<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
வௌ - முதல் சொற்கள்
வௌவல்
வௌவு
இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  வௌவல் - (பெ) கவர்தல், கவ்வுதல், seizing, snatching
யாம் பெற்றேம்
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் - பரி 8/83,84
நாம் அறிந்தோம்,
ஒருவரிடத்தும் பொய்க்காத உன் மெய்மை அற்ற சூள் உன்னைக் கவர்ந்துகொள்ளும் என்பதனை;

வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் - பரி 15/50
நம்மைக் கவ்விக்கொள்ளும் கரிய இருள் போன்ற நீலமணி நிற மேனியன்

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் - கலி 133/13
முறை எனப்படுவது வேண்டியவர் என்று பார்க்காமல் குற்றம் இழைத்திருந்தால் அவரின் உயிரைக் கவர்தல்


 மேல்
 
  வௌவு - (வி) 1. பறி, கைப்பற்று, seize, snatch
         2. வழிப்பறி செய், கொள்ளையடி, rob
1.
தெண் திரை பாவை வௌவ
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே - ஐங் 125/2,3
தெளிந்த அலைகள் மணற்பாவையை அடித்துச் செல்ல
மையுண்ட கண்கள் சிவந்துபோகுமாறு அழுதுகொண்டு நின்றிருந்தவளை 
2.
அத்தம் செல்வோர் அலற தாக்கி
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை
கொடியோர் - பெரும் 39-41
(வேறு ஊர்களுக்கான)வழியில் போவாரை (அவர்)கதறும்படி வெட்டி,
(அவர்)உடைமைகளைக் கொள்ளையடிக்கும் களவே உழவு (போலத் தொழிலாகவுடைய)வாழ்வாகக்கொண்ட
கொடியவர்

 மேல்