<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு
தேவையான தலைப்பின் மேல் சொடுக்கவும்
தலைப்பு சொற்பிரிப்பு மூலம் சீர் பிரிப்பு மூலம்
0. பாயிரம்

1. உயர்திணைப் படலம்

1.1 தெய்வ வர்க்கம்

1.2 மானிட வர்க்கம்

2 அஃறிணை யுயிர்ப்பொருட் படலம்

2.1 நாற்காலுயிர்ப் பொருள் வர்க்கம்

2.2 பறவை யுயிர்ப்பொருள் வர்க்கம்

2.3 ஊருயிர்ப்பொருள் வர்க்கம்

2.4 நீர்வாழுயிர்ப் பொருள் வர்க்கம்

2.5 தாபர வுயிர்ப்பொருள் வர்க்கம்

3 அஃறிணை யுயிரில்பொருட் படலம்

3.1 இயற்கைப் பொருள் வர்க்கம்

3.2 செயற்கைப் பொருள் வர்க்கம்

3.3 இட வர்க்கம்

3.4 கால வர்க்கம்

3.5 சினை வர்க்கம்

4. குண நாமப்படலம்

4.1 உயிர்ப்பொருள் 1 மனக்குண வர்க்கம்

4.2 உயிர்ப்பொருள் 2 வாக்குக் குணவர்க்கம்

4.3 உயிர்ப்பொருள் 3 செயற்குண வர்க்கம்

4.4 உயிரில்பொருள் குணவர்க்கம்

** கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய 
** நாமதீப நிகண்டு

@0 பாயிரம் 
** 1

#1
ஆனைமுகனைக் குகனை ஆதி புவனேசொரியை 
ஞான முதல் கோரக்கநாதனையும் மேன்மைபெறு 
சாமி கவிராசனையும் தான் வணங்கிப் பேர் உரைப்பன் 
பூமிதனில் உள்ள பொருட்கு 
** 2

#2
ஓல்லும் உயர்திணைப்பேர் அஃறிணை உயிர்ப்பொருட்பேர் 
இல்பொருட்பேர் இப்பொருள்களின் குணப்பேர் சொல் படல
மாம் ஒருநான்கு இட்டு இரண்டு ஐந்தைந்துநால் வர்க்கமிட்டு 
நாமதீபம் பகர்ந்தேன் நான்
** 3

#3
தேவர் நரர் ஆம் இரண்டும் சீர்பெறும் நாற்கால் பறவை 
ஊர்வன நீர்வாழ்வ நிலை ஓரைந்தும் மேவு இயற்கை
செய்கை இடம் காலம் சினை ஐந்தும் நாற்குணமும் 
எய்து வர்க்கம் நால்  படலத்தே 
** 4

#4
மனக்குணம் வாக்கின்குணமே மற்று உடலால் செய்யும் 
வினைக்குணம் இம்மூன்றும் உயிர் மேவும் தனிப்பொருள்கட்கு 
ஏய்ந்த குணம் ஆகும் உயிர்இல் பொருள்களின் குணம் ஒன்று 
ஆய்ந்த இவை நாற்குணங்கள் ஆம்
** 5

#5
பல்வடிவு நாற்றம் இரண்டு ஐந்து வண்ணம் ஊறு எட்டு 
நல்ல சுவை ஆறு நான்கு அளவை வல்லோர் 
புகலும் உயிர்ப்பு இல்லாப் பொருட்குணங்கள் ஆகும் 
பகர் படலவர்க்கமுறை பார் 
** 6

#6
திண்பார் புகழ் நாம தீபம் ஓர் எண்ணூறு 
வெண்பாவுஞ் சொற்செறிவான் மெய்த்தளையின் பண்பு சில்பா 
ஒற்றறுத்தல் ஆதிய கொண்டு ஓர்க சில்பாதம் தொடைகள்
பற்றும் வகையுளியால் பார்
** 7

#7
எந்தை பொதிகைநிகண்டு என்று ஓர்சொல் பல்பெயரே 
தந்தனன் காண் பல்கூட்டம் சார் ஒருபேர் முந்தி யான் 
பன்னும் தொகைநிகண்டில் பார்க்க விரிவாம் அவைகள்
இன்ன சுருக்கத்து அடங்காவே
** 8

#8
பல்லாயிர நிகண்டில் பண்டிதர்கள் சொன்ன பொருள்
எல்லாம் எளிதாய் இனிது உணரக் கல்லிடையூர் 
மன்னு சிவசுப்ரமணியன் கவிராசன் 
பன்னு தமிழ் நாமதீபம் 
** பாயிர முற்றும் 
** நூல்

@1 உயர்திணைப் படலம்

@11 தெய்வ வர்க்கம் 
** 9

#1
நந்தி பெம்மான் ஆலமர்ந்தோன் நம்பன் இறை சோதி செம்மல் 
அந்திவண்ணன் தாணு நித்தன் ஆனந்தன் இந்துஇனன்தீ 
முக்கணான் ஐந்துமுகன் திகம்பரன் சடையன் 
நக்கன் எண்தோளன்பிஞ்ஞகன்
** 10

#2
ஐந்தொழிலான் ஒன்பான் மூன்று ஐயைந்து மூர்த்தி சத்தி
யைந்தன் எழுத்தைந்தன் அருள்வடிவன் சுந்தரற்குத்
தூதன் குபேரசிநேகன் சுருதி ஆகமங்கள் 
ஓதினோன் எண்குணத்தினோன்
** 11

#3
மான் மழுக் கபாலம் சூலம் துடித் தீயேந்தி நஞ்சு
தானுண்டோன் கங்காளன் சாமி பித்தன் ஞானி பரன் 
ஆதி பங்கி பூணூலன் அண்ணல் சுகன் கயிலை
நாதன் வரன் யோகி நடன் 
** 12

#4
நற்கடுக்கை சிங்கநகம் ஆமையோடு அறுகு ஆர்க் 
கொக்கிறகு தும்பை பன்றிக்கோடு மத்தம் அக்கு எருக்கு 
வன்னி பாம்பு என்பு வில்வம் மால்கண் பிறை கரந்தை 
துன்னு கங்கை மீன்கண் அணிந்தோன்
** 13

#5
பார்தேர் பரிவேதம் பாகன் அயன் மால்கணை அக் 
கூர்தீக் கணைவிசைகால் கோதண்டம் மேருவரை 
நாண் அரவம் ஆழி மதி ஞாயிறு பால்வேலை அம்புத் 
தூணியும் கொண்டோன் ஈச்சுரன்
** 14

#6
காலன் வேள் ஆனை புலி காய்ந்தோன் மறைமுதலி 
பால் விடையூர்ந்தோன் உயர்த்தோன் பாண்டரங்கன் தோலுடையன் 
தேவதேவன் வாமதேவன் மாதேவன் அத்தன் 
காவலன் பிரான் அங்கணன்
** 15

#7
அழல் மன்று ஈமத்தினில் பேயோடாடி ஈசன் 
தழைவிமலன் காளகண்டன் சங்கக் குழையன் உமை
பங்கன் பசுபதி பிச்சாடனன் பூதப்படையோன் 
சங்கரன் உருத்திரனே சம்பு
** 16

#8
நிட்களன் நின்னாமன் நிரஞ்சனன் நிரந்தரனே 
நிர்க்குணன் சாட்சாத்காரன் நிர்ப்பேதன் நிர்ச்சங்கன் 
அத்துவிதன் பூரணன் அகண்டன் அசலன் சூக்கன் 
முத்தன் அனுபமன் முதல்
** 17

#9
கண்நுதல் புராரி சித்தன் கக்தன் அயன் மாற்குமெட்டான் 
எண்ணெண்விளையாட்டான் ஈசானன் அரன் வெண்ணீற்றன் 
தந்தி குகன்தாதை சருவஞ்ஞன் அன்னைதந்தை 
அந்தம் பிறப்பளவிலான் 
** 18

#10
அரியன் பெருமான் அன்பர்க்கெளியான் சாமப் 
பிரியன் அட்டமூர்த்தி பினாகி பரமன் மன 
வாக்கினெட்டான் தத்துவாதீதன் மலவயிரி 
சேய்க்கறியுண்டோனும் சிவன் 
** 19

#11
சத்தி பரை காளி உமை சண்டிகை பவானி சிவை 
உத்தமி மால்தங்கை உலகீன்றாள் அத்தை அருள் 
வாலை புவனை மனோன்மணி சடாதாரி 
சூலி மலைமான் ஈச்சுரி
** 20

#12
வீரி கன்னி வல்லணங்கு வேதாளி கங்காளி 
ஆரணி சாமுண்டி அயிராணி ஐயை சூரி அம்பை 
மாலினி நீலி மதுபதி சிங்காரூடி 
பாலைநிலத்தாள் சாம்பவி 
** 21

#13
சக்கரம் பாசாங்குசம் வாள் சத்தி வரதாபயங்கள் 
இக்குவில் பூவாளிகொண்டாள் எண்தோளி முக்கண்ணி 
ஆயி திரிபுரை தாய் அம்பணத்தியே காத்தி
யாயினி காமக்கோட்டத்தாள் 
** 22

#14
அந்தரி மாதங்கி அம்பிகை திகம்பரையே 
சுந்தரி யாழ் ஏடு சுகம்தரித்தாள் விந்தை சிவ
காமி விமலை கவுரி பகவதி 
யாமளை நாராயணி மாயை
** 23

#15
பஞ்சமி கல்யாணி பயிரவி வல்லபி 
வஞ்சனி ஆனந்தி இமவான்புதல்வி அஞ்சனி 
மேனைமகள் ஆவரணி விட்சேபி யோகினி 
யானைமுகன் செவ்வேள் அனை
** 24

#16
ஆரியை வாமி மயிடாரி அபிராமி துர்க்கை 
தாருகசங்காரி லளிதை விசையை நாரி 
அமரி கவுமாரி அறத்தாள் சவுரி தேவி 
விமரிசையும் பார்ப்பதி பேர் விள்ளு
** 25

#17
இப்பெயரில் காளி துர்க்கை ஆதிசத்திகட்கு இசையும் 
அப்பெயர்கொள்வாள் மூதணங்கு கொற்றி மெய்ப்பான 
மாரி வடுகி வடுகன்தாய் மோடியுடன் 
சூரி இவை காடுகாள் சொல்
** 26

#18
தந்திமுகன் பாசம் அங்குசம் கனி கொம்பேந்தி ஒரு
தந்தன் நால்வாயன் சடையன்முன்னோன் கந்தனுக்கு
மூத்தோன் ஆகு ஊர்ந்து உயர்த்தோன் முக்கண்ணான் மால்சாபம்
தீர்த்தோன் சிவன் கவுரி சேய்
** 27

#19
பூதரூபத்தன் இலம்போதரன் விநாயகனே 
பூதமிவர்ந்தோன் புகர்முகத்தோன் ஓதும் முறக்
கன்னன் விக்கினேசன் கயாரி குடிலாசனத்தான் 
சென்னிறத்தான் ஐங்கரத்தினான்
** 28

#20
நாலிதழ்க்கஞ்சன் போசனப்பிரிபன் வல்லவை மன் 
மூலமுதல் ஆமைமுதுகோடணிந்தோன் கால்குறியன் 
வக்கிரதுண்டன் காகமாகினோன் பொன்னிதந்தோன் 
அக் கணபதிக்கு உள பேர் ஆம்
** 29

#21
கந்தன் முருகன் குமரன் கார்த்திகேயன் கவுரி
மைந்தன் காங்கேயன் மயிலூர்தி சிவன்மைந்தன் வள்ளி 
தெய்வானை மன் புலவன் செட்டி குகன் வீரர்முன்னோன் 
வை வேலவன் குறிஞ்சிமன்
** 30

#22
ஈசன் அயன் கும்பன் இவர் குருச் சுரம்தணித்தோன் 
வாசவன் இந்த்ராணி திருமால்மருகோன் பேசு உருத்தி
ராயுதன் தந்திக்கிளையான் ஆறுதலன் தேவர்சிறை
காய்பவன் சுவாமி குழகன்
** 31

#23
பன்றிதிறலட்டோன் பவளவடிவன் சமணை
வென்றவன் கற்கி விறலழிப்போன் குன்றெறிந்து 
கீரனை மீட்டோன் அருணகிரிக்கருள்வோன் 
ஓர் புலவன் மேல் பாடினோன்
** 32

#24
சண்முகன் விசாகன் சரவணபவன் பதினெண்
கண்ணன் ஈராறுபுயம் கை செவியான் எண்ணு வெட்சி 
காந்தள் குரா நீலம் கடம்பு அணிவோன் வேள் வேடன் 
சேந்தன் கோழிக்கொடியோன் சேய்
** 33

#25
தாருகன் சிங்கானனன் சூர் சாரும் அன்றில் வெற்பும் அட்டோன் 
நாரதசிநேகன் விண்ணூர்நாட்டினோன் சேரும் உம்பர் 
சேனைமன் வேதாவைச்சிறையிட்டோன் ஆடூர்ந்தோன் 
ஆன சுப்ரமண்யன் பேர் ஆம்
** 34

#26
வேல் சரம் வாள் தண்டு மழு மெய்க்கொடியும் கந்தன் வலப்
பால் அமர்வ வில் பரிசை பற்றீட்டி சூல் குலிசம் 
அங்குசம் வாமத்து ஆம் அபயம் வரதம் அணி 
பங்கயமும் முன்குறைத்துப் பன்னு
** 35

#27
வாகுவுடன் கேசரி மயேந்தரன் மயேசுரனே 
ஆகும் புரந்தரனே அந்தகனே சேகரக்கன் 
மார்த்தாண்டன் தீரனும் பின்வைத்து முன்பு வீரமதைச் 
சேர்த்து நவ வீரர் பெயர் செப்பு
** 36

#28
அங்கிமுகன் வச்சிரவாகு ஆளிமுகத்தோன் வீர 
சிங்கன் இரவிப்பகை தன்மப்பகைவன் இங்கு இவரை 
அட்டோன் தகர்பிடித்தோன் பாசுரக்கோல் அந்தகன் மேல் 
தொட்டோன் சூரூரையழித்தோன்
** 37

#29
காளியைவென்றோன் அரன் மாணிக்கமின்சேய் கார்கடிந்தோன் 
வாளினன் செவ்வேட்கிளையவன் தூதன் நீளி இலக்கத்து 
எண்மர்முன்னவன் சயந்தனைத்தெளித்தோன் உந்திவந்தோன் 
வண்ணஞ்சேர்ந்தோன் வீரவாகு
** 38

#30
ஆயிரம் முகம் தலை ஈராயிரம் கை தோள் செவி மூ
வாயிரம் கண்ணுள்ளோன் மாலாற்றலட்டோன் பாய் திகிரி 
நுங்கினான் சார்ங்கமட்டான் தண்டழித்தான் உம்பர்களை 
அங்கு ஒருநாள் கொன்று எழுப்பினான்
** 39

#31
இந்துவைத்தேய்த்தான் பகன்கண் தீக்கரம் ஏழ்நாக்கு இரவி 
தந்தமழித்தோன் பிரமசாரதியான் உந்து பொன் தே
ரூர்தி தக்கன்சென்னியறுத்தோன் மகசங்காரி அந்தச் 
சோரனுக்கு மைத்தலைவைத்தோன்
** 40

#32
கட்கன் உமைசேய் சிவன்தீக்கண்ணுதித்தோன் காளிநண்பன் 
உக்கிரன் செஞ்சடையான் ஓர் எண்கால் பக்கிவண்ணன் 
நாரசிங்கன் வீறழித்தோன் பானுகம்பனைப்பயந்தோன்
வீரபத்திரன் பேர் ஆமே
** 41

#33
சித்தன் வடுகன் குமரன் பிள்ளை அயன்சென்னிகொய்தோன் 
முத்தன் நாயூர்தி முக்கணன் காரி மத்த கயத்
தோலுரித்தவன் கேத்ரபாலன் கரும்பரியான் 
சூலன் வயிரவன் பேர் சொல்
** 42

#34
வெள்ளிவரைகாப்போன் விடைமுகன் பூதத்தலைவன் 
தெள்ளும் சுதேதைமன் சிலாதரன்சேய் விள்ளரிய 
வேதாகமக்குரவன் வேத்திரக்கையான் ஏழும்
ஆதி நந்திகேச்சுரனுக்கு ஆம்
** 43

#35
காரி செண்டு தண்டணிந்தோன் கையன் ஐயன் மாலரன்சேய் 
ஆரியன் பச்சைப்பரி வெள்ளானையுள்ளோன் பூரணை 
புட்கலைமன் யோகி கடல்வண்ணன் நெய்தல்பூண்டோன் கோ
ழிக்கொடியோன் எண்கரன் சாத்தன்
** 44

#36
வாமன் இராமன் பலதேவன் பரசன் கிட்டிணன் மீன் 
கூர்மம் நரசிங்கம் வராகம் குதிரை ஆம் வடிவன் 
விண்டு ஆயிரநாமன் வேலை பாம்பு ஆல் கோலில் 
கண்துயில்வோன் நேமி செங்கணான்
** 45

#37
பார் உண்டு அளந்து இடந்தோன் பச்சை கரியோன் விசைய
சாரதி கோபாலன் அச்சுதன் பிரமன் மாரன் அத்தன் 
கோசலை யசோதை நந்தகோன் வசுதேவன்புதல்வன் 
தாசரதி தேவகிமைந்தன்
** 46

#38
பொன் அவனி சீதை எண்மர் ஆய்ச்சியரையும்புணர்ந்தோன் 
பின் உபேந்திரன் பெருமாள் பீதாம்பரன் முகுந்தன் 
கண்ணன் தாமோதாரன் நாற்கையன் கோவிந்தன் முகில்
வண்ணன் புருடோத்தமன்
** 47

#39
மாதவன் ஞானத்துயிலோன் வைகுண்டன் கேசவன் மால் 
சீதரன் நீண்டோன் காவல்தேவன் ஐவர்தூதன் வில் வாள் 
ஆழி சங்கம் தண்டம் பஞ்சாயுதன் புள்ளூர்ர்துயர்த்தோன் 
வாழ் பதுமநாபன் வலவன்
** 48

#40
பொன்னன் திரிசிரத்தோன் பொற்கண்ணன் வாலி கும்ப
கன்னன் விராதன் காலகேயர் கரன் பின் வாணன் 
கஞ்சன் மூலன் சோமுகன் கயிடவன் கவந்தன் 
வஞ்சமான் தந்தவக்கிரன்
** 49

#41
மாலி சிசுபாலன் இலங்கேசன் மது தாடகை சு
மாலி முரன் துந்துமியே தூடணன் சாத்தூலியையும் 
வென்றோன் புள்வாய்கீண்டோன் வெம் பேய் முலையொடு உர் 
தின்றோன் மலைக்குடைசெய்தோன்
** 50

#42
வண்டுருவன் சோரன் மருதிடந்தோன் காகுத்தன் 
பண்டியட்டோன் சாலமெய்தோன் பாம்பாடி பெண்டுருவன் 
கன்றால் கனியெறிந்தோன் சீதைசிறைகடிந்தோன் 
மன் பூபாரம்தவிர்த்தவன்
** 51

#43
நாரணன் நாராயணன் சுரர்க்கமுதம்நல்கினோன் 
வாரிகடைந்தோன் வரம்பிட்டோன் அடைத்தோன் காரி அரி 
மாயன் துழாய் மணி மறுப்புயன் இராகவனோடு 
ஆயன் இவை விட்டுணுப் பேர் ஆம்
** 52

#44
நீலாம்பரன் முசலி வெள்ளை அனந்தன் காம
பாலன் அலாயுதன் பனந்தாமன் சாலும் ஓர்
குண்டலன் இரேபதிமன் கூறு பலபத்திரனே 
திண் பலதேவன் சிறப்புப் பேர்
** 53

#45
இந்திரை மாச் செல்வி இளையாள் இரமைச் செய்யாள் பொன் 
செம் நதிருப் பூமான் கமலை சீதேவி விந்தைமகள் 
பாற்கடல்வந்தாள் பொறி மால்பாரி மதன்தாய் ஆக்கம் 
தாக்கணங்கு இலக்குமி பேர் தான்
** 54

#46
அன்னமுயர்த்து ஊர்ந்தோன் அனந்தன் மால்சேய் வாணி
மன்னன் மறையோன் மலரோன் மண்படைத்தோன் துன்னும் 
பிதாமகன் எண்கண்ணன் பிதாச் சதானந்தன் 
விதாதா கமலன் விதி 
** 55

#47
சம்பு பரமேட்டி சதுமுகன் வேதாக் குரவன் 
பம்பும் இரணியகெர்ப்பன் சூதன் நம்பும் 
வரன் அயன் ஞானி இறை வானோர் முதுவன் 
பிரமன்தனக்கு உரிய பேர்
** 56

#48
பாமகள் பிராமி அயன்பாரி வெண்பூமான் இசைமான் 
நாமகள் வாக்காள் வாணி ஞானி வெள்ளையாமுருவாள் 
பாரதி சாவித்திரி காயத்திரி பூரப்பரியாள் 
ஈரேழ் சரசோதியே
** 57

#49
கந்தர்ப்பன் வேள் வசந்தன் காமன் மதன் மால் பூமான் 
மைந்தன் அனங்கன் மதுசகனே சிந்துவண்ணன் 
அங்கசன் மனோபு சம்பராரி சித்தசன் மோகன் 
தங்கு இரதிமன் மாரன்தான்
** 58

#50
அற்கரி கால்தேர் கிளிமா ஆழிமுரசு இந்துக்குடை 
பொன் குயில்சின்னன் தாழம்பூவாள் மீனக்கொடி பெண் 
தானை அன்றில்காளம் மகிழ்தார் மல்லிகைப்படிக்கம் 
வேனில்விழாச் சோலைபடைவீடு
** 59

#51
வாகை மரைத்தாள் கரும்பு வண் கமுகம்பாளை அப் பூ 
ஆகிய வில் அம்புயநூல் ஆய்ந்த பிச்சி மோக வண்டு 
வெட்டிவேர் மாந்தளிர் நாண் விந்தம் மாப் பிண்டி முல்லை 
அட்டிடு நீலங்கோலவற்கு
** 60

#52
ஆகண்டலன் மால் அரி புருகூதன் புலவன் 
போகி புரந்தரன் புரோகிதனே மேகமுடன் 
உச்சிரவா வெள்ளானை ஊர்ந்தோன் இடிக்கொடியன் 
வச்சிரன் விண்கோ வாசவன்
** 61

#53
ஆயிரங்கண்ணன் கரியோன் அண்டர்கோன் கோசிகனே 
மாய்வுஇல் சசிமன் மருத்துவன் மகவான் தோய்பாக 
சாதனன் சுனாசி சக்கரன் சதமகன் மருத
நாதன் வலாரி இந்திரன்
** 62

#54
இந்திரன்தேவி இந்திராணி அயிராணி சசி 
சுந்தரி புலோமிசை ஆம் சொல் சயந்தன் மைந்தனார் 
தேவு அணங்கு சூர் கடவுள் தெய்வதம் புத்தேள் இயவுள் 
ஆவன தெய்வப்பொதுப்பேர் ஆம்
** 63

#55
விண்ணவர் இலேகர் அண்டர் மேனிலர் பட்டாரகரே 
பண்ணவர் ஆதித்தர் பகவர் சுரர் நண் அமரர் 
புங்கவர் உம்பர் புலவர் இமையோர் விபுதர் 
அங்கு அமுதுண்டோர் தேவர் ஆம்
** 64

#56
உருத்திரர் பன்னொருவர் ஓர் பன்னிருவர் 
அருக்கர் வசுக்கள் எண்மர் அன்றி மருத்துவர் என்று 
ஆன அசுவனிகள் அவ் இருவர் ஆக இவர் 
வானின் முப்பான்மூன்று தேவர்
** 65

#57
சிவன் உருத்திரன் தேவதேவன் கபாலி 
சவுமியன் பவோற்பவன் மாதேவன் கவர் நீல
லோகிதன் வீமன் விசையன் சங்கரன் உருத்திரர்கள் 
ஏகாதசர் ஆம் இவர்
** 66

#58
ஆன்ற வருணன் பூடா அஞ்சனுடன் தாதாவே 
தோன்றும் இந்திரன் சவிதாச் சொல் விவச்சு வான் பகனே 
தொட்ட பரிச்சனியே தொட்டாவே மித்திரனே 
விட்டுணு ஈராறு அருக்கர் மெய்
** 67

#59
துருவன் பிரத்யூடன் சோமன் அனிலன் 
தரன் அனலன் ஆபத்துவனே பிரபாவன் 
எண்வசுக்கள் ஆகும் இருமருத்தர் தத்திரனே 
விண்ணுறு நாதத்தியன் ஆமே
** 68

#60
தேவர் முனிவோர் இயக்கர் சித்தர் விஞ்சையோர் கருடர் 
பூஅசுரர் கிம்புருடர் பூதர் படர் மாஅரக்கர் 
நாகர் உடுக் கந்திருவர் கின்னரர் பேய் நற்போகர் 
மாகர் பதினெண்கண நாமம்
** 69

#61
ஆகும் அரமான் அரம்பை அண்டர்பெண் இடாகினியே 
சாகினி சன்மினி மூத்தாள் முகடி காகமுயர் 
சேட்டை கரவூர்தி தௌவை சீர்கேடி ஓர்சடையாள் 
கேட்டை இவை மூதேவிக்கே
** 70

#62
மின்னு வித்தியாதரரே விஞ்சையர் கோசரரே 
தன்னிகரில் சேடியர் ஆம் சாதி ஒன்றே கின்னரர்கள் 
கந்திருவர் கிம்புருடர் யாழ் பயில்வால் பாராள்வால் 
தம் திறலினால் கணபேதம் 
** 71

#63
போக நிலத்து இன்புறுவோர் போகர் விண்ணில் சஞ்சரிப்போர் 
மாகர் சுரர் ஏவல்செய்வோர் வன் படர் ஆம் ஏகு குறள் 
சாதகம் கிருத்திமம் சாதம் பாரிடம் கூளி 
பூதம் பிரேதகமும் போற்று
** 72

#64
பாசம் குணலை குணபாசி குணபம் குணங்கு
வீசு அலகை அண்ணை வியந்தரம் பசாசு கடி 
வேதாளம் சோகு வெறி கிரகம் சங்கை மயல் 
தீது ஆர் பேய் ஆம் கழுதும் செப்பு
** 73

#65
அந்தரத்தார்க்கு ஒன்னார் அவுணர் தகுவர் திதி
மைந்தர் தயித்தியர் ஆம் வாள் அசுரர் முந்து அரக்கர் 
நீலர் நிருதர் நிசாசரர் இராக்கதரே
சாலகடங்கடர் ஆம் தான்
** 74

#66
சோதி எழுநா அரி தீத் தூமகேது அங்கி அனல் 
சாதவேதாக் கனல் சேர்ந்தார்க்கொல்லி மோது எரி ஆ
டூர்தி தழல் வன்னி உதாசனனே வாயுசகன்
ஆரல் வசுத் தேயு அழல்
** 75

#67
தகனன் முளரி தனஞ்சயன் சுவாலன் 
சிகி சுடர் தென்கீழ்த்திசையோன் ஞெகிழி சித்ர
பானுத் தபனன் நெருப்பு அங்காரகன் சுசி என்று 
ஊனம்இல் அக்கினிப் பேர் ஓது
** 76

#68
தீபகம் தீபம் தீபிகை விளச்கு ஆம் காட்டுத்தீத் 
தாவகம் விண்கொள்ளி உற்கை குய் தூபம் ஆவி அரி 
தூமம் புகை பெண் சுதை சுவாகா வடவை 
ஆம் மடங்கல் ஊழியனல்
** 77

#69
அனல்நடை சுவாலை பொறி ஆம் சுடர் புலிங்கம் 
கனவிரதம் நாரம் கவந்தம் புனல் முகிற்பூச்
சீவனம் கீலாலம் நீர் சிந்து உதகம் வாரி பயம் 
கோ அளகம் கார் அங்குசம் 
** 78

#70
அம்பு அப்பு ஆலம் சலிலம் அம் கமலம் நீரம் அறல் 
கம் புட்கரம் வருணம் காண்டம் அயம் சம்பரம் வார் 
அம்புயம் பானீயம் அவதாரம் வனம் பாணி அமு
தம் புவனம் தோயம் சலம்
** 79

#71
தெய்வப்புனல் தீர்த்தம் தேவதைகட்காட்டுநீர் 
கொய் மஞ்சனம் கடாயம் குடிநீர் பெய்யும் மருந்
திட்டு வற்றுநீர் சாறு இரதம் இலையாதியின் நீர் 
விட்ட திராவகம் வேர்நீர் 
** 80

#72
நீர்நுரை பேனம் பெருக்கு நீத்தம் பிரவாகம் 
வாரி பிரளயமும் வெள்ளமும் ஆம் சேர் மொக்குள் 
கொப்புள் புற்புதம் குமிழி கோலம் நீரோட்டம் ஆம் 
அப்பின் சுழி உந்தி ஆம்
** 81

#73
திரை அலை தரங்கம் அறல் சீகரம் கல்லோலம் 
வரைநீர் அருவி உவகை உரை திவலை 
தூவல் உறை ஆலி துமி சீகரமும் நீர்த்துளிப்பேர்
ஓவுஇல் உவர்நீர் உறை 
** 82

#74
குண்டு அழுந்து அகாதம் கெம்பீரம் கயம் ஆழம் 
தண் தெளிநீரின்பேர் சலசலம் ஆம் திண் கலங்கல்
நீர் கலுழி ஆவிலம் ஆம் நீரிறைவன் பாசன் மீ
னூர்தி நதிகேள்வன் வருணன்
** 83

#75
கொண்டல் முகில் அப்பிரம் கொண்மூக் குயில் பயோதரம் செல் 
விண்டு எழிலி அம்புதம் விசும்பு மங்குல் ஒண் புயல் வான் 
தாராதரம் சீமூதம் கனம் மை கந்தரம் மால் 
கார் சீதம் மஞ்சு விண் மேகம்
** 84

#76
மாரி வருடம் விருட்டி தூறல் பெயல் வானம் மழை 
வீரியம் சேர் சோனை விடாமழை ஆசாரம் 
பெருமழை கனோபலம் ஆலாங்கட்டிப் பேர் ஆம் 
வரு பனி இமம் துகினம் ஆம்
** 85

#77
சஞ்சலை மின் சம்பை தடித்து வித்துருச் சவலை 
மிஞ்சு கனருசியும் மின்னலின்பேர் அஞ்சு அசனி 
விண்ணேறு உருமு வெடி மடங்கல் செல் ஒலியே 
அண்ணும் அனலேறும் இடிக்கு ஆம்
** 86

#78
தண்டன் பாசன் சூலன் சண்டன் நடுவன் மடங்கல் 
திண் தருமன் செங்கோலான் தென்திசைக்கோன் மிண்டு சமன் 
மால் அரி கால் சங்காரன் வைவச்சுதன் மறலி 
காலன் நமன் கூற்று அந்தகன்
** 87

#79
வக்கிரதந்தன் கரியோன் வைதரணியாற்றினோன் 
அக் கிடாவூர்ந்துயர்த்தோன் ஆம் எமன் பேர் மைக் காலன் 
கூற்றமைச்சன் சித்திரனும் குத்தனும் கூற்றின்கணக்கர் 
சாற்றும் மிருத்து ஏவல்செய்வது ஆம்
** 88

#80
நந்திநண்பன் செல்வன் நரவூர்தி புட்பகன் தனதன் 
மந்திரி பிங்கலன் வைச்சிரவன் முந்து கின்ன
ரேசன் அளகேசன் இயக்கேசன் மரகதனே 
ஆசுஇல் நிதிக்கோன் குபேரன்
** 89

#81
வந்து உயிர் புட்கோன் அருணன் மற்று இடி மின் வேந்தர்முன்னோன்
கந்தவகன் வாதம் அரி கம் சலனன் உந்து அனிலம் 
ஆயுசகன் காசிபன் சேய் ஆசுகம் பெலன் பரிசன் 
வாயு வளி மாருதம்
** 90

#82
கால் வயினதேயன் கலைவாகனன் பவனன் 
மால் ஒலி சதாகதி மருத்து உலவை மேல் வடதிக்
காள்வோன் சமீரன் அனுமன் வீமன்தாதை 
காளகன் வங்கூழ் பவமான் காற்று
** 91

#83
கோடை மேல்கால் கீழ்கால் கொண்டல் வடகால் வடந்தை 
வாடை தென்கால் மென்கால் மலயக்கால் கூடு சிறு
கால் வசந்தம் தென்றி தென்றல் காண் கூதிர் ஊதை பனிக்
கால் சுழல்கால் சாரிகை சூறை
** 92

#84
ஆதவன் அருக்கன் அருணன் கனலி மார்த்தாண்டன் 
சோதி பிதிர்க்கோள் பருதி சூரன் இனன் ஆதித்தன் 
ஏழ்பரியோன் ஓராழித்தேரோன் இருள்வலி என்
றூழ் விகத்தன் சண்டன் உதையன்
** 93

#85
பானு ஒளி விண்மணி பனிப்பகை பதங்கன் அண்ட
யோனி சுடர் சிங்கன் மறியுச்சன் வெய்யோன் வான்விளக்கம் 
ஆயிரங்கரன் தினகரன் கிரணமாலி அரி 
ஞாயிறு எல்லை மந்தி தபனன்
** 94

#86
கிரகேசன் எல்லி கிரிவலஞ்செய்கின்றோன் 
தரணி சனிதாதை சவிதா இரவி 
மதியளப்போன் வாணாளளப்போன் சான்றோன் செம் 
கதிரவன் வியாழசிநேகன்
** 95

#87
பாற்கரன் வேந்தன் கமலபாந்தி பகல் என்று அரிய
மாக் கதிர் விரோசனன் திவாகரனே தாக்கு அலரி 
சாயை உடாதேவிதலைவன் காசிபன் அதிதி
யேயன் மித்திரன் சூரியன்
** 96

#88
தானவன் குபேரன் அல்லோன் தண்கதிர் சுதாகரனே 
மானன் இறை அம்புலி சோமன் கடகக்கோன் முயற்கூடு
இந்து அரி நிலா இமகரன் களங்கன் வேந்து புதன்
தந்தை கலையோன் உடுக்காந்தன்
** 97

#89
திங்கள் சசி மூன்றாழித்தேரோன் பதின்பரியோன் 
அம் குமுதபாந்தி அனசூயைமகன் பைங்கதிரே 
அத்திரிசேய் தாய்க்கோள் அலவன் விடையுச்சன் விது 
அத்தனையும் சந்திரன்பேர் ஆம்
** 98

#90
மங்கலன் சேய் ஆரல் வளவன் தீ மகரவுச்சன் 
செம் குசன் அங்காரகன் மண்சேய் பவுமன் பைம் குருதி 
மேடன் எண்பரித்தேரோன் வக்கிரன் விருச்சிகனே 
வாடாடத் துணைக்கோள் செவ்வாய்
** 99

#91
மேதை புந்தி மால் புலவன் வித்தைக்கோள் எண்பரியான் 
தூதன் மதிசேய் சவுமன் தேர்ப்பாகன் மூதறிஞன் 
கன்னியான் கன்னியுச்சன் பச்சை கணக்கன் மிதுனன் 
பொன் அருணன் கூரியன் புதன்
** 100

#92
அந்தணன் சிகண்டிகன் பொன் ஆங்கீரசன் தேவ
மந்திரி சீவன் மகவின்கோள் அரசன் செம் தனுவன்
மாண் குரு நண்டுச்சன் எண்மாவான் ப்ருகற்பதியே 
ஆண்டளப்போன் மீனன் வியாழன்
** 101

#93
பார்க்கவன் சுங்கன் கவி பளிங்கு உசனன் கோல் விடையன் 
கார்க்கோள் பெண்கோள் காப்பியன் பிருகு மாக்கள்பத்தோன் 
தானவர்குருக் கரணன் சல்லியனே போகி புகர் 
மீனவுச்சன் வெள்ளி சுக்கிரன் 
** 102

#94
மந்தன் முடன் நோயன் மகரன் கதிர்சேய் சுன்காரி 
உந்து ஆயுக்கோள் கொடியூர்ந்தோன் முதுவோன் சந்திர
சாவகன் கோலுச்சன் அயத்தோன் எண்மாவன் சவுரி 
தாஇல் கும்பன் மேற்கோள் சனி 
** 103

#95
ஆறுபரியான் ஞானக்கோள் காரரவு தமம் 
பாறும் இராகுச் சிகி செம்பாம்பு பரியாறுடையான் 
துட்டக்கோள் ஆம் கேதுத் துன்ப விடக்கோள் சனிசேய் 
கட்டமுறு மாந்தி குளிகன்
** 104

#96
முன்னாள் யாழ் ஏறு இரலை ஐப்பசி மருத்வாநாள் 
சென்னி பரி அச்சுவதி சீர்ப் பரணி துன் அடுப்புத் 
தோய் கிழம் பூதம் தாசி சோறு தராசு ஆம் அறுவாய் 
தீ அழகு இறால் கார்த்திகை
** 105

#97
உரோகிணி விமானம் அயனாள் சதி தேர் ஊற்றால் 
உரோணி உருள் ஆம் மதி மாழ்கோடே நரிப்புறம் மும்
மீன் மகயிரம் பாலை மெய் மிருகசீரிடப்பேர் 
மான்தலையும் மார்கழியும் ஆம்
** 106

#98
செங்கை யாழ் மூதுரை ஈசன்தினமும் ஆதிரைப்பேர் 
பொங்கு அதிதிநாள் ஆவணம் புணர்தம் பைம் கரும்பு 
பிண்டி புனிதம் புணர்பூசம் பூசம் காற்குளமே 
வண்டு குருநாள் கொடிறும் ஆம்
** 107

#99
ஆயிலியம் பாம்பு கவை ஆயில் மகம் முற்சனியே 
காய் வேட்டுவன் கொடுநுகம் வேள்வி வாய்க்கால் ஆம் 
துர்க்கை கணை எலி இடைச்சனி பூரம் சுடர்நாள் 
பிற்சனி பங்கூனி உத்திரம்
** 108

#100
அத்தம் நவ்வி மீன் கைக் களிறு ஐவிரல் காமரம் க
வுத்துவம் ஆம் தச்சன் உடை நடுநாள் சித்திரைப்பேர் 
நெய் பயறு அளக்கு மா நீள் சோதி காற்று வீழ்க்
கை நுகம் விளக்கு மரக்கால்
** 109

#101
தீட்டு விசாகம் சுளகு ஆம் தேள் பனையே மித்திரநாள் 
நாட்டு அனுடம் வேதி இந்த்ரநாள் கேட்டை சேட்டையும் வல்
லாரையும் தேட்கடை கொக்கு ஆணி அன்றில் வில் மூலப் 
பேர் அசுரநாள் என்றும் பேசு 
** 110

#102
முற்குளம் நீர்நாளும் பூராடம் ஆம் விச்சுவநாள் 
பிற்குளம் ஆடி உத்திராடப்பேர் முக்கோலே 
சீவு உலக்கை மால்நாள் சிரவணம் ஓணம் வசுநாள் 
ஆவணி புள் காகம் அவிட்டம்
** 111

#103
குன்று செக்குச் சுண்டன் வருணம் போர் சதையம் முற்கோல் 
நன் புரட்டை நாழி பூரட்டாதி வென்றி மன்னன் 
பிற்கோல் முரசும் உத்திரட்டாதி ரேவதிப்பேர் 
சொல் கடைநாள் தோணி தொழு
** 112

#104
சாலி வடமீன் வசிட்டன்தாரம் அருந்ததி பேர் 
ஏல்புடைய மேடம் ஆடு ஏறு இடபம் சால் இரட்டை 
வீணை சயமகள் விழா மிதுனம் கற்கடகம் 
காணும் நண்டு அது ஆம் அரி சிங்கம்
** 113

#105
பெண் கன்னி செட்டிநிறைப்பேர் துலாம் தேள் பெயரே 
விண் விருக்சிகம் தனுவே வில் பெயர் ஆம் திண் சுறா 
மான் மகரம் கும்பமே மட்கலப்பேர் மீனமே 
மீனின் பொதுப்பெயர் ஆமே
** 114

#106
தாரை நாள் சுக்கை உடுத் தாரகை பம்பு உற்கை விண்மீன் 
பார் வான்வில் இந்திரவில் பச்சைவில் ஆம் ஊர்கோள் 
பரிவேடம் ஓரை பவனம் இல் இராசி 
அரிய கதிர்வட்டம் விசையம்
** 115

#107
வெய்யில் என்றூழ் ஆதவம் வெய்யோன் கதிர் மதிக்கதிரே 
பெய் நிலவு சந்திரிகை பின் இருள்பேர் மொய் திமிரம் 
கச்சளம் துணங்கறல் திவாந்தம் அந்தகாரம் அரி 
மெச்சு தமம் மங்குல் கருவே
** தெய்வ வர்க்கம் முற்றும்
** 1 உயர்திணைப் படலம் 

@12 மானிட வர்க்கம் 
** 116

#1
மானவர் மண்ணோர் மனிதர் மாந்தர் மக்கள் மாக்கள் நரர் 
மானுவர் ஆண்டோர் மனுடர் மைந்தர் மனு மானிடர் ஆம் 
மன்பதையும் பஞ்ஞிலும் மக்கட்பரப்பு ஆம் நங்கை நம்பி 
என்பர் பெண் ஆணில் சிறந்தோர்க்கே
** 117

#2
பேதை மகடூஉப் பெதும்பை பெண்டு அரிவை நாரி நல்லாள் 
மாது அணங்கு காந்தை பிணா மானினியே கூர் தெரிவை 
அங்கனை மாயாள் வனிதை ஆட்டி மடவாள் மடந்தை 
மங்கை பெண் ஆம் காரிகையும் ஆம்
** 118

#3
வன்னமுறும் பேதை பெதும்பை மங்கையே மடந்தை 
பின் அரிவை தெரிவை பேரிளம்பெண் தன் வயது 
முந்து எழு பன்னொன்று பதின்மூன்று பத்தொன்பான் இருபத்
தைந்து எண்ணான்கி ஐயெட்டும் ஆம்
** 119

#4
ஆண் புருடன் காளை மைந்தன் ஆடவன் ஆடூஉக் குமரன் 
மாண் புமான் பூமான் மகன் விடலை வீண் பேடு 
நஞ்சகமே சண்டம் நபுஞ்சம் கிலீபம் அலி
அஞ்சலுறும் பெண்டகமும் ஆம்
** 120

#5
பற்றிலர் நீத்தார் தாபதர் இருடிமார் தூயோர் 
உற்ற தவர் பண்ணவர் தபோதனர் மாலற்றோர் 
அறவர் உறுவோர் அடிகள் ஐயர் மெய்யர் யோகர் 
துறவர் முனைவோர் முனிவர் சொல்
** 121

#6
கும்பன் தமிழ்நன் குறுமுனி கடற்குடித்தோன் 
செம் பொதிகைமோனி சிவசமனன் வம்புபுரி 
வில்வலன் வாதாவி அன்றில்வெற்பு விந்தம் மால் சமையத்
தல் அட்டோன் ஆம் அகத்தியன்
** 122

#7
ஆசிரியன் போதன் அண்ணன் தேசிகன் உபாத்தி அத்தன் 
ஆசாரியன் பணிக்கன் சாமி அய்யன் ஆசான் 
குரவன் அடிகள் உரவோன் குரு ஆம் சீடன் 
பரவும் மாணாக்கனும் கற்பான்
** 123

#8
தக்கோன் விற்பன்னன் நல்லோன் சாரதி சாடு ஆரியன் சூர் 
மிக்கோன் மேதாவி புதன் மேதை சுதீ மெய்க் கலைஞன் 
சான்றோன் உலகு அறிஞன் சங்கம் அவை பண்டிதனே 
ஆன்றோன் கற்றோன் புலவன் ஆம்
** 124

#9
நாவலன் பாவேந்தன் வித்துவான் கணக்காயன் கவிஞன் 
பாவலன் கற்றுச்சொலி பேர் பாடகன் ஆம் பாவலரை 
வைப்பார் கவி கமகன் வாதியுடன் வாக்கி என்றே 
மெய்ப்பின் ஒருவர்க்கொருவர் மேல்
** 125

#10
தேசுஆர் சவுமியன் திகம்பரனும் யோகி ஆம் 
மாசுஇல் மதத்தார் சமயர் அங்கு அவருள் பாசுபதர் 
மாவிரதர் வாமர் வயிரவர் காளாமுகரே 
தாஇல் சைவர் உட்சமயத்தார்
** 126

#11
மெய் வாமர் சாத்தர் உடல் வேதம் குணம் கந்தம் 
அவ் உயிர் மால் பற்றுமவரே புறத்தார் இவ் ஆற்றில் 
சாறுவாங்கன் பூதமுத்தன் உலோகாயுதன் ஆம் 
தேறு சத்தன் கன்மி வைதீகன்
** 127

#12
ஆருகதன் குண்டன் அமணன்குணமுத்தன் முனிவன் 
பாரினில் கொல்லாவிரதன் பாயுடுப்போன் சாரணனும் 
திண் சமணன் ஆம் சீவரன் சாக்கியன் தேரன் 
நண்பவுத்தன் கந்தமுத்தன் ஆம்
** 128

#13
வேதாந்தி வைசேடிகன் சாங்கியன் மாயா
வாதியுடன் பரிணாமன் விவர்த்தன் ஓது பசு
ஞானியும் ஆம் பாகவதன் நல் பாஞ்சராத்திரி வை
கானசன் வயிட்டுணுவற்கு ஆம்
** 129

#14
சித்தாந்தியே சமயாதீதி சிவஞானி 
அத்துவிதி சுத்தசைவன் ஆகுமே சித்து உணர்ந்த 
மாணிக்கவாசகன் பேர் வாதவூரான் என ஆம் 
பேணு திண்ணன் கண்ணப்பன் பேர் 
** 130

#15
அத்திபெண்ணாச்செய்தோன் அமணழித்தோன் காழியிறை 
சத்திமுலைப்பாலுண்டோன் சம்பந்தன் முத்தால் 
சிவிகை குடை பெற்றோன் சிவபாதநெஞ்சன் 
தவ மகன் மாறன்சுரந்தீர்த்தான்
** 131

#16
சிலைபுணையாயூர்ந்தோன் திலகவதிபின்னோன் 
அலைவுஇல் புகழார்சேய் ஆமூர்த்தலைவன் உயர் 
மாதினியாள்மைந்தன் மருணீக்கி நாவரையன் 
பேதம்இல் வாகீசன் அப்பன் பேர்
** 132

#17
நம்பி விடம்கவர்ந்தோன் ஊரன் நாவற்பதியோன் 
வெம்பு கரா உண் சேயை மீட்டளித்தோன் அம் பரவை 
சங்கிலிமன் ஆகரன் வன்தொண்டன் சடையன்சேய் 
சங்கரன்தோழன் சுந்தரன்
** 133

#18
வேதர் தொழில்ஆறர் ஐயர் விப்பிரர் பார்ப்பார் நூலோர் 
ஆதிகுலர் அந்தணர் அனற்கொடியோர் ஓது கஞ்சம்
பூண்போர் இருபிறப்போர் பூசுரர் பிராமணர் பேர்
ஏண் பிரமசாரி வன்னியே
** 134

#19
இல்தனில் வாழ்வோன் கிரகி இல்லுடன் கானம் புகுந்து 
நல் தவம்செய்கின்றோன் வானப்பிரத்தன் பற்று ஒழிய 
விட்டோன் சன்னாசி எதி வீட்டை இச்சித்தோன் முமுக்கு 
கட்டு தருக்கன் தார்க்கிகன்
** 135

#20
மாலன்பன் ஞானமுத்திரைக் கரத்தான் காரிமன்னன் 
பாலன் திருவாய்மொழிபகர்ந்தோன் சால் புளிக்கீழ் 
வாழ்வான் அனமூர்தி மாறன் மங்கையூரினன் நம்
மாழ்வான் சடகோபன் ஆம்
** 136

#21
கோ அதிபன் ஆதிபன் கோன் கொற்றவன் சுவாமி மன்னன் 
காவலன் நாதன் கொழுநன் காந்தன் அரன் மேவு பெம்மான் 
ஏந்தல் செம்மல் ஓங்கல் பதி ஈசன் நிருபன் தலைவன் 
வேந்து இறை பிரான் பிரபுவே
** 137

#22
புரவலன் பார்த்திபன் பூபன் மகிபன் தோன்றல் 
குருசில் பெருமான் இயமான் கோமான் துரை அரசன் 
அண்ணல் இராசன் பேர் குறுநிலக்கோ ஆம் குறும்பர் 
தண் அரட்டர் வேளிர் புரோசர்
** 138

#23
மந்திரி தேர்ச்சித்துணை அமாத்தியன் நூலோன் சூழ்வோன் 
முந்து உழையன் எண்ணன் முன்னோன் மூது அமைச்சன் பிந்து கணக்
கன் கரணிக்கன் காவிதி நிமித்தன் சாக்கை வள்ளு
வன் பரியாளன் பரிவாரன்
** 139

#24
வண்டர் மறவர் பேடர் வாளுழவர் சூரர் மள்ளர் 
மிண்டர் வயவோர் வியவர் வீரர் தெவ்வர் திண் திறலோர் 
கூளியர் ஏறாளர் கொடும் பொருநர் திண்ணியரே 
மீளியர் சேனைத்தலைவர் மேற்று
** 140

#25
தானை தளம் தண்டு அனிகம் தந்திரம் பதாதி பலம் 
வானி ககனம் கடகம் வாகினி தார் சேனை படை 
பாடி பரிகாரம் பதாகினி யூபம் கவனம் 
கூடி இவை பாளையப்பேர் கூறும்
** 141

#26
உண்டை அணி யூபம் கை ஒட்டு படைவகுப்பு ஆம் 
மண்டு நெற்றி தூசி முன்செல்வார்படை ஆம் கண்டு பின்செல் 
கூழை கொடிப்படை ஆம் கூடா படையறைப் பேர் 
கீழறுத்தலே அறைபோகே
** 142

#27
வீட்டுமன் காங்கேயன் விரதன் வன்னி சந்தனுச்சேய் 
மாட்டு துரியோதனன் வலம்புரித்தார்சூட்டி வணங்கா
முடியன் நாகக்கொடியன் காந்தாரி கண்ணில்
கோமகன் சுயோதனனும் கூட்டு
** 143

#28
பாண்டு குந்திசேய் உதிட்டிரன் பொறையன் பைம் குவளை
பூண்டோன் முரசுயர்த்தோன் பொய்சொல்லான் காண் தருமன் 
பானுமகன் கச்சையுயர்ப்பான் கவசகுண்டலன் கா
னீனன் அங்கர்வேந்து கன்னனே
** 144

#29
காரி பிரகோதரன் கடோற்கயனப்பன் கதையன் 
மாருதி இடும்பிமன் சீயக்கொடியோன் பார்பிளந்தோன் 
சல்லியன் சுயோதனன் சந்தன் கீசகன் இடும்பன் 
வெல் பகனைக்கொன்றோன் வீமன்
** 145

#30
கண்ணன்மைத்துனன் காவெரித்தோன் அனுமதுசன் 
விண்ணிறைசேய் ஈசன்முடிமேலடித்தோன் நல் விசயன் 
பற்குனன் கிரீடி சுவேதன் கிருட்டினன் பார்த்தன் 
அர்ச்சுனன் சைவன் தனஞ்சயன் 
** 146

#31
தென்னன் வைகையான் செழியன் செந்தமிழ்நாட்டான் மதுரை
மன் வழுதி பஞ்சவன் வேம்பன் மீனவன் மாறன் 
தென்கிரியான் தாம்பிரதீரன் குமரியன் கவுரி
யன் கைதவன் பாண்டியன்
** 147

#32
சென்னி கிள்ளி ஆர்த்தாமன் செம்பியன் மால் கோழிக்கோன் 
பொன்னித்துறைவன் புலிக்கொடியன் நல் நேரி
வெற்பன் புனல்நாடன் வேல் சூரியன் வளவன் 
தப்புஇல் அபயன் சோழன்தான்
** 148

#33
கோதை குட்டுவன் குடகன் கொங்கன் வஞ்சிவேந்து பனம்
போதன் உதியன் பொருனைத் தென்மூன்றாற்றாதிபதி 
வானவரம்பன் மலையமான் வில்லவன் சேரற்கு
ஆன பெயர் சேரலனும் ஆம்
** 149

#34
காரி விராடன் சகரன் சென்னி நிருதி துந்து
மாரி நளன் ஆதிவள்ளல் வக்கிரனே ஓர் சந்தி
மான் அக்குரன் சிசுபாலன் சந்தன் கன்னன் அந்தி
மானும் இடைவள்ளல் எனவாம்
** 150

#35
பாரி எழிலி பசுந்தொடை பேகன் மலையன் 
ஓரி நள்ளி பின்வள்ளல் ஓர் காத்கவீரன் முசு
குந்தன் புரூரவன் நளன் சகரன் கோள்இல் அரிச்
சந்திரனும் சக்கரராசர்
** 151

#36
எட்டி வணிகன் பரதன் இப்பன் நாய்கன் தனதன் 
செட்டி கவிப்பன் தேசிகன் இளங்கோ ஒட்டியன் சி
லேட்டை இச்சியன் சீரகத்தாமன் கோவலன் பொன்
னீட்டன் உழவோன் வசியனே
** 152

#37
வெள்ளைவட்டன் காராளன் மேழியன் காவித்தாமன் 
பிள்ளை உழவன் சூத்திரன் சதுர்த்தன் கொள் களமன் 
பங்கயன்தாள்வந்தோன் பூபாலன் குடித்தலைவன் 
கங்கைகுலன் வேளாளன் காண்
** 153

#38
மேற்குலர் ஆம் இ மறையோர் வேந்தர் இப்பர் வேளாளர் 
நாற்குலரும் அன்னோர் நடை முறைமை ஏற்கும் மதம் 
தன்செயல் பேதத்து உதித்தோர் கீழ்த்குலத்தோர் சாங்கிரர்கள் 
பஞ்சவர்கள் ஆம் அவர் பேர் பார்
** 154

#39
அக் கீழ்க்குலத்தர் நிலம் ஐந்தினர் கண்ணாளர் வண்ணார் 
கைக்கோளர் நாவிதர் செக்கார் உவச்சர் மெய்க் குயவர் 
சோனகர் மிலேச்சர் செம்மார் பாணர் தோல் ஊன் கள் விற்போர் 
ஈனர் முதல் எண்ணிலர்களே
** 155

#40
சிற்பியன் ஓவன் மோகன் சித்திரன் கொல்லன் துவட்டன் 
சிற்பி தட்டான் கம்மியன் ஓவன் தபதி சொல் புனைவன் 
கன்னான் கண்ணாளன் அக்கசாலையன் கண்ணுள்வினைஞன் 
நல் மனுவன் தச்சன் யவனன்
** 156

#41
குன்றவர் கிராதர் குறவர் இறவுளர் 
வன் சவரர் வேடர் வனசரர் பின் புளிஞர் 
வேட்டுவர் மாகுலர் வெம் குழுவர் கானவரும் 
சூட்டும் குறிஞ்சிநிலத்தோர்
** 157

#42
குறத்தி கொடிச்சி குறிஞ்சிப்பெண் குறிஞ்சி
யிறைக்குப் பேர் வெற்பன் எயினர் இறுக்கருடன் 
புள்ளுவர் விராதர் மறவோர் பாலையர் அதில் பெண்
டுள் எயிற்றியே மறத்தி சொல்
** 158

#43
மீளியுடன் காளை விடலை பாலைக்குஇறைப் பேர் 
ஆள் இடையர் கோபாலர் ஆயர் விந்தர் நீள் பொதுவர்
அண்டர் தொறுவோர் அமுதர் முல்லையர் பேர் அந்நிலப்பெண் 
மண்டு இடைச்சி ஆச்சி எனவாம்
** 159

#44
குறும்பொறைநாடன் கானநாடன் அண்ணல் தோன்றல் 
மறம்செய் முல்லைவேந்தன் மருதத்தர் குறும் களமர் 
மள்ளர் விளைஞோர் உழவர் வன் கடைஞர் கம்பளரே 
பள்ளர் களைஞர் எனப் பன்னு
** 160

#45
அம் மருதப்பெண் கடைச்சி ஆற்றுக்காலாட்டி மள்ளி 
வெம்மை தவிர் பள்ளி அதின் வேந்தன் பேர் செம் மகிழ்நன் 
ஊரன் கிழவன் நெய்தல்கோன் துறைவன் சேர்ப்பன் மெல்லன் 
சேர் புலம்பன் கொண்கன் எனச் செப்பு
** 161

#46
பரதர் கலவர் களியர் நுளையர் 
பரவர் வலையர் திமிலர் பரதவர் 
பெய் கடலர் நெய்தலர் பெண் குழைச்சியே நுளைச்சி 
செய் குரத்தியே பரத்தி ஆம்
** 162

#47
காருகன் ஈரங்கோலி தூசன் வண்ணான் காருகர் நெய்
வோர் தந்துவாயர் கைக்கோளர்க்கு உரித்தாம் ஓர் பறம்பர் 
தோல்வினைஞர் ஊன்விற்போர் சூனர் உல்லியோர் கூவ
நூலர் தைப்போர் பொல்லர் துன்னர் நோக்கு
** 163

#48
செம்மார் தோல்துன்னர் நந்தி சக்கிரி செக்கான் பெயர் ஆம் 
வெம் மிலைச்சர் ஆரியர் மிலேச்சர் ஆம் செம்மைத் 
துலைப்பன் யவனன் சோனகன் உவணர் உப்பு
விலைச்செய்வோர் சிற்பி உவச்சன்
** 164

#49
நாவிதன் சீமங்கலி ஏனாதி மஞ்சிகன் குடிச்சேய் 
வாவு சவுரகன் ஆம் மட்பகை வேட்கோவனுடன் 
கும்பகாரன் சக்கிரி குலாலன் குயவன் 
வம்புஇல் வளைபோழ்நர் சங்குஈர்வார்
** 165

#50
பண்ணவன் ஓவன் மதங்கன் சென்னி சூதன் பாணன் 
தண் வயிரி கோடி கூத்தன் கழைக்கூத்தண்ணினன் வே
ழம்பன் கழாயன் அதிதி துனிகன் புதியோன்
வம்பலன் ஆம் கூர்ப்பிலி மந்தன்
** 166

#51
கள்விலைஞன் ஈழன் சவுண்டிகன் சான்றான் படுவன் 
அள்ளு துவட்டன் பிழிஞன் ஆம் புலையன் விள் குணுங்கன் 
வங்கன் ஈனன் களைஞன் வன் கொலைஞன் நீசன் மா
தங்கன் இழிஞோன் சண்டாளன்
** 167

#52
தோரணர் ஆனைப்பாகர் தூண்டு பரிச்சாணி பண்ணு
வார் வதுவர் வாதுவர் மாவலர் தேர்ப்பாகன் 
சாரதி சூதன் வலவன் சாரணர் வேயர் ஒற்றர் 
சோரர் கள்வரும் திருடர் சொல்
** 168

#53
வல்லார் மாட்டோர் ஆம் வல்லோன் வலவை வல்லுநன் ஆம் 
செல்வன் ஆம் சம்பனன் நோய்தீர்ந்தோன் ஆம் உல்லாபன் 
வந்தி புகழ்வோன் கரியோன் கள்வன் நிருவாணி நக்கன் 
உந்து வண்டர் ஆம் கடிகையோர்
** 169

#54
ஆயுத்தமானோர் சன்னத்தர் புகழோன் இயவுள்
ஓய்வுஇல் அருளுள்ளோன் காருண்ணியன் ஆம் காய் கொலையன்
காதகன் காருகன் காரோடர் உறைகாரர் முன்னோர்
ஓது பிராசீனர் முதியோர்
** 170

#55
ஆதுலன் ஏழை தரித்தின் ஆம் அச்சமுற்றோன்
பீதன் பீருச் சகிதன் பேசு இழுதை பேதை மடன் 
எண் முழுமகன் மூடன் ஏழை ஆதன் சிதடன் 
அண்ணை அஞ்ஞை ஆம் அறிவிலான் 
** 171

#56
பாராயணன் குறிக்கொள்வோன் வழிச்செல்வோன் பதிகன் 
ஏர் உரியோன் ஆம் கிழவன் ஏவுவான் பேர் வியவன் 
நாகரிகர் காமுகரே நல் சதுரர் வஞ்சகன் பேர் 
வேகி நிசாதன் சவனன் வேண்டு
** 172

#57
மாலுமி மீகான் மீவான் மீகாமன் ஆம் சமைப்போன் 
வாலுவன் பாசீகன் மடையன் பாகி கூலியனே 
பாசகன் ஆம் ஏற்போன் பரிசிலாளன் தீனன் 
யாசகனும் ஆம் இரப்போனே
** 173

#58
பார்த்தர் விடர் படிறர் பல்லவர் இடங்கழியர் 
தூர்த்தர் ஆம் ஓர்கண்ணர் சொல் காணர் சீர்த் தியாகி 
வள்ளியோன் தாதா வேளாளன் உபகாரி வள்ளல் 
உள்ள புரவலன் ஈவோன்
** 174

#59
உலுத்தன் பிசினன் உலோபன் குலீனன் 
குலக்கேடன் வாமனம் குஞ்சம் மெலித்த குறள் 
சிந்து ஆம் கூன் கோணல் செவிடன் வெதிர் ஆம் சிதடன் 
அந்தன் அந்தகன் குருடன் ஆம்
** 175

#60
பங்கு குணில் மொண்டி முடம் பற்று ஊமை மூகை முங்கை 
கொங்கு அணி வேலன் வெறியன் கோமரத்தான் இங்கு இவையே 
தேவராளன் சாலினி தேவராட்டி ஆம் 
பூவின் அளமர் அளப்போர்
** 176

#61
அருந்துதன் வாதிப்போன் அழகன் உலோலன் 
பெரும் தம்பதி இரட்டை பெண் ஆண் நரம்பிசைப்போர் 
சூட்டும் குயிலுவர் ஆம் தோற்கருவியோர் யவனர் 
ஆட்டுவிப்போர் நட்டுவர் என்றாம்
** 177

#62
ஆம் ஏதிலர் வம்பலர் நொதுமலோர் அயலோர் 
தாமே கிராமியர் கிராமமுற்றோர் மாமாத்தி
யன் பரிகாரன் பிடகன் அயுள்வேதன் வயித்தி
யன் பேர் மருத்துவனும் ஆம்
** 178

#63
புல்லர் கலர் கையர் கிஞ்சர் புள்ளுவர் கனிட்டர் பொறி
யில்லர் தேரார் முறையிலார் பதிதர் பல்லுவர் கீழ் 
மூடர் கயவோர் முசுண்டர் மூர்க்கர் தீயோர் பயல்க
ளோடும் அற்பர் தீம்பர் சிறியோர்
** 179

#64
தோழன் எலுவன் சேடன் பாங்கன் துணைவன் நண்பன் 
தாழ் சிலதன் முன்னிலைப்பேர்தான் ஏடா தோழி சகி 
சேடி இகுளை சிலதி ஆம் பாங்கி இவட்கு
ஏடி எலாள் முன்னிலை
** 180

#65
நாற்குலத்து ஆண் பெண் உயர்வு தாழ்வில்மணந்து ஈன்ற மைந்தன் 
சாய்க்கும் அனுலோமன் அவர் தாழ்வு உயர்வாய் வேட்க வந்தோன் 
சொல் பிரதிலோமன் அவர் சோர்வின் அந்தராளன் இ மூன்று 
அல்லோன் விராத்தியனே ஆம் 
** 181

#66
குண்டன் வேற்றோர்க்கு அருள் சேய் கோளகன் ஆம் கைம்மைமகன்
திண் கானீனன் கன்னிசேய் தருணி அண்டு உவதி 
யெவ்வனியும் ஆம் பிரவுடைக்கே அபரஞ்சி 
அவ் இசை போல் பாடலின் மிக்காள்
** 182

#67
கந்தி அவ்வை அம்மை கன்னி நோற்பாள் குமரி கன்னி 
வந்தி மையே மைம்மை மலடி ஆம் நொந்த முண்டை 
கைம்மை கயினி கலனிலி அமங்கலியே 
வன்மை அறுதாலி விதவை
** 183

#68
வண்ணமகள் கோலம்செய்வாள் மதங்கி பாடினியே 
பண் விறலி பாடகியும் பாடுவிச்சி கண் ஆம் 
பதிவிரதையே சதி கற்பாட்டி ஆட்கொண்ட 
வதி பெண் ஆண் நாச்சி நாயன்
** 184

#69
சாமி கோமாட்டி கோதாரம் பெருமாட்டி 
மா முதல்வியே தலைவி மற்று இறைவி ஆம் அரசி 
ஈனம்இல் பாஞ்சாலி ஐவரில்லாள் துரோபதை பேர் 
சானகி வைதேகி சீதை
** 185

#70
அத்தை குரத்தி ஐயை ஆச்சி ஆசாள் பெயர் ஆம் 
கைத்தொழில்செய்வோர் தொழுவர் கம்மியர் ஆம் பத்தியில்லா 
வேசி பொருட்பெண் கணிகை வேசை விலைமான் சூளை 
தாசி வரைவில்லி பரத்தை
** 186

#71
அத்தகு விருத்தி தொழும்பு ஆள் கிணகர் தாசர் தொறுத் 
தொத்து அடிமை சேடர் படுத் தொண்டு மா மெய்த் தொழுத்தை 
குட்டனி குண்டம் துருத்தி கூளி குறள் அசதி 
துட்டை புழுக்கை பெண்பால் சொல் 
** 187

#72
ஒன்னார் பற்றார் செறுநர் உள்ளார் நள்ளார் மருவார் 
மன்னார் செற்றார் பரர் மானார் இகலார் இன்னார் வேண்
டார் அமரர் தெவ்வர் தரியார் மாற்றார் சேயர் பகை
வோர் அரிகள் சத்துரு ஆகும் 
** 188

#73
உற்றவர் நட்டோர் கிளை கேள் ஒக்கல் குடும்பம் கூளி 
சுற்றம் விருந்தம் தொடர் கடும்பு பற்றர் தமர் 
பந்தம் நள்ளி மித்ரர் பரிசனம் பாசனமே 
பெந்தும் உறவின்முறைப் பேர்
** 189

#74
பேரன் மூதாதை பிதாமகன் போற்றன் பாட்டன் 
பேர் தகப்பன் ஈன்றோன் பிதா தாதை சீர் அம்மான் 
அத்தன் அய்யன் தந்தை அச்சன் அப்பன் ஆம் ஞாதியர் தா
யத்தர் குடிச்சுற்றத்தோர் ஆம் 
** 190

#75
ஆயி அன்னை அவ்வை பெற்றாள் அம்மனை ஆய் தல்லி தள்ளை 
தாய் அம்மை மோய் மாதாத் தவ்வையும் ஆம் பாய் செவிலி 
பின் வளர்த்ததாய் தமக்கை பேர் சேட்டை தவ்வை அண்ணி 
முன்னை தத்தை அக்காள் மூத்தாள் 
** 191

#76
கை அனிச்சை தங்கை கனிட்டை பின்னை ஆம் இளையோள் 
ஐயன் சேட்டன் தமையன் அண்ணன் முன்னோன் செய்ய தம்முன் 
மூத்தோன் பேர் தம்பி பின்னோன் மூளும் அனிச்சன் கனிட்டன் 
ஏத்து இளவல் ஐந்தும் இளையோன்
** 192

#77
மாமி அத்தை மாமன் அம்மான் மாதுலன் ஆம் ஓர்வயிற்றே 
தாம் உதித்தார் சோதசர் சகோதரரே தோம்இல் 
உடன்பிறந்தோர் துணைவர் ஓர் குடியில் கொண்டோன் 
அடர்ந்த சட்டகன் சகலன் ஆம்
** 193

#78
கொண்கன் உரியோன் வேட்டோன் காந்தன் வல்லவன் கொழுநன் 
நண்பன் மணவாளன் நாயகனே ஒண் கணவன் 
பத்தாச் சுகியன் பதி தவன் கேள்வன் துணைவன் 
மெய்த் தலைவன் காதலன் ஆமே
** 194

#79
பாரி விருந்து இல் தலைவி பன்னி மணவாட்டி மனை 
தாரம் மனையாள் காதலி காந்தை சேர் உரிமை 
வல்லபி குடும்பினி வாழ்க்கைத்துணை விரும்பி களம் 
இல்லவளும் நாயகிக்கு ஆமே
** 195

#80
தோன்றல் புத்திரன் சேய் சுதன் மதலை ஏயன் மருமான்
தனையன் செம்மல் புதல்வன் பாலன் ஈன்ற செல்வன் 
சந்ததி குட்டன் சிறுவன் காதலன் குமாரன் மைந்தன் 
நந்தனனும் ஆண்மகன் பேர் நாடு
** 196

#81
புத்திரி குமாரி புதல்வி சுதை ஏயி குட்டி 
சிக்தம் மகிழ் ஐயை சிறுவி செல்வி அத் தனையை 
பந்தனை காதலி பாலி இவை பெண்மகள் பேர் 
நந்தனையும் சொல்க நயந்து 
** 197

#82
இப்பொதுச் சந்தானம் மகவு எச்சம் குழவி வழி 
கைப்பொருள் சிசுக் குழந்தை கான்முளையே மெய்ப் பிள்ளை 
மக்கள் சிறாரே மகார் மகவின் பன்மை ஆம் 
சக்களர் ஓர் ஆண் பெண் சேர்ந்தார்
** 198

#83
மைத்துனன் அத்தான் கொழுநன் மாப்பிளை சம்மந்தி அம்மான் 
அத்தைமகன் வேட்டோர் துணை கொழுநி மைத்துனி அப் 
பிள்ளைகளில் பெண்பேர் மருமகன் பிறங்கடை மாப்
பிள்ளை மருமான் மருகன் பேர்
** மானிட வர்க்கம் முற்றும்

@2 அஃறிணை யுயிர்ப்பொருட் படலம் 

@21 நாற்காலுயிர்ப் பொருள் வர்க்கம் 
** 199

#1
ஆளி அறுகே பூட்கை வாளமும் ஆம் கேசரி க
ராளி வயமா மிருகராசன் அரி கோளரி 
சீயம் முடங்குளை பஞ்சானனம் கண்டீரவம் ந
காயுதம் மடங்கலும் சிங்கம்
** 200

#2
வல்லியம் சார்த்தூலம் வயமா வியாளம் தீவி 
புல் புலி தரக்கு உழுவை புண்டரிகம் கொல் வேங்கை 
சித்திரகாயம் கொடுவரி வியாக்கிரமே 
அத்தும் குயவரியும் ஆம் 
** 201

#3
தந்தி களிறு அத்தி கயம் குஞ்சரம் சாமோற்பவம் மா
மந்தமாத் தூங்கல் கரி மாதங்கம் சிந்துரம் தோல் 
வாரணம் மதாவளம் கைம்மா வழுவை ஆம்பல் பகடு 
ஏரம்பம் நாகம் மிபம் 
** 202

#4
உம்பல் வல்விலங்கு ஒருத்தல் மாதிரம் உவாப் புழைக்கை 
கும்பி சிறுகண்ணி நடைக்குன்று எறும்பி தும்பி மருண்மா
வேழம் தந்தாவளம் புகர்முகம் பூட்கை 
நால்வாய் கறையடி யானை 
** 203

#5
தீதுஇல் பிடியானை கரேணுக் கரிணி சீர் வடவை 
ஓது இரதி ஆம் அரசுவா யூதநாதன் ஆம் 
கன்று முனி போதகம் கயந்தலையுடன் களபம் 
துன்று துடியடியும் சொல் 
** 204

#6
தாலவட்டம் வால் வேசகம் வால்நுனி ஆம் முன்
காலதின் பேர் காத்திரம் பின்கால் அபரம் தாலும் மத
கம் கும்பம் மத்தகம் கைந்நுனியே புட்கரம் கூட்
டம் கடகம் மஞ்சு முதுகு ஆம்
** 205

#7
கடைக்கண் நிரியாணம் கடம் கதுப்பதாம் பல்
லடிப் பேர் கரீரம் அது தூங்கிடம் கண்டம் 
சேவகம் விலாழி கையில் சிந்தும் நீர் பாகலம் நோய் 
ஏவு தூசு ஆம் புரசையே
** 206

#8
சூளிகை ஆம் காதடிப் பேர் தொண்டை தொண்டலம் துதிக்கை 
வாள் எயிறு கோடு தந்தம் மானமும் பின் நீள் பிருதும் 
கொம்பின்நடு வீழ்குழி கொப்பம் பயம்பு ஆம் ஓடை பட்டம் 
உம்பல் செல்லும் பாதை தண்டம் ஓர் 
** 207

#9
மதம்பெய்சுவடே கரடம் ஆம் கடாம் தானம் 
மதர் கடம் மதம் கூடம் வாரி முதிர் ஓளி 
ஆலையம் கண்டக்கயிறு கச்சை மந்தனம் சூழி 
ஏலும் முகபடாமே
** 208

#10
கந்திருவம் பத்திரியே கற்கி அச்சுவம் சடிலம் 
குந்தம் அரி கிள்ளை அயம் கொக்கு இவுளி கந்துகம் மாக் 
கோடை துரகம் கோணம் கோடகம் கோரம் புரவி 
பாடலம் துரங்கம் பரி 
** 209

#11
தூசி கனவட்டம் துரகதம் அத்திரி 
வாசி குரகதம் வாகம் உன்னி தேசியும் ஆம் 
திண் குதிரைப் பேர் பரமே சேர் பல்லணம் பருமம் 
பண் கலனையின் பேர் பகர் 
** 210

#12
வற்கம் வடிகயிறு வாய்வடம் குரம் குரச்சை 
அக் குளம்பு ஆம் மாதிகமே அ மார்க்கம் தக்க படி 
அங்கவடி கச்சம் மொட்டும் ஆம் கடியாலம் கறுளே 
வெம் கலினமே கவினமே 
** 211

#13
மத்திகை கோல் சம்மட்டி மந்திரம் சாலை பந்தி 
மெய்த்த சுவல் குசையே வேசகமே வைத்த உளை 
வேயும் அதின் மயிர் ஆம் வேழத்தின் மேல் தவிசே 
ஆய் இலகடம் பலகாரம் 
** 212

#14
கோப் பெற்றம் தேனுக் குடம் கபிலை ஆன் சுரபி 
ஆப் பசு ஆம் பத்திரை நல் ஆச் சுதையே தீப்பசு ஆம் 
வற்சலம் ஈற்றாக் கிருட்டி ஓரீற்றா ஆம் மலட்டா 
வற்சை கன்று தன்னம் வற்சம் ஆம் 
** 213

#15
பாறல் விடை நந்தி குண்டை பாண்டில் குத்தம் கூளி பகடு 
ஏறு இடபம் கோப்பதி இறால் மூரி கூறு எருது 
புங்கவம் சேப் புல்லம் நரை பூணி கொட்டியம் காளை 
அங்கு எருமை ஆன் பொது மாடு ஆம் 
** 214

#16
ஆவின் முலைப் பேர் சுரை ஆம் ஆபீனமே செருத்தல் 
ஆவின் மடுச் சூட்டு ஆம் அதின் சிமிழே மேவும் இமில் 
அக்கு விடைமுரிப்பு ஆம் ஆன் எருமைப் பால் விளையத் 
தக்கது உரோசனை அது ஆம் 
** 215

#17
காலி தொறுக் கோட்டம் நிரை காலேயம் பட்டி கிடை 
ஏல் பசுக்கூட்டம் கிடை ஆட்டின்குழு ஆம் சால் பொலியேறு 
ஆம் தூர்வகம் துரியம் ஆமாக் கவையமா 
வாய்ந்த காட்டாவின் நாமம்
** 216

#18
காரான் வடவை மயிடம் சயிரிபம் கவரி 
கார் மேதி மூரி காசா எருமை சேர் ஆண் 
பகடு கிடா ஆம் ஈனாப்பக்குவம் ஆம் பெண்மாடு
இகலில் கிடாரி என்று ஆமே
** 217

#19
வெள்ளை மறி கார் வெறி மை மேழகம் அயம் துருவை 
பள்ளை உதள் சாகளம் சாகம் பிரமம் துள்ளல் அசம்
கொச்சை அருணம் கொறி வற்காலி ஒரு மேடம் உடுச் 
செச்சை தகர் மோத்தை திண்ணகம்
** 218

#20
கம்பளம் சகம் புருவை ஆடு கிடாய் இவ் ஆண் பேர் 
பம்பு வரையாடு சரபம் வருடை வெம் பறழே
குட்டன் மறி சோரன் அணங்கு ஐந்து ஆட்டின்குட்டி கண்டத்து 
ஒட்டும் உறுப்பு ஒன்று அதர் என்று ஓது
** 219

#21
பல்லுகம் குடாவடி ஐவாய்மாக் கவிழ்தலையே 
பல்லம் எலு எண்கு இருளி பற்று உளியம் சொல் கரடிக்கு 
ஆம் பேர் தலைவிரியும் ஆம் அண்டசம் முசலி 
ஓம்பு தடி கோதா உடும்பு 
** 220

#22
போழ்முகி கோலம் கிருட்டி போத்திரி வராகம் முந்தூழ் 
கேழல் களிறு ஏனம் கிருகிடியே மோழல் அரி 
வல்லுளி பூதாரம் மைமாச் சூகரம் குரோட்டு இரணி 
நல் எறுழி கோணி பன்றி நாட்டு
** 221

#23
சல்லியம் முளா எய்யே சல்லபம் முட்பன்றி அ முள் 
சல்லம் சலம் சாமரை சவரி மெல் எகினம் 
மானமாச் சீகரம் பட்டம் கவரிமான் அணில் பேர் 
தான் வெளில் வரிப்புறம் அடு ஆம் 
** 222

#24
ஏகசிருங்கி காண்டாமிருகம் என்பர் சிவ
மோகி அதிசூரி புருடாமிருகம் வாகில்லா 
முண்டிதை உரோதனி தேவாங்கு ஆகும் மொய் சுவவு 
சுண்டனுடன் சுந்தரி மூஞ்சூறு 
** 223

#25
பாக்கன் விலாளம் விடருகம் பவனம் மார்ச்சாலம் 
மாக் கடுவன் பூஞை அலவன் பூசை தாக்கு ஓதி 
இற்புலியே மண்டலி எலிப்பகையே வெருகு என்று 
அப் பதினான்கும் பூனை ஆம் 
** 224

#26
நவ்வி உழை ஏணம் சூனம் பிணை குரங்கம் மறி 
அவ் அருணம் கிட்டிணம் சாரங்கமும் மான் வெவ் இரலை 
புல்வாய் கலை வச்சயம் கருமான் போர் இரலை 
புல்வாய்தனக்கும் புகல்
** 225

#27
கோகிலம் சாகாமிருகம் கோடரம் நிரந்தம் அரி 
நாகம் மற்கடம் வானரம் கடுவன் யூகம் 
கவி வலிமுகம் பிலவங்கம் கீசகம் கா
னவன் நரமா மந்தி குரங்கு ஆம் 
** 226

#28
காருகம் கருங்குரங்கு ஆம் கத்தூரிப்பிள்ளை மான் 
சூர் நரந்தம் நானம் துருக்கம் ஆம் சீர் மறுவி 
நாவி புழுகுப்பிள்ளைப் பேர் காத்திரம் நகுலம் 
தீர்வை கத்திரம் கீரி செப்பு
** 227

#29
ஓரி சிருகாலன் உக்குரோட்டு இகலன் கோமாயுப் 
பூரிமா உள்ளான் சம்பு ஒண்டன் நரி ஓரி கள்வன் 
மைம்முகம் கூலம் கோலாங்கூலம் முசு ஆம் கீரிச்
சம் முயல் வயம் சசமும் ஆம் 
** 228

#30
கூரன் எகினம் பாசி குக்கல் பட்டி ஞாளி சுவாச் 
சூரன் புரோகதி சுணங்கன் அக்கன் ஓர் சார
மேயன் விசுவாசி சுனகன் குரைமுகன் முடுவல் 
நாய் ஞமலியும் சுவானம் 
** 229

#31
பெண்நாய்க்கு இவற்றின் முடுவல் எனும் பேர் சிறப்பு ஆம் 
திண் ஆர் கொக்கே விருகம் செந்நாய் ஆம் எண்ணும் 
சுகினம் சடைநாய் ஆம் வேசரி துரங்க
முகி இவை கோவேறுகழுதை 
** 230

#32
காளவாய் வேசரி கோகு அத்திரி கருத்தபமே 
நீள் கரம் வாலேபம் நெடும் கழுதை தாழ் வலிதாம் 
அத்திரி தா சோகம் இரவணம் நெடுங்கழுத்தல்
இத்துணையும் ஒட்டகம் ஆமே 
** 231

#33
சாயனம் சாய்ந்தம் சரடம் தண்டு ஓணான் ஓதி சில்லான் 
காய் முசலி கோம்பி தோகைப்பகையே பாய் காம
ரூபி அண்டசம் காமுருகி ஆம் ஓந்தி மரை 
ஆவிதம் கானக்குதிரை ஆம் 
** 232

#34
சாடு உந்துருக் கனகதம் துந்தளம் களகம் 
மூடிகம் பெருச்சாளி மொய் விருடம் நீடு ஆகு 
என்பவும் ஆம் ஆகு இரும்பன் சிகரி எலி 
பின் கருப்பை காரெலியின் பேர் 
** 233

#35
மா ஒருத்தல் ஓரி கடுவன் பகடுடன் களிறே 
சேவல் கலை உம்பல் போத்து ஏறு தகர் பாய் விலங்கின் 
ஆண் இவை பெண் பாட்டி பிடி ஆன் பிணை பிணாப் பெட்டை 
காணும் மந்தி நாகும் கருது
** 234

#36
பறழ் குழவி குட்டி பிள்ளை பார்ப்புக் குருளை 
மறி கன்றின் பேர் விலங்கு மா மான் செறி மிருகம் 
நாற்காலிப் பேர் வியூகம் குலம் யூதம் விருந்தம் 
மேல் சாலம் அக் கூட்டமே 
** 235

#37
கூலம் விலாளம் தோகை கூரமொடு வேசகம் வால் 
வாலதியும் ஆம் வெருகம் வாற்கீழ் ஆம் மேல் உலவை 
கொம்பு விசாணம் சிருங்கம் கோடு மருப்பு ஆம் குமரம் 
கொம்பிலி ஆம் மேழையுமே கூறு 
**நாற்காலுயிர்ப் போருள் வர்க்க முற்றும் 
** 2 அஃறிணை யுயிர்ப்பொருட் படலம் 

@22 பறவை யுயிர்ப்பொருள் வர்க்கம் 
** 236

#1
தாக்கியனே நாகாசனன் வயினதேயன் புள்
கோக் கலுழன் காளாரி கூறு உவணன் தாய்க்கவலந்
தீர்த்தான் பெரிய திருவடி புள் காசிபன்சேய் 
காத்த சுதாதாரி கருடன்
** 237

#2
சம்பரம் வாருண்டம் சாளுவம் துரோணமொடு 
சிம்புள் எண்காற்புள் வருடை சிங்காரி வெம்பறவை 
மெய்க் குலிசதந்தி குலிசநகி மீறு சிவ
பக்கி சதுர்ப்பாணி சரபம்
** 238

#3
அன்னம் எகினம் வக்கிராங்கம் மராளம் விகங்கம் 
தன்னொடு அஞ்சம் ஓதிமம் ஆம் தத்தை அரி வன்னி கிள்ளை 
கீரம் அவந்திகை சுவாகதம் சுகம் கிளிப் பேர் 
சாருவும் ஆம் பொய்யாச் சலாங்கு
** 239

#4
சிகி ஞமலி மஞ்ஞை சிகண்டி நவிரம் 
ஒகரம் பிணிமுகம் மயூரம் சிகாவளம் ஆம் 
கோல மயில் கேகயமும் கொள்க மயிலாட்டு ஏங்கல் 
ஆலல் அகவல் குரல்
** 240

#5
சந்திராங்கம் தூவி கூந்தல் சிகண்டம் சருணம் 
பைம் தொங்கல் பீலி கலாபம் தோகை உந்து முருந்து 
அச் சிறைமுள் தித்திரி பொன்வாய்ப்புள் சிரல் கவுதம் 
சிச்சிலி மரங்கொத்தி சேர் 
** 241

#6
பாரசிகை சேனம் பாறு கங்கமும் பருந்து ஆம் 
சாரிகையும் பூவையும் நாகணவாய் காரி கொடி 
மா கரடம் கூகைப்பகை வாயசம் பிள்ளை 
காகம் அரிட்டமும் காக்கை
** 242

#7
அண்டங்காக்கைப் பேர் காகோலம் ஆம் அற்கமும் கா
ரண்டமும் நீர்க்காக்கை இதல் கோரசம் புல் ஒண் சிவல் ஆம் 
பாரதம் இலாதமும் ஆம் பற்றும் இதற்பூழ் சிரவம் 
சாரும் கவுதாரி தான்
** 243

#8
காமகாளம் கிரவுஞ்சம் குநரம் காரி அன்றில் 
காமசின்னம் காரி களகண்டம் தோம்இலாக் 
கோரகை பகம் கோகிலம் பரபுட்டம் குயில் ஆம் 
சாரங்கம் ஆம் சாதகம்
** 244

#9
காளபதம் தூணம் களரவம் பாராவதமே 
ஆள் கபோதம் புறவு ஆம் ஆந்தையின்பேர் நீள் இருடி 
கின்னரம் கூன் பிங்கலம் ஆம் கின்னரம் கிராமம் உன்னம் 
புன்மை உற்குரோசம் நீர்ப்புள் 
** 245

#10
சக்கரவாகம் கோகம் நேமி கொம்பி சக்கரம் ஆ
னைக்குருகு ஆம் போதகை சகோரம் நிலாமுக்கி குக்கல் 
பாடு செம்போத்து ஆம் செம்பகம் சம்பங்கோழி கம்புள் 
காடை குறும்பூழ் கபிலசம் 
** 246

#11
காட்டு ஊமன்கூகை கவுசிகம் பெரும்புள் ஆம் 
கோட்டான் உலூகம் கொடிப்பகையே ஈட்டும் 
குடிஞை நிசாசரி குரால் ஆம் குரண்டம் 
அடர் பகம் வலாகமும் கொக்கு ஆம் 
** 247

#12
போதா பிதாக் குருகு புட்கரம் சாரசம் 
நாத வண்டானம் சிகரி நாரை ஆம் ஓது குருகு 
ஆண்டலைப்புள் ஞானி குக்குடம் காற்படை கோழி 
மாண் துவசம் வாரணமும் ஆம்
** 248

#13
பாய் அசுணம் கேகயம் பறைப்பகை இசைப்பிரியி 
சாய் குழறி நீராடி தாரா ஆம் தோய் பூழான் 
காதம்பம் கான்கோழி கம்புள் கலிங்கம் என 
ஆதல் வானம்பாடிக்கு ஆம்
** 249

#14
உள்ளல் உள்ளான் சிதகம் தூக்கணம் ஊர்க்குருவி 
தள்ளு குதிகாலி சகடம் குலிங்கம் கொள் புலிங்கம் 
செல் அடைக்கலங்குருவி ஆம் பகண்டை சில்லம் ஆம் 
வல்லூற்றின் பேர் கடகம் ஆம்
** 250

#15
சார் எருவை புண்டரம் சகுந்தம் உவணம் பவணை 
வார் கழுகு ஆம் கஞ்சனம் வயான் வலியான் கூர் கிகினி 
வஞ்சுளன் பாரத்துவசம் பிள்ளை வயவன் கயவாய் 
கஞ்சரீடம் கரிக்குரீஇ
** 251

#16
தும்பி மதுபம் கீடம் மா அளி சுரும்பு அரி சா
கம் பிரசம் சஞ்சாளிகம் கேசவம் பிருங்கம் 
மந்தி புள் சிலீமுகம் சாரங்கம் மதுகரம் கீ
தம் தேன் கரும்பு அறுபதம்
** 252

#17
கண்டம் ஞிமிறே பிரமரம் கழுது சஞ்சரிகம் 
வண்டு புண்டரீகம் ஆம் வாகுரமே ஒண் துரிஞ்சில்
வாவலுடன் அஞ்சலி ஆலாலம் வெளவால் என்பர் துள்ளல் 
மூவல் மசகம் கொதுகு ஒலுங்கு
** 253

#18
சில்லிகை சிள்வீடு சிமிலி சலபம் பதங்கம் 
சில்லை சிதடி விட்டில் செம் கோபம் நல் ஈயல் 
மூதா ஆம் தேனீச் சாகம் பிரசம் மின்மினி கச்
சோதம் நித்தில் ஆம் நுளம்பும் சொல்
** 254

#19
பக்கி விகிரம் சகுந்தம் பத்திரிககம் குடிஞை
மிக்க விகங்கம் சகுனம் வீ வயினம் மெய்க் குருவி 
புள் பிணிமுகம் பதங்கம் போகில் அண்டசம் பறவை 
கொட்புறும் பார்ப்போடு பிள்ளை குஞ்சு 
** 255

#20
பெண் பேடை பெட்டை பெடை பேடு அளகு ஆம் ஆண் சேவல் 
ஒண் போத்து இறகடித்தல் ஓசனித்தல் அண்டம் முட்டை 
கோசம் வருட்டம் சினை புள்கூட்டம் தொழுதி புள்ளின் 
ஓசை துழனி என்றே ஓர் 
** 256

#21
சிறகு இறகு பிச்சம் சிறை கூழை தோகை 
பறை குரல் வாசம் சதனம் பக்கம் இறை தூவி 
கூரல் சதம் பத்திரம் ஆம் கூர் மூக்கு அலகு துண்டம் 
சார் சுவவு கஞ்சும் அதுதான்
** பறவை யுயிர்ப்போருள் வர்க்க முற்றும் 
** 2 அஃறிணை யுயிர்ப்பொருட் படலம் 

@23 ஊருயிர்ப்பொருள் வர்க்கம் 
** 257

#1
நல்பாம்பு மண்டலி கண்கொத்தி மூர்க்கன் சாரை 
வெற்பரவம் மண்ணுளியன் வெவ் விரியன் சொல் புடையன் 
வன் முறுக்கரா மயக்கரா நீரரா வழலை 
பன் மணியன் ஆதி பல் பாம்பு 
** 258

#2
பன்னகம் காகோதரம் பணம் பாந்தள் காத்திரவே
யன் மிருகம் கஞ்சுகி அரா உரகம் துன்னு பவ
னாசனம் கும்பீனசமே நாகம் விடருகமே 
மாசுணம் வியாளம் அரவம் 
** 259

#3
சர்ப்பம் அண்டசம் கவைநா சக்கிரியே கூடபதம்
துர்ப் பணியே போகி தந்தசூகம் அரி வன் புயங்கம் 
அங்கதம் நிபாதி அகி கட்செவி எனவே 
இங்கு முப்பான் பாம்புக்கு இசை 
** 260

#4
துண்டம் இராசிலமும் சொல் சாரை கோளகமே 
மண்டலி பச்சைப்பாம்பு உதாசனன் மால் கண்கொத்தி 
மாசுணம் பெரும்பாம்பு பாந்தள் மலைப்பாம்பு ஆகும் 
காசடையு மூர்க்கனா கம்
** 261

#5
மந்தம் இராசம் வழலை வன் முறுக்கராச் சவடிப் 
பிந்து இருதலைப்பாம்பின் பேர் மணியன் உந்து கா
ளாம்பகி மாநாகம் இராசாளி குக்குடம் பறவைப்
பாம்பு அரசநாகப் பகுப்பு
** 262

#6
பை பணம் படம் பொறிப் பேர் உத்தி துத்தி போகம் உடல் 
துய்ய பல் பேர் காறு தட்டம் தூம்பு கட்டம்செய் காளி 
காளாத்திரி யமன் அத்தூதன் நான்காம் அதின் பல்
வாள் அரவின்நாக் கவர்நா ஆம் 
** 263

#7
பீலிகை பிலன் சுலோபம் சிகடை கண்மூக்கி 
கால் உறவி அண்டசம் கடுத்துவாய் மேல் எறும்பு ஆம் 
துட்டன் தெறுக்கால் விடம் நளி விருச்சிகம் தேள் 
ஒட்டு அரணை அண்டசம் என்று ஓது 
** 264

#8
மூட்டை குடவன் முகடு மற்குணம் மூன்றாம் சிலந்தி 
வாட்டும் உலூதை காவான் சிலம்பி தீட்டு விட
தாலி நக்கி பூரம் அது ஆம் சார் புழுக் கீடம் கிருமி 
சூலுறும் பொட்டு என்பிலியும் சொல்
** 265

#9
இற்கோதாப் புள்ளி அண்டசம் கோகிலம் கெவுளி 
ஒற்கமுறும் பல்லி உழு உசு ஆம் துற்று சிதல் 
ஆழல் கறையான் சிதலை செல் ஆம் தேன்கூடு இறால் 
வாழ் பிரசம் கோல்தேனும் ஆம் 
** 266

#10
நன்னாகம் பூநாகம் நாங்கூழ் நிலவேர் ஆம் 
இன்னலுள்ள பாச்சா இரைப்பு ஆகும் துன் இடுக்கி 
நட்டுவக்காலிப் பேர் நவின்ற இவையின் பொதுப்பேர்
இட்டிடுவர் ஊர்வன என்றே
** ஊருயிர்ப் பொருள் வர்க்க முற்றும் 
** 2 அஃறிணை யுயிர்ப்பொருள் படலம் 

@24 நீர்வாழுயிர்ப் பொருள் வர்க்கம் 
** 267

#1
மகரம் இறால் கெண்டை மலங்கு ஆரல் சாளை 
பகர் உழுவை நெய்ம்மீன் பசலி இகல் கசலி 
வாளை கட்டாக் கோளை மடந்தை மிதப்புக் கொழுவை 
தேளி குதிப்புக் காரை தேடு
** 268

#2
செம் களிறு கூனி திருக்கைபன்னாக் கோவாஞ்சி 
வெங்கணை முதல் பலவாம் மீனும் நத்தை சங்கு நண்டு 
சோகி இப்பி ஆமை அட்டை சூர் முதலை தேரை முதல் 
ஆகியவை நீர்வாழ்வ ஆம்
** 269

#3
அண்டசம் மச்சம் சலசரம் வகுலி நோ மயிலை 
வண் சகுலி மீன் கொக்கரை வளை கோடு அடண்டசமே 
வண்டு சுத்தி நாகு வெள்ளை வாரணமே கம்பு நந்து 
தண் சுரிமுகம் பணிலம் சங்கு
** 270

#4
மாக்கலை மீனேறு சுறா வாள் கொம்பி அம் மகரம் 
ஆக்கு திமில் ஆனைமீன் அ மீனை வாய்க்குள் 
விழுங்கும் திமிதிமி அ மீனினத்தைப் பற்றி 
விழுங்கும் திமிங்கிலம் ஆம் மீன்
** 271

#5
கெண்டை சபரம் பஞ்சிலை பாமரம் கயல் ஆம் 
பெண்டு அதில் சேல் நந்து அண்டசம் நாகு விண்ட நத்தை 
சம்பூகமும் ஆம் சகத்திரதந்தி முரல் 
அம்பார் முசுண்டகமும் ஆம் 
** 272

#6
குத்திரசங்கம் குளிர் ஊமை ஊமைச்சி 
தத்து திறல் தேளி சல்லகம் ஆம் கத்துகின்ற 
தேரை அரி மண்டூகம் திண் சரிசபம் தவளை 
கூரு நுணல் அண்டசமும் கூறு
** 273

#7
ஏரல் பிண்டம் ஊமை எருந்து இப்பி அண்டசம் கிளிஞ்சில் 
ஆர் சிப்பி ஆரல் ஆரால் மலங்கின் பேர் நூறை 
சோகி பரல் வட்டி பலகறை வெள்வரி 
ஆய் கவடியோடு அலகு என்றாம்
** 274

#8
நண்டு அலவன் கற்கடகம் நள்ளி அண்டசம் கள்வன் 
ஞெண்டு குளிரம் கவைத்தாள் ஞெள்ளி குளிர் அண்டுஇடுக்கி 
ஆமதியும் சேக்கையும் அட்டை உருச் செழுகம் 
நாமம் நொள்ளை நாகரவட்டை 
** 275

#9
சிஞ்சுமாரம் கிராகம் கரா விடங்கர் வன்மீன் 
அஞ்சு அண்டசம் முதலை ஆமையின் பேர் மிஞ்சு துளி 
கச்சபம் உறுப்படக்கி கூர்மம் கமடமொடு 
மெச்சு அண்டசமும் ஆமே
** 276

#10
இப்பி சுற்றும் ஆயிரம் இடம்புரி ஆம் சங்கை அவை 
அப்படி சூழ் சங்கம் வலம்புரி ஆம் அப்படியே 
அன்னவை சூழ் சங்கம் சலஞ்சலம் அது ஆம் பாஞ்சச
ன்னியம் அவ்வாறு அவை சூழ் சங்கு
** நீர்வாழுயிர்ப் பொருள் வர்க்க முற்றும்
** 2 அஃறிணை யுயிர்ப்பொருட் படலம் 

@25 தாபர வுயிர்ப்பொருள் வர்க்கம்
** 277

#1
கற்பகம் மந்தாரம் அரிசந்தனம் சந்தானமொடு 
சற் பாரிசாதம் விண் ஐந்தாரு ஆம் கற்பகம் சூழ் 
வல்லியின் பேர் தான் காமவல்லி ஆம் சேதாரம் 
குல்லை செச்சை சிந்து வெட்சி கூர் 
** 278

#2
சந்தனம் படீரம் மலையசம் சாந்தம் பூசல் 
சந்த்ரதிலகம் சிசிரம் சந்து ஆரம் சந்தமொடு 
தண்வாசி ஆகுதி இலேபனம் சாத்து ஆம் பிசனம் 
நண்ணும் ஒரு செஞ்சந்தனம்
** 279

#3
அச்சுவத்தம் போதி பிப்பிலம் திருமரம் சுவலை 
மெச்சு கணவம் பணை சராசனமும் நச்சு அரசு ஆம் 
காகதுண்டம் பூழில் அகரு அகில் புன்னாகம் 
நாகம் வழை சுரபுன்னை 
** 280

#4
நாரம் நாரங்கம் நரந்தம் நாரத்தை பிர
சாரம் கணி திமிசு சாற்று அசனம் ஓர் வேங்கை 
காதிரம் கருங்காலி செங்கருங்காலி எனும் 
ஈது சிறுமாரோடமே 
** 281

#5
வாழ் பழுமரம் காமரம் பூதம் வானோங்கி 
நீள் இயக்குரோதம் வடம் தொல்மரம் ஆல் கோளியும் ஆம் 
வெள்ளில் கபித்தம் கடிப்பகை விளா விளவு ஆம் 
சுள்ளி நறவம் எனச் சொல் 
** 282

#6
அச்சம் கரீரம் முனி ஆம் அகத்தி சிற்றகத்தி 
துச்சில் உபராசிதமாய்ச் சொல்வர் எலுமிச்சு அரச
மோகினி சம்பீரம் முருகு அருணமே லிகுசம் 
தாகம்இல் சதாபலம் அது ஆம் 
** 283

#7
மருவகம் சமீரணம் கிடாரை தமரத்துக் 
கரபுசம் பாராவதமும் ஆகும் திரளி 
அருள் உற்கடம் சோசம் அஞ்சுகம் வராங்கம் 
கருவாயும் ஆம் இலவங்கம்
** 284

#8
அயிராபதம் நாகரம்பை கொழுவிஞ்சி 
பயில் சருமசம் பூர்ச்சபத்ரம் உயர்வாம் 
மிருதுத்துவசம் மரவுரிமரப்பேர் 
பொரு காஞ்சிப் பேர் சரபுகம் 
** 285

#9
செங்கோடு பஞ்சரம் செருந்தி ஆம் செம்மரம் சேய் 
அங்கோலம் ஆம் அழிஞ்சில் அஞ்சனியே புன்காலி 
காசை புல்லி பூவை அதசி காயா வகுளம் 
கேசரம் இலஞ்சி மகிழ்க்கே
** 286

#10
நல் தெங்கு இலாங்கலி தென் நாளிகேரம் தாழை 
கற்ற கந்தி பூகம் பூக்கம் கமுகு ஆம் சொல் துவர்க்காய் 
பாகு அடைக்காய் கோலம் பாக்கு ஆம் கரும்பு இக்கு ஆலை கன்னல்
சேகுஇல் கழை வேழம் தெளி
** 287

#11
வாழை அரம்பை கதலி திரணபதி 
கேழ் மகரவாழை மருகு என்றாகும் சூழ் முருங்கை 
சிக்குருக் கிரஞ்சனம் சோபாஞ்சனம் ஆம் கிக்கசியும் 
கக்கடியும் துத்திதனக்கு ஆம் 
** 288

#12
புற்பதி தாலம் தாளி புல் பெண்ணையும் பனை ஆம்
அப்பும் இதழ் ஏடு ஓலை அவ் இலைப் பேர் தப்பாத 
நாரியொடு நெய்யரி பன்னாடை நிலப்பனைப் பேர் 
வாராகியே முசலி வாழ்த்து
** 289

#13
கோல் குல்வலி வதரி கோல்கொடி இரந்தை கொண்டை 
கோலம் அதின் கனி ஆம் கூவிளையே மாலூரம் 
கூவிளம் சிவத்துருமம் நின்மலி குசாபி வில்வம் 
நாவல் சம்பு சாதவம் நவ்வல்
** 290

#14
அத்தி அதம் கோளி அதவோடு உதும்பரம் ஆம் 
இத்தி சுவி இறலி இந்திரி ஆம் சித்திரமே 
ஆமணக்கு ஏரண்டமும் ஆம் தந்தி நிகும்பமும் காட்
டாமணக்கு ஆம் பஞ்சி முசுட்டை
** 291

#15
வாரிகம் பாடை பங்கம்பாளை மலைதாங்கி கருஞ்
சாரணை பொன்முசுட்டை சேங்கொட்டை வீரதரு 
பல்லாதகியுடன் செம்பாலை எரிமுகி ஆம் 
மெல் ஒதிப் பேர் மோதகம் ஆமே 
** 292

#16
பூரணி மோசம் சான்மலி பொங்கர் நான்கு இலவு ஆம் 
சீரணம் சாதி இவை சீரகம் ஆம் மோரடமே 
வீழி மஞ்சணாத்தி நுணா வெந்தை வெந்தயப் பேர் தை
வேளை விவிதம் பாலையம் 
** 293

#17
பூதிகம் காஞ்சனம் காஞ்சமும் புன்கு ஆம் அனிச்சம் 
தீதுஇல் அருப்பலம் தேக்குச் சாகம் சாதி சிறு
தேக்கின் பேர் பாங்கிரி ஆம் திண் கலிங்கம் இந்த்ரவல்லி 
பேய்க்கொம்மட்டிக்கு ஆம் பெயர் 
** 294

#18
சேகரம் கொக்கு ஆம்பிரம் சேதாரம் எகின் மாழை கிஞ்சம் 
வாகுறு மா ஆம் சூதம் மாந்தியும் ஆம் பாகல் பன
சம் பலாச் சக்சை அக் காய்தன் பேதம் ஆசினியே 
கம்பமுறும் கூழை வருக்கை 
** 295

#19
ஆமலகம் தாத்ரி நெல்லி நீலி அவுரி மருது 
ஆம் அருச்சுனம் ககுபம் பூதவமும் தாமம் 
மதலை இதழி வளர் கடுக்கை ஆக்கு
பதம் இவை கொன்றைப்பாற்படும் 
** 296

#20
விண்டு அமை ஆம்பல் வெதிர் வேரல் வஞ்சம் கீசகம் வேல் 
கண் துளை வேய் ஓங்கல் கழை காம்பு அரி தூம்பு ஒண் திகிரி 
சந்தி பணை வேணு வரை பாதிரி முடங்கல் தட்டை 
முந்தூழ் முளை கிளை வேழம்
** 297

#21
நேமி புறக்காழ் கணை மூங்கிற்கு ஆம் வேய்க்கண் கிரந்தி 
தோம்இல் பண்ணை வேய்க்கூட்டம் தோரை அதினாம் அரிசி 
சூரல் பிரம்பு ஆம் சாதி வேக்திரமும் ஆம் குடை வேல்
ஓரிரண்டு பேரும் உடை
** 298

#22
வச்சிரவல்லி பிரண்டை கொடுப்பையின் பேர் 
மச்சரக்கி சீதை பொன்னாங்காணி ஆம் கச்சோலம் 
சக்கிரந்தி கந்தாலி சோரகம் சோசம் சதி ஆம் 
கக்கு கரமத்தகங்களா 
** 299

#23
இந்திரசூரியம் நிர்க்குண்டி சிந்துவாரம் நொச்சி 
சந்த சந்திகைக் கொடிப் பேர் தாடிமமே சந்தானம்
காழம் எட்டி கோடரமும் மாரணியும் காஞ்சுரை கற்
றாழை குமரி கன்னி ஆம் 
** 300

#24
கோவிதாரம் குரவம் ஆமயமும் கோட்டம் ஆம் 
தேவதாரப்பேர் சுரர்மரம் ஆம் சீவல் 
சுரசம் பிதாரி சிறுகிழங்கு உன்மத்தம் 
மருளும் தூர்த்தூரம் மத்தம் ஆம் 
** 301

#25
குந்தம் குருந்து குமிழ் கூம்பல் கடம்பல் புளி 
திந்துருணி ஆம்பிரம் சிந்தூரம் எகின் சிந்தகம் ஆம் 
தித்தை பிசுமந்தம் நிம்பம் வாதாரி திண் பாரி
பத்திரம் அரிட்டமும் வேம்பு ஆம்
** 302

#26
நாயுருவி காஞ்சரி சனம் சிகிசிரம் கதிரி 
ஆய கரமஞ்சரி அபாமார்க்கம் தூய விருக்
காதனியுடன் காளசாகம் கயிடரியம் 
வேதுஇல் பன்னகந்தி கருவேம்பு
** 303

#27
வைச்ச கரடிகையே மாவிருக்கம் கள்ளியின் பேர் 
வச்சிரம் கண்டீரம் வச்சிராங்கமும் ஆம் உச்சித்
திலதமொடு பானுபத்தம் சூரியகாந்தப்பேர் 
அலர் சவிகை கோலி செவ்வியம்
** 304

#28
இருப்பை மதூகம் குலிகம் ஈந்து ஆம் கச்சூரம் 
விரைக் கடுகு ஐயவி சித்தாத்தம் உரைத்க 
கழல் இயக்கன் கச்சூரம் அக் கழலின்காய்ப் பேர் 
உழலும் கழங்கும் உரை
** 305

#29
இந்துளம் மராம் கதம்பம் நீபம் அரத்தம் கடம்பு ஆம் 
செம் திராக்கம் கோத்திரிகையுமே முந்திரிகை 
வல்ல மதுரசம் ஆம் துளசிப் பேர் துளவு 
குல்லை விருந்தம் வனம் துழாய்
** 306

#30
காயம் இலசுனம் வெள்ளுள்ளி ஆம் ஈருள்ளி 
காயம் பலாண்டு சுக்கிரந்தமும் ஆம் தோய் கிகினி 
கன்னி கவாக்கி கருவிளையும் காக்கணம் ஆம் 
பின்னர் ஆற்போடமும் அப் பேர்
** 307

#31
கன்னிகாரம் துருமோற்பலமும் கோங்கு குய
வன்னியும் ஆம் சோத்தினி கூலம் சாலி அன்ன புடோல் 
கோலொடு முத்தாபலம் குண்டலி இசங்கு கொடு
வேலி வன்னி சித்திரம் ஆமே
** 308

#32
மல்லிகை மாலதி மவ்வல் அனங்கம் புருணம் 
அல்லால் விசகலியும் ஆம் பாலை நல் ஓமை 
சீவனி சீவந்தி கிரிமல்லிகை வெட்பாலை வற்சம் 
ஆவலுறும் குடசம் ஆம் 
** 309

#33
நந்தியாவட்டம் வலம்புரி நறும் தமன
கந்தம் மருக்கொழுந்து காண் மூலகந்தம் இரு
வேலி ஆம் பீதகமும் வேரியும் ஆம் துருக்கம் 
கோல மரவம் குங்குமம் 
** 310

#34
பற்படாகம் கவசம் பைம் கேசினி சங்கம்
குப்பி குராசாணி குரசமும் ஆம் அப்பு கட
மாரி சிறுபுள்ளடி ஆம் வாயுவிளங்கத்தின் பேர் 
கேரளம் கிராதம் நிலவேம்பு
** 311

#35
குஞ்சம் குருவிந்தம் குன்றியின் பேர் ஆம் திலக 
மஞ்சாடி வஞ்சுளம் வானீரம் வஞ்சி கிஞ்சுகமே 
பூம் கவிர் முருக்கு ஆம் புரோசும் புனமுருக்கும் 
தாங்கு பலாசும் பிரமதாரு 
** 312

#36
தொண்டை விம்பம் கோவை கொவ்வை சுச்சுச் சமங்கை சுண்டில்
இண்டு புலிதுடக்கி ஈகை இங்கை கண்டூதி 
காஞ்சொறி செந்தொட்டியின் பேர் காங்கேருகம் காரை 
ஆம் சமி நெருப்பு வன்னி ஆம் 
** 313

#37
முண்டகம் கைதை முசலி மடி முடங்கல் 
கண்டல் பட்டிகை பறிவை கேதகையும் ஒண் தாழை 
பானு அருக்கு எருக்கு ஆம் பாவிரி கோளம் பசிரி 
ஈன் உலவை ஓடையின் பேரே 
** 314

#38
மாதுலங்கமே தாடிமம் பீசபூரமொடு
மாதுளமும் மாதளை ஆம் மற்று ஆத்தி தாதகி ஆர் 
சல்லதி குஞ்சரி செவ்வந்தி சதபத்திரம் ஆம் 
சில்லம் இல்லம் கதகம் தேறு
** 315

#39
ஆகுலி மேகாரி தலபோடம் இவை ஆவரைப் பேர் 
வாகுசியுடன் சோமராசியும் கார்போகம் ஆம் 
சாலம் அசுவகண்டி சுள்ளி மராப் பாடலம் புன்
காலி கன்னி பாதிரி ஆம் காண் 
** 316

#40
சண்பகம் மாலதி சாதி செண்பகம் செயலை 
பிண்டி காகோளி அசோகு ஆயிலும் ஆம் விண்ட கொத்த
மல்லி உருளரிசி தானியம் ஆம் வாசை எனச் 
சொல்வது ஆடாதோடைக்கு ஆம்
** 317

#41
கோரண்டம் பாணம் குரவகம் குறிஞ்சி கண
வீரம் கரவீரமே கவிரம் சீர் அலரி 
சீரிடம் பாண்டிலுமே வாகை நிலவாகை 
ஆரும் கமதாயம் ஆம் 
** 318

#42
பன்னல் பின்னல் காற்பாசமும் பருத்தி உத்தம
கன்னி வேலிப்பருத்தி செம்பருத்தி துன்னு சுபங்
காரி அம்பை கொக்கிறகு மந்தாரை மந்தாரை 
சார் செம்மரத்தம் சபை
** 319

#43
மாகதி காமன் கலினி பிப்பிலியும் திப்பிலி ஆம் 
வாகுறு கிராம்பு வராலம் பிருங்கம் நாகவல்லி 
பொன் திரையல் வெள்ளிலை தாம்பூலவல்லி மெல்லிலையே 
வெற்றிலை தாம்பூலமும் ஆமே
** 320

#44
பத்தியம் அரீதகி விரோசனி சிவம் கடு ஆம் 
பித்திகையின் பேரே கருமுகை ஆம் மெய்த் தோன்றி 
காந்துகம் கோடல் கோடை கார்த்திகை இலாங்கலியே 
காந்தள் இவை ஐவிரலி காண்
** 321

#45
கஞ்சா விசையை பங்கி கோரக்கமூலி குல்லை 
கஞ்சம் மதயந்தி காந்தாரியும் ஆம் மஞ்சரியும் 
பூனைவணங்கி விமலி எரிசிகையும் 
ஆன குப்பைமேனிப் பேர் ஆம் 
** 322

#46
ஞாழல் பலினி பிரியங்கு ஆம் கூதளம் கூ
தாளி ஆம் மஞ்சிகமே தாளி வள்ளை நாளிகம் ஆம் 
பைம் குளவி பச்சை ஆம் கங்குணி வாலுழுவை 
தங்கு அடகு இலைக்கறி அது ஆம் 
** 323

#47
சிக்கரி முன்னம் துரிஞ்சில் சேர் பசுநா விட்டில் பிராய் 
புக்கி பூற்சாதம் பொடுதிலை ஆம் முட்கா
வளை முப்புரமெரித்தான் வாய்ந்த சரபுங்கம் 
தளர் கொழுஞ்சி காவளை அது ஆம் 
** 324

#48
திரிவிருதையே பகன்றை கும்பி சிவேதை 
அரிமேதம் வேல் ஆம் பேயத்தி பிரமதண்டி 
விட்டுணுக்கிராந்தி அபராசி பராசிதம் ஆம் 
கட்டுகொடி சக்கராங்கம் 
** 325

#49
அறுகு பதம் தூர்வை மேகாரி மூதண்டம் 
வெறி இளம்புல் சட்பம் விதாரி பெறும் ஈறல் 
காயம் மரீசம் கலினை கோளகம் திரங்கல் கறி 
மேய மிரியல் மிளகு 
** 326

#50
ஓங்கு விரிசு அலி உத்தாலம் நறுவிலி ஆம் 
தேங்கு குறுந்தோட்டி பலை சிற்றமுட்டி தாங்கு குரு
விஞ்சி அதிபலை ஆம் வேரமுட்டி பீலு உகாய் 
மிஞ்சும் உசிரம் இலாமிச்சு
** 327

#51
வெட்டி இரிபேரம் உதீசம் பாலம் வாளகம் ஆம் 
தொட்டால்வாடிப் பேர் இலச்சகி ஆம் மட்டில் 
அரணி வைசயந்தி முன்னை அ மாவிலங்கு 
வரணி குமாரகமும் ஆம் 
** 328

#52
கொற்றான் பெயர் தீண்டமாழ்கி நந்தை என்பர் கொடிக்
கொற்றான் பேர் நூழில் இந்த்ரவல்லி ஆம் வற்றல் சரி
பாலிங்கம் கொம்பளை ஆம் தும்புரு உண்டைச்சுரை ஆம் 
ஆலாபு தும்பி சுரை ஆம் 
** 329

#53
கரந்தை முண்டி பிக்கு ஆம் குலகலம் நாறு
கரந்தை சுவதட்டம் கோகண்டம் நெருஞ்சி நமக்
காரி தொழுகண்ணி அழுகண்ணி உருதந்தி ஆம் 
ஆரை சதுப்பன்னியே ஆம்
** 330

#54
வல்லாரை சண்டகியே பிண்டீரி யோசன
வல்லி புளியாரைப் பேர் சார்ங்கேரி சொல் காக
மாசி மணித்தக்காளி சீதேவி மாலரசம் 
காசில் சகதேவி மரூகம்
** 331

#55
தான்றி ஆராமம் விபீதகம் கலித்துருமம் 
கான்ற நத்தச்சூரி கடூகம் மருதோன்றி 
சரணம் காத்தோட்டி ஆதண்டை பிரியாளம் 
மரல் அளற்கம் தூதுவளை
** 332

#56
சீந்தில் கழுசி சிவந்தி அமுதவல்லி 
போந்த சவரிக்கொத்தின் பேர் முதியார்கூந்தல் பிர
சாரணி ஆம் பச்சிலை தமாலம் பசும்பிடியும் 
ஓர் தகரத்தின்பேர் உரை
** 333

#57
பெரும்பூசணி கூழ்ப்பாண்டம் பூசணிப் பேர் 
வரும் கற்கசம் மாற்கவம் ஆம் பிரகதி 
வார்த்தாகம் கத்தரி பாகல் கூரம் காரவல்லி 
கார்க்கோடகி பழுபாகல்
** 334

#58
வங்கம் வழுதலை பாண்டாகி வழுதுணைப் பேர் 
இங்குலி முள்ளி இயல் சயந்தி சிங்கி 
சிறுவழுதலைப் பேர் சிமந்தம் குசும்பம் 
பெறு சந்திரகாவிப் பேர்
** 335

#59
வெய்ய கண்டங்கத்தரி வியாக்கிரியே கண்டகியே 
பெய் கண்டகாரி பிரகதி ஆம் செய்ய 
வசம் உக்கிரம் வசம்பு ஆம் மாசுஇல் அயிலேயம் 
மொசுமொசுக்கையின் பேர் மொழி
** 336

#60
பீரம் படலிகை கோசாதகி பீர் பீர்க்கு ஆகும் 
ஊர்வாருகமே உருவாரம் சேர் மிருது 
கற்கடியும் வெள்ளரிப் பேர் கக்கரிப் பேர் வாலுந்தி 
தக்க நுணவை தணக்கு
** 337

#61
அவரை சிம்பை சிக்கிடி நிட்பாவம் நகுலி 
துவரை மிருத்தாலகம் சுராட்டம் யவை காச்சி 
ஆடகம் மிருத்தனமே தோரையும் ஆம் பற்கு மொச்சை 
பாடவரையின் பேர் சிம்பம்
** 338

#62
வண் சணகம் மஞ்சூரம் மங்கிலி சதீரகமே 
கண்டிகம் களாயம் கடலையின் பேர் அண்டு உழுந்து 
மாடம் இதை காராமணி யாவகம் அரச
மாடம் அலசந்தி பயறு
** 339

#63
கொள் குலத்தம் காணம் சிறுபயறு சூப்பியம் ஆம் 
முற்கம் பாசிப்பயறு ஆம் மொய் சூபம் நல் பருப்பு ஆம் 
தானியப்பொதுத் தவசம் கூலம் முதிரை சிம்பி 
கூனில் பயற்றின் பொதுவாய்க் கூறு 
** 340

#64
நீர்வாளி ஆகேருகமும் சதாவரியும் 
நாராயணி நீர்விட்டானும் ஆம் சாரசுதி 
வாடிகம் திராயந்தி வாக்குபவம் சருமம் 
ஈடில் விவிதம் பிரமியே
** 341

#65
ஓமம் அசமோதம் தீப்பியம் ஆம் ஓரிலையின் 
தாமரைப் பேர் அவ்வியதம் புட்கரம் கற்றாமரைப் பேர் 
சேம்பு சகுடம் கருணை சேனை கந்தம் சூரணம் ஆம் 
கூம்பு அசுவம் ஆம் அமுக்குரா
** 342

#66
அதிவிடையம் அத்திரணம் அள்ளு சதகுப்பை 
மதுரிகை ஆம் அட்டி அதிங்கம் அதிமதுரம் 
சாரும் புனநவமும் சாரடையும் சாரணை ஆம் 
கூரும் திரிபுடையும் கூட்டு
** 343

#67
வெல் காகசங்கை வெள்ளிலோத்திரம் காயவிலை 
சொல் பாயசம் பாச்சொறி கீழ்காய்நெல்லியின் பேர் 
அற்சடை நிசாசரி ஒன்றாம் வெருகு நெட்டி கிடை 
பின் சடையும் ஆம் கிடைச்சின் பேர்
** 344

#68
கையாந்தகரை கரிப்பான் பிருங்கம் தும்பையின் பேர் 
துய்தாம் வைகுண்டம் துரோணம் ஆம் பைசாசம் 
பேய்வெருட்டி என்ப பெருந்தும்பை கவிழ்தும்பையின் பேர் 
சாயும் இந்த்ரவாருணி அது ஆம்
** 345

#69
கொட்டி கசேருகம் சாலூகம் அது ஆம் கோபாகு 
நட்டமிலாச் சாரிபமும் நன்னாரி கட்டு அமுதம் 
பூகளிந்தமும் பூமிச்சர்க்கரை ஆம் ஊர்த்தமுகி 
ஆகாயக்கத்தரி அது ஆம் 
** 346

#70
மேகநாதம் சாகம் சாகினி ஆம் கீரை முல்லை 
மாகதி கற்பு ஊதிகை மணத் தளவும் ஆகும் என்பர் 
மாலதி சாதி சுமனை சுகந்தி பிச்சி 
மூலகம் முல்லங்கி மொழி 
** 347

#71
மயிலை அனங்கம் நவமல்லிகை வசந்தி 
செயிர்இல் இருவாட்சி தில்லை தில்வம் உயர் துன்னம் 
சின்னி ஆம் மற்கடி கண்டூதி பூனைக்காலி 
பன்னியின் பேர் சந்திரி என்பார் 
** 348

#72
கோரை வராகி கொறுக்கை முத்தம் சாய் செருந்தி 
கூர் எருவை ஆம் குசம் கூச்சம் குமுதம் சார் தருப்பை 
தெற்பை விசுவாமித்திரம் குசைப்புல் காம்போசி 
பொற்பு ஆம் குதிரைவால்புல்
** 349

#73
நாணல் சரம் சரவணம் காசை மஞ்சள் நிசி 
காண் அரிசனம் பீதம் காஞ்சனி ஆம் பேணு சடி
கத்தூரிமஞ்சள் காலேயகமும் தாறுவியும் 
வைத்த மரமஞ்சள் என ஆம் 
** 350

#74
தோரை வை விரீகி செந்நெல் சாலி வரி சொல்லும் நெல் ஆம் 
ஊரை ஐவனம் கிரிநெல் ஒண் குளநெல் நீவாரம் 
சூழ் காசிநெல் யவை நெல்சூல் பொதி இளங்கதிர்ப் பேர் 
பீள் ஆம் பைங்கூழ் பயிரின் பேர்
** 351

#75
தில்லை வெள்ளை வாலி சிறைமீட்டான் பூம்பாளை துய்ய
மல்லி மணலி மங்காமற்காத்தான் நல் ஆனைக்
கொம்பன் மிளகி கொடும் நேந்திரப்பள்ளி 
வம்பு அதிக்கிராவி குறுவை 
** 352

#76
செம்பாளை காடை சிறகி சீதாபோகம் 
சம்பாப் பல முதல் நெல்சாதி ஆம் பம்பு கதிர் 
தோம்இல் குரல் ஏனல் நெல்லின்தோடு ஆம் உமி அரிசி
ஆமம் அரி தண்டுலம் என்றாம் 
** 353

#77
போர் சும்மை சூடு பொலி பொங்கழி வைக்கோல் வழுது 
பார் வை பலாலம் பதர் சாவி சேர் பதடி 
கொம்மை சண்டு ஆம் புன்பயிரின்கோல் இருவியே அருவி 
விம்மு தட்டை தாள் என ஆமே 
** 354

#78
புல் கவலை குந்திரையே புன் திரணம் நான்கு கம்பு ஆம் 
முற்றவிளை கூழ்வரகு மூகி நந்தி நல் கேப்பை 
ஆசுரம் ஆம் கங்கு இறடி ஏனல் மூன்று ஆம் தினைப் பேர் 
மாசில் சிறுதானியம் சாமை
** 355

#79
எள் எண் திலம் நூ இளஎள் குமிகை கவை 
எள்ளிளங்காய் சோளம் இறுங்கு சொன்னல் விள் வரகு 
கோத்திரவம் கோதும்பை கோதி நறுமருப்போடு 
ஆத்திரம் அல்லம் இஞ்சி ஆம்
** 356

#80
இஞ்சிவற்றலே விசுவம் நாகரம் வேற்கொம்பு சுண்டி
துஞ்சு சுக்கு ஆம் பாண்டியும் மஞ்சூகமுமே மஞ்சிட்டி 
பூலாங்கிழங்கின் பேர் காசியம் ஆம் தக்கோலம் 
கோலம் கிருதபலம் ஆம்
** 357

#81
தாயைக்கொன்றான் பகன்றை சங்கினி என்று இ மூன்றும்
ஏயும் கிலுகிலுப்பையின் பெயர் ஆம் தூய சடா
மாஞ்சி பசாசம் பூதகேசம் என ஆம் ஏலம் 
ஆஞ்சி துடி கோரங்கம் ஆம்
** 358

#82
சிற்றிலைப்பாலை திலோவன்னி குளம்கலக்கி 
நல் பறங்கிப்பட்டை சீனப்பாகே இத்தனுகி 
கற்பூரவள்ளி சிலாபேதி கனசாரவல்லி 
வற்புஇல் கணானந்தி பிரமம்
** 359

#83
முள்ளுளவை முள்ளி கண்டல் முண்டகம் அது ஆகும் நீர்
முள்ளியின் பேர் இக்குரம் காகண்டம் ஆம் முள்ளின் பேர் 
கண்டகம் கடுப் பாசி கல்லாரம் நீர்க்குளிரி 
தண் சடைச்சி சைவலம் நாரம்
** 360

#84
முண்டகம் மாலுந்தி முளரி நளினம் விந்தம் 
புண்டரிகம் கோகனகம் பூம் கமலம் இண்டை சத
பத்ரம் அரவிந்தம் பதுமமே கேகயம் பொன்
வைத்தமனையும் தாமரை 
** 361

#85
கஞ்சம் அப்புசம் வனசம் வாரிசம் சரோசம் அம்பு
சம் சலசம் பங்கசம் சரோருகமே மிஞ்சுறும் அம்
போருகமே வனருகம் சலருகத்துடன் பங்
கேருகமும் தாமரைக்கு ஆமே
** 362

#86
இப் பூ இராசீவம் இறும்பு ஆம் வராடகம் காய் 
துப்பார் சாலூரகம் சுருள் வளையம் அப் பொகுட்டுக் 
கன்னிகை பூங்கொட்டை கயிரவம் ஆம்பல் அல்லி 
அன்ன குமுதம் என்றும் ஆம் 
** 363

#87
செங்குவளை உற்பலம் அரத்தம் கருங்குவளை 
பைம் குவலையம் காவி பானல் ஆம் செங்கழுநீர் 
கோலமும் கல்லாரமும் கார்நெய்தல் இந்தீவரமும் 
நீலமும் வெண்நெய்தல் குமுதம் 
** 364

#88
தாரு நகம் சாகி குசம் தாபரம் யூகம் துருமம் 
பூருகம் தருச் சாலம் பொங்கு அடவி சேர் அகலி
யம் பாதவம் விருக்கம் அத்திரி மரப்பொதுத் தூர் 
மொய்ம்பார் சடை சிவை வேர் மூடு
** 365

#89
மூலகம் கந்தம் சகுனம் மூலம் கிழங்கு முளை 
கால் அங்குரம் ஆம் கவடு கவர் கோல் விடபம் 
கொம்பு உவை பொங்கர் இபம் கோடு கப்புச் சாகை சினை 
அம் பணை கோடரம் கொப்பு ஆம்
** 366

#90
பன்னம் தகடு அடை பலாசம் சதம் தழையே 
மன்னு பத்திரம் தலம் தமாலம் இலை மின்னு முறி 
வல்லரி அலங்கல் பல்லவம் கிசலை மஞ்சரியே 
சொல் குழை சுங்கம் தளிர் துளிர்
** 367

#91
மொக்குள் நனை போகில் முகை முகிழ் அம் கோரகை மொட்
டுக் கலிகை சாலகம் அரும்பு மலர் மெய்க் குசுமம் 
வீத் தார் அலர் பிரசூனம் சுமனசம் துடுப்பு 
பூத் தாமம் புட்பம் இணர் போது
** 368

#92
பூவிதழ் தோடு ஏடு தளம் புல்லி புறவிதழ் உட்
பூவிதழ் ஆம் அல்லி பழம்பூத் தேம்பல் மேவு செம்மல் 
சாம்பல் பிஞ்சு பேசி சதாலம் வடு ஆம் தீவிளி காய் 
பூம் பழம் பலன் கனி பூரம்
** 369

#93
வித்துக் குருப் பரல் காழ் வீசம் அத்திக் கொட்டை விதை 
தொத்துடனே மஞ்சரி மலர்த்திரள் பூங்கொத்து ஆம் பூந்
தாது துணர் மகரம் கொங்கு ஆம் பராகம் அத் தூள் 
தீதுஇல் மகரந்தம் மலர்த்தேன்
** 370

#94
செங்கனியின் மேல்தோல் செதிள் ஆம் தை நாறு கன்று ஆம் 
பைம் குருத்தின் நாமம் பயின் முருந்து ஆம் செம் குறுங்கோடு 
அண்டு வளார் கம்பு அகக்காழ் ஆண் புறக்காழ் பெண் அலிப் பேர் 
மிண்டு கொடுவல் வெளிறு
** 371

#95
நார் துவக்குப் பட்டை தொலி வற்கலம் மரத்தோல் ஆம் 
ஓரும் நிரியாசம் உகளி வளன் சேர் பிசின் ஆம்
வீழ் சுவரோகம் விழுது ஒட்டுப் புல்லுருவி
தாழ் உரம் மரப்பொடி அது ஆம் 
** 372

#96
உலர்மரம் வானம் வானப்பத்தியமே கோளி 
மலரிலி ஆம் காய்ப்ப பலினம் பலமொன்
றிலி பழி பகேசிகை ஆம் ஈர்ம் படுக் குறும்பு 
குலை தாறு சாறு குச்சம் கொத்து
** 373

#97
இலை கனி காய் பூ அடி காம்பு ஈர்க்கு நரம்பு ஆம் 
நிலை அசரம் தாபரப்பொதுப் பேர் மலி மூலி 
மூலிகை முளைத்தவை நெய்யுள்ள விதை முத்து அரிசி 
பாலுடைய முத்துட்பருப்பு 
** 374

#98
சேகு கலை ஆசினி காழ் திண் வயிரம் வல்லி வள்ளி 
ஏகும் இலதை இரத்தியும்  மா கொடிப் பேர் 
பூடு செடி புதல் ஆம் யோகம் அதகம் குளியம் 
சாடு உறை மருந்து அவிடதம்
** 375

#99
கொன்ற கருவிப்புணொழிக்கும் சல்லியகரணி 
கன்றாச் சந்தானகரணி துண்டம்ஒன்றல் விர
ணம் சீய்க்கும் சம்மானமாம்கரணி தான் அமிர்த 
சஞ்சீவினி உயிரீதல்
** தாவர வுயிர்ப்பொருள் வர்க்க முற்றும்

@3 அஃறிணை யுயிரில்பொருட் படலம் 

@31 இயற்கைப் பொருள் வர்க்கம் 
** 376

#1
வித்தம் இரணியம் சாமீகரம் ஈழம் சுவணம் 
கைத்து அரி பீதம் பீதகநம் தங்கம் மெய்த் தமனி
யம் சந்திரம் முகரி ஆசை பொலம் மாசை கன
கம் சாதரூபம் வேங்கை
** 377

#2
மாடை சொன்னம் தேசிகம் ஏமம் சாமி சாம்புனதம் 
ஆடகம் காஞ்சனம் கல்யாணம் உரை மாடு ஈகை 
காரம் செந்தாது நிதி காணம் நிதானம் பூரி 
பூரியமும் பிங்கலமும் பொன்
** 378

#3
துள் இரசதம் தாரம் சுல்லுக் களதபுதம் 
வெள்ளி உரூப்பியம் வெண்பொன்னும் ஆம் வெள்ளீயம் 
சீசம் காரீயப்பேர் நாகம் ஈயப்பொதுப் பேர் 
ஆசுஇல் வங்கம் வெண்கலம் கஞ்சம்
** 379

#4
இரவி உதும்பரம் இராசிவடுச் சுற்பம் 
எருவை செம்பு தாம்பிரம் இரும்பின் வரு தெளிவு 
தீக்கணம் இரேகு எஃகு உருக்கு ஆம் இதைத் தெளிவே 
ஆக்கினது ஒழுக்கறை என்று ஆம்
** 380

#5
தரா மதுகம் பித்தளை மாயாபுரி ஆர்கூடம் 
இரதியுடன் சீருணம் இரும்பே கரும்பொன் அகி 
சொன்னல் பசாசம் அயம் இப் பொதுக் கொல் சீருள் சிக்கம் 
மன் உலோகம் தாது ஆம்
** 381

#6
செம்பு இரும்பு ஈயம் பொன் வெள்ளி ஐம்பொன் வெண்கலம் தரா 
ஐம்பொன் உறின் ஏழ்தாது ஆம் பித்தளை சேர்த்து ஐம்பொனில் சொல்
ஈயம் இரண்டு ஆக்கின் நவலோகம் உலோகக்கட்டி
ஆயதின் பேர் மாழை தகணம்
** 382

#7
வர நிமிளை தாப்பியமே மாக்கிகம் மண்டூரம் 
முரணு கிட்டம் சண்டாளம் முண்டம் பொருள் அருத்தம் 
அத்தம் நிதியம் திரவியம் தனம் பணம் தரிப்புச் 
சொத்து ஆத்தி காசு முதல் சொம்
** 383

#8
மாமணி சிவப்பு மாணிக்கம் மரகதமே 
ஆம் அரி பச்சை வச்சிரம் வயிரம் தாம் வால
வாயம் வயிடூரியம் முத்து ஆரம் மெளத்திகம் தரளம்
ஆய் நித்திலம் மணி நீலம்
** 384

#9
புட்பராகம் கவுத்துவம் பதுமராகம் ஆம் 
துப்பு அரத்தம் பிரவாளம் துகிரே வில் பவளம் 
வித்துருமம் துவர் ஆம் மேதை கோமேதகம் ஆம் 
நத்துமணி அக்கு மனவு ஆம்
** 385

#10
சம்பகம் இரும்புணி சலாகை மூன்றும் காந்தம் 
அம் பொன் மெழுகு அரக்கு இலாக்கை ஆம் உம்பர்மணி 
சிந்தாமணியே தியாகமணி வாரீசம் 
வந்த நிட்சேபம் புதையல் வைப்பு
** 386

#11
அக்கு மனவு ஈசன்மணி ஆம் உருத்திராக்கம் கா
விக்கல் செங்கல் காருகம் தாது ஆம் படிகம் நல் காழ் 
பருக்கை பளிங்கு ஆம் மனவு காசு அரதனம் கல் 
இரத்தினம் சலாகை மணியே
** 387

#12
நிதிப் பேர் நிதானம் இருநிதிப் பேர் சங்கம் 
பதுமம் நவநிதிப் பேர் சங்கம் பதுமம் முகுந்
தம் கச்சபம் மகரம் நீலம் மகாபது
மம் குந்தமே வரதம் ஆம்
** 388

#13
பண்ணிகாரம் பரிகாரம் பண்டாரம் கூலம் 
பண்ணியம் வளம் தாரம் பண்டம் வத்து ஆம் சுண்ணம் தூள் 
பூழி இரேணுப் பொடி துகள் புழுதி ஆம் களபம்
தாழ் சுதை மண் சுண்ணச்சாந்து ஆம்
** 389

#14
அடலை பலி சாம்பல் காப்பு ஐசொரியம் சாந்தம் 
பொடி ஏமம் புண்ணியம் விபூதி இடு நீறு ஆம் 
பண்ணு செச்சை தேய்வை களபம் சாந்து காலேக
வண்ணம் விரைக் குப்பி கலவை
** 390

#15
மான்மதம் கத்தூரி சசி வண் கனசாரம் பளிதம் 
கான் கற்பூரம் புழுகு கான்மீரம் தான் மயிர்ச்சாந்து 
ஏலம் தகரமொடு காசறை பீதம் கலவை 
சால் வட்டிகை புலி நால் சாந்து 
** 391

#16
சிந்துரம் சிலேகம் நுதல்தீட்டுகுறி புண்டரம் பொட்டு 
அம் திலகம் திலதம் ஆம் முலைக்கோலம் தானே 
தொய்யில் அரிசி மஞ்சள் தோய்த்து அணிவது அச்சுதம் ஆம் 
பைய அலத்தகம் செம்பஞ்சு
** 392

#17
வன்பறு தூலம் பருத்திப்பஞ்சு ஆகும் பூளை இல
வின் பஞ்சு ஆம் துய்யே பஞ்சின்துடர் ஆம் மென்பஞ்சை 
நூற்கத் திரட்டியது கொட்டை விடம் பாடாணம் 
ஆக்கு இடங்கணம் பொரிகாரம்
** 393

#18
வந்தனி கோரோசசை ஆம் வல்லீகமே இரணம் 
சந்துநாசம் பூதநாசம் இங்கு கந்தி அத்தி
யாக்கிரம் இராமடம் பெருங்காயம் ஆம் பேனம் 
நீக்கு கம்பி மோகி அவினே
** 394

#19
குங்குலுச் சடாயு குந்துருக்கம்  சிவை கவுசி
கம் குற்குலுத் துர்க்கை சீதாரி குங்கிலியம் 
சற்சரசம் தூபம் இவை சாம்பிராணிப் பெயர் ஆம் 
கற்பூரம் தீபம் சூடன்
** 395

#20
விந்து இனிமை சூதம் சிவம் பாரதம் இரதம் 
கெந்தகம் நாதம் பலியே நாறி சத்தி முந்து சிலை 
மாணார் குநடி மனோசிலைப் பேர் ஆம் கபிலை 
ஏணகம் அரேணுகம் ஆமே
** 396

#21
பீதகி ஆலம்பி பிஞ்சனம் தாளகம் பழுப்புக் 
கோதந்தம் மாலம் அரிதாரம் சாதிலிங்கம் 
இங்குளம் தாதம் சூதவாதிகத்துடன் குலிகம் 
இங்குலிகம் ஐந்தும் இசை
** 397

#22
துத்தம் இரஞ்சனம் சீபலி கற்பரி ஆம் 
மைத் துரிசு நீலி மயூரி சிலாசித்துச் 
சயிலேயம் கன்மதம் கன்னார் கிரிசம் நாபி 
அயிலா விடம் மிருதம் ஆம்
** 398

#23
உப்பு இலவணம் படு உவர்ப்பு உருசி என்றாம் இந்
துப்புச் சயிந்தவம் என்று ஓர்க வெடியுப்புச் 
சுராகாரம் சீனக்காரம் படிகி வஞ்சி 
நிராவு துகமும் கூகைநீறு 
** 399

#24
முருடு இடுகு அறல் சமிதை கட்டை முளரி 
எரி ஞெகிழி காட்டம் இந்தனம் தான் முரி விறகு ஆம் 
கந்துள் இருந்தை நல்லம் ஆம் கரி கடைக்கொள்ளி 
தந்திடும் இராதம் இலாதம்
** 400

#25
பொம்மல் பதம் பாத்து அமலை ஓதனம் புழுக்கல் வல்சி 
அம் மிதவை சாதம் அடிசில் புகா வெம் மூரல் 
புன்கம் அமுது அன்னம் மடை போனகம் பாளிதம் 
சொன்றி நிமிரல் உணாச் சோறு
** 401

#26
துப்பு அசனம் போசனம் ஊண் துற்றி மிசை பக்கணம் கூழ் 
செப்பு அயினி உண்டி தின்ப திற்றி தீன் அப் பொதிசோறு 
ஆற்றுணாத் தோட்கோப்பு அவி பலி சருத் தேவர்க்கு 
ஏற்று உணவு ஆம் வெந்தை பிட்டு ஆமே
** 402

#27
பாயசம் பால்சோறு கறி பாகு துவை சசியம் 
தோய் குழம்போடு ஆணமும் ஆம் தூய் பொரியல் பாய் கருனை 
காடி புற்கை மோழை யவாகு அரக்குக் கூழ் கஞ்சி 
பீடுஇல் பேருண்டி பெருப்பு
** 403

#28
மிச்சில் எச்சம் சேடம் மிகை மிஞ்சுபொருள் உச்சிட்டம் 
எச்சில் பிண்ணாக்குத் துவை மலாவகமே ஒச்சை வறை
யற்கு ஆம் சிற்றுண்டி அபூபம் அஃகுல்லி 
உக்காரி சட்குலி முறுக்கு 
** 404

#29
அப்பமே நோலை கஞ்சம் அண்டகை யூபம் தோசை 
பப்பரம் இலட்டுகமே தோய்வை அடை செப்பு தில
புஞ்சம் ஆம் எள்ளுண்டை புள் விலங்கின் ஊண் குளகு 
மிஞ்சு முறை இரை ஆமே
** 405

#30
தோய்வை முறுக்கு அப்பம் அடை தோய்ப்பன் அதிரசம் பிட்
டேயும் அவல் இட்டவி எள்ளுண்டை பொரி ஆய் சீடை 
மொக்குழி தேன்குழல் முந்திரிகைக்கொத்து மா 
உக்காரி ஆதிகள் சிற்றூண்
** 406

#31
நொடிது அரில் அருப்பம் நுணவை பிண்டி மா ஆம் 
இடியும் ஆம் வெண்பொரி இலாசம் தொடு கலிக்கம் 
அஞ்சனம் மை நாசிமருந்து ஆம் நசியம் சம்பாரம் 
வெஞ்சனம் கறிக்கூட்டு ஆமே
** 407

#32
பால் பயம் கீரம் பயசு பாகு அமுது துத்தமும் ஆம் 
சாலும் பெருகு ததி தயிர் ஆம் மேல் அருப்பம் 
மற்சிகை கலாயம் மதிதம் அளை தக்கிரம் மோர் 
அற்செறி தண்டாகதமும் ஆம்
** 408

#33
நெய் கிருதம் ஆச்சியம் துப்பு ஆகாரம் நேயம் அவி 
பெய் இழுது சர்ப்பி வெண்ணெய்ப் பேர் கவினம் ஐயம் நவ
நீதமும் ஆம் எட்டயிலம் எண்ணெய் தயிலப்பொது நெய் 
காதல்செய் நேயம் சினேகம்
** 409

#34
மற்சண்டி தேன்பாகு வானிதம் மணற்பாகு 
கற்கண்டு கண்டவிகாரமொடு நல் கண்டு ஆம் 
சர்க்கரை குளம் விசையம் கட்டி அயிர் கண்டம் வெல்லம் 
அக்காரம் பாளிதம் புல்லம்
** 410

#35
கானுறு பனாட்டுப் பனங்கனிச்சாறு அட்ட கட்டி
சீனி பஞ்சதாரை மதுத் தேம் பிரசம் வான் முருகு 
நாறு நறை மாக்கிகம் கவுத்திரம் கள் வேரி நறாத் 
தேறல் மகரந்தம் மட்டுத் தேன்
** 411

#36
மாலி கவ்வை குந்தி வெறி மாரி சுரை சுண்டி தொண்டி 
சாலி நனை இக்கு ஆம்பல் சாயனம் சுமாலி பிழி 
சாறு அரிட்டம் மேதை தொப்பி சாதி முண்டகம் தணியல் 
சேறு அரியல் நாளி மந்திரம்
** 412

#37
சொல்விளம்பி ஆவேசம் சோமம் சுகிவை வெடி 
வல் விகுனி பாடலியே மாதவமே வெல் அரக்கு 
மத்தியம் சுயோகி மதுரை மறவி கள் ஆம் 
அத் தேனின் பேரும் இதற்கு ஆம்
** 413

#38
வெம் களம் காளம் கரளம் ஆலம் மிருதம் காரி 
சிங்கி விழம் ஆலாலம் ஆலகாலம் கடுவே 
நஞ்சம் விடம் ஆம் சுதை பீயூடம் மருந்து அமரி 
சஞ்சலம் தீர் தேவாமிர்தம்
** 414

#39
வற்றல் உணக்கும்பொருள் ஆம் வண் கசரி சம்மந்தி 
நல் துவையல் பச்சடி வேவாது அடுதலுற்ற கறி 
சீரின் மசரதம் பொய்த்தேர் மரிமரீசிகை பேய்த்
தேர் வெண்தேர் கானல் பாழ்த்தேர்
** இயற்கைப் பொருள் வர்க்க முற்றும் 
** 3 அஃறிணை யுயிரில்பொருட் படலம் 

@32 செயற்கைப் பொருள் வர்க்கம் 
** 415

#1
கொய் நவியம் தண்ணம் பாலம் குளிர் கணிச்சி பரசு 
எய் மழுக் காளம் கழுமுள் மூவிலைவேல் பெய் சூலம் 
சூழ் பருதி நேமி சுதெரிசனம் எஃகம் வளை 
ஆழி திகிரி சக்கரம் 
** 416

#2
ஞாங்கர் சத்தி எஃகு அயில் உடம்பிடி வேல் நாட்டம் அசி 
தாங்கு உவணி மட்டாயுதம் கண்டம் வாங்கு ஏதி 
நாந்தகம் கண்டகம் கோணம் கட்கம் தூவத்தி 
வாய்ந்த வசி வஞ்சம் நவிர் வாள் 
** 417

#3
கக்தி கரவாளமும் வாட்கு ஆம் வேதினம் கர
பத்திரம் ஈர்வாள் உடைவாள் பைம் சுரிகை வைத்த 
குறும்பிடி ஆம் அரிவாள் புள்ளம் கொடுவாள் 
இறும் குயம் ஆம் ஈட்டி விட்டேறே 
** 418

#4
கழுமுள் கழுப் பரிமுகம் கணையம் என்பது
எழு ஆம் படைவட்டம் பாராவளையம் ஆம் 
மெய் பீலி தண்டு பிண்டிபாலம் இருப்புமுட்கும் 
கைவேற்கும் ஆம் கப்பணம்
** 419

#5
தறிகை கணிச்சி உளி தட்டை தழல் கிள்ளை 
கறிகோல் குணில் கோல் கதை தண்டு எறுழ் தடி ஆம் 
தோமரம் குந்தம் சவளம் சொல் குளிர் குணில் பவணை 
காமர் ஒடிசில் கவண்
** 420

#6
ஊசியின் பேர் சூசி ஊசித்துளைப் பேர் பாசம் நா
ராசம் சலாகை எழுத்தாணி கண்டம் ஊசியும் ஆம் 
அச்சின் வயிரம் மசனி சதகோடி
வச்சிரஞ்சம் பங்குலிசம் ஆம்
** 421

#7
நவியம் குடாரம் கோடாரி ஆம் கன்னம் 
கவர்களை இரும்பு ஆம் துரோட்டி அவிர் தோட்டி 
கோணம் அங்குசம் தான் குளிர் முலை மூக்கரிவாள் 
காண் எழுதுகோல் துகிலிகை
** 422

#8
கொட்டு ஆம் மண் வெட்டி கொழுக் கோள் கூடம் சம்மட்டி 
பட்டடையின் பேர் அடை ஆம் பற்றிரும்பு கட்டு பொறி 
அள்ளு ஆம் முருகு குறடு ஆம் துவக்கு இடங்கணியே 
விள்ளு தொடர் சங்கிலி ஆமே
** 423

#9
கார்முகம் காண்டீபம் சாபம் சிலை சிங்காணி சிந்து
வாரம் கொடுமரம் துரோணம் முனி கூர் தடி கோ
தண்டம் சராசனம் வேணுத் தனு வில் ஆம் சார்ங்கம் 
விண்டுவில் பினாகம் அரன்வில்
** 424

#10
நாரி தொடர் சிஞ்சினி நரம்பு ஆவம் பூட்டுவடம் 
பூரி குணம் நாண் ஆம் அம்புக்கூடு சேர் ஆவ
நாழிகை ஆவம் தூணி நல் குதைப் பேர் குப்பி புங்கம் 
நீள் விற்குதை குலை என்னே
** 425

#11
தோணி சரம் ஆசுகம் உரோபம் தொடை கதிரம் 
பாணம் விசிகம் சாயகம் பகழி காண் வாளி 
பத்திரம் ஏப் பூதை புங்கம் பல்லம் கோ மாற்கணம் கோல் 
அத்திரம் சிலீமுகம் வண்டு அம்பு
** 426

#12
அம்புக்கட்டுப் புதை புழுக்கு ஆம் மொட்டம்பு உதண்டம் 
அம்பீர்க்கு உடு சிறகு காம்பு ஆம் கட்டும்பாசம் 
பற்றாக்கை சத்திரம் விடாப்படை விடும்படையே 
அத்திரம் கைக்கட்டுறை கோதை 
** 427

#13
ஆயுதப்பொதுக் கருவி தானை படை ஏதி துப்பு ஆம் 
பாய் தடறு புட்டில் படையுறை ஆம் காய் கூர்மை 
வை அயில் பூ எஃகு வடி வள்வெள் வசி நிசியே 
பெய் தீக்கணம் முனையின் பேர்
** 428

#14
ஆசு அரணம் சாலிகை சடாரி பரம் கச்சை கண்டம் 
காசுஇல் பருமம் தளம் மெய்க்கு ஆம் கவசம் கோசகமே 
சாத்தும் சிரகம் தலைத்திராணம் புருடர் 
வேய்த்த பதப்பூண் கழல் ஆமே
** 429

#15
தட்டு வட்டம் வேதிகை தோல் தண்டை கடம் சேடகம் த
கட்டம் பரிசை பலகை கிடுகு வட்டணமும் 
கேடகம் ஆம் சட்டம் கிடுகின் பேர் ஆம் முருகு 
கோடிகம் பூத்தட்டின் பேர் கூறு
** 430

#16
வெம் புனை சிருங்கலை விலங்கு நிகளம் தளை ஆம் 
கொம்பு இரலை ஆம்பல் வயிர் கோடும் ஆம் நன் பரணி 
கோய் சிலாவட்டம் சாணைக்கல் குழாய் தண்டு ஆரை 
பாய் கந்துகம் குதமும் பந்து
** 431

#17
சூடிகை கிரீடம் மகுடம் சுடிகை மோலி முடி 
கோடகம் தாமம் பதுமம் கிம்புரியே நீடு 
மகுடம் முடியுறுப்பு அ மாலை கரோடி 
திகழ் தெய்வவுத்தி திரு
** 432

#18
தொய்யகம் தலைப்பாளை தொங்கல் உத்தி பிஞ்ஞகமே 
செய் தலைக்கோலம் சேகரமும் ஆம் பெய் நுதல்பூண் 
சூட்டு இலம்பகம் புல்லகம் ஆம் சுடிகை சுட்டி 
நாட்டும் அரைஞாண் இரதனம்
** 433

#19
ஏழ்கோவை மேகலை எண்கோவை கலாபம் காஞ்சி 
தாழ் பருமம் ஈரொன்பான் தாமமே சூழ் பதினாறு 
எஞ்சா விரிசிகை நாலெண்கோவை தோரை கலா
பம் சரிமணிப் பேர் பகர்
** 434

#20
அரியகம் குடச்சூல் அரவம் ஞெகிழி 
பரிபுரம் நூபுரம் சிலம்பு ஆம் பரல் அரி ஆம் 
பாதகடகம் பாடகம் சதங்கை கிண்கிணி ஆம் 
பாதசரம் பாதசாலம்
** 435

#21
வீகம் விரல்பூண் ஆழி மோதிரம் இலச்சினையும் 
ஆகும் செவிப்பூக் கன்னாவதஞ்சம் தோய் குணுக்குக் 
கம்பியுடன் வல்லிகை கடிப்பிணையும் காதணிப் பேர் 
வம்புஇல் அரைப்பட்டிகை மனா
** 436

#22
சூடகம் சங்கு கன்று வண்டு தொடி பிடிகம் 
சாடு குருகு ஏழும் வளை தாடங்கம் தோடு குழை 
குண்டலம் கேயூரம் அங்கதம் தோள்வளை ஆரம் 
கண்டிகை மதாணி பதக்கம் 
** 437

#23
கடகப்பேர் கண்டிகை கங்கணம் கடைப்பூண் 
மடை கயில் ஆம் தாமம் மணியின்வடம் சரம் காழ் 
ஆரமும் ஆம் கற்களழுத்துகுழி கேவணம் ஆம் 
சார்புறும் பூணூல் உபவீதம்
** 438

#24
ஆபரணம் பூடணம் பூண் ஆரம் அணி பண்டம் இழை 
மா பணி கலன் கணியே வள்ளி நகை சேர் வயிரம் 
தாங்கி பூண் கோளகையும் கிம்புரியும் ஆம் தாலி 
ஓங்கு நாண் மங்கிலியம் ஓது
** 439

#25
வட்டில் சிக்கம் கிண்ணம் கோரம் கடிகை வள்ளம் வட்டில் 
தட்டம் தாலம் பாசனம் தளிகை தொட்டு உண்
கலம் ஆம் தவி அகப்பை காண் சட்டுவப்பேர் 
திலகம் ஆம் பேழை மஞ்சிகை
** 440

#26
சேகண்டி சேண்டி எறிமணி சின்னம் பீலி 
காகளம் காளம் தாளம் பாண்டில் கஞ்சம் ஆகும் இவை 
கைமணி அடிக்குமணி கண்டை பரந்த வட்டக்
கைமணியின் பேர் படலிகை
** 441

#27
பீடிகை துமாணம் காண்டம் கண்டிகை கடிப்பம் 
கோடிகம் பூண்கொள்கலன் ஆம் கூடை இறை கோடிகமே 
கெண்டி கடபமும் ஆம் கேழ்க் கரண்டகம் கரகம் 
குண்டிகை கமண்டலப்பேர் கூட்டு
** 442

#28
தர்ப்பணம் ஆடி ஒளிவட்டம் முகிர்தம் அத்தம் 
கைப் படிமக்கலம் கஞ்சனம் நல் புளகம் 
கண்ணாடி ஆம் கஞ்சனை கலசப்பானை ஆம் 
நண் அம்மனை அம்மானை
** 443

#29
தாலம் உக்கம் கால்செய்வட்டம் தண் விருந்தம் ஆலவட்டம் 
பீலி சாந்தாற்றி விசிறியும் சிற்றாலவட்டம் 
வீசனமும் ஆம் ஓரை மின்னாராடும்கலன் ஆம் 
ஊசல் உஞ்சல் ஊஞ்சல் உரை
** 444

#30
தொங்கல் பிச்சம் ஆதபத்ரம் சத்ரம் கவிகை குடை 
கங்கம் சிக்கம் சீப்பு ஆம் கச்சம் அம்பணம் குளகம் 
தூம்புகால் நாழி படி குஞ்சம் தூக்குச் சிமிலி 
ஓம்பு சிதர் சிக்கம் உறி
** 445

#31
சிங்காதனம் பத்திராசனம் ஆம் பாரி பரி
யங்கம் மஞ்சம் பாண்டில் கட்டில் ஆம் தளிமம் பொங்கு பஞ்சி 
மெத்தை அணை ஆம் பீடம் விட்டரம் பீடிகையே
நத்தும் தவிசு ஆசனம்
** 446

#32
கொட்டை உபதானம் தலையணை ஆம் கூர் தவிடு 
முட்டை முடை நொய் நொறுங்கு ஆம் மூழிவாய் பெட்டி ஆம்
மஞ்சிகமும் ஆம் துடைப்பம் சோதினி மாறு ஆம் சுருக்குச் 
செம் சுருவை நெய்த்துடுப்பு அதே
** 447

#33
படியகம் காளாஞ்சி படிக்கம் தீபமுட்டி 
தடவு இந்தளம் பழுதை தாமம் வடம் பாசம் 
தாம்பு இரச்சு அக்கம் புரி நாண் கச்சை கயிறு ஆம் இழை தந்து 
ஆம் பனுவல் சூத்திரமும் நூல்
** 448

#34
சாலம் வலை அவ் வடம் மாசு ஆம் மதலை கந்து நிலை 
கால் எழுத் தாணுத் தறி தூண் குற்றி கம்பம் மால் யானைத்
தூணும் தயிர்கடையும் தூணும் வெளில் யூபம் மகத் 
தூண் போதிகை குறிய தூண்
** 449

#35
அம்மி அரைகல் குழவி பற்றியரைக்கும்கல் குழி
யம்மி கலவம் குழிகல் ஆம் மூடை பம்மு குகை 
மூட்டை பொதியல் ஒன்றில் கட்டியே தாக்குகின்ற 
மூட்டை உடோளாயம் ஆம்
** 450

#36
உலக்கை முசலம் தடி உரல் கறை உலூகம் 
மெலிப்புஇல் திட்டை மூன்றாம் வெளிசம் வலித் தூண்டில் 
ஏணியொடு சேணி இறவை ஆம் மால்பே கண்
ணேணி பிழா இடாவே
** 451

#37
கோடி பஞ்சி தானை படாம் கோடிகம் இலக்கரம் பட்டு 
ஆடை கலை சம்படம் ஆசாரம் மடி சாடி புட்டம் 
தூசு உடை உடுக்கை துகில் சூடிகம் வட்டம் சீரை 
வாசம் கலிங்கம் அறுவை 
** 452

#38
அம்பரம் கூறை இடையல் வேடகம் வேத
கம் பரிவட்டம் காழகம் கோசிகம் புடவை
நீவியம் நாகம் பாரி நேத்திரம் பாளிதம் காம்பு
ஆவல் வத்திரம் சீலை ஆம்
** 453

#39
உத்தரிகம் ஏகாசம் உத்தராசங்கம் உல்லா
சத்தின் பேர் அத்தவாளம் வடகம் பொத்தகமே
சித்திரப்படாம் நீவி கொய்சகம் முன்றானை தொக்கை
கொத்தான போர்வை மீக்கோள்
** 454

#40
வட்டுடை வார் பட்டிகையே வம்பு விசிகை கச்சு ஆம்
தொட்ட குப்பாயம் காஞ்சுகம் வரணம் சட்டை அங்கி 
கஞ்சுகம் மெய்ப்பை எழினி காஞ்சம் அவிடி கண்டம்
கஞ்சிகை திரைப்படாம் காண்
** 455

#41
கம்பலம் சிம்புளி கம்பளம் மேற்கட்டி விதா
னம் படங்கு வானி குஞ்சம் நல் தலைப்பு ஆம் பம்பு இறைஞ்சி
வற்கலை சீரை மரவுரி மயிர்ப்படாம்
தைக்கும் வயிரம் சூழி தான்
** 456

#42
கத்திகை விலோதனம் தோகை இடக்கயம் படங்கு
சத்தி விடங்கம் படம் பதாகை கொடி மெய்த் துவசம்
வானம் இடால் கேதனமும் ஆம் சும்பு வாக்கி குச்சு ஆம்
ஆன மத்து மூழி மூழை
** 457

#43
சேட்டை தட்டு முற்றில் முறம் சின்னம் சூர்ப்பம் சுளகு ஆம்
காட்டளி கிழார் ஆம்பி காராம்பி பூட்டை ஆம்
வார் துணி வள் கண்டம் வகிர் கடிகை துண்டம் அது ஆம்
ஆர் துணி சிதார் சிதவல் ஆம்
** 458

#44
சொல் கவறு வல் கழங்கு சூது ஆம் ஆயம் தாயம்
வெல் சாரி நாய் ஆம் மிதியடி பாவல் கழலும்
பாதுகை அக் கொட்டை குடை பாதம்காப்பு செருப்பு ஆம்
பாய் துருத்தியே சிவிறி பந்து
** 459

#45
கொல்லுலைமூக்கு குருகு சிவை அத் துருத்தி
வல் உதி அத்திரி ஆம் மத்திகையே நல் விளக்குத்தண்டு
கவுசிகம் ஆம் சாடு உரு சாகாடு ஒழுகு
பண்டி வையமும் சகடு என்பார்
** 460

#46
பண்டியுள்இரும்பு இருசு கந்து ஆம் பல்லக்கு அணிதம்
தண்டிகை ஆந்தோளிகம் யானம் சிவிகை ஒண் பள்ளி
மஞ்சிகையும் ஆம் ஊர்தி வாகனம் வையம் பாண்டில்
கஞ்சிகை தேர் பாடை வெள்ளில் காண்
** 461

#47
தேர் இரதம் எந்த்ரம் அரி செந்தனம் வையம் குயவு ஆம்
ஆர் கதிர் ஆம் நேமி சில்லி ஆழி உருள் பாரியம் கால்
உந்தி பருதி உதரி வண்டில் தேர்ச்சுற்று
முந்து கிடுகு ஆம் கூம்பு மொட்டு
** 462

#48
நாப்பணும் தட்டும் தேர்நடு கொடிஞ்சி கூவிரம் தேர்ப்
பாப் பெயர் ஆம் தோட்டி கபாடம் புதவு காப்பு ஆரி
வாரி கதவு ஆம் தாழ் சீப்பு கடிப்பு ஆம் வட்டிகையே 
சீர் ஓவியம் சித்திரம்
** 463

#49
ஏடு சுவடி இலேகம் புத்தகம் ஆம் வெள்
ளேடு உடன் அலேகம் எழுதாச்சுவடி ஏடுஅதின் மேல்
பட்டை கம்பை என்பர் பசுத்தீண்டுகுற்றி கண்டூயம்
கட்டு அசை துலாம் துலை தூக்கு ஆம்
** 464

#50
வீணை கின்னரம் கருவி யாழ் விபஞ்சி கோடவதி
பேணு கலம் தண்டு ஆம் பிரடை முறுக்காணியின் பேர்
மாடகமும் ஆம் வலிக்கட்டு திவவு ஆம் வன் துயரி
நாடி குரல் தந்திரி நரம்பு
** 465

#51
பேரியாழ் செங்கோட்டியாழ் பின் சகோடயாழ்
வார் மருதயாழ் நால்வகை யாழ் ஆம்  வாரியுடன்
வங்கியம் இசைக்குழல் ஆம் வாத்தியம் மேளம் பறை கொட்டு
அம் கோடணை முரசு இயம்
** 466

#52
தொண்டகமே துடியே பம்பை கிணை சாபறை நேர்
கொண்டு ஐந்திணைப் பறை ஆம் கூர் பவணம் திண்டி ஆம்
மொந்தை பதலை திண்ணம் ஓர்கண்பறை முழவு
தந்த குளிர் முட்டு மத்தளம்
** 467

#53
தண்ணுமை நிசாளம் ஆம் தட்டை கரடிப்பறை ஆம்
திண் இடக்கை ஆமந்திரிகை ஆம் நண்ணு நந்தி
பேரிகையும் துந்துமியின் பேர் ஆனகம் படகம்
சார் திமிலை சல்லரிப் பேர் தான்
** 468

#54
குறியபறை ஆகுளி குடப்பறையே பன்றிப்
பறை தூரியம் மணப்பறைப் பேர் அறை தமரு
கம் துடி உடுக்கை கடிப்பு குணில் ஆம் மண் பரிணம்
இந்து இரண்டும் மார்ச்சனை ஆமே
** 469

#55
பாதை வங்கம் பஃறி அம்பி பாரதி சதா மதலை
போதம் மரக்கலம் நாவாய் யானம் ஈது கப்பல்
தோணி ஓடம் திமிலி தெப்பம் மிதவை புணை
காணும் படுவை பட்டிகை
** 470

#56
இ மரக்கலப்பாய் இதை ஆம் விசிப்பு அரி ஆம்
சும்மாடு அடை சுடுவுடன் சுமடு சும்மை சுமை
ஏர் தொடுப்பு அலம் படை வாள் இன் கலனை நாஞ்சில் இவை
கூர் கலப்பை மேழியும் அக் கூற்று
** 471

#57
செற்றை மயல் சோதனி துரால் நரல் சிக்கு காடு ஆம்
பற்று கலம் பாத்திரம் பாண்டப்பொதுப் பேர் முற்று அகளம்
தாழி தளம் பதலை சாடி ஆம் சராவமுடன்
ஆள் சுத்திகையும் அகல்
** 472

#58
குடங்கர் குணம் தாலி கடம் கும்பம் கலசம்
இடங்கர் குடம் பாண்டில் இடிஞ்சில் சுடர்த்தகழி
சட்டி விசனை கிடாரம் தலிசு கொப்புரி ஆம்
நட்டு இரக்கும் ஓடு கடிஞை
** 473

#59
சீகரம் கன்னல் சிரகம் தற்கரி நுவற்கரியும்
மா கரகம் மந்தனி தயிர்த்தாழி பாய் குழிசி
தாங்கு உறை கரீரம் தடா மிடா பானை குண்டம்
வான் குடுவைக்கும் குண்டம் ஆம்
** 474

#60
மொந்தை நீருண்கலன் உலாமி உலைமுடி செய் கூடு
உந்து குயிலாயத்துடன் பஞ்சரம் தான் புள்
கூடு குடம்பை கட்சி கூண்டு ஆம் குதிர் புகல் காற்
றாடி கதலி கறங்கு ஆம்
** 475

#61
தார் தெரியல் சுக்கை கண்ணி தாமம் ஒலியல் பிணையல்
ஆரம் படலை அணியல் சுருக்கை சீர் இலம்ப
கம் கத்திகை சிகழிகை கோதை மஞ்சரி அ
லங்கல் தொடை தொங்கலும் மாலை
** 476

#62
வாகை வெற்றிமாலை வட்டமாலை இண்டை ஆம் தொடரே
ஆகும் சரம் வாசிகை படலை மோகச்
சிகழிகை ஆம் பள்ளித்தாமம் தேவர் பூசை
மகிழ் தார் ஈயோட்டி குஞ்சம் ஆம்
** செயற்கைப் பொருள் வர்க்க முற்றும்
** 3 அஃறிணை யுயிரில்பொருட் படலம் 

@33 இட வர்க்கம்
** 477

#1
வீடு அமிர்தம் முத்தி விபவருக்கம் ஆனந்தம்
நீடு சிவம் சித்தி நிருவாணம் கூடு கதி
நின்மலம் சுகாதீதம் ஞேயம் நித்தம் கைவலியம்
இன்னும் பல மோக்கமே
** 478

#2
விண் துறக்கம் நாகம் விமானம் விசும்பு மேலுலகம்
ஒண் தானமே பொன்னுலகு கற்பம் அண்டு உவணை
உம்பர் சுவலோகம் உயர்நிலை வானாடு சுவர்க்
கம் புவனம் தேவர் உலகம்
** 479

#3
நாகலோகம் பவணம் நல் பாதலம் பிலம் அ
தோகதி பாதாளம் சுவப்பிரமே வேக இருள்
கும்பி அளறு ஆவிரம் தீ நாரகம் பூதி நிரை
யம் பவர்க்கம் ஊழல் நரகம்
** 480

#4
பூமி பிருதுவி பார் பூ அகலிடம் தரணி
கோ மகி அளக்கர் பொறை கு அசலை நேமி படி
பாரி அகிலம் குவலயம் காசினி அவனி
தாரணி வசுந்தரை தலம்
** 481

#5
தாத்திரி தரை தரித்திரி பணாதரி மண்
கோத்திரி கிடக்கை சதுக்கோணி தறை பாத்திபமே
சக்கரம் நிலம் புவி சலாம்பரி மாதிரமே 
தக்க விபுலை வசுதை
** 482

#6
தாலம் உலகு இம்பர் வையம் சாந்தை விசுவம் புடவி 
ஞாலம் வசுமதி நகம் பவனம் பாலம் உகம் 
பூதியம் ஏமாங்கி வையகம் பொழில் இகம் புவனி
மேதினி சகம் புவனமே
** 483

#7
தீவின் பேர் தீவிகை தீபம் கடற்குள்பூமி திட்டு ஆம்
மா வேலி காணி திணை பூ நிலம் ஆம் காவலர்கள்
ஆளிடம் சமத்தானம் ஆதினம் ஆதிக்கம் விண்ணோர்
ஆளிடம் பதம் பதவி ஆம்
** 484

#8
மண்டிலம் இராச்சியம் தேயம் பைதிரம் வருடம்
கண்டம் அழுவம் சனபதம் சீமை தண்ணடை நாடு
ஆர் ஏணி நீவரமும் ஆம் குடிஐந்நூறுளஊர்
பேரூர் நூறுஉட்படில் சிற்றூர்
** 485

#9
பாக்கம் அருப்பம் சரணம் பாழி பள்ளி வேலி முட்டம்
பூக்கம் நியமம் பூரியம் பூண்டி வாழ்க்கை குடி
வைப்பு உறையுள் சும்மை கிராமம் தாமம் பேட்டு அகலுள்
கற்பம் நிகாயம் பக்கணம்
** 486

#10
சேர்வு இருக்கை வேசனம் நிவேசனம் சார் வாழ்வு அகரம்
சேரி குடம் ஊர் பதி ஆம் பட்டி நொச்சி  ஊர்களில் சிற்
றூர் பவனம் தாவளம் வாசம் வசதி மடம்பம் 
ஊர்கள் அஞ்ஞூறின் தலைமையூர்
** 487

#11
கேடம் கருவடம் சம்வாகம் சீறூர் குறிச்சி
பாடு மலையூர் குறும்பு பாலை முல்லை பாடி நெய்தல்
பட்டினம் தோணாமுகமே பத்தனம் ஆம் பாசறைப் பேர்
வெட்டு முனையூர் பாடிவீடு
** 488

#12
நாட்டுஊர் நகரி நகர் பட்டணம் புரம் புரியே
காட்டு நகரம் வளாகம் கொல்லை தோட்டம் ஆம்
ஆவணம் பீடிகை கூலம் கடை அங்காடியும் ஆம்
தாவு தக்கசம் சதுக்கம் தான்
** 489

#13
கோணம் முடுக்கு ஆம் குறுந்தெருக்கள் மறுகு ஆம் நியமம்
சேண் வாடை சேடி சிரேணி சந்தி பேணு ஞெள்ளல்
வீதி தெரு வையாளிவீதிப் பேர் செண்டுவெளி
மா திருமுற்றம் பரிவட்டம்
** 490

#14
தெற்றி சித்ரகூடம் நாற்சந்தி சிருங்காடகம் ஆம்
மற்று அம்பலம் பொது மன்றம் பொதியும் பெற்ற சபை
வேந்துஇருக்கை அத்தாணி வேத்தவை ஆம் வைப்புஇருக்கை
ஆய்ந்த பண்டசாலை அறை
** 491

#15
மாடம் மந்திரம் வசதி புக்கில் புரை இல்லம் மனை
வீடு வளவு இல் கிரகம் வேந்தர்பெண்வாழ்வீடு கந்த
வாரம் அந்தப்புரம் தாழ்வாரமும் கற்படியும்
ஆரோகணம் சோபானம்
** 492

#16
தேவதலம் நிலையம் சேதியம் சேத்திரம்
கோவில் மந்திரம் சினகரம் கோட்டம் மேவு தளி
ஆலயம் நிகேதனம் ஆம் மாளிகை குலம் கோயில்
சாலம் கொட்டாரம் மன்னர் சார்பு
** 493

#17
பாழி மடம் தாபதம் கரண்டை பள்ளி ஆச்சிரமம்
மூழின் முனிவோர்வாசம் ஓமகுண்டம் தாழ் தடவு
வேதியும் ஆம் கோபுரம் வேரம் சிகரி தோட்டி புர
வாய்தல் வழித்திண்ணை அளிந்தம்
** 494

#18
வாயில் தொட்டி வாய்தல் கடை வாரி துவாரம் வாசல்
வாயிற்படி நடை நகம் கருக்கு ஆம் வேயுள் வேய்
மண்ணீடு மாடம் வளர் குறடு மண்ணீடு
திண்ணை திட்டை வேதிகையும் சேர்
** 495

#19
குட்டிமம் படுத்ததலம் கூடை குடில் குரம்பை
கொட்டில் சிற்றில் ஆம் சுள்ளை கொள் பாண்டம் சுட்டிடும் பார்
சாலகம் சாளரம் வாதாயனம் சாலம் குறுங்கண்
காலதரும் ஆம் பலகணி
** 496

#20
சட்டம் வளை ஆம் முகடு தான் விடங்கம் தாள் தூபை
அட்டில் மடைப்பள்ளி அடுக்களை ஆம் மொட்டாய்தம்
சுல்லி உத்தானம் குமுதம் காமரம் அடுப்பு இறப்பே
இல்லின் இறை வளவியே
** 497

#21
கல்விபயிலிடம் கல்லூரி கழகம் பள்ளி
அல்லது இலங்கம் அரங்கமுமே வல் படை கூத்து
ஆடிடம் ஆம் தூம்பு அங்கணம் சலதாரைப் பெயர் ஆம்
தேடும் சுவர் பித்திகை
** 498

#22
துற்றும் ஒதுக்கிடப்பேர் துச்சில் ஆம் வேறிடப்பேர்
மற்றை ஏகாந்தம் ஒருவந்தம் ஆம் முற்றம் முன்றில்
அங்கணம் நிலாமுற்றம் ஆம் அரமியம் சுருங்கை
வெம் கற்படை ஆகுமே
** 499

#23
மேடை பதணம் பரியகம் சூளிகை அகப்பா
சாடும் உபரிகை ஆம் சாவடியே கூடம்
படிப்புரை ஆம் ஆசாரம் செச்சை மன்னர் செங்கோல்
நடப்பாகிய மனை நாமம்
** 500

#24
வேலி இஞ்சி ஆரை நொச்சி வேணகையே கோட்டை சிறை
சாலம் எயில் ஓதை அரணம் கடகம் மேல் வாரி
காப்பு உவளகம் சிகரம் வேதி பிரகாரம் அகப்
பாப் புரிசை தான் மதில் பேர் பாடு
** 501

#25
ஓடை பரிகம் கிடங்கு உடு கேணி பாம்புரியும்
கூடு அகழ்ப் பேர் எந்திரம் கோசம் தோணி நீடிய
நாஞ்சில் மதில்உறுப்பு ஆம் ஞாயிலும் ஆம் சாலை பள்ளி
பூம் சத்திரம் அறப்புரம்
** 502

#26
நெல்லிடும்இல் கொட்டாரம் சேர் களஞ்சியம் களம் ஆம்
நல் உறையுள் பாழி சயனம் பாயல் மெல் அமளி
சேக்கை கட்சி பள்ளி அரி சட்டகம் படுக்கை பண்ணை
சேக்கை பட்டம் மாத்துஞ்சிடம்
** 503

#27
ஈசுரன்ஊர் ஈசோவதி ஆம் மயேந்திரமே
ஆசுரம் மாயாபுரம் சூராதிகள்ஊர் பேசு இலங்கை
ஆம் புரம் இராவணன்ஊர் ஆனைமுகன்ஊர் மதங்கம்
தாம்பிரைவாழ்ஊர் விருடாங்கம்
** 504

#28
மாலூர் வைகுண்டம் அயன்வாழூர் மனோவதி ஆம் 
மேலை அமராபதி விண்கோநகர் ஆம் காலனூர் 
வைவச்சுதம் சேடி சேணி விஞ்சை வல்லவர் ஊர்
ஒவ் அளகையே தனதன்ஊர்
** 505

#29
வஞ்சி கருவூர் ஆலவாய் கூடல் ஆம் மதுரை
கஞ்சி கச்சி காஞ்சி கனி அவந்தி உஞ்சை ஆம்
மேவு அவிமுத்தம் காசி மெய் வாரணாசியும் ஆம்
காவிரிப்பூம்பட்டினம் புகார்
** 506

#30
காழகம் கடாரம் ஆம் கண்டியுடன் சிங்களமும்
ஈழம் வஞ்சி சேரன்இருப்பு உறையூர் கோழி ஆம்
கோலம் வினிதை விரிசு கோசலை சாகேதம் ஐந்தும்
மால்இல் அயோத்தியின் நாமம்
** 507

#31
வேணுபுரம் சண்பை வியன் கழுமலம் புகலி
கோண்இல் சிரபுரமே கொச்சைபுரம் தோணி
புரம் வெங்குரு புறவம் பூந்தராய் பொற்பு ஆம்
பிரமபுரம் சீகாழிப் பேர்
** 508

#32
நெல்வேலி நெல்லை பிரமவிருத்தபுரம்
வல் வேய்வனம் தாரகவனம் சொல் குளந்தை
ஏரிதங்குஊர் அத்தினபுரம் குருகுலேசர்கள்ஊர்
ஏரகம் சாமிமலையே
** 509

#33
செந்தில் செந்தூர் தில்லை சிதம்பரம் ஆரூர் கமலை
கொந்தார் குடந்தை கும்பகோணம் ஆமாம் பைம் தேவை
சேதுபுரம் என்ப இராமீச்சுரம் விதேகை எனும்
பேதுறாச் சொல் மிதுலைப் பேர்
** 510

#34
தேம் அரிதம் மாதிரம் திக்கு அம்பரம் விசும்பு உலகு
கோ முகம் புலம் காட்டை ஆசை திகை தோம்இல் ககு
பம் திசை நான்மூலை விதிக்கு ஆம் குணக்கு பூருவமே
இந்திரி பிராசி கிழக்கே
** 511

#35
தென் வாசி யாமம் சிவேதை தெற்கு தெக்கணம் ஆம்
மன் வாருணம் பச்சிமம் குடக்கு நல் மேற்கு ஆம்
உத்தரம் வடக்கு உதக்கு உதீசி கவுபேரியம் ஆம்
கத்தர்களால் பேர் மூலைக்கு ஆம்
** 512

#36
குத்தரம் சிலோச்சயம் கல் குன்று இறும்பு அடுக்கல் பறம்பு
அத்திரி சிலம்பு அரி சையம் தரணி மைத் திகிரி
பொங்கர் கல்லகம் சயிலம் பொச்சை பொகுட்டு ஓதி சிமை
யம் குவடு நாகம் அசலம்
** 513

#37
பாதவம் விலங்கல் விந்தம் கோத்திரி வேதண்டம் நகம்
மாதிரம் வெற்பு ஓங்கல் கிரி பீலி சுரும்பு ஓதிமம் த
ராதரம் வீரம் பதலை பொற்றை பொறை விண்டு இரவி
பூதரம் பருப்பதம் பொருப்பு
** 514

#38
சக்கரம் பிறங்கல் வரை தாணு சிகிரி மலை
பக்கமுறும் பாழி பதுக்கை துறுகல் காண்டை
பாறை உபலம் சிலை பாடாணம் சிராவணம் கன்
தேறு கல் உலம் திரண்டகல்
** 515

#39
குன்றின்உச்சி கோடு கொடுமுடி கூடம் சிகரம்
குன்றுஅருகு வாரம் நிதம்பம் சானு மென் தடமும்
சாரலும் ஆம் கந்தரம் முடுக்கர் முழைஞ்சில் விவரம்
கூர் முழை நிகுஞ்சம் குகை
** 516

#40
கயிலை விசையாத்தம் வெள்ளிவெற்பு ஈசன்வெற்புக் 
கயிலாயம் பொன்மலை மாமேரு உயர்மலையே 
வைத்த தனுமலை தேவாலயம் இராசமலையே 
அத்தும் வடமலையும் ஆம்
** 517

#41
தென்கிரி தமிழ்க்கிரி தென்றல்கிரி செம்புக்கிரி கும்
பன்கிரி இலிங்கம் மலையம் பொதியம் நல் பொதியே
சந்தகிரியும் பொதிகை சக்கரவாளகிரி
உந்து வட்டவெற்பு உவளகம்
** 518

#42
ஆரணியம் கான் களரி அத்தம் சுரம் விடர் காந்
தாரம் கடம் வனம் தாவம் பழுவம் கார் முளரி
பொச்சை கண்டகம் கானம் தில்லம் காண்டம் புறவம்
கட்சி கடறு அடவி காடு
** 519

#43
வல்லை பெருங்காடு சிறுகாடு இறும்பு வண் முதையல்
மெல் இலைபோங்காடு அழிகாடு ஆம் இளவல் சொல் விளை கா
வற்காடு அரியல் குன்மம் வஞ்சி அறல் இறல் ப
துக்கை விடபம் செடியும் தூறு
** 520

#44
ஆராமம் கோடரம் உய்யானம் உத்தியானம் அரி
சூரார் உபவனம் கா சோலை பொழில் வார் பொதும்பர்
தண்டலை மரச்செறிவும் தோப்பு ஆகும் பூந்தோட்டம்
வண் துடவை நந்தனவனம்
** 521

#45
வீரை அம்பரம் சலதி வேலை திரை தோயநிதி
வாரி மகராலயம் வேலாவலயம் ஆர்கலி முந்
நீர் வாரணம் நரலை நேமி குரவை உப்பு
கார்கோள் பவ்வம் சாகரம்
** 522

#46
உந்தி அம்புராசி உததி அளக்கர் வெள்ளம்
சிந்து இரத்தினாகரமே திண் பரவை நந்து உவரி
தாழ் புணரி அம்போதி சக்கரம் ஓதம் பெருநீர்
ஆழி அன்னவம் சமுத்திரம்
** 523

#47
வாருதி பாராடை நதிபதி அத்தி அரி
வாருணம் ஏழாறும் அறி கடல் பேர் கூரும் உப்பு
பால் தயிர் நெய் இக்கின் பசுஞ்சாறொடு செந்தேன்
மீறு நன்னீர் ஏழ்கடல் ஆமே
** 524

#48
ஓணம் துணி தடினி உந்தி ஒலியல் குடிஞை
சேள் நதி சிந்து ஆறு ஆம் திரிபதகை காண் விமலை
தீபவதி சானுவியே தீர்த்திகை மந்தாகினியே
ஆபகை பகீரதி கங்கை
** 525

#49
நாராயணி பிரமநாதை மருத்துவதி
வார் அம்பரவதி தன்மத்திரவை ஆர் அமிர்தக்
கோலி கன்மநாசனி மகோதையை ஆனந்தி மங்க
ளாலையை முத்திமுத்திரை
** 526

#50
பகவதி உருத்திரை பராபரை பொருந்தம்
அகன்மிசை மாலேயி மணிமாதா புகழ் திரையி
தீம் பொருனை நிட்களை கங்கான்மிகை மாலாரூபி
தாம்பிரபன்னியின் பேர் தான்
** 527

#51
கன்னி குமரிப் பேர் கவுதமையின் பேர் கோதை
துன்னிய வாணி சரசோதி ஆம் பொன்னியொடு
காவிரி காவேரி கோதாவிரி விருத்தகங்கை
நாவினி காளுந்தி யமுனை
** 528

#52
வைகையின் பேர் வேகவதி வாலை சித்திராநதி ஆம் 
மொய் தாம்பிரானுசையோடு ஆத்திரையும் பெய் கடனை 
சாமாநதி உருத்திராணி அயிராணியோடு 
ஆம் ஆத்திரை பச்சையாறு
** 529

#53
கான்யாறு முல்லை கலுழி ஆம் காயல் கழி
கானல் முரம்பு ஆம் கழிமுகம் புகார் ஆன
கயவரி அதோமுகம் போந்து ஆம் உவளகத்தோடு
உயர் அளக்கர் ஆம் உப்பளம்
** 530

#54
பாரியம் பாராவாரம் வேலை பரவைக்கரை ஆம்
வாரம் அணை கோடு வரை கூலம் தீரம்
வரம்பு தடம் பாரம் கரை செய்கரை தான்
குரம்புடன் சேது குலை
** 531

#55
பட்டம் மடு ஓடை குண்டம் பண்ணை சுனை கேணி பொய்கை
குட்டம் வட்டம் வாவி படு கோட்டகமே புட்கரணி
ஊருணி இலஞ்சி உவளகம் கயம் படுகர்
ஏரி தடாகம் கிடங்கு ஏல்வை
** 532

#56
பங்கம் அலங்கல் சரசு சூழி பல்வலம்
தங்கல் இலஞ்சகம் சலந்தரமே பொங்கு அலந்தை
நீர்நிலை தடம் குளம் ஆம் நீடு எந்திரவாவி
சேகும் இல்வந்திகை
** 533

#57
ஆற்றிடைப் பேர் இலங்கை அரங்கம் துருத்தி
மாற்று அசும்பு கூவல் கூவம் கிணறு ஆம் ஊற்று உறவி
துன்றும் சிராவமும் ஆம் தூதி புளினம் மணற்
குன்று உவர் ஆம் பார் இருணம் கூறு
** 534

#58
நீர்க்கண் வினைசெய்யும் நிலம் துறை நீரூர் பாதை
ஆர்க்கும் பிராறு வழாறு ஆம் அறலே ஏர் கார்
மணல் சிதகம் வாலுகமும் வெண்மணலின் பேர் நுண்
மணல் பேர் அதர் அயிகும் ஆம்
** 535

#59
தாழ்வு இழிவு அதம் பயம்பு அவல் படுகர் ஞெள்ளல் குழி
கீழ் உவளகம் கிழக்கும் பள்ளம் வெட்டை பாழ் கரம்பு
ஓது புற்பார் சாட்டுவலம் ஊர்த்தம் மிசை சுவல் மேல்
மீது உயரம் திட்டை திடர் மேடு
** 536

#60
தொய்யில் அசறு அள்ளல் பங்கம் தோணி காலாழ் சகதி
செய்யல் குழை சேதகம் செதும்பு அளறு பெய் குழம்பு
கொள்ளம் நொதி சேறு ஆம் செலவு அளை பொய் பொந்து புழை
பொள்ளல் புடை வன்மீகம் புற்று
** 537

#61
வன் குறிஞ்சி பாலை முல்லை வாழ் மருதம் நெய்தல் ஐந்தும்
நன் கிரி சுரம் காடு நாடு கடல் ஒன்று தினை
நெல் விளையும் நன்செய் சாலேயம் உருவரை தான்
எல்லாம் விளை புன் செயே
** 538

#62
கைதை பண்ணை ஆலவாலம் கழனி பானல் பணை
செய் தடி மா கண்டம் செறு பழனம் துய்ய
வயல் விளைநிலம் குரம்பு மாசி வரம்பே
அயல் வரப்பு ஆம் கங்கு அவ் அருகு
** 539

#63
செவ்வல் செந்நிலம் கருநிலம் கரிசல் ஆம் சிறுச்செய்
அவ்வதின் பேர் பாத்தி குண்டில் ஆகுமே ஒவ்வு
மருதநிலம் முத்தம் மென்பால் வண் குறிஞ்சி முல்லை
பரி புறவம் வன்பால் பாலை
** 540

#64
புறணி களர் அழல் பைங்கூழ் பிடியாப் புன்செய் 
நிறை தரிசு உழாதநிலம் ஆம் வறிய 
கமர் விடர் நிலப்பிளப்பு ஆம் கைப்பற்றக்கூடாத 
அமர்நிலம் துருக்கம் அருப்பம்
** 541

#65
தாரி செப்பம் பாதை சரி வதி தடம் பதவை
வாரி வகிர் கட்சபுடம் மார்க்கம் அதர் தாரை வகுந்து
ஆறு இடவை கற்பம் அயனம் செலவு ஒழுக்கம் நெறி
கீறு இயவை அத்தம் கிறி
** 542

#66
வட்டை நடவை கடறு பத்ததியே வயவை
பட்டம் வழி ஆம் கவலை பல் கவர்ச்சிப்பட்டவழி
சின்னெறி இடங்கர் புதுவழி மரீசி பொல்லாத்
துன்னெறியின் பேர் கடம் சுரம்
** 543

#67
வெளி வெள்ளிடை ஆகும் வெம் போர்க்களம் செங்
களமே பறந்தலை விளாகம் களரி சுடு
காடு மயானம் சுடலை காளவனம் ஈமம் இடு
காடு புறங்காடு பிணக்காடு
** 544

#68
பால் இடை இல் வாய் முதல் உள் பாடு உழை வசம் சார் கீழ்
கால் புலம் வலம் புறம் தேம் கண் புடை சூழ் மேல் வழி பின்
பாங்கர் படி மாடு உழி முன் பாரிசம் மருங்கு தலை
ஞாங்கர் சிறை வைப்பு அகம் தானம்
** 545

#69
கடை அயல் வயின் களம் பக்கம் தான் இடம் இவ்
விடம் இவண் ஈண்டு இம்பர் இதா இங்கு அவ்விடம் உம்பர்
ஆண்டு ஆங்கு அவண் உவண் அதா எவ்விடம் யாங்கே
யாண்டு எவண் எங்ஙனமும் ஆம்
** 546

#70
பாங்கர் புடை மாடு புறம் பாரிசம் பால் சார் மருங்கு
ஞாங்கர் சிறை ஓரம் விளிம்பு பக்கம் ஓங்கு வலம்
தக்கணம் ஆம் வாமம் இடம் அந்தர் அகம் உள் புறம் தான்
புக்க பகிர் வெளி புறம்பு
** இடவர்க்க முற்றும் 
** 3 அஃறிணை யுயிரில்பொருட் படலம்

@34 கால வர்க்கம் 
** 547

#1
பங்கயப்பூ நூறு அடுக்கி பாய்ச்சு ஊசி ஓர் இதழ் பாய் 
அங்கு அதுவே காலம் அது எட்டே தங்கு கணம்
அவ் எட்டாம் ஓர் காட்டை அவ் எட்டாம் ஓர் நிமிடம்
அவ் எட்டே ஓர் துடி அது ஆம்
** 548

#2
நால்துடி ஓர் மாத்திரையே நல் இலகு அவ் இரண்டே
ஊற்று குரு ஆகும் உயர் குரு மூன்று ஏற்றுவது
தாழும் வினாடி அது தான் அறுபான் நாழிகை அவ்
ஏழரை ஆம் ஓர் சாமமே
** 549

#3
சாமம் நான்கு ஓர் பொழுது சார் பொழுது இரண்டு ஓர் நாள்
ஆம் அது முப்பான் மாதம் அவ் இரண்டே ஆம் இருது
மூன்று இருது ஆம் ஓர் அயனம் முற்று அயனம் ஓர் இரண்டு
தான் தழுவில் ஓர் ஆண்டு அது ஆம்
** 550

#4
ஆண்டு ஓர் முந்நூற்றுஅறுபான் அண்டர்கள் ஆண்டு ஆகும் அந்த
ஆண்டு ஆயிரத்துஇருநூறு அவ்விரட்டி ஈண்டு மும்மை
நான்மை கலி ஆதி யுகம் நான்கினுக்காம் நான்கு உகமும்
நான்மடங்கு ஐஞ்ஞூறு அயன் ஓர் நாள்
** 551

#5
அந்நாள் முந்நூற்றுஅறுபது ஆண்டது நூறு அம்புயத்தோன்
தன் ஆயுள் ஓர் பிரமன் சாயில் ஒரு நன்னாளாய்
அங்கது முந்நூற்று.அறுபது ஆண்டு ஆயது நூறே
செங்கணனுக்கு ஆயுள் எனத் தேர்
** 552

#6
ஈட்டும் ஒரு மாத்திரை இமைப்பு இறை நொடி பொழுது ஆம்
நீட்டித்தல் பாணித்தல் நெட்டித்தல் கூட்டு நெடும்
போது ஆம் கிரேதம் திரேதம் துவாபரமே
ஓது கலி நான்காம் யுகம்
** 553

#7
எல்லி நத்தம் கங்குல் நிசி யாமினி விபாவரி ரா
அல் இரவு இராத்திரி திவா பகல் ஞான்று எல்லை வைகல்
ஆனியம் தினம் திவசம் அல்கல் பகல் நாள் புலரி
தான் விடியல் வைகறை உசல்
** 554

#8
அந்தி சந்தி மாலை சாயம் சாமம் யாமம் நென்னல்
முந்தை நெருநல் முன் நேற்று ஆம் நாளை பிந்தை பிற்றை
நன்பகல் மத்யானம் உச்சி நாடி இருத்தை கன்னல்
வன் கடிகை நாழிகைப் பேர் வாழ்த்து
** 555

#9
வாலிசினி இந்து உள ரா மற்று அது இலி ரா குகு ஆம்
காலை செவ்வி போழ்து அமையம் கால் பதம் ஞான்று ஏல்வையொடு
வேலை தருணம் சமயம் வேளை கொன் நேரம் பொழுது
காலம் அன்னம் பாணியும் ஆம் காண்
** 556

#10
காலை பிராதம் காலநுட்பம் கலை விகலை
ஆலும் நெடுநாள் சிரம் வாணாள் அகவை சால் ஆயுசு
ஆயுள் பிராயம் வயது ஆம் கற்பம் அயன் வாழும் நாள்
சாயும் மதி திங்களும் மாதம்
** 557

#11
வருடம் வற்சரம் சமை ஆண்டு ஆயனம் பெரும்போது
இருது ஆனியம் பருவம் ஆண்டில் அரை அயனம்
கார்நாள் நவம் அமை கதிர்க்கூட்டு அமாவாசி
பூரணைப் பேர் பவ்வம் உவா போற்று
** 558

#12
ஆட்சி வாரம் கிழமை ஆம் திதி பக்கம் திதியின்
மூட்டு முதல் தொட்டு ஐந்தாய் மூன்று வட்டம் கூட்டு நந்தை
பத்திரை சயை இருத்தை பூரணை அப்பால் முகிழ்த்தம்
நத்து இலக்கினம் கணித்த நாள்
** 559

#13
கார் கூதிர் முன் பின் பனி இளவேனில் வேனில்
பேர் ஆவணி முதல் பெரும்பொழுது ஆறு ஓர் நாளில்
காலை உச்சி எற்பாடு மாலை யாமம் புலரி
போலும் உதையாதி சிறுபோது
** 560

#14
ஏயும் வருடம் சரலே ஏமந்தமே சிசிரம்
ஆய் வசந்தம் சீட்டுமம் என்று ஆறு ஆயுப் பேர்
ஆவணி முன் ஈரிரண்டாம் பெரும்போழ்து ஆறினுக்கும்
காவல் உகம் ஊழி மடங்கல்
** 561

#15
பூதம் இறப்பு ஆம் பவுடியம் தான் எதிர்வு நிகழ்வு
ஆதல் வர்த்தமானம் அப்போது அன்று இனி இப்போது இன்று ஆம்
என்று எப்போது எப்போதும் சந்ததம் சதா நித்தம்
என்றும் அனவரதமே
** 562

#16
வல்லை துரியம் சடுதி ஈண்டே கடுப்பு விதப்பு
ஒல்லை நிபுடம் சீக்கிரம் சுதழ்வு ஆசு எல்லாம்
விரைவு பதம் காழ்த்கல் பைய மெல்ல என்னல் மந்தம் 
வரை விளம்பிதம் தாமதம்
** 563

#17
தொல்லை முன் புராணம் முந்தை தொன்மை தொன்று ஊழ் பூருவம் பண்டு 
ஒல்லை புராதனம் கிதம் பழமை சொல் கோடி 
நூதனம் நவம் கடி புத்தேள் அபிநவம் விருந்து அ
பூதம் வம்பு யாணர் புதுமை
** காலவர்க்க முற்றும் 
** 3 அஃறிணை யுயிரில்பொருட் படலம் 

@35 சினை வர்க்கம் 
** 564

#1
இயற்கை சுயம் சுயம்பு தானே உண்டாதல்
செயற்கை பிரதிட்டை திரியக்கே பயிற்று அறிவுஇல்
சென்மம் பிராணி சனபதம் சாதம் பிரசை
சென்மி செந்தும் உற்பவித்ததே
** 565

#2
தேகம் உடல் காத்திரம் மெய் பூட்சி புரம் ஆதாரம்
ஆகம் உயிர்நிலை காயம் சடலம் தோய் குரம்பை
புட்கலம் கனம் புணர்ப்பு உடம்பு கடம் யாக்கை சடம்
விக்கிரகம் பூதியம் விம்பம்
** 566

#3
தாபரம் தனு புதை களேபரம் சரீரம் உயிர்
ஆவி பிராணன் சேதனன் ஆதன் சீவன் அணு
சின்மயனே புட்கலன் கிஞ்சிக்கன் சதசத்து
மன் இயமான் உள்ளமும் ஆன்மா
** 567

#4
மேனி சட்டகம் படிவம் வேடம் உரு மூர்த்தம் வடிவு
ஊன் சொரூபம் மெய்க்குறையே யூபம் மட்டை ஈனக்
கவந்தம் அழனம் பிணம் களேபரம் பிரேதம்
சவம் குணபம் குணங்கும் சாற்று
** 568

#5
முந்தும் உயிர்த்தத்துவம் எண்மூன்று விச்சாதத்துவம் ஏழு
ஐந்து சுத்தம் பூதக்கூறு ஐயைந்து ஈரைந்து வளி
நாடி பத்து முக்குணம் நால் வாக்கு வசனாதி ஐந்தே
ஏடனை மூன்றாம் கருவியே
** 569

#6
புவி நீர் தீ கால் வெளி ஐம்பூதம் ஐம்புலன் தான்
செவி உடல் கண் நாக்கு மூக்கு ஆகும் சுவை ஒளி ஊறு
ஓசை மணம் ஐம்பொறி வாய் கால் கை உபத்தம் குதம் ஐந்து
ஆசை தரும் கன்மேந்தியம்
** 570

#7
சித்தம் அகங்காரம் புத்தி மனம் நால் கரணம்
இத்தொகை எண்மூன்றும் உயிர்த்தத்துவம் ஆம் வித்தியா
தத்துவம் ஏழ் காலம் நியதி கலை வித்தை இச்சை
பொய்த்திடா மாயை புருடன்
** 571

#8
சுத்தவித்தை ஈசுரம் சாதாக்கியமே சத்தி சிவம்
சுத்தம் ஐந்தாம் என்பு மயிர் தோல் நரம்பு நெய்த்தசை பார்
கூறு ஐந்து நீர் உதிரம் விந்து நிணம் மூளை புனல்
கூறு ஐந்து எனவே குறி
** 572

#9
ஊண் துயில் பயம் புணர்ச்சி சோம்பு அனல்கூறு ஐந்து ஓடல்
ஈண்டு கிடை நடை இருக்கை நிலை மாண் கால்கூறு
ஐந்து சினம் மோகம் அசூயை மதம் உலுத்தம்
ஐந்தும் வான்கூறு என்று அறி
** 573

#10
அரிய பிராணன் அபானன் வியானன் 
சரிவில் உதானன் சமானன் கிரிகரனே 
நாகன் கூர்மன் தேவதத்தன் தனஞ்சயன் என்று 
ஆகும் இவை வாயு ஈரைந்து
** 574

#11
இடை பிங்கலை சுழிமுனை காந்தாரி
திடமது சேர் அத்தி சிகுவை படரும்
அலம்புடை பூடா சங்கினி குதம் என்று ஆகும்
பலம் பொருந்து நாடிகள் ஓர் பத்து 
** 575

#12
சாத்துவிதமே இராசதம் தாமதம் என்று
ஏத்து குணங்கள் இவை மூன்றாம் வாய்த்ததொரு
சூக்குமை பைசந்தி மத்திமை வைகரியாய்
வாக்கு நான்கு என்றே மதி
** 576

#13
தாக்கு வசனம் கமனம் தானம் விசர்க்கு ஆனந்தம்
வாக்காதி ஐந்தின் வரும் விடயம் வீக்கு பொருள்
மண் சுதன் மூன்று ஏடணை ஆம் மற்று இவை தொண்ணுற்றாறும்
எண்கருவி தத்துவம் என்பார்
** 577

#14
ஒன்றே மனம் தொழிலால் நால் கரணம் ஆம் அதின் பேர்
என்று ஆகும் சித்தம் இதையம் நெஞ்சம் துன்று புந்தி
உன்னம் சகம் புத்தி மதி உள்ளம் அகங்காரம்
முன்னம் மனம் என்னும் மொழி
** 578

#15
அங்கிரி பதம் சலனம் தாள் சரணம் பாதம் அடி
பைம் கழலும் கால் ஆம் பரடு கரடு அம் கரண்டை
காண் கணைங்கால் சங்கம் முழங்கால் முழந்து சானு முட்டு ஆம்
மாண் குறங்கு ஊரு துடை கவான்
* 579

#16
கோசம் இலிங்கம் பகம் பூ குய்யம் இவை யோனி குறி
வீசு உபத்தம் இப் பொது ஆம் அண்டம் விதை பீசம் அது ஆம்
ஆதாரம் மூலம் குதம் ஆசனம் பிருட்டம்
ஓது சமனம் பாயுரு
** 580

#17
உக்கம் நடு மத்தியம் நுசுப்பு அரை மருங்கு இடை ஆம்
ஒக்கரை விலா கோடணம் உதரம் குக்கி
மடி மோடு அகடு வயின் கும்பி வயிறு எட்டாம்
கடிதடம் நிதம்பம் அல்குல் காண்
** 581

#18
நாபி இலஞ்சி உந்தி போகில் இதலை கொப்பூழ்
மார்பு அகலம் ஆகம் மருமம் உரம் ஏர்பு ஆம்
இருத்து நெஞ்சு ஆம் கைமூடு இசை கமுக்கூடு அக்கில்
அரைப்புறம் குறுக்கு இடுப்பு என்று ஆம்
** 582

#19
கொம்மை குரூஉக்கண் சுவர்க்கம் கொங்கை நகில் சேக்கை பறம்பு
அம்மம் பயோதரம் குயம் தனம் ஆம் வெம் முலைக்கண்
சூசு ஆம் சிலீமுகம் அக் காம்பு கை தோள் பாணி அத்தம்
வீசு கரம் ஓர் கை அராளம்
** 583

#20
அங்கை அகங்கை குடங்கை உள்ளங்கை கூர்ப்பரமே
முன்கை முழங்கை மொழி மணிக்கட்டு அம் கிலுத்தம்
அங்குலி விரற்கு உகிரே ஆம் நகம் தோள் வாகு மொய்ம்பு
துங்கப் புயம் நிவம் தோள்மேல்
** 584

#21
பெருவிரல் அங்குட்டம் ஆம் தற்சனியே சுட்டு
விரல் மத்திமை நடுவிரல் பேர் தரி மோ
திரவிரல் அநாமிகை ஆம் சின்னவிரல் சுண்டு
விரல் கனிட்டை என்று ஆகுமே
** 585

#22
நெரிசல் சுணங்கே திதலை தேமல் பொறி துத்தி
வரி பசலை கோரை புறம் வீரம் வெரின் அபரம்
வென் முதுகு ஆம் காடி எருத்தம் சிறுபுறம் கயிலே 
அன்ன சுவல் பிடர் என்றாம்
** 586

#23
கந்தரம் கண்டம் களம் கிரீபம் கழுத்து அணலே
வந்த மிடறு அண்ணம் உண்ணாக்கு அண்ணம் அணல் முந்து அணரி
கீழ்வாய்ப்புறம் கன்னம் கேள்வி வள்ளு காது செவி
ஆழ் சோத்திரமும் அதற்காம்
** 587

#24
ஓட்டம் இதழ் வாய் அதரம் பாலிகை முத்தம் உதடு ஆம்
பூட்டு கதுப்பு கவுள் கபோலம் அனு காள் கொடிறு
கன்னம் ஆம் நாசி துண்டம் ஆக்கிராணம் கோணம்
என்னும் மொழி மூக்கின் பேரே
** 588

#25
தாரம் அக்கம் நேத்திரம் கோ சக்கு ஈக்கணம் நாட்டம்
பார்வை திட்டி திக்கு அம்பகம் திருட்டி கூர் நயனம்
கண் விழி விலோசனம் நோக்கம் திருக்கும் ஆம் தாரை
கண்மணி விளிம்பு இமை ஆம் காண்
** 589

#26
பூரு புரூரம் புதல் குடி பிருப் புதடி
பீருப் புருவம் பிறை நுதலின் பேர் பனிச்சை
பாலம் மத்தகம் சூறை பண்டம் குளம் அளிகம்
மேலும் இலாடம் நெற்றியே
** 590

#27
துண்டம் வத்திரம் வதனம் தோன்று ஆனனம் முகம் ஆம்
தண் சிபுகம் தாடி தட்டம் தந்தம் எயிறு அண்டு நகை
மூரல் தசனம் முறுவல் பல் ஆம் நா தாலம்
ஆர் சிகுவை தாலுவும் நாக்கு ஆம்
** 591

#28
சென்னி உத்தமாங்கம் முண்டம் சேகரம் சிரம் சிகரம்
முன் உவ்வி மத்தகம் கம் மூர்த்தி தலை நல் முடி ஆம்
கொண்டை மயிர்முடி பந்தம் தம்மிலம் கொப்பம்
கண்ட பின்னகம் சிகழிகை
** 592

#29
தொங்கல் குஞ்சி ஓரி கசாளம் சுரியல் பித்தை சிரோந்
தம் குழல் மராட்டம் உளை தார் கதுப்பு பங்கி உரோ
மம் தளை கேசம் தான் மயிர் ஆம் மயிர்க்குழற்சி
கொந்தளம் விலோதம் எனக் கொள்
** 593

#30
கூழை குருள் ஓதி குரல் கொந்தளம் விலோதம் ஐம்பால்
வாழ் அளகம் கூந்தல் மடவார்மயிர் ஆம் சூழி
சுடிகை நவிரம் முச்சி உச்சி சிகை சிக்கம்
குடுமி சிமிலியுமே கூறு
** 594

#31
பின்னல் கபர்த்தம் சடிலம் வேணி சடை குடிலம்
மன்னு கோடீரம் மயிர்த்திரள் ஆம் துன் எலும்பே
என்பு அழனம் அத்தி களேபரம் கங்காளம் முழு
என்பு கபாலம் தலையோடு என்
** 595

#32
பொச்சை தொலி தொக்கு புனிறு உரி துவக்கு அதள் வார்
பச்சை வடகம் கிருத்திமம் துருத்தி மெய்ச் சருமம்
தோல் ஆம் நிணப்பேர் துதை மேதை சவ்வு விளர்
மேலாம் கொழுப்பு வெளுப்பு
** 596

#33
வள்ளுரம் புண் தூவு சதை மாஞ்சம் தசை புளிதம்
தள்ளும் பிசிதம் தடி விடக்கு ஊன் உள் இறைச்சி
மச்சை வழும்பு வழுக்கு முப்பேர் மூளை என்பர்
எச்சமுறும் ஈருள் ஈரல்
** 597

#34
சோரி உதிரம் கறை நெய்த்தோர் குருதி சோணிதம் புண்
ணீர் கடுவல் செம்பால் செந்நீர் எருவை சார் இரத்தம்
கத்துக் கொளுத்து முட்டுக் கந்து சந்து உடற்பொருது ஆம் 
அத்து அரலை தான் கழலைக்கு ஆம்
** 598

#35
புலவு புலால் ஊழ்த்தல் முடை புன் திரை திரங்கல் 
பலிதம் சரை நரை மெய்ம்மாசே மலம் அழுக்கோடு
ஊத்தை கன்மிசம் களிம்பு ஆம் நீர் சிறுநீர் அமுரி
மூத்திரம் என்றே பெயர் ஓர் மூன்று
** 599

#36
தீட்டம் அமேத்தியம் பவ்வீ நரகள் ஆகும் மலம்
வீட்டு இலத்தி சாணி சாணாகம் விட்டை ஓட்டும்
புழுக்கை கட்டம் காரம் இவை புள் விலங்கே ஆதி
இழுக்காம் உயிர்கள் மலமே
** 600

#37
ஆந்திரமும் குடரும் ஆம் குடல் வாயாலெடுத்தல்
வாந்தி வமனம் சத்தி ஊற்காரம் பாந்தம் அது ஆம்
அன்னம் மலம் நீர் கருப்பம் அன்றி மனம் கட்டுறும் பை
இன்ன ஐந்தும் ஆசயங்களே
** 601

#38
விந்து அமுதம் சுக்கிலம் வித்து ஆம் சோணிதம் நாதம்
இந்திரியம் வீரியம் இப் பொதுப்பேர் இந்திரியம்
வாயில் கந்தமும் பொறி தன்மாத்திரையோடே விடயம்
ஆய இரண்டும் புலனுக்கு ஆம்
** 602

#39
அங்கம் உறுப்பு அவையவம் சினை ஆம் சேக்கை வசி
அங்கிதம் உடல்தழும்பு அது ஆம் நரம்பு சங்கனனம்
நாடி சிரை ஆம் கோழை ஐ காசம் சேற்பம் வரை
போடு இறை இரேகை பொறி
** சினைவர்க்க முற்றும் 

@4 குண நாமப்படலம்

@41 உயிர்ப்பொருள் மனக்குண வர்க்கம் 
** 603

#1
மரபு இலக்கணம் கிழமை மாலை சுபாவம்
பரிசு விதி பெற்றி இயல் பான்மை விரி பகுதி
சால்பு சகசம் தகை நீர் தன்மை படி வண்மை குணம்
பால் இயல்பு கொள்கை முறை பண்பு
** 604

#2
சேதனம் சைதன்யம் உரம் ஞாபகம் சிதம் தெருட்சி
மேதை புலன் விற்பனம் விவேகம் மதி போதம்
அறிவு உணர்வு ஞானம் முதுக்குறைவு அத் திண்மை
அறிவிலி அசேதனம் என்றாம்
** 605

#3
கண்ணல் சுட்டல் பேணல் கருதல் நுதலல் குறித்தல்
எண்ணல் ஆம் சிந்தை கருத்து இங்கிதம் சுட்டு எண்ணம் முன்னம்
நாட்டியம் தியானம் நினைவு யோகம் குறிப்பு ஆம்
ஈட்டும் அப் பேர் வெங்கியமுமே
** 606

#4
பாலகம் பாவம் பாவை பாவனை அகம் செடி ஆம்
சார் வரையறுத்தல் கணித்தல் குணித்தல் மேவும் அமைச்சு
உத்தி மந்திரம் சூழ்ச்சி யூகம் உபாயம் தேர்ச்சி
தத்தும் அளப்பு ஆலோசனை
** 607

#5
உன்னல் மானை சிந்திப்பு ஊழ்த்தல் நிருவித்தல் உள்ளல்
முன்னல் படர்தல் நினைத்தல் ஆம் மன்னல் துஞ்சல்
தாணுச் சதம் திரம் சாசுதம் சிரஞ்சீவி
ஏண் நிலைபேறு ஆகும் இவை
** 608

#6
ஈரம் நேயம் புரிவு ஆணம் பாசம் பத்தி பரிவு
ஆர்வம் நார் அன்பு எழுமைஅன்பு உழுவல் போர்மை
கருணை இரக்கம் தயாவே கிருபை
அருள் அளி அனுக்கிரகம் ஆம்
** 609

#7
தருமம் அறன் சுகிர்தம் புண்ணியம் தன்மம் 
பெரு நல்வினை தீவினையே வரு தோடம்
பாதகம் பவம் பழி பாவம் தாபரம் தம்பம்
ஆதாரம் தாரகம் தஞ்சம்
** 610

#8
நன்கு விழுமம் கடவுள் நன்னர் நயம் சேடு ஒண்மை
நன்று உத்தமம் நறுமை யாணர் சிவம் நன்மை நலம்
நோன்றல் சமித்தல் சகித்தல் பொறையே பொறுத்தல்
சான்று கரி சாட்சி தான்
** 611

#9
தொய்யில் கடிஇன்பம் சுகம் இரமியம் தமி சம்
எய்து இதம் ஆனந்தம் மலர்வு ஏமம் நகை மெய் மகிழ்வு ஆம்
ஓகை மாராயம் உவகை சந்தோடம் பிரியம்
நாகார் பிரகருடணம்
** 612

#10
கோணை சத்து கன்னி குமரி அழிவின்மை தகை
கேணி கெழு பால் பாங்கு உரித்து ஆட்சி மாண் கிழமை
தாயம் உரிமைப் பேர் சம்பாத்தியம் ஆம் தேட்டம் வரு
வாய் புகுதி வாரி வரத்து
** 613

#11
நீதம் மரியாதை நெறி ஞாயம் நியாயம் கிரமம்
ஓது நிறை நற்குணம்வழாமை குடிப் பேர் திணை ஆம்
சாதி வருணம் வழி இனம் குலப்பேர் ஒன்றினில் சில்
பேதம் வருக்கம் எனும் பேர்
** 614

#12
சமுதாயம் சாமானியம் பொது விசேடம்
நிமித்தியம் திரு சீர் உசிதம் அமர் சிறப்பே
யோக்கியம் சம்பிரமம் திவ்வியம் சொம்பு ஏரணம் ஆம்.
ஊக்கம் உரன் உள்ளமிகைக்கு ஒது
** 615

#13
செய்தி நடை மஞ்சரி சாரித்திரம் சீலம் தனம் வார்
கை இயல்பு ஆசாரம் திணை ஒழுக்கம் பெய் அழுக்காறு
ஆர் மனக்கோண் மாற்சரியம் அவ்வியம் அசூயையும் ஆம்
கூரம் நோனாமை பொறாமை
** 616

#14
தூய்து கசி பாவனம் தூய் வேத்தியம் சுத்தம் சவுசம்
பூதம் பவித்திரம் துப்பும் புனிதம் தூய்திலி உற்
பாதம் தீட்டு துடக்கு ஆசூசம் வாலாமை புலை
சூதகம் ஈன்றண்மை புனிறு
** 617

#15
வெண்மை சைசவம் புருவை விண் போதகம் குழவு
கொம்மை எவ்வனம் குருளை கோமளமே செம் முருகு
நாகு இளை வாலம் தருணம் நன் மழவும் ஆம் இளமை
மூள் கிழம் விருத்தம் முற்றல் மூப்பு
** 618

#16
தீரம் பராக்கிரமம் சேவகம் திராணி திறம்
சூரம் வல்லபம் தயிரியம் துரமே வீரியம்
ஆண்மை சதுர் சத்தி சமத்து சவுரியம் வீரம்
ஆண்மையிலி கோழை பெண்மை ஆம்
** 619

#17
வெற்றி முல்லை வாகை விசையம் வலன் ஆடு செயம்
கொற்றம் வென்றி ஆம் பரிசயம் பயிற்சி மற்று அனிட்டை
வாதனை உழத்தல் பழக்கமொடு வாடிக்கை
சாதகம் அப்பியாசம்
** 620

#18
ஓதி கலை விச்சை வித்தை கல்வியின் பேர் கல்லாமை
ஆதம் அஞ்ஞம் ஏழமை அஞ்ஞானம் மிச்சை பேதம் மடம்
அண்ணம் இழுதம் பாமரம் மூடம் ஆம் தனிமை
எண் வியட்டி கேவலம் ஏகம்
** 621

#19
மாண் கொழுமை சால்பு அமைதி வாய்ப்பு ஆன்றல் மாட்சி வளம்
காண் செழிப்பு ஆம் பாக்கியம் ஆக்கம் திரு சீர் பூண் பெருக்கம்
மாடு இடம் வெறுக்கை பொறி வாழ்க்கை விபவம் விருத்தி
தேடு சம்பத்தும் செல்வம் ஆம்
** 622

#20
ஊழ் நியதி தெய்வம் பிராத்தி விதி தண்மை தஞ்சம்
தாழ்வு எளிமை சாய்ப்பு எண் பரிபவமே கீழ் இழிவு ஆம்
நாத்தி அதீதம் சூனியம் பூச்சியம் நாசம்
ஏத்து அரிது அபாவம் இன்மையே
** 623

#21
நந்தல் பல்கல் ஆக்கம் விளைவு ஆம் பாடவம் கருவம்
தந்து அபிமானம் பெருமிதம் செருக்கு ஏமம் தருக்கு
வெம் மதம் களிப்பு அகத்தை ஆங்காரம் வீற்றிருத்தல்
செம்மாப்பு ஏமாப்பு இறுமாப்பு ஆம்
** 624

#22
ஓய்யாரம் சிங்காரம் உல்லாசம் கெம்பீரம்
கொய்யும் மகிழ்ச்சிக்குறிப்பு ஆகும் செய் உதவி
துப்பு இணை சகாயம் துணை ஆம் சாதித்தது ஒன்று
கைப்படுதல் சாத்தியம் போக்கு ஆம்
** 625

#23
திட்கல் கூச்சம் துணுக்கம் புல்லரிப்பு துட்கல்
மட்கல் மழுங்குதல் மானல் வெள்கல் வட்கல் உட்கு
நாண் சமழ்ப்பு இலச்சை வெட்கம் நல் தவசு உறு படிவம்
தாண்டு தவம் நோன்பு விரதம்
** 626

#24
வெறுப்பு உவர்த்தல் மா முனை வேண்டாமை அவாவின்மை
துறப்பு விரத்தி துறவி வறுமை மிடி
நீள் கலி தரித்திரம் நிரப்பு மிச்சை இன்மை குறு
வாழ்வு இலம்பாடு ஒற்கம் நல்கூர்வு ஆம்
** 627

#25
கேண்மை இகுளை சிநேகம் தொடர் கேள் நட்பு உறவு ஆம்
ஆணையுடன் ஏவல் ஆக்கினை ஆம் காணும் மங்கல்
மாரி பிணி ஆமயம் வியாதி உபத்திரம் நோய்
சூர் அணங்கு தீனம் உரோகம்
** 628

#26
மற்சரம் துவேடம் மடி தெவ்வு அரி இகல் பகைமை
முன் சத்துருத்துவம் முரண்டு முரண் மெச்சு மறல்
வாரம் அரில் பிணக்கு ஆம் வாய்ப்பை இரணம் கடன் ஆம்
சார் அசர்வு ஏட்டை தளர்வு
** 629

#27
கவ்வை பையுள் புன்கண் மம்மர் கையாறு இன்னாங்கு அகிதம்
எவ்வம் இடுக்கண் பழங்கண் ஏதம் இன்னல் வெவ் அலக்கண்
கேதம் இட்டளம் துயர் கிலேசம் பருவரல் சூர்
வாதை படர் பீழை விழுமம்
** 630

#28
அல்லகண்டம் பீடை துக்கம் வேதனை இடும்பை அஞர்
செல்லல் உறுகண் கவலை கோட்டாலை அல்லல் இடர்
யாதனை அரந்தை சங்கடம் தொங்கிசம் துன்பம்
சூதார் பசி விடைப்புச் சுத்து
** 631

#29
நந்தல் அலாபம் கயம் சேதம் சிதைவு உருங்கல் நட்டம்
கந்தல் சுதம் ஆனி மடி கேடு ஆம் பாடு அந்தரம் கோள்
முட்டு இடைவு விக்கினம் பொல்லாங்கு தீங்கே முடைஞ்சல்
துட்டு ஊறு தீது துரோகம்
** 632

#30
நச்சு அலப்பு அவா வேட்கை நம்பு இரதி வெப்பம் நயப்பு
இச்சை நசை காதல் பற்று இராகம் இட்டம் மெச்சு இவறல்
மாதர் விழைவு ஏட்டை வெஃகல் வாஞ்சை பெட்பு அபேட்சை விருப்பு
ஆதரம் வீழ்வு ஏக்கறவு ஆசை
** 633

#31
மால் விரகம் காமம் மதன்நோய் மோகம் தூங்கல் மந்தம்
ஆலசியம் சோம்பு விடாய் ஆயாசம் மேல் வருத்தம்
ஆய்வு அயர்வு அணங்கு அனுக்கம் ஆகுலம் கவற்சி நொசிவு
ஓய்வு உயங்கல் தாவும் உரை
** 634

#32
தள்ளாட்டு அலைவு குலை சஞ்சலம் சலம் சபலம்
அள்ளாட்டு உலைதல் அதிப்பு துளங்கல் கொள் விதிர்ப்பு
கம்பிதம் பனிப்பு நழுக்கம் பொதிர்ப்பு உடன் பதர்த்தம்
கம்பம் பதறல் நடுக்கம்
** 635

#33
ஏசு பிறக்கு பிழை காசு ஏதம் மை சண்டாளம் வடு
மாசு அழுக்கு இழுக்கு அரில் வழு குறை கோது ஆசு கரில்
பொக்கு அசடு தப்பு புகர் வசை களங்கம் நவை
கைக்கும் தவறு கசடு
** 636

#34
தோம் கறை நோம் பழுது ஆட்சேபம் மறு சோர்வு குற்றம்
வாங்கும் பெருந்திணை ஒவ்வாக்காமம் ஆங்கு ஓர்பால்
இச்சை ஆம் கைக்கிளை இகழ்ச்சி வழுக்கு சோர்வு
பொச்சாப்பு அயர்த்தல் மறத்தல்
** 637

#35
காய்தல் உருத்தல் சலம் சீற்றம் கதம் கறுப்பு
தீய பவம் தொந்தம் செயிர் வெகுளி பாய் முணவல்
செற்றம் குரோதம் சிவப்பு உருத்திரம் வயிரம்
பற்று அரில் கலாம் சினம் கோபம்
** 638

#36
பித்தம் உன்மாதம் சோபம் பேது ஏமம் மோகம் மயல்
மத்தம் வெறி மால் கழுமு மாழாப்பு உன்மத்தம் மருள்
பிச்சு அனந்தர் ஏடணை பிராந்தி இலகிரி மான்று
அச் சோகம் மாழ்கல் மயக்கம்
** 639

#37
கோரம் அடுப்பு உட்கு வெறி கொன் வெறிப்பு உரும் வீமம்
பீர் வெடி பயானகம் சூர் பீதி வெருஉ தாருணம் நாம்
பேம் பயம் பனிப்பும் அச்சப்பேர் துரிதமே கவனம்
காண் பிரமம் மூன்று கலக்கம்
** 640

#38
சீரணம் சிதம்பு செடி சீத்தை குணமின்மை ஆம்
வாரம் ஓரம் பக்கவாதம் ஆம் காரணமே
வாயில் நிமித்தம் வகை பொருட்டு ஏது திறம் ஆம்
தோயும் மங்கலம் சுச் சுபம்
** 641

#39
பாரம்பரியம் பரம்பரை பாந்தம் முறை
யாரும் பதில் பரியாயம் பிரதி சேர் பிறிது
மற்றை எதிர் ஏனை மறுமை வினைக்கேடு செய
லற்றிடுதல் கையறவும் ஆம்
** 642

#40
தோரணை ஆடம்பரம் இடம்பம் பிரகடம் ஆம்
கோரம் கண்டம் தறுகண் கோடணை குரூரம் வன்கண்
நெட்டூரம் உக்கிரம் கொடூரம் அகடம் கடினம்
கட்டம் கடுமை கொடுமை
** 643

#41
வித்தகம் வியப்பு இறும்பூது ஆச்சரியம் விம்மிதமும்
சித்திரமும் அற்புதமும் உற்பனமும் சித்தம் இசை
தங்கு அதிசயப்பேர் சந்தேகம் அனுமானம் ஐயம்
சங்கை கடுப்பு சமுசயம்
** 644

#42
வீற்று விள்ளல் பேதம் விரோதம் விபரீதம் விகடம்
வேற்றுமை மாறு அன்னியம் பின்னம் விகிர்தம் மேல் திரிவு
மாற்றம் விரூபம் விகற்பம் வேறு ஆம் கயம் கீழ்மை 
ஆற்பணம் பிரீதி அற்புதம்
** 645

#43
ஊதியம் விருத்தி பிரயோசனம் இலாபம் வியன்
வாதைஇல் பயப்பு அதியம் வட்டி பலன் மா தகவு
செப்பம் நடுநிற்றல் விறுதா வீதா வம்பு அவம் கொன்
மெய்ப் பயனிலாமை இவை வீண்
** 646

#44
கைதவம் பட்டிமை மாயம் சாட்டியம் நடலை
குய்யம் வஞ்சம் குத்திரம் கூடம் குடிலம் மொய் கபடம்
வல்ல புள்ளுவம் சூது வஞ்சனையும் வஞ்சகம் முட்
டில்லாமை தாராளமே
** 647

#45
மானம் தம் மேன்மை குன்றா வன்மை ஆம் நாமம் அபி
தானம் பேர் சாபல்லியம் சபலம் ஆன சித்தி
பேசு நிறைவேற்றம் தெளிவு பிரசன்னம் நிருத்
தாசனமே விமரிசம்
** 648

#46
முத்திரை இலச்சினை இலிங்கம் இலக்கு குறி ஆம்
அத் தெளித்தல் தேற்றல் உணர்த்துதல் போதித்தல் உப
தேசம் தெருட்டலும் ஆம் ஓர்தல் குறிக்கோள் துணிவு
தேசுஆர் கடைப்பிடி தேற்றம்
** 649

#47
குச்சிதம் பயிர்ப்பு அருவருப்பு ஆம் சடைவு கத்து
வைச்ச வந்தி மோடி வலித்தல் கட்டி மெச்சு உறுதி
வற்புறுத்தல் ஆம் சும்மா வாளா கேளா மூகம்
நல் பேசா மோனம் மவுனம்
** 650

#48
கொள்கை மதம் அபிப்பிராயம் சமையமும் ஆம்
உள் ஒருமை தோட்டிமையும் ஒற்றுமை ஆம் குள்ளம் வண்டு
செய் இடும்பு சண்டம் கராளம் வம்பும் சிற்றொழுக்கம்
கையடை அடைக்கலப்பேர் காண்
** மனக் குணவர்க்க முற்றும் 
** 4 குண நாமப் படலம் 

@42 உயிர்ப்பொருள் 2 வாக்குக் குணவர்க்கம்
** 651

#1
சொல் பறை கீர் வாணி கதை தோல் வசனம் காதை பனு
வல் பதம் தீர்ப்பு கிளவி வாக்கு மொழி நல் வார்த்தை
கூற்று நொடி செப்பு குயில் உரை இயம் பேச்சு
மாற்றம் இசை வாக்கியமும் ஆம்
** 652

#2
உரைத்தல் விளம்பல் புகறல் ஓதல் செப்பல் ஆடல்
விரித்தல் அறைதல் கதைத்தல் விள்ளல் தெரித்தல் பன்னல்
ஏற்று இயம்பல் பேசல் இசைத்தல் பகர்தல் தன் நுவறல்
சாற்றல் நவிற்றல் மொழிதல்
** 653

#3
கூறல் நொடித்தல் மிழற்றல் தீர்த்தல் குயிறல் சொற்றல்
ஊறு சொலல் ஆம் மீதுரை பலகால்கூறல் துதி
வாழ்த்தல் மெச்சல் போற்றல் வழுத்தல் பரசல் தோத்திரமே
ஏத்தல் பழிச்சல் பரவல் என்
** 654

#4
வாசகமும் பாசுரமும் வக்கணை ஆம் ஆசில்வாழ்த்து
ஆசிடை திட்டு அம்பல் பரியாசம் நிந்தை சீ சி எஏ
ஏச்சு உவர்ப்பு இகழ்ச்சி பழிப்பு எள்ளல் வைதல் கவ்வை அவர்
தூச் சிறுசொல் ஏய் இளி தீச்சொல்
** 655

#5
மெய் சரதம் ஆணை உண்மை சத்தியம் வேளாண்மை நிலை
வை சாதம் தீர்க்கம் நிசம் வாய்மை திடம் செய் பரமம் 
நிச்சயம் ஆம் பொய் பழுது நீள் பிசி வலற்காரம் 
மிச்சை சடம் பேடு பொக்கமே
** 656

#6
கொண்டியம் குஞ்சம் தொடுப்பு கோள் பிசினம் சாடி குறள்
அண்டு கொடுவாய் புறங்கூற்று ஆம் பாடை ஒண் திசைச்சொல்
தேசிகம் கடா உசா ஆம் வினா செப்பு எதிர்சொல்
ஏசுஇல் விடை உத்தரம் இறுப்பு
** 657

#7
ஆரியம் சங்கிருதம் அண்டர்சொல் பிராகிருதம்
சீர் வடசொல் ஆம் கிரந்தம் தென்சொல் தமிழ் ஓரும்
திராவிடம் ஆம் யாப்பு தூக்கு கவிதை செய்யுள்
பராவு கவி பா தொடரும் பாட்டு
** 658

#8
வெள்ளை முற்பா வெண்பா வியன் அகவல் ஆசிரியம்
கொள்ளும் கலி முரற்பா கூன் தனிச்சொல் துள்ளும்
அசையடி அம்போதரங்கம் ஆம் முடுகு அராகம்
இசை சுரிதகம் கலிப்பா ஈறு
** 659

#9
எண் ஆம் கணக்கு எழுத்து இலக்கணம் வியாகரணம்
திண் இயலும் ஆம் சோசியம் கரணம் எண் கணிதம்
சோதிடம் ஆம் வாகடம் சந்தோபிசிதி ஆயுள்மறை
ஆதல் வயித்தியநூல் ஆம்
** 660

#10
சாத்திரம் அங்கம் பிடகம் தந்திரம் தந்து ஆரிடம் நூல்
ஏத்து இலக்கியம் பனுவலே சமையம் சூத்திரம் ஆம்
நொய்து ஆகமம் சிறப்புநூல் அனாதிநூல்
ஐது மனு குய்யம் மந்திரம்
** 661

#11
மந்திரத்தின் எண் உரு ஆம் உச்சரித்தல் மந்திரத்தைச்
சிந்தைசெய்தல் மந்திரத்தைச் செப்பல் செபம் முந்தி ஒன்றை
ஓர்பொருட்டால் சொல்லியதை ஓர்பொருட்டால் பின்னும் வைத்தல்
சோர்வுஇல் அனுவாதம் எனச் சொல்
** 662

#12
ஆதிநூல் சாகை இருக்கு ஆரணம் ஓத்து சுருதி
கேது பொதுநூல் எழுதாக்கேள்வி மறை வேதம் அதின்
பாகை கன்மம் ஞானம் அத்தம் வைதிகம் அப் பாதை பொருள்
ஆகும் உபநிடதம் ஆங்கு
** 663

#13
தோன்று இருக்கு பௌடிகம் முன்வேதம் இரண்டாம்சுருதி
சான்ற எசுரு தயித்திரியம் மூன்று உதாத்
தானுதாத்தம் சாமம் நான்கு அதர்வணம் தலைச்சொல்
வான் குடிலையே பிரணவம்
** 664

#14
இலம்பகம் பரிச்சேதம் ஏற்ற அத்தியாயம்
கலந்த சருக்கம் படலம் காண்டம் கொலும் படலத்
துன்னல் வியாக்கியானம் உரை கொல் பொழிப்பு பிண்டம் ஆம்
அன்னுவயம் சொல்கூட்டல் ஆம்
** 665

#15
இன்மை பிறிது ஏற்றம் மறை ஆக்கும் வடசொல் முன்வரும்
அந் அ ந நி கு வி முன் அறைந்த பொருள் பின்னும் வைத்தல்
சோர் புனருத்தம் படலம் சூழ் பல்இனக்கூட்டு ஆம்
ஓர்இனக்கூட்டு ஓத்து என்று உணர்
** 666

#16
ஆய் பதிகம் நாந்தி அணிந்துரை நூன்முகம்
சாய்வுஇல் முகவுரையும் தந்துரையும் பாயிரம் ஆம்
ஒப்பு எடுத்துக்காட்டு இதியாசத்தோடு உபகரணம்
வெப்புஇல் உதாரணம் ஆமே
** 667

#17
கோதுஇல் சகுனம் விரிச்சி கோள் குறி வாய்ப்புள் நிமித்தம்
மூதுரை புராணம் முதுசொல் கதை வாது பிர
மாணம் வஞ்சினம் விரதம் சூள் சபதம் ஒட்டல் வட்டிப்பு 
ஆணை பந்தயம் சத்தியம்
** 668

#18
தற்புகழ்ச்சி தர்ப்பம் நெடுமொழி வினா விடையாய்ச்
செப்பல் சல்லாபம் பிரத்தாபம் பிரசங்கப் பேர் சொல்
ஒன்றே அலட்டல் பிதற்றல் ஆம் முகமன் சன்மானம்
மென்சொல் உபசாரம் நயமே
** 669

#19
கொஞ்சல் மிழலை உல்லாபம் குதலையே மழலை
அஞ்சு உழறலே குழறல் ஆம் வழுச்சொல் மிஞ்சு புகழ்
கீர்த்தி பிரதாபம் ஒளி கேள் பிரபலம் தோற்றம்
சீர்த்தி சுவேதம் இசை சீர்
** 670

#20
ஏற்றம் கியாதம் மெய்ப்பாடு ஆம் உறுதிச்சொல் கழறல்
ஏற்று இடிப்பு ஆம் கூகனம் இடக்கர் மறைக்கூற்று ஆம்
அழைத்தல் இகுத்தல் கரைதல் கேதல் அகவல்
விளிப்பு ஆகருடணம் கூவல்
** 671

#21
அன்னோ அந்தோ ஆ ஓ அக்கோ ஐயோ அம்மோ
என் எற்று இரக்கச்சொல் ஓம்படையே பின் வேண்டல்
தர்க்கம் வாதம் குதர்க்கம் தான் விதண்டை ஞாயச்சொல்
வைக்கும் விவகாரம் வழக்கு
** 672

#22
அத்தம் பயன் தாற்பரியம் பொருள் ஆம் அ
னத்தம் அது இன்மை பிசி நற்பொருள் வாசித்தல் படிப்பு
ஓதல் அத்தியானம் உயர் சிரவணம் கேள்வி
வாது அமர்க்கழைப்பு அறைகூவல்
** 673

#23
வன்னம் பொறி இலிகிதம் கணக்கு இலேகை வரி
தன்மை இலிபி எழுத்து அக்கரம் ஆம் பின் அகரம்
னக் கரம் காரம் கான் அச் சாரியை நல் தீர்க்கம் விலங்கு
அக் கோடு எழுத்தின்உறுப்பு ஆம்
** 674

#24
ஆவி சுரம் அச்சு இருசுவம் குறில் ஆம் தீர்க்கம் நெடில்
ஓவுஇல் புள்ளி மெய் புலுதம் ஒற்று ஆய்தம் மேவு தனி
அக்கேனம் புள்ளி அ இ உ சுட்டு ஆம் யார் யாது ஓ
எக் கொல் எவன் யா என் வினா ஈறு
** 675

#25
நேர் எதிர் தூக்கு அன்ன நிகர் மலைவு ஆங்கு ஏய்வு இணை வீழ்
ஏர் படி சமம் தகை போல் இன்ன கடுப்பு ஓர் துணை கேழ்
ஒப்பு அனைதல் மானல் கதழ்வு எள்ளல் உறழ் துல்யம் இகல்
நல் புரை வத்து அற்று உவமானம்
** 676

#26
சின் குரை ஓரும் பிற மாது இட்டு இருந்து ஆம் தாம் தான் ஐ
என் பிறக்கு அரோ கா போ என்ப மதி அன்று இரும் ஆல்
யா அசை மியா மாள யாழ அத்தை வாழி மதி
மோ இக ஈ முன்னிலைஅசை
** 677

#27
என்று என ஓ தஞ்சம் மன் கொன் எற்று அந்தில் ஆங்கு ஒடு மா
மன்ற தில் கொல் அம் தெய்ய மற்று உம் எனா என்றா ஏ
மின்னு பொருள்கொள் இடைச்சொல் வேற்றுமைப் பேர் ஐ ஆல் கு
இன் அது கண் விளி என்று எட்டு
** 678

#28
வல்லிசை எச்சு உச்சம் மந்தம் மந்திரம் காகுளி தக்கு
அல்ல மத்திமம் பஞ்சமம் கானம் சொல் வரி பாண்
கேயம் வன்னம் கந்திருவம் கீதம் இராகம் கொளை பாட்டு
ஏய்மனி பண் காமரம் இசை
** 679

#29
ஏழிசை குரல் துத்தம் இன் கைக்கிளை உழையே
தாழ்வுஇல் இளி விளரி தாரம் அவை யாழ் மிடறு
நாக்கு அண்ணம் சென்னி நுதல் நெஞ்சு மூக்கில் பிறக்கும் 
நீக்கு அக்கரம் ஏழ்நெடில்
** 680

#30
சேர் நான்கு நான்கு மூன்று ஓர் இரண்டு நான்கு மூன்று
ஓர் இரண்டு ஆம் மாத்திரை வண்டு ஒண் கிளி மா வாரணமே
தேரை பசு ஆடு ஒலி பால் தேன் கள் நெய் ஏலம் கதலி
தூர் மாதுளம் ஏழ்சுவை
** 681

#31
மவ்வல் முல்லை நீபம் வஞ்சி நெய்தல் மகிழ் புன்னை மணம்
அவ் விசுவாமித்ரன் இமன் அங்கி திங்கள் வெவ் அருக்கன்
கோதமன் காசிபன் ஏழ்கோ இசைக்கு ஆம் யாழின் இசை
ஏதமிலாத் திறன் எழால்
** 682

#32
கோசனை இயம் துழனி கோடணை முழக்கு ஓதை
பூசல் களன் சும்மை புலம்பல் சத்தம் ஓசை தொனி
ஆரவாரம் கருதி ஆர்ப்பு இசை ஆகுலம் பாடு
ஓர் வெருளி நாதம் உரை
** 683

#33
இரைதல் உலம்பல் இரட்டல் சிரற்றல்
குரை சிலைப்பு இயம்பல் குமுறல் முரலல்
அலம்பல் கனைத்தல் அரற்றல் அழுங்கல்
சிலம்பல் துவைத்தல் தெளிப்பு
** 684

#34
குமிறல் திமிலம் குமிலம் தெவிட்டல்
பிளிறல் நரலல் பிரற்றல் உளர்தலே 
கோலாகலமே கொழித்தல் குமுதம் முக்கல்
மேலாம் மருமரஞ்சமே
** 685

#35
கம்பலை சிலும்பல் கலகம் பயிர்ப்பு உரற்றல்
பம்பு தமரம் படுதல் விம்மல் வெம்பு அரவம்
காய் கதித்தல் ஏங்கல் கலித்தல் உழைத்தல் இடி
ஓய் குருமித்தல் ஒலி
** 686

#36
இம்எனல் ஞெரேல் விண் இழும் சிலீர் திண்என்றல்
பொம்எனல் கணீர் திடீர் பொள்என்றல் அம்எனலே
மெல்எனல் கல்என்றல் விரீர் பளீர்என்னல் முதல்
அல்லின் அனுகரணத்து ஆர்ப்பு
** 687

#37
படபடஎன்றல் அன்றிப் பகபகஎன்றலோடு
தடதடஎன்றலே சளசளஎன்றல் மடமடஎன்றல்
வன் திடுதிடுஎன்றல் வழுவழுஎன்றல் கொழுகொழு
என்றல் முதலாம் விரைவோசை
** 688

#38
மிருகவொலி புள்ளின்ஒலி வீரிடுதல் கூவல்
கரைதல் கத்தல் கூப்பிடல் கனைத்தல் குரைத்தலும் ஆம்
அச்சவொலி கத்தல் அதறல் கதறல் உங்காரம்
எச்சு உரப்பு தாக்கு அதட்டு ஆமே
** வாக்குக் குணவர்க்க முற்றும் 
** 4 குண நாமப்படலம் 

@43 உயிர்ப்பொருள் - செயற்குண வர்க்கம் 
** 689

#1
காரியம் தொழில் காமியம் கிருத்தியம் கிரியை
காரகம் கன்மம் கருமம் வேலை வினை ஓர் செயல் ஆம்
ஆற்றல் இழைத்தல் குயிற்றல் பண்ணல் அயர்தல் வனைதல்
சாற்று இயற்றல் செய்தல் புரிதல்
** 690

#2
உற்பவம் பவம் சனிப்பு உற்பத்தி சென்மம் செனனம்
சொல் பிரசவம் பிறப்புத் தோற்றமும் ஆம்  இப் பிறப்பே
இம்மை உம்மை போம்பிறப்பு இனிப்பிறப்பதே மறுமை 
அம்மை எம்மை எப்பிறப்பும் ஆம் 
** 691

#3
கற்பிதம் படைப்பு நின்மிதம் சிருட்டி ஆக்கல் பிறப்
பிப்பு விதி ஆம் திதியின் பேர் அளித்தல் அப் புரத்தல்
ஓது இரக்கை காத்தல் உடன் நிறுத்தல் நோக்கலும் ஆம்
காதரம் வினைத்தொடர்ச்சி காண்
** 692

#4
ஊறு அணங்கு எருக்கல் ஒழித்தல் சங்காரம் படுத்தல்
கோறல் முருக்கல் சவட்டல் சாடல் அடல் நூறல் எற்றல்
வீட்டல் வதை காதுதல் செகுத்தல் கொலை நிக்கிரகம்
நாட்டு முடித்தல் மாரணம்
** 693

#5
பாரணம் சாப்பாடு அயிறல் பக்கித்தல் மாந்தல் தின்றல்
ஆர்தல் நுகர்தல் அமுதுசெய்தல் சேர் மிசைத்தல்
கைதொடல் அசித்தல் பொசித்தல் அருந்தல் துய்த்தல்
எய்து துவ்வல் கொள்ளல் உண்டலே
** 694

#6
உபவாசம் பட்டினி இலங்கனம் துவ்வாமை
உபோடிதம் ஆம் சாகரம் தூங்காமை தபு படுதல்
வண் பள்ளி நித்திரை வளர்ச்சி துஞ்சல் தூங்கல் துயில்
கண்படை அனந்தர் உறக்கம்
** 695

#7
எழுப்பல் உணர்த்துதல் ஆம் மீலனம் இமைத்தல்
விழிப்பு ஊற்றல் வார்த்தல் வடித்தல் ஒழுக்கல் விடல்
பானம் பருகல் குடித்தல் சொற்பனம் கனவு ஆம்
ஆன நனவே சகலம் ஆம்
** 696

#8
காரணம் காரியம் இரண்டு அவத்தை காரணத்தின்
பேர் சகலம் கேவலம் பிரேரகமே ஓர் சுத்தம்
காரியம் சாக்கிரம் கனா சுழுத்தியே துரியம்
ஆர் துரியாதீதம் என ஐந்து
** 697

#9
கருவி எலாம் சார்தல் கனி சகலம் ஆகும்
கருவி குன்றல் கேவலம் ஆம் குன்றும் கருவி அருள்
கூட்டுதல் பிரேரகம் ஆம் கூர் கருவி பொய் எனக் கண்டு
ஓட்டுவதே சுத்தம் என ஓர்
** 698

#10
சாக்கிரம் மருட்காட்சி தங்கு கனா பொய்க்காட்சி
ஆக்கு புலனடங்கல் ஆம் சுழுத்தி காக்கும்
மனமடங்கல் ஆம் துரியம் வாயு அடங்கத்
தனி உயிரே நிற்றல் அதீதம்
** 699

#11
காரணங்கள் நான்கு அவற்றின் காரியம் நாலைந்து ஆக
ஈர் அவத்தை எண்மூன்று ஐந்தைந்து ஆகப் பேர்கள் நடு
ஆம்அவத்தை கீழ்அவத்தை மேல்அவத்தை நின்மலம் என்று
ஆம் அவத்தை ஆம் காரியம்
** 700

#12
மீறு அவத்தை பற்றும் ஒன்றைவிட்டு ஒன்றைப்பற்றுதல் ஆம்
வேறில் பிரேரகம் செய்வித்தல் ஆம்  கூறு அகைத்தல்
ஊர்தல் எய்தல் உய்த்தல் உகைப்பு ஓட்டல் நடவல் கடவல்
சார் செலுத்தல் தூண்டல் நடாத்தல்
** 701

#13
கேளி ஒப்பு இலீலை பொய்தல் ஓரை கிரீடை பண்ணை
வீழும் கெடவரல் விலாசனையே சூழ் தொடலை
வண்டல் விளையாடல் குலா மெச்சல் வினோதம் பாராட்டு
அண் பொழுதுபோக்கல் கொண்டாட்டு ஆம்
** 702

#14
மன்றல் விவாகம் தீவலஞ்செயல் கைப்பற்றல் வரைவு
அன்றி மணம் வேட்டல் கல்யாணம் வதுவை என்ப விழா
உச்சவம் துணங்கறல் சேறு முருகு சாறும் ஆம்
கைச்சிடா நுங்கல் விழுங்கல்
** 703

#15
வேள்வி உபகாரம் வண்மை வீசல் உதவல் வழங்கல்
நீள் விதரணம் கவிகை நீட்டல் இடல் ஆள் அருளல்
தானம் வேளாண்மை உதாரம் தரல் வள்ளன்மை அளிப்பு
ஆன் விரவு ஈகை கொடை ஆம்
** 704

#16
பெய்தல் வருடித்தல் சொரிவு எக்கல் பொழிதல் வேண்டல்
கொய் வாங்கல் ஏற்றல் கோள் கோடல் கொள்ளல் கை வரையாது
ஈகை கொடைமடம் ஈயாமை உலுத்தம் பிசினம்
வாகுஇல் உலோபம் இவறல்
** 705

#17
காவல் கடி காப்பு ஏமம் சேமம் அரண் வேலி கட்டி
பாவு கதவு ஆம் ஓம்பல் பாதுகாப்பு ஓவுஇல் பிச்சை
பிண்டம் ஐயம் பாசம் பிடிகம் பலி சரிதை
அண்டு இரப்பு உடன் பயிக்கம் ஆம்
** 706

#18
ஆராதனை வழிபாடு அர்ச்சனை உவாசனையும்
சீராரும் பூசனை ஆம் தெண்டன் நமக்காரம்
வணங்கல் பணி தாழ்வு இறைஞ்சல் வந்தனை வந்தித்தல்
குணங்கல் ஒழுங்கறுதல் ஆம்
** 707

#19
வாயில் சந்து தூது ஆம் வேய் ஒற்று உலவல் ஆம் வழங்கல்
ஆய் தொழல் கைகூப்பல் கும்பாடு அஞ்சலி ஆம் பாய் வேள்வி
எச்சம் கிருது ஓமம் யாகம் இட்டி யூபம் மகம்
அச்சின் இணுங்கல் கொய்தல் ஆம்
** 708

#20
தொண்டு பரிசாரம் தொழும்பு நிமந்தம் சபரி
கண்ட பணி ஆம் வரல் ஆகந்துகம் ஆம் உண்டதறல்
சீரணம் செரித்தல் செரியாமை அபிவாசனம் அ
சீரணம் குருத்துவமும் செப்பு
** 709

#21
காட்சி தெரிசினை நோக்கம் பார்வை காண்டல் கண்ணல்
மீட்சி வக்கிரம் திரும்பல் மீளல் ஆம் ஏச்சுஇல்
சிறக்கணிப்பு அபாங்கம் கடைக்கணிப்பு ஆம் சீய்த்தல்
அறப் பெருக்கல் தூர்த்தல் துடைப்பு ஆம்
** 710

#22
பம்முதல் மூசல் கவித்தல் மூடல் பரப்பு ஊழ்த்தலும் ஆம்
தும்மலின் பேர் மூச்சு சுவாசம் ஆம் விம்மலின் பேர்
உப்பல் பொருமல் புடைத்தல் ஊதுதல் வீங்கலும் ஆம்
துப்பல் உமிழ்வே காறல் சொல்
** 711

#23
கூம்பாச் சிரம்பணம் ஆவித்தலும் கொட்டாவி அங்காப்பு
ஆம் பேரே வாய்பிளத்தல் மூரி நெட்டி சோம்பு ஆம்
விரியல் பரப்பல் விளம்பல் பாரித்தல்
பரிமாற்றமும் படைத்தல் ஆம்
** 712

#24
புல்லல் கிரீடை புணர்ச்சி கூட்டம் கலவி
வல்ல விழைவு ஆடல் சங்கம் மைதுனம் ஆம் சொல் புலவி
ஊடல் துனி அத் தீர்ப்பு உணர்த்தல் ஆம் தேய்த்தல் சிதைப்
போடு உரைப்பு உரிஞ்சல் உரோசல்
** 713

#25
ஆலிங்கனம் தழுவல் விள்ளல் முயங்கலும் ஆம்
மேல் இரங்கல் ஏங்கல் இனைவு அழுங்கல் நாலல் தொங்கல்
தூங்கல் ஆம் நாற்றுதல் தூக்கல் பேர் சுமத்தல் பரி
தாங்குதல் தரித்தல் பொறுத்தல்
** 714

#26
பூசல் வரித்தல் புலர்த்தல் அங்கராகமும் ஆம்
பூசல் மண்ணல் வேய்தல் புனைதல் வனைதல் வீசு அணிதல்
ஒப்பனை கைசெய்தல் அலங்கரித்தல் ஆம் செருகல்
கப்புஇல் அடைச்சல் சொருகல்
** 715

#27
வளைத்தல் வளாகம் வலத்தல் சூழ்தல் சுற்றல் பாதீடு
அளித்தல் மடுத்தல் செறித்தல் பெய்தல் தளிர்த்தல்
சிலிர்த்தல் கிளைத்தல் துளிர்த்தல் ஆம் சூட்டல்
மிலைச்சல் தரித்தல் மலைவே
** 716

#28
பற்றல் பிடி மூளல் தொடல் ஊறு பரிசம் துவளல்
சொல் திவளல் ஆம் தேடல் நேடல் துரு நல் தேர்தல்
கையரிக்கோள் நாடல் ஆய்வு ஆம் அபகாரம் கவர்தல்
கொய் வளைத்தல் வாரல் வவ்வல் கோள்
** 717

#29
சாவு இறப்பு அவன்றல் விளிதல் முடிதல் துஞ்சல் முஞ்சல்
மாய்வு இலையம் மாளல் மரித்தல் விழல் வீவு அடைதல்
போக்கு மிருதம் தபுதல் பொன்றல் நசித்தல் மரணம்
ஆக்கு அமுக்கல் பேர் ஞெமுங்கல் ஆம்
** 718

#30
சமர் சமிகம் பூசல் செரு சங்கிராமம் தீய்த்தல்
அமர் உடன்றல் போர் மறன் ஆயோதம் சமம் மலைதல்
மொய் இகல் ஞாட்பு ஆகவம் முரண் பொருதல் சல்லிகம் நேர்
எய் இரணமும் சண்டை யுத்தமே
** 719

#31
முட்டல் எற்றல் தாக்கல் முடுகல் எதிர்த்தல் கிடைத்தல்
கிட்டல் தலைப்படல் ஆம் கீழ்ப்பகையூர் அட்டல் வள்ளை
சார்ந்திடிலடாமை தழிஞ்சி கொள்ளை கொண்டி சூறை
பாந்தல் ஒடுக்கம் பதுக்கு ஒதுக்கு
** 720

#32
உடைவு இரிதல் சாய்தல் சரிவு ஓட்டம் நெரிதல்
இடைதல் கெடல் தோற்பு ஆம் இறுதல் ஒடிதல்
முரிதல் ஒசிதல் முசிதல் இடிதல்
பரிதல் ஞெமிர்தல் முறிவு
** 721

#33
எற்றல் அறை மோதல் அடித்தல் பேர் எறிதல் எற்றல்
குற்றல் புடைப்பே தகர்த்தல் குட்டுதல் ஆம் நிற்றல் நிலை
நின்றிடல் பேர் ஆம் கசிதம் நீள் அழுத்தல் ஆம் பதித்தல்
கொன்று குவிப்பது நூழில்
** 722

#34
நட்டம் நடை வாணி நடனம் தாண்டவம் நிருத்தம்
நட்டணை தூக்கு படிகம் நாட்டியமே ஒட்டு கண்ணுள்
நாடகம் கூத்து ஆட்டு நடம் ஆம் நடித்தல் தூங்கல் பெயர்வு
ஆடல் அசைவு ஆலல் அகவல்
** 723

#35
கூர் பேடு மாரன் கொடுகொட்டி பாண்டரங்கம்
காபாலம் ஈசர் கடையம் சசி பொன் சேர் பாவை
மல் அல்லியம் குடம் மால் வண் மரக்கால் துர்க்கை குடை
நல்ல துடி செவ்வேள் நடம்
** 724

#36
கைகோத்தாடல் குரவை கைகுவித்துக்கொட்டல் கொம்மை
கைகூப்பி மெய்கோட்டல் காண் குடந்தம் செய் துணங்கை
தோள்கொட்டல் குஞ்சிதம் கால்தூக்கிநிற்றல் ஆவலமே
ஆள் கையால்வாய்கொட்டல் ஆம்
** 725

#37
பிரமரி வீரட்டானம் பித்தம் உள்ளாளம்
புரியம் அலைப்பு கரணம் பரதமும் கூத்
தின் விகற்பாம் தாளம் ஒத்து சீர் இலையம் பாணி சதி
மன்னு பருமித்தல் சிரமம்
** 726

#38
கொட்டிக் கைகூப்பல் குடம் வெறி கழங்கு அணங்கு ஆம்
வட்டணை அடித்தல் ஒற்றல் வட்டித்தல் கொட்டல் தட்டல்
துவ்வு அனுபவம் விடையம் போகம் துப்பு ஐ வழி ஊண்
அவ் விசுவாசம் சிரத்தை ஆம்
** 727

#39
ஆற்றுப்படை தான் வழியெதிர்த்தல் ஆம் விலக்கல் 
மாற்றல் மறை தட்டல் காப்பு ஆம் மறுத்தல் ஆற்றறுத்தல் 
உள்வலியழித்தல் உழக்கல் குழப்பல் ஆம் கொழித்தல் 
தெள்ளல் வரன்றல் தெளித்தல்
** 728

#40
தீட்டல் வரித்தல் பொறித்தல் கீறல் தெரித்தல் வரைதல் 
மாட்டின் எழுதுதல் ஆம் மாட்டல் பொத்தல் மூட்டல் ஆம்
முண்டிதம் சிரைத்தல் மழித்தல் வபனம் சவுரம் 
சுண்டல் தெறித்தலும் மீட்டல்
** 729

#41
தட்டல் சிறை வாரணம் தடுத்தல் தகைவு ஆம் தடைப் பேர் 
கட்டல் குற்றல் ஆம் களைதல் கட்டல் கள்ளல் பட்டி திருட்
டுப் படிறு சோர்வு கரப்புக் கரவடம் களவு ஆம் 
தைப்பே பொல்லம் துன்னம் யாத்து 
** 730

#42
மூரல் இளி ஆசம் முறுவல் நகை சிரித்தல் 
பேர் அசி நிந்தைச்சிரிப்பு இறங்கல் அவதாரம் அவ
ரோணம் சுதம் இழிவு ஆம் மோத்தல் உயிர்ப்பு ஆக்கி
ராணம் இளக்கம் நெகிழ்வு ஆம்
** 731

#43
ஏறல் ஆரோணம் ஆரூடம் மீக்கோள் இவர்தல்
சேறல் கழிதல் செலவு ஏகல் கூறு இறப்புப்
போகல் ஆம் ஊறல் பொசிதல் கசிதல் சுரத்தல்
ஆகும் பழுத்தல் கனிவு ஆம்
** 732

#44
ஓடலின் பேர் பாறல் உடன் நிமிர்தல் நீளலும் நே
ரோடலின் பேர் ஆதியும் வீதியும் மாவோடல் சுற்று
வாளி மண்டிலம் சாரிகை மாதி ஆம் சூழல்
தோளல் குயிறல் துளைத்தல்
** 733

#45
நடை கதி சஞ்சாரம் வியாமம் சரித்தல்
படர்தல் நடத்தல் தண்டல் பற்றல் இடல் போடல்
கொட்டல் விடைத்தல் வெளிக்கோள் அலைதல் ஆஞ்சி ஞொள்கல்
ஒட்டு எறிதல் வீசுதல் ஓச்சல்
** 734

#46
மடக்கம் நொறில் குத்தி அபவாதம் சமாதி
முடக்கம் உத்தியாபனம் முணங்கே ஒடுக்கம்
அடக்கம் ஆம் ஆக்கல் அடுதல் சமைத்தல்
வடித்தல் பாகம்புரிவது ஆம்
** 735

#47
தாழ்தல் இறுத்தல் அல்கல் தங்கல் வசித்தல் வைகல்
வாழ்வு வதிதலோடு அமர்தல் ஆம் இருத்தல் வீழ்தல்
விழல் அவைத்தல் குற்றுதல் ஆம் விம்மல் கலுழ்தல்
அழல் கரைவு உரோதனமும் ஆம்
** 736

#48
இசைதல் ஒட்டல் கோத்தல் புணர்வு ஏலல் இயைவு ஆகும்
அசைதல் சொரியல் அளைசல் ஒசி இயங்கல்
பாழல் துயல்வரல் ஆம் பன்னும் உவனித்தல் உப
லாளனமும் தூய்மைசெய்தல் ஆம்
** 737

#49
ஆரோபம் கற்பிதம் அத்யாசம் ஒன்று ஒன்றாய்த் தோன்றல்
வேர்வை கசிவு சுவேதம் வெயர்வு ஆம் ஓர் களித்தல்
கள்குடித்தல் பீச்சல் கறத்தல் அகழ்தல் கிளைத்தல்
தொட்டல் கொத்தல் நெண்டலும் தோண்டல்
** 738

#50
சிதர்த்தல் உகுத்தல் சிதந்தலே ஊழ்த்தல்
துதி சிதறல் தூற்றல் இவை தூவல் நொதுத்தல்
நதுத்தல் அவித்தல் நவித்தலும் ஆம் வேதல்
கதுவாய் வடுப்படல் காயம்
** 739

#51
நண்ணல் ஒன்றல் தோய்தல் நணுகல் அணவல் எய்தல்
அண்ணல் அடுத்தல் அமைதல் ஒட்டல் ஒண்ணல் அண்டல்
அல்கல் அணுகல் அடைதல் கெழுமல் புல்லல்
ஒல்லல் மருவல் உறல்
** 740

#52
சேர்தல் அணைதல் சிவணல் தட்டல் கூடல் கிட்டல்
சார்தல் பொருந்துதல் ஆம் தண்டலுடன் சோர்வு அகற்சி
நீங்கல் தணப்பு துறத்தல் நீப்பு ஒருவல் ஆனல் வல்லி
தாங்கு இகத்தல் மாறல் பிரிதல்
** 741

#53
பாகம் பாத்து கூறு பங்கு பால் பாதீடு என்று
ஆகல் பகுத்தல் பேர் அருமைசெய்தல் வாகுறு பே
ராண்மை விபசாயம் கிருசி வேளாண்மை ஊ
ராண்மை ஓங்கிச்செயலே ஆம்
** 742

#54
உத்தியோகம் தாள் உழைப்பு ஊக்கம் உற்சாகம்
எத்தனம் முயற்சி உஞற்று ஆள்வினை ஆம் கொத்து உழவு
தொய்யில் ஆம் ஓப்பல் பற்றல் உச்சாடனம் துரத்தல்
ஒய்யெனல் முடுக்குதல் ஓட்டல்
** 743

#55
வாணிபம் வ்யாபாரம் வணிகம் செட்டு கச்சவடம்
பேண் அரைத்தல் பிட்டுவம் பிழைத்தல் உய்தல் கால் வழுக்கல்
ஆளி சும்பு ஆம் மண்ணல் அலம்பல் கழுவல் பிரச்
சாளனம் நொறுக்கல் தகர்த்தல்
** 744

#56
தப்பல் துவைத்தல் பேர் தாபித்தல் நிறுத்தல் பேர் ஆம்
குப்புறல் மிதித்தல் குதித்தலே செப்பு உகள்தல்
மோதல் உறுக்கல் இவை பாய்தல் ஆம் சீவலுடன்
கோதல் சிணுக்கறுத்தல் ஆம்
** 745

#57
பற்றாருடுகுறைப் பேர் பாகுடம் கப்பம் திறை ஆம்
மற்ற சுங்கம் சாரிகை உல்கு ஆயம் ஆம் முற்றும்
கடன் வரி இறுப்பு கரம் பகுதி தீர்வை
குடியிறை ஆம் கறையும் கூறு
** 746

#58
படுதல் குருத்தல் பரிணமித்தல் நாறல்
தொடும் உதித்தலே முளைத்தல் தோற்றல் பொடித்தலுடன்
அங்குரித்தல் உண்டாதல் ஆம் பிரதிக்கினைப் பேர்
சங்கற்பம் பூட்கை மேற்கோள்
** 747

#59
தெற்றல் பிழைத்தல் திறம்பல் தப்பல் மாற்றமிடல்
முற்றல் முரஞ்சல் முதிர்வு ஆகும் நல் தாண்டல்
தாவல் வாவல் கழித்தல் சாடல் தத்தல் கடத்தல்
ஏவலின் பேர் வியங்கோளே
** 748

#60
தற்றல் இறுக்கல் தடுமாறல் பிறழ்தல் கட்டல்
ஒற்றல் உடுத்தல் விலை மாறல் அகம் விற்றல்
நொடை பகர்தல் நோன்பியற்றல் நோற்றல் ஞெலிதல்
கடைதல் மதித்தலும் ஆம் காண்
** 749

#61
பிரமரி மறுக்கல் அலம்வருதல் ஞொள்கல்
தெருமரல் கொட்பு ஆவிரதம் சூர்த்தல் திரிதல்
சுழலுதல் ஆம் மேளத்தொழில் இயக்கல் ஆகும்
மழைநீங்கிடுதல் வெறிவு ஆம்
** 750

#62
திமிறல் பிசைதல் திருகல் திருமல்
நிமிறல் தெறுத்தல் நெரித்தல் உமிழ்தல் பில்கல்
கொப்பிளித்தல் காலல் பிலிற்றலும் ஆம் யாத்திரையும்
அப் பயணமும் புறப்பாடு ஆம்
** 751

#63
சிகிற்சை பரிகாரம் சாந்தி குழைவு ஒல்கல்
இகுத்தல் விரித்தல் இடத்தல் வகிர்தல்
சொலித்தல் துவர்தலும் ஆம் சொல்லும் அதர்கோள் ஆ
றலைத்தல் வழிப்பறித்தல் ஆம்
** 752

#64
ஆர்த்தல் சிமிழ்த்தல் அணைத்தல் நியாசம் தொடுத்தல்
யாத்தல் பிணித்தல் விசித்தல் பந்தம் ஏத்து அசைத்தல்
வீக்கல் சஞ்சித்தல் இவை கட்டுதல் ஆம் தள்ளுதல் பேர்
நூக்கலே நோன்றல் ஊன்றல்
** 753

#65
மாய்தல் ஞெமிர்வு ஆவரணம் மந்தணம் இராசியமே
மாயை திரோதம் குடிலை மூடல் இவை ஓய் மறைப்பு ஆம்
காடம் மிறுகல் சொறி கண்டூதியும் தினவு ஆம்
சேடமுறும் சம்பிரதம் சித்து
** 754

#66
தீர்தல் ஒழிதல் கழிதல் மோசனம் விரோசனம் நி
வாரணம் நிவர்த்தி விசர்க்கம் தவிர்தல் கூர் தொலைதல்
மோக்கம் விடல் ஆம் முடைதல் நிணத்தல் வலத்தல்
ஆக்கிழுத்தல் பேர் ஈர்த்தல் ஆம்
** 755

#67
காய்வு எரிவு சூடு வெம்பல் கன்றல் வெதும்பல் புகைதல்
தீவு கருகல் புழுங்கல் சேர் சுடல் ஆம் மேவு கும்மல்
துள்ளல் துடித்தல் பேர் தொடுத்தல் துவக்கம் துடங்கல்
கொள் பறித்தல் கத்திரித்தல் கொய்வு
** 756

#68
துண்டித்தல் வெட்டல் துமித்தலுடன் தடிதல்
கண்டித்தலே எறிதல் ஆம் தறித்தல் திண் கொய்தல்
ஏதித்தல் சூலல் கொய்தல் ஈர்தல் விடுவாய் அரிதல்
சேதித்தல் எட்டும் அறுத்தல்
** 757

#69
சுண்டல் வறத்தல் சுவறல் சோர்தல் வற்றல் காய்தல் இஞ்சல்
அண் புலர்தலே முளித்தல் ஆம் உலர்தல் மொண்டல் கொண்டல்
கோதல் முகத்தல் குரல்கல் குனிவு ஆம் போற்றி
யாதல் இடுக்குதல் பேர் ஆம்
** 758

#70
வேதனை உலைத்தல் மிறைத்தல் அகைத்தல் வலித்தல்
போதுவிடிதல் புலர்வு ஆம் உடன்பாடு ஓது இணங்கல்
நேர் வலித்தல் ஒட்டல் சமை சம்மதம் சாமம் தடவல்
பேர் வருடல் தைவரல் நீவல்
** 759

#71
ஏர்பு எழுச்சி பாய்ச்சல் பொலிவு உம்பல் கஞறல் எழல்
தூபிதம் சந்தாபம் சுடப்படுதல் கூர் பெறுதல்
வாய்த்தல் பயத்தல் கிடைத்தல் கிட்டல் சொல்லல் ஈன்றலும் ஆம்
பார்த்த கிடையாமை துல்லபம்
** 760

#72
மூழ்குவித்தல் ஆட்டல் அபிடேகம் முழுக்கே நானம்
மூழ்கல் அமிழ்ந்தல் முங்கல் ஆம் படிதல் ஆழ் குளித்தல்
ஆடலுடன் தோய்தலும் ஆம் பொங்கல் கொதிப்பு ஆம் அயர்தல்
வாடல் தளருதல் சோர்வு ஆம்
** 761

#73
தேம்பல் மெலிவு இளைத்தல் கிரசம் சிரமம் ஞொட்கல்
நாம்பலும் ஆம் கூம்பல் முகிழித்தல் சாம்பல்
குவிதல் விரிதல் மலர்தல் கூர் நெகிழ்தல் விள்ளல்
அவிழ்தல் விகசித்தல் அலர்தல்
** 762

#74
மிச்சிரம் சங்கீரணம் சமேதம் அளாவல் விரவல்
சொல் சகிதம் கீலகம் துழாவல் அசி மெச்சு அயிக்கம்
நீள் கலம்பகம் கலப்பு ஆம் நேமம் பிரார்த்தனையும்
வாழ் நியமம் நீட்டல் வளர்த்தல்
** 763

#75
பீறலே கீன்றல் பிளத்தலுடன் கீழல்
கீறலே கீண்டல் கிழித்தல் ஆம் மீறல்
அதிகாரம் ஆதிபத்யம் மேலீடு மிஞ்சல்
அதிகரித்தல் ஆணைசெலுத்தல்
** 764

#76
வருத்தல் நலிதல் வருவித்தல் வரித்தல்
திரித்தல் வேறாக்கல் முட்டல் தேக்கல் நிரப்பல் உலா
கூர் பவனி ஆம் கொணர்தல் கொண்டெய்தல் வேகம் விசை
தாரை கவனம் கதி அது ஆம்
** 765

#77
பிறகிடல் பின்றல் பிறக்கிடலும் ஆம் நோ
அறல் அயாவுயிர்ப்பு ஆம் அடைதல் உறு புகுதல்
அத்தமனம் ஒன்றில் ஒன்றை ஆக்கல் ஆவாகனம் ஆம்
தத்து நுடக்கம் துவளுதல்
** உயிர்ப்பொருளின் செயற்குண வர்க்க முற்றும்

@44 உயிரில்பொருட் குணவர்க்கம்
** 766

#1
சில்லி கொம்மை கோளகை தட்டு ஆழி வலயம் திகிரி
மல்லம் விருத்தம் பருதி மண்டிலம் பாண்டில் கடகம்
வக்கிரமே விந்து வத்துளம் பாலிகை வட்டம்
சக்கரமும் நேமியும் அது ஆம்
** 767

#2
முண்டம் வட்டுச் சொக்கு விவு முத்தை பந்தம் மாழை குவவு
உண்டை புஞ்சம் சேடு பிழம்பு ஓர் பூகம் பிண்டம் எக்கல்
கொம்மை கணை உருட்சி சோகம் திரட்சி தகடு
ஐமை அடர்ச்சம் அரி ஆம்
** 768

#3
கூன் கோண் குலாவல் வளாவல் குடிலம் குரங்கல்
வாங்கு அனுதல் கோட்டல் வணர் வளைவு ஆம் ஓங்கு
நிரல் ஒழுங்கு தாமம் முறை பாந்தம் நிரை பந்தி
வரிசை அணி நேர் வார் வகுப்பு
** 769

#4
பருமை பிறங்கல் பருஉ பீனம் பிட்டி
விருடியம் பணம் பருத்தல் வேயே சுரி குழல் தூம்பு
இல்லி துளை நாளம் இரந்தரமோடு தமர் கண்
சொல் புரை போடு ஓட்டை துவாரம்
** 770

#5
சங்கம் அவை குப்பை சமூகம் சமட்டி யோகம் நிவ
கம் குவை இராசி கதம்பம் சவை கந்தம் கணம் தோடு
ஆயம் நிகாயம் தொகை கூட்டம் தொகுதி கோட்டி சம
வாயம் குழு திரள் குவால்
** 771

#6
உன்னதம் மேடு ஏற்றம் நிவப்பு உச்சம் மிசை உத்துங்கம்
மன்னல் புங்கம் ஏந்தல் கப்பு வார் நிமிர்வு சொன்ன புரை
ஓங்கல் யோகம் சிகரம் சேண் உயர்ச்சி ஆகும் மொக்குள்
பூம் குமிழ் கொப்புள் புளகம் ஆம்
** 772

#7
கதழ் மலி கூர் பொங்கல் பெருக்கம் கழுமல் ஈட்டம்
மதம் உறு தவ பிறங்கல் சால விதப்பு நனி
பூரிப்பு இறப்பு அமலை பூங்கு சிறப்பு ஆன்றல் மிகல்
பாரில் வெகு நானா பல
** 773

#8
மேன் பணை மோடு ஈடு ஏந்தல் மீளி கெண்யம் மா முடலை
கோன் பொழில் மானம் குவவு வீறு தடம் வான் கருமை
பாடு பகடு அண்ணல் செம்மை பாழி நளி மூரி சுயம்
பீடு இருமை மால் பெருமைப் பேர்
** 774

#9
சாங்கம் நிகிலம் சகலம் முற்று அனைத்து அகண்டம் முழுது
ஆங்கு அடைய யாவும் அகிலம் சமத்தம் ஓங்கு அடங்கல்
சொல் சருவம் எல்லாம் ஆம் தோகம் அற்பம் புன்மை சின்மை
சற்று ஆசு ஒட்டு இட்டிமை கொஞ்சம்
** 775

#10
பூரணம் பரம் திளைத்தல் மல்கல் விட்டுணு துவன்றல்
ஆர்தல் வியாபகம் பிறங்கல் பெருக்கு ஓர் நிறைவு ஆம்
அந்நிறைவின் மிச்சிரம் வியாத்தி வியாப்பியம் தான்
அந்நிறைவின் உள்ளடங்கல் ஆம்
** 776

#11
ஈனம் அஃகல் சிங்கல் குன்றல் எஞ்சல் கிஞ்சம் தேய்வு அருகல்
ஊனம் நூனம் சிறுகல் அல்கல் குறைவு ஆனதின் பேர்
கோட்டம் கோண் ஆரம் அச்சிரம் சதுரம் நாற்கோணம்
காட்டு யந்திரம் சக்கரம்
** 777

#12
துன்னல் செறி கற்றை ததை துற்றல் விரளல் பொதுளல்
பன் நிரந்தரம் திணுங்கல் பம்பல் மொய்த்தல் பின் அடர்தல்
மிண்டல் சடிலம் துறுத்தல் துன்றல் மிடைவே நிபிடம்
மண்டல் துதைவே நெருக்கம் ஆம்
** 778

#13
நுண்மை நொசிவு ஆய்வு நுழை நுட்பம் நுணுகு அணு ஆம்
கண்ணறை யா யாமம் வியல் அகறல் எண்ணு அகலம்
மாயமும் ஆம் நீளம் நெடில் நேர் நெடுமை சேண் கொடியோடு
ஆயதம் ஆம் சேண் சேய் தூரம்
** 779

#14
விரிவு அழுவம் தாவல் விசாலம் விபுலம் மல்லல்
பரவை ஞெமிர் பா பரப்பு பப்பு ஆம் இருசு செப்பம்
செம்மை செவ்வன் செவ்வை பரத்தல் படர்ச்சியே படலை
அண்மை சமீபம் கிட்ட ஆம்
** 780

#15
குறிது முண்டு கூழை கட்டை குட்டை ஆம் தஞ்சம்
மறி சார்பு தாரகம் ஆதாரம் செறி ஊற்றம்
தூக் கந்து தண்டமும் பற்றுக்கோடு ஆம் பொம்மல் பொற்பு
போக்கம் பூ பொங்கல் பொலிவு
** 781

#16
வம்பு வெறி நாற்றம் மரு மன்றல் நறை தேம் மணம் கந்
தம் பரிமளம் கமழ் வாசம் கடி கான் பம்பு விரை
மோதவம் வசந்தம் முருகு ஆமோதம் வாசனை ஆம்
பூதி செடி துர்க்கந்தம்
** 782

#17
தேசு அரி துலங்கல் கதிர் தீவிரம் நிலா தெளி சங்
காசம் விளங்கல் பிரகாசம் வெயில் ஓசம் நகை
வாமம் அவிர்தல் பிறழ்தல் வாள் பிரபை காந்தி கரம்
நீமம் கிரணம் நிழல்
** 783

#18
மின்னல் இமைத்தல் மிளிர்தல் சுடர் வயங்கள்
உன்னும் இலகல் ஒளி தயங்கல் பன்னு இலங்கல்
வெட்டல் ஒடித்தல் வெளிச்சம் திகழ்வு எறித்தல்
கட்டு அலங்கல் வில் சோதிக்கு ஆம்
** 784

#19
சாயல் குரு மேனி புகர் சந்தம் உரு வண்ணம் வரி
ஆய் வருணம் வன்னம் கேழ் நிறம் சாயை நிழல்
வெண்மை செம்மையே கருமை மென் பசுமை பொன்மை என
வண்ணம் ஓர் ஐந்தின் வகை
** 785

#20
வெள்ளை சுப்பிரம் கவுரம் வெள்ளி விளர் சுக்கிலமே
கொள்ளும் விசிதம் குருகு கூர் குருத்து துள்ளும் வெண்மை
பால் சிதம் சுவேதம் நரை பாண்டு அவதாரம் தவளம்
வால் வெளுப்பு அருச்சனமும் ஆம்
** 786

#21
செக்கர் கிஞ்சுகம் சோணம் சேது அரத்தம் அஞ்சிட்டம்
அக் குருதி பாடலம் அராகம் சேய் மெய்க்கும்
சிவப்பு இராகம் பூவல் சேப்பு அருணம் செம்மை
நவிற்றும் உலோகிதமும் நாட்டு
** 787

#22
மால் கருள் காளம் காரி மா கறை மாயம் கருமை
நீலம் இருள் காளகம் கார் நீடு மணி மேல் அசிதம்
காளிமம் களம் கறுப்பு ஆம் காண் புகர் குரால் கபிலம்
நீள் புன்மை புற்கெனும் நிறம்
** 788

#23
பிங்கலம் பீதம் பீதகம் அரித்திராபமொடு
பொங்கு பொன்மையும் பசப்பும் பொன்னிறம் ஆம் தங்கு பச்சை
பாசு அரி அரிதம் பை சாமளம் சாமம்
மாசுஇல் பசுமைநிறம் ஆம்
** 789

#24
பஞ்சநிறத்தில் திரிவுபட்டால் பொதுநிறம் அம்
துஞ்சிச் சலியாது தோன்றி நிற்றல் மிஞ்சு துரு
வம் துவம் தாபரம் ஆம் மற்று உள்ளது சிறத்தல்
கந்தமுறும் கூர்ப்பு கழிப்பு
** 790

#25
நவ்வி பொற்பு அலங்காரம் நன்கு அணங்கு இலாவணம் பொன்
செவ்வி சந்தம் அஞ்சணி அம் சேடு எழில் பூ மெய் விடங்கம்
காமர் உலோலம் தொட்டி காரிகை வாமம் குழகு
தாமம் இராமம் தகை காந்தம்
** 791

#26
பத்திரம் விசித்திரம் பாங்கு ஆரி கவின் மாமை விந்தை
சித்ரம் நலம் யாணர் மயம் தேசிகம் நோக்கு தளிமம்
சுந்தரம் மனோகரம் சொக்கு ஏர் மாழை மாதர் வனப்பு
அந்தம் அணி கோலம் அழகு
** 792

#27
வன்மை மென்மை நொய்து கனம் மாறா வழுவழுப்பே
மென்மையறும் சர்ச்சரையே வெம்மை குளிர் இன்ன எட்டும்
ஊறு ஆம் இனிமை கசப்பு உப்பு துவர்ப்பு எரிப்பு
தூறுஇல் புளிப்பு ஆறும் சுவை
** 793

#28
திண் உரம் தானம் கருமை மூரி மிடுக்கு உம்பல் திறல்
அண்ணல் எறுழ் மைந்து அடல் ஈடு ஆற்றல் துப்பு எண் மதுகை
மல் பலம் மொய்ம்பு ஊக்கம் விறல் மானம் வயம் சத்துவம் தாம்
மல்லல் வலி நோன் மிடல் வன்மை
** 794

#29
மென்மை சுகுமாரம் மிருது ஆம் நொய் இலகு
நொய்மை இலேசு ஆம் கனம் ஞாட்பு பாரம் விம்மு பொறை
சிற்குரு சீர் ஆம் வழுவழுப்பே இழுமெனல் ஆம்
சர்ச்சரையின் பேர் பிணர் அது ஆம்
** 795

#30
வெப்பு உருமம் காந்தல் வெம்மை வெய்து அழல் தாபம் கடிது உ
ருப்பம் அழனம் கருமம் உட்டிணம் தணப்பு நளி
சாந்தம் மழை சீதளம் சீதம் சவுமியம் பனி தண்
ஏம் தனி குளிர்ச்சி சிசிரம்
** 796

#31
ஆம் உருசி சாரம் இரதம் சுவை இனிப்பு அமுதம்
தீம் மதுரம் இன் தமிழ் தித்திப்பு இலவம் ஆமிலமும்
அப்புளிப்பின் பேர் கடாயம் துவர்ப்பு ஆம் உப்பு உவர்ப்பு
கைப்பு கசத்தல் திக்தம் கைப்பு
** 797

#32
கரில் கடுகம் உட்டிணம் காயம் காழ்ப்பு உறைப்பும்
எரிப்பு ஆம் அதில்பேதம் காறல் விருவிருப்பு ஆம்
எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் அளவு ஈர்இரண்டாம்
எண் இலக்கம் தூக்கம் நிறையே
** 798

#33
முந்திரிகை நான்கு ஆகும் காணி அது நான்கு மா
ஐந்து மா கால் அவ்இரட்டி அரை அந்த இணை
ஏகம் ஒன்று இரண்டு இணை துவம் துணையினோடு உகளம்
ஆகு உபயம் மூன்று திரி ஆம்
** 799

#34
நான்கு சதுர் ஐந்து பஞ்சம் ஆறு சட்டு ஏழ் சத்தம் எட்டே
ஊன்றும் அட்டம் ஆம் நவம் ஒன்பான் தசம் பத்து என்ற சதம்
தப்பரு நூறு ஆயிரம் சகத்திரம் அப்பத்து அயுதம்
அப்பத்து இலக்கம் நியுதம்
** 800

#35
கோடி என்ப நூறிலக்கம் கோடியொன்றாய்க் கோடிமா
கோடி மேல் சங்கம் விந்தம் கூர் பதுமம் நீடும்
சமுத்திரம் தாமரை வெள்ளம் பிரளயம் தான்
தமிழ்த் தோரையே யோசனை
** 801

#36
கற்பம் நிகற்பம் கனி மகரம் தண்பனையே
உற்பலம் அற்புதம் என்று ஓர் பதினைந்து இப்பேர்ப்பின்
மாசங்கம் ஆதி பதினைந்து ஆக முப்பதுமே
பேசும் அவ்வக்கோடிகளின் பேர்
** 802

#37
நாழி பிரத்தம் படி அப்பாதி உரி மானிகம் ஆம்
கோளில் உரிப்பாதி உழக்கு குடுபம் ஆழாக்கே
அப்பாதி நானாழி ஆடகம் கஞ்சம் கலசம்
அப்பாதி பாத்திரமே ஆம்
** 803

#38
குறுணி சிவம் எண்ணாழி நாற்குறுணி தூணி
குறுணிஇணை கும்பம் துரோணம் பெறு பதக்கு ஆம்
முத்தூணி ஆம் கலன் மூவேழ்குறுணி கோட்டை சோடு
அத்து உழக்கில் பத்தில் ஒன்றே ஆம்
** 804

#39
சிறங்கை ஒன்றின் பேர் சுளுகை அஞ்சலி இரண்டு
சிறங்கை ஒரு நெல்லெடை மா எண்மா அறைந்த ஒரு
மஞ்சாடி அவ்இரட்டி வல்லம் என ஆம் இருபான்
மஞ்சாடி நிட்கம் கழஞ்சு
** 805

#40
வெப்புஇல் பிரகுஞ்சம் முட்டி வில்வம் தொடி பலம் நூறு
அப்பலம் துலாம் நிறை அப்பாதி எடை அப்பாதி
தூக்கு ஆகும் கண்டி துலாம் முப்பது இருபான் பாரம்
ஆக்கு பலம்கால் கருடம் கஃசு
** 806

#41
ஆகும் கசாக்கிரகம் அவ்அணு எண்மூன்று அதுஎட்டு
ஆகும் இலீக்கை அதுநான்கே யூகை அதுஎட்டு
அங்கு யவை ஆம் அதுமூன்று அங்குலம் அதுஈறாறு
தங்கும் அளவைப் பேர் சாண்
** 807

#42
சாண் ஓர்இரண்டு முழம் கரம் ஆம் நான்கே
ஏணார் தனு புருடம் இவ்இரட்டி பேணு தண்டம்
ஈராயிரம்அது குரோசம் கூப்பாடு அதுநான்கு
ஓர் யோசனை புகை என்று ஒது
** 808

#43
காதமொடு சாமரத்தம் காவதமும் கூப்பாடு ஆம்
கோதுஇல் கலியூதம் இருகூப்பாடு ஆம் ஓதும் நல்ல
நானூறு விற்கிடை கோழிப்பறவைத்தூரமே
தான் ஆவது கிரவுஞ்சம்
** உயிரில் பொருட்குண வர்க்க முற்றும் 
** நாமதீப நிகண்டு முற்றும்
**
** கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய 
** நாமதீப நிகண்டு

@0 பாயிரம்
** 1

#1
ஆனைமுக னைக்குகனை யாதிபுவ னேசொரியை 
ஞானமுதல் கோரக்க நாதனையும் மேன்மைபெறு 
சாமிகவி ராசனையுந் தான்வணங்கிப் பேருரைப்பன் 
பூமிதனி லுள்ள பொருட்கு 
** 2

#2
ஓல்லு முயர்திணைப்பே ரஃறிணையு யிர்ப்பொருட்பே 
ரில்பொருட்பே ரிப்பொருள்க ளின்குணப்பேர் சொல்படல 
மாமொருநான் கிட்டிரண்டைந் தைந்துநால் வர்க்கமிட்டு 
நாமதீ பம்பகர்ந்தே னான்
** 3

#3
தேவர்நர ராமிரண்டுஞ் சீர்பெறுநாற் கால்பறவை 
யூர்வனநீர் வாழ்வநிலை யோரைந்து மேவியற்கை
செய்கையிடங் காலஞ் சினையைந்து நாற்குணமு 
மெய்துவர்க்க நாற்படலத் தே 
** 4

#4
மனக்குணம்வாக் கின்குணமே மற்றுடலாற் செய்யும் 
வினைக்குணமிம் மூன்றுமுயிர் மேவுந் தனிப்பொருள்கட் 
கேய்ந்தகுண மாகுமுயி ரில்பொருள்க ளின்குணமொன் 
றாய்ந்தவிவை நாற்குணங்க ளாம்
** 5

#5
பல்வடிவு நாற்றமிரண் டைந்துவண்ண மூறெட்டு 
நல்ல சுவையாறு நான்களவை வல்லோர் 
புகலுமுயிர்ப் பில்லாப் பொருட்குணங்க ளாகும் 
பகர்படல வர்க்கமுறை பார் 
** 6

#6
திண்பார் புகழ்நாம தீபமோ ரெண்ணூறு 
வெண்பாவுஞ் சொற்செறிவான் மெய்த்தளையின் பண்புசில்பா 
வொற்றறுத்த லாதியகொண் டோர்கசில்பா தந்தொடைகள்
பற்றும் வகையுளியாற் பார்
** 7

#7
எந்தை பொதிகைநிகண் டென்றோர்சொற் பல்பெயரே 
தந்தனன்காண் பல்கூட்டஞ் சாரொருபேர் முந்தியான் 
பன்னுந் தொகைநிகண்டிற் பார்க்க விரி வாமவைக
ளின்னசுருக் கத்தடங்கா வே
** 8

#8
பல்லா யிரநிகண்டிற் பண்டிதர்கள் சொன்னபொரு
ளெல்லா மெளிதா யினிதுணரக் கல்லிடையூர் 
மன்னுசிவ சுப்ர மணியன் கவிராசன் 
பன்னுதமிழ் நாமதீ பம் 
** பாயிர முற்றும் 
** நூல்

@1 உயர்திணைப் படலம்

@11 தெய்வ வர்க்கம் 
** 9

#1
நந்திபெம்மா னாலமர்ந்தோ னம்பனிறை சோதிசெம்ம 
லந்திவண்ணன் றாணுநித்தன் ஆனந்தன் இந்தினன்றீ 
முக்கணா னைந்து முகன்றிகம்ப ரன்சடைய 
னக்கனெண்டோ ளன்பிஞ் ஞகன்
** 10

#2
ஐந்தொழிலான் ஓன்பான்மூன் றையைந்து மூர்த்திசத்தி 
யைந்தனெழுத் தைந்த னருள்வடிவன் சுந்தரற்குத் 
தூதன் குபேரசிநே கன்சுருதி யாகமங்க 
ளோதினோ னெண்குணத்தி னோன்
** 11

#3
மான்மழுக்க பாலஞ்சூ லந்துடித் தீ யேந்திநஞ்சு 
தானுண்டோன் கங்காளன் சாமிபித்தன் ஞானிபர 
னாதிபங்கி பூணூல னண்ணல்சு கன்கயிலை 
நாதன்வரன் யோகி நடன் 
** 12

#4
நற்கடுக்கை சிங்க நகமாமை யோடறுகார்க் 
கொக்கிறகு தும்பைபன்றிக் கோடுமத்தம் அக்கெருக்கு 
வன்னிபாம் பென்புவில்வம் மால்கண் பிறைகரந்தை 
துன்னுகங்கை மீன்கணணிந் தோன்
** 13

#5
பார்தேர் பரிவேதம் பாகனயன் மால்கணையக் 
கூர்தீக் கணைவிசைகால் கோதண்ட மேருவரை 
நாணரவ மாழிமதி ஞாயிறுபால் வேலையம்புத் 
தூணியுங்கொண் டோனீச் சுரன்
** 14

#6
காலன்வே ளானைபுலி காய்ந்தோன் மறைமுதலி 
பால்விடையூர்ந் தோனுயர்த்தோன் பாண்டரங்சன் தோலுடையன் 
தேவதே வன்வாம தேவன்மா தேவனத்தன் 
காவலன்பி ரானங் கணன்
** 15

#7
அழன்மன்றீ மத்தினிற்பே யோடாடி யீசன் 
றழைவிமலன் காளகண்டன் சங்கக் குழையனுமை 
பங்கன் பசுபதிபிச் சாடனன்பூ தப்படையோன் 
சங்கரனு ருத்திரனே சம்பு
** 16

#8
நிட்களனின் னாம னிரஞ்சனனி ரந்தரனே 
நிர்க்குணன்சாட் சாத்கார னிர்ப்பேத னிர்ச்சங்க 
னத்துவிதன் பூரண னகண்டனச லன்சூக்கன் 
முத்த னனுபமன்மு தல்
** 17

#9
கண்ணுதல்பு ராரிசித்தன் கக்தனயன் மாற்குமெட்டான் 
எண்ணெண்விளை யாட்டானீ சானனரன் வெண்ணீற்றன் 
தந்திகுகன் றாதை சருவஞ்ஞ னன்னைதந்தை 
அந்தம் பிறப்பளவி லான் 
** 18

#10
அரியன் பெருமானன் பர்க்கெளியான் சாமப் 
பிரியனட்ட மூர்த்தி பினாகி பரமன்மன 
வாக்கினெட்டான் றத்துவா தீதன் மலவயிரி 
சேய்க்கறியுண் டோனுஞ் சிவன் 
** 19

#11
சத்திபரை காளியுமை சண்டிகைப வானிசிவை 
யுத்தமிமா றங்கை யுலகீன்றாள் அத்தையருள் 
வாலை புவனை மனோன்மணிச டாதாரி 
சூலிமலை மானீச் சுரி
** 20

#12
வீரிகன்னி வல்லணங்கு வேதாளி கங்காளி 
யாரணிசா முண்டியயி ராணியையை சூரியம்பை 
மாலினி நீலி மதுபதிசிங் காரூடி 
பாலைநிலத் தாள்சாம் பவி 
** 21

#13
சக்கரம்பா சாங்குசம்வாள் சத்திவர தாபயங்கள் 
இக்குவிற்பூ வாளிகொண்டா ளெண்டோளி முக்கண்ணி 
யாயி திரிபுரைதா யம்பணத்தி யேகாத்தி 
யாயினிகா மக்கோட்டத் தாள் 
** 22

#14
அந்தரி மாதங்கி யம்பிகைதி கம்பரையே 
சுந்தரியா ழேடு சுகந்தரித்தாள் விந்தைசிவ 
காமி விமலை கவுரி பகவதி 
யாமளைநா ராயணிமா யை
** 23

#15
பஞ்சமிகல் யாணி பயிரவி வல்லபி 
வஞ்சனியா னந்தியிம வான்புதல்வி அஞ்சனி 
மேனைமக ளாவரணி விட்சேபி யோகினி 
யானைமுகன் செவ்வே ளனை
** 24

#16
ஆரியை வாமிமயி டாரியபி ராமிதுர்க்கை 
தாருகசங் காரிலளி தைவிசையை நாரி 
யமரிகவு மாரியறத் தாள்சவுரி தேவி 
விமரிசையும் பார்ப்பதிபேர் விள்ளு
** 25

#17
இப்பெயரிற் காளிதுர்க்கை யாதிசத்தி கட்கிசையும் 
அப்பெயர்கொள் வாண்மூ தணங்குகொற்றி மெய்ப்பான 
மாரி வடுகி வடுகன்றாய் மோடியுடன் 
சூரியிவை காடுகாள் சொல்
** 26

#18
தந்திமுகன் பாசாங்கு சங்கனிகொம் பேந்தியொரு 
தந்தனால் வாயன் சடையன்முன்னோன் கந்தனுக்கு 
மூத்தோனா கூர்ந்துயர்த்தோன் முக்கண்ணான் மால்சாபம்
தீர்த்தோன் சிவன்கவுரி சேய்
** 27

#19
பூதரூ பத்தனிலம் போதரன்வி நாயகனே 
பூத மிவர்ந்தோன் புகர்முகத்தோன் ஓதுமுறக் 
கன்னன்விக்கி னேசன் கயாரிகுடி லாசனத்தான் 
சென்னிறத்தா னைங்கரத்தி னான்
** 28

#20
நாலிதழ்க்கஞ் சன்போச னப்பிரிபன் வல்லவைமன் 
மூலமுத லாமைமுது கோடணிந்தோன் கால்குறியன் 
வக்கிரதுண் டன்காக மாகினோன் பொன்னிதந்தோன் 
அக்கணப திக்குளபே ராம்
** 29

#21
கந்தன்முரு கன்குமரன் கார்த்திகே யன்கவுரி 
மைந்தன்காங் கேயன்மயி லூர்திசிவன் மைந்தன்வள்ளி 
தெய்வானை மன்புலவன் செட்டிகுகன் வீரர்முன்னோன் 
வைவேல வன்குறிஞ்சி மன்
** 30

#22
ஈசனயன் கும்ப னிவர்குருச்சு ரந்தணித்தோன் 
வாசவனிந்த் ராணிதிரு மால்மருகோன் பேசுருத்தி 
ராயுதன்றந் திக்கிளையா னாறுதலன் றேவர்சிறை 
காய்பவன்சு வாமிகுழ கன்
** 31

#23
பன்றிதிற லட்டோன் பவளவடி வன்சமணை 
வென்றவன் கற்கி விறலழிப்போன் குன்றெறிந்து 
கீரனை மீட்டோ னருண கிரிக்கருள்வோ 
னோர்புலவன் மேற்பாடி னோன்
** 32

#24
சண்முகன்வி சாகன் சரவணப வன்பதினெண் 
கண்ணனீ ராறுபுயங் கைசெவியா னெண்ணுவெட்சி 
காந்தள்குரா நீலங் கடம்பணிவோன் வேள்வேடன் 
சேந்தன்கோ ழிக்கொடியோன் சேய்
** 33

#25
தாருகன்சிங் கானனன்சூர் சாருமன்றில் வெற்புமட்டோன் 
நாரதசி நேகன்விண்ணூர் நாட்டினோன் சேருமும்பர் 
சேனைமன்வே தாவைச் சிறையிட்டோ னாடூர்ந்தோ 
னானசுப்ர மண்யன்பே ராம்
** 34

#26
வேல்சரம்வாள் தண்டுமழு மெய்க்கொடியுங் கந்தன்வலப் 
பாலமர்வ விற்பரிசை பற்றீட்டி சூல் குலிச 
மங்குசம்வா மத்தா மபயம் வரதமணி 
பங்கயமு முற்குறைத்துப் பன்னு
** 35

#27
வாகுவுடன் கேசரிம யேந்தரன்ம யேசுரனே 
யாகும் புரந்தரனே யந்தகனே சேகரக்கன் 
மார்த்தாண்டன் றீரனும்பின் வைத்துமுன்பு வீரமதைச் 
சேர்த்துநவ வீரர்பெயர் செப்பு
** 36

#28
அங்கிமுகன் வச்சிரவா காளிமுகத் தோன்வீர 
சிங்கனிர விப்பகைதன் மப்பகைவ னிங்கிவரை 
யட்டோன் றகர்பிடித்தோன் பாசுரக்கோ லந்தகன்மேற் 
றொட்டோன்சூ ரூரையழித் தோன்
** 37

#29
காளியைவென் றோனரன்மா ணிக்கமின்சேய் கார்கடிந்தோன் 
வாளினன்செவ் வேட்கிளைய வன்றூதன் நீளிலக்கத் 
தெண்மர்முன்ன வன்சயந்த னைத்தெளித்தோ னுந்திவந்தோன் 
வண்ணஞ்சேர்ந் தோன்வீர வாகு
** 38

#30
ஆயிரமு கந்தலையீ ராயிரங்கை தோள்செவிமூ 
வாயிரங்கண் ணுள்ளோன்மா லாற்றலட்டோன் பாய்திகிரி 
நுங்கினான் சார்ங்கமட்டான் றண்டழித்தா னும்பர்களை 
யங்கொருநாள் கொன்றெழுப்பி னான்
** 39

#31
இந்துவைத்தேய்த் தான்பகன்கண் டீக்கரமேழ் நாக்கிரவி 
தந்தமழித் தோன்பிரம சாரதியா னுந்துபொற்றே 
ரூர்திதக்கன் சென்னியறுத் தோன்மகசங் காரியந்தச் 
சோரனுக்கு மைத்தலைவைத் தோன்
** 40

#32
கட்கனுமை சேய்சிவன்றீக் கண்ணுதித்தோன் காளிநண்ப 
னுக்கிரன் செஞ்சடையா னோரெண்காற் பக்கிவண்ணன் 
நாரசிங்கன் வீறழித்தோன் பானுகம்ப னைப்பயந்தோன்
வீரபத்தி ரன்பேரா மே
** 41

#33
சித்தன்வடு கன்குமரன் பிள்ளையயன் சென்னிகொய்தோன் 
முத்தனா யூர்திமுக்க ணன்காரி மத்தகயத் 
தோலுரித்த வன்கேத்ர பாலன் கரும்பரியான் 
சூலன் வயிரவன்பேர் சொல்
** 42

#34
வெள்ளிவரை காப்போன் விடைமுகன்பூ தத்தலைவன் 
தெள்ளுஞ் சுதேதைமன்சி லாதரன்சேய் விள்ளரிய 
வேதாக மக்குரவன் வேத்திரக்கை யானேழு 
மாதிநந்தி கேச்சுரனுக் காம்
** 43

#35
காரிசெண்டு தண்டணிந்தோன் கையனையன் மாலரன்சே 
யாரியன்பச் சைப்பரிவெள் ளானையுள்ளோன் பூரணை 
புட்கலைமன் யோகிகடல் வண்ணனெய்தல் பூண்டோன்கோ 
ழிக்கொடியோ னெண்கரன்சாத் தன்
** 44

#36
வாமனிரா மன்பலதே வன்பரசன் கிட்டிணன்மீன் 
கூர்மநர சிங்கம்வரா கங்குதிரை யாம்வடிவன் 
விண்டா யிரநாமன் வேலைபாம் பால்கோலிற் 
கண்டுயில்வோ னேமிசெங்க ணான்
** 45

#37
பாருண் டளந்திடந்தோன் பச்சைகரி யோன்விசைய 
சாரதிகோ பாலனச்சு தன்பிரமன் மாரனத்தன் 
கோசலைய சோதைநந்த கோன்வசுதே வன்புதல்வன் 
தாசரதி தேவகிமைந் தன்
** 46

#38
பொன்னவனி சீதையெண்ம ராய்ச்சியரை யும்புணர்ந்தோன் 
பின்னுபேந்தி ரன்பெருமாள் பீதாம்ப ரன்முகுந்தன் 
கண்ணன்றா மோதாரனாற் கையன்கோ விந்தன்முகில் 
வண்ணன் புருடோத்த மன்
** 47

#39
மாதவன்ஞா னத்துயிலோன் வைகுண்டன் கேசவன்மால் 
சீதரனீண் டோன்காவற் றேவனைவர் தூதன்வில்வா 
ளாழிசங்கந் தண்டம்பஞ் சாயுதன்புள் ளூர்ர்துயர்த்தோன் 
வாழ்பதும நாபன்வல வன்
** 48

#40
பொன்னன் றிரிசிரத்தோன் பொற்கண்ணன் வாலிகும்ப 
கன்னன்விரா தன்கால கேயர்கரன் பின்வாணன் 
கஞ்சன்மூ லன்சோமு கன்கயிட வன்கவந்தன் 
வஞ்சமான் றந்தவக்கி ரன்
** 49

#41
மாலிசிசு பாலனிலங் கேசன்மது தாடகைசு 
மாலிமுரன் றுந்துமியே தூடணன்சாத் தூலியையும் 
வென்றோன்புள் வாய்கீண்டோன் வெம்பேய் முலையொடுயிர் 
தின்றோன் மலைக்குடைசெய் தோன்
** 50

#42
வண்டுருவன் சோரன் மருதிடந்தோன் காகுத்தன் 
பண்டியட்டோன் சாலமெய்தோன் பாம்பாடி பெண்டுருவன் 
கன்றாற் கனியெறிந்தோன் சீதை சிறைகடிந்தோன் 
மன்பூபா ரந்தவிர்த்த வன்
** 51

#43
நாரணனா ராயணன்சு ரர்க்கமுத நல்கினோன் 
வாரிகடைந் தோன்வரம்பிட் டோனடைத்தோன் காரியரி 
மாயன் றுழாய்மணிம றுப்புயனி ராகவனோ 
டாயனிவை விட்டுணுப்பே ராம்
** 52

#44
நீலாம் பரன்முசலி வெள்ளையனந் தன்காம 
பால னலாயுதன்ப னந்தாமன் சாலுமோர் 
குண்டலனி ரேபதிமன் கூறுபல பத்திரனே 
திண்பலதே வன்சிறப்புப் பேர்
** 53

#45
இந்திரைமாச் செல்வியிளை யாளிரமைச் செய்யாள்பொன் 
செந்திருப்பூ மான்கமலை சீதேவி விந்தைமகள் 
பாற்கடல்வந் தாள்பொறிமால் பாரிமதன் றயாக்கந் 
தாக்கணங்கி லக்குமிபேர் தான்
** 54

#46
அன்னமுயர்த் தூர்ந்தோ னனந்தன்மால் சேய்வாணி 
மன்னன்மறை யோன்மலரோன் மண்படைத்தோன் துன்னும் 
பிதாமகனெண் கண்ணன் பிதாச்சதா னந்தன் 
விதாதா கமலன் விதி 
** 55

#47
சம்புபர மேட்டி சதுமுகன்வே தாக்குரவன் 
பம்பு மிரணியகெர்ப் பன்சூதன் நம்பும் 
வரனயன் ஞானியிறை வானோர் முதுவன் 
பிரமன் றனக்குரிய பேர்
** 56

#48
பாமகள்பி ராமியயன் பாரிவெண்பூ மானிசைமான் 
நாமகள்வாக் காள்வாணி ஞானிவெள்ளை யாமுருவாள் 
பாரதிசா வித்திரிகா யத்திரிபூ ரப்பரியாள் 
ஈரேழ் சரசோதி யே
** 57

#49
கந்தர்ப்பன் வேள்வசந்தன் காமன்மதன் மால்பூமான் 
மைந்த னனங்கன் மதுசகனே சிந்துவண்ணன் 
அங்கசன்ம னோபுசம்ப ராரிசித்த சன்மோகன் 
றங்கிரதி மன்மாரன் தான்
** 58

#50
அற்கரிகாற் றேர்கிளிமா வாழிமுர சிந்துக்குடை 
பொற்குயில்சின் னந்தாழம் பூவாண்மீ னக்கொடிபெண் 
தானையன்றில் காளமகிழ் தார்மல் லிகைபடிக்கம் 
வேனில்விழாச் சோலைபடை வீடு
** 59

#51
வாகைமரைத் தாள்கரும்பு வண்கமுகம் பாளையப்பூ 
வாகியவில் லம்புயநூ லாய்ந்தபிச்சி மோகவண்டு 
வெட்டிவேர் மாந்தளிர்நாண் விந்தமாப் பிண்டிமுல்லை 
யட்டிடுநீ லங்கோ லவற்கு
** 60

#52
ஆகண்ட லன்மா லரிபுருகூ தன்புலவன் 
போகி புரந்தரன்பு ரோகிதனே மேகமுட 
னுச்சிரவா வெள்ளானை யூர்ந்தோ னிடிக்கொடியன் 
வச்சிரன்விண் கோவாச வன்
** 61

#53
ஆயிரங்கண் ணன்கரியோ னண்டர்கோன் கோசிகனே 
மாய்வில்சசி மன்மருத்து வன்மகவான் றோய்பாக 
சாதனன்சு னாசிசக்க ரன்சதம கன்மருத 
நாதன் வலாரியிந்தி ரன்
** 62

#54
இந்திரன் றேவியிந்தி ராணியயி ராணிசசி 
சுந்தரிபு லோமிசையாஞ் சொல்சயந்தன் மைந்தனார் 
தேவணங்கு சூர்கடவுள் தெய்வதம்புத் தேளியவுள் 
ஆவனதெய் வப்பொதுப்பே ராம்
** 63

#55
விண்ணவரி லேகரண்டர் மேனிலர்பட் டாரகரே 
பண்ணவரா தித்தர் பகவர்சுரர் நண்ணமரர் 
புங்கவ ரும்பர் புலவரிமை யோர்விபுத 
ரங்கமுதுண் டோர்தேவ ராம்
** 64

#56
உருத்திரர் பன்னொருவர் ஓர்பன் னிருவ 
ரருக்கர் வசுக்களெண்ம ரன்றி மருத்துவரென் 
றான வசுவனிக ளவ்விருவ ராகவிவர் 
வானின்முப்பான் மூன்றுதே வர்
** 65

#57
சிவனுருத்தி ரன்றேவ தேவன் கபாலி 
சவுமியன்ப வோற்பவன்மா தேவன் கவர்நீல 
லோகிதன்வீ மன்விசையன் சங்கரனு ருத்திரர்க 
ளேகா தசரா மிவர்
** 66

#58
ஆன்றவரு ணன்பூடா அஞ்சனுடன் றாதாவே 
தோன்றுமிந்தி ரன்சவிதாச் சொல்விவச்சு வான்பகனே 
தொட்ட பரிச்சனியே தொட்டாவே மித்திரனே 
விட்டுணுவீ ராறருக்கர் மெய்
** 67

#59
துருவன் பிரத்யூடன் சோம னனிலன் 
தரனனல னுபத் துவனே பிரபாவ 
னெண்வசுக்க ளாகு மிருமருத்தர் தத்திரனே 
விண்ணுறுநா தத்தியனா மே
** 68

#60
தேவர்முனி வோரியக்கர் சித்தர்விஞ்சை யோர்கருடர் 
பூவசுரர் கிம்புருடர் பூதர்படர் மாவரக்கர் 
நாகருடுக் கந்திருவர் கின்னரர்பேய் நற்போகர் 
மாகர்பதி னெண்கணநா மம்
** 69

#61
ஆகுமர மானரம்பை யண்டர்பெண்ணி டாகினியே 
சாகினி சன்மினிமூத் தாள்முகடி காகமுயர் 
சேட்டைகர வூர்திதௌவை சீர்கேடி யோர்சடையாள் 
கேட்டையிவை மூதேலிக் கே
** 70

#62
மின்னுவித்தி யாதரரே விஞ்சையர் கோசரரே 
தன்னிகரில் சேடியராஞ் சாதியொன்றே கின்னரர்கள் 
கந்திருவர் கிம்புருடர் யாழ்பயில்வாற் பாராள்வாற் 
றந்திறலி னாற்கணபே தம் 
** 71

#63
போகநிலத் தின்புறுவோர் போகர்விண்ணிற் சஞ்சரிப்போர் 
மாகர்சுர ரேவல்செய்வோர் வன்படராம் ஏகுகுறள் 
சாதகங்கி ருத்திமஞ்சா தம்பாரி டங்கூளி 
பூதம் பிரேதகமும் போற்று
** 72

#64
பாசங் குணலைகுண பாசிகுண பங்குணங்கு
வீசலகை யண்ணை வியந்தரம்ப சாசுகடி 
வேதாளஞ் சோகு வெறிகிரகஞ் சங்கைமயல் 
தீதார்பே யாங்கழுதுஞ் செப்பு
** 73

#65
அந்தரத்தார்க் கொன்னா ரவுணர் தகுவர்திதி 
மைந்தர் தயித்தியராம் வாளசுரர் முந்தரக்கர் 
நீலர் நிருதர் நிசாசரரி ராக்கதரே
சால கடங்கடராந் தான்
** 74

#66
சோதியெழு நாவரிதீத் தூமகே தங்கியனல் 
சாதவே தாக்கனல்சேர்ந் தார்க்கொல்லி மோதெரியா 
டூர்திதழல் வன்னி யுதாசனனே வாயுசக 
னாரல்வசுத் தேயு வழல்
** 75

#67
தகனன் முளரி தனஞ்சயன்சு வாலன் 
சிகிசுடர் தென்கீழ்த் திசையோன் ஞெகிழிசித்ர 
பானுத் தபனனெருப் பங்கார கன்சுசியென் 
றூனமி லக்கினிப்பே ரோது
** 76

#68
தீபகந்தீ பந்தீபி கைவிளச்காங் காட்டுத்தீத் 
தாவகம்விண் கொள்ளியுற்கை குய்தூபம் ஆவியரி 
தூமம் புகைபெண் சுதைசுவா காவடவை 
யாமடங்க லூழி யனல்
** 77

#69
அனனடைசு வாலைபொறி யாஞ்சுடர்பு லிங்கங் 
கனவிரத நாரங் கவந்தம் புனல்முகிற்பூச்
சீவனங்கீ லாலநீர் சிந்துதகம் வாரிபயங் 
கோவளகங் காரங் குசம் 
** 78

#70
அம்பப்பா லஞ்சலில மங்கமல நீரமறல் 
கம்புட் கரம்வருணங் காண்டமயஞ் சம்பரம்வா 
ரம்புயம்பா னீயமவ தாரம்வனம் பாணியமு 
தம்புவனந் தோயஞ் சலம்
** 79

#71
தெய்வப் புனறீர்த்தந் தேவதைகட் காட்டுநீர் 
கொய்மஞ்ச னங்கடா யங்குடிநீர் பெய்யுமருந் 
திட்டுவற்று நீர்சா றிரதமிலை யாதியினீர் 
விட்ட திராவகம்வேர் நீர் 
** 80

#72
நீர்நுரைபே னம்பெருக்கு நீத்தம் பிரவாகம் 
வாரி பிரளயமும் வெள்ளமுமாஞ் சேர்மொக்குள் 
கொப்புள்புற்பு தங்குமிழி கோலநீ ரோட்டமாம் 
அப்பின் சுழியுந்தி யாம்
** 81

#73
திரையலைத ரங்கமறல் சீகரங்கல் லோலம் 
வரைநீ ரருவி யுவகை யுரைதிவலை 
தூவலுறை யாலிதுமி சீகரமு நீர்த்துளிப்பே 
ரோவி லுவர்நீ ருறை 
** 82

#74
குண்டழுந்த காதங்கெம் பீரங் கயமாழந் 
தண்டெளிநீ ரின்பேர் சலசலமாந் திண்கலங்க 
னீர்கலுழி யாவிலமா நீரிறைவன் பாசன்மீ 
னூர்திநதி கேள்வன்வரு ணன்
** 83

#75
கொண்டல்முகி லப்பிரங்கொண் மூக்குயில்ப யோதரஞ்செல் 
விண்டெழிலி யம்புதம்வி சும்புமங்குல் ஒண்புயல்வான் 
தாராத ரஞ்சீமூ தங்கனமை கந்தரமால் 
கார்சீத மஞ்சுவிண்மே கம்
** 84

#76
மாரிவரு டம்விருட்டி தூறல்பெயல் வானமழை 
வீரியஞ்சேர் சோனை விடாமழையா சாரம் 
பெருமழைக னோபலமா லாங்கட்டிப் பேராம் 
வருபனியி மந்துகின மாம்
** 85

#77
சஞ்சலைமின் சம்பை தடித்துவித்து ருச்சவலை 
மிஞ்சு கனருசியு மின்னலின்பேர் அஞ்சசனி 
விண்ணே றுருமு வெடிமடங்கல் செல்லொலியே 
யண்ணுமன லேறுமிடிக் காம்
** 86

#78
தண்டன்பா சன்சூலன் சண்டனடு வன்மடங்கல் 
திண்டருமன் செங்கோலான் றென்றிசைக்கோன் மிண்டுசமன் 
மாலரிகால் சங்காரன் வைவச்சு தன்மறலி 
காலனமன் கூற்றந்த கன்
** 87

#79
வக்கிரதந் தன்கரியோன் வைதரணி யாற்றினோ 
னக்கிடா வூர்ந்துயர்த்தோ னாமெமன்பேர் மைக்காலன் 
கூற்றமைச்சன் சித்திரனுங் குத்தனுங்கூற் றின்கணக்கர் 
சாற்றுமிருத் தேவல்செய்வ தாம்
** 88

#80
நந்திநண்பன் செல்வனர வூர்திபுட்ப கன்றனதன் 
மந்திரி பிங்கலன் வைச்சிரவன் முந்துகின்ன 
ரேசனள கேசனியக் கேசன் மரகதனே 
யாசினிதிக் கோன்குபே ரன்
** 89

#81
வந்துயிர்புட் கோனருணன் மற்றிடிமின் வேந்தர்முன்னோன் 
கந்தவகன் வாதமரி கஞ்சலன னுந்தனிலம் 
ஆயுசகன் காசிபன்சே யாசுகம்பெ லன்பரிசன் 
வாயு வளிமாரு தம்
** 90

#82
கால்வயின தேயன் கலைவாக னன்பவனன் 
மாலொலிச தாகதிம ருத் துலவை மேல்வடதிக் 
காள்வோன் சமீர னனுமன்வீ மன்றாதை 
காளகன்வங் கூழ்பவமான் காற்று
** 91

#83
கோடைமேல் கால்கீழ்கால் கொண்டல்வட கால்வடந்தை 
வாடை தென்கால் மென்கால் மலயக்கால் கூடுசிறு 
கால்வசந்தந் தென்றிதென்றல் காண்கூதி ரூதைபனிக் 
கால்சுழல்கால் சாரிகைசூ றை
** 92

#84
ஆதவன ருக்கனரு ணன்கனலி மார்த்தாண்டன் 
சோதிபிதிர்க் கோள்பருதி சூரனினன் ஆதித்த 
னேழ்பரியோ னோராழித் தேரோ னிருள்வலியென் 
றூழ்விகத்தன் சண்டனுதை யன்
** 93

#85
பானுவொளி விண்மணிப னிப்பகைப தங்கனண்ட
யோனிசுடர் சிங்கன்மறி யுச்சன்வெய்யோன் வான்விளக்க 
மாயிரங்க ரன்றினக ரன்கிரண மாலியரி 
ஞாயிறெல்லை மந்திதப னன்
** 94

#86
கிரகேச னெல்லி கிரிவலஞ்செய் கின்றோன் 
தரணிசனி தாதை சவிதா விரவி 
மதியளப்போன் வாணா ளளப்போன்சான் றோன்செங் 
கதிரவன்வி யாழசிநே கன்
** 95

#87
பாற்கரன்வேந் தன்கமல பாந்திபக லென்றரிய 
மாக்கதிர்வி ரோசனன்றி வாகரனே தாக்கலரி 
சாயையுடா தேவிதலை வன்காசி பன்னதிதி 
யேயன்மித்தி ரன்சூ ரியன்
** 96

#88
தானவன்கு பேரனல்லோன் தண்கதிர்சு தாகரனே 
மானனிறை யம்புலிசோ மன்கடகக் கோன்முயற்கூ
டிந்தரிநி லாவிமக ரன்களங்கன் வேந்துபுதன் 
றந்தைகலை யோனுடுக்காந் தன்
** 97

#89
திங்கள்சசி மூன்றாழித் தேரோன் பதின்பரியோன் 
அங்குமுத பாந்தியன சூயைமகன் பைங்கதிரே 
யத்திரிசேய் தாய்க்கோ ளலவன்விடை யுச்சன்விது 
வத்தனையுஞ் சந்திரன்பே ராம்
** 98

#90
மங்கலன்சேயாரல்வள வன்றீ மகரவுச்சன் 
செங்குசனங் காரகன்மண் சேய்பவுமன் பைங்குருதி 
மேடனெண்ப ரித்தேரோன் வக்கிரன்வி ருச்சிகனே 
வாடத் துணைக்கோள்செவ் வாய்
** 99

#91
மேதைபுந்தி மால்புலவன் வித்தைக்கோ ளெண்பரியான் 
தூதன்மதி சேய்சவுமன் தேர்ப்பாகன் மூதறிஞன் 
கன்னியான் கன்னியுச்சன் பச்சைகணக் கன்மிதுனன் 
பொன்னருணன் கூரியன்பு தன்
** 100

#92
அந்தணன்சி கண்டிகன்பொன் னாங்கீர சன்றேவ 
மந்திரிசீ வன்மகவின் கோளரசன் செந்தனுவன்
மாண்குருநண் டுச்சனெண் மாவான்ப்ரு கற்பதியே 
யாண்டளப்போன் மீனன்வியா ழன்
** 101

#93
பார்க்கவன்சுங் கன்கவிப ளிங்குசனன் கோல்விடையன் 
கார்க்கோள்பெண் கோள்காப்பி யன்பிருகு மாக்கள்பத்தோன் 
தானவர்கு ருக்கரணன் சல்லியனே போகிபுகர் 
மீனவுச்சன் வெள்ளிசுக் கிரன் 
** 102

#94
மந்தன்முட னோயன்மக ரன்கதிர்சேய் சுன்காரி 
யுந்தாயுக் கோள்கொடியூர்ந் தோன்முதுவோன் சந்திர 
சாவகன்கோ லுச்சனயத் தோனெண்மா வன்சவுரி 
தாவில்கும்பன் மேற்கோள் சனி 
** 103

#95
ஆறுபரி யான்ஞானக் கோள்கா ரரவுதமம் 
பாறுமிரா குச்சிகிசெம் பாம்புபரி யாறுடையான் 
துட்டக்கோ ளாங்கேதுத் துன்பவிடக் கோள்சனிசேய் 
கட்டமுறு மாந்திகுளி கன்
** 104

#96
முன்னாள்யா ழேறிரலை ஐப்பசிம ருத்வாநாள் 
சென்னிபரி யச்சுவதி சீர்ப்பரணி துன்னடுப்புத் 
தோய்கிழம்பூ தந்தாசி சோறுதரா சாமறுவாய் 
தீயழகி றால்கார்த் திகை
** 105

#97
உரோகிணிவி மானமய னாட்சதிதே ரூற்றா 
லுரோணியுரு ளாமதிமாழ் கோடே நரிப்புறமும் 
மீன்மகயி ரம்பாலை மெய்மிருக சீரிடப்பேர் 
மான்றலையு மார்கழியு மாம்
** 106

#98
செங்கையாழ் மூதுரையீ சன்றினமு மாதிரைப்பேர் 
பொங்கதிதி நாளா வணம்புணர்தம் பைங்கரும்பு 
பிண்டிபுனி தம்புணர்பூ சம்பூசங் காற்குளமே 
வண்டுகுரு நாட்கொடிறு மாம்
** 107

#99
ஆயிலியம் பாம்பு கவை யாயின்மக முற்சனியே 
காய்வேட்டு வன்கொடுநு கம்வேள்வி வாய்க்காலாம் 
துர்க்கை கணையெலியி டைச்சனிபூ ரஞ்சுடர்நாட் 
பிற்சனிபங் கூனியுத்தி ரம்
** 108

#100
அத்தநவ்வி மீன்கைக் களிறைவிரல் காமரங்க 
வுத்துவமாந் தச்ச னுடைநடு நாட் சித்திரைப்பேர் 
நெய்பய றளக்குமா நீள்சோதி காற்றுவீழ்க் 
கைநுகம்வி ளக்குமரக் கால்
** 109

#101
தீட்டுவிசா கஞ்சுளகாந் தேள்பனையே மித்திரநாள் 
நாட்டனுடம் வேதியிந்த்ர நாட்கேட்டை சேட்டையும்வல் 
லாரையுந் தேட்கடைகொக் காணியன்றில் வின்மூலப் 
பேரசுர நாளென்றும் பேசு 
** 110

#102
முற்குளநீர் நாளும்பூ ராடமாம் விச்சுவநாட் 
பிற்குள மாடியுத்தி ராடப்பேர் முக்கோலே 
சீவுலக்கை மால்நாட் சிரவணமோ ணம்வசுநாள் 
ஆவணிபுட் காகமவிட் டம்
** 111

#103
குன்றுசெக்குச் சுண்டன்வரு ணம்போர் சதையமுற்கோல் 
நன்புரட்டை நாழிபூ ரட்டாதி வென்றிமன்னன் 
பிற்கோல் முரசுமுத்தி ரட்டாதி ரேவதிப்பேர் 
சொற்கடைநாட் டோணி தொழு
** 112

#104
சாலிவட மீன்வசிட்டன் தார மருந்ததிபேர் 
ஏல்புடைய மேடமா டேறிடபஞ் சாலிரட்டை 
வீணை சயமகள்வி ழாமிதுனங் கற்கடகம் 
காணுநண்ட தாமரிசிங் கம்
** 113

#105
பெண்கன்னி செட்டிநிறைப் பேர்துலாந் தேட்பெயரே 
விண்விருக்சி கந்தனுவே விற்பெயராம் திண்சுறா 
மான்மகரங் கும்பமே மட்கலப்பேர் மீனமே 
மீனின் பொதுப்பெயரா மே
** 114

#106
தாரைநாட் சுக்கையுடுத் தாரகைபம் புற்கைவிண்மீன் 
பார்வான்வில் லிந்திரவிற் பச்சைவில்லா மூர்கோள் 
பரிவேட மோரை பவனமில்லி ராசி 
அரியகதிர் வட்டம்விசை யம்
** 115

#107
வெய்யிலென்றூ ழாதவம்வெய் யோன்கதிர் மதிக்கதிரே 
பெய்நிலவு சந்திரிகை பின்னிருட்பேர் மொய்திமிரங் 
கச்சளந்து ணங்கறல்தி வாந்தமந்த காரமரி 
மெச்சுதம மங்குல்கரு வே
** தெய்வ வர்க்கம் முற்றும்
** 1 உயர்திணைப் படலம் 

@12 மானிட வர்க்கம் 
** 116

#1
மானவர்மண் ணோர்மனிதர் மாந்தர்மக்கள் மாக்கணரர் 
மானுவராண் டோர்மனுடர் மைந்தர்மனு மானிடரா 
மன்பதையும் பஞ்ஞிலுமக் கட்பரப்பாம் நங்கைநம்பி 
யென்பர்பெண்ணா ணிற்சிறந்தோர்க் கே
** 117

#2
பேதைமக டூஉப்பெதும்பை பெண்டரிவை நாரிநல்லாள் 
மாதணங்கு காந்தைபிணா மானினியே கூர்தெரிவை 
யங்கனைமா யாள்வனிதை யாட்டிமட வாள்மடந்தை 
மங்கைபெண்ணாங் காரிகையு மாம்
** 118

#3
வன்னமுறும் பேதைபெதும் பைமங்கை யேமடந்தை 
பின்ன ரிவைதெரிவை பேரிளம்பெண் தன்வயது 
முந்தெழுபன் னொன்றுபதின் மூன்றுபத்தொன் பானிருபத் 
தைந்தெண்ணான் கையெட்டு மாம்
** 119

#4
ஆண்புருடன் காளைமைந்த னாடவனா டூஉக்குமரன் 
மாண்புமான் பூமான் மகன்விடலை வீண்பேடு 
நஞ்சகமே சண்ட நபுஞ்சங்கி லீபமலி
யஞ்சலுறும் பெண்டகமு மாம்
** 120

#5
பற்றிலர்நீத் தார்தா பதரிருடி மார்தூயோ 
ருற்றதவர் பண்ணவர்த போதனர்மா லற்றோ 
ரறவருறு வோரடிக ளையர்மெய்யர் யோகர் 
துறவர்முனை வோர்முனிவர் சொல்
** 121

#6
கும்பன் றமிழ்நன் குறுமுனிக டற்குடித்தோன் 
செம்பொதிகை மோனி சிவசமனன் வம்புபுரி 
வில்வலன்வா தாவியன்றில் வெற்புவிந்த மால்சமையத் 
தல்லட்டோ னாமகத்தி யன்
** 122

#7
ஆசிரியன் போதனண்ணன் றேசிகனு பாத்தியத்த 
னாசாரி யன்பணிக்கன் சாமியய்ய னாசான் 
குரவ னடிகளுர வோன்குருவாஞ் சீடன் 
பரவுமா ணாக்கனுங்கற் பான்
** 123

#8
தக்கோன்விற் பன்னனல்லோன் சாரதிசா டாரியன்சூர் 
மிக்கோன்மே தாவிபுதன் மேதைசுதீ மெய்க்கலைஞன் 
சான்றோ னுலகறிஞன் சங்கமவை பண்டிதனே 
யான்றோன்கற் றோன்புலவ னாம்
** 124

#9
நாவலன்பா வேந்தன்வித்து வான்கணக்கா யன்கவிஞன் 
பாவலன்கற் றுச்சொலிபேர் பாடகனாம் பாவலரை 
வைப்பார் கவிகமகன் வாதியுடன் வாக்கியென்றே 
மெய்ப்பினொரு வர்க்கொருவர் மேல்
** 125

#10
தேசார் சவுமியன்தி கம்பரனும் யோகியா 
மாசின்மதத் தார்சமய ரங்கவருட் பாசுபதர் 
மாவிரதர் வாமர் வயிரவர்கா ளாமுகரே 
தாவில்சைவ ருட்சமயத் தார்
** 126

#11
மெய்வாமர் சாத்தருடல் வேதங் குணங்கந்தம் 
அவ்வுயிர்மால் பற்றுமவ ரேபுறத்தார் இவ்வாற்றிற் 
சாறுவாங் கன்பூத முத்தனுலோ காயுதனாந் 
தேறுசத்தன் கன்மிவைதீ கன்
** 127

#12
ஆருகதன் குண்டனம ணன்குணமுத் தன்முனிவன் 
பாரினிற்கொல் லாவிரதன் பாயுடுப்போன் சாரணனுந் 
திண்சமண னாஞ்சீவ ரன்சாக்கி யன்றேர 
னண்பவுத்தன் கந்தமுத்த னாம்
** 128

#13
வேதாந்தி வைசேடி கன்சாங்கி யன்மாயா 
வாதி யுடன்பரிணா மன்விவர்த்த னோதுபசு
ஞானியுமாம் பாகவதன் நற்பாஞ்ச ராத்திரிவை 
கானசன்வ யிட்டுணுவற் காம்
** 129

#14
சித்தாந்தி யேசமயா தீதி சிவஞானி 
யத்துவிதி சுத்தசைவ னாகுமே சித்துணர்ந்த 
மாணிக்க வாசகன்பேர் வாதவூ ரானெனவாம் 
பேணுதிண்ணன் கண்ணப்பன் பேர் 
** 130

#15
அத்திபெண்ணாச் செய்தோ னமணழித்தோன் காழியிறை 
சத்திமுலைப் பாலுண்டோன் சம்பந்தன் முத்தாற் 
சிவிகைகுடை பெற்றோன் சிவபாத நெஞ்சன் 
றவமகன்மா றன்சுரந்தீர்த் தான்
** 131

#16
சிலைபுணையா யூர்ந்தோன் றிலகவதி பின்னோன் 
அலைவில் புகழார்சே யாமூர்த் தலைவனுயர் 
மாதினியாண் மைந்தன் மருணீக்கி நாவரையன் 
பேதமில்வா கீசனப்பன் பேர்
** 132

#17
நம்பி விடங் கவர்ந்தோ னூரனா வற்பதியோன் 
வெம்புகரா வுண்சேயை மீட்டளித்தோன் அம்பரவை 
சங்கிலிமன் னாகரன்வன் றொண்டன் சடையன்சேய் 
சங்கரன்றோ ழன்சுந் தரன்
** 133

#18
வேதர்தொழி லாறரையர் விப்பிரர்பார்ப் பார்நூலோர் 
ஆதிகுல ரந்தணர னற்கொடியோர் ஓதுகஞ்சம் 
பூண்போ ரிருபிறப்போர் பூசுரர்பி ராமணர்பே 
ரேண்பிரம சாரிவன்னி யே
** 134

#19
இற்றனில்வாழ் வோன்கிரகி யில்லுடன்கா னம்புகுந்து 
நற்றவஞ்செய் கின்றோன்வா னப்பிரத்தன் பற்றொழிய 
விட்டோன்சன் னாசியெதி வீட் டையிச்சித் தோன்முமுக்கு 
கட்டுதருக் கன்றார்க்கி கன்
** 135

#20
மாலன்பன் ஞானமுத்தி ரைக்கரத்தான் காரிமன்னன் 
பாலன் றிருவாய் மொழிபகர்ந்தோன் சால்புளிக்கீழ் 
வாழ்வா னனமூர்தி மாறன்மங்கை யூரினனம் 
மாழ்வான் சடகோப னாம்
** 136

#21
கோவதிப னாதிபன்கோன் கொற்றவன்சு வாமிமன்னன் 
காவலனா தன்கொழுநன் காந்தனரன் மேவுபெம்மான் 
ஏந்தல்செம்மல் ஓங்கல்பதி யீசனிரு பன்றலைவன் 
வேந்திறைபி ரான்பிரபு வே
** 137

#22
புரவலன் பார்த்திபன்பூ பன்மகிபன் றோன்றல் 
குருசில்பெரு மானியமான் கோமான் றுரையரசன் 
அண்ணலிரா சன்பேர் குறுநிலக்கோ வாங்குறும்பர் 
தண்ணரட்டர் வேளிர்புரோ சர்
** 138

#23
மந்திரிதேர்ச் சித்துணைய மாத்தியனூ லோன்சூழ்வோன் 
முந்துழைய னெண்ணன்முன்னோன் மூதமைச்சன் பிந்துகணக் 
கன்கரணிக் கன்கா விதிநிமித்தன் சாக்கைவள்ளு 
வன்பரியா ளன்பரிவா ரன்
** 139

#24
வண்டர்மற வர்பேடர் வாளுழவர் சூரர்மள்ளர் 
மிண்டர்வய வோர்வியவர் வீரர்தெவ்வர் திண்டிறலோர் 
கூளியரே றாளர் கொடும்பொருகர் திண்ணியரே 
மீளியர்சே னைத்தலைவர் மேற்று
** 140

#25
தானைதளந் தண்டனிகந் தந்திரம்ப தாதிபலம் 
வானிகக னங்கடகம் வாகினிதார் சேனைபடை 
பாடிபரி காரம் பதாகினியூ பங்கவனம் 
கூடியிவை பாளையப்பேர் கூறும்
** 141

#26
உண்டையணி யூபங்கை யொட்டு படைவகுப்பாம் 
மண்டுநெற்றி தூசிமுன்செல் வார்படையாம் கண்டுபின்செல் 
கூழை கொடிப்படையாங் கூடா படையறைப்பேர் 
கீழறுத்க லேயறைபோ கே
** 142

#27
வீட்டுமன்காங் கேயன் விரதன்வன்னி சந்தனுச்சேய் 
மாட்டுதுரி யோதனன்வ லம்புரித்தார் சூட்டிவணங் 
காமுடிய னாகக் கொடியன்காந் தாரிகண்ணில் 
கோமசன்சு யோதனனுங் கூட்டு
** 143

#28
பாண்டுகுந்தி சேயுதிட்டி ரன்பொறையன் பைங்குவளை 
பூண்டோன் முரசுயர்த்தோன் பொய்சொல்லான் காண்டருமன் 
பானுமகன் கச்சையுயர்ப் பான்கவச குண்டலன்கா
னீனனங்கர் வேந்துகன்ன னே
** 144

#29
காரிபிர கோதரன்க டோற்கயனப் பன்கதையன் 
மாருதியி டும்பிமன்சீ யக்கொடியோன் பார்பிளந்தோன் 
சல்லியன்சு யோதனன்சந் தன்கீ சகனிடும்பன் 
வெல்பகனைக் கொன்றோன்வீ மன்
** 145

#30
கண்ணன்மைத்து னன்கா வெரித்தோ னனுமதுசன் 
விண்ணிறைசே யீசன்முடி மேலடித்தோன் நன்விசயன் 
பற்குனன்கி ரீடிசுவே தன்கிருட்டி னன்பார்த்தன் 
அர்ச்சுனன்சை வன்றனஞ்ச யன் 
** 146

#31
தென்னன்வைகை யான்செழியன் செந்தமிழ்நாட் டான்மதுரை 
மன்வழுதி பஞ்சவன்வேம் பன்மீன வன்மாறன் 
றென்கிரியான் றாம்பிரதீ ரன்குமரி யன்கவுரி
யன்கைத வன்பாண்டி யன்
** 147

#32
சென்னிகிள்ளி யார்த்தாமன் செம்பியன்மால் கோழிக்கோன் 
பொன்னித் துறைவன் புலிக்கொடியன் நன்னேரி 
வெற்பன் புனனாடன் வேற்சூரி யன்வளவன் 
தப்பிலப யன்சோழன் றான்
** 148

#33
கோதைகுட்டு வன்குடகன் கொங்கன்வஞ்சி வேந்துபனம் 
போதனுதி யன்பொருனைத் தென்மூன்றாற் றாதிபதி 
வானவரம் பன்மலைய மான்வில்ல வன்சேரற் 
கானபெயர் சேரலனு மாம்
** 149

#34
காரிவிரா டன்சகரன் சென்னி நிருதிதுந்து 
மாரிநள னாதிவள்ளல் வக்கிரனே யோர்சந்தி 
மானக் குரன்சிசுபா லன்சந்தன் கன்னனந்தி 
மானுமிடை வள்ளலென வாம்
** 150

#35
பாரி யெழிலி பசுந்தொடைபே கன்மலையன் 
ஓரிநள்ளி பின்வள்ள லோர்காத்க வீரன்முசு 
குந்தன்பு ரூரவன ளன்சகரன் கோளிலரிச் 
சந்திரனுஞ் சக்கரரா சர்
** 151

#36
எட்டிவணி கன்பரத னிப்பனாய் கன்றனதன் 
செட்டிகவிப் பன்றே சிகனிளங்கோ வொட்டியன்சி 
லேட்டையிச்சி யன்சீர கத்தாமன் கோவலன்பொன் 
னீட்டனுழ வோன்வசிய னே
** 152

#37
வெள்ளைவட்டன் காராளன் மேழியன்கா வித்தாமன் 
பிள்ளையுழ வன்சூத்தி ரன்சதுர்த்தன் கொள்களமன் 
பங்கயன்றாள் வந்தோன்பூ பாலன் குடித்தலைவன் 
கங்கைகுலன் வேளாளன் காண்
** 153

#38
மேற்குலரா மிம்மறையோர் வேந்தரிப்பர் வேளாளர் 
நாற்குலரு மன்னோர் நடைமுறைமை யேற்குமதஞ் 
தஞ்செயற்பே தத்துதித்தோர் கீழ்த்குலத்தோர் சாங்கிரர்கள் 
பஞ்சவர்க ளாமவர்பேர் பார்
** 154

#39
அக்கீழ்க் குலத்தர்நில மைந்தினர்கண் ணாளர்வண்ணார் 
கைக்கோளர் நாவிதர்செக் காருவச்சர் மெய்க்குயவர் 
சோனகர்மி லேச்சர்செம்மார் பாணர்தோ லூன்கள்விற்போ 
ரீனர்முத லெண்ணிலர்க ளே
** 155

#40
சிற்பியனோ வன்மோகன் சித்திரன்கொல் லன்றுவட்டன் 
சிற்பிதட்டான் கம்மியனோ வன்றபதி சொற்புனைவன் 
கன்னான்கண் ணாளனக்க சாலையன்கண் ணுள்வினைஞன் 
நன்மனுவன் றச்சன்யவ னன்
** 156

#41
குன்றவர்கி ராதர் குறவ ரிறவுளர் 
வன்சவரர் வேடர் வனசரர் பின்புளிஞர் 
வேட்டுவர் மாகுலர் வெங்குழுவர் கானவருஞ் 
சூட்டுங் குறிஞ்சிநிலத் தோர்
** 157

#42
குறத்தி கொடிச்சிகுறிஞ் சிப்பெண் குறிஞ்சி 
யிறைக்குப்பேர் வெற்ப னெயின ரிறுக்கருடன் 
புள்ளுவர்வி ராதர்மற வோர்பா லையரதிற்பெண் 
டுள்ளெயிற்றி யேமறத்தி சொல்
** 158

#43
மீளியுடன் காளை விடலைபா லைக்கிறைப்பேர் 
ஆளிடையர் கோபால ராயர்விந்தர் நீள்பொதுவ
ரண்டர்தொறு வோரமுதர் முல்லையர்பே ரந்நிலப்பெண் 
மண்டிடைச்சி யாச்சியென வாம்
** 159

#44
குறும்பொறைநா டன்கான நாடனண்ண றோன்றல் 
மறஞ்செய்முல்லை வேந்தன்மரு தத்தர் குறுங்களமர் 
மள்ளர்விளை ஞோருழவர் வன்கடைஞர் கம்பளரே 
பள்ளர் களைஞரெனப் பன்னு
** 160

#45
அம்மருதப் பெண்கடைச்சி யாற்றுக்கா லாட்டிமள்ளி 
வெம்மைதவிர் பள்ளியதின் வேந்தன்பேர் செம்மகிழ்நன் 
ஊரன் கிழவனெய்தற் கோன்றுறைவன் சேர்ப்பன்மெல்லன் 
சேர்புலம்பன் கொண்கனெனச் செப்பு
** 161

#46
பரதர் கலவர் களியர் நுளையர் 
பரவர் வலையர் திமிலர் பரதவர் 
பெய்கடலர் நெய்தலர் பெண்குழைச்சி யேநுளைச்சி 
செய்குரத்தி யேபரத்தி யாம்
** 162

#47
காருகனீ ரங்கோலி தூசன்வண்ணான் காருகர்நெய் 
வோர்தந்து வாயர்கைக்கோ ளர்க்குரித்தா மோர்பறம்பர் 
தோல்வினைஞ ரூன்விற்போர் சூனருல்லி யோர்கூவ 
நூலர்தைப்போர் பொல்லர்துன்னர் நோக்கு
** 163

#48
செம்மார்தோற் றுன்னர்நந்தி சக்கிரிசெக் கான்பெயராம் 
வெம்மிலைச்ச ராரியர்மி லேச்சராம் செம்மைத் 
துலைப்பன்யவ னன்சோ னகனுவண ருப்பு 
விலைச்செய்வோர் சிற்பியுவச் சன்
** 164

#49
நாவிதன்சீ மங்கலியே னாதிமஞ்சி கன்குடிச்சேய் 
வாவு சவுரகனா மட்பகைவேட் கோவனுடன் 
கும்பகா ரன்சக் கிரிகுலா லன்குயவன் 
வம்பில்வளை போழ்நர்சங்கீர் வார்
** 165

#50
பண்ணவனோ வன்மதங்கன் சென்னிசூ தன்பாணன் 
றண்வயிரி கோடிகூத் தன்கழைக்கூத் தண்ணினன்வே 
ழம்பன் கழாய னதிதிதுனி கன்புதியோன்
வம்பலனாங் கூர்ப்பிலிமந் தன்
** 166

#51
கள்விலைஞ னீழன் சவுண்டிகன்சான் றான்படுவ 
னள்ளுதுவட் டன்பிழிஞ னாம்புலையன் விள்குணுங்கன் 
வங்கனீ னன்களைஞன் வன்கொலைஞ னீசன்மா 
தங்கனிழி ஞோன்சண்டா ளன்
** 167

#52
தோரணரா னைப்பாகர் தூண்டுபரிச் சாணிபண்ணு 
வார்வதுவர் வாதுவர் மாவலர் தேர்ப்பாகன் 
சாரதிசூ தன்வலவன் சாரணர் வேயரொற்றர் 
சோரர்கள்வ ருந்திருடர் சொல்
** 168

#53
வல்லார்மாட் டோராம்வல் லோன்வலவை வல்லுநனாம் 
செல்வனாஞ் சம்பனனோய் தீர்ந்தோனா முல்லாபன் 
வந்திபுகழ் வோன்கரியோன் கள்வனிரு வாணிநக்கன் 
உந்துவண்ட ராங்கடிகை யோர்
** 169

#54
ஆயுத்த மானோர்சன் னத்தர்புக ழோனியவுள்
ஓய்விலரு ளுள்ளோன்கா ருண்ணியனாங் காய்கொலையன்
காதகன் காருகன்கா ரோடருறை காரர்முன்னோர்
ஓதுபிரா சீனர்முதி யோர்
** 170

#55
ஆதுல னேழை தரித்தினா மச்சமுற்றோன்
பீதன்பீ ருச்சகிதன் பேசிழுதை பேதைமட 
னெண்முழும கன்மூட னேழையா தன்சிதடன் 
அண்ணையஞ்ஞை யாமறிவி லான் 
** 171

#56
பாராய ணன்குறிக்கொள் வோன்வழிச்செல் வோன்பதிகன் 
ஏருரியோ னாங்கிழவ னேவுவான் பேர்வியவ 
னாகரிகர் காமுகரே நற்சதுரர் வஞ்சகன்பேர் 
வேகிநிசா தன்சவனன் வேண்டு
** 172

#57
மாலுமிமீ கான்மீவான் மீகாம னாஞ்சமைப்போன் 
வாலுவன்பா சீகன்மடை யன்பாகி கூலியனே 
பாசகனா மேற்போன் பரிசிலா ளன்றீனன் 
யாசகனு மாமிரப்போ னே
** 173

#58
பார்த்தர் விடர்படிறர் பல்லவரி டங்கழியர் 
தூர்த்தரா மோர்கண்ணர் சொல்காணர் சீர்த்தியாகி 
வள்ளியோன் றாதாவே ளாளனுப காரிவள்ள 
லுள்ள புரவலனீ வோன்
** 174

#59
உலுத்தன் பிசின னுலோபன் குலீனன் 
குலக்கேடன் வாமனங் குஞ்சம் மெலித்தகுறள் 
சிந்தாங்கூன் கோணல் செவிடன்வெதி ராஞ்சிதடன் 
அந்தனந்த கன்குருட னாம்
** 175

#60
பங்குகுணில் மொண்டிமுடம் பற்றூமை மூகைமுங்கை 
கொங்கணிவே லன்வெறியன் கோமரத்தான் இங்கிவையே 
தேவரா ளன்சா லினிதேவ ராட்டியாம் 
பூவி னளமரளப் போர்
** 176

#61
அருந்துதன்வா திப்போ னழக னுலோலன் 
பெருந்தம் பதியிரட்டை பெண்ணா ணரம்பிசைப்போர் 
சூட்டுங் குயிலுவராந் தோற்கருவி யோர்யவனர் 
ஆட்டுவிப்போர் நட்டுவரென் றாம்
** 177

#62
ஆமே திலர்வம் பலர்நொதும லோரயலோர் 
தாமே கிராமியர்கி ராமமுற்றோர் மாமாத்தி 
யன்பரிகா ரன்பிடக னாயுள்வே தன்வயித்தி 
யன்பேர் மருத்துவனு மாம்
** 178

#63
புல்லர்கலர் கையர்கிஞ்சர் புள்ளுவர்க னிட்டர்பொறி 
யில்லர்தே ரார்முறையி லார்பதிதர் பல்லுவர்கீழ் 
மூடர்கய வோர் முசுண்டர் மூர்க்கர் தீயோர்பயல்க 
ளோடுமற்பர் தீம்பர்சிறி யோர்
** 179

#64
தோழனெலு வன்சேடன் பாங்கன் றுணைவனண்பன் 
றாழ்சிலதன் முன்னிலைப்பேர் தானேடா தோழிசகி 
சேடி யிகுளை சிலதியாம் பாங்கியிவட்
கேடி யெலாள்முன் னிலை
** 180

#65
நாற்குலத்தாண் பெண்ணுயர்வு தாழ்வின்மணந் தீன்றமைந்தன் 
சாய்க்குமனு லோமனவர் தாழ்வுயர்வாய் வேட்கவந்தோன் 
சொல்பிரதி லோமனவர் சோர்வினந்த ராளனிம்மூன் 
றல்லோன் விராத்தியனே யாம் 
** 181

#66
குண்டன்வேற் றோர்க்கருள்சேய் கோளகனாங் கைம்மைமகன் 
திண்கானீ னன்கன்னி சேய்தருணி யண்டுவதி 
யெவ்வனியு மாம்பிரவு டைக்கே யபரஞ்சி 
யவ்விசைபோற் பாடலின்மிக் காள்
** 182

#67
கந்தியவ்வை யம்மைகன்னி நோற்பாள் குமரிகன்னி 
வந்திமையே மைம்மை மலடியாம் நொந்தமுண்டை 
கைம்மை கயினி கலனிலிய மங்கலியே 
வன்மையறு தாலிவித வை
** 183

#68
வண்ணமகள் கோலஞ்செய் வாள்மதங்கி பாடினியே 
பண்விறலி பாடகியும் பாடுவிச்சி கண்ணாம் 
பதிவிரதை யேசதிகற் பாட்டியாட் கொண்ட 
வதிபெண்ணா ணாச்சிநா யன்
** 184

#69
சாமிகோ மாட்டிகோ தாரம் பெருமாட்டி 
மாமுதல்வி யேதலைவி மற்றிறைவி யாமரசி 
யீனமில்பாஞ் சாலியைவ ரில்லாள் துரோபதைபேர் 
சானகிவை தேகிசீ தை
** 185

#70
அத்தை குரத்தியையை யாச்சியா சாள்பெயராம் 
கைத்தொழில்செய் வோர்தொழுவர் கம்மியராம் பத்தியில்லா 
வேசிபொருட் பெண்கணிகை வேசைவிலை மான்சூளை 
தாசிவரை வில்லிபரத் தை
** 186

#71
அத்தகுவி ருத்திதொழும் பாள்கிணகர் தாசர்தொறுத் 
தொத்தடிமை சேடர்படுத் தொண்டுமா மெய்த்தொழுத்தை 
குட்டனிகுண் டந்துருத்தி கூளி குறளசதி 
துட்டைபுழுக் கைபெண்பாற் சொல் 
** 187

#72
ஒன்னார்பற் றார்செறுந ருள்ளார்நள் ளார்மருவார் 
மன்னார்செற் றார்பரர்மா னாரிகலார் இன்னார்வேண் 
டாரமரர் தெவ்வர்தரி யார்மாற்றார் சேயர்பகை 
வோரரிகள் சத்துருவா கும் 
** 188

#73
உற்றவர்நட் டோர்கிளைகே ளொக்கல்குடும் பங்கூளி 
சுற்றம் விருந்தந் தொடர்கடும்பு பற்றர்தமர் 
பந்தநள்ளி மித்ரர் பரிசனம் பாசனமே 
பெந்துமுற வின்முறைப் பேர்
** 189

#74
பேரன்மூ தாதை பிதாமகன்போற் றன்பாட்டன் 
பேர்தகப்ப னீன்றோன் பிதாதாதை சீரம்மான் 
அத்தனய்யன் றந்தையச்ச னப்பனா ஞாதியர்தா 
யத்தர்குடிச் சுற்றத்தோ ராம் 
** 190

#75
ஆயியன்னை யவ்வைபெற்றா ளம்மனையாய் தல்லிதள்ளை 
தாயம்மை மோய்மாதாத் தவ்வையுமாம் பாய்செவிலி 
பின்வளர்த்த தாய்தமக்கை பேர்சேட்டை தவ்வையண்ணி 
முன்னைதத்தை யக்காள்மூத் தாள் 
** 191

#76
கையனிச்சை தங்கை கனிட்டைபின்னை யாமிளையோ 
ளையன்சேட் டன்றமைய னண்ணன்முன்னோன் செய்யதம்முன் 
மூத்தோன்பேர் தம்பிபின்னோன் மூளுமனிச் சன்கனிட்ட 
னேத்திளவ லைந்துமிளை யோன்
** 192

#77
மாமியத்தை மாமனம்மான் மாதுலனா மோர்வயிற்றே 
தாமுதித்தார் சோதசர்ச கோதரரே தோமி 
லுடன்பிறந் தோர்துணைவ ரோர்குடியிற் கொண்டோ 
னடர்ந்தசட்ட கன்சகல னாம்
** 193

#78
கொண்கனுரி யோன்வேட்டோன் காந்தன்வல்ல வன்கொழுநன் 
நண்பன் மணவாள னாயகனே யொண்கணவன் 
பத்தாச் சுகியன் பதிதவன்கேள் வன்றுணைவன் 
மெய்த்தலைவன் காதலனா மே
** 194

#79
பாரிவிருந் திற்றலைவி பன்னிமண வாட்டிமனை 
தாரமனை யாள்கா தலிகாந்தை சேருரிமை 
வல்லபிகு டும்பினிவாழ்க் கைத்துணைவி ரும்பிகள 
மில்லவளும் நாயகிக்கா மே
** 195

#80
தோன்றல்புத்தி ரன்சேய் சுதன்மதலை யேயன்மரு 
மான்றனையன் செம்மல்புதல் வன்பால னீன்றசெல்வன் 
சந்ததிகுட் டன்சிறுவன் காதலன்கு மாரன்மைந்தன் 
நந்தனனு மாண்மகன்பேர் நாடு
** 196

#81
புத்திரிகு மாரி புதல்விசுதை யேயிகுட்டி 
சிக்தமகி ழையை சிறுவிசெல்வி யத்தனையை 
பந்தனை காதலி பாலியிவை பெண்மகள்பேர் 
நந்தனையுஞ் சொல்க நயந்து 
** 197

#82
இப்பொதுச்சந் தானமக வெச்சங் குழவிவழி 
கைப்பொருள்சி சுக்குழந்தை கான்முளையே மெய்ப்பிள்ளை 
மக்கள் சிறாரே மகார்மகவின் பன்மையாஞ் 
சக்களரோ ராண்பெண்சேர்ந் தார்
** 198

#83
மைத்துனனத் தான்கொழுநன் மாப்பிளைசம் மந்தியம்மான் 
அத்தைமகன் வேட்டோர் துணைகொழுநி மைத்துனியப் 
பிள்ளைகளிற் பெண்பேர் மருமகன்பி றங்கடைமாப் 
பிள்ளைமரு மான்மருகன் பேர்
** மானிட வர்க்கம் முற்றும்

@2 அஃறிணை யுயிர்ப்பொருட் படலம் 

@21 நாற்காலுயிர்ப் பொருள் வர்க்கம் 
** 199

#1
ஆளியறு கேபூட்கை வாளமுமாங் கேசரிக 
ராளிவய மாமிருக ராசனரி கோளரி 
சீய முடங்குளைபஞ் சானனங்கண் டீரவந 
காயுதம டங்கலுஞ்சிங் கம்
** 200

#2
வல்லியஞ்சார்த் தூலம்வய மாவியா ளந்தீவி 
புல்புலித ரக்குழுவை புண்டரிகங் கொல்வேங்கை 
சித்திர காயங் கொடுவரிவி யாக்கிரமே 
யத்துங் குயவரியு மாம் 
** 201

#3
தந்திகளி றத்திகயங் குஞ்சரஞ்சா மோற்பவமா 
மந்தமாத் தூங்கல்கரி மாதங்கஞ் சிந்துரந்தோல் 
வாரணம தாவளங்கைம் மாவழுவை யாம்பல்பக 
டேரம்ப நாக மிபம் 
** 202

#4
உம்பல்வல்வி லங்கொருத்தல் மாதிரமு வாப்புழைக்கை 
கும்பிசிறு கண்ணிநடைக் குன்றெறும்பி தும்பிமருண் 
மாவேழந் தந்தா வளம்புகர்மு கம்பூட்கை 
நால்வாய் கறையடியா னை 
** 203

#5
தீதில்பிடி யானைகரே ணுக்கரிணி சீர்வடவை 
யோதிரதி யாமரசு வாயூத நாதனாங் 
கன்றுமுனி போதகங் கயந்தலையு டன்களபந் 
துன்று துடியடியுஞ் சொல் 
** 204

#6
தாலவட்டம் வால்வே சகம்வா னுனியாமுன் 
காலதின்பேர் காத்திரம்பின் காலபரம் தாலுமத 
கங்கும்ப மத்தகங் கைந்நுனியே புட்கரங்கூட் 
டங்கடக மஞ்சுமுது காம்
** 205

#7
கடைக்கணிரி யாணங் கடங்கதுப்ப தாம்பல் 
லடிப்பேர் கரீர மதுதூங் கிடங்கண்டஞ் 
சேவகம்வி லாழிகையிற் சிந்துநீர் பாகலநோய் 
ஏவுதூ சாம்புரசை யே
** 206

#8
சூளிகையாங் காதடி ப்பேர் தொண்டை தொண்ட லந்து திக்கை 
வாளெயிறு கோடுதந்த மானமும்பில் னீள்பிருதுங் 
கொம்பினடு வீழ்குழிகொப் பம்பயம்பா மோடைபட்டம் 
உம்பல்செல்லும் பாதைதண்ட மோர் 
** 207

#9
மதம்பெய்சுவ டேகரட மாங்கடாந் தானம் 
மதர்கடம தங்கூடம் வாரி முதிரோளி 
யாலையங்கண் டக்கயிறு கச்சைமந்த னஞ்சூழி 
யேலு முகபடா மே
** 208

#10
கந்திருவம் பத்திரியே கற்கியச்சு வஞ்சடிலங் 
குந்தமரி கிள்ளையயங் கொக்கிவுளி கந்துகமாக் 
கோடைதுர கங்கோணம் கோடகங்கோ ரம்புரவி 
பாடலந்து ரங்கம் பரி 
** 209

#11
தூசிகன வட்டந் துரகத மத்திரி 
வாசி குரகதம் வாகமுன்னி தேசியுமாந் 
திண்குதிரைப் பேர்பரமே சேர்பல்ல ணம்பருமம் 
பண்கலனை யின்பேர் பகர் 
** 210

#12
வற்கம் வடிகயிறு வாய்வடங்கு ரங்குரச்சை 
யக்குளம்பா மாதிகமே யம்மார்க்கம் தக்கபடி 
யங்கவடி கச்சமொட்டு மாங்கடியா லங்கறுளே 
வெங்கலின மேகவின மே 
** 211

#13
மத்திகைகோல் சம்மட்டி மந்திரஞ் சாலைபந்தி 
மெய்த்த சுவல்குசையே வேசகமே வைத்தவுளை 
வேயு மதின்மயிராம் வேழத்தின் மேற்றவிசே 
யாயிலக டம்பலகா ரம் 
** 212

#14
கோப்பெற்றந் தேனுக் குடங்கபிலை யான்சுரபி 
யாப்பசுவாம் பத்திரைநல் லாச்சுதையே தீப்பசுவாம் 
வற்சலமீற் றாக்கிருட்டி யோரீற்றா வாமலட்டா 
வற்சைகன்று தன்னம்வற்ச மாம் 
** 213

#15
பாறல்விடை நந்திகுண்டை பாண்டில்குத்தங் கூளிபக 
டேறிடபங் கோப்பதியி றான்மூரி கூறெருது 
புங்கவஞ்சேப் புல்லநரை பூணிகொட்டி யங்காளை 
யங்கெருமை யான்பொதுமா டாம் 
** 214

#16
ஆவின்முலைப் பேர்சுரையா மாபீன மேசெருத்தல் 
ஆவின்மடுச் சூட்டா மதின்சிமிழே மேவுமிமி 
லக்குவிடை முரிப்பா மானெருமைப் பால்விளையத் 
தக்க துரோசனைய தாம் 
** 215

#17
காலிதொறுக் கோட்டநிரை காலேயம் பட்டிகிடை 
யேல்பசுக்கூட் டங்கிடையாட் டின்குழுவாஞ் சால்பொலியே 
றாந்தூர்வ கந்துரிய மாமாக் கவையமா 
வாய்ந்தகாட் டாவினா மம்
** 216

#18
காரான் வடவைமயி டஞ்சயிரி பங்கவரி 
கார்மேதி மூரிகா சாவெருமை சேராண் 
பகடுகிடா வாமீனாப் பக்குவமாம் பெண்மா 
டிகலில் கிடாரியென்றா மே
** 217

#19
வெள்ளைமறி கார்வெறிமை மேழகம யந்துருவை 
பள்ளையுதள் சாகளஞ்சா கம்பிரமம் துள்ளலசங் 
கொச்சையரு ணங்கொறிவற் காலியொரு மேடமுடுச் 
செச்சைதகர் மோத்தைதிண்ண கம்
** 218

#20
கம்பளஞ்ச கம்புருவை யாடுகிடா யிவ்வாண்பேர் 
பம்புவரை யாடுசர பம்வருடை வெம்பறழே
குட்டன்மறி சோரனணங் கைந்தாட்டின் குட்டிகண்டத் 
தொட்டுமுறுப் பொன்றதரென் றோது
** 219

#21
பல்லுகங் குடாவடியை வாய்மாக் கவிழ்தலையே 
பல்லமெலு வெண்கிருளி பற்றுளியம் சொல்கரடிக் 
காம்பேர் தலைவிரியு மாமண் டசமுசலி 
யோம்புதடி கோதா வுடும்பு 
** 220

#22
போழ்முகிகோ லங்கிருட்டி போத்திரிவ ராகமுந்தூழ் 
கேழல்களி றேனங்கிருகிடியே மோழலரி 
வல்லுளிபூ தாரமைமாச் சூகரங்கு ரோட்டிரணி 
நல்லெறுழி கோணிபன்றி நாட்டு
** 221

#23
சல்லியமு ளாவெய்யே சல்லபமுட் பன்றியம்முட் 
சல்லஞ் சலஞ்சா மரைசவரி மெல்லெகின 
மானமாச் சீகரம்பட் டங்கவரி மானணிற்பேர் 
தான்வெளில்வ ரிப்புறம தாம் 
** 222

#24
ஏக சிருங்கிகாண் டாமிருக மென்பர்சிவ 
மோகியதி சூரிபுரு டாமிருகம் வாகில்லா 
முண்டிதையு ரோதனிதே வாங்காகு மொய்சுவவு 
சுண்டனுடன் சுந்தரிமூஞ் சூறு 
** 223

#25
பாக்கன்விலா ளம்விடரு கம்பவன மார்ச்சால 
மாக்கடுவன் பூஞையல வன்பூசை தாக்கோதி 
யிற்புலியே மண்டலியெ லிப்பகை யேவெருகென் 
றப்பதினான் கும்பூனை யாம் 
** 224

#26
நவ்வியுழை யேணஞ்சூ னம்பிணைகு ரங்கமறி 
யவ்வருணங் கிட்டிணஞ்சா ரங்கமுமான் வெவ்விரலை 
புல்வாய் கலைவச்ச யங்கருமான் போரிரலை 
புல்வாய் தனக்கும் புகல்
** 225

#27
கோகிலஞ்சா காமிருகங் கோடரநி ரந்தமரி 
நாகமற்க டம்வா னரங்கடுவன் யூகங் 
கவிவலிமு கம்பிலவங் கங்கீச கங்கா 
னவனரமா மந்திகுரங் காம் 
** 226

#28
காருகங்க ருங்குரங்காங் கத்தூரிப் பிள்ளைமான் 
சூர்நரந்த நானந் துருக்கமாம் சீர்மறுவி 
நாவிபுழு குப்பிள்ளைப் பேர்காத் திரம்நகுலம் 
தீர்வைகத்தி ரங்கீரி செப்பு
** 227

#29
ஓரிசிரு காலனுக்கு ரோட்டிகலன் கோமாயுப் 
பூரிமா வுள்ளான்சம் பொண்டனரி யோரிகள்வன் 
மைம்முகங்கூ லங்கோலாங் கூலமுசு வாங்கீரிச் 
சம்முயல்வ யஞ்சசமு மாம் 
** 228

#30
கூரனெகி னம்பாசி குக்கல்பட்டி ஞாளிசுவாச் 
சூரன் புரோகதிசு ணங்கனக்க னோர்சார 
மேயன்விசு வாசிசுன கன்குரைமு கன்முடுவல் 
நாய்ஞமலி யுஞ்சுவா னம் 
** 229

#31
பெண்ணாய்க் கிவற்றின் முடுவலெனும் பேர்சிறப்பாந் 
திண்ணார்கொக் கேவிருகஞ் செந்நாயா மெண்ணுஞ் 
சுகினஞ் சடைநாயாம் வேசரிது ரங்க 
முகியிவைகோ வேறுகழு தை 
** 230

#32
காளவாய் வேசரிகோ கத்திரிக ருத்தபமே 
நீள்கரம்வா லேப நெடுங்கழுதை தாழ்வலிதா 
மத்திரிதா சோக மிரவணநெ டுங்கழுத்த
லித்துணையு மொட்டகமா மே 
** 231

#33
சாயனஞ்சாய்ந் தஞ்சரடந் தண்டோணா னோதிசில்லான் 
காய்முசலி கோம்பிதோ கைப்பகையே பாய்காம 
ரூபியண்ட சங்கா முருகியா மோந்திமரை 
யாவிதங்கா னக்குதிரை யாம் 
** 232

#34
சாடுந் துருக்கனக தந்துந் தளங்களக 
மூடிகம்பெ ருச்சாளி மொய்விருட நீடாகு 
வென்பவுமா மாகு விரும்பன் சிகரியெலி 
பின்கருப்பை காரெலியின் பேர் 
** 233

#35
மாவொருத்த லோரிகடு வன்பகடு டன்களிறே 
சேவல்கலை யும்பல்போத் தேறுதகர் பாய்விலங்கி 
னாணிவைபெண் பாட்டிபிடி யான்பிணைபி ணாப்பெட்டை 
காணுமந்தி நாகுங் கருது
** 234

#36
பறழ்குழவி குட்டிபிள்ளை பார்ப்புக் குருளை 
மறிகன்றின் பேர்விலங்கு மாமான் செறிமிருக 
நாற்காலிப் பேர்வியூ கங்குலம் யூதம்விருந்த 
மேற்சால மக்கூட்ட மே 
** 235

#37
கூலம்விலா ளந்தோகை கூரமொடு வேசகம்வால் 
வாலதியு மாம்வெருகம் வாற்கீழாம் மேலுலவை 
கொம்புவிசா ணஞ்சிருங்கம் கோடுமருப் பாங்குமரங் 
கொம்பிலியா மேழையுமே கூறு 
**நாற்காலுயிர்ப் போருள் வர்க்க முற்றும் 
** 2 அஃறிணை யுயிர்ப்பொருட் படலம் 

@22 பறவை யுயிர்ப்பொருள் வர்க்கம் 
** 236

#1
தாக்கியனே நாகா சனன்வயின தேயன்புட் 
கோக்கலுழன் காளாரி கூறுவணன் தாய்க்கவலந் 
தீர்த்தான் பெரிய திருவடிபுட் காசிபன்சேய் 
காத்தசுதா தாரிகரு டன்
** 237

#2
சம்பரம் வாருண்டஞ் சாளுவந்து ரோணமொடு 
சிம்புளெண்காற் புள்வருடை சிங்காரி வெம்பறவை 
மெய்க்குலிச தந்தி குலிசநகி மீறுசிவ 
பக்கிசதுர்ப் பாணிசர பம்
** 238

#3
அன்னமெகி னம்வக்கி ராங்கமரா ளம்விகங்கந் 
தன்னொடஞ்ச மோதிமமாந் தத்தையரி வன்னிகிள்ளை 
கீர மவந்திகைசு வாகதஞ்சு கங்கிளிப்பேர் 
சாருவுமாம் பொய்யாச் சலாங்கு
** 239

#4
சிகிஞமலி மஞ்ஞை சிகண்டி நவிர 
மொகரம் பிணிமுகம யூரஞ் சிகாவளமாங் 
கோலமயிற் கேகயமுங் கொள்கமயி லாட்டேங்க 
லால லகவல் குரல்
** 240

#5
சந்திராங் கந்தூவி கூந்தல்சிகண் டஞ்சருணம் 
பைந்தொங்கல் பீலிகலா பந்தோகை யுந்துமுருந் 
தச்சிறைமுட் டித்திரிபொன் வாய்ப்புட் சிரல்கவுதஞ் 
சிச்சிலிம ரங்கொத்தி சேர் 
** 241

#6
பார சிகைசேனம் பாறுகங்க மும்பருந்தாம் 
சாரிகையும் பூவையு நாகணவாய் காரிகொடி 
மாகரடங் கூகைப் பகைவா யசம்பிள்ளை 
காக மரிட்டமுங்காக் கை
** 242

#7
அண்டங்காக் கைப்பேர்கா கோலமா மற்கமுங்கா 
ரண்டமுநீர்க் காக்கைமிதல் கோரசம்பு லொண்சிவலாம் 
பாரதமி லாதமுமாம் பற்றுமிதற் பூழ்சிரவஞ் 
சாருங் கவுதாரி தான்
** 243

#8
காமகா ளங்கிரவுஞ் சங்குநரங் காரியன்றில் 
காமசின்னங் காரி களகண்டந் தோமிலாக் 
கோரகைப கங்கோகி லம்பரபுட் டங்குயிலாஞ் 
சாரங்க மாஞ்சா தக
** 244

#9
காளபதந் தூணங் களரவம்பா ராவதமே 
யாள்கபோ தம்புறவா மாந்தையின்பேர் நீளிருடி 
கின்னரங்கூன் பிங்கலமாங் கின்னரங்கி ராமமுன்னம் 
புன்மையுற்கு ரோசநீர்ப் புள் 
** 245

#10
சக்கரவா கங்கோக நேமிகொம்பி சக்கரமா 
னைக்குருகாம் போதகைச கோரநிலா முக்கிகுக்கல் 
பாடுசெம்போத் தாஞ்செம் பகஞ்சம்பங் கோழிகம்புள் 
காடைகுறும் பூழ்கபில சம் 
** 246

#11
காட்டூமன் கூகை கவுசிகம்பெ ரும்புள்ளாங் 
கோட்டா னுலூகங் கொடிப்பகையே யீட்டுங் 
குடிஞை நிசாசரிகு ராலாங் குரண்ட 
மடர்பகம்வ லாகமுங்கொக் காம் 
** 247

#12
போதா பிதாக்குருகு புட்கரஞ் சாரசம் 
நாதவண்டா னஞ்சிகரி நாரையா மோதுகுரு 
காண்டலைப்புள் ஞானிகுக்கு டங்காற் படைகோழி 
மாண்டுவசம் வாரணமு மாம்
** 248

#13
பாயசுணங் கேகயம்ப றைப்பகையி சைப்பிரியி 
சாய்குழறி நீராடி தாராவாம் தோய்பூழான் 
காதம்பம் கான்கோழி கம்புள் கலிங்கமென 
வாதல்வா னம்பாடிக் காம்
** 249

#14
உள்ளலுள் ளான்சிதகந் தூக்கண மூர்க்குருவி 
தள்ளுகுதி காலிசக டங்குலிங்கங் கொள்புலிங்கஞ் 
செல்லடைக்க லங்குருவி யாம்பகண்டை சில்லமாம் 
வல்லூற்றின் பேர் கடக மாம்
** 250

#15
சாரெருவை புண்டரஞ்ச குந்தமுவ ணம்பவணை 
வார்கழுகாங் கஞ்சனம்வ யான்வலியான் கூர்கிகினி 
வஞ்சுளன்பா ரத்துவசம் பிள்ளைவய வன்கயவாய் 
கஞ்சரீ டங்கரிக்கு ரீஇ
** 251

#16
தும்பிமது பங்கீட மாவளிசு ரும்பரிசா 
கம்பிரசஞ் சஞ்சாளி கங்கேச வம்பிருங்கம் 
மந்திபுட்சி லீமுகஞ்சா ரங்க மதுகரங்கீ 
தந்தேன் கரும்பறுப தம்
** 252

#17
கண்டஞிமி றேபிரம ரங்கழுது சஞ்சரிகம் 
வண்டுபுண்ட ரீகமுமாம் வாகுரமே யொண்டுரிஞ்சில்
வாவலுட னஞ்சலியா லாலம்வெளவா லென்பர் துள்ளல் 
மூவல்மச கங்கொதுகொ லுங்கு
** 253

#18
சில்லிகைசிள் வீடு சிமிலிசல பம்பதங்கம் 
சில்லை சிதடிவிட்டில் செங்கோப நல்லீயல் 
மூதாவாந் தேனீச்சா கம்பிரச மின்மினிகச் 
சோதநித்தி லாநுளம்புஞ் சொல்
** 254

#19
பக்கிவிகி ரஞ்சகுந்தம் பத்திரிக கங்குடிஞை
மிக்கவிகங் கஞ்சகுனம் வீவயின மெய்க்குருவி 
புட்பிணிமு கம்பதங்கம் போகிலண்ட சம்பறவை 
கொட்புறும்பார்ப் போடுபிள்ளை குஞ்சு 
** 255

#20
பெண்பேடை பெட்டைபெடை பேடளகா மாண்சேவ 
லொண்போத் திறகடித்த லோசனித்த லண்டமுட்டை 
கோசம்வருட் டஞ்சினைபுட் கூட்டந் தொழுதிபுள்ளி 
னோசை துழனியென்றே யோர் 
** 256

#21
சிறகிறகு பிச்சஞ் சிறைகூழை தோகை 
பறைகுரல்வா சஞ்சதனம் பக்கம் இறைதூவி 
கூரல்சதம் பத்திரமாங் கூர்மூக் கலகுதுண்டம் 
சார்சுவவு கஞ்சுமது தான்
** பறவை யுயிர்ப்போருள் வர்க்க முற்றும் 
** 2 அஃறிணை யுயிர்ப்பொருட் படலம் 

@23 ஊருயிர்ப்பொருள் வர்க்கம் 
** 257

#1
நற்பாம்பு மண்டலிகண் கொத்திமூர்க் கன்சாரை 
வெற்பரவ மண்ணுளியன் வெவ்விரியன் சொற்புடையன் 
வன்முறுக்க ராமயக்க ராநீ ரராவழலை 
பன்மணிய னாதிபல் பாம்பு 
** 258

#2
பன்னகங் காகோதரம்ப ணம்பாந்தள் காத்திரவே 
யன்மிருகங் கஞ்சுகிய ராவுரகந் துன்னுபவ 
னாசனங்கும் பீனசமே நாகம் விடருகமே 
மாசுணம்வி யாளமர வம் 
** 259

#3
சர்ப்பமண்ட சங்கவைநா சக்கிரியே கூடபதந் 
துர்ப்பணியே போகிதந்த சூகமரி வற்புயங்க 
மங்கதநி பாதி யகிகட் செவியெனவே 
யிங்குமுப்பான் பாம்புக் கிசை 
** 260

#4
துண்டமி ராசிலமுஞ் சொல்சாரை கோளகமே 
மண்டலிபச் சைப்பாம்பு தாசனன்மால் கண்கொத்தி 
மாசுணம்பெ ரும்பாம்பு பாந்தள்மலைப் பாம்பாகுங் 
காசடையும் மூர்க்கன் நாகம்
** 261

#5
மந்தமிரா சம்வழலை வன்முறுக்க ராச்சவடிப் 
பிந்திருத லைப்பாம்பின் பேர்மணிய னுந்துகா 
ளாம்பகிமா நாகமிரா சாளிகுக்கு டம்பறவைப் 
பாம்பரச நாகப் பகுப்பு
** 262

#6
பைபணம்ப டம்பொறிப்பே ருத்திதுத்தி போகமுடல் 
துய்யபற்பேர் காறுதட்டந் தூம்புகட்டஞ் செய்காளி 
காளாத் திரியமனத் தூதனான் காமதின்பல்
வாளரவி னாக்கவர்நா வாம் 
** 263

#7
பீலிகைபி லன்சுலோ பஞ்சிகடை கண்மூக்கி 
காலுறவி யண்டசங்க டுத்துவாய் மேலெறும்பாந் 
துட்டன் றெறுக்கால் விடநளிவி ருச்சிகந்தே 
ளொட்டரணை யண்டசமென் றோது 
** 264

#8
மூட்டைகுட வன்முகடு மற்குணமூன் றாஞ்சிலந்தி 
வாட்டுமு லூதைகா வான்சிலம்பி தீட்டுவிட 
தாலிநக்கி பூரமதாஞ் சார்புழுக்கீ டங்கிருமி 
சூலுறும்பொட் டென்பிலியுஞ் சொல்
** 265

#9
இற்கோதாப் புள்ளியண்ட சங்கோ கிலம்கெவுளி 
யொற்கமுறும் பல்லி யுழுவுசுவாந் துற்றுசிதல் 
ஆழல்கறை யான்சிதலை செல்லாந் தேன்கூடிறால் 
வாழ்பிரசங் கோற்றேனு மாம் 
** 266

#10
நன்னாகம் பூநாகம் நாங்கூழ் நிலவேரா 
மின்னலுள்ள பாச்சா விரைப்பாகுந் துன்னிடுக்கி 
நட்டுவக்கா லிப்பேர் நவின்றவிவை யின்பொதுப்பேர் 
இட்டிடுவ ரூர்வனவென் றே
** ஊருயிர்ப் பொருள் வர்க்க முற்றும் 
** 2 அஃறிணை யுயிர்ப்பொருள் படலம் 

@24 நீர்வாழுயிர்ப் பொருள் வர்க்கம் 
** 267

#1
மகரமிறால் கெண்டை மலங்காரல் சாளை 
பகருழுவை நெய்ம்மீன் பசலி யிகல்கசலி 
வாளைகட்டாக் கோளை மடந்தைமிதப் புக்கொழுவை 
தேளிகுதிப் புக்காரை தேடு
** 268

#2
செங்களிறு கூனிதிருக் கைபன்னாக் கோவாஞ்சி 
வெங்கணைமு தற்பலவா மீனுநத்தை சங்குநண்டு 
சோகியிப்பி யாமையட்டை சூர்முதலை தேரைமுத 
லாகியவை நீர்வாழ்வ வாம்
** 269

#3
அண்டசமச் சஞ்சலச ரம்வகுலி நோமயிலை 
வண்சகுலி மீன்கொக் கரைவளைகோ டண்டசமே 
வண்டுசுத்தி நாகுவெள்ளை வாரணமே கம்புநந்து 
தண்சுரிமு கம்பணிலஞ் சங்கு
** 270

#4
மாக்கலைமீ னேறுசுறா வாட்கொம்பி யாமகர 
மாக்குதிமி லானைமீ னம்மீனை வாய்க்குள் 
விழுங்முந் திமிதிமியம் மீனினத்தைப் பற்றி 
விழுங்குந் திமிங்கிலமா மீன்
** 271

#5
கெண்டைசப ரம்பஞ் சிலைபா மரங்கயலாம் 
பெண்டதிற்சேல் நந்தண் டசநாகு விண்டநத்தை 
சம்பூ கமுமாஞ் சகத்திர தந்திமுரல் 
அம்பார் முசுண்டகமு மாம் 
** 272

#6
குத்திர சங்கங் குளிரூமை யூமைச்சி 
தத்து திறற்றேளி சல்லகமாம் கத்துகின்ற 
தேரையரி மண்டூகந் திண்சரிச பந்தவளை 
கூருநுண லண்டசமுங் கூறு
** 273

#7
ஏரல்பிண்ட மூமையெருந் திப்பியண்ட சங்கிளிஞ்சில் 
ஆர்சிப்பி யாரலா ரால்மலங்கின் பேர்நூறை 
சோகிபரல் வட்டி பலகறை வெள்வரி 
யாய்கவடி யோடலகென் றாம்
** 274

#8
நண்டலவன் கற்கடக நள்ளியண்ட சங்கள்வன் 
ஞெண்டுகுளி ரங்கவைத்தாள் ஞெள்ளிகுளி ரண்டிடுக்கி 
யாமதியுஞ் சேக்கையு மட்டை யுருச்செழுக 
நாமநொள்ளை நாகரவட் டை 
** 275

#9
சிஞ்சுமா ரங்கிரா கங்கராவி டங்கர்வன்மீன் 
அஞ்சண் டசமுதலை யாமையின்பேர் மிஞ்சுதுளி 
கச்சபமு றுப்படக்கி கூர்மங் கமடமொடு 
மெச்சண் டசமுமா மே
** 276

#10
இப்பிசுற்று மாயிரமி டம்புரியாஞ் சங்கையவை 
யப்படிசூழ் சங்கம் வலம்புரியாம் அப்படியே 
யன்னவைசூழ் சங்கஞ் சலஞ்சலம தாம்பாஞ்ச 
சன்னியமவ் வாறவைசூழ் சங்கு
** நீர்வாழுயிர்ப் பொருள் வர்க்க முற்றும்
** 2 அஃறிணை யுயிர்ப்பொருட் படலம் 

@25 தாபர வுயிர்ப்பொருள் வர்க்கம்
** 277

#1
கற்பகமந் தாரமரி சந்தனஞ்சந் தானமொடு 
சற்பாரி சாதம்விண்னைந் தாருவாம் கற்பகஞ்சூழ் 
வல்லியின்பேர் தான்காம வல்லியாஞ் சேதாரங் 
குல்லைசெச்சை சிந்துவெட்சி கூர் 
** 278

#2
சந்தனம் படீர மலையசஞ்சாந் தம்பூசல் 
சந்த்ரதில கஞ்சிசிரஞ் சந்தாரஞ் சந்தமொடு 
தண்வாசி யாகுதியி லேபனஞ்சாத் தாம்பிசன 
நண்ணுமொரு செஞ்சந்த னம்
** 279

#3
அச்சுவத்தம் போதிபிப்பி லந்திரும ரஞ்சுவலை 
மெச்சுகண வம்பணைச ராசனமு நச்சரசாம் 
காகதுண்டம் பூழி லகருவகில் புன்னாக 
நாகம் வழைசுரபுன் னை 
** 280

#4
நாரநா ரங்க நரந்தநா ரத்தைபிர 
சாரங் கணிதிமிசு சாற்றசன மோர்வேங்கை 
காதிரங்க ருங்காலி செங்கருங் காலியெனு 
மீதுசிறு மாரோட மே 
** 281

#5
வாழ்பழும ரங்கா மரம்பூதம் வானோங்கி 
நீளியக்கு ரோதம்வடந் தொன்மரமால் கோளியுமாம் 
வெள்ளில் கபித்தங் கடிப்பகைவி ளாவிளவாம் 
சுள்ளி நறவமெனச் சொல் 
** 282

#6
அச்சங் கரீரமுனி யாமகத்தி சிற்றகத்தி 
துச்சிலுப ராசிதமாய்ச் சொல்வரெலு மிச்சரச 
மோகினிசம் பீர முருகருண மேலிகுசந் 
தாகமில்ச தாபலம தாம் 
** 283

#7
மருவகஞ்ச மீரணங்கி டாரைதம ரத்துக் 
கரபுசம்பா ராவதமு மாகுந் திரளி 
யருளுற் கடஞ்சோச மஞ்சுகம் வராங்கம் 
கருவாயு மாமிலவங் கம்
** 284

#8
அயிரா பதநாக ரம்பைகொழு விஞ்சி 
பயில்சரும சம்பூர்ச்ச பத்ர முயர்வா 
மிருதுத் துவச மரவுரிம ரப்பேர் 
பொருகாஞ்சிப் பேர்சரபு கம் 
** 285

#9
செங்கோடு பஞ்சரஞ்செ ருந்தியாஞ் செம்மரஞ்சே 
யங்கோல மாமழிஞ்சி லஞ்சனியே புன்காலி 
காசைபுல்லி பூவை யதசிகா யாவகுளம் 
கேசரமி லஞ்சிமகிழ்க் கே
** 286

#10
நற்றெங் கிலாங்கலிதென் னாளிகே ரந்தாழை 
கற்றகந்தி பூகம்பூக் கங்கமுகாம் சொற்றுவர்க்காய் 
பாகடைக்காய் கோலம்பாக் காங்கரும்பிக் காலைகன்னல் 
சேகில்கழை வேழந் தெளி
** 287

#11
வாழை யரம்பை கதலி திரணபதி 
கேழ்மகர வாழைமரு கென்றாகும் சூழ்முருங்கை 
சிக்குருக்கி ரஞ்சனஞ்சோ பாஞ்சன்மாங் கிக்கசியுங் 
கக்கடியுந் துத்திதனக் காம் 
** 288

#12
புற்பதிதா லந்தாளி புற்பெண்ணை யும்பனையா 
மப்புமித ழேடோலை யவ்விலைப்பேர் தப்பாத 
நாரியொடு நெய்யரிபன் னாடை நிலப்பனைப்பேர் 
வாராகி யேமுசலி வாழ்த்து
** 289

#13
கோல்குல் வலிவதரி கோற்கொடியி ரந்தைகொண்டை 
கோலம தின்கனியாங் கூவிளையே மாலூரங் 
கூவிளஞ்சி வத்துருமம் நின்மலிகு சாபிவில்வம் 
நாவல்சம்பு சாதவந்வ் வல்
** 290

#14
அத்தியதங் கோளி யதவோ டுதும்பரமாம் 
இத்தி சுவியிறலி யிந்திரியாஞ் சித்திரமே 
யாமணக்கே ரண்டமுமாந் தந்தி நிரும்பமுங்காட் 
டாமணக்காம் பஞ்சிமுசுட் டை
** 291

#15
வாரிகம்பா டைபங்கம் பாளைமலை தாங்கிகருஞ் 
சாரணை பொன்முசுட்டை சேங்கொட்டை வீரதரு 
பல்லா தகியுடன்செம் பாலை யெரிமுகியா 
மெல்லொதிப்பேர் மோதகமா மே 
** 292

#16
பூரணிமோ சஞ்சான் மலிபொங்கர் நான்கிலவாம் 
சீரணஞ் சாதியிவை சீரகமா மோரடமே 
வீழிமஞ்ச ணாத்திநுணா வெந்தைவெந்த யப்பேர்தை 
வேளைவிவி தம்பாலை யம் 
** 293

#17
பூதிகங் காஞ்சனங் காஞ்சமும்புன் காமனிச்சந் 
தீதி லருப்பலந்தேக் குச்சாகஞ் சாதிசிறு 
தேக்கின்பேர் பாங்கிரியாந் திண்கலிங்க மிந்த்ரவல்லி 
பேய்க்கொம்மட் டிக்காம் பெயர் 
** 294

#18
சேகரங்கொக் காம்பிரஞ்சே தாரமெகின் மாழைகிஞ்சம் 
வாகுறுமா வாஞ்சூத மாந்தியுமாம் பாகல்பன 
சம்பலாச் சக்சையக்காய் தன்பேத மாசினியே 
கம்பமுறுங் கூழைவருக் கை 
** 295

#19
ஆமலகந் தாத்ரிநெல்லி நீலி யவுரிமரு 
தாமருச்சு னங்ககுபம் பூதவழுந் தாம 
மதலை யிதழி வளர்கடுக்கை யாக்கு 
பதமிவைகொன் றைப்பாற் படும் 
** 296

#20
விண்டமையாம் பல்வெதிர் வேரல்வஞ்சங் கீசகம்வேல் 
கண்டுளைவே யோங்கல்கழை காம்பரிதூம் பொண்டிகிரி 
சந்திபணை வேணுவரை பாதிரிமு டங்கல் தட்டை 
முந்தூழ் முளைகிளைவே ழம்
** 297

#21
நேமிபுறக் காழ்கணைமூங் கிற்காம்வேய்க் கண்கிரந்தி 
தோமில்பண்ணை வேய்க்கூட்டந் தோரையதி னாமரிசி 
சூரல்பிரம் பாஞ்சாதி வேக்திரமு மாங்குடைவே 
லோரிரண்டு பேரு முடை
** 298

#22
வச்சிர வல்லி பிரண்டைகொடுப் பையின்பேர் 
மச்சரக்கி சீதைபொன்னாங் காணியாம் கச்சோலஞ் 
சக்கிரந்தி கந்தாலி சோர்கஞ்சோ சஞ்சடியாங் 
கக்குகர மத்தகங்க ளா 
** 299

#23
இந்திர சூரியநிர்க் குண்டிசிந்து வாரநொச்சி 
சந்தசந்தி கைக்கொடிப்பேர் தாடிமமே சந்தானங் 
காழமெட்டி கோடரமு மாரணியுங் காஞ்சுரைகற் 
றாழை குமரிகன்னி யாம் 
** 300

#24
கோவிதா ரங்குரவ மாமயமுங் கோட்டமாந் 
தேவதா ரப்பேர் சுரர்மரமாஞ் சீவல் 
சுரசம் பிதாரி சிறுகிழங்குன் மத்த 
மருளுந் தூர்த் தூரமத்த மாம் 
** 301

#25
குந்தம் குருந்துகுமிழ் கூம்பல் கடம்பல்புளி 
திந்துருணி யாம்பிரஞ்சிந் தூரமெகின் சிந்தகமாம் 
தித்தைபிசு மந்தநிம்பம் வாதாரி திண்பாரி 
பத்திரம ரிட்டமும்வேம் பாம்
** 302

#26
நாயுருவி காஞ்சரிச னஞ்சிகிசி ரங்கதிரி 
யாயகர மஞ்சரிய பாமார்க்கந் தூயவிருக் 
காதனியு டன்காள சாகங் கயிடரியம் 
வேதில்பன்ன கந்திகரு வேம்பு
** 303

#27
வைச்ச கரடிகையே மாவிருக்கங் கள்ளியின்பேர் 
வச்சிரங்கண் டீரம்வச்சி ராங்கமுமாம் உச்சித் 
திலதமொடு பானுபத்தஞ் சூரியகாந் தப்பேர் 
அலர்சவிகை கோலிசெவ்வி யம்
** 304

#28
இருப்பைமதூ கங்குலிக மீந்தாங்கச் சூரம் 
விரைக்கடு கையவிசித் தாத்த முரைத்க 
கழலியக்கன் கச்சூர மக்கழலின் காய்ப்பே 
ருழலுங் கழங்கு முரை
** 305

#29
இந்துளம ராங்கதம்ப நீபமரத் தங்கடம்பாம் 
செந்திராக் கங்கோத் திரிகையுமே முந்திரிகை 
வல்ல மதுரச மாந்துளசிப் பேர்துளவு 
குல்லைவிருந் தம்வனந்து ழாய்
** 306

#30
காய மிலசுனம்வெள் ளுள்ளியா மீருள்ளி 
காயம் பலாண்டுசுக்கி ரந்தமுமாந் தோய்கிகினி 
கன்னி கவாக்கி கருவிளையுங் காக்கணமாம் 
பின்னராற் போடமுமப் பேர்
** 307

#31
கன்னிகா ரந்துரு மோற்பலமும் கோங்குகுப 
வன்னியுமாஞ் சோத்தினிகூ லஞ்சாலி அன்னபுடோல் 
கோலொடுமுத் தாபலங் குண்டலியி சங்குகொடு 
வேலிவன்னி சித்திரமா மே
** 308

#32
மல்லிகை மாலதி மவ்வலனங் கம்புருணம் 
அல்லால் விசகலியு மாம்பாலை நல்லோமை 
சீவனிசீ வந்திகிரி மல்லிகைவெட் பாலைவற்சம் 
ஆவ லுறுங்குடச மாம் 
** 309

#33
நந்தியா வட்டம் வலம்புரிந றுந்தமன 
கந்தம ருக்கொழுந்து காண்மூல கந்தமிரு 
வேலியாம் பீதகமும் வேரியு மாந்துருக்கங் 
கோலமர வங்குங்கு மம் 
** 310

#34
பற்படா கங்கவசம் பைங்கே சினிசங்கங் 
குப்பிகுரா சாணி குரசமுமாம் அப்புகட 
மாரிசிறு புள்ளடியாம் வாயுவிளங் கத்தின்பேர் 
கேரளங்கி ராதநில வேம்பு
** 311

#35
குஞ்சங் குருவிந்தங் குன்றியின்பே ராந்திலக 
மஞ்சாடி வஞ்சுளம்வா னீரம்வஞ்சி கிஞ்சுகமே 
பூங்கவிர்மு ருக்காம் புரோசும் புனமுருக்குந் 
தாங்குபலா சும்பிரம தாரு 
** 312

#36
தொண்டைவிம்பங் கோவைகொவ்வை சுச்சுச் சமங்கைசண்டி
லிண்டு புலிதுடக்கி யீகையிங்கை கண்டூதி 
காஞ்சொறிசெந் தொட்டியின்பேர் காங்கேரு கங்காரை 
யாஞ்சமிநெ ருப்புவன்னி யாம் 
** 313

#37
முண்டகங் கைதை முசலி மடிமுடங்கல் 
கண்டல்பட்டி கைபறிவை கேதகையு மொண்டாழை 
பானு வருக்கெருக்காம் பாவிரிகோ ளம்பசிரி 
யீனுலவை யோடையின்பே ரே 
** 314

#38
மாதுலங்க மேதாடி மம்பீச பூரமொடு
மாதுளமு மாதளையா மற்றாத்தி தாதகியார் 
சல்லதி குஞ்சரிசெவ் வந்திசத பத்திரமாம் 
சில்லமில் லங்கதகந் தேறு
** 315

#39
ஆகுலிமே காரிதல போடமிவை யாவரைப்பேர் 
வாகுசியு டன்சோம ராசியுங்கார் போகமாஞ் 
சால மசுவகண்டி சுள்ளிமராப் பாடலம்புன் 
காலிகன்னி பாதிரியாங் காண் 
** 316

#40
சண்பக மாலதி சாதிசெண்ப கஞ்செயலை 
பிண்டிகா கோளியசோ காயிலுமாம் விண்டகொத்த 
மல்லி யுருளரிசி தானியமாம் வாசையெனச் 
சொல்வதா டாதோடைக் காம்
** 317

#41
கோரண்டம் பாணங் குரவகங்கு றிஞ்சிகண 
வீரங் கரவீர மேகவிரஞ் சீரலரி 
சீரிடம் பாண்டிலுமே வாகை நிலவாகை 
யாருங் கமதாய மாம் 
** 318

#42
பன்னல்பின்னல் காற்பாச மும்பருத்தி யுத்தம 
கன்னிவே லிப்பருத்தி செம்பருத்தி துன் னுசுபங் 
காரியம்பை கொக்கிறகு மந்தாரை மந்தாரை 
சார்செம் மரத்தஞ் சபை
** 319

#43
மாகதிகா மன்கலினி பிப்பிலியுந் திப்பிலியாம் 
வாகுறுகி ராம்புவரா லம்பிருங்க நாகவல்லி 
பொற்றிரையல் வெள்ளிலைதாம் பூலவல்லி மெல்லிலையே 
வெற்றிலைதாம் பூலமுமா மே
** 320

#44
பத்தியம ரீதகி விரோசனிசி வங்கடுவாம் 
பித்திகையின் பேரே கருமுகையாம் மெய்த்தோன்றி 
காந்துகக்கோ டல்கோடை கார்த்திகையி லாங்கலியே 
காந்தளிவை யைவிரலி காண்
** 321

#45
கஞ்சா விசையைபங்கி கோரக்க மூலிகுல்லை 
கஞ்சமத யந்திகாந் தாரியுமாம் மஞ்சரியும் 
பூனை வணங்கி விமலி யெரிசிகையு 
மானகுப்பை மேனிப்பே ராம் 
** 322

#46
ஞாழல் பலினிபிரி யங்காங் கூதளங்கூ 
தாளியா மஞ்சிகமே தாளிவள்ளை நாளிகமாம் 
பைங்குளவி பச்சையாங் கங்குணி வாலுழுவை 
தங்கடகி லைக்கறிய தாம் 
** 323

#47
சிக்கரிமுன் னந்துரிஞ்சில் சேர்பசுநா விட்டில்பிராய் 
புக்கிபூற் சாதம் பொடுதிலையா முட்கா 
வளைமுப் புரமெரித்தான் வாய்ந்தசர புங்கந் 
தளர்கொழுஞ்சி காவளைய தாம் 
** 324

#48
திரிவிருதை யேபகன்றை கும்பி சிவேதை 
யரிமேதம் வேலாம்பே யத்தி பிரமதண்டி 
விட்டுணுக்கி ராந்தியப ராசி பராசிதமாம் 
கட்டுகொடி சக்கராங் கம் 
** 325

#49
அறுகுபதந் தூர்வைமே காரிமூ தண்டம் 
வெறியிளம்புற் சட்பம் விதாரி பெறுமீறல் 
காயமரீ சங்கலினை கோளகந்தி ரங்கல்கறி 
மேய மிரியல் மிளகு 
** 326

#50
ஓங்கு விரிசலியுத் தால நறுவிலியாந் 
தேங்குகுறுந் தோட்டிபலை சிற்றமுட்டி தாங்குகுரு 
விஞ்சி யதிபலையாம் வேரமுட்டி பீலுவுகாய் 
மிஞ்சு முசிர மிலா மிச்சு
** 327

#51
வெட்டியிரி பேரமுதீ சம்பாலம் வாளகமாந் 
தொட்டால்வா டிப்பே ரிலச்சகியா மட்டில் 
அரணிவைச யந்திமுன்னை யாமா விலங்கு 
வரணி குமாரகமு மாம் 
** 328

#52
கொற்றான் பெயர்தீண்ட மாழ்கிநந்தை யென்பர்கொடிக் 
கொற்றான்பேர் நூழிலிந்த்ர வல்லியாம் வற்றல்சரி 
பாலிங்கங் கொம்பளையாம் தும்புருவுண் டைச்சுரையாம் 
ஆலாபு தும்பிசுரை யாம் 
** 329

#53
கரந்தை முண்டி பிக்காங் குலகல நாறு 
கரந்தைசுவ தட்டங்கோ கண்ட நெருஞ்சிநமக் 
காரிதொழு கண்ணியழு கண்ணியுரு தந்தியாம் 
ஆரைசதுப் பன்னியே யாம்
** 330

#54
வல்லாரை சண்டகியே பிண்டீரி யோசன 
வல்லிபுளி யாரைப்பேர் சார்ங்கேரி சொல்காக 
மாசிமணித் தக்காளி சீதேவி மாலரசங் 
காசில்சக தேவிமரூ கம்
** 331

#55
தான்றியா ராமம் விபீதகங்க லித்துருமங் 
கான்றநத்தச் சூரி கடூகமரு தோன்றி 
சரணங்காத் தோட்டியா தண்டைபிரி யாள 
மரலளற்கந் தூது வளை
** 332

#56
சீந்தில் கழுசி சிவந்தி யமுதவல்லி 
போந்தசவ ரிக்கொத்தின் பேர்முதியார் கூந்தல்பிர 
சாரணியாம் பச்சிலைத மாலம் பசும்பிடியு 
மோர்தகரத் தின்பே ருரை
** 333

#57
பெரும்பூ சணிகூழ்ப்பாண் டம்பூ சணிப்பேர் 
வருங்கற் கசமாற் கவமாம் பிரகதி 
வார்த்தாகங் கத்தரிபா கற்கூரங் காரவல்லி 
கார்க்கோ டகிபழுபா கல்
** 334

#58
வங்கம் வழுதலைபாண் டாகி வழுதுணைப் பே 
ரிங்குலி முள்ளி யியற்சயந்தி சிங்கி 
சிறுவழுத லைப்பேர் சிமந்தங் குசும்பம் 
பெறுசந் திரகாவிப் பேர்
** 335

#59
வெய்யகண்டங் கத்தரிவி யாக்கிரியே கண்டகியே 
பெய்கண்ட காரி பிரகதியாஞ் செய்ய 
வசமுக்கி ரம்வசம்பா மாசிலயி லேய 
மொசுமொசுக்கை யின்பேர் மொழி
** 336

#60
பீரம் படலிகைகோ சாதகிபீர் பீர்க்காகும் 
ஊர்வா ருகமே யுருவாரஞ் சேர்மிருது 
கற்கடியும் வெள்ளரிப்பேர் கக்கரிப்பேர் வாலுந்தி 
தக்க நுணவை தணக்கு
** 337

#61
அவரைசிம்பை சிக்கிடிநிட் பாவ நகுலி 
துவரைமிருத் தாலகஞ்சு ராட்டம் யவைகாச்சி 
யாடகமி ருத்தனமே தோரையுமாம் பற்குமொச்சை 
பாடவரை யின்பேர்சிம் பம்
** 338

#62
வண் சணக மஞ்சூர மங்கிலி சதீரகமே 
கண்டிகங் களாயங் கடலையின்பேர் அண்டுழுந்து 
மாடமிதை காரா மணியா வகமரச 
மாடமல சந்திபய று
** 339

#63
கொட்குலத்தங் காணஞ் சிறுபயறு சூப்பியமா 
முற்கம்பா சிப்பயறா மொய்சூபம் நற்பருப்பாம் 
தானியப்பொ துத்தவசங்கூல முதிரைசிம்பி 
கூனில்பயற் றின்பொதுவாய்க் கூறு 
** 340

#64
நீர்வாளி யாகே ருகமுஞ் சதாவரியு 
நாரா யணிநீர்விட் டானுமாம் சாரசுதி 
வாடிகந்தி ராயந்தி வாக்கு பவஞ்சரும 
மீடில்விவி தம்பிரமி யே
** 341

#65
ஓம மசமோதந் தீப்பியமா மோரிலையின் 
றாமரைப்பே ரவ்வியதம் புட்கரங்கற் றாமரைப்பேர் 
சேம்புசகு டங்கருணை சேனைகந்தஞ் சூரணமாங் 
கூம்பசுவ மாமமுக்கு ரா
** 342

#66
அதிவிடைய மத்திரண மள்ளுசத குப்பை 
மதுரிகையா மட்டி யதிங்கம் அதிமதுரஞ் 
சாரும் புனநவமுஞ் சாரடையுஞ் சாரணையாங் 
கூருந் திரிபுடையுங் கூட்டு
** 343

#67
வெல்காக சங்கைவெள்ளி லோத்திரங் காயவிலை 
சொல்பாய சம்பாச் சொறிகீழ்காய் நெல்லியின்பேர் 
அற்சடை நிசாசரியொன் றாம்வெருகு நெட்டிகிடை 
பிற்சடையு மாங்கிடைச்சின் பேர்
** 344

#68
கையாந் தகரைகரிப் பான்பிருங்கந் தும்பையின்பேர் 
துய்தாவை குண்டந் துரோணமாம் பைசாசம் 
பேய்வெருட்டி யென்பபெருந் தும்பைகவிழ் தும்பையின்பேர் 
சாயுமிந்த்ர வாருணிய தாம்
** 345

#69
கொட்டி கசேருகஞ்சா லூகமதாங் கோபாகு 
நட்டமிலாச் சாரிபமு நன்னாரி கட்டமுதம் 
பூகளிந்த மும்பூமிச் சர்க்கரையா மூர்த்தமுகி 
யாகாயக் கத்தரிய தாம் 
** 346

#70
மேகநாதஞ் சாகஞ் சாகினியாங் கீரைமுல்லை 
மாகதிகற் பூதிகைம ணத்தளவு மாகுமென்பர் 
மாலதி சாதி சுமனைசு கந்திபிச்சி 
மூலகமுல் லங்கி மொழி 
** 347

#71
மயிலை யனங்கநவ மல்லிகைவ சந்தி 
செயிரிலிரு வாட்சிதில்லை தில்வ முயர்துன்னஞ் 
சின்னியா மற்கடிகண் டூதிபூ னைக்காலி 
பன்னியின்பேர் சந்திரியென் பார் 
** 348

#72
கோரை வராகி கொறுக்கைமுத்தஞ் சாய்செருந்தி 
கூரெருவை யாங்குசங்கூச் சங்குமுதஞ் சார்தருப்பை 
தெற்பைவிசு வாமித் திரங்குசைப்புற் காம்போசி 
பொற்பாங் குதிரைவாற் புல்
** 349

#73
நாணல் சரஞ்சரவ ணங்காசை மஞ்சணிசி 
காணரிச னம்பீதங் காஞ்சனியாம் பேணுசடி
கத்தூரி மஞ்சள்கா லேயகமுந் தாறுவியும் 
வைத்தமர மஞ்சளென வாம் 
** 350

#74
தோரைவை விரீகிசெந்நெல் சாலிவரி சொல்லுநெல்லா 
மூரையைவ னங்கிரிநெ லொண்குளநெல் நீவாரஞ் 
சூழ்காசி நெல்யவைநெற் சூல்பொதியி ளங்கதிர்ப்பேர் 
பீளாம்பைங் கூழ்பயிரின் பேர்
** 351

#75
தில்லைவெள்ளை வாலிசிறை மீட்டான்பூம் பாளைதுய்ய 
மல்லி மணலிமங்கா மற்காத்தா னல்லானைக் 
கொம்பன் மிளகி கொடுநேந் திரப்பள்ளி 
வம்பதிக்கி ராவிகுறு வை 
** 352

#76
செம்பாளை காடை சிறிகிசீ தாபோகஞ் 
சம்பாப் பலமுதனெற் சாதியாம் பம்புகதிர் 
தோமில்குர லேனல்நெல்லின் றோடா முமியரிசி 
யாமமரி தண்டுலமென் றாம் 
** 353

#77
போர்சும்மை சூடுபொலி பொங்கழிவைக் கோல்வழுது 
பார்வைப லாலம் பதர்சாவி சேர்பதடி 
கொம்மைசண்டாம் புன்பயிரின் கோலிருவி யேயருவி 
விம்முதட்டை தாளெனவா மே 
** 354

#78
புற்கவலை குந்திரையே புன்றிரண நான்குகம்பா 
முற்றவிளை கூழ்வரகு மூகிநந்தி நற்கேப்பை 
யாசுரமாங் கங்கிறடி யேனல்மூன் றாந்தினைப்பேர் 
மாசில்சிறு தானியஞ்சா மை
** 355

#79
எள்ளெண் டிலநூ விளவெட் குமிகைகவை 
யெள்ளிளங்காய் சோள மிறுங்குசொன்னல் விள்வரகு 
கோத்திரவங் கோதும்பை கோதி நறுமருப்போ 
டாத்திர மல்லமிஞ்சி யாம்
** 356

#80
இஞ்சிவற்ற லேவிசுவ நாகரம்வேற் கொம்புசுண்டி
துஞ்சுசுக்காம் பாண்டியுமஞ் சூகமுமே மஞ்சிட்டி 
பூலாங் கிழங்கின்பேர் காசியமாந் தக்கோலங் 
கோலங் கிருதபல மாம்
** 357

#81
தாயைக்கொன் றான்பகன்றை சங்கினியென் றிம்மூன்று 
மேயுங் கிலுகிலுப்பை யின்பெயராந் தூயசடா 
மாஞ்சிபசா சம்பூத கேசமென வாமேல 
மாஞ்சிதுடி கோரங்க மாம்
** 358

#82
சிற்றிலைப் பாலைதிலோ வன்னி குளங்கலக்கி 
நற்பறங்கிப் பட்டைசீ னப்பாகே யித்தனுகி 
கற்பூர வள்ளிசிலா பேதிகன சாரவல்லி 
வற்பில்கணா னந்திபிர மம்
** 359

#83
முள்ளுளவை முள்ளிகண்டல் முண்டகம தாகுநீர் 
முள்ளியின்பே ரிக்குரங்கா கண்டமா முள்ளின்பேர் 
கண்டகங்க டுப்பாசி கல்லார நீர்க்குளிரி 
தண்சடைச்சி சைவலநா ரம்
** 360

#84
முண்டகமா லுந்தி முளரிநளி னம்விந்தம் 
புண்டரிகங் கோகனகம் பூங்கமல மிண்டைசத 
பத்ரமர விந்தம் பதுமமே கேகயம்பொன் 
வைத்தமனை யுந்தா மரை 
** 361

#85
கஞ்சமப்பு சம்வனசம் வாரிசஞ்ச ரோசமம்பு 
சஞ்சலசம் பங்கசஞ்ச ரோருகமே மிஞ்சுறுமம் 
போருக மேவனரு கஞ்சலரு கத்துடன்பங் 
கேருகமுந் தாமரைக்கா மே
** 362

#86
இப்பூவி ராசீவமி றும்பாம் வராடகங்காய் 
துப்பார்சா லூரகஞ்சு ருள்வளையம் அப்பொகுட்டுக் 
கன்னிகைபூங் கொட்டை கயிரவ மாம்பலல்லி 
யன்ன குமுதமென்று மாம் 
** 363

#87
செங்குவளை யுற்பலம ரத்தங் கருங்குவளை 
பைங்குவலை யங்காவி பானலாஞ் செங்கழுநீர் 
கோலமுங்கல் லாரமுங்கார் நெய்தலிந் தீவரமு 
நீலமும்வெண் ணெய்தல்குமு தம் 
** 364

#88
தாருநகஞ் சாகிகுசந் தாபரம்யூ கந்துருமம் 
பூருகந்த ருச்சாலம் பொங்கடவி சேரகலி 
யம்பாத வம்விருக்க மத்திரிம ரப்பொதுத்தூர் 
மொய்ம்பார் சடைசிவைவேர் மூடு
** 365

#89
மூலகங்கந் தஞ்சகுன மூலங் கிழங்குமுளை 
காலங் குரமாங் கவடுகவர் கோல்விடபங் 
கொம்புலவை பொங்கரிபங் கோடுகப்புச் சாகைசினை 
யம்பணை கோடரங்கொப் பாம்
** 366

#90
பன்னந் தகடடைப லாசந் சதந்தழையே 
மன்னுபத்தி ரந்தலந்த மாலமிலை மின்னுமுறி 
வல்லரிய லங்கல்பல்ல வங்கிசலை மஞ்சரியே 
சொல்குழைசுங் கந்தளிர்து ளிர்
** 367

#91
மொக்குள்நனை போகில் முகைமுகிழங் கோரகைமொட் 
டுக்கலிகை சாலகம ரும்புமலர் மெய்க்குசுமம் 
வீத்தா ரலர்பிரசூ னஞ்சுமன சந்துடுப்பு 
பூத்தாமம் புட்பமிணர் போது
** 368

#92
பூவிதழ்தோ டேடுதளம் புல்லி புறவிதழுட் 
பூவிதழா மல்லிபழம் பூத்தேம்பல் மேவுசெம்மல் 
சாம்பல்பிஞ்சு பேசிசதா லம்வடுவாந் தீவிளிகாய் 
பூம்பழம்ப லன்கனிபூ ரம்
** 369

#93
வித்துக் குருப்பரல்காழ் வீசமத்திக் கொட்டைவிதை 
தொத்துடனே மஞ்சரிம லர்த்திரள்பூங் கொத்தாம்பூந் 
தாது துணர்மகரங் கொங்காம் பராகமத்தூள் 
தீதின்மக ரந்தமலர்த் தேன்
** 370

#94
செங்கனியின் மேற்றோல் செதிளாந்தை நாறுகன்றாம் 
பைங்குருத்தி னாமம் பயின்முருந்தாம் செங்குறுங்கோ 
டண்டுவளார் கம்பகக்கா ழாண்புறக்காழ் பெண்ணலிப்பேர் 
மிண்டு கொடுவல் வெளிறு
** 371

#95
நார்துவக்குப் பட்டைதொலி வற்கலம ரத்தோலா 
மோருநிரி யாச முகளிவளன் சேர்பிசினாம்
வீழ்சுவ ரோகம் விழுதொட்டுப் புல்லுருவி
தாழுரம ரப்பொடிய தாம் 
** 372

#96
உலர்மரம்வா னம்வானப் பத்தியமே கோளி 
மலரிலியாங் காய்ப்ப பலினம் பலமொன் 
றிலிபழிப கேசிகையா மீர்ம்படுக்கு றும்பு 
குலைதாறு சாறுகுச்சங் கொத்து
** 373

#97
இலைகனிகாய் பூவடிகாம் பீர்க்கு நரம்பா 
நிலையசரந் தாபரப்பொ துப்பேர் மலிமூலி 
மூலிகைமு ளைத்தவைநெய் யுள்ளவிதை முத்தரிசி 
பாலுடைய முத்துட் பருப்பு 
** 374

#98
சேகுகலை யாசினிகாழ் திண்வயிரம் வல்லிவள்ளி 
யேகு மிலதை யிரத்தியு மாகொடிப்பேர் 
பூடு செடிபுதலாம் யோகமத கங்குளியஞ் 
சாடுறைம ருந்தவிட தம்
** 375

#99
கொன்றகரு விப்புணொழிக் குஞ்சல் லியகரணி 
கன்றாச்சந் தான கரணிதுண்ட மொன்றல்விர 
ணஞ்சீய்க்குஞ் சம்மான மாங்கரணி தானமிர்த 
சஞ்சீ வினியுயிரீ தல்
** தாவர வுயிர்ப்பொருள் வர்க்க முற்றும் 

@3 அஃறிணை யுயிரில்பொருட் படலம் 

@31 இயற்கைப் பொருள் வர்க்கம் 
** 376

#1
வித்த மிரணியஞ்சா மீகரமீ ழஞ்சுவணங் 
கைத்தரிபீ தம்பீத கந்தங்கம் மெய்த்தமனி 
யஞ்சந் திரமுகரி யாசைபொல மாசைகன 
கஞ்சாத ரூபம்வேங் கை
** 377

#2
மாடைசொன்னந் தேசிகமே மஞ்சாமி சாம்புனத 
மாடகங் காஞ்சனங்கல் யாணமுரை மாடீகை 
காரஞ்செந் தாதுநிதி காணநிதா னம்பூரி 
பூரியமும் பிங்கலமும் பொன்
** 378

#3
துள்ளிரச தந்தாரஞ் சுல்லுக் களதபுதம் 
வெள்ளியு ரூப்பியம்வெண் பொன்னுமாம் வெள்ளீயஞ் 
சீசங்கா ரீயப்பேர் நாகமீ யப்பொதுப்பேர் 
ஆசில்வங்கம் வெண்கலங்கஞ் சம்
** 379

#4
இரவி யுதும்பரமி ராசிவடுச் சுற்ப 
மெருவைசெம்பு தாம்பிரமி ரும்பின் வருதெளிவு 
தீக்கணமி ரேகெஃகு ருக்கா மிதைத்தெளிவே 
யாக்கினதொ ழுக்கறையென் றாம்
** 380

#5
தராமதுகம் பித்தளைமா யாபுரியார் கூட 
மிரதியுடன் சீருண மிரும்பே கரும்பொனகி 
சொன்னல் பசாசமய மிப்பொதுக்கொல் சீருள்சிக்க 
மன்னுலோ கந்தாது வாம்
** 381

#6
செம்பிரும்பீ யம்பொன்வெள்ளி யைம்பொன்வெண்க லந்தரா 
ஐம்பொனுறி னேழ்தாதாம் பித்தளைசேர்த் தைம்பொனிற்சொ 
லீயமிரண் டாக்கினவ லோகமுலோ கக்கட்டி
யாயதின்பேர் மாழைதக ணம்
** 382

#7
வரநிமிளை தாப்பியமே மாக்கிகமண் டூர 
முரணுகிட்டஞ் சண்டாள முண்டம் பொருளருத்த 
மத்தநிதி யந்திரவி யந்தனம்ப ணந்தரிப்புச் 
சொத்தாத்தி காசுமுதற் சொம்
** 383

#8
மாமணிசி வப்புமா ணிக்கம் மரகதமே 
யாமரிபச் சைவச்சி ரம்வயிரந் தாம்வால 
வாயம்வயி டூரியமுத் தாரமெளத்தி கந்தரள
மாய்நித் திலமணிநீ லம்
** 384

#9
புட்பரா கங்கவுத்து வம்பதும ராகமாம் 
துப்பரத் தம்பிரவா ளந்துகிரே விற்பவளம் 
வித்துரு மந்துவரா மேதைகோ மேதகமா 
நத்துமணி யக்குமன வாம்
** 385

#10
சம்பகமி ரும்புணிச லாகைமூன் றுங்காந்த 
மம்பொன் மெழுகரக்கி லாக்கையா மும்பர்மணி 
சிந்தா மணியே தியாகமணி வாரீசம் 
வந்தநிட்சே பம்புதையல் வைப்பு
** 386

#11
அக்குமன வீசன்மணி யாமுருத்தி ராக்கங்கா 
விக்கல்செங்கல் காருகந்தா தாம்படிகம் நற்காழ் 
பருக்கைபளிங் காமனவு காசரத னங்க 
லிரத்தினஞ்ச லாகைமணி யே
** 387

#12
நிதிப்பேர் நிதான மிருநிதிப்பேர் சங்கம் 
பதும நவநிதிப்பேர் சங்கம் பதுமமுகுந் 
தங்கச் சபமகர நீல மகாபது 
மங்குந்த மேவரத மாம்
** 388

#13
பண்ணிகா ரம்பரிகா ரம்பண்டா ரங்கூலம் 
பண்ணியம்வ ளந்தாரம் பண்டம்வத்தாஞ் சுண்ணந்தூள் 
பூழியிரே ணுப்பொடிது கட்புழுதி யாங்களபந் 
தாழ்சுதைமண் சுண்ணச்சாந் தாம்
** 389

#14
அடலைபலி சாம்பல்காப் பைசொரியஞ் சாந்தம் 
பொடியேமம் புண்ணியம்வி பூதி யிடுநீறாம் 
பண்ணுசெச்சை தேய்வைகள பஞ்சாந்து காலேக 
வண்ணம்விரைக் குப்பிகல வை
** 390

#15
மான்மதங்கத் தூரிசசி வண்கனசா ரம்பளிதங் 
கான்கற்பூ ரம்புழுகு கான்மீரந் தான்மயிர்ச்சாந் 
தேலந் தகரமொடு காசறைபீ தங்கலவை 
சால்வட் டிகைபுலிநாற் சாந்து 
** 391

#16
சிந்துரஞ்சி லேகநுதற் றீட்டுகுறி புண்டரம்பொட் 
டந்தில கந்திலத மாமுலைக்கோ லந்தானே 
தொய்யி லரிசிமஞ்சட் டோய்த்தணிவ தச்சுதமாம் 
பைய வலத்தகஞ்செம் பஞ்சு
** 392

#17
வன்பறுதூ லம்பருத்திப் பஞ்சாகும் பூளையில 
வின்பஞ்சாந் துய்யேபஞ் சின்றுடரா மென்பஞ்சை 
நூற்கத் திரட்டியது கொட்டைவிடம் பாடாண 
மாக்கிடங்க ணம்பொரிகா ரம்
** 393

#18
வந்தனிகோ ரோசசையாம் வல்லீக மேயிரணம் 
சந்துநா சம்பூத நாசமிங்கு கந்தியத்தி 
யாக்கிரமி ராமடம்பெ ருங்காய மாம்பேன 
நீக்குகம்பி மோகியவி னே
** 394

#19
குங்குலுச்ச டாயுகுந்து ருக்கஞ் சிவைகவுசி 
கங்குற் குலுத்துர்க்கை சீதாரி குங்கிலியஞ் 
சற்சரசந் தூபமிவை சாம்பிரா ணிப்பெயராங் 
கற்பூரந் தீபஞ்சூ டன்
** 395

#20
விந்தினிமை சூதம் சிவம்பா ரதமிரதங் 
கெந்தகநா தம்பலியே நாறிசத்தி முந்துசிலை 
மாணார் குநடி மனோசிலைப்பே ராங்கபிலை 
யேணகம ரேணுகமா மே
** 396

#21
பீதகியா லம்பிபிஞ்ச னந்தாள கம்பழுப்புக் 
கோதந் தமால மரிதாரஞ் சாதிலிங்கம் 
இங்குளந்தா தஞ்சூத வாதிகத்து டன்குலிக 
மிங்குலிக மைந்து மிசை
** 397

#22
துத்த மிரஞ்சனஞ் சீபலி கற்பரியா 
மைத்துரிசு நீலி மயூரிசிலா சித்துச் 
சயிலேயங் கன்மதங்கன் னார்கிரிச நாபி 
யயிலா விடமிருத மாம்
** 398

#23
உப்பிலவ ணம்படுவு வர்ப்புருசி யென்றாமிந் 
துப்புச் சயிந்தவமென் றோர்கவெடி யுப்புச் 
சுராகாரஞ் சீனக்கா ரம்படிகி வஞ்சி 
நிராவுதுக முங்கூகை நீறு 
** 399

#24
முருடிடுக றற்சமிதை கட்டை முளரி 
யெரிஞெகிழி காட்டமிந்த னந்தான் முரிவிறகாங் 
கந்து ளிருந்தைநல்ல மாங்கரிக டைக்கொள்ளி 
தந்திடுமி ராதமிலா தம்
** 400

#25
பொம்மல்பதம் பாத்தமலை யோதனம்பு ழுக்கல்வல்சி 
யம்மிதவை சாத மடிசில்புகா வெம்மூரல் 
புன்கமமு தன்னமடை போனகம் பாளிதஞ் 
சொன்றி நிமிரலுணாச் சோறு
** 401

#26
துப்பசனம் போசனமூண் துற்றிமிசை பக்கணங்கூழ் 
செப்பயினி யுண்டிதின்ப திற்றிதீன் அப்பொதிசோ 
றாற்றுணாத் தோட்கோப் பவிபலிச ருத்தேவர்க் 
கேற்றுணவாம் வெந்தைபிட்டா மே
** 402

#27
பாயசம்பாற் சோறுகறி பாகு துவைசசியந் 
தோய்குழம்போ டாணமுமாந் தூய்பொரியல் பாய்கருனை 
காடிபுற்கை மோழை யவாகரக்குக் கூழ்கஞ்சி 
பீடில்பே ருண்டி பெருப் பு
** 403

#28
மிச்சிலெச்சஞ் சேடமிகை மிஞ்சுபொரு ளுச்சிட்ட 
மெச்சில்பிண்ணாக் குத்துவைம லாவகமே வொச்சைவறை 
யற்காஞ்சிற் றுண்டிய பூப மஃகுல்லி 
யுக்காரி சட்குலிமு றுக்கு 
** 404

#29
அப்பமே நோலைகஞ்ச மண்டகையூ பந்தோசை 
பப்பரமி லட்டுகமே தோய்வையடை செப்புதில 
புஞ்சமா மெள்ளுண்டை புள்விலங்கி னூண்குளகு 
மிஞ்சு முறையிரையா மே
** 405

#30
தோய்வைமுறுக் கப்பமடை தோய்ப்ப னதிரசம்பிட் 
டேயுமவ லிட்டவியெள் ளுண்டைபொரி யாய்சீடை 
மொக்குழி தேன்குழல் முந்திரிகைக் கொத்துமா 
வுக்காரி யாதிகள்சிற் றூண்
** 406

#31
நொடிதரி லருப்ப நுணவைபிண்டி மாவா 
மிடியுமாம் வெண்பொரியி லாசந் தொடுகலிக்க 
மஞ்சனமை நாசிமருந் தாநசியஞ் சம்பாரம் 
வெஞ்சனங்க றிக்கூட்டா மே
** 407

#32
பால்பயங்கீ ரம்பயசு பாகமுது துத்தமுமாஞ் 
சாலும் பெருகு ததிதயிரா மேலருப்ப 
மற்சிகை கலாய மதிதமளை தக்கிரமோர் 
அற்செறிதண் டாகதமு மாம்
** 408

#33
நெய்கிருத மாச்சியந்துப் பாகாரம் நேயமவி 
பெய்யிழுது சர்ப்பிவெண்ணெய்ப் பேர்கவின மையநவ 
நீதமுமா மெட்டயில மெண்ணெய்தயி லப்பொதுநெய் 
காதல்செய்நே யஞ்சினே கம்
** 409

#34
மற்சண்டி தேன்பாகு வானிதம ணற்பாகு 
கற்கண்டு கண்ட விகாரமொடு நற்கண்டாஞ் 
சர்க்கரைகு ளம்விசையங் கட்டியயிர் கண்டம்வெல்லம் 
அக்காரம் பாளிதம்புல் லம்
** 410

#35
கானுறுப னாட்டுப் பனங்கனிச்சா றட்டகட்டி
சீனிபஞ்ச தாரைமதுத் தேம்பிரசம் வான்முருகு 
நாறுநறை மாக்கிகங்க வுத்திரங்கள் வேரிநறாத் 
தேறன்மக ரந்தமட்டுத் தேன்
** 411

#36
மாலிகவ்வை குந்திவெறி மாரிசுரை சுண்டிதொண்டி 
சாலிநனை யிக்காம்பல் சாயனஞ்சு மாலிபிழி 
சாறரிட்ட மேதைதொப்பி சாதிமுண்ட கந்தணியல் 
சேறரியல் நாளிமந்தி ரம்
** 412

#37
சொல்விளம்பி யாவேசஞ் சோமஞ் சுகிவைவெடி 
வல்விகுனி பாடலியே மாதவமே வெல்லரக்கு 
மத்தியஞ்சு யோகி மதுரை மறவிகள்ளாம் 
அத்தேனின் பேருமிதற் காம்
** 413

#38
வெங்களங்கா ளங்கரள மாலமிரு தங்காரி 
சிங்கிவிழ மாலால மாலகா லங்கடுவே 
நஞ்சம்விட மாஞ்சுதைபீ யூட மருந்தமரி 
சஞ்சலந்தீர் தேவாமிர் தம்
** 414

#39
வற்றலுணக் கும்பொருளாம் வண்கசரி சம்மந்தி 
நற்றுவையல் பச்சடிவே வாதடுத லுற்றகறி 
சீரின் மசரதம்பொய்த் தேர்மரிம ரீசிகைபேய்த் 
தேர்வெண்டேர் கானல்பாழ்த் தேர்
** இயற்கைப் பொருள் வர்க்க முற்றும் 
** 3 அஃறிணை யுயிரில்பொருட் படலம் 

@32 செயற்கைப் பொருள் வர்க்கம் 
** 415

#1
கொய்நவியந் தண்ணம்பா லங்குளிர்க ணிச்சிபர 
செய்மழுக்கா ளங்கழுமுண் மூவிலைவேல் பெய்சூலஞ் 
சூழ்பருதி நேமி சுதெரிசன மெஃகம்வளை 
யாழி திகிரிசக்க ரம் 
** 416

#2
ஞாங்கர்சத்தி யெஃகயிலு டம்பிடிவேல் நாட்டமசி 
தாங்குவணி மட்டா யுதங்கண்டம் வாங்கேதி 
நாந்தகங் கண்டகங்கோ ணங்கட்கந் தூவத்தி 
வாய்ந்தவசி வஞ்சநவிர் வாள் 
** 417

#3
கக்திகர வாளமும்வாட் காம்வே தினங்கர 
பத்திரமீர் வாளுடைவாட் பைஞ்சுரிகை வைத்த 
குறும்பிடி யாமரிவாள் புள்ளங் கொடுவா 
ளிறுங்குயமா மீட்டிவிட்டே றே 
** 418

#4
கழுமுட் கழுப்பரிமு கங்கணைய மென்ப 
தெழுவாம் படைவட்டம் பாரா வளையமா 
மெய்பீலி தண்டுபிண்டி பால மிருப்புமுட்குங் 
கைவேற்கு மாங்கப்ப ணம்
** 419

#5
தறிகை கணிச்சியுளி தட்டைதழல் கிள்ளை 
கறிகோல் குணில்கோல் கதைதண் டெறுழ்தடியாந் 
தோமரங்குந் தஞ்சவளஞ் சொற்குளிர்கு ணிற்பவணை 
காம ரொடிசில் கவண்
** 420

#6
ஊசியின்பேர் சூசியூ சித்துளைப்பேர் பாசநா 
ராசஞ் சலாகையெழுத் தாணிகண்ட மூசியுமாம் 
அச்சின் வயிர மசனி சதகோடி
வச்சிரஞ்சம் பங்குலிச மாம்
** 421

#7
நவியங் குடாரங்கோ டாரியாங் கன்னஞ் 
கவர்களை யிரும்பாந் துரோட்டி யவிர்தோட்டி 
கோணமங்கு சந்தான் குளிர்முலை மூக்கரிவாள் 
காணெழுது கோல்துகிலி கை
** 422

#8
கொட்டாமண் வெட்டிகொழுக் கோள்கூடஞ் சம்மட்டி 
பட்டடையின் பேரடையாம் பற்றிரும்ப் கட்டுபொறி 
யள்ளா முருகுகுற டாந்துலக்கி டங்கணியே 
விள்ளுதொடர் சங்கிலியா மே
** 423

#9
கார்முகங்காண் டீபஞ்சா பஞ்சிலைசிங் காணிசிந்து 
வாரங் கொடுமரந்து ரோணமுனி கூர்தடிகோ 
தண்டஞ் சராசனம்வே ணுத்தனுவில் லாஞ்சார்ங்கம் 
விண்டுவிற்பி னாகமரன் வில்
** 424

#10
நாரிதொடர் சிஞ்சினிந ரம்பாவம் பூட்டுவடம் 
பூரிகுண நாணாமம் புக்கூடு சேராவ 
நாழிகையா வந்தூணி நற்குதைப்பேர் குப்பிபுங்க 
நீள்விற்கு தைகுலையென் னே
** 425

#11
தோணிசர மாசுகமு ரோபந் தொடைகதிரம் 
பாணம்விசி கஞ்சாய கம்பகழி காண்வாளி 
பத்திரமேப் பூதைபுங்கம் பல்லங்கோ மாற்கணங்கோ 
லத்திரஞ்சி லீமுகம்வண் டம்பு
** 426

#12
அம்புக்கட் டுப்புதைபு ழுக்காமொட் டம்புதண்டம் 
அம்பீர்க் குடுசிறகு காம்பாங்கட் டும்பாசம் 
பற்றாக்கை சத்திரம்வி டாப்படைவி டும்படையே 
யத்திரங்கைக் கட்டுறைகோ தை 
** 427

#13
ஆயுதப்பொ துக்கருவி தானைபடை யேதிதுப்பாம் 
பாய்தடறு புட்டில் படையுறையாங் காய்கூர்மை 
வையயில்பூ வெஃகுவடி வள்வெள் வசிநிசியே 
பெய்தீக் கணமுனையின் பேர்
** 428

#14
ஆசரணஞ் சாலிகைச டாரிபரங் கச்சைகண்டங் 
காசில்பரு மந்தளமெய்க் காங்கவசம் கோசகமே 
சாத்துஞ் சிரகந் தலைத்திரா ணம்புருடர் 
வேய்த்தபதப் பூண்கழலா மே
** 429

#15
தட்டுவட்டம் வேதிகைதோல் தண்டைகடஞ் 'சேடகந்த 
கட்டம் பரிசைபல கைகிடுகு வட்டணமுங் 
கேடகமாஞ் சட்டங் கிடுகின்பே ராமுருகு 
கோடிகம்பூத் தட்டின்பேர் கூறு
** 430

#16
வெம்புனைசி ருங்கலைவி லங்குநிக ளந்தளையாங் 
கொம்பிரலை யாம்பல்வயிர் கோடுமா நன்பரணி 
கோய்சிலா வட்டஞ்சா ணைக்கல்குழாய் தண்டாரை 
பாய்கந்து கங் குதமும் பந்து
** 431

#17
சூடிகைகி ரீடமகு டஞ்சுடிகை மோலிமுடி 
கோடகந்தா மம்பதுமங் கிம்புரியே நீடு 
மகுட முடியுறுப்பம் மாலை கரோடி 
திகழ்தெய்வ வுத்தி திரு
** 432

#18
தொய்யகந்த லைப்பாளை தொங்கலுத்தி பிஞ்ஞகமே 
செய்தலைக்கோ லஞ்சே கரமுமாம் பெய்நுதற்பூண் 
சூட்டிலம்ப கம்புல் லகமாஞ் சுடிகைசுட்டி 
நாட்டுமரை ஞாணிரத னம்
** 433

#19
ஏழ்கோவை மேகலையெண் கோவைகலா பங்காஞ்சி 
தாழ்பரும மீரொன்பான் றாமமே சூழ்பதினா 
றெஞ்சா விரிசிகைநா லெண்கோவை தோரைகலா 
பஞ்சரிம ணிப்பேர் பகர்
** 434

#20
அரியகங்கு டச்சூ லரவ ஞெகிழி 
பரிபுர நூபுரஞ்சி லம்பாம் பரலரியாம் 
பாதகட கம்பாட கஞ்சதங்கை கிண்கிணியாம் 
பாதசரம் பாதசா லம்
** 435

#21
வீகம்விரற் பூணாழி மோதிரமி லச்சினையு 
மாகுஞ் செவிப்பூக்கன் னாவதஞ்சந் தோய்குணுக்குக் 
கம்பியுடன் வல்லிகைக டிப்பிணையுங் காதணிப்பேர் 
வம்பிலரைப் பட்டிகைம னா
** 436

#22
சூடகஞ் சங்குகன்று வண்டு தொடிபிடிகஞ் 
சாடுகுரு கேழும்வளை தாடங்கந் தோடுகுழை 
குண்டலங்கே யூரமங்க தந்தோள் வளையாரங் 
கண்டிகைம தாணிபதக் கம் 
** 437

#23
கடகப்பேர் கண்டிகை கங்கணங்க டைப்பூண் 
மடைகயிலாந் தாம மணியின் வடஞ்சரங்காழ் 
ஆரமுமாங் கற்க ளழுத்துகுழி கேவணமாஞ் 
சார்புறும்பூ ணூலுபவீ தம்
** 438

#24
ஆபரணம் பூடணம்பூ ணாரமணி பண்டமிழை 
மாபணிக லன்கணியே வள்ளிநகை சேர்வயிரந் 
தாங்கிபூண் கோளகையுங் கிம்புரியு மாந்தாலி 
யோங்குநாண் மங்கிலிய மோது
** 439

#25
வட்டில்சிக்கங் கிண்ணங்கோ ரங்கடிகை வள்ளம்வட்டில் 
தட்டந்தா லம்பா சனந்தளிகை தொட்டுண் 
கலமாந் தவியகப்பை காண்சட் டுவப்பேர் 
திலகமாம் பேழைமஞ்சி கை
** 440

#26
சேகண்டி சேண்டி யெறிமணிசின் னம்பீலி 
காகளங்கா ளந்தாளம் பாண்டில்கஞ்ச மாகுமிவை 
கைமணிய டிக் குமணி கண்டை பரந்தவட்டக் 
கைமணியின் பேர்படலி கை
** 441

#27
பீடிகைது மாணங்காண் டங்கண்டி கைகடிப்பங் 
கோடிகம்பூண் கொள்கலனாங் கூடையிறை கோடிகமே 
கெண்டி கடபமுமாங் கேழ்க்காண்ட கங்கரகங் 
குண்டிகைக மண்டலப்பேர் கூட்டு
** 442

#28
தர்ப்பண மாடியொளி வட்ட முகிர்தமத்தம் 
கைப்படி மக்கலங் கஞ்சனம் நற்புளகங் 
கண்ணாடி யாங்கஞ் சனைகலசப் பானையா 
நண்ணம் மனையம்மா னை
** 443

#29
தாலமுக்கங் கால்செய்வட்டந் தண்விருந்த மாலவட்டம் 
பீலிசாந் தாற்றி விசிறியுஞ்சிற் றாலவட்டம் 
வீசனமு மாமோரை மின்னாரா டுங்கலனா 
மூசலுஞ்ச லூஞ்ச லுரை
** 444

#30
தொங்கல்பிச்ச மாதபத்ரஞ் சத்ரங் கவிகைகுடை 
கங்கஞ்சிக் கஞ்சீப்பாங் கச்சமம்ப ணங்குளகந் 
தூம்புகால் நாழிபடி குஞ்சந்தூக் குச்சிமிலி 
யோம்புசிதர் சிக்க முறி
** 445

#31
சிங்கா தனம்பத்தி ராசனமாம் பாரிபரி 
யங்கமஞ்சம் பாண்டில்கட்டி லாந்தளிமம் பொங்குபஞ்சி 
மெத்தையணை யாம்பீடம் விட்டரம் பீடிகையே
நத்துந் தவிசா சனம்
** 446

#32
கொட்டையுப தானந் தலையணையாங் கூர்தவிடு 
முட்டைமுடை நொய்நொறுங்கா மூழிவாய் பெட்டியா 
மஞ்சிகமு மாந்துடைப்பஞ் சோதினிமா றாஞ்சுருக்குச் 
செஞ்சுருவை நெய்த்துடுப்ப தே
** 447

#33
படியகங்கா ளாஞ்சிபடிக் கந்தீப முட்டி 
தடவிந் தளம்பழுதை தாமம் வடம்பாசந் 
தாம்பிரச்சக் கம்புரிநாண் கச்சைகயி றாமிழைதந் 
தாம்பனுவல் சூத்திரமு நூல்
** 448

#34
சாலம்வலை யவ்வடமா சாமதலை கந்துநிலை 
காலெழுத்தா ணுத்தறிதூண் குற்றிகம்ப மால்யானைத் 
தூணுந் தயிர்கடையுந் தூணும்வெளில் யூபமகத் 
தூண்போ திகைகுறிய தூண்
** 449

#35
அம்மியரை கற்குழவி பற்றியரைக் குங்கல்குழி 
யம்மிகல வங்குழிகல் லாமூடை பம்முகுகை 
மூட்டை பொதியலொன்றிற் கட்டியே தாக்குகின்ற 
மூட்டையு டோளாய மாம்
** 450

#36
உலக்கைமுச லந்தடியு ரற்கறையு லூக 
மெலிப்பில்திட்டை மூன்றாம் வெளிசம் வலித்தூண்டி 
லேணியொடு சேணி யிறவையா மால்பேகண் 
ணேணி பிழாவிடா வே
** 451

#37
கோடிபஞ்சி தானைபடாங் கோடிகமி லக்கரம்பட் 
டாடைகலை சம்படமா சாரமடி சாடி புட்டந் 
தூசுடையு டுக்கைதுகில் சூடிகம்வட் டஞ்சீரை 
வாசங்க லிங்கமறு வை 
** 452

#38
அம்பரங் கூறையிடை யல்வே டகம்வேத 
கம்பரிவட் டங்காழ கங்கோசி கம்புடவை 
நீவியநா கம்பாரி நேத்திரம் பாளிதங்காம் 
பாவல்வத்தி ரஞ்சீலை யாம் 
** 453

#39
உத்தரிக மேகாச முத்தரா சங்கமுல்லா 
சத்தின்பே ரத்தவா ளம்வடகம் பொத்தகமே 
சித்திரப்ப டாநீவி கொய்சகமுன் றானைதொக்கை 
கொத்தான போர்வைமீக் கோள் 
** 454

#40
வட்டுடைவார்ப் பட்டிகையே வம்புவிசி கைகச்சாந் 
தொட்டகுப்பா யங்காஞ் சுகம் வரணஞ் சட்டையங்கி 
கஞ்சுகமெய்ப் பையெழினி காஞ்ச மவிடிகண்டங் 
கஞ்சிகைதி ரைப்படாங் காண் 
** 455

#41
கம்பலஞ் சிம்புளி கம்பளமேற் கட்டிவிதா 
னம்படங்கு வானிகுஞ்ச நற்றலைப்பாம் பம்பிறைஞ்சி 
வற்கலை சீரை மரவுரிம யிர்ப்படாந் 
தைக்கும்வயி ரஞ்சூழி தான்
** 456

#42
கத்திகைவி லோதனந்தோ கையிடக்க யம்படங்கு 
சத்திவிடங் கம்படம்ப தாகைகொடி மெய்த்துவசம் 
வானமிடால் கேதனமு மாஞ்சும்பு வாக்கிகுச்சா 
மானமத்து மூழிமூ ழை
** 457

#43
சேட்டைதட்டு முற்றின்முறஞ் சின்னஞ்சூர்ப் பஞ்சளகாங் 
காட்டளிகி ழாராம்பி காராம்பி பூட்டையாம் 
வார்துணிவட் கண்டம் வகிர்கடிகை துண்டமதா 
மார்துணிசி தார்சிதவ லாம்
** 458

#44
சொல்கவறு வல்கழங்கு சுதாமா யந்தாயம் 
வெல்சாரி நாயா மிதியடிபா வல்கழலும் 
பாதுகையக் கொட்டை குடை பாதங்காப் புச்செருப்பாம் 
பாய்துருத்தி யேசிவிறி பந்து
** 459

#45
கொல்லுலை மூக்குக் குருகுசிவை யத்துருத்தி 
வல்லுதி யத்திரியா மத்திகையே கல்விளக்குத் 
தண்டு கவுசிமமாஞ் சாடுருச்சா காடொழுகு 
பண்டிவைய முஞ்சகடென் பார்
** 460

#46
பண்டியுளி ரும்பிருசு கந்தாம்பல் லக்கணிதம் 
தண்டிகையாந் தோளிகம்யா னஞ்சிவிகை யொண்பள்ளி 
மஞ்சிகையு மாமூர்தி வாகனம்வை யம்பாண்டில் 
சஞ்சிகைதேர் பாடைவெள்ளில் காண்
** 461

#47
தேரிரத மெந்தரமரி செந்தனம்வை யங்குயவா 
மார்கதிரா நேமிசில்லி யாழியுருள் பாரியங்கா 
லுந்தி பருதி யுதரிவண்டில் தேர்ச்சுற்று 
முந்துகிடு காங்கூம்பு மொட்டு 
** 462

#48
நாப்பணுந்தட் டுந்தேர் நடுக்கொடிஞ்சி கூவிரந்தேர்ப் 
பாப்பெயராந் தோட்டிகபா டம்புதவு காப்பாரி 
வாரிகத வாந்தாழ்சீப் புக்கடிப்பாம் வட்டிகையே 
சீரோவி யஞ்சித்தி ரம் 
** 463

#49
ஏடு சுவடியிலே கம்புத் தகமாம்வெள் 
ளேடுடன லேகமெழு தாச்சுவடி யேடதின்மேற் 
பட்டைகம்பை யென்பர்பசுத் தீண்டுகுற்றி கண்டூயங் 
கட்டசைது லாந்துலைதூக் காம்
** 464

#50
வீணைகின்ன ரங்கருவி யாழ்விபஞ்சி கோடவதி 
பேணுகலந் தண்டாம் பிரடைமுறுக் காணியின்பேர் 
மாடகமு மாம்வலிக்கட் டுத்திவவாம் வன்றுயரி 
நாடிகுரற் றந்திரிந ரம்பு
** 465

#51
பேரியாழ் செங்கோட்டி யாழ்பின் சகோடயாழ் 
வார்மருத யாழ்நால் வகையாழாம் வாரியுடன் 
வங்கியமி சைக்குழலாம் வாத்தியமே ளம்பறைகொட் 
டங்கோ டணைமுரசி யம்
** 466

#52
தொண்டக மேதுடியே பம்பைகிணை சாபறைநேர் 
கொண்டைந் திணைப்பறையாங் கூர்பணவந் திண்டியா 
மொந்தை பதலைதிண்ண மோர்கட் பறைமுழவு 
தந்தகுளிர் முட்டுமத்த ளம்
** 467

#53
தண்ணுமைநி சாளமாந் தட்டைகா டிப்பறையாந் 
திண்ணிடக்கை யாமந் திரிகையா நண்ணுநந்தி 
பேரிகையுந் துந்துமியின் பேரா னகம்படகம் 
சார்திமிலை சல்லரிப்பேர் தான் 
** 468

#54
குறியபறை யாகுளிகு டப்பறையே பன்றிப் 
பறைதூ ரியமணப்ப றைப்பேர் அறைதமரு 
கந்துடியு டுக்கைகடிப் புக்குணிலா மண்பரிண 
மிந்திரண்டு மார்ச்சனையா மே
** 469

#55
பாதைவங்கம் பஃறியம்பி பாரதிச தாமதலை 
போத மரக்கலநா வாயான மீதுகப்பல் 
தோணியோ டந்திமிலி தெப்ப மிதவைபுணை 
காணும் படுவைபட்டி கை
** 470

#56
இம்மரக்க லப்பா யிதையாம் விசிப்பரியாஞ் 
சும்மா டடைகடுவு டன்சுமடு சும்மைசுமை 
யேர்தொடுப்ப லம்படைவா ளின்கலனை நாஞ்சிலிவை 
கூர்கலப்பை மேழியுமக் கூற்று
** 471

#57
செற்றைமயல் சோதனிது ரால்நால்சிக் குக்காடாம் 
பற்றுகலம் பாத்திரம்பாண் டப்பொதுப்பேர் முற்றகளந் 
தாழி தளம்பதலை சாடியாஞ்ச ராவமுட
னாள்சுத் திகையு மகல்
** 472

#58
குடங்கர்குணந் தாலிகடங் கும்பங் கலச 
மிடங்கர்குடம் பாண்டி லிடிஞ்சில் சுடர்த்தகழி 
சட்டி விசளைகிடா ரந்தவிசு கொப்புரியா 
நட்டிரக்கு மோடுகடி ஞை
** 473

#59
சீகரங்கன் னல்சிரகந் தற்கரிநு வற்கரியு 
மாகரக மந்தனித யிர்த்தாழி பாய்குழிசி 
தாங்குறைக ரீரந் தடாமிடாப் பானைகுண்டம் 
வான்குடுவைக் குங்குண்ட மாம்
** 474

#60
மொந்தைநீ ருண்கலனு லாமியுலை மூடிசெய்கூ 
டுந்துகுயி லாயத் துடன்பஞ்ச ரந்கான்புட் 
கூடுகுடம் பைகட்சி கூண்டாங் குதிர்புகல்காற் 
றாடி கதலிகறங் காம்
** 475

#61
தார்தெரியல் சுக்கைகண்ணி தாமமொலி யல்பிணைய 
லாரம் படலையணி யல்சுருக்கை சீரிலம்ப 
சுங்கத் திகைசிகழி கைகோதை மஞ்சரிய 
லங்கல்தொடை தொங்கலுமா லை
** 476

#62
வாகைவெற்றி மாலைவட்ட மாலையிண்டை யாந்தொடரே 
யாகுஞ் சரம்வா சிகைபடலை மோகச் 
சிகழிகையாம் பள்ளித்தா மந்தேவர் பூசை 
மகிழ்தாரீ யோட்டிகுஞ்ச மாம்
** செயற்கைப் பொருள் வர்க்க முற்றும்
** 3 அஃறிணை யுயிரில்பொருட் படலம் 

@33 இட வர்க்கம்
** 477

#1
வீடமிர்த முத்தி விபவருக்க மானந்த 
நீடுசிவஞ் சித்தி நிருவாணங் கூடுகதி 
நின்மலஞ்சு காதீத ஞேயநித்தங் கைவலிய 
மின்னும் பலமோக்க மே
** 478

#2
விண்டுறக்க நாகம்விமா னம்விசும்பு மேலுலக 
மொண்டான மேபொன் னுலகுகற்ப மண்டுவணை 
யும்பர்சுவ லோக முயர்நிலைவா னாடுசுவர்க் 
கம்புவனந் தேவருல கம்
** 479

#3
நாகலோ கம்பவண நற்பாத லம்பிலம 
தோகதிபா தாளஞ் சுவப்பிரமே வேகவிருள் 
கும்பியள றாவிரந்தீ நாரகம் பூதிநிரை 
யம்பவர்க்க மூழல்நர கம்
** 480

#4
பூமி பிருதுவிபார் பூவகலி டந்தரணி 
கோமகிய ளக்கர்பொறை குவ்வசலை நேமிபடி 
பாரியகி லங்குவல யங்கா சினியவனி 
தாரணிவ சுந்தரைத லம்
** 481

#5
தாத்திரி யேதரைத ரித்திரிப ணாதரிமண் 
கோத்திரிகி டக்கைசதுக் கோணிதறை பாத்திபமே 
சக்கரநி லம்புவிச லாம்பரியே மாதிரமே 
தக்க விபுலைவசு தை
** 482

#6
தாலமுல கிம்பர்வையஞ் சாந்தைவிசு வம்புடவி 
ஞாலம் வசுமதிந கம்பவனம் பாலமுகம் 
பூதியமே மாங்கிவைய கம்பொழிலி கம்புவனி 
மேதினிச கம்புவன மே
** 483

#7
தீவின்பேர் தீவிகைதீ பங்கடற்குட் பூமிதிட்டா 
மாவேலி காணிதிணை பூநிலமாங் காவலர்க 
ளாளிடஞ்ச மத்தான மாதினமா திக்கம்விண்ணோ 
ராளிடம்ப தம்பதவி யாம்
** 484

#8
மண்டிலமி ராச்சியந்தே யம்பை திரம்வருடங் 
கண்டமழு வஞ்சனப தஞ்சீமை தண்ணடைநா 
டாரேணி நீவரமு மாங்குடியைந் நூறுளவூர் 
பேரூர்நூ றுட்படிற்சிற் றூர்
** 485

#9
பாக்கமருப் பஞ்சரணம் பாழிபள்ளி வேலிமுட்டம் 
பூக்கநிய மம்பூரி யம்பூண்டி வாழ்க்கைகுடி 
வைப்புறையுள் சும்மைகிரா மந்தாமம் பேட்டகலுள் 
கற்பநிகா யம்பக் கணம்
** 486

#10
சேர்விருக்கை வேசனநி வேசனஞ்சார் வாழ்வகரஞ் 
சேரிகுட மூர்பதியாம் பட்டிநொச்சி யூர்களிற்சிற் 
றூர்பவனந் தாவளம்வா சம்வசதி மடம்ப 
மூர்களஞ்ஞூ றின்றலைமை யூர் 
** 487

#11
கேடங் கருவடஞ்சம் வாகஞ்சீ றூர்குறிச்சி 
பாடுமலை யூர்குறும்பு பாலைமுல்லை பாடிநெய்தல் 
பட்டினந்தோ ணாமுகமே பத்தனமாம் பாசறைப்பேர் 
வெட்டுமுனை யூர்பாடி வீடு
** 488

#12
நாட்டூர் நகரிநகர் பட்டணம்பு ரம்புரியே 
காட்டு நகரம்வளா கங்கொல்லை தோட்டமா 
மாவணம் பீடிகைகூ லங்கடையங் காடியுமாந் 
தாவுதக்க சஞ்சுதுக்கந் தான் 
** 489

#13
கோணமுடுக் காங்குறுந்தெ ருக்கள்மறு காநியமஞ் 
சேண்வாடை சேடி சிரேணிசந்தி பேணுஞெள்ளல் 
வீதிதெரு வையாளி வீதிப்பேர் செண்டுவெளி 
மாதிருமுற் றம்பரிவட் டம் 
** 490

#14
தெற்றிசித்ர கூடநாற் சந் திசிருங் காடகமாம் 
மற்றம் பலம்பொதுமன் றம்பொதியும் பெற்றசபை 
வேந்திருக்கை யத்தாணி வேத்தவையாம் வைப்பிருக்கை 
யாய்ந்தபண்ட சாலை யறை
** 491

#15
மாட மந்தி ரம்வசதி புக்கில்புரை யில்லமனை 
வீடுவள வில்கிரகம் வேந்தபெண்வாழ் வீடுகந்த 
வாரமந் தப்புரந்தாழ் வாரமுங் கற்படியு 
மாரோக ணஞ்சோபா னம்
** 492

#16
தேவ தலநிலையஞ் சேதியஞ் சேத்திரங் 
கோவில்மந்தி ரஞ்சினக ரங்கோட்ட மேவுதளி 
யாலயநி கேதனமா மாளிகைகு லங்கோயில் 
சாலங்கொட் டாரமன்னர் சார்பு
** 493

#17
பாழிமடந் தாபதங்க ரண்டைபள்ளி யாச்சிரம 
மூழின்முனி லோர்வாச மோமகுண்டந் தாழ்தடவு 
வேதியுமாங் கோபுரம்வே ரஞ்சிகரி தோட்டிபுர 
வாய்தல்வழித் திண்ணையளிந் தம்
** 494

#18
வாயில்தொட்டி வாய்தல்கடை வாரிதுவா ரம்வாசல் 
வாயிற் படிநடைந கஞ்சுருக்காம் வேயுள்வேய் 
மண்ணீடு மாடம் வளர்குறடு மண்ணீடு 
திண்ணைதிட்டை வேதிகையுஞ் சேர்
** 495

#19
குட்டிமம்ப டுத்தலங் கூடை குடில்குரம்பை 
கொட்டில்சிற்றி லாஞ்சுள்ளை கொள்பாண்டஞ் சுட்டிடும்பார் 
சாலகம் சாளரம்வா தாயனஞ்சா லங்குறுங்கண் 
காலதரு மாம்பலக ணி
** 496

#20
சட்டம்வளை யாமுகடு தான்விடங்கந் தாள்தூபை 
யட்டில்மடைப் பள்ளி யடுக்களையா மொட்டாய்தஞ் 
சுல்லிமுத்தா னங்குமுதங் காமரம டுப்பிறப்பே 
யில்லி னிறைவளவி யே
** 497

#21
கல்வி பயிலிடங்கல் லூரிகழ கம்பள்ளி 
யல்ல திலங்க மரங்கமுமே வல்படைகூத் 
தாடிடமாந் தூம்பங் கணஞ்சலதா ரைப்பெயராந் 
தேடுஞ் சுவர்பித் திகை 
** 498

#22
துற்று மொதுக்கிடப்பேர் துச்சிலாம் வேறிடப்பேர் 
மற்றையே காந்தமொரு வந்தமா முற்றமுன்றில் 
அங்கணநி லாமுற்ற மாமரமி யஞ்சுருங்கை 
வெங்கற் படையாகு மே 
** 499

#23
மேடைபத ணம்பரிய கஞ்சூ ளிகையகப்பாச் 
சாடு முபரிகையாஞ் சாவடியே கூடம் 
படிப்புரையா மாசாஞ் செச்சைமன்னர் செங்கோல் 
நடப்பா கியமனைநா மம் 
** 500

#24
வேலியிஞ்சி யாரைநொச்சி வேணகையே கோட்டைசிறை 
சாலமெயி லோதையர ணங்கடக மேல்வாரி
காப்புவள கஞ்சிகரம் வேதிபிர காரமகப் 
பாப்புரிசை தான்மதிற்பேர் பாடு
** 501

#25
ஓடைபரி கங்கிடங்கு டுக்கேணி பாம்புரியுங் 
கூடகழ்ப்பே ரெந்திரங்கோ சந்தோணி நீடிய 
நாஞ்சில் மதிலுறுப்பா ஞாயிலுமாஞ் சாலை பள்ளி 
பூஞ்சத் திரமறப்பு றம்
** 502

#26
நெல்லிடுமிற் கொட்டாரஞ் சேர்களஞ்ச யங்களமாம் 
நல்லுறையுள் பாழிசய னம்பாயல் மெல்லமளி 
சேக்கைகட்சி பள்ளியரி சட்டகம்ப டுக்கை பண்ணை 
சேக்கைபட்ட மாத்துஞ் சிடம்
** 503

#27
ஈசுரனூ ரீசோ வதியா மயேந்திரமே 
யாசுரமா யாபுரஞ்சூ ராதிகளூர் பேசிலங்கை 
யாம்புரமி ராவணனூ ரானைமுக னூர்மதங்கந் 
தாம்பிரைவா ழூர்விருடாங் கம்
** 504

#28
மாலூர்வை குண்டமயன் வாழூர் மனோவதியா 
மேலையம ராபதிவிண் கோநகராங் காலனூர் 
வைவச்சு தஞ்சேடி சேணிவிஞ்சை வல்லவரூர் 
ஒவ்வளகை யேதனத னூர்
** 505

#29
வஞ்சிகரு வூரால வாய்கூட லாமதுரை 
கஞ்சிகச்சி காஞ்சி கனியவந்தி யுஞ்சையா 
மேவவிமுத் தங்காசி மெய்வார ணாசியுமாங் 
காவிரிப்பூம் பட்டினம்பு கார்
** 506

#30
காழகங்க டாரமாங் கண்டியுடன் சிங்களமு 
மீழம்வஞ்சி சேர னிருப்புறையூர் கோழியாங் 
கோலம்வினி தைவிரிசு கோசலைசா கேதமைந்து 
மாலி லயோத்தியினா மம்
** 507

#31
வேணுபுரஞ் சண்பை வியன்கழும லம்புகலி 
கோணில் சிரபுரமே கொச்சைபுரந் தோணி 
புரம்வெங் குருப்புறவம் பூந்தராய் பொற்பாம் 
பிரமபுரஞ் சீகாழிப் பேர்
** 508

#32
நெல்வேலி நெல்லை பிரம விருத்தபுரம் 
வல்வேய் வனந்தா ரகவனமாஞ் சொல்குளந்தை 
யேரிதங்கூ ரத்தினபு ரங்குருகு லேசர்களூர் 
ஏரகஞ் சாமிமலை யே
** 509

#33
செந்தில்செந்தூர் தில்லை சிதம்பரமா ரூர்கமலை 
கொந்தார் குடந்தைகும்ப கோணமாம் பைந்தேவை 
சேதுபுர மென்பவிரா மீச்சுரம்வி தேகையெனும் 
பேதுறாச் சொல்மிதுலைப் பேர்
** 510

#34
தேமரித மாதிரந்திக் கம்பரம்வி சும்புலகு 
கோமுகம்பு லங்காட்டை யாசைதிகை தோமில்ககு 
பந்திசைநான் மூலைவிதிக் காங்குணக்குப் பூரூவமே 
யிந்திரிபி ராசிகிழக் கே
** 511

#35
தென்வாசி யாமஞ் சிவேதைதெற்குத் தெக்கணமா 
மன்வா ருணம்பச்சி மங்குடக்கு நன்மேற்கா 
முத்தரம்வ டக்குதக்கு தீசிகவு பேரியமாங் 
கத்தர்களாற் பேர்மூலைத் காம்
** 512

#36
குத்தரஞ்சி லோச்சயங்கற் குன்றிறும்ப டுக்கல்பறம் 
பத்திரிசி லம்பரிசை யந்தரணி மைத்திகிரி 
பொங்கர்கல்ல கஞ்சயிலம் பொச்சைபொகுட் டோதிசிமை 
யங்குவடு நாகமச லம்
** 513

#37
பாதவம்வி லங்கல்விந்தம் கோத்திரிவே தண்டநக 
மாதிரம்வெற் போங்கல்கிரி பீலிசுரும் போதிமந்த 
ராதரம்வீ ரம்பதலை பொற்றைபொறை விண்டிரவி 
பூதரம்ப ருப்பதம்பொ ருப்பு
** 514

#38
சக்கரம்பி றங்கல்வரை தாணுச் சிகிரிமலை 
பக்கமுறும் பாழி பதுக்கைதுறு கற்காண்டை 
பாறையுப லஞ்சிலைபா டாணஞ் சிராவணங்கன் 
றேறுகலு லந்திரண்ட கல்
** 515

#39
குன்றினுச்சி கோடு கொடுமுடி கூடஞ்சிகரங் 
குன்றருகு வாரநிதம் பஞ்சானு மென்றடமுஞ் 
சாரலுமாங் கந்தரமு டுக்கர்முழைஞ் சில்விவரங் 
கூர்முழைநி குஞ்சங் குசை
** 516

#40
கயிலைவிசை யாத்தம்வெள்ளி வெற்பீசன் வெற்புக் 
கயிலாயம் பொன்மலைமா மேரு வுயர்மலையே 
வைத்த தனுமலைதே வாலயமி ராசமலையே 
யத்தும் வடமலையு மாம்
** 517

#41
தென்கிரித மிழ்க்கிரிதென் றற்கிரிசெம் புக்கிரிகும் 
பன்கிரியி லிங்கமலை யம்பொதிய நன்பொதியே 
சந்தகிரி யும்பொதிகை சக்கர வாளகிரி 
யுந்துவட்ட வெற்புவள கம்
** 518

#42
ஆரணியங் கான்களரி யத்தஞ் சுரம்விடர்காந் 
தாரங் கடம்வனந்தா வம்பழுவங் கார்முளரி 
பொச்சைகண்ட கங் கானந் தில்லங்காண் டம்புறவங் 
கட்சி கடறடவி காடு
** 519

#43
வல்லைபெருங் காடுசிறு காடிறும்பு வண்முதையன் 
மெல்லிலைபோங் காடழிகா டாமிளவல் சொல்விளைகா 
வற்கா டரியல்குன்மம் வஞ்சி யறலிறல்ப 
துக்கைவிட பஞ்செடியுந் தூறு
** 520

#44
ஆராமங் கோடரமுய் யானமுத்தி யானமரி 
சூரா ருபவனங்காச் சோலைபொழில் வார்பொதும்பர் 
தண்டலைம ரச்செறிவுந் தோப்பாகும் பூந்தோட்டம் 
வண்டுடவை நந்தனவ னம்
** 521

#45
வீரையம்ப ரஞ்சலதி வேலைதிரை தோயநிதி 
வாரிமக ராலயம்வே லாவலயம் ஆர்கலிமுந் 
நீர்வா ரணநரலை நேமி குரவையுப்புக் 
கார்கோள்பவ் வஞ்சா கரம்
** 522

#46
உந்தியம்பு ராசி யுததி யளக்கர்வெள்ளஞ் 
சிந்திரத்தி னாகரமே திண்பரவை நந்துவரி 
தாழ்புணரி யம்போதி சக்கரமோ தம்பெருநீ 
ராழியன்ன வஞ்சமுத்தி ரம்
** 523

#47
வாருதிபா ராடை நதிபதி யத்தியரி 
வாருணமே ழாறு மறிகடற்பேர் கூருமுப்புப் 
பாறயிர்நெய் யிக்கின் பசுஞ்சா றொடுசெந்தேன் 
மீறுநன்னீ ரேழ்கடலா மே
** 524

#48
ஓணந் துணிதடினி யுந்தியொலி யல்குடிஞை 
சேணதிசிந் தாறாந் திரிபதகை காண்விமலை 
தீபவதி சானுவியே தீர்த்திகைமந் தாகினியே 
யாபகைப கீரதிகங் கை
** 525

#49
நாரா யணிபிரம நாதை மருத்துவதி 
வாரம் பரவதிதன் மந்திரவை யாரமமிர்தக் 
கோலிகன்ம நாசனிம கோதையையா னந்திமங்க 
ளாலையை முத்திமுத்தி ரை
** 526

#50
பகவதியு ருத்தரைப ராபரைபொ ருந்த 
மகன்மிசைமா லேயிமணி மாதாப் புகழ்திரையி 
தீம்பொருளை நிட்களைகங் கான்மிகைமா லாரூபி 
தாம்பிர பன்னியின்பேர் தான்
** 527

#51
கன்னிகும ரிப்பேர் கவுதமையின் பேர்கோதை 
துன்னிய வாணிசா சோதியாம் பொன்னியொடு 
காவிரிகா வேரிகோ தாவிரிவி ருத்தகங்கை 
நாவினிகா ளுந்தியமு னை
** 528

#52
வைகையின்பேர் வேகவதி வாலைசித்தி ராநதியா 
மொய்தாம்பி ரானுசையோ டாத்திரையும் பெய்கடனை 
சாமா நதியுருத்தி ராணியயி ராணியோ 
டாமாத் திரைபச்சை யாறு
** 529

#53
கான்யாறு முல்லை கலுழியாங் காயல்கழி 
கானல்முரம் பாங்கழிமு கம்புகா ரான 
கயவரிய தோமுகம்போந் தாமுவள கத்தோ 
டுயரளக்க ராமுப்ப ளம்
** 530

#54
பாரியம்பா ராவாரம் வேலைபர வைக்கரையா 
வாரமணை கோடு வரைகூலந் தீரம் 
வரம்புதடம் பாரங் கரைசெய் கரைதான் 
குரம்புடன் சேதுக் குலை
** 531

#55
பட்டமடு வோடைகுண்டம் பண்ணைசுனை கேணிபொய்கை 
குட்டம்வட்டம் வாவிபடுக் கோட்டகமே புட்கரணி 
யூருணியி லஞ்சி யுவளகங்க யம்படுகர் 
ஏரிதடா கங்கிடங்கேல் வை
** 532

#56
பங்கமலங் கல்ச ரசுசூழி பல்வலந் 
தங்கலி லஞ்சகஞ்ச லந்தாமே பொங்கலந்கை 
நீர்நிலைத டங்குளமா நீடெந் திரவாவி 
சேரு மிலவந் திகை
** 533

#57
ஆற்றிடைப் பேரிலங் கையரங் கந்துருத்தி 
மாற்றசும்பு கூவல்கூ வங்கிணறா மூற்றுறவி 
துன்றுஞ் சிராவமுமாந் தூதி புளினமணற் 
குன்றுவராம் பாரிருணங் கூறு
** 534

#58
நீர்க்கண்வினை செய்யு நிலந்துறைநீ ரூர்பாதை 
யார்க்கும் பிராறுவழா றாமறலே யேர்க்கார் 
மணற்சிதகம் வாலுகமும் வெண்மணலின் பேர்நுண் 
மணற்பே ரதாயிரு மாம்
** 535

#59
தாழ்விழிவ தம்பயம்ப வற்படுகர் ஞெள்ளல்குழி 
கீழுவள கங்கிழக்கும் பள்ளம்வெட்டை பாழ்கரம் 
போதுபுற்பார் சாட்டுவல மூர்த்த மிசைசுவல்மேல் 
மீதுயரந் திட்டைதிடர் மேடு
** 536

#60
தொய்யிலச றள்ளல்பங்கந் தோணிகா லாழ்சகதி 
செய்யல்குழை சேதகஞ்செ தும்பளறு பெய்குழம்பு 
கொள்ளநொதி சேறாஞ் செலவளைபொய் பொந்துபுழை 
பொள்ளல்புடை வன்மீகம் புற்று
** 537

#61
வன்குறிஞ்சி பாலைமுல்லை வாழ்மருத நெய்தலைந்து 
நன்கிரிசு ரங்காடு நாடுகடல் ஓன்றுதினை 
நெல்விளையு நன்செய்சா லேய முருவரைதா 
னெல்லாம் விளைபுன்செ யே
** 538

#62
கைதைபண்ணை யாலவா லங்கழனி பானல்பணை 
செய்தடிமாக் கண்டஞ் செறுப்பழனந் துய்ய 
வயல்விளைநி லங்குரம்பு மாசி வரம்பே 
யயல்வரப்பாங் கங்கவ் வருகு
** 539

#63
செவ்வல்செந்நி லங்கருநி லங்கரிச லாஞ்சிறுச்செ 
யவ்வதின்பேர் பாத்திகுண்டி லாகுமே யொவ்வு 
மருதநில முத்தமென்பால் வண்குறிஞ்சி முல்லை 
பரிபுறவம் வன்பால்பா லை
** 540

#64
புறணி களரழல்பைங் கூழ்பிடியாப் புன்செய் 
நிறைதரிசு ழாத நிலமாம் வறிய 
கமர்விடர்நி லப்பிளப்பாங் கைப்பற்றக் கூடா 
தமர்நிலத்து ருக்கமருப் பம்
** 541

#65
தாரிசெப்பம் பாதை சரிவதித டம்பதவை 
வாரிவகிர் கட்சபுட மார்க்சமதர் தாரைவகுந் 
தாறிடவை கற்பமய னஞ்செலவொ ழுக்கநெறி 
கீறியவை யத்தங் கிறி
** 542

#66
வட்டைநட வைகடறு பத்ததி யேவயவை 
பட்டம்வழி யாங்கவலை பல்கவர்ச்சிப் பட்டவழி 
சின்னெறியி டங்கர் புதுவழிம ரீசிபொல்லாத் 
துன்னெறியின் பேர்கடஞ்சு ரம்
** 543

#67
வெளிவெள் ளிடையாகும் வெம்போர்க் களஞ்செங் 
களமே பறந்தலைவி ளாகங் களரிசுடு 
காடுமயா னஞ்சுடலை காளவன மீமமிடு 
காடுபுறங் காடுபிணக் காடு
** 544

#68
பாலிடையில் வாய்முதலுள் பாடுழைவ சஞ்சார்கீழ் 
கால்புலழ்வ லம்புறந்தேங் கண்புடைசூழ் மேல்வழிபின் 
பாங்கர்படி மாடுழிமுன் பாரிசம ருங்குதலை 
ஞாங்கர்சிறை வைப்பகந்தா னம் 
** 545

#69
கடையயல்வ யின்களம்பக் கந்தா னிடமிவ் 
விடமிவணீண் டிம்பரிதா விங்கவ் விடமும்பர் 
ஆண்டாங் கவணுவண தாவெவ் விடம்யாங்கே 
யாண்டெவ ணெங்ஙனமு மாம்
** 546

#70
பாங்கர்புடை மாடுபுறம் பாரிசம்பால் சார்மருங்கு 
ஞாங்கர்சிறை யோரம் விளிம்புபக்க மோங்குவலந் 
தக்கணமாம் வாமமிட மந்தரக முட்புறந்தான் 
புக்க பகிர்வெளிபு றம்பு
** இடவர்க்க முற்றும் 
** 3 அஃறிணை யுயிரில்பொருட் படலம்

@34 கால வர்க்கம் 
** 547

#1
பங்கயப்பூ நூறடுக்கிப் பாய்ச்சூசி யோரிதழ்பா 
யங்கதுவே கால மதுவெட்டே தங்குகண 
மவ்வெட்டா மோர்காட்டை யவ்வெட்டா மோர்நிமிடம் 
அவ்வெட்டே யோர்துடிய தாம்
** 548

#2
நாற்றுடியோர் மாத்திரையே நல்லிலகு வவ்விரண்டே 
யூற்றகுரு வாகு முயர்குருமூன் றேற்றுவது 
தாழும் வினாடியது தானறுபா னாழிகையவ் 
வேழரையா மோர்சாம மே
** 549

#3
சாமநான் கோர்பொழுது சார்பொழுதி ரண்டோர்நாள் 
ஆமதுமுப் பான்மாத மவ்விரண்டே யாமிருது 
மூன்றிருதா மோரயன முற்றயன மோரிரண்டு 
தான்றழுவி லோராண்ட தாம்
** 550

#4
ஆண்டோர்முந் நாற்றறுபா னண்டர்களாண் டாகுமந்த 
வாண்டா யிரத்திருநூ றவ்விரட்டி யீண்டுமும்மை 
நான்மைகலி யாதியுக நான்கினுக்கா நன்குகமு 
நான்மடங்கைஞ் ஞூறயனோர் நாள்
** 551

#5
அந்நாள்முந் நூற்றறுப தாண்டதுநூ றம்புயத்தோன் 
றன்னாயு ளோர்பிரமன் சாயிலொரு நன்னாளா 
யங்கதுமுந் நூற்றறுப தாண்டா யதுநூறே 
செங்கணனுக் காயுளெனத் தேர்
** 552

#6
ஈட்டுமொரு மாத்திரையி மைப்பிறைநொ டிப்பொழுதா 
நீட்டித்தல் பாணித்தல் நெட்டித்தல் கூட்டுநெடும் 
போதானங கிரேதந் திரேதந் துவாபரமே 
யோதுகலி நான்காம் யுகம்
** 553

#7
எல்லிநத்தங் கங்குனிசி யாமினிவி பாவரிரா 
வல்லிரவி ராத்திரிதி வாப்பகல்ஞான் றெல்லைவைக 
லானியந்தி னந்திவச மல்கல்பகல் நாட்புலரி 
தான்விடியல் வைகறையு சல்
** 554

#8
அந்திசந்தி மாலைசா யஞ்சாமம் யாமநென்னல் 
முந்தைநெரு நல்முன்னேற் றாநாளைப் பிந்தைபிற்றை 
நன்பகல்மத் யானமுச்சி நாடி யிருத்தைகன்னல் 
வன்கடிகை நாழிகைப்பே வாழ்த்து
** 555

#9
வாலிசினி யிந்துளரா மற்றதிலி ராக்குகுவாங் 
காலைசெல்வி போழ்தமையங் கால்பதஞான் றேல்வையொடு 
வேலைதரு ணஞ்சமயம் வேளைகொன்னே ரம்பொழுதுங் 
காலமன்னம் பாணியுமாங் காண்
** 556

#10
காலைபிரா தங்கால நுட்பங் கலைவிகலை 
யாலுநெடு நாட்சிரம்வா ணாளைகவை சாலாயு 
சாயுள்பிரா யம்வயதாங் கற்பமயன் வாழுநாட் 
சாயுமதி திங்களுமா தம்
** 557

#11
வருடம்வற்ச ரஞ்சமையாண் டாயனம்பெ ரும்போ 
திருதா னியம்பருவ மாண்டி லரையயனம் 
கார்நாள் நவமமைக திர்க்கூட் டமாவாசி 
பூரணைப்பேர் பவ்வமுவாப் போற்று
** 558

#12
ஆட்சிவா ரங்கிழமை யாந்திதிபக் கர்திதியின் 
மூட்டுமுதற் றொட்டைந்தாய் மூன்றுவட்டங் கூட்டுநந்தை 
பத்திரைச யையிருத்தை பூரணையப் பான்முகிழ்த்த 
நத்திலக்கி னங்கணித்த நாள்
** 559

#13
கார்கூதிர் முன்பின் பனியிளவே னில்வேனில் 
பேரா வணிமுதற்பெ ரும்பொழுதா றோர்நாளிற் 
காலையுச்சி யெற்பாடு மாலையா மம்புலரி 
போலுமுதை யாதிசிறு போது
** 560

#14
ஏயும்வரு டஞ்சரலே யேமந்த மேசிசிர 
மாய்வசந்தஞ் சீட்டும மென்றாறு வாயுப்பே 
ராவணிமு னீரிரண் டாம்பெரும்போழ் தாறினுக்குங் 
காவலுக மூழிமடங் கல்
** 561

#15
பூதமிறப் பாம்பவுடி யந்தா னெதிர்வுநிகழ் 
வாதல்வர்த்த மானமப்போ தன்றினியிப் போதின்றா 
மென்றெப்போ தெப்போதுஞ் சந்ததஞ்ச தாநித்த 
மென்று மனவரத மே
** 562

#16
வல்லைதுரி யஞ்சடுதி யீண்டே கடுப்புவிதப் 
பொல்லைநிபு டஞ்சீக் கிரங்கதழ்வா செல்லாம் 
விரைவுபதந் தாழ்த்தல்பைய மெல்லவென்னல் மந்தம் 
வரைவிளம்பி தந்தா மதம்
** 563

#17
தொல்லைமுன்பு ராணமுந்தை தொன்மைதொன்றூழ் பூருவம்பண் 
டொல்லைபு ராதனங்கி தம்பழமை சொல்கோடி 
நூதனந வங்கடிபுத் தேளபிந வம்விருந்த 
பூதம்வம்பி யாணர்புது மை
** காலவர்க்க முற்றும் 
** அஃறிணை யுயிரில்பொருட் படலம் 

@35 சினை வர்க்கம் 
** 564

#1
இயற்கை சுயஞ்சுயம்பு தானேயுண் டாதல் 
செயற்கைபிர திட்டைதிரி யக்கே பயிற்றறிவில் 
சென்மம் பிராணி சனபதஞ்சா தம்பிரசை 
சென்மிசெந்து முற்பவித்த தே
** 565

#2
தேகமுடல் காத்திரமெய் பூட்சிபுர மாதார 
மாக முயிர்நிலைகா யஞ்சடலந் தோய்குரம்பை 
புட்கலங்க ணம்புணர்ப்பு டம்புகடம் யாக்கைசடம் 
விக்கிரகம் பூதியம்விம் பம்
** 566

#3
தாபரந்த னுப்புதைக ளேபரஞ்ச ரீரமுயி 
ராவிபிரா ணன்சே தனனாதன் சீவனணுச் 
சின்மயனே புட்கலன்கிஞ் சிக்கன் சதசத்து 
மன்னியமா னுள்ளமுமான் மா
** 567

#4
மேனிசட்ட கம்படிவம் வேடமுரு மூர்த்தம்வடி 
வூன்சொருப மெய்க்குறையே யூபமட்டை யீனக் 
கவந்தமழ னம்பிணங்க ளேபரம்பி ரேதஞ் 
சவங்குண பங்குணங்கிஞ் சாற்று 
** 568

#5
முந்துமுயிர்த் தத்துவமெண் மூன்றுவிச்சா தத்துவமே 
ழைந்துசுத்தம் பூதக்கூ றையைந்தீ ரைந்துவளி 
நாடிபத்து முக்குணநால் வாக்குவச னாதியைந்தே 
யேடணைமூன் றாங்கருவி யே
** 569

#6
புவிரீர்தீக் கால்வளியைம் பூதமைம்பு லந்தான் 
செவியுடல்கண் ணாக்குமூக் காகுஞ் சுவையொளியூ 
றோசைமண மைம்பொறிவாய் கால்கையுபத் தங்குதமைந் 
தாசைதருங் கன்மேந்தி யம் 
** 570

#7
சித்த மகங்காரம் புத்திமன நாற்கரணம் 
இத்தொகையெண் மூன்றுமுயிர்த் தத்துவமாம் வித்தியா 
தத்துவமேழ் கால நியதிகலை வித்தையிச்சை 
பொய்த்திடா மாயைபுரு டன்
** 571

#8
சுத்தவித்தை யீசுரஞ்சா தாக்கியமே சத்திசிவஞ் 
சுத்தமைந்தா மென்புமயிர் தோல்நரம்பு நெய்த்தசைபார்க் 
கூறைந்து நீருதிரம் விந்துநிண மூளைபுனற் 
கூறைந் தெனவே குறி
** 572

#9
ஊண்டுயில்ப யம்புனர்ச்சி சோம்பனற்கூ றைக்தோட 
லீண்டு கடைஈடையி ருக்கைநிஷைஃ&மாண்காற்கூ 
றைந்துசின மோக மசூயை மதமுலுத்த 
மைந்தும்வான் கூறென் றறி 
** 573

#10
அரியபி ராண னபானன் வியானன் 
சரிவி லுதானன் சமானன் கிரிகரனே 
நாகன்கூர் மன்தேவ தத்தன்ற னஞ்சயனென் 
றாகுமிவை வாயுவீ ரைந்து
** 574

#11
இடைபிங் கலைபின் சுழிமுனைகாந் தாரி 
திடமதுசே ரத்தி சிகுவை படரு 
மலம்புடைபூ டாச்சங் கினிகுதமென் றாகும் 
பலம்பொருந்து நாடிகளோர் பத்து
** 575

#12
சாத்து விதமேயி ராசதந் தாமதமென் 
றேத்து குணங்க ளிவைமூன்றாம் வாய்த்ததொரு 
சூக்குமை பைசந்தி மத்திமை வைகரியாய் 
வாக்குநான் கென்றே மதி
** 576

#13
தாக்குவச னங்கமனந் தானம்விசர்க் கானந்தம் 
வாக்காதி யைந்தின் வரும்விடயம் வீக்குபொருண் 
மண்சுதன்மூன் றேடணையா மற்றிவைதொண் ணூற்றாறு
மெண்கருவி தத்துவமென் பார்
** 577

#14
ஒன்றே மனந்தொழிலா னாற்கரண மாமதின்பே 
ரென்றாருஞ் சித்த மிதையநெஞ்சந் துன்றுபுந்தி 
யுன்னமகம் புத்திமதி யுள்ள மகங்கார 
முன்னமன மென்னு மொழி
** 578

#15
அங்கிரிப தஞ்சலனந் தாள்சரணம் பாதமடி 
பைங்கழலுங் காலாம் பரடுகர டங்கரண்டை 
காண்கணைங்கால் சங்கமுழங் கான்முழந்து சானுமுட்டர 
மாண்குறங்கூ ருத்துடைக வான்
** 579

#16
கோசமிலிங் கம்பகம்பூக் குய்யமிவை யோனிகுறி 
வீசுபத்த மிப்பொதுவா மண்டம்விதை பீசமதா 
மாதார மூலங் குதமாச னம்பிருட்ட 
மோதுசம னம்பா யுரு
** 580

#17
உக்கநடு மத்தியநு சுப்பரைம ருங்கிடையா 
மொக்கரைவி லாக்கோ டணமுதரங் குக்கி 
மடிமோ டகடுவயின் கும்பிவயி றெட்டாங் 
கடிதடநி தம்பமல்குல் காண்
** 581

#18
நாபி யிலஞ்சியுந்தி போகிலித லைகொப்பூழ் 
மார்பகல மாக மருமமுர மேர்பா 
மிருத்துநெஞ்சாங் கைமூ டிசைகமுக்கூ டக்கி 
லரைப்புறங்கு றுக்கிடுப்பென் றாம்
** 582

#19
கொம்மைகுரூஉக் கண்சுவர்க்கக் கொங்கைநகில் சேக்கைபறம் 
பம்மம் பயோதரங்கு யந்தனமாம் வெம்முலைக்கண் 
சூசாஞ் சிலிமுகமக் காம்புகைதோள் பாணியத்தம் 
வீசுகர மோர்கையரா ளம்
** 583

#20
அங்கையகங் கைகுடங்கை யுள்ளங்கை கூர்ப்பரமே 
முன்கை முழங்கை மொழிமணிக்கட் டங்கிலுத்தம் 
அங்குலிவி ரற்குகிரே யாநகந்தோள் வாகுமொய்ம்பு 
துங்கப் புயநிவந்தோண் மேல்
** 584

#21
பெருவிரலங் குட்டமாந் தற்சனியே சுட்டு 
விரன்மத் திமைநடுவி ரற்பேர் தரிமோ 
திரவிரல நாமிகையாஞ் சின்னவிரல் சுண்டு 
விரல்கனிட்டை யென்றாகு மே 
** 585

#22
நெரிசல்சுணங் கேதிதலை தேமல்பொறி துத்தி 
வரிபசலை கோரைபுறம் வீரம் வெரினபரம் 
வென்முதுகாங் காடியெருத் தஞ்சிறுபு றங்கயிலே 
யன்ன சுவல்பிடரென் றாம்
** 586

#23
கந்தரங்கண் டங்களங்கி ரீபங் கழுத்தணலே 
வந்தமிட றண்ணமுண்ணாக் கண்ணமணல் முந்தணரி 
கீழ்வாய்ப் புறங்கன்னங் கேள்விவள்ளுக் காதுசெவி 
யாழ்சோத் திரமுமதற் காம்
** 587

#24
ஓட்டமிதழ் வாயதரம் பாலிகைமுத் தம்முதடாம் 
பூட்டுகதுப் புக்கவுள்க போலமனுக் காட்கொடிறு 
கன்னமா நாசிதுண்ட மாக்கிரா ணங்கோண 
மென்னுமொழி மூக்கின்பே ரே
** 588

#25
தரரமக்க நேத்திரங்கோச் சக்கீக் கணநாட்டம் 
பார்வைதிட்டி திக்கம் பகந்திருட்டி கூர்நயனங் 
கண்விழிவி லோசனநோக் கந்திருக்கு மாந்தாரை 
கண்மணிவி ளிம்பிமையாங் காண்
** 589

#26
பூரு புரூரம் புதல்குடிபி ருப்புதடி 
பீருப் புருவம் பிறைநுதலின் பேர்பனிச்சை 
பாலமத்த கஞ்சூறை பண்டங் குளமளிக 
மேலு மிலாடநெற்றி யே
** 590

#27
துண்டம்வத்தி ரம்வகனந் தோன்றா னனமுகமாந் 
தண்சிபுகந் தாடி தட்டந் தந்தமெயி றண்டுநகை 
மூரல் தசன முறுவல்பல்லா நாத்தால 
மார்சிகுவை தாலுவுநாக் காம்
** 591

#28
சென்னியுத்த மாங்கமுண்டஞ் சேகரஞ்சி ரஞ்சிகா 
முன்னுவ்வி மத்தகங்க மூர்த்திதலை நன்முடியாங் 
கொண்டை மயிர்முடிபந் தந்தம் மிலங்கொப்பங் 
கண்டபின்ன கஞ்சிகழி கை
** 592

#29
தொங்கல்குஞ்சி யோரிகசா ளஞ்சுரியல் பித்தைசிரோந் 
தங்குழன்ம ராட்டமுளை தார்கதுப்புப் பங்கியுரோ
மந்தளைகே சந்தான் மயிரா மயிர்க்குழற்சி 
கொந்தளம்வி லோதமெனக் கொள்
** 593

#30
கூழைகுரு ளோதிகுரல் கொந்தளம்வி லோதமைம்பால் 
வாழளகங் கூந்தன்மட வார்மயிராஞ் சூழி 
சுடிகை நவிர்முச்சி யுச்சிசிகை சிக்கங் 
குடுமி சிமிலியுமே கூறு
** 594

#31
பின்னல்கபர்த் தஞ்சடிலம் வேணி சடைகுடில 
மன்னுகோ டீர மயிர்த்திரளாந் துன்னெலும்பே 
யென்பழன மத்தி களேபரங்கங் காளமுழு 
வென்புகபா லந்தலையோ டென்
** 595

#32
பொச்சைதொலி தொக்குப் புனிறுரிது வக்கதள்வார் 
பச்சைவட கங்கிருத்தி மந்துருத்தி மெய்ச்சருமந்
தோலா நிணப்பேர் துதைமேதை சவ்வுவிளர் 
மேலாங் கொழுப்புவெளுப் பு
** 596

#33
வள்ளுரம்புண் டூவுசதை மாஞ்சந் தசைபுளிதந் 
தள்ளும் பிசிதந் தடிவிடக்கூன் உள்ளிறைச்சி 
மச்சை வழும்பு வழுக்குமுப்பேர் மூளையென்ப 
ரெச்சமுறு மீருளீ ரல்
** 597

#34
சோரியுதி ரங்கறைநெய்த் தோர்குருதி சோணிதம்புண் 
ணீர்சுடுவல் செம்பால்செந் நீரெருவை சாரிரத்தங் 
கத்துக் கொளுத்துமுட்டுக் கந்துசந்து டற் பொருத்தாம் 
அத்தரலை தான்கழலைக் காம்
** 598

#35
புலவுபுலா லூழ்த்தன்முடை புன்றிரைதி ரங்கல் 
பலிதஞ் சரைநரைமெய்ம் மாசே மலமழுக்கோ 
டூத்தைகன்மி சங்களிம்பா நீர்சிறு நீரமுரி 
மூத்திரமென் றேபெயரோர் மூன்று
** 599

#36
தீட்ட மமேத்தியம்பவ் வீநரக லாகுமலம் 
வீட்டிலத்தி சாணிசா ணாகம்விட்டை யோட்டும் 
புழுக்கைகட்டங் காரமிவை புள்விலங்கே யாதி 
யிழுக்கா முயிர்க்கண்மல மே
** 600

#37
ஆந்திர முங்குடரு மாங்குடல்வா யாலெடுத்தல் 
வாந்திவம னஞ்சத்தி யூற்காரம் பாந்தமதா 
மன்னமல நீர்க்கருப்ப மன்றிமனங் கட்டுறும்பை 
யின்னவைந்து மாசயங்க ளே
** 601

#38
விந்தமுதஞ் சுக்கிலம்வித் தாஞ்சோ ணிதநாத
மிந்திரியம் வீரிய மிப்பொதுப்பே ரிந்திரியம் 
வாயில்கந்த மும்பொறிதன் மாத்திரையோ டேவிடய 
மாயவிரண் டும்புலனுக் காம்
** 602

#39
அங்க முறுப்பவைய வஞ்சினையாஞ் சேகைவசி 
யங்கிதமு டற்றழும்ப தாநரம்பு சங்கனன 
நாடிசிரை யாங்கோழை யைகாசஞ் சேற்பம்வரை 
போடிறையி ரேகை பொறி
** சினைவர்க்க முற்றும் 

@4 குண நாமப்படலம்

@41 உயிர்ப்பொருள் மனக்குண வர்க்கம் 
** 603

#1
மரபிலக்க ணங்கிழமை மாலை சுபாவம் 
பரிசுவிதி பெற்றியியல் பான்மை விரிபகுதி 
சால்புசக சந்தகைநீர் தன்மைபடி வண்மைகுணம் 
பாலியல்பு கொள்கைமுறை பண்பு
** 604

#2
சேதனஞ்சை தன்யமுர ஞாபதஞ்சி தந்தெருட்சி 
மேதைபுலன் விற்பனம்வி வேகமதி போத 
மறிவுணர்வு ஞான முதுக்குறைவத் தண்மை 
யறிவிலிய சேதனமென் றாம்
** 605

#3
கண்ணல்சுட்டல் பேணல் கருதல்நுத லல்குறித்த 
லெண்ணலாஞ் சிந்தைகருத் திங்கிதஞ்சுட் டெண்ணமுன்ன 
நாட்டியந்தி யான நினைவுயோ கங்குறிப்பா 
மீட்டுமப்பேர் வெங்கியமு மே
** 606

#4
பாலகம்பா வம்பாவை பாவனைய கஞ்செடியாஞ் 
சார்வரைய றுத்தல்கணித் தல்குணித்தல் மேவுமமைச் 
சுத்திமந்தி ரஞ்சூழ்ச்சி யூகமுபா யந்தேர்ச்சி 
தத்துமளப் பாலோ சனை
** 607

#5
உன்னல்மா னைசிந்திப் பூழ்த்தல்நிரு வித்தலுள்ளல் 
முன்னல் படர்தல் நினைத்தலாம் மன்னறுஞ்ச 
றாணுச் சதந்திரமே சாசுதஞ்சி ரஞ்சீவி 
யேணிலைபே றாகு மிவை
** 608

#6
ஈரநே யம்புரிவா ணம்பாசம் பத்திபரி 
வார்வநா ரன்பெழுமை யன்புழுவல் போர்மை 
கருணை யிரக்கந் தயாவே கிருபை 
யருளளிய னுக்கிரக மாம்
** 609

#7
தரும மறன்சுகிர்தம் புண்ணியந் தன்மம் 
பெருநல் வினைதீ வினையே வருதோடம் 
பாதகம்ப வம்பழிபா வந்தா பரந்தம்ப 
மாதாரந் காரகந்தஞ் சம்
** 610

#8
நன்குவிழு மங்கடவுள் நன்னர்நயஞ் சேடொண்மை 
நன்றுத் தமநறுமை யாணர்சிவ நன்மைநலம் 
நோன்றல் சமித்தல் சகித்தல்பொறை யேபொறுத்தல் 
சான்று கரிசாட்சி தான்
** 611

#9
தொய்யில்கடி யின்பஞ் சுகமிரமி யந்தமிச 
மெய்திதமா னந்தமலர் வேமநகை மெய்மகிழ்வா 
மோகைமா ராய முவகைசந்தோ டம்பிரியம் 
நாகார் பிரகருட ணம்
** 612

#10
கோணைசத்துக் கன்னி குமரியழி வின்மைதகை 
கேணிகெழுப் பால்பாங் குரித்தாட்சி மாண்கிழமை 
தாயமுரி மைப்பேர்சம் பாத்தியமாந் தேட்டம்வரு 
வாய்புகுதி வாரிவரத் து
** 613

#11
நீதமரி யாதைநெறி ஞாயநியா யங்கிரம 
மோதுநிறை நற்குணம்வ ழாமைகுடிப் பேர்திணையாஞ் 
சாதிவரு ணம்வழியி னங்குலப்பே ரொன்றினிற்சில் 
பேதம் வருக்கமெனும் பேர்
** 614

#12
சமுதாயஞ் சாமா னியம்பொதுவி சேடம் 
நிமிக்தியந்தி ருச்சீ ருசித மமர்சிறப்பே 
யோக்கியஞ் சம்பிரமந் திவ்வியஞ்சொம் பேரணமா 
மூக்கமுர னுள்ளமிகைக் கோது
** 615

#13
செய்திநடைமஞ்சரிசா ரித்திரஞ்சீ லந்தனம்வார் 
கையியல்பா சாரந் திணையொழுக்கம் பெய்யழுக்கா 
றார்மனக்கோண் மாற்சரிய மவ்வியம சூயையுமாம் 
கூரநோ னாமைபொறா மை
** 616

#14
தூய்துசுசி பாவனந்தூய் வேத்தியஞ்சுத் தஞ்சவுசம் 
பூதம் பவித்திரந்துப் பும்புனிதம் தூய்திலியுற் 
பாதந்தீட் டுத் துடக்கா சூசம்வா லாமைபுலை 
சூதகமீன் றண்மைபுனி று
** 617

#15
வெண்மைசைச வம்புருவை விண்போத கங்குழவு 
கொம்மையெவ்வ னங்குருளை கோமளமே செம்முடுகு 
நாகிளைவா லந்தருண நன்மழவு மாமிளமை 
மூள்கிழம்வி ருரத்தமுற்றல் மூப்பு
** 618

#16
தீரம் பராக்கிரமஞ் சேவகந்தி ராணிதிறஞ் 
சூரம்வல்ல பந்தயிரி யந்துரமே வீரிய 
மாண்மைசதுர் சத்திசமத் துச்சவுரி யம்வீரம் 
ஆண்மையிலி கோழைபெண்மை யாம்
** 619

#17
வெற்றிமுல்லை வாகை விசையம்வல னாடுசெயங் 
கொற்றம்வென்றி யாம்பரிச யம்பயிற்சி மற்றனிடடை 
வாதனையு ழத்தல் பழக்கமொடு வாடிக்கை 
சாதக மப்பியா ம்
** 620

#18
ஓதிகலை விச்சைவிக்தை கல்வியின்பேர் கல்லாமை 
யாதமஞ்ஞ மேழமையஞ் ஞானமிச்சை பேதமட 
மண்ணமிழு தம்பா மரமூட மாந்தனிமை 
யெண்வியட்டி கேவலமே கம்
** 621

#19
மாண்கொழுமை சால்பமைதி வாய்ப்பான்றல் மாட்சிவளங் 
காண்செழிப்பாம் பாக்கியமாக் கந்திருச்சீர் பூண்பெருக்க 
மாடிடம்வெ றுக்கைபொறி வாழ்க்கைவிப வம்விருத்தி 
தேடுசம்பத் துஞ்செல்வ மாம்
** 622

#20
ஊழ்நியதி தெய்வம் பிராத்திவிதி தண்மைதஞ்சம் 
தாழ்வெளிமை சாய்ப்பெண் பரிபவமே கீழிழிவா 
நாத்தியதீ தஞ்சூ னியம்பூச் சியநாச 
மேத்தரித பாவமின்மை யே
** 623

#21
நந்தல்பல்க லாக்கம்விளை வாம்பாட வங்கருவந் 
தந்தபிமா னம்பெருமி தஞ்செருக்கே மந்தருக்கு 
வெம்மதங்க ளிப்பகந்தை யாங்காரம் வீற்றிருத்தல் 
செம்மாப்பே மாப்பிறூமாப் பாம்
** 624

#22
ஒய்யாரஞ் சிங்கார முல்லாசங் கெம்பீரங் 
கொய்யு மகிழ்ச்சிக் குறிப்பாகுஞ் செய்யுதவி 
துப்பிணைச காயந் துணையாஞ்சா தித்ததொன்று 
கைப்படுதல் சாத்திபம்போக் காம்
** 625

#23
திட்கல்கூச் சந்துணுக்கம் புல்லரிப் புத்துட்கல் 
மட்கல் மழுங்குதல்மா நல்வெள்கல் வட்கலுட்கு 
நாண்சமழ்ப்பி லச்சைவெட்க நற்றவசு றுப்படிவந் 
தாண்டுதவ நோன்புவிர தம்
** 626

#24
வெறுப்புவர்த்கல் மாமுனைவேண் டாமையவா வின்மை 
துறப்பு விரத்தி துறவி வறுமைமிடி
நீள்கலித ரித்திரநி ரப்புமிச்சை யின்மைகுறு 
வாழ்விலம்பா டொற்கநல்கூர் வாம்
** 627

#25
கேண்மையிகு ளைசிநே கந்தொடர்கேள் நட்புறவா 
மாணை யுடனேவ லாக்கினையாங் காணுமங்கல் 
மாரிபிணி யாமயம்வி யாதி யுபத்திரநோய் 
சூரணங்கு தீனமுரரோ கம்
** 628

#26
மற்சரந்து வேடமடி தெவ்வரியி கற்பகைமை 
முற்சத்து ருத்துவமு ரண்டுமுரண் மெச்சுமறல் 
வார மரில்பிணக்காம் வாய்ப்பையிர ணங்கடனாஞ் 
சாரசர் வேட்டைதளர் வு
** 629

#27
கவ்வைபையுள் புன்கண்மம்மர் கையாறின் னாங்கித 
மெவ்வமிடுக் கண்பழங்க ணேதமின்னல் வெவ்வலக்கண் 
கேதமிட்ட ளந்துயர்கி லேசம் பருவரல்சூர் 
வாதைபடர் பீழைவிழு மம்
** 630

#28
அல்லகண்டம் பீடைதுக்கம் வேதனையி டும்பையஞர் 
செல்லலுறு கண்கவலை கோட்டாலை யல்லலிடர் 
யாதனைய ரந்தைசங்க டந்தொங்கி சந்துன்பஞ் 
சூதார் பசிவிடைப்புச் சுத்து
** 631

#29
நந்தலலா பங்கயஞ்சே தஞ்சிதைவு ருங்கல்நட்டங் 
கந்தல்சுத மானிமடி கேடாம்பா டந்தரங்கோள் 
முட்டிடைவு விக்னம்பொல் லாங்குதீங் கேமுடைஞ்சல் 
துட்டூறு தீதுதுரோ கம்
** 632

#30
நச்சலப்ப வாவேட்கை நம்பிரதி வெப்பநயப் 
பிச்சைநசை காதல்பற்றி ராகமிட்ட மெச்சிவறல் 
மாதர்விழை வேட்டைவெஃகல் வாஞ்சைபெட்ப பேட்சைவிருப் 
பாதரம்வீழ் வேக்கறவா சை
** 633

#31
மால்விரகங் காமமத னோய்மோகந் தூங்கன்மந்த 
மாலசியஞ் சோம்புவிடா யாயாச மேல்வருத்த 
மாய்வயர்வ ணங்கனுக்க மாகுலங்க வற்சிநொசி 
வோய்வுயங்கல் தாவு முரை
** 634

#32
தள்ளாட் டலைவுகுலை சஞ்சலஞ்ச லஞ்சபல 
மள்ளாட் டுதலைதலதிர்ப் புத்துளங்கல் கொள்விதிர்ப்புக் 
கம்பிதம்ப னிப்புநழுக் கம்பொதிர்ப்பு டன்பதர்த்தங் 
கம்பம் பதறல்நடுக் கம்
** 635

#33
ஏசுபிறக் குப்பிழைகா சேதமைசண் டாளம்வடு 
மாசழுக்கி ழுக்கரில்வ ழுக்குறைகோ தாசுகரில் 
பொக்கசடு தப்புப் புகர்வசைக ளங்கநவை 
கைக்குந் தவறுகச டு
** 636

#34
தோங்கறை நோம்பழுதாட் சேபமறுச் சோர்வுகுற்றம் 
வாங்கும் பெருந்திணையொவ் வாக்காம மாங்கொர்பா 
லிச்சையாங் கைக்கிளையி கழ்ச்சிவழுக் குச்சோர்வு 
பொச்சாப் பயர்த்தன்மறத் தல்
** 637

#35
காய்த லுருத்தல்சலஞ் சீற்றங் கதங்கறுப்புத் 
தீயபவ தொந்தஞ் செயிர்வெகுளி பாய்முணவல் 
செற்றங் குரோதஞ் சிவப்புருத்தி ரம்வயிரம் 
பற்றரிற்க லாஞ்சினங்கோ பம்
** 638

#36
பித்தமுன்மா தஞ்சோபம் பேதேம மோகமயல் 
மத்தம்வெறி மால்கழுமு மாழாப்புன் மத்தமருள் 
பிச்சனந்த ரேடனைபி ராந்தி யிலகிரிமான் 
றச்சோக மாழ்கல்மயக் கம்
** 639

#37
கோரமடுப் புட்குவெறி கொன்வெறிப்பு ரும்வீமம் 
பீர்வெடிப யானகஞ்சூர் பீதிவெருஉத் தாருணநாம் 
பேம்பயம்ப னிப்புமச்சப் பேர்துரித மேகவனங் 
காண்பிரம மூன்றுகலக் கம்
** 640

#38
சீரணஞ்சி தம்புசெடி சீத்தைகுண மின்மையாம் 
வாரமோ ரம்பக்க வாதமாங் காரணமே 
வாயில் நிமித்தம் வகைபொருட்டே துத்திறமாந் 
தோயுமங்க லஞ்சுச் சுபம்
** 641

#39
பாரம் பரியம் பரம்பரை பாந்தமுறை 
யாரும் பதிற்பரியா யம்பிரதி சேர்பிறிது 
மற்றையெதி ரேனை மறுமைவினைக் கேடுசெய 
லற்றிடுதல் கையறவு மாம்
** 642

#40
தோரணையா டம்பரமி டம்பம் பிரகடமாம் 
கோரங்கண் டந்தறுகண் கோடணைகு ரூரம்வன்க 
ணெட்டூர முக்கிரங்கொ டூரமக டங்கடினங் 
கட்டங் கடுமைகொடு மை
** 643

#41
வித்தகம்வி யப்பிறும்பூ தாச்சரியம் விம்மிதமுஞ் 
சித்திரமு மற்புதமு முற்பன்முஞ் சித்தமிசை 
தங்கதிச யப்பேர்சந் தேகசமனு மானமையஞ் 
சங்கைகடுப் புச்சமுச யம்
** 644

#42
வீற்றுவிள்ளல் பேதம்விரோ தம்விபரீ தம்விகடம் 
வேற்றுமைமா றன்னியம்பின் னம்விகிர்த மேற்றிரிவு 
மாற்றம்விரூ பம்விகற்பம் வேறாங் கயங்கீழ்மை 
யாற்பணம்பி ரீதியற்பு தம்
** 645

#43
ஊதியம்வி ருத்திபிர யோசனமி லாபம்வியன் 
வாதையில்ப யப்பதியம் வட்டிபலன் மாதகவு 
செப்பநடு நிற்றல்விறு தாவீதா வம்பவங்கொன் 
மெய்ப்பயனி லாமையிவை வீண்
** 646

#44
கைதவம் பட்டிமைமா யஞ்சாட் டியநடலை 
குய்யம்வஞ்சங் குத்திரங்கூ டங்குடில மொய்கபடம் 
வல்லபுள்ளு வஞ்சூது வஞ்சளையும் வஞ்சகமுட் 
டில்லாமை தாராள மே
** 647

#45
மானந்தம் மேன்மைகுன்றா வன்மையா நாமமபி 
தானம்பேர் சாபல்லி யஞ்சபல மானசித்தி
பேசுநிறை வேற்றந் தெளிவுபிர சன்னநிருத் 
தாசன மேவிமரி சம்
** 648

#46
முத்திரையி லச்சினையி லிங்கமிலக் குக்குறியா 
மத்தெளித்தல் தேற்ற லுணர்த்துதல்போ தித்தலுப 
தேசந் தெருட்டலுமா மோர்தல்குறிக் கோடுணிவு 
தேசார் கடைப்பிடிதேற் றம்
** 649

#47
குச்சிதம்ப யிர்ப்பருவ ருப்பாஞ் சடைவுகத்து 
வைச்சவந்தி மோடி வலித்தல்கட்டி மெச்சுறுதி 
வற்புறுத்த லாஞ்சும்மா வாளாகே ளாமூக 
நற்பேசா மோனமவு னம்
** 650

#48
கொள்கை மதமபிப்பி ராயஞ் சமையமுமா 
முள்ளொருமை தோட்டிமையு மொற்றுமையாங் குள்ளம்வண்டு 
செய்யிடும்பு சண்டங் கராளம்வம்புஞ் சிற்றொழுக்கங் 
கையடைய டைக்கலப்பேர் காண்
** மனக் குணவர்க்க முற்றும் 
** குண நாமப் படலம் 

@42 உயிர்ப்பொருள் 2 வாக்குக் குணவர்க்கம்
** 651

#1
சொல்பறைகீர் வாணிககை தோல்வசனங் காதைபனு 
வல்பதந்தீர்ப் புக்கிளவி வாக்குமொழி நல்வார்த்தை 
கூற்றுநொடி செப்புக் குயிலுரையி யம்பேச்சு 
மாற்றமிசை வாக்கியமு மாம்
** 652

#2
உரைத்தல்லிளம் பல்புகறல் ஓதல்செப்ப லாடல் 
விரித்தலறை தல்கதைத்தல் விள்ளல் தெரித்தல்பன்ன 
லேற்றியம்பல் பேச லிசைத்தல்பகர் தன்னுவறல் 
சாற்றல் ஈவிற்றல்மொழி தல்
** 653

#3
கூறனொடித் தல்மிழற்றல் தீர்த்தல் குயிதல்சொற்ற 
லூறுசொல லாமீ துரைபலகாற் கூறல்துதி 
வாழ்த்தல்மெச்சல் போற்றல்வழுத் தல்பரசல் தோத்திரமே 
யேத்தல்பழிச் சல்பரவ லென்
** 654

#4
வாசகமும் பாசுரமும் வக்கணையா மாசில்வாழ்த் 
தாசிடைதிட் டல்பல்பரி யாசநிந்தை சீசிஏஎ
யேச்சுவர்ப்பி கழ்ச்சிபழிப் பெள்ளல்வைதல் கவ்வையலர் 
தூச்சிறுசொ லேயினிதீச் சொல்
** 655

#5
மெய்சரத மாணையுண்மை சத்தியம்வே ளாண்மைநிலை 
வைசாதந் தீர்க்கம்நிசம் வாய்மைதிடஞ் செய்பரம 
நிச்சயமாம் பொய்பழுது நீள்பிசிவ லற்கார 
மிச்சைசடம் பேடுபொக்க மே
** 656

#6
கொண்டியங்குஞ் சந்தொடுப்புக் கோள்பிசினஞ் சாடிகுற 
ளண்டுகொடு வாய்புறங்கூற் றாம்பாடை யொண்டிசைச்சொற்
றேசிகங்க டாவுசா வாம்வினாச் செப்பெதிர்ச்சொ 
லேசில்விடை யுத்தரமி றுப்பு
** 657

#7
ஆரியஞ் சங்கிருத மண்டர்சொற்பி ராகிருதஞ் 
சீர்வடசொ லாங்கிரந்தந் தென்சொல்தமிழ் ஓருந் 
திராவிடமாம் யாப்புத்தூக் குக்கவிதை செய்யுள் 
பராவுகவி பாத்தொடரும் பாட்டு
** 658

#8
வெள்ளைமுற்பா வெண்பா வியனகவ லாசிரியங் 
கொள்ளுங் கலிமுரற்பாக் கூன்றனிச்சொற் றுள்ளு 
மசையடியம் போதாரங்க மாமுடுக ராக 
மிசைசுரித கங்கலிப்பா வீறு
** 659

#9
எண்ணாங் கணக்கெழுத்தி லக்கணம்வி யாகரணந் 
திண்ணியலு மாஞ்சோசி யங்கரண மெண்கணிதஞ் 
சோதிடமாம் வாகடஞ்சந் தோபிசிதி யாயுண்மறை 
யாதல் வயித்தியநூ லாம்
** 660

#10
சாத்திரமங் கம்பிடகந் தந்திரந்தந் தாரிடநூல் 
யேத்திலக்கி யம்பனுவ லேசமையஞ் சூத்திரமா 
நொய்தாக மஞ்சிறப்பு நூலோ டனாதிநூல் 
ஐதுமனுக் குய்யமந்தி ரம்
** 661

#11
மந்திரத்தி னெண்ணுருவா முச்சரித்தல் மந்திரத்தைச் 
சிந்தைசெய்தல் மந்திரத்தைச் செப்பல்செப முந்தியொன்றை 
யோர்பொருட்டாற் சொல்லியதை யோர்பொருட்டாற் பின்னும்வைகத்தல் 
சோர்விலனு வாதமெனச் சொல் 
** 662

#12
ஆதிநூல் சாகையிருக் காரணமோத் துச்சுருதி 
கேதுபொது நூலெழுதாக் கேள்விமறை வேதமதின் 
பாகைகன்ம ஞானமத்தம் வைதிகமப் பாதைபொரு 
ளாகு முபநிடத மாங்கு
** 663

#13
தோன்றிருக்குப் பெளடிகமுன் வேதமிரண் டாஞ்சுருதி 
சான்ற வெசுருத் தயித்திரிய மூன்றுதாத் 
தானுதாத் தஞ்சாம நான்கதர்வ ணந்தலைச்சொல் 
வான்குடிலை யேபிரண வம்
** 664

#14
இலம்பகம்ப ரிச்சேத மேற்றவத்தி யாயங்
கலந்கசருக் கம்படலங் காண்டஞ் சொலும்படலத் 
துன்னல்வியாக் யானமுரை சொற்பொழிப்புப் பிண்டமா 
மன்னுவயஞ் சொற்கூட்ட லாம் 
** 665

#15
இன்மைபிறி தேற்றமறை யாக்கும்வட சொன்முன்வரும் 
அந்நநநி குவ்விமுன றைந்தபொருட் பின்னும்வைத்தல் 
சோர்புனருத் தம்படலஞ் சூழ்பல் லினக்கூட்டா 
மோரினக்கூட் டோத்தென் றுண 
** 666

#16
ஆய்பதிக நாந்தி யணிந்துரை நூன்முகஞ் 
சாய்வில் முகவுரையுந் தந்துரையும் பாயிரமா 
மொப்பெடுத்துக் காட்டிதியா சத்தோ டுபகரணம் 
வெப்பி லுதாரணமா மே
** 667

#17
கோதில்சகு னம்விரிச்சி கோள்குறிவாய்ப் புள்நிமித்த
மூதுரைபு ராண முதுசொல்கதை வாதுபிர 
மாணம்வஞ்சி னம்விரதஞ் சூள்சபத மொட்டல்வட்டிப் 
பாணைபந்த யஞ்சத்தி யம்
** 668

#18
தற்புகழ்ச்சி தர்ப்ப நெடுமொழிவி னாவிடையாய்ச் 
செப்பல்சல்லா பம்பிரத்தா பம்பிரசங் கப்பேர்சொல் 
லொன்றே யலட்டல்பிதற் றாமுகமன் சன்மான் 
மென்சொலுப சாரநய மே
** 669

#19
கொஞ்சல் மிழலையுல்லா பங்குதலை யேமழலை 
யஞ்சுழற லேகுழற லாம்வழுச்சொல் மிஞ்சுபுகழ் 
கீர்த்திபிர தாபமொளி கேள்பிரப லந்தோற்றஞ் 
சீர்த்தி சுவேதமிசை சீர்
** 670

#20
ஏற்றங் கியாதமெய்ப்பா டாமுறுதிச் சொற்கழற 
லேற்றிடிப்பாங் கூகனமி டக்கர்மறைக் கூற்றா 
மழைத்தலிகுத் தல்கரைதல் கேத லகவல் 
விளிப்பா கருடணங்கூ வல்
** 671

#21
அன்னோவந் தோஆஓ அக்கோவை யோவம்மோ 
என்னெற் றிரக்கச்சொ லோம்படையே பின்வேண்டல் 
தர்க்கம்வா தங்குதர்க்கந் தான்விதண்டை ஞாயச்சொல் 
வைக்கும்விவ காரம்வழக் கு
** 672

#22
அத்தம் பயன்றாற் பரியம் பொருளாம 
னத்தமது வின்மைபிசி நற்பொருள்வா சித்தல்படிப் 
போதலத்தி யான முயற்ரவ ணங்கேள்வி 
வாதமர்க்க ழைப்பறைகூ வல்
** 673

#23
வன்னம் பொறியிலிகி தங்கணக்கி லேகைவரி
தன்மை யிலிபியெழுத் தக்கரமாம் பின்னகர
னக்கரங்கா ரங்கானச் சாரியைநற் றீர்க்கம்விலங்
கக்கோ டெழுத்தினுறுப் பாம்
** 674

#24
ஆவிசுர மச்சிருசு வங்குறிலாந் தீர்க்கநெடி 
லோவில்புள்ளி மெய்புலுத மொற்றாய்த மேவுதனி 
யக்கேனம் புள்ளியவ்வி வுச்சுட்டாம் யார்யாதோ 
எக்கொலெவன் யாவென்வினா வீறு
** 675

#25
நேரெதிர்தூக் கன்ன நிகர்மலைவாங் கேய்விணைவீ 
ழேர்படிச மந்தகைபோ லின்னகடுப் போர்துணைகே 
ழொப்பனைதல் மானல்கதழ் வெள்ளலுறழ் துல்யமிகல் 
நற்புரைவத் தற்றுவமா னம்
** 676

#26
சின்குரையோ ரும்பிறமா திட்டிருந்தாந் தாந்தானை 
யென்பிறக்க ரோகாபோ வென்பமதி பன்றிகுமால் 
யாவசைமி யாமாள யாழவத்தை வாழிமதி 
மோவிகவீ முன்னிலைய சை
** 677

#27
என்றெனவோ தஞ்சமன்கொ னெற்றந்தி லாங்கொடுமா 
மன்றதில்கொ லந்தெய்ய மற்றும்மெனா வென்றாவே 
மின்னுபொருள் கொள்ளிடைச்சொல் வேற்றுமைப்பே ரையால்குவ் 
வின்னது கண்விளியென் றெட்டு
** 678

#28
வல்லிசையெச் சுச்சமந்த மந்திரங் காகுளிதக் 
கல்லமைத்தி மம்பஞ்ச மங்கானஞ் சொல்வரிபாண் 
கேயம்வன்னங் கந்திருவங் கீதமிரா கங்கொளைபாட் 
டேய்மனிபண் காமரமி சை
** 679

#29
ஏழிசைகு ரற்றுத்த மின்கைக் கிளையுழையே 
தாழ்வி லிளிவிளரி தாரமவை யாழ்மிடறு 
நாக்கண்ணஞ் சென்னிநுதல் நெஞ்சுமூக் கிற்பிறக்கு 
நீக்கக் கரமேழ் நெடில்
** 680

#30
சேர்நான்கு நான்குமூன் றோரிரண்டு நான்குமூன் 
றோரிரண்டா மாத்திரைவண் டொண்கிளிமா வாரணமே 
தேரைபசு வாடொலிபால் தேன்கணெய்யே லங்கதலி 
தூர்மா துளமேழ் சுவை
** 681

#31
மவ்வல்முல்லை நீபம்வஞ்சி நெய்தல்மகிழ் புன்னைமணம் 
அவ்விசுவா மித்ரனிம னங்கிதிங்கள் வெவ்வருக்கன் 
கோதமன் காசிபனேழ் கோவிசைக்காம் யாழினிசை 
யேதமி லாத்திறனெ ழால்
** 682

#32
கோசனையி யந்துழனி கோடணைமு ழக்கோதை 
பூசல்சகளன் சும்மை புலம்பல்சத்த மோசைதொனி 
யாரவா ரஞ்சுருதி யார்ப்பிசை யாகுலம்பா 
டோர்வெகுளி நாத முரை
** 683

#33
இரைத லுலம்ப லிரட்டல் சிரற்றல் 
குரைசிலைப்பி யம்பல் குமுறல் முரல 
லலம்பல் கனைத்த லரற்ற லழுங்கல் 
சிலம்பல் துவைக்தல்தெளிப் பு
** 684

#34
குமிறல் திமிலங் குமிலந் தெவிட்டல் 
பிளிறல் நரலல் பிரற்றல் உளர்தலே 
கோலா கலமே கொழித்தல் குமுதமுக்கல் 
மேலா மருமரஞ்ச மே
** 685

#35
கம்பலைசி லும்பல் கலகம் பயிர்ப்புரற்றல் 
பம்பு தமரம் படுதல்விம்மல் வெம்பரவங் 
காய்கதித்த லேங்கல் கலித்த லுழைத்தலிடி 
யோய்குரு மித்த லொலி
** 686

#36
இம்மெனல் ஞெரேல்விண் ணிழுஞ்சிலீர் திண்ணென்றல் 
பொம்மெனல்க ணீர்திடீர் பொள்ளென்றால் அம்மெனலே 
மெல்லெனல்கல் லென்றல் விரீர்பளீ ரென்னல்முத 
லல்லி னனுகரணத் தார்ப்பு
** 687

#37
படபடென்ற லன்றிப் பகபகென்ற லோடு 
தடதடென்ற லேசளச ளென்றல் மடமடென்றல் 
வன்றிடுதி டென்றல் வழுவழென் றல்கொழுகொ 
ழென்றல்முத லாம்விரைவோ சை
** 688

#38
மிருகவொலி புள்ளினொலி வீரிடுதல் கூவல் 
கரைதல்கத்தல் கூப்பிடல்க னைத்தல் குரைத்தலுமா 
மச்சவொலி கத்தலத றல்கதற லுங்கார 
மெச்சுரப்புத் தாக்கதட்டா மே
** வாக்குக் குணவர்க்க முற்றும் 
** குண நாமப்படலம் 

@43 உயிர்ப்பொருள் செயற்குண வர்க்கம் 
** 689

#1
காரியந்தொ ழிற்காமி யங்கிருத்தி யங்கிரியை 
காரகங்கன் மங்கருமம் வேலைவினை யோர்செயலா 
மாற்றலிழைத் தல்குயிற்றல் பண்ணலயர் தல்வனைதல் 
சாற்றியற்றல் செய்தல்புரி தல் 
** 690

#2
உற்பவம்ப வஞ்சனிப்புற் பத்திசென்ம மேசெனனஞ் 
சொற்பிரச வம்பிறப்புத் தோற்றமுமா மிப்பிறப்பே 
யிம்மையும்மை போம்பிறப்பி னிப்பிறப்ப தேமறுமை 
யம்மையெம்மை யெப்பிறப்பு மாம் 
** 691

#3
கற்பிகம்ப டைடப்புநின்மி தஞ்சிருட்டி யாக்கல்பிறப் 
பிப்புவிதி யாந்திதியின் பேரளித்தல் அப்புரத்தல் 
ஓதிரக்கை காத்த லுடனிறுத்த னோக்கலுமாங் 
காதரம்வி னைத்தொடர்ச்சி காண் 
** 692

#4
ஊறணங்கெ ருக்கலொழித் தல்சங்கா ரம்படுத்தல் 
கோறன்முருக் கல்சவட்டல் சாடலடல் நூறலெற்றல் 
வீட்டல்வதை காதுதல்செ குத்தல்கொலை நிக்கிரகம் 
நாட்டுமுடித் தன்மார ணம் 
** 693

#5
பாரணஞ்சாப் பாடயிறல் பக்கித்தல் மாந்தறின்றல் 
ஆர்தல் நுகர்டலமுதுசெங்தல் சேர்மிசைத்தல் 
கைதொடல சித்தல் பொசித்த லருந்தறுய்த்தல் 
எய்துதுவ்வல் கொள்ளலுண்ட லே
** 694

#6
உபவாசம் பட்டினியி லங்கனந்துவ் வாமை 
யுபோடிதமாஞ் சாகரந்தூங் காமை தபுபடுதல் 
வண்பள்ளி நித்திரைவ ளர்ச்சிதுஞ்சல் தூங்கறுயில் 
கண்படைய னந்தருறக் கம்
** 695

#7
எழுப்ப லுணர்த்துதலா மீலனமி மைத்தல் 
விழிப்பூற்றல் வார்த்தல் வடித்த லொழுக்கல்விடல் 
பானம் பருகல் குடித்தல்சொற்ப னங்கனவா 
மானநன வேசகல மாம்
** 696

#8
காரணங் காரியமி ரண்டவத்தை காரணக்தின் 
பேர்சகலங் கேவலம்பி ரேரகமே யோர்சுத்தங் 
காரியஞ் சாக்கிரங்க னாச்சுழுத்தி யேதுரிய 
மார்துரியா தீதமென வைந்து
** 697

#9
கருவியெலாஞ் சார்தல் கனிசகல மாகுங் 
கருவிகுன்றல் கேவலமாங் குன்றுங் கருவியருள் 
கூட்டுதல்பி ரேரகமாங் கூர்கருவி பொய்யெனக்கண் 
டோட்டுவதே சுத்கமென வோர்
** 698

#10
சாக்கிரம ருட்காட்சி தங்குகனாப் பொய்க்காட்சி 
யாக்கு புலனடங்க லாஞ்சுழுத்தி காக்கு 
மனமடங்க லாந்துரியம் வாயு வடங்கத் 
தனியுயிரே நிற்றலதீ தம்
** 699

#11
காரணங்க ணான்கவற்றின் காரியநா லைந்தாக 
ஈரவத்தை யெண்மூன்றைந் தைந்தாகப் பேர்கள்நடு 
வாமவத்தை கீழவத்தை மேலவத்தை நின்மலமென் 
றாமவக்தை யாங்காரி யம்
** 700

#12
மீறவத்தை பற்றுமொன்றை விட்டொன்றைப் பற்றுதலாம் 
வேறில் பிரேறகஞ்செய் வித்தலாங் கூரகைத்த 
லூர்தலெய்த லுய்த்தலுகைப் போட்டல்நட வல்கடவல் 
சார்செலுக்தல் தூண்டல்நடாத் தல்
** 701

#13
கேளியொப்பி லீலைபொய்த லோரை கிரீடைபண்ணை 
வீழுங் கெடவரல்வி லாசனையே சூழ்தொடலை 
வண்டல்விளை யாடல்குலா மெச்சல்வினோ தம்பாராட் 
டண்பொழுது போக்கல்கொண்டாட் டாம்
** 702

#14
மன்றல்விவா கந்தீ வலஞ்செயல்கைப் பற்றல்வரை 
வன்றிமணம் வேட்டல்கல்யா ணம்வதுவை யென்பவிழா 
உச்சவந்து ணங்கறல்சே றோர்முருகு சாறுமாங் 
கைச்சிடா நுங்கல்விழுங் கல்
** 703

#15
வேள்வியுப காரம்வண்மை விசலுத வல்வழங்கல் 
நீள்விதர ணங்கவிகை நீட்டலிட லாளருளல் 
தானம்வே ளாண்மையுதா ரந்தரல்வள் ளன்மையளிப் 
பான்விர வீகைகொடை யாம்
** 704

#16
பெய்தல்வரு டித்தல்சொரி வெக்கல்பொழி தல்வேண்டல் 
கொய்வாங்க லேற்றல்ககோள் கோடல்கொள்ளல் கைவரையா 
தீகை கொடைமடமீ யாமைலுத் தம்பிசினம் 
வாகி லுலோபமிவ றல்
** 705

#17
காவல்கடி காப்பேமஞ் சேமமரண் வேலிகட்டி 
பாவுகடத வாமோம்பல் பாதுகாப் போவில்பிச்சை 
பிண்டமையம் பாகம் பிடிகம் பலிசரிதை 
யண்டிரப்பு டன்பயிக்க மாம்
** 706

#18
ஆரா தனைவழிபா டர்ச்சனையு வாசனையும் 
சீராரும் பூசளையாந் தெண்டனமக் காரம் 
வணங்கல்பணி தாழ்விறைஞ்சல் வந்தனைவந் தித்தல் 
குணங்க லொழுங்கறுத லாம்
** 707

#19
வாயில்சந்து தூதாம்வே யொற்றுலறலவ லாம்வழங்க 
லாய்தொழல்கை கூப்பல்கும்பா டஞ்சலியாம் பாய்வேள்வி 
யெச்சங் கிருதோமம் யாகமிட்டி யூபமகம் 
அச்சினிணுங் கல்கொய்த லாம்
** 708

#20
தொண்டுபரி சாரந் தொழும்புநிமந் தஞ்சபரி 
கண்டபணி யாம்வரலா கந்துகமா முண்டதறல் 
சீரணஞ்செ ரித்தல்செரி யாமையபி வாசனம
சீரணங்கு ருத்துவமுஞ் செப்பு
** 709

#21
காட்சி தெரிசினைநோக் கம்பார்வை காண்டல்கண்ணல் 
மீட்சிவக்கி ரந்திரும்பல் மீளலா மேச்சில் 
சிறக்கணிப்ப பாங்கங் கடைக்கணிப்பாஞ் சீய்த்த 
லறப்பெருக்கல் தூர்த்தல்நுடைப் பாம்
** 710

#22
பம்முதல்மூ சல்கவித்தல் மூடல்பரப் பூழ்த்தலுமாந் 
தும்மலின்பேர் மூச்சுச் சுவாசமாம் விம்மலின்பே 
ருப்பல்பொரு மல்புடைத்த லூதுதல் வீங்கலுமாம் 
துப்பலுமிழ் வேகாறல் சொல்
** 711

#23
கூம்பாச்சி ரம்பணமா வித்தலுங்கொட் டாவியங்காப் 
பாம்பேரே வாய்பிளத்தல் மூரிநெட்டி சோம்பாம் 
விரியல் பரப்பல் விளம்பல்பா ரித்தல் 
பரிமாற்ற மும்படைத்த லாம்
** 712

#24
புல்லல் கிரீடை புணர்ச்சிகூட் டங்கலவி 
வல்லவிழை வாடல்சங்க மைதுனமாம் சொல்புலவி 
யூடல்துனி யத்தீர்ப் புணர்த்தலாந் தேய்த்தல்சிதைப் 
போடுரைப்பு ரிஞ்சலுரோ சல்
** 713

#25
ஆலிங்க னந்தழுவல் விள்ளல் முயங்கலுமாம் 
மேலிரங்க லேங்க லினைவழுங்கல் நாலல்தொங்கல் 
தூங்கலா நாற்றுதல்தூக் கற்பேர் சுமத்தல்பரி 
தாங்குதல்டத ரித்தல்பொறுத் தல்
** 714

#26
பூசல் வரித்தல் புலர்த்தலங்க ராகமுமாம் 
பூசல்மண்ணல் வேய்தல்புனை தல்வனைதல் வீசணிதல் 
ஓப்பனைகை செய்த லலங்கரித்த லாஞ்செருகல் 
கப்பிலடைச் சல்சொரு கல்
** 715

#27
வளைத்தல்வளா கம்வலத்தல் சூழ்தல்சுற்றல் பாதீ 
டளித்தல்மடுத் தல்செறிக்தல் பெய்தல் தளிர்த்தல் 
சிலிர்த்தல் கிளைத்தல் துளிர்த்தலாஞ் சூட்டல் 
மிலைச்சல் தரித்தல்மலை வே
** 716

#28
பற்றல்பிடி மூளல்ததொட லூறுபரி சந்துவளல் 
சொற்றிவள லாந்தேடல் நேடல்துரு நற்றேர்தல் 
கையரிக்கோள் நாடலாய் வாமபகா ரங்கவர்தல் 
கொய்வளைத்தல் வாரல்வவ்வல் கோள்
** 717

#29
சாவிறப்ப வன்றல்விளி தல்முடித றுஞ்சன்முஞ்சன் 
மாய்விலைய மாளல் மரித்தல்விழல் வீவடைதல் 
போக்குமிரு தந்தபுதல் பொன்றல்நசித் தல்மரண 
மாக்கமுக்கற் பேர்ஞெமுங்க லாம்
** 718

#30
சமர்சமிகம் பூசல்செரு சங்கிராமந் தீய்த்த 
லமருடன்றல் போர்மறனா யோதம் சமமலைதல் 
மொய்யிகனஞாட் பாகவமு ரண்பொருதல் சல்லிகநே 
ரெய்யிரணமுஞ் சண்டையுத்த மே
** 719

#31
முட்டலெற்றல் தாக்கல் முடுகலெதிர்க் தல்கிடைத்தல் 
கிட்டல் தலைப்படலாங் கீழ்ப்பகையூ ரட்டல்வள்ளை 
சார்ந்திடில டாமை தழிஞ்சிகொள்ளை கொண்டிசூறை 
பாந்தலொடுந் கம்பதுக்கொ துக்கு
** 720

#32
உடைவிரிதல் சாய்தல்சரி வோட்ட நெரித 
லிடைதல்கெடல் தோற்பா மிறுதல் ஒடிதல் 
முரித லொசிதல் முசித லிடிதல் 
பரிதல் ஞெமிர்தல்முறி வு
** 721

#33
எற்றலறை மோதலடித் தற்பே ரெறிதலெற்றல் 
குற்றல்புடைப் பேதகர்த்தல் குட்டுதலா நிற்றல்நிலை 
நின்றிடற்பே ராங்கசித நீடழுத்த லாம்பதித்தல் 
கொன்று குவிப்பதுநூ ழில்
** 722

#34
நட்டநடை வாணிநட னந்தாண் டவநிருத்தம் 
நட்டணைதூக் குப்படிக நாட்டியமே யொட்டுகண்ணுள் 
நாடகங்கூத் தாட்டுநட மாநடித்தல் தூங்கல்பெயர் 
வாடலசை வாலலக வல்
** 723

#35
கூர்பேடு மாரன் கொடுகொட்டி பாண்டரங்கம் 
காபால மீசர்கடை யஞ்சசிபொன் சேர்பாவை 
மல்லலலி யங்குடமால் வண்மரக்கால் துர்க்கைகுடை 
நல்லதுடி செவ்வேள் நடம்
** 724

#36
கைகோத்தா டல்குரவை கைகுவித்துக் கொட்டல்கொம்மை 
கைகூப்பி மெய்கோட்டல் காண்குடந்தஞ் செய்துணங்கை 
தோள்கொட்டல் குஞ்சிதங்கால் தூக்கிநிற்ற லாவலமே 
யாள்கையால் வாய்கொட்ட லாம்
** 725

#37
பிரமரிவீ ரட்டானம் பித்தமுள் ளாளம் 
புரிய மலைப்புக் காணம் பரதமுங்கூத் 
தின்விகற்பாந் தாளமொத்துச் சீரிலையம் பாணிசதி 
மன்னுபரு மித்தல்சிர மம்
** 726

#38
கொட்டிக்கை கூப்பல் குடம்வெறிக ழங்கணங்காம்
வட்டணைய டித்தலொற்றல் வட்டித்தல் கொட்டல்தட்டல் 
துவ்வனுப வம்விடையம் போகந்துப் பைவழியூண் 
அவ்விசுவா சஞ்சிரத்தை யாம்
** 727

#39
ஆற்றுப் படைதான் வழியெதிர்த்த லாம்விலக்கல் 
மாற்றல்மறை தட்டல்காப் பாமறுத்த லாற்றறுத்த 
லுள்வலிய ழித்தலுழக் கல்குழப்ப லாங்கொழித்தல் 
தெள்ளல் வரன்றல்தெளிக் தல்
** 728

#40
தீட்டல்வரித் தல்பொறித்தல் கீறல்தெரித் தல்வரைதல் 
மாட்டி னெழுனுதுதலா மாட்டல்பொத்தல் மூட்டலா 
முண்டிதஞ்சி ரைத்தல்மழித் தல்வப னஞ்சவுரஞ் 
சுண்டல் தெறித்தலுமீட் டல்
** 729

#41
தட்டல்சிறை வாரணந்த டுத்தல்தகை வாந்தடைப்பேர் 
கட்டல்குற்ற லாங்களைதல் கட்டல்கள்ளல் பட்டிதிருட் 
டுப்படிற சோர்வுகரப் புக்கரவ டங்களவாந் 
தைப்பேபொல் லந்துன்னம் யாத்து 
** 730

#42
மூரலிளி யாச முறுவ னகைசிரித்தற் 
பேரசிநிந் தைச்சிரிப்பி றங்கலவ தாரமவ 
ரோணஞ் சுதமிழிவா மோத்த லுயிர்ப்பாக்கி 
ராண மிளக்கநெகிழ் வாம்
** 731

#43
ஏறலா ரோணமா ரூடமீக் கோளிவர்தல் 
சேறல் கழிதல் செலவேகல் கூறிறப்புப் 
போகலா மூறல் பொசிதல்கடி தல்சுரத்த 
லாகும் பழுத்தல்கனி வாம்
** 732

#44
ஓடலின்பேர் பாற லுடனிமிர்க னீளலுநே 
ரோடலின்பே ராதியும் வீதியுமா வோடல்சுற்று 
வாளிமண்டி லஞ்சாரி கைமாதி யாஞ்சூழல் 
தோளல் குயிறல்துளைத் தல் 
** 733

#45
நடைகதிசஞ் சாரம் வியாமஞ் சரித்தல் 
படர்தல் நடத்தல்தண்டல் பற்ற லிடல்போடல் 
கொட்டல் விடைத்தல்வெளிக் கோளலைத லாஞ்சிஞொள்க 
லொட்டெறிதல் வீசுதலோச் சல் 
** 734

#46
மடக்கநொறில் குத்தியப வாதஞ் சமாதி 
முடக்கமுத்தி யாபனமு ணங்கே யொடுக்க 
மடக்கமா மாக்க லடுதல் சமைத்தல் 
வடித்தல்பா கம்புரிவ தாம் 
** 735

#47
தாழ்த லிறுத்தலல்கல் தங்கல்வசித் தல்வைகல் 
வாழ்வதித லோடமர்த லாமிருத்தல் வீழ்தல் 
விழலவைத்தல் குற்றுதலாம் விம்மல் கலுழ்த 
லழல்கரைவு ரோதனமு மாம்
** 736

#48
இசைதலொட்டல் கோத்தல்புணர் வேலலியை வாகு 
மசைதல் சொரிய லளைச லொசியியங்கல் 
பாழல் துயல்வரலாம் பன்னுமுவ னித்தலுப 
லாளனமுந் தூய்மைசெய்த லாம்
** 737

#49
ஆரோபங் கற்பிதமத் யாசமொன்றொன் றாய்த்தோன்றல்
வேர்வை கசிவுசுவே தம்வெயர்வா மோர்களித்தல் 
கட்குடித்தல் பீச்சல் கறத்தலகழ் தல்கிளைத்தல் 
தொட்டல்கொத்தல் நெண்டலுந்தோண் டல்
** 738

#50
சிதர்த்த லுகுத்தல் சிதந்தலே யூழ்க்தல்
துதிசிதறல் தூற்றலிவை தூவல் நொதுத்தல் 
நதுத்த லவித்தல் நவித்தலுமாம் வேதல் 
கதுவாய் வடுப்படல்கா யம்
** 739

#51
நண்ணலொன்றல் தோய்தல் நணுக லணவலெய்தல் 
அண்ண லடுத்த லமைதலொட்ட லொண்ணலண்டல் 
அல்க லணுக லடைதல்கெழு மல்புல்ல 
லொல்லன் மருவ லுறல்
** 740

#52
சேர்தலணை தல்சிவணல் தட்டல்கூ டல்கிட்டல் 
சார்தல் பொருந்துதலாந் தண்டலுடன் சோர்வகற்சி 
நீங்கல்தணப் புத்துறத்தல் நீப்பொருவ லானல்வல்லி 
தாங்கிகத்தல் மாறல்பிரி தல்
** 741

#53
பாகம்பாத் துக்கூறு பங்குபால் பாதீடென் 
றாகல்பகுத தற்பே ரருமைசெய்தல் வாகுறுபே 
ராண்மைவிப சாயங் கிருசிவே ளாண்மையூ 
ராண்மையோங் கிச்செயலே யாம்
** 742

#54
உத்தியோ கந்தா ளுழைப்பூக்க முற்சாக 
மெத்தன முயற்சியுஞற் றாள்வினையாங் கொத்துழவு 
தொய்யிலா மோப்பல்பற்ற லுச்சாட னந்துரத்த 
லொய்யெனமு டுக்குதலோட் டல்
** 743

#55
வாணிபம்வ்யா பாரம்வணி கஞ்செட்டுக் கச்சவடம் 
பேணரைத்தல் பிட்டுவம்பி ழைத்தலுய்தல் காண்வழுக்க 
லாளிசும்பா மண்ண லலம்பல் கழுவல்பிரச் 
சாளனம்நொ றுக்கல்தகர்த் தல்
** 744

#56
தப்பல்துவைத் தற்பேர்தா பித்தல்நிறுத் தற்பேராங் 
குப்புறல்மி தித்தல் குதித்தலே செப்புகள்தல் 
மோத லுறுக்கலிவை பாய்தலாஞ் சீவலுடன் 
கோதல் சிணுக்கறுத்த லாம்
** 745

#57
பற்றா ருடுகுறைப்பேர் பாகுடங்கப் பந்திறையாம் 
மற்ற சுங்கஞ் சாரிகையுல் காயமா முற்றுங் 
கடன்வரியி றுப்புக் காம்பகுதி தீர்வை 
குடியிறை யாங்கறையுங் கூறு
** 746

#58
படுதல் குருத்தல் பரிணமித்தல் நாறல் 
தொடுமுதித்த லேமுளைத்தல் தோற்றல் பொடித்தலுடன் 
அங்குரித்த லுண்டாத லாம்பிர திக்கினைப் பேர் 
சங்கற்பம் பூட்கைமேற் கோள்
** 747

#59
தெற்றல் பிழைத்தல் திறம்பல்தப்பல் மாற்றமிடல் 
முற்றல் முரஞ்சல் முதிர்வாகு நற்றாண்டல் 
தாவல்வா வல்கழித்தல் சாடல்தத்த லுங்கடத்தல் 
ஏவலின் பேர்வியங்கோ ளே
** 748

#60
தற்ற லிறுக்கல்தடு மாறல் பிறழ்தல்கட்ட 
லொற்ற லுடுத்தல்லிலை மாறலகம் விற்றல் 
நொடைபகர்தல் நோன்பியற்றல் நோற்றல் ஞெலிதல் 
கடைதல் மதித்தலுமாங் காண்
** 749

#61
பிரமரிம றுக்க லலம்வருதல் ஞொள்கல் 
தெருமரல்கொட் பாவிரதஞ் சூர்த்தல் திரிதல் 
சுழலுதலா மேளத் தொழிலியக்க லாகு 
மழைநீங் கிடுதல்வெறி வாம்
** 750

#62
திமிறல் பிசைதல் திருகல் திருமல் 
நிமிறல் தெறுத்தல் நெரித்த லுமிழ்தல்பில்கல் 
கொப்பிளித்தல் காலல் பிலிற்றலுமாம் யாத்திரையும் 
அப்பயண மும்புறப்பா டாம்
** 751

#63
சிகிற்சை பரிகாரஞ் சாந்திகுழை வொல்க 
லிகுத்தல் விரித்த லிடத்தல் வகிர்தல் 
சொலித்தல் துவர்கலுமாஞ் சொல்லுமதர் கோளா 
றலைத்கல் வழிப்பறித்த லாம்
** 752

#64
ஆர்த்தல் சிமிழ்த்கல் அணைத்தல் நியா சந்தொடுத்தல் 
யாத்தல் பிணித்தல்விசித் தல்பந்த மேத்தசைத்தல் 
வீக்கல்சஞ் சித்தலிவை கட்டுதலாந் தள்ளுதற்பேர் 
நூக்கலே நோன்றலூன் றல்
** 753

#65
மாய்தல்ஞெமிர் வாவரண மந்தணமி ராசியமே 
மாயைதிரோ தங்குடிலை மூடலிவை யோய்மறைப்பாங் 
காட மிறுகல்சொறி கண்டுதி யுந்தினவாஞ் 
சேடமுறுஞ் சம்பிரதஞ் சித்து
** 754

#66
தீர்தலொழி தல்கழிதல் மோசனம்வி ரோசனம்நி 
வாரணம்நி வர்த்திவிசர்க் கந்தவிர்தல் கூர்தொலைதல் 
மோக்கம் விடலா முடைதல்நிணத் தல்வலத்தல் 
ஆக்கிழுத்தற் பேரீர்த்த லாம்
** 755

#67
காய்வெரிவு சூடுவெம்பல் கன்றல்வெதும் பல்புகைதல் 
தீவுகரு கல்புழுங்கல் சேர்சுடலா மேவுகும்மல் 
துள்ளல்துடித் தற்பேர் தொடுத்தறுவக் கந்துடங்கல் 
கொள்பறித்தல் கத்திரித்தல் கொய்வு
** 756

#68
துண்டித்தல் வெட்டல் ல் துமித்த லுடன்றடிதல் 
கண்டித்த லேயெறித லாந்தறித்தல் திண்கொய்த 
லேதித்தல் சூலல்கொய்த லீர்தல்விடு வாயரிதல் 
சேதித்த லெட்டுமறுத் தல்
** 757

#69
சுண்டல்வறத் தlல்சுவறல் சோர்தல்வற்றல் காய்தலிஞ்ச 
லண்புலர்த லேமுளித்த லாமுலர்தல் மொண்டல்கொண்டல் 
கோதல் முகத்தல் குரங்கல்குனி வாம்போற்றி 
யாத லிடிக்குதற்பே ராம்
** 758

#70
வேதனையு லைத்தல் மிறைத்தலகைத் தல்வலித்தல் 
போதுவிடி தல்புலர் வாமுடன்பா டோதிணங்க 
னேர்வலித்த லொட்டல்சமை சம்மதஞ்சா மந்தடவற் 
பேர்வருடல் தைவரல்நீ வல்
** 759

#71
ஏர்பெழுச்சி பாய்ச்சல்பொலி வும்பல் கஞறலெழல் 
தூபிதஞ்சந் தாபஞ் சுடப்படுதல் கூர்பெறுதல் 
வாய்த்தல்பயத் தல்கிடைத்தல் கிட்டல்சொல்ல லீன்றலுமாம் 
பார்த்தகிடை யாமைதுல்ல பம்
** 760

#72
மூழ்குவித்த லாட்டலபி டேகமுழுக் கேநான 
மூழ்க லமிழ்ந்தல்முங்க லாம்படிதல் ஆழ்குளித்த 
லாடலுடன் றோய்தலுமாம் பொங்கல்கொதிப் பாமயர்தல் 
வாடல் தளருதல்சோர் வாம்
** 761

#73
தேம்பன் மெலிவிளைத்தல் கிரசஞ் சிரமஞொட்கல் 
நாம்பலுமாங் கூம்பல் முகிழித்தல் சாம்பல் 
குவிதல்விரி தன்மலர்தல் கூர்நெகிழ்தல் விள்ளல் 
அவிழ்தல்விக சித்தலலர் தல்
** 762

#74
மிச்சிரஞ்சங் கீரணஞ்ச மேதமளா வல்விரவல் 
சொற்சகிதங் கீலகந்து ழாவலசி மெச்சயிக்க 
நீள்கலம்ப கங்கலப்பா நேமம் பிரார்த்தனையும் 
வாழ்நியம நீட்டல்வளர்த் தல்
** 763

#75
பீறலே கீன்றல் பிளத்த லுடன்கீழல் 
கீறலே கீண்டல் கிழித்தலா மீறல் 
அதிகார மாதிபத்ய மேலீடு மிஞ்சல் 
அதிகரித்த லாணைசெலுத் தல்
** 764

#76
வருத்தல் நலிதல்வரு வித்தல் வரித்தல் 
திரித்தல்வே றாக்கல்முட்டல் தேக்கல் நிரப்பலுலாக் 
கூர்பவனி யாங்கொணர்தல் கொண்டெய்தல் வேகம்விசை 
தாரைகவ னங்கதிய தாம்
** 765

#77
பிறகிடல் பின்றல் பிறக்கிடலு மாநோ 
யறலயாவு யிர்ப்பா மடைத லுறுபுகுத 
லத்தமன மொன்றிலொன்றை யாக்கலா வாகனமாந் 
தத்துநுடக் கந்துவளு தல்
** உயிர்ப்பொருளின் செயற்குண வர்க்க முற்றும்

@44 உயிரில்பொருட் குணவர்க்கம்
** 766

#1
சில்லிகொம்மை கோளகைதட் டாழிவல யந்திகிரி 
மல்லம்விருத் தம்பருதி மண்டிலம்பாண் டில்கடகம் 
வக்கிரமே விந்துவத்து ளம்பா லிகைவட்டஞ் 
சக்கரமு நேமியும தாம்
** 767

#2
முண்டம்வட்டுச் சொக்குவிவு முத்தைபந்த மாழைகுவ 
வுண்டைபுஞ்சஞ் சேடுபிழம் போர்பூகம் பிண்டமெக்கல் 
கொம்மை கணையுருட்சி சோகந் திரட்சிதக 
டைமை யடர்ச்சமரி யாம்
** 768

#3
கூன்கோண் குலாவல் வளாவல்குடி லங்குரங்கல் 
வாங்கனுதல் கோட்டல் வணர்வளைவா மோங்கு 
நிரலொழுங்கு தாமமுறை பாந்தநிரை பந்தி 
வரிசையணி நேர்வார் வகுப்பு
** 769

#4
பருமை பிறங்கல் பருப்பீனம் பிட்டி 
விருடியம்ப ணம்பருத்தல் வேயே சுரிகுழறூம் 
பில்லிதுளை நாள மிரந்தரமோ டுத்தமர்கண் 
சொல்புரைபோ டோட்டைதுவா ரம்
** 770

#5
சங்கமவை குப்பைசமூ கஞ்சமட்டி யோகநிவ 
கங் குவையி ராசிகதம் பஞ்சவைகந் தங்கணந்தோ 
டாயநிகா யந்தொகைகூட் டந்தொகுதி கோட்டிசம 
வாயங் குழுத்திரள்கு வால்
** 771

#6
உன்னதமே டேற்றநிவப் புச்சமிசை யுத்துங்க 
மன்னல்புங்க பமேந்தல்கப்பு வார்நிமிர்வு சொன்ன புரை
யோங்கல்யோ கஞ்சிகரஞ் சேணுயர்ச்சி யாகுமொக்குள் 
பூங்குமிழ்கொப் புட்புளக மாம்
** 772

#7
கதழ்மலிகூர் பொங்கல்பெருக் கங்கழும லீட்ட 
மதமுறுத வப்பிறங்கல் சால விதப்புநனி 
பூரிப் பிறப்பமலை பூங்குசிறப் பான்றல்மிகல் 
பாரில்வெகு நானாப் பல
** 773

#8
மேன்பணைமோ டீடேந்தல் மீளிகெண்ய மாமுடலை 
கோன்பொழின்மா னங்குவவு வீறுதட வான்கருமை 
பாடுபக டண்ணல்செம்மை பாழிநளி மூரிகயம் 
பீடிருமை மால்பெருமைப் பேர்
** 774

#9
சாங்கநிகி லஞ்சகல முற்றனைத்த கண்டமுழு 
தாங்கடைய யாவுமகி லஞ்சமத்த மோங்கடங்கல் 
சொற்சருவ மெல்லாமாந் தோகமற்பம் புன்மைசின்மை 
சற்றாசொட் டிட்டிமைகொஞ் சம்
** 775

#10
பூரணம்ப ரந்திளைத்தல் மல்கல்விட்டு ணுத்துவன்ற 
லார்தல் வியாபகம்பி றங்கல்பெருக் கோர்நிறைவா 
மந்நிறைவின் மிச்சிரம்வி யாத்திவி யாப்பியந்தான் 
அந்நிறைவி லுள்ளடங்க லாம்
** 776

#11
ஈனமஃகல் சிங்கல்குன்ற லெஞ்சல்கிஞ்சந் தேய்வருக 
லூனநூ னஞ்சிறுக லல்கல்குறை வானதின்பேர் 
கோட்டங்கோ ணாரமச்சி ரஞ்சதுர நாற்கோணங் 
காட்டியந்தி ரஞ்சக் கரம்
** 777

#12
துன்னல்செறி கற்றைததை துற்றல்விர ளல்பொதுஎல் 
பன்னிரந்த ரந்திணுங்கல் பம்பல்மொய்த்தல் பின்னடர்தல் 
மிண்டல்சடி லந்துறுத்தல் துன்றல்மிடை வேநிபிடம் 
மண்டல்துதை வேநெருக்க மாம்
** 778

#13
நுண்மைநொசி வாய்வு நுழை நுட்ப நுணுகணுவாங் 
கண்ணறையா யாமம் வியலகற லெண்ணகல 
மாயமுமா நீளநெடில் நேர்நெடுமை சேண்கொடியோ 
டாயதமாஞ் சேண்சேய்தூ ரம்
** 779

#14
விரிவழுவந் தாவல்விசா லம்விபுல மல்லல் 
பரவைஞெமிர் பாப்பரப்பு பப்பா மிருகசெப்பம் 
செம்மைசெவ்வன் செவ்வைபரத் தல்படர்ச்சி யேபடலை 
யண்மைசமீ பங்கிட்ட வாம்
** 780

#15
குறிதுமுண்டு கூழைகட்டை குட்டையாந் தஞ்ச 
மறிசார்பு தாரகமா தாரஞ் செறியூற்றந் 
தூக்கந்து தண்டமும்பற் றுக்கோடாம் பொம்மல்பொற்புப் 
போக்கம்பூப் பொங்கல்பொலி வு
** 781

#16
வம்புவெறி நாற்றமரு மன்றல்நறை தேமணங்கந் 
தம்பரிம ளங்கமழ்வா சங்கடிகான் பம்புவிரை 
மோதவம்வ சந்தமுரு காமோதம் வாசனையாம் 
பூதி செடிதுர்க்கர் தம்
** 782

#17
தேசரிது லங்கல்கதிர் தீவிரநி லாத்தெளிசங் 
காசம் விளங்கல்பிர காசம்வெயி லோசநகை 
வாமமவிர் தல்பிறழ்தல் வாள்பிரபை காந்திகர 
நீமங் கிரணம் நிழல் 
** 783

#18
மின்னலி மைத்தல் மிளிர்தல் சுடர்வயங்க 
லுன்னு மிலக லொளிதயங்கல் பன்னிலங்கல் 
வெட்ட லொடித்தல் வெளிச்சந் திகழ்வெறித்தல் 
கட்டலங்கல் விற்சோதிக் காம்
** 784

#19
சாயல்குரு மேனிபுகர் சந்தமுரு வண்ணம்வரி 
யாய்வருணம் வன்னங்கே ழாகுநிறஞ் சாயைநிழல் 
வெண்மைசெம்மை யேகருமை மென்பசுமை பொன்மையென 
வண்ணமோ ரைந்தின் வகை
** 785

#20
வெள்ளைசுப்பி ரங்கவுரம் வெள்ளிவிளர் சுக்கிலமே
கொள்ளும்விசி தங்குருருகு கூர்குருத்துத் துள்ளும்வெண்மை 
பால்சிதஞ்சு வேதநரை பாண்டவதா ரந்தவளம் 
வால்வெளுப் பருச்சுனமு மாம்
** 786

#21
செக்கர்கிஞ்சு கஞ்சோணஞ் சேதரத்த மஞ்சிட்டம்
அக்குருதி பாடலம ராகஞ்சேய் மெய்க்குஞ் 
சிவப்பிரா கம்பூவல் சேப்பருணஞ் செம்மை 
நவிற்று முலோகிதமு நாட்டு
** 787

#22
மால்கருள்கா ளங்காரி மாக்கறைமா யங்கருமை 
நீலமிருள் காளகங்கார் நீடுமணி மேலசிதங் 
காளிமங்க ளங்கறுப்பாங் காண்புகர்கு ரால்கபில 
நீள்புன்மை புற்கெனுநி றம்
** 788

#23
பிங்கலம்பீ தம்பீத கம்மரித்தி ராபமொடு 
பொங்குபொன்மை யும்பசப்பும் பொன்னிறமாந் தங்குபச்சை 
பாசரிய ரித்தரிதம் பைசாம ளஞ்சாம 
மாசில் பசுமைநிற மாம்
** 789

#24
பஞ்சநிறத் திற்றிரிவு பட்டாற் பொதுநிறமாந் 
துஞ்சிச் சலியாது தோன்றிநிற்றல் மிஞ்சுதுரு 
வந்துவந் தாபரமா மற்றுள் ளதுசிறத்தல் 
கந்தமுறுங் கூர்ப்புக் கழிப்பு
** 790

#25
நவ்விபொற்ப லங்கார நன்கணங்கி லாவணம்பொன் 
செவ்விசந்த மஞ்சணியஞ் சேடெழில்பூ மெய்விடங்கங் 
காமருலோ லந்தொட்டி காரிகைவா மங்குழகு 
தாமமிரா மந்தசைகாந் தம்
** 791

#26
பத்திரம்வி சித்திரம்பாங் காரிகவின் மாமைவிந்தை 
சித்ரநலம் யாணர்மயந் தேசிகநோக் குத்தளிமம் 
சுந்தரம னோகரஞ்சொக் கேர்மாழை மாதர்வனப் 
பந்தமணி கோலமழ கு
** 792

#27
வன்மைமென்மை நொய்துகன மாறா வழுவழுப்பே 
மென்மையறுஞ் சர்ச்சரையே வெம்மைகுளிர் இன்னவெட்டு 
மூறா மினிமைகசப் புப்புத் துவர்ப்பெரிப்புத் 
தூறில்புளிப் பாறுஞ் சுவை
** 793

#28
திண்ணுரந்தா னங்கருமை மூரிமுடுக் கும்பல்திற 
லண்ணலெறுழ் மைந்தடலீ டாற்றல்துப்பெ ணொண்மதுகை 
மல்பலமொய்ம் பூக்கம்விறல் மானம்வயஞ் சத்துவந்தா 
மல்லல்வலி நோன்மிடல்வன் மை
** 794

#29
மென்மைசுகு மார மிருதுவா நொவ்விலகு 
நொய்மையிலே சாங்கனஞாட் புப்பாரம் விம்முபொறை 
சிற்குருச்சீ ராம்வழுவ ழுப்பே யிழுமெனலாஞ் 
சர்ச்சரையின் பேர்பிணர தாம்
** 795

#30
வெப்புருமங் காந்தல்வெம்மை வெய்தழல்தா பங்கடிது 
ருப்பமழ னங்கரும முட்டிணந்த ணப்புநளி 
சாந்தமழை சீதளஞ்சீ தஞ்சவுமி யம்பனிதண் 
ணேந்தளிகு ளிர்ச்சிசிசி ரம்
** 796

#31
ஆமுருசி சாரமிர தஞ்சுவையி னிப்பமுதந் 
தீமதுர மின்றமிழ்தித் திப்பிலவ மாமிலமு 
மப்புளிப்பின் பேர்கடா யந்துவர்ப்பா முப்புவர்ப்புக் 
கைப்புக் கசத்தறிக்தம் கைப்பு
** 797

#32
கரிற்கடுக முட்டிணாங்கா யங்காழ்ப் புறைப்பு 
மெரிப்பா மதிற்பேதங் காறல் விருவிருப்பா 
மெண்ணலெடுத் தன்முகத்த னீட்டலள வீரிரண்டா 
மெண்ணிலக்கந் தூக்கநிறை யே
** 798

#33
முந்திரிகை நான்காகுங் காணியது நான்குமா 
வைந்துமாக் காலவ் விரட்டியரை யந்தவிணை 
யேகமொன்றி ரண்டிணைது வந்துணையி னோடுகள 
மாகுபய மூன்றுதிரி யாம்
** 799

#34
நான்குசது ரைந்துபஞ்ச மாறுசட்டேழ் சத்தமெட்டே 
யூன்றுமட்ட மாநவமொன் பான்றசம்பத் தேன்றசதந் 
தப்பருநூ றாயிரஞ்ச கத்திரமப் பத்தயுதம் 
அப்பத் திலக்கநியு தம்
** 800

#35
கோடியென்ப நூறிலக்கம் கோடியொன்றாய்க் கோடிமா 
கோடிமேற் சங்கம்விந்தங் கூர்பதுமம் நீடுஞ் 
சமுத்திரந் தாமரைவெள் ளம்பிரள யந்தான் 
றமிழ்த்தோரை யேயோ சனை
** 801

#36
கற்ப நிகற்பங் கனிமகரந் தண்பனையே 
யுற்பல மற்புதமென் றோர்பதினைந் திற்பேர்ப்பின் 
மாசங்க மாதிபதி னைந்தாக முப்பதுமே 
பேசுமவ்வக் கோடிகளின் பேர்
** 802

#37
நாழிபிரத் தம்படியப் பாதியுரி மானிகமாங் 
கோளிலுரிப் பாதியுழக் குக்குடுப மாழாக்கே 
யப்பாதி நானாழி யாடகங்கஞ் சல்கலச 
மப்பாதி பாத்திரமே யாம்
** 803

#38
குறுணிசிவ மெண்ணாழி நாற்குறுணி தூணி
குறுணியிணை கும்பந்து ரோணம் பெறுபதக்கா 
முத்தூணி யாங்கலன்மூ வேழ்குறுணி கோட்டைசோ
டத்துழக்கிற் பத்திலொன்றே யாம் 
** 804

#39
சிறங்கையொறின் பேர்சுளுகை யஞ்சலியி ரண்டு 
சிறங்கையொரு நெல்லெடைமா வெண்மா வறைந்தவொரு 
மஞ்சாடி யவ்விரட்டி வல்லமென வாமிருபான் 
மஞ்சாடி நிட்கங் கழஞ்சு
** 805

#40
வெப்பில்பிர குஞ்சமுட்டி வில்வந் தொடிபலநூ 
றப்பலந்து லாநிறையப் பாதியெடை யப்பாதி 
தூக்காகுங் சண்டிதுலா முப்பதிரு பான்பார 
மாக்குபலங் கால்கருடங் கஃசு
** 806

#41
ஆகுங் கசாக்கிரக மவ்வணுவெண் மூன்றதுவெட் 
டாகு மிலீக்கை யதுநான்கே யூகையதெட் 
டங்கியவை யாமதுமூன் றங்குலம தீராறு 
தங்கு மளவைப்பேர் சாண் 
** 807

#42
சாணோ ரிரண்டு முழங்கர மாநான்கே 
யேணார் தனுப்புருட மிவ்விரட்டி பேணுதண்ட 
மீரா யிரமதுகு ரோசங்கூப் பாடதுநான் 
கோர்யோ சனைபுகையென் றோது 
** 808

#43
காதமொடு சாமரத்தங் காவதமுங் கூப்பாடாங் 
கோதில்கவி யூதமிரு கூப்பாடா மோதுநல்ல 
நானூறு விற்கிடைகோ ழிப்பறவைத் தூரமே 
தானா வதுகிரவுஞ் சம்
** உயிரில் பொருட்குண வர்க்க முற்றும் 
** நாமதீப நிகண்டு முற்றும்
**
**
** *