நூல் தூசு நிலா வகிர் பன்னொன்றேபேர்
குலையே வில்குதை நடுக்கம் குலைதல் நீர்க்கரை நாலேபேர்
மலையே மால் வரை மீன் யானை வம்பு உயர் இருவாட்சிப் பேர்
#44
பீலி வெண்கவிகை சின்னம் பெருவரை கலாபிதோகை
காலியம் காலவட்டம் கனகம் வாச்சியம் எண்பேரே
தோலிபம் அழகே தோல்வி துருத்தி தோல் பலகை ஆறாம்
மாலி வெண்கள்ளே வெய்யோன் வழுத்தும் ஓர் நிருதலும் பேர்
#45
கால் இடம் தறி மரக்கால் காற்றுத் தேருருள் தாள் மூங்கில்
பாலனம் குரங்கு ஊற்று ஊற்றம் பகர் வாய்க்கால் ஈராறேபேர்
வேலி ஊர் நிலம் காற்று ஓதை விலோதமே பதாகை கூந்தல்
காலிலி பகலோன் தேர்ஊர் அருணன் காற்றுப் பாந்தள் பேர்
#46
பால் வெண்மை திசை வகுத்தல் பயம் குணம் பக்கம் மாட்சி
சால் வெண் பால் விதை இடப்பேர் சாற்றும் ஈரைந்து என்றேயாம்
ஆல் தெண்ணீர் அசைச்சொல் நாமம் ஆம் அல எனவே நாற்பேர்
வால் வெண்மை மிகுதி ஓட்டம் மழவு தூய்மை வாளிப் பேர்
#47
கோல் துலாம் கணை சம்மட்டி துகிலிகை குறி யாழ்த்தந்தி
ஏல் இலந்தை மைதீட்டும்எழிற்கோல் வேந்தன்கோல் எண்பேர்
நூல் கொடி எல்லை வள்ளி நுணங்கு சாத்திரம் தந்து எண்ணம்
வேல் கைஆயுதப்பொதுப் பேர் வேறலும் பகையும் ஆமே
#48
அலரி கண்வரியே நீவி அருக்கன் நீராவி பூவோடு
இலகு எழில் மரமே தேனீ இயம்புறு நாமம் எட்டாம்
கலனையே கலப்பை வாசிக் கலனை என்று இருபேர் காட்டும்
மலர் தேனீர் பூ அசைச்சொல் வல்லிகை குழை வீணைப் பேர்
#49
பாலை ஓர் மரம் பாடல் தீஞ்சுவை நிலம் அ நிலத்தின்
மாலை ஆர் பாடல் பொன்மேற்பிரிதல் வாய்ந்துடனேபோதல்
வேலையால் பிரிவுரைத்தல் வெம்மை என்று எண்பேர் வைக்கும்
காலையே கால நாள் ஆம் கல்லியாணம் சுபம் செம்பொன் பேர்
#50
மால் வலி பொலிவே சோழன் மறத்தலே பெருமை மேகம்
கால் நெடியோன் மயக்கம் கருமை கண்ணேணி தொன்மை
ஏல் புதன் வேட்கையே என்று இயம்பும் நாமம் ஈரேழாம்
போல் விறல் நேரே ஏதி பொய்யுடன் படை அசைப் பேர்
#51
உலமே நீர் காற்றுத் துன்பம் உயிர்நீப்போடு இரசல் ஊற்றம்
பிலம் ஆர் வால் திரண்டகல் பேர் பட்டடைப் பேர் ஒன்பானாம்
புலமே செம்பொன் அடுக்கம் புந்தி ஐம்புலம் விளைந்த
நிலமே திக்குடன் இடப்பேர் நிகழ்த்திய தனிமை எண்பேர்
#52
பண்டை ஓர் இசை லகாரவெதுகையில் பகரும் செய்யுள்
மண்டலம்அதனில் ஐம்பான் என்னவே வகுத்தல் செய்தான்
திண் திறல் கொடி செம் சேவல் திகழ்ந்த செவ்வேளைப் போற்றும்
அண்டர்கள் விளங்கும் செந்தில் அருமருந்தையன்தானே
** லகரவெதுகை முற்றும்
@15 வகரவெதுகை
#1
நாட்டும் மன்பதைகட்கு எல்லாம் நாதனாய் நலிவிலானாய்க்
கோட்டம்இல் குணத்து ஞானக் கொழும் சுடராம் குகேசன்
பாட்டு அளி துதையும் செங்கேழ்ப் பங்கயப் பாதம் போற்றி
ஈட்டம் ஆர் நல வகாரவெதுகையின் தொடை இசைப்பாம்
#2
அவனி பாரகரே வேந்தர் அம்புவி முப்பேர் போற்றும்
புவனம் நீர் புவி இரண்டாம் பூவம்பன் அடல்வேள்வீரன்
பவனமே நாகலோகம் படி காற்றே மனை இராசி
நுவணை நூல் பிண்டி நுட்பம் நூவு ஓர் அக்கரம் எள் யானை
#3
உவணமே வயினதேயன் உயர்ச்சி வெம் கழுகே முப்பேர்
சிவணலே எழுச்சி கூடல் செவ்வீரம் பாசி தேயம்
சுவணமே பொன் எழில் பேர் சுவர்க்கம் விண்ணுலகம் கொங்கை
யவனர் தோல்கருவியாளர் தபதி சோனகர் என்றாமே
#4
திவவு என்பது இழிவே யாழின்வலிச்கட்டின்நரம்பே செப்பும்
குவவு என்ப திரட்சி மேடு குவிதல் சொல் பெருமை கூட்டம்
தவவு என்ப மிகுதி குன்றல் தயவுடன் தவமே நாற்பேர்
சுவவு என்ப சுவர்க்கம் கண்டன் தொகுத்த புண் மூக்கும் ஆமே
#5
அவிநயம் பலவல் நாடகரங்கம் என்று இருபேர் ஆகும்
சவி மணிக்கோவை அந்தம் சாருவே இரதம் காந்தி
கவி தொடை வெள்ளியே நீர்க்காக்கை வாக்குள்ளோன் மந்தி
நவிலல் சொல்லுதலே பண்ணல் நவிரே ஆண்மயிர் பண் வாள் ஆம்
#6
சிவமே நன்மை பஞ்சாக்கினி திகழ் முத்தி குறுணி நாற்பேர்
பவமே உற்பவம் பாவப்பேர் பாவன் ஆசனம் பாம்பு ஓர் நீர்
நவமே கார்காலம் கேண்மை புதுமை ஒன்பான் பேர் நாட்டும்
கவனம் கான் கலக்கம் வாசிக்கதி எனும் முப்பேர் ஆமே
#7
நவிரமே குடுமி புன்மை நல் பசுந்தோகை வெற்பு ஆம்
அவிரதம் நோற்கிலாமை அனவரதமுமே என்றாம்
கவிகையே குடை கொடைப் பேர் கவந்தம் தெண்ணீர் மட்டைப் பேர்
தவிசு அணை தடுக்கே மெத்தை இலகடம் நாற்பேர் சாற்றும்
#8
அவை என்ப சவையே கற்றோர் அவிர்தலே ஒளிபீறல் பேர்
சிவை என்பது உமையே கொல்லன் ஊதுலை மா வேர் செப்பும்
கவை என்ப காடு ஆயில்லியம் கவர்வழி எள்ளிளங்காய்
நவை என்பது இகழ்ச்சி குற்றம் நவியமே மழுக் கோடாலி
#9
கவுரவம் இளமை வெள்ளை கவிப்பே மூடுதல் குடைப் பேர்
சவுரியே திருமால் கள்ளன் சனி யமன் கலுழன் ஐம்பேர்
கெவுரியே உமை காளிப் பேர் கேவலம் தனிமை முத்தி
மவுலி தார் முடி கோடீரம் மவ்வல் மல்லிகை முல்லைப் பேர்
#10
கவுசியே குழைவு துன்பம் கவுத்துவம் ஓர் மணி அத்தப்பேர்
சவுரியம் களவே மேதி சாற்றிடும் ஆற்றல் முப்பேர்
கவுசிகன் விசுவாமித்திரன் நூற்றுப்பத்துக்கணன் பேர்
கவுசிகம் விளக்குத்தண்டே ஓர் பண் கோட்டான் ஓர் பாட்டு ஆம்
#11
அவலே நீர்நிலை வயல் பேர் ஆவம் வில்நாணி தூணி
குவலயம் நெய்தல் பூமி குளிர் கருங்குவளைக்கும் பேர்
கவலை செந்தினை ஓர் வல்லி கவர் வழி வெருவல் துன்பம்
சுவல் பிடர் புயம்மேல்மேடே சொல் கொல்லை ஐம்பேராமே
#12
நா அகம் நடுவே நா ஆம் நவ். ஓர் அக்கரம் நாவாய் ஆம்
சாவகர் ஒருதேயத்தோர் சமணரில் இருத்திபெற்றோர்
சேவகம் வீரம் யானைதுயிலிடம் இருபேர் செப்பும்
தீவகம் விழியே பார்வை செழுஞ்சுடர் விளக்கு எனும் பேர்
#13
ஆவலர் கொண்கர் நாமம் ஆற்று காதலர்க்கும் ஏற்கும்
சீவனி ஓர் மருந்தே செவ்வழித்திறத்து ஓர் ஓசை
கோவனே வசிட்டன் ஈசன் குயவன் என்று இ முப்பேரே
மேவலே சேறல் வேட்கை வேவமே தனிமை துன்பம்
#14
ஆவலே வளைவு ஆசைப் பேர் அவதி மட்டு இடாமை காலம்
தூவலே திவலை ஆர்ப்பு ஆம் துவக்கே தோல் பிணக்கு இரண்டாம்
காவலே சிறை நீர் தாருக் கதைத்த தம்பட்டம் நாற்பேர்
வாவலே தாவல் கூத்து வயாவுடன் வவ்வாற்கும் பேர்
#15
கவடு என்பது யானைகட்டும்கயிறு கப்புடன் பணைப் பேர்
குவடு என்ப மலையினுச்சி கொழும் குவடு எனவும் கூறும்
சுவடு என்ப கணிதத்துஒன்றும் ஞெமுங்கற்கும் சொல்லற்பாற்றே
கெவுடம் சொல் பேரே கோடி கேடுஇல் ஓர் தேயமும் பேர்
#16
உவா என்பது இளையோன் பவ்வம் உம்பல் தெண்கடலே நாற்பேர்
திவாகரன் அனந்தன் வெய்யோன் செவி என்ப காதே கேள்வி
சவாது பூசும் பூச்சின்பேர் தக்கவோரிடத்து ஓலைப் பேர்
சுவாகா மந்திரமே அங்கித்துணைவி என்று இருபேராமே
#17
அவா என்பது ஆசை சோம்பு ஆம் அவதாரம் இறங்கல் தோற்றம்
சுவேதமே வேர்வு வெண்மை சொல்மாலை முப்பேர் செப்பும்
விவா என்ப பெருமையின்பேர் விளங்குறும் இரவும் போற்றும்
சுவாமி செவ்வேள் வியாழம் முனைவரும் அரன் பேர் சொல்லும்
#18
ஆவியே நாற்றம் மூச்சோடு ஆருயிர் வாவி தூமம்
கூவிரம் தேரே தேரின் கொடிஞ்சி என்று இருபேர் கூறும்
நாவிதன் பூரநாள் ஏனாதியோடு எரிநாள் முப்பேர்
காவி என்பது கள்ளின் பேர் கருங்குவளைக்கும் ஆமே
#19
சிவப்பு என்ப சினக்குறிப் பேர் செம்மை ஆம் கறுப்பும் அற்றே
உவப்பு என்ப பொலிவின் நாமம் ஓகை என்று இருபேர் கூறும்
நிவப்பு உயர்வுடன் பரத்தல் நிவறலே துளக்கம் மொய்த்தல்
தெவிட்டல் கான்றல் ஒலித்தல் நிறைத்தல் சொம்படைத்திடல் பேர்
#20
பா என்ப பரப்புப் பாவல் பனுவல் நூல் பாத் தேர்த்தட்டு ஆம்
தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலியே கேடு ஆம்
தூ என்ப பகை வால் தூய்மை தூவி ஊன் பற்றுக்கோடு ஆம்
ஓ என்ப பிறங்கலோடே கொடுமை ஓங்காரம் ஆமே
#21
கவ்வை எள்ளிளங்காய் துன்பம் கடநிபம் பழிச்சொல் கள் ஆம்
துவ்வையே பருகல் நாமம் சொற்ற பிண்ணாக்கு இறைச்சி
தவ்வை மூத்தாளே ஈன்றாள் சாற்றும் மூதேவி முப்பேர்
செவ்வு தண்பழனம் செவ்வை தெவ்வு கொள் சமர் பகைப் பேர்
#22
அவ்வியம் அழுக்காற்றின் பேர் ஆன்ற பொய்யுடன் இரண்டாம்
துவ்வுதல் உண்டலோடே ஆற்பதம் இரண்டும் சொல்லும்
பவ்வமே கடல் உவாப் புற்புதம் மரக்கணு உருப் பேர்
எவ்வமே தனிமை துன்பம் ஏவலே யானை ஏவல்
#23
ஆவியர் இப்பர் வேடர் ஐவர் ஆம் களர் வியாழம்
தீவியே புலி விளக்கம் தீவிரம் கிரணம் வல்லை
தூவி புள்ளிறகே தூவல் துவ்வு அனுபவமே சுத்தம்
நீவியே துடைத்தல் ஆடை நெருங்கு கொய்சகம் அளித்தல்
#24
கூவலே கிணறே ஓசை கோவை தாழ் வடநூல் விம்பம்
நாவலர் கவிஞர் கூத்தர் நாவாய் ரேவதி அம்பிப் பேர்
சேவல் புள்ஆணே காவல் சீவனே உயிர் வியாழம்
ஓவர் வந்தித்துநிற்போர் தபதியர் இவை ஓதும்பேர்
#25
பாவை பெண் பாவை ஆகும் பாவமே மறம் களிப்பு ஆம்
ஆவரணம் மறைப்போடு ஆர்த்திடும் தூசு இரண்டாம்
பூவை நாகணவாய் காயா பொற்பு கோகிலம் கிள்ளைப் பேர்
நாவி ஓர் பூடே நாவி நவமணிப் பேர் பொன் காசு ஆம்
#26
கவரி சாமரை தேர் மேதி கத்தூரிமிருகம் நாற்பேர்
தவறலே விடுதல் குற்றம் சாற்றிடும் சோம்பே முப்பேர்
துவரே செம்பவளம் காட்டம் துவர் சிவப்பு இகலே ஆக்கம்
கவர்தலே பெட்பின் நாமம் கரந்துகோடற்கும் ஆமே
#27
சவலை ஓர் இன வெண்பாட்டே சாற்றும் மின்னற்கும் பேரே
திவசமே நடுப்பகல் பேர் செப்பும் ஓர் நாளும் சொல்லும்
உவமை நேர் அலங்காரப்பேர் உவர்ப்பு இகழ்ச்சி வேண்டாமை
துவர்தலே வகிர்தலோடு சொற்ற ஓர் சுவையும் ஆமே
#28
ஐவனம் மலைநெல்லின் பேர் ஆன்ற ஓர் தாரும் வைக்கும்
செவ்வியே அழகு காலம் தீவினை வேள்வி பாவம்
நவ்வி மான் அழகே அத்தநாளுடன் இளமை நாற்பேர்
வெவ்வினை முயல் உத்தியோகம் விளங்கு இருவினைக்கும் பேரே
#29
ஆவணம் புணர்தம் வீதி அங்காடி உரிமை நீளும்
கூவிரம் செறியும் பீடம் சாதனம் கூறு ஆறேபேர்
கோவணம் கல்லழுத்துங்குழி வட்டம் கெளபீனப்பேர்
பூவணி சதுக்கம் தொங்கல் பூவலை சிவப்புப் பூத்தல்
#30
உவளகம் மதில் ஓர்பக்கம் ஓது அந்தப்புரமே வாவி
சவரும் உப்பளமே பள்ளம் சாற்றும் மூவிருபேர் வைக்கும்
குவளை கண் காவியின் பேர் குவால் என்ப மேடே கூட்டம்
இவறலே மறவி ஆசை என்ப பேரிசைக்கும் அப் பேர்
#31
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் சேறல் மேவல்
தவறிலா நடத்தலோடே பரத்தலும் சாற்றும் ஏழ்பேர்
துவை புளிங்கறி துவைத்தல் துவன்றலே நெருங்கல் ஓசை
தவர் எனும் கிளவி யோகர் தனு எனும் இருபேராமே
#32
ஆ என்பது ஆச்சாத்தார் ஓர் அக்கரம் பசு இரக்கம்
மேவும் சொல் இசையே இச்சை வியப்புடன் ஏழ்பேர் கூறும்
கோ என்ப குலிசம் ஆன் பார் குருசில் கண் கிரணம் திக்கே
ஏவல் விண் சுவர்க்கம் பாணம் இயம்பல் நீர் பன்மூன்றேபேர்
#33
தே என்ப தேனே நாற்றம் தித்திப்பே தெய்வத்தாரே
தாவும் எண் திசையே செவ்வை தராதலம் இடம் எண்பேரே
கா என்பது உலை தண் சோலை கலை மின் தோள்சுமை பசுப் பேர்
மேவும் கற்பகம் வருத்தமிடல் வடம் ஒன்பான்பேரே
#34
மா என்ப பெருமை வண்டு வாசி நெல்மா அசைச்சொல்
மே ஒரு கணிதம் செல்வம் விலங்கு ஒரு தரு வெறுப்புப்
பூ உயர் திரு அழைத்தல் பொறை பொறுத்திடுதல் கானல்
தா ஒளிர் கருமை சாயல் சாற்றும் ஈரெண்பேராமே
#35
மா உயரிய வகாரவெதுகையின் வழுத்தும் செய்யுள்
தா உயர் மூன்றினோடு எண்ணான்கு எனச் சாற்றல் செய்தான்
பா உயர் எழில் கூர் செவ்வேள் பங்கயப் பாதம் போற்றும்
ஆ உயர் செந்தில் மேவும் அருமருந்தையன்தானே
** வகரவெதுகை முற்றும்
@16 ழகரவெதுகை
#1
தடையில மும்முதற்கும் தனிமுதல் ஆகி என்று
முடை பயில் புவனம் ஏத்தும் ஒண் பொருள் ஆனோன் செங்கை
அடையுறு மயில் வேல் தாங்கும் அண்ணல் பொன் தாளைப் போற்றி
இடையினம் எனும் ழகாரவெதுகையின் தொடை இசைப்பாம்
#2
நிழல் அருள் ஒழுக்கம் செல்வம் நீழல் நோய் குளிர்ச்சி ஐம்பேர்
கழல் கழங்கொடு செருப்புக் காலுடன் அறை கழல் பேர்
குழல் விலோதம் துளைப் பேர் கொழுமையே வளன் கொழுப்பு ஆம்
சுழல் கறங்கே காற்றாடி துழாய் துன்பம் துளவு என்றாமே
#3
விழைவு என்ப புணர்ச்சி காதல் மேழமே கவசம் ஆடு ஆம்
கழை என்ப புணர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர்
குழை என்ப தளிரே சேறே கொழும் பொனின் தோடும் கூறும்
உழை என்பது யாழ் ஓர் ஓசை உழையலோடு இடம் மானும் பேர்
#4
விழவு அவா மிதுனராசி விளம்பில் உற்சவமும் ஆகும்
மழவு எழில் இளமை குட்டி வழக்கர் நீள்வழி வழக்கம்
குழவு எழில் மழவு குட்டி கோழ் கொழுத்தல் கொழுப்பே
இழவு எனும் பேர் இழத்தல் எழுந்திடல் இரண்டும் ஆமே
#5
அழுவல் நற்குணம் விசாலம் அழுங்கல் கேடு இரங்கலோசை
கழுமல் பற்றொடு மயக்கம் கடும் துயர் மிகுதி மல்கல்
செழுமை பொற்பின் பேரே மாட்சிமை கொழுமை வளப்பேர்
கெழுமல் கற்கல் பொருந்தல் கிழி நிதிப்பொதி படம் கீள்
#6
வழு என்ப குற்றம் கேடு வந்துறும் சோர்வே முப்பேர்
கழுமுள் மாதளையே சூலம் கழுக்கடை வேல்பொதுப் பேர்
எழு என்ப பரிகம் தம்பம் எழுச்சி ஏர் நோய் உயர்த்தல்
ஒழுகல் என்பதுவே நீளம் ஒழுக்கம் என்று இரண்டுமாமே
#7
பொழிதலே சொரிதல் நீட்டல் பூழியன் வழுதி சேரன்
வழுதியே வங்க மாறன் வழுத்தல் தோத்திரமே மெச்சல்
தொழுதியே நெருக்கம் கூட்டம் தொழும்பரே அடிமை மள்ளர்
கொழுதியே பொலிவு நாமம் கொழுத்தற்கும் வழுத்தற்பாற்றே
#8
அழுவமே பரப்பு நாடே அறைபறை நடுக்கம் துக்கம்
கெழு உரை தகைமை ஆட்சி கேழ் நிறம் ஒளி ஒப்பு ஆகும்
இழுமெனல் இனிமையோசை எழால் நரம்பிசை ஓர் புள் ஆம்
விழுமமே சிறப்புச் சீர்மை விடாத்துயரதுவும் ஆமே
#9
யாழ் முதல்நாளே ஆந்தை அறை வீணை மிதுனம் நாற்பேர்
தாழ்தலே வணங்கல் ஆசை குறைதல் தங்கல் பேர் நான்காம்
கூழ் பயிருணவே பைம்பொன் குழாயே உள்துளைதண்டு ஆகும்
ஊழ் முறை வெயில் பகைப் பேர் உறு தெய்வம் நற்குணப்பேர்
#10
அழனமே பிணம் செந்தீ ஆம் அழகே சற்குணம் எழில் பேர்
கிழமையே உரிமை பண்பு ஆம் கேழலே யானை பன்றி
பழமையே வேண்டற்பாடும் தொன்மையும் பாணும் செப்பும்
தழவுதான் விரைவுதல் பேர் செறுத்தல் மன்னுதலும் சாற்றும்
#11
இழுது நெய்இழுக்கலின்பேர் இழுக்கு என்ப மறத்தல் கீழ்மை
கழுது பேய் பரண் வண்டின்பேர் கழுந்தி நித்திலம் கழைப் பேர்
பழுது என்ப மறைவு குற்றம் பகருறும் இடமே முப்பேர்
வழுதலை புனத்திடும்பொய்க்கழு வழுதலைப் பேர் வைக்கும்
#12
உழிஞையே சிறுபூளைப் பேர் ஓடு எயில்வளைத்தற்கும்பேர்
கழிவு என்ப மிகுதி சாதல் கடந்திடல் வரைத்தல் போக்கு ஆம்
குழியமே மருந்திற்கெல்லாம்பொது பாறாவளையம் கோலம்
தொழில் இயற்றிடும் உஞற்றும் தொல்லையே பெருமை சோரம்
#13
வழி என்பது இடமே மார்க்கம் வரும் மகவுடன் பின்னும் பேர்
குழி என்பது அகழ்தல் குக்கி குழிசியே மிடாப் பானைப் பேர்
பழி என்ப பழித்தல் குற்றம் பழிச்சல் தீச்சொல் வழுத்தல்
எழில் என்பது அழகே வள்ளி எழிலியே வள்ளல் மேகம்
#14
உழுவையே புலி மேதிப் பேர் உழுதலே உழுதல் தொய்யல்
தொழு என்ப துழலைதானே ரேவதிநாளும் சொல்லும்
முழுமகன் அறிஞன் மூடன் மோழையே காடி கஞ்சி
உழுவலே ஆரா அன்போடு ஓங்கு எழில் புணர்ச்சி நாற்பேர்
#15
ஊழியே உகாந்தம் பூமி உழப்பு என்ப வலி உச்சாகம்
தோழியே அரக்குப் பாங்கி சூழே நோய் சூழ்தல் ஆகும்
பூழியே புழுதி சேறு ஆம் பூழிலே அகில் பூமிப் பேர்
காழியர் அப்பவாணிகர்க்கும் வண்ணார்க்கும் பேரே
#16
வழுக்கு என்ப மறத்தலின் பேர் வழும்பு எனும் பேரும் ஆக்கும்
நிழற்றலே நுணுக்கம் நீழல் நிழல்செயல் எனவே முப்பேர்
கிழத்தியே மனைவி முல்லை மருகப்பெண் எனக் கிளத்தும்
பழுப்பு அரிதாரத்தின் பேர் முதிரிலைப் பருவம் ஆமே
#17
தாழையே தெங்கு கைதை தழல் கிளிகடிகோல் செந்தீ
ஏழை பெண் மிடியன் பேதை இழையே பூண்இழைத்தல் நூல் பேர்
நூழையே வருவாய் நுட்பம் சாளரம் நுவலற்பாற்றே
மாழ்கலே இரங்கல் மோகம் வழுத் துரோதனமும் ஆமே
#18
ஈழமே சிங்களம் பொன் இழுக்குறும் கள்ளே முப்பேர்
வேழமே கொறுக்கை மூங்கில் வெற்றி மால் யானை கன்னல்
காழகம் கருமை யாக்கை கழுதை தூசுடன் கடாரம்
கீழ் இடம் கயமை பள்ளம் கிழக்குடன் நாற்பேராமே
#19
நீழலே ஒழுக்கம் வெள்ளி நிலவே ஆற்பதமே நாற்பேர்
சூழலே இடம் விசாரம் சொல் கூழைப்படையே முப்பேர்
ஞாழலே பலினி கோங்கு நாறும் கத்தூரிக்கும்பேர்
சாழலே விளையாட்டோடே சாற்றும் காடிக்கும்பேரே
#20
உழுந்து சொல் படிறின் நாமம் ஓதுறு மாடத்தின்பேர்
கொழும் கிரி வரையே மவ்வல் கோழியே உறையூர் ஓர் புள்
கழங்கு சேய்ஆடல் இந்தியம் கொடிக் கழல் ஓர் ஆடல்
வழங்கலே நடத்தல் நீட்டல் வருமுறை உலாவல் ஆமே
#21
உழைக்குதல் அழுங்கல் வீழ்ந்தே உழக்குறல் உஞற்றே முப்பேர்
சுழற்சியே கறங்கல் ஆழித் தொல்படை ஓர் காற்றும் பேர்
தெழித்தல் வாயால் அதட்டல் செப்புறும் ஓசைக்கும்பேர்
ஒழுக்காறு என்பது வழிப் பேர் ஒன்று அடைக்கலமும் ஆமே
#22
கழுறு வீறு என்னும் நாமம் குழவியும் தூம்பும் காட்டும்
கிழவனே அறிஞன் மூத்தோன் மருதத்தோன்றல் கிளத்தும்
தழை தழைக்குறலே பீலிக்குடை எனச் சாற்றற்பாலாம்
நுழை எனும் நாமம் நுண்மை நுழைவாயில்தனக்கும் ஆமே
#23
காழ் என்ப மணியின் கோவை கற்பரல் வித்துச் சேகு
நீள் கதவின் தாழ் காந்தி நிறத்த மாலை கோல் எண்பேர்
கேழ்வி யாழ் செவியே கல்வி கெழு என்ப நிறம் கெழூஉப் பேர்
வேழ்வியே மகநாள்பூசை வேள்விக்குண்டம் கொடைப்பேர்
#24
பாழியே வழி விலங்கின்படுக்கை ஊர் பெருமை பாயல்
வாழிய தவத்தோர் வாசம் மலை முழை அகலம் எண்பேர்
சூழியே சுனையே வேலை தும்பியின் முகபடாப் பேர்
நாழி நாழிகை அளக்கும் நாழி வேய் பூரட்டாதி
#25
ஆழியே கரைகள் வட்டம் ஆர்கலி நேமி வீகம்
பாழி சேர் கரித் துதிக்கைந்நுனி எனப் பகரற்பாற்றே
தாழியே பரணிநாள் பேர் சாகரம் குடங்கர் முப்பேர்
நூழிலே கொலை தோல் செக்கு நுவல் திரை கொடிக்கொற்றான் பேர்
#26
ஊழ்த்தலே தசையின் நாமம் உறு பதன் அழிவே தீர்த்தல்
தாழ்ப்பிலா நினைத்தல் செவ்வி சாற்றிடும் பேர் ஓர் ஐந்தாம்
வாழ்த்தலே வழுத்தல் ஆசி மாழ்கு மான்தலை நாள் மாழ்த்தல்
ஆழ்த்தலே மடிமை செல் பேர் அழுக்காறே பொறாமை பொய் ஆம்
#27
மாழையே புளிமா ஓலை மடமை பொன் உலோகக்கட்டி
சூழ் எழில் மடவார்ஆயம் சொற்றன திரட்சி எண்பேர்
கூழை பொன் உரகம் சேறு கூந்தல் வெம் படையுறுப்பே
தாழுறும் சிறகே பீலி நடு எனச் சாற்று எண்பேரே
#28
அழுக்கு எனும் நாமம் ஆமை மலினமும் அறையற்பாற்றே
மிழற்றலே நிரம்பா மென்சொல் மேவுறு மொழிக்கும் பேசும்
இழைத்தலே கூற்றம் ஆற்றல் இயம்புதல் நினைத்தல் நாற்பேர்
விழுப்பு உயர் சிறப்புச் சீர்மை விளப்புறும் இடும்பை ஆமே
#29
இன்பு உயர்ந்திடு ழகாரவெதுகையில் சிறந்த செய்யுள்
முன் பெற ஒன்று ஒழிந்த மூவொன்பதாகச் செய்தான்
பன் கிளர் விரி தோள் சூர்மாப் பக வயிற்றுரந்தோன் பாதம்
அன்புற வணங்கும் செந்தில் அருமருந்தையன்தானே
** ழகரவெதுகை முற்றும்
@17 ளகரவெதுகை
#1
மாங்குயில் கிளவித் தீஞ்சொல் பிறை நுதல் கருங்கண் வம்பு ஆர்
கோங்கு இள முலைப் பொன் தெய்வ குஞ்சரி வள்ளி கொண்கன்
காங்கயன் அன்பர்க் காத்த கடவுள் பொன் பாதம் போற்றி
ஓங்கியல் பெறு ளகாரவெதுகையின் தொடை ஓதுற்றாம்
#2
அளையே வெண் தயிர் வன்மீகம் அகல் மலைமுழை வளைப் பேர்
தளையே ஆண்மயிர் விலங்கு தண்பணை சிலம்பே நாற்பேர்
கிளையே ஓர் பண் மூங்கில் பேர் கேளொடு கிளைத்தற்கும்பேர்
வளையே கைவளை சங்கு ஆழி வள்ளம் ஓர் அளவை வட்டில்
#3
விளை நரம்புடன் உண்டாதல் விளையுளே கழனி உள்ளம்
உளை புரவியின்மேற்கட்டு மயிர் பிற மயிரும் ஓதும்
களை களை களைதலின்பேர் களேபரம் உடல் பிணப்பேர்
துளை துளல் துளைதலின்பேர் துளங்கல் கம்பித்தல் மின்னல்
#4
அளமே ஒண் செறிவே கூர்மை அகட்டு உப்பு விளைநிலப்பேர்
வளமே பல்பண்டம் செவ்வி வளப்பாடே புதுமை தட்டி
விளமே ஓர் அசைச்சொல் வெள்ளில் வேளாண்மை மெய்ம்மை ஈகை
நளமேதான் உகல் மடங்கல் ஞாளி தேன் சுணங்கனும் பேர்
#5
அளவு என்பது இனமே எல்லை ஆளியே பூட்கை சிங்கம்
களவு என்ப களாவின் நாமம் கருது பட்டிமை இரண்டாம்
விளவு என்ப அகிலினோடே விளாவுதல் விளவே முப்பேர்
உளவு என்பது யாழின் தண்டம் உளுவுகோல் உளவும் ஆமே
#6
விளர் என்பது இளமை வெள்ளில் வெம் சினம் கொழுப்பே வெண்மை
உளர்தலே சிதறல் ஆகும் தடவலும் உரைக்கற்பாற்றே
களர் களர்நிலம் கழுத்துக் கருமையே கொடியே நாற்பேர்
அளர் நரகம் சேற்றின் பேர் அளாவலே துழாவல் ஓங்கல்
#7
அளகமே பன்றி முள்ளோடு அலர் மழை மடவார்ஓதி
குளகம் ஓர் செய்யுளின்பேர் மரக்கால் என்று இசைவும் கூறும்
புளகமே புளகித்திட்டல் புற்புதம் திகழ் கண்ணாடி
களபமே யானைக்கன்று கமழ் சாந்தும் கலவைக்கும்பேர்
#8
முளரி தீ விறகு நுட்பம் முள்மரம் கமலம் காடு ஆம்
விளரியே இளமை வேட்கை மிகுதி யாழ்நரம்பு ஓர் ஓசை
களரியே மிடறு கோட்டி களர்நிலம் கருமை நாற்பேர்
வளரியல் பண்பு எழில் பேர் வளைந்து என்ப வளைத்தல் பேசல்
#9
புளிஞரே கொலைஞர் வேடர் புள்ளியே கெவுளி ஞண்டாம்
வெளில் அணில் வேழத்தம்பம் வெண் தயிர்கடைதறிப் பேர்
பளிதம் என்பது கற்பூரம் பல்லம் எண்கணக்கும் பன்னும்
ஒளி இரு சுடரே தீயே ஒளிப்பிடம் புகழே நாற்பேர்
#10
அளியே தேன் அளித்தல் வண்டே அன்புடன் வீரம் ஐம்பேர்
வெளியே ஆகாயத்தின்பேர் மிளிர் மயிர்ச்சடையும் பேசும்
களியே கள்ளுடன் மயக்கம் களிப்புடன் இளமை நாற்பேர்
நளியே சீதம் நெருங்கல் நவிற்றிடும் பெருமை முப்பேர்
#11
துளி எனும் பேரே பெண்ஆமை மழைத்துளி அடைத்தல்
உளி இடம் கணிச்சியின்பேர் உள்ளமே முயற்சி நெஞ்சு ஆம்
இளி இசை இசித்தல் ஒன்றை இணுங்குதல் சிரித்தற்கும்பேர்
நளினியே வாவி அம்போருகத்துஅணங்கு அயனே நாட்டும்
#12
அள்ளலே நிரயம் சேறோடு அள்ளுதல் எனவே முப்பேர்
விள்ளலே விருபம் விள்ளல் வெள்ளில் சாணை விளாப் பேர்
துள்ளலே மசகம் ஆடு சொல் கூத்து ஓர் செய்யுளோசை
பொள்ளெனல் ஒலியின் நாமம் விரைவினில்குறிப்பும் போற்றும்
#13
வாளி ஆசுகம் சுற்றோட்டம் வடிக் கணை சோனை நேமி
கோளி பூவாதுகாய்க்கும்மரம் கொள்வோன் கொழுஞ்சி என்றாம்
பாளிதம் அன்னம் கண்டசருக்கரை குழம்பே பட்டு ஆம்
ஓளி யானைக்கூடப்பேர் ஒழுங்கு என்றும் வழங்கலாமே
#14
வாளமே வட்டம் ஈர்வாள் மருந்திலொன்று எனவே முப்பேர்
கோளகை வட்டநாமம் கிம்புரிப்பூணும் கூறும்
சூளிகை மணிமாடம் யானைச்செவியடியும் சொல்லும்
தாளியே அனுடநாள் ஓர் வல்லி திண் பனையும் சாற்றும்
#15
தளிமமே அழகு மெத்தை தளிர்த்தலே துளித்தல் ஒன்றல்
வளமை மாட்சிமை கொழுப்பே வழங்கிய கொடையே முப்பேர்
இளமை மாழாத்தல் தன்மை மழவு என இயம்பலாகும்
குளவி வேட்டுவன் பச்சைப் பேர் கொள்ளலே நினைதல் கோடல்
#16
அள்ளே கூர் வலி பெறப் பற்றிரும்புடன் செறிவே காது ஆம்
வள்ளே வார் காது கூர்மை வலி வளம் செறிவே வாள் பேர்
கள்ளே பொய் சோரம் கேண்மை கள்வான் ஓர் மருதவேலி
பள்ளே ஓர் பாட்டுச் சாதி பள்ளமே ஞெள்ளல் சோரம்
#17
திளைத்தலே நிறைதல் கூடும் அனுபவம் துளைத்தல் செற்று ஆம்
இளைத்தலே இளைப்பின் நாமம் இரங்கல் என்று ஓதற்பாற்றாம்
கிளைத்தலே நிறைதல் மல்கல் கிள்ளையே கிளி வாசிப் பேர்
வளைத்தலே கொளல் வளாகம் வளாகம் கோண் இடம் தொடல் பேர்
#18
நொள்ளையே ஒளிர் மழைக்கோள் நுவன்ற நாகரவண்டின்பேர்
வெள்ளையே வெண்சங்கு இராமன் விளர் மேடம் வெண்பா வெள்ளி
பிள்ளையே காரிப்புள்ளே வயிரவன் பெறும் சேய் முப்பேர்
வள்ளை ஓர் பாட்டே வள்ளை வள்ளியம் வயிர் மரீசி
#19
கள்வனே முசு நண்டு யானை கருநிறத்தவனை சோரன்
ஞொள்கல் சோம்பு இளைத்தல் அச்சக்குறிப்பு அலையல் நுவல் பேர்
கொள்கையே அறிவே பண்பு ஆம் கொளுத்தே மூட்டொடுபுணர்த்தல்
தெள்ளுதல் கொழித்தல் ஓர்தல் தேள் அனுடம் தெறுக்கால்
#20
வள்ளியே புனையிழைப் பேர் வல்லிகை வளைவு ஓர் கூத்து ஆம்
பள்ளியே சிற்றூர் கோட்டம் பாயல் கண்படை நீத்தோரூர்
நள்ளி ஓர் வள்ளல் சுற்றம் ஞண்டு ஒரு கொடியே நாற்பேர்
ஒள்ளியே செம்பொன் சுக்ரன் ஒள்ளிது என்று ஓதற்கும்பேர்
#21
புள்ளுவம் கனியே வஞ்சம் புள் அவிட்டம் புள் வண்டு ஆம்
வெள்ளமே உவரி ஓர் எண் மிகுதி என்று ஓதல் முப்பேர்
நள்ளெனல் நடுவே நட்பு ஆம் நாளிகம் சரோரம் வள்ளை
மள்ளரே குறவர் வீரர் மறுவிலா உழவர்க்கும்பேர்
#22
வாள் ஒளி கயிறு கச்சு வயங்கிய படை நீர் கூர்மை
கேள் கிளை கிளத்தல் ஒன்றைக்கேட்டுறல் கல்வி நாற்பேர்
நாள் மலர் உடுவே காலை நவிற்று ஒரு நாள் செவ்விப் பேர்
நீள் நெடுந்தூரத்தின்பேர் நென்னலும் என்னலாமே
#23
அளக்கர் கார்த்திகைநாள் சேறோடு அளம் கடல் புடவி ஐம்பேர்
விளக்கமே வெள்ளை தீபம் விளிவு வெம் சினமே சாவு ஆம்
துளக்கமே பயம் நடுக்கம் சுள்ளியே அனிச்சம் ஆச்சா
இளக்கமே இளகலின்பேர் ஈரமும் இயம்பலாமே
#24
அளித்தலே செறித்தல் ஈகை ஆள் ஆள்தல் ஆடவற்கு ஆம்
களித்தல் ஏமம் தழைத்தல் களகரே புலையர் வேடர்
தளிர்த்தலே துளிர்த்தல் ஒன்றல் தாளாண்மை நடத்தல் ஊக்கம்
சுளித்தலே ஒசித்தலின்பேர் சொற்ற வெம் சினமும் ஆமே
#25
வெளிறலே அறிவிலாமை விளர்த்தலும் விளம்பற்பாலாம்
ஒளிறலே நிலவல் சீர்த்தி ஒளிவட்டம் திகிரி ஆடி
பிளிறலே களிற்றினோசை கீண்டல் என்று ஓதல் பேசும்
குளிறல் பேரொலி எழுத்தின்ஒலி எனக் கூறற்பேரே
#26
வேளை ஓர் புதர் முக்காலம் வெள்ளியே வெண்மை தாரம்
பூளையே இலவின்பஞ்சும் புகலும் ஓர் பூடும் போற்றும்
சூளையே கணிகை சூளை சுளகே முற்றில் விசாகம்
நாளம் உள்துளையின் நாமம் கமலநாளத்தும் நாட்டும்
#27
ஞெள்ளலே பள்ளம் மென்மை நீள் வீதி மிகுதி பூசல்
ஒள்ளிய சோர்வினோடே உடன்படல் ஒலியே எண்பேர்
எள்ளலே இகழ்ச்சி எண்ணல் இலங்கிய நகையே முப்பேர்
உள்ளலே நினைவே உள்ளான் உளைவு உளைத்தல் இரக்கம்
#28
குளிர் பனி மழுவே ஞண்டே குடமுழாக் கவண் குளிர்ச்சி
ஒளிர் இலைமூக்குஈர்வாள் மீன்ஒழுங்குடன் இருத்தல் எண்பேர்
நளிர் குளிர் வெறுப்பே மல்கல் ஞண்டுடன் பெருமை ஐம்பேர்
களிறு நீள் சுறவு பன்றி கறையடி அத்தநாள் பேர்
#29
மீளியே இளமைவீரன் மேன்மகன் பெருமை பாலை
ஆள் இறை இரங்கல் கூற்றோடு ஆற்றல் என்று இசைத்தல் ஏழ்பேர்
கூளியே இளமை மண்ணை குறளை ஏறு இபமே சுற்றம்
நீளிய தொகுதி குற்றம் நிகழ்த்து பேர் இருநான்காமே
#30
களமே போர்க்களம் கழுத்து களா விடம் கறுப்பு இல்லாள் நெல்
அளவிடலிடம் பரப்பு என்று அறையும் பேர் இருநான்கேயாம்
குளமே பூராடம் வெல்லம் குட்டம் உத்திராடம் நெற்றி
தளமே பூவிதழே தாழி சாந்துடன் பொரு படைப் பேர்
#31
இளையே மைப் புயல் திண் பூமி இளமை அங்காடி வேலி
களை எயில் பசுக் கிடங்கு காவற்காடோடு எண்பேராம்
கொளையே பாட்டு ஓர் இசைப் பேர் கொள்ளம் ஆற்றுடன் சேறு ஆகும்
முளைவே அங்குரமே பிள்ளை முள்ளே நுட்பம் வார் சூலம்
#32
காளமே ஊதும்கொம்பு கருமை மூவிலை வேல் நஞ்சம்
கோளில்பூவுடனே எட்டிமரம் எனக் கூறு ஆறேபேர்
தாள் அரி குறுந்தாள் பாதம் சாற்றும் உத்தியோகம் முப்பேர்
பீள் இளங்கதிர் கருப்பம் பேசுறும் இளமை ஆமே
#33
கோள் குலை இடையூறு ஒன்பான்கோள் வலி குணம் பொய் தீங்கே
நாளொடு கோடல் கொட்டாட்டு என நவில் நாமம் பத்தாம்
தோள் புயம் செங்கை நாமம் துளும்பலே திமிறல் துள்ளல்
வேள் மதவேள் குலாலன் வெறியாட்டாளன் செவ்வேள் ஆம்
#34
விறல் உயர்ந்திடும் ளகாரவெதுகையின் விரிக்கும் செய்யுள்
குறைவுஇல் எண்ணான்கது என்ன உலகினில் கூறச் செய்தான்
மறைகள் நான்கு ஏத்தும் செவ்வேள் மலரடி சென்னி சூட்டும்
அறவர் வாழ் செந்தில் மேவும் அருமருந்தையன்தானே
** ளகரவெதுகை முற்றும்
@18 றகரவெதுகை
#1
குரங்கி மென் குழவி பூத்த கொழும் சடை வள்ளல் தந்த
பரம்பரன் திணி தோள் கந்தன் பனி மலர்க் கடவுள் நான்கு
சிரம் துளங்கிடப் புடைத்த சேவகன் தாளைப் போற்றி
உரம் கிளர்ந்திடும் றகாரவெதுகை யாப்பினை உரைப்பாம்
#2
நறவமே அனிச்சம் தேறல் ஞாழல் குங்குமம் தளிர்ப் பேர்
புறவம் ஓர் ஊர் புள் காடே முல்லையின் நிலனும் போற்றும்
துறவு யோகம் கூட்டப்பேர் துற்கையே பூரம் சூலி
பிறவு எனும் நாமம் கட்டும் பெட்டியும் வசியும் ஆமே
#3
அறவரே உரியோர் யோகர் ஆற்பதம் நீழல் தேனீ
குறவரே வேடர் குன்றோர் குறி கோசம் குறிப்பு இலக்கு ஆம்
மறவரே வயவர் வீரர் குறவர்க்கும் வழுத்தற்பாற்றே
பறவை போழ்து இறகே பக்கி பாறல் ஏறுடனே ஓட்டம்
#4
உறவியே ஊற்று எறும்போடு உயிர் உலைக்களம் கிளைப் பேர்
பிறவினையதுவே காமம் பாவமும் பேசற்பாற்றே
உறழ்வு இடையீடே காலம் உவமானம் பகை புணர்ப்பு ஆம்
இறவை புட்டில் பேர் ஏணி எறிதலே செகுத்தல் வீசல்
#5
குறளி பேய் எட்டாண்டில்பெண் குறள் பூதம் வாமனப்பேர்
பிறழ்வு அவிர்தல் பேரோடே பெயர்தல் என்று இருபேர் பேசும்
குறடு திண்பலகை திண்ணை கொல்பற்றும்கருவி ஒன்றாம்
கறடு செம்பொன் பேர் தாளில் காட்டுறு பரடும் ஆமே
#6
விறல் வலி பெருமை கொற்றம் வெறுப்பு வேண்டாமை கோபம்
அறல் அரிமணல் விழாவே ஆன்ற நீர்த்திரையே நீர் ஆம்
இறல் ஒரு மீன் இற்றல் பேர் இறால் ஆரல் தேன்கூடு என்ப
மறல் பகை சமர் பிணக்கு மறலி சாதல் குற்றப்பேர்
#7
இறும்பூதே அதிசயம் தூறு எழில் மலை தகைமை காடு ஆம்
மறம் கொலை தோலாவீரம் வன் பிணக்கொடு சினப்பேர்
அறம் துறவறமே இல்லார்அறமே கையறமே முப்பேர்
முறம் புகல் விசாகம் முற்றில் முறுவலே சிரித்தல் பல் ஆம்
#8
ஆறே செல்மார்க்கம் ஓணம் அறைந்திடும் நதியே முப்பேர்
சாறே கள்ளொடும் மரத்தின் தாழ்குலை விழவும் செப்பும்
சேறே தித்திப்புக் கும்பி திகழ் சாரம் கள்ளே நாற்பேர்
ஏறே செல்வம் மாற்சாலம் எருதுடன் முதல்நாள் ஆமே
#9
ஊறே தீமைப் பேர் தீண்டல் உறு கொலை இடையூறு என்ப
பாறே நாவாய் நிமித்தம் பருந்து நல் திலதம் காற்று ஆம்
நாறே நெல்நாற்றே நாறல் நாற்றமே நாறல் தோன்றல்
தாறே வில்குதையே மட்டே தாழ்மரக்குலை முள்கோல் பேர்
#10
குறை நவை நிரப்புக் கொள்ளை குடியிறை குறைதல் ஐம்பேர்
பொறை மலை துறுகல் பூமி பொறை பாரம் சுமை கருப்பம்
கறை உரவு இறை இறுத்தல் கறுப்புடன் இரத்தம் குற்றம்
மறை மறை கேடகப்பேர் வழங்கு இரகசியமும் ஆமே
#11
அறை திரை முழைஞ்சே ஓதல் அடித்தல் சிற்றில் பறைப் பேர்
நிறை துலாம் நீர்ச்சால் பாசி நிலைமையே அறிவே ஐம்பேர்
சிறை அரண் பக்கம் புள்ளின்சிறகு வேறிடமே நாற்பேர்
முறை குணம் கோசமே ஊழ் முறைமை என்று ஓதல் பேரே
#12
எற்றலே குத்தல் வெட்டல் எய்து உயிர்க்கொலைசெய்தல் பேர்
குற்றலே குறல் பறித்தல் நெரித்தலும் கூறல் பேரே
ஒற்றலே உடுத்தல் மொத்தல் குறிக்கொளல் உணர்தல் நீங்கல்
முற்றலே வளைதல் நாமம் மூப்புக் காழ்க்கோடலும் பேர்
#13
ஒற்றே மெய்யெழுத்துஒற்றின்பேர் ஒற்றுதல் அறிதல் ஒற்றல்
பற்றே அன்பொடு பற்றல் பேர் பற்றுளே தொழில்வினைப் பேர்
செற்றே ஒன்னலர்வெற்றிப் பேர் செறிவு எனும் முப்பேர் செப்பும்
விற்றே விற்பத்தி விள்ளல் வெறுப்பு என்ப நெருங்கல் சொம்பு ஆம்
#14
நெற்றியே படைவகுப்பும் நிகழ் நுதல் பேரும் வைக்கும்
கொற்றியே துர்க்கை வேந்தன் கோ இளங்கன்றும் கூறும்
பெற்றியே அடுக்குதல் பேர் பிறழும் நல் குணம் இரண்டாம்
முற்றிலே விசாகநாள் பேர் முறம் எனும் கருவியாமே
#15
அற்று என்ப பிறிது அசைச்சொல் அருவினை ஆற்றல் முப்பேர்
புற்று என்பது எழுத்துச் சென்னி வன்மீகப்பேரும் போற்றும்
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எறிதல் எத்தன்மைத்துஎன்றல்
மற்று என்ப வினைமாற்றோடே அசைநிலைப் பேரும் வைக்கும்
#16
உறையுள் ஊர்ப்பொதுவே நாடே உயர் மனை சயனம் நாற்பேர்
நறை எனும் நாமம் தேறல் நறுநாற்றம் உண் கள்ளே ஆம்
பறை முழைஞ்சுடனே மேளம் பகர்தல் புள்சிறகே நாற்பேர்
நிறைதலே கமம் உண்ணல் பேர் நிறம் என்ப மருமம் காந்தி
#17
உறுகண் நோய் பயத்தின் நாமம் மிடி துன்பம் ஓதும் நாற்பேர்
குறுகலே உறல் பற்றிட்டல் கூறலே விற்றல் பேசல்
துறுகலே கருப்பம் பாரம் சுருமை கற்பாறை நாற்பேர்
மறுகு உரை மறுகே வீதி மறலியே மயக்கம் கூற்று ஆம்
#18
வறுமையே மிடிமை துக்கம் வழுத்துறும் நுண்மை முப்பேர்
குறுமையே அற்பம் பாவம் குறுகல் என்று ஓதற்கும் பேர்
சிறுமையே மிடி நோய் நுட்பம் தேற்றம் உள்குறிப்பே ஞானம்
உறுவனே முனிசினன் பேர் ஒற்கலே இன்மை தேய்தல்
#19
அறுவாய் கார்த்திகைநாள் திங்கள் அறுகே புல் யாளி சிங்கம்
இறவேதான் இறவு இறக்கம் ஏற்றமே மிகுதி வெற்றி
தொறுவேதான் குழவி நாமம் சொல் விட்டில் அடிமை முப்பேர்
செறுவே கோபம் வயல் பேர் சிறுவரை இலேசம் பொற்றை
#20
ஈறே உப்பளம் கடைப் பேர் இறுதி பெய் கடை உயர்ச்சி
நூறே எண் ஒலி பொடித்தல் நொறில் வில் நாண் நுடக்கமும் பேர்
சோறே வெண் மூரல் நாமம் பரணிநாள் இனிமை சொல்லும்
கூறே பங்கிடுதல் மாற்றம் கொறியே மேடம் கொறித்தல்
#21
அற்பமே சிறுமை நாய் ஆம் ஆற்றாற்றல் தலைக்கடைப் பேர்
கற்பமே சுவர்க்கம் வெய்ய கமலன்நாள் அதுவும் வைக்கும்
சற்பமே விரைவு பாம்பு வரையாடுதானே முப்பேர்
பொற்பு எனும் பேர் வனப்புப் பொலிவோடு ஒப்பனை என்றாமே
#22
அற்புதம் இரக்கச்சொல்லும் அதிசயம்தானே செப்பும்
விற்பு வெற்றிப் பேர் வெம் போர் வெருவல் செற்றுடன் பெருக்கம்
கற்பு அருள் உயர்த்தமேடை கடி மதிளுடன் கற்பு ஆகும்
அற்பசி முதல்நாள் திங்கள் ஆற்பே பேரொலி சிரித்தல்
#23
உற்கை விண்வீழும் கொள்ளி உடு எனும் இரண்டே நாமம்
சற்கரை கரும்பின்கட்டி சாற்றிடும் நெருக்கமும் பேர்
பொற்கணி இயக்கர்கோமான் பூடு ஒன்றோடு ஆந்தைக்கும் பேர்
பிற்கு எனும் நாமம்தானே மழையுடன் பின்னும் ஆமே
#24
ஆற்பு அரவம் துளிப் பேர் ஆகவம் தூளிக்கும் பேர்
மாற்கமே சமையம் வீதி மறுதலை வழி சமூலம்
வேற்கரன் வெறியாட்டாளன் மிளிர் இலை வேல்பிரான் ஆம்
காற்பாசம் இழை பருத்தி கறி மிளகுடன் கடித்தல்
#25
வறுகலம் கானல் யாழ் ஆம் மறு மறுத்தல் குற்றப்பேர்
அறுபதம் முரலும் வண்டோடு அறை கையாந்தகரைக்கும் பேர்
தறுகண் உள்ளடங்கிலாமை மறம் செயிர்த்தல் பேர் சாற்றும்
சிறுமூலம் பூண்டு காமன் திப்பிலி முப்பேர் ஆமே
#26
உறுப்பே பாலைத்திறப்பண்ணுடன் அங்கம் மிகுதி வையம்
இறப்பே சா மிகுதி போக்கு ஆம் எறுழ் வலியுடன் தண்டப்பேர்
பிறப்பே பேர்தல் வெற்றிப் பேர் பிறந்திடல் செறிவே நாற்பேர்
இறுத்தல் பேச்சொடித்தல் சோம்போடு இறை இறுத்திடலே தங்கல்
#27
அற்கமே நீர்க்காக்கைப் பேர் அலர் பொதுள் எருக்கும் பேசும்
வற்கமே குதிரைவாயின்வடம் மூங்கில் வழுவில் கூட்டம்
சிற்பியே உவச்சர் ஓவர் திறன் திறம் காரணப்பேர்
துற்றலே நெருங்கல் துய்த்தல் சூறையே நுதல் சுழல் கால்
#28
பறழ் தவழ்சாதிகன்று பற்றார் அன்புடையோர் தெவ்வர்
புறம் இடம் முதுகு வீரம் பொற்றை கான் சிறுகுன்றே ஆம்
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர்
புறணியே குறிஞ்சி முல்லை நிலனொடு புறம்பே தோல் ஆம்
#29
வெறுக்கை பொன் கனவே செல்வம் மேற்கோளே சனியன் பூட்கை
துறுக்கு உடம்புஅறுதல் நாமம் தோலுடன் பிணக்கும் சொல்லும்
குறிக்கோள் ஒற்றுமையே தேற்றம் கணித்தற்கும் கூறற்பாற்றாம்
அறிக்கையே பற்றிவைத்தல் அறிவும் என்று அறையலாமே
#30
முறி என்ப முறியல் தீட்டு முறியோலை தளிரே முப்பேர்
வறிது என்ப தருகலின்பேர் சிறுத்தலும் அதன்பொருட்டாம்
கிறி என்ப வழி பொய் புன்மை கிறவுஞ்சம் வரை தீ ஓர் புள்
நெறி என்ப நடவை மோக்கம் நிற்வாணம் கெதி ஓர் தீக்கை
#31
அற்காமை நிலையாமைப் பேர் அறிவின்மையதற்கும் கூறும்
விற்கோடி இராமன் தந்த மிளிர் தீர்த்தம் ஓர் கணிப்பு ஆம்
தற்கோலம் கமழ் அடைக்காய் சாற்று ஒரு மருந்தும் காட்டும்
வற்காலி உயரும் பெற்றம் வருடைக்கும் வகுத்ததாமே
#32
பிறங்கலே மிகுதி வெற்புப் பெருமையே நிவப்பே துக்கம்
நிறம் கிளர் பிறையினோடே இறை நிறைவுடன் எண்பேராம்
கறங்கல் பேய் சுழற்சி ஆர்ப்பு ஆம் கறுத்தலே கருமை கோபம்
பிறங்கடை வழியின் நாமம் பிள்ளையும் அசலும் ஆமே
#33
இறும்பே செம்மலர் குறுங்காடு எழில் கிரி இசைக்கும் வண்டு
நறும் குழை காந்தள் செம்பூ நல் செழுந்தகைமை ஏழ்பேர்
புறம்பணை குறிஞ்சி முல்லை நிலன் இருபேரும் போற்றும்
குறும்பொறை குன்றே காடே குறிஞ்சி நன்னிலத்து ஊர் முப்பேர்
#34
இறையே வீட்டுஇறப்பு வேந்தன் இறை இறுத்திடல் விதாதாப்
பிறை வேணி சிறகு தங்கல் பெரியோர் கை வரையே சென்னி
நிறைகாலவரவே அற்பம் நிகழ் கடன் பன்மூன்றேபேர்
துறையே நீர்த்துறையும் ஆயத்துறை செய்யுள்துறையும் ஆமே
#35
அற்றமே சற்றே நாயே அவகாசம் மறைவு சோர்வோடு
இற்றிலா துடியே அற்றல் இயம்புறும் உண்மை ஏழ்பேர்
செற்றமே பகைமை கோபம் சிறப்பு என்ப மிகுதி சீர்மை
பெற்றமே பசுவின் நாமம் கொழு விடையதற்கும் பேரே
#36
தோற்றமே செனனம் ஊற்றம் சொல்மாலை முளைத்தல் சீர்த்தி
ஏற்றமார் விளக்கம்காணல் மிகுதி என்று இசைக்கும் எண்பேர்
ஊற்றமே அறிவொடு ஆற்றல் சலிப்பின்றி நிற்றல் ஓதும்
கூற்று உரை இயமன் பேராம் கொற்றம் மன் இயல் வெற்றிப் பேர்
#37
ஊற்றே நோவு உறவி தீமை உற்றறிபுலன் ஊற்றுக்கோல்
மாற்றிலா இடையூறு என்ன வழுத்திய நாமம் ஆறாம்
தோற்றலே புறந்தரல் பேர் சொல் புகழ் வலியே தோற்றம்
போற்றலே வணங்கல் ஓம்பல் புல் பதி தருப்பை பெண்ணை
#38
குறும்பு பாலைநிலப்பேர் குறுநிலமன்னர் தம்மோடு
இறும்பு போர்புரிதல் ஊர் என்று இயம்பிய நாமம் ஐந்தாம்
பிறந்தை உற்பவமே பாவம் பிற்பலம் அரசு திப்பிலி
பிறங்குடல் தழும்பின் நாமம் பெருமை என்று இரண்டுமாமே
#39
வெறியே நாற்றம் கலக்கம் வெறியாடல் வட்டம் வெம்பே
அறிமேடம் வெருவல் மூங்கில் அணங்கு ஆடல் மறவி தீம் கள்
பொறியார் மென் சிறை வண்டு என்னப் புகலுறு பேர் ஈராறாம்
மறியே மான் மேடம் நிற்றல் வலிமுகம் யானை ஐம்பேர்
#40
ஆற்றலே வலி முயற்சி அதிகமே நிலைமை ஞானம்
போற்றல் ஆர்ப்பரித்தல் செய்தல் பொறை ஆர்தல் இவை ஒன்பான்பேர்
ஏற்றலே எழுப்பல் கோடல் எதிர்ந்துபோர்செய்தல் ஏற்றல்
போற்றிடல் இழிவினோடு மிகுதியும் புகல் ஏழ்பேரே
#41
பொறி என்ப வரி எழுத்துப் புள்ளி ஐம்புலன் தீ செய்யோள்
நெறி துன்று மதிலுறுப்பு நீள் நிதி வினை வெறுக்கை
பிறி செங்கை வரை தழும்போடு இலாஞ்சனம் பொறித்தல் பெய் நீர்
அறிகின்ற மலைப்பே நாவாய் அபிதானம் ஈரெட்டாமே
#42
உறையே மைத் துளி விலங்கு ஊண் உறைத்தல் ஓர் இலக்கம் நீளம்
அறை வாணாள் படைபெய்கூடோடு அட்ட பால் புரை நல் ஆடைக்
கறை அகற்று உவர்நீர் தூய் வெண்கலம் பொருள் மருந்து இடைச்சொல்
முறையுடன் ஒழுகல் என்ன மொழியும் ஈரேழ்பேராமே
#43
பொற்பு உயர்ந்திடும் றகாரவெதுகையின் போற்றும் செய்யுள்
சொல் பெற ஒன்றோடே நாற்பான் எனத் துலங்கச் செய்தான்
வெற்பு உறழ் நெடும் கலாபச் சிகி இவர் விசாகன் பொன் தாள்
அல் பகல் வணங்கும் செந்தில் அருமருந்தையன்தானே
** றகரவெதுகை முற்றும்
@19 னகரவெதுகை
#1
வரை கிளர் அவுண வாரி சுவறிட வடிவேல் தொட்டுத்
திரை கிளர் ஒலியின் எற்றும் தேவர்தம் சிறையை மீட்ட
நிரை கிளர் ஆறிரண்டு தோளவன் நிறத் தாள் போற்றி
உரை கிளர் னகாரமாயவெதுகைத் தூக்கு ஓதலுற்றாம்
#2
நனவு என்ப கருத்து உணர்ச்சி நவிற்றிடும் துணிவு என்றே பேர்
கனவு என்ப துயிலே மையல் கனலி தீ இரவி பன்றி
மனவு என்ப நினைத்தல் ஆடை வயங்கும் நல் மணி சங்கு அக்கு ஆம்
வினவு என்ப விளம்பல் கூரும் வினா எனும் இருபேராமே
#3
முனி சினம் யானைக்கன்றோடு அகத்தி வில் முனிவன் ஐம்பேர்
தனி தமி ஒப்பின்மைப் பேர் சார் கோவில் தூறல் நாற்பேர்
துனி சினம் புலவி நீட்டம் துன்பம் நோய் வாட்கோரைப் பேர்
நனி மிகுதி நெருக்கம் பெருமை இ முப்பேர் நாட்டும்
#4
வினை இருவினையே கன்மம் மிகு பூசல் குயிற்றல் நாற்பேர்
முனை நுனி படை பகைப் பேர் இறைமையும் வெறுப்பும் ஓதும்
சினை அரும்பே கருப்பம் திகழ் உறுப்பொடு கொம்பு ஆகும்
வனைதலே அணிதல் பூசல் மன்றல் ஒப்பனை நாற்பேரே
#5
பனி என்ப குளிர் நடுக்கம் பனி அச்சம் அதி துன்பப்பேர்
நுனி என்ப நுதி நுண்மைப் பேர் நூற்றுறு பஞ்சும் ஆகும்
சனி மந்தன் மகநாள் பூரம் தனஞ்செயன் கால் தீ பார்த்தன்
புனிதம் தூஉப் புணர்தநாள் ஆம் புன்கண் நோய் மெலிவு துன்பம்
#6
நனை மலர் முகுளே வேள்வி நான்முகன் அருகன் கஞ்சன்
அனை உதவுறு தாய் தோழி அனித்தம் சந்ததம் பொய் சாந்து ஆம்
கனை ஒலி செறிவு இரண்டாம் கான் என்ப மணம் காடு ஆகும்
வினைஞரே களைஞர் கூத்தர் விளம்பு கம்மியர் என்றாமே
#7
வினதையே அயோத்தி நாமம் பறவை வேந்தன் தாய் ஆகும்
பனுவலே கிளவி நூல் பேர் பகர் செய்யுள்தனக்கும் பன்னும்
தனு உடல் காலநுட்பம் தரிக்கும் வில் ஓர் அசைப் பேர்
மனு ஒரு வேந்தன் சொல்லா மந்திரம் மனிதற்கும் பேர்
#8
கூனலே பணிலம் ஆந்தை கோண் பிறை பருந்தே ஐம்பேர்
பானல் கள் பழனம் நெய்தல் வெற்றிலை பரவை வாசி
மானலே மயக்கம் ஒப்பு வரும் இலச்சைப் பேர் வைக்கும்
ஏனல் நெற்கதிரே ஆதி புனம் தினை இசை முப்பேரே
#9
கானமே இசை கான் வானம்பாடி தேர் மேசை காட்டும்
பீனமே பெருமை பாசி பீடுடன் பேடி ஊர் ஆம்
ஆனகம் தேவதாருப் படகம் துந்துமியும் அப் பேர்
ஞானமே அறிவு கல்வி நனந்தலை நடு உச்சப்பேர்
#10
ஈனமே நடவை தேய்தல் இழிவுடன் முயலே நாற்பேர்
நானமே பூசும் பூச்சு நாமம் கத்தூரிக்கும்பேர்
நூனமே ஈனம் குன்றல் நுவன்ற நிச்சயம் எண்ணெய்ப் பேர்
பானமே குடித்தல் கள் ஆம் பனித்தல் வான்பொழிதல் ஈதல்
#11
ஆன் என்பது இடைச்சொல் ஆ ஆம் அனிலன் ஓர் அவுணன் காற்று ஆம்
வான் என்ப வினையின் எச்சம் வலி முகில் பெருமை விண் ஆம்
தேன் என்ப நறவும் வண்டும் தித்திப்பு என்று அறைதல் முப்பேர்
மீன் என்ப உடு மச்சப்பேர் வென்றி சீர் துர்க்கை வெற்றி
#12
அன்னமே கவரிமாவும் அடிசில் ஓர் புள்ளும் ஆகும்
கன்னமே செவி கதுப்புக் கன்னக்கோல் பொன்செய் தட்டார்
சின்னமே ஊதும் சின்னம் சிறுமை சில் வானம் முற்றில்
தன்னம் ஆன்கன்றே அற்பம் தானவன் அசுரன் திங்கள்
#13
முன்னலே நினைவு நெஞ்சம் முன்னம் சீக்கிரி பெண் அப் பேர்
துன்னலே செறிதல் சேர்தல் தோன்றி செங்காந்தள் நெல்லி
கன்னல் நாழிகை குடம் நாழிகைவட்டில் கரகம் இக்கு ஆம்
பன்னலே பருத்தி பேசல் பனுவல் பாச்செறிவும் ஆமே
#14
ஆனியே சேதம் மூலநாள் ஒரு மாதமும் பேர்
வானி சேனை மேற்கட்டி வார் துகில்கொடியே முப்பேர்
மோனியே மவுனி யோகி முன்பு ஆற்றல் பெருமை முன்பு ஆம்
கூனியே எட்டாண்டில்பெண் கோணல் கைதைக்கும் பேரே
#15
மோனையே யாப்புறுப்பு முனையும் என்று அறையற்பாலாம்
சேனையே படைக்கலப்பேர் வரூதினி எனவும் செப்பும்
சோனையே விடாமழைப் பேர் திருவோணநாட்கும் சொல்லும்
மானவர் வீரர் மாந்தர் வானவன் பிரமன் சேரன்
#16
மன் என்ப மிகுதி வேந்தன் வழுத்தும் ஓர் அசை நிவப்பு ஆம்
பொன் என்ப பொலிவு இரும்பு பொன் திரு வியாழம் பொற்பு ஆம்
கொன் என்ப பெருமை காலம் பயம் பயனிலாமை கூறும்
தென் என்ப வனப்பு இசைப் பேர் தெற்கும் ஆம் கற்பு இதாமே
#17
மன்னனே வியாழம் வேந்தன் வயங்கு முத்திரட்டாதிப் பேர்
கின்னரம் நீர்ப்புள் யாழும் கின்னரற்கும் பேர் வைக்கும்
பின்னகம் கொண்டை பின்னல் பின்னை மால்தேவி பின்றை
நன்னர் மாட்சிமையே நன்மை நன்மை உத்தமமே இன்பம்
#18
வன்னி தீ பிரமசாரி வண் கிளி சமியே பன்றி
சென்னியர் பாணர் கூத்தர் தேனுவே களவொடு ஆன் பேர்
அன்னியம் குயில் அசல் பேர் ஆனமே சிவிகை நாவாய்
சொன்னலே இரும்பின் நாமம் சோளம் என்பனவும் ஆமே
#19
அன்றில் ஓர் புள் மூலம்நாள் ஆனியம் பொழுதே நாள் ஆம்
குன்று ஒளிர் சதையநாளே குறையே வேதண்டம் முப்பேர்
நொன்றலே பொறுமை தள்ளல் நிலைநிறுத்தல் நுவல் பேர்
மன்றலே பரிமளப்பேர் ஒப்பனை வரு கல்லியாணம்
#20
அனந்தமே பொருளிலாமை அளவின்மை பொன் ஆகாயம்
அனந்தன் மால் அரன் ஓர் பாந்தள் அருகன் என்று ஓதல் நாற்பேர்
அனந்தை ஓர் சத்தி பூமி அனுக்கமே பயம் சோம்பு என்றாம்
அனங்கம் மல்லிகை இருவாட்சி அனலோன் தீ அரனும் ஆமே
#21
முன் என்ப பூருவப்பேர் மொழியும் ஆக்கிரமும் பேசும்
புன்மையே கீழ்மையின்பேர் நிறத்தில் ஒன்று எனவும் போற்றும்
தொன்மையே பான்மை தன்மை சொற்ற நற்குணம் எனும் பேர்
பன்னகாசனன் வீ வேந்தன் பரமேட்டிதானும் ஆமே
#22
வனம் அப்புத் துழாயே சோலை வனப்புப் புற்று ஈமங்காடு ஆம்
கனவட்டம் பருதி வாசி கன்றுதல் ஈதல் கன்றல்
பனை நுட்பம் பெருமை யானை பை இதழ் ஓர் மரப்பேர்
மனை கட்டும் இல்லே இல்லாள் வான்மையே வெள்ளை தூய்மை
#23
மானே ரேவதிநாள் மேனி மகரமோடு இருமை பெண் மான்
கோனே ஆற்றல் சுவாமி பெருமை கோக் கொழுநற்கும் பேர்
ஊனே செம்புலவு நெல் பேர் உன்மத்தம் மயக்கு ஊமத்தை
நோனார் நோற்றிலர் மாற்றார் ஆம் நோன்மை நோன்பு இருமை ஆற்றல்
#24
மனோகரம் அழகின் நாமம் மகிழ்ச்சியோடு இன்பமும் பேர்
பினாகியே அறுகு ஓர் ஆறே பிஞ்ஞகன்தானே முப்பேர்
எனாதி மஞ்சிகன் அமைச்சன் தளநாதன் மறவன் என்றாம்
வினாயகன் அருகன் புத்தன் வெம் கரிமுகத்தோன் ஆமே
#25
ஈன்றவன் பிரமன் பெற்றோன் என்பே புல் எலும்பு இரண்டாம்
மான்றலே மயக்கம் காற்றே வரு குற்றம் பெருமை நாற்பேர்
தோன்றல் சேய் முலையே நாதன் தொல் முல்லைத்தலைவற்கும் பேர்
ஆன்றலே மிகுதியின் பேர் அகலம் மாட்சிமை என்றாமே
#26
அனகனே பவங்கள்நீத்தோன் அபையனே அருகன் முப்பேர்
சனகன் ஓர் முனி ஓர் வேந்தன் சானுக் கல் புறம் முழந்தாள்
பனகமே மிகுதி குன்றம் பலமுறும் தருப் பாந்தள் பேர்
கனகன் ஓர் அவுணன் புட்பகவிமானன் விடையோன் ஆமே
#27
கனமே கல் செறிவு வட்டம் கார் முத்தக் காசு பாரம்
தினம் மேவு பொன் உறுப்புத் திரட்சி சீர்மை பத்தேபேர்
தனமே வெம் முலை ஆன்கன்றே சாற்றும் உத்திரமே பொன் ஆம்
இனமே நன் கிளை அமைச்சு ஆம் ஏனையே ஒழிவு இடைச்சொல்
#28
கானலே நிறம் பேய்த்தேர் செங்கதிர்க்கிரணம் கடல் சார்
வானம் நல் கரை தேம் சோலை மயானம் உப்பளம் ஆம் ஏழ்பேர்
சானகி வேயே சீதை தானை தூசனி கங்கை வேல்
ஏனம் மான் பன்றியின்பேர் என்றாழ் காற்று இரவி வெய்யில்
#29
மானமே மகிழ்வு இலச்சை வலி குற்றம் பெருமை தொன்மை
ஈனம்இல் அளவினோடே மான்மதம் என எண்பேரே
தானமே இடம் சுவர்க்கம் தரு கொடை மதம் நீராட்டு ஆம்
வானம் ஆகாயம் அங்கி மழை உலர்மரமும் ஆமே
#30
கன்னியே தவப்பெண் துர்க்கை கன்னிகை இராசி ஆறொன்று
உன்னுறும் இளமை நாமம் அழிவின்மை ஒத்து ஏழ்பேரே
சென்னியே பாணன் சோழன் திகழ் சிரம் அசுவதிப் பேர்
நன்னிலை நோற்கும் நோன்பும் நவிற்றும் சுக்கிலமும் ஆமே
#31
மன்றமே தெருட்சி மெய்ம்மை வாசம் அம்பலமே வீதி
நின்ற கல்யாணத்தோடு வெளி என நிகழ்த்தும் ஏழ்பேர்
கன்று கைவளையே அற்பம் காட்டிய இளமை குட்டி
நன்றே உத்தமத்தின் நாமம் நல்லறம்தானும் ஆமே
#32
வடிவு உயர்ந்திடு னகாரவெதுகையின் வழுத்தும் செய்யுள்
படி புகழ் ஒன்றொடே முப்பான் எனப் பகரச் செய்தான்
துடி இடை மற மின்னாட்குத் தூய் மலர்க் கணியாய் நின்றோன்
அடிஇணை இறைஞ்சும் செந்தில் அருமருந்தையன்தானே
#33
இருமை ஒன்றிய திருச்செந்தில் முருகோனை ஏத்தும்
அருமருந்தையன் சொற்ற அரும்பொருள்விளக்கம் கற்றார்
பொரு முரண் தெறப் படுத்தும் புலமை நால் திறம் விளக்கும்
திரு மருங்குறப் பொருத்தும் செருக்குடன் இருப்பர் தாமே
** னகரவெதுகை முற்றும்
** அரும்பொருள்விளக்க நிகண்டு முற்றும்
** அரும்பொருள் விளக்க நிகண்டு அனுபந்தம்
@20 பிரதிபேதம் - ககர வெதுகை
#1
பகவதி உமையே துர்க்கை தருமதேவதை பேர் பன்னும்
அகவலே அழைத்தல் ஆடல் ஆன்ற ஆசிரிய முப்பேர்
தகவு அறிவே ஒழுக்கம் தெளிவு சற்குணமே சாற்றும்
முகவு மாளிகை முகப்பே மொள்ளுதல் காந்திக்கும் பேர்
#2
உகம் என்ப உரகம் பூமி ஊழியே முதலே நாற்பேர்
சுகம் என்ப கிளியே நன்மை சுவர்க்கம் இன்பம் சும்மாடே
முகம் என்பது இடமே துண்டம் மோகமே மயக்கம் காதல்
நுகம் என்ப மகநாள் சோதிநாள் நுகத்தாணி முப்பேர்
#3
அகலுளே பெருமை நாடு ஊர் அகலம் என்று ஓதல் நாற்பேர்
இகல் வலி பகை போர் மேவல் இகுளையே தோழி நட்பு ஆம்
புகல் உடல் குதிர் சொல் வெற்றி பொக்கமே மிகுதி பொய் ஆம்
நகல் ஒளி சிரித்தலின் பேர் நகமே வெற்பு உகிர் மரப்பேர்
#4
அகம் மான் மா மனையுள் உள்ளம் அகலம் வெற்புடன் பாவம்
சகமே மானிலமே பாதி தகருடன் சட்டை நாற்பேர்
பகமே பெண்ணின்சின்னப்பேர் வாலமும் அதுவே பன்னும்
மகமே ஓர் நாள் யாகப்பேர் வை கூர்மை வைக்கோல் பைம்புல்
#5
அகடு என்ப உதரம் நாப்பண் ஆன்ற தீங்குரையே முப்பேர்
சகடு என்ப பொய்ம்மை யோகம் சாகாடே போர்ப்பறைப் பேர்
பகடு என்ப கடாச் சேத் தந்தி பஃறியே பெருமை ஐம்பேர்
முகடு என்ப கொடி விடங்கம் மோக்கமே தீர்தல் முத்தி
#6
அகழ் என்ப அகழி தொட்டல் அகிலமே சகம் அனைத்தாம்
பகழி ஆசுகம் குழிப் பேர் பகண்டை சில்லைப்புள் சிவேதை
புகழ் என்ப அகத்தி வாகை போற்றுறும் சீர்த்தி முப்பேர்
சிகழிகை பயிர் முடிப் பேர் வாசிகை திகழ் தேம் மாலை
#7
ஆக்கையே உடலத்தின் பேர் அயில் கணை வீக்கும் பாசம்
சேக்கையே முலை தழும்பு திகழ் பாயல் கடகராசி
சாக்கையே நிமித்திகன் பேர் பேய் உண்டி அதற்கே சாற்றும்
தீக்கையோன் சிவனே ஆசான் சிகண்டி கேகயம் அலிப் பேர்
#8
ஆக்கமே பொன் செல்வம் பேறு அதிகம் பூ மின் மெய் கேடு ஆம்
தூக்கமே நிவப்புத் தொங்கல் துயில் எனும் முப்பேர் செப்பும்
பூக்கமே வலியின் நாமம் புரியுடன் கழுகும் போற்றும்
நோக்கமே அழகு பார்வை நொய்திலா உயர்ச்சிக்கும் பேர்
#9
அகரம் ஓர் எழுத்தே சேரி அகப்பா வேணகையுள்மேடை
மகரமே இராசி காதல் மலர்த்தூளே சுறவே நாற்பேர்
தகரமே மயிர்ச்சாந்து ஈயம் தகரம் தண் மணம் புங்கின் பேர்
ஒகரம் ஓங்காரம் மஞ்ஞை ஊகித்தல் நினைத்தல் ஓர்ப்பு ஆம்
#10
தகையே ஏர் கவசம் பண்பே தளர்வு அன்பே பெருமை நீளம்
சிகையே கீழ்மக்கள் பாறு சென்னியில்கருவிக்கும் பேர்
தொகையே ஆசிரியம் கூட்டம் சோகம் மால் கவான் திரட்சி
நகையே பல் ஒளி மலர்ச்சி நகையுடன் இகழ்ச்சி ஐம்பேர்
#11
அகளமே மிடா ஆழப்பேர் ஆகவம் புவி போர் வாசி
துகள் என்ப தூளே குற்றம் தொக்கே கூட்டம் துவக்கு ஆம்
சகளி கூக்கருமுகைப் பேர் சகோரம் ஓர் புள் போத்து ஆந்தை
உகளமே இரண்டு இடப்பேர் ஊக்கலே நினைத்தல் ஊர்தல்
#12
மகடு பெண் குழலிசைப் பேர் மகன் மைந்தன் புருடன் மாக்கள்
தகடு இலை ஐமைக்கும் பேர் தக்கை ஓர் பறையே தெப்பம்
முகடி என்பது மூதேவி முழுமகன்தனக்கும் பேசும்
மகுடமே முடியுறுப்பு ஆம் மவுலி என்று இரண்டும் ஆமே
#13
தகைமையே குணமே ஆட்சி சான்றாண்மை எனவே முப்பேர்
புகை என்ப தூமம் காதம் பூக்குதல் நினைத்தல் தோன்றல்
திகை திசை சுணங்கின் நாமம் சேகு என்ப வயிரம் மாசு ஆம்
பகை இகல் அடித்தல் சாதல் பகர்தலே விற்றல் பேசல்
#14
அக்கு எனும் நாமம் சங்கம் அம்பகம் விடைமுரிப்பு ஆம்
நக்கனே விடையோன் பிண்டி நாதன் நிர்வாணிக்கும் பேர்
பக்கணம் வேடர்வீதி பட்டணம் சிற்றூர் முப்பேர்
தக்கன் எண் பாம்பில் ஒன்றும் சரோருகன் மகவும் ஆமே
#15
எக்கலே ஊர்தியேறல் சொரிதல் என்று இரண்டும் ஏற்கும்
சிக்கலே இளைத்தலின் பேர் கிடைத்தலும் தடையும் செப்பும்
ஒக்கலே குடி சுற்றப்பேர் ஒப்புறல் அதுவும் போற்றும்
முக்கோல் அந்தணர்தம்கைக்கோல் சிராவணநாள் மொழிப் பேர்
#16
ஆகமே காயம் மார்பம் அகர் பெரு மரம் அகில் பேர்
யோகமே தியானம் கூட்டம் உச்சாயம் போர்க்கு உபாயம்
சாகமே தாழை தேனீ தேக்கு சாகினி வெள்ளாடு ஆம்
காகமே அரிட்டம் கீரி கற்பகம் விடம் நாற்பேரே
#17
மேகராகப் பேர் ஓர் பண் மிளிர் சிறுகீரைக்கும் பேர்
மாகதர் ஆடல்பாடல்வல்லோர் மற்றொருதேயத்தோர்
கேகயம் அசுணம் மஞ்ஞை கிளர்ந்தபாட்டு ஓர் தேயம் வில்
பாகனே வலவன் புந்தி பக்கியே குதிரை பல் புள்
#18
வேகமே அகறல் கோபம் விரைவுடன் உடம்பே கீழ் ஆம்
பூகமே திரட்சி கூந்தல் பூகம் பூங்கமுகும் போற்றும்
கோகமே அற்பம் நேமிக் குருகு என்றும் கூறற்பாலாம்
மாகமே படையெழுச்சி வான் தலை திரு வாழ்வு ஐம்பேர்
#19
நோக்கலே காத்தலின் பேர் காணலும் நுவலற்பாற்றே
பாக்கு இடைச்சொல் துவர்க்காய் எதிர்காலப்பண்பே முப்பேர்
போக்கு உரை நடத்தல் குற்றம் பொய் பதடிப் பேர் என்ப
மீக்கோள் ஏறுதலின் நாமம் மேற்போர்வை பொலிவும் ஆமே
#20
ஆகரம் கடலே ஆகம் ஆர்ந்திடும் உணவே முப்பேர்
சீகரம் கரகம் வீசு திவலை வெண் கவரிக்கும் பேர்
சாகரம் துயில்தணத்தல் தண் கடல் எனவும் சாற்றும்
சேகரம் சிகார் தேமா செம்பொன் மா மவுலிக்கும் பேர்
#21
சாகினி சேம்பு சாகம் சகி என்ப பொறை சேடிப் பேர்
போகில் கொப்பூழ் பூமொட்டுப் புள்பொது எனவும் போற்றும்
கோகிலம் உள்துளைப் பேர் குயில் பல்லி குரக்கும் செப்பும்
போகி இந்திரனே பாந்தள் புகுதியே வருவாய் வட்டை
#22
அகறலே குதித்தல் ஓர்ப்புக் கழிவுடன் அகலம் நாற்பேர்
சிகரி கோபுரமே நாரை சீர் எலி வரை கிரீடம்
இகரம் ஓர் எழுத்தே சந்தம் ஏகலே போதல் நாவாய்
ககனம் விண் படை கான் பல் புள் ககமே வெம் கணை புள் ஆமே
#23
இக்கு என்ப கரும்பின் நாமம் இரதம் ஓர் கள்ளுக்கும் பேர்
குக்குடம் கோழியின் பேர் சிறகுடைப் பாந்தள் கூறும்
சிக்கமே குடுமி உச்சம் சிறை உறி ஓர் புள் சீப்பு ஆம்
சுக்கையே உடு தேம் மாலை சுகியே புள் சுகம் ஆமே
#24
நக்கலே ஒளியே சொன்றி நகைத்திடலுடன் உண்டல் பேர்
மொக்குளே புற்புதப்பேர் குமிழ்ப்புப் பூமுகை என்று ஆகும்
கைக்கிளை யாழ்நரம்பு ஓர் பா ஒருதலைக்காமப்பேர்
வக்கிரம் கொடுமை மீளல் மடங்கல் போய் நிமிர்தல் வட்டம்
#25
மகிழ்நனே கொழுநன் நாமம் மருதத்தின்தலைவன் வைக்கும்
சகுனமே கிழங்கு நாரை சாற்றிய நிமித்தம் புள் பேர்
எகினமே புளிமா நாயே கவரிமா வனப்புள் நீர்நாய்
சகுனி புள்நிமித்தம்பார்ப்போன் சகுந்தம் மீன்பொதுப் புள் பூகம்
#26
அகி அரா இரும்பின் நாமம் ஆகாரம் வடிவம் நெய் ஊண்
திகிரியே வட்டம் ஆழி தேருருள் தேர் யாழ் வெற்பு ஆம்
துகிரிகை பூசும் சாந்தே சொற்ற சித்திரமே என்றாம்
நெகிழியே சிலம்பு தீயே நெருப்பு இலங்குறும் கொள்ளிப் பேர்
#27
துகிலிகை எழுதுகோலே சொல் துகில்கொடி எனும் பேர்
வகிர் வகிர்ந்திடலே வார் ஆம் வகுப்பு என்பது எழில் வர்க்கப்பேர்
சிகி பரிபுரமே மஞ்ஞை தீதுறு கேதுத் தீ ஆம்
சுகிருதம் அறம் நெய் நன்மை சுகன் முனி சொர்க்கத்துற்றோன்
#28
மேகலை உடுத்த ஆடை விளங்கு அரைப்பட்டிகைப் பேர்
பாகலே பலாவின் நாமம் பகர் காரவல்லிக்கும் பேர்
போகலே பொலிவு நீளம் அளவின்மை அதற்கே போற்றும்
சாகளம் தகரின் நாமம் சமர்செய்பூமிக்கும் பேரே
#29
வாகுவே எழில் தோள் காமம் மகிழே ஓர் மரம் களிப்பு
ஆகுவே எலி கொப்பூழும் ஆம் பெருச்சாளிக்கும் பேர்
காகுளி வில்பூட்டோசை களத்தொலி தவிசே முப்பேர்
ஆகுலம் ஒலி நடுக்கம் அகலிகை புவி ஓர் பெண் ஆம்
#30
வீக்கு என்ப விசித்தலின் பேர் மிகுதி ஓர் கணிப்பு ஆம்
தேக்கு என்ப கழுகு ஓர் தாரு திகழ் உளத் தெகிட்டற்கும் பேர்
தாக்கு என்ப சமரே வீரம் சாகையே சினை வேதப்பேர்
மேக்கு என்ப மேற்கே மேல் ஆம் மிகையே வேதனை துயில் பேர்
#31
மாகதி அதிக வேகம் அதிமதுரப்பேர் வைக்கும்
சாகசம் வழக்கம் வீரம் சத்துவம் களிறே நாற்பேர்
போகர் முனி வீரர் பேர் புணர்ப்பு உயர் விடரும் போற்றும்
** இந்த அடி இல்லை
#32
சகுலி மீன் ஒலி ஆம் காகோதரம் பாம்பு ஓர் புள் மோடின் பேர்
குகு மதிமறை இராவே குலவும் ஓர் நாடிக்கும் பேர்
புகுடியே அணிகலன் பேர் பொற்பு உயர் புரூரும் போற்றும்
வெகுளியே அடங்காமைப் பேர் வெம் சினம் அதுவும் ஆமே
#33
தொகுதியே நெருக்கம் கூட்டம் சொற்றிடும் திரட்சி முப்பேர்
பகுதியே கொடிப்படைப் பேர் பகுத்திடல் பகுதி கூட்டம்
தகுதியே பொறை ஒழுக்கம் சாற்று அறிவு என்றும் போற்றும்
நகுலியே கீரி ஓர் கோ நகாயுதம் குரங்கே சிங்கம்
#34
சக்கிரி நெடுமால் வேந்தன் சர்ப்பம் வேள் சதலி செக்கான்
மிக்கவை நிறைதல் நியாயமலதல் ஊண் அடிசில் மேவும்
கொக்கு அயம் செந்நாய் மூலம் குரண்டம் மாக் குருக்கத்திப் பேர்
சொக்கு ஒளிர் பொன்னே சோர்வே சொல்லரும் எழில் முப்பேரே
#35
புகர் என்ப ஒளி கேழ் குற்றம் புற்கென்றல் எழில் மழைக்கோள்
பகர் குன்றின் அருவி சொன்றி பற்று உயிர்க்கு ஒன்பான்பேர்
தகர் என்ப அகிலம் ஆடு தகர்த்தல் என்று ஓதல் முப்பேர்
மகரந்தம் துணர்தேன் வண்டு ஆம் வாகதம் நூல் கள் ஆமே
#36
உக்கமே மருங்கின் பக்கம் ஒண் மருங்கு ஆலவட்டம்
குக்குடம் சுரவி செந்தீ கோ விடை முகம் ஏழ்பேர் ஆம்
பக்கமே அருகு நட்பு பறை திதி அடைக்கலப்பேர்
ஒக்கமே அகலம் அற்பம் ஒழிவுறாப் பொலிவும் ஆமே
#37
சக்கரம் பெருமை ஓர் புள் தரணி தேருருளே ஆழி
மிக்கு அரு வரையே வட்டம் மிளிர் நகை பிறப்பு ஒன்பான்பேர்
கொக்கரை வளையே சங்கே குதை வில் வெம் பணியே நாற்பேர்
அக்கரம் எழுத்தின் நாமம் அயரும் நோய் ஒன்றும் ஆமே
#38
ஊக்கமே வலி தாளாண்மை உளம்மிகுத்திடலே உண்மை
நீக்கம்இல் விரிவு உயர்ச்சி ஆறுமே நிகழ்ந்த நாமம்
பாக்கமே புறம்பணைக்கு ஆம் பதி நெய்தல்பதி பேரூர் ஆம்
சூக்கமே சுரும்பே அற்பம் சோகு பேயுடன் பேய்ச்சோறு ஆமே
#39
பகலே ஓர் முகுர்த்தம் நாளே பலபாடே நடுவே தேசு
பகலவன் செயலே பாகு நுகத்தாணி ஒன்பானே பேர்
இகலனே நகுலம் ஓரி ஏகம் ஒன்று உயர்ந்த முத்தி
அகலம் மார்புடனே பூமி விரித்துரை அகலம் நாற்பேர்
#40
தோகையே வால் முந்தானை சுற்றாரல் தூவி மஞ்ஞை
வாகை சேர் எழில் பதாகை மயிற்பீலியுடனே ஏழ்பேர்
ஈகையே கொடை காற்றுப் பொன் இண்டை கற்பகம் இல்லாமை
ஓகையே வருவசொல்லல் உவகைக்கும் புகலலாமே
#41
சிகரமே குவட்டினுச்சி திவலை வெற்புடனே சென்னி
எகினமாக் காக்கை தெண்ணீர் எறி திரை என்று ஏழ்பேர் ஆம்
பகவன் ஈசன் மால் புத்தன் பங்கயன் சினனோடு ஐம்பேர்
நிகர்தலே நிறைதல் ஒப்பு ஆம் நெகிழ்தலே குறைவு விள்ளல்
#42
பொகுட்டு என்ப முளரிப் பைம்பொன் பூங்கொட்டை துளையும் சேற்றின்
மிகுத்திடு கொப்புள் நீண்ட மால் வரை விளங்கும் முப்பேர்
பகுத்திடல் பாதிசெய்தல் தறித்திடல் என்றும்பாற்றே
இகழ்த்தல் காழ்த்தல் நெருக்கம் எறிதலே கடத்தலும் பேர்
#43
பாகமே பாதியின் பேர் பல கடன் ஓர் கணிதம் பிச்சை
வேகம் ஆர்பதம் பட்டாடை விளங்கும் நாமங்கள் ஆகும்
சூகரம் கரமே பன்றி துகிரே செம்பவளம் சேப்பு ஆம்
நாகரம் திசைச்சொல் நொள்ளை நகுதலே சிரித்தல் பேசல்
#44
கை கரம் படையுறுப்புக் கருத்துடன் ஒழுக்கம் தங்கை
மொய்வு இடம் ஒப்பனைப் பேர் மிளிர் கீழ்மை சார்பு ஒன்பான்பேர்
மை கறை மேகம் ஆடு மலடே அஞ்சனம் குற்றப்பேர்
வைகல் வைகறை நாள்தங்கல் உரியன கழிவும் ஆமே
#45
கோகனகம் சரோரம் குளிர்கை ஆம் தகரை வெய்ய
மோகம்செய் நிலக்கடம்பு என்று உரை அபிதானம் மூன்றாம்
பாகவன் தழல் தீத்தேவு ஆம் பாகர் கண் மதில் சூதர்க்கு ஆம்
சூகை என்பதுவே யானை சொற்ற சிற்றிற்கும் பேரே
#46
இகுத்தலே அழைத்தல் ஈதல் எறிதலே செகுத்தல் வீழ்த்தல்
மிகைப்படத் துகைத்தல் தாழ்த்தல் வருந்திடல் எண்பேர் ஆகும்
அகைத்தலே நோய் ஒடித்தல் அறுத்திடல் உடன் உயர்த்தல்
வகைப்படும் எழுச்சி மோதல் வழுத்து பேர் இருமூன்று ஆமே
#47
நாகமே குரங்கு புன்னை ஞாழல் வெற்பு யானை தூசு
மாகம் கால் அகி காரீயம் வரு சொர்க்கம் பன்னொன்றேபேர்
ஊகமே கருங்குரங்கே உடற்குறை விலங்கின் கூட்டம்
போகிலாத் தர்க்கம் சங்கை பொருபடை வேங்கை ஏழ்பேர்
#48
பாகு என்ப பருப்புப் பாக்கு பரணி பால் பகிர்ச்சி பாகன்
பாகம் சர்க்கரை ஆறு ஆணம் பரை கரை ஈராறேபேர்
நாகு என்ப சங்கு காரான் நத்தை ஆன் நீர்வாழ்சாதி
மோகம்கொள் பெண்பால் ஈனா இளமை முள்மரம் எண்பேரே
#49
வாகையே திறம் முயற்சி வனப்பு உயர் வெற்றி சால்பு
ஈகை நல்லொழுக்கம் கல்வி இயல் அறத்துறையே உண்மை
ஓகை சேர் மிகுதி பண்பே ஒரு மரம் அரும் தவங்கள்
மோகம் ஆர் பேர் மூவைந்தாம் முகையே நீர் மிடாப் பூ மொக்குள்
#50
தூக்கு என்ப ஒலி பாண் கூத்துத் துலாம் தொங்கல் அயல் ஆராய்தல்
தூக்கணங்குருகே பாரம் சொற்றிடும் உவமை விற்றல்
நீக்கம்இல் நிவப்பே பண்டம் நிறுத்திடல் உணர்த்தும் ஆசான்
ஆக்கிய சிக்கம் என்னும் அபிதானம் மூவைந்து ஆமே
#51
வழுத்து உயிர்மெய் மூவாறின் வருகின்ற ககரமாதி
எழுத்து எதுகையினில் செய்யுள் ஐம்பான் என்று இசையச் செய்தான்
பழுத்த செஞ்சுடர் வேலால் சூர் பக எறிந்தோன் பொன் பாதம்
அழுத்துறும் இதையன் செந்தில் அருமருந்தையன்தானே
** ககரவெதுகை பிரதிபேதம் முற்றும்
**
** திருச்செந்தூர் அருமருந்தைய தேசிகர் இயற்றிய
** அரும்பொருள் விளக்க நிகண்டு
@ காப்பு - பாயிரம்
#1
மகிழ்ந்துல கெவையும் போற்ற வன்புரங் குன்ற வென்ற
திகம்பர னணங்கோர் பாகத் தெய்வநா யகன்சேய் தந்தி
முகன்றன தடியை யேத்தி மூதரும் பொருள் விளக்க
நிகண்டெனு மணித்தீ பத்தை நிலமிசை நிகழ்த்த லுற்றாம்
** பாயிரம்
#2
பொன்னொளிர் கமலப்புத்தே ணறுந் துழாய்ப் பெருமான் போற்றுங்
கன்னியம் புரிசைத் தில்லை நாதன்றாள் கருத்திற் சேர்த்திப்
பன்னரும் பொருள் விளக்கத் தீபிகை பகர்வேன் பாரிற்
செந்நெறி யுளத்தோர் யாருஞ் செவிமடுத் தினிது கேண்மின்
#3
குளிர்மணி வடநீ ழற்கீழ்க் குலவுமெம் மடிக டொன்னாள்
எளிதிலா முதனூல் செப்ப விலக்கண ரியையுந் தூக்காற்
றெளியொரு வழி நூல் செப்பச் சிலர்சார்பு நூலும் போற்றத்
தளிர்பெற விந்நூல் மூன்றுஞ் சகந்தனிற் றிகழ்ந்த தன்றே
#4
ஆங்கது நிற்கப் பின்னு மலகினூ லுதித்த வாற்றிற்
றாங்கொரு சொற்பொருட்பல் விதத்தொகை தானொன் றுக்கொன்
றோங்கிமிக் குங்கு றைந்து மொத்திடா திருக்கை தன்னாற்
பாங்குயர் சின்னூற் சேரும் பொருள்கூட்டும் பண்பை யெண்ணி
#5
இலக்கண முழுது ணர்ந்தா னிறையிருஞ் சிவாக மத்தின்
றுலைக்கடல் முற்றுங் கண்டோன் றொல்லையாந் தில்லை மூதூர்
கலக்கற விளங்கும் பச்சைக் கந்ததே சிகனா மெங்கோன
சொலத்திக ழிகப ரத்தை வேண்டி யே தொல்லோர் கேட்க
#6
மாவியல் சிறக்கும் வீரை மண்டல வன்காங் கேயன்
ரேவண சித்தன் செஞ்சொற் கயாகர னிவராற் சொற்ற
பாவியல் நூற்கூ றோர்சொற் பல்பொருட் டொகையெ லாஞ்சேர்த்
தோவிலா வளஞ்சி றப்ப வொருபெரு நூல தாக
#7
நவையறு ககர மாதி னகரவீ றெதுகை தன்னால்
நுவலடிக் கிரண்டு மொன்று நுண்பொரு ளொருங்கு சேர்த்திச்
சுவைதிகழ் சொல்வி ருத்தத் தொகையெழு நூறு தன்னால்
அவைநலோர் குற்றஞ் சொல்லா ரென்பதை யகத்தி னெண்ணி
#8
சொற்றன னறாத்து ளிக்குந் தோட்டலர் கடம்பின் றிண்டோட்
கொற்றவேன் முருகன் செந்திற் குமரவேட் கடிமை பூண்ட
நற்றவ வீரா சார நற்சிவப் பிரகா சன்சேய்ப்
பெற்றிசே ரரும ருந்த தேசிகப் பெயரி னானே
#9
இருஞ்சகாத் தம்மீ ரைஞ்ஞூ றிருமுந்நூ றுடனெண் பத்தஞ்
சொருங்குசித் திரபா னுப்பேர்ச் சமைமகத் திங்க ளொப்பில்
பொருஞ்சிவ நிசிவெள் ளிப்பேர் புனைதினந் தில்லை மன்றிற்
பெருங்குணத் தோர்க்க ரங்கே றுற்ற நூற் பெற்றி தானே
** பாயிரம் முற்றும்
** நூல்
@ ககரவெதுகை
#1
அகவலே யழைத்த லாட லான்றவா சிரிப முப்பேர்
தகவறி வுடனொ ழுக்கந் தெளிவுஞ்சற் குணமுஞ் சாற்றும்
பகவதி யுமையே துர்க்கை தருமதே வதைப்பேர் பன்னும்
முகவுமா ளிகைமு கப்பே மொள்ளுதல் காந்திக் கும்பேர்
#2
உகமென்ப வுரகம் பூமி யூழியே முதலே நாற்பேர்
சுகமென்ப கிளியே நன்மை சுவர்க்கமின் பம்மை மைப்பேர்
முகமென்ப திடமே துண்டம் மோகமே மயக்கக் காதல்
நுகமென்ப மகநாள் சோதி நாள் நுகத் தாணி முப்பேர்
#3
அகலுளே பெருமை நாடூ ரகலமென் றோதல் நாற்பேர்
இகல்வலி பகைபோர் மேவல் இகுளையே தோழி நட்பாம்
புகலுடல் குதிர்சொல் வெற்றி பொக்கமே மிகுதி பொய்யாம்
நகலொளி சிரித்த லின்பேர் நகமேவெற் புகிர்ம ரப்பேர்
#4
அகமான்மா மனையுள் ளுள்ள மகலம்வெற் புடன்பா வப்பேர்
சகமேமா நிலமே பாதி தகருடன் சட்டை நாற்பேர்
பகமேபெண் ணின்சின் னப்பேர் வாலமு மதுவே பன்னும்
மகமேயோர் நாள்யா கப்பேர் வைகூர்மை வைக்கோல் பைம்புல்
#5
பகடென்ப கடாச்சேத் தந்தி பஃறியே பெருமை யைம்பேர்
அகடென்ப வுதரம் நாப்பண் ஆன்றதீங் குரையே முப்பேர்
சகடென்ப பொய்ம்மை யோகஞ் சாகாடே போர்ப்ப றைப்பேர்
முகடென்ப கொடிவி டங்கம் மோக்கமே தீர்தல் முத்தி
#6
அகழென்ப வகழி தொட்டல் அகிலமே சகம னைத்தாம்
பகழியா சுகங்கு ழிப்பேர் பகண்டைசில் லைப்புள் சிவேதை
புகழென்ப வகத்தி வாகை போற்றுறுஞ் சீர்த்தி முப்பேர்
சிகழிகை மயிர்மு டிப்பேர் வாசிகை திகழ்தே மாலை
#7
ஆக்கையே யுடலத் தின்பே ரயிற்கணை வீக்கும் பாசம்
சேக்கையே முலைத ழும்பு திகழ்பாயல் கடக ராசி
சாக்கையே நிமித்தி கன்பேர் பேயுண்டி யதற்குஞ் சாற்றும்
தீக்கையோன் சிவனே யாசான் சிகண்டிகே கயம லிப்பேர்
#8
ஆக்கமே பொன்செல் வம்பே றதிகம்பூ மின்மெய் கேடாம்
தூக்கமே நிவப்புத் தொங்கல் துயிலெனு முப்பேர் செப்பும்
பூக்கமே வலியி னாமம் புரியுடன் கமுகும் போற்றும்
நோக்கமே யழகு பார்வை நொய்திலா வுயர்ச்சிக் கும்பேர்
#9
அகரமோ ரெழுத்தே சேரி அகப்பாவே ணகையுண் மேடை
மகரமே யிராசி காதல் மலர்த்தூளே சுறவே நாற்பேர்
தகரமே மயிர்ச்சாந் தீயந் தகரந்தண் மணம்புன் கின்பேர்
ஒகரமோங் கார மஞ்ஞை ஊகித்தல் நினைத்த லோர்ப்பாம்
#10
தகையேயேர் கவசம் பண்பே தளர்வன்பே பெருமை நீளம்
முகையேபூ மொக்கு ளின்பேர் மொழிந்தநீர் மிடாவும் போற்றும்
தொகையேயா சிரியக் கூட்டம் சோகமால் கவான்றி பட்சி
நகையேபல் லொளிம லர்ச்சி நகையுட னிகழ்ச்சி யைம்பேர்
#11
அகளமே மிடாவா ழப்பேர் ஆகவம் புவிபோர் வாசி
துகளாதல் தூளே குற்றம் தொக்கேகூட் டந்து வக்காம்
சகளியே கருமு கைப்பேர் தராதல மிருபேர் காட்டும்
உகளமே யிரண்டிட் டப்பேர் ஊக்கலே நினைத்த லூர்தல்
#12
மகடுபெண் குழலி சைப்பேர் மகன்மைந்தன் புருடன் மாக்கள்
தகடிலை யைம்மைக் கும்பேர் தக்கையோர் பறையே தெப்பம்
முகடியென் பதுதான் றவ்வை முழுமகன் றனக்கும் பேசும்
மகுடமே முடியு றுப்பு மவுலியென் றிரண்டு மாமே
#13
தகைமையே குணமே யாட்சி சான்றாண்மை யெனவே முப்பேர்
புகையென்ப தூமங் காதம் பூக்குதல் நினைத்தல் தோன்றல்
திகைதிசை சுணங்கி னாமம் சேகென்ப வயிர மாசாம்
பகையிக லடித்தல் சாதல் பகர்தலே விற்றல் பேசல்
#14
அக்கெனு நாமஞ் சங்கோ டம்பகம் விடைமு சிப்பாம்
நக்கனே விடையோன் பிண்டி நாதனிர் வாணிக் கும்பேர்
பக்கணம் வேடர் வீதி பட்டணம் சிற்றூர் முப்பேர்
தக்கனெண் பாம்பி லொன்று மால்மகன் றனையன் சாற்றும்
#15
எக்கலே யூர்தி யேறல் சொரிதலென் றிரண்டு மேற்கும்
சிக்கலே யிளைத்த லின்பேர் கிடைத்தலுக் தடையும் செப்பும்
ஒக்கலே குடிசுற் றப்பேர் ஒப்புற லதுவும் போற்றும்
முக்கோலந் தணர் தங் கைக்கோல் சிராவண நாண்மொ ழிப்பேர்
#16
ஆகமே காய மார்பம் அகர்பெரு மரம கிற்பேர்
யோகமே தியானங் கூட்ட முச்சாயம் போர்க்கு பாயம்
சாகமே தாழை தேனீ தேக்குச்சா கினிவெள் ளாடாம்
காகமே யரிட்டங் கீரி கற்பக மவிட்ட நாட்பேர்
#17
மேகரா கப்பே ரோர்பண் மிளிர்சிறு கீரைக் கும்பேர்
மாகத ரோடர் பாட வல்லோர்மற் றொருதே யத்தோர்
கேகய மசுண மஞ்ஞை கிளர்ந்தபாட் டோர்தே யம்வில்
பாகனே வலவன் புந்தி பக்கியே குதிரை பல்புள்
#18
வேகமே யகறல் கோபம் விரைவுட னுடம்பே கீழாம்
பூகமே திரட்சி கூந்தற் பூகம்பூங் கமுகும் போற்றும்
கோகமே யற்ப நேமிக் குருகென்றுங் கூறற் பாலாம்
மாகமே படையெ ழுச்சி வன்றலை திருவாழ் வைம்பேர்
#19
நோக்கலே காத்த லின்பேர் காணலு நுவலற் பாற்றே
பாக்கிடைச் சொற்று வர்க்கா யெதிர்காலப் பண்பே முப்பேர்
போக்குரை நடத்தல் குற்றம் பொய்பத டிப்பே ரென்ப
மீக்கோளே றுதலி னாம மேற்போர்வை பொலிவு மாமே
#20
ஆகரங் கடலே யாக மார்ந்திடு முணவே முப்பேர்
சீகரங் கரகம் வீசு திவலைவெண் கவரிக் கும்பேர்
சாகரந் துயிற ணத்தல் தண்கட லெனவுஞ் சாற்றும்
சேகரஞ் சிகரந் தேமாச் செம்பொன்மா மவுலிக் கும்பேர்
#21
சாகினி சேம்பு சாகம் சகியென்ப பொறைசே டிப்பேர்
போகில்கொப் பூழ்பூ மொட்டுப் புட்பொது வெனவும் போற்றும்
கோகில முட்டு ளைப்பேர் குயில்பல்லி குரக்குஞ் செப்பும்
போகியிந் திரனே பாந்தள் புகுதியே வருவாய் வட்டை
#22
அகறலே குதித்த லோர்ப்புக் கழிவுட னகல நாற்பேர்
சிகரிகோ புரமே நாரை சீறெலி வரைகி ரீடம்
இகரமோ ரெழுத்தே சந்தம் ஏகலே போதல் நாவாய்
ககனம்விண் படைகான் பல்புள் ககமேவெங் கணைபுள் ளாமே
#23
இக்கென்ப கரும்பி னாம மிரதமார் கள்ளுக் கும்பேர்
குக்குடங் கோழி யின்பேர் சிறகுடைப் பாந்தள் கூறும்
சிக்கமே குடுமி யுச்சஞ் சிறையுறி யோர்புள் சீப்பாம்
சுக்கையே யுடுதே மாலை சுகியேபுள் சுகமு மாமே
#24
நக்கலே யொளியே சொன்றி நகைத்திட லுடனுண் டற்பேர்
மொக்குளே புற்பு தப்பேர் குமிழ்ப்புப்பூ முகையென் றாகும்
கைக்கிளை யாழ்ந ரம்போர் பாவொரு தலைக்கா மப்பேர்
வக்கிரங் கொடுமை மீளன் மடங்கல்போய் நிமிர்தல் வட்டம்
#25
மகிணனே கொழுந னாம மருதத்தின் றலைவன் வைக்கும்
சகுனமே கிழக்கு நாரை சாற்றிய நிமித்தம் புட்பேர்
எகினமே புளிமா நாயே கவரிமா வனப்பு ணீர்நாய்
சகுனிபுள் நிமித்தம் பார்ப்போன் சகுந்தமீன் பொதுப்புள் பூகம்
#26
அகியரா விரும்பி னாமம் ஆகாரம் வடிவ நெய்யூண்
திகிரியே வட்ட மாழி தேருருள் தேர்யாழ் வெற்பாம்
துகிரிகை பூசுஞ் சாந்தே சொற்றசித் திரமே யென்றாம்
நெகிழியே சிலம்புந் தீயும் நெருப்புறு கொள்ளிக் கும்பேர்
#27
துகிலிகை யெழுது கோலே சொற்றுகிற் கொடியுங் கூறும்
வகிர்வகிர்ந் திடலே வாராம் வகுப்பென்ப தழகே வர்க்கம்
சிகிபரி புரமே மஞ்ஞை தீதுறு கேதுத் தீயாம்
சுகிருதம் நேய நன்மை சுகரேயோர் முனிசொர்க் கத்தோர்
#28
மேகலை யுடுத்த வாடை விளங்கரைப் பட்டி கைப்பேர்
பாகலே கார வல்லி பலாவென்றும் பகரற் பாற்றே
போகலே பொலிவு நீள லளவின்மை யதற்கும் போற்றும்
சாகளந் தகரி னாமஞ் சமர்செய்பூ மிக்கு மாமே
#29
வாகுவே யழகு தோட்பேர் மகிழேயோர் மரங்களிப்பு
ஆகுவே யெலிகொப் பூழு மாம்பெருச்சாளிக் கும்பேர்
காகுளி விற்பூட் டோசை களத்தொலி தவிசே முப்பேர்
ஆகுல மொலிந டுக்கம் அருச்சனை துன்பம் நாற்பேர்
#30
வீக்கென்ப விசித்த லின்பேர் மிகுதியோர் கணித முப்பேர்
தேக்கென்ப கழுகோர் தாரு திகழுளத் தெகிட்டற் கும்பேர்
தாக்கென்ப சமரே வீரம் சாகையே சினைவே தப்பேர்
மேக்கென்ப மேற்றிக் கின்பேர் மேலும்பர் தனக்கு மாமே
#31
மாகதி யதிக வேகம் அதிமது சப்பேர் வைக்கும்
சாகசம் மெய்ம்மை நாமஞ் சத்துவ மதகுஞ் சாற்றும்
போகரோர் முனிவன் வீரர் புணர்ப்புயர் விடரும் போற்றும்
ஆகையே யாக லின்பே ரவாமமும் பலத்துக் கும்பேர்
#32
சகுலிமீ னொலியாம் காகோ தரம் பாம்போர் புண்மோ டின்பேர்
குகுமதி மறையி ராவே குலவுமோர் நாடிக் கும்பேர்
புகுடியே யணிக லன்பேர் பொற்புயர் புரூரும் போற்றும்
வெகுளியே யடங்கா மைப்பேர் வெஞ்சின மதுவு மாமே
#33
தொகுதியே நெருக்கங் கூட்டஞ் சொற்றிடு திரட்சி முப்பேர்
பகுதியே கொடிப்ப டைப்பேர் பகுத்திடல் இரண்டும் பன்னும்
தகுதியே பொறையொ ழுக்கந் தக்கநல் லறிவும் போற்றும்
நகுலியே கீரி யோர்கோ நகாயுதங் குரங்கே சிங்கம்
#34
புகரென்ப வொளிகேழ் குற்றம் புற்கென்ற லெழின்ம ழைக்கோள்
பகர்சொன்றி யருவி யோடு பற்றுயிர் கொக்கொன் பான்பேர்
தகரென்ப வகில மாடு தகர்த்தலென் றோதல் முப்பேர்
மகரந்த மலர்ப்ப ராகம் வருநறா வுடன்வண் டாமே
#35
உக்கமே மருங்கின் பக்க மொண்மருங் கால வட்டம்
குக்குடஞ் சுரபி செந்தீ கொழுவிடை முகமேழ் பேராம்
பக்கமே யருகு நட்புப் பறைதிதி யடைக்க லப்பேர்
ஒக்கமே யகல மற்ப மொழிவுறாப் பொலிவு மாமே
#36
சக்கரம் பெருமை யோர்புள் தரணிதே ருருளே யாழி
மிக்கரு வரைசூழ் வட்ட மிளிர்நகை பிறப்பொன் பான்பேர்
கொக்கரை வளையே சங்கே குதைவில்வெம் பணியே நாற்பேர்
அக்கர மெழுத்தி னாம மயருநோ யொன்று மாமே
#37
ஊக்கமே வலிதா ளாண்மை யுளமிகுத் திடலே யுண்மை
நீக்கமில் விரிவு யர்ச்சி யாறுமே நிகழ்ந்த நாமம்
பாக்கமே புறம்ப ணைக்காம் பதிபெருங் கிராமம் பன்னும்
சூக்கமே சுரும்பே யற்பம் சோகுபே யுடன்பேய்ச் சோறாம்
#38
பகலேயோர் முகுர்த்த நாளே பலபாடே நடுவே தேசு
பகலவன் செயலே பாகு நுகத்தாணி யொன்பான் பேராம்
இகலனே நகுல மோரி ஏகமொன் றுயர்ந்த முத்தி
அகலமார் புடனே பூமி விரித்துரை யகலம் நாற்பேர்
#39
தோகையே வால்முன் றானை சுற்றாரல் தூவி மஞ்ஞை
வாகைசே ரெழிற்ப தாகை மயிற்பீலி யுடனேழ் பேராம்
ஈகையே கொடைகாற் றுப்பொன் இண்டைகற் பகமில் லாமை
ஓகையே வருவ சொல்ல லுவகைக்கும் புகலற் பாற்றே
#40
சிகரமே குவட்டி னுச்சி திவலைவெற் புடனே சென்னி
யெகினமாக் காக்கை தெண்ணீ ரெறிதிரை யெனவேழ் பேராம்
பகவன்மா லீசன் புத்தன் பங்கயன் சினனோ டைம்பேர்
நிகர்தலே நிறைத லொப்பாம் நெகிழ்தலே குழைவே விள்ளல்
#41
சக்கிரி யேகு லாலன் றராபதி தறுகட் பாந்தள்
இக்குவேள் தாதை செக்கான் கருப்பாலை கதலி யேழ்பேர்
கொக்கயஞ் செந்நாய் மூலங் குரண்டமாக் குருக்கத் திப்பேர்
சொக்கொளிர் பசும்பொன் சோர்வு சொல்லரு மெழின்முப் பேரே
#42
பொகுட்டென்ப முளரிப் பைம்பொற் பூங்கொட்டை துளையுஞ் சேற்றின்
மிகுத்திடு கொப்புள் நீண்ட மால்வரை விளங்கு முப்பேர்
பகுத்திடல் பாதி செய்தல் தறித்திட லெனவும் பாற்றே
முகிழ்த்தல்வா ளாகி டத்த லொடுங்கற்கு மொழிபே ராமே
#43
பாகமே பாதி யின்பேர் பலகூறோர் கணிதம் பிச்சை
வேகமார் பதம்பட் டாடை விளங்குநா மங்க ளாறாம்
சூகரங் கரம்பன் றிப்பேர் துகிரேசெம் பவளஞ் சேப்பாம்
நாகர மோர்தே யச்சொற் சீவனொன் றெனவே நாட்டும்
#44
கைகரம் படையு றுப்புக் கருத்துட னொழுக்கந் தங்கை
மொய்விட மொப்பனைப்பேர் முதிர்கீழ்மை சார்பொன் பான்பேர்
மைகறை மேக மாடு மலடேயஞ் சனங்குற் றப்பேர்
வைகல்வை கறைநாட் டங்க லுரியன கழிவும் வைக்கும்
#45
கோகன கஞ்ச ரோரங் குளிர்கையாந் தகரை வெய்ய
மோகஞ்செய் நிலக்க டம்பென் றுரையபி தான மூன்றாம்
பாகவன் றழல் தீத் தேவாம் பாகர்கண் மதில்சூ தர்க்காம்
சூகையென் பதுவே யானை சொற்றசிற் றிற்கும் பேரே
#46
இகுத்தலே யழைத்த லீதல் எறிதலே செகுத்தல் வீழ்த்தல்
வகைப்படத் துடைத்தல் தாழ்த்தல் வருத்திட லெண்பேராகும்
அகைத்தலே நோயொ டித்த லறுத்திட லுயர்த்த லோடே
மிகைப்படு மெழுச்சி மோதல் "விளம்புபே ரிருமூன் றாமே
#47
நாகமே குரங்கு புன்னை ஞாழல்வெற் பியானை தூசு
மாகங்கா லகிகா ரீயம் வளர்சொர்க்கம் பன்னொன் றேபேர்
ஊகமே கருங்கு ரங்கோ டுடற்குறை விலங்கின் கூட்டம்
போகிலாத் தர்க்கஞ் சங்கை பொருபடை வேங்கை யேழ்பேர்
#48
பாகென்ப பருப்புப் பாக்குப் பரணிபால் பகிர்ச்சி பாகன்
பாகஞ்சர்க் கரையா றாணம் பரைகரை யீரா றேபேர்
நாகென்ப சங்கு காரான் நத்தையா னீர்வாழ் சாதி
மோகங்கொள் பெண்பா லீனா விளமைமுண் மரமெண் பேரே
#49
தூக்கென்ப வொலிபாண் கூத்துத் துலாந்தொங்க லயலா ராய்தல்
தூக்கணங் குருகே பாரஞ் சொற்றிடு முவமை விற்றல்
நீக்கமில் நிவப்பி னோடே நிறுத்திடல் குரவன் றன்னோ
டாக்கிய சிக்க மென்னு மபிதான மூவைந் தாமே
#50
வாகையே திறமு யற்சி வனப்புயர் வெற்றி சால்போ
டீகைநல் லொழுக்கங் கல்வி யியலறத் துறையே யுண்மை
போகைசேர் மிகுதி பண்போ டொருமர மருந்த வங்கள்
மோகமார் முடமே யென்று மொழிநாம மீரெட்டாமே
#51
வழுத்துறு மெய்ம்மூ வாறின் வருகின்ற ககர மாதி
யெழுத்தெது கையினிற் செய்யுளைம்பானென் றிசையச் செய்தான்
பழுத்தசெஞ் சுடர்வே லாற்சூர் பகவெறிந் தோன்பொற் பாதம்
அழுத்துறு மிதையன் செந்தி லருமருந் தையன் றானே
** ககரவெதுகை முற்றும்
@ ஙகரவெதுகை
#1
அலங்குபன் மணிகொ ழிக்கு மணிகிளர் சரவ ணத்தின்
இலங்குமூ விருமு கத்தோன் எம்பிரான் றேவர் சேனை
கலங்குறா வண்ணங் காத்த காரணன் பாதம் போற்றித்
துலங்கியே வருங் கார வெதுகையின் றொடையைச் சொல்வாம்
#2
அங்கியே யான்மாச் செந்தீ யாரல்நாளரைச்சட்டைப்பேர்
பைங்கதிர் பனிவெண் டிங்கள் பகர்நெல்லா தியகு ரற்பேர்
சிங்கியோர் மருந்தி னாமந் தீங்கடு வுடனோ ராடல்
பங்கியே யாண்ம யிர்ப்பேர் பற்பிற மயிரு மாமே
#3
தேங்கலே மெலிவி னாமம் திகழச்சக் குறிப்பெ னும்பேர்
வாங்கலே கொளல ழைத்தல் வளைதலோ டிசைத்தல் நாற்பேர்
தாங்கலே படுகர் தாங்கல் சாற்றுளக் குறையே முப்பேர்
ஏங்கலே மிகுந்த வோசை யிசைக்குமேக் கப்பேராமே
#4
மங்கலி சுமங்க லிப்பேர் மஞ்சிக னெனவு மாமே
சங்கரி துமித்தல் நாமம் தாணுவின் றேவி மாயோன்
அங்கதம் வசைச்சொல் வெந்தீ யரவுதோ ளணிமார் பம்பொய்
புங்கவம் நந்தியம்பு பூங்கற்றே செவ்வி பூதம்
#5
சுங்கனே மழைக்கோ ளாயத் துறைபவன் பேருஞ் சொல்லும்
மங்களன் செவ்வா யின்பேர் மணம்பொருந் திடுவோன் வைக்கும்
அங்கமே யென்பு தேக மாறங்கங் கதுப்பே யூகம்
சிங்கமே யாளி சீயம் செங்கையா திரைநாள் கைப்பேர்
#6
அங்கையே யத்த நாட்பே ரான்றகைத் தலமுஞ் செப்பும்
கங்கமே யெருவை பாறு கழறுஞ்சீப் புடனே முப்பேர்
கொங்கொரு தேயந் தாது குளிர்மணந் தேறல் நாற்பேர்
கிங்கரந் தணவா வன்பும் கிளத்துதூ துக்கும் பேரே
#7
பொங்கலே பொலிவு யர்ச்சி பொருந்துறு நிறைவே முப்பேர்
மங்கலம் பொலிவி னாம மடப்பமோ டெழில்கு ணப்பேர்
பிங்கலம் பொன்மை பூசை கபிலமா னிறமும் போற்றும்
இங்குலி கப்பேர் சாதி லிங்கமும் சிவப்பு மேற்கும்
#8
பொங்கரே யிலவு சோலை புறம்பேபூஞ் சினையே வெற்பாம்
அங்கித முடற்ற ழும்பே யங்கிகா ரமுமே யென்ப
மங்குல் விண்ணிருள்மே கப்பேர் மங்கையோர் பருவம் பெண்ணாம்
பிங்கலை யோர்வாய் வின்பேர் பிறழாந்தை தனக்கு மாமே
#9
புங்கமே யுயர்ச்சி யம்பே பொருமம்பிற் குதையே தூசாம்
திங்களம் புலிமா தப்பேர் தெங்கேதா ழைதித் திப்பாம்
வங்கரே கொலைஞர் கற்றோர் வழுத்து மோர் தேயத் தோர்க்காம்
அங்கண முற்றஞ் சேறே யாஞ்சல தாரைக் கும்பேர்
#10
கங்கபத் திரமே வாளி கழுகின்றன் சிறகுங் காட்டும்
சுங்கமே திறைய ளத்தல் சொற்றவா யத்து றைப்பேர்
வங்கணங் கத்தி ரிப்பேர் கேண்மைக்கும் வழுத்தற் பாலாம்
கங்கணங் கமண்ட லப்பேர் கரத்தொடி யதுவு மாமே
#11
சங்கென்ப வளைகோ டேபுள் சங்கைபே யுடனே யையம்
பங்கென்ப முடமே யாகும் பாதியுஞ் சனியு மேற்கும்
கங்கென்ப வரம்பின் பக்கம் கருந்தினை கழுகு பாறு
இங்கென்ப திவிடம் காயம் இலிங்கமே குறிகு லிங்கம்
#12
செங்கோடே யோர்மலைப்பேர் செருந்திக்கும் பொருந்தி நிற்கும்
அங்கார கன்பேர் செவ்வா யடர்த்தசெந் தழற்கும் போற்றும்
செங்காவி யலர்சே தாம்பல் சீரைதோய்த் திடுஞ்செங் கற்பேர்
பைங்கூழே பயிர்நோ யின்பேர் பாங்கரென் பதிடம் பக்கம்
#13
பாங்கென்ப தலங்க ரித்தல் பகரெழில் முயற்சி யாட்சி
ஞாங்கர்வேல் பக்க முன்பே மேலிடம் நவிறற் பாலாம்
சோங்குநா வாய்ம றப்புச் சொற்குரு கெனவே முப்பேர்
வேங்கைபொன் மரம்பு லிப்பேர் வெங்கோலே கொடுங்கோல் பல்லம்
#14
ஓங்கலே வரைமே டியானை யுயர்வுபா யம்வேய் நாவாய்
இலாங்கலி தெங்கு காந்த ளுழுபடை யெனவே முப்பேர்
தூங்கல் கூத் தியானை தூக்கஞ் சோம்புசாத் தாழ்வோ ரோசை
காங்கயஞ் செவ்வே ளாண்மை கனத்தவன் பணிபொன் னாற்பேர்
#15
பங்கமே தூசு பின்னம் பதிந்த சேறுடனே குற்றந்
தங்குதொல் வினையே யென்னச் சாற்றுமைம் பேருஞ் சொல்லும்
வங்கமோர் தேயம் வெள்ளி வழுதலை யுடன்க ருத்துப்
பொங்குறு நாவா யீயம் போற்றும்பே ரிருமூன் றாமே
#16
சங்கமே கணைக்கா லோரெண் சவைசங்கு புலவர் நெற்றி
பொங்குகை வளையி னோடு பொருந்து றக் கூட லெண்பேர்
தொங்கலே பீலிக் குஞ்சம் தூக்குடன் றுயில்பூ மாலை
சிங்கலில் கவிகை தெய்வ வுத்தியென் றறுபேர் செப்பும்
#17
நூங்கரே நுறுங்கல் தேவர் நுங்கலே விழுங்கல் நோயாம்
வீங்கலே மிகுதி வீக்கம் வெங்கதி ரழல்வெய் யோனாம்
தீங்களே நறவஞ் சோரம் சிங்கலே யெஞ்சல் கேடாம்
ஈங்கோர்முண் டகவல் லிப்பே ரிவ்வுழை யெனலு மாமே
#18
துதிபெறு மிரண்டா மெய்யாய்ச் சொற்பெற வருங் கார
வெதுகையி னுற்ற செய்யு ளிசையவீ ரெட்டாய்ச் செய்தான்
கதிர்விரி தடக்கை வேலான் கந்தவேள் மணிப்பொற் றண்டை
அதிர்கழல் வணங்குஞ் செந்தி லருமருந் தையன் றானே
** ஙகரவெதுகை முற்றும்
@ சகரவெதுகை
#1
கொலைகிளர்ந் தொளிருஞ் செய்ய கூரிலை வடிவேற் றாங்கு
மலைசெறி கடகத் திண்டோள் மஞ்ஞைவா கனத்தெம் பெம்மான்
முலைமுகிழ்க் குறமின் கேள்வன் மூவிரு முகனைப் போற்றிக்
கலைவலோர் புகழ்ச கார வெது கையின் கவியைச் சொல்வாம்
#2
கோசரம் சிவலிப் புட்பேர் கூர்மைக்கும் புரிக்கும் வைக்கும்
ஊசலே உஞ்ச லூசல் ஒசிவே நுண் மைசா யற்பேர்
கூசலே வெஃக லச்சம் குசமென்ப விருக்கந் தெர்ப்பை
கேசர மகிழ்ம ரப்பேர் கிளத்து பூந் துணர்தே னீயாம்
#3
அசதியீ ரெட்டாண் டிற்பெண் ணயர்வுட னோர்கோ வைப்பேர்
கசிவேயா குலமி ரங்கல் காதல்வேர் வுடனன் பாகும்
பிசிவேயொட்டல்ந டத்தல் பிசிதம்பொய் யிறைச்சி வேம்பு
நொசிவேநோய் வருத்தத் தின்பேர் நுண்மைக்கும் புகல லாமே
#4
ஆசையே திசைபொன் னேமால் ஆசுக மம்பு காற்றாம்
காசையே நாணல் காயா கசையென்ப கவசம் நாணாம்
பூசையே பூனை பூசை பொச்சையென் பது கான் வெற்பாம்
ஓசையே கதலி சீர்த்தி யொலியெனு முப்பே ராமே
#5
முசலியே கோம்பி தாழை மொய்வலி யுடும்பே முப்பேர்
அசமறி மூவாண் டின்நெல் அசனியே யுருமு வச்சிரம்
கசநறுந் தாதி ரும்பு களிற்றுட னளவொன் றாகும்
கசடைய மலினங் குற்றஞ் சகடெனும் நாற்பேர் காட்டும்
#6
பாசமே பேய் நூ லூசிப் படுதுளை கயிறென் றாமே
வேசரி கருத்த பங்கோ வேறெனுங் கரம் விளம்பும்
காசறை மயிர்ச்சாந் தின்பேர் கஸ்தூரி மணிப்பொ துப்பேர்
ஈசன்மா லரனே வேத னெவற்றுக்கு மிறையென் றாமே
#7
உசிதமே நீர்வளைத்த லதிசய மழைத்த லோதும்
இசியொன்றை யிணுங்கு தற்பே ரிசித்திடல் சிரித்தல் முப்பேர்
பசியுத ரக்க னற்கும் பரசுதற் கும்பேர் வைக்கும்
மசிமதித் திடல்கார் மையாம் வசந்தனோர் கவிவேள் தென்றல்
#8
மூசல்மொய்த் திடல்சா வென்ப முசுவேயோர் வளல்மு சுப்பேர்
கீசகங் குரங்கு தட்டை கிளர்த்திய தலைத்தி ராணம்
வீசலே யெறித லீதல் மிகுத்திடல் பரத்தல் நாற்பேர்
பாசறை பன்ன சாலை பாடிவீ டிரண்டு மாமே
#9
உச்சிநண் பகல்மு டிப்பேர் ஒசித்திடன் முறித்தல் சாய்த்தல்
வச்சிரஞ் சதுரக்கள்ளி வயிரம்வெங் குலிச முப்பேர்
நொச்சிசிற் றூர்ம திற்பேர் நுவல்சிந்து வார மென்ப
மிச்சில்போம் பொருளே யெச்சில் வீசமோர் கணிதம் வித்தாம்
#10
ஆசிடை கூட்டஞ் சீரை வாழ்த்து மென் றறைதல் முப்பேர்
தேசிக மெழில்நற் காந்தி செம்பொனோர் நடந்தி சைச்சொல்
ஆசினி பலாவி சேட மரவுரி மரம்விண் சேகாம்
தாசிசொற் பரணி நாட்பேர் அடிமைக்குஞ் சாற்ற லாமே
#11
விசுவமே நெடுமால் பூமி விசாலமே பொலிவு தாவல்
வசுவென்ப செம்பொன் றேவர் வன்னிகோ தனநாற் பேரே
பசுவென்ப திடபஞ் சீவன் பற்றுறும் பெற்ற முப்பேர்
பிசுனங்கொண் டியமே கோளே பேசுறும் பொய்யென் றாமே
#12
குச்சென்ப சிற்றில் குற்றி குலவும்பா வாற்றி முப்பேர்
நச்சென்ப விடம்புண் மூக்கு நவின்றிடு விருப்ப முப்பேர்
கச்சென்ப கைப்பே மீனே கனன் முலைக் கச்செ னும்பேர்
அச்சென்ப கழற்காய் கூட்டல் கம்பிவாங் கற்கோ ரச்சாம்
#13
பாசியே நாரம் ஞாளி பசாசெனு முப்பே ரோதும்
வாசிமா வோதல் தெற்காம் மச்சம்பொன் னுரைமச் சப்பேர்
தேசியே யெழில்சு ணங்கன் திசைதிக்குத் திகிரி யென்றாம்
கோசிகஞ் சாம வேதம் கோதில் நற் படாமு மாமே
#14
பசும்புல்பைங் கூழே சட்பம் பசுமையே கேசம் பைம்மை
விசும்புவிண் ககுபம் மேகம் விளங்கிய துறக்க நாற்பேர்
தசும்புசெம் பொன்கு டப்பேர் தாசுசே கண்டை வல்லாம்
அசும்புபைம் புற்கூ வற்பேர் அசூசமே நாசம் நாயாம்
#15
கொச்சியோர் புதரே தீவாம் குச்சங்கொண் டியந்தெர்ப்பைப்பேர்
பிச்சியே கருமு கைப்பேர் பித்துளோன் றனக்கும் வைக்கும்
துச்சிலே யொதுக்கி டத்தோ டணிந்திடு சூட்டுஞ் சொல்லும்
சச்சையே யிகழ்ச்சி தேய்வை சட்டைவெற் பகங்குற் றப்பேர்
#16
அசிபடைக் கலம்வா ளின்பே ரவமதி சிரிப்புஞ் சாற்றும்
நிசியிரா மஞ்சள் பொன்னாம் நேசங்கொந் தளம்நே யப்பேர்
பிசிபேபொய் வெண்சோ றோடு பேசு நூற் பொருளே முப்பேர்
சுசிகோடை சுத்தம் வெண்மை சுடர்த்தழ லெனுநாற் பேரே
#17
குசைபரி சுவலிற் றோன்றுங் கூந்தல் கூர் கலினந் தெர்ப்பை
வசைபழி மொழிப்பேர் குற்றம் மாசியோர் புதரே மாதம்
அசைநிலை மேம்பா டோதல் எழுத்திரண் டுறழ்த லாகும்
விசைவிரை வுடனே வெற்றி மிசைசேட முயர்வே சோறாம்
#18
அச்சு தன் மால்கேடில்லான் அசைத்தல்சொல் லுலாவல் கட்டல்
எச்சமே குறைசே யாகம் ஏசியே கிளியி கழ்ச்சி
கச்சையே தழும்பி னோடு கயிறுமெய்க் கவச முப்பேர்
பொச்சாப்பே மறவி யின்பேர் பொல்லாங்கென் றிரண்டு மாமே
#19
ஊசியே சூசி கண்டம் உசாத்தேர்ச்சி யுலாவ லென்றாம்
பூசலா யோத மோசை புலர்த்தலொப் பனையே நாற்பேர்
தேசிக னாசான் றேசாந் திரியெனு மிருபேர் செப்பும்
நாசிசார் விடமே மூக்காம் நசையிச்சை யொழுக்கத் தின்பேர்
#20
மிச்சமே பொய்ம்மை மிஞ்சல் விசித்திர மழகு மேன்மை
கொச்சைவெள் ளாட்டி னாமம் இளைத்தலின் பேருங் கூறும்
அச்சமே அகத்தி யைம்மை யஞ்சலி யெனவே முப்பேர்
நிச்சய மென்னும் நாமந் துணிவுமெய்ம் மையுநி கழ்த்தும்
#21
ஓச்சலே யெதிர்த்து வீச லுலகோம்ப லோய்தல் முப்பேர்
பாச்சலே யெழுச்சி பாய்தல் பசும்பிடி யிலைத மாலம்
காச்சலே காய்த லின்பேர் கோபமுங் கழறற் பாற்றே
தோச்சலே பிரைசேர் வெண்பாற் புனலாட றுவளல் முப்பேர்
#22
கோசமே மதிலு றுப்பாண் குறிமுட்டை முறைபண் டாரம்
காசில்பொத் தகநீள் வீதி கருகூல மென்றொன் பான்பேர்
பாசனஞ் சுற்றம் பாசம் பாண்டமுண் கலனே நாற்பேர்
வாசமே யிருப்பி டம்பூ மணம்பல்புட் சிறகே தூசாம்
#23
கச்சமே கரிக்க ழுத்திற் கயிறள வொடும ரக்கால்
நிச்சயத் துணிவு கூர்வாள் நினைத்தலங் கவடி யேழ்பேர்
பிச்சமாண் மயிரும் பீலிக் குடையும் வெண் குடையும் பேசும்
இச்சையே பொய்த்த லாசை யிடித்தலஞ் ஞான நாற்பேர்
#24
இசையுரைக் கிளவி பாட்டோ டிசைப்புடன் புகழே வண்மை
திசையொளிர் பணத்தினோடே தித்திப்பென் றெண்பேர் வைக்கும்
விசையமே பருதி வட்டம் வெற்றிசர்க் கரைவை யப்பேர்
அசைதலே தங்கல் நோதல் அசனம்பட் டினிபல் லுண்டல்
#25
ஆசானே புகர்பொன் சுவாமி யயர்வில்பா லைத்தி றப்பண்
தேசாருஞ் செவ்வே ளென்றே செப்புநாமங்களைந்தாம்
ஆசார மறிவொ ழுக்க மாடைபெய் மழைகாட் சிப்பேர்
தாசோக மொட்ட கப்பேர் தருமமென் றிரண்டு மாமே
#26
ஆசுகைக் கருவி குற்றம் அற்பமே கவச மோர்பாட்
டேசிலாச் சடுதி யாசோ டெல்லாமென் றுரைத்த லெண்பேர்
தூசுபோர்ப் படைவ குப்புத் துகில்யானைப் புரசை முப்பேர்
காசுநற் செம்பொன் கோழை கதிர்மணிப் பொதுக்குற் றப்பேர்
#27
செச்சையே வெட்சி யாடு செறிசந்தக் குழம்பு நீறு
பொச்சையாங் காடு சோடு புகன்றவிப் பேர்க ளாறாம்
பச்சையே தோலி லாபம் பரிமளம் புதன்மால் புந்தி
மெச்சுபை யொளிவி ரிக்கு மென்மர கதமு மாமே
#28
சசிநில விந்தி ராணி தவளங்கற் பூரம் பற்றும்
நிசியுறழ் கடலி னோடு நிறத்தகார் மழையென் றேழ்பேர்
வசிவசி யம்வாள் கூர்மை வாசித்தல் திரட்சி குற்றம்
கசியுற வருட்டல் போழ்ந்தே வடுப்பட லெண்பேர் காட்டும்
#29
வழுவில வொலிசி றக்கும் வல்லின மாஞ்ச கார
மொழியெது கையினிற் செய்யுள் மூவொன்ப தாகச் செய்தான்
கழுதுண வசுரர் சேனைக் கடறொலை குகனைப் போற்றும்
அழகியற் செந்தின் மேவு மருமருந் தையன் றானே
** சகரவெதுகை முற்றும்
@ ஞகரவெதுகை
#1
நற்றவ முனிவர் விண்ணோர் நான்முக னெடியோ னேத்தும்
பெற்றமூர் கடவுட் கன்று பேசரும் பொருளு ரைத்த
வெற்றிவேற் குருசில் செங்கேழ் மென்மலர்ப் பாதம் போற்றிச்
சொற்றிகழ்ந் திடுஞ கார வெதுகையின் றொடையைச் சொல்வாம்
#2
கஞ்சுகி யங்கி யேமெய் காப்பாளர் பாந்தண் முப்பேர்
மிஞ்சிகை குண்ட லப்பேர் விளங்குபே ழைக்கும் வைக்கும்
வஞ்சுளம் காரிப் புள்ளே வல்லிசா தகக்கொ டிப்பேர்
அஞ்சனி யிராமன் றூத னன்னைகா யாவுக் கும்பேர்
#3
மஞ்சமே கட்டில் தூசாம் வாஞ்சையே விருப்ப மோர்புல்
கஞ்சிகை மணிக்காற் பள்ளி திரையாடை துகிலுங் காட்டும்
குஞ்சரக் கிளவி யானை குளிர்நறுங் குவளைக் கும்பேர்
ஐஞ்சைநல் லெழிலே யாடாம் அஞர் துக்க மறிவி லாமை
#4
கஞ்சனம் வலியன் கல்வாய்ப் புள்ளேகண் ணாடி முப்பேர்
நெஞ்சமே மனமார் பின்பேர் நீஞ்சலே குடித்தல் நீந்தல்
மஞ்சரி யத்த நாள் பூங் கொத்துத்தார் தளிரோர் மன்னூல்
அஞ்சலி பேதை வாவ லங்கைகூப் புதலென் றாமே
#5
தஞ்சமா லெளிமை தாழ்வு தருப்பற்றுக் கோடே யைம்பேர்
துஞ்சலே நிலைபே றாகுந் துயில்சோம்பு சாவே நாற்பேர்
கஞ்சமே தாளங் குல்லை கமலம் வெண் கலம்வட் டப்பம்
அஞ்சமே யெகினப் புட்பேர் அச்சமென் றிரண்டு மாமே
#6
இஞ்சியே மதிளே யல்ல மிலங்குதோற் பலகைக் கும்பேர்
வஞ்சிமேற் செலவே யோர்பா வல்லிபெண் கருவூ ரைம்பேர்
பஞ்சிபஞ் சாடை தூறாம் பஞ்சரம் செருந்தி கூடாம்
கஞ்சியே யனங்கு ழம்பு காஞ்சிமா நகரு மாமே
#7
குஞ்சமீச் சோப்பி நாழி குறளைச்சொல் குறள்கூன் குன்றி
விஞ்சு தூய்க் கவரிக் குஞ்சி விளம்பிய நாம மேழாம்
கஞ்சனை யத்தம் பானை காஞ்சனம் பொன்புன் கேபேர்
வஞ்சமி லுஞற்றுத் தியோகம் வழக்கோதல் மனவெழுச்சி
#8
காஞ்சியே கச்சி யெட்டி கருமைமே கலையு ணர்ச்சி
பாய்ஞ்செதி ரூன்ற லோடே நிலையின்மை பகரேழ் பேரே
ஆஞ்சிகூத் தழுங்க லேலம் அஞ்சலே யயர்வச் சப்பேர்
நாஞ்சிலே மதிலு றுப்பும் நவிற்றுழு படையு மாமே
#9
வஞ்சமே யற்பங் கள்ளம் வஞ்சனை சபதம் பொய்யோ
டெஞ்சலில் கொடுமை வாளென் றியம்பிய நாம மேழாம்
நஞ்சுகார் விடம்நை தற்பேர் நவின்றபஞ் சானனந்தான்
விஞ்சுசங்கரனார் துண்டம் விளங்குசீ யப்பே ராமே
#10
அஞ்சனந் திசைக்கார் வேழ மணியுமை யிருள்க றுப்பு
விஞ்சுமோர் கற்பி றப்பு விழிக்கிடு மருந்தா றேபேர்
மஞ்சுபூண் வலிவ னப்பு மழையானை முதுகே யோட
மிஞ்சுத லிளமை சூளை மேடளி பன்னொன் றேபேர்
#11
விரியுறு மொளிசி றந்த மெல்லினந் தனிலி ரண்டாம்
வரியெது கையினிற் செய்யுள் மும்மூன்றாய் வகுத்தல் செய்தான்
திரிபுரந் தன்னைச் செற்ற செம்மலின் செம்மல் செந்தாள்
அருண்முடி சூடுஞ் செந்தி லருமருந் தையன் றானே
** ஞகரவெதுகை முற்றும்
@ டகரவெதுகை
#1
வலிசிறந் தொளிர்ப ராரை வரைச்சிற கரியுங் கொற்றக்
குலிசிதன் மருகனாய குருபர முருக வேளின்
கலினொலி பரிபு ரப்பொற் கமலமென் பாதம் போற்றி
யொலிசிறந் திடும்ட கார வெ துகையின் கவியோ துற்றாம்
#2
வடமென்ப சிலைநா ணாலே மணிக்கோவை நகர் தாம் பைம்பேர்
திடமென்ப வலியே மெய்ம்மை திட்டிகண் ணுளக்கு றிப்பாம்
குடமென்ப நகரோர் கூத்துக் கும்பங்கோக் கரும்பின் கட்டி
முடமென்ப வெய்யோன் பாகன் முதுமகன் றனக்கு மாமே
#3
அடலேபோ ராற்றல் கோறல் அணுகலே யுடன்ப டற்பேர்
மடலெழு தோடே பூவின் மட்டித ழோர் நூற் கும்பேர்
கடல்பசு வுவரி யின்பேர் கட்சிதுஞ் சிடங்கான் கூடாம்
உடல்பொருள் வலிகா யப்பேர் ஓடமே யறிவு தோணி
#4
கோடலே முறிதல் காந்தள் கொள்ளுதல் வளைத னாற்பேர்
ஆடலே வார்த்தை கூத்தோ டாண்பெண்கூ டுதல்கு னித்தல்
சூடலே மூடல் வேய்தல் சுடுவேசும் மாடு சுட்டல்
பாடலே யிராகஞ் செய்யுள் படாகைநீள் கொடிப டர்த்தல்
#5
விடலையே வெற்றி யாளன் விளங்கும்பாலைத்தோன் றற்பேர்
தொடலையே மகளி ராடல் சொற்றதே மாலைக் கும்பேர்
படலையே படர்ச்சி தொங்கல் பரந்திடும் வடிவி னாமம்
நடலையே நுடக்கம் பொய்ம்மை நாட்டும் வஞ் சனையே முப்பேர்
#6
கடைசொரி வாயி லப்பக் கடையீறோ டிடமங் காடி
விடையெதிர்மொழியேற்றின்பேர்விடுதலென்றுரைத்தல் முப்பேர்
தொடைகணை பாவு றுப்புச் சொற்றொடர் தொடுத்தன் மாலை
முடைபொதி திரட்சி நாற்ற முடைபெட்டி தவிடே கோளி
#7
விடரேகான் றூர்த்த ரோடு விடத்தொழில் செய்வோர் முப்பேர்
தொடரேசொல் பழமை தாரி துவக்குட னிகள மைம்பேர்
படரேநோய் நடைநி னைப்பு பரப்பன்பு கொடிவீ ரர்க்காம்
அடரேமல் கலின்பே ரைய மலங்குறுந் தகடே முப்பேர்
#8
தடைகுடங் கவசம் பாரி தடுத்தல்பூண் கடைபு ணர்ப்பாம்
தொடையல்வா சிகைதே மாலை தொடர்பேகட்டுதல் நட்பும்பேர்
படைமரம் பரிக்க லன்பேர் படாஞ்சுற்றும் பலகை யென்ப
கடையமிந் திராணி யாடல் கங்கண மிருபே ராமே
#9
குடைதலே கடைதல் தோய்தல் குட்டியே குருளை யெச்சம்
இடையலே யிடைதல் பட்டாம் இட்டியே யீட்டி யாகம்
மிடைதலே நிறைவி னாம மிகுத் திடல் நெருங்கலும்பேர்
புடையிடம் பாரி சப்பேர் பூட்கைமேற் கோள்தோல் சிங்கம்
#10
அடியென்ப வடிமை செண்டு வெளியேதா ளண்ட நாற்பேர்
கொடியென்ப வல்லி வஞ்சி நீளந்திண் கொடிகாக் கைப்பேர்
வடியென்ப கூர்மை யோடல் மாட்டல்மாட் டிடுதல் முட்டல்
பிடியென்ப நெடுங்க ழுத்தல் குஞ்சரங் கவரிப் பெட்டை
#11
படியங்க வடிசோ பானம் பார்நாழி குணம்ப டிப்பேர்
வெடியென்ப வெளிகள் ளச்ச மென்புகை வெள்ளி டிக்காம்
செடியென்ப விளக்கம் பாவங் குணமின்மை புதருஞ் செப்பும்
குடியென்ப குலம் புரூரங் குடித்தலே நகரே நாற்பேர்
#12
அடையிலை நகம டுத்த லப்பமிம் முப்பேர் செப்பும்
கிடையுவ மைப்பேர் வேதக் கிளரொலி கிடை கிடைத்தல்
படைநிரை படுக்கை தானை பல்லணம் படைக லப்பை
நடைவழி யுடனொழுக்கம் நற்செல்வ முப்பே ராமே
#13
கடிஞைபாத் திரஞ்சூ தாடு கருவியென் றிருபேர் காட்டும்
மடிபகை யடங்கல் சோம்பு வயிறுநோய் புடைவை தாழை
படிதலே புணர்தல் தோய்தல் படலமத் தியாய மூடல்
பொடிதலென் றுரைத்த நாமம் பொடித்தலங் குரித்த லாமே
#14
படிகமே நிருத்தம் பிச்சை பளிங்கெனு முப்பேர் செப்பும்
கடிகைநாழிகையே துண்டங் கதவிடு தாழே முப்பேர்
சுடிகையே மகுட முச்சி சுட்டியுந் திலக மும்பேர்
நொடிபிதிர் விபிட்டு நூவலென் றோதல் நாற்பேர்
#15
அடலைவெண் பொரிசாம் பற்பேர் ஆட்டிபெண் ஆட்டற் கும்பேர்
கெடவரல் மகளிர் கூட்ட மவராட லிவைகி ளத்தும்
படலிகை கைம்ம ணிப்பேர் பதாகைபீர்க் குடனே முப்பேர்
கடவுளே தெய்வம் நன்மை கடனேயுன் னல்பின் வாங்கல்
#16
குடிலமே ககனம் வஞ்சம் சடையுடன் வளைவே கோட்டம்
தடிவய லுலக்கை வில்லுத் தண்டுமீன் மசையு டும்பாம்
தொடிவளை யொருப லப்பேர் சூழ்ந்தகங் கணமுஞ் சொல்லும்
சடிலமே குதிரை துன்றல் சாற்றிடும் வேணி முப்பேர்
#17
முடியென்ப சிமிலி சென்னி முடிநாற்று முடிகி ரீடம்
குடிஞைபுட் பொதுவும் யாறுங் கூகையும் பதியும் வைக்கும்
படிவம்நற் செவ்வி நோன்பாம் பட்சியே குதிரை பல்புள்
இடிதருப் பணஞ்சு ணம்நென் மாத்தக ரம்மி டிச்சொல்
#18
மிடலேசேய் வலிவெண் டிங்கள் வேட்டலே விவாக மிச்சை
தடறேதொண் டானா ரைப்பேர் படையுறை பதகன் சாற்றும்
கொடிறேபூ சங்க துப்பாம் குடம்பையே முட்டை கூடாம்
கடறேகான் வழிவாட் புட்டில் காட்டியே பிரட்டி பன்றி
#19
தடாவென்ப மிடாவின் பேருந் தக்கநற் பெருமைக் கும்பேர்
கடாவலே யெதிர்மொ ழிப்பேர் ஊர்திதூண் டற்குங் காட்டும்
கிடாவலே வேல னாட லெறிதற்குங் கிளத்தற் பாலாம்
படாமிடு திரையே யாடை பட்டேபட் டாடை சிற்றூர்
#20
வட்டிகை யோவி யம்நால் வகையிற்சாந் தொடுகூ டைப்பேர்
கொட்டியே புறவா யிற்பேர் கூட்டமோர் மூலங் கூறும்
பட்டிகை யரைநா ணில்லம் பயோதரக் கச்சே தெப்பம்
தட்டியே பரிசை காவல் சாற்றுறும் பலகை முப்பேர்
#21
இடக்கரே மறைச்சொல் கும்பம் இடங்கழி நெருங்கல் தூர்த்தர்
கிடைத்தலே யெதிர்தலொன்றைக்கிடைத்தலென்றோதற்கும்பேர்
கடைப்பிடி மறப்பிலாமை கருதிய தேற்றஞ் சொல்லும்
படப்பையே தோட்டம் நாட்டிற் புறம்புமென் றோதற் பாலாம்
#22
கட்டலே யிறுக்க லார்த்தல் களைதலே தடைகள் ளப்பேர்
தொட்டல்கை தீண்ட லுண்டல் தோண்டலென் றோதல் முப்பேர்
தட்டலே தடையே கிட்டல் தட்டம்நச் சுப்பல் தாலம்
கொட்டலே யப்பல் மொத்தல் குடத்திமுல் லைப் பெண் ணோர்மா
#23
நாடென்ப மறுகு வையம் நவிர்பின்ன லணிபார் வைப்பேர்
தாடென்ப தலைமை கோவில் தளிர் தூறல் பெருமை யாற்றல்
ஏடென்ப மகியே குற்ற மியன்றகண் ணிமைபூத் தோடாம்
பீடென்ப குழைவே யொப்பே வலியொடு பெருமைக் கும்பேர்
#24
ஏடகம் பலகை பெண்ணை நல்லாடை யிலாங்க லிப்பேர்
பாடகஞ் சிவப்பு நீழ லொலிபாத கடகம் பன்னும்
கோடக முடியு றுப்புங் குலவுறு பரிக்குங் கூறும்
மாடகஞ் சகோடயாழ்ப்பேர் வலி முறுக் காணிக் கும்பேர்
#25
ஆடென்ப மேடம் வெற்றி யாடவர் நிருத்தம் நாற்பேர்
சேடென்ப பெருமை நன்மை திரட்சியோ டழகுஞ் செப்பும்
சூடென்ப கண்ணிற் சூடே சூட்டேபுட் டலைச்சூட் டுப்பேர்
மோடென்ப வுதரம் போழ்தல் பெருமைமே டெனுமொ ழிப்பேர்
#26
மாடுபொன் செல்வம் பக்கம் வட்டணை யறுத்தல் மொத்தல்
கோடிகந் துகில்பூந் தட்டே குண்டிகை யதற்குங் கூறும்
பாடிடம் பெருமை யோசை படுதல்பக் கம்பண் பென்றாம்
ஓடென லலவு மாமென் றுரைத்தலோ டுதல்கெ டற்பேர்
#27
ஊட்டியே விலங்கின் கன்றூண் ஒளிர்மழை மிடறே முப்பேர்
கோட்டிகண் பார்கு றிப்பேர் கூட்டம்வா யிற்குங் கூறும்
பாட்டியே நரிநாய் பன்றி பாணிச்சி பாட்டி யைம்பேர்
நாட்டியங் குறிப்பே யாடல் நல்வடி வம்முப் பேரே
#28
மட்டென்ப நறவே யெல்லை வாசமா யுதமும் வைக்கும்
கட்டென்ப மிகுதி கட்டுக் களைதலே குறிக்கா வற்பேர்
புட்டங்கோ டிகமே காகம் பொருந்துறு நிறைவும் போற்றும்
குட்டம்பூந் தடம்நோ யாழம் கொடிஞ்சிதேர் தேர்க்கூம் பாமே
#29
ஒட்டென்ப படைவ குப்பும் அற்பமு முரைக்கற் பாற்றே
பட்டடை யடைகு றட்டின் பால்விளை பண்ட ராசி
கட்டளை நிறைகல் லொப்பே யிட்டிகை யியற்ற லாணி
சட்டகந் தட்டம் பாயல் சாடுவிற் பன்னர் பாண்டில்
#30
ஒடுக்கமே யடக்கம் பாந்தல் ஒடுங்கியே முளை கூம் பற்பேர்
கடுத்தலொப்பையம் வேகங் கலங்குறச் சிந்தற் கும்பேர்
தொடுப்புழு படைவளைப்புச் சொற்புறங் கூற னாற்பேர்
வடுச்செம்பு தழும்பு குற்றம் வண்டுமா வடுவேச் சாமே
#31
உடுக்கையோர் பறையே யாடை ஒடித்தலே சொரிவொ சித்தல்
கடத்தலே நடத்தல் தூண்டல் காணுறத் தாண்டல் முப்பேர்
தொடுத்தலே வளைத்தல் பற்றல் சொற்கூட்டல் பிணித்தல் நாற்பேர்
அடுப்புயர் பரணி நாட்பேர் அச்சஞ்சுல் லிப்பேர் வைக்கும்
#32
படுகரே பள்ளங் கேணி பகர்கமண் டலமே முப்பேர்
முடுகலே விரைவே மல்லல் மூட்டுதல் மிகுதி யச்சம்
கடுமையே மிகுதி வல்லை கொடுமையே யகறல் காட்டும்
வடுகுய ரிந்த ளப்பண் மருதயாழ்த் திறத்தோ ரோசை
#33
மாடமே யுழுந்தோ டில்லாம் வட்கலே நாண்கே டாகும்
பாடமே கலைப யிற்றல் பிறங்கொளி யிரண்டும் பன்னும்
கூடமில் மறைவு வஞ்சங் குவட்டுச்சி கொல்சம் மட்டி
சேடனே வற்பேர் பாங்க னனுசன்பாம் போர்சா திப்பேர்
#34
கூடலே பொருந்த லூடல் மதுரைமா நகருங் கூறும்
பாடைவாள் தீட்டுஞ் சாணை தேயச்சொல் பகரி ரண்டாம்
கீடமே யளியே கேழல் கோற்புழு வெனக்கிளத்தும்
பீடிகை யாவ ணம்பூண் கொள்கலம் பீட முப்பேர்
#35
ஆடவ ரிளைஞர் தம்பே ராம்புரு டற்குங் கூறும்
பேடலி காம னாடல் பிறங்கிய நகரே முப்பேர்
பாடலி கள்ளே யோரூர் பட்டிமை கரவே வஞ்சம்
கோடணை வாச்சி யப்பேர் கொடுமைக்கு மொலிக்கும் பேரே
#36
சுட்டியே பட்டஞ் சுட்டி சொற்றநா வுடனே பங்கி
செட்டிவா ணிகன் செவ் வேள்பேர் தெட்டியே நாய்கன் யானை
பட்டியே யிடம்சு வாப்பேர் பகர்ந்தகள்ளுக்கும் வைக்கும்
வட்டிலே புட்டில் நாமம் வழிகூடை யுடன் முப் பேரே
#37
கட்டியே மகிழ்ச்சி யோர்புள் கருப்புவட் டுடனே முப்பேர்
கிட்டியே தலையீற் றாவுங் கிளத்திய தாளத் தும்பேர்
தொட்டியே யழகு வாயிற் சொற்றகள் ளெனவே முப்பேர்
விட்டிலே கொலையி னாமம் விளக்குறு பதங்க மும்பேர்
#38
முட்டையே தவிடண் டப்பேர் முடுவல் பெண் ணாய்செந்நாயாம்
திட்டையே யுரலு மேடுந் திண்ணையும் நண்ணு மப்பேர்
தட்டைவேய் தினைத்தாள் கிள்ளை தனைக்கடி கோல்தீ முண்டம்
ஒட்டையே நெடுங்கழுத்தல் ஒருமரஞ் சாண்முக் கோலாம்
#39
இடங்கரே குடங்கர் தூர்த்த ரெய்து நீர் முதலை முப்பேர்
முடங்கலே மடங்கல் கைதை மூங்கில்நோ யாங்கு நாற்பேர்
படங்குமேற் கட்டி சேனை பகர்பெருங் கொடிபுள் ளோசை
விடங்கமேர் கொடிகொ டுங்கை மேன்முக டிளமை யாண்மை
#40
சூடிகை கிரீட முச்சி சுடர்க்கடை மின்மினி மஞ்ஞை
சேடிவிஞ் சையரூ ரேணி செப்பிய விகுளை முப்பேர்
மோடியுள் ளத்து வஞ்சங் காநிகாள் மூதே விப்பேர்
தாடிம மென்ப தாது மாதுளை சந்தா னும்பேர்
#41
ஆடியோர் மாதங் காற்றே கண்ணாடி படியா ணிப்பேர்
சாடியே யாடை தாழி சடைவேணி வேரோர் பூடாம்
தேடியே தொழிலி லாபம் சேடமே சிறுமை மிச்சில்
காடிசோ றூறு காய்நெய் காட்டமே சமித்து வாசி
#42
மாட்சியே திருந்தல் குற்ற மமைதியே நிரப்பே மானம்
காட்சியே யறிவி னாம மின்புறக் காணற் கும்பேர்
பூட்சியே யுரிமை யின்பேர் பொருந்துறு முடற்கும் போற்றும்
ஞாட்பெனும் பேரே கூட்டம் நற்பாரம் படைபோர் நாற்பேர்
#43
விடம்விடத் தொழிலே யால மேவுறுந் தியாக்கி யப்பேர்
சடமுட லிருமூன் றேபொய் சாற்றுறுங் கொடுமைக் கும்பேர்
சுடரொளி தளிர்வி ளக்குத் தூய்க்கனல் வெய்யோன் றிங்கள்
மடமறி யாமை சத்திர மனைமுனி வாசம் நாற்பேர்
#44
வேட்டுவன் மகநாள் வேடன் விளங்குறுங் குளவி முப்பேர்
சேட்டையே விசாகங் கேட்டை சீர்கேடி முற்றில் நாற்பேர்
கேட்டையே கலதி யோர் நாட் கிழத்தியென் றறைதல் முப்பேர்
நாட்டமோர் பண்கண் ணாடல் நாந்தக முளப்பா டச்சம்
#45
நடுமையம் நடலோர் நாடி நட்டமே கேடுங் கூத்தும்
கடுவிடம் விரைவு முள்ளோ டரிதகி கசப்போ டைம்பேர்
கிடுகொரு பறையே சட்டம் கிடக்கைபூ தலம்பா யற்பேர்
படுதலே யொலியின் றாதல் பகர்தலுண் டாதல் பூத்தல்
#46
சடரமே வயிறோந் திப்பேர் தடா ரிபல் பறைமு ழாவாம்
தொடரே நூல் செய்யு ளாகும் துடுப்பேகை முலையி ரண்டாம்
விடலேகற் பிளப்பு விள்ளல் மேடுமேம் பாடு யர்ச்சி
அடகேயொன் றீடாக் கொள்ளல் இலைக்கறி யிரண்டு மாமே
#47
இடும்பரே நிருதர் கீண்பர் ஈட்டி யோர் படைவ ளர்த்தல்
கிடங்குநீர் நிலைபல் பண்டங் கிளர்சாலை கிளத்தற் பாலாம்
குடந்தமஞ் சலிதி ரட்சி குடஞ்சுட்டே சுரபி மேதி
மடங்கல்கூற் றிடிநோய் சீயம் வடவை தூ சூழி தாழை
#48
தடவென்ப பெருமை யோம குண்டமே வளைவுஞ் சாற்றும்
விடபமே மரக்கொம் பேறு விளங்குதூ றெனவே முப்பேர்
துடவையே தோட்டஞ் சோலை துடாவென்ப துழவே மஞ்ஞை
வடவை தீ குதிரைப் பெட்டை யுவாப்பிடி யெருமை வைக்கும்
#49
துடியேலம் பறை நுண் போது துடிப்புட னேழு மாதர்
நடியாடல் செவ்வே ளாடல் நாட்டிய வற்ப மேழ்பேர்
படிறேபொய் கொடுமை கள்ளம் பட்டார கன்றே வாசான்
வடிவேநன் மேனி மெய்ச்சொல் வடிதலே யொழுகல் நீளம்
#50
கோடாங் குதிரை பெட்டி குரங்குகொம் புடனே சோலை
நாடுறு மயிர்ச்சாந் தாலம் நவிற்றுநா மங்க ளேழாம்
பாடலஞ் சபதம் வாசி பாதிரி களிப்புச் சோணம்
கேடகம் பரிசை வேறு கேடிலூர் பலகை செப்பும்
#51
ஓடையே நீர்க்கி டங்கோ டொளிர்மலைச் சரிமால் யானை
மாடையிற் குயிற்றும் பட்ட மாமொன்றோ டிருமூன் றேபேர்
கோடைமேல் காற்றி னோடே குதிரைவெண் காந்தள் வேனில்
வாடையே நீடும் வீதி வடகாற்றுத் தானு மாமே
#52
கடகமே சேனை வட்டம் கைவளை பரிசை யோர்கூத்
தடகருந் திடும்யா னைக்கூட் டம்மதில் படைவீ டெண்பேர்
படகமோர் வாச்சி யப்பேர் கவரிமாப் பதலை பண்ணாம்
வடகமே சரும மத்த வாளமென் றிரண்டு மாமே
#53
பாடிபா சறைநா டாயர் பாடியே செறிப தாதி
வாடிலாப் பேரூர் மெய்க்கே வனைகவ சங்க ளாறாம்
நாடி நா சிகைந ரம்பே நவிற்றுறு துணை பெண் கூந்தல்
கோடியெண் புதுமை தூசாம் குடுமியே வெற்றி யுச்சி
#54
முடலையே பெருமை வெய்ய முடைநாற்றந் திரட்சி யுண்டை
யெடுமுர டுடன்கு றட்டோ டெய்து றுங் கழலை யேழ்பேர்
பிடக நூல் வேதத் தின்பேர் பெட்டலே விரும்பல் வேட்டல்
மடைவயல் மடையே யன்ன மணிப்பணி கடைப்பூட்டும்பேர்
#55
புட்கரம் நிறைவு வாள் நீர் புட்குழு மருந்தே நீத்தம்
முட்கம லம்மி பக்கை நுனிபாண்ட முகம்பத் தேபேர்
கொட்புறல் திரித லோடு சுழற்சியென் றிருபேர் கூறும்
பெட்புயர் விருப்பம் பீடாம் பிடரேதோண் மேலெ ருத்தம்
#56
தட்டே தேர் நடுப்பேர் முட்டுச் சாற்றிய பரிசை முற்றில்
வட்டமோ டுயர்ந்த குற்றம் வளைவுட னேழ்பே ராகும்
சுட்டலே பொறாமை யெண்ணம் தோட்டியங் குசங்க பாடம்
எட்டொரு கணித மெட்டல் எட்டிகாஞ் சிரமோர் சாதி
#57
கோடென்ப வயல்வ ரம்பூ துங்கொம்பு விலங்கின் கொம்பு
நீடுஞ்சங் கசலத் துச்சி நெடுங்கரை மரக்கொம் பெண்பேர்
தோடென்ப தொழுதி பூவின் றோடணி குழைப்பேர் தானும்
நாடும்பச் சிலையி னோடே வளைவெனு நாம மாறே
#58
கடமேவான் சுரம தந்தோற் கணங்கயி றுவாக்க துப்பு
குடம்நீதி யுடல்பொன் வெற்பின் கொழுஞ்சாரல் பன்னொன் றேபேர்
தடமேசெல் வழித டாகம் தடக்கரை பெருமை யானை
நடவிய சரிவிளைச்சல் நவில்வளை வுடனேழ் பேரே
#59
பட்டமே வழிவி லங்கின் பாயல்கே டகந்தூ சோடை
திட்டநற் பதவி யெஃகங் கவரிமாத் திகழெண் பேரே
வட்டமே பரிசை தாழ்வு வலையங்கைம் மணித்தூ சூர்கோள்
ஒட்டுநீர்ச் சாலெ ழுத்துத் திரட்சியோட் டம்பேர் பத்தே
#60
இடமேமூ விடம்வி சால மிடப்புறம் பெருமை செல்வம்
திடமேவ நெருங்க லென்னச் செப்பிய நாம மாறாம்
படமேசம் படஞ்சிம் புட்செய் படம்யானை முகப டாத்தோ
டிடமார்பாந் தட்ப டப்பே ரெழுதுறு படமைக் தேபேர்
#61
உடையென்ப குடைவேல் செல்வ முடுக்கையே முள்பூ ராடம்
நடைசரண் கலனை வாசி நற்கவ சம்மொன் பான்பேர்
குடையென்ப கவிகை கல்லை குமரவே ளாடல் நாமம்
அடைமிதி யடிமே லிட்ட கொட்டையீ கையைம் பேரே
#62
உடுவிண்மீன் கிடங்கே நாவா யோட்டுக்கோ லம்பி னீர்க்கோ
டடுகணை யிளம்பிஞ் சென்ன வுரைக்குநா மங்க ளாறாம்
படுமரக் குலையே கள்ளுப் பரவுநீர் நிலைசம் பத்தோ
டெடுநன்மை வெள்ளி லைப்பே ரியம்புறும் பொய்கை யேழ்பேர்
#63
கோட்டமே படப்பை நாடு கோயிலவ் வியமான் கொட்டில்
நீட்டுவாத் தருமம் பாசம் நீர்நிலை மருதத் தூர்யாழ்
நாட்டுகோண் குரங்கே வாவி நல்வயல் மூவைந் தேபேர்
ஒட்டமே லுதடே தோல்வி யொழுங் குறும் வீதி முப்பேர்
#64
கடிமணம் விரைவு கூர்மை காப்பச்ச மெழில்வி ளக்கம்
வடிவக லல்குல் காலம் வரைவு பேய் கடிப்பு வெம்மை
வெடிகரிப் பேசி றப்பு மிகுதிநற் புதுமை யையம்
ஒடிவில்விம் மிதம்பு ணர்ச்சி யொன்றொழி யிருபான் பேரே
#65
தகைசெறி டகர மாய வெழுத்தெது கையினிற் சார
நிகரறு கவிதை யேழொன் பானென நிகழச் செய்தான்
முகிழ்முலைக் குறமின் கேள்வன் மொய்ம்மலர்ப் பாதம் போற்றும்
அகனில மேத்துஞ் செந்தி லருமருந் தையன் றானே
** டகரவெதுகைமுற்றும்
@ ணகரவெதுகை
#1
வளங்கிள ரொளிர்ப சும்பொன் வரையுறழ் தோளுங் கண்ணும்
உளங்கிளர் பன்னி ரண்டோ டுரைக்குமீ ராறுக் கொண்ட
தளங்கிளர் நெடிய வேலோன் றண்மலர்ச் சரணம் போற்றிக்
களங்கற வருண கார வெது கையின் கவியைச் சொல்வாம்
#2
இணரேபூப் பூம்ப ராக மியன்றபூங் கொத்தே முப்பேர்
புணர்வேதோய்ந் திடலி சைப்புப் பொருபவென் றோதற் கும்பேர்
துணரேபோ துப்ப ராகம் துண்டில்வேய் சூழ்தற் கும்பேர்
உணர்வேநல் லறிவே யூட றீர்தற்குந் தெளிவுக் கும்பேர்
#3
மிண்டலே நிறைவி னாமம் நெருக்குதற் கும்வி ளம்பும்
கண்டல்கே தகைமுள் ளிப்பேர் கணிச்சியொண் மழுவு ளிப்பேர்
கொண்டல்மே கங்கீழ் காற்றாம் கொண்மூவென் பது விண் மேகம்
வண்டல்பெண் கூட்ட மாடல் மாண்புமாட் சிமைப்பேர் நன்மை
#4
சண்டனே யலிகால் வெய்யோன் தணித்தல்சே மித்தல் தீர்த்தல்
குண்டமீ ரெட்டாண் டிற்பெண் குளமாழங் கும்பம் பன்றி
புண்டா நுதற்கு றிப்பேர் பொலிவுறு கழுகும் போற்றும்
கண்டகம் வயி முள்வாள் கதிர்விடு சரிகை நற்பேர்
#5
பேணலே கருத லாசை பிணர்கோங்கு நெருக்கங் கட்டி
கோணலே மாறு பாடே கூன் சிந்து வளைவே நாற்பேர்
காணலே குறித்தல் பார்த்தல் கழலிணை பணிதல் முப்பேர்
மாணலே நன்மை யின்பேர் மாட்சிமை தனக்கு மாமே
#6
ஆணமே குழம்போ டன்பாம் அணில்வரிப் புறங்காற் றென்றாம்
ஓணமா யோனா ளாறாம் உண்மையே நியதி சொல்லே
காணமே பரியூண் செக்கோர் கண்ணர்பொன் னளத்தல் கொள்ளாம்
கோணமே குதிரை வாளங் குசம்வளை வுடனே மூக்காம்
#7
வண்மையே வளங்கொ டைப்பேர் வலிபுகழ் குணமே வாய்மை
ஒண்மையே யறிவு நன்மை யோங்கிய வழகே முப்பேர்
வெண்மையே யறிவி லாமை விளர் தன்மை கற்கண் டென்ப
எண்மையே யிறுமாப் பேந்தல் எண்டோளி துர்க்கை காளி
#8
அண்டம்வான் பறவை முட்டை யமரர்த மிருக்கை மத்தாம்
பண்டம்பொன் பரிகா ரப்பேர் பணவையே பரண் துடிப் பேர்
துண்டஞ்சா ரைப்பாம் பின்பேர் துணியொடு வதன மூக்காம்
கண்டென்ப கரும்பின் கட்டி கழலைகண் டித்தற் கும்பேர்
#9
மண்டலம் பருதி நாடு வட்டமிம் முப்பேர் வைக்கும்
அண்டரே பகைவர் வானோ ராரென் றாக முப்பேர்
சுண்டனே சதைய நாளுஞ் சூறனும் வேறு காட்டும்
குண்டலம் விசும்பே வட்டம் குழையெனு முப்பே ராமே
#10
இண்டையே பதுமம் மாலை யேணமான் வலியி ரண்டாம்
தொண்டையா தொண்டை கோவை சொற்கள முவாத்து திக்கை
உண்டையே திரளை பிச்சை யுறுதிரள் படையு றுப்பாம்
கொண்டையே மயிர்மு டிக்கு மிலந்தையின் கனிக்குங் கூறும்
#11
திண்டியே களிறு பூமி தெழித்திடும் படக முப்பேர்
பிண்டிபிண் ணாக்க சோகு தருப்பணம் புணர் தம் நென்மா
சுண்டியே சுக்கோர் பூடாம் துணியறை சேறே தூக்காம்
கண்டிகை பதக்கம் வாகு வலையமே கலன்பெய் செப்பாம்
#12
பண்டே முன் பேப ழப்பேர் பணிலஞ்சஞ் சலம்வெண் சங்காம்
கண்டூதி காஞ்சொ றிப்பேர் தினவிரு பேருங் காட்டும்
வண்டேவெண் சங்கங் குற்றம் வளையளி வாளி யைம்பேர்
செண்டேகூர் மைப்பேர் வாசி யூர்வெளி பூச்செண் டேபேர்
#13
உண்ணலைம் பொறிய ருந்த லூட்டல்பூட் டுதலே முப்பேர்
தண்ணுமை பறைப்பொ துப்பேர் நிசாளஞ்சாற் றிடுமு டுக்கை
கண்ணுளர் நிருத்தர் தம்பேர் கண்ணாளர் தனக்குங் காட்டும்
அண்ணலே பெருமை பெற்றோ னரசன் முல்லைத்தோன் றற்பேர்
#14
பண்ணவ னருகன் நீத்தோன் பகர்ந்தபுத் தேளே முப்பேர்
தண்ணமோர் கட்ப றைப்பேர் தறித்திடு மழுவும் வைக்கும்
திண்ணமே மெய்ம்மை திட்பம் திணிபுவி திண்ணி யன்பேர்
நண்ணுத லணுகல் போகல் பொருந்து த னவிற்று முப்பேர்
#15
காணியே யுரிமை யோரெண் கண்ணுதல் சிவனுள் ளற்பேர்
வாணியே யோர்நிருத்தம் வாக்குநா மகட்கும் வைக்கும்
தோணிரே வதிநா ளோடம் தொடைமதி லுறுப்பே சேறாம்
நாணிலச் சைப்பேர் தானே கயிறுபூ ணெனவும் நாட்டும்
#16
தூணியோ ரளவை யாவம் சுண்டையோர் புதர்ந றாவாம்
வேணிநீள் சடையி னாமம் விசும்பாறே முப்பேர் செப்பும்
ஆணியே யெழுதுங் கண்டம் ஆன்றகா லாணிக் கும்பேர்
ஏணியே யுலகோ டெல்லை யிறவைமா னென்றுஞ் சொல்லும்
#17
வாணிகன் றுலாரா சிப்பேர் வசியற்கும் வழுத்தற் பாலாம்
வேணவா மிகுதி வேட்கை விண்ணொளி முகிலா காயம்
பாணமே மேக வண்ணக் குறிஞ்சியெய் கணைபூம் பட்டாம்
சேணுய ரம்நீ ளப்பேர் சேய்மையோ டகல மைம்பேர்
#18
சேணரே யூழி காலஞ் சேகர மெழுவாய் பூமி
பாணரே சிலதர் பாட்டோர் பாணித்தல் நெடும்போழ் தேசொல்
வாணரே கவிஞர் கூத்தர் மாண்டல்மாட் சிமையே பொன் றல்
யாணரே புது மை தச்சர் அழகுடன் வளநன் மைப்பேர்
#19
துணங்கற லென்னு நாமம் விழவிரு ளிரண்டுஞ் சொல்லும்
கிணுங்கலோ ரோசை துன்றல் கேண்மைகண் ணோட்டம் நட்பாம்
குணுங்கர்தோற் கருவி யாளர் குயிலுவ ரிழிஞர் முப்பேர்
கணம்பர னுடுநோய் வட்டந் திரட்சிபேய் கால நுட்பம்
#20
உணர்தலே யொற்ற றுத்தல் நினைத்தற்கு முரைக்கற் பாற்றே
குணவுகீட் டிசைகு ணக்காம் கொண்கனே துறைவன் வேட்டோன்
புணரியே கடலொ லித்தல் புரப்புயர் கரைத னிப்பேர்
அணவலே யெழுச்சி புல்லல் அணுக்கஞ்சந் தனமே பாம்பாம்
#21
கண்ணிதார் முகுளம் வெய்ய வுயிர்படு கயிறே முப்பேர்
புண்ணியந் தருமஞ் சாணி புணையேவேய் விலங்கு தெப்பம்
மண்ணீடு வேயர் கூட்டம் வயங்குவே திகையி ரண்டாம்
தண்ணீர்மை குணந்தெருட்சி தணத்தலே பிரிதல் பையுள்
#22
அணையென்ப வமளி சேதாம் ஆண்டாரே யுடையோர் தேவர்
பிணையென்ப வுழைவி லங்கின் பெண்ணுடன் பெட்பே முப்பேர்
கணையம் பொன் யானைக் கம்ப மெழுவுடன் காவற் காடாம்
துணைவன்றோ முன்பின் மந்திரி தோயுறுங் கொழுந னாற்பேர்
#23
அணல்மிட றுடனே கீழ்வாய்ப் புறமென வறைதற் பாலாம்
உணவுவெண் புழுக்கல் நாம மொளிர்மாரி யிரண்டுஞ் செப்பும்
பிணவலே சுனகத் தின்பேர் பெண்களிற் பொதுவும் பேசும்
தணியலே கள்ளி னாமஞ் சாற்றுறுங் கமையு மாமே
#24
ஆண்டகை சிறப்பின் மிக்கோ னப்பவர்க் கப்பே ரென்ப
ஈண்டென்ப விரைவிவ் வண்ண மிவிடமே புலிது டக்கி
பாண்டுவெண் மைநோய் ஓர்கோ பணித்தலே நல்கல் பேசல்
தூண்டலே நடத்தல் பார்த்தல் சுண்ணமே சுதைநறுந்தூள்
#25
உண்டியே யுண்ணல் சோறாம் உண்டாட்டா டல்பெண் ணாடல்
தெண்டிகை யுளமார்ப் பாகர் தெவர மெனவுஞ் செப்பும்
பண்டிதர் கவிபார்ப் பாயுள் பண்டாரந் துறவோர் கூலம்
மண்டிலங் குதிரை வட்டம் வளாவுசா ரிகையே முப்பேர்
#26
சண்டமே கொடுமை யின்பேர் விரைவினிற் குறிப்பே தாழ்வில்
மண்டுறு பெருமை மற்றைத் திரணமும் வழுத்தற் பாலாம்
முண்டமே பிட்டுச் சென்னி மொழிநுதற் குறிதி ரட்சி
பிண்டமே திரளை பிச்சை பிறழ்கரு வுடனே முப்பேர்
#27
குணமென்ப சிலைநாண் புந்தி கும்பமுக் குணமே சீர்மை
யுணர்வின்பங் கயிறே யொன்றை விசேடித்த லொழுக்க மேபேர்
மணமென்ப வதுவை வாசம் மணுங்கொரு கணிதந் தாழி
பணமென்ப துரகம் பாம்பின் படமிசை பகர்முப் பேரே
#28
தண்டென்ப குழாயே வீணை தடிப்படை மிதுன ராசி
கொண்டெழுஞ் சிவிகை யேசெய் வாம்பெனக் கூறேழ் பேரே
தொண்டொன்பான் தொழும்போர் பூடே வுருவிடு சுருக்கே தொன்மை
விண்டென்ப மாயோன் வெற்பே மேகமே மூங்கில் காற்றாம்
#29
அண்டசந் தவளை யோந்தி யரணைமீ னுரகம் பல்லி
நண்டுடும் பாமை பக்கி நவில்கராப் பன்னொன்றேபேர்
குண்டலி யென்ப தேமுத் தாபலம் கூறோர் சத்தி
மண்டலி பாம்பு பூனை மகிதலம் நாயெ னாற்பேர்
#30
வண்ணமே யழகு சந்தம் வருணமொப் பனையே பண்பே
பண்ணமர் கவியே யோசை பகர் செய்மை யெண்பேர் பன்னும்
நுண்ணல்வாக் குள்ளோன் மந்திரி நுண்ணென்ப மிகுதி நுட்பம்
மண்ணணு முழவ மண்ணொப்பனைகழுவுதற்கும் வைக்கும்
#31
பாணிநீ ரொலிநா டோதல் பண்டந்தார் பாடல் கைபற்
றேணுபல் லியம்நொடித்தற் பொழுதுகா வீரா றேபேர்
கோணிதைப் பையே பன்றி குறி மதி லுறுப்புங் கூறும்
கேணியே மடுக்கி டங்கு கிளருல குடனே முப்பேர்
#32
மணியென்ப விதைப ருக்கை வனப்புயர் கருமை நன்மை
தணிநவ மணியே கண்டை சாற்றுமா மணியே யெண்பேர்
அணிகமே சிவிகை நாம மான்றநா வாய்க்குஞ் செப்பும்
பிணிமுக மெதின மஞ்ஞை புட்பொது வெனுமுப் பேரே
#33
பணிமொழி தொழிலே யேவல் பாம்புதோற் கருவி பூணோ
டணுகிய பெருமை மிக்க வளிகொடை யொன்பான் பேரே
கணியொரு சாதி செண்ப கம்வேங்கை மருத வேலி
பிணிமெலி வுடனோய் கட்டல் பிணிகைமேற் போர்வை கச்சாம்
#34
அணியழ கணிதல் பூணோ டலங்கார மணிவ குத்தல்
நணுகிய முன்னற் சென்று நடத்தலோ ரசையென் றேழ்பேர்
குணில் குறுந் தடிக டிப்பாம் குண்டென்ப குதிரை சட்டி
துணிசவி துணிவு துண்டஞ் சோதிநா ளிந்நாற் பேரே
#35
தாணுவே நிலைபே றோங்கல் சங்கரன் சிசுவை குற்றி
தூணுயர் சாலே யென்னச் சொற்றநா மங்க ளேழாம்
வேணுவே சிலைவாள் மூங்கில் வெய்யவுட்டுளைப்பொருட்பேர்
ஆணுவே யிரதம் நன்மை அணுவான்மா விரேணு நுட்பம்
#36
ஆணையே மெய்ம்மை வென்றி சூளேவ லிலாஞ்ச னைப்பேர்
பூணுறு விதியே யொன்றைப் பொருந்துறச் செய்த லேழ்பேர்
கோணையே யழிவிலாத விளமைக்கு மிசைக்குங் கூறும்
தூணமாற் பதமே தம்பஞ் சொற்றன பகையு மாமே
#37
கண்ணென்ப வகலம் பொற்புக் கருத்துக்கண் பெருமை மூங்கில்
எண்ணயப் புணர் வே ழாம்வேற் றுமையரு ளிடப்பேர் பத்தாம்
தண்ணடை மருதத் தூர்கான் றழைத்தநா டுடுக்கை பன்னம்
எண்ணெளி மைவி சார மெள்வலி சோதிடப்பேர்
#38
பண்ணையே மருத வேலி பதனம் நீர்த் தாழ்வே பொய்தல்
விண்ணவர் குzaaங்க ளேகான் மிருகந்துஞ் சிடம்பூ டேழ்பேர்
பெண்ணையே யோர்ந திப்பேர் பெரும்பனை யதற்கும் பேசும்
மண்ணையே யிளமை வெம்பே யறியாமை வழுத்தன் முப்பேர்
#39
அணங்குபெண் கொலைவ ருத்த மாசைநோ யழகே தெய்வங்
குணங்கிளர் விழாவே யச்சம் வெறியாடற் குறிபேர் பத்தாம்
துணங்கையோர் நாளே கூத்தே விழவெனச் சொல்முப் பேரே
நுணங்கலே நுண்மை தேறல் நுணவையெண் ணோலை பிண்டி
#40
துணையேதோள் துரிதம் நட்புச் சொற்பிணை யளவு கூத்துப்
பணை தாருக் கடுத்தல் வெற்றி பாட்டெனும் பேர்பன் னொன்றாம்
இணையேநே ரிரண்டு மாத ரியற்கண்வேல் பனிச்சை யோதி
கணையே போர் முரசம் வாரி பூரநாள் திரட்சி காட்டும்
#41
பாண்டிலே றூர்தி கஞ்சம் பரியங்கம் வட்டந் தீபம்
காண்டநற் றகளி வாகை கழையிடு திரையொன் பான்பேர்
தோண்டலே முகத்தல் தொட்டல் துணிதலே வலித்தல் வெட்டல்
ஆண்டேயவ் விடஞ்ச மைப்பேர் அறைந்தபைம் புல்நெற் கும்பேர்
#42
புண்டரீ கஞ்ச ரோசம் புலிதிசைக் கரியே வண்டே
யுண்டநோ யொன்றோ டேபூ டொன்றெனு நாம மாறாம்
தண்டமே குடைக்கா லூர்தி தண்டித்தல் கதை பண்டார
மண்டலம் வரம்பே தானை வனகரி தடமொன் பான்பேர்
#43
திணைநிலங் குலமொ ழுக்கம் மருதத்தின் பறைய கஞ்சேர்
திணை புறத் திணையு யர்ச்சித் திணையேயஃறிணையே யெண்பேர்
பணை வயல் பரியின் பந்தி பருத்தல்வேய் பெருமை போதி
பிணைமரக் கோடே பெற்றும் பறைபுற மொன்பான் பேரே
#44
கண்டமே கவசம் வெல்லங் கழுத்திடு திரைவாள் துண்ட
மண்டலம் பூமி யானை துயிலிடம் வழுத்தோ ரெண் பேர்
முண்டகந் தாழை கள்ளு முளரிமத் தகமுண் மூலங்
கொண்ட திண் கடலே சென்னி குறித்தபேரேழென் றாமே
#45
காண்டம் நூல் முடிவே தூசு சு நீர் வெங்காடே புந்தி
மாண்டகு படைக்க லம்பூண் கொள்கலம் வானோர் கூட்டம்
நீண்டவொண் கோலே தீர்த்தம் நிறைகமண் டலந்தி ரட்சி
பூண்டவார் திரையே யென்னப் புகன்றபேர் மூவைந் தாமே
#46
நண்ணரு ணகார மாய வெதுகையி னடாத்துஞ் செய்யு
ளெண்ணவை யையொன் பானா யிசைத்தன னீர்ங்க டற்சூர்
விண்ணடைந் திடவே றொட்ட வீரன்றாட்டுணையைப் போற்றும்
அண்ணலஞ் செந்தின் மேவு மருமருந் தையன் றானே
** ணகரவெதுகை முற்றும்
@ தகரவெதுகை
#1
பூங்கமு குறழ்கி ரீவப் புலோமிசை தடந்தோ டோயும்
பாங்குயர் குலிசி துன்பந் துடைத்தபன் னிருத டக்கைக்
காங்கயன் சிகியூர் செவ்வேள் கமலப்பொற் பாதம் போற்றி
யோங்கிய வெழிற்ற கார வெது கையின் றொடையோ துற்றாம்
#2
வித்தகம் பெருமை கல்வி வித்தகர் வினைஞ ராயர்
பொத்தகங் கோசமென்ப சித்திரப் படாமும் போற்றும்
மத்தகம் நெற்றி சென்னி வத்திரம் வதனந் தூ சாம்
உத்தரம் வடக்கு நூலி லொன்றெதிர் மொழிமே லும்பேர்
#3
உத்தரி யுரகம்யானை யுவர்ப்பொதி கடற்கே யாகும்
பத்திரி குதிரை யம்பு பறவைபா சடைகா ளிப்பேர்
கத்திரி வங்கம் பாந்தள் காதம்யோ சனைப யப்பேர்
சித்திர புங்கம் பாணந் நிகந்தவோ வியத்தூ சாமே
#4
அத்தியே கொலையெ லும்போ டார்கலி மரமொன் றியானை
சத்தியே கவிகை கான்றல் சத்துவ முமைவேல் சூலம்
பத்தியே முறையொ ழுக்கம் பகர்வழி பாட டைத்தல்
சுத்தியோர் கருவி சங்கஞ் சுடரகல் சுத்தம் நாற்பேர்
#5
மத்திகை விளக்குத் தண்டே வாசியோட் டுறும்ப டைப்பேர்
கத்திகை தொடைவி கற்பந்து வசமே கமழ்வா சந்தி
பித்திகை கருமு கைக்கே பெயர்சுவர்த் தலமும் பேசும்
பத்திரை யிலையே யாவே பகர்மையந் திதியென் றேபேர்
#6
அத்தனே மூத்தோன் தாதை யைம் முகன் றானே முப்பேர்
சுத்தனே யருகன் றாணுத் துளிநறாப் பதுமத் தண்ணல்
புத்தன் சாக் கியனே மாலே புகன்றிடும் அருகன் முப்பேர்
முத்தனே விடையோன் புத்தன் முடுவலோன் அனக னாற்பேர்
#7
நத்தமே யிருளு மூரும் நந்தொடுண் மையாக் கப்பேர்
துத்தம்யா ழிசைபால் குக்கி சுனகங்கண் மருந்தே பற்றாம்
அத்தம் பொன் வழிபாதிகை யாடிசொற் பொருள்கா டோர்நாள்
மத்தமூ மத்தை மோக மதயானை மகிழ்ச்சி மத்தாம்
#8
ஆதார முடலே மாரி அதிதியே புதியர் யோகர்
மாதாவம் பிகையே யன்னை மதுரையோர் புரிந றாவாம்
சேதாரந் தேமா வின்பேர் செய்யபொன் னுரைதேய் மானம்
பாதாளந் துவாரந் தென்றீ பதிகம் நூன் முகத்தி ரிப்பேர்
#9
அதமுயர் கொலையே யத்தி அதிகமே பொலிவு மிச்சம்
இதழ்பனை யேடு பூவி னிதழுத டெனவிம் முப்பேர்
கதழ்வுவே கஞ்சி றப்புக் கடுத்தலே பெருமை நீளம்
சிதடனந் தகன்மூ டன்பேர் திதிபக்கம் நிலைபே றும்பேர்
#10
பந்திர மிலைவ னப்புப் படைநன் மைசிறகே யானம்
குத்திரம் வஞ்ச மேபொய் விரைவினிற் குறிப்பே குன்றாம்
சித்திர பானுச் செந்தீ திவாகர னாண்டொன் றேயாம்
சத்திரங் குடையி ரும்பே சாலைகை விடாவேல் வேள்வி
#11
மதலையே பாவை கொன்றை மரக்கலந் தூண்கொ டுங்கை
சிதலைநோய் துணிசெல் லென்ப சீதம் நீர் குளிர்மே கப்பேர்
பதலையோர் கட்ப றைப்பேர் பருப்பதந் தாழி யென்ப
கதலிவா ழைப்பேர் தேற்றா காற்றாடி துவசம் நாற்பேர்
#12
பீதகம் பொன்மை சாந்தே பிறங்குபொன் னிருவே லிப்பேர்
சூதக மேயா சூசந் தோகைமார் தோயாப் பூப்பாம்
போதக மிளமை நாவாய் புகல்பனை களிற்றான் கன்றாம்
சாதகம் வானம் பாடிப் புட்பூதஞ் சனன முப்பேர்
#13
ஏதமே துன்பங் குற்ற மெளிமையென் றிசைக்கு முப்பேர்
சூதமா மரமே பாத ரசம்பிறப் புடன்சு ரும்பாம்
போதமே பஃறி ஞானம் புதுமையே நவமி குத்தல்
கீதமே தவளை வண்டே கிளத்து மெல் லிசைவேய் நாற்பேர்
#14
அதர்வழி நுண்மணற்பேர் ஆதண்மெல் லெனல் சூழ் நோயாம்
புதர்செடி யறிஞர் தம்பேர் புத்தேளே புதுமை தெய்வம்
சிதர்மழை தூறல் சிக்கஞ் சிந்துதல் நுணுக்க ணுப்பேர்
மதர்களிப் புடனே வீரம் மதாணிபூண் பொதுப்ப தக்கம்
#15
கதம்பமே கூட்டம் நீபங் கலவைச்சே றுடன்ச பைப்பேர்
நிதம்பமே யல்கு லென்ப நெடுமலைப் பக்க மும்பேர்
பதங்கம்வீப் பொது விட்டிற்பேர் பதாயுதங் கூர்வாள் கோழி
சிதம்விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப் பட்ட தாமே
#16
விதிசெயல் வான்முறைப்பேர் விரிஞ்சனற் குணந்தொன்னூலாம்
சதியுரோ கிணிகற் பாட்டி தவிராத வட்டம் போனம்
பதியரன் கேள்வ னூராம் பதுக்கைகற் பாறை தூறாம்
விதியுளி விவாகம் யாகம் வேட்டற்கு மிட்ட பேரே
#17
வெதிர்செவி டுடன்கம் பித்தல் விளங்குபைங் கழையே முப்டேர்
பிதிர்கதை நொடியே தூவல் பேசரு நுணுக்க ணுப்பேர்
கதிரொளி யிரவி திங்கள் களிநெல்லா தியகு ரற்பேர்
எதிர்தலே மலர்த றோன்றல் எதிர்தொடர்ப் பூவெ திர்த்தல்
#18
மாதவந் தவமே கள்ளே வசந்தகாலமுமே முப்பேர்
சேதகஞ் செங்கேழ் சேறாம் சேது செய் கரைசி வப்பாம்
பாதவம் விடபி வெற்பாம் பதகம்புட் பொதுவே பாவம்
நாதம் மெய்ப் பொருளே யோசை நதியாறு மாலை யாமே
#19
மாதர்பெண் ணிடைச்சொல் வேட்கை மதர் வீர மழகு லாவல்
சாதனம் படைப்பொ துப்பேர் தடந்தோய்பீடிகைதொண் டோலை
சூதரே வலவர் பாணர் சூதாட்டம் வல்லோர் கூத்தர்
ஈதலே கடைகொ டைப்பே ரிறகரி தற்கும் பேரே
#20
மாதேபெண் குற்றத் தின்பேர் மதன்சிலை வேள்வ னப்பாம்
சூதேகூத் தாடரங்கஞ் சொற்றவல் நளினந் தீச்சொல்
போதேபூப் பொழுதிரண்டாம் பொதிகிழி பொதிதல் மன்றம்
கேதேதிண் பதாகை மஞ்ஞை கிளத்தொரு கோணாள் நாற்பேர்
#21
குதையேவிற் குதைமொட் டம்பு கொம்புறும் பசியே முப்பேர்
சுதையேயீன் றிடாவா வெண்மை சுண்ணஞ்சாந் தமுதே யைம் பேர்
புதையேவெங் கணையின் கட்டுப் புதுமையே மறைவே தேகம்
கதையே தண் டப்பேர் வார்த்தை காரண மிம்முப் பேரே
#22
ஓதையே யொலிம திற்பே ருரைத்தமோ தகமுஞ் செப்பும்
சீதையே பொன்னாங் காணி படைச்சால் சீ ராமன் றேவி
மேதை தோல் புதனி றைச்சி மிக்கபே ரறிவு கள்ளாம்
பேதையோர் பருவ மூடம் பெண் தரித் திரனே நாற்பேர்
#23
வீதியே செவ்வணேகல் வெருவுதல் தெருவே முப்பேர்
சோதியே விடையோன் காந்தி சுடரோன்மா லருக னோர் நாள்
பூதியே துர்க்கந் தப்பேர் பொலிவுறு நரகும் போற்றும்
ஏதிவாள் படைப்பொ துப்பேர் எதிர்ப்பேசொல்லடுத்தலும்பேர்
#24
மாதிரம் நிலமா காயம் மலை திசை யுவாவே யைம்பேர்
சோதினி துடைப்பஞ் செத்தை துதியேத்தல் அகில்நு திப்பேர்
போதியே யரசோ டாசான் பொதிர்ப்புப்பீ டுடன டுக்கம்
வேதியே யயன் கேட் டைப்பேர் வேதிய ராயுள் விப்பிரர்
#25
உதியனே மாறன் சேரன் ஒலிக்குமீ ரங்கொல் லிப்பேர்
மதியசைச் சொல்தெருட்சி மாதமுன் னிலை திங் கட்பேர்
கதியுயர் கதிநான் காய கதியைந்து கதிக்குங் காட்டும்
வதிதளர் சேறே பாதை மது கர மொலிவண் டேகள்
#26
அத்தென்ப தசைச்சொல் செம்மை யசைநாணோ டிசைப்பே நாற்பேர்
தித்தேகூத் தின்வி கற்பந் தித்து தல் பகைத்தல் முப்பேர்
தொத்தேபூங்கொத்துத் தொண்டாம் சுதனேவெண்டிங்க டோன்றல்
தத்தைமூத் தாள்கி ளிப்பேர் சதஞ்சிற கிலைநூ றாமே
#27
அத்தவா ளங்கா டேயுல் லாசமாம் போர்வைக் கும்பேர்
உத்தரி யம்மே காச மொண்பரிப் பேருஞ் செப்பும்
சித்தனே வயிர வன்பேர் சினேந்திரன் எண்சித் துள்ளோன்
குத்தலே பறித்த லின்பேர் குத்தற்கு முரித்த தாமே
#28
கூத்தனே யுயிர்ந டன்பேர் கோதோதல் குற்றங் கோதல்
போத்தேயாண் விலங்கு பாயல் பொங்கர்செம் போத்தே நாற்பேர்
பாத்தென்ப கஞ்சி சோறு பகுத்திடல் விளிதல் முப்பேர்
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வி யுறுபத னழிவென் றாமே
#29
சாத்தனே புத்தனையன் சினவரன் முப்பேர் சாற்றும்
சேத்தைய முறப்ப சைச்சொற் றிகழ்கருத் துவமை சோணம்
நீத்தநீர் திகழ்வெள் ளிப்பேர் நிதியேபண் டாரஞ் சேனை
தீத்தமே விழாவு நீரும் தீத்தனே யருக னாசான்
#30
மாத்திரை நொடிக்குங் காலை மருந்தொரு குருவிற் பாதி
காத்திரி யிருப்பு முட்பேர் உரகங்கீ ரிக்குங் காட்டும்
கோத்திரம் வரகு பூமி குலமுடன் மலையே யென்ப
சூத்திர முபாயம் நன்னூல் சுதமிறங் குதல்பிள்ளைப்பேர்
#31
ஒத்தலே நடுவோ டொப்பாம் உ தியூ துந்துருத்தி விஞ்சை
தைத்தலொப் பனையே துன்னல் ததைதலே மிடைதல் விள்ளல்
பைத்தலே யுருத்தல் பச்சை பாத்திசெய் பகுத்த லில்லம்
கைத்தலே கசப்புற் பத்தி கைதவம் பொய்துன்பப்பேர்
#32
முத்தமே யுவகை யோட்டம் முத்தந்தண் மருத வேலி
சத்தமேழ் குணமொ லித்தல் சத்தியஞ் சபத மெய்யாம்
பித்தமே தெளிவி லாமை பிணங்குமோர் நாடிக் கும்பேர்
சுத்தமே தருப்பை யுள்ளம் சுசியெனு முப்பே ராமே
#33
முதுவரே யமைச்சர் மூத்தோர் முத்திபே றலர்மின் றேமல்
வதுவையே கடிநாற் றங்கா " வல்புள்ளா ணின்பேர் வைக்கும்
பொதுளலே தழைத்த லின்பேர் செறிதலும் போற்று மப்பேர்
மது கமே யிலுப்பை யெட்டி மதுரமாந் தராவு மாமே
#34
மதவிடம் புலவி காமர் வலிபுடன் மித்தி வையம்
கதவமே புதவங் காத்தல் காவலென் றோதல் முப்பேர்
பதனமே யரணம் யானை பதவிதாள் வதியே மோக்கம்
மிதவையே தெப்பஞ் சோறாம் மெத்தைபூ வணைசட் டைப்பேர்
#35
விதப்பேகம் பிதமி குத்தல் வேணகை யுறுப்பா சைப்பேர்
கதுப்பேயாண் மயிரே மஞ்சள் கவுளுடன் முப்பேர் காட்டும்
செதுக்கேமந் திப்பேர் பூதஞ் சேறுடன் செதுக்க னாற்பேர்
இதக்கோற் புளிப்பி னாம் மிசைக்குமப் புக்கட் டாமே
#36
விதவைகை மணியி னாமந் திருவிலிக் கேவி ளம்பும்
நுதல்புரு ரஞ்சீர் நெற்றி நுதம்புசோ றெள்ளி ரண்டாம்
மதமிகு செருக்கே யானை வழுத்துறுஞ் சமய முப்பேர்
உதகமே தெண்ணீர் பூமி உதும்பர மத்தி செம்பாம்
#37
ஊதிய மிலாபங் கல்வி ஒதுக்கமே மறைவு மார்க்கம்
பாதியே பகிர்தல் தூறு பருதிதேர் வலவன் முப்பேர்
சேதியொற் றுரைசே தித்தல் சித்தாந்தங் கடுகே சின்னூல்
போதியே யிரதத் தின்பேர் போதஞ்செய் வதற்கு மாமே
#38
ஆதவர் வெய்யோர் பார்ப்பார் ஆதல்தேர் தல் நுண் மைப்பேர்
மூதென்ப முதுமை யீதல் முத்தேவெண் குருகு முத்தம்
வேதண்டம் வெள்ளி வெற்பாம் விளங்குறுங் கிரிக்கும் வைக்கும்
வாதுவர் யானைப் பாகர் வாசிமா வடிப்போர்க் கும்பேர்
#39
விதனமே களைவி சாரம் வித்தென்ப விதைவி தைத்தல்
சதனமே புள்ளின் றூவி தழைக்குறு மிலைக்குஞ் சாற்றும்
கதனமே கலக்கங் காடு குதிரையின் கதிமுப் பேரே
மதனமே மிகுதி வேட்கை மத்தனங் காம நோயாம்
#40
அதிகாரஞ் சாத்தி ரப்பே ரதன்முக மரசு செய்யல்
சதகோடிப் பேரே வச்சிரஞ் சாற்றுறு நூற்றுக் கோடி
சிதலேநற் சிதாய்க னித்தோல் சிதவலே துவச மோர்புள்
மதுவேயோர் நிருதன் றீங்கள் வசந்தகா லப்பே ராமே
#41
இதை காரா மணிக லப்பை யெழிற்புதுப் புனம்நா வாய்ப்பாய்
புதரேபுல் புருவம் பூடாம் பொதிமூடை பொதித லாகும்
முதலேமூ லிகைதன் கையின் முதலிட முதல்மும் மூர்த்தி
இதலேநற் கவுதா ரிப்பே ரிசைசிவ லிப்புட் குப்பேர்
#42
காதென்ப கொலையே காதாம் கைதூவா மையி டாமை
யோதும் வேல் விகற்ப மேகை யொழியாமை முப்பேர் கூறும்
பீதமே மஞ்சள் பொன்மை கத்தூரி பொன்னாற் பேரே
வேதமே பாழி யற்பேர் விளங்காதி நூற்கு மாமே
#43
துத்திநெய் விழவே தேமல் துணங்கையா டல்நா ளோடே
பத்திசெய் ஞானம் பாந்தட் படப்பொறி யிருமூன் றேபேர்
தித்தியே குரங்கு தோற்பை தித்தல்தேஞ் சுணங்குஞ் செப்பும்
மித்திரனிரவி நட்பாம் வேதிகை பலகை திண்ணை
#44
உத்திசெந் திருவு றுப்புச் சுணங்குர கப்ப டத்தின்
றொத்துறும் பொறியே தொங்கல் துவசமோ ருரையே யேழ்பேர்
குத்திமண் ணடக்க மென்ப குதிரையே மரைவா சிப்பேர்
பத்தியங் கடுக்காய் பூவாக் காய்நோயுற் றோனூண் பன்னும்
#45
பூதமா லிறந்த காலம் புவிமுத லைந்தே சீவன்
பாதமார் பரணி நாள்வெம் பாரிடம் புனித மேழ்பேர்
ஆதனா ருயிரே பேதை ஆதரஞ் சிலம்பே வேட்கை
ஓதனம் பெருமை வெண்சோ றுடனுண்ட லெனவே முப்பேர்
#46
ஆதியே முதல்நே ரோட லருகன்மா லிரவி யீசன்
ஓதிம முயர்த்தோ னே மண் டிலமாயோ டற்பே ரெட்டாம்
பாதிரி பாட லப்பேர் பணைத்தெழு மூங்கிற் கும்பேர்
ஓதிபெண் மயிர்வெற் போந்தி யுதிபூனை யெகினம் ஞானம்
#47
சாதியே பிரம்பு கள்ளுத் தாருத் தேக் கமுத வல்லி
யோது சண் பகந்தி ணைப்பே ருரைக்குநா மங்க ளேழாம்
பூதியம் புவியு டற்பேர் பூதரம் பன்றி வெற்பாம்
ஓதிம மசல மன்னம் ஒளிர்மயிர்க் கவரி முப்பேர்
#48
கோதைமுன் கைத்தோற் கட்டே குழல்தார்காற் றொழுங்கு சேரன்
பேதைநெற் சுமையே கோதா விரிநதி பெண்பேர் பேசும்
காதைசொற் கதையி னாமம் கைதொடல் தீண்டல் துய்த்தல்
பாதைசெல் தாரி நாவாய் பைதலே யிளை துன் பப்பேர்
#49
காத்திர மவய வப்பேர் களிற்றின்முற் காலே சீற்றம்
பூத்தநற் றிரையே கூற்றே பூதிய மிருமூன் றேபேர்
பாத்திரங் கடிஞை மானார் பாது காத் திடல்வ ருத்தம்
நேத்திரங் கண்பட் டாடை நீதிமந் திரிநெ றிப்பேர்
#50
அத்திரி யுலைத்து ருத்தி யசுவமொட்டகம்வா லேபம்
குத்திரந் தருவோர் யோக முனிவனேழ் பேருங் கூறும்
சித்திர மழகோர் பாடல் சிறந்தபொய் மணியே ரண்டம்
அத்திரி யோவி யத்தோ டதிசய மெண்பே ராமே
#51
பதமடி வரிசை சோறு பகர்வழி செவ்வி போழ்தோ
டிதமறு கொடுசொல் கால மியல்வீரங் குழைவு சேமம்
நிதமுறு கடிகை யாடை நிகழ்த்து று மூவைந் தேபேர்
உததிதெண் டிரைந திப்பேர் உதையமே புலரி தோன்றல்
#52
தாது மண் முதலா மைந்துந் தமனிய மாதி யேழுந்
தீதறு மிரத மாதி பேழுஞ்செங் காவிக் கல்லும்
போதுறு துணருந் தொண்டும் புகன்றிடு கலைகா ராவும்
ஏதமில் பொடியுஞ் சீவ னில்லன கொடியு மாமே
#53
மணிதிகழ் வலித்த கார வெது கையின் வழுத்துஞ் செய்யுள்
எணிலோரைம் பானொன் றென்ன விசைத்தனன் கமலத் தோன்றன்
றிணிதிகழ் முடிபு டைத்த சேவலக் கொடியோற் போற்றும்
அணிதிகழ் செந்தின் மேவு மருமருந் தையன் றானே
** தகரவெதுகை முற்றும்
@ நகரவெதுகை
#1
காமுறு மொளிர் வெண் டிங்கட் கற்றையஞ் சடிலத் தண்ணற்
கோமுறு பொருளை யோது முலகெலா முணர்ந்த மூர்த்தி
யேமுறு மெழிற்க லாபத் திருஞ்சிகிக் கடவுட் போற்றித்
தோமறு முயர்ந கார வெது கையின் றொடையைச் சொல்வாம்
#2
இந்தன மிசையே காட்ட மெரியிடுங் கலன்பு கைப்பேர்
சந்தன மிரதஞ் சாந்தம் சாந்து சந் தனஞ்சுண் ணப்பேர்
பந்தனை புதல்வி கட்டல் பந்திதேர்க் கால்நி ரைப்பேர்
மந்தனந் தயிரின் றாழி மதயானை முகப டாப்பேர்
#3
விந்தமோர் வெற்பே மேலோர் விந்தையாச் சரியந் துர்க்கை
சந்தமேர் நிறம் வனப்புச் சாற்றிய கவிதை சாந்தம்
குந்தமே நெடிய தைவேல் குதிரைநோய் குருந்தம் நாற்பேர்
பந்தமே திரட்சி கட்டுப் பாவங்கை விளக்கே நட்பாம்
#4
நந்தியே சிவன் செக் கான்பேர் நவிற்றுமோர் பறையே யேறாம்
புந்தியே புதன்ம திப்பேர் போந்தைமால் யானை பெண்ணை
சந்தியே யந்தி மூங்கில் சதுக்கமோ ரிசைகன் னற்பேர்
குந்திபாண் டவர் தம் மன்னை குடித்ததீங் கள்ளு மாமே
#5
மந்திரி குபேர னெண்ணீர் மந்திவண் டொடுகு ரங்காம்
சந்திர மயிலின் றோகை தயங்குபொன் வட்ட முப்பேர்
முந்திரி யோரி லக்கம் முதிர்சுவைக் கனித்தா ரொன்றாம்
தந்திரி சேனை காப்போன் சாற்றும்யாழ் யாழின் றந்தி
#6
சிந்துர மோர்புள் யானை சிந்திசிந் தித்தல் சிந்தல்
கந்துகம் குதிரை பந்தாம் காந்தார மிசைகான் றேயம்
பந்துகந் துகமும் மட்டுப் படர் நீர் தூஉந் துருத்தியும் பேர்
துந்துமி யோராண் டின்பேர் துவைக்குறும் பறையு மாமே
#7
இந்தென்ப மதியங் காரி யியங்குறுங் கரடி முப்பேர்
செந்தென்ப நரக மோரீ சீவனொ டணுவே நாற்பேர்
தந்தென்ப சாத்தி ரம் நூல் தந்திரம் பனுவ றண்டம்
மைந்தென்ப வலிம யக்கம் மைந்தனே மதலை பூமான்
#8
காந்தனே யிறைவன் வேட்டோன் காந்தியே யெழிலி மைத்தல்
சாந்தமே கமையும் சாந்துஞ் சாற்றுகோ மயமுங் கூறும்
கூந்தலே மாத ரோதி கொழுமயிற் பீலிக் கும்பேர்
வேந்து வெண் மதியே வெய்யோன் வியாழமிந் திரனே மன்னன்
#9
ஏந்தலே பெருமை மேடோ டேந்து தல் வேந்தன் வெற்பாம்
சாந்தைபூ தலம்கங் கைப்பேர் சந்ததம் சதம கிழ்ச்சி
காந்தமோர் புராணம் வன்கற் கடைமருந் தோர்பு தற்பேர்
தீந்தொழில் வேள்வி பாவம் செந்தழல் எரிகேட் டைநாள்
#10
அந்திலாங் கசையி டப்பேர் அந்தண ரறவோர் பார்ப்பார்
வந்திகை வந்திப் பட்ட மலடிபூண் பொதுச்சு ணங்காம்
கந்திரு வம்பண் வாசி கடவுளர் சாதி முப்பேர்
எந்திர மிரத மாலை யெயிலுறுப் பெழுத்தே நாற்பேர்
#11
அந்தர மிடைவி சும்போ டளவுடன் மேக நாற்பேர்
கந்தர முழைக ழுத்தே கரும்புய லழகே யென்றாம்
நந்தர முல்லை மாக்கள் நவிற்றுறும் புதல்வர்க் கும்பேர்
கொந்தள மாத ரோதி குழற் கொத்துக் குருளே முப்பேர்
#12
அந்தரி துர்க்கை நாம மகிலமீன் றிடுமு மைப்பேர்
கந்தனே யருகன் செவ்வேள் காந்தாரி நூற்றோர் தாய்பண்
சுந்தரி யிந்தி ராணி சுண்டனென் றிருபேர் கூறும்
மந்தனே கதிரோன் மைந்தன் மதிகூர்மை யிலனு மாமே
#13
எந்தையே யப்பன் சுவாதி ஈசனென் றோதற் கேயாம்
சிந்துவாரம்வெண்ணொச்சி தெண்டிரைக் கடல்வில் முப்பேர்
தந்தமே நகை வெண் கோடு தத்தமென் றோதற் கும்பேர்
நந்தல்கே டுடனே யாக்கம் நந்தைமுற் றி திகொற் றானாம்
#14
சந்தானந் தேவ தாரு சந்ததி யெனவுஞ் சாற்றும்
மந்தாரஞ் செம்பரத்தம் வானவர் தருவி ரண்டாம்
சிந்தூரந் திலகஞ் செம்மை செங்குடை புளிம ரப்பேர்
சந்தாரம் வழிமு டக்காம் சாந்தாற்றி விசனம் பீலி
#15
கந்தமே கிழங்கு நாற்றம் கழுத்தடி பகுத்தல் செம்பொன்
வந்தவிந் திரியமன் பென்றே வகுத்தபே ரேழும் வைக்கும்
கொந்தமே சவளம் வேள்வி குறித்திடும் படியே முப்பேர்
அந்தமீ றழகே யென்றாம் அந்தகன் குருடன் கூற்றாம்
#16
சிந்துவா மனமே முச்சீர் தெண்கடல் நதியோர் தேசம்
உந்து நீர் வெட்சி யென்றே யோதுறு நாம் மேழாம்
கந்து பண் டியுளி ரும்புங் கம்பமும் யாக்கை மூட்டும்
வந்துறு பற்றுக் கோடும் வகுத்தயே நிந்நான் காமே
#17
உந்திதே ருருள்யாழ்க் கண்ணொன் றுயர்ச்சிகொப் பூழ்ப றத்தல்
நந்திலாப் பசுவின் கூட்டம் நதிப்புனற் சுழிய ளக்கர்
புந்திசெய் யாறே யென்னப் புகலுறு மொன்பான் பேராம்
மந்திரம் விசாரங் கோயில் வாசியின் குழாம் வீ டேகள்
#18
தெளிவினி னுயர்ந கார வெது கையிற் சிறக்குஞ் செய்யுள்
எளிதிலா வெண்ணி ரண்டென் றின்புற வுரைப்பச் செய்தான்
பளிதமார் தடந்தோட் செவ்வேள் பங்கயப் பாதம் போற்றும்
அளிதிகழ் பொழில்சூழ் செந்தி லருமருந் தையன் றானே
** நகரவெதுகை முற்றும்
@ பகரவெதுகை
#1
கண்கைகால் முகம்வாய் செங்கேழ்க் கமலநேர் மலரின் மாது
கொண்கன்வார் கராச லத்தைக் குறித்தடு பகுவாய்ச் செங்கண்
வண்கராச் செகுத்த வாழி மான்மரு கோனைப் போற்றிப்
பண்பினா லுயர்ப கார வெது கையின் றொடைப ணிப்பாம்
#2
விபுலமே பெருமை பூமி விரிவெனு முப்பேர் செப்பும்
தபுதலே கேடுஞ் சாவும் சபலையே சலிவு மின்னல்
கபிலையோர் நிறம்ப சுப்பேர் கைப்பேகைத் தல்வெ றுத்தல்
சுபமழ குடனே வெண்மை சோபன மிம்முப் பேரே
#3
அபாமே கவசத் தின்பே ரியானைப்பின் கால்பிற் பக்கம்
தபனன்றீ யாத வன்பேர் சபதிசீக்கிரமே வெம்போர்
இபமென்ப மாக்கோட் டின்பே ரியானையென் றிசைக்கு மப்பேர்
அபரங்கங் கடைக்க ணித்த லணிநகர் கவச மாமே
#4
விபூதியே கொடுமை குற்றம் விடக்குவெண் ணீறே செல்வம்
கபோதமே புறாப்பொ துப்பேர் கரும்புற வுக்குங் காட்டும்
குபேரனே யளகை வேந்தன் குளிரலர் மதியி ரண்டாம்
அபாரமே யளவின் மைப்பே ரறைபரம் பொருளு மாமே
#5
நீபமே கடைய யற்சொ னாளும் நீர்க் கடம்பு மாகும்
சாபமே யங்க தச்சொற் றனுவரை யாடே முப்பேர்
கோபமே சீற்ற மீதல் குறிக்கு மிந் திரகோ பப்பேர்
யூபமே வேள்வித் தம்பம் உறு படை வகுப்பே மட்டை
#6
தாபர முனிவர் வாசந் தருவுடல் மலையே சார்வாம்
ஞாபக மரும்பொருட்பேர் நவிற்று நல் லறிவு மேயாம்
சோபமே கள்ளால் சீயம் சோம்புமென் றோதன் முப்பேர்
தீபர்வா ணிகரே நீராம் தீபம்நற் சுடர்பல் தீவாம்
#7
காப்பென்ப கதவே நீறே காவல்தூ சுடனே வேயாம்
யாப்பென்ப நகைபோர் செய்யு ளேணியின் பழுவே கட்டாம்
சீப்பென்ப கதவின் றாழுஞ் செப்பிய கங்க மும்பேர்
பூப்பென்ப மகளிர் தோயாப் பூப்பொடு பூத்த லாமே
#8
பாப்புவெம் பணியே பார்ப்பார் பப்பேசூ பகம்வி சாலம்
நாப்பண்யாழ் கண்ணு றுப்பே நடுவுட னுருள்தேர்த் தட்டாம்
தூப்புவா யங்க ணப்பேர் மதகிலுட் டுளைக்குஞ் சொல்லும்
சாப்பை புற் பாய்பணித்தோல் தைப்பைசட்டைபொ திப்பேர்
#9
உப்புமெல் லியலா ராட லுவர்க்கட லராக மின்பம்
கப்பிளங் கொம்பு யர்ச்சி கருதிய மிகுதி முப்பேர்
சுப்பிரந் தூய்மை வெண்மை துப்பைவெற் றிலையே போராம்
செப்புரை கரண்ட கப்பேர் சிவப்புச்செம் புடனாற் பேரே
#10
ஒப்புர வதுக டைப்பா டுண்மையொப் புரவே முப்பேர்
செப்பமே நடுநிலைப்பேர் தெருவுடன் வழியே நெஞ்சாம்
சுப்புர பவுணாவே வேண்டற் பாடேசொற் பொறி நுகர்ச்சி
கப்பண மிரும்பிற் செய்யும் நெருஞ்சின்முட் கைவே லாமே
#11
வைப்பென்ப திடம்ப திப்பேர் வைத்தலூ ணுண்டல் நாற்பேர்
கொப்பென்ப கூந்தல் கொம்பாம் குப்பையே யாகு கூட்டம்
வெப்பென்ப மால்கால் வெம்மை விபுதரே நிபுணர் விண்ணோர்
ஒப்பென்ப திசைபொ ருத்த லுவமைகட் டழகே நாற்பேர்
#12
ஆயினஞ் சிறபர் வீதி யான்றிகழ் செருத்தற் கும்பேர்
சோபானந் தாழ்வா சப்பேர் சொற்றகற் படையும் வைக்கும்
காபாலி விடையூர் நாத னவனாட லிருபேர் காட்டும்
பூபாலன் வேந்தன் செவ்வாய் பூபதி யரசன் சேடன்
#13
அப்பல் சாந்தணிதல் மொத்தல் அபயன் செம்பியனே சூரன்
கொப்பர மொருதே யம்மெல் லடைவின்மை முழங்கைக் கும்பேர்
தப்பலே குற்றந் தப்பல் தபதிதச் சன்னி டப்பேர்
மைப்புய லது விண் மேகம் மாபெலி யவுணன் யாளி
#14
உபமென்ப திரண்டி னாம முபமான மெனவும் பாற்றே
விபரீதம் வேறு பாடு மிகுதியென் றிவையி ரண்டாம்
உபதான முதவும் பிச்சை யுறக்கங்கொள் தலையா ணிப்பேர்
அபரமிதம் பெருமை யின்பே ரளவின்மை தானு மாமே
#15
குப்பமே சிற்றூர் பொன்னாம் கோபுரஞ் சிகரி தானம்
ஐப்பசி யோர்திங் கட்பே ரசுபதி நாட்கும் வைக்கும்
கைப்புலி மதமா லியானை கதித்தவா ளுழவர்க் கும்பேர்
சுப்பிர தீபந் திக்கோ ரியானை நற் சுடர்வி ளக்காம்
#16
கைபுனை யென்ப தேபூத் தொடுத்தல்கான மலரே செப்பம்
மெய்புணர்ந் துற்ற கண்க ளணிதலா டவர்மின் னாரை
யை பெற வலங்கரித்த லபிதான மிவையா றேபேர்
எய்புகற் பேரே பன்றி யேவெய்த றனக்கு மாமே
#17
துப்புநெய் பகைய ரக்குத் துகிரூற்ற மனுப வஞ்சோ
றொப்பினற் பொலிவே யுண்ட லொளிர்படைப் பொதுவி லங்கூண்
தப்பில் சொற் பிணையே முற்றஞ் சாற்றிய தூய்மை வன்னஞ்
செப்புடன் றெளிது ணைக்கா ரணமொரு பானேழ் செப்பும்
#18
தெள்ளிதா யுயர்ப கார வெதுகையி னுரைக்குஞ் செய்யுள்
உள்ளமா ரீரெட் டென்ன வுலகினிற் புகலச் செய்தான்
கள்ளறா மலர்ப்பூங் கொந்தார் கடம்பணி குகனைப் போற்றும்
அள்ளறாச் செந்தின் மேவு மருமருந் தையன் றானே
** பகரவெதுகை முற்றும்
@ மகரவெதுகை
#1
மாண்கிள ரொளிசி றந்த மரகதக் கலாப மஞ்ஞைச்
சேண்கிளர் பரிது ரக்குந் தெய்வகுஞ் சரிம ணாளன்
பூண்கிளர் தாட்டு ணைப்போ துளத்திடை நினைந்து போற்றிக்
காண்கிளர் கவின்ம கார வெது கையின் கவியைச் சொல்வாம்
#2
சமங்களிப்புடனே யொப்புச் சங்கிரா மமுமப் பேரே
கமந்திகழ் நிறைவே மூசல் காமாரி சிவனோர் சாலி
தமந்திமி ரம்மி ராகுத் தம்பமென் றுரைப்பேர் சாற்றும்
சுமங்கலை வறட்சுண் டிப்பேர் சொல்வண்ண மகளு மாமே
#3
அமலையே மிகுதி சோறோ டம்பிகை முப்பேர் வைக்கும்
விமலையே துர்க்கி கங்கை வெற்பிறை மகட்கு மென்ப
கமலையே திருவி தாதா கம்பையோர் நதிப ணைத்தல்
நிமலைபார்ப் பதியே சேவூர் நிருமலன் றனக்கு மாமே
#4
சாமமே யாமம் வேதஞ் சாமள வனமு பாயம்
வாமமே குறளி டப்பால் வயங்கலோர் சமய மூராம்
காமமே குடியூர் வேட்கை கதிரிறை யொழுங்கே கொன்றை
நாமமே பெருமை நற்பேர் நம்பியர்ச் சகனே யேந்தல்
#5
அம்மையே வருபி றப்போ டம்பிகை யழகே தாயாம்
சும்மையே படுக்கு நெற்போர் நாடொலி சுமையுஞ் சொல்லும்
செம்மையே சிவப்புச் செப்பம் செவ்வைநற் பெருமை நாற்பேர்
கொம்மையே ரிளமை வட்டம் குயந்திரட் சிகை கொட்டல்
#6
அம்பென்ப தளிரே தண்ணீ ராசுக மிம்முப் பேரே
சம்பென்ப நரியே நாவல் சங்கர னருகன் வேதா
வம்பென்ப புதுமை கச்சு மணம்நிலை யின்மை மேற்கோள்
தும்பென்ப சிம்பே தோடாம் தும்பிவண்டு டன்மால் யானை
#7
உம்பரே தேவ ராகு முயர்நில முடன்மே லும்பேர்
கும்பமே குடமி ராசி கும்பிமத் தகமுங் கூறும்
தம்பமே கவசந் தூணாம் தாம்பேதா மணிநா ணாகும்
விம்பமே யுருவங் காந்தி விரிந்தெழுங் கோவை முப்பேர்
#8
அம்பலே சிலர றிந்தே யறைமொழி பழிமொ ழிப்பேர்
உம்பலே யூற்றம் யானை உற்றநற் குலனே முப்பேர்
பம்பலே நிறைவே யாற்றல் படர்ச்சிபொன் னணவ லோசை
நம்பலே வேட்கை நம்பல் நாமென்ப வெருவல் தானாம்
#9
அம்பலஞ் சித்திர கூட மான்றபே ரவையு மாகும்
கம்பல மேற்கட் டிப்பேர் சிம்புளின் படாமுங் காட்டும்
செம்புலம் பாலை வேலி செருக்களம் வகுக்க லாகும்
சம்பளம் தகர்கி டாய்ப்பேர் சேவகத் திலாபஞ் சாற்றும்
#10
வாமனங் குறளே யோர் நூல் மாதிரக் களிறே முப்பேர்
காமனே மதன்சு ரும்பு பிப்பிலி முப்பேர் காட்டும்
சோமனோ ரேந்தல் கட்டுந் தூசுவெண் டிங்கள் சொல்லும்
வீமனே கலுழ னாமம் விளங்குமோ ரேந்த லாமே
#11
அம்பிநா வாயே தெப்ப மான்றொடர் பூட்டே முப்பேர்
கும்பியே நரகம் யானை கோம்பிசக் கரப்புள் ளோந்தி
உம்பியே யிளவல் விண்ணோர் ஓம்பலே புரத்தல் காத்தல்
கம்பியே கலன்செய் கம்பி காதணிப் பொதுவு மாமே
#12
அம்பரங் கடலே விண்ணே யான்றதூ சுடனே முப்பேர்
கொம்பர்கொம் புடன்வெங் காற்றாம் கோமானே மூத்தோன் சாத்தன்
சம்பரங் குலிசம் வெய்யோன் சாபமோ டெலுமிச் சைப்பேர்
பம்பரஞ் செம்பொன் மேரு கறங்குமோர் கலனும் பன்னும்
#13
கம்புளே சம்பங் கோழி கதிர்சங்கம் வானம் பாடி
கிம்புரி தந்தப் பூண்பேர் கிளர்முடி யங்க மாகும்
சிம்புளெண் காற்புள் சிம்புள் செம்புகா வற்பொன் செம்பாம்
கம்பள மயிர்ப்ப டாஞ்செய் கமைசாந்த முரிமை யாமே
#14
அம்புதி கடல்கால் பாட்டி னத்தமென் றுற்ற நாமம்
கம்பலை யொலிந டுக்கங் கருதச்சம் படைதுன் பப்பேர்
வம்பலர் புதிய ரோடே அயலவர்க் கும்வ ழுத்தும்
பம்பைமுல் லைப்பறைப்பேர் நதியருந் தவப்பெண் பன்னும்
#15
அம்மழ கசைச்சொல் நீராம் ஆம்பிரம் புளிப்பே சூதம்
கம்மயன் றலைகால் வெண்மை ககனம் நீர் நதிகா ராடாம்
பொம்மலே பொலிவுஞ் சோறும் பொருந்துபோ ருடனே முப்பேர்
கிம்மையே யுரிமை யுப்புக் கிளர்த்தும்பண் பெனுமுப் பேரே
#16
இம்மியே நுண்மை செம்பொன் இயன்மதி யுடனோ ரெண்ணாம்
தொம்மொலி குழுவெ னும்பேர் தோமரி யோரெண் கூத்தாம்
வெம்மையே வெருவு தற்பேர் விருப்பமுட்டணமுஞ் சொல்லும்
கம்மியர் கைவினைப்பேர் கண்ணாளர் தமக்கு மாமே
#17
தாமரை புலிச ரோரம் சமன்யம னடுவோ டொப்பாம்
தேம் விரை யகில்தேன் றித்தல் செம்பைசிக் கடியோர் பூடாம்
காமர மத்த நாளால் கடிபொழி லிசைய டுப்பாம்
பூமர மறிகு றிச்சொல் ஒரும்பூ மாமு மாமே
#18
நேமிதே ருருள்பார் வட்டம் நெடுங்கட லமைபுள் ளாழி
சாமிபொன் னிறையி னாமம் சம்மட்டி குறடாக் கூடம்
பாமினி விறலி காவாம் பைம் பொன்னே யிமயஞ் செம்பொன்
ஏமினி யிடுதி ரைப்பேர் கிடையாடை யிருபே ராமே
#19
நிமிர்தலே யுயர்ச்சி யோட்டம் நீட்டித்தல் சோறே நாற்பேர்
திமிர்தமே யொலிதி மிர்த்தல் சேமங்கா வற்பேர் சேமம்
ஞெமிர்தலே பரப்பி றுத்தல் வளைத்தலு மெனநிகழ்த்தும்
குமிழொரு மரமே சேற்றிற் குமிழியுங் குவித்த லும்பேர்
#20
சிமிலியே குடுமி பூனை திருவிலி யுறிதோ ணிப்பேர்
அமுதமே யினிமை வெண்பா லமரரூண் மழையே நாற்பேர்
குமுதமே குசைய டுப்புக் குளிராம்பல் லொலிதிக் கியானை
அமையழைத் திடுதல் மூங்கில் அம்பகம் விழியெ ழுச்சி
#21
அமரரே விபுதர் தெவ்வர் அமையஞ்சம் மதித்தல் போழ்தாம்
குமரனே யிளையோன் செவ்வேள் கூறிடுந் தோன்றல் முப்பேர்
தமரமே யரக்கோ சைப்பேர் சமழ்ப்புநாண் வருத்தந் தாழ்தல்
அமர்தலே பொலிவு மாழி அமரேபோ ரமர்த லாமே
#22
சாம்புவே பறைபொன் னின்பேர் சமைகுணம் வருடமென்றாம்
தூம்புவேய் துளைம ரக்காற் றொகுநிதி வழித றூம்பாம்
தேம்பலே யிளைத்தல் சோம்போ டலையலுஞ் செப்பற் பாற்றாம்
கூம்புதேர்ச் சிகரங் கூம்பல் கொம்பேபீள் சினையே முட்டை
#23
சேம்புசா கினியே சேம்பாம் திமிரமே நிசிய றைப்பேர்
ஆம்பிகா ளானே சத்தம் அமோகமே மிகுதி வேட்கை
தேம்பியே வருத்தம் யானை சிமையம் திண் மலைவெற் புச்சி
காம்பிரம் முருக்கு வீரம் கம்பமே நடுக்கம் தம்பம்
#24
குமரமே கொம்பி லாத மிருகமும் குழவுங் கூறும்
இமைமயூ ரம்நி மைப்பே ரெண்குட னற்பம் நாற்பேர்
அமரநோய் பொருட்சொலோர் நூல் அம்பிகை யுமைகா ளிப்பேர்
கமரெனு நாம வெள்ளில் காய்நில வெடிப்பு மாமே
#25
ஆமல கந்தா னெல்லி யவிரொளிப் படிக மும்பேர்
ஈமமே மயானங் காட்டம் ஏமாப்பேயிறுமாப் பேமால்
ஊமையே கீரி மூகை உம்மை முன் பின்பி றத்தல்
மாமையே நிறம்வ னப்பு மாழ்கிரக் கக்கு றிப்பாம்
#26
கூம்பலே குமிழ்கூம் பற்பேர் கோமள மிளமை பாலான்
சோம்புசோ பம்ம ழுங்கல் துமிதுளியுடன் துணித்தல்
பாம்பு பாந் தள்ள ணைப்பேர் உடம்புடுக் குத்தி ரப்பேர்
நாம்பல்சொற் பேரி ளைத்தல் நவிற்றுடன் மெலிநோ யாமே
#27
விமானமே யூர்தி வெய்ய விண்ணவ ருலகெனும்பேர்
தமாலமே பசும்பி டிப்பேர் தழைத்தபச் சிலையி ரண்டாம்
இமாசலம் பனிநீர் மேரு இமமேதண் பனிபொன்னின்பேர்
சமாதியே விளிவு யோகம் சம்பையோர் தாளம் மின்னல்
#28
குமரியே கௌரி கன்னி கொற்றவை யாற்றி னொன்றோ
டமர்வரி கற்றா ழைப்பேர் அழிவின்மை யுடனே ழேபேர்
சுமடுசும் மாடு மூடம் தோமரம் படையோர் வாச்சியம்
கமலநீர் செம்ப டாமுங் கடிகமழ் முளரிக் கும்பேர்
#29
ஆம்பல் தீங் கள்ளே கவ்வை யல்லியங் கயம்வேய் திங்கள்
தூம்புசே ரூதுங் கொம்பே சொற்றவெண் பண்ணொன் பான்போர்
காம்புவேய் மலர்த்தாள் பட்டுக் கடிமலர்க் கொம்பே நாற்பா
சாம்பலே பழம்பூக் கூம்பல் தமிழ்தமி மினிமை நீர்மை
#30
செம்மலா தவன்ப ழம்பூச் சிவன்வாரி சிறந்தோன் மைந்தன்
பொம்மல்வா டாப்பூ வீரர் பொழிற்றலை மைப்பேர் பத்தாம்
கைம்மமே கடனீர் நன்னீர் காணிய கைம்மை முப்பேர்
விம்மலேங் குதலொ லித்தல் விளங்கிய நிறைவு மாமே
#31
ஏமமே சேமங் காவல் ஏமாப்பின் பம்பொன் மையல்
நாமமார் கலையோ டாற்றல் நள்ளிர வொன்பான் பேரே
ஓமெனு நாமந் தானே ஓங்காரஞ் சம்ம தித்தல்
ஆமென்ன லிடைச்சொல் இன்றோ டன்றெனல் ஈர நீர்மை
#32
அம்பட லந்தா னோடம் வெளிவெள்ளி மரக்கா லம்மி
செம்பொன் செய் யிரத மீயம் செப்பும்பே ரேழென் றாகும்
அம்பணந் துலாக்கோல் வாயு வம்பிதுப் பாமை வாழை
அம்புயப் பேரே புட்டில் அலர்ந்ததா மரைக்கும் பேரே
#33
தாமமே யெழில்பூ மாலை தயங்கலூர் கடுக்கை யானை
வாமநீண் முடியங் கப்பேர் வரையமர்க் களமொ ழுங்கோ
டேம்மார் மணியின் கோவை யிடங்கயி றீரே ழேபேர்
யாமமே யிரவுந் தெற்கும் சாமமு மியம்ப லாமே
#34
முரண்டொகு மெழின்ம கார வெது கையிற் செய்யுள் முப்பான்
இரண்டென வுலகிற் போற்றி யிசைத்தனன் திட்ட மாகிக்
கரண்டகங் கவிழ்த்த வேழத் திளவலாங் கடவுட் போற்றும்
அரண்டொகுஞ் செந்தின் மேவு மருமருந் தையன் றானே
** மகரவெதுகை முற்றும்
@ யகரவெதுகை
#1
மணிதிகழ் தரங்க வாரி சுவறிட வயங்கு செம்பொற்
றிணிதிகழ் மேருக் குன்றங் குலுங்கிடச் சிறக டிக்கொள்
தணிதிகழ் மயூர மூருஞ் சண்முகன் றாளைப் போற்றி
யணிதிகழ் யகார மாய வெது கைப்பா வறைய லுற்றாம்
#2
ஆய்தமே நீளம் புள்ளி யக்கர மிவையி ரண்டாம்
காய்தலே புலர்வு வேட்டல் கடுங்கோப மிம்முப் பேரே
வேய்தலே சூடல் மூடல் வீடுகோ யிற்பொன் மீட்டல்
பாய்தலே பரப்புப் பாய்தல் பயினே பொய் பிசின் பயிற்சி
#3
இயமமே வார்த்தை யோசை யீயேவாச் சியமே நாற்பேர்
பயன்மிகு மறிவி லாபம் பயிர்ப்புக் குச்சிதம்ப யிற்றல்
அயர்தலே அயர்ச்சி செய்தல் ஆய்வே நுட் பம்வ ருத்தம்
வயவனோர் புள்ளே வீரன் வயங்கு கா தலற்கும் பேரே
#4
வயாவென்ப கருப்பங் காதல் மாழ்கிய பிணியே முப்பேர்
பெயரென்ப பெருமை நாம மபிதானப் பேரும் போற்றும்
வியரென்ப தறிஞர் வேர்வை வீநீக்கம் பூப்புட் சாவாம்
அயர்வுசோம் புடன்வ ருத்தந் தெளிவின்மை யிடமென் றாமே
#5
வியலென்ப வகலங் கானம் மேம்பாடே பெருமை நாற்பேர்
மயலென்ப மயக்கஞ் செத்தை மருட்டுபேய் நெருப்பென் றாகும்
செயலென்ப வினையே காவல் சேறுட னொழுக்க மென்றாம்
முயலென்ப சசமுயற்சி மொய்ம்புதோள் வலியெ ழிற்பேர்
#6
அயிலென்ப நாஞ்சில் கோரை யழகுடன் கூர்மை வேலாம்
கயிலென்ப பிடர்த்தலைப்பேர் கலன்கடைப் புணர்ப்பு மாகும்
குயிலென்ப துளைமு கிற்பேர் கோகில மிம்முப் பேரே
எயிலென்ப மதிள்பு ரப்பேர் இயைபேபா வுறுப்பி சைப்பாம்
#7
அயிரேசர்க் கரை நுண் மைப்பே பான்ற நுண் மணற்கும் வைக்கும்
செயிரேகுற் றஞ்சினத்தல் தேயம்நா டுடல்தி ருட்டாம்
வயிரேகூர் மைப்பே ரூதுங் கொம்பென வழுத்தற் பாற்றே
துயிலேதூங் கற்பேர் மாளல் தோயுறல் புணர்தல் மூழ்கல்
#8
மயிலையே மீனி ராசி மலர்ந்திடு மிருவாட் சிப்பேர்
கயினியே யத்த நாளுங் கைம்மையு மிருபேர் காட்டும்
குயிறலே குதித்தல் செய்தல் கூவல் சீர் குடைதல் நாற்பேர்
வயினிடப் பேர்வ ரம்பே வயிறுடன் பிணையென் றாமே
#9
வையம்யா ழுரோணி பண்டி வயங்கலா னேறே பூமி
சையகஞ் சயனம் வெற்பு சையோரக் கரமி கழ்ச்சி
நையரி வாளே துக்கம் நைதலே மிகுதி நாற்பேர்
தெய்வமூழ் கடவு ளின்பேர் தீயோர்வே தியரே தீம்பர்
#10
தையேபோர் மதி நூல் நீவல் தாளச்சீர் தைத்த லைம்பேர்
மெய்யேயொற் றுடல்மெய் கூட்டம் வியஞ்சாதல் வில்மழுப்பேர்
பையேமெத் தென்றல் பைம்மை பணிப்பட மழகே நாற்பேர்
ஐயேயே பிருமல் சுவாமி யசைச்சொல்மந் தாரம் பொள்ளாம்
#11
உய்யலே பிழைத்த லுஞ்சல் உயிரென்ப காற்றே சீவன்
ஐயைபெண் துர்க்கை காளி யம்பிகை யுடனா சாள்பேர்
தொய்யலே யெழுதல் சேறு துயரெழில் மகிழ்வோர் பூடாம்
பையுள்நோய் சிறுமை யின்பேர் பையங்கோ ரைப்பேர் கூடை
#12
வாயிலைம் புலன்றி றங்கா ரணந்தூதே மனைக்க டைப்பேர்
ஆயுதம் படையே கூத்துப் பயிலிட மிரண்டு மாகும்
தீயரு நரகே தீங்காம் தித்திப்புந் தழலுஞ் செப்பும்
மாய்தலே மறைவே சாவாம் வாய்க்காலே மகநாள் நீர்க்கால்
#13
பாயசம் படரோர் பூடு மட்டபாற் சோறும் பன்னும்
வாயிடம் வாய்மை யூதுங் குழல்வரு வாய்வாய் வாக்காம்
சாயலென் பதுவ னப்புச் சமம் நுண்மை மேம்பா டென்றாம்
மாயமே யுயர்தல் நீளம் வஞ்சம் பொய் தொகையைம் பேரே
#14
நாயென்ப சுனகஞ் சாரி நயம்நன்மை மகிழ்ச்சி மேதை
தாயமே யுரிமை யாடுங் கவற்றுருள் தமரே முப்பேர்
தோயமே புவனம் நீராம் சுயம்பேதா னாதல் முந்தை
ஞாயமே வழக்கம் நன்மை நாயகம் தலைமை மையம்
#15
வேயேயாழ் கவனம் மூங்கில் வேய்தலொற் றுத்து ளைப்பேர்
சாயேகோ ரைசா யற்பேர் தையல்பெண் ணழகே காந்தி
ஆயேதாய் வருத்த மாய்தல் ஆயுள்வா ணாள் நோய் தீர்ப்போன்
சேயேவே ளிளமை தூரஞ் சிவப்புச்செவ் வாய்ம கப்பேர்
#16
நெய்தலே வேலை சாரும் நிலமோர்பூச் சாப்ப றைப்பேர்
பொய்தலே மாதர்கூட்ட மலராடல் மீள்தல் போற்றும்
பைதலே சிறுமை பைம்மை பயோதரம் புயல்பா ரப்பேர்
கைதையே பழனந் தாழை கயவுகீழ் பெருமை கள்ளம்
#17
அய்யனே மூத்தோன் சாத்தன் அப்பனிம் முப்பேர் செப்பும்
வெய்யவன் கொடியோன் பானு விரும்பினன் பேரும் வைக்கும்
கையனே கொடுக்கும் பாரி கருதிற்கீழ் மகற்குங் காட்டும்
எய்கணை யெய்தல் பன்றி இயாமந்தெற் கிரவே சாமம்
#18
ஐயமே பிச்சை யேற்கு மோடனு மானம் பிச்சை
மொய்செருக் களந் தி ரட்சி மூசுவண் டியானை தாயாம்
மையமே நடுவெண் ணெய்ப்பேர் வயமாச்சிங் கந்தோல் வேங்கை
குய்யெனும் பேருள் வைப்புங் கொழுமணப் புகையு மாமே
#19
அய்யரே முனிவர் தேவர் அயிறலே செய்த லுண்டல்
மெய்யர்வே தியர் தி டத்தோர் வியாதனோர் முனிவே டன்பேர்
நெய்யவி யாடை நெய்தல் நிகழ்த்து சித் திரைநாள் முப்பேர்
ஐவிர லத்த நாட்பேரங்குலி யைந்து மாமே
#20
இயக்கனே நாயே யக்கன் ஈயேயோர் பறவை யீதல்
உயிர்த்தல்மூச்சுடன்வருத்தம் உய்த்தலோட் டுதல்பிழைத்தல்
பயத்தலே யொன்றைத் தன்கைக் கிடைத்தலு மொளியும் பன்னும்
மயக்கமே தெளிவி லாமை விரகநோ யதற்கு மாமே
#21
சயிந்தவந் தலையிந் துப்புத் தலைமைவா சிக்கும் பேரே
வியங்கோள்மா லியானை மேவல் வியாளமே புலிபாம் பின்பேர்
பயம்பென்ப பள்ளம் யானைப் படுகுழி யிரண்டும் பன்னும்
இயங்கலே நடத்தல் காந்தி இயம்பல்சொல் பழிமொழிப்பேர்
#22
இயவுகா டூர்வழிப்பேர் இயல்பேநற் குணமொ ழுக்கம்
வயல்வெளி வினையு றுஞ்செய் மயிடமே பெருமை மேதி
இயல்நடை யகலஞ் சாய லிசைத்திடுந் தமிழே நாற்பேர்
வயிறுரை கயிறே குக்கி வாய்த்தலோ ரசைநு ணுக்கம்
#23
அயமென்ப தடாகம் நீரே யாடுவெம் பரியி ரும்பு
முயல் நிலம் விழவு சேறு மொழிந்த சூ தனப்பேர் பத்தாம்
நியமமா லபமூர் வீதி நிச்சயம் நியதி யீமம்
அயனமே யாண்டிற் பாதி நடவையென் றிரண்டு மாமே
#24
கயமென்ப குளநோ யாழங் களிறுகீழ் பெருமை யூது
முயர்சின்ன மிளமை தேய்தல் ஓது மொன் பான்பே ரேயாம்
பயமென்ப சுதை நீ ரச்சம் பால்புயல் குணம்வி தாதா
புயமென்ப முலையுந் தோளும் பொய்யே பொத் துப்பொக்கப்பேர்
#25
ஆயமே கவற்றி லாயம் ஆதாய மகளிர் கூட்டம்
தாயொடு நீளஞ் சுங்கஞ் சாற்றுமல் லரியே யேழ்பேர்
காயமே விண்வெங் காயம் பெருங்காய முடல்பண் கார்த்தல்
நேயம் நெய் யெண்ணெய் யன்பே நிகழ்ந்தநன் மைநாற் பேரே
#26
வயம்வலி தொந்த மேடம் வாசிபுட் பொதும ருப்பு
முயலுட னிரும்பே நீரே மொழியுறு மொன்பான் பேரே
சயமுயர் வெற்றி மாலை சருக்கரை யிரவி யல்லி
குயமுலை ய ரிவா ளின்பேர் கொழுமைசே ரிளமை யாமே
#27
பயிரொலி பயிலே பைங்கூழ் பறக்கும்புள் மிருகங் கூடிப்
பயில்குர லோர்வி தங்கட் டுறும் வழக் கைம்பேர் பன்னும்
வயிரமே கிம்பு ரிப்பூண் வச்சிர மணியே செற்றம்
அயிலொடு குலிசம் வன்மை யான்றது ரியமேழ் பேரே
#28
ஏய்ந்தசீர் பெறும்ய கார வெதுகையி னிசைக்குஞ் செய்யுள்
வாய்ந்தவொன் றொழிமூ வொன்பா னென்னவே வழங்கச் செய்தான்
காய்ந்தசூ ரறமு ருக்குங் கந்தவேள் பாதம் போற்றும்
ஆய்ந்தசீர்ச் செந்தின் மேவு மருமருந் தையன் றானே
** யகரவெதுகை முற்றும்
@ ரகரவெதுகை
#1
செகமுழு திறைஞ்சுந் தொல்லைச் சிகரவெற் பரசன் தந்த
மகவுமை பயந்த செவ்வேள் வள்ளிநா யகிதன் கேள்வன்
குகனெடு வடிவேற் றாங்குங் கொற்றவன் மலர்த்தாள் போற்றித்
துகளறு ரகார மாய வெதுகையின் றொடையைச் சொல்வாம்
#2
சுரதமே மதநீர் சூதஞ் சொன்மருந் திழிசா ரப்பேர்
இரதநீ ளம்பு ணர்ச்சி சுவைசூத மிரதம் வீணை
பரதமோர் சாத்திரப்பேர் பாரதப் பேரோர் சண்டம்
விரதம்நீர் தவம்வட் டித்தல் வீரட்டா னங்கூத் தோரூர்
#3
சரகென்ப தேவர் தம்மூண் தருவுதிர் சரகே சோறாம்
சிரகமே கரகந் தூறல் சென்னியிற் கோடுக் கும்பேர்
கரகமே துளிநீர் கங்கை கமண்டல மாலாங் கட்டி
துரகமூர் திப்பரிப்பேர் சூரணம் பொடியே கந்தம்
#4
மரபென்ப முறைமை தொன்மை மருவுநற் குணங்கு டிப்பேர்
சரபமெண் காற்புள் ளொட்டை வரையாடு தானே முப்பேர்
பரதரே திமிலர் நாய்கர் குருகுலத் தோர்க்கும் பன்னும்
வரதநற் றுகில்க டாக்கம் மருமானே மருகன் சேயாம்
#5
முரண்வலி பகைபோர் தூக்கின் மொழியுறுப் பொன்றே நாற்பேர்
கரணமே கல்வி கூத்தோ டகந்துணை கார ணப்பேர்
அரணெயில் கவசங் காடே யடி தொடுங் கழலே மஞ்சம்
சரணமே மறைபு கற்றோ கைப்பீலி தாளே முப்பேர்
#6
அரிதல்பிற் கிடலே கொய்தல் அரிட்டங்கள் காக்கை கேடாம்
பரிதலை யறுத்த லன்பு பகர்குற்ற மிரங்க னாற்பேர்
வரிதலே வரித்த லூர்தல் வரைதலே கொளனீத் தற்பேர்
இரிதலே நெரித லின்பேர் எற்றுறு பயமு மாமே
#7
பரிமுத னாள்சேண் சும்மை பருத்திமாப் பெருமை வேகம்
அரிதமே பசுமை திக்கரம் ஆர்கலி புயல்க டற்பேர்
சொரிதலே பொழித னீட்டல் சுழன் றிடல் முப்பேர் செப்பும்
நெரிதரல் பிறகி டற்பேர் நெருங்குற முருங்க லாமே
#8
திரிபுரி சார டைப்பேர் சிறந்த முப் புரமுஞ் செப்பும்
பரிபவ மதிக வீரம் பழித்திடு மிகழ்ச்சி யும்பேர்
சரிதையே பூசை பிச்சை சாத்திர மிம்முப் பேராம்
தெரிசனை முகுரங் காணல் தெரித்தலே சொற்றீட் டற்பேர்
#9
அரிசனந் திருமாற் றொண்டு மழகெறி மஞ்சட் கும்பேர்
திரிசரம் பகழி யானைப் பிறப்பெனச் செப்பற் பாற்றே
பரிசன மேவல் செய்வோர் பற்றினர் துவள லும்பேர்
சரிசமக் காவ ளைப்பேர் சாற்றுறு வழியு மாமே
#10
உரையேபொன் கிளவி நாமம் ஓரசை உரிஞ்சு தற்பேர்
புரையேயில் லுயர்வு குற்றம் புழையுட னுவமை யும்பேர்
சுரையேகள் புழையம் பின் கூர் சுரையாவோ டதன்மு லைப்டேர்
நரையேயே றிவுளி வெள்ளை நாட்டிய கவரி நாற்பேர்
#11
மரையேகான் குதிரை தேரை வனசமென் றோதல் முப்பேர்
விரைவேபீர் வேண்டல் வேகம் விளங்குப சாரம் நாற்பேர்
சிரையேவா னரமு சுப்பேர் செப்பிய நரம்புஞ் சொல்லும்
வரையே கை வரைநெல் வெற்பு மட்டிறை கடனீர்த் தீரம்
#12
கரமேகை கிரண நஞ்சம் கழுதைகார்க் கிளியி றுத்தல்
சிரமேசென் னிப்பே ரோடே செப்புறு நெடுங்கா லப்பேர்
புரமேமெய் புரிமுந் நூற்பேர் புரவலன் வள்ளல் வேந்தன்
உரமேமார் பூக்கம் ஞான மோதுறும் வலிநற் பேரே
#13
பரமென்ப கவசஞ் செய்தி பழமைமெய் கலனை யத்தி
குரமென்ப பரிக்கு ளம்பும் கோணலு மெனவி ரண்டாம்
சரமம்பு மணியின் கோவை தாமமோர் நூனா ணற்பேர்
சுரமென்ப தடவி மார்க்கஞ் சொற்றநோயிசைநாற் பேரே
#14
அரவ நூ புரம்பாம் போசை யாயில் குங் குமவி ருக்கம்
குரவமே குதிரை மேல்வாய் கோவிதா ரங்கோட் டப்பேர்
சரவண மறுமு கத்தோன் சனனங்கா யா நா ணற்பேர்
பரவலே தொழல்ப ரத்தல் பரித்தலே பொறுத்த லன்பாம்
#15
இரவென்ப திரவி ரத்தல் இராசிய மறைவே யோனி
பரவைவா ருதிய சப்பே பங்கய மாதின் கூத்தாம்
குரவையே கடலோர் கூத்து குரங்கியே சிவன்வெண் டிங்கள்
தரவேயோர் பாவு றுப்புத் தலைவனுத் தரவே முப்பேர்
#16
புரசுவாம் பரிக்க ழுத்திற் புரிகயி றொரும ரப்பேர்
அரசுமன் னிராச்சி யப்பேர் அரசன் பூ பதிவி யாழம்
பிரசமே யளியுங் கள்ளும் பேசுதேன் றேனீ யும்பேர்
முரசமுத் திரட்டா திப்பேர் முழக்குமும் முரசு மாமே
#17
அரம்பையே கதலி தெய்வ வாயிழை யவர்க்கு மேற்கும்
குரம்பைமெய் சிறுகு டிற்பேர் குருளையே மழவு குட்டி
முரம்புமே டொடுகற் பாறை முதிர்பால் கழிநி லப்பேர்
பிரம்புவேத் திரம்நெய் மூங்கிற் பெருங்கட லரிசி யைம்பேர்
#18
முருந்திற கடிக்கு ருத்தே முறியே முத் தேகு ருந்தாம்
குருந்தொரு தருவே தொத்தே குருத்து மென் றறைதல் முப்பேர்
விருந்தினி யவர்வரத்தும் புதுமையும் விளம்பற் பாற்றே
மருந்தமு தரும ருந்தாம் வரிக்கடை மின்மினி வண்டாம்
#19
கரும்பென்ப சுரும்பே கன்னல் கரடகங் கபடந் தூசாம்
குரும்பையே தென்னம் பாளை புற்றாஞ் சோ றெனவுங் கூறும்
நரந்தமென் பதுநா ரத்தை நாறுங்கத் தூரி காக்கை
சுருங்கையே கரந்து பண்ணுங் கற்படை நுழைவாய் தற்பேர்
#20
பூரமே பொன்கற் பூரம் புகலோர் நாள் பூரா னாற்பேர்
வாரம்நீர்க் கரையோ டன்பே மலைச்சாரல் கிழமை பங்காம்
சாரமே கிரக சாரஞ் சாற்றுறு மினிமை மேடாம்
காரமே காழ்த்தல் பொன்னாம் கருமான்மான் மனுப்பன் றிப்பேர்
#21
ஈரமே குளிர்ச்சி யன்பாம் இரதனே கிள்ளை கண்ணாம்
கீரமே தீய வெண்பால் கிள்ளை கா ரிப்புள் முப்பேர்
பீரமே பீர்க்கும் வாகைப் பேரும்பூ வரசு மென்றாம்
தீரமே புனற்க ரைப்பேர் திட்பமென் றிரண்டு மாமே
#22
வராகனே யருகன் மாயன் வயங்குபொற் காசே முப்பேர்
பராகமே பொன்னி ரேணுப் பரிமள மலர்த்தூட் கும்பேர்
அராகமே நிறம்பொன் பண்ணே பகங்கார மூடுகி யற்பேர்
இராகமே கீதஞ் செம்மை யிச்சையே நிறமு மேற்கும்
#23
அராமமே நறும்பொ ழிற்கூழ் அரை நூல்மே கலைச தங்கை
உரோமமே மயிர்வெம் பாணம் உருளேரோ கிணிநாள் பாண்டில்
இராமமே யழகோர் வேந்த னிளமையென் றிசைக்கு மப்பேர்
துரோணமே பதக்குக் காக்கை தும்பைவில் சிம்புளைம்பேர்
#24
அரிவையோர் பருவ மாதர் ஆரிசோ ழன்பேர் மேன்மை
கரியவன் சனியே சோரன் கண்ணனிந் திரனே நாற்பேர்
சுரியல் நீர்ச் சுழிசு ரித்தல் தோகையர் கருங்கூந் தற்பேர்
கிரிபருப் பதம்வ ராகம் கிரிட்டியோ ரீற்றாப் பன்றி
#25
துருவமோ ரிடத்தி லக்கஞ் சலிவின்றி நிற்றல் சொல்லும்
பருவமா னியங்கா ராதிக் காலம் பெண் பருவ முப்பேர்
தருவென்ப மரங்க ரும்பு தராசுகோல் பரணி நாளாம்
உருவென்ப நிறமே யட்டை உரியர்மூ தறிந்தோர் சுற்றம்
#26
அருகனே யமணர் தேவும் நிலையாமை யதுவுங் காட்டும்
விருகென்ப மிருகம் பூனை விருடகம் எலிமார்ச் சாலம்
முருகன்ப லைக்கு வேந்தன் முருகவே டேவ ராளன்
மருகனென் பதுவே தோன்றல் மருமானென் பதுவு மாமே
#27
ஊரென்ப நகரே யூர்த லோதுறுங் கவானே முப்பேர்
பாரென்ப தேர்ப்ப ரப்புப் படி பொன்ற லுடன்கற் பாறை
வாரென்ப கவசம் நேர்மை மங்குல் நீர் நெடுமை கச்சாம்
சூரென்ப நோயஞ் சாமை யணங்கச்சஞ் சூரன் வஞ்சம்
#28
பரிசென்ப குணங்கொ டைப்பேர் பருவர லருவல் துன்பம்
குரிசிலே பெருமை பெற்றோன் கோதில்வேந் தற்குங் கூறும்
இருசுபண் டியுளி ரும்பு செவ்வையென் றிருபேர் வைக்கும்
துருசொரு மருந்தே வேகம் துருஞ்சில்சீக் கிரிவவ் வாற்பேர்
#29
இருமையே பெருமை துக்க மிம்மையு மறுமை யும்பேர்
தருமையே மிகுதி மேன்மை சாரசங் குருகு நாரை
கருமையே பெருமை நஞ்சங் கறுப்புடன் வலியே நாற்பேர்
தெருமரல் வெருவ லோடே சுழற்சியுஞ் செப்ப லாமே
#30
அருத்தியே பாதங் கள்கூத் தாசையூ னூட்ட லைம்பேர்
விருத்திபொன்றொழிலிலாபமுரைப்பொருள் விளர்ச்சி தொண்டாம்
கிருத்திமம் விட்ட பூதங் கெட்டபொய் தோலே பண்ணல்
துருத்திதோற் சிவிறி யேயாற் றிடைக்குறை சொன்முப் பேரே
#31
மருத்தென்ப மருந்தே காற்றே மால்பானைப் பிறப்பே முப்பேர்
குருத்தமோர் மரமே கோபங் குருக்குத லெனவுங் கூறும்
எருத்தென்ப துரல்கி ளிஞ்சல் ஊ ஈபேங் கியினி ரத்தல்
ஒருத்தல்வில் விலங்கே றியானை யொண்பரி புலிநாற் பேரே
#32
விருத்தமே மனைவி செய்யுள் மிருகக்கூட் டம்வட் டப்பேர்
திருத்தலே திருந்தல் தாங்கல் திருவேபொன் றெய்வ வுத்தி
அருத்தஞ்சொற் பொருள்பொன் னின்பேர் ஆர்த்தலே யருந்தல் கட்டல்
உருத்தலே முளைத்தல் கோப மிகுதியென் றோதன் முப்பேர்
#33
அருப்பமூர் நோய்கான் றுக்கம் அயின்றமோர் பிட்டாறே பேர்
கருப்பென்ப விளைபல் பண்டக் குறுவிலைக் காலஞ் சோறாம்
உருப்பமே வெப்பந் துர்க்க முயருமா லையம்ப வப்பேர்
மருப்பென்ப சிருங்க மிஞ்சி மருட்கள மடமை யாமே
#34
எருக்கலே பரித்தல் கோற லெறிவெட்டுக் கட்டை முப்பேர்
துருக்கமே விடர ரண்கத் தூரிகுங் குமங்க லக்கம்
முருக்கென்ப கவிர்கொலைப்பேர் முரித்தலே நகையி லங்கல்
பருக்கையே பரலக் காகும் பாரகம் புவிதி ரைப்பேர்
#35
ஆர்தலே குடித்த லுண்டல் நிறைதலென் றறைதன் முப்பேர்
ஊர்தலே பரத்த லுண்டல் சிந்தலுற் றெழுதலும்பேர்
வார்தலே யுயர்ச்சி நீளம் வரித்தல்பூ சுதல்பொ றித்தல்
தீர்தலே நிவிர்த்தி நீளம் திரையல்வெற் றிலை தி ரைத்தல்
#36
ஊரியே யிளமை மேகம் ஒளிரும்வெண் சங்கே முப்பேர்
மூரியே றெருமை யாற்றல் முரிவேயூழ் பெருமை சோம்பாம்
சாரியே கவற்றின் சாரி சடுதியி னோடல் சாற்றும்
மாரிநோய் வடுகி கள்ளே மங்குல்சீ மூதம் நீராம்
#37
ஆரை புற் பாய்ம திற்பேர் அருந்தலே யருமை துய்த்தல்
தாரைகண் ணுடுநே ரோட்டந் தரைகூர்மை மழைமார்க் கப்பேர்
தோரையே நெல்வி கற்பம் சுடர்த்தபொன் னூல்கை ரேகை
ஓரைபெண் குழுவி ராசி யவராடற் கலமோ தும்பேர்
#38
குருதியே சிவப்புச் செவ்வாய் சோணித முப்பேர் கூறும்
பருதியே யூர்கோள் வட்டம் பகலவன் றிகிரி நாற்பேர்
சுருதியே யொலிவே தப்பேர் சொற்றன செவியுங் கூறும்
திருதியே திரும்பல் மூன்றாம் செருந்தியோர் மரம்வாட் கோரை
#39
உருக்கமே குழைவே யூரு ஓர்வுன்னல் குறிக்கொ ளற்பேர்
திருக்குக முற்றந் தூசு திருட்டியிம் முப்பேர் செப்பும்
சுருக்கென்ப நெய்த்து டுப்புச் சுரித்திட லிரண்டுஞ் சொல்லும்
பெருக்கமே செல்வ மாற்றுப் பெருக்கொடு பெருமை யாமே
#40
எருவையே கழுகு கோரை யிரத்தம் நற் கொறுக்கை செம்பாம்
புருவை யெவ் வனமே மேடம் புரத்தலே காத்தலீகை
கருவைகோத்திரத்தின் வைக்கோல் கருப்பமுட் கருத்தே முப்பேர்
தெரிவையோர் பருவம் பெண்பேர் திரைதிரை தாங்கம் பூமி
#41
மருதமோர் மரம்வ யற்பேர் மருதநன் னிலப்பாட் டேயாம்
பொருதலே நிகர்ப்புப் பூசல் பூரிப்பே மிகல்க ளிப்பாம்
இருதுவே பருவ மாத ரிருது கா ராதிக் காலம்
மிருதுவே மென்மை சாவாம் விரையேசாந் தங்க மழ்த்தல்
#42
வேரலே வேர்த்தல் மூங்கில் விரோதமல் வேறு பாடாம்
கூரலே மாத சோதி குருகின்வன் சிறகி ரண்டாம்
தோபலே யணங்கு தோர்வை சுரியென்ப நரிசு ரிப்பேர்
நேர்தலே யெதிர்த லீகை நேருதல் வேண்ட லும்பேர்
#43
போரே நென் முதலாஞ் சும்மை சதையநாட் பொருதல் முப்பேர்
ஏரே சொன் மாலை செவ்வி யுழுபெற்ற மிவைசெப்பும்பேர்
தூரே தூர்த் தல்வேரின்பேர் சுரித்தல் நீர்ச் சுழியே தாங்கல்
கூரேகூர் மைப்பே ரோடே மிகுதியுங் கூற லாமே
#44
சூரனே யிரவி தீயே சொற்றநாய் மீளி நாற்பேர்
சாரணர் சித்தர் தூதர் சரித்திர மொழுக்கங் காதை
ஞேரொலி விரைவி ரண்டாம் நீர்வாரங் குளநெல் வெள்ளி
மார்கழி யோர்ம திப்பேர் மான்றலை நாட்கு மாமே
#45
பூருவங் கிழக்கே முன்பே போற்றுறு முதுமை முப்பேர்
பீருவே புருவ மச்சம் பிரமாண மளவே சூளாம்
காருகந் தானை நெய்தல் கருங்குரங்கிவையி ரண்டாம்
தூர்வக மறுகோ டேறாம் சுரிகையே கவசம் பத்திரம்
#46
இருளென்ப கருமை யல்லோ டிசைக்குறு நரகே முப்பேர்
அருளென்ப தகைவி னாம மரும்பொரு டனக்குஞ் சொல்லும்
சுருளென்ப சொருகுங் கூந்தல் துவர்த்தல்பா கிலைச்சு ருட்பேர்
முருடென்ப ஞெகிழி யோடு முதிர்பெருங் குறடு மாமே
#47
வருண நீர் குலமோர் திக்கே மறிதிரைக் கடலே நாற்பேர்
பொருநர்போர்த் தலைவர் கூத்தர் புரப்போர்கா னவரே வீரர்
இருபிறப் பெயிறே பார்ப்போ டிருஞ்சிறைப் பறவை முப்பேர்
அருணநற் சிவப்பே நவ்வி யாடெலு மிச்சை நாற்பேர்
#48
ஊர்திசெங் கதிர்வி மான முவாப்பரி சிவிகை பாண்டில்
பார்வைதீ வகம திப்பு பார்த்திடும் விழியே முப்பேர்
போர்வைதோ லொடுமுட் டாக்குப் புகன்ற மீக் கோளெ னும்பேர்
ஆர்வம்வில் நரகங் காதலன்பெனு நாற்பே ராமே
#49
ஆரிடம் வதுவை முன்னூ லருந்தவர் பூசைக் கும்பேர்
சார்பிட மொற்றுப் பற்றாந் தணப்பிலாப் புணர்ப்பே நாற்பேர்
பாரிடம் புடவி பூதம் பாரதி வாணி நாவாய்
நார்வட மன்பி னாமம் நவிற்று நா யதற்கு மாமே
#50
கரியென்ப திருந்தை சான்றே களிற்றொடா தவன்க ரித்தல்
பரிசமே கிடங்கு மேடை பகர்மதி லரணம் நாற்பேர்
உரிமைநற் குணமே யாட்சி யோதுறு மனைவி முப்பேர்
பரிபுர மெனும்பேர் பாத கிண்கிணி மணிப்பேர் பன்னும்
#51
அரசியல் வெற்றி தோற்றம் வரைவின்மா தர்க்கு மாகும்
கரடம்வா யசங்க ளிற்றின் மதம்பொழி கவுட்குங் கூறும்
பிரமரி சுழல லோடே பேசுகூத் தொன்றெ னும்பேர்
தரளநித் திலமு ருட்சி சஞ்சல முப்பே ராமே
#52
மருவேயோ ரிடத்தூண் வாசம் வருடமே சமைம ழைப்பேர்
தருமரா சன் பேர் புத்தன் சினவரன் சமனே முப்பேர்
கருவுரை நடுமேட் டின்பேர் கருப்பொருள் கருப்பம் நாற்பேர்
இருடியே முனிவ னாந்தை இரும்பேசெம் பொன்க ரும்பொன்
#53
கரீரமே மிடாவ கத்தி களிற்றின்பல் லடியெ னும்பேர்
மரீசியே புது வ ரம்பின் வழிமிள கொருமு னிப்பேர்
விராடமோர் தேயம் கூவும் வேசரி யதற்குஞ் செப்பும்
கரோடியே பெருஞ்சூட் டுஞ்சொற் கவின் முடி மாலைக் கும்பேர்
#54
ஆரியம் விளையோர் பண்ட மறைந்திடுந் தேச மொன்றாம்
பூரியம் வேந்தர் வீதி போற்றுறு நகரி ரண்டாம்
தாரியே வழியு தாரி தருப்பணம் பிண்ணாக் காடி
வேரிகள் ளிருவே லிப்பேர் விரியல்பாய் விரிவு மாமே
#55
சாரதி கவிஞர் சூதர் தரித்தலே நடத்தல் வேய்தல்
சோரனே கள்வ னாட்டின் சொற்பற ழிரண்டுஞ் சொல்லும்
காரகம் நரகோர் நூற்சொல் கரேணு வே பிடிதந் திட்பேர்
மாருதி யனுமன் வேழ மிடும்பிகேள் வன்பேர் வைக்கும்
#56
அருணனே புந்தி வெய்யோ னவன்றேரூர் பாகற் கும்பேர்
தருணியே யிளமை நாரி சார் தல்பொய் பிறவி யொத்தல்
கருணியே முழையும் வெற்பும் களிற்றொடும் பிடியெ னும்பேர்
விரணமே விழலே யாக்கை மேவுறு மிரண மும்பேர்
#57
மராமர மரசே யாச்சா வளர்நீப முப்பேர் செப்பும்
குரால்கபி லைநி றப்பேர் கூறும்பாற் பசுவும் வைக்கும்
தராலயங் கயிலை மேரு சருமமே தோல்க ளிப்பாம்
மராளமே யுரக மன்னம் மராடமோர் தேசங் கூந்தல்
#58
அரக்கென்ப சிவப்ப ரக்காம் ஆர்வலர் கொழுந ரன்போர்
நிரப்பைய மிடியே தேய்தல் நிரம்பலென் றோதல் நாற்பேர்
மரக்காலா யிலியஞ் சோதி வருதுர்க்கை யாடல் முப்பேர்
பருப்புச்சூ பகமின் னற்பேர் பராடியே யானை பன்றி
#59
சீர்மையே விழுமங் கண்ணே செறிவதுன் பஞ்சி றப்பாம்
நீர்மையே தெளிவு நேயம் நிகழ்குண மிவைமுப் பேரே
ஆர்மையே மதில்கூர் மைப்பேர் அரேணுகம் வாள்மருந்தாம்
வார்மையை பொழுக்கம் நேர்மை வருடையே சிம்புட் குன்றாம்
#60
பேரேசொற் பெருமை நாம மபிதானப் பேரும் பேசும்
நீரேநற் குணம்பூ ராடம் நிரியாணம் வீய்வா னைக்கண்
பாராவா ரங்க டற்பேர் பார்கடற் கரைக்கும் பன்னும்
ஆரோக ணந்தாழ் வார மகன்றகற் படையு மாமே
#61
அரங்கமாற் றிடைக்கு றைக்கூத் தாடிட மமர்க்களப்பேர்
தரங்கநீர்த் திரைதிரைப்பேர் சராவமே யகல்ச லாகை
துரங்கமே பரியே நாவாய் சொற்றவாய் தல்முப் பேரே
குரங்குதல் குனித்த லாட லுறங்குதல் நடுக்கங் கூறும்
#62
அரணிதீக் கடையு றுங்கோ லணிமதிள் கவச முப்பேர்
இரணியம் பொரல்மா ணிக்க மீர்க்கட லாலே பொன்னாம்
கரணியே கணிக்கும் வல்லோன் காட்டுநாற் காணிக் கும்பேர்
தரணியே யிரவி பூமி சயிலமென் றறைய லாமே
#63
இரிசியே வழக்கு நாயாய் இரட்டிரட்டித்தல் சாதி
சரிதையே பூசை பிச்சை சாற்று தங்காதை முப்பேர்
திரிதலே யுலாவல் கேடாம் சீருளி யஞ்செம் பாகும்
மருவித ழேடே தழை டலான தெவைக்கு மாமே
#64
நுரைநவ நீதம் நீரி னுரைதிரை யெனவும் பாற்றே
கரை குளக் கரைக ரைத்தல் கரவீர மலரி தேசம்
நிரையொழுங் கசைச்சொ லானே நிரைக்கூட்ட மிவைநாற் பேரே
குரைமிகு மொலியி னாமம் நிறைவென்றுங் கூற லாமே
#65
வீரையே துயரம் வேலை விருக்கமொன் றின்பே ராகும்
சீரையே சிறுக்கொ டிப்பேர் திகழ்ந்தநற் அகிலுங் கூறும்
கீரைபா சடகே வைக்குங் கிளத்து சா கினிக்கு மென்ப
பாரதம் பொதுவி னாமம் பரம்பர மதுவு மாமே
#66
அருவியே மலையின் சார லரிபுனங் கழிமுகப்பேர்
பரிகாரம் பலிபண் டப்பேர் படர்மெலி வகற்றல் செப்பும்
உரியேதோல் கணித்த தொன்று முரித்தலும் விரித்த நாமம்
அருவே நுண் பழம்பொ ரூட்பே ரணு நுணுக் கறிவு மாமே
#67
காண்டகங் கமண்ட லப்பேர் கருது நீர்க் காக்கைக் கும்பேர்
தெருண்டலே யறிவு தேற்றம் சீர்மானே நெடுமால் செய்யோள்
பருந்து மா டப்பு றாப்பேர் பகர்சேன மிவையி ரண்டாம்
கரண்டையே முனிவர் வாசங் கற்பாழி யிரண்டு மாமே
#68
இரதிபித் தளையே காந்தள் எழின்மாரன் றேவி யாசை
விரதநற் சிவன்வாழ் வெள்ளி வேதண்டம் பிடியானைப்பேர்
இரதனப் பேரே யோசை கிண்கிணி யரைஞா ணென்றாம்
சரசமொப் பில்வி னோதஞ் சாற்றுறுங் கணையு மாமே
#69
குரலென்ப மிடறெ ழுத்துக் கூந்தலோ டலகே தூவி
முரலின் பண் ணாம்பே யேனல் மொழிந்தபா திரியே யெண்பேர்
அரலைதிண் கடலே கன்னி யையெனு நோய்காழ் நாற்பேர்
இரலைமான் கலையூ துங்கொம் பிரண்டுடன் முதனா ளாமே
#70
அரில் பகை பிணக்குக் குற்ற மாசினி பாயல் சந்தி
புரிகுழல் சிறிய தூ பொருந்திய குரலொன் பான்பேர்
கரிலுபர் குற்றங் காழ்த்தல் கரைத்தலே விளித்த லோசை
பேரிவுமெய் விரும்பல் வேறு படலுடன் செயலு மாமே
#71
கோரமே வெருவல் வெப்பங் கொடுமைபூ முகையே வட்டில்
வீரமே வுவதிண் வாசி விரைவினிற் குறிப்பே யேழ்பேர்
ஆரமே பதக்க மாலை யாத்திசந் தனமே முத்தம்
நாரமே தெண்ணீர் பாசி நாரத்தைப் பேரு மாமே
#72
பாரம்நீர்க் கரையே நாவாய் பல்லணம் பெருமை பூமி
யேர்பொறை கவச மாட லீராறெண் ணிறையொன் பான்பேர்
தாரம்வல் லிசைநா வெள்ளி தலைவியா ழிசைநற் பண்டம்
ஓமே சுகாய மோசம் உருசியே சுவைமின் னற்பேர்
#73
சாரல் தண் மருத பாழிற் றிறத்தோசை சயிலப் பக்கம்
வேரலார் சயிலங் கிட்டல் விளங்கு பிந் நாற்பேர் வைக்கும்
ஆரல்கார்த் திகைநாட் செவ்வா யரணமோ டொருமீ னாற்பேர்
மூல்சொல் பல்லே சோறே முதிர்சிரிப் பெனும்பே ராமே
#74
வரிநிற மெழுத்துப் பாட்டு வடிவம்நெல் லிறையி ராகம்
சரியறி வொழுக்கம் நீளந் தழல்வேலை சுணங்கீ ரேழ்பேர்
புரியளி விரும்பல் சேறல் புரஞ்சங்கு கயிறே கட்டாம்
துரியமோ ரவத்தை தேடல் சொற்பொதி யெருது மாமே
#75
பொருளென்ப சொற்பொ ருட்பல் பண்டம்பொன் புதல்வ னீதி
யருள்பண்பே தலைமை யொண்மை யனமெனும் பேரீ ரைந்தாம்
குருளென்ப குட்டி யோதி கூர்ப்பிடங் கூர்மை கார்த்தல்
மருள்வெம்பேய் மயல் குறிஞ்சி மருவும்யாழ்த் திறமி ருட்டாம்
#76
குருவென்ப பெருமை பாரம் குவன்மாத் திரையி ரண்டோ
டுருவநன் னிறம்வி யாழ மோதுமா சானோ யெண்பேர்
பருவென்ப வுருக்கு ருப்புப் பகருறும் பெருமை முப்பேர்
செருவென்ப வடிசி லேரி செங்களப் போரு மாமே
#77
தூரிய முரச வீட்டந் துகிலிகை யிடபம் வெற்றி
கூரிய படைக்க லகைள் கோசிக மீய மேழ்பேர்
ஓரி ஆண் மயிரோர் வள்ள லுயர் முசு முதுந ரிப்பேர்
நாரியே பெண்பன் னாடை நறவு வின் னாணி நாற்பேர்
#78
தருமமா நிலவ ழக்கந் தட்பம்நல் லறங்க ளீதல்
கருமமோ டியல்பே வீதி யருடவம் பேரொன் பானாம்
பருமமே கலையு யர்ச்சி கவசந்தூ சிளமை பண்ணாம்
துருமமே மான டுக்கம் சுருங்கலே தூக்கந் தேய்தல்
#79
அரத்தமே யிரத்தஞ் செம்பொன் னரத்தி காசிற் பலங்கடம்போ
இரத்தசெம் பாத்தஞ் செம்மை யொளிருஞ் செந் த திரெண் பேரே
இரத்தமே பவளம் நெய்த்தோ ரிலங்குறுஞ் சிவப்பே முப்பேர்
கரத்தலே மறைவு கள்ளம் கருணை சூரணமன் பாமே
#80
பாரியோர் வள்ளல் கட்டில் பாரகம் கள்ளே கூந்தல்
வாரியார் கடலே யில்லாள் வத்திரங் கனமெண் பேரே
சூரி சண்டிகைவிற் பன்னர் சுரிகையோர் பூச்சி வெய்யோன்
ஆரிய னையன் மேலோன் ஆதித்தன் முப்பேராமே
#81
ஆர்கூர்மை சோதி பாகோ டாத்திய நிறைவே பூமி
தேர்சேசைந் திருவா ணிப்பேர் செப்பிய வேழு மாகும்
பீர்சூர்வெம் முதனமு லைப்பால் பீர்க்கொடு பசலை நாற்பேர்
கார்நீர்நெல் லாடு மேகங் கருங்கவி கறுப்போர் காலம்
#82
சாரிகை சுங்கம் பூவை சார்சுழற் காற்ற சைச்சொல்
ஏரிசை கொட்புற் றோட லெழுத்தின்சா ரிகையா றேபேர்
பூரிகை யூது காளம் உக்காரி பூர கப்பேர்
காரிகை யோர்நூல் மாதர் கலித்துறை யழகே நாற்பேர்
#83
அருச்சுன மென்ப வெள்ளை யரிசியோ டறுகு கூட்டி
விரித்தணிந் திடுத லின்பேர் வெண்மையு மருது மேற்கும்
குரத்தியே நுளைச்சி யோடு தலைவிக்கும் கூறற் பாலாம்
இரத்தியே யிறலி வள்ளி இருத்தையே திதிகன் னற்பேர்
#84
பிரமமே துருத மாடு பிறழ் பொருள் நடுக்க லக்கம்
அரியயன் கிரது வேதம் அறவர் முச் சுடர்பன் முப்பேர்
இரவியே மலையே வெய்யோன் இரங்கலே யழுங்க லார்வம்
பிரமசாரியந்த வப்பேர் பெருமறை யவற்கு மாமே
#85
வாரணஞ் சங்கு கோழி மலிகடற் றடைமா லியானை
காரிணங் குறுவ ராகங் கவசமுன் மத்த மங்கி
பேரிணங் குறுநற் றானம் பிறழ்படை யீரைந் தேபேர்
சீரணங் குணமின் மைப்பேர் செம்புபித் தளையு மாமே
#86
வாரியே யானைக் கூடம் வாய்தல் நீர் மதினூல் வட்டை
பாரிய மடைக பாடம் பரவைநற் றகைமை வெள்ளம்
ஏரியை வருவா யற்பேர் மிகுதி யொன் றொழியீ ரேழ்பேர்
பூரியே பொன்வில் நாணி புராணமே தொன்மை முன்னூல்
#87
குருகேகை வளைபுள் நாரை குக்குட மிளைவெண் மைகொல்
இருகுலை மூக்கே மூல நாளேமா தவியொன் பான்பேர்
முருகேகள் ளிளமை நாற்ற முருகவேள் விழவ னப்புப்
பெருக்கி லெழுச்சி பீரம் பேசுமொன் பான்பே ராமே
#88
சீர்துணி சதியி னொத்துச் சீர்த்திகாத் தண்டே செல்வ
மேர்பொறை யொல்கல் பாரம் யாப்புறுப் பீரைம் பேரே
தார் கொடிப் படைப்பூந் தாமஞ் சத்திரம் பரிமாக் கூட்ட
மோர்வில்கிண் கிணியின் கோவை யொழுங்கெனு மிருமூன்றேபேர்
#89
காரியோர் வள்ளல் காக்கை கடுச்சனி வடுகன் சாத்தன்
றேரிலாக் கீழ்மை யோர்புள் முதுநிலங் கருமஞ் செய்தல்
நேரிலாக் களர்க றுப்பு நிகழ்த்திய பேரீ ராறாம்
சோரியே விடாமழைப்பே ரோணஞ்சோணிதமுப் பேரே
#90
நேரென்ப சமமே யீதல் நெடிலுடம் பாடே பாதி
தேர்மஞ்ச நுட்பஞ் செப்புத் திகழ் தனிப் பாட்டி னோடே
ஒருஞ்செம் பத்தி யென்றே யொன்றொழி யீரா றே பேர்
சாரங்கம் வில்மான வண்டு சாதகப் புள் நாற் பேரே
#91
கருவியே தொடர்பே மேகங் கவசம்பல் லியம்போ ரீட்டம்
புரிதுணைக் கார ணங்கள் படைக்கலக் கலனை பூணோ
டருவினை பலவே யாழென் றாகப்பே ரீரா ராகும்
குருவிபுள் மூல நாளாம் குருடனந் தகனே வெள்ளி
#92
அரியேவிண் மணிமுராரியரிதல்பொன் காற்றுச் சீயம்
பரிதேரை கிள்ளை காந்தி பகைசெந்நெற் கதிர்கு ரங்கு
கிரிதேரை மைவ லாரி கிளர்நிறங் கூற்றுக் கண்ணார்
வரிசோலை பாயல் பன்றி மரீசிலேய் வண்டு சேகு
#93
விறல் கூர்மை திகிரி யீர்வாள் விசிதகர் புகரே யெற்றும்
பறைபோகி சிலம் பிற் பெய்த பால்கடல் புரையே பச்சை
பொறிவார்தீ படைக்க லங்கள் பொறியிலொன் றரிசி தூமம்
அறைவார்கள் ளுடனிந் நாம மையொன்ப தொன்று மாமே
#94
தெருண்டுளோ ருரைர கார வெதுகையிற் சிறந்த செய்பு
ளிரண்டோடொன் பது பத் தென்ன விருநிலம் புகழச் செய்தான்
காண்டைவா ளிலங்கை வாட்டுங் கருமுகில் மருகற் போற்று
மரண்டிரு விளங்குஞ் செந்திலருமருந் தையன் றானே
** ரகரவெதுகை முற்றும்
@ லகரவெதுகை
#1
அளந்திட வரிய வேத புராணவா கமங்க ளாலும்
உளந்தெற விசைத்துப் போற்று மொருவனாய் நின்ற சோதி
வளங்கிளர் வடிவேற் றாங்கும் வள்ளல் சீர் பாதம் போற்றிக்
களங்கற வரும்ல கார வெது கையின் கவிதை சொல்வாம்
#2
ஆலமே வடவி ருக்க மப்புக்கூ டலர் நீர் நஞ்சம்
மூலமே யேது வோர்நோய் முதல்கிழக் கொருநாள் தாரு
சீலமே குணந்தண் டித்தல் திகழ்சரித் திரமுணர்ச்சி
தூலமே பருமை பஞ்சாம் துல்லியந் தூவொப் பாமே
#3
அலவன்ஞெண் டொடுபூனைப்பே ரலர்மதி தனக்கும் வைக்கும்
வலவனே வெற்றி யாளன் மருவுந்தேர்ப் பாகனும்பேர்
இலவமோர் தருவே பூசை இலக்ககி லெழுத்துக் கேண்மை
நிலவொளி மதிநி லைப்பேர் நிலைபேறே மான முத்தி
#4
புலவர்பா டுநர்கண் ணாளர் புதனும்பர் கவிவேள் கூத்தர்
கலவலே துழாவ லின்பேர் கலத்தலென் றறைதற் பாலாம்
புலவுசெம் புலால் மு டைப்பேர் புலிசாந்தம் வயமாச் சீயம்
மலை போர் புரித லொப்பாம் வல்லரி தளிர்பூங் கொத்தாம்
#5
அலங்கலே தளிர்பூ மாலை யசைவுட னேகலி ரங்கல்
பலங்கனி பயன் காய் பள்ளம் பல்லவர் விடர்கீழ் மக்கள்
கலங்கலன் அலம்யாழ் தட்டங் கச்சமொன் றம்பி பாண்டம்
இலங்கையாற் றிடைக்குறைப்பே ரீரைந்து களன்வைப் பும்பேர்
#6
வலம்புரி நந்தியா வர்த்தம் வால்வளை வலஞ் சூ ழிப்பேர்
புலம்பல்துன் பொலித்தண் டாமை புயற்றுளி தனிமை யச்சம்
சிலம்புவே தண்ட மோசை செப்பிய பரிபு ரப்பேர்
இலம்பக மத்தி யாயம் நுதற்சூட்டென் றிருபே ராமே
#7
கலிங்கமே வானம் பாடிப் புட்டூசோர் தேயங் காட்டும்
குலிங்கமே யூர்சி வப்புக் குலிகமூர்க் குருவி வாசி
புலிங்கமோ ரெழுத்த முற்சேர் பொறியேயூர்க் குருவி முப்பேர்
விலங்குகாண் மிருகங் காலின் வீழ்தளை குன்று மாமே
#8
அலியென்ப நமனே பேடி யடிசில் தீ நறுவி லிப்பேர்
பலியென்ப பூசை பிச்சை பகர்பேடி வெண்ணீற் றின்பேர்
ஒலியென்ப திடியே காற்றே யோசையென் றோதல் முப்பேர்
கிலியென்ப வெருவல் பேடி கீல்சந்தே பிசினா ணிப்பேர்
#9
ஒலியல்வெந் தோல்நோ யாறே யுடையேபூத் தொடையேயைம்பேர்
பொலிவென்ப பொற்பெ ழுச்சி யகலஞ்செம் பொன்னே நாற்பேர்
வலியென்ப கந்து பாயல் மது கையும் வலித்த லும்பேர்
கலியென்ப வலியே யோசை கடையுகம் வஞ்ச னைப்பேர்
#10
தலையாதி யிடமே சென்னி சால்புமாட் சிமைசான் றாண்மை
சிலையேவில் கல்லே மூல நாள்மரந் திண்ம லைப்பேர்
அலைவேதான் மிகுதி யச்சம் ஆலாலம் விடமே வவ்வால்
உலைவேயீ றுடன்றீ ரற்பேர் உலூகமே யுரல்கோட் டான்பேர்
#11
வலையமே வாவி யோர்பூண் வட்டம் வா யினிலொன் றேயாம்
இலையமே கூத்துக் கூத்தின் விகற்பமு மிசைக்கு நாமம்
மலையனே யுதவும் வள்ளல் வானேகா னகநா டன்பேர்
தலைவனே கொழுநன் னீசன் றராபதி முருக வேளாம்
#12
வாலிவா சவன் சேய் தூறல் மதிதெரி கலையி ராவாம்
காலியான் கூட்டங் காற்று கலாமென்ப கொடுமை கோபம்
பாலியே வடவி ருக்கம் பசுவளித் தலங்கள் நாற்பேர்
நீலியே கருமை துர்க்கை நிகழ்த்துமோர் பூடு மாமே
#13
ஆலியே யாலாங் கட்டித் துளிகாற்றோ டமுத நீராம்
பாலிகை யுதடே வட்டம் பட்டவாள் முட்டி யும்பேர்
சாலியே வடமீன் கள்ளுச் சாற்றருங் கவசம் நெற்பேர்
மோலியே சடைகோ டீ மணிமுடி முருகார் மாலை
#14
மாலையே குணமொ ழுங்கே மாலிகை யிரவந் திப்பேர்
சாலையே புரவிப் பந்தி யறப் புறந் தருவின் சோலை
வேலையே தொழில ளக்கர் வேலையின் கரைபோர் காலம்
சேலையே யசேகு தூசாம் சில்லிகை யாடை சிள்ளான்
#15
செல்லிடி சிதலை யேவல் செழுமுகில் ககன மைம்பேர்
அல்லிரா விருளே யென்ப அலர்மலர் புனல்ப ழிச்சொல்
பல்லியம் புரவிப் பந்தி பாணிவாச் சியமே தொங்கல்
வல்லியங் கொடிபு லிப்பேர் மலைப்பேயா கவமோர் கூத்தாம்
#16
எல்லையே யிரவி யீறோ டிடம்பகல் குரோச நீளம்
ஒல்லைமாத் திரையே தொல்லை கடுப்புட னிறுதி யோதும்
சில்லையே பிரண்டை யென்ப சிள்வீடு தூர்த்தை முப்பேர்
வல்லைகான் விரைவே யோர்நாள் நோய்கால வரவும் பற்பேர்
#17
முல்லையோர் நிலமே கற்பே முதிர்வென்றி யிசையே மவ்வல்
குல்லையே துளவங் கஞ்சாக் கோந்தடர் சித்தரவும்பேர்
தொல்லையே துன்ப முந்தை சொலோம்பியே வுலோபங் கள்ளாம்
கொல்லையே புனப்பூந்தோட்டம் கோலங்கோற் பழமெ ழிற்பேர்
#18
வல்வலி விரைவே சூதாம் மலர்தலே யெதிர்தல் தோன்றல்
கல்லொலி யருவி வெற்பாம் கலகமே கலக்க மோசை
எல்லொளி பகலி கழ்ச்சி யிரவியா தெனல்கங் குற்பேர்
நெல்லுயர் வாகை சாலி நீலேகாற் றோர்நிறப்பேர்
#19
வில்லென்ப மூல நாளே வெஞ்சிலை யொளியே முப்பேர்
சொல்லென்ப புகழ்நெல் கள்ளே சொல்லுட னெழுச்சி மல்கல்
ஒல்லென்ப விரைவொ லிப்போர் ஒலித்தல்நீட்டித்தலோசை
கொல்லென்ப தசைச்சொல் லையங் கொலையேவல் வருத்த மைபேர்
#20
அல்லிதா தாம்பல் காயா வகவித ழலியே யைம்பேர்
சில்லியே வட்டங் கீரை தேருருள் சிள்வீ டேபேர்
கொல்லியோர் நோயே வெற்பே குலவு மோ ரிசையே முப்பேர்
வல்லிநீக் கம்பெண் பாடி கொடிபுணை வரைவு வள்ளி
#21
மல்லென்ப வலியே கூத்தின் வகுத்ததொன் றேவ ளப்பேர்
பல்சந்தி வேய்க ரும்பே பாபதி வாழ்த ரைப்பேர்
இல்லென்ப தில்லை யேவீ டிராசிசா விடனில் லாள்பேர்
புல்சங்கம் புலிசொம் போர்புள் புதல்பனை பனுடம் புன்மை
#22
அலமேசஞ் சலங்க லப்பை யமைவெனு முப்பேர் செப்பும்
சலமேநீர் வயிரம் பொய்ம்மை சாற்றுமுட் பன்றி முப்பேர்
திலமேயெண் ணுடனற் பப்பேர் திகழுமஞ் சாடி முப்பேர்
பிலமேபா தலம்வ லிப்பேர் பீலிக மதுவு மாமே
#23
வலமேயூற் றம்மி டம்பார் வலம்வாகை திரண்ட கற்பே
குலமேயில் சாதி கூட்டம் குடிமைரே வதிநா ளைம்பேர்
நிலமேபொன் னிலைமை பூமி நிலை குணம் பொழுது நேயம்
தலமேபா சடை நிலப்பேர் சலதரம் புயல்வா விப்பேர்
#24
கலாவமே மஞ்ஞைப் பீலி கவிகைமே கலையே முப்பேர்
உலாவென்ப பவனி போத லுரைக்குமோர் பனுவற் கும்பேர்
பலாசமோர் மரம்பை வண்ணம் பாசடை யெனவும் போற்றும்
விலாசமே நீபம் வாழை வேலன்சேய் வெறியாட் டாளன்
#25
சலாகைநன் மணிநா பாசம் சவளமிம் முப்பேர் காட்டும்
இலாடமோர் தேயம் நெற்றி எலியாகு பூர நாளாம்
கலாவல்சே ருதல ளாவல் கலங்கலே யிரங்கல் சோம்பாம்
சிலீமுக முலைக்கண்ணின்பேர் சிறையுளர் சுரும்பு மாமே
#26
மாலதி சாதி முல்லை மல்லிகை சொல்லு முப்பேர்
சோலய ரென்னு நாமம் சோனகர் பூரி யர்க்காம்
மாலரே புலையர் வேடர் வழுத் துறு கவச முப்பேர்
காலச மால வட்டங் காற்றுடன் வட்ட முப்பேர்
#27
அல்கல்நாள் சுருங்கல் தங்கல் அல்மதி ளாவி யைம்பேர்
மல்கலே நெருங்கல் பொற்பே சொரிதலே மிகுதி வைக்கும்
கல்வியே கலைப யிற்சி கருதுறு மறிவே முப்பேர்
செல்வமே சுவர்க்கங் கல்வி சீரெனும் பேரு மாமே
#28
மல்லலே பொலிவு வட்டம் வளம்வலி பெருமை யைம்பேர்
பல்லமே கரடி யோரெண் பகழிமாக் கலனை நாற்பேர்
புல்லமே கண்ணோய் சேவாம் பொலஞ்செம்பொன் னழகு மாகும்
சல்லமே பன்றி முள்ளுஞ் சாற்றுசீ தளமு மாமே
#29
ஆலோலம் புள்ளோச் சற்பே ராற்றுநீ ரோசைக் கும்பேர்
சேலேகஞ் சந்த னஞ்செஞ் சிந்துர மிரண்டுஞ் செப்பும்
கீலால முதிரங் காடி கிளத்திய நீரே முப்பேர்
காலேயங் களபத் தோடே கறக்குமான் குழவுக் கும்பேர்
#30
கலித்தலே பொலிவெழுச்சி தழைக்குதல் முப்பேர் காட்டும்
வலித்தலே கட்டல் கோணல் மலர்ச்சியோ டுடன்ப டற்பேர்
இலிர்த்தலே சிலிர்த்த லொன்றல் ஏல்வையே போழ்தே பொய்கை
மலர்ச்சியே யிறுமாப் பின்பேர் பலர்வுடன் பொலிவு மாமே
#31
சல்லாப முட்பு றம்பொத் துளபொரு டலைமைக் கும்பேர்
உல்லாச மத்த வாள முள்ளத்தின் களிப்பி ரண்டாம்
கல்லாரம் குளிரி மஞ்சள் கடிகமழ் கழுநீர் முப்பேர்
நல்லார் மெய்த் தவர்கற் றோராம் நவ்விவாள் விழியார்க் கும்பேர்
#32
உலகென்ப வளவே பூமி ஒல்கலே குழைவு தேய்தல்
பலவென்ப மிகுதி பாகல் பலகார மிலக டம்மூண்
பிலவங்கங் குரங்கே தேரை பேசுமாண் டென்றே முப்பேர்
செலவென்ப வழியி னாமங் கழிதற்குஞ் செப்ப லாமே
#33
இலஞ்சியே மகிழ்ம ரப்பேர் ஏரிகொப் பூழு மாகும்
கலம்பகந் துழாவ லின்பே ரொருபனு வற்குங் காட்டும்
துலங்கலே விளங்கல் தூய்மை " சூலியே சிவன்காளிப்பேர்
இலம்பாடே வறுமை துக்கம் இல்லமே வீடு தேற்றா
#34
ஓலமே கடல்பாம் போசை உலமர லளுக்கல் துக்கம்
இயாலமே யாச்சாத் தாரோ டிருங்கரு நிசியி ரண்டாம்
ஏலமே மயிர்ச்சாந் தேலம் இலிங்கமாண் குறிகு லிங்கம்
சூலெனும் பேர்பீள் சூலை தோலிதூ சழிவி லாமை
#35
உலைதலே யுருங்க னாம மழிதற்கு முரைக்கற் பாற்றே
புலையர்பூ ரியரே மற்றச் சண்டாளர் தமக்கும் போற்றும்
தொலைதராக் கோலே யேற்றந் தோற்றமுந் துலையு மேற்கும்
கலுழியே கான்யாற் றின்பேர் கலங்கிய நீரு மாமே
#36
மல்லிகை விளக்குத் தண்டே மாலதி யிரண்டே யாகும்
கல்லோல நீர்த்த ரங்கம் கருகிய வொலியும் காட்டும்
சொல்லேரி னுழவர் தானே துலங்குமந் திரிகற் றோர்கள்
வில்லேரி னுழவர் பேரே வீரர்க்கும் வேந்தர்க் கும்பேர்
#37
மலைத்தலே பொருதல் சூடல் மறுத்திட லொலித்த னாற்பேர்
உலக்கையே யோண முரோங்கல் ஊடறீ ருதலே நிந்தை
கலக்கமே கதனத் தோடே புரோதனங் கழறற் பாற்றே
இலக்கமோ ரெண்குறிப்பேர் இலாஞ்சனம் பேரே புள்ளி
#38
தாலமே கூந்தற் பூகந் தராதலம் பனையே நாவே
சீலமார் பண்பே நாப்ப ணுண்கலஞ் செப்பு மேழ்பேர்
பாலமே நெற்றி பூமி மழுப்படை நடக்கும் பாலம்
நீலமே பனகால் நெய்தல் நிறத்திலொன் றிருண்ம ணிப்பேர்
#39
சாலமாக் குழுவ சக்கா மாமரம் வலைசா லேக
மேலெயில் கூட்டந் தாரு விச்சைபூ முகைபத் தேபேர்
கோலநீ ரோட்டம் பாகொப் பனைபன்றி குழவு பீர்க்காம்
காலமுக் காலம் வைகல் கடிமதி டனக்கு மாமே
#40
கூலநீர்க் கரைவா லான்மாக் குழுப்பாகல் முசுப்பல் பண்டம்
யேலுமா வணம்வ ரம்பே முதுரையென் றீரைந் தேபேர்
சாலகங் கால தர்ப்பேர் சாற்றுபூ முகைவ லைப்பேர்
ஆலலே யொலியா டற்பேர் அலந்தை நீர் நிலையே துன்பம்
#41
உலவையே யொட்டை கொம்போ டூர்குடி குலமே காற்றே
நிலவுபா சடையே வள்ளி நிகழ்நாம் மிருநான் காகும்
வலவைவஞ் சப்பெண் வல்லோன் மலமேமும் மலமா சின்பேர்
கலவைசே ருதல்சாந்தி பேர் காலாழ்சே றதுவு மாமே
#42
அலகுநெற் கதிரே யாதி யாரஞ்சோதினிபுண் மூக்குப்
பலகறை யெண்ணு ளம்பு மகிழின்பா லெண்பேர் பன்னும்
திலகமஞ் சாடி சுட்டி சிறுநுதற் குறியே முப்பேர்
உலகமே திசைவிண் பூமி யுயர் குணஞ் சனமு யர்ந்தோர்
#43
கலையேமீ னிரலை காஞ்சி கல்விகால் கால நுட்பம்
நிலையார் காழ் முசு நூல் தூசு திலாலகர் பன்னொன் றேபேர்
குலையேவிற் குதைந டுக்கங் குலைதல்நீர்க் கரைநா லேபேர்
மலையே மால் வரைமீன் யானை வம்புய திருவாட் சிப்பேர்
#44
பீலிவெண் கவிகை சின்னம் பெருவரை கலாபி தோகை
காலியங் கால வட்டங் கனகம்வாச் சியமெண் பேரே
தோலிப் மழகே தோல்வி துருத்திதோல் பலகை யாறாம்
மாலிவெண் கள்ளே வெய்யோன் வழுத்து மோர் நிருத லும்பேர்
#45
காலிடம் தறிம ரக்கால் காற்றுத்தே ருருடாள் மூங்கிற்
பாலனங் குரங்கூற் றூற்றம் பகர்வாய்க்கா லீரா றேபேர்
வேலியூர் நிலங்காற் றோதை விலோதமே பதாகை கூந்தல்
காலிலி பகலோன் றேரூ ரருணன்காற் றுப்பாந் தட்பேர்
#46
பால்வெண்மை திசைவ குத்தல் பயங்குணம் பக்க மாட்சி
சால்வெண்பால் விதையி டப்பேர் சாற்றுமீ ரைந்தென் றேயாம்
ஆல்தெண்ணீரசைச்சொல் நாம மாமல வெனவே நாற்பேர்
வால்வெண்மை மிகுதி போட்ட மழவு தூய்மைவா ளிப்பேர்
#47
கோல் துலாம் கணைசம் மட்டி துகிலிகை குறியாழ்த் தந்தி
யேலிலந் தைமை தீட்டு மெழிற்கோல்வேந் தன்கோ லெண்பேர்
நூல்கொடி யெல்லை வள்ளி நுணங்குசாத் திரந்தந் தெண்ணம்
வேல்கையா யுதப்பொ து ப்பேர் வேறலும் பகையு மாமே
#48
அலரிகண் வரியே நீவி யருக்கனீ ராவி பூவோ
டிலகெழின் மரமே தேனீ யியம் புறு நாம மெட்டாம்
கலனையே கலப்பை வாசிக் கலனையென் றிருபேர் காட்டும்
மலர் தேனீர் பூவ சைச்சொல் வல்லிகை குழைவீ ணைப்பேர்
#49
பாலையோர் மரம்பா டற்றீஞ் சுவைநில மந்நி லத்தின்
மாலையார் பாடல் பொன்மேற் பிரிதல்வாய்ந் துடனே போதல்
வேலையாற் பிரிவு ரைத்தல் வெம்மையென் றெண்பேர் வைக்கும்
காலையே கால நாளாம் கல்லி யாணஞ்சுபஞ்செம் பொன்பேர்
#50
மால் வலி பொலிவே சோழன் மறத்தலே பெருமை மேகங்
கால்நெடி போன்ம யக்கங் கருமைகண் ணேணி தொன்மை
யேல் புதன் வேட்கை யேயென் றியம்புநா மம்மீ ரேழாம்
போல் பிறல் கோர யேதி பொப்புடன் படைய சைப்பேர்
#51
உலமைநீர் காற்றுத் துன்ப முயிர்நீப்போ டிரச லூற்றம்
பிலமார்வால் திரண்ட கற்பேர் பட்டடைப் பேரொன் பானாம்
புலமேசெம் பொன்ன டுக்கம் புந்தியைம் புலம் விளைந்த
நிலமேதிக் குடனி டப்பேர் நிகழ்த்திய தனிமை யெண்பேர்
#52
பண்டை யோ ரிசைல கார வெஇ கையிற் பகருஞ் செய்யுள்
மண்டல மதனி லைம்பா னென்னவே வகுத்தல் செய்தான்
திண்டிறற் கொடி செஞ் சேவற் றிகழ்ந்த செவ் வேளைப் போற்று
மண்டர்கள் விளங்குஞ் செந்தி லருமருந் தையன் றானே
** லகரவெதுகை முற்றும்
@ வகரவெதுகை
#1
நாட்டுமன் பதைகட் கெல்லா நாதனாய் நலிவி லானாய்க்
கோட்டமில் குணத்து ஞானக் கொழுஞ்சுட ராங் குகேசன்
பாட்டளி துதையுஞ் செங்கேழ்ப் பங்கயப் பாதம் போற்றி
யீட்டமார் நலவ கார வெதுகையின் றொடையி சைப்பாம்
#2
அவனிபா ரகரே வேந்தர் அம்புவி முப்பேர் போற்றும்
புவனநீர் புவியி ரண்டாம் பூவம்ப னடல்வேள் வீரன்
பவன மே நாக லோகம் படி காற்றே மனையி ராசி
நுவணை நூல் பிண்டி நுட்பம் நூவோரக் கரமெள் ளியானை
#3
உவணமே வயின தேய னுயர்ச்சிக் கழுகே முப்பேர்
சிவணலே யெழுச்சி கூடல் செவ்வீரம் பாசி தேயம்
சுவணமே பொன்னெழிற்பேர் சுவர்க்கம் விண்ணுலகங் கொங்கை
யவனர்தோற் கருவியாளர் தபதிசோ னகரென் றாமே
#4
திவவென்ப ரிழிவே யாழின் வலிச்கட்டி னரம்பே செப்பும்
குவவென்ப திரட்சி மேடு குவிதல்சொற் பெருமை கூட்டம்
தவவென்ப மிகுதி குன்றற் தயவுடன் றவமே நாற்பேர்
சுவவென்ப சுவர்க்கஞ் கண்டன் றொகுத்தபுண் மூக்கு மாமே
#5
அவிநயம் பலவல் நாட கரங்கமென் றிருபே ராகும்
சவிமணிக் கோவை யந்தஞ் சாருவே யிரதங் காந்தி
கவிதொடை வெள்ளி யேநீர்க் காக்கைவாக் குள்ளோன் மந்தி
நவிலல்சொல் லுதலே ப ண்ணல் நவிரேயாண் மயிர்பண் வாளாம்
#6
சிவமேநன் டைபஞ் சாக்கினி திகழ்முத்தி குறுணி நாற்பேர்
பவமேயுற் பவம்பா வப்பேர் பாவனா சனம்பாம் போர்நீர்
நவமேகார் காலங் கேண்மை புது மையொன் பான்பேர் நாட்டும்
கவனங்கான் கலக்கம் வாசிக் கதியெனு முப்பே ராமே
#7
நவிரமே குடுமி புன்மை நற்பசுந் தோகை வெற்பாம்
அவிரதம் நோற்கி லாமை யனவர தமுமே யென்றாம்
கவிகையே குடைகொடைப்பேர் கவந்தந்தெண் ணீர்மட்டைப்பேர்
தவிசணை தடுக்கே மெத்தை யிலகட நாற்பேர் சாற்றும்
#8
அவையென்ப சவையே கற்றோர் அவிர்தலே யொளிபீ றற்பேர்
சிவையென்ப து மையே கொல்ல னூ துலை மாவேர் செப்பும்
கவையென்ப காடா யில்லியங் கவர்வழி யெள்ளி ளங்காய்
நவையென்ப திகழ்ச்சி குற்றம் நவியமே மழுக்கோ டாலி
#9
கவுரவ மிளமை வெள்ளை கவிப்பேமூ டுதல் குடைப்பேர்
சவுரியே திருமால் கள்ளன் சனியமக் கலுழ னைம்பேர்
கெவுரியே யுமைகா ளிப்பேர் கேவலந் தனிமை முத்தி
மவுலி தார் முடிகோ டீரம் மவ்வல்மல் லிகைமுல் லைப்பேர்
#10
கவுசியே குழைவு துன்பம் கவுத்து வமோர் மணியத் தப்பேர்
சவுரியங் களவே மேதி சாற்றிடு மாற்றல் முப்பேர்
கவுசிகன் விசுவா மித்திர னூற்றுப்பத் துக்க ணன்பேர்
கவுசிகம் விளக்குத் தண்டே யோர்பண்கோட் டானோர் பாட்டாம்
#11
அவலேநீர் நிலைவ யற்பேர் ஆவம்வின் னாணி தூணி
குவலயம் நெய்தல் பூமி குளிர் கருங் குவளைக் கும்பேர்
கவலைசெந் தினையோர் வல்லி கவர்வழி வெருவல் துன்பம்
சுவல்பிடர் புயமேல் மேடே சொற்கொல்லை யைம்பே ராமே
#12
நாவகம் நடுவே நாவாம் நவ்வோரக் கரநா வாயாம்
சாவக ரொருதே யத்தோர் சமணரி லிருத்தி பெற்றோர்
சேவகம் வீரம் யானை துயிலிட மிருபேர் செப்பும்
தீவகம் விழியே பார்வை செழுஞ்சுடர் விளக்கெ னும்பேர்
#13
ஆவலர் கொண்கர் நாம மாற்றுகா தலர்க்கு மேற்கும்
சீவனி யோர்ம ருந்தே செவ்வழித் திறத்தோ ரோசை
கோவனே வசிட்ட னீசன் குயவனென் றிம்முப் பேரே
மேவலே சேறல் வேட்கை வேவமே தனிமை துன்பம்
#14
ஆவலே வளையா சைப்பேர் அவதிமட் டிடாமை காலம்
தூவலே திவலை யார்ப்பாம் துவக்கேதோல் பிணக் கிரண்டாம்
காவலே சிறைநீர் தாருக் கதைத்ததம் பட்ட நாற்பேர்
வாவலே தாவல் கூத்து வயாவுடன் வவ்வாற் கும்பேர்
#15
கவடென்ப தியானை கட்டுங் கயிறுகப் புடன் பணைப்பேர்
குவடென்ப மலையி னுச்சி கொழுங்குவ டெனவுங் கூறும்
சுவடென்ப கணிதத் தொன்றும் ஞெமுங்கற்குஞ்சொல்லற் பாற்றே
கெவுடஞ்சொற் பேரே கோடி கேடிலோர் தேய மும்பேர்
#16
உவாவென்ப திளையோன் பவ்வ மும்பல்தெண் கடலே நாற்பேர்
திவாகர னனந்தன் வெய்யோன் செவியென்ப காதே கேள்வி
சவாதுபூ சும்பூச் சின்பேர் தக்கவோ ரிடத்தோ லைப்பேர்
சுவாகாமந் திரமே யங்கித் துணைவியென் றிருபே ராமே
#17
அவாவென்ப தாசை சோம்பாம் அவதார மிறங்கல் தோற்றம்
சுவேதமே வேர்வு வெண்மை சொன்மாலை முப்பேர் செப்பும்
விவாவென்ப பெருமை யின்பேர் விளங்குறு மிரவும் போற்றும்
சுவாமி செவ் வேள்வி யாழ முனைவரு மரன் பேர் சொல்லும்
#18
ஆவியே நாற்ற மூச்சோ டாருயிர் வாவி தூமம்
கூவிரம் தேரே தேரின் கொடிஞ்சியென் றிருபேர் கூறும்
நாவிதன் பூர நாளே னாதியோ டெரிநாள் முப்பேர்
காவியென் பதுகள் ளின்பேர் கருங்குவளைக்கு மாமே
#19
சிவப்பென்ப சினக்கு றிப்பேர் செம்மையாங் கறுப்பு மற்றே
உவப்பென்ப பொலிவி னாம மோகையென் றிருபேர் கூறும்
நிவப்புயர் வுடன்பரத்தல் நிவறலே துளக்க மொய்த்தல்
தெவிட்டல்கான் றல்லொ லித்தல் நிறைத்தல் சொம் படைத்திடற்பேர்
#20
பாவென்ப பாப்புப் பாவல் பனுவனூல் பாத்தேர்த் தட்டாம்
தாவென் பகைவ ருத்தம் தாண்டுதல் வலியே கேடாம்
தூவென்ப பகைவால் தூய்மை தூவியூன் பற்றுக் கோடாம்
ஓவென்ப பிறங்க லோடே கொடுமையோங் கார மாமே
#21
கவ்வையெள் ளிளங்காய் துன்பம் கடநிபம் பழிச்சொல் கள்ளாம்
துவ்வையே பருக னாமம் சொற்றபிண் ணாக்கி றைச்சி
தவ்வை மூத் தாளே யீன்றாள் சாற்றுமூ தேவி முப்பேர்
செவ்வுதண் பழனஞ் செவ்வை தெவ்வுகொள் சமர்ப கைப்பேர்
#22
அவ்விய மழுக்காற் றின்பேர் ஆன்றபொய் யுடனி ரண்டாம்
துவ்வுத லுண்ட லோடே ஆப்பத மிரண்டுஞ் சொல்லும்
பவ்வமே கடலு வாப்புற் புதமரக் கணுவு ருப்பேர்
எவ்வமே தனிமை துன்பம் ஏவலே யானை யேவல்
#23
ஆவிய ரிப்பர் வேடர் ஐவராங் களர்வி யாழம்
தீவியே புலிவி ளக்கம் தீவிரங் கிரணம் வல்லை
தூவிபுள் ளிறகே தூவல் துவ்வனு பவமே சுத்தம்
நீவியே துடைத்த லாடை நெருங்குகொய் சகமளித்தல்
#24
கூவலே கிணறே யோசை கோவை தாழ் வடநூல் விம்பம்
நாவலர் கவிஞர் கூத்தர் நாவாய்ரே வதியம் பிப்பேர்
சேவல்புள் ளாணே காவல் சீவனே யுயிர்வி யாழம்
ஓவர்வந் தித்து நிற்போர் தபதிய ரிவையோ தும்பேர்
#25
பாவை பெண் பாவை யாகும் பாவமே மறங்க ளிப்பாம்
ஆவர ணம்ம றைப்போ டார்த்திடுந் தூசி ரண்டாம்
பூவைநா கணவாய் காயா பொற்புகோ கிலங்கிள் ளைப்பேர்
நாவியோர் பூடே நாவி நவ மணிப் பேர்பொன் காசாம்
#26
கவரிசா மரைதேர் மோதி கத்தூரி மிருக நாற்பேர்
தவறலே விடுதல் குற்றஞ் சாற்றிடுஞ் சோம்பே முப்பேர்
துவரேசெம் பவளங் காட்டந் து வர்சிவப் பிகலே பாக்கம்
கவர்தலே பெட்பி னாமங் கரந்து கோ டற்கு மாமே
#27
சவலையோ ரினவெண் பாட்டே சாற்றுமின் னற்கும் பேரே
திவசமே நடுப்ப கற்பேர் செப்புமோர் நாளுஞ் சொல்லும்
உவமைநே ரலங்கா சப்பேர் உவர்ப்பிகழ்ச் சிவேண் டாமை
துவர் தலே வகிர்த லோடு சொற்றவோர் சுவையு மாமே
#28
ஐவன மலைநெல் லின்பே ரான்றவோர் தாரும் வைக்கும்
செவ்வியே யழகு காலம் தீவினை வேள்வி பாவம்
நவ்விமா னழகே யத்த நாளுட னிளமை நாற்பேர்
வெவ்வினை முயலுத் தியோகம் விளங்கிரு வினைக்கும் பேரே
#29
ஆவணம் புணர்தம் வீதி யங்காடி யுரிமை நீளுங்
கூவிரஞ் செறியும் பீடம் சாதனங் கூறா றேபேர்
கோவணங் கல்ல ழுத்துங் குழிவட்டங் கெளபீனப்பேர்
பூவணி சதுக்கந் தொங்கல் பூவலை சிவப்புப் பூத்தல்
#30
உவளக மதிலோர் பக்க மோதந்தப் புரமே வாவி
சவருமுப் பளமே பள்ளஞ் சாற்று மூ விருபேர் வைக்கும்
குவளைகண் காவி யின்பேர் குவாலென்ப மேடே கூட்டம்
இவறலே மறவி யாசை யென்பபே ரிசைக்கு மப்பேர்
#31
இவர்தலே யெழுச்சி ஆசை யேறுதல் சேறல் மேவல்
தவறிலா நடத்த லோடே பரத்தலுஞ் சாற்று மேழ்பேர்
துவைபுளிங் கறிது வைத்தல் துவன்றலே நெருங்க லோசை
தவரெனுங் கிளவி யோகர் தனுவெனு மிருபே ராமே
#32
ஆவென்ப தாச்சாத் தாரோ ரக்கரம் பசுவி ரக்கம்
மேவுஞ்சொல் லிசையே யிச்சை வியப்புட னேழ்பேர் கூறும்
கோவென்ப குலிச மான்பார் குருசில்கண் கிரணந் திக்கே
யேவல்விண் சுவர்க்கம் பாண மியம்பல்நீர் பன்மூன் றேபேர்
#33
தேவென்ப தேனே நாற்றம் தித்திப்பே தெய்வத் தாரே
தாவுமெண் டிசையே செவ்வை தராதல மிடமெண் பேரே
காவென்ப துலைதண் சோலை கலைமின்றோட் சுமைப் சுப்பேர்
மேவுங்கற் பகம்வ ருத்த மிடல்வட மொன்பான் பேரே
#34
மாவென்ப பெருமை வண்டு வாசிநென் மாவ சைச்சொல்
மேவொரு கணிதஞ் செல்வம் விலங்கொரு தருவெ றுப்புப்
பூவுயர் திருவ ழைத்தல் பொறைபொறுத் திடுதல் கான
றாவொளிர் கருமை சாயல் சாற்றுமீ ரெண்பே ராமே
#35
மாவுயரியவ கார வெது கையின் வழுத்துஞ் செய்யுட்
டாவுயர் மூன்றி னோடெண் ணான்கெனச் சாற்றல் செய்தான்
பாவுய ரெழில்கூர் செவ்வேள் பங்கயப் பாதம் போற்றும்
ஆவுயர் செந்தின் மேவு மருமருந் தையன் றானே
** வகரவெதுகை முற்றும்
@ ழகரவெதுகை
#1
தடையில மும்மு தற்குந் தனிமுத லாகி யென்று
முடைபயில் புவன மேத்து மொண்பொரு ளானோன் செங்கை
யடையுறு மயில்வேற் றாங்கு மண்ணல்பொற் றாளைப் போற்றி
இடையின மெனும்ழ கார வெதுகையின் றொடையி சைப்பாம்
#2
நிழலரு ளொழுக்கஞ் செல்வம் நீழல்நோய் குளிர்ச்சி யைம்பேர்
கழல்கழங் கொடுசெ ருப்புக் காலுட னறைக ழற்பேர்
குழல்விலோ தந்து ளைப்பேர் கொழுமையே வளன் கொழுப்பாம்
சுழல் கறங் கேகாற்றாடி துழாய் துன்பந் துளவென் றாமே
#3
விழைவென்ப புணர்ச்சி காதல் மேழமே கவச மாடாம்
கழையென்ப புணர்த மூங்கில் கரும்பென விரும்பு முப்பேர்
குழையென்ப தளிரே சேறே கொழும்பொனின் றோடுங் கூறும்
உழையென்ப தியாழோ ரோசை யுழையலோ டிடமா னும்பேர்
#4
விழவவா மிதுன ராசி விளம்பிலுற் சவமு மாகும்
மழவெழி லிளமை குட்டி வழக்கர் நீள் வழிவ ழக்கம்
குழவெழில் மழவு குட்டி கோழ்கொழுத் தல்கொழுப்பே
இழவெனும் பேரி ழத்த லெழுந்திட லிரண்டு மாமே
#5
அழுவல்நற் குணம்வி சாலம் அழுங்கல்கே டிரங்க லோசை
கழுமல்பற் றொடும யக்கங் கடுந்துயர் மிகுதி மல்கல்
செழுமைபொற் பின்பே ரேமாட் சிமைகொழு மைவ ளப்பேர்
கெழுமல் கற் கல்பொ ருந்தல் கிழிநிதிப் பொதிய டங்கீள்
#6
வழுவென்ப குற்றங் கேடு வந்து றுஞ் சோர்வே முப்பேர்
கழுமுள்மா தளையே சூலங் கழுக்கடை வேற்பொதுப்பேர்
எழுவென்ப பரிகந் தம்பம் எழுச்சியேர் நோயுயர்த்தல்
ஒழுகலென் பது வே நீள மொழுக்கமென் றிரண்டு மாமே
#7
பொழிதலே சொரித னீட்டல் பூழியன் வழுதி சேரன்
வழுதியே வங்க மாறன் வழுத்தல்தோத் திரமே மெச்சல்
தொழுதியே நெருக்கங் கூட்டம் தொழும்பரே யடிமை மள்ளர்
கொழுதியே பொலிவு நாமங் கொழுத்தற்கும் வழுத்தற் பாற்றே
#8
அழுவமே பரப்பு நாடே யறைபறை நடுக்கந் துக்கம்
கெழுவுரை தகைமை யாட்சி கேழ்நிற மொளியொப் பாகும்
இழுமென லினிமை யோசை எழானரம் பிசையோர் புள்ளாம்
விழுமமே சிறப்புச் சீர்மை விடாத்துய ரதுவு மாமே
#9
யாழ்முத னாளே யாந்தை யறை வீணை மிதுனம் நாற்பேர்
தாழ்தலே வணங்க லாசை குறைதல்தங் கற்பேர் நான்காம்
கூழ்பயி ருணவே பைம்பொன் குழாயேயுட் களை தண் டாகும்
ஊழ்முறை வெயில்ப கைப்பே ருறுதெய்வம் நற்கு ணப்பேர்
#10
அழனமே பிணஞ்செந் தீயாம் அழகேசற் குணமெ ழிற்பேர்
கிழமையே யுரிமை பண்பாம் கேழலே யானை பன்றி
பழமையே வேண்டற் பாடுந் தொன்மையும் பாணுஞ் செப்பும்
தழவுதான் விரைவு தற்பேர் செறுத்தல்மன் னுதலுஞ் சாற்றும்
#11
இழுது நெய் யிழுக்க லின்பேர் இழுக்கென்ப மறத்தல் கீழ்மை
கழுது பேய் பரண்வண் டின்பேர் கழுத்திதித் திலங்க ழைப்பேர்
பழுதென்ப மறைவு குற்றம் பகருறு மிடமே முப்பேர்
வழுதலை புனத்திடும்பொய்க் கழுவழு தலைப்பேர் வைக்கும்
#12
உழிஞையே சிறுபூளைப்பே ரோதெயில் வளைத்தற் கும்பேர்
கழிவென்ப மிகுதி சாதல் கடந்திடல் வரைத்தல் போக்காம்
குழியமே மருந்திற் கெல்லாம் பொதுபாறா வளையங் கோலம்
தொழிலியற் றிடுமு ஞற்றுந் தொல்லையே பெருமை சோரம்
#13
வழியென்ப திடமே மார்க்கம் வருமக வுடன்பின் னும்பேர்
குழியென்ப தகழ்தல் குக்கி குழிசியே மிடாப்பா னைப்பேர்
பழியென்ப பழித்தல் குற்றம் பழிச்சல்தீச் சொல்வ ழுத்தல்
எழிலென்ப தழகே வள்ளி எழிலியே வள்ளல் மேகம்
#14
உழுவையே புலிமே திப்பேர் உழுதலே யுழுத றொய்யல்
தொழுவென்ப தழலை தானே ரேவதி நாளுஞ் சொல்லும்
முழுமக னறிஞன் மூடன் மோழையே காடி கஞ்சி
உழுவலே யாரா வன்போ டோங்கெழில் புணர்ச்சி நாற்பேர்
#15
ஊழியே யுகாந்தம் பூமி உழப்பென்ப வலியுச் சாகம்
தோழியே யரக்குப் பாங்கி சூழே நோய் சூழ்த லாகும்
பூழியே புழுதி சேறாம் பூழிலே யகில்பூமிப்பேர்
காழிய ரப்ப வாணி கர்க்கும்வண் ணார்க்கும் பேரே
#16
வழுக்கென்ப மறத்த லின்பேர் வழும்பெனும் பேரு மாக்கும்
நிழற்றலே நுணுக்கம் நீழல் நிழல்செய லெனவே முப்பேர்
கிழத்தியே மனைவி முல்லை மருகப்பெண் ணெனக்கி ளத்தும்
பழுப்பரி தாரத்தான் பேர் முதிரிலைப் பருவ மாமே
#17
தாழையே தெங்கு கைதை தழல்கிளி கடிகோல் செந்தீ
ஏழைபெண் மிடியன் பேதை இழையேபூ ணிழைத்தனூற்பேர்
நூழையே வருவாய் நுட்பஞ் சாளர நுவலற் பாற்றே
மாழ்கலே யிரங்கல் மோகம் வழுத்து ரோ தனமு மாமே
#18
ஈழமே சிங்க ளம்பொன்னிழுக்குறுங் கள்ளே முப்பேர்
வேழமே கொறுக்கை மூங்கில் வெற்றிமால் யானை கன்னல்
காழகங் கருமை யாக்கை கழுதைதூ சுடன்க டாரம்
கீழிடங் கயமை பள்ளங் கிழக்குட னாற்பே ராமே
#19
நீழலே யொழுக்கம் வெள்ளி நிலவேயாற் பதமே நாற்பேர்
சூழலே யிடம் வி சாரஞ் சொற்கூழைப் படையே முப்பேர்
ஞாழலே பலினி கோங்கு நாறுங்கத் தூரிக் கும்பேர்
சாழலே விளையாட் டோடே சாற்றுங்கா டிக்கும் பேரே
#20
உழுந்து சொற் படிறி னாம மோதுறு மாடத் தின்பேர்
கொழுங்கிரி வரையே மவ்வல் கோழியே யுறையூ ரோர்புள்
கழங்குசே யாட லிந்தி யங்கொடிக் கழலோ சாடல்
வழங்கலே நடத்தல் நீட்டல் வருமுறை யுலாவ லாமே
#21
உழைக்குத லழுங்கல் வீழ்ந்தே யுழக்குற லுஞற்றே முப்பேர்
சுழற்சியே கறங்க லாழித் தொல்படை யோர்காற் றும்பேர்
தெழித்தல்வா யால தட்டல் செப்புறு மோசைக் கும்பேர்
ஒழுக்காறென் பதுவ ழிப்பே ரொன்றடைக் கலமு மாமே
#22
கழுறுவீ றென்னு நாமங் குழவியுந் தூம்புங் காட்டும்
கிழவனே யறிஞன் மூத்தோன் மருதத்தோன் றற்கி ளத்தும்
தழைதழைக் குறலே பீலிக் குடையெனச் சாற்றற் பாலாம்
நுழையெனு நாம நுண்மை நுழைவாயி றனக்கு மாமே
#23
காழென்ப மணியின் கோவை கற்பால் வித்துச் சேகு
நீள்கத வின்றாழ் காந்தி நிறத்தமாலை கோ லெண்பேர்
கேழ்வியாழ் செவியே கல்வி கெழுவென்ப நிறங்கெ ழூஉப்பேர்
வேழ்வியே மகநாள் பூசை வேள்விக்குண் டங்கொடைப்பேர்
#24
பாழியே வழிவி லங்கின் படுக்கையூர் பெருமை பாயல்
வாழிய தவத்தோர் வாசம் மலைமுழை யகல மெண்பேர்
சூழியே சுனையே வேலை தும்பியின் முகப டாப்பேர்
நோழிநா ழிகைய ளக்கும் நாழிவேய் பூரட் டாதி
#25
ஆழியே கரைகள் வட்டம் ஆர்கலி நேமி வீகம்
பாழிசேர் கரித்து திக்கைந் நுனியெனப் பகரற் பாற்றே
தாழியே பரணி நாட்பேர் சாகரங் குடங்கர் முப்பேர்
நூழிலே கொலைதோல் செக்கு நுவறிரை கொடிக்கொற்றான் பேர்
#26
ஊழ்த்தலே தசையி னாமம் உறுபத னழிவே தீர்த்தல்
தாழ்ப்பிலா நினைத்தல் செவ்வி சாற்றிடும் பேரோ ரைந்தாம்
வாழ்த்தலே வழுத்த லாசி மாழ்குமான் றலைநாள் மாழ்த்தல்
ஆழ்த்தலே மடிமை செற்பேர் அழுக்காறே பொறாமை பொய்யாம்
#27
மாழையே புளிமா வோலை மடமைபொன் னுலோகக் கட்டி
சூழெழில் மடவா ராயம் சொற்றன திரட்சி யெண்பேர்
கூழைபொன் னுரகஞ் சேறு கூந்தல்வெம் படையு றுப்பே
தாழுறுஞ் சிறகே பீலி நடுவெனச் சாற்றெண் பேரே
#28
அழுக்கெனு நாம மாமை மலினமு மறையற் பாற்றே
மிழற்றலே நிரம்பா மென்சொல் மேவுறு மொழிக்கும் பேசும்
இழைத்தலே கூற்ற மாற்ற லியம்புத னினைத்த னாற்பேர்
விழுப்புயர் சிறப்புச் சீர்மை விளப்புறு மிடும்பை யாமே
#29
இன்புயர்ந் திடுழ கார வெதுகையிற் சிறந்த செய்யுள்
முன்பெற வொன்றொ ழிந்த மூவொன்ப தாகச் செய்தான்
பன்கிளர் விரிதோட் சூர்மாப் பகவயிற் றுரந்தோன் பாதம்
அன்புற வணங்குஞ் செந்தில் அருமருந் தையன் றானே
** ழகரவெதுகை முற்றும்
@ ளகரவெதுகை
#1
மாங்குயிற் கிளவித் தீஞ்சொற் பிறை நுதற் கருங்கண் வம்பார்
கோங்கிள முலைப்பொன் தெய்வ குஞ்சரி வள்ளி கொண்கன்
காங்கயன் அன்பர்க் காத்த கடவுள்பொற் பாதம் போற்றி
ஒங்கியற் பெறுள கார வெதுகையின் றொடையோ துற்றாம்
#2
அளையேவெண் டயிர்வன் மீக மகன்மலை முழைவ ளைப்பேர்
தளையேயாண் மயிர்வி லங்கு தண்பணை சிலம்பே நாற்பேர்
கிளையேயோர் பண்மூங் கிற்பேர் கேளொடு கிளைத்தற் கும்பேர்
வளையேகை வளைசங் காழி வள்ளமோ ரளவை வட்டில்
#3
விளைநரம் புடனுண் டாதல் விளையுளே கழனி யுள்ளம்
உளைபுர வியின்மேற் கட்டு மயிர்பிற மயிரு மோதும்
களைகளை களைத லின்பேர் களேபர முடல்பி ணப்பேர்
துளைது ளல் துளைத லின்பேர் துளங்கல்கம் பித்தல் மின்னல்
#4
அளமேயொண் செறிவே கூர்மை யகட்டுப்பு விளைநி லப்பேர்
வளமேபல் பண்டஞ் செவ்வி வளப்பாடே புதுமை தட்டி
விளமேயோரசைச்சொல்வெள்ளில் வேளாண்மைமெய்ம்மையீகை
நளமேதா னுகல்ம டங்கல் ஞாளிதேன் சுணங்க னும்பேர்
#5
அளவென்ப தினமே யெல்லை யாளியே பூட்கை சிங்கம்
களவென்ப களாவி னாமங் கருதுபட் டிமையி ரண்டாம்
விளவென்ப வகிலி னோடே விளாவுதல் விளவே முப்பேர்
உளவென்ப தியாழின் றண்ட முளுவுகோ லுளவு மாமே
#6
விளரென்பதிளமை வெள்ளில் வெஞ்சினங் கொழுப்பே வெண்மை
உளர்தலே சிதற லாகும் தடவலு முரைக்கற் பாற்றே
களர்களர் நிலங்க ழுத்துக் கருமையே கொடியே நாற்பேர்
அளர்நர கஞ்சேற் றின்பேர் அளாவலே துழாவ லோங்கல்
#7
அளகமே பன்றி முள்ளோ டலர்மழை மடவா ரோதி
குளகமோர் செய்யு ளின்பேர் மாக்காலென் றிசைவுங் கூறும்
புளகமே புளகித் திட்டல் புற்புதந் திகழ்கண் ணாடி
களபமே யானைக் கன்று கமழ்சாந்துங் கலவைக் கும்பேர்
#8
முளரிதீ விறகு நுட்ப முண்மாங் கமலங் காடாம்
விளரியே யிளமை வேட்கை மிகுதியாழ் நரம்போ ரோசை
களரியே மிடறு கோட்டி களர்நிலங் கருமை நாற்பேர்
வளரியல் பண்பெழிற்பேர் வளைந்தென்ப வளைத்தல் பேசல்
#9
புளிஞரே கொலைஞர் வேடர் புள்ளியே கெவுளி ஞண்டாம்
வெளிலணில் வேழத் தம்பம் வெண்டயிர் கடைத றிப்பேர்
பளிதமென் பதுகற் பூரம் பல்லமெண் கணக்கும் பன்னும்
ஒளியிரு சுடரே தீயே யொளிப்பி டம் புகழே நாற்பேர்
#10
அளியேதே னளித்தல்வண்டே யன்புடன் வீர மைம்பேர்
வெளியேயா காயத் தின்பேர் மிளிர்மயிர்ச் சடையும் பேசும்
களியேகள் ளுடன்ம யக்கங் களிப்புட னிளமை நாற்பேர்
நளியேசீ தம்நெருங்கல் நவிற்றிடும் பெருமை முப்பேர்
#11
துளியெனும் பேரே பெண்ணா மைமழைத் துளிய டைத்தல்
உளியிடங் கணிச்சி யின்பேர் உள்ளமே முயற்சி நெஞ்சாம்
இளியிசை யிசித்த லொன்றை யிணுங்குதல் சிரித்தற் கும்பேர்
நளினியே வாவி யம்போ ருகத்தணங் கயனே நாட்டும்
#12
அள்ளலே நிரயஞ் சேறோ டள்ளுத லெனவே முப்பேர்
விள்ளலே விருபம் விள்ளல் வெள்ளில்சா ணைவி ளாப்பேர்
துள்ளலே மசக மாடு சொற்கூத்தோர் செய்யு ளோசை
பொள்ளென லொலியி னாமம் விரைவினிற் குறிப்பும் போற்றும்
#13
வாளியா சுகஞ்சுற் றோட்டம் வடிக்கணை சோனை நேமி
கோளிபூ வாது காய்க்கு மரங்கொள்வோன் கொழுஞ்சி யென்றாம்
பாளித மன்னங் கண்ட சருக்கரை குழம்பே பட்டாம்
ஓளியானைக்கூடப்பே ரொழுங்கென்றும் வழங்க லாமே
#14
வாளமே வட்ட மீர்வாள் மருந்திலொன் றெனவே முப்பேர்
கோளகை வட்ட நாமங் கிம்புரிப் பூணுங் கூறும்
சூளிகை மணிமா டம்யா னைச்செவி யடியுஞ் சொல்லும்
தாளியே யனுட நாளோர் வல்லிதிண் பனையுஞ் சாற்றும்
#15
தளிமமே யழகு மெத்தை தளிர்த்தலே துளித்த லொன்றல்
வளமைமாட் சிமைகொ ழுப்பே வழங்கிய கொடையே முப்பேர்
இளமைமா ழாத்தல் தன்மை மழவென வியம்ப லாகும்
குளவிவேட் டுவன்பச் சைப்பேர் கொள்ளலே நினைதல் கோடல்
#16
அள்ளேகூர் வலிபெ றப்பற் றிரும்புடன் செறிவே காதாம்
வள்ளேவார் காது கூர்மை வலிவளஞ் செறிவே வாட்பேர்
கள்ளேபொய் சோரங் கேண்மை கள்வானோர் மருத வேலி
பள்ளேயோர் பாட்டுச் சாதி பள்ளமே ஞெள்ளல் சோரம்
#17
திளைத்தலே நிறைதல் கூடு மனுபவந் துளைத்தல் செற்றாம்
இளைத்தலே யிளைப்பி னாம மிரங்கலென் றோதற் பாற்றாம்
கிளைத்தலே நிறைதல் மல்கல் கிள்ளையே கிளிவா சிப்பேர்
வளைத்தலே கொளல்வளாகம் வளாகங்கோ ணிடந்தொ டற்பேர்
#18
நொள்ளையே யொளிர்ம ழைக்கோள் நுவன்றநா கரவண் டின்பேர்
வெள்ளையே வெண்சங் கிராமன் விளர்மேடம் வெண்பா வெள்ளி
பிள்ளையே காரிப் புள்ளே வயிரவன் பெறுஞ்சேய் முப்பேர்
வள்ளையோர் பாட்டே வள்ளை வள்ளியம் வயிர்ம ரீசி
#19
கள்வனே முசுநண் டியானை கருநிறத் தவனை சோரன்
ஞொள்கல்சோம் பிளைத்த லச்சக் குறிப்பலை யல்நு வற்பேர்
கொள்கையேயறிவே பண்பாம் கொளுத்தேமூட் டொடுபு ணர்த்தல்
தெள்ளுதல் கொழித்த லோர்தல் தேளனு டந்தெ றுக்கால்
#20
வள்ளியே புனையிழைப்பேர் வல்லிகை வளைவோர் கூத்தாம்
பள்ளியே சிற்றூர் கோட்டம் பாயல்கண் படைநீத் தோரூர்
நள்ளியோர் வள்ளல் சுற்றம் ஞண்டொரு கொடியே நாற்பேர்
ஒள்ளியே செம்பொன் சுக்ர னொளிதென் றோதற் கும்பேர்
#21
புள்ளுவம் கனியே வஞ்சம் புள்ளவிட் டம்புள் வண்டாம்
வெள்ளமே யுவரி யோரெண் மிகுதியென் றோதன் முப்பேர்
நள்ளெனல் நடுவே நட்பாம் நாளிகஞ் சரோரம் வள்ளை
மள்ளரே குறவர் வீரர் மறுவிலா வுழவர்க் கும்பேர்
#22
வாளொளி கயிறு கச்சு வயங்கிய படைநீர் கூர்மை
கேள்கிளை கிளத்த லொன்றைக் கேட்டுறல் கல்வி நாற்பேர்
நாள்மல ருடுவே காலை நவிற்றொரு நாள்செவ் விப்பேர்
நீள்நெடுந் தூரத் தின்பேர் நென்னலு மென்ன லாமே
#23
அளக்கர் கார்த் திகைநாள் சேறோ டளங்கடல் புடவி யைம் பேர்
விளக்கமே வெள்ளை தீபம் விளிவுவெஞ் சினமே சாவாம்
துளக்கமே பயம் நடுக்கம் சுள்ளியே யனிச்ச மாச்சா
இளக்கமே யிளக லின்பே ரீரமு மியம்ப லாமே
#24
அளித்தலே செறித்த லீகை ஆளாள் த லாட வற்காம்
களித்தலே மந்தழைத்தல் களகரே புலையர் வேடர்
தளிர்த்தலே துளிர்த்த லொன்றல் தாளாண்மை நடத்த லூக்கம்
சுளித்தலே யொசித்த லின்பேர் சொற்றவெஞ் சினமு மாமே
#25
வெளிறலே யறிவி லாமை விளர்த்தலும் விளம்பற் பாலாம்
ஒளிறலே நிலவல் சீர்த்தி ஒளிவட்டந் திகிரி யாடி
பிளிறலே களிற்றி னோசை கீண்டலென் றோதல் பேசும்
குளிறல்பே ரொலிஎ ழுத்தி னொலியெனக் கூறற் பேரே
#26
வேளையோர் புதர்முக் காலம் வெள்ளியே வெண்மை தாரம்
பூளையே யிலவின் பஞ்சும் புகலுமோர் பூடும் போற்றும்
சூளையே கணிகை சூளை சுளகேமுற் றில்வி சாகம்
நாளமுட் டுளையி னாமங் கமல நா ளத்தும் நாட்டும்
#27
ஞெள்ளலே பள்ள மென்மை நீள்வீதி மிகுதி பூசல்
ஒள்ளிய சோர்வி னோடே யுடன்பட லொலியே யெண்பேர்
எள்ளலே யிகழ்ச்சி யெண்ண லிலங்கிய நகையே முப்பேர்
உள்ளலே நினைவே யுள்ளான் உளைவுளைத் தல்லி ரக்கம்
#28
குளிர்பனி மழுவே ஞண்டே குடமுழாக் கவண்கு ளிர்ச்சி
யொளிரிலை மூக்கீர் வாள்மீ னொழுங்குட னிருத்த லெண்பேர்
நளிர்குளிர் வெறுப்பே மல்கல் ஞண்டுடன் பெருமை யைம்பேர்
களிறுநீள் சுறவு பன்றி கறையடி யத்த நாட்பேர்
#29
மீளியே யிளமை வீரன் மேன்மகன் பெருமை பாலை
யாளிறை யிரங்கல் கூற்றோ டாற்றலென் றிசைத்த லேழ்பேர்
கூளியே யிளமை மண்ணை குறளையே றிபமே சுற்றம்
நீளிய தொகுதி குற்றம் நிகழ்த்துபே ரிருநான் காமே
#30
களமே போர்க் களங் கழுத்து களாவிடங் கறுப்பில் லாள் நெல்
லளவில் விடம்ப ரப்பென் றறையும்போ ரிருநான் கேயாம்
குளமேபூ ராடம் வெல்லங் குட்டமுத் திராடம் நெற்றி
தளமேபூ விதழே தாழி சாந்துடன் பொருப டைப்பேர்
#31
இளையேமைப் புயல் திண் பூமி யிளமையங் காடி வேலி
களையெயில் பசுக்கி டங்கு காவற்கா டோரெண் பேராம்
கொளையேபாட் டோரி சைப்பேர் கொள்ளமாற் றுடன்சே றாகும்
முளைவேயங் குரமே பிள்ளை முள்ளே நுட்பம் வார் சூலம்
#32
காளமே யூதுங் கொம்பு கருமைமூ விலைவேல் நஞ்சங்
கோளில்பூ வுடனே யெட்டி மரமெனக் கூறா றேபேர்
தாளரி குறுந்தாள் பாதஞ் சாற்றுமுத் தியோக முப்பேர்
பீளிளங் கதிர்க ருப்பம் பேசுறு மிளமை யாமே
#33
கோள் குலை யிடையூ றொன்பான் கோள்வலி குணம்பொய் தீங்கே
நாளொடு கோடல் கொட்டாட் டெனநவில் நாமம் பத்தாம்
தோள்புயஞ் செங்கை நாமம் துளும்பலே திமிறல் துள்ளல்
வேள்மத வேள்கு லாலன் வெறியாட்டா ளன் செவ் வேளாம்
#34
விறலுயர்ந் திடும்ள கார வெதுகையின் விரிக்குஞ் செய்யுட்
குறைவிலெண் ணான்க தென்ன வுலகினிற் கூறச் செய்தான்
மறைகணான் கேத்துஞ் செவ்வேள் மலரடி சென்னி சூட்டும்
அறவர்வாழ் செந்தின் மேவு மருமருந் தையன் றானே
** ளகரவெதுகை முற்றும்
@ றகரவெதுகை
#1
குரங்கிமென் குழவி பூத்த கொழுஞ்சடை வள்ள றந்த
பரம்பரன் றிணிதோட் கந்தன் பனிமலர்க் கடவு ணான்கு
சிரந்துளங் கிடப்பு டைத்த சேவகன் றாளைப் போற்றி
யுரங்கிளர்ந் திடும்ற கார வெதுகையாப் பினையு ரைப்பாம்
#2
நறவமே யனிச்சந் தேறல் ஞாழல்குங் குமந்த ளிர்ப்பேர்
புறவமோ ரூர்புட் காடே முல்லையி னிலனும் போற்றும்
துறவுயோ கங்கூட் டப்பேர் துற்கையே பூரஞ் சூலி
பிறவெனு நாமங் கேட்டும் பெட்டியும் வசியு மாமே
#3
அறவரே யுரியோர் யோகர் ஆற்பத நீழல் தேனீ
குறவரே வேடர் குன்றோர் குறிகோசங் குறிப்பி லக்காம்
மறவரே வயவர் வீரர் குறவர்க்கும் வழுத்தற் பாற்றே
பறவைபோழ் திறகே பக்கி பாறலே றுடனே யோட்டம்
#4
உறவியே யூற்றெ றும்போ டுயிருலைக் களங்கிளைப்பேர்
பிறவினை யதுவே காமம் பாவமும் பேசற் பாற்றே
உறழ்விடை யீடே காலம் உவமானம் பகைபு ணர்ப்பாம்
இறவைபுட் டிற்பே ரேணி எறிதலே செகுத்தல் வீசல்
#5
குறளிபே யெட்டாண் டிற்பெண் குறள் பூதம் வாம னப்பேர்
பிறழ்வவிர் தற்பே ரோடே பெயர்தலென் றிருபேர் பேசும்
குறடு திண் பலகை திண்ணை கொல்பற்றுங் கருவி யொன்றாம்
கறடுசெம் பொன்பேர் தாளிற் காட்டுறு பரடு மாமே
#6
விறல்வலி பெருமை கொற்றம் வெறுப்புவேண் டாமை கோபம்
அறலரி மணல்வி ழாவே யான்ற நீர்த் திரையே நீராம்
இறலொரு மீனிற் றற்பேர் இறாலாரற் றேன்கூ டென்ப
மறல்பகை சமர்பி ணக்கு மறலிசா தல்குற் றப்பேர்
#7
இறும்பூதே யதிச யந்தூ றெழின்மலை தகைமை காடாம்
மறங்கொலை தோலா வீரம் வன்பிணக் கொடுசி னப்பேர்
அறந்துற வறமே யில்லா ரறமேகை யறமே முப்பேர்
முறம்புகல் விசாக முற்றில் முறுவலே சிரித்தல் பல்லாம்
#8
ஆறேசெல் மார்க்கம் ஓண மறைந்திடு நதியே முப்பேர்
சாறேகள் ளொடும ரத்தின் றாழ்குலை விழவுஞ் செப்பும்
சேறேதித் திப்புக் கும்பி திகழ்சாரங் கள்ளே நாற்பேர்
ஏறேசெல் வம்மாற் சாலம் எருதுடன் முதனாளாமே
#9
ஊறே தீ மைப்பேர் தீண்ட லுறுகொலை யிடையூ றென்ப
பாறேநா வாய்நிமித்தம் பருந்து நற் றிலதங் காற்றாம்
நாறேநெல் நாற்றே நாறல் நாற்றமே நாறல் தோன்றல்
தாறேவிற் குதையே மட்டே தாழ்மாக் குலைமுட் கோற்பேர்
#10
குறைநவை நிரப்புக் கொள்ளை குடியிறை குறைத லைம்பேர்
பொறைமலை துறுகற் பூமி பொறைபாரஞ் சுமைக ருப்பம்
கறையுர விறையி றுத்தல் கறுப்புட னிரத்தங் குற்றம்
மறைமறை கேட கப்பேர் வழங்கிரர சியமு மாமே
#11
அறைதிரை முழைஞ்சே யோத லடித்தல்சிற் றில்ப றைப்பேர்
நிறைதுலாம் நீர்ச்சால் பாசி நிலைமையே யறிவே யைம்பேர்
சிறையரண் பக்கம் புள்ளின் சிறகுவே றிடமே நாற்பேர்
முறைகுணங் கோச மேயூழ் முறைமையென் றோதற் பேரே
#12
எற்றலே குத்தல் வெட்ட லெய்துயிர்க் கொலைசெய் தற்பேர்
குற்றலே குறல்ப றித்தல் நெரித்தலுங் கூறற் பேரே
ஒற்றலே யுடுத்தல் மொத்தல் குறிக்கொள லுணர்தல் நீங்கல்
முற்றலே வளைதல் நாம மூப்புக்காழ்க் கோடலும் பேர்
#13
ஒற்றேமெய் யெழுத்தொற் றின்பேர் ஒற்றுத லறித லொற்றல்
பற்றேயன் பொடுபற் றற்பேர் பற்றுளே தொழில்வினைப்பேர்
செற்றே யொன்னலர்வெற்றிப்பேர் செறிவெனு முப்பேர் செப்பும்
விற்றேவிற் பத்தி விள்ளல் வெறுப்பென்ப நெருங்கல் சொம்பாம்
#14
நெற்றியே படைவ குப்பும் நிகழ்நுதற் பேரும் வைக்கும்
கொற்றியே துர்க்கை வேந்தன் கோவிளங் கன்றுங் கூறும்
பெற்றியே யடுக்கு தற்பேர் பிறழுநற் குணமி ரண்டாம்
முற்றிலே விசாக நாட்பேர் முறமெனுங் கருவியாமே
#15
அற்றென்ப பிறித சைச்சொ லருவினை யாற்றன் முப்பேர்
புற்றென்ப தெழுத்துச் சென்னி வன்மீகப் பேரும் போற்றும்
எற்றென்ப திரக்க மொத்த லெறிதலெத் தன்மைத் தென்றல்
மற்றென்ப வினைமாற் றோடே யசைநிலைப் பேரும் வைக்கும்
#16
உறையுளூர்ப் பொதுவே நாடே யுயர்மனை சயனம் நாற்பேர்
நறையெனு நாமந் தேறல் நறுநாற்ற முண்கள் ளேயாம்
பறைமுழைஞ் சுடனே மேளம் பகர் தல்புட் சிறகே நாற்பேர்
நிறைதலே கமமுண் ணற்பேர் நிறமென்ப மருமங் காந்தி
#17
உறுகணோய் பயத்தி னாம மிடிதுன்ப மோது நாற்பேர்
குறுகலே யுறல்பற் றிட்டல் கூறலே விற்றல் பேசல்
துறுகலே கருப்பம் பாரஞ் சுருமைகற் பாறை நாற்பேர்
மறுகுரை மறுகே வீதி மறலியே மயக்கங் கூற்றாம்
#18
வறுமையே மிடிமை துக்கம் வழுத்துறும் நுண்மை முப்பேர்
குறுமையே யற்பம் பாவங் குறுகலென் றோதற் கும்பேர்
சிறுமையே மிடிநோய் நுட்பம் தேற்றமுட் குறிப்பே ஞானம்
உறுவனே முனிசி னன்பேர் ஒற்கலே யின்மை தேய்தல்
#19
அறுவாய்கார்த் திகை நா டிங்கள் அறுகேபுல் யாளி சிங்கம்
இறவேதா னிறவி றக்கம் ஏற்றமே மிகுதி வெற்றி
தொறுவேயான் குழவி நாமம் சொல் விட்டி லடிமை முப்பேர்
செறுவேகோ பம்வ யற்பேர் சிறுவரை யிலேசம் பொற்றை
#20
ஈறேயுப் பளங்க டைப்பேர் இறுதிபெய் கடையு யர்ச்சி
நூறேயெண் ணொலிபொடித்தல் நொறில்வினா ணுடக்க மும்பேர்
சோறேவெண் மூரல் நாமம் பரணிநா ளினிமை சொல்லும்
கூறேபங் கிடுதல் மாற்றம் கொறியேமே டங்கொ றித்தல்
#21
அற்பமே சிறுமை நாயாம் ஆற்றாற்றல் தலைக்க டைப்பேர்
கற்பமே சுவர்க்கம் வெய்ய கமலனாளதுவும் வைக்கும்
சற்பமே விரைவு பாம்பு வரையாடு தானே முப்பேர்
பொற்பெனும் பேர்வனப்புப் பொலிவோடொப் பனையென் றாமே
#22
அற்புத மிரக்கச் சொல்லு மதிசயந் தானே செப்பும்
விற்புவெற் றிப்பேர் வெம்போர் வெருவல்செற் றுடன்பெருக்கம்
கற்பருள் ளுயர்த்த மேடை கடிமதி ளுடன்கற் பாகும்
அற்பசி முதனா டிங்கள் ஆற்பேபே ரொலிசி ரித்தல்
#23
உற்கைவிண் வீழுங் கொள்ளி யுடுவெனு மிரண்டே நாமம்
சற்கரை கரும்பின் கட்டி சாற்றிடு நெருக்க மும்பேர்
பொற்கணி யியக்கர் கோமான் பூடொன்றோ டாந்தைக் கும்பேர்
பிற்கெனு நாமந் தானே மழையுடன் பின்னு மாமே
#24
ஆற்பர வந்து ளிப்பேர் ஆகவந் தூளிக் கும்பேர்
மாற்கமே சமையம் வீதி மறுதலை வழிச மூலம்
வேற்கரன் வெறியாட் டாளன் மிளிரிலை வேற்பி ரானாம்
காற்பாச மிழைப ருத்தி கறிமிள குடன்க டித்தல்
#25
வறுகலங் கானல் யாழாம் மறுமறுத் தல்குற் றப்பேர்
அறுபத முரலும் வண்டோ டறை கையாந் தகரைக் கும்பேர்
தறுகணுள் ளடங்கி லாமை மறஞ்செயிர்த் தற்பேர் சாற்றும்
சிறுமூலம் பூண்டு காமன் றிப்பிலி முப்பே ராமே
#26
உறுப்பேபா லைத்தி றப்பண் ணுடனங்க மிகுதி வையம்
இறப்பேசா மிகுதி போக்காம் எறுழ்வலி யுடன்றண் டப்பேர்
பிறப்பேபேர் தல்வெற் றிப்பேர் பிறந்திடல் செறிவே நாற்பேர்
இறுத்தல்பேச் சொடித்தல் சோம்போ டிறையிறுத் திடலே தங்கல்
#27
அற்கமே நீர்க்காக் கைப்பே ரலர்பொது ளெருக்கும் பேசும்
வற்கமே குதிரை வாயின் வடமூங்கில் வழுவில் கூட்டம்
சிற்பியே யுவச்சர் ஓவர் " திறன் றிறம் கார ணப்பேர்
அற்றலே நெருங்கல் துய்த்தல் சூறையே நுதல்சு ழற்கால்
#28
பறழ்தலழ் சாதி கன்று பற்றாரன் புடையோர் தெவ்வர்
புறமிட முதுகு வீரம் பொற்றைகான் சிறுகுன் றேயாம்
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோ டொளிவி டற்பேர்
புறணியே குறிஞ்சி முல்லை நிலனொடு புறம்பே தோலாம்
#29
வெறுக்கைபொன் கனவே செல்வம் மேற்கோளேசனியன் பூட்கை
துறுக்குடம் பறுதல் நாமந் தோலுடன் பிணக்குஞ் சொல்லும்
குறிக்கோளொற் றுமையே தேற்றங் கணித்தற்குங் கூறற் பாற்றாம்
அறிக்கையே பற்றி வைத்த லறிவுமென் றறைய லாமே
#30
முறியென்ப முறியல் தீட்டு முறியோலை தளிரே முப்பேர்
வறிதென்ப தருக லின்பேர் சிறுத்தலு மதன்பொ ருட்டாம்
கிறியென்ப வழிபொய் புன்மை கிறவுஞ்சம் வரை தீ வோர்புள்
நெறியென்ப நடவை மோக்கம் நிற்வாணங் கெதியோர் தீக்கை
#31
அற்காமை நிலையா மைப்பே ரறிவின்மை யதற்குங் கூறும்
விற்கோடி யிராமன் றந்த மிளிர் தீர்த்த மோர்க ணிப்பாம்
தற்கோலங் கமழ டைக்காய் சாற்றொரு மருந்துங் காட்டும்
வற்காலி யுயரும் பெற்றம் வருடைக்கும் வகுத்த தாமே
#32
பிறங்கலே மிகுதி வெற்புப் பெருமையே நிவப்பே துக்கம்
நிறங்கிளர் பிறையி னோடே யிறைநிறை வுடனெண் பேராம்
கறங்கல்பேய் சுழற்சி யார்ப்பாம் கறுத்தலே கருமை கோபம்
பிறங்கடை வழியி னாமம் பிள்ளையு மசலு மாமே
#33
இறும்பேசெம் மலர்கு றுங்கா டெழிற்கிரி யிசைக்கும் வண்டு
நறுங்குழை காந்தட் செம்பூ நற்செழுந் தகைமை யேழ்பேர்
புறம்பணை குறிஞ்சி முல்லை நிலனிரு பேரும் போற்றும்
குறும்பொறை குன்றே காடே குறிஞ்சி நன் னிலத்தூர் முப்பேர்
#34
இறையேவீட் டிறப்பு வேந்த னிறையிறுத் திடல்வி தாதாப்
பிறைவேணி சிறகு தங்கல் பெரியோர்கை வரையே சென்னி
நிறைகால வரவே யற்பம் நிகழ்கடன் பன்மூன் றேபேர்
துறையே நீர்த் துறையு மாயத் துறைசெய்யுட் டுறையு மாமே
#35
அற்றமே சற்றே நாயே யவகாச மறைவு சோர்வோ
டிற்றிலா துடியே யற்ற லியம்புறு முண்மை யேழ்பேர்
செற்றமே பகைமை கோபம் சிறப்பென்ப மிகுதி சீர்மை
பெற்றமே பசுவி னாமங் கொழுவிடை யதற்கும் பேரே
#36
தோற்றமே செனன மூற்றஞ் சொன்மாலை முளைத்தல் சீர்த்தி
யேற்றமார் விளக்கங் காணல் மிகுதியென் றிசைக்கு மெண்பேர்
ஊற்றமே யறிவொ டாற்றல் சலிப்பின்றி நிற்ற லோதும்
கூற்றுரை யியமன் பேராம் கொற்றமன் னியல்வெற் றிப்பேர்
#37
ஊற்றே நோ வுறவி தீமை யுற்றறி புலனூற் றுக்கோல்
மாற்றிலா விடையூ றென்ன வழுத்திய நாம மாறாம்
தோற்றலே புறந்த ரற்பேர் சொற்புகழ் வலியே தோற்றம்
போற்றலே வணங்க லோம்பல் புற்பதி தருப்பை பெண்ணை
#38
குறும்புபாலைநி லப்பேர் குறுநில மன்னர் தம்மோ
டிறும்பு போர் புரித லூரென் றியம்பிய நாம மைந்தாம்
பிறந்தையுற் பவமே பாவம் பிற்பல மரசு திப்பிலி
பிறங்குடற் றழும்பி னாமம் பெருமையென் றிரண்டு மாமே
#39
வெறியேநாற் றங்க லக்கம் வெறியாடல் வட்டம் வெம்பே
யறிமேடம் வெருவல் மூங்கி லணங்காடல் மறவி தீங்கள்
பொறியார்மென் சிறைவண் டென்னப் புகலுறு பேரீ ராறாம்
மறியேமான் மேடம் நிற்றல் வலிமுகம் யானை யைம்பேர்
#40
ஆற்றலே வலிமு யற்சி யதிகமே நிலைமை ஞானம்
போற்றலார்ப் பரித்தல் செய்தல் பொறையார்த லிவையொன் பான்பேர்
ஏற்றலே யெழுப்பல் கோடல் எதிர்ந்து போர் செய்த லேற்றல்
போற்றிட லிழிவி னோடு மிகுதியும் புகலேழ் பேரே
#41
பொறியென்ப வரியெ ழுத்துப் புள்ளியைம் புலன்றீ செய்யோள்
நெறிதுன்று மதிலு றுப்பு நீணிதி வினைவெ றுக்கை
பிறிசெங்கை வரைத ழும்போ டிலாஞ்சனம் பொறித்தல் பெய் நீர்
ரறிகின்ற மலைப்பே நாவா யபிதான மீரெட் டாமே
#42
உறையேமைத் துளிவி லங்கூ ணுறைத்தலோ ரிலக்க நீளம்
அறைவாணாள் படைபெய் கூடோ டட்டபாற் புரைநல் லாடைக்
கறையகற் றுவர் நீர் தூய்வெண் கலம் பொருள் மருந்தி டைச்சொல்
முறையுட னொழுக லென்ன மொழி யுமீ ரேழ்பே ராமே
#43
பொற்புயர்ந் திடும்ற கார வெதுகையிற் போற்றுஞ் செய்யுட்
சொற்பெற வொன்றோ டேநாற் பானெனத் துலங்கச் செய்தான்
வெற்புறழ் நெடுங்க லாபச் சிகி யிவர் விசாகன் பொற்றாள்
அற்பகல் வணங்குஞ் செந்தி லருமருந் தையன் றானே
** றகரவெதுகை முற்றும்
@ னகரவெதுகை
#1
வரைகிள ரவுண வாரி சுவறிட வடிவே றொட்டுத்
திரைகிள ரொலியி னெற்றுந் தேவர்தஞ் சிறையை மீட்ட
நிரைகிள ராறி ரண்டு தோளவ னிறத்தாள் போற்றி
உரைகிளர் னகார மாய வெதுகைத்தூக் கோத லுற்றாம்
#2
நனவென்ப கருத்து ணர்ச்சி நவிற்றிடுந் துணிவென் றேபேர்
கனவென்ப துயிலே மையல் கனலிதீ யிரவி பன்றி
மனவென்ப நினைத்த லாடை வயங்குநன் மணிசங் கக்காம்
வினவென்ப விளம்பல் கூரும் வினாவெனு மிருபே ராமே
#3
முனிசினம் யானைக் கன்றோ டகத்தில் முனிவனைம்பேர்
தனிதமி யொப்பின் மைப்பேர் சார்கோவிற் றூறல் நாற்பேர்
துனிசினம் புலவி நீட்டம் துன்பம் நோய் வாட்கோ ரைப்பேர்
நனிமிகு திநெருக்கம் பெருமையிம் முப்பேர் நாட்டும்
#4
வினையிரு வினையே கன்ம மிகுபூசல் குயிற்றல் நாற்பேர்
முனை நுனி படைப கைப்பே ரிறைமையும் வெறுப்பு மோதும்
சினையரும் பேக ருப்பம் திகழுறுப் பொடுகொம் பாகும்
வனைதலே யணிதல் பூசல் மன்றலொப் பனைநாற் பேரே
#5
பனியென்ப குளிர்நடுக்கம் பனியச்ச மதிதுன் பப்பேர்
நுனியென்ப நுதிநுண் மைப்பேர் நூற்றுறு பஞ்சு மாகும்
சனிமந்தன் மகநாள் பூரம் தனஞ்செயன் கால் தீ பார்த்தன்
புனிதந்தூஉப் புணர்த நாளாம் புன்கணோய் மெலிவு துன்பம்
#6
நனைமலர் முகுளே வேள்வி நான்முக னருகன் கஞ்சன்
அனையுத வுறுதாய் தோழி அனித்தஞ்சந் ததம்பொய் சாந்தாம்
கனையொலி செறிவி ரண்டாம் கானென்ப மணங்கா டாகும்
வினைஞரே களைஞர் கூத்தர் விளம்புகம் மியரென் றாமே
#7
வினதையே யயோத்தி நாமம் பறவைவேந் தன்றா யாகும்
பனுவலே கிளவி நூற்பேர் பகர்செய்யு டனக்கும் பன்னும்
தனுவுடல் கால நுட்பம் தரிக்கும்வில் லோர சைப்பேர்
மனுவொரு வேந்தன் சொல்லா மந்திர மனிதற் கும்பேர்
#8
கூனலே பணில மாந்தை கோண்பிறை பருந்தே யைம்பேர்
பானல்கள் பழனம் நெய்தல் வெற்றிலை பரவை வாசி
மானலே மயக்க மொப்பு வருமிலச் சைப்பேர் வைக்கும்
ஏனல்நெற் கதிரே யாதி புனந்தினை யிசை முப் பேரே
#9
கானமே யிசைகான் வானம் பாடிதேர் மேசை காட்டும்
பீனமே பெருமை பாசி பீடுடன் பேடி யூராம்
ஆனகந் தேவ தாருப் படகந் துந் துமியு மப்பேர்
ஞானமே யறிவு கல்வி நனந்தலை நடுவுச் சப்பேர்
#10
ஈனமே நடவை தேய்த லிழிவுடன் முயலே நாற்பேர்
நானமே பூசும் பூச்சு நாமங்கத் தூரிக் கும்பேர்
நூனமே யீனங் குன்றல் துவன்றநிச் சயமெண் ணெய்ப்பேர்
பானமே குடித்தல் கள்ளாம் பனித்தல்வான் பொழித லீதல்
#11
ஆனென்ப திடைச்சொல் லாவாம் அனிலனோ ரவுணன் காற்றாம்
வானென்ப வினையி னெச்சம் வலிமுகில் பெருமை விண்ணாம்
தேனென்ப நறவும் வண்டுந் தித்திப்பென் றறைதன் முப்பேர்
மீனென்ப வுடுமச் சப்பேர் வென்றிசீர் துர்க்கை வெற்றி
#12
அன்னமே கவரி மாவு மடிசிலோர் புள்ளு மாகும்
கன்னமே செவிக துப்புக் கன்னக்கோல் பொன் செய் தட்டார்
சின்னமே யூதுஞ் சின்னஞ் சிறுமைசில் வான முற்றில்
தன்னமான் கன்றே யற்பம் தானவ னசுரன் றிங்கள்
#13
முன்னலே நினைவு நெஞ்சம் முன்னஞ்சீக்கிரிபெண் ணப்பேர்
துன்னலே செறிதல் சேர்தல் தோன்றி செங் காந்தள் நெல்லி
கன்னல்நாழிகைகு டம்ங் கைவட்டிற் கரக மிக்காம்
பன்னலே பருத்தி பேசல் பனுவல்பாச் செறிவு மாமே
#14
ஆனியே சேத மூல நாளொரு மாத மும்பேர்
வானிசே னைமேற் கட்டி வார்துகிற் கொடியே முப்பேர்
மோனியே மவுனி யோகி முன்பாற்றல் பெருமை முன்பாம்
கூனியே யெட்டாண் டிற்பெண் கோணல்கை தைக்கும் பேரே
#15
மோனையே யாப்பு றுப்பு முனையுமென் றறையற் பாலாம்
சேனையே படைக்க லப்பேர் வரூதினி யெனவுஞ் செப்பும்
சோனையே விடாம ழைப்பேர் திருவோண நாட்குஞ் சொல்லும்
மானவர் வீரர் மாந்தர் வானவன் பிரமன் சேரன்
#16
மன்னென்ப மிகுதி வேந்தன் வழுத்து மோ ரசைநி வப்பாம்
பொன்னென்ப பொலி விரும்பு பொன்றிரு வியாழம் பொற்பாம்
கொன்னென்ப பெருமை காலம் பயம்பய னிலாமை கூறும்
தென்னென்ப வனப்பி சைப்பேர் தெற்குமாங் கற்பி தாமே
#17
மன்னனே வியாழம் வேந்தன் வயங்குமுத் திரட்டா திப்பேர்
கின்னரம் நீர்ப்புள் யாழுங் கின்னரற் கும்பேர் வைக்கும்
பின்னகங் கொண்டை பின்னல் பின்னைமா றேவி பின்றை
நன்னர்மாட் சிமையே நன்மை நன்மையுத் தமமே யின்பம்
#18
வன்னிதீ பிரம சாரி வண்கிளி சமியே பன்றி
சென்னியர் பாணர் கூத்தர் தேனுவே களவொ டான்பேர்
அன்னியங் குயில சற்பேர் ஆனமே சிவிகை நாவாய்
சொன்னலே யிரும்பி னாமஞ் சோளமென் பனவு மாமே
#19
அன்றிலோர் புள்மூலம்நாள் ஆனியம் பொழுதே நாளாம்
குன்றொளிர் சதைய நாளே குறையேவே தண்ட முப்பேர்
நொன்றலே பொறுமை தள்ளல் நிலைநிறுத் தல்நு வற்பேர்
மன்றலே பரிம ளப்பேர் ஒப்பனை வருகல் லியாணம்
#20
அனந்தமே பொருளி லாமை யளவின்மை பொன்னா காயம்
அனந்தன் மா லரனோர் பாந்த ளருகனென் றோத னாற்பேர்
அனந்தையோர் சத்தி பூமி அனுக்கமே பயஞ்சோம் பென்றாம்
அனங்கமல் லிகையிரு வாட்சி அனலோன் றீ யரனு மாமே
#21
முன்னென்ப பூரு வப்பேர் மொழியுமாக் கிரமும் பேசும்
புன்மையே கீழ்மை யின் பேர் நிறத்திலொன் றெனவும் போற்றும்
தொன்மையே பான்மை தன்மை சொற்றநற் குணமெ னும்பேர்
பன்னகா சனன் வீ வேந்தன் பரமேட்டி தானு மாமே
#22
வனமப்புத் துழாயே சோலை வனப்புப்புற் றீமங் காடாம்
கனவட்டம் பருதி வாசி கன்றுத லீதல் கன்றல்
பனை நுட்பம் பெருமை யானை பையித ழோர்ம ரப்பேர்
மனைகட்டு மில்லே யில்லாள் வான்மையே வெள்ளை தூய்மை
#23
மானேரே வதிநாள் மேனி மகரமோ டிருமை பெண்மான்
கோனேயாற் றல்சு வாமி பெருமைகோக் கொழுநற் கும்பேர்
ஊனேசெம் புலவு நெற்பேர் உன்மத்த மயக்கூ மத்தை
நோனார்நோற் றிலர்மாற் றாராம் நோன்மைநோன் பிருமை யாற்றல்
#24
மனோகர மழகி னாம மகிழ்ச்சியோ டின்ப மும்பேர்
பினாகியே யறுகோ ராறே பிஞ்ஞகன் றானே முப்பேர்
எனாதிமஞ் சிகன மைச்சன் றளநாதன் மறவ னென்றாம்
வினாயக னருகன் புத்தன் வெங்கரி முகத்தோ னாமே
#25
ஈன்றவன் பிரமன் பெற்றோன் என்பேபுல் லெலும்பி ரண்டாம்
மான்றலே மயக்கங் காற்றே வருகுற்றம் பெருமை நாற்பேர்
தோன்றல்சேய் முலையே நாதன் றொன் முல்லைத் தலைவற் கும்பேர்
ஆன்றலே மிகுதி யின்பே ரகலமாட் சிமையென் றாமே
#26
அனகனே பவங்க ணீத்தோ னபையனே யருகன் முப்பேர்
சனகனோர் முனியோர் வேந்தன் சானுக்கற் புறமு ழந்தாள்
பனகமே மிகுதி குன்றம் பலமுறுந் தருப்பாந் தட்பேர்
கனகனோ ரவுணன் புட்ப கவிமானன் விடையோ னாமே
#27
கனமேகல் செறிவு வட்டங் கார்முத்தக் காசு பாரம்
தினமேவு பொன்னு றுப்புத் திரட்சிசீர் மைபத் தேபேர்
தனமேவெம் முலையான் கன்றே சாற்றுமுத் திரமே பொன்னாம்
இனமோன் இளைய மைச்சாம் ஏனையே யொழிவி டைச்சொல்
#28
கானலே நிறம் பேய்த் தேர்செங் கதிர்க்கிர ணங்க டற்சார்
வானநற் கரைதேஞ் சோலை மயான முப் பளமா மேழ்பேர்
சானகி வேயே சீதை தானைதூ சனிகங் கைவேல்
ஏனமான் பன்றி யின்பேர் என்றாழ்காற் றிரவி வெய்யில்
#29
மானமே மகிழ்வி லச்சை வலிகுற்றம் பெருமை தொன்மை
ஈனமி வளவி னோடே மான்மத மெனவெண் பேரே
தானமே யிடஞ்சு வர்க்கந் தருகொடை மதம்நீ ராட்டாம்
வானமா காய மங்கி மழையுலர் மரமு மாமே
#30
கன்னியே தவப்பெண் துர்க்கை கன்னிகை யிராசி யாறொன்
றுன்னுறு மிளமை நாம மழிவின்மை யொத்தேழ் பேரே
சென்னியே பாணன் சோழன் றிகழ்சிர மசுவ திப்பேர்
நன்னிலை நோற்கு நோன்பும் நவிற்றுஞ்சுக் கிலமு மாமே
#31
மன்றமே தெருட்சி மெய்ம்மை வாசமம் பலமே வீதி
நின்றகல் யாணத் தோடு வெளியென நிகழ்த்து மேழ்பேர்
கன்றுகை வளையே யற்பங் காட்டிய விளமை குட்டி
நன்றேயுத் தமத்தி னாமம் நல்லறந் தானு மாமே
#32
வடிவுயர்ந் திடுன கார வெதுகையின் வழுத்துஞ் செய்யுட்
படிபுக ழொன்றொ டேமுப் பானெனப் பகரச் செய்தான்
துடியிடை மறமின் னாட்குத் தூய்மலர்க் கணியாய் நின்றோன்
அடியிணை யிறைஞ்சுஞ் செந்திலருமருந் தையன் றானே
#33
இருமையொன் றியதி ருச்செந் தின் முரு கோனை யேத்தும்
அருமருந் தையன் சொற்ற வரும்பொருள் விளக்கங் கற்றார்
பொருமுரண் டெறப்ப டுத்தும் புலமை நாற் றிறம்வி ளக்கும்
திருமருங் குறப்பொருத்தும் செருக்குடனிருப்பர் தாமே
** னகரவெதுகை முற்றும்
** அரும்பொருள்விளக்க நிகண்டு முற்றும்
** அரும்பொருள் விளக்க நிகண்டு அனுபந்தம்
@ பிரதிபேதம் - ககர வெதுகை
#1
பகவதியுமையேதுர்க்கைதருமதேவதைபேர்பன்னும்
அகவலேயழைத்தலாடலான்றவாசிரியமுப்பேர்
தகவறிவேயொழுக்கந்தெளிவுசற்குணமேசாற்றும்
முகவுமாளிகை முகப்பேமொள்ளு தல்காந்திக்கும்பேர்
#2
உகமென் பவுரகம் பூமியூமியேமுதலேநாற்பேர்
சுகமென்பகிளியேநன்மைசுவர்க்கமின்பஞ்சும்மாடே
முகமென்பதிடமேதுண்டம் மோகமேமயக்கங்காதல்
நுகமென்பமகநாள் சோதிநாணுகத்தாணிமுப்பேர்
#3
அகலுளேபெருபை நா நீரகலமென்றோதனாற்பேர்
இகல்வலிபகைபோர்மேவல்இருளையேதோழிநட்பாம்
புகலுடல்குதிர்சொல்வெற்றி பொக்கமேமிகுதிபொய்யாம்
நகலொளிசிரித்தலின் பேர் நகமேவெற்புகிர்மரப்பேர்
#4
அகமான் மாமனையுளுள்ளமகலம்வெற்புடனேபாவம்
சகமேமானிலமேபாதிதகருடன்சட்டைநாற்பேர்
பகமேபெண்ணின் சின்னப்பேர்வாலமுமது வேபன்னும்
மகமேயோர்நாள்யாகப்பேர் வைகர்மைவைக்கோல்பைம்புல்
#5
அகடென் பவுதரநாப்பண் ஆன்றதீங்குரையே முப்பேர்
சகடென்பபொய்ம்மையோகஞ்சாகாடேபோர்ப்பறைப்பேர்
பகடல் பகடாச்சேத்தந்திபஃறியேபெருமையைம்பேர்
முகடென்பகொடிவிடங்கம் மோக்கமே தீர்தல்முத்தி
#6
அகழென்பவகழிதொட்டல் அகிலமேசகமனைத்தாம்
பகழியாசுகங்குழிப்பேர் பகண்டைசில்லைப்புள்சிவேதை
புகழென்பவகத்திவாகைபோற்றுறுஞ்சீர்த்திமுப்பேர்
சிகழிகைப்பயிர்முடிப்பேர்வாசிகைதிகழ்தேமாலை
#7
ஆக்கையேயுடலத்தின்போயிற்கணைவீக்கும்பாசம்
சேக்கையேமுலை தழும்பு திகழ்பாயல்கடகராசி
சாக்கையே நிமித்திகன் பேர்பேயுண்டியதற்கேசாற்றும்
தீக்கையோன்சிவனேயாசான்சிகண்டிகேகயமலிப்பேர்
#8
ஆக்கமேபொன்செல்வம்பேற திகம்பூமின்மெய்கேடாம்
தூக்கமேநிவப்புத்தொங்கல் துயிலெனுமுப்பேர் செப்பும்
பூக்கமேவலியினாமம் புரியுடன் கழுகும் போற்றும்
நோக்கமேயழகுபார்வைநொய்திலாவுயர்ச்சிக்கும்பேர்
#9
அகரமோ ரெழுத்தேசேரி அகப்பாவேணகையுண்மேடை
மகாமேயிராசிகா தல்மலர்த்தூளேசுறவேநாற்பேர்
தகரமே மயிர்ச்சாந்தீயந்தகரந்தண்மணம்புங்கின்பேர்
ஒகரமோங்காரமஞ்ஞைஊகித்தனினைத்தலோர்ப்பாம்
#10
தகையேயேர்கவசம்பண்பேதளர்வன்பேபெருமை நீளம்
சிகையே கீழ்மக்கள்பாறு சென்னியிற்கருவிக்கும்பேர்
தொகையேயாசிரியங்கூட்டஞ்சோகமால்கவான்றிரட்சி
நகையே பல்லொளிமலர்ச்சி நகையுடனிகழ்ச்சியைம் பேர்
#11
அகளமேமிடாவாழப்பேர் ஆகவம்புவிபோர்வாசி
துகளென்பதுளே குற்றம் தொக்கே கூட்டந்து வக்காம்
சகளிகூக்கருமுகைப்பேர் சகோரமோர்புள்போத்தாந்தை
உகளமேயிரண்டிடப்போர் ஊக்கலே நினைத்தலூர்தல்
#12
மகடுபெண்குழலிசைப்பேர் மகன்மைந்தன்புருடன்மாக்கள்
தகடிலையைமைக்கும் பேர் தக்கையோர் பறையேதெப்பம்
முகடியென்பது மூதேவிமுழுமகன் றனக்கும் பேசும்
மகுடமேமுடியுறுப்பாமவுலியென்றிரண்டுழாமே
#13
தகைமையே குணமேயாட்சிசான்றாண்மையெனவேமுப்பேர்
புகையென்பதூமங்காதம் பூக்குதனினைத்தல்தோன்றல்
திகைதிசைசுணங்கினாமம் சேகென்பவயிரமாசாம்
பகையிகலடித்தல்சாதல் பகர்தலேவிற்றல் பேசல்
#14
அக்கெனுநாமஞ்சங்கமம்பகம் விடை முரிப்பாம்
நக்கனேவிடையோன் பிண்டிநாதனிர்வாணிக்கும் பேர்
பக்கணம்வேடர்வீதிபட்டணஞ்சிற்றூர்முப்பேர்
தக்கனெண்பாம்பிலொன்றுஞ்சரோருகன்மகவுமாமே
#15
எக்கலேயூர்தியேறல்சொரிதலென்றிரண்டுமேற்கும்
சிக்கலேயிளைத்தலின்பேர்கிடைத்தலுந்தடையுஞ்செப்பும்
ஒக்கலேகுடி சுற்றப்பேரொப்புறலதுவும் போற்றும்
முக்கோலந்தணர்தங்கைக்கோல்சிராவணநாண்மொழிப்பேர்
#16
ஆகமேகாயமார்பம் அகர்பெருமரமகிற்பேர்
யோகமேதியானங்கூட்டமுச்சாயம் போர்க்குபாயம்
சாகமேதாழைதேனீதேக்குசாகினிவெள்ளாடாம்
காகமேயரிட்டங்கீரிகற்பகம் விடநாற்பேரே
#17
மேகராகப்பேரோர்பண்மிளிர்சிறுக்கீரைக்கும் பேர்
மாகதாடல் பாடல் வல்லோர்மற்றொரு தேயத்தோர்
கேகயமசுணமஞ்ஞைகிளர்ந்தபாட்டோர்தேயம்வில்
பாகனேவலவன் புந்தி பக்கியே குதிரைபல்புள்
#18
வேகமேயகறல்கோபம்விரைவுடனுடம்பேகீழாம்
பூகமேதிரட்சி கூந்தற்பூகம்பூங்கமுகும்போற்றும்
கோகமேயற்பநேமிக்குருகென்றுங்கூறற்பாலாம்
மாகமே படையெழுச்சிவான்றலை திருவாழ்வைம் பேர்
#19
நோக்கலேகாத்தலின் பேர்காணலு நுவலற்பாற்றே
பாக்கிடைச்சொற்றுவர்க்காயெதிர்காலப்பண்பேமுப்பேர்
போக்குரைநடத்தல் குற்றம் பொய்பதடிப்பேரென்ப
மீக்கோளேறுதலினம்மேற்போர்வைபொலிவுமாமே
#20
ஆகரங்கடலேயாகமார்ந்திடுமுண்வே முப்பேர்
சீகரங்கரகம் வீசுதிவலைவெண்கவரிக்கும் பேர்
சாகரந்துயிறணத்தல் தண்கடலெனவுஞ்சாற்றும்
சேகரஞ்சிகரந்தேமாசெம்பொன்மாமவுலிக்கும்பேர்
#21
சாகினிசேம்புசாகம் சகியென்பபொறைசேடிப்பேர்
போகில் கொப்பூழ்பூமொட்டுப்புட்பொது வெனவும் போற்றும்
கோகிலமுட்டுளைப்பேர்குயில்பல்லிகுரக்குஞ்செப்பும்
போகியிந்திரனேபாந்தள் புகுதியேவருவாய்வட்டை
#22
அகறலேகுதித்தலோர்ப்புக்கழிவுடன கலநாற்பேர்
சிகரிகோபுரமேநாரைசீரெலிவரைகீரிடம்
இகாமோரெழுத்தேசந்தம் ஏகலே போதலநாவாரய்
ககனம் விண்படைகான்பல்புள் சுகமேவெங்கணைபுள்ளாமே
#23
இக்கென்பகரும்பினாமமிரதமோர்கள்ளுக்கும் பேர்
குக்குடம் கோழியின் பேர்சிறகுடைப்பாந்தள்கூறும்
சிக்கமே குடுமியுச்சம்சிறையுறியோர்புள்சீப்பாம்
சுக்கையேயுடுதேமாலை சுகியே புள் சுகமாமே
#24
நக்கலேயொளியேசொன்றிநகைத்திடலுடனுண்டற்பேர்
மொக்குளே புற்புதப்பேர் குமிழ்ப்புப்பூமுகையென்றாகும்
கைக்கிளையாழ்நாம் போர்பாவொருதலைக்காமப்பேர்
வக்கிரங்கொடுமைமீளன் மடங்கல்போய்நிமிர்தல்வட்டம்
#25
மகிணனேகொழுனனாமமருதத்தின் றலைவன்வைக்கும்
சகுனமேகிழங்குநாரைசாற்றியநிமித்தம்புட்போர்
எகின்மேபுளிமாநாயே கவரிமாவனப்பு ணீர்நாய்
சகனிபுணிமித்தம்பார்ப்போன் சகுந்தமீன்பொதுப்புள் பூகம்
#26
அகியராவிரும்பினாமம் ஆகாரம்வடிவசெய்யூண்
திகிரியேவட்டமாழிதேருருள்தேர்யாழ்வெற்பாம்
து கிரிகைபூசுஞ்சாந்தே சொற்றசித்திரமேயென்றாம்
நெகிழியேசிலம்புதீயேநெருப்பிலங்குறுங்கொள்ளிப்பேர்
#27
கிலிகையெழுது கோலேசாற்றுகிற்கொடியெனும்பேர்
வகிர்வகிர்ந்திடலேவாராம் வகுப்பென்பதெழில்வர்க்கப்பேர்
சிகிபரிபுரமேமஞ்ஞைதீதுறுகேதுத் தீயாம்
சுகிருதமறநெய்நன்மை சுகன் முனிசுவர்க்கத்துற்றோன்
#28
மேகலையுடுத்தவாடைவிளங்கரைப்பட்டிகைப்பேர்
பாகலே பலாவினாமம்பகர்காரவல்லிக்கும் பேர்
போகலேபொலிவுநீளமளவின்மையதற்கேபோற்றும்
சாகளந்தகரினாமம்சமர் செய்பூமிக்கும்பேரே
#29
வாகுவேயெழிறோள் காமம் மகிழேயோர் மரங்களிப்பு
ஆகுவேயெலிகொப்பூழுமாம்பெருச்சாளிக்கும்பேர்
காகுளிவிற்பூட்டோசைகளத்தொலிதவிசேமுப்பேர்
ஆகுலமொலிநடுக்கம் அகலிகைபுவியோர் பெண்ணாம்
#30
வீக்கென்பவிசித்தலின் பேர்மிகுதியேயோர்கணிப்பாம்
தேக்கென்பகழுகோர் தாருத்திகழுளத்தெகிட்டற்கும்பேர்
தாக்கென்பசமரேவீரம் சாகையேசினைவேதப்பேர்
மேக்கென்பமேற்கேமேலாம் மிகையேவேதனை துயிற்பேர்
#31
மாகதியதிகவேகமதிமதுரப்பேர்வைக்கும்
சாகசம்வழக்கம் வீரஞ்சத்து வங்களிறே நாற்பேர்
போகரே முனிவீரர்ப்பேர்புணர்ப்புயர்விடரும் போற்றும்
** இந்த அடி இல்லை
#32
சகுலிமீனொலியாம் காகோதரம்பாம் போர்புண்மோடின் பேர்
குகும திமறையிராவேகுலவுமோர்நாடிக்கும்பேர்
புகுடியேயணிகலன்பேர்பொற்புயர்புரூருப்போற்றும்
வெகுளியேபடங்காமைப்பேர்வெஞ்சினமதுவுமாமே
#33
தொகுதியேநெருக்கங்கூட்டஞ்சொற்றிடுந்திரட்சிமுப்பேர்
பகுதியேகொடிப்படைப்போபகுத் திடல் பகுதி கூட்டம்
தகுதியே பொறையொழுக்கஞ்சாற்றறிவென்றும் போற்றும்
நகுலியேகீரியோர்கோ நகாயுதங்குரங்கேசிங்கம்
#34
சக்கிரிநெடுமால்வேந்தன் சர்ப்பம் வேள்சதலிசெக்கான்
மிக்கவைநிறைதனியாயமலதலூணடிசின்மேவும்
கொக்கயஞ்செங்காய்மூலம்குரண்டமாக்குருக்கத்திப்பேர்
சொக்கொளிச்பொன்னேசோர்வேசொல்லருமெழின்முப்பேரே
#35
புகரென்பவொளிகேழ்குற்றம்புற்கென்றலெழின்மழைக்கோள்
பகர்குன்றினருவிசொன்றிபற்றுயிர்கொன்பான்பேர்
தகரென்பவகிலமாடு தகர்த்தலென்றோதன் முப்பேர்
மகரந்தந்துணர்தேன்வண்டாம் வாகத நூல்கள்ளாமே
#36
உக்கமே மருங்கின்பக்கமொண்மருங்காலவட்டம்
குக்குடஞ்சுரவிசெந்தீகோவிடைமுகமேழ்பேராம்
பக்கமேயருகுகட்புப்பறைதிதியடைக்கலப்பேர்
வொக்கமேயகலமற்பமொழிவுறாப்பொலிவுமாமே
#37
சக்கரம்பெருமையோர்புள் தரணிதேருருளேயாழி
மிக்கருவரையேவட்டமிளிர்நகைபிறப்பொன்பான்பேர்
கொக்கரைவளையேசங்கேகுதைவில்வெம்பணியேநாற்பேர்
அக்கரமெழுத்தினாமமயருநோயொன்றுமாமே
#38
ஊக்கமேவலிதாளாண்மையுளமிகுத்திடலேயுண்மை
நீக்கமில்விரிவுயர்ச்சியாறுமேநிகழ்ந்தநாமம்
பாக்கமேபுறம்பணைக்காம்பதிநெய்தற்பதிபேரூராம்
சூக்கமேசுரும்பேயற்பம் சோகேபேய்பேய்ச்சோறாமே
#39
பகலேயோர்முகுர்த்தநாளே பலபாடேநடுவேதசு
பகலவன் செயலேயாகுநுகத்தாணியொன்பானேபேர்
அகலமார்புடனேபூமிவிரித்துனையகலநாற்பேர்
இகலனேநகுலமோரி ஏகமொன்றுயர்ந்தமுத்தி
#40
தோகையேவால் முந்தானை சுற்றாரல் தூவிமஞ்ஞை
வாகைசேசெழிற்பதாகைமயிற்பீலியுடனேயேழ்டேர்
ஈகையே கொடைகாற்றுப்பொன் இண்டைகற்பகமில்லாமை
ஓகையேவருவசொல்லலுவகைக்கும்புகலலாமே
#41
சிகாமேகுவட்டினுச்சி திவலைவேற்புடனேசென்னி
எகினமாக்காக்கை தெண்ணீரெறிதிரையென்றேழ் பேராம்
பகவனீசன்மால்புத்தன்பங்கயன்சினனோடைம்பேர்
நிகர்தலேநிறைதெலொப்பாம் நெகிழ்தலே குறைவுவிள்ளல்
#42
பொகுட்டென்பமுளரிப்பைம்பொற்பூங்கொட்டை துளையுஞ்சேற்றி
மிகுத்திடுங்கொப்புணீண்டமால்வரைவிளங்குமுப்பேர்
பகுத்திடல்பாதி செய்தல் தறித்திடலென்றும் பாற்றே
இகழ்த்தல்காழ்த்தல்நெருக்கமெறிதலேகடத்தலும்பேர்
#43
பாகமே பாதியின்பேர்பலகடனோர்கணிதம்பிச்சை
வேகமார்பதம்பட்டாடைவிளங்குநாமங்களாகும்
சூகரங்கரமே பன்றி துகிரே செம்பவளஞ்சேப்பாம்
நாகாந்திசைச்சொல்நொள்ளை நகுதலேசிரித்தல்பேசல்
#44
கைகாம்படையுறுப்புக்கருத்துடனொழுக்கந்தங்கை
மெய்விடமொப்பனைப்பேர்மிளிர்கீழ்மை சார்பொன்பான் பேர்
மைகறைமேகமாடுமலடேயஞ்சனங்குற்றப்பேர்
வைகல்வைகறைநாடங்கலுரியனகழிவுமாமே
#45
கோகனகஞ்சசோரங்குளிர்கையாந்தகரைவெய்ய
மோகஞ்செய்நிலக்கடம் பென்றுரையபிதான மூன்றாம்
பாகவன்றழல் தீத்தேவாம் பாகர்கண்மதில்சூதர்க்காம்
சூகையென்பதுவேயானை சொற்றசிற்றிற்கும் பேரே
#46
இகுத்தலேயழைத்தலீதல்எறிதலேசெகுத்தல்விழ்த்தல்
மிகைப்படத்துகைத்தல் தாழ்த்தல்வருந்திடல்விளம்பெண்போரம்
அகைத்தலேநோயொடித்தல் அறுத்திடலுடனுயர்த்தல்
வகைப்படுமெழுச்சிமோதல்வழுத்து பேரிருமூன்றாமே
#47
நாகமே குரங்குபுன்னைஞாழல்வெற்பயானை தூசு
மாகங்காலகிகாரீயம் வருசொர்க்கம்பன்னொன்றேபேர்
ஊகமேகருங்குரங்கேயுடற்குறைவிலங்கின் கூட்டம்
போகிலாத்தர்க்கஞ்சங்கைபொருபடைவேங்கையேழ்பேர்
#48
பர்கென்பபருப்புப்பாக்குபர்ணிபால்பகிர்ச்சிபாகன்
பாகஞ்சர்க்கரையாறாணம்பரைகரையீராறேபேர்
நாகென்பசங்குகாரணத்தையானீர்வாழ்சாதி
மோகங்கொள்பெண்பாலீனாவிளமைமுண்மரமெண்பேரே
#49
வாகையேதிற்முயற்சிவனப்புயர்வெற்றிசால்பு
ஈகை நல்லொழுக்கங்கல்வியியலறத்துறையேயுண்மை
ஓகைசேர்மிகுதிபண்பேயொருமரமருந்தவங்கள்
மோகமார்பேர் மூவைந்தாம் முகையே நீர்மிடாப்பூமொக்குள்
#50
தூக்கென்பவொலிபாண்கூத்துத் துலாந்தொங்கலயலாராய்தல்
துக்கணங்குருகேபாரஞ்சொற்றிடுமுவமைவிற்றல்
நீக்கமினிவப்பேபண்டநிறுத்திடலுணர்த்து மாசான்
ஆக்கியசிக்கமென்னும் பிதானமூவைந்தாமே
#51
வழுத்துயிர்மெய்மூவாறின் வருகின்றக்கரமாதி
யெழுத்தெது கையினிற் செய்யுளைம் பானென்றிசையச் செய்தான்
பழுத்தசெஞ்சுடர்வேலாற்சூர்பகவெறிந்தோன் பொற்பாதம்
அழுத்து றுமிதையன் செந்திலருமருந்தையன்றானே
** ககரவெதுகை பிரதிபேதம் முற்றும்
**
|
|