|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
சோணாடு - (பெ) சோழநாடு, The Chola country
குறும் பல் ஊர் நெடும் சோணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி - பட் 28,29
அருகருகே அமைந்த பல (சிறிய)ஊர்களையுமுடைய - பெரிய சோழநாட்டில்;
வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி(விற்று,
மேல்
சோணை - (பெ) பாடலிபுத்திரத்துக் கருகில் கங்கையொடு கலக்கும் ஒரு நதி,
The river Son, which falls into the Ganges near Paataliputra
வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர் - குறு 75/3,4
வெண்மையான தந்தங்களையுடைய யானைகள் சோணையாற்றில் நீராடும்
பொன் மிகுந்த பாடலிபுத்திரத்தைப் பெறுவாயாக!
மேல்
சோபனம் - (பெ) மங்கலம், Auspicious sign
சோபன நிலை அது துணி பரங்குன்றத்து - பரி 19/56
பெரிதும் மங்கலமான நிலையை உடையதாயிற்று தெளிவான திருப்பரங்குன்றத்து
மேல்
சோர் - 1. (வி) 1. விழு, fall
2. உதிர், drop off
3. தளர், be weary
4. கண்ணீர், குருதி முதலியன வடி, trickle down as tears, blood
5. நழுவு, சரிந்துவிழு, slip off
6. வாடு, wither, fade
2. (பெ) சொரிதல், pouring down as rain
1.1.
காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி - சிறு 133,134
(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் பூத்தன - உட்துளை(கொண்ட) காளான்
1.2.
மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை - நற் 20/9
மார்பு முயக்குதலால் நெறிப்புண்டு உதிர்ந்த பூந்தளிர்களையுடைய
1.3
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி - அகம் 2/14
கடும் காவலையுடைய காவலர்கள் தளர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு
1.4
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து - பரி 12/70,71
பாய்கின்ற குருதியாக வண்ணநீர் வடிய, அவன் அவளிடம் பகைமை கொள்ளாமல் உள்ளம் சோர்ந்துபோக,
அவ்விடத்தில் நிற்காமல் நீங்கிச் சென்று நிலத்தில் வீழ, மனம் கலங்கி,
1.5
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி - கலி 104/40
எலும்புகள் முறியவும், கைகால்கள் ஒடிந்துபோகவும், குடல் சரியக் குத்தி
1.6
புரப்போர் புன்கண் பாவை சோர - புறம் 235/12
தன்னால் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய கண்களின் பாவை ஒளி மழுங்க
2.
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே - ஐங் 428/2
பெருத்த முழக்கத்துடன் மேகங்கள் மழையைச் சொரியத்தொடங்கிவிட்டன
மேல்
|
|
|