<<முந்திய பக்கம்

சங்கச் சோலை

பத்துப்பாட்டு எட்டுத்தொகை பாடல் - தேடல் கட்டுரைகள் புத்தகங்கள்
ஏதேனும் ஒன்றனைச் சொடுக்கவும்
 
Sangacholai – A Collection of Articles on Sangam Literature
சங்க இலக்கியம் என்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களாகும். இவற்றுள் பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்டது. எட்டுத்தொகை என்பது எட்டுவிதமான தொகுப்புகளைக் கொண்டது. ஒவ்வொரு தொகுப்பும் பல சிறிய/பெரிய பாடல்களைக் கொண்டது. இவற்றுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை ஒவ்வொன்றும் நானூறு பாடல்களைக் கொண்டவை. இந்த நூல்கள் அனைத்தையும் அவற்றுக்குரிய அடிநேர் உரையுடன் இங்கே காணலாம். பாடல் தேடல் என்ற பகுதியில் சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட பாடலைத் தேடிக் கண்டுபிடிக்கும் முறை உள்ளது. இதில் பாடல் முதல் அடி - அகர வரிசையில், பாடல் ஆசிரியர் - அகர வரிசையில் பாடல் திணை - மரபு வரிசையில் என்ற மூன்று முறைகளில் பாடலைத் தேடும் முறை கொடுக்கப்பட்டுள்ளது கட்டுரைகள் என்ற பகுதியில், ஆறு உட்பிரிவுகளில், பல்வேறு தலைப்புகளில் அமைந்த கட்டுரைகள், பாடல் கதைகள், விளக்கவுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களையும் இங்குக் காணலாம். புத்தகங்கள் என்ற பகுதியில் ஆசிரியர் எழுதி வெளியிட்ட, வெளியிடவிருக்கும் புத்தகங்களைப் பற்றிய தகவல்களைக் காணலாம்