<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
உ - முதல் சொற்கள்

உக்கம்
உக
உகவை
உகளு
உகா
உகிர்
உகு
உகை
உசா
உசாவு
உஞற்று
உட்கு
உடங்கு
உடம்பிடி
உடல்
உடற்று
உடு
உடுக்கை
உடுப்பு
உடும்பு
உண்கண்
உண்கு
உண்டி
உண்டிகை
உண்துறை
உணக்கல்
உணக்கும்
உணங்கல்
உணங்கு
உணா
உத்தரியம்
உத்தி
உதள்
உதியஞ்சேரல்
உதியன்
உதிரல்
உது
உந்தி
உந்து
உந்தூழ்
உம்பர்
உம்பல்
உமட்டியர்
உமண்
உமணர்
உமிழ்
உமை
உய்
உய்வு
உயக்கம்
உயங்கு
உயர்
உயவல்
உயவு
உயவை
உயா
உயிர்
உயிர்ப்பு
உரம்
உரல்
உரவர்
உரவு
உரவோர்
உரற்று
உரறு
உரன்
உரால்
உரி
உரிஞ்சு
உரிஞ
உரிஞிய
உரிவை
உரீஇ
உரு
உருங்கு
உருப்பம்
உருப்பு
உருபு
உரும்
உரும்பு
உருமு
உருளி
உரோகிணி
உல்கு
உல
உலக்கை
உலண்டு
உலப்பு
உலம்பு
உலம்வரு
உலமரல்
உலமரு
உலவை
உலறு
உலை
உலைவு
உவணம்
உவர்
உவரி
உவல்
உவலை
உவவு
உவள்
உவற்று
உவறு
உவன்
உவா
உவி
உவியல்
உழ
உழக்கு
உழல்
உழிஞ்சில்
உழிஞை
உழுஞ்சில்
உழுவை
உழை
உள்ளல்
உள்ளி
உள்ளிவிழவு
உள்ளு
உளம்பு
உளர்
உளியம்
உளை
உற்கம்
உற்கு
உறத்தூர்
உறந்தை
உறழ்
உறி
உறு
உறுகண்
உறுநர்
உறை
உன்னம்
உன்னு

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
     - (இ.சொ) சுட்டுச்சொல், a demonstrative particle denoting neither far nor near position
அங்கே = சற்றுத்தொலைவில்,
இங்கே = சற்றே அருகில்
இந்த இரண்டிற்கும் நடுவிலும் தொலைவைக் குறிக்க உங்கே என்பர்.
அ - அங்கே, அந்த. அவ்
இ - இங்கே, இந்த, இவ்
உ - உங்கே, உந்த, உவ்
அம் வெள் அருவி  வரையதுவே - பதி 78/2
அழகிய வெள்ளிய அருவி உவ் எல்லையில் உள்ளது

பார்க்க உது

 மேல்
 
    உக்கம் - (பெ) 1. இடை, waist 
                    2. தலை, head
1.
ஒரு கை உக்கம் சேர்த்தியது - திரு 108
ஒரு கை இடையிலே வைக்கப்பட்டது
2.
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய - கலி 94/17
நல்லவளே,கேள், தலைக்கு மேலேயும் நடுப்பகுதி இல்லையான வாள் போன்ற வாயையுடையவளே

 மேல்
 
    உக - (வி) 1. உயர், ascend, soar upward;
             2. மனம் மகிழ், be glad
1.
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் - மது 502
பருந்துகள் (இளைப்பாறி)இருந்து (பின்னர்)உயர்ந்தெழும் பல(தொழிலால்) சிறந்த நல்ல இல்லம்
2.
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து - நெடு 156
(அவள் மனம்)மகிழக்கூடிய சொற்களைக் கூறவும் (அதனை)ஏற்காதவளாய் மிகவும் கலங்கி -

 மேல்
 
    உகவை - (பெ) உவகை, மகிழ்ச்சி, joy happiness
முகவை இன்மையின் உகவை இன்றி - புறம் 368/11
பெறுவதற்குப் பரிசில் ஒன்றும் இல்லாமையால் உவகை இன்றி

 மேல்
 
    உகளு - (வி) தாவு, ஓடித்திரி, leap, run about
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள - முல் 99
முறுக்குண்ட கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான் துள்ள,
பன் மயிர் பிணவொடு கேழல் உகள - மது 174
பல மயிரினையுடைய பெண்பன்றியோடு ஆண்பன்றி ஓடித்திரிய

 மேல்
 
    உகா - (பெ) உகாய், ஓமை மரம், Tooth-brush tree, Salvadora persica;
1.
புறாவின் முதுகைப் போன்ற புல்லிய அடிமரத்தை உடையது
இறால்மீனின் முட்டையைப் போன்ற பழங்களை உடையது
புறவு புறத்து அன் ன புன் கால் உகாஅத்து
இறவு சினை அன்ன நளி கனி உதிர - குறு 274/1,2
புறாவின் முதுகைப் போன்ற புல்லிய அடியையுடைய உகாய் மரத்தின்,
இறால்மீனின் முட்டைகளைப் போன்ற செறிந்த பழங்கள் உதிரும்படியாக
2.
உச்சிப்பகுதி உலர்ந்துபோய்க் கிடக்கும்.
மிளகு பெய்து அனைய சுவைய புன்காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட - நற் 66/1,2
மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை,
உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு,
3.
இதன் காய் குயிலின் கண் போன்று இருக்கும். கனி மணிநிறக் காசு போன்று இருக்கும்.
குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி
உகாஅ மென் சினை உதிர்வன கழியும் - அகம் 293/6-8
குயிலின் கண்ணைப்  போன்ற நிறமுடைய காய் முற்றி
அழகிய நீலநிற மணிக்காசு போன்ற பெருமை பொருந்திய நிறமுடைய பெரிய கனி
உகாவின் மெல்லிய கிளைகளினின்றும் உதிர்ந்து ஒழியும்

	

	பார்க்க ஓமை

 மேல்
 
    உகிர் - (பெ) நகம், finger or toe nail, claw
வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த - சிறு 136
வளையல்(அணிந்த) கையினை உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின

கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை - பட் 140
கூரிய நகங்களையுடைய நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது	

கொக்கு உகிர் நிமிரல் மாந்தி - நற் 258/6
கொக்கின் நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு

 மேல்
 
    உகு - (வி) 1. உதிர், shed asleaves from a tree
            2. சிந்து, சிதறு, be strewed, scattered, spilled
            3. கரைந்து தேய்தல். to melt, pine, languish, wither;
           4. கெடு, wear off, pass away; to be lost;
1.
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் - குறு 8/1
வயலோர மாமரத்தில் நன்கு கனிந்து உதிர்ந்த இனிய பழம்
2.
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு - குறு 27/2
நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் கொட்டியதைப் போல
3
உப்பு இயல் பாவை உறை உற்றது போல்
உக்குவிடும் என் உயிர் - கலி 138/17.
உப்பினால் செய்த பாவையின் மேல் மழைத்துளி விழுந்தது போல்
கரைந்துவிடும் என் உயிர்
4
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை - அகம் 67/14
தழைகளைக்கொண்டு மூடிய கற்குவியல்களில் மரித்த ஆட்களின் உடல் கெட்டுக்கிடக்கும் பாழிடம்

 மேல்
 
    உகை - (வி) 1. காலால் உந்திச் செலுத்து, drive with force on legs
                2. காலால் மிதித்து உழக்கு, trample down
                3. காலால் மிதித்து எழுப்பு, stir up
                4. உந்திச் செலுத்து, discharge
1.
பாடு இமிழ் பனி துறை ஓடு கலம் உகைக்கும் - ஐங் 192/2
ஓசை முழங்கும் குளிர்ந்த துறையில் ஓடுகின்ற கலங்களை தரையில் உதைத்துச் செலுத்தும்
2.
கயல் ஆர் நாரை உகைத்த வாளை - புறம் 354/5
கயல்மீனை உண்ணும் நாரை காலால் மிதித்து உழக்கிய வாளை மீன்
3.
பல புரவி நீறு உகைப்ப - மது 184
பல குதிரைகள் துகள்களை எழுப்ப
4.
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த,கணை - புறம் 369/8
விசைத்துக் கட்டப்பட்ட வலிய வில்லினுடைய பெரிய நாண் உந்திச் செலுத்திய, அம்பு

 மேல்
 
    உசா - (வி) உசாவு, விசாரி, enquire
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர்- கலி 143/18
இவள் வருந்தித் துவண்டுபோனாள் என்று அவனுக்கு என்ன நேர்ந்தது என்று விசாரிக்கின்றீர்

 மேல்
 
    உசாவு - (வி) உசா, வினவு, விசாரி, enquire
சிலவே நம்மோடு உசாவும் அன்றில் - கலி 137/4
சிலவே அவையும் நம்மோடு அளவளாவி நம்மை விசாரிக்கும் அன்றில் பறவைகள்,

 மேல்
 
    உஞற்று - (வி) 1. விடாது முயற்சிசெய், untiringly persevere
                 2. செய்துமுடி, perform, accomplish
1.
அனைத்தும் அடூஉ நின்று நலிய உஞற்றி
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி - அகம் 378/16,17
எல்லாமே கொல்லுமாறு நின்று வருத்த, விடாது முயன்று
எவ்வாறூயிருடன் இருக்கிறாய் என்கின்றாய் தோழியே!
2.
அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் - பதி 51/8,9
நண்டுகள் ஊர்ந்துதிரிந்ததனால் ஏற்பட்ட
சுவடுகளை அழிக்கும்படியாக நுண்ணிய குறுமணலை ஊதைக் காற்று வீசியெறியும்

 மேல்
 
    உட்கு 1. (வி) அஞ்சு, be afraid
          2. (பெ) அச்சம், fear
1.
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் - திரு 243,244
முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச்செய்து, முரண்பட்டோர் அஞ்சும்படியாக,
முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற நகரின்கண்ணே 
2.
நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர - குறி 184
நாணமும் அச்சமும் (எய்துதற்குரிய இடம்பெற்று)அவ்வழி (வந்து)தோன்றியதால்,

உட்கு என்ற அச்சம் பற்றிய விளக்கத்தையும், அதைப் போன்ற பலவிதமான அச்சங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள
ஆசிரியர் எழுதி வெளியிட்டுள்ள சங்கச் சொல்வளம் - 4.அஞ்சுதல் என்ற கட்டுரையைப் படிக்க
இங்கே சொடுக்கவும்

 மேல்
 
    உடங்கு - (வி.அ) ஒருசேர, together
அறுசுனை முற்றி
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை - கலி 12/4
நீர் வற்றிப்போன சுனையைச் சுற்றிநின்று,
ஒருசேர நீர்வேட்கை கொண்டதால், உடல் வருந்திய யானைகள்

 மேல்
 
    உடம்பிடி - (பெ) வேல், spear
உடம்பிடி தட கை ஓடா வம்பலர் - பெரும் 76
வேலையுடைய பெரிய கையினையுடைய புறங்கொடாத வம்பலர்கள்

 மேல்
 
    உடல் - 1. (வி) கோபங்கொள், மாறுபடு, be angered, be variant
            2. (பெ) பகை, மாறுபாடு, ill-will,enmity
            3. (பெ) உடம்பு, body
1.
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை - புறம் 77/9
வெகுண்டு மேல் வந்த புதிய வீரரை
மற புலி உடலின் மான் கணம் உளவோ - புறம் 90/3
மறத்தையுடைய புலி சீறினால் எதிர்த்துநிற்கும் மான் கூட்டமுமுண்டோ?
2.
உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை - புறம் 25/5
பகைகொள்வதற்கு அரிய வலிமையையுடைய வஞ்சினங்கூறிய வேந்தரை
3
விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் - பரி 4/42
நஞ்சை உடைய பாம்பின் உடலையும், உயிரையும் உண்ணும் கருடன்

 மேல்
 
    உடற்று - (வி) 1. வருத்து, afflict
                  2. அழி, கெடு, damage, spoil
                  3. சினமூட்டு, infuriate
                 4. செலுத்து, drive, push on vigorously
1.
ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை - மலை 426
(உம்மைப்)பேணுபவர் அன்றி, வருத்துபவர்கள் இல்லை;
2.
தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல - அகம் 381/15,16
வண்டுகள் ஒலிக்கும் நறிய மாலையினையுடைய சேரன் அழித்த
மாறுபட்ட பகைவரது பொருந்திய மதில் போல
3.
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே - புறம் 4/19
இடைவிடாமல் கூப்பிடும் உன்னைச் சினப்படுத்தியவருடைய நாடு
4.
மா உடற்றிய வடிம்பு - பதி 70/2
குதிரைகளைப் போரிடுவதற்குச் செலுத்திய காலின் முன்பகுதியையும்,

 மேல்
 
    உடு - 1. (வி) ஆடையைத் தரி, put on, wear
           2. (பெ) அம்பை வில்லில் பொருத்தும் இடம், Point where the arrow is pressed against the bow-string;
1.
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது - நற் 359/4
2.
உடு உறும் பகழி வாங்கி - குறி 170
நாணில் பொருத்தப்பட்ட அம்பினை வலிந்திழுத்து

 மேல்
 
    உடுக்கை - (பெ) உடை, clothing
குன்றி ஏய்க்கும் உடுக்கை - குறு 0/3
குன்றிமணியைப் போன்ற உடை

 மேல்
 
    உடுப்பு - (பெ) பார்க்க - உடும்பு
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி - பெரும் 200
உடும்பின் முகத்தை ஒத்த பெரும் கொழு மறைய அமுக்கி,

 மேல்
 
    உடும்பு - (பெ) பெரிய பல்லி போன்ற விலங்கு, monitor lizard, Varamus bengalensis
பரல் தவழ் உடும்பின் கொடும் தாள் ஏற்றை - மலை 508
பருக்கைக்கற்களின்மீது தவழும் உடும்பின் வளைந்த பாதங்களைக்கொண்ட ஏறும்

 மேல்
 
    உண்கண் - (பெ) மையுண்ட கண்கள், பெண்களின் மை தீட்டிய கண்கள், Eye painted black on the lower lid;
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப - முல் 23
பூப்போலும் மையுண்ட கண்களில்தனித்த கண்ணீர் முத்து துளிப்ப 

 மேல்
 
    உண்கு - (வி.மு) 1. உண்ணுவேன், நுகர்வேன், (I) will enjoy (through the senses)
                   2. உண்க, (please) eat
1.
யாரையோ எம் அணங்கியோய் உண்கு என
சிறுபுறம் கவையினனாக - அகம் 32/8,9
யாரோ, எம்மை வருத்தினவளே, நின்னை நுகர்வேன் என்று கூறி
எனது பிடரியை அணைத்துக்கொண்டானாக

தலைவன், தலைவியிடம் ’உன்னை முத்தமிடுவேன்’ என்று சொல்வதை, ‘உன் பற்களை உண்பேன்’ எனக்
கூறுவதாகப் புலவர் படைப்பர்.

எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு உண்கு என - நற் 17/6
செல்லாயோ நின் முள் எயிறு உண்கு என - நற் 134/8
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு உண்கு என - நற் 204/6
2.
படலை முன்றில் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கு என - புறம் 319/5,6
படல்கட்டிய முற்றத்தில் சிறிய தினையாகிய உலர்ந்ததை
புறாக்களும், இதற் பறவைகளும் முற்றவும் உண்க என்று தெளித்து

 மேல்
 
    உண்டி - (பெ) உணவு, food
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - புறம் 18/19

 மேல்
 
    உண்டிகை - (பெ) மக்கள் கூட்டம், huge gathering
சாரிகை மறுத்து தண்டா உண்டிகை - பரி 6/36,37
யானை, குதிரை ஆகியவை செல்வதற்கு இடங்கொடாமல், குறைவில்லாத மக்கள் கூட்டம்

 மேல்
 
    உண்துறை - (பெ) நீர்நிலையில் குடிப்பதற்காக நீர் எடுக்கும் பகுதி, ghat for drinking water
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் - சிறு 70
ஓவியம் போன்ற (அழகுடைய)(நீர்)உண்ணும் துறையின் பக்கத்தே

 மேல்
 
    உணக்கல் - (பெ) காயவைத்தல், the act of drying such as fish
நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி - நற் 45/6
கொழுப்புள்ள சுறாமீனை அறுத்த துண்டங்களைக் காயவைப்பதற்காக,

 மேல்
 
    உணக்கு (வி) - காயவை, உலறப்போடு, dry in the sun
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு - நற் 4/4
அழகிய கண்களையுடைய முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் துறையைச் சேர்ந்தவனிடம் சென்று
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் - நற் 63/2
மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்

 மேல்
 
    உணங்கல் - (பெ) காயவைத்த பொருள், dried matter
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி - அகம் 20/2
ஏராளமான மீனை உலர்மீனாக்க(காயப்போட), அதைத் தின்னவரும் பறவைகளை ஓட்டி

 மேல்
 
    உணங்கு - (வி) உலர், காய்ந்துபோ, dry, தீய்ந்துபோ, be burnt
வலை உணங்கும் மணல் முன்றில் - பட் 83
வலைகள் காயும் மணல்முற்றத்தில்
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி - பதி 25/8
காட்டுக்கோழி உலவும் காடுகள் தீய்ந்துபோன கடிய வழி

 மேல்
 
    உணா - (பெ) உணவு, sustenance, food
பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட - மது 660
கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல,

சில் உணா தந்த சீறூர் பெண்டிர் - அகம் 283/5
சிறிதளவு உணவுப் பொருளைக் கொண்டுவந்த சிறிய ஊர்களிலுள்ள பெண்கள்

 மேல்
 
    உத்தரியம் - (பெ) மேல்துண்டு, Cloth worn loosely over the shoulders, upper garment
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி - கலி 96/13
தெய்வவுத்தியிலிருந்து ஒரு வடமாகத் தொங்கும் சுட்டி விளங்கவும், நூலால் செய்யப்பட்ட
மேலாடையே திண்ணிய கடிவாளமாகவும்

 மேல்
 
    உத்தி - (பெ) 1. பாம்பின் படத்திலுள்ள பொறி,  Spots on the hood of the cobra.
               2. (பெண்கள்) தலையில் அணியும் ஒரு ஆபரணம், நெத்திச்சுட்டி, a head ornament
1.
கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப - நற் 129/7
நல்ல நிறம்பொருந்திய படத்தில் புள்ளிகளையுடைய பாம்பின் தலை நடுங்குமாறு
2.
நூல் அமை பிறப்பின் நீல உத்தி
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி - அகம் 400/5,6
புரவி நூல் கூறும் இலக்கணம் அமைந்த நீல மணியால் ஆகிய நெற்றிச்சுட்டியினையுமுடைய
கொய்யப்பெற்ற மயிர் பொருந்திய பிடரி சொரசொரப்பு உண்டாகப் பெருகி
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திரு 23
தெய்வ உத்தி, வலம்புரி ஆகிய தலைஆபரணங்களை அதனதன் இடத்தில் வைத்து

 மேல்
 
    உதள் - (பெ) ஆட்டுக்கிடா, Ram
அதளோன் துஞ்சும் காப்பின் உதள
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் - பெரும் 151,152
தோல் பாயிலிருப்போன் தூங்கும் பாதுகாப்புள்ள இடத்தையும், ஆட்டுக்கிடாயின்
நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில்

 மேல்
 
    உதியஞ்சேரல் - (பெ) சேர மன்னன், 
                      The CErA king who is said to have fed the armies of the PAndavas
                      in the Mahabharata war.
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்
பாடி சென்ற பரிசிலர் போல - அகம் 65/5,6
பிறர் நாட்டினை வென்று, தன் நாட்டினை விரிவாக்கிய உதியஞ்சேரலாதனைப்
பாடிச் செல்லும்பரிசிலர் போல.

மற படை குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
முதியர் பேணிய உதியஞ்சேரல்
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல்
கூளி சுற்றம் குழீஇ இருந்தாங்கு - அகம் 233/6-10
வீரம் பொருந்திய குதிரைப்படைகளுடன் புறக்கிடாத வலியையுடைய
மேலுலகத்தை அடைந்த கெடாத நல்ல புகழினையுடைய
முன்னோர்கட்குத் தென்புலக் கடனாற்றிய உதியன் சேரலாதன் என்னும் மன்னன்
அவர்கட்குப் பலியாகப் பெருஞ்சோறு படைத்திட்ட காலத்தே, கரிய பலவாய
பேய்ச்சுற்றங்கள் அதனை உண்பதற்குக் கூடியிருந்தாற் போன்ற
- நாட்டார் உரை.

ஈரைம்பதின்மரும் பொருது களத்து ஒழிய
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் - புறம் 2/15,16

என்ற முரஞ்சியூர் முடிநாகனாரின் புறப்பாடல் வரிகளால் இவன் மகாபாரதப் போரின்போது பாண்டவர்க்குத்
துணையாக நின்று அவர் படைக்கு உணவளித்தான் என்று தெரிய வருகிறது. அதனால் இவன்
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனப் பெயர் பெற்றான்.
எனவே மேற்குறிப்பிட்ட அகப்பாடலிலும் இவன் பாண்டவர் படைக்கு உணவளித்த செய்திதான்
கூறப்படுகிறது எனக் கொள்ளலாம். ஆனால் இவ்வுதியன் வேறானவன் எனக் கொள்வார் நாட்டார்.

 மேல்
 
    உதியன் - (பெ) 1. ஒரு சேர மன்னன், a cErA king. பார்க்க : உதியஞ்சேரல்
                   2. சேரமன்னன் பெயர்கொண்ட ஒரு வள்ளல்,  a philanthropist with the name of the cEra king
                   3. நன்னனது இன்னொரு பெயர், another name for the chieftain nannan
1.
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும்
ஆம்பல் அம் குழலின் ஏங்கி - நற் 113/9-11
பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் மேற்கொண்டு செம்று செய்த ஆரவாரத்தையுடைய போரில்
போர்க்களம் பாடும் இசைவாணர்கள் இம்மென்ற ஓசை உண்டாக இசைக்கும்
ஆம்பலென்னும் குழலிசை போல அழுது

சேர அரசற்குரிய குடிவகையில் உதியர்குடி ஒன்று. உதியன் எனப் பொதுப்படக் கூறினமையின் அக்குடியில் சிறந்து
விளங்கிய பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்பது கொள்ளப்பட்டது - ஔவை.சு.து.உரை விளக்கம்.
2.
பல்லான் குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்
கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து - அகம் 168/4-7
பல்லான் குன்று என்னும் மலையில் பொருந்தும் நிழலின்கண் சேர்ந்த
நல்ல ஆனிரையின் பரப்பினைக் கொண்ட குழுமூரிடத்தே
ஈகையாகிய கடனை ஏற்றுக்கொண்டகோட்டமில்லாத நெஞ்சினையுடைய
உதியன் என்பானது அடுக்களை போல

குழுமூர் சங்ககாலத்தில் பெயர்பெற்று விளங்கிய ஊர்களில் ஒன்று. அது மலைச்சாரலில் அமைந்திருந்தது.
பசுக்கூட்டம் அங்கு மேயும். இவ்வூரில் இருந்த வள்ளல் உதியன். உதியன் என்னும் பெயர் சேர மன்னனை
நினவூட்டுகிறது. எனவே இந்த ஊர் சேரநாட்டுப் பகுதியில் இருந்தது எனத் தெரிகிறது.
உதியன் மடம் கட்டி அன்னதானம் செய்துவந்தான். அது 'உதியன் அட்டில்' என்று பெயர்பெற்றிருந்தது.
அதில் உணவு உண்போரின் ஒலி இரவு பகல் எந்த நேரத்திலும் கேட்டுக்கொண்டே இருக்குமாம் - விக்கிப்பீடியா
சேர மன்னன் உதியன், தன் நாட்டில் குழுமூர் என்னுமிடத்தில் வழிச்செல்வோருக்காக அன்னதானம் செய்ய
ஏற்பாடு செய்திருந்தான் என்றும் கொள்ளலாம்.
3.
நன்னன் உதியன் அரும் கடி பாழி
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த 
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் - அகம் 258/1-3
நன்னன் உதியன் என்பானது அரிய காவலையுடைய பாழிச்சிலம்பில்
பழமை மிக்க வேளிர்கள் பாதுகாவல் செய்துவைத்த 
பொன்னைக்காட்டிலும் எய்துதற்கு அரியளாதலை நன்கு அறிந்தும்
- நன்னன் உதியன் என்பதனால், நன்னனுக்குச் சேரமன்னர் சார்பினால் உதியன் என்பதோர் பெயர் எய்திற்றுப்போலும்
- நாட்டார் உரை விளக்கம்.

 மேல்
 
    உதிரல் - (பெ) உதிர்ந்த பூ, Flowers that have fallen down
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு - பரி 7/12
ஒளிர்கின்ற கிளைகளையுடைய வேங்கை மரத்தில் மலர்ந்த பூங்கொத்துகளிலிருந்து உதிர்ந்த பூக்களோடு சேர்ந்து,

 மேல்
 
    உது - (சு.பெ) அண்மைக்கும், சேய்மைக்கும் இடைப்பட்டது, that which is between the near and the more remote 
உது காண் தோன்றும் தேரே இன்றும் - அகம் 380/9
உதோ பார், அவனது தேர் தோன்றுகிறது இன்று

	பார்க்க 

 மேல்
 
    உந்தி - (பெ) 1. வயிறு, கொப்பூழ், belly, navel, 
                2. ஆற்றிடைக்குறை, smallisland in a river
                3. மழை நீர், rain water
                4. ஆறு, river
1.
அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி - குறி 140
தளர்ந்த மென்மையான சாயலினையும், அழகாக வளைந்திருக்கும் கொப்பூழினையும்,
2.
குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி
நிவந்து செல் நீத்தம் - மது 245, 246
கீழ்த்திசைக் கடலுக்குப் பரந்து செல்லும் நிறத்தையுடைய நீரின் ஆற்றிடைக்குறையை
மூழ்கடித்து உயரே செல்லும் பெருக்கு
3.
மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழு_முதல் காந்தள் - குறு 361/3,4
மாலையில் பெய்த மணம் கமழும் வெள்ளத்தோடு
காலையில் வந்த முழுச்செடியான காந்தளை
4.
நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி - குறு 327/4
உனது செயல் கொடியதாகும்; இனிதான கலங்கியநீரைக் கொணரும் ஆறே!

 மேல்
 
    உந்து - (வி) 1. யாழ் நரம்பு தெறி, thrum, as a string of the yAzh
                2. தள்ளு, thrust forward
                3. வீசியெறி, cast away
1.
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் - பொரு 22,23
மாறாகிய மறப்பண்பினை அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை -
(நரம்புகளைக் கூடத்)தழுவியும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், தெறித்தும், ஒன்றுவிட்டு ஒன்றைத் தெறித்தும்
2.
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
வருவது மாதோ வண் பரி உந்தி - அகம் 278/8,9
பெரிய மூங்கிலின் அழகிய தண்டு முரியும்படி தாக்கி,
வருகிறது, அழகிய குதிரைமரங்களைச் சாய்த்துத் தள்ளிக்கொண்டு
3.
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் - நற் 68/4,5
சிறிய நுரைகளைச் சுமந்துகொண்டு, நறிய மலர்களை வீசியெறிந்துகொண்டு
பொங்கி வருகின்ற புது நீரில் மனம் மகிழ ஆடுவோம்;

 மேல்
 
    உந்தூழ் - (பெ) பெரிய மூங்கில், Large bamboo, Bambusa arundinaca
ஊழுற்று அலமரு உந்தூழ் அகல் அறை - மலை 133
முதிர்தலுற்று (காற்றுக்கு) ஆடின பெருமூங்கில்

      

 மேல்
 
    உம்பர் - 1. (வி.அ) அப்பால், beyond
             2. (பெ) 1. தேவர்கள், மேலுகத்தார், celestials
                    2. உயரமான இடம், elevated place
                    3. தொலைதூரம், long distance
                    4. மேலுலகம், celestial world
1.
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் - குறு 11/6,7
வலிய வேலையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கும் அப்பால்
மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும்
2.1
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் - பரி 11/70
தேவர்கள் வாழும் ஒளி மிகுந்த வானத்தில் ஊர்ந்து செல்லும்
2.2
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயில் அடி இலைய மா குரல் நொச்சி - குறு 138/2,3
எமது வீட்டுக்கு வெளியேயுள்ள ஏழில்மலையின் உச்சியில்
மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின்
2.3
பல் நாள் உம்பர் பெயர்ந்து - அகம் 368/12
பல நாளும் (நம்மைப் பிரிந்து) தொலைவிடம் சென்று
2.4
ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே - ஐங் 401/5
இந்த உலகத்திலும், மேலுகத்திலும் இத்தகைய காட்சியைப் பெறுதல் மிகவும் அரியது.

 மேல்
 
    உம்பல் - (பெ) 1. வழித்தோன்றல், descendant
                2. யானை, elephant
1.
திரை தரு மரபின் உரவோன் உம்பல் - பெரும் 31
திரை கொணர்ந்து ஏறவிட்ட பாரம்பரியம் கொண்ட சோழன் குடிப்பிறந்தோனாகிய,
2.
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் - மலை 429
யானை முறித்த அழகிய தளிர்களையுடைய யாம் பூவும்,

 மேல்
 
    உமட்டியர் - (பெ) உமணர் என்பதன் பெண்பால், feminine of salt makers
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் - சிறு 60
அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர்

 மேல்
 
    உமண் - (பெ) உமணர், உப்பு விளைவிப்போர், உப்பு விற்போர், salt makers, salt merchants
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி - நற் 374/2
உயர்ந்து தோன்றும் உமணர்கள் நிறைந்திருக்கும் சிறிய ஊரினரின்

 மேல்
 
    உமணர் - (பெ) உப்பு விளைவிப்போர், உப்பு விற்போர், salt makers, salt merchants
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த - சிறு 55
வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும்

        

 மேல்
 
    உமிழ் - (வி) 1. துப்பு, spit
                2. வெளிவிடு, emit, discharge as arrows
                3. சொரி, pour out
1.
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் - குறு 239/5
பாம்பு துப்பிய மணியைப் போன்று தோன்றும்
2.
வில் உமிழ் கடும் கணை மூழ்க - புறம் 263/7
வில் வெளிவிட்ட கடிய அம்பு ஆழத் தைக்க
3.
புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர் - அகம் 31/10
புண் சொரிந்த குருதி சூழ்ந்து பரவக் கிடந்தோரின்

 மேல்
 
    உமை - (பெ) பார்வதி, consort of Lord Siva
உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் - திரு 153

 மேல்
 
    உய் (வி) -  1. கொண்டுபோ, கூட்டிச்செல், carry, take along with
              2. தப்பு, escape as from danger
              3. ஏவிவிடு, set on
              4. உயிர்வாழ், live, subsist
              5. நற்கதி அடை, ஈடேறு, be saved, redeemed   
1.
வெம் சுரம் என் மகள் உய்த்த
அம்பு அமை வல் வில் விடலை தாயே - ஐங் 373/4,5
வெம்மையான பாலைவழியில் என் மகளைக் கூட்டிச் சென்ற
அம்பினைத் தொடுத்த வலிய வில்லையுடைய இளைஞனின் தாயும்.
2.
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் - நற் 78/6
காமநோய் மிகுந்த மிக்க துன்பத்திலிருந்தும் நாம் இங்கே தப்பித்தோம்;
3.
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக்கோழி தனிப் போர் போல - குறு 305/5,6
ஏவிவிடுவாரும் இல்லாமல், பிரித்துவிடுவாரும் இல்லாமல்,
குப்பைக்கோழிகள் தாமாகச் சண்டைபோட்டுக்கொள்வது போல
4.
வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி - புறம் 370/1
வள்ளல்தன்மை உடையோரைக் காணாமல், உயிர்வாழும் வகையை எண்ணி
5.
பைதல் நெஞ்சம் உய்யும் மாறே - நற் 75/10
துன்பம் கொண்ட நெஞ்சம் ஈடேறும் வழி

 மேல்
 
    உய்வு - (பெ) 1. உயிர்பிழைத்திருத்தல், continue to live, escape from death
               2. தப்பிப்பிழைத்தல், escape from danger
1.
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது - நற் 203/8
ஒரு நாள் பிரியினும் உயிர்பிழைத்திருத்தல் அரிது என்னாமல்
2.
செற்றன்றாயினும் செயிர்த்தன்றாயினும்
உற்றன்றாயினும் உய்வு இன்று மாதோ - புறம் 226/2
மனத்துள் கறுவிக்கொண்டாலும், வெளிப்பட வெகுண்டாலும்
உற்று நின்று கையோடு வருத்தினாலும் தப்பிப்பிழைத்தல் அரிது

 மேல்
 
    உயக்கம் - (பெ) வருத்தம், suffering, distress
உண்ணா பிணவின் உயக்கம் தீரிய - அகம் 357/3
உண்ணாது இருக்கும் பெட்டைநாயின் வருத்தம் தீர்வதற்காக

 மேல்
 
    உயங்கு - (வி) 1. வருந்து, suffer, வருத்து, cause suffering
                2. மெலிவடை, grow thin
                 3. துவள், wilt
1.
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர் - அகம் 367/9
தசையை விரும்பும் பெட்டைநாயின் வருத்துகின்ற பசியைக்களைவதற்காக
2.
ஊன் இல் யானை உயங்கும் வேனில் - அகம் 233/5
தசை ஒழிந்த யானை மெலிந்து வாடும் வேனில் காலம்
3.
உயங்கு நடை மட பிணை தழீஇய - அகம் 353/11
தளர்ந்த நடையினையுடைய இளைய பெண்யானையைத் தழுவிக்கொண்ட

 மேல்
 
    உயர் - 1. (வி) 1. உயரமாக இரு, be high, elevated, tall, lofty
                  2. மேலெழு, move up, rise, ascend
                  3. உயர்த்து, தூக்கிப்பிடி, raise, be lifted
                  4. மிகு, அதிகரி, increase
                  5. மேன்மையுறு, உன்னதமடை, become lofty, eminent, exalted
                  6. மறைந்துபோ, disappear, cease to exist
          - 2. (பெ.அ) தரத்தில் சிறந்த, high
1.1
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் - திரு 12
பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள நெடுந்தூரம் உயர்ந்துள்ள மலையிடத்தே

இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து - முல் 86
(எல்லா)இடங்களும் சிறந்து உயர்ந்து நிற்கும் ஏழு நிலையினையுடைய மாடத்தில்,
1.2
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை - அகம் 51/7
வேனில் வெப்பம் மிக்க மூங்கில் உயர்ந்த அகன்ற காட்டில் 
1.3
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி - திரு 67
போரை விரும்பி எடுத்துக்கொண்ட, தொலை நாட்டில் உயர்த்திய, நெடிய கொடிக்கு அருகே

விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப - முல் 91,92
வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க -
1.4
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே - புறம் 367/18
மிக்கு மேம்பட்டு நும்முடைய வாழ்நாட்கள் விளங்குவனவாகுக
1.5
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக - புறம் 72/13,14
உயர்ந்த தலைமையுடனே மேம்பட்ட கேள்வியையுடைய
மாங்குடி மருதன் முதல்வனாக

புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் - மலை 377
சிறப்புக்களில் மிக மேன்மையுள்ள, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகள்(உள்ள),
1.6
இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய - கலி 129/17
இப்போது வந்தாலும் அவர் செய்த பிழை மிகவும் அகன்றுவிடும் என்று கலங்கிய,
2.
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சா செய்யார் உயர் தவம் - நற் 226/1,2
ஒரு மருந்துமரம் பட்டுப்போகும் அளவுக்கு அதினின்றும் மருந்தைக் கொள்ளமாட்டார்கள்; மக்கள்
தம் உடல்வலிமை கெட்டுப்போகுமாறு செய்யமாட்டார்கள் உயர்ந்த தவத்தை;

 மேல்
 
    உயவல் - (பெ) வருத்தம், distress, pain, suffering
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை - நற் 171/1
நீர் வேட்கையால் உந்தப்பட்ட வருத்தமிகு யானையுடன்,

 மேல்
 
    உயவு - 1. (வி) 1. வருந்து, suffer
                   2. உசாவு, ஆலோசனை கேள், take counsel
            2. (பெ) 1. வருத்தம், suffering
                   2. உயிர்பிழைக்கச்செய்யும் வழி, means of saving life
1.1
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப - நற் 106/5
வருந்தியவனாய் அவளிடம் சென்று நான் எனது உள்ளத்துக் காமநோயைப் பற்றிக் கூற
1.2.
நள்ளென் யாமத்து உயவு துணை ஆக - அகம் 103/12
நள்ளென்ற நடு இரவில் அறிவுரைகூறும் துணையாக
2.1
என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சி - நற் 82/3
என்னுடைய வருத்தத்தை அறிவாயோ! நல்ல நடையழகைக் கொண்ட கொடிச்சியே!
2.2
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் - கலி 139/18
உயிர்வாழ முடியாத இந்த அரிய நோய்க்கு, உயிர் காக்கும் வழி ஆகும், இந்த மையலில்

 மேல்
 
    உயவை - (பெ) ஒரு வகைக் கொடி, காக்கணம், Mussell-shell creeper, clitoria ternatea typica
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை - மலை 136
(குடிப்பதற்கு)மாற்றுப்பொருளாக (நீர்)சொரிந்தன, ஊறுகின்ற நீரையுடைய உயவைக்கொடி
 
 	

 மேல்
 
    உயா - (பெ) உயவு - பார்க்க உயவு 
உலகு மிக வருந்தி உயா உறு காலை - நற் 164/3
உலகம் மிகவும் வருந்தித் துன்புறும் நேரத்தில்

 மேல்
 
    உயிர் - 1. (வி) 1. மூச்செறி, breathe hard, பெருமூச்சுவிடு, sigh, have a long breath
                   2. ஒலி, make a sound
          - 2. (பெ) 1. உயிரினம், living being
                   2. உடம்பிலுள்ள ஜீவன், life
                   3. ஒலி, ஓசை, sound, voice
                   4. நெட்டுயிர்ப்பு, sighing, deep breath
                   5. துதிக்கை, Elephant's trunk
                   6. ஆதார சக்தி, life
1.1 
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல்
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை
புள் - திரு 149-151
நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய,
பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய
கருடனை

தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த_காலை மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் - அகம் 5/23-25
தூய நீர் தந்த துணையோடு அமைந்த (இரட்டை வடமாகப்)பின்னிய மாலையை   
மோந்து பெருமூச்சுவிட்ட நேரத்தில், (அதன் வெப்பத்தால்)அந்த சிறந்த மலர்கள்
பவளம் போல் ஒளி இழந்து தம் அழகு அழிந்த தோற்றத்தை	
1.2
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்த கேழல் அட்ட நல் கோள்
செந்நாய் ஏற்றை - அகம் 111/9-11
புகழினைத் தொகுத்துக்கூறும் கூத்தரது தூம்பினைப் போலத் தோன்றி ஒலிக்கும்
காட்டிலுள்ள ஆண் பன்றியைக் கொன்ற தன் இரையினை நன்கு பற்றிக்கொள்ளும் திறனுடைய
செந்நாயின் ஏற்றை
2.1
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும் - பெரும் 32,33
அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிரினத்தைப் புரக்கும்
முரசு முழங்குகின்ற படைகளையுடைய மூவேந்தர்க்குள்ளும்
2.2
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் - நற் 237/3
இனிய உயிர் போன்ற பிரிவதற்கு அரிய காதலர்
2.3
வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி
கிள்ளை ஓப்பியும் - குறி 100,101
பெருத்த ஓசையுடன் தெளிந்த சொற்களை நடுநடுவே சொல்லி,
கிளியை ஓட்டியும்
2.4
கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின் - மலை 6
கண்களின் நடுவே வெளியாகத் திறந்த யானை நெட்டுயிர்ப்புக் கொண்டாற்போலும் ஓசையையுடைய
நெடுவங்கியத்தோடே
2.5
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின் - புறம் 152/15
கண் திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றினது கை போலும் வடிவையுடைய பெருவங்கியத்தை இசையுங்கோள்
உயிர் - ஆகுபெயர் - நச்.உரை மலை.
2.6
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் - புறம் 186/1,2
இவ் உலகத்தார்ர்கு நெல்லும் உயிரன்று, நீரும் உயிர் அன்று
வேந்தனாகிய உயிரை உடைத்து பரந்த இடத்தையுடைய உலகம்.

 மேல்
 
    உயிர்ப்பு - (பெ) 1. மூச்சுவிடுதல், breath, respiration
                 2. சோர்வுநீங்கிப் புதுப்பலம் அடைகை, Revival;
1.
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் - புறம் 345/8
பெண்யானை மூச்சுவிடுவதைப் போல காற்று வீசுகின்ற உலைத்துருத்தியின் வாயில் உள்ள இரும்பு போன்று
2.
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி - கலி 35/22
நினைத்து நினைத்து நெஞ்சுடைந்துபோகும் உன் பிரிவுத்துன்பத்தினின்றும் புதுப்பலன் தருவதாகி

 மேல்
 
    உரம் - (பெ) 1.வலிமை, strength
                2. மன திடம், உறுதி, resolution
                3. மார்பு, நெஞ்சு, chest, bosom 
1.
உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு - திரு 121
வலிமையை(த் தன்னிடத்து)க் கொண்ட உருமேற்றின் இடி(யைப் போன்று ஒலிக்கும்)முரசுடன்
2.
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி - நற் 246/5
உறுதியான நெஞ்சத்தோடு பாலைவழிகள் பலவற்றைக் கடந்து
3.
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி - அகம் 279/7
உள்ளத்திலே மூண்ட நெஞ்சினைச் சுடுகின்ற (கவலையாகிய) மிக்கதீயினை

 மேல்
 
    உரல் - (பெ) தானியங்களைக் குத்தப் பயன்படுத்தப்படும் ஓர் அமைப்பு, structure for pounding grains
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் - பதி 43/3
உரல் போன்ற பெரிய கல்களும், ஒளிவிடும் கூர்மையான கொம்புகளும்

     

 மேல்
 
    உரவர் - (பெ) அறிவுடையோர், wise people
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி - பதி 71/25
அறிவுடையோர்க்கும், அறிவில்லாதோர்க்கும், அவரின் அறிவின் அளவைத் தெரிந்து எண்ணி

 மேல்
 
    உரவு - 1. (வி) தொடர்ந்து இயங்கு, be in constant motion, as sea
            2. (பெ) 1. வலிமை, strength
                   2. மிகுகை, increasing, heightening
1.
உரவு கடல் முகந்த பருவ வானத்து - பெரும் 483
தொடர்ந்து இயங்கும் கடலின்கண் நீரை முகந்துகொண்ட பருவ கால வானத்தில்
2.1
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் - நற் 68/8
வலிய இடி முழங்கும் பாதி இரவாகிய நடுயாமத்தில்
2.2
உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் - நற் 336/7
மிக்க சினத்தையுடைய களிறு, அங்கு வருகின்ற புலியை எதிர்பார்த்திருக்கும்

 மேல்
 
    உரவோர் (பெ) 1. வலிமையுடையவர், strong persons
                   2. அறிவுடையோர், wise people
1.
அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின் - குறு 20/2
அருளையும் அன்பையும் கைவிட்டு (தம்)துணையைத் துறந்து
பொருள்தேடுவதற்காகப் பிரிந்துசெல்வோர் வலியோர் ஆயின்
2.
உரை சால் சிறப்பின் உரவோர் மருக - புறம் 166/9
புகழ் அமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபிலுள்ளவனே

 மேல்
 
    உரற்று - (வி) முழங்கு, roar
உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு - புறம் 197/5
இடி முழங்கியதைப் போல அஞ்சத்தக்க முரசத்தோடு

 மேல்
 
    உரறு - (வி) உரற்று, முழங்கு : பார்க்க உரறு
உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ - அகம் 158/
இடி முழங்கும் மேகக்கூட்டத்தினையுடைய மிக்க மழை பெய்துவிட்டு

 மேல்
 
    உரன் - (பெ) உரம், மனவலிமை, திண்மை, பார்க்க உரம்
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை - நற் 3/6
நடுவழியில் வந்ததும், நம் வலிமையனைத்தையும் கொன்றதுமான மாலைக்காலத்தில்
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் - புறம் 60/9
வலிமையையுடைய, பாரம் பொறுக்கும் காளையைப் போன்ற எம் அரசன்
உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து - புறம் 206/3
தாம் நினைத்ததை முடிக்கும் வலிமையையுடைய நெஞ்சினையுடைய

 மேல்
 
    உரால் - (பெ) ஓடுதல், running
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து - மது 387
நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு

 மேல்
 
    உரி - 1. (வி) தோல் அல்லது பட்டையை நீக்கு, peel off
          2. (பெ) தோல், skin
          3. (பெ.அ) உரிய, 
1.
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் - ஐங் 35/2
பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்
2.    
அரவு உரி அன்ன அறுவை நல்கி - பொரு 83
பாம்புத்தோல் போன்ற (மெல்லிய) ஆடையை அணிவித்து
3.
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும் - குறி 213
விசும்பில் தமக்குரிய இருப்பிடத்தையுடைய பொலிவு பெற்ற தேவர்களும் விரும்பும்

 மேல்
 
    உரிஞ்சு - (வி) உராய், உரை, rub against something, rub
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை - திரு 33
நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை,

மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை - நற் 362/7
இளங்களிறுகள் தம் உடலைத் தேய்த்துக்கொண்ட பருத்த அடிமரத்தைக்கொண்ட வேங்கை மரம்

 மேல்
 
    உரிஞ - (வி.எ) உராய, by rubbing against
முருங்கை மேய்ந்த பெரும் கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என  - அகம் 167/11-13
முருங்கையினைத் தின்ற பெரிய கையினைக் கொண்ட யானையின்
முதுகினின்று உயர்ந்த பிடரி உராய்தலின் தளர்ந்து
செங்கல்லாலாய நீண்ட சுவரிலுள்ள விட்ட மரம் வீழ்ந்ததாக

 மேல்
 
    உரிஞிய - (வி.எ) உராய்ந்த, rubbed
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வால் இணர் தயங்க தீண்டி
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
அல்குறு வரி நிழல் அசைஇ - அகம் 121/6-9
சேற்றினைக் கொண்டு அளைந்து கொண்ட நிறம் வேறுபட்ட வலிய ஆண்யானை
சிவந்த காம்பினையுடைய வெள்ளிய கொத்துக்கள் அசைய தனது துதிக்கையால் பற்றி
தினவு பொருந்திய தன் முதுகினை உராய்ந்துகொண்டதாய, வழியின்பக்கத்திலுள்ள வெண்கடம்பின்
சுருங்கிய வரிவரியாகவுள்ள நிழலிலே தங்கி

 மேல்
 
    உரிவை - (பெ) தோல், skin
வரி கிளர் வய மான் உரிவை தைஇய - அகம் 0/14
கோடுகள் அழகுடன் விளங்கும் வலிய புலியின் தோலை உடுத்த;

 மேல்
 
    உரீஇ - (வி.எ) பூசி, உருவி,
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ - நெடு 80
பெரிய (ஆணிகளும் பட்டங்களுமாகிய)இரும்பால் கட்டி, சாதிலிங்கத்தைப் பூசி வழித்து
அரலை தீர உரீஇ - மலை 24
கழலைகள் முற்றிலும் அகலுமாறு உருவிவிட்டு

 மேல்
 
    உரு - 1. (வி) 1. தோன்று, appear
                  2. வெகுளிகொள், be angered 
           2. (பெ) 1. அச்சம், அஞ்சுதல், fear
                  2. உருவம், வடிவம், appearance, form
1.1
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து - பொரு 35
பிறர்க்கு வருத்தம் எனத் தோன்றின சுணங்கு அணிந்த மார்பிடத்து
1.2
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ - பதி 52/25
சட்டென்று வெகுண்ட பார்வையுடன்
2.1  
முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில் - பொரு 131
முருகனது (சீற்றம் போலும்)சீற்றத்தையுடைய அஞ்சுதல் பொருந்திய தலைவன்,

உரு என்ற அச்சம் பற்றிய விளக்கத்தையும், அதைப் போன்ற பலவிதமான அச்சங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள
ஆசிரியர் எழுதி வெளியிட்டுள்ள சங்கச் சொல்வளம் - 4.அஞ்சுதல் என்ற கட்டுரையைப் படிக்க
இங்கே சொடுக்கவும்
2.2
உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற - பதி 67/11
அழகிய வடிவம் இல்லாத பேய்மகள் பார்ப்போருக்கு வருத்தத்தை உண்டாக்க,

 மேல்
 
    உருங்கு - (வி) உண், eat
விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் - பரி 4/42
நஞ்சை உடைய பாம்பின் உடலையும், உயிரையும் உண்ணும் கருடன்,

 மேல்
 
    உருப்பம் - (பெ) வெப்பம், heat
ஒண் கதிர் உருப்பம் புதைய - அகம் 181/8
(ஞாயிற்றின்) ஒள்ளிய கதிர்களின் வெப்பம் மறைய

 மேல்
 
    உருப்பு - (பெ) 1. வெப்பம், heat
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் - அகம் 31/1
தீயைப் போன்று சிவந்து எழுந்த வெப்பம் விளங்கும் ஞாயிறு

 மேல்
 
    உருபு - (பெ) வடிவம், form,shape
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட
-- வெண்குடை - பதி 52/29,30,31
சுடுகின்ற கதிர்கள் ஒளிர்கின்ற நிறம் பொருந்திய ஞாயிற்றின்
உருவத்தையும், எழுச்சியுற்ற இயல்பினையும் கொண்ட,
-- வெண்கொற்றக்குடை

 மேல்
 
    உரும் - (பெ) இடி, thunder
உரும் இடித்து அன்ன குரலினர் - திரு 172
இடி இடிப்பதைப் போன்ற குரலையுடையவர்கள்

 மேல்
 
    உரும்பு - (பெ) கோபம், கொதிப்பு, ire, exasperation
கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் - பெரும் 446,447
கொடை எனும் கடமையைச் செய்துமுடித்த கூம்பாத உள்ளத்துடன்,
சினம் கொள்ளாத அமைச்சுச் சுற்றத்தோடே இருந்தோனை 

 மேல்
 
    உருமு - (பெ) உரும், இடி, thunder
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே - நற் 255/11
இடி சினந்து முழங்கும் உயர்ந்த மலைப்பாதையில்

 மேல்
 
    உருளி - (பெ) வண்டிச் சக்கரத்தில் நடுவில் ஆரங்களைப் பிணிக்கும் பகுதி
முழவின் அன்ன முழு மர உருளி - பெரும் 47
முழவைப் போன்ற முழு மரத்தால் செய்யப்பட்ட உருளி

		

 மேல்
 
    உரோகிணி - (பெ) ஒரு விண்மீன், The 4th naksatra, Hyades, part of Taurus;
புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா - நெடு 159-163
புதிதாகச் செய்த, மெழுகு வழித்த (துணியாலான)மேல்விதானத்தின் மேல்,
திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசியை முதலாகக்கொண்டு,
விண்ணில் ஊர்ந்து திரிதலைச்செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு
மாறுபாடு மிகுந்த சிறப்பைக்கொண்ட திங்களொடு நிலைநின்ற
உரோகிணியை நினைத்தவளாய்(அவற்றைப்) பார்த்து நெடு மூச்சு விட்டு,

தமிழர் வானியலில் முக்கியமாகக் குறிக்கப்படுவன 27 நட்சத்திரங்கள். அஸ்வினி தொடங்கி ரேவதி
வரையிலான இந்த விண்மீன்கள் வரிசையில் உரோகிணி நான்காவதாகும். இது சந்திரனின் நட்சத்திரம்
எனப்படும். எனவே திங்கள் உரோகிணியை ஒட்டி நகர்ந்துசெல்லும் காலம் திருமண நிகழ்ச்சிகளுக்கு
உகந்த காலம் என்பர். பழந்தமிழர்கள் தங்கள் இல்லில் நடைபெறும் திருமணங்களை திங்களும்
உரோகிணியும் கூடிய நாளில் நடத்தியுள்ளனர் எனச் சங்க  இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.
தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் படுக்கையறை விதானத்தில் வரையப்பட்டிருக்கும் 12 இராசிகளும்
அவற்றிலுள்ள 27 நட்சத்திரங்களும் திங்களும் உள்ள படத்தில் திங்களின் அருகே உரோகிணி
வரையப்பெற்றிருக்கிறது. இதைக் கண்ட தலைவி தலைவனின் நினைவு மேலோங்க மிகுந்த துயரம்
அடைகிறாள் என நெடுநல்வாடை கூறுகிறது.

 மேல்
 
    உல்கு - (பெ) சுங்கவரி, toll
உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் - பெரும் 81
சுங்கம் கொள்ளுதலையுடைய பெரிய வழிகளில் கவர்த்த வழியைப் பாதுகாக்கின்ற

 மேல்
 
    உல - (வி) 1. இற, die
               2. கழி, நீங்கு, expire
               3. குறைந்துபோ, become diminished
1.
வெம் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை - குறு 77/2,3
வெம்மையான நிலத்தில்
இறந்துபோன பயணியரின் தழையிட்டு மூடிய கற்குவியல்
2.
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி - அகம் 85/6
ஈன்று சில நாள்கழிந்த மென்மையான நடையையுடைய இளமையான பெண்யானை
3.
பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி - அகம் 23/2
ஒலி அடங்கிப்போயிற்று,முழவின் குரல் போன்ற ஒலியினையுடைய மேகம்

 மேல்
 
    உலக்கை - (பெ) தானியங்களை உரலில் இட்டுக் குத்தப் பயன்படும் நீண்ட கழி, pestle, pounding rod
இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த - சிறு 193
கரிய வயிரம்பாய்ந்த உலக்கையின் இரும்பாலான பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின 

	பார்க்க உரல்

 மேல்
 
    உலண்டு - (பெ) கூட்டுப்புழு, பட்டுநூல், larva of the caddis fly, Silk produced by the ulaṇṭu
மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண் - கலி 101/15
கொம்பின் உச்சியில் சுற்றிய பட்டுநூலின் நிறத்தைப் போன்ற புன்மையான நிறத்தைக் கொண்ட காளையின்

 மேல்
 
    உலப்பு - (பெ குறைவு, Deficiency 
அன்பினர் வாழி தோழி நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர் - நற் 115/10
அன்புடையவர், வாழ்க தோழியே! பெரிய புகழைக்
குறைவின்றிப் பெற்றாலும் நம்மைத் தவிர்க்கமாட்டார்;

 மேல்
 
    உலம்பு - (வி) புலிபோல் உறுமு, roar like a tiger
புலி என உலம்பும் செம் கண் ஆடவர் - அகம் 239/3
புலியைப் போலமுழங்கும் சிவந்த கண்ணையுடைய மறவர்
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும் - குறு 86/5
பசுவானது ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்

 மேல்
 
    உலம்வரு - (வி) நெஞ்சு கலங்குகின்ற, grieve
உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள் - கலி 145/4
பெருமூச்சுவிடும், பிறரை விசாரிக்கும், நெஞ்சு கலங்கும், இவற்றில் குறையமாட்டாள்

 மேல்
 
    உலமரல் - (பெ) துன்பம், மனக்கலக்கம், suffering, distress
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு - அகம் 395/10
தனிமையினால் ஏற்பட்ட கலக்கமடைந்த உள்ளத்துடன்

 மேல்
 
    உலமரு - (வி) மனம் கலங்கு, be perturbed, அலைக்கழிக்கப்படு, tossed about
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி- கலி 137/5,6
நெருப்பென ஒளிர்ந்து சுடர்வீசும் அணிகலன்கள் புரண்டு புரண்டு படுப்பதால் ஒலியெழுப்ப, மனம் கலங்கி,
பீலி இழந்து அழகு அழிந்த மயிலைப் போல் நடுங்கி,

கோடை வெம் வளிக்கு உலமரும்
புல் இலை வெதிர நெல் விளை காடே - அகம் 397/15,16
கோடைக்காலத்து வெப்பமிக்க காற்றினால் அலைக்கழிக்கப்படும்
புல்லிய இலைகளையுடைய மூங்கிலின் நெல் விளையும் காடு

 மேல்
 
    உலவை - (பெ) 1. காற்று, wind
                   2. காய்ந்துபோன பொருள், something dry
1.
ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு - நற் 2/2
தழைத்து வளர்ந்த ஈத்த மரங்களையுடைய காற்று வீசும் பாலைநிலத்தில்
2.
அலந்தலை வேலத்து உலவை அம் சினை - பதி 39/12
சிதைந்துபோன தலையையுடைய வேலமரத்தின் காய்ந்துபோன கிளைகளான அழகிய குச்சிகளில்,
ஓமை நீடிய உலவை நீள் இடை - அகம் 369/17
ஓமை மரங்கள் உயர்ந்துள்ள காய்ந்துபோன நீண்ட இடத்தில்

 மேல்
 
    உலறு - (வி) 1. வற்று, காய்ந்துபோ, dry up, wither
                 2. பொலிவிழந்துகிட, lack lustre
1.
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை - புறம் 370/9
மூங்கில்கள் காய்ந்து வற்றிப்போய்க் கிடக்கும் வறம் மிக்க நீண்ட வழியிடம்
2.
நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி - நெடு 138
நல்ல நெற்றியில் பொலிவழிந்து கிடந்த சிலவாகிய மெத்தென்ற மயிரினையும்;

 மேல்
 
    உலை - 1. (வி) 1. உருவிழந்துபோ, உருவிழக்கச்செய், be disoersed, not in order
                   2. கெடு, அழி, be ruined, ruin
             2. (பெ) 1. சமைப்பதற்காக எரியும் அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் நீர்
                  water kept in a vessel on a live oven for cooking
                    2. கொல்லன் பட்டறை, smith's forge
1.1
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி - நற் 310/6
உண்மையைத் தொலைத்த உன் நாவினால் உருக்குலைந்துபோய் வரும் குறுமொழிக்கு
1.2
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி - கலி 26/19
தமக்கு வரும் கேட்டினை அஞ்சித் தன்னை அண்டினோரை, அவர் அழிந்துபோகாமல் காத்துப் பேணி,
2.1.
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் - அகம் 169/7
சுனையில் கொண்ட இனிய நீரால் ஆன சோற்றுக்கான உலையில் கூட்டி ஆக்கும்
2.2.
மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன - பெரும் 207
மிதி(த்து ஊதுகின்ற) உலை(யைக் கொண்ட)கொல்லனுடைய முறிந்த கொறடை ஒத்த

 மேல்
 
    உலைவு - (பெ) 1. தோல்வியினால் நிலைகுலைந்துபோதல், get routed on defeat
                 2. மனம் தளர்ந்துபோதல், weariness,  langour
1.
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து - பெரும் 419
(தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே (வெற்றிக்களிப்புத் தோன்ற)ஆரவாரித்து
2.
உலைவு இல் உள்ளமொடு வினை வலி_உறீஇ - அகம் 325/15
தளர்தல் இல்லாத ஊக்கத்துடன் மேற்கொண்ட செயலௌ வற்புறுத்தி உரைத்தி

 மேல்
 
    உவணம் - (பெ) கருடன், White-headed kite, sacred to Viṣṇu, Haliastur indus;
விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் - பரி 4/42
நஞ்சை உடைய பாம்பின் உடலையும், உயிரையும் உண்ணும் கருடன்

 மேல்
 
    உவர் -  1. (வி) உப்புக்கரி(த்தல்), taste saltish
            2. (பெ) 1. இனிமை, pleasantness
                 2. உப்பு, salt
                 3. களர்நிலம், brackish soil
                 4. கரிப்புச்சுவை, saltishness
                 5. வெறுப்பு, frustration
1.
தைஇ திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர் - குறு 196/5
தை மாதத்துக் குளிர்போன்று குளிரவைத்ததாகக் கொடுத்தாலும்
மிகவும் உவர்ப்பாய் இருக்கிறதென்று கூறுகின்றீர்;
2.1.
வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம் - நற் 52/5
மிக்க இனிமையுடைய கைகளின் அந்த அணைப்பை விட்டு நீங்கிச் செல்லமாட்டோம்;
2.2.
உவர் எழு களரி ஓமை அம் காட்டு - நற் 84/8
உப்புப்பூத்துக் கிடக்கும் களர் நிலத்து ஓமைக்காட்டு
2.3.
உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை - நற் 138/1
களர் நிலத்தில் விளையும் குன்றுகளைப் போன்ற உப்புக்குவியல்களை
2.4.
கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல் - புறம் 331/1
கல்லை உடைத்துச் செய்த மிக்க உவர்ப்புச்சுவையுள்ள நீரைக்கொண்ட கிணறு
2.5
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி - அகம் 136/19
வெறுப்பு நீங்கிய கற்பினையுடைய என் உயிர்க்கு உடம்பாக அடுத்தவள்

 மேல்
 
    உவரி - (பெ) 1. உப்புநீர், கடல், salt water, sea
               2. வெறுப்பு, frustration
1.
வல் ஊற்று உவரி தோண்டி - பெரும் 98
சில்லூற்றாகிய உவரிநீரை முகந்துகொண்டு
2.
உவரி ஒருத்தல் உழாஅது மடிய - குறு 391/1
வெறுத்துப்போன ஆண்பன்றிகள் நிலத்தைக் கிளறாமல் சோம்பியிருக்க

 மேல்
 
    உவல் - (பெ) சருகு, dried leaves
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை - நற் 282/7
அகில் கட்டையை எரிக்கும் குறவன், முதலில் சருகுகளைக் கொளுத்துவதால் எழுகின்ற புகை

 மேல்
 
    உவலை - (பெ) 1. தழை, twigs and sprays
                   2. சிறுமை, meanness, depravity
1.
உவலை கண்ணி வன் சொல் இளைஞர் - மது 311
தழை விரவின கண்ணியினையும் கடிய சொல்லினையுமுடைய இளைஞர்
2.
உவலை கூரா கவலை இல் நெஞ்சின் - பதி 85/11
சிறுமைகூராத கவலை அற்ற நெஞ்சினையும்,

 மேல்
 
    உவவு - (பெ) பௌர்ணமி, அமாவாசை நாள், Full moon and new moon days 
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு - அகம் 201/9
அச்சம் பொருந்திய பெரிய கடல் நிறைமதி நாளில் ஆரவாரித்து எழுந்ததைப் போல்

 மேல்
 
    உவள் - (பெ) அருகிலும் இல்லாமல், தொலைவிலும் இல்லாமல் இடையில் இருப்பவள்
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் - பரி 11/123
காமதேவனின் கருவூலமும், படைக்கலங்களும் ஆகும் இவளின் கண்களைப் பாருங்கள்

	பார்க்க 
	பார்க்க உது

 மேல்
 
    உவற்று - (வி) உவறச்செய், சுரக்கச்செய், cause to swell up
ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு - அகம் 3/8
ஒள்ளிய சிவந்த குருதியை உறிஞ்சி ஊறச்செய்து உண்டு ஆர்ந்து

 மேல்
 
    உவறு - (வி) சுர, spring up
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி - கலி 136/2
சுரக்கின்ற நீர் உயர்ந்த மணல்மேடுகளில், நண்டு ஓடித்திரிவதால் ஏற்பட்ட வரிகள்,

 மேல்
 
    உவன் - (பெ) அருகிலும் இல்லாமல், தொலைவிலும் இல்லாமல் இடையில் இருப்பவன்
உவன் வரின் எவனோ பாண- நற் 127/3
அருகிலிருக்கும் அவன் வருவதால் என்ன பயனோ? பாணனே! 

	பார்க்க 
	பார்க்க உது
	பார்க்க உவள்

 மேல்
 
    உவா - (பெ) 1. உவவு - பார்க்க உவவு
                2. 60 வயதான யானை
1.
எண் மதி நிறை உவா இருள் மதி போல - பரி 11/37
எட்டாம் நாள் திங்களாகி, அமாவாசைக் காலத்து இருண்ட மதியினைப் போன்று
2.
உவா அணி ஊர்ந்தாயும் நீ - கலி 97/25
அந்த 60 வயதான யானையில் அழகாகச் சவாரி செய்தவனும் நீ!

 மேல்
 
    உவி - (வி) சோறு சமை, அவி, cook by boiling
சாந்த விறகின் உவித்த புன்கம் - புறம் 168/11
சந்தன விறகால் சமைத்த சோறு

 மேல்
 
    உவியல் - (பெ) சமைக்கப்பட்ட பண்டம், boiled dish
நெடு வாளை பல் உவியல் - புறம் 395/4
பலவான, நெடிய வாளை மீன்களை அவித்துச் செய்ததை,

 மேல்
 
    உழ - (வி) 1. வருந்து, suffer
               2. வெற்றிபெறு, conquer
1.
அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை - புறம் 146/7
பொறுத்தற்கரிய துயரினால் வருந்தும்  உன்னுடைய திருத்தமான அணிகலன் அணிந்த பெண்
2.
நல் எயில் உழந்த செல்வர் தம்-மின் - மது 731
நல்ல மதில்களை வெற்றிகொண்ட வீரர்களைத் தருவியுங்கள்

 மேல்
 
    உழக்கு - 1. (வி) 1. அழிவு ஏற்படுத்து, ravage, devastate
                    2. சேதப்படுத்து, cause damage
                    3. கலக்கு, stir up
                    4. மிதி, trample down
            - 2. (பெ) கால்படி, 1/4 of a measure
1.1.
சினம் சிறந்து களன் உழக்கவும் - மது 48
வெகுளி மிகுந்து போர்க்களத்தில் அழிவை ஏற்படுத்தவும்
1.2.
நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி - கலி 41/14
நறிய பிஞ்சுகளைக் கொண்ட மாமரத்தின் பசிய கொத்துக்களைச் சேதப்படுத்தி
1.3.
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து - அகம் 210/5
அலைகள் நிறைந்த கடற்பரப்பைக் கலக்கி, வலி குன்றி
1.4.
அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி - கலி 106/20
அவர்களை ஓடஓட விரட்டி மிதித்து, எதிர்த்து நிற்பவர்களை முட்டித்தாக்கி,
2.
வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி - கலி 96/27
மூங்கில் உழக்காகிய நாழியால் சேதிகை என்னும் பச்சை குத்தி

 மேல்
 
    உழல் - (வி) 1. அவதிப்படு, வருந்து, struggle, suffer
                 2. சுற்றித்திரி, wander
1.
திரு மணி அரவு தேர்ந்து உழல - நற் 255/10
அழகிய மணி கொண்ட பாம்பு அதனைத் தேடி வருந்த
2.
ஆதிமந்தி போல பேது உற்று
அலந்தனென் உழல்வென்கொல்லோ - அகம் 45/15
ஆதிமந்தி போல பித்துப்பிடித்து
துயரத்துள் மூழ்கித் திரிவேனோ!

 மேல்
 
    உழிஞ்சில் - (பெ) வாகை மரம், Sirissa, Albizzia;
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் - குறு 39/2
நெற்றாக முதிர்ந்த வாகையின் வற்றல்கள் ஆரவாரிக்கும்

	  	

 மேல்
 
    உழிஞை - (பெ) 1. ஒரு கொடி வகை, balloon vine, Cardiospermum halicacabum
                    2. புறத்திணைகளில் ஒன்று. 
1.
நுண்மையான நீண்ட கொடியினைக் கொண்டது
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை - பதி 44/10
நெடும் கொடி உழிஞை பவரொடு மிடைந்து - புறம் 76/5
சிறிய இலைகளை  உடையது
சிறியிலை உழிஞை தெரியல் சூடி - பதி 63/8
பொன்னிறத் தழைகளை உடையது
பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டி - புறம் 50/4

	  	
2.
உழிஞை-தானே மருதத்து புறனே
முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
அனை நெறி மரபிற்று ஆகும் என்ப - தொல் - புறத்திணை - 9,10

ஓர் அரசன் பகை மன்னரின் கோட்டையை முற்றுகையிடும்போதும், அல்லது
பகை மன்னன் தன் கோட்டையை முற்றுகையிடும்போது அந்தக் கோட்டையைக் காத்து நிற்கும்போதும்
நடைபெறும் போர் உழிஞைப் போர் எனப்படும். அப்போது அந்த அரசர் உழிஞைப்பூ மாலை
சூடிக்கொள்வது வழக்கம். இத்தகைய சூழலைப் பாடும் பாடல்கள் உழிஞைத் திணைப்பாடல்கள்
எனப்படும்.

 மேல்
 
    உழுஞ்சில் - (பெ) உழிஞ்சில், வாகை மரம்
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் - புறம் 370/7

	பார்க்க உழிஞ்சில்

 மேல்
 
    உழுவை - (பெ) 1. புலி, tiger
வெம் சின உழுவை பேழ் வாய் ஏற்றை - நற் 154/5
மிக்க சினத்தையுடைய புலியின் பிளந்த வாயையுடைய ஆண்

 மேல்
 
    உழை - 1. (பெ) 1. மான், deer
                   2. இடம், place
                   3. நான்காவது சுரம், Fourth note of the gamut;
           2. (வி.அ) பக்கத்தில், by the side of
1.1.
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி - மது 310
குழையால் வேய்ந்த குடியிலிருக்கும் மான் தோலாகிய படுக்கையினையும்
1.2.
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே - நற் 279/11
பிறரிடத்துக் கழிந்த என் அழகிய அணிகலன் அணிந்த மகளின் அடிகள்
1.3.
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் - பரி 11/127
கிளை, உழை என்ற சுரங்கள் பொருந்திய, வண்டுகள் பாடும் வண்ணங்கள் கொண்ட பாலைப் பண்ணைக் கேளுங்கள்!
2.
முனை உழை இருந்த அம் குடி சீறூர் - அகம் 367/5
காட்டரண்களின் பக்கத்தே இருந்த அழகிய குடியிருப்புகளையுடைய சிற்றூர்

 மேல்
 
    உள்ளல் - (பெ) 1. நினைத்தல், thinking
                   2. கருதுதல், எண்ணுதல், considering
1.
ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப - நற் 131/1-3
உம்மையன்றித் தனியே ஆடிய விளையாட்டும், நீர் இல்லாமல் தனியே தங்கிய பொழிலும்,
உம்மை நினைக்கலாகாத வருந்துகின்ற நெஞ்சினையும்,
உம்மிடம் ஊடுதலையும் உடையேமோ? உயர்ந்த மணற்பரப்பினையுடைய கடற்கரைத் தலைவனே!
2.
பகல் முனி வெம் சுரம் உள்ளல் அறிந்தேன் - கலி 19/5
ஞாயிறு காயும் கொடிய காட்டுவழியில் செல்ல எண்ணிக்கொண்டிருப்பதை அறிந்தேன்

 மேல்
 
    உள்ளி - (பெ) வெள்ளைப்பூண்டு, garlic
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் - நெடு 121-123
பக்கம் உருண்டிருந்த குடத்தையுடையவாய், (குடத்திற்கும் கட்டிலுக்கும்)நடுவாகிய இடம் ஒழுக மெல்லிதாய் திரண்டு,
உள்ளியின் கெட்டியான பூண்டு(போன்ற உறுப்புக்களை)அமைத்த கால்களைத் தைத்துச் சமைத்து
அகன்ற அளவுகளைக் கொண்ட பெரும் புகழ்(பெற்ற) வட்டக்கட்டில் 

	

 மேல்
 
    உள்ளிவிழவு - (பெ) 
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கி
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃதான்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு
கழுமலம் தந்த நல் தேர் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி_விழவின் வஞ்சியும் சிறிதே - நற் 234
தலைவனுக்காகப் பெண்கேட்டு வந்தோரின் வழிநடை வருத்தத்தையும், உமது
வானத்தைத் தொடுவதுபோன்ற குலப்பெருமையையும் நினைத்துப்பார்த்து,
அழகிய மணிகளைத் தேய்த்து அடித்துக்கொண்டு செல்லும் இவரின் குன்றத்தின் பெருமையைக் கொண்டு,
வளர்கின்ற முலைகளையுடைய மார்பினையுடையவளை வழங்கினால் நல்லது;
அதைவிட்டு, இவர் கொண்டுவந்த பரிசப்பொருள்களை எண்ணுவீராகில், பகைவரின் வெண்கொற்றக்குடையோடு
கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய நல்ல தேரையுடைய சோழனின்
பங்குனி விழாவின்போதான உறந்தைநகரோடு
உள்ளி விழாக் காலத்து வஞ்சியும் மிகவும் சிறியதே.

கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி_விழவின் அன்ன
அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே - அகம் 368/16-19
கொங்கு நாட்டினர்
மணியினை இடையில் கட்டிக்கொண்டு தெருவில் ஆடும்
உள்ளி விழவின் ஆரவாரம் போன்ற
அலராகாநின்றது பலர் வாயிலும் பேசப்பட்டு

’ஊர் துஞ்சாமை என்பது - ஊர்கொண்ட பெருவிழா நாளாய்க் கண்படை யில்லையாமாக, அதுவும் இடையீடாம்
என்பது. அவை, மதுரை ஆவணியவிட்டமே, உறையூர்ப் பங்குனியுத்திரமே, கருவூர் உள்ளிவிழாவே என
இவை போல்வன. பிறவும் எல்லாம் அப் பெற்றியானபொழுதும் இடையீடாம் என்பது’ என்கிறது
இறையனார் களவியலுரை.
எனவே பாண்டிநாட்டு ஆவணி அவிட்டம், சோழநாட்டு பங்குனி உத்திரம் போல சேரநாட்டில் உள்ளிவிழா புகழ்பெற்றது
என அறிகிறோம்.
இந்த உள்ளிவிழவு என்பது சேர கொங்கர்தம் பாரம்பரிய ஆட்டமான சலங்கை கட்டி ஆடுதலேயாம் என்பர். இந்தச்
சலங்கை கட்டி ஆடுதல் என்பது இப்போது இரண்டு கால்களிலும் சலங்கை கட்டி ஆடப்பெறும் ஆட்டம்.

	

மேல்
 
    உள்ளு - (வி) 1. நினை, think of
                  2. திரும்ப நினை, recall
                  3. கருது, எண்ணு, consider
1.
இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே - ஐங் 487/1
இதுவே பிரிந்திருப்போர் ஒருவரையொருவர் நினைத்தேங்கும் மாலைக்காலம்;
2.
உள்ளு-தொறும் நகுவேன் தோழி ----
---------------------------  ----------
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல் என்றலின் ---------
--------------------- -------------------------
----------------------- ------------------------------- அதிரும்
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே - நற் 100
நினைத்து நினைத்துச் சிரிக்கின்றேன் தோழி! --------------------
------------------------- -------------------------
ஆழமான நீரில் முளைத்த ஆம்பல் பூவையுடைய குளிர்ந்த துறையையுடைய ஊரன்
இனிதாய்க் கமழும் என் கூந்தலைப் பற்றி இழுத்து, என் கையிலுள்ள
நீண்டு திரண்டு ஒளிபொருந்திய வளையல்களைக் கவர்ந்த தகராறினால்
வெளியில் கோபங்கொண்ட முகத்தோடு, உள்ளத்தில் கோபமில்லாது, சென்று உனது
மனைவிக்கு உரைப்பேன் என்று சொன்னதினால், -------------------
---------------------- -------------------------------------------
---------------------------------------- ----------------------------- அதிர்ந்துபோன
அந்த நல்லவன் நடுங்கிப்போய் துன்புற்ற நிலையினை
3.
வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே
உள்ளியது முடித்தி வாழ்க நின் கண்ணி - பதி 54/1,2
ஈகை நெஞ்சுடையவன் என்று சொல்லப்படுவதால் உன்னைக் காண்பதற்காக வந்திருக்கிறேன்,
நான் எண்ணியதை முடித்துத்தருவாய்! வாழ்க! உன் தலைமாலை!

 மேல்
 
    உளம்பு - (வி) 1. ஒலியெழுப்பு, howl
                  2. அலை, வருத்து, stir up
1.
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே - குறு 86/5,6
பசுவானது ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்
நாவு ஒலிக்கும் வளைந்த மணியின் மெல்லிய ஓசையை.
2.
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி - அகம் 94/8
குள்ளநரிகளை அலைத்து ஓட்டும் மிக்க இருளில் நீண்ட ஒலி

 மேல்
 
    உளர் - (வி) 1. நீவிவிடு, கோது, 
              preen as birds their feathers, women running fingers through the hair to dry it
              2. உதிர்த்துவிடு, strew, throw about
1.
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும் - குறு 228/1,2
விழுதுகள் தொங்கும் தாழையின் மலரும்நிலையிலுள்ள செழுமையான மொட்டு
கொக்குகள் தம் சிறகைக் கோதும்போது விரியும் இறகுகள் போன்று மடல் அவிழும்
2.
ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே - நற் 319/1,2
ஊதைக்காற்று
பூந்தாதுக்களை உதிர்த்துவிடும் கடற்கரைச் சோலையும் பொலிவிழந்தது;

 மேல்
 
    உளியம் - (பெ) கரடி, bear 
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய - திரு 313,314
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
பெரிய கல் வெடித்த முழைஞ்சிலே சேர

 மேல்
 
    உளை - 1. (வி) வருந்து, grive, suffer
             2. (பெ) 1. விலங்குகளின் பிடரி மயிர், mane of a horse or lion
                 2. துய், மலர்களில் பஞ்சுப்பிசிர் அல்லது மயிர் போன்ற உறுப்பு
                 3. குதிரைகளின் தலையில் சூடப்பெற்றிருக்கும் தலையாட்டம், hair plume on horse's head
1.
சிறு கோல் உளையும் புரவியொடு - புறம் 352/15
சிறிய கோலுக்கு வருந்தும் குதிரைகளுடன்
2.1.
பரிசில் பெற்ற விரி உளை நன் மான் - நற் 185/4
பரிசிலாகப் பெற்ற விரிந்த பிடரி மயிரையுடைய நல்ல குதிரை
2.2.
உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் - ஐங் 7/4
மேலே பஞ்சுபோன்ற நார்முடியைக் கொண்ட பூவினையுடைய மருதமரத்தில் தம் இனத்துடன் பறவைகள் இருக்கும்
2.3
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு 164
(சாதிலிங்கம்)ஊட்டின தலைச்சிறகுகள் அலையாட, பிடரி மயிர் அசைய

 மேல்
 
    உற்கம் - (பெ) எரிநட்சத்திரம், shooting star, meteor
திசை இருநான்கும் உற்கம் உற்கவும் - புறம் 41/4
எட்டுத்திசைகளிலும் எரிநட்சத்திரங்கள் எரிந்து விழவும்

 மேல்
 
    உற்கு - (வி) எரிநட்சத்திரம் விண்ணிலிருந்து எரிந்து விழு, mateor shooting down
திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும் - புறம் 41/4
எட்டுத்திசைகளிலும் எரிநட்சத்திரங்கள் எரிந்து விழவும்

 மேல்
 
    உறத்தூர் - (பெ) சங்க காலத்து ஊர், a city in sangam period
வாள் வாய் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் - அகம் 266/11-13
வாள் வென்றி வாய்ந்த எவ்வி என்பான் தன் ஏவுதலை மேற்கொள்ளாராகிய
பசிய பொன்னணியினையுடைய பகைவரது மிக்க வலிமையைக் கெடுத்த
அரிமணவாயில் உறத்தூராகிய அவ்விடத்தே

பார்க்க : அரிமணவாயில்

 மேல்
 
    உறந்தை - (பெ) சோழர்களின் தலைநகரம், உறையூர், The capital city of chOzhas, uRaiyUr
தற்போதுள்ள திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக இன்றும் உறையூர் உள்ளது.

வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை - குறு 116/2
வளம் பொருந்திய சோழரின் உறந்தையின் பெரிய நீர்த்துறையில்

 மேல்
 
    உறழ் - (வி) 1. ஒத்திரு, resemble
                2. மாறுபடு, be in contrast, be variant
                3. வீணையில் ஒரு நரம்பைவிட்டு ஒரு நரம்பைத் தெறி, twang alternate strings in a vina.
1.             
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி - அகம் 322/10
பிறைமதியினைப் போன்ற கொம்பினையும், அஞ்சாமையினையும் உடைய பன்றி
2.
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்து இவனை
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் - கலி 89/13,14
தோற்பதுபோல் காட்டிக்கொள்வாய்! நெஞ்சே! இவனோடு மாறுபட்டு, இவனைப்
பொய்சொல்ல விடக்கூடாது என்று நெருக்கினால், தப்பித்தேன்
3.
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் - பொரு 23
(நரம்புகளை)(சுட்டுவிரலால்)தெறித்தும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், உந்திவிட்டும், ஒன்றுவிட்டுத் தெறித்தும்

 மேல்
 
    உறி - (பெ) 
தயிர், மோர், உணவுப்பொருள்களைக் கொண்ட பாத்திரங்களைப் பூனை, நாய் போன்ற விலங்குகளிடமிருந்தும்,
குழந்தைகள் ஆகியோரிடமிருந்து பாதுகாப்பாக வைப்பதற்காகவும் தூக்கிச் செல்வதற்கு எளிதாக இருப்பதற்கும்
பயன்படுத்தப்படும் ஒழுங்கமைப்பு உறி ஆகும். இது கயிற்றினால் ஆக்கப்படும். பல சட்டிகளை ஒன்றாக
வைப்பதற்குரியதாய் இருக்கும்
மாடுமேய்க்கப் போகிறவர்கள் இத்தகைய இரண்டு உறிகளில் பொருள்களைவைத்து காவடியின் மூலம் தோளில்
எடுத்துச் செல்வர் என்று கலித்தொகை கூறுகிறது.
கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர்
வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் - கலி 106/1-5
பசுவின் தலையில் கட்டும் கழியும், சூட்டுக்கோலும் வைத்துக் கட்டிய தோல்பையையும்,
ஒன்றோடொன்று கயிற்றினால் கட்டப்பட்ட மண்கலங்களைக் கொண்ட உறியையும் தூக்கிக்கொண்டு
நீண்டிருக்கிற கொன்றைப் பழத்தில் செய்யப்பட்ட இனிய குழலை வாசித்துக்கொண்டவராய்,
கொச்சையான பேச்சுக்களைப் பேசும் கோவலர்கள் தத்தம் மாட்டுக்கூட்டங்களை,
நேரத்தில் வந்த கார் காலத்தில் தோன்றின மழையில் நனைந்த அகன்ற புல்வெளிக்குக் கொண்டுசென்றனர்;

தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை
உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல்
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் - பெரும் 169-175
செருப்பு (விடாமல்)கிடந்த வடு அழுந்தின வலிய அடியினையும்,
விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்,
உறியினையுடைய காவடிகள் (மேலே)இருந்ததனால் தழும்பு உண்டான மயிருடைய தோளினையும்,
மேன்மையான (ஆன்)பாலைத் தடவிய மயிரினையும், உயர்கின்ற உச்சிகளிலுள்ள
கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய
பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும்,
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன் 

சிலர் ஒரே ஒரு உறியில் பொருளை வைத்துக் கையில் தூக்கிச்செல்வதும் உண்டு.  அந்தணர்கள் கையில்
கொண்டு செல்லும் கரகம் என்ற கமண்டலத்தை உறியில் வைத்து எடுத்துச் செல்வதும் உண்டு.

பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் - நற் 142/2-4
கையில் கொண்ட பல கால்களைக் கொண்ட மென்மையான உறியுடன்,
தீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி,
பனையோலைப் பாயை முதுகுப்பக்கம் போட்டிருக்கும் பால் விற்கும் இடையனை,

உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் - கலி 9/2-4
உறியில் தொங்கும் கமண்டலத்தையும், புகழ் பெற்ற முக்கோலினையும்,
முறையாகத் தோளில் சுமந்து, நன்மையைத் தவிரே வேறு ஒன்றனையும் நினைக்காத நெஞ்சத்துடன்,
ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே!

	
	

 மேல்
 
    உறு 1. (வி) 1. படு, come in conatact with
                 2. ஈடுபடு, மேற்கொள், be devoted to
                 3. சேர், பொருந்து, இணை, join together
                 4. அனுபவி, experience
                 5. உள்ளாக்கப்படு, undergo a process
                 6. நோக்கிச் செல், approach
            2. வினைப்படுத்துத்தும் வினை, verbalizer, auxiliary verb
            3. (பெ.அ) மிகுதியாக, மிகுதியான, abundant, copious

1.1.
உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து - முல் 84
அம்பு தைத்த மயில் போல நடுங்கி, அணிகலன்கள் நெகிழ்ந்து,
1.2.
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் - நற் 363/4
மேற்கொண்டுள்ள தொழிலில் தளர்ச்சியடையாமல், சோர்வின்றி இருக்கும் கம்மியன்
1.3.
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல் - பொரு 28
பலவும் சேர்ந்த முத்துக்கள் போல் குற்றம் தீர்ந்த வெண்மையான பல்லினையும்
1.4.
அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் - மது 259
சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகள் படும் வருத்தத்தை
1.5.
காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து - நெடு 134
கஞ்சி போட்டுக் கழுவுதலுக்கு உள்ளாக்கப்பட்ட துகிலின்
1.6.
உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் - நற் 336/7
மிக்க சினத்தையுடைய களிறு, அங்கு வருகின்ற புலியை எதிர்பார்த்திருக்கும்
2.
கவை கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் - புறம் 215/1
பிளவுபட்ட கதிரையுடைய வரகு அரிசியின் குற்றுதலுற்ற சோறு
3.
உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன் - சிறு 122
புலி(போன்ற) மிக்க வலிமையினையும் உடைய ஓவியர் குடியில் தோன்றியவனும்

 
    உறுகண் - (பெ) துன்பம், வருத்தம், suffering, distress
காட்டு மாவும் உறுகண் செய்யா - பெரும் 43
காட்டு விலங்குகளும் துன்பம் விளைவிக்கமாட்டா

 மேல்
 
    உறுநர் - (பெ) 1. சார்ந்திருப்போர், dependant
                  2. ஒன்றனைப் பெற்றிருப்போர், those who get/undergo something
1.
உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் - திரு 4
தன்னைச்சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளை
2.
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் - நற் 47/5
ஆற்றுதற்கரிய புண்ணைப் பெற்றவர் போல வருந்தி இருக்கும்

 
    உறை 1. (வி) 1. தங்கு, dwell
                  2. துளி, drop 
                  3. ஒத்திரு, resemble
                  4. உதிர், fall down, as pollen from flowers  
          2. (பெ) 1. மழை, rain
                 2. பிரை மோர், reserve of curd for curding milk
                 3. கிணற்றுச் சுவர்மண் சரிந்துவிடாமல் இருக்கச் செருகும் வளையம்
                 4. தேன்துளி, மழைத்துளி, drop of honey, rain drop
                 5. கத்தி, வாள் ஆகியவற்றைச்  செருகிவைக்கும் மூடி, sheath 
1.1
மனை உறை புறவின் செம் கால் சேவல் - நெடு 45
வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலையுடைய ஆண்பறவை
1.2
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து - சிறு 51
தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்
1.3
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் - ஐங் 185/2
ஒளிவிடும் முத்தினை ஒத்திருக்கும் பற்கள் பொருந்திய சிவந்த வாயினையும்
1.4
புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் - கலி 39/34
தினைப்புனத்தின் வேங்கை மரம் தன் பூந்தாதுக்களை உதிர்க்கும் பொன் போன்ற பாறை உள்ள முற்றத்தில்
2.1
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் - நற் 201/8
காற்று மோதி வீசினாலும், சீறும் பெருமழை ஓங்கியடித்தாலும்
2.2
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து - பெரும் 158
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
2.3
உறை_கிணற்று புறச்சேரி - பட் 76
உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
2.4
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ - நற் 79/1
மூடியிருக்கின்ற, ஈங்கை மரத்தின் தேன்துளி மிகவும் திரண்டுள்ள அன்றைய மலர்கள்
2.5
உறை கழி வாளின் மின்னி உது காண் - நற் 387/9
உறையிலிருந்து உருவப்பட்ட வாளைப் போல மின்னி, அங்கே பார்!

 
    உன்னம் - (பெ) 1. நிமித்தம் காட்டும் ஒரு வகை மரம், a kind of tree that was believed for omens
                 2. கருத்து, thought, intension
1.
புன் கால் உன்னம் சாய  - பதி 40/17
புல்லிய கால்களையுடைய உன்னமரம் வாடி அழிய
2.
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் - அகம் 65/1
நம் கருத்தினை உணர்ந்து கொண்ட அறிவுடன் தன் உள்ளத்தை மறைத்து வாழும்

 மேல்
 
    உன்னு - (வி) நினை, கருது, think, condiser
நனி சேய் நாட்டர் நம் உன்னலரே - குறு 380/4
மிகவும் தொலைவிலுள்ள நாட்டிலுள்ளவர் நம்மை எண்ணிப்பார்த்திலரே

 மேல்