<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ஞ - முதல் சொற்கள்
ஞமலி
ஞமன்
ஞரல்

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    ஞமலி - (பெ) நாய், dog
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி - குறி 131
(மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்

 மேல்
 
    ஞமன் - (பெ) 1. யமன், Yama, the God of Death.
                 2. துலைக்கோலின் சமன்வாய், Pointer of a balance
1.
தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும்
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் - பரி 3/21,22
உலகத்தைத் தீய்த்து அழிக்கும் சிவந்த ஊழித்தீயும், கூற்றுவனும், இயமனும்,
மாசற்ற ஆயிரம் கதிர்களையுடைய பன்னிரண்டு சூரியர்களும் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடிநிற்கும்
2.
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க  - புறம் 6/9,10
பொருள்களை ஆராயும் துலாக்கோலின்கண் சமன்வாய் போல ஒரு பக்கம்
கோடாது ஒழிக, நினது திறம் சிறக்க

 மேல்
 
    ஞரல் - (வி) சங்கு எழுப்பும் ஓசை, sound of a conch
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்
தண் கடல் படப்பை மென்பாலனவும் - பதி 30/6-8
தாழ்வாகப் படர்ந்திருக்கும் அடும்பங்கொடியை மோதிய அலை கொண்டுவந்த சங்கு ஒலிக்க,
ஒளிரும் தன்மையுள்ள முத்துக்களோடு, நீண்ட பவளக்கொடிகளையும் பொறுக்கியெடுக்கும்
குளிர்ந்த கடல் வெளியாகிய மென்மையான நிலமாகிய நெய்தல் நில மக்களும்

 மேல்