நற்றிணை

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

      0 -   50
    51 - 100
  101 - 150
  151 - 200
  201 - 250
  251 - 300
  301 - 350
  351 - 400
  தேவையான
  பாடல் எண்
  எல்லையைத்
  தட்டுக

   
    சொற்பிரிப்பு மூலம்

           # 0 கடவுள் வாழ்த்து 
	
	மா நிலம் சேவடி ஆக தூ நீர்
	வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
	விசும்பு மெய் ஆக திசை கை ஆக
	பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
5	இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
	வேத முதல்வன் என்ப
	தீது அற விளங்கிய திகிரியோனே		
				மேல்
	# 1 குறிஞ்சி
	
	நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
	என்றும் என் தோள் பிரிபு அறியலரே
	தாமரை தண் தாது ஊதி மீமிசை
	சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
5	புரைய மன்ற புரையோர் கேண்மை
	நீர் இன்று அமையா உலகம் போல
	தம் இன்று அமையா நம் நயந்து அருளி
	நறு நுதல் பசத்தல் அஞ்சி
	சிறுமை உறுபவோ செய்பு அறியலரே
				மேல்
	# 2 பாலை
	
	அழுந்துபட வீழ்ந்த பெரும் தண் குன்றத்து
	ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு
	ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
	செம் மறு தலைய நெய்த்தோர் வாய
5	வல்லிய பெரும் தலை குருளை மாலை
	மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே
	வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று
	எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம்
	காலொடு பட்ட மாரி
10	மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே	
				மேல்
	# 3 பாலை

	ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை
	பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
	கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து
	கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
5	வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர்
	சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
	உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
	வினை முடித்து அன்ன இனியோள்
	மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே
				மேல்
	# 4 நெய்தல்

	கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்
	நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ
	தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
	அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு
5	அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
	அரிய ஆகும் நமக்கு என கூறின்
	கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர்
	வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
	கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்
10	மணல் மடுத்து உரறும் ஓசை கழனி
	கரும் கால் வெண்_குருகு வெரூஉம்
	இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே
				மேல்
	# 5 குறிஞ்சி

	நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப
	அகல் வாய் பைம் சுனை பயிர் கால்யாப்ப
	குறவர் கொன்ற குறை கொடி நறை பவர்
	நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
5	பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
	தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும்
	அரிதே காதலர் பிரிதல் இன்று செல
	இளையர் தரூஉம் வாடையொடு
	மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே
				மேல்
	# 6 குறிஞ்சி

	நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால்
	நார் உரித்து அன்ன மதன் இல் மாமை
	குவளை அன்ன ஏந்து எழில் மழை கண்
	திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு
5	எய்த சென்று செப்புநர் பெறினே
	இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது
	அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி
	எறி மட மாற்கு வல்சி ஆகும்
	வல் வில் ஓரி கானம் நாறி
10	இரும் பல் ஒலிவரும் கூந்தல்
	பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே
				மேல்
	# 7 பாலை

	சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க
	பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப
	கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று
	கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப
5	தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்
	இன்னே பெய்ய மின்னுமால் தோழி
	வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
	தண் நறும் சிலம்பில் துஞ்சும்
	சிறியிலை சந்தின வாடு பெரும் காட்டே
				மேல்
	# 8 குறிஞ்சி

	அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண்
	பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல்
	திரு மணி புரையும் மேனி மடவோள்
	யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர்
5	துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல்
	அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும்
	தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள்
	கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
	திண் தேர் பொறையன் தொண்டி
10	தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே		
				மேல்
	# 9 பாலை

	அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள்
	வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு
	அலமரல் வருத்தம் தீர யாழ நின்
	நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின்
5	பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி
	சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி
	நிழல் காண்-தோறும் நெடிய வைகி
	மணல் காண்-தோறும் வண்டல் தைஇ
	வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே
10	மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
	நறும் தண் பொழில கானம்
	குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே
				மேல்
	# 10 பாலை

	அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்
	பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
	நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும்
	நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர
5	இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர்
	கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்
	வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
	பழையன் வேல் வாய்த்து அன்ன நின்
	பிழையா நன் மொழி தேறிய இவட்கே
				மேல்
	# 11 நெய்தல்

	பெய்யாது வைகிய கோதை போல
	மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப
	உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
	வாரார் என்னும் புலவி உட்கொளல்
5	ஒழிக மாள நின் நெஞ்சத்தானே
	புணரி பொருத பூ மணல் அடைகரை
	ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
	வலவன் வள்பு ஆய்ந்து ஊர
	நிலவு விரிந்தன்றால் கானலானே
			மேல்
	# 12 பாலை

	விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி
	பாசம் தின்ற தேய் கால் மத்தம்
	நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
	வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்
5	அரி அமை சிலம்பு கழீஇ பன் மாண்
	வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
	இவை காண்-தோறும் நோவர் மாதோ
	அளியரோ அளியர் என் ஆயத்தோர் என
	நும்மொடு வரவு தான் அயரவும்
10	தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே
				மேல்
	# 13 குறிஞ்சி

	எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
	அழாஅதீமோ நொதுமலர் தலையே
	ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த
	பகழி அன்ன சே அரி மழை கண்
5	நல்ல பெரும் தோளோயே கொல்லன்
	எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
	வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி
	மயில் அறிபு அறியா-மன்னோ
	பயில் குரல் கவரும் பைம் புற கிளியே
				மேல்
	# 14 பாலை

	தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய
	நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்
	நட்டனர் வாழி தோழி குட்டுவன்
	அகப்பா அழிய நூறி செம்பியன்
5	பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது
	அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து
	மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல்
	இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என
	துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல்
10	நெடு வரை விடர்_அகத்து இயம்பும்
	கடு மான் புல்லிய காடு இறந்தோரே
				மேல்
	# 15 நெய்தல்

	முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
	நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள
	ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப
	பூவின் அன்ன நலம் புதிது உண்டு
5	நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே
	நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கி
	மாசு இல் கற்பின் மடவோள் குழவி
	பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு
	சேணும் எம்மொடு வந்த
10	நாணும் விட்டேம் அலர்க இ ஊரே
				மேல்
	# 16 பாலை

	புணரின் புணராது பொருளே பொருள்_வயின்
	பிரியின் புணராது புணர்வே ஆயிடை
	செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
	உரியை வாழி என் நெஞ்சே பொருளே
5	வாடா பூவின் பொய்கை நாப்பண்
	ஓடு மீன் வழியின் கெடுவ யானே
	விழு நீர் வியல்_அகம் தூணி ஆக
	எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்
	கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண்
10	அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்
	எனைய ஆகுக வாழிய பொருளே
				மேல்
	# 17 குறிஞ்சி

	நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்து
	மால் கடல் திரையின் இழிதரும் அருவி
	அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி
	தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
5	ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னை
	எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என
	மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து
	உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
	உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்
10	காந்தள் ஊதிய மணி நிற தும்பி
	தீம் தொடை நரம்பின் இமிரும்
	வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே
				மேல்
	# 18 பாலை

	பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
	வருவர் வாழி தோழி மூவன்
	முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
	கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல்
5	தெறல் அரும் தானை பொறையன் பாசறை
	நெஞ்சு நடுக்கு_உறூஉம் துஞ்சா மறவர்
	திரை தபு கடலின் இனிது கண்படுப்ப
	கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை
	தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன
10	ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே
				மேல்
	# 19 நெய்தல்
	
	இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
	சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை
	பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு
	நன் மான் உழையின் வேறுபட தோன்றி
5	விழவு_களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப
	இன மணி நெடும் தேர் பாகன் இயக்க
	செலீஇய சேறி ஆயின் இவளே
	வருவை ஆகிய சில் நாள்
	வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே
				மேல்
	# 20 மருதம்

	ஐய குறு_மகள் கண்டிகும் வைகி
	மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்
	தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
	துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர
5	செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில்
	பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி
	சென்றனள் வாழிய மடந்தை நுண் பல்
	சுணங்கு அணிவு_உற்ற விளங்கு பூணள்
	மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை
10	பழம் பிணி வைகிய தோள் இணை
	குழைந்த கோதை கொடி முயங்கலளே
					மேல்
	# 21 முல்லை

	விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
	அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
	வேண்டு அமர் நடையர் மென்மெல வருக
	தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
5	ஏ-மதி வலவ தேரே உது காண்
	உருக்கு_உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன
	அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி
	காமரு தகைய கான வாரணம்
	பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
10	புலரா ஈர் மணல் மலிர கெண்டி
	நாள்_இரை கவர மாட்டி தன்
	பேடை நோக்கிய பெரும் தகு நிலையே
					மேல்
	# 22 குறிஞ்சி

	கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை
	முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி
	கல்லா கடுவனொடு நல் வரை ஏறி
	அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன்
5	திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி
	வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
	கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
	வந்தனன் வாழி தோழி உலகம்
	கயம் கண் அற்ற பைது அறு காலை
10	பீளொடு திரங்கிய நெல்லிற்கு
	நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே
					மேல்
	# 23 குறிஞ்சி

	தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே
	வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின்
	இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள
	அன்னை காக்கும் தொல் நலம் சிதைய
5	காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
	முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை
	சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
	தெண் நீர் மலரின் தொலைந்த
	கண்ணே காமம் கரப்பு அரியவ்வே
					மேல்
	# 24 பாலை

	பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு
	உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின்
	ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு
	கம்பலத்து அன்ன பைம் பயிர் தாஅம்
5	வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை
	சேறும் நாம் என சொல்ல சே_இழை
	நன்று என புரிந்தோய் நன்று செய்தனையே
	செயல்படு மனத்தர் செய்_பொருட்கு
	அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே
					மேல்
	# 25 குறிஞ்சி

	அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன
	செம் வரி இதழ சேண் நாறு பிடவின்
	நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்
	பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம்
5	வள மலை நாடன் நெருநல் நம்மொடு
	கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ
	சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது
	அல்லல் அன்று அது காதல் அம் தோழி
	தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
10	வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி
	கண்டும் கழல் தொடி வலித்த என்
	பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே
					மேல்
	# 26 பாலை

	நோகோ யானே நெகிழ்ந்தன வளையே
	செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
	விண்டு புரையும் புணர் நிலை நெடும் கூட்டு
	பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய
5	சுடர் முழுது எறிப்ப திரங்கி செழும் காய்
	முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு
	கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று
	பொன் பொதிந்து அன்ன சுணங்கின்
	இரும் சூழ் ஓதி பெரும் தோளாட்கே
					மேல்
	# 27 நெய்தல்

	நீயும் யானும் நெருநல் பூவின்
	நுண் தாது உறைக்கும் வண்டு_இனம் ஓப்பி
	ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரை
	கழி சூழ் கானல் ஆடியது அன்றி
5	கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின்
	பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும்
	எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு
	இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம்
	கழி சேர் மருங்கின் கணை கால் நீடி
10	கண் போல் பூத்தமை கண்டு நுண் பல
	சிறு பாசடைய நெய்தல்
	குறுமோ சென்று என கூறாதோளே
					மேல்
	# 28 பாலை

	என் கை கொண்டு தன் கண் ஒற்றியும்
	தன் கை கொண்டு என் நன் நுதல் நீவியும்
	அன்னை போல இனிய கூறியும்
	கள்வர் போல கொடியன் மாதோ
5	மணி என இழிதரும் அருவி பொன் என
	வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
	ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில்
	ஓடு மழை கிழிக்கும் சென்னி
	கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே
					மேல்
	# 29 பாலை

	நின்ற வேனில் உலந்த காந்தள்
	அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது
	ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என
	மான்ற மாலை வழங்குநர் செகீஇய
5	புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி
	யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன்
	வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என
	நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன்
	பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ
10	வெய்ய உயிர்க்கும் சாயல்
	மை ஈர் ஓதி பெரு மட தகையே
					மேல்
	# 30 மருதம்

	கண்டனென் மகிழ்ந கண்டு எவன் செய்கோ
	பாணன் கையது பண்பு உடை சீறியாழ்
	யாணர் வண்டின் இம்மென இமிரும்
	ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின்
5	மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர்
	கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி
	கால் ஏமுற்ற பைதரு காலை
	கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு
	பலர் கொள் பலகை போல
10	வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே
					மேல்
	# 31 நெய்தல்
	
	மா இரும் பரப்பு_அகம் துணிய நோக்கி
	சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை
	பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால்
	தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும்
5	சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே
	பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து
	யானும் இனையேன் ஆயின் ஆனாது
	வேறு பல் நாட்டில் கால் தர வந்த
	பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
10	நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்_குருகு
	உலவு திரை ஓதம் வெரூஉம்
	உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே
					மேல்
	# 32 குறிஞ்சி

	மாயோன் அன்ன மால் வரை கவாஅன்
	வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
	அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
	வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய்
5	நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
	அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
	அரிய வாழி தோழி பெரியோர்
	நாடி நட்பின் அல்லது
	நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே
					மேல்
	# 33 பாலை

	படு_சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை
	முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை
	புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து
	கல் உடை படுவில் கலுழி தந்து
5	நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்
	துவர் செய் ஆடை செம் தொடை மறவர்
	அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை
	இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்
	வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என
10	விம்மு_உறு கிளவியள் என் முகம் நோக்கி
	நல் அக வன முலை கரை சேர்பு
	மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே
					மேல்
	# 34 குறிஞ்சி

	கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த
	பறியா குவளை மலரொடு காந்தள்
	குருதி ஒண் பூ உரு கெழ கட்டி
	பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள்
5	அருவி இன் இயத்து ஆடும் நாடன்
	மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
	நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
	கார் நறும் கடம்பின் கண்ணி சூடி
	வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்
10	கடவுள் ஆயினும் ஆக
	மடவை மன்ற வாழிய முருகே
					மேல்
	# 35 நெய்தல்

	பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை
	புன் கால் நாவல் பொதி புற இரும் கனி
	கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்து
	பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
5	கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
	இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
	துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
	பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய
	உழையின் போகாது அளிப்பினும் சிறிய
10	ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ மகிழ்ந்தோர்
	கள் களி செருக்கத்து அன்ன
	காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே
					மேல்
	# 36 குறிஞ்சி

	குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை
	பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி
	தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம்
	கல்_அக வெற்பன் சொல்லின் தேறி
5	யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து
	அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
	புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து
	ஆனா கௌவைத்து ஆக
	தான் என் இழந்தது இ அழுங்கல் ஊரே
					மேல்
	# 37 பாலை

	பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலை
	உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி
	பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று
	இவளொடும் செலினோ நன்றே குவளை
5	நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ
	கலை ஒழி பிணையின் கலங்கி மாறி
	அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம்
	ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
	அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு
10	ஆர் கலி நல் ஏறு திரிதரும்
	கார் செய் மாலை வரூஉம் போழ்தே
					மேல்
	# 38 நெய்தல்

	வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப
	பாட்டம் பொய்யாது பரதவர் பகர
	இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும்
	ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு
5	மெல்லம்புலம்பன் பிரியின் புல்லென
	புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர்
	கழி சூழ் படப்பை காண்ட_வாயில்
	ஒலி கா ஓலை முள் மிடை வேலி
	பெண்ணை இவரும் ஆங்கண்
10	வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே
					மேல்
	# 39 குறிஞ்சி

	சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின்
	திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென
	காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
	கொடும் கேழ் இரும் புறம் நடுங்க குத்தி
5	புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்
	தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின்
	கண்ணே கதவ அல்ல நண்ணார்
	அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு
	ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
10	பெரும் பெயர் கூடல் அன்ன நின்
	கரும்பு உடை தோளும் உடையவால் அணங்கே
					மேல்
	# 40 மருதம

	நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட
	குரை இலை போகிய விரவு மணல் பந்தர்
	பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார்
	திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப
5	வெறி_உற விரிந்த அறுவை மெல் அணை
	புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
	ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி
	பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை
	சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த
10	நள்ளென் கங்குல் கள்வன் போல
	அகன் துறை ஊரனும் வந்தனன்
	சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே
					மேல்
	# 41 பாலை

	பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த
	வெண் புற களரி விடு நீறு ஆடி
	சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய
	பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
5	நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோ
	எல்லி வந்த நல் இசை விருந்திற்கு
	கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
	விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி
	சிறு நுண் பல் வியர் பொறித்த
10	குறு நடை கூட்டம் வேண்டுவோரே
					மேல்
	# 42 முல்லை

	மறத்தற்கு அரிதால் பாக பல் நாள்
	அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
	பழ மழை பொழிந்த புது நீர் அவல
	நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை
5	மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால்
	ஏகு-மின் என்ற இளையர் வல்லே
	இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென
	மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ
	சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
10	அ நிலை புகுதலின் மெய் வருத்து_உறாஅ
	அவிழ் பூ முடியினள் கவைஇய
	மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே
					மேல்
	# 43 பாலை

	துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின்
	என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன்
	ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
	ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
5	அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
	வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே
	மெய்ம் மலி உவகை ஆகின்று இவட்கே
	அஞ்சல் என்ற இறை கைவிட்டு என
	பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்
10	களையுநர் காணாது கலங்கிய உடை மதில்
	ஓர் எயின் மன்னன் போல
	அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே
					மேல்
	# 44 குறிஞ்சி

	பொரு இல் ஆயமோடு அருவி ஆடி
	நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண்
	குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
	மனை வயின் பெயர்ந்த_காலை நினைஇயர்
5	நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த
	நீடு இலை விளை தினை கொடும் கால் நிமிர
	கொழும் குரல் கோடல் கண்ணி செழும் பல
	பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில்
	குட காய் ஆசினி படப்பை நீடிய
10	பன் மர உயர் சினை மின்மினி விளக்கத்து
	செல் மழை இயக்கம் காணும்
	நன் மலை நாடன் காதல் மகளே
					மேல்
	# 45 நெய்தல்

	இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
	நீல் நிற பெரும் கடல் கலங்க உள் புக்கு
	மீன் எறி பரதவர் மகளே நீயே
	நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்
5	கடும் தேர் செல்வன் காதல் மகனே
	நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி
	இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ
	புலவு நாறுதும் செல நின்றீமோ
	பெரு_நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
10	நும்மொடு புரைவதோ அன்றே
	எம்மனோரில் செம்மலும் உடைத்தே
					மேல்
	# 46 பாலை

	வைகல்-தோறும் இன்பமும் இளமையும்
	எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து
	காணீர் என்றலோ அரிதே அது நனி
	பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி
5	பூண் அணி ஆகம் புலம்ப பாணர்
	அயிர்ப்பு கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி
	பறை அறை கடிப்பின் அறை அறையா துயல்வர
	வெம் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து
	எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து
10	நன் வாய் அல்லா வாழ்க்கை
	மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே
					மேல்
	# 47 குறிஞ்சி

	பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி
	உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
	நெய்தல் பாசடை புரையும் அம் செவி
	பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென
5	அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்
	கானக நாடற்கு இது என யான் அது
	கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து
	அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி
	வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
10	அன்னை அயரும் முருகு நின்
	பொன் நேர் பசலைக்கு உதவா மாறே
					மேல்
	# 48 பாலை

	அன்றை அனைய ஆகி இன்றும் எம்
	கண் உள போல சுழலும் மாதோ
	புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ
	வைகுறு_மீனின் நினைய தோன்றி
5	புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை
	கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
	வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
	அமர் இடை உறுதர நீக்கி நீர்
	எமர் இடை உறுதர ஒளித்த காடே
					மேல்
	# 49 நெய்தல்

	படு திரை கொழீஇய பால் நிற எக்கர்
	தொடியோர் மடிந்து என துறை புலம்பின்றே
	முடி வலை முகந்த முடங்கு இறா பாவை
	படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே
5	கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து
	எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என
	சென்று யாம் அறியின் எவனோ தோழி
	மன்ற புன்னை மா சினை நறு வீ
	முன்றில் தாழையொடு கமழும்
10	தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே
					மேல்
	# 50 மருதம்

	அறியாமையின் அன்னை அஞ்சி
	குழையன் கோதையன் குறும் பைம் தொடியன்
	விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல
	நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
5	நொதுமலாளன் கதுமென தாக்கலின்
	கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என
	யாணது பசலை என்றனன் அதன் எதிர்
	நாண் இலை எலுவ என்று வந்திசினே
	செறுநரும் விழையும் செம்மலோன் என
10	நறு நுதல் அரிவை போற்றேன்
	சிறுமை பெருமையின் காணாது துணிந்தே      மேல்



 



# 51 குறிஞ்சி

யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழை
காம்பு உடை விடர்_அகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல்
கடும் குரல் ஏறொடு கனை துளி தலைஇ
பெயல் ஆனாதே வானம் பெயலொடு		5
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே
பெரும் தண் குளவி குழைத்த பா அடி
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு
பேதை ஆசினி ஒசித்த				10
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே
					மேல்
# 52 பாலை

மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம்		5
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெருமகன் மா வள் ஓரி
கைவளம் இயைவது ஆயினும்			10
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே
					மேல்
# 53 குறிஞ்சி

யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ
எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது
வான் உற நிவந்த பெரு மலை கவாஅன்
ஆர் கலி வானம் தலைஇ நடுநாள்			5
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆட பெறின் இவள்			10
பனியும் தீர்குவள் செல்க என்றோளே
					மேல்
# 54 நெய்தல்

வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை		5
அது நீ அறியின் அன்பு-மார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணி புறம் தைவரும்			10
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே
					மேல்
# 55 குறிஞ்சி

ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின்		5
கண் கோள் ஆக நோக்கி பண்டும்
இனையையோ என வினவினள் யாயே
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து
என் முகம் நோக்கியோளே அன்னாய்
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த	10
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே
					மேல்
# 56 பாலை

குறு நிலை குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ
சென்ற நெஞ்சம் செய்_வினைக்கு அசாவா		5
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி
ஏதிலாட்டி இவள் என
போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே		10
					மேல்
# 57 குறிஞ்சி

தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியா குறுகி
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால்		5
கல்லா வன் பறழ் கை நிறை பிழியும்
மா மலை நாட மருட்கை உடைத்தே
செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்_காலை எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே		10
					மேல்
# 58 நெய்தல்

பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர்
சிறு தோள் கோத்த செ அரி_பறையின்
கண்_அகத்து எழுதிய குரீஇ போல
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன்		5
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப நுண் பனி அரும்ப
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து
அவல நெஞ்சினம் பெயர உயர் திரை
நீடு நீர் பனி துறை சேர்ப்பன்			10
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே
					மேல்
# 59 முல்லை

உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து
நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்ட தொடை மறந்து இல்லத்து
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும்		5
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
நம்_வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே	10
					மேல்
# 60 மருதம்

மலை கண்டு அன்ன நிலை புணர் நிவப்பின்
பெரு நெல் பல கூட்டு எருமை உழவ
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு		5
கவர் படு கையை கழும மாந்தி
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின்
நடுநரொடு சேறி ஆயின் அவண
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல்
மா இரும் கூந்தல் மடந்தை			10
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே
					மேல்
# 61 குறிஞ்சி

கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை
துஞ்சாயோ என் குறு_மகள் என்றலின்		5
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு
கண்ணும் படுமோ என்றிசின் யானே		10
					மேல்
# 62 பாலை

வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று	5
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள்
உரறு குரல் வெம் வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே		10
					மேல்
# 63 நெய்தல்

உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்
கல்லென் சேரி புலவர் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்		5
அறன் இல் அன்னை அரும் கடி படுப்ப
பசலை ஆகி விளிவது-கொல்லோ
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம்			10
மலி திரை சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே
					மேல்
# 64 குறிஞ்சி

என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்ன ஆக இனையல் தோழி யாம்
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன்
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலை சாந்தம்		5
வறன்_உற்று ஆர முருக்கி பையென
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என்
அறிவும் உள்ளமும் அவர்_வயின் சென்று என
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது		10
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே
					மேல்
# 65 குறிஞ்சி

அமுதம் உண்க நம் அயல் இலாட்டி
கிடங்கில் அன்ன இட்டு கரை கான்யாற்று
கலங்கும் பாசி நீர் அலை கலாவ
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து
புலியொடு பொருத புண் கூர் யானை		5
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர்
வில் சுழி பட்ட நாம பூசல்
உரும் இடை கடி இடி கரையும்
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே
					மேல்
# 66 பாலை

மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி
புன் புறா உயவும் வெம் துகள் இயவின்		5
நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும்
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ
கோதை மயங்கினும் குறும் தொடி நெகிழினும்
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்
மாண் நலம் கையற கலுழும் என்			10
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே
					மேல்
# 67 நெய்தல்

சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே
இறவு அருந்தி எழுந்த கரும் கால் வெண்_குருகு
வெண் கோட்டு அரும் சிறை தாஅய் கரைய
கரும் கோட்டு புன்னை இறைகொண்டனவே		5
கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி
துணை சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை
எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர் அதனால்
தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர்		10
முழவு இசை புணரி எழுதரும்
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே
					மேல்
# 68 குறிஞ்சி

விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்		5
வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள்
கொடி நுடங்கு இலங்கின மின்னி
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே	10
					மேல்
# 69 முல்லை

பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய
பறவை பார்ப்பு_வயின் அடைய புறவில்
மா எருத்து இரலை மட பிணை தழுவ
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின்		5
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி
கொடும் கோல் கோவலர் குழலோடு ஒன்றி
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்		10
இனைய ஆகி தோன்றின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே
					மேல்
# 70 மருதம்

சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவை தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ
சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி	5
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே
					மேல்
# 71 பாலை

மன்னா பொருள்_பிணி முன்னி இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என
விடுநள் ஆதலும் உரியள் விடினே
கண்ணும் நுதலும் நீவி முன் நின்று		5
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ண புறவின் செம் கால் சேவல்
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்ப கேள்-தொறும்			10
பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே
					மேல்
# 72 நெய்தல்

பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணு_தக்கன்று அது காணும்_காலை
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது
அழி_தக்கன்றால் தானே கொண்கன்		5
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என்
பிரிதல் சூழான்-மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால்
புலர்வது-கொல் அவன் நட்பு எனா		10
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே
					மேல்
# 73 பாலை

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய் பேஎய்
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய		5
செல்ப என்ப தாமே செ வரி
மயிர் நிரைத்து அன்ன வார் கோல் வாங்கு கதிர்
செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என்
நுதல் கவின் அழிக்கும் பசலையும்		10
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே
					மேல்
# 74 நெய்தல்

வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை
இடி குரல் புணரி பௌவத்து இடு-மார்
நிறைய பெய்த அம்பி காழோர்
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை		5
ஏதிலாளனும் என்ப போது அவிழ்			
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல்
கண்டல் வேலிய ஊர் அவன்			10
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே
					மேல்
# 75 குறிஞ்சி

நயன் இன்மையின் பயன் இது என்னாது
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை
பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது
தகாஅது வாழியோ குறு_மகள் நகாஅது
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல்		5
கொடு வில் கானவன் கோட்டு_மா தொலைச்சி
பச்சூன் பெய்த பகழி போல
சே அரி பரந்த மா இதழ் மழை கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யும் மாறே			10
					மேல்
# 76 பாலை

வரு மழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி
அஞ்சு_வழி அஞ்சாது அசை_வழி அசைஇ
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள்		5
இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ
கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கே
					மேல்
# 77 குறிஞ்சி

மலையன் மா ஊர்ந்து போகி புலையன்
பெரும் துடி கறங்க பிற புலம் புக்கு அவர்
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு
உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர்
சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின்	5
சுளை உடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை ஒண் நுதல்		10
திதலை அல்குல் குறு_மகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே
					மேல்
# 78 நெய்தல்

கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்
வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல்
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை		5
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலி_மா
வலவன் கோல் உற அறியா			10
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே
					மேல்
# 79 பாலை

சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ
கூரை நன் மனை குறும் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம்
ஏர்தரல் உற்ற இயக்கு அரும் கவலை
பிரிந்தோர் வந்து நம் புணர புணர்ந்தோர்		5
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ
என்று நாம் கூறி காமம் செப்புதும்
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று
அம்ம வாழி தோழி
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே		10
					மேல்
# 80 மருதம்

மன்ற எருமை மலர் தலை காரான்
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு
ஊர் குறு_மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பி போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன் என		5
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ
தைஇ திங்கள் தண் கயம் படியும்
பெரும் தோள் குறு_மகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே
					மேல்
# 81 முல்லை

இரு நிலம் குறைய கொட்டி பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்
மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப
பூண்க தில் பாக நின் தேரே பூண் தாழ்		5
ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன் நகை காண்கம்
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே		10
					மேல்
# 82 குறிஞ்சி

நோயும் நெகிழ்ச்சியும் வீட சிறந்த
வேய் வனப்பு உற்ற தோளை நீயே
என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சி
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே		5
போகிய நாக போக்கு அரும் கவலை
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ
கோள் நாய் கொண்ட கொள்ளை			10
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே
					மேல்
# 83 குறிஞ்சி

எம் ஊர் வாயில் உண்துறை தடைஇய
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்		5
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும்
எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சு வர கடும் குரல் பயிற்றாதீமே
					மேல்
# 84 பாலை

கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
திதலை அல்குலும் பல பாராட்டி
நெருநலும் இவணர்-மன்னே இன்றே
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர்
மரன் இல் நீள் இடை மான் நசை_உறூஉம்		5
சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பிடத்து அன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம்
ஏகுவர் என்ப தாமே தம்_வயின்			10
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே
					மேல்
# 85 குறிஞ்சி

ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும்
வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும்
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்
குறு வரி இரும் புலி அஞ்சி குறு நடை
கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும்		5
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி
வாரற்க தில்ல தோழி சாரல்
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும்			10
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே
					மேல்
# 86 பாலை

அறவர் வாழி தோழி மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்_தக
கைவல் வினைவன் தையுபு சொரிந்த		5
சுரிதக உருவின ஆகி பெரிய
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே
					மேல்
# 87 நெய்தல்

உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின்
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு
நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு		5
பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடி பரதவர் மகிழ்ச்சியும்
பெரும் தண் கானலும் நினைந்த அ பகலே
					மேல்
# 88 குறிஞ்சி

யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை
வருந்தல் வாழி தோழி யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழு-மதி புணர் திரை
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்று ஆஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உது காண்		5
தம்மோன் கொடுமை நம்_வயின் எற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவி ஆக
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே
					மேல்
# 89 முல்லை

கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர்
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள்
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின்		5
அகல் இலை அகல வீசி அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா
வன்கணாளரோடு இயைந்த			10
புன்கண் மாலையும் புலம்பும் முந்து_உறுத்தே
					மேல்
# 90 மருதம்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பான்மையின் பெரும் கைதூவா
வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடி			5
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள்
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா			10
நயன் இல் மாக்களொடு கெழீஇ
பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையே
					மேல்
# 91 நெய்தல்

நீ உணர்ந்தனையே தோழி வீ உக
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரை
பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன்		5
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்
பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய
புள் உயிர் கொட்பின் வள் உயிர் மணி தார்		10
கடு மா பூண்ட நெடும் தேர்
நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே
					மேல்
# 92 பாலை

உள்ளார்-கொல்லோ தோழி துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்ட சீறூர் அகன் கண் கேணி			5
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர்
புன் தலை மட பிடி கன்றோடு ஆர
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே
					மேல்
# 93 குறிஞ்சி

பிரசம் தூங்க பெரும் பழம் துணர
வரை வெள் அருவி மாலையின் இழிதர
கூலம் எல்லாம் புலம் புக நாளும்
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட		5
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி
மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள்
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல்		10
மயிர் கண் முரசினோரும் முன்
உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே
					மேல்
# 94 நெய்தல்

நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில்
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி
கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர்		5
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன்
என்ன மகன்-கொல் தோழி தன்_வயின்
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே
					மேல்
# 95 குறிஞ்சி

கழை பாடு இரங்க பல் இயம் கறங்க
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவ தீம் கனி அன்ன செம் முக
துய் தலை மந்தி வன் பறழ் தூங்க
கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து	5
குற குறு_மாக்கள் தாளம் கொட்டும் அ
குன்றகத்ததுவே குழு மிளை சீறூர்
சீறூரோளே நாறு மயிர் கொடிச்சி
கொடிச்சி கையகத்ததுவே பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே		10
					மேல்
# 96 நெய்தல்

இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை
புதுவது புணர்ந்த பொழிலே உதுவே
பொம்மல் படு திரை நம்மோடு ஆடி
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்		5
துவரினர் அருளிய துறையே அதுவே
கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல்
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு
உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி		10
பைஇ பைய பசந்தனை பசப்பே
					மேல்
# 97 முல்லை

அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு
பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும்
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே
அதனினும் கொடியள் தானே மதனின்		5
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட_மகளே
					மேல்
# 98 குறிஞ்சி

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என			5
மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளை பள்ளி வதியும் நாடன்
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்
துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே		10
வைகலும் பொருந்தல் ஒல்லா
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே
					மேல்
# 99 முல்லை

நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின்
அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்
தாம் வர தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று		5
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே			10
					மேல்
# 100 மருதம்

உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர்
மாரி கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வௌவிய பூசல்		5
சினவிய முகத்து சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை பேர் இசை
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்		10
மண் ஆர் கண்ணின் அதிரும்
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே   மேல்

 



# 101 நெய்தல்

முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்ப
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும்
துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி		5
இனிது-மன் அளிதோ தானே துனி தீர்ந்து
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்
மீன் எறி பரதவர் மட_மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே
					மேல்
# 102 குறிஞ்சி

கொடும் குரல் குறைத்த செம் வாய் பைம் கிளி
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு
நின் குறை முடித்த பின்றை என் குறை
செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல்
பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு		5
நின் கிளை மருங்கின் சேறி ஆயின்
அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை
கான குறவர் மட_மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே
					மேல்
# 103 பாலை

ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று
கடாஅம் செருக்கிய கடும் சின முன்பின்
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து
பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி		5
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமே
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும்		10
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே
					மேல்
# 104 குறிஞ்சி

பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சா
குற குறு_மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டக_சிறுபறை பாணி அயலது		5
பைம் தாள் செந்தினை படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்-கொல் பானாள்
பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு_நீர்	10
போக்கு அற விலங்கிய சாரல்
நோக்கு அரும் சிறு நெறி நினையுமோரே
					மேல்
# 105 பாலை

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட
வெம் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்		5
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரை சுனைய மா இதழ் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம்_சில்_ஓதி அரும் படர் உறவே			10
					மேல்
# 106 நெய்தல்

அறிதலும் அறிதியோ பாக பெரும் கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள
ஆடு வரி அலவன் ஓடு_வயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப	5
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்
ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே
					மேல்
# 107 பாலை

உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டு
கொடிறு போல் காய வால் இணர் பாலை
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்		5
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து
ஆனா கௌவை மலைந்த
யானே தோழி நோய்ப்பாலேனே			10
					மேல்
# 108 குறிஞ்சி

மலை அயல் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணைய கண்ட அம் குடி குறவர்
கணையர் கிணையர் கை புனை கவணர்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட			5
பழகிய பகையும் பிரிவு இன்னாதே
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்ப
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே
					மேல்
# 109 பாலை

ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின்
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று
அன்னவோ இ நன்_நுதல் நிலை என
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென		5
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்
துளி உடை தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சி கட்டிய கூழை ஆவின்
நிலை என ஒருவேன் ஆகி
உலமர கழியும் இ பகல் மடி பொழுதே		10
					மேல்
# 110 பாலை

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று	5
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என		10
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே
					மேல்
# 111 நெய்தல்

அத்த இருப்பை பூவின் அன்ன
துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்
வரி வலை பரதவர் கரு வினை சிறாஅர்
மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார்
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு	5
திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி
வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்
பெரும் கழி பாக்கம் கல்லென
வருமே தோழி கொண்கன் தேரே			10
					மேல்
# 112 குறிஞ்சி

விருந்து எவன் செய்கோ தோழி சாரல்
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டு
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெரும் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி		5
மா கடல் முகந்து மணி நிறத்து அருவி
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய்
மலை இமைப்பது போல் மின்னி
சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே
					மேல்
# 113 பாலை

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை
புல் அரை இரத்தி பொதி புற பசும் காய்
கல் சேர் சிறு நெறி மல்க தாஅம்
பெரும் காடு இறந்தும் எய்த வந்தனவால்
அரும் செயல் பொருள்_பிணி முன்னி யாமே		5
சேறும் மடந்தை என்றலின் தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூர
பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும்		10
ஆம்பல் அம் குழலின் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே
					மேல்
# 114 குறிஞ்சி

வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்
மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகி கேட்டு பையாந்திசினே
அளிதோ தானே தோழி அல்கல்			5
வந்தோன் மன்ற குன்ற நாடன்
துளி பெயல் பொறித்த புள்ளி தொல் கரை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி		10
மையல் மட பிடி இனைய
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே
					மேல்
# 115 முல்லை

மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என
மயில் அடி இலைய மா குரல் நொச்சி		5
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ
கார் எதிர்ந்தன்றால் காலை காதலர்
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர்
அன்பினர் வாழி தோழி நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர்			10
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே
					மேல்
# 116 குறிஞ்சி

தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ
வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும்		5
மலை கெழு நாடன் கேண்மை பலவின்
மா சினை துறந்த கோல் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்கு தொடர்பு அற
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த		10
குறிஞ்சி நல் ஊர் பெண்டிர்
இன்னும் ஓவார் என் திறத்து அலரே
					மேல்
# 117 நெய்தல்

பெரும் கடல் முழங்க கானல் மலர
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்
கமழ் பூ பொதும்பர் கட்சி சேர
செல் சுடர் மழுங்க சிவந்து வாங்கு மண்டிலம்	5
கல் சேர்பு நண்ணி படர் அடைபு நடுங்க
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி என்_கண்
பிணி பிறிது ஆக கூறுவர்			10
பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே
					மேல்
# 118 பாலை

அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலிய
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்
சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என		5
இணர் உறுபு உடைவதன்_தலையும் புணர் வினை
ஓவ_மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி
புது மலர் தெருவு-தொறு நுவலும்			10
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே
					மேல்
# 119 குறிஞ்சி

தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர்
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை
இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும்		5
பன் மலர் கான்யாற்று உம்பர் கரும் கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்			10
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே
					மேல்
# 120 மருதம்

தட மருப்பு எருமை மட நடை குழவி
தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல்
கொடும் குழை பெய்த செழும் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ		5
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள் நம் புலந்து
அட்டிலோளே அம் மா அரிவை
எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று		10
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே
					மேல்
# 121 முல்லை

விதையர் கொன்ற முதையல் பூழி
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவை கதிர் கறித்த காமர் மட பிணை
அரலை அம் காட்டு இரலையொடு வதியும்
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே		5
எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபு
பரியல் வாழ்க நின் கண்ணி காண்வர
விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மா
வண் பரி தயங்க எழீஇ தண் பெயல்
கான்யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய		10
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறை பணை தோள் துயில் அமர்வோயே
					மேல்
# 122 குறிஞ்சி

இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும் கால் செந்தினை கடியும் உண்டன
கல்_அக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின
நரை உரும் உரறும் நாம நள்ளிருள்		5
வரை_அக நாடன் வரூஉம் என்பது
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்			10
பூ வேய் கண்ணி அது பொருந்தும் மாறே
					மேல்
# 123 நெய்தல்

உரையாய் வாழி தோழி இரும் கழி
இரை ஆர் குருகின் நிரை பறை தொழுதி
வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை
கானல் ஆயமொடு காலை குற்ற			5
கள் கமழ் அலர தண் நறும் காவி
அம் பகை நெறி தழை அணிபெற தைஇ
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி
புலவு திரை உதைத்த கொடும் தாள் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்		10
சிறு விளையாடலும் அழுங்கி
நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயே
					மேல்
# 124 நெய்தல்

ஒன்று இல் காலை அன்றில் போல
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்		5
நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி
உருக்கு_உறு கொள்கலம் கடுப்ப விருப்பு_உற
தெண் நீர் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே
					மேல்
# 125 குறிஞ்சி

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரி புற்றம் வாய்ப்ப வாங்கி
நல்_அரா நடுங்க உரறி கொல்லன்
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என		5
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை
நன்_நாள் வதுவை கூடி நீடு இன்று
நம்மொடு செல்வர்-மன் தோழி மெல்ல
வேங்கை கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை		10
மென் தினை நெடும் போர் புரி-மார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே
					மேல்
# 126 பாலை

பைம் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்
கரும் களி ஈந்தின் வெண் புற களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி
துனைதரும் வம்பலர் காணாது அ சினம்		5
பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்
இளமையின் சிறந்த வளமையும் இல்லை
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே அதனால்			10
நில்லா பொருள்_பிணி சேறி
வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே
					மேல்
# 127 நெய்தல்

இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன் வரின் எவனோ பாண பேதை
கொழு மீன் ஆர்கை செழு நகர் நிறைந்த
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும்			5
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனா பாவை தலையிட்டு ஓரும்
மெல்லம்புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கானலானே
					மேல்
# 128 குறிஞ்சி

பகல் எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான்
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே என்று நனி		5
அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல்
ஏனல் காவலின் இடை உற்று ஒருவன்
கண்ணியன் கழலன் தாரன் தண்ணென
சிறுபுறம் கவையினனாக அதன் கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு			10
இஃது ஆகின்று யான் உற்ற நோயே
					மேல்
# 129 குறிஞ்சி

பெரு நகை கேளாய் தோழி காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி நம் இவண் ஒழிய
செல்ப என்ப தாமே சென்று
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை		5
வாழ்தும் என்ப நாமே அதன்_தலை
கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப
படு மழை உருமின் உரற்று குரல்
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே
					மேல்
# 130 நெய்தல்

வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண்
மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப
கோலின் எறிந்து காலை தோன்றிய
செம் நீர் பொது வினை செம்மல் மூதூர்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ	5
எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர்
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று
ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர்		10
வையக வரை அளவு இறந்த
எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றே
					மேல்
# 131 நெய்தல்

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப
திரை முதிர் அரைய தடம் தாள் தாழை
சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய		5
இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும்
நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே
					மேல்
# 132 நெய்தல்

பேரூர் துஞ்சும் யாரும் இல்லை
திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி
போர் அமை கதவ புரை-தொறும் தூவ
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர்		5
பயில் படை நிவந்த பல் பூ சேக்கை
அயலும் மாண் சிறையதுவே அதன்_தலை
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்			10
இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே
					மேல்
# 133 குறிஞ்சி

தோளே தொடி கொட்பு ஆனா கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே
நுதலும் பசலை பாயின்று திதலை
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று		5
வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்
காமுறு தோழி காதலம் கிளவி
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த
தோய் மடல் சில் நீர் போல			10
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே
					மேல்
# 134 குறிஞ்சி

இனிதின் இனிது தலைப்படும் என்பது
இது-கொல் வாழி தோழி காதலர்
வரு குறி செய்த வரை_அக சிறுதினை
செம் வாய் பாசினம் கடீஇயர் கொடிச்சி
அ வாய் தட்டையொடு அவணை ஆக என		5
ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர்
அம் மா மேனி நிரை தொடி குறு_மகள்
செல்லாயோ நின் முள் எயிறு_உண்கு என
மெல்லிய இனிய கூறலின் யான் அஃது
ஒல்லேன் போல உரையாடுவலே			10
					மேல்
# 135 நெய்தல்

தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்
வரையா தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடி சீறூர்
இனிது மன்று அம்ம தானே பனி படு		5
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும்
வால் உளை பொலிந்த புரவி
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே
					மேல்
# 136 குறிஞ்சி

திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என் ஐ வாழிய பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய		5
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவி
போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே
					மேல்
# 137 பாலை

தண்ணிய கமழும் தாழ் இரும் கூந்தல்
தட மென் பணை தோள் மட நல்லோள்_வயின்
பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று
எய்தினை வாழிய நெஞ்சே செம் வரை
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை			5
கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர்
பெரும் களிறு தொலைத்த முட தாள் ஓமை
அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்று சேண் அகறல் வல்லிய நீயே		10
					மேல்
# 138 நெய்தல்

உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை
மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கை
கணம்_கொள் உமணர் உயங்கு_வயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும்
தண்ணம் துறைவன் முன்_நாள் நம்மொடு		5
பாசடை கலித்த கணை கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ
கண் அறிவுடைமை அல்லது நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும்			10
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே
					மேல்
# 139 முல்லை

உலகிற்கு ஆணி ஆக பலர் தொழ
பல வயின் நிலைஇய குன்றின் கோடு-தோறு
ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலி
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇ அன்ன உறையினை முழவின்		5
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்
விரவு மலர் உதிர வீசி
இரவு பெயல் பொழிந்த உதவியோயே		10
					மேல்
# 140 குறிஞ்சி

கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை
பெரும் கண் ஆயம் உவப்ப தந்தை		5
நெடும் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து
பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம்
அரும் துயர் அவலம் தீர்க்கும்			10
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே
					மேல்
# 141 பாலை

இரும் சேறு ஆடிய கொடும் கவுள் கய வாய்
மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை
நீடிய சடையோடு ஆடா மேனி
குன்று உறை தவசியர் போல பலவுடன்		5
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும்
அரும் சுரம் எளிய-மன் நினக்கே பருந்து பட
பாண்டிலொடு பொருத பல் பிணர் தட கை
ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த		10
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே
					மேல்
# 142 முல்லை

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள்
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப		5
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலை தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே பொய்யா யாணர்
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்			10
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே
					மேல்
# 143 பாலை

ஐது ஏகு அம்ம யானே ஒய்யென
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும்
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள்		5
வழு இலள் அம்ம தானே குழீஇ
அம்பல் மூதூர் அலர் வாய் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே		10
					மேல்
# 144 குறிஞ்சி

பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு
போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்கு ஆகின்றால் தோழி பகு வாய்		5
பிணவு புலி வழங்கும் அணங்கு அரும் கவலை
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்று
கரை அரும் குட்டம் தமியர் நீந்தி
விரவு மலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியாதேற்கே			10
					மேல்
# 145 நெய்தல்

இரும் கழி பொருத ஈர வெண் மணல்
மா கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதை கூட்டும்
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு		5
புணர்ந்தனன் போல உணர கூறி
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம்
பராரை புன்னை சேரி மெல்ல
நள்ளென் கங்குலும் வருமரோ			10
அம்ம வாழி அவர் தேர் மணி குரலே
					மேல்
# 146 குறிஞ்சி

வில்லா பூவின் கண்ணி சூடி
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு
நெடு மா பெண்ணை மடல்_மானோயே
கடன் அறி மன்னர் குடை_நிழல் போல
பெரும் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து	5
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என
அருளி கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண்_தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய			10
மையல் நெஞ்சம் என் மொழி கொளினே
					மேல்
# 147 குறிஞ்சி

யாங்கு ஆகுவமோ அணி நுதல் குறு_மகள்
தேம் படு சாரல் சிறுதினை பெரும் குரல்
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று
எ வாய் சென்றனை அவண் என கூறி
அன்னை ஆனாள் கழற முன் நின்று		5
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே
வெதிர் புனை தட்டையேன் மலர் பூ கொய்து
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு		10
தலை இறைஞ்சினளே அன்னை
செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே
					மேல்
# 148 பாலை

வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்
நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம்
தொடங்கி ஆள்வினை பிரிந்தோர் இன்றே
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை
செம் கால் மராஅத்து அம் புடை பொருந்தி		5
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது
கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து
செம் கண் இரும் புலி கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்		10
அரும் சுரம் இறப்ப என்ப
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே
					மேல்
# 149 நெய்தல்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி கானல்			5
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉ சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ
நடுநாள் வரூஉம் இயல் தேர் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊரே		10
					மேல்
# 150 மருதம்

நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்
மிளை வலி சிதைய களிறு பல பரப்பி
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி வாழிய பல என தொழுது ஈண்டு
மன் எயில் உடையோர் போல அஃது யாம்		5
என்னதும் பரியலோ இலம் என தண் நடை
கலி_மா கடைஇ வந்து எம் சேரி
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்ச
கண் உடை சிறு கோல் பற்றி			10
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே   மேல்

 



# 151 குறிஞ்சி

நன் நுதல் பசப்பினும் பெரும் தோள் நெகிழினும்
கொல் முரண் இரும் புலி அரும் புழை தாக்கி
செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல்
வாரற்க தில்ல தோழி கடுவன்			5
முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சி
கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி கரும் கால்
பொன் இணர் வேங்கை பூ சினை செலீஇயர்
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன்	10
புன் தலை பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே
					மேல்
# 152 நெய்தல்

மடலே காமம் தந்தது அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர
புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்
எல்லாம் தந்ததன்_தலையும் பையென		5
வடந்தை துவலை தூவ குடம்பை
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று
யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே
					மேல்
# 153 பாலை

குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி எ வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு		5
நெஞ்சம் அவர்_வயின் சென்று என ஈண்டு ஒழிந்து
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்
வெம் சின வேந்தன் பகை அலை கலங்கி
வாழ்வோர் போகிய பேர் ஊர்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே		10
					மேல்
# 154 குறிஞ்சி

கானமும் கம்மென்றன்றே வானமும்
வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி
பல் குரல் எழிலி பாடு ஓவாதே
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த
வெம் சின உழுவை பேழ் வாய் ஏற்றை		5
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது
துஞ்சுதியோ இல தூ இலாட்டி
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே சாரல்			10
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும்
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே
					மேல்
# 155 நெய்தல்

ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய்
விரி பூ கானல் ஒரு சிறை நின்றோய்
யாரையோ நின் தொழுதனெம் வினவுதும்
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரை		5
பெரும் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ
இரும் கழி மருங்கு நிலைபெற்றனையோ
சொல் இனி மடந்தை என்றனென் அதன்_எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன
பல் இதழ் உண்கணும் பரந்தவால் பனியே		10
					மேல்
# 156 குறிஞ்சி

நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம்
கடி உடை வியல் நகர் காவல் நீவியும்
பேர் அன்பினையே பெரும் கல் நாட
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள்
சிறுதினை காக்குவம் சேறும் அதனால்		5
பகல் வந்தீமோ பல் படர் அகல
எருவை நீடிய பெரு வரை சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர்
பாடு இமிழ் விடர் முகை முழங்க
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே	10
					மேல்
# 157 பாலை

இரும் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவி
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில்
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளி-தொறும்	5
நம்_வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட
குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை
அம் பூ தாது உக்கு அன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே			10
					மேல்
# 158 குறிஞ்சி

அம்ம வாழி தோழி நம்_வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே
விடர் முகை செறிந்த வெம் சின இரும் புலி		5
புகர் முக வேழம் புலம்ப தாக்கி
குருதி பருகிய கொழும் கவுள் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே
					மேல்
# 159 நெய்தல்

மணி துணிந்து அன்ன மா இரும் பரப்பின்
உரவு திரை கொழீஇய பூ மலி பெரும் துறை
நிலவு குவித்து அன்ன மோட்டு மணல் இடி_கரை
கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி
எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல		5
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்
கொழு மீன் ஆர்கை செழு நகர் செலீஇய
எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும்
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து
உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல்		10
சில் குடி பாக்கம் கல்லென
அல்குவது ஆக நீ அமர்ந்த தேரே
					மேல்
# 160 குறிஞ்சி

நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென்-மன்னே கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின்	5
ஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி
முது நீர் இலஞ்சி பூத்த குவளை
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் காணா ஊங்கே		10
					மேல்
# 161 முல்லை

இறையும் அரும் தொழில் முடித்து என பொறைய
கண் போல் நீலம் சுனை-தொறும் மலர
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி		5
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என
காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள் ஏது இல்		10
புதல்வன் காட்டி பொய்க்கும்
திதலை அல்குல் தே மொழியாட்கே
					மேல்
# 162 பாலை

மனை உறை புறவின் செம் கால் பேடை
காமர் துணையொடு சேவல் சேர
புலம்பின்று எழுதரு புன்கண் மாலை
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின்
பனி வார் உண்கண் பைதல கலுழ			5
நும்மொடு வருவல் என்றி எம்மொடு
பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை முனாஅது
வேனில் இற்றி தோயா நெடு வீழ்
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும்		10
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே
					மேல்
# 163 நெய்தல்

உயிர்த்தன ஆகுக அளிய நாளும்
அயிர் துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது கல்லென
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப
நிலவு தவழ் மணல் கோடு ஏறி செலவர		5
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி
வருந்து-மன் அளிய தாமே பெரும் கடல்
நீல் நிற புன்னை தமி ஒண் கைதை
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று		10
வைகுறு வனப்பின் தோன்றும்
கைதை அம் கானல் துறைவன் மாவே
					மேல்
# 164 பாலை

உறை துறந்து இருந்த புறவில் தனாது
செம்_கதிர்_செல்வன் தெறுதலின் மண் பக
உலகு மிக வருந்தி உயா_உறு காலை
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் என
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய்		5
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம்			10
ஊறு இலர் ஆகுதல் உள்ளாம் மாறே
					மேல்
# 165 குறிஞ்சி

அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன்
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க என
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து
கிளையொடு மகிழும் குன்ற நாடன்		5
அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக என்னான்
ஒல்காது ஒழி மிக பல்கின தூதே
					மேல்
# 166 பாலை

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இரும் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும்		5
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்_தலை
பொலம் தொடி புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறு புலத்து இலெனே நினையின்
யாதனின் பிரிகோ மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே			10
					மேல்
# 167 நெய்தல்

கரும் கோட்டு புன்னை குடக்கு வாங்கு பெரும் சினை
விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் ஆஅய்
வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற
பண் அமை நெடும் தேர் பாணியின் ஒலிக்கும்
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த		5
பயன் தெரி பனுவல் பை தீர் பாண
நின் வாய் பணிமொழி களையா பன் மாண்
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த
இறை ஏர் எல் வளை குறு_மகள்			10
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே
					மேல்
# 168 குறிஞ்சி

சுரும்பு உண விரிந்த கரும் கால் வேங்கை
பெரும் சினை தொடுத்த கொழும் கண் இறாஅல்
புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை
குற குறு_மாக்கள் உண்ட மிச்சிலை
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்		5
நன் மலை நாட பண்பு எனப்படுமோ
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள்
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
ஆரம் கமழும் மார்பினை			10
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே
					மேல்
# 169 முல்லை

முன்னியது முடித்தனம் ஆயின் நன்_நுதல்
வருவம் என்னும் பருவரல் தீர
படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லி
பரல் தலைபோகிய சிரல் தலை கள்ளி
மீமிசை கலித்த வீ நறு முல்லை			5
ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லி பரீஇ
வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை
மறுகு உடன் கமழும் மாலை
சிறுகுடி பாக்கத்து எம் பெரு நகரானே		10
					மேல்
# 170 மருதம்

மட கண் தகர கூந்தல் பணை தோள்
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அம் தழை தைஇ துணையிலள்
விழவு_களம் பொலிய வந்து நின்றனளே
எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம்	5
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம்
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே
					மேல்
# 171 பாலை

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனில் குன்றத்து வெம் வரை கவாஅன்
நிலம் செல செல்லா கயம் தலை குழவி
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன்		5
பன் மலை அரும் சுரம் இறப்பின் நம் விட்டு
யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர்
வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ			10
மார்பு உற படுத்தல் மரீஇய கண்ணே
					மேல்
# 172 நெய்தல்

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே		5
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே		10
					மேல்
# 173 குறிஞ்சி

சுனை பூ குற்றும் தொடலை தைஇயும்
மலை செம்_காந்தள் கண்ணி தந்தும்
தன் வழி படூஉம் நம் நயந்து அருளி
வெறி என உணர்ந்த அரிய அன்னையை
கண்ணினும் கனவினும் காட்டி இ நோய்		5
என்னினும் வாராது மணியின் தோன்றும்
அ மலை கிழவோன் செய்தனன் இது எனின்
படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின்
நெடுவேட்கு ஏதம் உடைத்தோ
தொடியோய் கூறு-மதி வினவுவல் யானே		10
					மேல்
# 174 பாலை

கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன
ஆள் இல் அத்த தாள் அம் போந்தை
கோள் உடை நெடும் சினை ஆண் குரல் விளிப்பின்
புலி எதிர் முழங்கும் வளி வழங்கு ஆரிடை
சென்ற காதலர் வந்து இனிது முயங்கி		5
பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து
உயங்கினை மடந்தை என்றி தோழி
அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே
வீழா கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்			10
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே
					மேல்
# 175 நெய்தல்

நெடும் கடல் அலைத்த கொடும் திமில் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ
மீன் நெய் அட்டி கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை		5
தான் அறிந்தன்றோ இலளே பானாள்
சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி
சுடுவான் போல நோக்கும்
அடு பால் அன்ன என் பசலை மெய்யே
					மேல்
# 176 குறிஞ்சி

எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து
நல்கினம் விட்டது என் நலத்தோன் அ வயின்
சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள்
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி
நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப		5
போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்பு பட குவைஇ
யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டு
அருவி முழவின் பாடொடு ஒராங்கு
மென்மெல இசைக்கும் சாரல்			10
குன்ற வேலி தம் உறைவு இன் ஊரே
					மேல்
# 177 பாலை

பரந்து படு கூர் எரி கானம் நைப்ப
மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு
ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட
வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும்		5
பீலி சூட்டி மணி அணிபவ்வே
பண்டினும் நனி பல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து
எழுது எழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே	10
					மேல்
# 178 நெய்தல்

ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன
தோடு அமை தூவி தடம் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது
கைதை அம் படு சினை புலம்பொடு வதியும்		5
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்
காணவும் இயைந்தன்று-மன்னே நாணி
நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன்
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப
விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே	10
					மேல்
# 179 பாலை

இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள்
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு			5
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள்-மன்னே இன்றே
மை அணல் காளை பொய் புகல் ஆக
அரும் சுரம் இறந்தனள் என்ப தன்
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே	10
					மேல்
# 180 மருதம்

பழன பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள் அரிசியின் தாஅம் ஊரன்
பலர் பெறல் நசைஇ நம் இல் வாரலனே
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே		5
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர் பொரு_களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னொடு கழியும் இ இருவரது இகலே
					மேல்
# 181 முல்லை

உள் இறை குரீஇ கார் அணல் சேவல்
பிற புல துணையோடு உறை புலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கி பேடை
நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்		5
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த		10
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே
உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினே
					மேல்
# 182 குறிஞ்சி

நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின்
பாவை அன்ன நின் புறங்காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்
கெடுத்துப்படு நன் கலம் எடுத்து கொண்டு ஆங்கு	5
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல
கண்டனம் வருகம் சென்மோ தோழி
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறும் தலை பெரும் களிறு போல
தமியன் வந்தோன் பனியலை நீயே			10
					மேல்
# 183 நெய்தல்

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் இன்னாது ஆகும்		5
மடவை மன்ற கொண்க வயின்-தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே
இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல			10
வாழாள் ஆதல் சூழாதோயே
					மேல்
# 184 பாலை

ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே		5
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என்
அணி இயல் குறு_மகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே
					மேல்
# 185 குறிஞ்சி

ஆனா நோயோடு அழி படர் கலங்கி
காமம் கைம்மிக கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின் பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நன் மான்
கவி குளம்பு பொருத கல் மிசை சிறு நெறி		5
இரவலர் மெலியாது ஏறும் பொறையன்
உரை சால் உயர் வரை கொல்லி குட_வயின்
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய		10
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே
					மேல்
# 186

கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து		5
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருள்_பிணி போகிய
நாம் வெம் காதலர் சென்ற ஆறே			10
					மேல்
# 187 நெய்தல்

நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய
பல் பூ கானலும் அல்கின்றன்றே
இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டி
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய		5
தேரும் செல் புறம் மறையும் ஊரொடு
யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே		10
					மேல்
# 188 குறிஞ்சி

படு நீர் சிலம்பில் கலித்த வாழை
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம்
மெல் விரல் மோசை போல காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப		5
நன்றி விளைவும் தீதொடு வரும் என
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்து
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே
					மேல்
# 189 பாலை

தம் அலது இல்லா நம் நயந்து அருளி
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர்
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ்
நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின்
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ		5
எ வினை செய்வர்-கொல் தாமே வெம் வினை
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கான புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம்
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே		10
					மேல்
# 190 குறிஞ்சி

நோ இனி வாழிய நெஞ்சே மேவார்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்
திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும்		5
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணை தோள் நலம் வீறு எய்திய
வலை மான் மழை கண் குறு_மகள்
சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே
					மேல்
# 191 நெய்தல்

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டல் பாவை வன முலை முற்றத்து
ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம்
கண்டல் வேலி காமர் சிறுகுடி			5
எல்லி வந்தன்றோ தேர் என சொல்லி
அலர் எழுந்தன்று இ ஊரே பலருளும்
என் நோக்கினளே அன்னை நாளை
மணி பூ முண்டகம் கொய்யேன் ஆயின்
அணி கவின் உண்மையோ அரிதே மணி கழி		10
நறும் பூ கானல் வந்து அவர்
வறும் தேர் போதல் அதனினும் அரிதே
					மேல்
# 192 குறிஞ்சி

குருதி வேட்கை உரு கெழு வய_மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய பூழியர்
உருவ துருவின் நாள் மேயல் ஆரும்
மாரி எண்கின் மலை சுர நீள் இடை		5
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து
அழுதனை உறையும் அம் மா அரிவை
பயம் கெழு பலவின் கொல்லி குட வரை
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின்		10
ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு
ஏமம் ஆகும் மலை முதல் ஆறே
					மேல்
# 193 பாலை

அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை
துய் தலை புது மலர் துளி தலை கலாவ
நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை
நினக்கு தீது அறிந்தன்றோ இலமே			5
பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆக
யாரும் இல் ஒரு சிறை இருந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே
					மேல்
# 194 குறிஞ்சி

அம்ம வாழி தோழி கைம்மாறு
யாது செய்வாம்-கொல் நாமே கய வாய்
கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை
அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை		5
தனி நிலை இதணம் புலம்ப போகி
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை
குன்ற வெற்பனொடு நாம் விளையாட
இரும்பு கவர்கொண்ட ஏனல்
பெரும் குரல் கொள்ளா சிறு பசும் கிளிக்கே		10
					மேல்
# 195 நெய்தல்

அருளாய் ஆகலோ கொடிதே இரும் கழி
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும்
மெல்லம்புலம்ப யான் கண்டிசினே
கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி		5
நெல் அரி தொழுவர் கூர் வாள்_உற்று என
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலை தோற்றம் போல
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே
					மேல்
# 196 நெய்தல்

பளிங்கு செறிந்து அன்ன பல் கதிர் இடையிடை
பால் முகந்து அன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறை_உறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நின் கரந்து உறையும் உலகம் இன்மையின்		5
என் கரந்து உறைவோர் உள்_வழி காட்டாய்
நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு_சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே
					மேல்
# 197 பாலை

தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே
கண்ணும் தண் பனி வைகின அன்னோ
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி நீ நின்			5
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டு படு புது மலர் உண்துறை தரீஇய
பெரு மட மகளிர் முன்கை சிறு கோல்
பொலம் தொடி போல மின்னி கணம்_கொள்
இன் இசை முரசின் இரங்கி மன்னர்		10
எயில் ஊர் பல் தோல் போல
செல் மழை தவழும் அவர் நன் மலை நாட்டே
					மேல்
# 198 பாலை

சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம்
முன்_நாள் உம்பர் கழிந்த என் மகள்
கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை
தன் ஊர் இட_வயின் தொழுவேன் நுண் பல்		5
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்
சில் வளை பல் கூந்தலளே அவளே
மை அணல் எருத்தின் முன்பின் தட கை
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்		10
தந்தை_தன் ஊர் இதுவே
ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே
					மேல்
# 199 நெய்தல்

ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை
வீங்கு மடல் குடம்பை பைதல் வெண்_குருகு
நள்ளென் யாமத்து உயவு-தோறு உருகி
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து
உளெனே வாழி தோழி வளை நீர்			5
கடும் சுறா எறிந்த கொடும் திமில் பரதவர்
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி
வளி பொர கற்றை தாஅய் நளி சுடர்
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய
பைபய இமைக்கும் துறைவன்			10
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே
					மேல்
# 200 மருதம்

கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
சாறு என நுவலும் முது வாய் குயவ
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ		5
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்து
பொய்கை ஊர்க்கு போவோய் ஆகி
கை கவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று
ஐது அகல் அல்குல் மகளிர் இவன்		10
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே
					மேல்



# 201 குறிஞ்சி பரணர்

மலை உறை குறவன் காதல் மட_மகள்
பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள்
சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள்
உள்ளல் கூடாது என்றோய் மற்றும்
செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி		5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு
அம் வெள் அருவி குட வரை_அகத்து
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும்
பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின்		10
மாயா இயற்கை பாவையின்
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே
					மேல்
# 202 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

புலி பொர சிவந்த புலால் அம் செம் கோட்டு
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மட பிடி தழீஇய தட கை வேழம்
தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை		5
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடர்_அகம் கவைஇ காண்வர
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை
அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடும் கொடி போல			10
பல் பூ கோங்கம் அணிந்த காடே
					மேல்
# 203 நெய்தல் உலோச்சனார்

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
தடம் தாள் தாழை முள் உடை நெடும் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூ
கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை
எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு	5
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க
செய்த தன் தப்பல் அன்றியும்			10
உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரே
					மேல்
# 204 குறிஞ்சி மள்ளனார்

தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ
குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரிய
நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண	5
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து
தான் செய் குறி நிலை இனிய கூறி
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு
உறு கழை நிவப்பின் சிறுகுடி பெயரும்		10
கொடிச்சி செல் புறம் நோக்கி
விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே
					மேல்
# 205 பாலை இளநாகனார்

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர்
பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதி
ஏந்து வெண் கோட்டு வய களிறு இழுக்கும்
துன் அரும் கானம் என்னாய் நீயே			5
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய
ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு
போயின்று-கொல்லோ தானே படப்பை
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய			10
ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே
					மேல்
# 206 குறிஞ்சி ஐயூர் முடவனார்

துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி
தோடு அலை கொண்டன ஏனல் என்று
துறு கல் மீமிசை குறுவன குழீஇ
செம் வாய் பாசினம் கவரும் என்று அ வாய்
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என	5
எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும்
நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி என
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல்
கல் கெழு நாடன் கேண்மை			10
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே
					மேல்
# 207 நெய்தல்

கண்டல் வேலி கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி		5
வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
கோள் சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள்
வலையும் தூண்டிலும் பற்றி பெரும் கால்		10
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெம் சிறாஅர் பாற்பட்டனளே
					மேல்
# 208 பாலை நொச்சி நியமங்கிழார்

விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து
எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறு_மகள்
செல்வார் அல்லர் நம் காதலர் செலினும்		5
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர்
கொன்னும் நம்பும்-குரையர் தாமே
சிறந்த அன்பினர் சாயலும் உரியர்
பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள்
முடியாது ஆயினும் வருவர் அதன்_தலை		10
இன் துணை பிரிந்தோர் நாடி
தருவது போலும் இ பெரு மழை குரலே
					மேல்
# 209 குறிஞ்சி நொச்சி நியமங்கிழார்

மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டு என பல விளைந்து
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்
மழலை அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல்	5
கிளியும் தாம் அறிபவ்வே எனக்கே
படும்_கால் பையுள் தீரும் படாஅது
தவிரும் காலை ஆயின் என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே
					மேல்
# 210 மருதம் மிளைகிழான் நல்வேட்டனார்

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈர செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்		5
செல்வம் அன்று தன் செய்_வினை பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கள் செல்வம் செல்வம் என்பதுவே
					மேல்
# 211 நெய்தல் கோட்டியூர் நல்லந்தையார்

யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்
ஓதம் சென்ற உப்பு உடை செறுவில்
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த
கரும் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை		5
எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டு
துறு கடல் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே
					மேல்
# 212 பாலை குடவாயில் கீரத்தனார்

பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர்		5
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம் வயின்
வந்தனர் வாழி தோழி கையதை
செம் பொன் கழல் தொடி நோக்கி மா மகன்
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும்
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே		10
					மேல்
# 213 குறிஞ்சி கச்சிப்பேட்டு பெருந்தச்சனார்

அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி
கன்று கால்யாத்த மன்ற பலவின்
வேர் கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரும் பழம்
குழவி சேதா மாந்தி அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்		5
பெரும் கல் வேலி சிறுகுடி யாது என
சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென
கருவி மா மழை வீழ்ந்து என எழுந்த
செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை
கொய் புனம் காவலும் நுமதோ			10
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே
					மேல்
# 214 பாலை கருவூர் கோசனார்

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என
வினை_வயின் பிரிந்த வேறுபடு கொள்கை
அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என	5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து
செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்-கொல்லோ தோழி தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி	10
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே
					மேல்
# 215 நெய்தல் மதுரை சுள்ளம் போதனார்

குண கடல் இவர்ந்து குரூஉ கதிர் பரப்பி
பகல்_கெழு_செல்வன் குட மலை மறைய
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்		5
நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி எம்மொடு
தங்கின் எவனோ தெய்ய செம் கோல்
கொடு முடி அம் வலை பரிய போகிய		10
கோள் சுறா குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே
					மேல்
# 216 மருதம் மதுரை மருதன் இளநாகனார்

துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர் காண்பு_உழி வாழ்தல்
கண் உறு விழுமம் கை போல் உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும்
இன்னாது அன்றே அவர் இல் ஊரே		5
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி
கேட்டோர் அனையர் ஆயினும்			10
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே
					மேல்
# 217 குறிஞ்சி கபிலர்

இசை பட வாழ்பவர் செல்வம் போல
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம்
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது
கரும் கால் வேங்கை ஊறுபட மறலி
பெரும் சினம் தணியும் குன்ற நாடன்		5
நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்பு சேண் அகல நீக்கி
புலவி உணர்த்தல் வன்மையானே
					மேல்
# 218 நெய்தல் காவிதி கீரங்கண்ணனார்

ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே
வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும்
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும்
ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர்		5
கூறிய பருவம் கழிந்தன்று பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும்
ஆனா நோய் அட வருந்தி இன்னும்
தமியேன் கேட்குவென்-கொல்லோ			10
பரியரை பெண்ணை அன்றில் குரலே
					மேல்
# 219 நெய்தல் தாயங்கண்ணனார்

கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம்
புலவேன் வாழி தோழி சிறு கால்
அலவனொடு பெயரும் புலவு திரை நளி கடல்	5
பெரு மீன் கொள்ளும் சிறுகுடி பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல் அம் பெரும் துறை சேர்ப்பன்
தானே யானே புணர்ந்த மாறே			10
					மேல்
# 220 குறிஞ்சி குண்டுகட்பாலியாதனார்

சிறு மணி தொடர்ந்து பெரும் கச்சு நிறீஇ
குறு முகிழ் எருக்கம் கண்ணி சூடி
உண்ணா நன் மா பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறு_மாக்கள்
பெரிதும் சான்றோர் மன்ற விசி பிணி		5
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண்
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின் தே மொழி
கயல் ஏர் உண்கண் குறு_மகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே		10
					மேல்
# 221 முல்லை இடைக்காடனார்

மணி கண்டு அன்ன மா நிற கருவிளை
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய
பொன் தொடர்ந்து அன்ன தகைய நன் மலர்
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க
வம்பு விரித்து அன்ன செம் புல புறவில்		5
நீர் அணி பெரு வழி நீள் இடை போழ
செல்க பாக நின் செய்வினை நெடும் தேர்
விருந்து விருப்பு_உறூஉம் பெரும் தோள் குறு_மகள்
மின் ஒளிர் அவிர் இழை நன் நகர் விளங்க
நடை நாள் செய்த நவிலா சீறடி			10
பூ கண் புதல்வன் உறங்கு_வயின் ஒல்கி
வந்தீக எந்தை என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே
					மேல்
# 222 குறிஞ்சி கபிலர்

கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை
வடு கொள பிணித்த விடு புரி முரற்சி
கை புனை சிறு நெறி வாங்கி பையென
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி		5
செலவுடன் விடுகோ தோழி பல உடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது
பெரும் களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடும் குன்றம் காணிய நீயே		10
					மேல்
# 223 நெய்தல் உலோச்சனார்

இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின்
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூ கானல்
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள்
அலரின் அரும் கடிப்படுகுவள் அதனால்		5
எல்லி வம்மோ மெல்லம்புலம்ப
சுறவு_இனம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சா கண்ணர்
பெண்டிரும் உடைத்து இ அம்பல் ஊரே
					மேல்
# 224 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

அன்பினர் மன்னும் பெரியர் அதன்_தலை
பின்பனி அமையம் வரும் என முன்பனி
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை
செம் கண் இரும் குயில் எதிர் குரல் பயிற்றும்	5
இன்ப வேனிலும் வந்தன்று நம்_வயின்
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து
இனி எவன் மொழிகோ யானே கயன் அற
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய			10
வெம் முனை அரும் சுரம் முன்னியோர்க்கே
					மேல்
# 225 குறிஞ்சி கபிலர்

முருகு உறழ் முன்பொடு கடும் சினம் செருக்கி
பொருத யானை வெண் கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை		5
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப
பயந்து எழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே
					மேல்
# 226 பாலை கணி புன்குன்றனார்

மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்_நுதல்
நாம் தம் உண்மையின் உளமே அதனால்
தாம் செய் பொருள் அளவு அறியார் தாம் கசிந்து	5
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப
என்னோரும் அறிப இ உலகத்தானே
					மேல்
# 227 நெய்தல் தேவனார்

அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே
புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ
படு மணி யானை பசும் பூண் சோழர்		5
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா
தேர் வழங்கு தெருவின் அன்ன
கௌவை ஆகின்றது ஐய நின் அருளே
					மேல்
# 228 குறிஞ்சி முடத்திருமாறனார்

என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
பண்பு இல் ஆரிடை வரூஉம் நம் திறத்து
அருளான்-கொல்லோ தானே கானவன்		5
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம்
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ
அழுந்துபட விடர்_அகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே
					மேல்
# 229 பாலை

சேறும் சேறும் என்றலின் பல புலந்து
செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே
செல்லாதீம் என செப்பின் பல்லோர்
நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு	5
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து
இழை அணி ஆகம் வடு கொள முயங்கி
உழையீர் ஆகவும் பனிப்போள் தமியே
குழைவான் கண்ணிடத்து ஈண்டி தண்ணென
ஆடிய இள மழை பின்றை			10
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே
					மேல்
# 230 மருதம் ஆலங்குடி வங்கனார்

முய பிடி செவியின் அன்ன பாசடை
கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது
குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும்
கயல் கணம் கலித்த பொய்கை ஊர		5
முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய்
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க
புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்து ஆஅங்கு
இனிதே தெய்ய நின் காணும்_காலே		10
					மேல்
# 231 நெய்தல் இளநாகனார்

மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல
பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோய
சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும்		5
உள்ளூர் குரீஇ கரு உடைத்து அன்ன
பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை
கானல் அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்கா மாறே
					மேல்
# 232 குறிஞ்சி முதுவெங்கண்ணனார்

சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம்
குளவி தண் கயம் குழைய தீண்டி
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலி சிறுகுடி அலற
செம் கால் பலவின் தீம் பழம் மிசையும்		5
மா மலை நாட காமம் நல்கு என
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை
வீ உக வரிந்த முன்றில்
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே
					மேல்
# 233 குறிஞ்சி அஞ்சில் ஆந்தையார்

கல்லா கடுவன் நடுங்க முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும்
பெரும் கல் நாடனை அருளினை ஆயின்
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று		5
கூறுவென் வாழி தோழி முன் உற
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி
ஆன்றோர் செல் நெறி வழாஅ
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே
					மேல்
# 234 குறிஞ்சி

சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கி
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃதான்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு	5
கழுமலம் தந்த நல் தேர் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி_விழவின் வஞ்சியும் சிறிதே
					மேல்
# 235 நெய்தல்

உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல்
அரவு வாள் வாய முள் இலை தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூ கானல் பகற்குறி வந்து நம்
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும்		5
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத
படு மணி கலி_மா கடைஇ
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே			10
					மேல்
# 236 குறிஞ்சி நம்பி குட்டுவன்

நோயும் கைம்மிக பெரிதே மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு	5
உரை இனி வாழி தோழி புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய சிறிதே			10
					மேல்
# 237 பாலை காரிக்கண்ணனார்

நனி மிக பசந்து தோளும் சாஅய்
பனி மலி கண்ணும் பண்டு போலா
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உள் கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை	5
உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல
உலகம் உவப்ப ஓது அரும்
வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே		10
					மேல்
# 238 முல்லை கந்தரத்தனார்

வறம் கொல வீந்த கானத்து குறும் பூ
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை			5
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல்
சான்றோர் புரைவதோ அன்றே மான்று உடன்
உர உரும் உரறும் நீரின் பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்				10
இனிய அல்ல நின் இடி நவில் குரலே
					மேல்
# 239 நெய்தல் குன்றியனார்

ஞான்ற ஞாயிறு குட மலை மறைய
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடி செல் நெறி வழியின்		5
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூ தப மிதிக்கும்
மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி		10
முயங்கு என கலுழ்ந்த இ ஊர்
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே
					மேல்
# 240 பாலை நப்பாலத்தனார்

ஐது ஏகு அம்ம இ உலகு படைத்தோனே
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள்
கை கவர் முயக்கம் மெய் உற திருகி
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும்		5
வெயில் வெய்து_உற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே		10
					மேல்
# 241 பாலை மதுரை பெருமருதனார்

உள்ளார்-கொல்லோ தோழி கொடும் சிறை
புள் அடி பொறித்த வரி உடை தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்
வேழ வெண் பூ விரிவன பல உடன்		5
வேந்து வீசு கவரியின் பூ புதல் அணிய
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய
எல்லை போகிய பொழுதின் எல் உற
பனி கால்கொண்ட பையுள் யாமத்து		10
பல் இதழ் உண்கண் கலுழ
நில்லா பொருள்_பிணி பிரிந்திசினோரே
					மேல்
# 242 முல்லை விழிக்கட்பேதை பெருங்கண்ணனார்

இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப
புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ
பொன் என கொன்றை மலர மணி என
பன் மலர் காயாம் குறும் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து		5
செல்க பாக நின் தேரே உவ காண்
கழி பெயர் களரில் போகிய மட மான்
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே			10
					மேல்
# 243 பாலை காமக்கணி பசலையார்

தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில்
கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு	5
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என
கையற துறப்போர் கழறுவ போல
மெய் உற இருந்து மேவர நுவல
இன்னாது ஆகிய காலை பொருள்_வயின்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்			10
அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளே
					மேல்
# 244 குறிஞ்சி கூற்றங்குமரனார்

விழுந்த மாரி பெரும் தண் சாரல்
கூதிர் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ		5
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய்
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ
செய்யாய் ஆதலின் கொடியை தோழி
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன என்			10
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே
					மேல்
# 245 நெய்தல் அல்லங்கீரனார்

நகை ஆகின்றே தோழி தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ
துணி நீர் பௌவம் துணையோடு ஆடி
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல்		5
தெளி தீம் கிளவி யாரையோ என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என
பூண் மலி நெடும் தேர் புரவி தாங்கி
தான் நம் அணங்குதல் அறியான் நம்மின்
தான் அணங்கு உற்றமை கூறி கானல்		10
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே
					மேல்
# 246 பாலை காப்பியம் சேந்தனார்

இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடும் சுவர் பல்லியும் பாங்கில் தேற்றும்
மனை மா நொச்சி மீமிசை மா சினை
வினை மாண் இரும் குயில் பயிற்றலும் பயிற்றும்
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி		5
செய்_பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர்
வருவர் வாழி தோழி புறவின்
பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ
இன் இசை வானம் இரங்கும் அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே			10
					மேல்
# 247 குறிஞ்சி பரணர்

தொன்றுபடு துப்பொடு முரண் மிக சினைஇ
கொன்ற யானை செம் கோடு கழாஅ
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ		5
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும்
நின் வழி படூஉம் என் தோழி நன் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே
					மேல்
# 248 முல்லை காசிபன் கீரனார்

சிறு வீ முல்லை தேம் கமழ் பசு வீ
பொறி வரி நன் மான் புகர் முகம் கடுப்ப
தண் புதல் அணி பெற மலர வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர்-மன் இனி
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்		5
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மட கணம் போல
நினை மருள்வேனோ வாழியர் மழையே
					மேல்
# 249 நெய்தல் உலோச்சனார்

இரும்பின் அன்ன கரும் கோட்டு புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறும் தாது உதிர
புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல்		5
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ
பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்
மல்லல் அம் சேரி கல்லென தோன்றி
அம்பல் மூதூர் அலர் எழ			10
சென்றது அன்றோ கொண்கன் தேரே
					மேல்
# 250 மருதம் மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்

நகுகம் வாராய் பாண பகு வாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில்
தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன்
பூ நாறு செம் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன்			5
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆக
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ
யாரையோ என்று இகந்து நின்றதுவே		10 
					மேல்





# 251 குறிஞ்சி மதுரை பெருமருதிள நாகனார்

நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்
பிணி முதல் அரைய பெரும் கல் வாழை
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நன் மலை நாடனை நயவா யாம் அவன்
நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி		5
நின் புறங்காத்தலும் காண்போய் நீ என்
தளிர் ஏர் மேனி தொல் கவின் அழிய
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து
நுடங்கு நிலை பறவை உடங்கு பீள் கவரும்
தோடு இடம் கோடாய் கிளர்ந்து			10
நீடினை விளைமோ வாழிய தினையே
					மேல்
# 252 பாலை அம்மெய்யன் நாகனார்

உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த			5
வினை இடை விலங்கல போலும் புனை சுவர்
பாவை அன்ன பழி தீர் காட்சி
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண்
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய்	10
நன் நா புரையும் சீறடி
பொம்மல் ஓதி புனை_இழை குணனே
					மேல்
# 253 குறிஞ்சி கபிலர்

புள்ளு பதி சேரினும் புணர்ந்தோர் காணினும்
பள்ளி யானையின் வெய்ய உயிரினை
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய் நினையினை நீ நனி
உள்ளினும் பனிக்கும் ஒள் இழை குறு_மகள்		5
பேர் இசை உருமொடு மாரி முற்றிய
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி
பலவு உறு குன்றம் போல
பெரும் கவின் எய்திய அரும் காப்பினளே
					மேல்
# 254 நெய்தல் உலோச்சனார்

வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும்
குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும்
துனி இல் நன் மொழி இனிய கூறியும்
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப		5
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த நீல
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி			10
வானம் வேண்டா உழவின் எம்
கானல் அம் சிறுகுடி சேந்தனை செலினே
					மேல்
# 255 குறிஞ்சி ஆலம்பேரி சாத்தனார்

கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி
கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார்
வய களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகை சிலம்பில் குழுமும் அன்னோ		5
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர்
வாரார் ஆயினோ நன்று-மன் தில்ல
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்
திரு மணி அரவு தேர்ந்து உழல			10
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே
					மேல்
# 256 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி
அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே
இ நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதி		5
களவுடன் கமழ பிடவு தளை அவிழ
கார் பெயல் செய்த காமர் காலை
மட பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும்			10
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே
					மேல்
# 257 குறிஞ்சி வண்ணக்கன் சோருமருங்குமரனார்

விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன்
அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை		5
பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம்
நன் மலை நாட நயந்தனை அருளாய்
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி
கடு மா வழங்குதல் அறிந்தும்
நடுநாள் வருதி நோகோ யானே			10
					மேல்
# 258 நெய்தல் நக்கீரர்

பல் பூ கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த		5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும்
மருங்கூர் பட்டினத்து அன்ன இவள்		10
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே
					மேல்
# 259 குறிஞ்சி கொற்றம் கொற்றனார்

யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்
பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி		5
சாரல் ஆரம் வண்டு பட நீவி
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போல காண்பேன் விரி திரை
கடல் பெயர்ந்து அனைய ஆகி
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே		10
					மேல்
# 260 மருதம் பரணர்

கழுநீர் மேய்ந்த கரும் தாள் எருமை
பழன தாமரை பனி மலர் முணைஇ
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர
வெய்யை போல முயங்குதி முனை எழ		5
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என்
ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே		10
					மேல்
# 261 குறிஞ்சி சேந்தன் பூதனார்

அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம்
நெடும் பல் குன்றத்து குறும் பல மறுகி
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து		5
களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை
எருவை நறும் பூ நீடிய
பெரு வரை சிறு நெறி வருதலானே		10
					மேல்
# 262 பாலை பெருந்தலை சாத்தனார்

தண் புன கருவிளை கண் போல் மா மலர்
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர
உறை மயக்கு_உற்ற ஊர் துஞ்சு யாமத்து
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்
துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும்		5
பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால்
குவளை நாறும் கூந்தல் தே மொழி
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப
பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின்
அரிது மன்று அம்ம இன்மையது இளிவே		10
					மேல்
# 263 நெய்தல் இளவெயினனார்

பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின்
இறை வரை நில்லா வளையும் மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு
கடும் சூல் வயவொடு கானல் எய்தாது		5
கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லா
கரப்பவும்_கரப்பவும் கைம்மிக்கு
உரைத்த தோழி உண்கண் நீரே			10
					மேல்
# 264 பாலை ஆவூர் காவிதிகள் சாதேவனார்

பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர			5
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்
ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே
					மேல்
# 265 குறிஞ்சி பரணர்

இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன ஆர மார்பின்			5
சிறு கோல் சென்னி ஆரேற்று அன்ன
மாரி வண் மகிழ் ஓரி கொல்லி
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் நம்_வயினானே
					மேல்
# 266 முல்லை கச்சிப்பேட்டு இளந்தச்சனார்

கொல்லை கோவலர் குறும் புனம் சேர்ந்த
குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே
அதுவே சாலும் காமம் அன்றியும்			5
எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு
இரீஇய_காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே
					மேல்
# 267 நெய்தல் கபிலர்

நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்		5
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல்		10
இவை மகன் என்னா அளவை
வய_மான் தோன்றல் வந்து நின்றனனே
					மேல்
# 268 குறிஞ்சி வெறி பாடிய காமக்கண்ணியார்

சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க
மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து
கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு			5
காதல் செய்தவும் காதல் அன்மை
யாதனின்-கொல்லோ தோழி வினவுகம்
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே
					மேல்
# 269 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்

குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணி
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன்
மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய
அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி		5
திரு முகத்து அலமரும் கண் இனைந்து அல்கலும்
பெருமர வள்ளியின் பிணிக்கும் என்னார்
சிறு பல் குன்றம் இறப்போர்
அறிவார் யார் அவர் முன்னியவ்வே
					மேல்
# 270 நெய்தல் பரணர்

தடம் தாள் தாழை குடம்பை நோனா
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள் பொறி போல எம் முனை வருதல்
அணி தகை அல்லது பிணித்தல் தேற்றா		5
பெரும் தோள் செல்வத்து இவளினும் எல்லா
என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே			10
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே
					மேல்
# 271 பாலை கயமனார்

இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி
பைம் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர்		5
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று
வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு	10
மா இரும் தாழி கவிப்ப
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே
					மேல்
# 272 நெய்தல் முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

கடல் அம் காக்கை செ வாய் சேவல்
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை
கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி		5
பூ உடை குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின் நசை பழுது ஆக
பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்ந்து
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே		10
					மேல்
# 273 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்து_உறீஇ நம்_வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என
வேலன் உரைக்கும் என்ப ஆகலின்			5
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளு-தொறும்
நெஞ்சு நடுக்கு_உறூஉம் அவன் பண்பு தரு படரே	10
					மேல்
# 274 பாலை காவன் முல்லை பூதனார்

நெடு வான் மின்னி குறும் துளி தலைஇ
படு மழை பொழிந்த பகு வாய் குன்றத்து
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்		5
எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை
பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே
					மேல்
# 275 நெய்தல் அம்மூவனார்

செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற
காணார் முதலொடு போந்து என பூவே
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கை
தன் உறு விழுமம் அறியா மென்மெல
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்		5
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து
அறன் இலாளன் புகழ என்
பெறினும் வல்லேன்-மன் தோழி யானே
					மேல்
# 276 குறிஞ்சி தொல் கபிலர்

கோடு துவையா கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின்
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில்		5
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே செல்லாது
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை
வாங்கு அமை பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே		10
					மேல்
# 277 பாலை தும்பி சேர் கீரனார்

கொடியை வாழி தும்பி இ நோய்
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என
மெய்யே கருமை அன்றியும் செவ்வன்
அறிவும் கரிதோ அறன் இலோய் நினக்கே
மனை உற காக்கும் மாண் பெரும் கிடக்கை		5
நுண் முள் வேலி தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி வேறுபட
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்
சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர்	10
வெம் மலை அரும் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே
					மேல்
# 278 நெய்தல் உலோச்சனார்

படு காழ் நாறிய பராஅரை புன்னை
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ
பொன்னின் அன்ன தாது படு பன் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும்
நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை		5
இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல்
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி
குளம்பினும் சே_இறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே
					மேல்
# 279 பாலை கயமனார்

வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும்
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு		5
பொருத யானை புல் தாள் ஏய்ப்ப
பசி பிடி உதைத்த ஓமை செம் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து
அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய்
சிலம்பு கழீஇய செல்வம்			10
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே
					மேல்
# 280 மருதம் பரணர்

கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டா பரத்தமை
புலவாய் என்றி தோழி புலவேன்			5
பழன யாமை பாசடை புறத்து
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என்
நன் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தா மாறே		10
					மேல்
# 281 பாலை கழார் கீரன் எயிற்றியார்

மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கி
வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும்
நல் வகை மிகு பலி கொடையோடு உகுக்கும்
அடங்கா சொன்றி அம் பல் யாணர்		5
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப
மழை அமைந்து_உற்ற மால் இருள் நடுநாள்
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம்
பனி கடுமையின் நனி பெரிது அழுங்கி
துஞ்சாம் ஆகலும் அறிவோர்			10
அன்பு இலர் தோழி நம் காதலோரே
					மேல்
# 282 குறிஞ்சி நல்லூர் சிறு மேதாவியார்

தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ
கோடு ஏந்து அல்குல் அம் வரி வாட
நன் நுதல் சாய படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது உணர்த்த
அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன்		5
கிளவியின் தணியின் நன்று-மன் சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே
					மேல்
# 283 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்

ஒண் நுதல் மகளிர் ஓங்கு கழி குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரி சிறு_மனை அணியும் துறைவ
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை		5
முந்நீர் மீமிசை பலர் தொழ தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே
					மேல்
# 284 பாலை தேய்புரி பழங்கயிற்றினார்

புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்_வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்_வினை முடியாது எவ்வம் செய்தல்		5
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்கா தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய் புரி பழம் கயிறு போல			10
வீவது-கொல் என் வருந்திய உடம்பே
					மேல்
# 285 குறிஞ்சி மதுரை கொல்லன் வெண்ணாகனார்

அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள்
இரவின் வருதல் அன்றியும் உரவு கணை
வன் கை கானவன் வெம் சிலை வணக்கி
உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட		5
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட
நடு கால் குரம்பை தன் குடி_வயின் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி என்றும்
அயலோர் அம்பலின் அகலான்			10
பகலின் வரூஉம் எறி புனத்தானே
					மேல்
# 286 பாலை துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார்

ஊசல் ஒண் குழை உடை வாய்த்து அன்ன
அத்த குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து		5
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ தோழி அவர் சென்ற திறமே
					மேல்
# 287 நெய்தல் உலோச்சனார்

விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த
நல் எயில் உடையோர் உடையம் என்னும்
பெருந்தகை மறவன் போல கொடும் கழி
பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன்		5
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்
காமம் பெருமையின் வந்த ஞான்றை
அருகாது ஆகி அவன்_கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்
தேர் மணி தெள் இசை-கொல் என		10
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே
					மேல்
# 288 குறிஞ்சி குளம்பனார்

அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று
நன் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை		5
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ
கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில்
ஏனல் செந்தினை பால் ஆர் கொழும் குரல்
சிறு கிளி கடிகம் சென்றும் இ
நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே	10	
					மேல்
# 289 முல்லை மருங்கூர் பட்டினத்து சேந்தன் குமரனார்

அம்ம வாழி தோழி காதலர்
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே வானம்
நளி கடல் முகந்து செறி_தக இருளி
கனை பெயல் பொழிந்து கடும் குரல் பயிற்றி		5
கார் செய்து என் உழையதுவே ஆயிடை
கொல்லை கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல
அருள் இலேன் அம்ம அளியேன் யானே
					மேல்
# 290 மருதம் மதுரை மருதன் இளநாகனார்

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில்
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல்
கொள்ளல் மாதோ முள் எயிற்றோயே		5
நீயே பெரு நலத்தையே அவனே
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன் என்னாரே
					மேல்
# 291 நெய்தல் கபிலர்

நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு
குப்பை வெண் மணல் ஏறி அரைசர்
ஒண் படை தொகுதியின் இலங்கி தோன்றும்
தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும்		5
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து
எல்லி தரீஇய இன நிரை
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே
					மேல்
# 292 குறிஞ்சி நல்வேட்டனார்

நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்
யாணர் வைப்பின் கானம் என்னாய்
களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை		5
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும்
கராஅம் பேணாய் இரவரின்
வாழேன் ஐய மை கூர் பனியே
					மேல்
# 293 பாலை கயமனார்

மணி குரல் நொச்சி தெரியல் சூடி
பலி கள் ஆர்கை பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்து
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல்		5
பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல்
பொம்மல்_ஓதியை தன் மொழி கொளீஇ
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே
					மேல்
# 294 குறிஞ்சி புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி வேய் பயின்று
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும்
தொன்று உறை துப்பொடு முரண் மிக சினைஇ	5
கொன்ற யானை கோடு கண்டு அன்ன
செம் புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்பு உடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே
					மேல்
# 295 நெய்தல் ஔவையார்

முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள்
அரும் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை
வேறு பல் நாட்டு கால் தர வந்த			5
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை
கலி மடை கள்ளின் சாடி அன்ன எம்
இள நலம் இல்_கடை ஒழிய
சேறும் வாழியோ முதிர்கம் யாமே
					மேல்
# 296 பாலை குதிரை தறியனார்

என் ஆவது-கொல் தோழி மன்னர்
வினை வல் யானை புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப
புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மே தக மலரும்			5
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇ
செல்ப என்ப காதலர்
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே
					மேல்
# 297 குறிஞ்சி மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப
நின் ஒளி எறிய சேவடி ஒதுங்காய்
பன் மாண் சேக்கை பகை கொள நினைஇ
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை	5
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை			10
ஐயம் இன்றி கடும் கவவினளே
					மேல்
# 298 பாலை விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட
எருவை சேவல் கிளை_வயின் பெயரும்
அரும் சுர கவலை அஞ்சுவரு நனம் தலை		5
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள்
கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம்
பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார்
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண்
ஒருமை செப்பிய அருமை வான் முகை		10
இரும் போது கமழும் கூந்தல்
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே
					மேல்
# 299 நெய்தல் வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

உரு கெழு யானை உடை கோடு அன்ன
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ
தயங்கு இரும் கோடை தூக்கலின் நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும் அவர்_காண்		5
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ
வில் எறி பஞ்சி போல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே
					மேல்
# 300 மருதம் பரணர்

சுடர் தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர்
மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம்	5
முன்கடை நிறீஇ சென்றிசினோனே
நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது
நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்			10
பிச்சை சூழ் பெரும் களிறு போல எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே
					மேல்





# 301 குறிஞ்சி பாண்டியன் மாறன் வழுதி

நீள் மலை கலித்த பெரும் கோல் குறிஞ்சி
நாள்_மலர் புரையும் மேனி பெரும் சுனை
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண்
மயில் ஓர் அன்ன சாயல் செம் தார்
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள்		5
பாவை அன்ன வனப்பினள் இவள் என
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி
யாய் மறப்பு அறியா மடந்தை
தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே
					மேல்
# 302 பாலை மதுரை மருதன் இளநாகனார்

இழை அணி மகளிரின் விழை_தக பூத்த
நீடு சுரி இணர சுடர் வீ கொன்றை
காடு கவின் பூத்து ஆயினும் நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ		5
தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டு
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்
வழங்கு அரும் கானம் இறந்திசினோரே		10
					மேல்
# 303 நெய்தல் மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்

ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளென
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பை
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும்	5
துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய்
நம்_வயின் வருந்தும் நன்_நுதல் என்பது
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல்
வன் கை பரதவர் இட்ட செம் கோல்
கொடு முடி அம் வலை பரிய போக்கி		10
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடு_நீர் சேர்ப்பன்_தன் நெஞ்சத்தானே
					மேல்
# 304 குறிஞ்சி மாறோக்கத்து நப்பசலையார்

வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி
சாரல் வரைய கிளை உடன் குழீஇ
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இரும் சிலம்பின் நன் மலை நாடன்
புணரின் புணரும்-மார் எழிலே பிரியின்		5
மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணி நலம் சிதைக்கும்-மார் பசலை அதனால்
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண் கமழ் நறும் தார் விறலோன் மார்பே		10
					மேல்
# 305 பாலை கயமனார்

வரி அணி பந்தும் வாடிய வயலையும்
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும்
கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை நின் தோழி		5
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வெள் வேல் விடலையை
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே	10
					மேல்
# 306 குறிஞ்சி உரோடோகத்து கந்தரத்தனார்

தந்தை வித்திய மென் தினை பைபய
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என
நல்ல இனிய கூறி மெல்ல
கொயல் தொடங்கினரே கானவர் கொடும் குரல்	5
சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல்
செறி தோட்டு எல் வளை குறு_மகள்		10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே
					மேல்
# 307 நெய்தல் அம்மூவனார்

கவர் பரி நெடும் தேர் மணியும் இசைக்கும்
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்
கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன்		5
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை
மா அரை மறைகம் வம்-மதி பானாள்
பூ விரி கானல் புணர் குறி வந்து நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே		10
					மேல்
# 308 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்

செல விரைவு_உற்ற அரவம் போற்றி
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை
யாம் தன் கரையவும் நாணினள் வருவோள்
வேண்டாமையின் மென்மெல வந்து
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி		5
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை
பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து
ஆகம் அடைதந்தோளே அது கண்டு
ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம்
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம்		10
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே
					மேல்
# 309 குறிஞ்சி கபிலர்

நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின்
ஆழல் வாழி தோழி வாழை
கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும்	5
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமம் ஆக அறியுநர் இன்று என
கூறுவை-மன்னோ நீயே
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே
					மேல்
# 310 மருதம் பரணர்

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை
களிற்று செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே		5
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு ஓரா தாயரொடு ஒழிபு உடன்
சொல்லலை-கொல்லோ நீயே வல்லை
களிறு பெறு வல்சி பாணன் கையதை
வள் உயிர் தண்ணுமை போல			10
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே
					மேல்
# 311 நெய்தல் உலோச்சனார்

பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி
இரும் கதிர் நெல்லின் யாணரஃதே
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து
இரும் கழி செறுவின் வெள் உப்பு விளையும்
அழியா மரபின் நம் மூதூர் நன்றே		5
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே
ஒன்றே தோழி நம் கானலது பழியே
கரும் கோட்டு புன்னை மலர் தாது அருந்தி
இரும் களி பிரசம் ஊத அவர்			10
நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே
					மேல்
# 312 பாலை கழார் கீரன் எயிற்றியார்

நோகோ யானே நோம் என் நெஞ்சே
பனி புதல் ஈங்கை அம் குழை வருட
சிறை குவிந்து இருந்த பைதல் வெண்_குருகு
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள
மாரி நின்ற மையல் அற்சிரம்			5
யாம் தன் உழையம் ஆகவும் தானே
எதிர்த்த தித்தி முற்றா முலையள்
கோடை திங்களும் பனிப்போள்
வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே
					மேல்
# 313 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப
தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து
ஒலி பல் கூந்தல் அணி பெற புனைஇ
காண்டல் காதல் கைம்மிக கடீஇயாற்கு		5
யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப ஊர்_வயின்
மீள்குவம் போல தோன்றும் தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா			10
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே
					மேல்
# 314 பாலை முப்பேர் நாகனார்

முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்
குறும் பொறி கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்	5
கரும் கண் வெம் முலை ஞெமுங்க புல்லி
கழிவது ஆக கங்குல் என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய
நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி
அலங்கல் அம் பாவை ஏறி புலம்பு கொள்		10
புன் புறா வீழ் பெடை பயிரும்
என்றூழ் நீள் இடை சென்றிசினோரே
					மேல்
# 315 நெய்தல் அம்மூவனார்

ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என
பார் துறை புணரி அலைத்தலின் புடை கொண்டு
மூத்து வினை போகிய முரி வாய் அம்பி
நல் எருது நடை வளம் வைத்து என உழவர்
புல் உடை காவில் தொழில் விட்டு ஆங்கு		5
நறு விரை நன் புகை கொடாஅர் சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதல் பிணிக்கும் துறைவ நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல்		10
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர்
மலர் தீய்ந்து அனையர் நின் நயந்தோரே
					மேல்
# 316 முல்லை இடைக்காடனார்

மடவது அம்ம மணி நிற எழிலி
மலரின் மௌவல் நலம் வர காட்டி
கயல் ஏர் உண்கண் கனம் குழை இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்	5
நன் நுதல் நீவி சென்றோர் தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை அத்த
கல் மிசை அடுக்கம் புதைய கால்வீழ்த்து
தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே		10
					மேல்
# 317 குறிஞ்சி மதுரை பூவண்ட நாகன் வேட்டனார்

நீடு இரும் சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூ பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை
பவள செம் வாய் பைம் கிளி கவரும்
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை		5
அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து
என் ஆகுவ-கொல் தானே எந்தை
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே		10
					மேல்
# 318 பாலை பாலை பாடிய பெரும் கடுங்கோ

நினைத்தலும் நினைதிரோ ஐய அன்று நாம்
பணை தாள் ஓமை படு சினை பயந்த
பொருந்தா புகர் நிழல் இருந்தனெம் ஆக
நடுக்கம் செய்யாது நண்ணு_வழி தோன்றி
ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை	5
பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து
என்றூழ் விடர் அகம் சிலம்ப
புன் தலை மட பிடி புலம்பிய குரலே
					மேல்
# 319 நெய்தல் வினைத்தொழில் சோகீரனார்

ஓதமும் ஒலி ஓவு இன்றே ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில்
கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும்		5
அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள்
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்
தட மென் பணை தோள் மடம் மிகு குறு_மகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி
மீன் கண்துஞ்சும் பொழுதும்			10
யான் கண்துஞ்சேன் யாது-கொல் நிலையே
					மேல்
# 320 மருதம் கபிலர்

விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின்
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல்
ஓரி கொன்ற ஒரு பெரும் தெருவில்		5
காரி புக்க நேரார் புலம் போல்
கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி ஆய் தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரை காத்தே		10
					மேல்
# 321 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

செம் நில புறவின் புன் மயிர் புருவை
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர
கான முல்லை கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை		5
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல
வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை
வல்லை கடவு-மதி தேரே சென்றிக
குருந்து அவிழ் குறும்_பொறை பயிற்ற
பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே		10
					மேல்
# 322 குறிஞ்சி மதுரை பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்

ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை
வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து
எறிந்து செறித்து அன்ன பிணங்கு அரில் விடர் முகை
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர்		5
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி
கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது
நன் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணர கூறி வேலன்			10
இன் இயம் கறங்க பாடி
பன் மலர் சிதறி பரவு_உறு பலிக்கே
					மேல்
# 323 நெய்தல் வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை
நடுவணதுவே தெய்ய மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவண
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின்
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை		5
நல்லோள் தந்தை சிறுகுடி பாக்கம்
புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர்
தெரி மணி கேட்டலும் அரிதே			10
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே
					மேல்
# 324 குறிஞ்சி கயமனார்

அந்தோ தானே அளியள் தாயே
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல்
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள்
கோடு முற்று யானை காடு உடன் நிறைதர
நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின்		5
செல்வ தந்தை இடன் உடை வரைப்பின்
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே
					மேல்
# 325 பாலை மதுரை காருலவியம் கூத்தனார்

கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி
நீடு செயல் சிதலை தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென
முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும்		5
ஊக்கு அரும் கவலை நீந்தி மற்று இவள்
பூ போல் உண்கண் புது நலம் சிதைய
வீங்கு நீர் வார கண்டும்
தகுமோ பெரும தவிர்க நும் செலவே
					மேல்
# 326 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்

கொழும் சுளை பலவின் பயம் கெழு கவாஅன்
செழும் கோள் வாங்கிய மா சினை கொக்கு_இனம்
மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது
துய் தலை மந்தி தும்மும் நாட
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே		5
நுண் கொடி பீரத்து ஊழ்_உறு பூ என
பசலை ஊரும் அன்னோ பல் நாள்
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண
வண்டு எனும் உணரா ஆகி
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே		10
					மேல்
# 327 நெய்தல் அம்மூவனார்

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்
சாதலும் இனிதே காதல் அம் தோழி
அ நிலை அல்ல ஆயினும் சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து	5
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ்
புன்னை ஓங்கிய கானல்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே
					மேல்
# 328 குறிஞ்சி தொல் கபிலர்

கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி
சிற்சில வித்தி பற்பல விளைந்து
தினை கிளி கடியும் பெரும் கல் நாடன்
பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால்
அது இனி வாழி தோழி ஒரு நாள்		5
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு
பெரும் பெயல் தலைக புனனே இனியே
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரும் சாரல்
விலங்கு மலை அடுக்கத்தானும்			10
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே
					மேல்
# 329 பாலை மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

வரையா நயவினர் நிரையம் பேணார்
கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி		5
செம் கணை செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்
அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்து
அல்கலர் வாழி தோழி உது காண்
இரு விசும்பு அதிர மின்னி			10
கருவி மா மழை கடல் முகந்தனவே
					மேல்
# 330 மருதம் ஆலங்குடி வங்கனார்

தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து
மட நடை நாரை பல் இனம் இரிய
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்		5
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்_தம்
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும்
பைம் தொடி மகளிரொடு சிறுவர் பயந்து
நன்றி சான்ற கற்பொடு			10
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே
					மேல்
# 331 நெய்தல் உலோச்சனார்

உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி
கானல் இட்ட காவல் குப்பை
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி		5
எந்தை திமில் இது நுந்தை திமில் என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர்
இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம்		10
பிறர் பிறர் அறிதல் யாவது
தமர் தமர் அறியா சேரியும் உடைத்தே
					மேல்
# 332 குறிஞ்சி குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்

இகுளை தோழி இஃது என் எனப்படுமோ
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு
நாளும் நாள் உடன் கவவவும் தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி என பன் மாண்
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை		5
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி
இரை நசைஇ பரிக்கும் மலை முதல் சிறு நெறி
தலை நாள் அன்ன பேணலன் பல நாள்
ஆர் இருள் வருதல் காண்பேற்கு
யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே		10
					மேல்
# 333 பாலை கள்ளிக்குடி பூதம் புல்லனார்

மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து என
கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறி
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து		5
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து
திருந்து_இழை பணை தோள் பெறுநர் போலும்
நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசை
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர் பொருந்தி		10
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமே
					மேல்
# 334 குறிஞ்சி

கரு விரல் மந்தி செம் முக பெரும் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை
வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்ப
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன்		5
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள்
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி
மின்னு வசி விளக்கத்து வரும் எனின்
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே
					மேல்
# 335 நெய்தல் வெள்ளிவீதியார்

திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்
பொங்கு திரை புணரியும் பாடு ஓவாதே
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல்
பல் பூ கானல் முள் இலை தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ		5
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனை மிசை பைதல உயவும்
அன்றிலும் என்பு உற நரலும் அன்றி
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று			10
காமம் பெரிதே களைஞரோ இலரே
					மேல்
# 336 குறிஞ்சி கபிலர்

பிணர் சுவல் பன்றி தோல் முலை பிணவொடு
கணை கால் ஏனல் கைம்மிக கவர்தலின்
கல் அதர் அரும் புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை
புனை இரும் கதுப்பின் மனையோள் கெண்டி		5
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட
உரவு சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின்
ஈர் அளை புற்றம் கார் என முற்றி
இரை தேர் எண்கு_இனம் அகழும்			10
வரை சேர் சிறு நெறி வாராதீமே
					மேல்
# 337 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர்-கொல்லோ சிறந்திசினோரே
முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரை பாதிரி குறு மயிர் மா மலர்
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய	5
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன்
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால்
தாழ் நறும் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே		10
					மேல்
# 338 நெய்தல் மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்

கடும் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர்
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை
நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப		5
யாங்ஙனம் விடுமோ மற்றே மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி
கொடு வாய் பேடை குடம்பை சேரிய		10
உயிர் செல கடைஇ புணர் துணை
பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே
					மேல்
# 339 குறிஞ்சி சீத்தலை சாத்தனார்

தோலா காதலர் துறந்து நம் அருளார்
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை சிறந்த		5
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி
நீர் அலை கலைஇய ஈர் இதழ் தொடையல்
ஒண் நுதல் பெதும்பை நன் நலம் பெறீஇ
மின் நேர் ஓதி இவளொடு நாளை
பன் மலர் கஞலிய வெறி கமழ் வேலி		10
தெண் நீர் மணி சுனை ஆடின்
என்னோ மகளிர்_தம் பண்பு என்றோளே
					மேல்
# 340 மருதம் நக்கீரர்

புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன்
கல்லா யானை கடும் தேர் செழியன்
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி			5
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே		10
					மேல்
# 341 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்

வங்கா வரி பறை சிறு பாடு முணையின்
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து
அலையா உலவை ஓச்சி சில கிளையா
குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும்		5
துணை நன்கு உடையள் மடந்தை யாமே
வெம் பகை அரு முனை தண் பெயல் பொழிந்து என
நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப
துணை இலேம் தமியேம் பாசறையேமே		10
					மேல்
# 342 நெய்தல்

மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி
என் வாய் நின் மொழி மாட்டேன் நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என		5
கண் இனிது ஆக கோட்டியும் தேரலள்
யானே எல்_வளை யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னி சேவடி சேர்த்தின்
என் என படுமோ என்றலும் உண்டே		10
					மேல்
# 343 பாலை  கருவூர் கதப்பிள்ளை சாத்தனார்

முல்லை தாய கல் அதர் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடி சீறூர்
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை		5
புன்கண் அந்தி கிளை வயின் செறிய
படையொடு வந்த பையுள் மாலை
இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்து
அரும் பொருள் கூட்டம் வேண்டி
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே		10
					மேல்
# 344 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடி தட கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை	5
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப
செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரை
பெரும் கல் விடர்_அகம் சிலம்ப இரும் புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து	10
செந்தினை உணங்கல் தொகுக்கும்
இன் கல் யாணர் தம் உறைவு இன் ஊர்க்கே
					மேல்
# 345 நெய்தல் நம்பி குட்டுவனார்

கானல் கண்டல் கழன்று உகு பைம் காய்
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல்
சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்ன
வெளிய விரியும் துறைவ என்றும்			5
அளிய பெரிய கேண்மை நும் போல்
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடு இன்று விரும்பார் ஆயின்
வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே		10
					மேல்
# 346 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்

குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
தண் கார் தலைஇய நிலம் தணி காலை
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்
அழிந்த வேலி அம் குடி சீறூர்
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட		5
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை
இன்று நக்கனை-மன் போலா என்றும்
நிறை_உறு மதியின் இலங்கும் பொறையன்
பெரும் தண் கொல்லி சிறு பசும் குளவி
கடி பதம் கமழும் கூந்தல்			10
மட மா அரிவை தட மென் தோளே
					மேல்
# 347 குறிஞ்சி பெருங்குன்றூர் கிழார்

முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை
மாதிர நனம் தலை புதைய பாஅய்
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு
வான் புகு தலைய குன்றம் முற்றி
அழி துளி தலைஇய பொழுதில் புலையன்		5
பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன
அருவி இழிதரும் பெரு வரை நாடன்
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
வேனில் தேரையின் அளிய			10
காண வீடுமோ தோழி என் நலனே
					மேல்
# 348 நெய்தல் வெள்ளி வீதியார்

நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும்	5
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இரும் கங்குலும் கண்படை இலெனே
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம்
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே	10
					மேல்
# 349 நெய்தல் மிளை கிழான் நல்வேட்டனார்

கடும் தேர் ஏறியும் காலின் சென்றும்
கொடும் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும் செய் தார்		5
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை
ஒளிறு வேல் அழுவத்து களிறு பட பொருத
பெரும் புண்ணுறுநர்க்கு பேஎய் போல
பின்னிலை முனியா நம்_வயின்
என் என நினையும்-கொல் பரதவர் மகளே		10
					மேல்
# 350 மருதம் பரணர்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழன பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்
தொல் கவின் தொலையினும் தொலைக சார		5
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇ
கவவு கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை வாடிய கோதையை
ஆசு இல் கலம் தழீஇ அற்று
வாரல் வாழிய கவைஇ நின்றோளே		10
					மேல்




# 351 குறிஞ்சி மதுரை கண்ணத்தனார்

இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை
அரும் கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய் பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி வேண்டு அன்னை கரும் தாள்		5
வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த
களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து
சிறுதினை வியன் புனம் காப்பின்
பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே
					மேல்
# 352 பாலை மதுரை பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

இலை மாண் பகழி சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை
அழல் போல் செவிய சேவல் ஆட்டி
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி		5
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்து_உற்று
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அரும் சுர கவலை வருதலின் வருந்திய
நமக்கும் அரிய ஆயின அமை தோள்		10
மாண்பு உடை குறு_மகள் நீங்கி
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே
					மேல்
# 353 குறிஞ்சி கபிலர்

ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல கணம்_கொள
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
கல் கெழு குறவர் காதல் மட_மகள்		5
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்
வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம்
காமம் கனிவது ஆயினும் யாமத்து
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை
வெம் சின உருமின் உரறும்			10
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே
					மேல்
# 354 நெய்தல் உலோச்சனார்

தான் அது பொறுத்தல் யாவது கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலை சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்
எல்லி அன்ன இருள் நிற புன்னை			5
நல் அரை முழு_முதல் அ வயின் தொடுத்த
தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின்
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப			10
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே
					மேல்
# 355 குறிஞ்சி

புதல்வன் ஈன்ற பூ கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள்
குலை_வாய் தோயும் கொழு மடல் வாழை
அ மடல் பட்ட அருவி தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட			5
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ
என் கண் ஓடி அளி-மதி			10
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே
					மேல்
# 356 குறிஞ்சி பரணர்

நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம்
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும்		5
அசைவு இல் நோன் பறை போல செலவர
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்
காதலி உழையள் ஆக
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே
					மேல்
# 357 குறிஞ்சி குறமகள் குறியெயினி

நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு
என்னொடு நிலையாது ஆயினும் என்றும்
நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதே
சேண் உற தோன்றும் குன்றத்து கவாஅன்
பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி		5
பீலி மஞ்ஞை ஆலும் சோலை
அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீர் அலை கலைஇய கண்ணி
சாரல் நாடனொடு ஆடிய நாளே			10
					மேல்
# 358 நெய்தல் நக்கீரர்

பெரும் தோள் நெகிழ அம் வரி வாட
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர
இன்னேம் ஆக என் கண்டு நாணி
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம்
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என		5
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்
பரவினம் வருகம் சென்மோ தோழி
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல்
சிறு_வெண்_காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என்		10
அரும் பெறல் ஆய் கவின் தொலைய
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே
					மேல்
# 359 குறிஞ்சி கபிலர்

சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதா
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின்		5
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை
வாடல-கொல்லோ தாமே அவன் மலை
போர் உடை வருடையும் பாயா
சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையே
					மேல்
# 360 மருதம் ஓரம்போகியார்

முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல
நெருநை புணர்ந்தோர் புது நலம் வௌவி
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்
சென்றீ பெரும சிறக்க நின் பரத்தை		5
பல்லோர் பழித்தல் நாணி வல்லே
காழின் குத்தி கசிந்தவர் அலைப்ப
கை இடை வைத்தது மெய் இடை திமிரும்
முனி உடை கவளம் போல நனி பெரிது
உற்ற நின் விழுமம் உவப்பென்			10
மற்றும் கூடும் மனை மடி துயிலே
					மேல்
# 361 முல்லை மதுரை பேராலவாயர்

சிறு வீ முல்லை பெரிது கமழ் அலரி
தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர்
விசும்பு கடப்பு அன்ன பொலம் படை கலி_மா
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப		5
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்
தந்தன நெடுந்தகை தேரே என்றும்
அரும் படர் அகல நீக்கி
விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே
					மேல்
# 362 பாலை மதுரை மருதன் இள நாகனார்

வினை அமை பாவையின் இயலி நுந்தை
மனை வரை இறந்து வந்தனை ஆயின்
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும்		5
நீ விளையாடுக சிறிதே யானே
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி
அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே		10
					மேல்
# 363 நெய்தல்

கண்டல் வேலி கழி சூழ் படப்பை
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என
வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு	5
வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப
பைம் தழை சிதைய கோதை வாட
நன்னர் மாலை நெருநை நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே	10
					மேல்
# 364 முல்லை கிடங்கில் காவிதி பெரும் கொற்றனார்

சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப
இன்ன சில் நாள் கழியின் பல் நாள்		5
வாழலென் வாழி தோழி ஊழின்
உரும் இசை அறியா சிறு செம் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப
பல் ஆ தந்த கல்லா கோவலர்
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப	10
உயிர் செல துனைதரும் மாலை
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே
					மேல்
# 365 குறிஞ்சி கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்

அரும் கடி அன்னை காவல் நீவி
பெரும் கடை இறந்து மன்றம் போகி
பகலே பலரும் காண வாய் விட்டு
அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி
சென்மோ வாழி தோழி பல் நாள்			5
கருவி வானம் பெய்யாது ஆயினும்
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலை கிழவனை
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே
					மேல்
# 366 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்

அரவு கிளர்ந்து அன்ன விரவு_உறு பல் காழ்
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அற கழீஇ
கூதிர் முல்லை குறும் கால் அலரி			5
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பன் மெல் அணை ஒழிய கரும்பின்
வேல் போல் வெண் முகை விரிய தீண்டி
முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில் அம் கழை தூங்க ஒற்றும்			10
வட புல வாடைக்கு பிரிவோர்
மடவர் வாழி இ உலகத்தானே
					மேல்
# 367 முல்லை நக்கீரர்

கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை
நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து
கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு
சூர் உடை பலியொடு கவரிய குறும் கால்
கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும்		5
மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி
மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லை
தளை அவிழ் அலரி தண் நறும் கோதை
இளையரும் சூடி வந்தனர் நமரும்			10
விரி உளை நன் மா கடைஇ
பரியாது வருவர் இ பனி படு நாளே
					மேல்
# 368 குறிஞ்சி கபிலர்

பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி
கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ
நெறி படு கூழை கார் முதிர்பு இருந்த		5
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே
ஐய அஞ்சினம் அளியம் யாமே			10
					மேல்
# 369 நெய்தல் மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறை குருகு_இனம் விசும்பு உகந்து ஒழுக
எல்லை பைபய கழிப்பி முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின் நன்றும்			5
அறியேன் வாழி தோழி அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்		10
நிறை அடு காமம் நீந்தும் ஆறே
					மேல்
# 370 மருதம் உறையூர் கதுவாய் சாத்தனார்

வாராய் பாண நகுகம் நேர்_இழை
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ்
விளங்கு நகர் விளங்க கிடந்தோள் குறுகி
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி	5
திதலை அல்குல் முது பெண்டு ஆகி
துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி என
பன் மாண் அகட்டில் குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல
முகை நாண் முறுவல் தோற்றி			10
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே
					மேல்
# 371 முல்லை ஔவையார்

காயாம் குன்றத்து கொன்றை போல
மா மலை விடர்_அகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய்
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்		5
நிழல் திகழ் சுடர் தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர்
குழல் தொடங்கினரே கோவலர்
தழங்கு குரல் உருமின் கங்குலானே
					மேல்
# 372 நெய்தல் உலோச்சனார்

அழி_தக்கன்றே தோழி கழி சேர்பு
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம்
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என
கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு	5
அன்ன வெண் மணற்று அக_வயின் வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு
இனையல் என்னும் என்ப மனை இருந்து		10
இரும் கழி துழவும் பனி தலை பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலி கழி நல் ஊரே
					மேல்
# 373 குறிஞ்சி கபிலர்

முன்றில் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி			5
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரல் சிறுதினை கடிய
புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே
					மேல்
# 374 முல்லை வன் பரணர்

முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின்
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி
களரி புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலீர்
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை		5
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்து இழை அரிவை தே மொழி நிலையே
					மேல்
# 375 நெய்தல் பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி

நீடு சினை புன்னை நறும் தாது உதிர
கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும்
பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப		5
வருவை ஆயினோ நன்றே பெரும் கடல்
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரே
					மேல்
# 376 குறிஞ்சி கபிலர்

முறம் செவி யானை தட கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினை
வரையோன் வண்மை போல பல உடன்
கிளையோடு உண்ணும் வளை வாய் பாசினம்
குல்லை குளவி கூதளம் குவளை			5
இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன்
சுற்று அமை வில்லன் செயலை தோன்றும்
நல் தார் மார்பன் காண்குறின் சிறிய
நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி		10
வறும் புனம் காவல் விடாமை
அறிந்தனிர் அல்லிரோ அறன் இல் யாயே
					மேல்
# 377 குறிஞ்சி மடல் பாடிய மாதங்கீரனார்

மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண் நுதல் அரிவை நலம் பாராட்டி
பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ		5
அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த
பசும் கதிர் மதியத்து அகல் நிலா போல
அளகம் சேர்ந்த திரு_நுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே
					மேல்
# 378 நெய்தல் வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

யாமமும் நெடிய கழியும் காமமும்
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபய
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும்		5
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய்
அயல் இல் பெண்டிர் பசலை பாட
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல்
வரி ஆர் சிறு_மனை சிதைஇ வந்து
பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி		10
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே
					மேல்
# 379 குறிஞ்சி குடவாயில் கீரத்தனார்

புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது
எரி அகைந்து அன்ன வீ ததை இணர
வேங்கை அம் படு சினை பொருந்தி கைய
தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி		5
எழுது எழில் சிதைய அழுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தை_வாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன விரலே
பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது		10
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இரும் சிலம்பில் பூத்த
காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே
					மேல்
# 380 மருதம் கூடலூர் பல்கண்ணனார்

நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே
வால் இழை மகளிர் சேரி தோன்றும்		5
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்
கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை		10
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே
					மேல்
# 381 முல்லை ஔவையார்

அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் என
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்
கரை பொருது இழிதரும் கான்யாற்று இகு கரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை		5
யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே		10
					மேல்
# 382 நெய்தல் நிகண்டன் கலைக்கோட்டு தண்டனார்

கானல் மாலை கழி நீர் மல்க
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி
புள்_இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி		5
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்
தண்ணம் துறைவன் நாண
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே
					மேல்
# 383 குறிஞ்சி கோளியூர் கிழார் மகனார் செழியனார்

கல் அயல் கலித்த கரும் கால் வேங்கை
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி
புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள்		5
அருளினை போலினும் அருளாய் அன்றே
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு
ஓங்கு வரை நாட நீ வருதலானே
					மேல்
# 384 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

பைம் புற புறவின் செம் கால் சேவல்
களரி ஓங்கிய கவை முட கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடை பேடை உணீஇய மன்னர்
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம்		5
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த
நன்_நாள் வேங்கை பொன் மருள் புது பூ
பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு
அரும் துயர் உழந்த_காலை			10
மருந்து எனப்படூஉம் மடவோளையே
					மேல்
# 385 நெய்தல்

எல்லை சென்ற பின் மலரும் கூம்பின
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடு
அலவனும் அளை_வயின் செறிந்தன கொடும் கழி
இரை நசை வருத்தம் வீட மரம் மிசை
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால்		5
பொழுது அன்று ஆதலின் தமியை வருதி
எழுது எழில் மழை
					மேல்
# 386 குறிஞ்சி

சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
துறு கண் கண்ணி கானவர் உழுத
குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர்
விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாது
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்			5
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம்
கல் கெழு சிறுகுடி பொலிய
வதுவை என்று அவர் வந்த ஞான்றே		10
					மேல்
# 387 பாலை# பொதும்பில் கிழார் மகனார்

நெறி இரும் கதுப்பும் நீண்ட தோளும்
அம்ம நாளும் தொல் நலம் சிதைய
ஒல்லா செம் தொடை ஒரீஇய கண்ணி
கல்லா மழவர் வில் இடை விலங்கிய
துன் அரும் கவலை அரும் சுரம் இறந்தோர்		5
வருவர் வாழி தோழி செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானை செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி உது காண்
நெடும் பெரும் குன்றம் முற்றி			10
கடும் பெயல் பொழியும் கலி கெழு வானே
					மேல்
# 388 நெய்தல் மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

அம்ம வாழி தோழி நன்_நுதற்கு
யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி
கயிறு கடை யாத்த கடு நடை எறி_உளி
திண் திமில் பரதவர் ஒண் சுடர் கொளீஇ
நடுநாள் வேட்டம் போகி வைகறை		5
கடல் மீன் தந்து கானல் குவைஇ
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே		10
					மேல்
# 389 குறிஞ்சி காவிரி பூம்பட்டினத்து செங்கண்ணனார்

வேங்கையும் புலி ஈன்றன அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும்
களிற்று முகம் திறந்த கல்லா விழு தொடை
ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என		5
சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல்
காவல் நீ என்றோளே சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதை சுவல் கிளைத்த பூழி மிக பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு		10
அன்பு உறு காமம் அமைக நம் தொடர்பே
					மேல்
# 390 மருதம் ஔவையார்

வாளை வாளின் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ		5
விழவின் செலீஇயர் வேண்டும்-மன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையாமையோ அரிதே வரையின்
வரை போல் யானை வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்			10
அளிய தோழி தொலையுந பலவே
					மேல்
# 391 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே
புலி பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்
பனி பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை
ஒண் தொடி மகளிர் இழை அணி கூட்டும்		5
பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்_வயின்
யாரோ பிரிகிற்பவரே குவளை
நீர் வார் நிகர் மலர் அன்ன நின்
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே	10
					மேல்
# 392 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்

கடும் சுறா எறிந்த கொடும் தாள் தந்தை
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும்	5
பெண்ணை வேலி உழை கண் சீறூர்
நன் மனை அறியின் நன்று-மன் தில்ல
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம் பானாள்
முனி படர் களையினும் களைப			10
நனி பேர் அன்பினர் காதலோரே
					மேல்
# 393 குறிஞ்சி கோவூர் கிழார்

நெடும் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்
கானவன் எறிந்த கடும் செலல் ஞெகிழி		5
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்		10
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்_காலே
					மேல்
# 394 முல்லை ஔவையார்

மரம் தலைமணந்த நனம் தலை கானத்து
அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர்
வன் பரல் முரம்பின் நேமி அதிர			5
சென்றிசின் வாழியோ பனி கடு நாளே
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின்
குறும் பொறி கொண்ட சாந்தமொடு
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே
					மேல்
# 395 நெய்தல் அம்மூவனார்

யாரை எலுவ யாரே நீ எமக்கு
யாரையும் அல்லை நொதுமலாளனை
அனைத்தால் கொண்க நம் இடையே நினைப்பின்
கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன	5
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை
கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே	10
					மேல்
# 396 குறிஞ்சி

பெய்து போகு எழிலி வைகு மலை சேர
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப
வேங்கை தந்த வெற்பு அணி நன்_நாள்
பொன்னின் அன்ன பூ சினை துழைஇ
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை		5
பாசறை மீமிசை கணம்_கொள்பு ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி			10
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே
					மேல்
# 397 பாலை அம்மூவனார்

தோளும் அழியும் நாளும் சென்று என
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று		5
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே
					மேல்
# 398 நெய்தல் உலோச்சனார்

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே
நீர் அலை கலைஇய கூழை வடியா
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே			5
பன் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன்
சென்மோ சே_இழை என்றனம் அதன்_எதிர்
சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்து
யாணர் இள முலை நனைய
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே	10
					மேல்
# 399 குறிஞ்சி தொல்கபிலர்

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
குருதி ஒப்பின் கமழ் பூ காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நில வரை நிவந்த பல உறு திரு மணி		5
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ தோழி நின் திரு நுதல் கவினே		10
					மேல்
# 400 மருதம் ஆலங்குடி வங்கனார்

வாழை மென் தோடு வார்பு_உறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இரும் சுவல் வாளை பிறழும் ஊர
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று	5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த
கேண்மையொடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே		10
					மேல்
   
 அடிநேர் உரை

# 0 கடவுள் வாழ்த்து பாரதம் பாடிய பெருந்தேவனார்

பெரிய நிலமே தன் செம்மையான அடியாகவும், தெளிந்த நீர் நிறைந்த
சங்குகள் முழங்கும் கடலே தனக்கு ஆடையாகவும்
வானமே தனக்கு உடம்பாகவும், திசைகள் கைகள் ஆகவும்
பசிய கதிர்களையுடைய திங்களுடன், ஞாயிறு ஆகியவை கண்களாகவும் கொண்டு
உலகில் காணப்படும் எல்லாவற்றிலும் பொருந்திநின்றும் தன்னகத்தே அடக்கியும் உள்ள அவன்
வேதங்களுக்கு முதல்வன் என்பர்
தீமைகள் முற்றிலும் நீங்கப்பெற்ற ஆழியையுடைய முறைசெய்து காக்கும் இறையோனை.
					மேல்
# 1 குறிஞ்சி கபிலர்

நிற்கின்ற சொல்லை உடையவர், நெடிது பழகினும் இனியவர்,
என்றைக்கும் எனது தோளினைப் பிரிதலை அறியார்,
தாமரைப்பூவின் குளிர்ந்த தாதினை ஊதிக்கொண்டு, மிக்க உயரத்திலுள்ள
சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல
மேன்மையானது சிறந்தவர்களின் நட்பு;
நீர்வளம் இன்றி அமைந்திராத உலகம் போல
அவர் இன்றி அமையாத நம்மை விரும்பி அருள்செய்து
மணக்கும் நெற்றி பசலைகொள்ளுமோ என்று அஞ்சி
சிறுமை பயப்பனவற்றைச் செய்வாரோ? அவ்வாறு செய்தலை அறியமாட்டார்.
					மேல்
# 2 பாலை பெரும்பதுமனார்

ஆழப் பதிந்துகிடக்கும் பெரிய குளிர்ந்த குன்றத்திலுள்ள
தழைத்து வளர்ந்த ஈத்த மரங்களையுடைய காற்று வீசும் பாலைநிலத்தில்
வழியே செல்லும் மக்களின் தலையைத் தாக்கியதால்
சிவந்து கறையேறிய தலையையும், குருதியொழுகும் வாயையும் உடைய
வலிமையுடைய பெரிய தலையினைக் கொண்ட புலிக்குட்டிகள், மாலையில்
மானை எதிர்நோக்கியிருக்கும் இண்டங்கொடிகள் படர்ந்த ஈங்கைப் புதர்களைக் கொண்ட பாலைக்காட்டினில்
கூர்மையான பற்களைக் கொண்ட மெல்லியலாளான மடந்தையை முன்னே செல்லவிட்டு
இரவினிலே இந்தக் காட்டைக் கடக்க எண்ணும் இளைஞனின் உள்ளம்
காற்றோடு கலந்த பெருமழை பெய்யும்போது
பெரிய மலைப்பாறைகளை பெயர்த்துத்தள்ளும் பேரிடியினும் கொடியதாகும்
				மேல்
# 3 பாலை இளங்கீரனார்

அடைகாக்கும் பருந்து வருத்தமுடன் இருக்கும் வானத்தை முட்டும் நீண்ட கிளையினையும்
பொரிந்துபோன அடிமரத்தையும் உடைய வேம்பின் புள்ளிபுள்ளியான நிழலில்
கட்டளைக் கல் போன்ற வட்டரங்கினை கீறிக்கொண்டு
கல்லாத சிறுவர்கள் நெல்லிக்காய்களைக் கொண்டு வட்டு ஆடும்
வில்லால் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மக்களுடைய பகை முனையாகிய சிற்றூரில்
நடுவழியில் வந்ததும், நம் வலிமையனைத்தையும் கொன்றதுமான மாலைக்காலத்தில்
நினைத்துப்பார்த்தேன் அல்லவா நானே? எண்ணிய
காரியத்தை முடித்துவிட்ட இனிமையான உணர்வினைப் போன்ற இனியவள்,
மனைக்கு மாட்சிதரும் விளக்கினை ஏற்றிவைத்து நம்மையும் நினைத்துப்பார்க்கும் நேரம் இது என்று
				மேல்  
# 4 நெய்தல் அம்மூவனார்

கடற்கரைச் சோலையிடத்தே அமைந்த அழகான சிறுகுடியில் வாழும் கடல்மேற்செல்லும் பரதவர்கள்
நீல நிறப் புன்னையின் கொழுவிய நிழலில் தங்கி,
குளிர்ந்த பெரிய கடற்பரப்பின் பக்குவமான நிலையைப் பார்த்தபடி
அழகிய கண்களையுடைய முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் துறையைச் சேர்ந்தவனிடம் சென்று
ஊராரின் பழிச்சொற்களை அன்னை அறிந்தால் இங்கு சந்தித்துக்கொள்ளும் நம் வாழ்க்கை
இனி அரிதாகிப்போய்விடும் என்று கூறினால்
நம்மை அழைத்துக்கொண்டு செல்வாரோ? தோழி! உப்பு வணிகர்
வெள்ளைக்கல்லான உப்பின் விலையைக் கூவிக்கூறிச்செல்வதால்
ஆநிரைகளை விலக்கிப் போகும் நீண்ட வரிசையான வண்டிகள்
மணலைத் தேய்த்து எழுப்பும் பேரொலியைக் கேட்டு, வயல்வெளிகளிலுள்ள
கரிய காலையுடைய வெள்ளை நாரைகள் வெருளும்
கரிய கழிசூழ்ந்த நெய்தல் நிலத்தில் உள்ள தம்முடைய வாழ்தற்கு இனிதாகிய ஊருக்கு -
				மேல்
# 5 குறிஞ்சி பெருங்குன்றூர்க்கிழார்

நிலமானது நீரினை நிரம்பப் பெற, குன்றுகள் வளம்பெற,
அகன்ற வாயையுடைய பசிய சுனைகள் பயிர்களை விளைவிக்க,
குறவர்கள் வெட்டிப்போட்டதால் குறைவுபட்ட மணக்கின்ற கொடிகள்
நறுமணமிக்க வயிரம் பாய்ந்த சந்தனமரத்தைச் சுற்றிக்கொண்டு வளர,
பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகங்கள்
தெற்குப்பக்கமாய் எழுந்து முழங்கும் முன்பனிக்காலத்திலும்
அரிதானதாகும் உன் காதலர் உன்னைவிட்டுப் பிரிதல்; இன்றைக்குச் செல்லும்
அந்த இளைஞரைத் தடுத்துத் திரும்பும்படி செய்யும் வாடையுடன்
வருந்துகின்ற இமைகளில் மழையாய் நீரைச் சிந்தும் உன் கண்கள் சொல்லிய செய்தியும்.
				மேல்
# 6 குறிஞ்சி பரணர்

நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டின்
நாரை உரித்தது போன்ற அழகு குறைந்த மாமைநிறத்தவளும், 
குவளை மலரைப் போன்ற ஏந்திய அழகுள்ள குளிர்ந்த கண்களையுடைவளும்
தேமல் படிந்த அல்குலை உடையவளும், பெரிய தோளினையுடையவளுமாகிய தலைவியிடத்தே
கிட்டிச் சென்று உரைப்பவாரைப் பெற்றால்,
"இவர் யார்" என்று சொல்பவள் அல்லள் அவள், முன்னர் இருக்கும்
பாலைவழியில் இருக்கும் குமிழமரத்தின் வளைந்த மூக்கையுடைய நன்கு விளைந்த பழம்
துள்ளிக்குதிக்கும் இளைய மானுக்கு உணவு ஆகும்
வல்வில்லோரியின் காட்டைப் போல் மணம் மிக்க
கரிய பலவாகிய தழைத்துத் தாழ்ந்த கூந்தலாள்
பெரிதும் வருந்துவாள் தலைவன் வந்துவிட்டுச் சென்றிருக்கிறான் என அறிந்து
				மேல்
# 7 பாலை நல்வெள்ளியார்

வருத்தும் தெய்வத்தையுடைய அகன்ற இடத்திலுள்ள சுனையின் நீர் பொங்கி வழிய
பெரிதான மலையின் சரிவுகளில் அருவிகள் ஆர்த்தொலிக்க
கற்பாறைகளைப் புரட்டிப்போட்டுக்கொண்டு இறங்கும் கடுமையான வரத்தினைக்கொண்ட காட்டாற்றின்
மூங்கிற் கழைகளை மூழ்கச்செய்யும் வெள்ளம் காட்டில் மோதி ஆரவாரிக்க,
மிக்கு ஒலிக்கின்ற இடியோடு முழக்கமிட்டு வானம்
இதோ பெய்வதற்கு மின்னுகின்றது தோழி!
வெண்ணெல்லை அருந்திய வரிகளைக் கொண்ட நெற்றியையுடைய யானை
குளிர்ந்த நறுமணமிக்க மலைச்சாரலில் தூங்கும்
சிறிய இலையைக் கொண்ட சந்தனமரங்களைக்கொண்ட வாடிப்போய் நிற்கும் பெரிய காட்டினில் -
				மேல்
# 8 குறிஞ்சி கண்ணகனார்

நீங்காத துயரத்தின்வாய்ப்பட்ட செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்களையும்,
பல பூக்களும் மாறுபட்ட தழைகளும் உடைய தழையாடை அசைந்தாடும் அல்குலையும்
அழகிய நீலமணி போன்ற மேனியையும் கொண்ட இளையோளாகிய தலைவி
யாருடைய மகளோ? இவளின் தந்தை வாழ்க!
துயருக்குள் அமிழ்த்துவிட்டாள் என்னை; அகன்ற வயலில்
கதிரறுப்போரால் அறுக்கப்பட்டு, அதனைக் கொண்டுவருவோரால் கொணரப்பெற்றும்
குலிர்ந்த சேறு பரவிய அழகுடைய வலிய தண்டினையுடைய
கன் போன்ற நெய்தல் பூ, நெற்போரில் பூத்திருக்கும்
திண்ணிய தேரைக்கொண்ட பொறையனின் தொண்டிப் பட்டினத்துச்
சிறப்பெல்லாம் பெறுக இவளை ஈன்ற தாய்.
				மேல்
# 9 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஊக்கம் குன்றாதவராய் முயல்கின்ற ஆர்வம் மிக்க மக்கள்
தாம் வழிபடுகின்ற தெய்வத்தை நேரில் கண்டதைப் போல்
மனத்தைச் சுழற்றும் வருத்தம் தீர, உன்னுடைய
நலம் மிக்க மென்மையான மூங்கில்போன்ற தோள்களைப் பெற்றோமாதலின்
பொரிப்பொரியான பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை
அழகுத்தேமல் பரந்த அழகிய முலைகளில் பொருந்தத் தேய்த்து
நிழல் கண்டவிடமெல்லாம் நெடுநேரம் தங்கி,
மணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி மகிழ்ந்து விளையாடி
வருத்தமில்லாமல் செல்வாய், வெண்மையான பற்களையுடையவளே!
மாமரத்தின் அரும்புகளைக் கோதிவிட்டு மகிழ்ந்து குயில்கள் கூவித் திரியும்
மணமிக்க குளிர்ந்த சோலைகளையுடையன இக் காடுகள்;
பல சிற்றூர்களையும் உடையது நாம் செல்லும் இந்த வழி.
				மேல்
# 10 பாலை குடவாயிற் கீரத்தனார்

நிமிர்ந்து உயர்ந்த அழகிய முலைகள் தளர்ச்சியுற்றுப்போனாலும்
பொன்னைப் போன்ற மேனியில் நீலமணிபோலும் தாழ்ந்த
நல்ல நெடிய கூந்தல் நரையோடு முடியப்பெற்றாலும்
கைவிடுதலைக் காப்பாயாக! பூக்கள் ஒளிறும் ஊரையுடையவனே!
இனிய கடுக்கின்ற கள்ளினையும், அணிகலன்கள் பூட்டப்பெற்ற நெடிய தேரையும் கொண்ட
வெற்றியையுடைய சோழர்கள் கொங்குநாட்டாரைப் பணியச் செய்வதற்காக
வெண்மையான கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட போர் என்ற ஊருக்குரியவனான
பழையன் என்பானை ஏவ, அவனது வேற்படை பொய்க்காமல் வெற்றிபெற்றதுபோல உன்னுடைய
பொய்க்காத நல்ல சொற்களை நம்பிய இவளை - 
				மேல்
# 11 நெய்தல் உலோச்சனார்

தலையில் சூடாமல் கீழே கிடக்கும் மாலையைப் போல
மேனி வாடிப்போனாய்! காதலர் குறித்த இடத்தில் வராமற்போனதினால்;
அயலார் கூறும் அலர் உரைகளை நினைத்து, நிச்சயமாக
அவர் வரமாட்டார் என்ற பிணக்கத்தைக் கொள்வதை
ஒழிப்பாயாக, உனது நெஞ்சத்தில்;
அலைகள் மோதிய குறுமணல் அடைந்துகிடக்கும் கரையினில்
சக்கரத்தின் கீழ் நண்டுகள் சிக்கிக்கொள்வதைத் தவிர்த்து
பாகன் தன் கடிவாளத்தை ஆய்ந்து செலுத்தும் அளவுக்கு
நிலவொளியும் பரந்துள்ளது இக் கடற்கரைச் சோலையில்
				மேல்
# 12 பாலை கயமனார்

விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்
தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்
வெண்ணெய் தோன்றச் சுழலும் சுழற்சியால் தறியின் அடிப்பகுதி முழக்கமிடும்
இரவில் தங்கியிருந்த இருள் நீங்கிய விடியற்காலத்தே, தன்னை ஒளித்துக்கொண்டு, தனது காலின்
பரற்கற்கள் நிறைந்த சிலம்புகளைக் கழற்றி, பலவிதங்களில் சிறந்த
வரிகளால் புனையப்பட்ட பந்தோடு வைப்பதற்காகச் செல்கின்றவள்,
"இவற்றைக் காணும்போதெல்லாம் வருந்துவார் அன்றோ!
பெரிதும் இரங்கத்தக்கவர் என் தோழியர்" என்று
காதலனாகிய உன்னோடு செல்லுதல் மேற்கொள்ளவும்
தன்னால் கட்டுப்படுத்த முடியாதபடி கலங்கி அழுதன அவளது கண்கள்.
				மேல்
# 13 குறிஞ்சி கபிலர்

எழமாட்டேனென்கிறாய், அவ்வாறிருப்பினும் உன் அழகிய நலமெல்லாம் கெடும்படியாக
அழாமலிருப்பாயாக! இது அயலார் இருக்குமிடம்;
தினைப் புனக் காவலர் காட்டுப்பன்றியை வீழ்த்திவிட்டுப் பறித்த
அம்பினைப் போன்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியான கண்களையும்
நல்ல பெரிய தோள்கள்களையும் உடையவளே! பொற்கொல்லன்
ஊதும்போது தெறிக்கும் பொன்போன்ற தீப்பொறிபோல சிறியவாகவும் பலவாகவும் பரவிவிழும்
வேங்கைமரத்தின் பூக்கள் உதிர்கின்ற உயர்ந்த மலையில் தங்கும்
மயில் பார்த்துக்கொண்டிருப்பதை அறியாத 
நெருங்கிய தினைக்கதிர்களைக் கவரும் பசிய முதுகினைக் கொண்ட கிளிகளை ஓட்ட -
				மேல்
# 14 பாலை மாமூலனார்

எமது பழைய கவின் தொலைய, எமது தோளின் நலமெல்லாம் அழிந்துபோக
எமக்கு அருளாராய் எம்மை விட்டு நீங்கினர்; எனினும் அருள்செய்வார்
நம்மீது நட்புக்கொண்டோர்!, வாழ்க தோழியே! குட்டுவனின்
அகப்பா என்னும் ஊர் அழிய இடித்தழித்து செம்பியன்
பகலில் தீயை மூட்டிய ஆரவாரத்திலும் மிகப் பெரிதாக
ஊரார் பழிச்சொல் எழும்படி சென்றுவிட்டாரெனினும், மலர்கள் தலைகவிழ்ந்து
பெரிதான மடல்கள் விரிந்த காந்தள் செடிகளையுடைய அழகிய சாரலில்
தம் இனத்தில் உயர்ந்த வலிமையான ஆண்யானை மலைப்பாம்பின் வாயில் சிக்கியதாக
நீங்காத துயரத்துடன் அச்சங்கொண்ட பெண்யானையின் ஓலம்
நீண்ட மலையின் குகைகளிலே எதிரொலிக்கும்
கடிதாகச் செல்லும் குதிரையையுடைய புல்லி என்பானது வேங்கடமலையைக் கடந்து சென்றவர் -
				மேல்
# 15 நெய்தல் பாண்டியன் அறிவுடை நம்பி

முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு
காற்றால் ஆடும் துகிலின் வளைவுகள் போலப் பெருமளவில் உருவாகும்படி
ஊதைக்காற்று தூவிவிடும் ஓயாது இயங்கும் கடற்கரைத் தலைவனே!
பூவைப் போன்ற என் பெண்மைநலத்தைப் புதிதாக நுகர்ந்து
நீ என்னுடன் சேர்ந்திருந்ததைப் போல் இப்போது நான் இல்லாததினால், நான்
செம்மைப்பண்பினையுடைய எனது நெஞ்சம் தாங்குமளவுக்குத் தாங்கி,
குற்றமற்ற கற்பினையுடைய இளையவள் ஒருத்தி தன் குழந்தையைப்
பேய் கைப்பற்றப் பறிகொடுத்ததைப் போல
நெடுங்காலம் எம்மோடிருந்த
நாணத்தைக் கைவிட்டேன், அலர் எழுவதாக இந்த ஊரில்
				மேல்
# 16 பாலை சிறைக்குடி ஆந்தையார்

தலைவியோடு சேர்ந்திருந்தால் நம்மைச் சேராது பொருள்; பொருள் தேடப்
பிரிந்துசென்றால் நம்மைச் சேராது தலைவியின் கூட்டம்; இந்த இரண்டில்,
பிரிந்து சென்றாலும் செல்லாவிட்டாலும் எனக்கு நல்லது செய்வதற்கே
நீ உரியையாவாய் வாழ்க என் நெஞ்சமே! பொருளும்
வாடாத பூவையுடைய பொய்கையின் நடுவில்
நீரைக் கிழித்தோடும் மீனின் தடம் மறைந்து அழிவதைப் போலக் கெட்டுப்போகும்; நானும்
விழுமிய கடல்சூழ்ந்த இந்த அகன்ற உலகத்தையே அளக்கும் கருவியாகக் கொண்டு
அந்த அளவில் ஏழு அளவு பெறுமான விழுமிய நிதியைப் பெற்றாலும்
பொன்குழைகளோடு மாறுபட்ட சிவந்த வரிகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களின்
விருப்பமுடனான இனிதான பார்வையினால் வெல்லப்பட்டேன்;
பொருள் எத்தன்மையதாயினும் ஆகுக; யாரிடமாவது வாழ்ந்துவிட்டுப்போகட்டும் அந்தப் பொருள்.
				மேல்
# 17 குறிஞ்சி நொச்சி நியமங்கிழார்

விடியற்காலத்தில் மழை பெய்த நல்ல நெடிய குன்றத்தில்
கரிய கடலின் அலையைப் போல வீழ்கின்ற அருவியையுடைய
அகன்ற பெரிய கானத்தின் உறைந்திருக்கும் அழகை நோக்கி
அடக்கவும், அடக்கும் எல்லைக்குள் நில்லாமல் நீர் பெருகி
மிகுந்த அழகினைக் கொண்ட குளிர்ச்சியான கண்கள் கலங்கி அழுதலால், என் அன்னை
எதனால் அழுகின்றாய்? உனது ஒளிறும் பற்களுள்ள வாயை முத்தமிடுவேன் என்று
மென்மையான இனிய சொற்களைக் கூறப்போக, மிக வேகமாக,
உயிரினும் சிறந்த நாணத்தை அறவே மறந்து
சொல்லப்போய் நிறுத்திவிட்டேன் தோழி! மலைச் சாரலில்
காந்தள் மலரை ஊதிய நீல மணி போன்ற தும்பி
இனிதாகத் தொடுக்கப்பட்ட நரம்பினைக் கொண்ட யாழைப்போல ஒலிக்கும்
வானத்தைத் தொடும் மலைநாட்டினனின் மார்பு என்னை வருத்தியது என்று - 
				மேல்
# 18 பாலை பொய்கையார்

வருத்தப்படும் உள்ளத்திலிருக்கும் பலவாகிய கவலை நீங்கும்படி
வந்துவிடுவார், வாழ்க தோழியே! மூவன் என்பானின்
முழு வலிமை கொண்ட முள் போன்ற பற்களைப் பிடுங்கி அழுத்திவைத்த கதவினைக் கொண்ட
கடற்கரைச் சோலையைக் கொண்ட தொண்டியின் தலைவனான, வெல்லும் வேற்படையையுடைய
கடத்தற்கரிய சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும்
நெஞ்சு நடுக்கங்கொண்டதினால் தூங்காத வீரர்கள்
அலைகள் ஓய்ந்த கடலைப் போல இனிதாகத் துயிலுமாறு
மதம் குறைந்த சினம் தணிந்த யானையின்
பெரிதாய் நிலைத்துள்ள ஒரு கொம்பினைப் போன்று
ஒன்றாக ஒளிறும் அருவியையுடைய குன்றைக் கடந்து என்றோர் - 
				மேல்
# 19 நெய்தல் நக்கண்ணையார்

இறாலின் முதுகைப் போன்ற சொரசொரப்பு வாய்ந்த அகன்ற அடியினைக்கொண்ட
சுறாமீனின் கூரிய கொம்பைப் போன்ற முட்களைக் கொண்ட இலையையுடைய தாழையின்
பெரிய களிற்றின் தந்தத்தைப் போன்ற அரும்புகள் முதிர்ந்து
நல்ல உழைமானின் சாய்ந்த கழுத்தைப் போல மாறுபடத் தோன்றி
விழாக்கொண்டாடும் களத்தைப் போன்று மணக்கும் வலிமைவாய்ந்த கடலைச் சேர்ந்த தலைவனே!
வரிசையான மணிகள் கொண்ட நெடிய தேரினை அதன் பாகன் இயக்க
சென்று உனது ஊரை அடைவாய், இருப்பினும், இங்கிருக்கும் தலைவி
நீ மீண்டும் வருவதற்கிடையுள்ள சில நாட்களும்
வாழமாட்டாள் என்பதனை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக!
				மேல்
# 20 மருதம் ஓரம்போகியார்

ஐயனே! ஓர் இளையவளைக் கண்டேன்; நேற்று இரவில் கிடந்து
தலைவனின் மார்பில் துயின்று, மலர்ந்த கொத்துக்களையுடைய
தேன் ஒழுகும் மராமரத்தின் பூக்கள் மணக்கும் கூந்தலானது
வலமிடமாய் அசைய, கட்டியிருந்த ஆடை முன்னும் பின்னும் ஆட,
செறிவான வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசி, தெருவில்
பூப்போன்ற மையுண்ட கண்கள் சுழலப் பார்த்துக்கொண்டே
நடந்து சென்றாள், வாழ்க அந்தப் பெண்! நுண்மையான பல
அழகுத்தேமல் படர்ந்து ஒளிவிடும் பூண்களை அணிந்த,
மார்பு முயக்குதலால் நெறிப்புண்டு உதிர்ந்த பூந்தளிர்களையுடைய,
காதலன் பிரிவு என்னும் பழைய துயரம் தங்கிய இரண்டு தோள்களையுடைய,
குழைந்த மாலையினையும் உடைய கொடி போன்ற அவள்தான் உன்னைத் தழுவினள் போலும்!
				மேல்
# 21 முல்லை  மருதனிள நாகனார்

விரைந்த ஓட்டத்தினால் வருந்திய நெடுந்தொலைவு பயணம்செய்த படைமறவர்
இடுப்பில் கட்டிய கச்சையை அவிழ்த்துவிட்டுத் தங்கியவாறு
வேண்டிய விருப்பமுடைய நடையினராய் மெல்லமெல்ல வரட்டும்;
இதுவரை தீண்டாத கூரிய முள்ளையுள்ள சாட்டைக்கோலால் தீண்டி நாம் செல்வதற்கு
விரைந்து செலுத்துவாயாக! வலவனே! தேரினை, இங்கே பார்!
உருக்கிய நறுமணமுள்ள நெய்யில் பாலைத் தெளித்தாற்போல்
அரித்தெழும் குரலையுடைய தொண்டையினைக் கொண்ட அழகிய நுண்ணிய பலவான பொறிகளைக் கொண்ட
காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்
மழை நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக்காட்டில்
புலராத ஈர மணலை நன்றாகக் கிளறி
அன்றைய நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக் கொன்று
தன் பெடையை நோக்குகின்ற பெருமை வாய்ந்த நிலையினை - 
				மேல்
# 22 குறிஞ்சி  நல்வேட்டனார்

குறமகள் காக்கும் மலைச் சரிவிலுள்ள பசிய தினையின்
முதலில் விளைந்த பெரிய கதிரினைக் கவர்ந்துகொண்ட பெண்குரங்கு
அவ்வாறு பறிப்பதை அறியாத ஆண்குரங்கோடு நல்ல மலையில் ஏறி
உள்ளங்கை நிறையக் கசக்கித் தன் கையிலே கொண்டு, தன்னுடைய
சுருக்கம்விழுந்த கன்னத்து மயிர்களையுடைய வளைந்த உள்வாய் நிறைய அமுக்கிக்கொண்டு
வானிலிருந்து விழுகின்ற மழையில் நனைந்த முதுகினையுடையவாய், நோன்பிருப்போர்
கையில் வாங்கிய உணவுடன் குந்தி இருப்பதைப் போல காட்சியளிக்கும் நாட்டையுடையவன்
வந்துவிட்டான், வாழ்க தோழியே! உலகமானது
குளங்கள் காய்ந்துபோகுமாறு பசுமை நீங்கிய பொழுது
இளங்கதிர்களோடு வாடிப்போன நெல்லுக்கு
நள்ளென்ற நடுஇரவில் மழை பொழிந்தது போல - 
				மேல்
# 23 குறிஞ்சி கணக்காயனார்

வளைகள், மேலே செறிக்கபட்டதால், பழிச்சொற்களை மறைக்க, தோள்கள் பழிநீங்கப்பெற்றன;
வாரி முடித்த கூந்தலையுடையவள் தோழியரோடு ஆடியதால்
களைப்பும் மேனியில் தெரிவதற்குக் காரணம் ஒன்று உடைத்தானது; காவல் மிகுந்து
அன்னை காக்கும் பழைய பெண்மைநலம் சிதையும்படி
காணுந்தொறும் அழுதலல்லாமலும், நெருங்கிய நீர்மிக்க
முத்துக்கள் விளையும் கடற்பரப்பினையுடைய கொற்கை நகரத்துத் துறையின் முன்
சிறிய பசிய இலைகளைக் கொண்ட செப்பம் அமைந்த நெய்தலின்
தெளிந்த நீரிலுள்ள மலர் போல அழகுகுலைந்தன
கண்களே; காமத்தை மறைப்பது அரியது.
				மேல்
# 24 பாலை கணக்காயனார்

நிலம் பிளவுபட கீழ்ச்சென்ற வேர்களையுடைய பெரிய கிளைகளையும்
உடும்பு அடைந்துகிடந்ததைப் போன்ற நெடிய செதில்களையுமுடைய விளாமரத்திலிருந்து
ஆட்டம் முடிந்த பந்து போல கிளையில் ஒட்டிய காம்பு அற்றுப்போய்
கம்பலத்தை விரித்தாற்போன்ற பசிய பயிர்மீது பரந்துகிடக்கும்
விளாம்பழங்களையே உணவாகக் கொண்ட வேற்று நாட்டு அரிய வழியில்
செல்வேன் நான் என்று தலைவன் சொல்ல, சிவந்த இழைகளை அணிந்தவளே!
நல்லது என்று விரும்பினாய்! நல்லதையே செய்தாய்!
செயல்புரிவதையே நினைத்தவராய் ஈட்டுதற்குரிய பொருளுக்காகப்
பிரிந்து செல்வர் ஆடவர்; அவ்வாறு செல்லவைப்பது அந்தப் பொருளின் பண்பாகும்
				மேல்
# 25 குறிஞ்சி பேரிசாத்தனார்

அழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தேய்த்தது போல
சிவந்த வரிகளைக் கொண்ட இதழ்களையுடைய நெடுந்தொலைவுக்கும் மணக்கும் பிடவமலர்களின் 
மணமிக்க தாதுக்களில் அளைந்து ஆடிய தும்பி, பசிய நிறத்தையுடைய
பொன்னை உரைத்துப்பார்க்கும் கல்லைப் போன்று நல்ல நிறத்தைப் பெறும்
வளமிக்க மலைநாட்டினன் நேற்று நம்மோடு
கிளைத்தல் மிகுந்த சிறுதினையில் வந்து விழும் கிளிகளை ஓட்டிக்கொண்டு தங்கியிருந்தவன்
தன் குறையைக் கூறுவதற்கேற்ற வாய்ப்பினைப் பெறாதவனாகி அகன்று போனான், அப்படிச் சென்றது
நமக்குத் துன்பம் தருவதன்று, அன்புடைய தோழியே!
தேனை உண்ணும் வேட்கையினால் மலரின் தன்மையை ஆராயாமல் போய் விழுகின்ற
வண்டின் ஒரு தன்மையை ஒத்த அவனது கெடாத காட்சியைக்
கண்டும் கழன்றுபோன வளையல்களை மீண்டும் செறித்துக்கொண்ட எனது
பண்பற்ற செய்கை என்னில் நினைப்பாகவே இருக்கின்றது.
				மேல்
# 26 பாலை சாத்தந்தையார்

நோகின்றேன் நான்! நெகிழ்ந்தன வளையைகள்!
செம்மண் பூச்சுடைய புள்ளிகளைக் கொண்ட வெள்ளிய அடிப்பாகத்தையுடைய
மலைக் குன்றுகளை ஒத்து, அடுத்தடுத்து நிற்கும் நெடிய நெற்கூடுகளில் இருக்கும்
நிறைந்த நெல்லையுடைய தாய்வீட்டை விட்டு,
ஞாயிறு முற்றவும் எரிக்க, வாடிப்போன செழுமையான காய்களைக் கொண்ட
வளைந்து முதிர்ந்த பலாமரங்கள் நிற்கும் காட்டுவழியில் உம்மோடு
கேடுகாலத்துத் துணையாகி இவள் வந்தது தவறோ? கூர்மையான பற்களையும்,
பொன்னைப் பொதிந்தாற்போன்ற தேமல்புள்ளிகளையும்,
கரிய சூழ்ந்த கூந்தலையும் கொண்ட பெரிய தோள்களையுடைவளுக்காக - 
				மேல்
# 27 நெய்தல் குடவாயிற் கீரத்தனார்

நீயும் நானும் நேற்று பூக்களில் உள்ள
நுண்ணிய தாதுக்களில் திளைக்கும் வண்டுகளை ஓட்டி
மோதி அழியும் அலைகள் குவித்த வெள்ளிய மணலைக் கொண்டு அடைத்த கரையினில் உள்ள
கழியினைச் சூழ இருக்கும் கடற்கரைச் சோலையில் ஆடியது அன்றி
மறைவாக நாம் செய்தது ஒன்றும் இல்லை; அப்படி ஒன்று இருந்தாலும்
அது பரவி, பிறரும் அதை அறியவும் இல்லை; பெரிதாக
எதனை எண்ணிக்கொண்டிருக்கிறாள் நம் அன்னை? பொய்கைகள்தோறும்
இறால் மீனை நிரம்ப உண்ட குருகுகள் ஒலிக்க, சுறாமீன்கள்
கழிகளில் சேர்ந்திருக்கும் பக்கங்களில் கணைபோன்ற தண்டுகள் நீண்டு
கண் போன்று பூத்திருத்தலைக் கண்டு , நுண்ணிய பல
சிறிய பசிய இலைகளையுடைய நெய்தல் பூக்களைப்
பறிக்கச் செல்லுங்கள் என்று கூறாதிருக்கிறாளே!
				மேல்
# 28 பாலை முதுகூற்றனார்

என் கையைக் கொண்டு தன் கண்களை ஒற்றிக்கொண்டும்,
தன் கைகளைக் கொண்டு என்னுடைய நல்ல நெற்றியை நீவிவிட்டும்
அன்னை போல இனியசொற்களைக் கூறினாலும்,
கள்வர் போலக் கொடியவன் அந்தோ!
நீலமணியோ என வீழும் அருவியையுடைய, பொன்னோ என்னும்படி
வேங்கை மலர்கள் உதிர்ந்துகிடக்கும், உயர்ந்த மலைகளின் சரிவில்
ஆடுகின்ற கழைகள் உயர்ந்து நிற்கும் பசிய கணுக்களைக் கொண்ட மூங்கில்
ஓடுகின்ற மேகங்களைக் கிழிக்கும், தலையில்
கொடுமுடிகள் உயர்ந்த பாறை மலைகளின் உரிமையாளன்.
				மேல்
# 29 பாலை பூதனார்

நின்று காயும் வேனிற்காலத்தில் உலர்ந்துபோன காந்தள் பூக்களைக்கொண்ட,
நெருப்பாய் ஒளிரும் நீண்ட வெளியில் நிழலுள்ள ஓர் இடம் இல்லாமல்,
குட்டிகளை ஈன்று காட்டினில் ஊக்கம் குன்றியிருக்கும் தன் பெண்புலி பசியால் வாடியது என
இருள் மயங்கிய மாலைப்பொழுதில் வழிச்செல்வோரைத் தாக்கிக்கொல்ல
ஆண்புலி வழியை நோக்கிக்கொண்டிருக்கும் புல்லிய வழித்தடமான சிறிய பாதையில்
நடந்துசெல்ல எங்கனம் ஆற்றலுள்ளவள் ஆனாளோ அவள்? நான் அவளுடைய
வடிவமைந்து உயர்ந்திருக்கும் இளமையான முலைகள் நோகுமோ என்று
எண்ணி இறுக்கிப்பிடித்திருந்த கையை நெகிழ்த்த அந்த அளவிற்கு, அவள் தனது
பெரிய அமர்த்த குளிர்ச்சியான கண்கள் ஈரமுற்றனவாய்க் கலங்க 
வெம்மையோடு பெருமூச்செறியும் மென்மையையும்
கரிய நெய்ப்பூச்சும் கொண்ட கூந்தலையுடைய பெருமை மிக்க மடப்பம் கொண்ட என் மகள் -
				மேல்
# 30 மருதம் கொற்றனார்

கண்டேன் தலைவனே! கண்டு என்ன செய்ய இயலும்?
பாணன் கையிலிருக்கும் பண்பமைந்த சீறியாழ்
புதிதாய்ப் பூத்த மலரினைக் கண்ட வண்டைப் போல இம்மென ஒலிக்கின்ற
நீ எழுந்தருளும் தெருவில் உன்னை எதிர்பார்த்து நோக்கி, உனது
மார்பின் மாலையைப் பற்றிக்கொண்ட மாட்சிமைகொண்ட இழையணிந்த பெண்டிர்
கவலையினால் வருத்தப்பட்டதால் வெப்பமாக விழும் அரித்தோடும் கண்ணீருடன்,
காற்றால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்புற்ற பொழுதில்
கடலில் மரக்கலம் கவிழ்ந்துவிட, கலங்கி எல்லாரும் கடலுக்குள் வீழ்ந்து
பலரும் பிடித்துக்கொள்ளும் ஒரு பலகை போல,
அவரவரும் பற்றி இழுக்க, நீ நின்றுகொண்டு முன்னும் பின்னும் அசையும் துன்பமான நிலையை -
				மேல்
# 31 நெய்தல் நக்கீரனார்

பெரிய, கரிய கடற்பரப்பின் நீர் தெளிந்திருந்த நிலையை நோக்கி
சிவந்த இறால் மீனைப் பாய்ந்துபற்றித் தின்ற சிறிய கடற்காக்கை,
பரந்த பெரிய குளிர்ச்சியையுடைய கழியைத் துழாவி மீனைப் பிடித்து, பசிய கால்களையுடைய
தான் விரும்பும் பெடையை அழைத்துக் கொடுக்கும்
சிறிய பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்களைக் கொண்ட துறை இனிதாக இருந்தது;
பெரிய தனிமைத்துயருற்ற உள்ளத்தோடு பலவற்றையும் நினைந்து
நானும் இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டேன்; கணக்கில்லாமல் 
வேறு பல நாடுகளினின்றும் காற்றுத் தர வந்துசேர்ந்த
பல வகைப்பட்ட பண்டங்கள் வந்து இறங்கும் நிலாவையொத்த மணற்பரப்பிலுள்ள
நெடிய கிளைகளையுடைய புன்னைமரத்தில் முதிர்ந்த சூல்கொண்ட வெள்ளைக் குருகு,
உலவுகின்ற அலைகளைக்கொண்ட கடற்பெருக்கைக் கண்டு அஞ்சும்
ஓயாது இயங்கும் நீர்ப்பரப்பினையுடைய தலைவனோடு நான் மணவாததற்கு முன்னர் - 
				மேல்
# 32 குறிஞ்சி கபிலர்

மாயவனான கண்ணனைப் போன்ற கரிய பெரிய மலையின் உயரத்துச் சரிவினில்
பலராமனைப் போன்ற ஒளிவிடும் வெள்ளிய அருவியையுடைய
அழகிய மலைக்கு உரியவனான தலைவன் நம்மை விரும்பி எப்போதும்
வருந்தினான் என்ற ஒரு வாய்ச்சொல்லை உணரமாட்டாய்;
நீயாகவே நேரில் கண்டும், உன்னைச் சேர்ந்தவரோடு கலந்துகொண்டும்
அறியவேண்டியவற்றை அறிந்து அளவளாவ வேண்டும்; அவனது நிலையை மறுப்பதற்கு
அரியது ஆகும், வாழ்க தோழியே! பெரியவர்கள்
முதலில் ஆராய்ந்து நட்புச் செய்வரே அன்றி,
நட்புச் செய்தபின் அவரைப்பற்றி ஆராயமாட்டார், தம்மைச் சார்ந்தவரிடத்து -
				மேல் 
# 33 பாலை இளவேட்டனார்

மறைகின்ற ஞாயிறு சேர்ந்த பிளந்த வாய்ப்பகுதியையுடைய நீண்ட மலைத்தொடரின்
சரளைநிலத்தைச் சேர்ந்த சிறுகுடியில் பரவிய மாலையில்
தனித்திருப்போர் சேர்ந்துண்ணும் புல்லிய மன்றத்தில்
பாறையை உடைத்த பள்ளத்தில் இருக்கும் கலங்கல் நீரைத் தந்து
நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில்
பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள்
வழியைப் பார்த்து அமர்ந்திருக்கும் அஞ்சத்தக்க பாதையினில்
செல்ல எண்ணுகிறார் அவர் என்றால் அதை மறுப்பதற்கு
ஆற்றலுள்ளவரோ மெல்லிலாய்! நாம், என்று
என் முகத்தைப் பார்த்து விம்மிக்கொண்டே சொல்பவளின்
நல்ல மார்பிலுள்ள அழகிய முலைகள் என்னும் கரையைச் சேர்ந்து
நிரம்பி வழியும் நீர் பரவியது மலரைப் போன்ற அவளது அழகிய கண்களிலிருந்து - 
				மேல் 
# 34 குறிஞ்சி பிரமசாரி

கடவுள் தன்மையுள்ள மலைச் சுனையில், இலைகளை விலக்கிக்கொண்டு மலர்ந்த
யாரும் பறிக்காத குவளை மலருடன், காந்தளின்
குருதி நிறத்ததாகிய ஒள்ளிய பூவை அச்சம்தோன்றும்படியாகக் கட்டி
பெரிய மலைச் சரிவுகள் பொலிவுபெற, சூரர மகளிர்
அருவியின் ஓசையே இசையாகக் கொண்டு ஆடுகின்ற நாட்டையுடைய தலைவனின்
முயக்கத்தினால் ஏற்பட்ட துன்பம் மிகுந்த நீங்குதற்கு அரிய இந்தக் காமநோய்
நீ வருத்தியதால் ஏற்பட்டது இல்லை என அறிந்தும், தலைநிமிர்ந்து
கார்காலத்து மலரும் நறிய கடம்பின் இலைகளால் தலைமாலை செய்து சூடிக்கொண்டு
வேலன் வெறியாடி வேண்டிக்கொள்ள வெறிக்களத்துக்கு வந்திருக்கிறாய்!
நீ உண்மையாகவே கடவுளே ஆயினும் ஆகுக,
ஆனால் நீ அறியாமை உடைத்திருக்கிறாய், வாழ்க முருகனே!
				மேல்
# 35 நெய்தல் அம்மூவனார்

பொங்கிவரும் அலைகள் மோதுவதினால் ஏற்பட்ட சரிவான மணலைக் கொண்டு அடைத்தகரையில்
புல்லிய அடிமரத்தையுடைய நாவல் மரத்தின் பொதியைப் போன்ற வெளிப்பகுதியையுடைய பெரிய பழத்தை
தன் இனத்தைச் சேர்ந்தது என்று எண்ணி சூழ்ந்த தும்பியைப் பழமென்று நினைத்து
பலகால்களைக் கொண்ட நண்டு பற்றிக்கொண்ட பிடிக்கு வருந்தி
மீட்டப்படாத நரம்பாய் இமிர்ந்து ஒலிக்கும் ஆரவாரத்தால்
இரையைத் தெரிந்துகொண்ட நாரை அதனைக் கொத்தியபின் விடுவிக்கும்
துறையைப் பொருந்திய மாந்தை நகரத்தைப் போன்ற இவளின் பெண்மைநலம்
முன்பும் இப்படியேதான் இருந்தது, நீ காண்பாயாக ! 
பக்கத்திலிருந்து நீங்காமல் அருள்செய்தாலும், சிறிதளவு
கைதளர்ந்ததால் குறைந்த மேனியழகின் வேறுபாடோ? கள்ளுண்டு மகிழ்ந்தோர்க்கு
கள்ளால் ஏற்பட்ட களிப்பின் செருக்கு குறைவது போல
காதல் களிப்புக் குறைவோ? இவள் கண் பசந்து தோன்றுவதற்குக் காரணம்?
 				மேல்
# 36 குறிஞ்சி சீத்தலைச் சாத்தனார்

குட்டையான கைகளையுடைய பெரிய புலியின் கொல்லுதலில் வல்ல ஆண்புலி
அழகிய நெற்றியையுடைய பெரிய பெண்யானை புலம்பும்படி தாக்கி
ஆழமான நீரையுடைய அகன்ற இடத்தில் பெரிய களிற்றினைக் கொல்லும்
மலைநாட்டுத் தலைவனின் சொல்லை நம்பி
நாம் எம் பெண்மைநலத்தை இழந்தோம்!; நள்ளிரவிலும்,
புறங்கூறும் வாயையுடைய மகளிரின் வம்புமொழிகளோடு சேர்ந்து
உயர்வற்ற தீய சொற்களை கூறுவதற்குரிய பேச்சுக்களை மேற்கொண்டு,
பொருந்தாத பழிச்சொற்களையுடையதாயிற்று என்றால்
தான் எதை இழந்தது இந்த ஆர்ப்பரிக்கும் ஊர்?
				மேல்
# 37 பாலை பேரிசாத்தனார்

பின்னிக்கிடக்கும் சிறுதூறுகள் வாடிய அழிந்துபோன பழஞ் சிறப்புக்களைக் கொண்ட அகன்ற இடத்திலுள்ள
காய்ந்துபோன புல்லைத் தின்னும் ஆநிரைகளினின்றும் தனித்துப்போன ஒரு பசுவின் தெள்ளிய மணி
மெல்ல இசைக்கும் காட்டுவழியில், கூர்மையான பற்களைக்கொண்ட
இவளோடு சென்றால் நலமாக இருக்கும்; குவளையின்
நீர் சூழ்ந்த பெரிய மலர் போன்ற கண்கள் அழும்படியாக
ஆண்மானைப் பிரிந்த பெண்மானைப் போலக் கலங்கி, மனம் மாறி
அன்பு இல்லாதவராய்ப் பிரிந்துசென்றீராயின், என் பாரமாக
ஆவது அன்று இவளது அவலம்; பாம்பின்
வருத்துகின்ற அரிய தலை மோதுண்டு கெட, வலமாக எழுந்து
நிறைந்த முழக்கத்தையுடைய பெருத்த இடி இடிக்கும்
கார்காலத்து மாலைக்காலம் வரும் போது - 
				மேல்
# 38 நெய்தல் உலோச்சனார்

மீன்வேட்டை பொய்க்காமல், வலையினால் கிடைக்கும் வளம் சிறந்து விளங்க,
தங்களின் பெரும் பங்கு பொய்க்காமல், பரதவர் விலைகூறி விற்க,
கரிய பனையின் இனிய கள்ளினை உண்போர் மகிழும்
பெருத்த ஆரவாரம் மிக்க புதியவரவுகளைக் கொண்டிருப்பினும், தேரையுடைய
நம் நெய்தல்நிலத் தலைவன் பிரிந்துசென்றால், பொலிவிழந்து
வெறிச்சோடிப்போய்விடுகிறதே, தோழி! கலங்கலான நீரைக் கொண்ட
கழிகள் சூழ்ந்த தோட்டங்களையுடைய காண்டவாயில் என்னும் நம் ஊரில்
ஒலிக்கின்ற காய்ந்த பனையோலையும், முள்ளும் சேர்த்துக்கட்டிய வேலியை ஒட்டி
பனைமரங்கள் வளர்ந்து உயரும் இடத்தில்
வெள்ளிய மணற் பரப்புகள் உள்ள எம்முடைய ஆரவாரமிக்க ஊர் -
				மேல்
# 39 குறிஞ்சி மருதனிளநாகனார்

நான் ஒரு சொல் சொன்னால் அதற்கு எதிர்ச்சொல் ஏதும் கூறமாட்டாய்; உனது
அழகிய முகம் கவிழ்ந்து நாணுகின்றாய்; விரைவாகக்
காமம் கைமீறிப்போனால் அதனைத் தாங்கிக்கொள்ளுதல் எளிதோ?
வளைந்த நிறக்கோடுகளைக் கொண்ட பெரிய முதுகு நடுங்கக் குத்திப்
புலியை விளையாட்டாகக் கொன்ற புலவு நாறும் யானையின்
நுனிக் கொம்பினைப் போன்று ஓரங்கள் சிவந்துபோன உன்
கண்கள் மட்டுமா சினமிகுந்தன? அல்ல; பகைவர்கள்
கோட்டையின் உச்சி மதிலிலே இருக்கவும், அவரை வென்று அவரின் முரசைக் கைப்பற்றி
அவர் காத்துநின்ற அரணையும் வென்ற அழிக்கின்ற போரினையுடைய செழியனின்
பெரும் புகழ்பெற்ற கூடல்மாநகரைப் போன்ற உன்
தொய்யிலால் கரும்பு வரைந்த தோள்களும் உடையன என்னை வருத்துதலை.  
				மேல்
# 40 மருதம் கொண்மா நெடுங்கோட்டனார்

நீண்ட நாவினைக்கொண்ட ஒள்ளிய மணி, காவலுள்ள மனையில் ஒலிக்க,
ஒலிக்கும் தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில்,
பெரும்பாணர்கள் காவலிருக்க, ஒரு பக்கத்தில்
திருந்திய இழை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டு நிற்க,
நறுமணம் கமழ விரிக்கப்பட்ட விரிப்பினைக் கொண்ட மென்மையான அணையில்
ஈன்றணிமையின் மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க,
வெண்சிறுகடுகை அரைத்து அப்பி, எண்ணெய்பூசிக் குளித்த, ஈருடை தரித்த,
பசுநெய் தடவிய மென்மையான உடம்பினையுடைய,
சிறப்புப் பொருந்திய தலைவி இரு இமைகளையும் மூடிப் படுத்திருக்க,
நள்ளென்ற இரவில் கள்வன் போல,
அகன்ற துறையையுடைய தலைவனும் வந்தான்,
சிறந்தோனாகிய தன் தந்தையின் பெயரைத் தாங்குபவன் பிறந்ததினால்.
				மேல்
# 41 பாலை இளந்தேவனார்

சிறிய கண்ணையுடைய யானையின் பருத்த கால்கள் எற்றியதால் ஏற்பட்ட
வெண்மையான நிறத்தையுடைய களர் நிலத்தில் எழுந்த நுண்ணிய துகள் படிந்து
காட்டுவழியின் தொடக்கத்தில் வருந்திய வருத்தம் மெல்ல மெல்ல
பாறைகள் மலிந்த சிறிய கிணற்று நீரில் தணிந்திட,
நெடுந்தொலைவு சென்று வருந்துவர்;
இரவில் வந்த நல்ல புகழ்படைத்த விருந்தினர்க்கு
பொலிவுடைய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நெய் பெய்து சமைத்த
கொழுத்த தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில்
சிறிய நுண்ணிய பல வியர்வைத் துளிகள் உண்டாகப்பெற,
குறுகுறுவென நடக்கும் நடையினையுடைய உனது உறவை விரும்பும் உன் காதலர்-
				மேல்
# 42 முல்லை கீரத்தனார்

மறக்க முடியாதது பாகனே! பல நாள்கள்
வறட்சியுற்று வருந்திய உயிர்கள் தத்தமக்குரிய தொழிலை மேற்கொள்ளுமாறு
தொன்றுதொட்டுப் பெய்யும் வழக்கத்தையுடைய மழை பொழிந்த புது நீர் உள்ள பள்ளங்களிலிருந்து
நாவினால் பன்முறை ஒலியெழுப்பும் பல கூட்டமான தவளைகள் கத்துவதால், சிறப்பாகச் செய்யப்பட்ட
மணிகளின் ஒலியைக் கேட்கமாட்டாள் ஒளிவிடும் நெற்றியையுடையவள்; அதனால்
சீக்கிரம் போங்கள் என்று ஏவிய இளையர் விரைவில் சென்று
வீட்டில் நுழைந்து வரவை அறிவிக்க, அதுவரை நிதானமாக
நீர்விட்டுக் கழுவாத கூந்தலை மாசு நீங்கும்படியாகக் கழுவி
ஒருசில பூக்களைக் கொண்டு பலவாகிய தன் கூந்தலில் செருகிக்கொண்ட
அவ்வேளையில் நான் வீட்டுக்குள் சென்று புக, தன் மெய் வருந்தும்படி வந்து
பூக்கள் விழும்படி அவிழ்ந்த கூந்தலையுடையவளாய் என்னை அணைத்துக்கொள்ள
அந்த இளமை ததும்பும் சிறந்த காதலி மகிழ்ந்து என் வரவைக் கொண்டாடிய நிலை-
				மேல்
# 43 பாலை எயினந்தையார்

வெண்மையான ஆடையை விரித்துவிட்டாற் போன்று வெயில் ஒளிரும் வெப்பம் உள்ள
கோடை நீடிய மலையின் உச்சிச் சரிவில்
மிகுந்த பசியையுடைய செந்நாய் மெலிந்த மரை என்னும் மானைக் கொன்று
நன்கு உண்டு எஞ்சிய மிச்சம், நெடுந்தொலைவில் உள்ள வேற்று நாட்டுக்குச் செல்லும்
அரிய பாலை வழியில் செல்வோர்க்கு உண்ணும் உணவாக ஆகும்
வெம்மையான அரிய வழியில் செல்லுதல் உமக்கு
உடல் பூரிக்கும் உவகை தருவதாகின்றது; இவளுக்கோ,
அஞ்சவேண்டாம் என்று கூறிய வேந்தன் கைவிட்டானாக,
சிறிய கண்ணையுடைய யானைப்படையுடன் பகைமன்னன் மதிற்புறத்தே தங்கியிருக்க,
தன் துன்பத்தைக் களைவாரைக் காணாமல் கலங்கிய, உடைந்த மதிலாகிய
ஒரே ஒரு கோட்டையை உடைய குறுநில மன்னன் போல
மனம் அழிவுபட்டது நீ பிரிவதைக் கேட்டு. 
				மேல்
# 44 குறிஞ்சி பெருங்கௌசிகனார்

ஒப்பற்ற தோழியருடன் அருவியில் நீராடி,
அருவிநீர் அலைத்தலால் சிவந்துபோன பெரிய அமர்ந்த குளிர்ந்த கண்களில்
யாரையும் குறித்து நோக்காத பார்வையுடன் மெல்நகையை நமக்குத் தந்து
தன் வீட்டுக்குச் சென்றுவிட்ட பின்னர் நினைக்கின்றாய்!
உனக்கோ அவள் அறியத் தகுந்தவள் எனது நெஞ்சே? கொல்லைப்புறத்தில்
நீண்ட இலையையுடைய நன்கு விளைந்த தினையின் வளைந்த தாள் நிமிரும்படி
கொழுமையான கதிர்களைக் கொய்வதைக் கருதி, திரண்ட பல
பெருத்த கூட்டமான குறவர்கள் இராத்தங்கி இன்பமாய்ப் பொழுதுபோக்கும் முன்றிலிலுள்ள
குடம்போன்ற காய்களைக் கொண்ட ஆசினிப்பலாத் தோப்பின் நீண்ட
பலவாக இருக்கும் மரங்களின் உயர்ந்த கிளைகளிலுள்ள மினிமினிகளின் வெளிச்சத்தில்
வானில் செல்கின்ற மேகங்களின் ஓட்டத்தைக் காணும்
நல்ல மலையையுடைய நாடனின் காதல் மகளானவள்-
				மேல்
# 45 நெய்தல் உலோச்சனார்

இவளோ, கடற்கரைச் சோலையை அடுத்துள்ள அழகிய சிறுகுடியில் இருக்கும்,
நீல நிறப் பெருங்கடல் கலங்குமாறு அதன் உள்ளே புகுந்து
மீனைப் பிடிக்கும் பரதவர் மகள் ஆவாள்! நீயோ,
நெடிய கொடிகள் மடங்கி அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின்
விரைந்து செல்லும் தேர்களையுடைய செல்வரின் அன்புக்குரிய மகன்!
கொழுப்புள்ள சுறாமீனை அறுத்த துண்டங்களைக் காயவைப்பதற்காக,
கூட்டமாக வரும் பறவைகளை விரட்டும் எமக்கு உயர்ந்த நலன்கள் என்ன வேண்டியுள்ளது?
எம்மிடம் புலால் நாறுகிறது. தள்ளி நில்லுங்கள்,
பெரிய கடல்நீரையே விளைவயலாகக் கொண்ட எமது சிறுத்த நல்ல வாழ்க்கை
உம்மோடு ஒத்துப்பார்க்கும் அளவுக்குச் சிறப்பானதன்று,
எம் பரதவர் குடியிலும் உம்மைப் போல் உயர்வானவர்கள் உண்டு.		
				மேல்
# 46 பாலை கோட்டம்பலவனார்

ஒவ்வொரு நாளும் இன்பமும் இளமையும்
எய்யப்பட்ட அம்பின் நிழலைப் போலக் கழிகின்ற இந்த உலகத்தில்
அதனை நீவிர் அறியமாட்டீர் என்று கூறுவது இயலாது. அதனை மிகவும்
பேணுகின்ற தன்மையர் ஆவீராக; என் தோழியின்
பூண்கள் அணிந்த மார்புகள் அவற்றை இழந்து தனிமையில் வாட, பாணர்கள்
ஐயமுறும் வகையில் கொன்றையின் அழகிய இனிய கனிகள்
பறையை முழக்கும் குறுந்தடியைப் போன்று பாறைகளில் மோதுமாறு அசைய
கொடிய காற்று வீசுகின்ற மூங்கில்கள் நிறைந்த வெளியில்
துன்பம் மிகுந்த அரிய வறண்ட பாலை நிலத்தைக் கடந்து
நன்மை வாய்த்தல் அல்லாத வாழ்விற்குரிய
நிலையற்ற பொருளை ஈட்டுதற்காகப் பிரிந்துசெல்வேன் நான் என்று நீர் கூறுவதனால் -
				மேல்
# 47 குறிஞ்சி நல்வெள்ளியார்

பெரிய ஆண்யானையைப் புலி கொன்றதாக, அதன் பெரிய பெண்யானை
உடல் வாட்டமுற்று உள்ளத்தை வருத்தும் துயரத்தோடு இயங்க இயலாமல்
நெய்தலின் பசிய இலை போன்ற அழகிய செவியையுடைய
இளமையான தன் அழகிய கன்றினைத் தழுவிக்கொண்டு, சட்டென
ஆற்றுதற்கரிய புண்ணைப் பெற்றவர் போல வருந்தி இருக்கும்
கானக நாடனுக்கு இங்கு இவ்வாறு நிகழ்கிறது என நான் அதனைக் குறித்துக்
கூறினால் என்னாம் தோழி! என் நிலையை வேறுவிதமாக உணர்ந்து
தெய்வம் வருத்தியதோ என அறியத்தக்க கழங்குகள் என் மாற்றத்தைக் காட்டியதால்
அதற்குத் தீர்வு வெறியாட்டயர்தலே என உணர்ந்த உள்ளத்துடன் ஆட்டை அறுத்து
அன்னையானவள் எடுப்பித்த முருகவழிபாடு உன்
பொன்னைப் போன்ற பசலைக்கு பயன்படாத நிலையை-
				மேல்
# 48 பாலை  பாலைபாடிய பெருங்கடுங்கோ

அன்றைக்கு இருந்ததைப் போன்றே இன்றைக்கும் எமது
கண்ணுக்குள் இருப்பது போலச் சுழல்கிறது!
சிறிய இதழ்களைக் கொண்ட கோங்கின் மெல்லிய இதழ்கள் குடைபோல் தோன்றும் மலர்கள்
வைகறைக் காலத்து வானத்து மீன்கள் என நினைக்குமாறு தோன்றி
காட்டினை அழகுசெய்த பூவின் மணம் கமழும் கற்கள் பரந்த வழியில்
'கிடின்' என்று ஒலிக்கும்படி மோதிக்கொள்ளும் திரண்ட தோள்வளை அணிந்த மறவராகிய,
வடிவாகச் செய்யப்பட்ட அம்பினை இயக்குபவரை அஞ்சாது
போரிட்டு உறுதியாக அவரை விரட்டி, நீர்
என்னுடைய உறவினர் தேடிவந்தபோது உம்மை ஒளித்துக்கொண்ட காடு-
				மேல்
# 49 நெய்தல் நெய்தல் தத்தனார்

பெரிய அலைகள் கொழித்து உருவாக்கிய பாலின் நிறத்ததாகிய மணல்மேடுகளில் விளையாடும்
வளைமகளிர் தம் இல்லத்தில் துயில் கொண்டுவிட்டதால் கடல்துறை தனிமையுடைதாயிற்று;
முடிச்சிட்ட வலைகள் முகந்த முடங்கிய இறாமீன்கள் காய்வதை
அவற்றின் மேல் விழும் பறவைகளை விரட்டுவதால் பகலும் கழிந்தது;
சுறாமீன்களைப் பிடித்த மகிழ்ச்சியையுடையவராய், தம் வேட்டையை விடுத்து
எமது இல்லத்தோரும் மனையில் தங்கினர்; யாம் மனம் கலங்கினோம் என
சென்று நாம் அவன் கருத்தை அறியின் என்னாம் தோழி?
மன்றத்துப் புன்னையின் பெரிய கிளையில் உள்ள நறு மலர்கள்
வீட்டு முற்றத்தில் இருக்கும் தாழையோடு சேர்ந்து மணங்கமழும்
தெளிந்த கடலையுடைய தலைவன் வாழும் சிறிய நல்ல ஊருக்கு - 
				மேல்
# 50 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ

என் அறியாமையினாலே, அன்னையே! உன்மேல் அச்சம்கொண்டு,
நம் தலைவன் இளந்தளிர்களையும், மாலையையும், குறிய சிறிய வளையல்களையும் கொண்டவனாய்
(சேரி)விழாவில் கொண்டாடும் துணங்கைக் கூத்தில் (பரத்தையரைத்)தழுவிக்கொள்ளுதலை கையகப்படுத்தச் சென்றபோது
நெடிய நிமிர்ந்த தெருவில் வேறொரு வழியில் வந்து புகுந்து அந்த வளைந்த இடத்தில்
நமக்கு அயலானாகிய அவன் திடீரென எதிர்ப்பட,
"உன்னைக் கேட்பார் உண்டோ இல்லையோ, இதைத்தவிர்" என்று நான் கூற
"அழகாக இருக்கிறது உன் பசலை" என்று கூறினான். அதற்கு மறுமொழியாக,
"உனக்கு வெட்கம் இல்லை, ஐயனே" என்று கூறிவந்தேன் -
வேண்டாதவரும் விரும்பும் வீறு கொண்டவன் என்று
மணமுள்ள நெற்றியை உடைய தலைவியே! அவனைப் போற்றேன் -
எனது சிற்றறிவு பெரிதாயிருப்பதால் ஆராயாமல் துணிந்து - (அவ்வாறு கூறினேன்)
 				மேல்


 



# 51 குறிஞ்சி பேராலவாயர்

எதனை எவ்வாறு செய்வோம் தோழி! உயர்ந்த தண்டினையுடைய
மூங்கில்களை உடைய மலைப்பிளவுகளில் எதிரொலிக்க, பாம்புகள் வருந்தி
உயர்ந்த பாறைகளில் புரண்டு ஒளிரும்படி துடிக்கச்செய்து, விரைந்து செல்லும்
கடும் முழக்கமிடும் இடியேற்றினோடு மிகுந்த துளிகள் சொரிய
மழையையும் நிற்காமல் பெய்கிறது வானம்; மழையோடு சேர்ந்த
மின்னல் நிமிர்ந்து நிற்றலைப்போல் (வேலினைக் கையில் மொண்டு) வேலன் வர,
பின்னிய கூந்தலின் உச்சியில் உள்ள மலர்களைக் காத்தலும் இயலாமற்போயிற்று;
பெரிய குளிர்ந்த காட்டுமல்லிகைக் கொடியை மிதித்துக் குழைத்த பரந்த அடியையுடையதும்,
கரிய சேற்றைப் பூசிக்கொண்ட நெற்றியையுடையதுமான கொல்லவல்ல ஆண்யானை
இளைய ஆசினிப் பலாவின் கிளையை வளைத்து முறித்து,
மலர்கள் செறிந்த வேங்கைமரத்தின் நிழலில் தங்கியிருக்கும் மலையை உடைய நம் தலைவனுக்காக -
				மேல்
# 52 பாலை பாலத்தனார்

கரிய கொடியையுடைய காட்டுமல்லிகையின் மலரோடு, பாதிரியின்
தூய தகடு போன்ற மலரை எதிர்த்துக் கட்டிய சரத்தைச் சூடிய கூந்தலின்
மணம் கமழும் நாற்றத்தை நுகர்ந்து, நாம் இவளின்
அழகுத்தேமல் பரந்த மார்பினைச் சேர்த்துத் தழுவி,
மிக்க இனிமையுடைய கைகளின் அந்த அணைப்பை விட்டு நீங்கிச் செல்லமாட்டோம்;
நீயோ, பொருளீட்டும் முயற்சியை மேம்பட்டதெனக் கருதி, ஒவ்வொருநாளும்
பிரிந்து வாழும் வாழ்க்கையை விரும்பிச் சிறிதளவும் ஓயமாட்டாய்;
உனக்கு என்மீது அன்பு இல்லை, வாழ்க என் நெஞ்சே! கடுமையாகப் போரிடும்
வீரர்களின் தலைவனான, மிகுந்த வள்ளண்மையுள்ள ஓரியின்
கையிற்கிடைக்கும் பெருஞ்செல்வம் கிடைக்கப்பெறினும்
அது மிகவும் எளிமையானதாகும், உன்னுடன் கூடிப்பெறும் அப் பொருள், நீயே ஏகுவாய் -
				மேல்
# 53 குறிஞ்சி நல்வேட்டனார்

நான் உன் களவுக்காதல்பற்றி அச்சம்கொண்டு அதனை மறைக்கவும், தான் அதனை
அறிந்திருந்தாளோ, இல்லை நம்மீது இரக்கம் கொண்டாளோ?
என்னவாக இருக்கும், தோழி! நமது அன்னை எண்ணியது?
விண்ணைத்தொடும்படி உயர்ந்த பெரிய மலையின் உச்சிச் சரிவில்
பெருத்த முழக்கமிடும் மேகங்கள் கூடிவந்து நள்ளிரவில்
மிகுந்த மழையைப் பொழிந்ததாக, காட்டின் பாறைகளில் மோதி வரும் ஆற்றின்
காய்ந்த சருகுகளோடும், உதிர்ந்த மலர்க் கொத்துக்களோடும் வரும்
புதிய சுவையான நீர் மருந்தும் ஆகும்,
அதனைக் குளிர்ச்சிபெறப் பருகி கண்ணுக்கினிய காட்சிகளைக் கண்டு
வெறுப்பின்றி நீராடினால், இவளின்
நடுக்கமும் தீரும், செல்வீர்களாக என்ற நம் அன்னை - 
				மேல்
# 54 நெய்தல் சேந்தங்கண்ணனார்

சங்குகள் உள்ள கடல்நீரில் இரைதேடி, உன் சுற்றமுதலானவருடன் சென்று
சிறகுகளை விரித்து உயரப் பறக்க எழும்புவதை விரும்பினாயெனினும், தூய சிறகுகளுடன்
மிக்க புலவைத் தின்னும் உன் கிளையுடன் சற்றுத் தாமதித்து,
கரிய காலைக் கொண்ட வெண்ணிறக் குருகே! நான் சொல்வதைக் கேட்பாயாக!
பெரும் தனிமைத்துயரத்தைத் தருகின்றது இந்தச் சிறிய புல்லிய மாலைப்பொழுது;
அதனை நீ அறிந்தால் என்மீது அன்புகொள்வாய்;
என்னை அயலாள் என்று எண்ணாது, எனது குறையை
இங்கே இருப்பது போல அவர் உணரும்படி சொல்வாயாக! தழையாடை அணிவோர்
கொய்யக்கூடிய இலைகள் தழைத்த இளம் ஞாழல்
தெளிந்த அலைகளின் நீலநிற மேற்புறத்தைத் தடவிக்கொடுக்கும்,
கண்டல்மரவேலிகளையுடைய உம்முடைய கடல்துறைத் தலைவருக்கு - 
				மேல்
# 55 குறிஞ்சி பெருவழுதி

உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தவனே! ஒழிந்துபோகட்டும் உன் சொன்னசொல்தவறாமை!
மூங்கில்கள் பின்னிக்கிடக்கும் கற்பாறை நெறியாகிய சிறிய வழியில்,
நேரக்கூடிய தீங்குகளை எண்ணிப்பாராமல், இரவில் வந்து இவளின்
புள்ளித்தேமல் படர்ந்த மார்பகத்தைத் தழுவிச்செல்ல, இவளின் தோளைச் சேர்த்து
வண்டினங்கள் அளவில்லாதனவாய் மொய்க்க,
கண்ணால் கொல்பவளைப் போல் பார்த்து, "இதற்கு முன்பும்
இவ்வாறு மொய்க்கப்பெற்றாயோ" எனக் கேட்டாள் தாய்;
அதற்கு மறுமொழி சொல்லாதவளாய் மனம்வருந்தி
என் முகத்தை நோக்கினாள் தலைவி; "அன்னையே"
எப்படி ஆராய்ந்து இதனின்றும் தப்பிப்பாள் என எண்ணி, அடுப்பிலிருந்த
சந்தனக் கொள்ளிக்கட்டையைக் காட்டி,
"இதனால்தான் இப்படி ஆயிற்று" என்றேன் நான்.
				மேல்
# 56 பாலை பெருவழுதி

குட்டையாக நிற்கும் குரா மரத்தின் சிறிய அரும்புகளைக் கொண்ட நறிய மலர்களில்
வண்டுகள் மொய்ப்பதால் ஏற்படும் மணத்தைக் காற்று தன்னுடன் கலந்து கொண்டுவர,
கண்கள் மகிழ்ச்சியடையும் அழகுபெற்ற பொழுதில்
ஒளிரும் என் வளையல்கள் கழன்றுபோகுமாறு பிரிந்து சென்ற தலைவர்க்காகத் துன்பமுற்று
அவர்பால் சென்ற என் நெஞ்சம் அங்கு அவர் செய்யும் வினைக்குத் தளர்வு ஏற்படாவாறு
அவரோடே சேர்ந்து திரும்பி வரும் விருப்பத்தோடு வருந்தியிருக்குமோ?
அவ்வாறு அவர் அருள்செய்யாமையினால் கலங்கி இங்கு வந்து
முன்பிருந்த என்னுடைய நலன்களை இழந்துபோன எனது பசலை பாய்ந்த பொன் நிறத்தைப் பார்த்து
வேறு யாரோ இவள் என்று
போய்விட்டதோ துன்பம் மிகக் கொண்டு - 
				மேல்
# 57 குறிஞ்சி பொதும்பில் கிழார்

வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம் உள்ள
குன்றிலுள்ள வேங்கை மரத்தடியில் தன் கன்றுடன் படுத்திருந்ததாக,
அது தூங்கும் நேரத்தில், பஞ்சுபோன்ற தலையையுடைய குரங்கு
கல்லென ஒலிக்கும் தன் சுற்றத்தைக் கையமர்த்தி, கிட்டே சென்று
பருத்த பால்மடியை அமுக்கிப் பற்றி இழுத்து, இனிய பாலை
தன் இளைய வலிய குட்டியின் கை நிறையப் பிழிந்துகொடுக்கும்
பெரிய மலைநாடனே! என் மனம் மருட்சியடைகின்றது,
நிமிர்ந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினையின் அகன்ற கொல்லைக்காடு
கதிர் அறுக்கும் பருவத்தை அடையும் இந்த நேரத்தில், எமது
கருத்த நெய்ப்பசையுள்ள கூந்தலைக்கொண்டவளின் சிறப்பு மிக்க நலம் சிதைந்துவிடுமே என்று -
				மேல்
# 58 நெய்தல் முதுகூற்றனார்

நிறைந்த பழமையான செல்வத்தைப் பெற்றவரின் பொன்தாலி அணிந்த புதல்வர்
தமது சிறிய தோளில் சேர்த்துக்கட்டிய செவ்வையாக அரித்து ஒலிக்கும் பறையின்
முகப்பில் எழுதப்பட்ட குருவி அடிக்கப்படுவதைப் போல
சாட்டைக் குச்சியால் அடிக்கப்படுவதாக -
வீரை வேண்மானாகிய வெளியன் தித்தனது
முரசு முதலியவற்றோடு, மாலையில் ஏற்றப்படும் வரிசை விளக்குகளோடு
வெள்ளிய சங்குகள் முழங்க, நுண்ணிய பனி அரும்ப,
பிரிவுத்துயர்கொண்டோர் செயலற்றுப்போக, வந்துசேர்ந்த மாலைப் பொழுதில், மெய் சோர்ந்து
அவலம் கொண்ட நெஞ்சத்தோடு யாம் இவ்விடம்விட்டுச் செல்ல, உயரும் அலைகளையுடைய
நெடுங்கடலின் குளிர்ந்த துறையை உடைய தலைவனின்
ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்தில் பூட்டப்பட்ட குதிரைகள் - 
				மேல்
# 59 முல்லை கபிலர்

உடும்பைக் கொன்று எடுத்துக்கொண்டு, வரிகளையுடைய தேரையை மணலைத் தோண்டி எடுத்துக்கொண்டு
உயர்ந்த உச்சிகளையுடைய புற்றில் இருக்கும் ஈசலையும் கிளறித் தாழியில் பிடித்துக்கொண்டு,
பகல்நேரத்து முயலை தடியால் எறிந்து பிடித்துக்கொண்டு, வரும் வேட்டுவன் தன் தோள்களில் சுமந்துவந்த
பல்வேறு பண்டங்களின் தொகுதியை மறந்து, வீட்டிலிருக்கும்
பெரிய கலத்தில் கள்ளைப் பருகி அதன் மயக்கத்தில் செருக்கியிருக்கும்
வன்புலமாகிய காடுகளைக் கொண்ட நாட்டில் உள்ளது, அன்பினால் உள்ளம் கலந்து
நம்மேல் விருப்பத்துடன் கொண்ட கொள்கையுடனே. தன் நெஞ்சில்
எம்மை நினைத்து வாழ்பவளின் ஊர்; முல்லையின்
நுண்ணிய மொட்டு மலர்ந்த அந்தக் காட்டுப்பகுதியில்
பொறுமையுடன் ஆற்றியிருக்கிறாள் அவள், இனியும் தாமதித்தால் மிகவும் வருந்துவள்.
				மேல்
# 60 மருதம் தூங்கலோரியார்

மலையைப் பார்த்தாற்போன்ற நிலையில் பொருந்திய உயர்ச்சியையுடைய
மிக்க நெற்கதிர்களைப் பலபெரிய கூடுகளாகக் கட்டிவைத்திருக்கும், எருமையினால் உழவுசெய்யும் உழவனே!
கண்ணுறக்கம் இன்றி, குளிர்ந்த புலர்கின்ற விடியற்காலையில்,
கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை
உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றுடன்
கையகத்தில் ஏந்தி வாய் கொள்ள உண்டு,
நீர் பாய்ச்சிய வயலில் நாற்றுக்களின் முடிகளை நடுவதற்காக, உன்னுடைய
நாற்றுநடுவாருடன் சென்று சேர்ந்தால், அங்கிருக்கும்
பைஞ்சாய்க்கோரைகளையும் நெய்தல்களையும் விட்டுவைப்பாயாக; எமது இல்லத்தில்
கரிய செறிந்த கூந்தலையுடைய தலைவிக்கு
அவை அழகிய வளையாகவும் தழையாகவும் அணிதற்குரியனவாகும்.
				மேல்
# 61 குறிஞ்சி சிறுமோலிகனார்

கேட்பாயாக, ஏடீ, தோழி! நேற்று இரவு
நான் மிகுந்த வேட்கையினால் வருந்திப் பெருமூச்சுவிட்டு
அம்புபட்ட பெண்மானைப் போல வருந்தினேனாக,
எனது துயரின் மிகுதியை அறிந்தவளைப் போல, என் அன்னை
தூங்கவில்லையோ என் இளைய மகளே என்று சொல்ல,
சொற்கள் வெளியே வராதவண்ணம் மெல்ல என் மனத்துள்
மிகுந்த மழை பொழிந்த பாறையின் அருகில் பூத்த
மீன்கொத்திப் பறவையின் அலகு போன்ற தளவ முல்லையும், பரல் கற்களைக் கொண்ட பள்ளங்களும் உள்ள
காடு சூழ்ந்த நாட்டினனை எண்ணியிருப்போர்க்குக்
கண்ணும் உறங்குமோ என்றேன் நான்.
				மேல்
# 62 பாலை இளங்கீரனார்

வேர்கள் இறுகப் பிணிக்கப்பெற்ற மூங்கில் காற்றினால் மோதப்படும்போது எழும்பும் நரலும் ஓசை
தறியில் கட்டப்பட்ட யானை வருத்தத்துடன் பெருமூச்சு விட்டதைப் போன்றிருக்கும்
வெம்மையான கோடைக்காலம் நீடிய மூங்கில்கள் மிகுந்த காட்டுவழியில்
குன்றினை நோக்கி ஊர்ந்துசெல்லும் முழுநிலவை நோக்கி, நின்று, அவளை நினைந்து
மனத்துள் எண்ணிப்பார்த்தேன் அன்றோ நான்! முள் போல் கூர்மையான பற்களையும்,
திலகமிட்ட இனிய மணமுள்ள சிறப்பான நெற்றியையும் கொண்ட ஒருத்தியாக
எம்முடையவளும் உண்டு ஒரு நிறைநாள் திங்கள்,
முழங்கும் குரலையுடைய வெம்மையான காற்று வீசுவதால் இலைகளை இழந்து நிழல் இன்றி
உலர்ந்த கொம்புகளாக நிற்கின்ற மரங்களையுடைய,
கற்கள் விளங்கும் உயர்ந்த மலைக்கு அப்பால் என்று - 
				மேல்
# 63 நெய்தல் உலோச்சனார்

வலிமை மிக்க கடலில் சென்று வருந்திய, பெரிய வலைகளைக் கொண்ட பரதவர்
மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்
மிகுந்த ஆரவாரமுள்ள சேரியை அடுத்த புலால்நாறும் இடத்திலுள்ள புன்னையின்
விழாவுக்குரிய மணம் விளங்கும் பூங்கொத்துகள் உடன் மலர்ந்து மணங்கமழும்
சந்தடி மிகுந்த ஊரினர் அறத்தின்பாற்படாதவராயினர்; அதனால்
அறமற்ற அன்னை நம்மை அரிய காவலில் வைக்க,
நம் மேனி பசலை பாய, அழியலாயிற்று -
பறவைகள் வந்து உட்கார வளைந்து உதிர்ந்த பூக்கள் கலந்த சேறு நிரம்பிய
கழியின் வழியாக நிமிர்ந்து செல்லும் இறுகிய பிணிப்பை உடைய குதிரைகளை
அலைகள் தருகின்ற கடல்நீர் கழுவிவிடும்
மிகுந்த அலைகளையுடைய நம் கடல்துறைத் தலைவனோடு அமைந்த நம் உறவு - 
				மேல்
# 64 குறிஞ்சி உலோச்சனார்

நம் காதலர் எப்படிப்பட்டவராயினும் இனி அவர் பற்றிய நினைவை விட்டுவிடு,
அப்படி இருப்பதற்காக வருந்தவேண்டாம் தோழியே! நாம்
இப்படிப்பட்டவராய் ஆகிவிடும்படி நம்மைத் துறந்துசென்றோரின் நட்பு இனி நமக்கு எதற்கு?
மரல் நாரினால் செய்த உடையினையுடைய, மலையில் வாழும் குறவர்கள்
அறியாமல் அறுத்த சிறிய இலைகளைக் கொண்ட சந்தனமரம்
காய்ந்துபோய் மிகவும் கெட்டு மெல்லமெல்ல
மரமே வெறுமையுற்று சோர்ந்து விழுவதைப் போல
அறிவும் உள்ளமும் அவரிடம் சென்றதாக
சுருங்கிப்போயிற்று தோழியே! என் உடம்பு; இனி அவர்
வந்தாலும் நம் நோய்க்கு மருந்தாகமாட்டார், வராமல்
அங்கேயே இருந்துவிடட்டும் நம் காதலர்; இங்கே நமது
காதலும் அதனால் உண்டான துன்பமும் நம்மைக் கொல்லும்படி வருந்திய
நோய் மிக்க வருத்தத்தை காணாமலே போகட்டும் நம்மைச் சேர்ந்தோர்.
				மேல்
# 65 குறிஞ்சி கபிலர்

அமுதத்தை உண்பாளாக! நம் அயல்மனைக்கிழத்தி!
அகழியைப் போன்று ஆழ்ந்த, சிறிய கரையை உடைய காட்டாற்றில்
கலங்கிக்கிடக்கும் பாசி நீர் அலைத்தலால் நீரில் ஒன்றுசேர்ந்து கலக்க,
ஒளிறுகின்ற வெள்ளிய அருவி வீழும் நீர்த்துறையிடத்தில் கொம்புகளால் ஊடுறுவக் குத்தி
புலியுடன் போரிட்ட புண்ணுற்று வருகின்ற யானையின்
நல்ல தந்தங்களை விரும்பிய அன்பு இல்லாத கானவர்களின்
வில்லின் சுழிப்புக்கு இலக்கான யானையின் அச்சந்தரும் பேரொலி
குமுறுகின்ற இடிமுழக்கத்தினூடே தோன்றும் பெரிய இடியேற்றின் முழக்கத்தைப் போல் ஒலிக்கும்
பெரிய மலையைச் சேர்ந்தவன் வருவான் என்று சொன்னதால் -
				மேல்
# 66 பாலை இனிசந்தநாகனார்

மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை,
உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு,
தனித்திருந்த நீண்ட கிளையில் ஏறி, தன் பெடையை நினைத்து, தன்
புள்ளிகள் விளங்கும் பிடரிமயிர் மணங்கமழத் தேய்த்துவிடும்
புல்லிய புறா வருந்தும் வெம்மையான புழுதியையுடைய காட்டுவழியில்,
தான் விரும்பிய காதலனைச் சேர்ந்திருந்தாள் எனினும்,
சிவந்துபோய் ஒளி மழுங்கி கலக்கமடைந்தனவோ?-
கழுத்து மாலை முறுக்கிக்கொண்டிருப்பினும், கைவளையல்கள் நெகிழ்ந்துபோயிருப்பினும்,
உறுதியாகக் கட்டப்பெற்ற, அல்குலின் காசுமாலையில் உள்ள காசுகள் வரிசைமாறிக் கிடப்பினும்,
தன் மாண்புமிக்க நலம் கெட்டழிய மனம் கலங்குகின்ற என்
அழகிய இளைய மகளின் மலர் போன்ற கண்கள் -
				மேல்
# 67 நெய்தல் பேரிசாத்தனார்

மிக்க தொலைவிலுள்ள வானத்தில் ஊர்ந்து சென்ற செழுமையான கதிர்களைக் கொண்ட ஞாயிறு
பெரிய மலையில் சென்று மறைய கடற்கரைத்துறையும் தனிமையுடையதாய் ஆயிற்று.
இறா மீனை அருந்திவிட்டு எழுந்த கரிய காலைக்கொண்ட வெள்ளைக் குருகுகள்
வெள்ளிய உப்புக் குவடுகளைத் தொட்டுக்கொண்டு தம் அரிய சிறகுகளை வீசிப் பறந்துசென்று, கரையிலுள்ள
கரிய கிளைகளையுடைய புன்னை மரங்களில் தங்கின;
திரண்ட தண்டினையுடைய கரிய மலர்கள் மறைந்துபோகும்படி நீர் பெருகும் கழிகளில்
துணையோடு சுறாமீன்கள் நீந்தவும் செய்யும்; அவ்விடத்தில்
இரவில் ஒலிக்கும் குளிர்ந்த கடலில் மிக்க விளக்குகளைக் கொளுத்திக்கொண்டு
எமது வீட்டாரும் மீன் பீடிக்கச் சென்றனர்; அதனால்,
இங்குத் தங்கிச் சென்றால் என்ன? பொங்கிச் சிதறும் துளிகளைக்கொண்டு,
முழவு போல் இசைக்கும் அலைகள் எழுந்து
உடைந்து விழும் கடற்கரையிலுள்ள நிலத்தில் நாங்கள் உறையும் இனிய ஊரில் -
				மேல்
# 68 குறிஞ்சி பிரான்சாத்தனார்

விளையாட்டுத் தோழியருடன் ஓரை என்னும் ஆட்டத்தை ஆடாமல்
இள மங்கையர் தமது வீடுகளில் அடைத்துக்கிடத்தல்
அறநெறி ஆகாது; வீட்டின் செல்வமும் குன்றும் என்று
சிறிய நுரைகளைச் சுமந்துகொண்டு, நறிய மலர்களை வீசியெறிந்துகொண்டு
பொங்கி வருகின்ற புது நீரில் மனம் மகிழ ஆடுவோம்;
இதனை விரைந்து சென்று அன்னையை வணங்கிச் சொல்லுபவரைப் பெற்றால்
செல்லுங்கள் என்று அனுப்பிவிடுவாளோ? ஒளியை உமிழ்ந்து
வலிய இடி முழங்கும் பாதி இரவாகிய நடுயாமத்தில்
கொடிபோல் வளைந்தனவாய் ஒளிர்ந்து மின்னி
அசைகின்ற மேகங்கள் தங்கியிருந்தன, தலைவனின் உச்சி உயர்ந்த குன்றில் -
				மேல்
# 69 முல்லை சேகம்பூதனார்

பல கதிர்களையுடைய ஞாயிறு பகற்பொழுதைச் செய்து
தொலைவில் உயர்ந்த பெரிய மலையில் சென்று அங்கே மறைய,
பறவைகள் தம் குஞ்சுகளிருக்கும் கூட்டிற்சென்று தங்க, காட்டில்
கரிய பிடரியைக் கொண்ட இரலை மான்கள் தம் இளைய பெண்மானைத் தழுவ,
முல்லை தம் மொட்டுகளின் வாய் திறக்க, பல இடங்களிலுமுள்ள
காந்தள் மலர்ந்து புதர்களில் விளக்கேந்திநிற்க,
பெருமிதம் கொண்ட நல்ல பசுக்களின் குற்றமற்ற தெளிவான மணியோசை
வளைந்த கோலையுடைய கோவலரின் குழலோடு சேர்ந்து
மெல்லிதாக வந்து ஒலிக்க, இவ்வாறான இரக்கமற்ற மாலைப்பொழுது
பொருளீட்டும் முயற்சியால் பிரிந்து சென்றோர் சென்ற நாட்டிலும்
இப்படியே தோன்றுமாயின்
தன் செயலில் உறுதிகொண்டு தங்கியிருக்க அவரால் முடியாது.
				மேல்
# 70 மருதம் வெள்ளிவீதியார்

சிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே!
சலவைத்துறையில் மிதக்கும் வெள்ளை ஆடையின் தூய மடிப்பு போன்ற
நிறம் விளங்கிய சிறகினை உடைய சிறிய வெள்ளைக் குருகே!
எமது ஊருக்கு வந்து எமது உண்துறையில் புகுந்து தேடி
சினைப்பட்ட கெளிற்றுமீனைத் தின்றுவிட்டு அவர் ஊருக்குச் செல்கின்றாய்!
அதற்கு நன்றியுள்ள அன்போடு இருப்பாயோ? இல்லை பெரிய மறதியைக் கொண்டிருப்பாயோ?
அங்குள்ள இனிய நீர் இங்கு வந்து பரந்து செல்லும்
வயல்களையுடைய நல்ல ஊரினையுடைய எனது காதலரிடம் சென்று என்னுடைய
அணிகலன்கள் கழன்றுபோகும் துன்பத்தை இதுவரை சொல்லாதிருக்கின்றாய்!
				மேல்
# 71 பாலை வண்ணப்புறக் கந்தரத்தனார்

நிலையில்லாத இந்தப் பொருளின் மீது கொண்ட ஆசையைக் கருத்தில்கொண்டு, அதனை
வளை அணிந்த முன்னங்கைகளை உடைய உன் தோழிக்கு உணர்த்து என்று
பலமுறை வேண்டிக் கேட்டுக்கொள்கிறீர்; அவ்வாறே நான் சென்று கூறினால் செல்லுவீராக என்று
உம்மை விடுதலும் செய்வாள்; அவ்வாறு விடுத்தால்,
கண்களையும் நெற்றியையும் தடவிக்கொடுத்து அவள் முன் நின்று,
அவளைவிட்டுப் பிரிந்துசென்றுவிடுவீரோ ஐய! செல்வருடைய
வகைபட அமைந்த நல்ல வீட்டின் உள்ளே இருக்கும் கூரைச்சாய்ப்புகளில் வசிக்கும்
அழகிய புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்புறா
தான் விரும்பும் தன் துணையைச் சேர்ந்துகொள்ள அழைக்கச் செயலற்றுப்போய் ஒலிக்கும் ஓசையை
உம்மைப் பிரிந்திருப்போள் தனிமையில் கேட்குந்தோறும்
பொலிவுபெற்ற கூந்தலையுடையவள் பேரவாவினால் நடுங்கி வருந்துமாறு -
				மேல்
# 72 நெய்தல் இளம்போதியார் 

பேணவேண்டுபவற்றைப் பேணமாட்டார் பெரியோர் என்பது
வெட்கப்படத் தகுந்தது, அதனை ஆராய்ந்து பார்த்தால்;
உயிர் ஒன்றினாற் போன்ற குற்றமற்ற நட்புடைய
உன்னிடத்து நான் மறைத்துப்பேசுவது எவ்வளவு மிகப் பெரிய
அழிவுதருவதாய்ப் போகும்! முன்பெல்லாம் தலைவன்
"நான் எமது தாய்க்கு அஞ்சுகிறேன்" என்று சொன்னாலும், தான் என்னைவிட்டுப்
பிரிந்துசெல்லுதலை எண்ணமாட்டான்; இப்பொழுதோ,
கானலில் உள்ள விளையாட்டுத் தோழியருக்குத் தெரிந்தாலும், அதனைப் பொறுக்காமல்
பழிச்சொல் வந்துவிடுமோ என்று கூறுகின்றான்; அதனால்
குறைவுபட்டதோ அவன் காதல் என்று
அஞ்சுகிறேன் தோழி என் மனத்துக்குள் -
				மேல்
# 73 பாலை மூலங்கீரனார்

வேனில்காலத்து முருக்க மரத்தில் நன்கு விளைந்து முற்றிய காய்களின் கொத்தினைப் போன்ற
அழகற்ற விரல்களைக் கொண்ட, வலிய வாயைக் கொண்ட பேய்,
வளப்பமுடைய பழமையான ஊரில் மாலைநேரத்து மலர்ப்பலியை உண்பதற்காக,
மக்கள்கூடும் பொதுவிடத்தை ஊடுருவிக்கொண்டு வரும் புன்கண்மையுடைய மாலைப்பொழுதில்
தலைவரோடு இருப்பினும் அஞ்சுகின்ற நாம் இங்கு தனித்திருக்க,
செல்வோம் என்கிறார் அவரே! சிவந்த வரிகளைக்கொண்ட
மயிரை வரிசையாக வைத்தது போன்ற நீண்டு திரண்டு வளைந்த கதிர்களையுடைய
செந்நெல் விளையும் அழகிய வயல்களில் அன்னம் துயிலும்
பூக்கள் அழகிதாகக் கிடக்கும் கொல்லைப்புறத்தையுடைய சாய்க்காடு என்ற ஊரைப் போன்ற என்
நெற்றியின் அழகினை அழித்துப்போடும் பசலையையும்,
அயலவர் தூற்றும் பழிச்சொல்லையும் எனக்கு அளித்துவிட்டு - 
				மேல்
# 74 நெய்தல் உலோச்சனார்

செம்மையாகச் செய்யப்பட்ட கதிர் என்னும் கருவியால் முறுக்கேற்றப்பட்ட வலிய கயிற்றால் பின்னிய பெரிய வலையை
இடி போன்ற குரலையுடைய அலைகலுள்ள கடலில் இடுவதற்காக,
நிறைய ஏற்றப்பட்ட தோணியை, தாற்றுக்கோல் வைத்திருப்பவர்கள்
அடக்குதற்கு அரிய களிற்றினை பிணித்துச் செலுத்துவதைப் போல, பரதவர்கள் செலுத்தும் 
சிறிய பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்கள் இருக்கும் பெரிய கடற்கரைக்குத் தலைவனை,
நமக்கு அன்னியன் என்பர்; மொட்டுகள் மலர்கின்ற,
புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், குருகின்
வெள்ளையான முதுகில் மொய்ப்பதுபோல் உதிர்க்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள
கண்டல் மர வேலியையுடைய ஊரினர், பரத்தையை அவனது
மனைவி என்று கூறுகின்றனர்; அந்தச் சொற்களை மாற்றுவது இனி அரிதாகும்
				மேல்  
# 75 குறிஞ்சி மாமூலனார்

உன் உள்ளத்தில் இரக்கம் இன்மையால், விளையும் பயன் இது என்று எண்ணாமல்,
அழகிய புள்ளிகள் பெற்று விளங்குகின்ற நஞ்சைக் கக்கும் அகன்ற படத்தையுடைய
பாம்பு உயிர்களைக் கொல்வது போன்று இங்கு நீ சிரிப்பது
தகாதது, வாழ்க இளைய மகளே! சிரிக்காமல்
சொல்வாயாக! உடைந்துபோகும் என் உள்ளம்; மலைச் சாரலில்
வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கொம்புகளையுடைய பன்றியைக் கொன்று
அதன் பசிய ஊனில் பாய்ந்த அம்பினைப் போல
சிவந்த வரிகள் பரந்த கரிய இமைகளைக் கொண்ட குளிர்ந்த கண்களின்
குறிப்பில்லாத பார்வையைப் பெற்ற எனது
வருத்தமிக்க நெஞ்சம் உய்யுமாறு -
				மேல்
# 76 பாலை அம்மூவனார்

வருகின்ற மழையையும் மறைத்துக்கொண்ட வெள்ளைநிற மேகங்களின்
நுண்ணிய துளிகளும் மாறிப்போன காற்றடிக்கும் காட்டுவழியில்
ஆலமரத்தின் நிழலில் உன் தளர்ச்சியைப் போக்கி,
அஞ்சவேண்டியஇடத்தும் அஞ்சாமல், தங்கவேண்டிய நேரத்தில் தங்கி இளைப்பாறி
வருந்தாது வருவாயாக, தூய அணிகலன்களை அணிந்த இளமங்கையே!
எடுத்ததற்கெல்லாம் பெரிய பழிச்சொல்லைக் கூறும் உன்னுடைய ஊரிலுள்ள புன்னையின்
காம்பற்ற மலர் உதிர்ந்ததால், தேன்மணம் கமழுகின்ற புலால் நாற்றமுடைய
கழிக்கரை சோலையின் நீண்ட மணலில் நடந்துவழக்கப்பட்ட,
இப்பொழுது கற்கள் குத்துவதால் சிவந்துபோன, உன் மென்மையான பாதங்கள் துன்பம் நீங்கப்பெற -
				மேல் 
# 77 குறிஞ்சி கபிலர்

மலையமான் தன் குதிரையின் மேல் செல்ல, முரசறைவோன்
தன் பெரிய துடிப்பறையை முழக்க, வேற்று மன்னர் நாட்டில் புகுந்து அவரின்
கடத்தற்கரிய காட்டரணை அழித்து நிம்மதிப்பெருமூச்சு விட்டாற்போன்று
துன்பம் தீர்ந்தது என் நெஞ்சு! சிவந்த வேர்களைக் கொண்ட
கிளைகள்தோறும் தொங்கும் பழங்களையுடைய பலாவின்
சுளைகளை உடைய முற்றத்தில் மனையோளான மனைவி இரவில்
ஒலிக்கும் வெண்மையான அருவிநீரின் ஒலியைக்கேட்டுத் துயில்கின்ற
பெரிய ஊர் அல்லாத அழகிய சேரியாகிய சிற்றூரில், வளைசெய்வதில் வல்லவன்
தன் வாள் போன்ற அரத்தால் அராவிச் செய்த நன்றாகப் பொருந்திய நேரிய ஒளிமிகுந்த வளையலையும்,
அகன்ற தொடியையும் செறித்த முன்கையையும், ஒளிவிடும் நெற்றியையும்,
அழகுத்தேமல் படர்ந்த அல்குலையும் கொண்ட இளமகளின்
குவளைபோன்ற மையுண்ட கண்களின் மகிழ்ச்சி மிக்க மடப்பம் பொருந்திய பார்வையால் -
				மேல்
# 78 நெய்தல் கீரங்கீரனார்

கொல்லுகின்ற சுறாமீன்கள் திரியும் ஒள்ளிய நிறத்தையுடைய பெரிய கழியில் மலர்ந்த
நீலமணி போலும் அழகிய நெய்தலின் கரிய மலர் நிறையும்படி
பொன் போன்ற நுண்ணிய தாதினைப் புன்னை மரங்கள் தூவும்,
விழுது ஊன்றிய தாழையின் மலர்கள் கமழ்கின்ற. கடற்கரைச் சோலையில்
துன்பம் வந்து வருத்தும் ஞாயிறு மறையும் மாலைப்பொழுதில்
காமநோய் மிகுந்த மிக்க துன்பத்திலிருந்தும் நாம் இங்கே தப்பித்தோம்;
கேட்டாயா தோழி! வாழ்க! தெளிந்த கழியில்
பெரிதாக அமையப்பெற்ற சக்கரப் பட்டையின் மேல் விளிம்பு அமுங்கப்பெறினும்
பறவைகள் எழுந்து பறந்தாற்போன்ற பொன்னால் செய்யப்பட்ட கலன்களைக் கொண்ட செருக்குள்ள குதிரை,
பாகனின் தாற்றுக்கோலால் தூண்டப்பெறுதலை அறியாத
தொடர்ந்தியங்கும் கடல்நீர்ச் சேர்ப்பனின் தேரின் மணி ஒலிக்கும் குரலை - 
				மேல்
# 79 பாலை கண்ணகனார்

மூடியிருக்கின்ற, ஈங்கை மரத்தின் தேன்துளி மிகவும் திரண்டுள்ள அன்றைய மலர்கள்
கூரையையுடைய நல்ல வீட்டில் உள்ள குறிய தொடியையுடைய மகளிர்
மணலில் ஆடும் கழங்கினைப் போல பாறையின் மேல் பரவிக்கிடக்கும்
அழகு பொருந்திய மக்கள் நடமாடுவதற்கு அரிய கிளைத்த பாதையில்
பிரிந்துசென்றோர் திரும்ப வந்து எம்மைச் சேருங்காலத்தில், சேர்ந்திருப்போர்
பிரிந்து செல்ல எண்ணுவதைக் காட்டிலும் கொடியதும் ஒன்று உண்டோ?
என்று நாம் கூறி நமது ஆசையைச் சொல்லுவோம்;
அவ்வாறு சொல்லாமல் விட்டுவிட்டால் எம் உயிருக்கே கேடு வரும்;
வாழ்க தோழியே!
வேறெந்தவகையில் தவிர்ப்போம் நம் காதலரின் பயணத்தை?
				மேல்
# 80 மருதம் பூதன்தேவனார்

தொழுவத்திலுள்ள எருமையின் அகன்ற தலையையுடைய காரெருமையின்
இனிய சுவையுள்ள பாலாகிய பயனைக் கொள்வதற்காக, கன்றினைவிட்டுப் பின்னர் கறந்துகொண்டு,
ஊரிலுள்ள இளஞ்சிறுவர்கள் அந்த எருமைகளின் மேல் ஏறிக்கொண்டு செல்லும்
பெரிய இருள் நீங்கும் விடியற்காலத்தில் விருப்பத்தோடு வந்து,
உடுக்கும் தழையும், சூடும் மாலையும் தந்தான் இவன் என்று
அணிகலன் அணிந்த தோழியரோடு தகுந்த நாணம் தன்ன வளைக்க,
தைத்திங்களில் குளிர்ந்த குளத்துநீரில் நீராடும்
பெரிய தோள்களைக் கொண்ட இளையோளே அன்றி
மருந்து வேறு இல்லை நான் அடைந்த இந்த நோய்க்கு -
				மேல்
# 81 முல்லை அகம்பன் மாலாதனார்

பெரிய நிலம் பள்ளமாகும்படி தன் காலால் கொட்டி நடந்து விரைந்து
நேராக ஓடுகின்ற தளர்ச்சியுறாத வலிமையான கால்களையுடைய
மன்னர்கள் மதிக்கும் மாட்சிமையான போர்வினையில் மேம்பட்ட குதிரைகளின்
கொய்யப்பட்ட பிடரிமயிரில் கட்டப்பட்ட மணிகள் மிகுந்தொலிக்க,
பூட்டுக, பாகனே! உன் தேரை! பூண்கள் தாழ்ந்த
மார்பிலுள்ள அழகிய முலைகளின் முகட்டில் கண்ணீர் தெறித்துவிழ
அழுதுகொண்டு இருக்கும் அழகிய மாமைநிறத்தையுடைய மனைவி
எமக்கு விருந்துசெய்யும் விருப்பத்தோடு சமைத்தலில் வருந்திக் களைப்புற்ற
மகிழ்ச்சியோடமைந்த இனிய நகையைக் காண்போம்;
கொண்ட பகையைத் தணித்துவிட்டான், வலிமைமிக்க வாளையுடைய வேந்தன் -
				மேல்
# 82 குறிஞ்சி அம்மள்ளனார்

என்னுடைய காமநோயும், அதனாலுண்டான தளர்ச்சியும் அற்றுப்போகுமாறு, சிறந்த
மூங்கில்போல் அழகு பெற்ற தோளையுடையவள் நீ! நீயே
என்னுடைய வருத்தத்தை அறிவாயோ! நல்ல நடையழகைக் கொண்ட கொடிச்சியே!
முருகனைச் சேர்ந்து ஒழுகிய வள்ளியைப் போல, உன்
மேனி என் கண்ணை எறிக்க உன்னைப் பார்க்க இயலாதனானேன்;
உயர்ந்த நாகமரங்களைக் கொண்ட செல்லுதற்கு அரிய பிரிவுபட்ட வழியினில்
சிறிய கண்களைக் கொண்ட பெரும் சினத்தைக் கொண்ட ஆண்பன்றி
சேற்றில் ஆடிய கருத்த முதுகில் புழுதியோடு அதன் நிறத்தைப் பெற்று,
வெறுமையான பிளவினில் மாட்டிக்கொள்ள, அதனைச் சூழ்ந்த வார்களை அழித்து,
வேட்டை நாய்கள் கொன்ற கொள்ளைப்பொருளை
கானவர் எடுத்துக்கொண்டு செல்லும் சிறுகுடியில் -
				மேல் 
# 83 குறிஞ்சி பெருந்தேவனார்

எமது ஊரின் நுழைவாயிலில் உள்ள ஊருணியின் துறையில், பருத்த
தெய்வம் வீற்றிருக்கும் முதிய மரத்தில் இருப்பதனால் இவ்வூரில் என்னுடன் வசித்துப் பழகிய
தேயாத வளைந்த அலகினையும், தெளிந்த கண்பார்வையையும், கூர்மையான நகங்களையும் கொண்ட,
ஓயாது ஒலிக்கும் வாயினால் பிறரை வருத்தும், வலிமை மிகுந்த கூகையே!
ஆட்டிறைச்சி கலந்த நெய்யிட்டுச் சமைத்த வெண்சோற்றை,
வெள்ளெலியின் சூட்டு இறைச்சியோடு நிறையத் தந்து உன்னைக் காப்பேன்,
அன்பில் குறைவுபடாத கொள்கையுடைய எனது காதலர் வருவதை விரும்பி
நநன் தூங்காது வருந்திக்கொண்டிருக்கும்வேளையில்,
அச்சம் தோன்றும் வண்ணம் உன் கடுமையான குரலில் கூவாதிருப்பாயாக!
				மேல்
# 84 பாலை பாலைபாடிய பெருங்கடுங்கோ

என் கண்ணையும், தோளையும், குளிர்ச்சியான நறிய கூந்தலையும்
அழகுத்தேமல் படர்ந்த அல்குலையும் பலவாறு பாராட்டி
நேற்றுக்கூட இவ்விடம் இருந்தார், நிச்சயமாக! இன்றோ,
பெரிய நீர்ப்பரப்பை ஒத்த வெண்மையான் பேய்த்தேராகிய கானல்நீரை
மரங்களற்ற நீண்ட வெளியில் இருக்கும் மான்கள் நீரென விரும்பி ஓடும்,
சுடுமண் பானையில் மத்தால் கடையும்போது
திரண்டுவராத வெண்ணெய் வெப்பத்தால் சிதறித் தோன்றுவது போல
உப்புப்பூத்துக் கிடக்கும் களர் நிலத்து ஓமைக்காட்டு,
வெயில் நிலைத்திருந்த வெப்பம் அலையிடும் அரிய காட்டுவழியில்
செல்வேன் என்கிறார் அவர்; தம்மிடத்தில்
இல்லையென்று கேட்போரின் இன்மையை மாற்ற முடியாத
இல்வாழ்க்கையை வாழமாட்டாதார்.
				மேல்
# 85 குறிஞ்சி நல்விளக்கனார்

ஆய்ந்தெடுத்த மலர் போன்ற குளிர்ந்த கண்களில் தெளிந்த நீர்த்துளிகள் துளிர்ப்பவும்,
மூங்கில் போன்ற பெரிய தோள்களில் உள்ள வெற்றிவாய்ந்த அணிகலன்கள் நெகிழ்ந்துபோகவும்,
அதனால் ஊராரின் பழிச்சொற்கள் அந்த ஊரில் பெரிதாய் ஒலித்தாலும்,
குறுகிய வரிகளையுடைய பெரிய புலிக்கு அஞ்சி, குறு நடையுள்ள
கன்றினையுடைய யானை நின்று காத்துத் தங்கியிருக்கின்ற
மிகுந்த இருள் பெருகிய அச்சம்தரக்கூடிய சிறிய நெறியில்
வரவேண்டாம், தோழியே! மலைச் சாரலின்
வேட்டுவன் எய்த முள்ளம்பன்றியின் கொழுத்த தசையை,
தேன் மணக்கும் கூந்தலையுடைய கொடிச்சி தான் அகழ்ந்தெடுத்த கிழங்குடன்
காந்தள் மலர்ந்துகிடக்கும் அழகிய சிறுகுடியினருக்குப் பகுத்துக்கொடுக்கும்
உயர்ந்த மலையைச் சேர்ந்தவன் - உன்மீது விருப்பம் கொண்ட அவன் -
				மேல்
# 86 பாலை நக்கீரர்

அறநெறியாளரே! வாழ்க! தோழி! படைவீரரின்
வேலின் இலை போல விரிந்த வெளிப்பகுதியாகிய மேல்தோலையுடைய,
பாண்டில் போன்று வெள்ளை வட்டமான, பகன்றை மலர்கின்ற
கடுமையான பனியையுடைய முன்பனிக்காலத்தில் நம்மைப் பிரிந்து நாம் நடுங்கிநிற்க, அழகு பொருந்தக்
கைவேலைப்பாட்டில் வல்லவனான கம்மியன் மணிகளைக் கோத்துச் செய்த
சுரிதகம் என்னும் அணியைப் போன்ற உருவத்தைக்கொண்டனவாகி, பெரிய
கோங்கின் குவிந்த முகைகள் மலர, ஈங்கையின்
நல்ல தளிர்கள் கண்டோர் ஆசைப்படும்படி வளைந்து அசையும்
முதிராத இளவேனில்காலத்தில் நம்மை நினைந்து வந்தவரான தலைவர் -
				மேல்
# 87 நெய்தல் நக்கண்ணையார்

நம் ஊரிலுள்ள மா மரத்தில் இருக்கும் முள் போன்ற பற்களைக் கொண்ட வௌவால்,
உயர்ந்த அழகிய கிளையில் தொங்கியவாறு துயிலும் பொழுதில்
வெற்றியுள்ள போரையுடைய சோழர் குடியினனான அழிசி என்பானின் அழகிய பெரிய காட்டின்
நெல்லிக்கனியின் அழகிய புளிச்சுவையைச் சுவைப்பதுபோல் கனவுகண்டாற்போன்று -
அது கழிகின்றது, தோழி! தலைவரின் நாட்டிலுள்ள
குளிர்ச்சியான அரும்புகள் உடைந்த, பெரிய அடிமரத்தைக் கொண்ட புன்னையின் தாதுக்கள்
கடல்துறையில் மேயும் சிப்பியின் ஈரமான முதுகில் உதிர்ந்துவீழும்
சிறுகுடியின் உள்ள பரதவரின் மகிழ்ச்சியையும்
பெரிய குளிர்ந்த கானற்சோலையையும் நான் நினைத்த பகல் பொழுது - 
				மேல்
# 88 குறிஞ்சி நல்லந்துவனார்

நாம் என்றோ செய்த அந்தப் பழைய செயலுக்காக ஏன் கலக்கமுறுகின்றாய்?
வருந்தவேண்டாம்! வாழ்க தோழியே! நாம் சென்று
சொல்லிவிட்டு வருவோம்! எழுவாயாக! பொருந்திய அலைகளையுடைய
கடலில் விளையும் அமுதமாகிய உப்பு மழைநீரை எதிர்கொண்டாற்போல
நீ உள்ளம் உருகி உருக்குலைவதைக்கண்டு அஞ்சுகின்றேன்; அங்கே பார்!
தனது தலைவன் நமக்குச் செய்த கொடுமைக்காக நம்மேல் பரிவுகாட்டி
நம்மீது அன்பு மிகவும் உடையதால், தன் வருத்தத்தைத் தாங்கிக்கொள்ளமாட்டாமல்
கண்ணீர் அருவியாகப் பெருகும்படி
அழுகின்றது தோழி! அவரின் பழங்கள் முதிர்ந்த குன்று -
				மேல்
# 89 முல்லை இளம்புல்லூர்க் காவிதி

கீழைக் காற்றினால் செலுத்தப்பட்டு, விண்ணிடத்து ஒன்றுகூடிச் செறிந்து
அலைகளின் பிசிர் போல மலைமுகடுகளில் மகிழ்ந்து ஏறி
ஒழுங்காக அமைந்து நிறைவுகொண்ட முற்றிய கருக்கொண்ட கரிய மேகங்கள்
மிக்க துளிகளைப் பெய்து ஒழிந்து, ஒழுக்கும் மழையைக் கொண்ட கார்காலத்தின் இறுதிநாளில்
பெரும் பனிக் காலத்தில் காய்க்கும் மயிர்கள் அமைந்த காய்களைக் கொண்ட உழுந்தின்
அகன்ற இலைகள் சிதையும்படி வீசி, நம்மை விட்டு நீங்காது
நாள்தோறும் நம்மைத் துன்புறுத்தும் அன்பில்லாத வாடைக்காற்று,
மேல் அலங்காரம் கொண்ட யானை அயர்ந்து பெருமூச்சு விட்டதைப் போன்று
இப்பொழுதும் வருகின்றதே! தோழி! இதுவரை வராதிருந்த
வன்கண்மையாளரான தலைவரோடு ஒத்த பண்புடைய
துன்பம் நிறைந்த மாலைப்பொழுதையும், தனிமைத்துயரையும் தன் முன்னால் எடுத்துக்கொண்டு -
				மேல்
# 90 மருதம் அஞ்சிலஞ்சியார்

ஆட்டங்களைக் கொண்ட திருவிழாவின் ஆரவாரம் உள்ள பழமையான ஊரில்,
உடைகளை ஆராயும் தன்மையில் பெரிதும் கைசோர்ந்துபோகாத
வறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த
சோற்றின் பழுப்புநிறக் கஞ்சி இட்ட சிறிய பூக்களைக் கொண்ட ஆடையுடன்
பொன்னாற்செய்த மாலை மார்பில் கிடந்து அசைய ஓடிவந்து,
பெரிய கயிறாகத் தொங்கும் கனத்த பனைநாரால் பின்னிப்பிணைக்கப்பட்ட ஊஞ்சலில்
பூப்போன்ற கண்களையுடைய தோழியர் ஆட்டிவிட ஆடாள்,
அழுதுகொண்டே அவ்விடம்விட்டுப் போகின்றாள் அந்த அழகிய சிலவான கூந்தலையும்
வறுமைகொண்ட பெண்ணைப்போன்று ஒருசில வளையல்களைக் கொண்ட இளையவளான பரத்தை;
ஊசலாட்டமாகிய மேற்கொண்ட செயலின் ஆரவாரத்தில் கூட்டுச்சேர்க்காத
அன்பு இல்லாத மக்களைக் கொண்டு
பயனற்றவராய் இருக்கின்றனரே, நம் தலைவனைச் சுற்றியிருப்போர் - 
				மேல்
# 91 நெய்தல் பிசிராந்தையார்

நீ உணர்ந்தாயன்றோ? தோழி! பூந்தாதுக்கள் உதிரும்படி
புன்னை பூத்திருக்கும் இனிய நிழல் பரந்த உயர்ந்த கரையுள்ள
ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடலில் துழாவித் தன் பெடையோடு
சேர்ந்து இரையைத் தேடும் அகன்ற பாதங்களையுடைய நாரை 
மெல்லிய சிறுகண்ணில் சிவந்த கடைக்கண்ணையுடைய சிறிய மீன்களைப் பிடித்து
மேலே ஓங்கி உயர்ந்த கிளையின் மீதிருக்கும் கூட்டிலிருந்து
தாயை அழைக்கும் குஞ்சுகளின் வாய்க்குள் கொடுக்கும்
கடற்கரைச் சோலையையும் அழகிய கொல்லைப்புறத்தையும் கொண்ட, குறையாத வளமிக்க கள்ளைப்
பெரிதும் நல்ல கொடையாகக் கொடுக்கும் நம் சிறுகுடி பொலிவுபெற,
பறவைகள் ஒலித்துச் சுழல்வதுபோன்ற பேரொலி கொண்ட மணிகளையுடைய மாலை அணிந்த
விரைந்து செல்லும் குதிரை பூட்டிய நெடிய தேரில்
நீண்ட கடற்கரைத்தலைவனாகிய நம் தலைவன் பகலில் இங்கு வருவதனை -
				மேல்
# 92 பாலை பெருந்தேவனார்

நம்மை நினைத்துப்பார்க்கமாட்டாரோ? தோழி! தன் துணையோடு
வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி
வரிகள் உள்ள பெருங்குரும்பையின் குருத்துப்போல வாடி, அங்குள்ள
வறண்ட நிலத்தில் பொருந்திக்கிடக்கும் குன்றத்தின் உச்சியிலுள்ள சரிவில் உள்ள
வேட்டுவர்களின் சிறிய ஊரில் உள்ள அகன்ற வாயையுடைய கிணற்றிலிருந்து
பயன்தரும் ஆநிரைகளுக்காக எடுத்து வைத்த தெளிந்த நீருள்ள தொட்டியில்
புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை தன் கன்றுடன் வேட்கைதீர
பத்தரின் மூடியான வில்பொறியைத் தூக்கிப்போட்டு நீர்குடிக்கச்செய்து அகன்றுசெல்லும்
கொல்லும் தொழிலையுடைய ஆண்யானைகளைக் கொண்ட வறண்ட நிலத்தின் வழிச் சென்றோர் -
				மேல்
# 93 குறிஞ்சி மலையனார்

தேனடைகள் தொங்க, பெரிய பழங்கள் குலைகுலையாய்ப் பழுக்க,
மலையிலுள்ள வெண்மையான அருவி மாலை போல இறங்கிவர,
பயிர்மணிகள் எல்லாம் நிலங்களில் விதைக்கப்பெற, எந்நாளிலும்
வளப்பம் கொண்டது இந்த மலைகள் பொருந்திய மலைத்தொடர் என்று
இதனை விட்டுப் பிரிந்தோர் எண்ணி வருந்தும் பெரிய மலைநாடனே!
நாங்கள் செல்கின்றோம்! நீயும் எழுந்திருப்பாய்! சிறந்து விளங்குக உன் வாழ்நாட்கள்;
பக்கங்களை மறைத்த திருந்திய அணிகலன்களால் பெரிதாய்த் தோன்றும் தோள்களையும்,
மெலிந்துபோன இடையையும், மெல்லிய இயல்பினையும் கொண்ட இளமகளின்
பூண்கள் தாழ்ந்த மார்பு நாணம் துன்புறுத்துவதால் வருத்தமுற்ற
மெலிவடைந்து நிறமாற்றம் பெற்றன; ஆதலால் ஒலிக்கின்ற குரலையுடைய
மயிர்சீவாத தோல் போர்த்த கண்ணையுடைய மணமுரசின் ஒலியைக் கேட்பதற்கு முன்
இவளிடம் உயிர் இருக்கும்படியான ஒரு குறிப்புத் தோன்றக் காணப்பெறுதல் அரிதே!
				மேல்
# 94 நெய்தல் இளந்திரையனார்

காம நோய் அலைத்தலால் கலங்கிப்போய் வலிமை அழிந்த வேளையில்
அன்பான மொழிகளைக் கூறுதல் ஆண்மகனுக்குச் சிறந்த பண்பாகும்;
நானோ எனது பெண்மையுணர்வு தடுக்க அந்நோயை வெளிப்படுத்தாதவாறு தாங்குகிறேன்;
கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத
தூய்மைசெய்யாத பசுமுத்தைப் போல குவிந்த கொத்துக்களையுடைய
புன்னை மரம் அரும்புவிட்டிருக்கின்ற புலவுநாறும் கடற்கரைத் தலைவனான தலைவன்
என்னவிதமான ஆண்மகனோ? தோழி! தன்பால்
பேரன்பு உடையவராகி,
தன் மார்பைத் தழுவும் வேட்கையால் துன்பப்படுவோரை அறியாத அவன் -
				மேல்
# 95 குறிஞ்சி கொட்டம்பலவனார்

குழல்கள் பக்கத்தே இசைக்க, பலவகை இன்னிசைக் கருவிகள் முழங்க,
ஆட்டக்காரியான கழைக்கூத்தி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றில்
அத்தியின் இனிய கனி போன்ற சிவந்த முகத்தையும்,
பஞ்சுத்தலையையும் கொண்ட குரங்கின் வலிய குட்டி தொங்க,
பெரிய பாறையின் கண்ணுள்ள மூங்கில் மீது ஏறி விசைத்து எழுந்து
குறவர்களின் சிறுவர்கள் தாளம் கொட்டும் அந்தக்
குன்றின் அகத்தது கூட்டமான காவற்காடு சூழ்ந்த சிற்றூர்;	 
அந்தச் சிற்றூரைச் சேர்ந்தவள் மணங்கமழும் கூந்தலையுடைய கொடிச்சியாகிய என் தலைவி;
அந்தக் கொடிச்சியின் கையிலே உள்ளது வேறொருவர்
விடுவிக்க முடியாதவாறு அவளால் பிணிக்கப்பட்ட என் நெஞ்சு.
				மேல்
# 96 நெய்தல் கோக்குளமுற்றனார்

இதோ இங்கிருப்பது, நறிய பூக்களைக் கொண்ட ஞாழலின் பெரிய மலர்கள் பரவி,
புன்னை மரங்கள் அடர்ந்துகிடக்கும் வெள்ளை மணலுக்கு ஒருபக்கமாக
முதன்முதலாய் நாங்கள் சந்தித்துக்கொண்ட சோலை; இதற்குச் சற்று அப்பால் இருப்பது,
பொங்கியெழுந்து முழங்கும் கடல் அலையில் நம்மோடு கடலிற்குளித்து
முதுகில் தாழ்ந்து கருத்த ஒளிரும் திரண்ட கூந்தலைத்
துவட்டி நமக்கு அருள்செய்த கடல்துறை; அதற்கும் அப்பால் அங்கே இருப்பது,
வளைந்த கழியினில் உயர்ந்த நீண்ட தண்டினைக் கொண்ட நெய்தல் மலரோடு
அழகிய மாறுபட்ட நெறிப்பையுடைய தழையை எனக்கு அழகுபெற உடுப்பித்து
தனித்தவராய்ச் சென்றுவிட்ட கடற்கரைச் சோலை என்று அங்கு
நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் மனம் உருகி
மெல்ல மெல்லப் பசலைபூத்தாய் பசப்பே!
				மேல்
# 97 முல்லை மாறன் வழுதி

நெடுங்காலம் இருக்கும் விழுப்புண்ணின் மெல்லிய மேல்தோலையுடைய வாய் காய்ந்துபோகாத
துன்பத்தையுடைய மார்பினில் வேலை எறிந்தது போல்,
பிரியாமல் இருக்கும் நிலையிலும் தனித்திருந்து கூவும் குயிலைக் காட்டிலும்
தெளிந்த நீர் பெருகிவரும் ஆறு மிகவும் கொடியது;
அதனைக் காட்டிலும் கொடியவள் அவள் - வலிமையற்ற
பஞ்சினை உச்சியில் கொண்ட இதழ்களைக் கொண்ட பைங்குருக்கத்தி மலருடன்
பிச்சிப்பூவையும் கலந்த மலரை விலைக்கு வேண்டுமா என்று கூவிக்கொண்டு
வண்டுகள் சூழ்ந்து மொய்க்கும் வட்டிலைக் கொண்டிருப்பவளாகிய, தெருவில் திரியும்
பூந்தோட்டத்து உழவரின் தனித்த இளைய மகள் -
				மேல்
# 98 குறிஞ்சி உக்கிரப்பெருவழுதி

முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட,
வயலில் மேயும் விருப்பமுள்ள, சிறிய கண்கள் உள்ள, பன்றியானது,
உயர்ந்த மலையிலுள்ள அகன்ற கொல்லையில் சென்று மேயும்பொருட்டு, விலங்குகளைப் பிடிக்கும் பெரிய பொறியின்
சிறிய வாசலில் நுழையும் பொழுதில், விரைவாக
அருகே பக்கத்திலிருக்கும் பல்லி ஒலியெழுப்பினதாக
மெல்ல மெல்ல பின்னே நகர்ந்துவந்து, தன்
கல் குகையான தங்குமிடத்தில் படுத்துக்கொள்ளும் மலைநாட்டைச் சேர்ந்தவனே!
எமது தந்தை பேணும் காவலுடைய அகன்ற மாளிகையின்
தூங்காமல் காவல்காக்கும் காவலர் சோர்ந்துபோகும் வேளை நோக்கி
இரவில் வந்து என்னைச் சந்தித்துச் செல்வதைக் காட்டிலும் கொடுமையானவை,
நாள்தோறும் உன் வரவை எண்ணிக் கண்ணிமைகள் ஒட்டாத
கண்களும், உன்னோடு சென்றுவிட்டுத் திரும்பி வராத என் அன்பற்ற நெஞ்சமும் -
				மேல்
# 99 முல்லை இளந்திரையனார்

ஈரப்பசை இல்லாமல் முற்றிலும் வறண்டுபோன கடக்கமுடியாத நீண்ட வெளியில்
வெள்ளை ஆடையை விரித்துவிட்டாற்போன்ற வெயில் தகிக்கும் வெப்பத்தால்
அச்சம் தரும்படி நடுக்குகின்ற கொடுமையான பாலைநிலக்காட்டில் சென்றோர்
தான் திரும்பி வருவேன் என்று தெளிவாகக் கூறிய பருவம் மிக்க அழகிதாக
வந்திருக்கும் இதுவோ என்று கேட்கிறாய் மடந்தையே! அறிவில்லாது
இது கார்காலமென்பதனை மறந்து, கடல் நீரை முகந்த நிறைவான சூல்கொண்ட கரிய மேகங்கள்,
அதனைத் தாங்கமாட்டாது கொட்டித்தீர்த்த பெருமழையைக்
கார்காலத்து மழை என்று பிறழக்கருதிய உள்ளத்தோடு, தேர்ந்தறியும் அறிவு இல்லாதனவான
பிடவமும், கொன்றையும், காந்தளும்
மடமையுடையனவாதலால் மலர்ந்துவிட்டன பலவாக -
				மேல்
# 100 மருதம் பரணர்

நினைத்து நினைத்துச் சிரிக்கின்றேன் தோழி! பெரிய நகங்களைக் கொண்ட
கார்காலத்துக் கொக்கின் கூம்பின நிலையைப் போன்று
ஆழமான நீரில் முளைத்த ஆம்பல் பூவையுடைய குளிர்ந்த துறையையுடைய ஊரன்
இனிதாய்க் கமழும் என் கூந்தலைப் பற்றி இழுத்து, என் கையிலுள்ள
நீண்டு திரண்டு ஒளிபொருந்திய வளையல்களைக் கவர்ந்த தகராறினால்
வெளியில் கோபங்கொண்ட முகத்தோடு, உள்ளத்தில் கோபமில்லாது, சென்று உனது
மனைவிக்கு உரைப்பேன் என்று சொன்னதினால், ஊர் முனையிலுள்ள
பல பசுக்களின் நீண்ட வரிசையை வில்லினால் போரிட்டுக் கவர்ந்து செல்லும்
தேர்களைக் கொடையாகக் கொடுக்கும் மலையன் என்பானின் முன்பு, பெரிய இசையையுடைய
வேற்றுநாட்டுக் கூத்தர்கள் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின்
கரிய சாந்து பூசப்பட்ட முகப்பைப் போன்று அதிர்ந்துபோன
அந்த நல்லவன் நடுங்கிப்போய் துன்புற்ற நிலையினை -
				மேல்

 


# 101 நெய்தல் வெள்ளியந்தின்னனார்

முற்றாத இளம் மஞ்சள்கிழங்கின் பசிய மேற்புறத்தைப்போலச்
சுற்றிலும் அமைந்த சொரசொரப்பையுடைய, சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின்
கூட்டமான குவியல் வெயிலில் காயும் வகையை ஆராய்ந்து
புன்னைமரத்தின் அழகிய மிகுதியான நிழலுக்கு முன்பாகப் போட்டுப் பரப்பிவிட்டிருக்கும்
கடற்கரைத் துறைக்கு அண்மையில் இருந்த குடியிருப்பும் தங்குவதற்கு மிகவும்
இனிதாக இருந்தது; இப்போது இரங்கத்தக்கதாய் இருக்கின்றது; வருத்தம் தீர்ந்ததாய்
அகன்ற அல்குலையும் மெல்லிதாக அமைந்த இடையினையும் உடைய
மீன் பிடிக்கும் பரதவரின் இளமைமிக்க மகளின்
மானைப்போன்ற மருண்ட பார்வையைக் காண்பதற்கு முன்பாக -
				மேல்
# 102 குறிஞ்சி செம்பியனார்

வளைந்து நிற்கும் தினைக்கதிர்களைக் கொய்து உண்ணும் சிவந்த வாயையுடைய பைங்கிளியே!
அஞ்சுவதைத் தவிர்த்து, மிகுதியான தினையை உண்டு
உன்னுடைய தேவையைத் தீர்த்துக்கொண்ட பின்னர், என்னுடைய தேவையையும்
தீர்த்து வைக்க வேண்டும்! கைகூப்பி வேண்டிக்கொள்கிறேன்,
பலவாய்க் காய்த்திருக்கும் பலாமரங்கள் உள்ள சாரலையுடைய அவரின் நாட்டிலுள்ள
உன் சுற்றத்தின் பக்கம் செல்வாய் ஆயின்
அந்த மலையின் உரிமையாளனுக்குச் சொல்வாயாக! இந்த மலையின்
கானக் குறவரது இளமை மிக்க மகள்
தினைப்புனத்திற்குக் காவலாக இருக்கிறாள் என்று -
				மேல்
# 103 பாலை மருதனிளநாகனார்

ஏதாவது ஒன்றை முடிவுசெய்து உரைப்பாயாக என் நெஞ்சே! புன்மையான காம்பில்
சிறிய இலையையுடைய வேப்பமரத்தின் பெரிய கிளைகளை முறித்துப்போட்டு
மதத்தால் செருக்குண்ட கடும் சினத்துடன் கூடிய வலிமையையுடைய
களிறு நின்றுகொண்டிருந்து அகன்ற நல்ல நீர் அல்லாத சிறுநீரினால் உண்டான ஈரத்தில்
பால் வற்றிப்போன தோலாகிய முலையையுடைய அடிவயிற்றை நிலத்தில் கிடத்தி
பசி வருத்துவதால் சுருண்டுகிடக்கும் பசிய கண்ணையுடைய செந்நாயின்,
குறிதப்பாத வேட்டையை மேற்கொண்டு சென்ற, கணவனான ஆண்நாய்,
தன் அன்பில் பொய்க்காத மரபினையுடைய தன் பெண்நாயை நினைத்து வருந்துகின்ற
புதிய வழித்தடமான கொடிய பாலைநிலத்தில் வருந்துகின்றேன் நான்!
மேற்கொண்ட பொருளீட்டும் செயலுக்காக மேலும் செல்வோம் என்றாலும்,
மீளவும் வீட்டுக்குத் திரும்புவோம் என்றாலும் நீ முடிவெடு -
				மேல்
# 104 குறிஞ்சி பேரிசாத்தனார்

அழகிய வரிகளையுடைய புலியின் பிளந்த வாயையுடைய ஆண்
தேன் மணக்கும் மலைச் சாரலில் களிற்றோடு போரிட்டால்
குத்துப்பாறையின் உச்சியில் ஏறி நின்று ஆபத்திற்கு அஞ்சாது
குறவர்களின் சிறுவர்கள் ஆர்வத்தோடு முழக்கிய
தொண்டகச் சிறுபறையின் தாள ஓசை, அருகிலிருக்கும்
பசிய தாளையுடைய செந்தினையின் கதிர்கள் மீது படியும் கிளிகளை விரட்டும்
ஆரவாரம் நிரம்பிய மலைநாட்டினனைத் தழுவுவதை விரும்பி இருக்கும்
என்னை அன்றியும் வேறு யாரும் இருக்கிறார்களோ? நள்ளிரவில்
பாம்புகளை உடைய மலைப் பிளவுகளையுடைய உயர்ந்த மலைகள் ஒளிர்ந்து மின்னும்படியாக
இடியேறு சினந்து இடிக்கும் பொழுதோடு, பெருவெள்ளம்
கடக்க முடியாதபடி குறுக்கிட்டுக்கிடக்கும் மலைச் சாரலில்
கண்ணுக்குத் தெரியாத சிறிய வழியை நினைத்துக்கொண்டிருப்பவர் -
				மேல்
# 105 பாலை முடத்திருமாறன்

காய்ந்த கொடிகள் வலப்பக்கமாய்ச் சுற்றி வளைத்த முள்ளுள்ள அடிமரத்தைக்கொண்ட இலமரத்தின்
ஒளிரும் கிளைகள் நடுங்கும்படி வீசி, அவை முறிந்துபோகுமாறு
கொடிய காற்று மோதியடிக்கும் மூங்கில்கள் அடர்ந்திருக்கும் வழிப்பக்கத்தில்
கடிய நடையையுடைய யானை தன் கன்றுடன் வருந்த
நெடுகிலும் நீர் அற்ற நிழலே இல்லாத அவ்விடம்
கடத்தற்கு அரிய கிளை வழிகளையுடையதாயிருக்கும் என்று கருதமாட்டாய்; நெடுந்தூரம்
வந்துவிட்டாய், வாழ்க நீ நெஞ்சே! குட்டுவனின்
மேற்கு மலையிலிருக்கும் சுனையிலுள்ள கரிய இதழ்களையுடைய குவளையின்
வண்டுகள் மொய்க்கும் பெரிய மலரும் பூவைப் போன்று கமழும்
அழகிய சிலவான கூந்தலையுடைய தலைவி தீர்க்கமுடியாத துயரம் கொள்ளும்படியாக -
				மேல்
# 106 நெய்தல் தொண்டைமான் இளந்திரையன்

அறிந்திருக்கவும் செய்வாயோ? பாகனே! பெரிய கடலின்
மோதுகின்ற அலைகள் குவித்துச் சேர்த்த மணல் மேடுகள் மணம் கொள்ளுமாறு
அங்குமிங்கும் அலைந்துதிரியும் புள்ளிகளைக் கொண்ட நண்டுகள் ஓடுவனவற்றைப் பிடிக்க மாட்டாது
சோர்வுற்று அதன் மீது விருப்பம் நீங்கிய குற்றமற்ற சிறுமகளுக்காக
வருத்தமுற்றவனாய் அவளிடம் சென்று நான் எனது உள்ளத்துக் காமநோயைப் பற்றிக் கூற
அதற்கு மறுமொழி சொல்வதற்கும் முடியாதவளாய், மணமிக்க மலர்களையுடைய
ஞாழலின் அழகிய கிளையின் தாழ்ந்திருக்கும் பூங்கொத்தினைக் கோதிவிட்டு,
இளந்தளிரை அதனுடன் சேரப்பிசைந்து உதிர்த்துவிட்ட கையினளாய்
அறிவு மயக்கமுற்றவளின் அழகிய மடப்பத்தின் நிலையை -
				மேல்
# 107 பாலை பெருவழுதியார்

நினைக்கும்போதெல்லாம் சிரிக்கின்றேன் தோழி! பெருத்த நகங்களைக் கொண்ட
பெண்யானை பிளந்துபோட்ட நார் இல்லாத வெண்மையான கிளைகளில்
பற்றுக்குறடு போன்ற காய்களையுடைய வெள்ளிய பூங்கொத்துகளையுடைய பாலை மரத்தின்,
வீசுகின்ற காற்று தூக்கி அசைத்ததால் இலையெல்லாம் உதிர்ந்துபோன நெற்றுக்கள்
பாறையிலிருந்து வீழ்கின்ற அருவியைப் போல ஒல்லென்று ஒலிக்கும்
புன்மையான இலையையுடைய ஓமை மரங்களுடைய புலிகள் நடமாடும் கடிய பாதையில்
சென்ற நம் காதலரின் வழிவழியே தொடர்ந்து சென்ற
நம் நெஞ்சமே நற்பேறு பெற்றதாகும்; இங்கு அவரைப் பிரிந்து
குன்றாத பழிச்சொற்களால் சூழப்பட்ட
நானே, தோழி! நோய்வாய்ப்பட்டிருக்கின்றேன்.
				மேல்
# 108 குறிஞ்சி குறிஞ்சி இளவேட்டனார்

மலைக்கு அயலாக செழித்துவளர்ந்த கரிய நிறங்கொண்ட தினைப்புனத்தில்
தன் துணையினின்றும் பிரிந்த கொடிய யானை
அணுகுவதைக் கண்ட அழகிய குடியிருப்பின் கானவர்
அம்புகளோடும், கிணைப்பறையோடும், கையில் கட்டப்பட்ட கவண்களோடும்
பிறரை உரக்க அழைப்பவராய் தமது குடியின் புறத்தே ஆரவாரிக்கும் நாட்டினனே!
பழகிப்போனவர் பகைவரென்றாலும் அவரைப் பிரிதல் இன்னாதது;
முல்லை மொட்டுக்களைப் போன்ற அழகிய ஒளிவிடும் பற்களைக்கொண்ட இனிய நகையினளான தலைவியின்
சுடர் போன்ற ஒளியையுடைய அழகிய நெற்றியில் பசலை ஊருமாறு
நீ அவளது தொடர்பினை எவ்வாறு துறந்தாய்? நோகின்றேன் நான்.
				மேல்
# 109 பாலை மீளிப் பெரும்பதுமனார்

ஒன்றாகவே இருப்போம் என்று கூறிய தொன்றுபட்ட நட்பினுக்குரிய
காதலர் பிரிந்தார் என்று கலங்கி மனம் மயங்கி
அப்படிப்பட்டதுவோ இந்த நல்ல நெற்றியையுடையவளின் நிலை என்று
கேட்டுக்கொண்டேயிருக்கும் அலங்கரித்த அணிகலன்களையுடையவளே! கேட்பாயாக, இப்பொழுது
சொல்லமுடியாத துன்பம் இம்மென்று விரைந்து பீடிக்க,
ஒலிக்கும் வாடைக்காற்று வீசும் இருள் படர்கின்ற பொழுதில்
மழைத்துளிகளைக் கொண்ட தொழுவத்தில் வேறு இடத்தில் கட்டுவதற்குரித்தான எல்லையில்
உச்சிப்பக்கமாகக் கயிற்றால் கட்டப்பட்ட கூழைப்பசுவின்
நிலையைப் போன்று யானும் தன்னந்தனியாய் ஒருத்தியாக இருந்து
வருத்தமுறும்படியாகக் கழிந்துபோகும் இந்தப் பகல் முடியும் அந்திப்பொழுது.
				மேல்
# 110 பாலை போதனார்

தேன் கலந்த நல்ல சுவையையுடைய இனிய பாலை,
விரிந்து ஒளிவிடும் பொன்னால் ஆன பாத்திரத்தில் இட்டு அதனை ஒரு கையில் ஏந்திக்கொண்டு
அடித்தால் சுருண்டுகொள்ளும் மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை,
'குடி' என்று உயர்த்திப்பிடிக்க, அதினின்றும் தப்பிப்பிழைக்க, தெளிவான தன்மையுள்ள
முத்துக்களைப் பரல்களாகக் கொண்ட பொற்சிலம்பு ஒலிக்கத் தத்தித்தத்தி ஓடி,
மென்மையான நரைக்கூந்தலையுடைய செவ்விய முதுமையையுடைய செவிலியர்
ஓடித் தளர்ந்து தம் முயற்சியைக் கைவிட, பந்தல்கால்களுக்கிடையே ஓடி
செவிலியரின் கெஞ்சலை மறுக்கும் சிறிய விளையாட்டைச் செய்பவள்,
இல்லறத்துக்குரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எங்கிருந்து கற்றுக்கொண்டாளோ?
தன்னைக் கைப்பிடித்த கணவனின் குடும்பம் வறுமை அடைந்ததாக,
தன்னைக் கைப்பிடித்துக்கொடுத்த தந்தை வீட்டின் மிகுதியான சோற்றினை நினைத்துப்பார்க்கமாட்டாள்,
சிறிதாக ஓடும் நீரில் நுண்ணிய வளைவுவளைவான கருமணலைப் போல
வேண்டும்பொழுது உண்ணாமல் கிடைக்கும்பொழுது உண்ணும் சிறிய கற்புவலிமையுடையள் ஆயினள்.
				மேல்
# 111 நெய்தல் உலோச்சனார்

வறண்ட பாலைநில வழியிலுள்ள இலுப்பை மரத்தின் பூவைப் போன்ற
மென்மையான நார்களைத் தலையில் கொண்ட இறால் மீனோடு தொகுதியான மீன்களையும் பிடித்துவர
பின்னி வரிந்த வலையையுடைய பரதவரின் வன்மைமிக்க தொழிலையுடைய சிறுவர்கள்
மரல்கள்ளியின் மேலேறி நின்று மான் கூட்டங்களைத் தடுக்கும்பொருட்டு
கொடிய ஆற்றலையுடைய இளைஞர்கள் வேட்டைக்கு எழுந்தாற்போல
படகின்மீது ஏறிக்கொண்டு அலைகளாகிய பாதைகளில் கடந்துசென்று
வாள் போன்ற வாயையுடைய சுறாமீனொடு வலிய பிற மீன்களையும் வாரிக்கொண்டு
நிணம் ஒழுகும் தோணியராய்த் தாழ்ந்துவிழும் மணல்மேட்டினின்றும் இறங்கிவரும்
பெரிய கழியினைச் சேர்ந்த குடியிருப்பில் கல்லென்னும் ஒலிபிறக்க
வருமே தோழி நம் தலைவனது தேர்.
				மேல்
# 112 குறிஞ்சி பெருங்குன்றூர்க்கிழார்

விருந்து என்ன படைப்போம் தோழி! மலைச்சாரலில்
அரும்புகள் முற்றிலும் இல்லாமல் மலர்ந்த கரிய அடிப்பகுதியையுடைய வேங்கை மரத்தில்
வண்டுகள் ஒலியெழுப்பும் அடுக்குமலைகளில் உள்ளவை அஞ்சிநடுங்க, களிற்றினைக் கொன்று
அச்சமற்ற உள்ளத்தையுடைய சிங்கம் நடமாடும்
பெரிய மலைப்பகுதியைச் சேர்ந்த நாட்டினனின் வரவினை அறிந்து, அதனை விரும்பி
கரிய கடலின் நீரை முகந்துகொண்டு, நீலமணியின் நிறத்தைக் கொண்ட அருவியிலிருந்து
கீழே விழும் நீர் அகன்ற இடமெல்லாம் புதைபடுமாறு பரவ,
விட்டுவிட்டு ஒளிரும் மின்னலால் மலையே இமைப்பதுபோல் மின்னி,
ஒலிக்கின்ற வலிய இடியுடன் செறிவாகக் கலந்துவந்த இந்த மழைக்கு -
				மேல்
# 113 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்

மானானது அண்ணாந்து உண்ட, பக்கத்தில் வளைந்து நிற்கும் உயர்ந்த கிளைகளையுடைய
புன்மையான அடிப்பகுதியையுடைய இலந்தை மரத்தின் பொதிந்த மேற்பகுதியையுடைய பசிய காய்கள்
கற்கள் நிரம்பிய சிறிய வழியில் மிகுதியாகப் பரவிக்கிடக்கும்
பெரிய காட்டினைக் கடந்துவந்தும் இங்கு என் முன்னே அடைய வந்தன -
அரிய செயலான பொருளீட்டுதலைக் கருதி நாம்
செல்கின்றோம் மடந்தையே! என்று கூறியவுடன், அவள் தன்னுடைய
நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்களில் வருத்தம் மிக,
பின்னப்பட்ட கரிய கூந்தலை விரித்து அதற்குள் தன் முகத்தை மறைத்துக்கொண்டவளாய்ப் பெரிதும் வருந்தி
உதியன் என்பான் சினந்து சென்ற ஒலிக்கின்ற இடத்தையுடைய போர்க்களத்தில்
இம்மென்று விரைவாக பெருங்களத்துக் குழலூதுவோர் ஊதுகின்ற
ஆம்பல் குழலின் இசையைப் போல் ஏங்கி
கலங்கித் துன்பத்தை அடைவோளின் தனிமை வருத்தத்தைக் கொண்ட பார்வை -
				மேல்
# 114 குறிஞ்சி தொல்கபிலர் 

வெண்மையான கொம்பினை வெட்டி எடுத்து அகன்ற பாறைகளில் வைக்கவும்,
பசிய ஊனைத் தோண்டியெடுத்து பெரிய நகத்தினைப் புதைத்துவைக்கவும்,
தெருக்கள்தோறும் புலால் நாற்றம் கவியும் சிறுகுடியில் எழும் ஆரவாரத்தை
விடியவிடியக் கேட்டு வருந்தினேன்;
அது பெரிதும் இரங்குதற்குரியது தோழி! இரவினில்
வந்திருந்தான், உறுதியாக, மலைநாட்டைச் சேர்ந்தவன்,
துளிகளாகப் பெய்த மழை பொறித்த புள்ளிகளைக் கொண்ட, தொன்மையான கரையை
மோதும் அலைகளோடு மேலெழுந்து பெருகி வரும் ஆற்றினை நினைத்து அஞ்சுகிறேன்;
மிகுந்த ஓசையுடைய இடியின் பேராரவாரத்தைக் கொண்ட பெருத்த இடிமுழக்கம்
பாம்பிற்கு அழகாக விளங்கும் அதன் படத்தை அழிக்கின்ற, உயர்ந்த மலைமேல் மோதிக்
கரிய இளம் பெண்யானை வருந்துமாறு
தன் துதிக்கையை ஊன்றி இறங்குகின்ற களிற்றினைத் தாக்கிக் கொல்ல -
				மேல்
# 115 முல்லை அம்மள்ளனார்

அகன்று விரிந்த பொய்கையின் பூக்களைப் பறித்துத் தளர்ந்ததால்
சோர்வடைந்த தோழியர் கூட்டம் இனிதாகக் கண்ணுறங்க,
அன்னையும் சிறிது சினம் தணிந்து மெல்ல மூச்சுவிடுகிறாள்; இனிய தன்மையினைக்கொண்ட
பரந்த கடலின் நீரை வாயினால் எடுத்துக்கொண்டு அதனைச் சிறிதளவு நீரே என்னும்படி,
மயிலின் பாதத்தைப் போன்ற இலைகளையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சி,
வீட்டிலே நட்ட மௌவலோடு சேர்ந்து நன்கு வளர்ந்த மொட்டுக்கள் மலரும்படி,
கார்காலம் எதிர்ப்பட்டது; இப்பொழுது நம் காதலர்
மிகவும் தொலைவிலுள்ள நாட்டிலிருப்பவர் என்றாலும், நம்மீது மிகவும் அதிகமான
அன்புடையவர், வாழ்க தோழியே! பெரிய புகழைக்
குறைவின்றிப் பெற்றாலும் நம்மைத் தவிர்க்கமாட்டார்;
கேட்கிறேன் அல்லவா! வானத்தின் முழக்கத்தை.
				மேல்
# 116 குறிஞ்சி கந்தரத்தனார்

தீமை காணப்பட்டாரிடத்தும், பெரியவர்கள்
தாமாக அதனை ஆய்ந்து உணரவேண்டும் என்று சொல்வார்கள்,
தன் வயிற்றிலுள்ள கருவாகிய பிண்டம் அழிந்து வெளியேவந்து விழும்படியாக
பெரிய மூங்கிலில் முளைத்த வேல்முனையைப் போன்ற தலையைக் கொண்ட கொழுத்த முளைகளை
சூல் முதிர்ந்த இளம்பெண்யானை காலையில் மேய்ந்துண்ணும்
மலைப்பகுதியைச் சேர்ந்த நாட்டினனுடைய நட்பு, பலாவின்
பெரிய கிளையைவிட்டு விழுந்த காய்த்து முதிர்ந்த பெரிய பழம்
மலைப்பிளவில் உள்ள பொந்தினில் விழுந்து அழுகிப்போனதைப் போல், உறவு அற்றுப்போய்
பலநாட்களுக்கும் முன்னரே அழிந்துபோயிற்று; அதனை அறியாமல்
பெரிய மலைப் பக்கத்திலுள்ள இருள் செறிந்த குவட்டில் உள்ள 
குறிஞ்சியில் உள்ள நல்ல ஊரின் பெண்டிர்
இன்னும் நிற்காமல் கூறுகின்றனர் என்மேல் பழிச்சொற்களை.
				மேல்
# 117 நெய்தல் குன்றியனார்

பெரிய கடல் முழக்கமிட, கடற்கரைச் சோலையின் பூக்கள் மலர,
கரிய கழியில் இருக்கும் நீர்ப்பெருக்கு வீட்டின் எல்லையைக் கடந்து பொங்கிவர,
வளமையான இதழ்களையுடைய நெய்தல் பூ குவிந்துநிற்க, பறவைகள் ஒருசேர
மணக்கும் பூக்களையுடைய சோலைகளில் உள்ள தம் கூடுகளில் அடைய,
மேற்கில் சென்ற ஞாயிறு தன் ஒளி மங்கிப்போய், சிவந்துபோன வளைந்த வான மண்டிலத்தில்
மலையைச் சேர்ந்து நெருங்கி துன்பமடைந்து நடுங்க,
தனிமைத் துயரோடு வந்த இழிந்த மாலைப்பொழுது,
அங்கேயிருப்பவர் என்னை எண்ணிப்பாராதவராயிருக்க, கழிந்துகொண்டிருந்தால், பல நாட்கள்
வாழமாட்டேன் வாழ்க தோழியே! என்னிடமுள்ள
நோய் வேறொன்று என்று கூறுகிறார்கள்,
பழியை வேறொன்றின்மீது போடுதல் பண்புடைய செயல் இல்லை அல்லவா?
				மேல்
# 118 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஆற்றை அடுத்துள்ள கரையிலுள்ள மாமரத்தின் ஆடுகின்ற கிளைகள் பொலிவுற்று விளங்க
தளிர்கள் அழகாய் அமைந்த குளிர்ந்த நறிய சோலையில்
தன் ஆணோடு சேர்ந்த சிவந்த கண்ணையுடைய கரிய பேடைக்குயில்
விருப்பத்துடன் ஒன்றற்கொன்று எதிர்க்குரல் எழுப்பிக் களிக்கும் பூக்கள் நிறைந்த இளவேனிற்காலத்திலும்
முன்பு நம்மைப் பிரிந்துசென்றவர் உறுதியாக நம்மை மறந்துவிட்டார் என்று
வருத்தம் வியாபிக்க மனமுடைந்த நிலைக்கு மேலும், கைகூடிய தொழில்திறமுடைய
ஓவியர்கள் ஒளிவிளங்கும் அரக்கினைப் பூசிய
வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரியின்
வெண்மையான இதழ்களையுடைய மலர்களில் வண்டுகள் மொய்க்கும்படி ஏந்திக்கொண்டு
புதிய மலர்களைத் தெருக்கள்தோறும் கூவிவிற்கும்
அயலூர்ப்பெண்ணைக் காணும்போது நோகின்றது என் நெஞ்சம்.
				மேல்
# 119 குறிஞ்சி பெருங்குன்றூர்க் கிழார்

தினையை உண்ணும் காட்டுப்பன்றி வெருண்டு ஓட, தினைப்புனத்தான்
சிறிய பொறியைப் பொருத்தி வைத்த பெரிய கல்லிலான சாய்வுப்பலகையில்
ஒளிரும் நிறமுடைய வலிமையான புலி மாட்டிக்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவன்
யார் கூறியதால் நம்மிடம் வந்தானெனினும் ஆகுக; கொல்லைப்புறத்தில்
இனிய முசுவின் பெரிய ஆண்குரங்கு நன்கு மேய்ந்து உணவை உட்கொள்ளும்
பலவகை மலர்களோடு வரும் காட்டாற்றுக்கு அப்பால், கரிய கலைமான்
கூட்டமான வரையாடுகளுடன் சேர்ந்து தாவிக்குதித்து விளையாடும்
பெரிய மூங்கிற்புதரின் நிழலில் வந்திருக்கும் அவன், காட்டு மல்லிகையுடனே
கூதளத்து மலரையும் நெருக்கமாய்ச் சேர்த்துக்கட்டிய தலைமாலையை உடையவன் ஒருபோதும்
என்னுடைய தழுவுதலைப் பெறமாட்டான்
என்மீது பிணக்குக் கொண்டாலும் கொள்ளட்டும், தன் மலையைக் காட்டிலும் பெரிதாக.
				மேல்
# 120 மருதம் மாங்குடி கிழார்

அகலமான கொம்புகளையுடைய எருமைகளின் இள நடையினைக் கொண்ட கன்றுகள்
தூண்கள்தோறும் கட்டப்பட்ட காண்பதற்குத் தகுந்த நல்ல இல்லத்தில்
வளைவான குழைகளை அணிந்த செழுமையாக அமைந்த பேதையானவள்
சிறிய மோதிரத்தை இறுக்க அணிந்திருந்த மெல்லிய விரல்கள் சிவந்துபோகும்படி,
வாளை மீனின் ஈரமான நீண்ட துண்டை சிரமப்பட்டு நறுக்கி
அதைச் சமைத்தலால் புகை படிந்த சிவந்து மாறுபட்ட கண்களையுடையவளாய், அழகுறத் தோன்றிய
பிறை போன்ற நெற்றியில் துளிர்த்த சிறிய நுண்ணிய பலவான வியர்வைத்துளிகளைத்
தன் அழகிய சேலைத் தலைப்பில் துடைத்துக்கொள்பவள் நம் மீது பிணக்கு கொண்டு
அடுப்படியிலிருக்கிறாள் அழகிய மாமைநிறத்தவளான பெண்மணி -
எமது வீட்டுக்கு வருவாராக விருந்தினர், கண்சிவப்பு மறைந்து
சிறிய முள்போன்ற பற்கள் தோன்ற
முறுவல் கொண்ட முகத்தினைக் காண்போம்.
				மேல்
# 121 முல்லை ஒருசிறைப் பெயரியனார்

விதை விதைப்பவர்கள் உழுது புரட்டிப்போட்ட பழமையான கொல்லையின் புழுதியில்
இடுகின்ற முறைப்படி விதைக்கப்பட்ட ஈரப்பசையுள்ள இலைகளையுடைய வரகின்
கவைத்த கதிர்களைக் கறித்துத் தின்ற விருப்பம் தோற்றக்கூடிய இளம் பெண்மான்
கழலை விதைகள் கிடக்கும் அழகிய காட்டில் தன் ஆண்மானோடு தங்கியிருக்கும்
முல்லைக்காட்டில் உள்ளது நீ விரும்பியவளின் ஊர்;
நேற்றிரவுதான் போர்ப்பணியினை முடித்துவிடுத்தான் வேந்தன் என்று சொல்லி
வருந்தவேண்டாம், வாழ்க உன் மாலை! காண்பதற்கு அழகாக
விரிந்த தலையாட்டம் பொலிந்த விரைந்து செல்லும் செருக்குடைய குதிரையை
அதன் செழுமையான ஓட்டம் விளங்க எழுந்து, குளிர்ந்த மழையால் பெருகிய
காட்டாற்றின் தாழ இறங்கும் மணலைக் கொண்ட கரை பின்னே செல்ல
ஊர் சேரும் இந்த இரவு விருந்தாளியை மகிழ்வுடன் ஏற்கும் மனைவியின்
மென்மையான கீழிறங்கும் பருத்த தோள்களில் துயிலை விரும்புபவனே!
				மேல்
# 122 குறிஞ்சி செங்கண்ணார்

பெரிய மலையின் அடுக்கான பக்கங்களில் என் வீட்டார் உழுதுபோட்ட
கரிய அடித்தண்டையுடைய செந்தினைக் கதிர்கள் கொய்யப்பட்டுவிட்டன,
மலைகள் சூழ்ந்த இடத்திலிருக்கின்ற காட்டைப் பொருந்திய சிறுகுடியின்
ஆழமற்ற பள்ளங்களின் பக்கத்தில் மௌவலும் அரும்புவிட்டிருக்கின்றன,
வெள்ளிய மின்னொளியுடன் கூடிய இடி முழங்கும் அச்சந்தரும் நள்ளிருளில்
குன்றுகள் சூழ்ந்த நாடன் வருவான் என்பது
உண்மையாமோ? அப்படி அல்லவோ? வேறு யாதோ? என்று -
நின்று ஆராய வல்ல உள்ளத்தோடு மறைவாக ஒற்றாடி
அன்னையும் கடுமையான முகத்தினளாய் இருக்க, உன் உள்ளத்தோடு
நீயாகவே ஆராய்ந்துணர வேண்டும்
கருங்குவளை மலர்களைப் பதித்தது போன்ற கண்களையுடையவளே, அது உன் தகுதிக்குப் பொருந்துவதோ என்று -
				மேல்
# 123 நெய்தல் காஞ்சிப்புலவனார்

நீ கூறுவாயாக, வாழ்க தோழியே! கரிய கழியிலுள்ள
இரையை நிறையத் தின்ற குருகினது வரிசையாகப் பறக்கும் கூட்டம்
வளைந்த பனைமடலில் உள்ள கூடுகளில் நிறைந்த இருள்நேரத்தில் நெருங்கிக் கூடியிருக்கும்
பனைமரங்கள் உயரவளர்ந்த வெள்ளையான மணல் கொல்லைப்புறத்துக்
கடற்கரைச் சோலையில் தோழியருடன் காலையில் பறித்த
தேன் மணக்கும் இதழ்களைக்கொண்ட குளிர்ந்த நறிய காவிமலர்களை
அழகிய ஒன்றோடொன்று மாறுபட்ட அலையலையான தழையாடையாக அழகுபெற உடுத்தி,
கோலங்கள் இட்ட மணல்வீட்டைச் சுற்றி ஓட்டத்தில் சிறப்பாக ஓடி,
புலவு நாற்றத்தையுடைய அலைகள் மோதிய வளைந்த கால்களையுடைய கண்டலின்
வாழிடங்களாக உள்ள அழகிய ஈரமான வளையில் வாழும் நண்டுகளைப் பார்க்கும்
சிறிய விளையாட்டும் இல்லாமல்போய்
நினைக்கும்போதே வருத்தும் பெருந்துயரம் ஆகிய நோய் இன்னதென்று -
				மேல்
# 124 நெய்தல் மோசி கண்ணத்தனார்

இரண்டில் ஒன்று இல்லாமல் தனித்திருக்கும் வேளையின் அன்றில் பறவை போல
தனிமைத் துயருடன் வாழ்ந்திருக்கும் சிறுமையான வாழ்க்கையினை
நானும் பொறுக்கமாட்டேன், இத்துன்ப நிலை தானாகவே வந்துள்ளது,
நீங்காதிருப்பாயாக, வாழ்க நீவிர், ஐயனே! ஈங்கையின்
மொட்டுக்களும் மலரான புனமல்லிகையும் உயரமான மணல் குன்றின்மேல்
நவ்வி எனும் மானின் வலிய குளம்புகள் மிதித்து அழுத்துகையினால், வெள்ளியை
உருக்கும் கொள்கலத்தைப் போல் காண்பார் விரும்பும்படியாக
தெளிந்த நீர்க்குமிழியிட்டு வடியும்
தண்ணீரை நிறையப் பெற்றதாக நின்ற பொழுதாகிய கூதிர்ப்பருவத்தில் - 
				மேல்
# 125 குறிஞ்சி கச்சிப்பேட்டுக் கதக்கண்ணனார்
 
இரையைத் தேடித்திரியும் கரடியின் பிளந்த வாயையுடைய ஆணானது
வளைந்த வரிகளையுடைய புற்று கிடைக்கப்பெற அதனை வளைத்துப்பிடித்து
அதனுள் இருக்கும் நல்ல பாம்பு நடுக்கமுற முழங்கி, கொல்லனின்
ஊதுலையின் மூக்கைப் போல உள்மூச்சு வாங்கியபடி தோண்டும்
நள்ளிரவில் வருவதனை அஞ்சுகிறேன் நான் என்பதனால்,
மணமுடிக்க வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டால், நம் மலையில்,
ஒரு நல்ல நாளில் நம்மை மணம் முடிப்பதையும் செய்து, தாமதிக்காமல்
நம்மை மெல்லக் கூட்டிக்கொண்டு செல்வார் உறுதியாக தோழி!
வேங்கை மலர் மாலையைத் தலையில் சூடியவராய், எருதுகளை ஓட்டும் உழவர்
போரடிக்கும் களத்தைப் பார்த்தாற்போன்ற அகன்ற இடத்தையுடைய பாறையில்
மென்மையான தினைக்கதிர்களை நெடுநேரம் போரடிக்கும்பொருட்டு
தூங்கியிருக்கும் களிறுகளை எழுப்பிக்கொண்டிருக்கும் தம் பெரிய மலை நாட்டுக்கு -
				மேல்
# 126 பாலை ஓதலாந்தையார்

பசுங்காய் தனது நல்ல மேலிடமெல்லாம் நிறம் மாறிச் செங்காயாகிப் பின்னர்
கரிய களிபோன்ற கனியாகும் ஈத்த மரங்கள் மிகுந்த வெண்மையான புறத்தினையுடைய களர்நிலத்தில்
படிந்திருக்கும் புழுதியைத் தன்மேல் தூவிக்கொண்ட கடிய நடையையுடைய ஒற்றை ஆண்யானை
வழிச்செல்வோரைக் கொல்வதற்கு விரும்பி, விடியற்காலத்து வழியில் குறுக்கே நின்று,
விரைந்துவரும் அயலார் யாரையும் காணாது, தன் சினத்தை
பனைமரத்தில் வெளிப்படுத்தித் தணித்துக்கொள்ளும் பாழ்பட்ட இடத்தையுடைய பாலைநிலத்தைக்
கடந்து சென்று ஈட்டும் பொருளும் இன்பம் தரும் என்றால்
அது இளமையைக் காட்டிலும் சிறந்த வளமையும் ஆகாது;
இளமை கழிந்த பின்னால், அந்த வளமை
இன்பம் தருவதும் இல்லை; அதனால்
நிலையில்லாத இந்த பொருளீட்டலின் ஆசையினால் செல்லுகின்றாய்,
விரைவாக, நெஞ்சமே, வாய்ப்பதாக உன் செயல்.
				மேல்
# 127 நெய்தல் சீத்தலைச் சாத்தனார்

கரிய கழியினைத் துழாவித்தேடிய ஈரமான முதுகைக் கொண்ட நாரை
தன் சிறகுகளை அடித்துக்கொள்வதால் எழுந்த நீர்த்திவலைகளால் குளிர்கொள்ளும் நமது பாக்கத்தில்
அருகிலிருக்கும் அவன் வருவதால் என்ன பயனோ? பாணனே! பேதையாகிய உன் பரத்தைத் தலைவி
கொழுத்த மீன்களை நிறைய உண்ணும் செழுமையான இல்லத்தில் நிறைந்திருக்கும்
கல்வியறிவில்லாத சினத்தைக் கொண்டிருப்போராய்த் தன் வீட்டார் இருக்கவும்
மணல்வீடு கட்டி விளையாண்ட தோழியருடன் முன்பு தான் விளையாடிய
பொம்மையான பாவையைத் தலையில் வைத்துக்கொண்டு
நெய்தல் நிலத்தவனாகிய தலைவன் உடன் வராமலிருந்தாலும்
போவோம் என்கிறாள் கடற்கரைச் சோலைக்கு -
				மேல்
# 128 குறிஞ்சி நற்சேந்தனார்

பகற்பொழுதில் எரிகின்ற விளக்கின் ஒளியைப் போல் மேனியழகு மங்கித் தோன்றவும்
பாம்பு கவர்ந்த மதியைப் போள நெற்றியின் ஒளி மறைபடவும்.
எனக்கு நீ கூறினாய் இல்லை, உனக்கு யான்
ஓருயிரை இரு உடம்புகளுக்குள் பிரித்து வைத்தாற் போன்ற சிறப்புற்றவளாதலினால்
நீ மறைத்துவைத்திருப்பதை அறிந்திருக்கிறேன் நான் என்று மிகவும்
அழுவதை மேற்கொண்டாய், ஆராய்ந்த இழைகளையுடையவளே! செழுமையான கதிர்களையுடைய
தினைப்புனத்தின் காவற்பொழுதில் இடையிலே ஒருவன்
தலையில் கண்ணி சூடி, காலில் கழல் அணிந்து, கழுத்தில் மாலை அணிந்தவனாய்க் குளிர்ச்சியுடன்
என் முதுகைத் தழுவினனாக, அது முதற்கொண்டு
அதனையே நினைத்த நெஞ்சத்தோடு
இவ்வாறு ஆயிற்று நான் எய்திய காமநோய்.
				மேல்
# 129 குறிஞ்சி ஔவையார்

பெரிதும் நகைப்பிற்கிடமான ஒரு செய்தியைக் கேட்பாயாக, தோழி! காதலர்
ஒருநாள் நம்மைவிட்டுப் பிரிந்திருந்தாலும் உயிரின் தன்மை வேறுபடும் 
பொங்கிவழியும் கூந்தலையுடையவளாகிய நம்மை இங்கே விட்டுவிட்டு
பிரிந்து செல்வார் என்று கூறுவர், அப்படி அவர் சென்று
தன்னுடைய பொருள்தேடும் வினையை முடித்துத் திரும்பி வரும்வரை நாம் நம் வீட்டில்
வாழ்ந்திருப்போம் என்று கூறுவர்; அதற்கும் மேலாக
நல்ல நிறம்பொருந்திய படத்தில் புள்ளிகளையுடைய பாம்பின் தலை நடுங்குமாறு
மின்னியெழும் மேகத்தில் தோன்றும் இடி முழங்கும் ஒசையை
நள்ளிரவான யாமத்திலும் தனித்திருந்தவளாய்க் கேட்டுக்கொண்டு - 
				மேல்
# 130 நெய்தல் நெய்தல் தத்தனார்

குற்றமின்றி நல்லிலக்கணங்கள் நிறைந்த குதிரைகளைப் பூட்டிய தேரில், தெளிந்த கண்ணையும்
மடிக்கப்பட்ட வாயையுமுடைய தண்ணுமைப் பறை இடையிடையே ஒலிக்க
கோலால் குதிரைகளை அடித்து விரட்டிக் காலையில் இங்குத் தோன்றிய
செவ்விய பண்புகளைக் கொண்ட, பொதுக்காரியங்களைச் செய்யும் நம் தலைவர், இந்தப் பழமையான ஊரில்
தாமாகவே இங்கு உழைத்துண்ணும் வாழ்க்கையைக் காட்டிலும் இனியது உண்டோ?
நம்மீது எவ்வளவுதான் விருப்பம் உடையவர் என்றாலும் நம்மை நினைக்கவில்லை அவர்,
அவரோடு பொருந்திய என் நெஞ்சினையும், அவர் பிரிவால் நெகிழ்ந்துபோன தோள்களையும்
வாடிப்போன மேனியின் வரிகளையும் பார்த்தாவது தனது பிரிவை நீட்டிக்காது
எப்படி இருக்கிறாள் இந்தப் பெருந்துயரை அடைந்தவள் என்று
ஒரு நாளில்கூடச் சொல்லவும் இல்லை; பரந்த நீர்ப்பரப்பையுடைய
இந்த வையகத்தின் எல்லையின் அளவையும் கடந்த
இந்தத் துன்ப நோய்க்கு மாற்றாக வேறு உடன் விசாரிக்கும் துணையும் இல்லையே.
				மேல்
# 131 நெய்தல் உலோச்சனார்

உம்மையன்றித் தனியே ஆடிய விளையாட்டும், நீர் இல்லாமல் தனியே தங்கிய பொழிலும்,
உம்மை நினைக்கலாகாத வருந்துகின்ற நெஞ்சினையும்,
உம்மிடம் ஊடுதலையும் உடையேமோ? உயர்ந்த மணற்பரப்பினையுடைய கடற்கரைத் தலைவனே!
சுருக்கங்கள் முதிர்ந்த நடுப்பக்கத்தையுடைய அகன்ற அடிப்பகுதியையுடைய தாழையின்
சுறாமீனின் கொம்பு போன்ற முள்ளைக் கொண்ட இலைகள் முறிய
இறாமீனை உண்ணும் கூட்டமான குருகுகள் இனிதே தங்கியிருக்கும்
நறவுண்டு மகிழும் அரச அமர்வையுடைய நல்ல தேரினைக்கொண்ட பெரியன் என்பானின்
தேன் மணக்கும் பொறையாறு என்ற ஊரைப் போன்ற என்னுடைய
என் தலைவியின் நல்ல தோள்கள் மெலிய நீவிர் எம்மை மறப்பதற்கு -
				மேல்
# 132 நெய்தல் பெருங்கண்ணனார்

இந்தப் பெரிய ஊரிலுள்ளோர் யாவரும் தூங்குகின்றனர். எனக்குத் துணையாக யாரும் இல்லை
திருத்தமான வாயையுடைய சுறாமீன் நீரைக் கக்குவதால் ஒய்யென்ற ஒலியுடன் விரைவாக
பெரிய தெருவில் உதிர்ந்துவிழும் மழைத்தூறலைக் குளிர்ந்த காற்று
ஒன்றற்கொன்று பொருதியிருக்கும் கதவுகளின் இடைவெளிகள்தோறும் தூவிவிட,
கூர்மையான பற்களையுடைய காவல்நாய்கள் நடுங்கிக்கொண்டிருக்கும் நல்ல மாளிகையில்
நன்கு கிடந்து தூங்குவதற்குரிய உயரமான பல பூக்களைக் கொண்ட படுக்கையின்
அயலிடமும் பெரிய காவலையுடையது; அதற்கு மேலும்
காவலையுடைய வாயில்களை நன்கு காத்துக்கொள்வீர் என்று கூவுகின்ற
யாமக் காவலரின் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணி
ஒன்றுபட இசைக்கும் தாளம்போல மாறி மாறி ஒலிக்கும்
இன்றுதான் இரங்கத்தக்க நான் இறந்தொழியும் நாளோ?
				மேல்
# 133 குறிஞ்சி நற்றமனார்

தோள்கள்தாம் தொடிகள் சுழன்று கழலும் தன்மைய ஆகின; கண்கள்
வாளால் பிளந்த மாவடுவைப் போன்ற தம் வடிவை இழந்தன;
நெற்றியும் பசலை பாய்வதாயிற்று; அழகுத்தேமலின்
சிலவாய புள்ளிகளை அழகாகப் பெற்றிருக்கின்ற பல வடங்களையுடைய அல்குலையும்,
நீலமணி போன்ற அழகிய கூந்தலையும் உடைய மாநிறத்தவளுக்கு என்று
கொடியனவற்றைப் பேசும் பெண்டிர் பழிச்சொற்களைத் தூற்ற,
நாம் படும் துன்பத்தை நம் தலைவர் செய்யமாட்டார் என்னும்
என்பால் விருப்பமிக்க தோழியே! உன் அன்புமிக்க இச் சொல்லானது
இரும்புவேலை செய்கின்ற கொல்லனின் வெப்பமான உலையில் தெளித்த
பனைமடலில் தோய்த்த சிறிதளவு நீரைப் போல
நோய்மிக்க என் நெஞ்சினை ஆற்றுவதாய் இருக்கிறது ஓரளவுக்கு.
				மேல்
# 134 குறிஞ்சி கருவூர்க் கதப்பிள்ளையார்

இனிமைக்கு இனிமை சேர்ப்பது என்பது
இதுதானோ வாழ்க தோழி! காதலர்
வருவதற்கான குறியினைச் செய்த மலைப்பக்கத்துச் சிறுதினையைக் கவரவரும்
சிவந்த வாயையுடைய பைங்கிளிக்கூட்டத்தை விரட்டுவதற்காக, கொடிச்சியே!
அழகிய வாயையுடைய தட்டையை எடுத்துக்கொண்டு அங்கே போக என்று
நம்மை ஏவினாள் நம் தாய்; தந்தையும், நீ வாழ்க,
அழகிய மாமை நிற மேனியையும் வரிசையான வளையல்களையும் கொண்ட சிறுமகளே!
செல்வாய், உன் முள்போன்ற பற்களில் முத்தங்கொள்வேன் என்று
மென்மையாக இனிய மொழியைக் கூறிய வகையில் நான் அதற்கு
உடன்படேன் போல உரையாடினேன்!
				மேல்
# 135 நெய்தல் கதப்பிள்ளையார்

தொங்குகின்ற ஓலைகளையும், உயர்ந்து நீண்ட மடல்களையும் கொண்ட பனைமரத்தின்
கரிய அடிமரத்தைப் புதைத்த மணல் மிகுந்துகிடக்கும் வீட்டு முற்றத்தில்
குறைவற்ற உணவுப்பொருள்களை இல்லத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு அளித்துமகிழும்
தண்ணிய குடிவாழ்க்கையை வாழ்பவரையுடைய அழகிய குடில்களையுடைய சீறூர்
இனிதாயிருந்தது நிச்சயமாக ! பனியால் குளிர்ந்த
பல காடுகளைக் கடந்த வருத்தத்தினால் வலிகுன்றிய ஓட்டத்தையுடைய,
முழங்குகின்ற கடல் அலைகள் ஒதுக்கிய புது மணலில் அழுந்தியதால் சுழலும்
வெண்மையான தலையாட்டம் பொலிந்த புரவி கட்டப்பட்ட
தேரினையுடையவர் நம்மோடு சிரித்து மகிழ்வதற்கு முன்பு -
				மேல்
# 136 குறிஞ்சி நத்தங் கொற்றனார்

திருத்தமான, திரண்டு விளங்கும் என் கைவளை கழன்றுவிழுவதால் நான் அழுதுநிற்க,
அரிய நோயினையுற்றார்க்கு அவர் விரும்பியதைக் கொடாமல்
மருந்தினை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவனைப் போல
என் தந்தை வாழ்க பல்லாண்டு! புகழ்ச்சிமிக்க
மலையைப் பொருந்திய நாட்டவனுக்கும் நமக்கும் இடையே சிறிதளவு
பிரிவு உள்ளதை அறிந்திருப்பவர் போல,
காதலன் நீங்கியவழித் தானும் நீங்காமல், அவன் வந்தால் தன் எல்லைக்குள் நின்று
தோளில் உண்டாகும் மெலிவு பிறர்க்குத் தோன்றாமல் மறைக்கும் உதவியையுடைய
கழன்று போகாத பொன்னாலான வளையல்களை என் கைகளில் செறித்தார்.
				மேல்
# 137 பாலை பெருங்கண்ணனார்

குளிர்ச்சியுடையதாய் மணங்கமழும் தாழ்ந்துவிழும் கரிய கூந்தலையும்
நீண்ட மென்மையான பருத்த தோள்களையும் உடைய இளமையான நம் தலைவியை விட்டுப்
பிரிந்துபோக எண்ணினால், அவளைக் காட்டிலும் அரியது ஒன்றனை
எய்தினவனாவாய், வாழ்க நெஞ்சமே! செங்குத்தான மலையிலிருந்து வீழும்
அருவிகள் காய்ந்துபோன நீர் இல்லாத நீண்ட இடைவெளியில்
புல்லிய தலையைக் கொண்ட தன் இளம்பிடியின் வருத்துகின்ற பசியைக் களைவதற்காக
பெரும் களிறு மோதிச் சாய்த்த வளைந்த அடிமரத்தைக் கொண்ட ஓமை மரம்
அரிய வழியில் செல்வோர்க்குத் தங்கியிருப்பதற்கான நிழலாய் அமையும்
குன்றுகள் சூழ்ந்த ஊர்களைக் கொண்ட பாலைநிலத்தில்
சென்று நெடுந்தொலைவுக்கு அகன்று போவதற்கு வலிமையுள்ளவனானாய் நீயே!
				மேல்
# 138 நெய்தல் அம்மூவனார்

உவர் நிலத்தில் விளையும் குன்றுகளைப் போன்ற உப்புக்குவியல்களை
மலைநாட்டில் சென்று விற்கும், ஓரிடத்தில் தங்காத நிலையற்ற வாழ்க்கை வாழும்
கூட்டமான உமணர்கள் தங்கள் வண்டிகள் முறிந்த இடத்தில் விட்டுச்சென்ற
தம் பண்பு அழிந்தனவாய் உள்ள பழைய பார் எனும் மரக்கட்டையில் வெண்குருகு முட்டையிடும்
குளிர்ந்த அழகிய துறைகளையுடையவன் முன்பு ஒருநாள் நம்மோடு
பசிய இலைகளினூடே செழித்துவளர்ந்த திரண்ட தண்டுகளையுடைய நெய்தல்
பூவுடன் அலையலையாய் அமைந்த மாலையைத் தொடுத்துச் சூட்டியதைக்
கண்ணால் கண்டு அறிந்திருத்தலைத் தவிர, நுண்ணிய வேலைப்பாடமைந்த
அணிகலன்களை அணிந்த அல்குலையுடைய விழாக்களில் ஆடும் மகளிர்
முழங்கும் அலைகளின் ஒலிக்கேற்ப, இனிய தாள அறுதியுடன் ஒலிக்கும்
ஆரவாரத்தையுடைய இந்த பழமையான ஊர் வேறொன்றையும் அறிந்தது இல்லை.
				மேல்
# 139 முல்லை பெருங்கௌசிகனார்

உலகிற்கு ஆதாரமாகக் கொண்டு பலரும் தொழுது போற்ற
பற்பல இடங்களிலும் நிலைபெற்றிருக்கும் குன்றுகளின் சிகரங்கள்தோறும்
சென்று உலவிவருவாயாக - பெரிய முழக்கத்தையுடைய மேகமே!
படுமலை என்னும் பாலைப்பண் அமைந்திருக்கும் நல்ல யாழின் வடித்தலைப் பொருந்திய நரம்பு
எழுப்பிய இசையினைப் போன்ற ஓசையையுடைய மழைத்துளிகளையுடையாய்! முழவின்
மார்ச்சனை பொருந்திய மேற்புறத்தைப் போல இம்மென்ற ஒலியெழுப்பும்
நுனிசுருண்ட செழித்த கூந்தலையுடைய மாநிறத்தவளோடு
சேர்ந்து இனிமையை அனுபவித்த மலைச்சரிவையுடைய நல்ல ஊரில்
பலவாய்க் கலந்த மலர்கள் உதிரும்படியாக வீசி
இரவிலே மழை பொழிந்து எனக்கு உதவிசெய்தனையே!
				மேல்
# 140 குறிஞ்சி பூதங்கண்ணனார்

கிழக்குக்காற்று கொண்டுவந்த பெரிய மேகம் மேற்குத்திசையில் எழுந்து பெய்தலால் தழைத்த
சிறிய கிளைகளில் பூங்கொத்துக்களையுடைய மிகவும் குளிர்ந்த சந்தனத்தைப்
பிற பொருள்களையும் சேர்த்துக் கூந்தலில் அழகு உண்டாகப் பூசி,
அவை காய்ந்துபோன பின் உதிர்ந்துபோன துகள்கள் பரவிய கூந்தலையுடைய
பெரிய கண்களையுடைய தோழிமார் மகிழும்படி, தந்தையின்
நீண்ட தேர் செல்லும் நிலவைப் போன்ற வெள்ளிய மணல் முற்றத்தில்
பந்தோடு ஓடியாடும் நம்மீது பரிவில்லாத தலைவி
நம்மீது இரக்கங்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், பெரிதும் துவண்டுபோய்
இரந்து அவள் பின் நிற்றலை வெறுக்காதே! பெரிய நெஞ்சே! கொஞ்சமேனும்
நமது நீக்கமுடியாத அரிய துயரத்தின் அவலத்தைத் தீர்க்கும்
மருந்து வேறு இல்லை, நான் உற்ற நோய்க்கு -
				மேல்
# 141 பாலை சல்லியங் குமரனார்

கரிய சேற்றில் மூழ்கியெழுந்த, வளைவாகப் புடைத்த கன்னத்தையும் பெரிய வாயையும் கொண்ட
மழையில் நனையும் யானையின் பக்கங்கள் உராய்தலால்
பொரிந்தது போல் ஆகிய அடிமரத்தின் பட்டை தேய்ந்த, உள்ளே துளையுள்ள காய்களைக் கொண்ட கொன்றை
நீண்ட சடையும் நீராடாத மேனியுமுடைய
குன்றுகளில் வாழும் தவசிமாரைப் போல, பலவாக
வெயில் பரந்த நீண்ட இடைவேளி அழகுறத் தோன்றும்
அரிய காட்டுவழிகள் கடந்துசெல்ல எளிதானவை உனக்கு - பருந்துகள் பாய்ந்து தின்னுமாறு
தேர்ப்படையோடு போரிட்ட பலவாய்ச் சொரசொரப்புடைய பெரிய கைகளைக் கொண்ட
ஏந்திய கொம்புகளையுடைய யானைப்படையுடைய புகழை விரும்பும் கிள்ளியின்
புதியதாக அணிசெய்யப்பட்ட உயர்ந்த கொடிகள் பறக்கும் அம்பர் நகரைச் சூழ்ந்த
அரிசில் என்னும் ஆற்றின் அழகிய குளிர்ச்சியான அறல்மணலைப் போன்ற இவளது
விரித்த செழுமையான கூந்தலை விட்டு பிரிந்து வாழ்தல் ஆற்றேன்.
				மேல்
# 142 முல்லை இடைக்காடனார்

வானமே இறங்கியதைப் போன்று பொழிந்த மின்னுகின்ற மழையின் கடைசி நாளில்
கையில் கொண்ட பல கால்களைக் கொண்ட மென்மையான உறியுடன்,
தீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி,
பனையோலைப் பாயை முதுகுப்பக்கம் போட்டிருக்கும் பால் விற்கும் இடையனை,
நுண்ணிய பல நீர்த்துவலைகள் ஒரு பக்கமாக நனைக்க,
கைத் தண்டினை இன்னொரு காலாக ஊன்றிப் பிடித்து, ஒடுங்கிய நிலையில் உதடுகளை மடித்து எழுப்பும் சீழ்க்கையொலியினால்
சிறிய தலையினையுடைய ஆட்டுக் கூட்டத்தை வேறுபக்கம் போகாதவாறு மயங்கச் செய்து தங்கியிருக்கவைக்கும்
காட்டுப்பகுதியில் இருப்பது, என்றும் பொய்க்காத புதுவருவாயையுடைய,
இரவில் என்றாலும் விருந்தினர் வந்தால் மகிழ்ச்சிகொள்ளும்
முல்லைத் திணைக்குரிய கற்பினை உடைய
மென்மையான இயல்புடைய சிறுமகள் வாழும் இனிய ஊர்.
				மேல்
# 143 பாலை கண்ணகாரன்

மிகவும் வியப்புடையதாய் இருக்கின்றது! நான் - மிக விரைவாக,
கொண்டுவந்த மணலை, தலைசுற்றிப் பரப்பிய வளமிக்க மனைகளின் முற்றத்தில்
ஓரையாடுகின்ற தோழியர் கூட்டத்தையும், நொச்சிவேலியையும் காணும்போதெல்லாம்
நீர் ஒழுகும் கண்ணுடையவளாய் மனம் கலங்குகின்றேன்; என்னைக்காட்டிலும்
கிளியும் அக்கா அக்கா என்று கூவியழைக்கும்; என் இளமகள்
குற்றமற்றவளே; தம்முள் கூடிக்கொண்டு
குசுகுசுக்கும் முதிய ஊரின் பழிபேசும் பெண்டிர்
இன்னாத நல்ல சொற்களைக் கேட்ட சில நாட்களுக்குத்
தெரியாதது போல மூச்சுவிடவுமில்லை;
ஏதோ புதிதாக ஒரு மணம் மணக்கின்றதே உன் கூந்தல் என்றும் கேட்டேனே -
				மேல்
# 144 குறிஞ்சி கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

பெரிய களிற்றினைப் புலி தாக்கியதால், அதன் கரிய பெண்யானை எழுப்பிய
திரண்டுவரும் கரிய மேகம் ஒலிப்பதைப் போன்ற முழக்கத்தைக் கேட்டு அஞ்சி,
மலர்கின்ற பூவைப் போன்ற அழகிய மையுண்ட கண்கள் கலங்கிக் கண்ணீர் சொரியவும், ஆதரவற்ற
பேதை நெஞ்சம் கவலையால் வருந்த,
என் நிலைமை இங்கு இவ்வாறாயிற்று, தோழியே! பிளந்த வாயினையுடைய
பெண்புலி நடமாடும் அச்சத்தை மிகக் கொண்ட கடத்தற்கரிய பல கிளைவழிகளையுடைய
ஓளிவிடும் நீர் நிறைந்து விரைந்து ஓடும் காட்டாற்றின்
கரை தெரியாத ஆழமான மடுக்களைத் தன்னந்தனியே நீந்தி,
பலவகையாகக் கலந்த பூக்கள் படிந்த தோள்களையுடையவராய்
இரவில் வருவதின் அருமையை அறியாத எனக்கு -
				மேல்
# 145 நெய்தல் நம்பி குட்டுவன்

கரிய கழியின் நீர் மோதுவதால் ஈரமாகிப்போன வெண்மணலில் படர்ந்திருக்கும்
பெரிய கொடிகளைக் கொண்ட அடும்பின் பெரிய பூவிதழ்களைக் கொய்து
நீண்ட கூந்தலையுடைய மகளிர் தம் மாலையில் சரமாகச் சூடிக்கொள்ளும் 
அழகிய கடற்கரைநாடனிடம் நாம் விரும்பிக்கொண்ட நட்பு
இப்போது சிறிதளவும் இல்லாதிருந்த போதும், நம்மோடு
அவன் சேர்ந்திருந்தான் போல வெளிப்படக் கூறி
'அவன் எங்குள்ளான்' என்று கேட்கிறாள் நியாயமற்ற நமது அன்னை;
நீயும் உனது மேனி எழிலின் மாற்றத்தினால் நானே உன் உறவை அறியும்படி தோன்றுகின்றாய்; நம்முடைய
பருத்த அடிமரத்தைக் கொண்ட புன்னை மரங்கள் இருக்கும் சேரியில், மெதுவாக
நள்ளென்னும் நடுஇரவிலும் வருகின்றது
வாழ்க! அவரது தேரின் மணியோசை.
				மேல்
# 146 குறிஞ்சி கந்தரத்தனார்

விலைக்கு விற்கமுடியாத பூக்களைக்கொண்ட தலைமாலையைச் சூடி
நன்கு பித்தேறினேன் என்று பிறர் கூறுமாறு, பல ஊர்களிலும் திரிகின்ற
நெடிய கரிய பனைமடல் குதிரை மேல் இருப்பவனே!
தன் கடமையை உணர்ந்த மன்னரின் குடைநிழல் போல
பெரிதும் குளிர்ச்சியையுடைய மரத்தின் நிழலில் சிறிது நேரம் இறங்கியிருந்து
தங்கிச் செல்வாயாக! சென்று மறையட்டும் சூரியன் என்று -
மனமிரங்கி வந்து கூடிநிற்கும் அன்புடைய மக்களால்
நல்லவன் என்னும் புகழ்ச்சொல்லை அடையப்பெற்ற, சித்திரம் வரைவதில் வல்ல ஒருவன்
தீட்டிவைத்ததைப் போன்ற காண்பதற்கினிய அழகினையுடைய
மெல்லியளாகிய மாமை நிறத்தையுடையவள் வருத்திய
மயக்கத்தையுடைய நெஞ்சமே! என் சொல்லை ஏற்றுக்கொள்ள விரும்பினால் -
				மேல்
# 147 குறிஞ்சி கொள்ளம்பக்கனார்

இனிமேல் நாம் என்ன ஆவோமோ? அழகான நெற்றியையுடைய சிறுமகளே!
தேன் மணக்கும் மலைச் சாரலில், சிறுதினையின் பெரிய கதிர்களைச்
சிவந்த வாயையுடைய பைங்கிளிகள் கவர்ந்து கொண்டிருக்க, நீ வேறு
எவ்விடத்துக்குச் சென்றாய் அங்கே? என்று கூறி
அன்னை மனம் அமையாதவளாய்க் கேட்க, அவள் முன் நின்று
அருவிகள் ஆரவாரிக்கும் பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவனை
ஒருசிறிதும் அறியேன், அவனைப் பார்த்ததும் இல்லை;
மூங்கிலாற் செய்த தட்டையெனும் கருவியையுடைய நான் மலர்ந்த பூக்களைக் கொய்து
சுனையில் பாய்ந்து நீராடவும் இல்லை என்று நினைவில்லாதவளாய்,
பொய்யுரைக்காது, அந்தோ! உண்மையை உரைத்தாயே! அதனைக் கேட்டு
யோசனையுடன் தலைகுனிந்திருந்தாள் அன்னை;
தினைப் புனத்திற்குச் செல்வதை நீயே கெடுத்துக்கொண்டாய்! நீ இரங்கத்தக்கவள்.
				மேல்
# 148 பாலை கள்ளம்பாளனார்

உன்னுடைய மென்மையான இயல்பை உணர்ந்தவராயும், மெல்லிய சொற்களால் எடுத்துச் சொல்லியும்,
உன்னால் அங்கு வர இயலாது என்று தாம்
தம் பயணத்தைத் தொடங்கித் தம் பொருளீட்டும் முயற்சியில் பிரிந்துசென்றோர், இப்பொழுது
நெடிய காய்ந்துபோன நீர்நிலைகள் மிகுந்த நீரற்ற நீண்ட பாலைவழியில்,
சிவந்த அடிமரத்தையுடைய மரா மரத்தின் அழகிய பக்கவாட்டில் பொருந்தியிருந்தபடி
இழுத்துப்பிடித்த வில்லையுடைய மறவர்கள் நிறைந்திருப்பதை அஞ்சாது,
மலைக் குகையில் செறிவாய்க்கிடந்த பெரிய நகங்களைக் கொண்ட பெண்புலியின்
இனிதான குட்டிகளை ஈன்றதனால் ஏற்பட்ட வருத்தம் தீர, சினம் மிக்கு
சிவந்த கண்களையுடைய பெரிய புலியின் இரையைக் கொள்வதில் வல்ல ஆண்
உயர்ந்து நிற்கும் கொம்பினையுடைய தனித்த யானையின் புள்ளிகள் உடைய முகத்தில் பாயும்
கடத்தற்கரிய பாலைவழியில் செல்வேன் என்பார்,
வருந்தமாட்டேன் தோழி, வாய்ப்பதாக அவரின் பயணம்.
				மேல்
# 149 நெய்தல் உலோச்சனார்

சிலரும், பலருமாகக் கூடி, கடைக்கண்ணால் அக்கம்பக்கம் பார்த்து,
மூக்கின் உச்சியில் சுட்டுவிரலை வைத்து
தெருவில் பெண்டிர் கிசுகிசுப்பாய்ப் பழிச்சொற்களால் தூற்ற,
சிறிய கோலை வலதுகையில் உயர்த்தியவளாய் அன்னை வருத்த,
மிகவும் துயருற்றேன் வாழ்க தோழியே! கடற்கரைச் சோலையில்
புதிய மலர்களைத் தீண்டியதால் பூ மணம் கமழும் நிறங்கொண்ட பிடரிமயிரையுடைய
விரைந்து செல்லும் குதிரைகளின் ஓட்டத்தை மேலும் விரைவாக ஓடுமாறு செலுத்தி,
நள்ளிரவில் வருகின்ற பண்புநலம் மிக்க தேரினையுடைய காதலனோடு
நீ செல்வதற்கு உடன்படுகின்றேன் நான்;
தன் பழிச்சொற்களைத் தானே சுமந்துகொண்டு ஒழிந்துபோகட்டும் இந்த வெற்றுப்பேச்சைக் கொண்ட ஊர்.
				மேல்
# 150 மருதம் கடுவன் இளமள்ளனார்

பெரிதும் சிரிப்புக்கிடமாயினான், பாணனே! உன் பெருமகன்!
காவல் காடுகளின் வலிமையைச் சிதைத்துக் களிறுகள் பலவற்றைப் பரக்கவிட்டு,
அரண்கள் பலவற்றை வென்ற வலிமைமிக்க சேனைகளையுடைய
வழுதி வாழ்க பல்லாண்டு என வணங்கிச் சேர்ந்து
தம் நிலைபெற்ற கோட்டைமதில்களைக் காத்துக்கொண்டோரைப் போல, அதற்காக நாம்
சிறிதளவும் வருந்தோம் என்று கூறி, மென்மையான நடையையுடைய
கனைக்கின்ற குதிரையைச் செலுத்தி வந்து எமது சேரியில்
கழுத்து மாலையும், கொண்டைமாலையும் காட்டி, ஒருமைப்பாட்டையுடைய
எமது நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டமை இனி இல்லாமற்போய்விடுமோ? நீ அஞ்சும்படி
கணுக்களையுடைய சிறிய மூங்கில்கோலைப் பற்றிக்கொண்டு
சினம் பெரிது உடையவளாய் என் தாய் வருந்துவாள் இல்லை.
				மேல்
 



# 151 குறிஞ்சி இளநாகனார்

நல்ல நெற்றியில் பசலை பாய்ந்தாலும், பெருத்த தோள்கள் மெலிந்துபோனாலும்
கொல்லக்கூடிய பகையுணர்வுகொண்ட பெரிய புலியின் சேரற்கரிய சிறிய நுழைவிடத்தைத் தாக்கி
சிவந்த கறையினைக் கொண்ட வெண்மையான கொம்பினையுடைய யானை
அந்தக் கறையை மலைமேலிருந்து விழும் அருவிநீரில் கழுவும் மலைச்சாரல் நெறியில்
வராமலிருப்பானாக, தோழியே! - ஆண் குரங்கின்
தளிர்களைத் தின்றுகொண்டிருக்கும் பெரிய சுற்றம் அறிந்துகொள்ளுமோ என்று அஞ்சி,
மிளகுக்கொடிகள் வளர்ந்திருக்கும் மலைஅடுக்கினில் யாருக்கும் தெரியாமல் உறவுகொண்ட
சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கு உறவின்போது வேறுபட்ட தன் கோலத்தை, கரிய அடிமரத்தையும்
பொன் போன்ற பூங்கொத்துக்களையும் உடைய வேங்கை மரத்தின் அழகிய கிளை மீது சென்று
ஆழமான நீரையுடைய நெடிய சுனையைப் பார்த்துத் தலையைக் கவிழ்த்துத் தன்
புல்லிய தலையில் குலைந்துபோன மயிரைத் திருத்தும்
மலைநாட்டினன் இரவினில் - 
					மேல்
# 152 நெய்தல் ஆலம்பேரி சாத்தனார்

பனைமடலால் செய்யப்பட குதிரையைக் காமம் தந்தது; ஊரார் பேசும் பழிச்சொற்களோ
பல பூக்களைக் கலந்து கட்டிய எருக்கம்பூமாலையைத் தந்தது;
ஒளிவிடும் கதிர்கள் ஒளிமங்கிப்போய் பகலொளி விசும்பில் படர
தனிமைத் துயரத்தைத் தந்தது தான் விரும்பித் தொழில்செய்யும் ஞாயிறு;
இவை எல்லாம் தந்ததற்கு மேலும், மெல்லென
வாடைக்காற்று மழைத்துளிகளைத் தூவ, கூட்டினில்
பெடையோடு உறவுகொள்ளும் அன்றில் பறவையின் மெலிவான குரலும் கலந்து
இரவுப்பொழுதும் செயலற்ற நிலையைத் தந்தது;
என்ன ஆவேனோ? இரங்கத்தக்க நான்.
					மேல்
# 153 பாலை தனிமகனார்

கிழக்குக் கடலில் நீரை முகந்து, மேற்குத்திசையில் எழுந்து, இருண்டு
மண் திணிந்த இந்த உலகம் ஒளிர்ந்துவிளங்க, கொல்லர் கடையும்போது
செம்புப்பொறிகளைச் சொரியும் பானையைப் போல மின்னலிட்டு, எல்லாப் பக்கங்களிலும்
தம் பெய்தல் தொழிலை வாய்க்கச்செய்யும் இனிய ஓசையையுடைய மேகங்கள்
தென்புலப் பக்கமாகச் சென்று தேய்ந்துபோவதைப் போல்
என் நெஞ்சம் அவரிடம் சென்றதாக, இங்குத் தனியாக இருந்து
உண்பதனால் காக்கப்படுகிறது என் உடம்பு; வெற்றிதரும் போரைச் செய்யும்
மிக்க சினத்தையுடைய வேந்தனின் பகைமையால் அலைக்கழிக்கப்பட்டுக் கலங்கியதால்
குடிமக்கள் விட்டு ஓடிப்போன பெரிய ஊரில்
பாழ்பட்ட இடங்களைக் காவல்புரிந்து நிற்கும் தனி மகனைப் போல -
					மேல்
# 154 குறிஞ்சி  நல்லாவூர்க் கிழார்

கானமும் ஒலியடங்கிக் கம்மென்று இருக்கிறது; வானமும்
மலைப் பிளவுகளில் இருப்பதைப் போல காரிருளைப் பரப்பி
பலவிதமான ஒலிப்புகளையுடைய மேகங்களின் ஓசையை எழுப்பிக்கொண்டே இருக்கிறது;
மேகமூட்டம் தவழ்கின்ற குறுங்காட்டில் களிற்றினை வெற்றிகொண்ட
மிக்க சினத்தையுடைய புலியின் பிளந்த வாயையுடைய ஆண்,
அஞ்சும்படியாக முழங்கும் ஓசையைக் கேட்காமல்
துயில்கொள்கிறாயோ? ஏடி! சற்றேனும் மனவலிமை இல்லாதவளே!
பெருந்துன்பம் வந்து மோதியதால் குற்றமுள்ள நெஞ்சம்
நீர் அணைக்கும் நெருப்பைப்போல தணியுமாறு, இன்று அவர்
வராமல் இருந்தால் நல்லது! மலைச் சாரலில்
குறுக்கிட்டுக்கிடக்கும் மலையின் கடினமான வழிகளை நினைக்கும்போதெல்லாம்
அந்த நிலத்தின் மேல் பரந்துசெல்லும் என் உறுதிப்பாடு இல்லாத நெஞ்சம்.
					மேல்
# 155 நெய்தல் பராயனார்

ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த மகளிரோடு ஓரை என்னும் விளையாட்டையும் ஆடமாட்டாய்;
பெரிய இதழ்களையுடைய நெய்தல் பூக்களாம் மாலையையும் தொடுக்கமாட்டாய்;
மலர்ந்த பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் ஒருபக்கமாக நிற்கின்றாய்;
நீ யாரோ? உன்னைத் தொழுதவாறு கேட்கிறேன்;
பார்ப்பவர்கள் மேலும் மேலும் பார்க்கக்கூடிய அழகினையுடைவளே! தெளிவான அலைகளைக் கொண்ட
பெரிய கடற் பரப்பில் அமர்ந்திருக்கும் தெய்வமகளோ?
கரிய கழியின் பக்கத்தே நிலைகொண்டு உறைபவளோ?
சொல்வாயாக, இப்பொழுது மடந்தையே! என்று கூறினேன்; அதற்கு விடையாக
முள் போன்ற கூரிய பற்களைக் காட்டிய முறுவலால் இதழ்கள் திறந்தன,
பலவாகிய இதழ்களையுடைய மையுண்ட கண்களிலும் பரந்தன நீர்த்துளிகள்.
					மேல்
# 156 குறிஞ்சி கண்ணன் கொற்றனார்

நீயே, காலடியைப் பார்த்து ஒதுங்கிச்செல்லமுடியாத நிறைந்த இருளில் வந்து எம்முடைய
காவலையுடைய அகன்ற மாளிகையின் காவலையும் கடந்துவரும்
பேரன்பினை உடையவன்! பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவனே!
நாங்களோ, உன்னையும் உன் மலையையும் பாடி, பல நாட்கள்
சிறுதினையைக் காவல்காக்கச் செல்கிறோம்; அதனால்
பகற்பொழுதில் வருவீராக, பலவான நம் துன்பங்கள் தீர;
கொறுக்கச்சி உயரமாய் வளர்ந்த பெரிய மலைப்பக்கத்திலிருக்கும் சிறுகுடியில்
கள்ளை மிகவும் குடித்தவராயினும், என் வீட்டார் பெரிதும் கொடியர்;
ஒலியின் முழக்கம் மலைப்பிளவுகளிலும், குகைகளிலும் எதிரொலிக்க,
அசைந்துவரும் மேகங்கள் தங்கியிருக்கின்றன, எமது சிகரங்கள் உயர்ந்த குன்றுகளில்.
					மேல்
# 157 பாலை இளவேட்டனார்

பெரிய இடத்தையுடை இந்த நிலப்பரப்பில் ஒன்றாய்க்கூடி மக்களின் வாழ்க்கைக்கு உதவிப்
பெரும் மழை பொழிந்ததற்கு அடுத்த நாள் காலையில்
பல பொறிகளைக் கொண்ட பாம்பின் ஊர்ந்துசெல்லும் முதுகைப் போல
ஆற்றில் அரித்தோடும் நீரோட்டம் சிறுத்துப்போன பதமான இளவேனில் காலத்தில்
பூங்கொத்துக்கள் நெருக்கமாய் அமைந்த மா மரத்தில் சேர்ந்திருக்கும் குயில்கள் கூவுந்தோறும்
நம்மையே நினைத்து வருந்தும் நெஞ்சத்துடன், பிரிவுத்துன்பம் மிகுந்து,
கேட்கும்போதெல்லாம் கண்ணீர் சொரிந்து புலம்புவாள் பெரிதும் - காட்டுப்பக்கம் அமைந்த
சிறிய குன்றுகளை அடுத்து இருக்கும் நீண்ட அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
அழகிய பூந்தாதுக்கள் உதிர்ந்ததைப் போல
நுண்ணிய பலவான தேமற்புள்ளிகள் பரந்த மாநிறத்தவளான நம் தலைவி -
					மேல்
# 158 குறிஞ்சி வெள்ளைக்குடி நாகனார்

வாழ்க! தோழியே! நமது இடத்தில்
நான் பார்த்ததில்லை; ஆனால் அது மறைவாக என்னிடத்தில் வந்து
பாறைகளின் வழியான பாதையாய் என் காலை வருத்துகிறது;
செறிந்த இருளாய் என் கண்களை வருத்துகின்றது;
மலையின் பிளப்புகளிலுள்ள குகையில் பதுங்கியிருக்கும் மிக்க சினமுள்ள பெரிய புலி
புள்ளிகளையுடைய முகத்தைக் கொண்ட யானையை அது வருந்தும்படி தாக்கி,
அதன் குருதியைப் பருகிய தன் கொழுத்த புடைத்த கன்னத்தையுடைய பெரிய வாயை
வேங்கை மரத்தின் அடிமரத்தில் துடைக்கின்ற
உயர்ந்த மலைகளையுடைய நாட்டினன் வரும் பாதையை -
					மேல்
# 159 நெய்தல் கண்ணம்புல்லனார்

நீலமணி களங்கமின்றித் தெளிந்திருந்தாற் போன்ற பெரிய கரிய கடற்பரப்பின்
வலிமை மிக்க அலைகள் கொழித்துச் சேர்த்த பூக்கள் மலிந்த பெரிய கடல்துறையில்
நிலவைக் குவித்ததைப் போன்ற மணல்மேடு இடிந்து சரிந்த கரையில்,
சங்குகளைக் குலையாகத் தொடுத்தது போன்ற குருகுகளின் வரிசையை எண்ணி,
பகற்பொழுதை உன்னோடு கழித்ததன் பின்னரும், மெல்ல
காற்று துடைத்துத் தூய்மையாக்கிய வரிவரியான புன்னை மரம் உள்ள முற்றத்தில்
கொழுத்த மீனை உண்ணும் வளமான இல்லத்திற்குச் செல்வதற்காக
எழுந்து வருக என்று அழைத்தால் அவளும் அதற்கு உடன்படமாட்டாள்; நாமும்
நீ இங்கேயே இரு என்று சொல்ல மனமில்லாதவள் ஆயினோம்; நள்ளிரவின்
உடைந்து விழும் அலையின் ஒலியில் தூங்கும் பரந்த கடலை ஒட்டிய
சிலரே வாழும் பாக்கத்தில் உள்ளோர் கல்லென்ற ஓசையுடன் ஆரவாரிக்க,
இங்குத் தங்குவதாக நீ அமர்ந்திருக்கும் தேர்.
					மேல்
# 160 குறிஞ்சி வெள்ளூர்க் கிழார் மகனார் வெண்பூதியார்

நடுவுநிலைமை, நட்பைப் போற்றல், நாணவுணர்வு நன்றாக உடைமை,
ஈத்து உவத்தல், நற்பண்பு, உலகவழக்கை அறிந்து ஒழுகுதல் ஆகிய நற்குணங்களை
உன்னைக்காட்டிலும் நன்கு அறிவேன் உறுதியாக, மெல்லென
மேற்புறமாக எழுந்த வயிற்றுத் தேமலையும், எழுச்சி மிக்க இளமையான அழகிய முலைகளையும்
உதிர்த்துவிட்டதைப் போன்ற அழகிய நுண்ணிய அழகுத் தேமலையும்,
ஐந்து பகுதிகளாக வகுத்த கூந்தலையும், சிவந்த புள்ளிகளைக் கொண்ட
அழகிய நெற்றியின் மேல் அழகுறப்படிந்த தேன் பாய்கின்ற கொண்டைமயிர்களையும்,
நாட்பட்ட நீரினைக்கொண்ட பொய்கையில் பூத்திருக்கும் குவளை மலர்களை
எதிர் எதிராக வைத்துக்கட்டியதைப் போன்ற இவளது
செவ்வரி பரந்த செழுமையும் குளிர்ச்சியும் மிகுந்த கண்களைக் காண்பதற்கு முன்னர் -
					மேல்
# 161 முல்லை பெருந்தலைச் சாத்தனார்

நம்முடைய வேந்தன் தன் அருந்தொழிலாகிய போரினை முடித்தானாக, மலையிலுள்ள
கண் போன்ற நீலமலர்கள் சுனைகள்தோறும் மலர,
மலர்கள் நெருக்கமாய்க் காட்சியளிக்கும் வேங்கைமரத்தையுடைய அகன்ற நெடிய முல்லைநிலத்தில்,
இம்மென்று ஒலிக்கும் வண்டினங்களின் நெருக்கமான கூட்டம் அஞ்சியோட,
நெடிய தெருவைப் போன்ற நேராக அமைந்த நீண்ட வழியில்,
இளையர் நடையும் ஓட்டமுமாகச் செல்ல, உடைந்த வளையலைப் போன்று
காந்தளின் செழுமையான இதழ்களைக் குதிரையின் கவிந்த குளம்புகள் அறுத்துச்செல்ல,
தோள்களில் வலிமை கட்டுறுதியாய் விளங்க, மிக நெருங்கி வருகின்ற நம் வரவினை
புள்ளினங்கள் கரைந்து அறியும்படி தெரிவித்தனவோ? - தெளிவாக
காதல் பொருந்திய இயல்பினளான, இயைபு இல்லாதவற்றைப்
புதல்வனுக்குக் காட்டிப் பொய்ம்மொழி கூறும்
மஞ்சள் புள்ளித் தேமல் படர்ந்த அல்குலையும், இனிய மொழியையும் உடைய நம் காதலிக்கு -
					மேல்
# 162 பாலை நெய்தல் தத்தனார்

வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலையுடைய பெண்ணான
தன் அழகிய துணையோடு ஆண்புறா சேர்ந்திருக்க,
வருத்தமுடையதாகும்படி எழுகின்ற துன்பம் செய்யும் மாலைப்பொழுதில்,
தனியே இருப்பதனைப் பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்று உன்
நீர் வடிகின்ற மையுண்டகண்கள் துன்பமுற்றனவாய்க் கலங்கிநிற்க,
உம்முடனேயே வருகிறேன் என்று கூறுகின்றாய்; எம்முடன் -
பெரும் பெயர் கொண்ட தந்தையின் நீண்ட புகழ் பொருந்திய நெடிய மாளிகையில்
உன் தாயோடு மிகவும் அதிகமான அன்புச் சூழலில் வளர்ந்த இளம்பெண்ணே! - முன்பு
வேனிற்காலத்து இத்தி மரத்தின் நிலத்தில் தோயாத நீண்ட விழுது
ஒழுகுகின்ற நாரால் கட்டப்பட்ட ஊசலைப் போலக் கோடைக்காற்று வீசித்தூக்கும்போதெல்லாம்
அதன் அடியில் தூங்குகின்ற பெண்யானையின் முதுகில் வருடிவிடும் பாலை வழியில் -
வருவதற்குத் திறன் உள்ளவளாயிருத்தல் இயலுமோ உனக்கு.
					மேல்
# 163 நெய்தல் தாயங்கண்ணனார்

களைப்பாறிக்கொள்ளட்டும்; இரங்கத்தக்கன; நாள்தோறும்
நுண்ணிய மணல்துகளை முகந்துகொண்டு ஓயாது வீசும் ஊதைக்காற்றில்
பகலென்றும் இரவென்றும் பாராமல் கல்லென்ற ஓசையுடன்
சுழன்று ஒலிக்கின்ற வரிசையான மணிகள் தமக்குள் கைகோத்து ஒலியெழுப்ப,
நிலவொளி போன்ற ஒளிதவழும் மணல் மேட்டின் உச்சியில் ஏறிப் போய்வர,
இப்பொழுது என்னுடைய நெஞ்சம் போல, நெடுங்காலமாக மிகவும்
வருந்தின; மிகவும் இரங்கத்தக்கன அவை; பெருங்கடலின் அருகேயுள்ள
கருநிறப் புன்னையின் பக்கத்தில் தனித்திருக்கும் ஒளிபொருந்திய தாழை மடல்
அடிவானத்தில் மறைந்துபோன, விளங்குகின்ற ஒளிபொருந்திய நெடிய சுடரையுடைய
கதிர்கள் வெப்பத்துடன் எழுந்து உள்ளிடமெல்லாம் தகிக்கும் ஞாயிற்றின்
அதிகாலைநேர வனப்பைப் போலத் தோன்றும்
தாழைகளையுடைய அழகிய கடற்கரைச் சோலையின் தலைவனுடைய தேர்க்குதிரைகள் -
					மேல்
# 164 பாலை பேயனார்

மழையே முற்றிலும் இல்லாதிருந்த காட்டுப்பகுதியில், அந்த நிலத்திற்குரிய
சிவந்த கதிர்களையுடைய செல்வனான ஞாயிறு சுட்டெரித்தலால், நிலம் பிளந்துபோக,
உலகம் மிகவும் வருந்தித் துன்புறும் நேரத்தில்
பொருளீட்டப் பிரிந்து சென்றாரெனினும், நல்லதையே செய்தார் என்று நான்
சொற்களால் விளக்கிக் கூறவும் நீ விளங்கிக்கொள்ளவில்லை;
செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்
வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
மிக்க பசியையுடைய குள்ளநரி அருகில் செல்லாமல்
பின்னே திரும்பி ஓடும் பாலைவழியில்
தீங்கு சிறிதுமின்றி வருவார் என்பதை நினையாமால் -
					மேல்
# 165 குறிஞ்சி நல்வெள்ளியார்

மருண்ட பார்வையையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பினில் பாயாது
குறிதப்பிய அம்பின் போக்கை நினைத்துப்பார்த்த கானவன்,
தெய்வம் இறங்கியது இந்த மலை, அது வானகம் செல்க என்று
தெய்வம் உறையும் உயர்ந்த மலையை வழிபடும்பொருட்டு, பலிகொடுத்து எழுந்து
தம் சுற்றத்தோடு மகிழும் குன்றுகளைச் சேர்ந்த நாட்டினன்,
நம்மிடம் வரும்போதெல்லாம் அவனைச் சந்திப்பதற்கான சிரமங்களை அவனுக்கு உரைக்க,
நம்மை மணங்கொள்ளாத அன்பில்லாதவரின் நட்பு
அப்படியே ஆகுக என்று உன்னைப்போல் அவன் கூறவில்லை,
ஒதுங்கி நிற்காது அன்னையிடம் உண்மையைக் கூறு, மிகவும் அதிகமாயின வேற்று மணத்திற்கான தூது.
					மேல்
# 166 பாலை மருதன் இளநாகனார்

பொன்னும் நீலமணியும் போன்ற உன்
நல்ல மேனியும், மணங்கமழும் கரிய கூந்தலும்;
பூக்கின்ற மலரும், மூங்கிலும் போன்ற உன்
அழகிய மையுண்ட கண்களும், வனப்புள்ள தோள்களும் ஆகிய
இவற்றைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளம் மகிழ்ந்து நானும்
அறத்தில் நிலைபெற்றவரைப் போன்ற தன்மையன் ஆனேன்; அதற்கு மேலும்
பொன்னாலான தோள்வளை அணிந்த புதல்வனும் விளையாடக் கற்றுக்கொண்டான்;
தொழிலும் வேறு இடத்தில் இல்லை; நினைத்துப்பார்த்தால்
எதற்காகப் பிரிந்திருக்கவேண்டும்? மடந்தையே!
காதல் என்பது கடலினும் பெரியது!
					மேல்
# 167 நெய்தல் உலோச்சனார்

கரிய கொம்பினையுடைய புன்னையின் மேலோங்கி வளைந்த பெரிய கிளையிலிருந்து
புதியதாய் வந்த வெண்குருகுகள் ஒலிக்குமாயின், ஆய் என்பவனின்
நிறையக் கள்ளுண்டு மகிழும் அமர்வில் பரிசிலைப் பெற்ற
செயற்பாடு நன்றாக அமைந்த நெடிய தேரின் மணியொலிபோல் ஒலிக்கும்
குளிர்ச்சியாயுள்ள அழகிய துறையைச் சேர்ந்தவனின் தூதோடும் வந்த
நீ பெறும் பயனுக்குத் தக்கவாறு கூறும் செய்தியையுடைய வருத்தம் தீர்ந்த பாணனே!
உன் வாயிலிருந்து வரும் பணிவான பொய்மொழிகள் நீக்கிப்போடமாட்டா - பலவாறாகச் சிறப்புக்கொண்ட
புதிய மலர்களைக் கொண்ட ஞாழலோடு புன்னை மலரும் உதிர்ந்து பரவி
மணம் கமழ்கின்ற கடற்கரைச் சோலையில் தன் மாட்சிமைப்பட்ட நலத்தை இழந்த,
இறங்கிய தோள்களில் ஏற்றிக்கட்டிய ஒளிவிடும் வளையலை அணிந்த சிறுமகளின்
பிறை போன்ற அழகிய நெற்றியில் பரவிய பசலையை - 
					மேல்
# 168 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

வண்டுகள் உண்ணும்படியாக மலர்ந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கையின்
பெரிய கிளையில் கட்டிய கொழுத்த கண்களையுடைய தேனடையில்
தேனீக்கள் மொய்த்ததால் கசிந்த இனிய தேன், கீழே பாறையின் மேலுள்ள குழிகளில் வழிய,
அதனைக் குறவர்களின் சிறுவர்கள் உண்டபின் எஞ்சியதைப்
புல்லிய தலையைக் கொண்ட மந்தியின் வலிய குட்டிகள் நக்கும்
நல்ல மலை நாட்டினனே! பண்புடைய செயல் என்று சொல்லத் தகுந்ததோ?
உன்னை விரும்பி உயிர்வாழ்பவளின் இனிய உயிரை எண்ணிப்பார்க்கமாட்டாய்;
அச்சத்தைத் தரும் பாம்புகள் திரியும் மிகுந்த இருளைக்கொண்ட நள்ளிரவில்
மயக்கத்தைத் தருகின்ற சிறிய வழியில் கையிலுள்ள வேலே துணையாக
சந்தனம் கமழும் மார்புடன்
மலைச் சாரலிலுள்ள சிறுகுடியாகிய இவ்விடத்துக்கு நீ வருவது -
					மேல்
# 169 முல்லை இடைக்காடனார்

எண்ணிச் சென்ற காரியத்தை முடித்துவிட்டால், நல்ல நெற்றியையுடையவளே!
திரும்பிவிடுவோம் என்று கூறியவுடன் அவள் பட்ட துன்பமெல்லாம் இப்போது தீரும்படியாக,
ஒலித்தது, வாழ்க! நீண்ட சுவரில் உள்ள பல்லி! -
பரல்கற்கள் நீண்டு கிடக்கின்ற பாலை நிலத்தில், மீன்கொத்திப்பறவையின் தலையைப் போன்ற கள்ளிச் செடியின்
உச்சியில் வெகுவாய்ப் பூத்திருக்கும் பூக்களைக் கொண்ட முல்லையின் கொடிகளை
ஆடுகின்ற தலையையுடைய செம்மறியாட்டின் கூட்டத்தை ஓட்டிக்கொண்டு திரும்பும்
வலிமையான கையையுடைய இடையன் மாலையில் அறுத்து,
வெண்மையான பனங்குருத்துடன் சேர்த்துத் தைத்த, மார்பில் அசைகின்ற அழகிய மாலை
தெரு முழுக்க மணக்கும் மாலைப் பொழுதில்
சிறுகுடிப் பக்கத்தில் உள்ள எம் பெரிய மாளிகையில் -
					மேல்
# 170 மருதம் பரணர்

மடப்பம் பொருந்திய கண்களையும், நறுமணச் சாந்து பூசிய கூந்தலையும், பருத்த தோள்களையும்
வரிசையான வெண்மையான பற்களையும், திரண்டு நெருங்கிய தொடைகளையும் உடைய
பிணைத்த அழகிய தழைகளால் தைக்கப்பட்ட உடையை அணிந்து, தனியாக வந்திருக்கும் இவள்
இந்த இடம் விழாக்கொண்டாடும் இடமாகப் பொலிவுடன் தோன்றுமாறு வந்து நிற்கின்றாள்;
கவனமாயிருங்கள், கவனமாயிருங்கள், எம் கணவனைக் காத்துக்கொள்ளுங்கள்!
ஆரியர்கள் ஒன்று கூடிய பெரும் புகழ் படைத்த முள்ளூர்ப் போர்க்களத்தில்
பலருடன் உருவிய வாளுடன் வந்த ஒளிவிளங்கும் வாட்படை, மலையனது
ஒரு வேற்படைக்குத் தோற்றோடியதைப் போல, நாம்
பலராயிருந்தும் என்ன பயன், இவள் ஒருத்தியின் வலிமை வெளிப்பட்டால்?
					மேல்
# 171 பாலை செங்கண்ணனார்

நீர் வேட்கையால் உந்தப்பட்ட வருத்தமிகு யானையுடன்,
வேனில் காலத்துக் குன்றுகள் சூழவுள்ள வெப்பமான அடிவாரத்தில்
நிலத்தில் செல்வதற்கு இயலாத மெல்லிய தலையையுடைய கன்று
சேரியிலிருக்கும் அழகிய பெண்டிர் மனம் துணுக்குறுமாறு
ஊரிலுள்ள பசுவின் கன்றுகளுக்குள் புகுந்துகொள்ளும் நாட்டையுடையவனே!
பலமலைகளைக் கடந்து செல்லும் கடத்தற்கரிய பாலைவழியில் சென்றுவிட்டால், நம்மைவிட்டு,
எவ்வாறு துயில்கொள்ள இயலும்? வேல்படையில்
நல்ல வேலைப்பாட்டுடன் கட்டப்பட்ட தெளிந்த ஓசையைக் கொண்ட மணிகள் கழன்று வீழ்ந்ததைப் போன்ற
பேய்கள் நிலைகொண்டு நடமாடும் பொழுதைக் கொண்ட நள்ளிரவில்
ஆசையுடன் அவனுடைய நெஞ்சோடு கலந்து
அவனது மார்பினைத் தழுவிக்கொண்டு படுத்திருப்பதை வழக்கமாகக் கொண்ட கண்கள் -
					மேல்
# 172 நெய்தல் நக்கீரனார்

விளையாட்டுத் தோழியருடன் வெள்ளையான மணலில் ஊன்றிவைத்துப்
பின்னர் மறந்தவராய் விட்டுப்போன விதை முளைத்து, முளை தோன்ற
அதற்கு நெய் கலந்த இனிய பாலை ஊற்றி இனிதாக வளர்க்க,
உம்மைக்காட்டிலும் சிறந்தது இந்த உமது தங்கையானவள் என்று
அன்னை கூறினாள் இந்தப் புன்னையது சிறப்பைப்பற்றி;
ஆதலால் வெட்கமாயிருக்கிறது உம்மோடு இங்கு சிரித்துவிளையாட;
புதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல
வலம்புரியாக வெண்சங்கு ஒலிக்கும் ஒளிர்கின்ற நீரையுடைய
துறையைச் சேர்ந்த கொண்கனே! நீ இவளிடம் அன்புசெய்தால்
தங்குவதற்குத் தகுதியான நிழல் வேறிடத்திலும் உண்டு.
					மேல்
# 173 குறிஞ்சி பிரமன் காரி

சுனையிலுள்ள மலர்களைக் கொய்தும், அவற்றை மாலையாகத் தொடுத்தும்,
மலையிலுள்ள செங்காந்தள் பூவைத் தலைமாலையாகச் செய்துதந்தும்,
தன்னை வழிபாடு செய்யும் நம்மை விரும்பி, நம்மேல் இரக்கங்கொண்டு
இந்தக் காம நோய் முருகனால் வந்தது என எண்ணும் மாற்றற்கரிய அன்னையை
கண்ணால் குறிப்பாகக் காட்டி, கனவிலும் வந்துதோன்றி, இந்த நோய்
என்னாலும் வந்ததன்று, பிறதெய்வங்களாலும் வந்ததன்று, நீலமணி போல் தோன்றும்
அந்த மலைநாட்டைச் சேர்ந்தவன் செய்ததாகும் இது என்று சொன்னால்
மொய்க்கின்ற வண்டுகள் ஆரவாரிக்கும் புத்தம்புதிய மாலை அணிந்த மார்பையுடைய
நெடுவேளாகிய முருகனுக்கு ஒரு குற்றம் உண்டாகுமோ? 
வளையணிந்தவளே கூறுவாய்! கேட்கிறேன் நான்.
					மேல்
# 174 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஈந்தின் கற்றையான முற்றிய குலை போன்ற,
ஆளரவம் அற்ற பாலைவழியில் நிற்கும் தாளிப்பனையின்
கொழுவிய கொத்துக்களையுடைய நெடிய மடலிலிருந்து ஆண்பறவை தன் பேடையை அழைத்தால்,
புலி அதற்கு எதிரோசை எழுப்பும் கோடைக்காற்று வீழும் அரிய வழியில்
பிரிந்து சென்ற காதலர் திரும்ப வந்து இனிதே தழுவிக்கொண்டு
பிரியாமல் ஓரிடத்தில் தங்கியிருக்கும்போதும், பெரிதும் மனங்கலங்கி
வருந்துகின்றாய் மடந்தையே என்று சொல்கிறாய் தோழியே!
அப்படித்தான் இருக்கும் அதனை அறியாதவர்களுக்கு;
பிற பெண்களை விரும்பாத கொள்கையுடைய நம் தலைவன் இப்போது விரும்புகின்ற அந்தப் பரத்தையைத்
தன் வளப்பம் பொருந்திய மார்பினில் சேர்த்தனன்;
அவனைத் தழுவுவது எப்படி, அன்பு இல்லாத போது?
					மேல்
# 175 நெய்தல் மதுரைக் கணக்காயனார்

நெடிய கடலைப் புரட்டியெடுத்த வளைந்த மீன்படகுகளைக் கொண்ட பரதவர்
நிறைய மீன்களான கொள்ளைப்பொருளைத் தாறுமாறாய்க் கிடக்கும் மணலில் குவித்து
மீனின் கொழுப்பை உருக்கிய நெய்யை வார்த்துக் கிளிஞ்சலில் ஏற்றிய
சிறிய சுடரைக் கொண்ட விளக்கு வெளிச்சத்தில் தூங்குகின்ற, மணமிக்க மலரையுடைய
புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த துறையைச் சேர்ந்தவனோடு உள்ள நட்பை நம் அன்னை
தான் அறிந்திருக்கவில்லை; நள்ளிரவில்
நம் சேரியிலுள்ள பெண்டிர் கூறிய இழிந்த சொற்களை நம்பிச்
சுடுவது போலப் பார்க்கிறாள் -
கொதிக்கின்ற பாலைப் போன்ற என் பசலை பாய்ந்த மேனியை - 
					மேல்
# 176 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தனார்

தலைவி எம்மை நயந்து வாழ்பவளாதலால் நாமும் அவளை நயந்து
தலைவனை அவள்பால் விட்டுக்கொடுத்ததில் என்ன தவறு? நம் நலத்தை எண்ணுபவனை அவ்விடத்திற்குப்
பெருந்தன்மையினால் கொடுத்திருப்பதை அறியாமல், தலைவிமேல் அவள்
அன்புடையவள் என்பார்களோ? உரைப்பாய் தோழி!
வரிசையாய் நிற்கும் யானைகளின் முகங்களில் காணப்படும் வரிகளைப் போன்று
மொட்டுகள் தளையவிழ்ந்த ஒளிவிடும் செங்காந்தள்,
வாழைத் தோட்டங்கள் உள்ள மலைச் சாரலில் புதுமணம் உண்டாகும்படி செறிந்திருந்து,
யாழிசையைக் கேட்டது போன்ற இனிய ஓசையையுடைய கூட்டமான வண்டுகள்
அருவியின் முழவொலி போன்ற முழக்கத்தோடு ஒன்றுசேர்ந்து
மெல்ல மெல்ல இசைக்கும் மலைச்சாரலிலுள்ள
குன்றுகளை வேலியாகவுடைய வாழ்வதற்கு இனிய தம் ஊரில் இருப்பவர்கள் -
					மேல்
# 177 பாலை பெருந்தலைச் சாத்தனார்

பரந்துபட்ட பெரும் தீயானது காட்டினை அழிக்க,
மரங்களெல்லாம் நெருப்புவாய்ப் பட்டு, வறண்டுபோன இடமான பாலைக்காட்டின்
ஒதுங்கிநிற்கவும் நிழலற்ற அரிய கொடிய வழியினில் பலர் சென்றிருக்கிறார்கள் என்பதை தலைவனின்
குறிப்புகளால் கண்டுகொண்டேன் நான்; ஒழுங்குபட
வேலினையும், அதன் ஒளிர்கின்ற இலையையும் துடைக்கின்றார்; கேடயத்திற்கும்
மயிலிறகு சூட்டி மணி அணிவிக்கின்றார்; 
முன்னைக்காட்டிலும் மிகவும் பலவாக என்மீது இரக்கங்காட்டுகிறார்; இப்போது
வந்துவிட்டது போலும் தோழி! மிகவும் நொந்துபோய்
தீட்டிய அழகைக் கொண்ட மையுண்ட கண்களின் கண்மணிகள்
கேடுவிளைவிக்கும் கண்ணீர்வெள்ளத்தில் நீந்தும் நாள் -
					மேல்
# 178 நெய்தல் பூதன் தேவனார்

அசைகின்ற மூங்கிலின் ஈட்டத்தை மெல்லிதாக உரித்துப் பிசைந்தாற் போன்ற
தாள்தாளாக அமைந்த சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய நாரையால்
இன்பம் நுகரப்பெற்றுக் கைவிடப்பட்ட துயரத்தையுடைய பேடை
கழியின் கரையில் தான் திரியும் பக்கங்களில் சிறிய மீனைப் பிடித்து உண்ணாமல்
தாழையின் அழகிய வளைந்த கிளையில் தனிமைத்துயருடன் தங்கியிருக்கும்
குளிர்ச்சி பொருந்திய அழகிய துறையைச் சேர்ந்தவனுடைய தேரினைக் கண்ணால்
காணவும் முடியவில்லை; வெளியில் சொல்ல வெட்கப்பட்டு,
நள்ளென்னும் யாமத்திலும் கண்ணுறக்கம் கொள்ளேன்;
பறவைகள் எழுப்பும் ஒலியை மணியின் ஓசையாக எண்ணி உற்றுக்கேட்டு
நிலைகெட்டுப்போகிறது அவரை முற்றிலும் நம்பியிருந்த என் நெஞ்சம்.
					மேல்
# 179 பாலை உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்

வீட்டில் முளைத்தெழுந்த வயலைக்கொடியை ஈற்றுப்பசு தின்றுவிட
தான் விளையாடும் பந்தை நிலத்தில் எறிந்து, விளையாட்டுப்பொம்மையைத் தூக்கிப்போட்டுத்
தன் அழகிய வயிற்றில் அடித்துக்கொண்ட என் காரியக்காரியான சிறுமகள்,
மானின் மருண்ட பார்வையைப் போன்ற தன் மயக்கந்தரும் பார்வையோடு
நானும் தாயும் ஊட்டிவிட தேன்கலந்த
இனிய பாலை அருந்தாமல், ஏக்கங்கொண்டு விம்மி
நேற்றைக்குக்கூட அவ்வாறே இருந்தாள்; இன்றோ,
கரிய மீசையும் தாடியையுமுடைய காளையொருவனின் பொய்மொழிகளை ஆதரவாகக் கொண்டு
கடப்பதற்கரிய பாலைவழியில் சென்றுவிட்டாள் என்கின்றனர், தன்
வெண்குருத்துப் போன்ற அழகிய வெண்மையான பற்களில் முகிழ்க்கும் இளநகையைக் காட்டி -
					மேல்
# 180 மருதம் கயமனார்

வயலருகே இருக்கின்ற பலாமரத்தில் முயிறு எனப்படும் சிவந்த பெரிய எறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை
கழனியில் இரைதேடிவந்த நாரை தேய்த்துச் சிதைத்ததால், செந்நெல்
கலந்த வெள்ளை அரிசியைப் போல் எறும்புகளும் அவற்றின் முட்டைகளும் பரந்துகிடக்கும் ஊரைச் சேர்ந்தவன்
பல பெண்களைப் பெறும்பொருட்டு நம் வீட்டுக்குள் வருவதில்லை;
அப்படி வந்தாலும் மாநிறத்த தலைவி அவனால் பெறும் நன்மையை நம்பி ஊடலை விட்டொழிக்கமாட்டாள்;
அன்னி என்பவன் பெரியவன்; அவனைக் காட்டிலும் சிறந்த திதியன் என்பவனும் ஆகிய
இரு பெரும் வேந்தர்கள் போரிட்டு அதனால் வெட்டிச்சாய்த்த
புன்னை மரத்தின் துயரமிக்க நிலையைப் போல
என்னொருத்தியோடு போகும் போலும் இந்த இருவருடைய பகைமை.
					மேல்
# 181 முல்லை உம்பற்காட்டு இளங்கண்ணனார்

கூரைச் சாய்ப்பினுள் கூடுகட்டியிருக்கும் குருவியின் கருத்த மோவாயையுடைய ஆண்
வேறிடத்துச் சென்று அங்கு ஒரு துணையுடன் அதன் இருப்பிடத்தில் தங்கி
மீண்டும் தன் கூட்டுக்கு வந்தபோது அதன் மேனியின் மாறுபாடான நிலையைப் பார்த்த பெண்குருவி
அடர்ந்திருக்கும் ஈங்கைப் பூவைப் போன்ற
சிறிய பலவான தன் குஞ்சுகளோடு சேர்ந்து, ஆண் குருவி கூட்டுக்குள் புகுவதைத் தடுத்ததால்
மழைத் தூறலில் நனைந்த முதுகினையுடையதாய், வெளியே
நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு மனமிரங்கி, நெடும்பொழுது ஆராய்ந்து,
இரக்கமுள்ள மனத்தோடு தன்னிடம் அழைக்கச்
சேவற்குருவியின் செயலற்ற நிலைபோல வந்த மயக்கத்தையுடைய மாலைப்பொழுது
வந்து சேர்ந்ததால், தனது இனிய ஒலியை இழந்த
மாலை அணிந்த புரவி, பசுமையான பயிர்களை மிதித்து அழிக்க,
வந்தது தலைவனது தேர்,
தப்பிப்பிழைத்தது இவளின் அழகான நெற்றியின் அழகு.
					மேல்
# 182 குறிஞ்சி அதியன் விண்ணத்தனார்

நிலாவும் மறைந்தது; இருளும் பரவிக்கிடக்கின்றது;
ஓவியம் போன்ற இடத்தையுடைய வீட்டின் எல்லையில்
பாவையைப் போன்ற நம்மைப் பாதுகாக்கின்ற
சிறந்த மேம்பாட்டையுடைய அன்னையும் தூங்கிவிட்டாள்;
காணாமற் போக்கிய நல்ல அணிகலனைக் கண்டெடுத்தாற் போன்று
தலைவனின் நல்ல மார்பினை அடைந்து, தழுவிக்கொள்ள, மெல்லமெல்லப்
பார்த்துவருவோம்! போகலாமா தோழி?
கீழும் மேலும் நடத்திச் செல்வோர் விட்டகன்ற
வறிய தலையையுடைய பெருங்களிற்றைப் போல
தனியனாக வந்திருக்கின்றான், கண்ணீர் விடாதே நீயும்.
					மேல்
# 183 நெய்தல் கயமனார்

தமது நாட்டில் விளைந்த வெண்ணெல்லைக் கொணர்ந்து
பிற நாட்டில் விளைந்த உப்பினுக்கு விலையாகக் கூறி,
நீண்ட வழித்தடத்தில் வரிசையாகச் சென்று, நிலவு போன்ற மணலைக் கடந்து
அங்கே தங்கியிருத்தலை வெறுக்கும் சுற்றத்தோடு புலம் பெயர்ந்து
உப்பு வணிகர்கள் செல்வது அவ்வூரினருக்குத் துன்பம் தருவதாகும்;
அறியாமையையுடையாய், தலைவனே! - இடந்தோறும்
துன்புறுத்தி அலைக்கும் ஊதைக்காற்றோடு
நீ இல்லாத தனிமைக்காலத்து வரும் மாலைப்பொழுதும் சேர்ந்துகொள்கிறது;
கூட்டமான மீன்களை நிறைய உண்ட வெண்குருகு மிதித்த
நீரற்ற குளத்தின் நெய்தல் மலர் போல
இவள் உயிர்வாழமாட்டாள் என்பதனை நினைத்துப்பார்க்காத நீ -
					மேல்
# 184 பாலை நெய்தல் தத்தனார்

ஒரே ஒரு மகளை உடையவள் நான்; அவளும்
போர்க்களத்தில் மிக்குச் செல்லும் வலிமையையுடைய கூரிய வேலையுடைய காளையோடு
பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்;
இப்பொழுது தாங்கிக்கொள் உன் வருத்தத்தை என்று சொல்கிறீர்! அது
எப்படிச் சாத்தியமாகும்? அறிவுள்ள மக்களே!
நினைத்துப்பார்த்தால் நெஞ்சம் கொதிக்கிறது - மையுண்ட கண்களின்
மணிகளில் வாழும் பாவையானது வெளியில் வந்து நடக்கக் கற்றுக்கொண்டதைப் போல என்
அழகிய சாயலையுடைய சிறுமகள் விளையாடிய
நீல மணி போன்ற நொச்சியையும் திண்ணையையும் கண்டு -
					மேல்
# 185 குறிஞ்சி பரணர்

குறையாத காம நோயோடு வருத்துகின்ற துன்பத்தால் கலங்கி
காமம் எல்லைமீறிப் போக செயலற்ற நிலையிலுள்ள துயரத்தைக்
கண்டும் என்மீது அன்புகொள்ளாயாயின் - பாணர்கள்
பரிசிலாகப் பெற்ற விரிந்த பிடரி மயிரையுடைய நல்ல குதிரைகளின்
கவிந்த குளம்புகள் தடம்பதித்ததால் மலையில் ஏற்பட்ட சிறிய வழியில்
இரவலர்கள் வருத்தமின்றி ஏறுகின்ற பொறையனாகிய சேரமானின்
புகழ் பெற்ற உயர்ந்த மலையான கொல்லிமலையின் மேற்கே
அகன்ற இலைகளையுடைய காந்தளின் ஆடுகின்ற பூக்குலைகளில் தேனெடுத்து
வண்டினங்கள் உருவாக்கிய பல கண்களையுடைய தேனடைகளின்
தேனை உடைய நெடிய மலையின் தெய்வம் பொறிக்கப்பட்ட
செயல்திறன் கொண்ட கொல்லிப்பாவையைப் போன்றவள்
என் உயிரை எடுக்க எண்ணுகிறாள் - நான் நொந்துபோவேன்.
					மேல்
# 186 பாலை அறுவை வாணிகன் இளவேட்டனார்

கல்லில் ஊறும் ஊற்றில் சேர்ந்துள்ள நீரைக் குழியிலிருந்து முற்றிலும் அற்றுப்போகுமாறு உறிஞ்சி,
கரிய சொரசொரப்பான நீண்ட கையை நீட்டி நீரைத் தாங்கிக்கொண்டு
பெரிய கையையுடைய யானை தன் பிடியை எதிர்கொண்டு ஓடும்
காடு முற்றிலும் வெம்பிப்போன வறட்சி மிகுந்த பாலைநிலத்தில்,
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது -
பிறருக்கு உதவவேண்டும் என்ற முனைப்பில் முயற்சிமேற்கொள்ளும் பேரருள் கொண்ட நெஞ்சத்தோடே
யாவரும் விரும்பும் பொருளீட்டும் ஆவல் மேற்கொண்ட
நாம் விரும்பும் காதலர் சென்ற வழி.
					மேல்
# 187 நெய்தல் ஔவையார்

நெய்தல் மலர்கள் கூம்பிப்போக, நிழல்கள் கிழக்குத் திசையில் நீண்டுவிழ,
மலையைச் சேர்ந்த ஞாயிறு சிவந்து நிலத்தின் வெப்பம் தணிய,
பல பூக்களைக் கொண்ட கடற்கரைச் சோலையும் இருள்சூழ நின்றது;
வரிசையான மணிகள் ஒலிக்க, பொழுது சாய தேரில் குதிரையைப் பூட்டி,
மெய்யெல்லாம் மிகுந்துதோன்றும் காதலுடன் நாம் வணங்கி விடைபெற,
தேரும் செல்கின்ற பக்கத்தில் மறைந்துபோகும்; இந்த ஊரோடு
என்ன ஆகுமோ அது? தேன் மணக்க
மலரூதும் வண்டுகள் இசைபாடும் மலர்மாலை அணிந்த மார்பில்
ஒளி தவழும் வளைந்த அணிகலன்கள் அணிந்த தலைவனோடு
இனிதாக நகை செய்தபடி நாம் விளையாடிய சோலை -
					மேல்
# 188 குறிஞ்சி கண்ணகனார்

நீர் வளமுடைய மலைச்சரிவில் செழித்து வளர்ந்த வாழையின்
வளைந்த மடல்கள் ஈன்ற கூரிய வாயையுடைய குவிந்த மொட்டு
ஒளிரும் இழையணிந்த மகளிரின் ஒளிவிடும் வளையல்களைத் தொடுகின்ற
மெல்லிய விரல்களிலுள்ள மோதிரம் போல, காந்தளின்
வளமையான இதழ்களில் தோய்கின்ற, வானத்தை எட்டும் மலைநாட்டினனே!
நல்லது விளையுமிடத்தில் தீயதும் உடன் தோன்றும் என்பது
அப்பொழுதே  நன்றாக அறிந்திருந்தாளாதலால், குன்றத்துத்
தேன் மிக்க மலைச்சரிவில் வளர்ந்து திரண்ட
மூங்கில் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோகுமாறு ஆகமாட்டாள்.
					மேல்
# 189 பாலை இடைக்காடனார்

அவர் இல்லாமல் உயிர்வாழாத நம்மை விரும்பி அருள்செய்ய
இன்னும் வரவில்லை என்றாலும் பாணர்கள்
சினம் தணிவதற்கரிய தெய்வத்துக்கு முன்னர், சீறியாழின்
நரம்புகளை இசைக்கும் இசையைப்போல இனிய குரலையுடைய குருகினங்களையுடைய
கங்கையாற்று மரக்கலத்தில் ஏறிச் சென்றிருப்பார் போலும்; 
வேறு எந்தச் செயலையேனும் செய்கிறாரோ அவர்; கொடிய செயலாகிய
கொலைத்தொழிலில் வல்ல வேட்டுவன் விரித்த வலையினின்றும் தப்பிப்பறந்துபோன
காட்டுப்புறாவின் சேவல், வாயில் நூலைக்கொண்டு பின்னும்
சிலந்தியின் அழகிய வலையைக் கண்டு வெருண்டோடும்
காற்றால் அசையும் காய்ந்த கிளைகளைக்கொண்ட பாலைக்காட்டுவழி சென்றவர் -
					மேல்
# 190 குறிஞ்சி நக்கண்ணையார்

துன்புற்று நலிந்துபோவாய்! வாழ்க! நெஞ்சமே! பகைவரின்
கடத்தற்கரிய அரண்களை வென்ற, மழைபோல் வளவிய கள்ளையும்,
புள்ளிகள் படர்ந்த வேலையுமுடைய சேந்தன் என்பானின் தந்தையாகிய,
தேன் கமழ்கின்ற விரிந்த மலராலான மாலையையும், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையும் உடைய அழிசி என்பானின்
வண்டினம் மொய்க்கும் நெய்தல் நெற்பயிர்களுக்கிடையே மலர்கின்ற,
அந்தப் பூக்களினின்றும் தேன் வழிந்தோடும் அழகிய வயல்வெளியைக் கொண்ட ஆர்க்காடு போன்ற
அழகிய, பருத்த தோள்களோடு பிற நலன்களும் சிறந்து விளங்கிய,
வலைப்பட்ட மானைப்போன்ற, குளிர்ச்சியான கண்களையுடைய சிறுமகளின்
சில சொற்களே பேசும் பவளம் போன்ற வாயினில் தோன்றும் சிரிப்பினால் மகிழ்ந்துபோனவனே! -
					மேல்
# 191 நெய்தல் உலோச்சனார்

சிறிய பூக்களைக் கொண்ட ஞாழலின் தேன் செறிந்திருந்த ஒளிரும் பூங்கொத்துக்கள்
அழகிய அணிகலன்களை அணிந்த மகளிர் நெடிய மணலில் செய்த
வண்டல்மண்ணால் ஆன பாவையின் அழகிய முலைகளின் பரப்பில்
ஒளிரும் புள்ளிகளையுடைய சுணங்கைப் போல மெல்லிதாகப் பரவிவிழும்
கண்டல் மரங்களாகிய வேலி சூழ்ந்த அழகிய சிறுகுடிக்கு
இரவில் வந்தது ஒரு தேர் என்று சொல்லும்
ஒரு பேச்சு எழுந்தது இவ்வூரில்; இங்கு என் போல் பலர் இருக்க
என்னைப் பார்த்தாள் அன்னை; நாளை
கழியிலுள்ள நீலமணி போன்ற முள்ளிச்செடியின் பூவைக் கொய்யமுடியாவிட்டால்
அழகுமிக்க என் மேனியெழில் என்னோடிருப்பது அரிதாகும்; அந்த நீலமணிபோலும் கழியிலுள்ள
மணமிக்க பூக்களைக் கொண்ட கடற்கரைச் சோலைக்கு வந்து அவரின்
தேர் வறிதே திரும்பிச்செல்வது அதனைக்காட்டிலும் அரியதாகும்.
					மேல்
# 192 குறிஞ்சி பரணர்

இரத்த வெறிகொண்ட அச்சம் பொருந்திய வலிய புலியானது
வலிமை மிகுந்த ஆற்றலுடைய இளமையான களிற்றினை எதிர்பார்த்திருக்கும்
மரங்களடர்ந்த சோலை நிரம்பப் பூழியரின்
நல்ல நிறங்கொண்ட ஆட்டுமந்தையைப் போல அன்றைக்குரிய இரையைத் தேடி உண்ணும்
மாரிக்காலத்து கரடிகளைக் கொண்ட மலைப்பாங்கான வறண்ட நிலத்தின் நீண்ட வழியில்
நீ என்னை விரும்பி வருவது ஏன்? என்று பலவாறாக வருந்திக்கூறி
அழுதவளாய் இருக்கின்ற அழகிய மாமை நிறத்த அரிவையே!
பயன்தரும் பலாமரங்களையுடைய கொல்லிமலையின் மேற்குப் பக்கத்தில்
பூதமாகிய தெய்வங்கள் உருவாக்கிய புதிதாகச் செய்யப்பட்ட பாவை,
விரிந்த கதிர்களையுடைய இளவெயிலில் காட்சியளிப்பதைப் போன்ற உனது
அழகிய மேனி வனப்பினை நினைத்து வருவதால் எனக்கு
பாதுகாப்பானது இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் வழி.
					மேல்
# 193 பாலை நற்றாமனார்

உருக்கிய அரக்குப் போன்ற நிறத்தையும், வட்ட வடிவினையும் கொண்ட மொட்டுக்களையுடைய ஈங்கையின்
பஞ்சு போன்ற தலையையுடைய புதிய மலரின் தேன்துளி உன்னோடு கலக்க,
நிறைந்த நீருள்ள புதிதாய் மழைபெய்த நிலங்களில் புகுந்து, அத்துடன் நிற்காமல்
எமது பெரிய ஊர்ப்புறத்தையும் சூழவரும் பெரிய குளிர்ந்த வாடைக்காற்றே!
உனக்குத் தீங்கொன்றும் நான் அறிந்தவளில்லை;
பருத்த என் தோள்களில் செறித்த என் ஒளிமிக்க தோள்வளைகள் நெகிழும்படி செய்த என் காதலர்
அரிய செயலான பொருளீட்டல் காரணமாகப் பிரிந்துசென்றார்; எனவே
யாருமில்லாமல் ஒரு மூலையில் கிடந்து
பெரிய துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவளை வருத்தவேண்டாம்.
					மேல்
# 194 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்

வாழ்க! தோழியே! கைம்மாறு
என்ன செய்வோம் நாம்? பெரிய வாயையுடைய
கன்று தன் பக்கத்தில் நிற்க, தன் பெண்யானையைச் சேர்ந்து இன்புறும்
வலி மிகுந்த உயர்ந்த கொம்புகளையுடைய, நிலத்தைத் தொட்டுக்கொண்டு இழுத்துச் செல்லும் நீண்ட கையையுடைய
பெருமை மிக்க யானைக்கு அன்றியும், மலை மேலே
தனித்த நிலைகொண்ட பரண்களை விட்டுப்போய்
மந்தியும் அறியாத மரங்கள் செறிந்த ஒரு ஓரத்தில்
குன்றுகளையுடைய மலைநாட்டினனோடு நாம் மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருக்க
இரும்பாலாகிய அரிவாளால் அரிந்துகொள்ளப்போகும் தினையின்
பெரிய கதிர்களைக் கொத்தித்தின்னாத சிறிய பச்சைக்கிளிகளுக்கும் -
					மேல்
# 195 நெய்தல் பெருங்குன்றூர்க் கிழார்

மனமிரங்காமலிருத்தல் மிகவும் கொடிதானது - கரிய கழியில்
குட்டியான நீர்நாய் கொழுமையான மீன்களை நிறைய உண்டு
தில்லை மரப் பொந்தினில் படுத்துறங்கும்
மென்மையான கடற்கரைத் தலைவனே! நான் கண்டிருக்கிறேன்;
கல்லென்று ஒலிக்கின்ற பறவைகளைக் கொண்ட கடற்கரைச் சோலையைக் கொண்ட அழகிய தொண்டிநகரில்
நெற்கதிர் அறுக்கும் உழவருடைய கூரிய அரிவாளால் அறுபட்டதனால்
பல இதழ்களுடன் அசைந்தாடும் குவியாத நெய்தல் மலர்
நீரில் அலைபடுகின்ற தோற்றத்தைப் போல
கண்ணீரால் நனைந்து கலங்கி அழுதுநிற்கும் நீ விரும்பியவளின் கண்கள் -
					மேல்
# 196 நெய்தல் வெள்ளைக்குடி நாகனார்

பளிங்கை நெருக்கமாய் வைத்தாற் போன்ற பலவான கதிர்களின் இடையிடையே
பாலை முகந்து வைத்தாற் போன்ற புத்தம்புதிய வெண்மையான நிலவொளியினைக் கொண்ட
கண்ணேணியாலும் இடையூறு ஏற்படாத நிறைந்த முழுமதியே!
நற்பண்புகளும், நேர்மையும் நீ உடையாய் ஆதலின்
உன்னிடமிருந்து மறைந்து வாழும் உலக உயிர்கள் இல்லை என்பதாலும்
என்னிடமிருந்து மறைந்து வாழ்வோரின் இருப்பிடத்தைக் காட்டுவாய்!
நல்ல அழகெல்லாம் இழந்த என்னுடைய தோளைப் போல் மெலிவுற்று
சிறுகச் சிறுகக் குறைந்துபோகிறாய்;
அறிந்ததொன்றைக் கூறாது பொய்த்தலால் இக் குறைவு உனக்கு நேரிடுகிறதோ?
					மேல்
# 197 பாலை நக்கீரர்

தோள்கள் தம் தோள்வளைகள் நெகிழ்ந்துபோகுபடி ஆயின; நெற்றியும்
பற்றியேறும் பீர்க்கங்கொடியின் மலரைப் போன்று பசலை படர்வதாயிற்று;
கண்களும் குளிர்ந்த கண்ணீரில் எப்பொதும் மூழ்கிக்கிடக்கின்றன; ஐயகோ!
தெளிவாக அறிந்துகொண்டோம் உறுதியாக, இனித் தேய்ந்தொழியும் என் உயிர் என்று
அழவேண்டாம், வாழ்க தோழி நீயே! உன்னுடைய
தாழ விழுந்து நீண்ட செழுமையான கூந்தலைப் போன்று வானத்திலிருந்து நிலம்வரை கால்வீழ்த்து,
வண்டுகள் மொய்க்கும் புதிய மலரை உண்துறையிலிருந்து கொணர்ந்த
மிக்க மடப்பத்தையுடைய மகளிரின் முன்னங்கையிலிருக்கும், சிறிதளவே திரட்சியுள்ள
பொன்னாலான வளையல்களைப் போல மின்னி, கூட்டமாக ஒன்று சேர்ந்து
இனிய இசையையுடைய முரசைப் போல முழங்கி, மன்னர்களின்
கோட்டை மதில் உச்சியில் நடமாடும் வீரர்கள் கொண்டிருக்கும் பலவான தோல்கேடயங்கள் போல
செல்கின்ற கார்முகில்கள் தவழட்டும், அவரின் நல்ல மலைகளையுடைய நாட்டில்.
					மேல்
# 198 பாலை கயமனார்

தொலைவிலிருந்து வரும் மிக்க வலிமையுடைய இளைஞனே! யா மரங்கள் உயர்ந்து
ஓமை மரங்கள் நெடுகிலும் காணப்படும் பாலைக்காட்டு வழியில்
நேற்று அப்பக்கமாக சென்ற என் மகளைப் போல் இவள்
என் கண்ணுக்குத் தெரிவதால் கண்ணீர் பெருகுகின்றது; அவளது தந்தையின்
ஊரிடத்தே உம்மை உபசரித்துத் தொழுவேன்; நுண்ணிய பல
வரிகள் பொருந்திய உயர்ந்துநிற்கும் அல்குலில் அரும்பிய சுணங்கும்,
நேராக விளங்கும் வெண்மையான பற்களும், அழகுள்ள மாலையும்,
ஒருசில வளையல்களும், நிறைந்த கூந்தலும் உடையவள் அவள்;
கரிய தாடியையும், நல்ல பிடரியையும், வலிமையுள்ள நீண்ட கைகளில்
வலிய வில்லையும் அம்பையும், குன்றாத வளமிக்க கள்ளுணவையும் கொண்ட
தந்தையின் ஊர் இதுவே;
அவளைப் பெற்றவள் நான்; சிறந்து விளங்குக உமது பெயர்.
					மேல்
# 199 நெய்தல் பேரி சாத்தனார்

உயர்ந்த மணல் மேடு கழுத்துவரை மூடிய நீண்ட கரிய பனையின்
பருத்த மடலில் கட்டிய கூட்டில் இருக்கின்ற பிரிவுத்துயரத்தையுடைய வெண்குருகு
நள்ளென்னும் நடுயாமத்தில் வருந்திக் குரல்கொடுக்கும்போதெல்லாம் உருகிச்
சேறு போன்ற நிலையிலுள்ள என் உள்ளத்தோடு என் மனமும் உடைந்து
இன்னும் உயிரோடு இருக்கின்றேனே வாழ்க, தோழியே! சூழ் கடலில்
விரைந்து செல்லும் சுறா மீனைப் பிடிக்க வலை வீசி எறிந்த வளைவான மீன்பிடிப் படகினையுடைய பரதவரின்
இழுக்கின்ற விசையையுடைய தூண்டில் ஆங்காங்கு இருக்க,
காற்று மோதியதால் எரிகின்ற ஒளிக்கற்றை சாய்ந்து பரவிய நெருக்கமான விளக்குகள்
கருநிற விசும்பின் விண்மீன்களைப் போல்
மெல்ல மெல்ல இமைக்கின்ற துறையையுடைய தலைவனின்
உடம்பை அணைத்து முயங்கும் முயக்கத்தைப் பெறாதபோது -
					மேல்
# 200 மருதம் கூடலூர் பல் கண்ணனார்

அரும்புகளை இருபுறமும் வரிசையாக வைத்துக்கட்டிய ஒரு கதிரைப் போன்ற
ஒளிவிடும் கொத்தினைக் கொண்ட நொச்சி மாலையைச் சூடிக்கொண்டு
ஆறு நீளக் கிடந்ததைப் போன்ற அகன்ற நெடிய தெருவில்
திருவிழா பற்றிய செய்திகளைக் கூறும் முதுமை வாய்க்கபெற்ற குயவனே!
இதனையும் அங்கு தெரிவிப்பாயாக!
ஆம்பல் நெருங்கி வளர்ந்த இனிய பெரிய நீர்நிலைகளைக் கொண்ட
பொய்கையூருக்குப் போய்,
கையினால் தடவுதற்குரிய நரம்பினால் இசைக்கும் பாட்டுக்களைக் கொண்ட பாணன்
செய்த துன்பங்கள் நாளுக்குநாள் பெரிதாகின்றன, கூரிய பற்களையும்
மெல்லிதாக அகன்ற அல்குலையும் கொண்ட மகளிரே! இவனுடைய
பொய் பொதிந்த கொடிய சொற்களினின்றும் உங்களைக் காத்துக்கொள்வீராக என்று.
					மேல்



# 201 குறிஞ்சி பரணர்

மலையில் வசிக்கும் குறவனின் அன்புக்குரிய இள மகள்
கிடைக்கமாட்டாதவள், கடும் காவலுக்குட்பட்டிருப்பவள்,
உன் சொல்லைப் புரிந்துகொள்ளாதவள், இளம்பருவத்தாள், அப்படிப்பட்டவளை
நினைக்கக்கூடாது என்கிற தோழனே! ஆனாலும்,
சிவந்த வேர்ப்பலாவின் பழங்கள் நிறைந்த கொல்லிமலையின்
தெய்வம் காக்கும் குற்றமற்ற உயர்ந்த உச்சிமலையில்
அழகிய வெள்ளைநிறத்த அருவி உள்ள மேற்கு மலையின் அகத்தே
காற்று மோதிவீசினாலும், சீறும் பெருமழை ஓங்கியடித்தாலும்
இடி சினந்து அறைந்தாலும், தீங்குகள் பல நேர்ந்தாலும்
பெரிய இந்த நிலம் நடுங்கி மேலே எழுந்தாலும், தன் அழகிய நல்ல வடிவம்
கெடாத தன்மையுள்ள கொல்லிப்பாவை போல
நீங்குவாள் அல்லள் அவள் என்னை நெஞ்சைவிட்டு -
					மேல்
# 202 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

புலியுடன் போரிட்டதால் சிவந்துபோன புலால் நாறும் அழகிய செம்மையான கொம்புகளில்
உண்டாயிருக்கும் பலவான முத்துக்கள் ஒலிக்க, வலிமை மிக்கு,
கட்டாந்தரையான மேட்டுநிலத்தில் உள்ள பருத்த அடியினைக் கொண்ட வேங்கையை முறித்து, கன்றோடு
தன் இளைய பெண்யானைத் தழுவிக்கொண்ட நீண்ட கைகளையுடைய ஆண்யானை,
தேனைச் செய்யும் பெரிய வண்டுக்கூட்டம் சிதறிப்பறந்தோட, வேங்கை மரத்தின்
பொன்னைப் போன்ற பூங்கொத்துக்களைக் கவளங்களாகப் பேணி ஊட்டும் 
பெரிய மலையின் பிளவிடங்களைத் தன்னகத்தே கொண்டு மிக்க அழகாகத் தோன்றுவதைக்
காண்பாயாக! வாழ்க சிறுபெண்ணே! உன் தந்தைக்குரிய,
கார்த்திகை மீன்களோடு கூடிய அறம்செய்வதற்கான முழுத்திங்கள் நாளில்
வரிசையாகச் செல்லும் சுடர்களைக் கொண்ட நீண்ட கொடி போன்ற விளக்குகளைப் போல
பலவான பூக்களைக் கொண்ட கோங்க மரங்கள் அழகுசெய்யும் காடு -
					மேல்
# 203 நெய்தல் உலோச்சனார்

முழங்குகின்ற கடலலைகள் கொழித்து உருவாக்கிய பெரிதான மணல்மேட்டில் உள்ள
பெரிதான அடிப்பகுதியை உடைய தாழையின் முள்ளையுடைய நீண்ட தாள்களின்
உள்மடலில் செழித்துத்தழைத்த மொட்டு முதிர்ந்த, தூய்மையான பொலிவுபெற்ற
சங்கினை நீட்டிவைத்தது போன்ற, வெள்ளையான பூவைக்கொண்ட தாழையானது,
ஓங்கி வீசும் அலைகள் மோதுவதால் சிலிர்த்து வாய்திறக்கத் தாது உதிர்ந்து
சிறிதளவு மக்கள் உள்ள கடற்கரை ஊரின் தெருவில் எழும் புலவுநாற்றத்தைப் போக்கும்
மணம் கமழ்கின்ற கடற்கடைச் சோலையில் ஒன்றிய நமது நட்பு
ஒரு நாள் பிரிந்தாலும் உயிரோடிருப்பது அரிது என்று கருதாமல்,
விரைந்து வரும் ஓட்டத்தையுடைய குதிரை பூட்டிய தேரின் வரவை அங்கு தடுத்துநிறுத்துமாறு
செய்த தன் தவற்றோடு,
அவரைக் காணாத என் வருத்தத்திலும் சேர்ந்துகொள்கிறது இந்த இரக்கமுள்ள ஊர் -
					மேல்
# 204 குறிஞ்சி மள்ளனார்

தளிர்கள் சேர்ந்த குளிர்ச்சியுள்ள தழையுடையை அணிந்து உனது தந்தையின்
கிளிகடிகருவியால் காக்கப்படும் அகன்ற தினைப்புனத்திற்கு ஞாயிறு தோன்றும் காலையில் வரவா?
பறித்த சுனைக் குவளை மலரைச் சூடி, நாம் முன்பு சேர்ந்திருந்த
நறிய குளிர்ந்த மலைச்சாரலில் ஆடுவதற்கு வரவா?
உன் இனிய மறுமொழியை விரும்பி வருந்திய என் மனம் மகிழுமாறு
கூறுவாயாக இனி, மடந்தையே! உன் கூர்மையான பற்களுக்கிடையே ஊறும் அமுதத்தை உண்பேன் என்று
நான் உனக்குச் சொல்ல, அதற்குப் பதிலாக
தான் ஏற்படுத்திய குறியிடத்துக்கு வந்து இனிய மொழிகளைக் கூறி,
ஆண்மானைப் பிரியும் இளைய பெண்மானைப் போல நீங்கி
மிக்க மூங்கில் உயர்ந்து நிற்கும் தன் சிறுகுடிக்குப் புறப்பட்டுச் செல்லும்
கொடிச்சியாகிய தலைவி செல்லுகின்ற முதுகினைப் பார்த்து
அவளைப் போகவிட்ட என் நெஞ்சம் அவளை நினைத்தலை விடாது.
					மேல்
# 205 பாலை இளநாகனார்

அருவி ஆரவாரிக்கும் பெரிய மலைகளின் அடுக்குகளில்
ஆளியாகிய மிகவும் கொடிய விலங்கு வேட்டையாட எழுந்து, கொல்லவல்ல நகங்களையும்
அழகிய பொறிகளையுமுடைய புலியைக் கொன்ற, கூரிய நுனியையும்
ஏந்திய வெண்மையான கொம்புகளையும் உடைய வலிமையான ஆண்யானையை இழுத்துச் செல்லும்
நெருங்கமுடியாத காட்டுவழி என்று கருதாமல், நீ
குவளை மலர் போன்ற மையுண்ட கண்களையுடைய இவளை இங்கு விட்டுவிட்டு
பொருளீட்டச் செல்வாயானால், இன்றோடே
போய்விடும், கொல்லையிலுள்ள
வளைந்த முள்ளையுடைய ஈங்கையின் நீண்ட கரிய அழகிய தளிரின் மீது
மிக்க நீருடன் விரைவாகப் பெய்யும் மழை பொழியும்போது உண்டாகும்
அழகிய நிறம் போன்ற இவளின் மாமையின் அழகுதானே - 
					மேல்
# 206 குறிஞ்சி ஐயூர் முடவனார்

மெல்லிய பஞ்சினைத் தலையிலே கொண்டு பிஞ்சுவிட்டிருக்கும் கதிர்கள் பால்பிடித்துத் தலைசாய்க்கக்
கதிரை மூடிய தாள்கள் காற்றால் அசைகின்றன தினைப்பயிருக்கு என்று
குத்துப்பாறையின் உச்சியில் கொத்துவதற்காகக் கூட்டங்கூடி
சிவந்த வாயையுடைய பச்சைக்கிளிகள் கவர்ந்துகொண்டுபோகும் என்று அவ்விடத்தில்
தட்டை எனும் கருவியை அடித்து ஒலித்து, கவண்கல்லும் வீசுக என்று
எமது தந்தை வந்து சொல்ல, எம் தாயும்
நல்ல நாளைக் காட்டும் வேங்கை மரமும் மலர்க இனி என்று கூறி
என் முகத்தை நோக்கினாள், எதற்கோ தோழி!
தினைப்புனங்காக்க இவள் செல்வாள் என்றா? வீட்டுக்குள் இவளைப் பூட்டிவைக்கவேண்டும் என்றா?
மலை பொருந்திய நாட்டுக்காரனோடு உள்ள நமது உறவை
அறிந்துகொண்டாளோ? அதனை அறிந்திலேன் நான் -
					மேல்
# 207 நெய்தல் ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்

கண்டல் மர வேலியைக் கொண்ட, கழி சூழ்ந்த தோட்டக்காலில்
முள்ளிச் செடியால் வேயப்பெற்ற குறுகலாய் இறங்கும் கூரையையுடைய குடில்களையுடைய,
நிறைய மீன்களைக் கொள்பவர்கள் வசிக்கும் பாக்கம் முழுதும் ஆரவாரிக்க,
நெடிய தேரினைச் செய்துகொண்டு நம் காதலர் வருவது தடுக்கப்படமுடியாதது;
மலை போலக் குவிந்துகிடக்கும் மணல் மேடுகளைக் கடந்து
வந்த காதலர் வெறுங்கையாய்த் திரும்பத்தான் செய்வாரோ? (அவ்வாறாயின்) இரவில்
இளையரும் முதியரும் சுற்றத்தோடு கூடி
கொல்ல வல்ல சுறா கிழித்துவிட்டதாக, சுருங்கிய மெல்லிய நார்களைக் கொண்டு
வலையை முடிதலில் திறமைகொண்ட பரதவரின் மடப்பமுள்ள மொழியையுடைய இளமகள்,
வலையையும் தூண்டிலையும் எடுத்துக்கொண்டு, பெரிய காற்றினால்
அலைகள் எழுகின்ற பெருங்கடலுக்குச் செல்லும்
கொலைத் தொழிலையுடைய கொடிய சிறியவரிடம் அகப்பட்டுக்கொள்வாள்
					மேல்
# 208 பாலை நொச்சி நியமங்கிழார்

வெற்றி பொருந்திய ஒளிரும் அணிகலன்கள் நெகிழும்படியாக விம்மி அழுது,
அரித்தோடும் நீராய் தெளிந்த கண்ணீர்த்துளிகள் முலைகளினிடையே விழுந்து நனைக்க,
சற்றும் குறையாமல் மனமுருகி அழும் கண்ணுடனே பெரிதும் நிலைகெட்டு,
எதற்காக வருந்தி வாடுகிறாய்? சுடர்விடும் நெற்றியையுடைய இளமங்கையே!
உன்னைப் பிரிந்து செல்லமாட்டார் நம் காதலர்; அவ்வாறு சென்றாலும்
பொறுத்துக்கொள்ளமாட்டர் பிரிவெனும் நோயை; மேலும் அவர்
மிகவும் உன்மேல் விருப்பமுள்ளவர்தானே!
உன்மேல் சிறந்த அன்புகொண்டவர்; மென்மையானவர்;
அவரைப் பிரிந்திருக்கும் நம்மைக்காட்டிலும் மிக வருந்தி, தேடிச் சென்ற அரும் பொருள்
ஈட்டுவது முற்றுப்பெறாதாயினும் வந்துவிடுவார்; அதற்கு மேலும்
இனிய துணையைப் பிரிந்தவரை நாடிச் சென்று
அவரை மீண்டும் கொணர்வது போல் உள்ளது இந்தப் பெரிய மழையின் முழக்கம்.
					மேல்
# 209 குறிஞ்சி நொச்சி நியமங்கிழார்

மலைப்பக்கத்தை விசாலமாக்கி உருவாக்கிய கொல்லையில்
மழையால் ஈரப்பதம் பெற்ற காட்டை உழும் குறவர்
கொஞ்சம் விதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக விதைக்க, பலபடியாக விளைந்து
கதிர் சாய்ந்து விளங்கும் தினைப்புனத்தில் உள்ளவளான
மழலைச் சொல் கொண்ட அழகிய இளமகளின் பேச்சான இனிய குரலைக்
கிளிகளும் தாம் அறியும்; எனக்கு அது
செவியிற்படும்போது காமநோய் தீரும்; அவ்வாறு படாமல்
ஒழிந்திருக்கும் வேளை எனில் என்
உயிரோடு மற்ற எல்லாவற்றையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும்.
					மேல்
# 210 மருதம் மிளைகிழான் நல்வேட்டனார்

அறுவடை செய்துமுடித்த அழகிய இடம் அகன்ற வயலில்
மீண்டும் சாகுபடிக்காக உழுத ஈரமான வரப்புள்ள பாத்திகளில்,
விதைநெல்லோடு சென்று, அந்தக் கூடையில் மிகுதியான
மீனைப் பிடித்து எடுத்துக்கொண்டு திரும்பும் புதுவருவாயைக் கொண்ட ஊரினனே!
பெருமொழி பேசுவதும், விரைவாகத் தேர்களில் வலம்வருவதும்
செல்வம் இல்லை; அது முன்செய்த நல்வினைப்பயன்;
சான்றோர் செல்வம் என்று கூறுவது, தம்மைச் சேர்ந்தோரின்
துயரை நினைத்து அச்சம்கொள்ளும் பண்பினைக்கொண்ட
பரிவுள்ளமாகிய செல்வமே செல்வம் என்பது.
					மேல்
# 211 நெய்தல் கோட்டியூர் நல்லந்தையார்

யாரிடத்தில் வருந்தி உரைப்பேன் நான்! ஊர்ந்துவரும் கடல்நீர்
பொங்கிப் பெருகி உள்ளே சென்ற உப்பினை உடைய வரப்புள்ள பாத்திகளையுடைய
வளைந்த கழியின் பக்கத்தில் இரையை வேட்டையாட எழுந்த
கரிய காலைக் கொண்ட குருகின் குத்துக்குத் தப்பி ஓடிய 
வளைந்த முதுகினைக் கொண்ட இறா மீனின் நீண்ட மீசையையுடைய ஆண்,
மோதுகின்ற அலைகள் தொகுத்துச் சேர்த்த மணல் மேட்டின் நீண்ட கரையில்
நெருங்கிய கடலின் புறத்தில் தலைவைத்துள்ள இலைகள் பொதிந்த தாழையின்
வண்டுகள் மொய்க்கும் வெள்ளையான பூவைக் கண்டு அஞ்சிநடுங்கும்
துறை பொருந்திய கடற்கரைத்தலைவன் என்னைத் துறந்துசென்றான் என்று -
					மேல்
# 212 பாலை குடவாயில் கீரத்தனார்

பழக்கிய பறவைகளைக்கொண்டு வேடன் சிக்கவைக்க விரித்திருக்கும் வலையைக் கண்டு அஞ்சி
நீண்ட கால்களையுடைய கணந்துள் பறவை தனித்துக் கத்தும் தெளிந்த அழைப்பு
பாலைவழியில் செல்லும் கூத்தர்கள் விரைவாக ஒலிக்கும்
யாழிசையோடு சேர்ந்து ஒலிக்கும் அரிய நெறியில்
கடும் ஒலியையுடைய பம்பை எனும் பறையையும் சினங்கொண்ட நாய்களையும் கொண்ட வடுகரின்
நீண்ட பெரிய குன்றுகளைக் கடந்து நம்மிடம்
வந்துசேர்ந்தார், வாழ்க, தோழியே! நம் கையிலுள்ள
செம் பொன்னாலான கழன்றுவிழும் தொடியைப் பார்த்து, சிறந்த மகன்
நம்மை அணைத்துக்கொண்டு அழுகிற இனிய குரலை கேட்கும்பொழுதெல்லாம்
ஆசைகொள்ளுகிற மனத்தை உடையவராகிய நம்மிடத்து - 
					மேல்
# 213 குறிஞ்சி கச்சிப்பேட்டு பெருந்தச்சனார்

அருவிகள் ஆரவாரிக்கும் பெரிய மலையை அடைந்து,
கன்றுகள் அடியில் கட்டப்பட்ட, மன்றத்தில் நிற்கும் பலாமரத்தின்
வேரில் காய்த்துத் தொங்கும் கொழுத்த சுளைகளைக் கொண்ட பெரிய பழத்தை
கன்றை ஈன்ற சிவந்த பசு தின்று, பக்கத்திலிருக்கும்
மூங்கில்கள் நிறைந்த சிறிய மலையில் அரித்தோடிவரும் நீரைப் பருகும்
பெரிய பாறைகளை வேலியாகக் கொண்ட உமது ஊர் யாது என்று
கேட்கவும் சொல்லமாட்டீர்; அதில்லையென்றால் கல்லென்ற ஓசையுடன்
முகில்கள் திரண்டு சேர்ந்து பெரிய மழை வீழ்ந்ததாக, தழைத்தெழுந்த
சிவந்த நிறம் கொண்ட செழுமையான கதிர்களைக் கொண்ட சிறுதினையைக்
கொய்கின்ற கொல்லைக்காட்டுக் காவலும் உங்களுடையதோ?
உயர்ந்து ஏந்திய அல்குலையும் நீண்ட தோளினையும் உடைய மங்கையரே!
					மேல்
# 214 பாலை கருவூர் கோசனார்

புகழும், இன்பமும், கொடையும் ஆகிய இம் மூன்றும்
சோம்பி இருப்போர்க்கு அரிதாகவே கிட்டுதலைச் செய்யும் என்று
பொருளீட்டும்பொருட்டுப் பிரிந்து சென்ற நம்மிடம் வேறுபட்ட கொள்கையுடனே,
"அரும்புகள் அவிழ்ந்து மலராகிச் சுரும்புகள் தேனைப் பருகும் பலவான மலர்களை
சூடுவதற்கு வருவேன் உன் நீலமணி போன்ற கரிய கூந்தலில்" என்று
குறைவற்ற சூளுரைகளை என் மனம் கொள்ளுமாறு கூறி
முகில்கள் சூழ்ந்த சிகரங்களையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து
வருமானத்திற்காகச் சென்ற குறைகள் அற்ற நம் காதலர்
கேட்கமாட்டாரோ தோழி? தோளிலிருக்கும்
ஒளிரும் வளைகள் நெகிழ்ந்துபோகுமாறு செய்த கலங்கிய துன்பத்தை எள்ளி
நகையாடுவதுபோல மின்னி
ஆர்ப்பரிப்பது போன்ற இந்தக் கார்காலத்து மழையின் இடிக்குரலை -
					மேல்
# 215 நெய்தல் மதுரை சுள்ளம் போதனார்

கிழக்குக் கடற்பரப்பில் ஊர்ந்து, நிறமுள்ள கதிர்களைப் பரப்பி,
பகல்பொழுதைச் செய்த ஞாயிறு மேற்குமலையில் மறைய,
தனிமைத்துயர் வந்து தங்கிய துன்பமிக்க மாலைப் பொழுதை
ஒளிரும் வளையணிந்த மகளிர் அகன்ற நகர்களில் தொழுது வணங்க,
மீனின் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்யால் எரியும் ஒள்ளிய விளக்கொளியை
நீல நிறப் பரப்பில் அலையாடும் திரைகள் எற்றித்தள்ள,
கரையை ஒட்டி இருக்கும் கல்லென்ற ஒலிமிக்க பாக்கத்தில்
இன்று நீ இங்கே இருந்தவனாகி எம்மோடு
தங்கினால் என்ன? செம்மையான கோலோடு பிணித்த
வளைவான முடிகளையுடைய அழகிய வலை கிழியும்படி போன
கொலைவல்ல சுறாவை விரட்டிக்கொண்டு செல்லும் வலிமையுடன்,
தாம் மேற்கொண்ட வேட்டை வாய்க்காமல் எம் சுற்றத்தார் திரும்ப வரமாட்டார்.
					மேல்
# 216 மருதம் மதுரை மருதன் இளநாகனார்

ஊடலைப் போக்கிக் கூடலுடன் பொருந்தி என்னை நெருங்காராயினும்,
இனியதே, காணவேண்டியவரைக் கண்டவாறு வாழ்தல்;
கண் பெற்ற துன்பத்தைக் கை போலச் சென்று உதவி
நாம் படுகின்ற துயரத்தைக் களையாராயினும்,
இனிமை இல்லாதது அவர் இல்லாத ஊர்;
தீக்கொழுந்து போன்ற பூக்களைக் கொண்ட வேங்கை மரத்தில் உறையும் கடவுள் காக்கும்,
குருகுகள் ஆரவாரிக்கின்ற வயலின் காவல்பரணின் மேல்
அயலான் ஒருவன் ஏற்படுத்திய கவலை உள்ளத்தை வருத்த,
ஒரு முலையை அறுத்த திருமாவுண்ணியின் கதையைக்
கேட்டவர்கள் அத் தன்மையராக ஆயினும்
நாம் விரும்புவோரைத் தவிர பிறர் நமக்கு இன்னாதரே ஆவர்.
					மேல்
# 217 குறிஞ்சி கபிலர்

புகழ்பட வாழ்பவரின் செல்வம் பொலிவுற்று விளங்குவது போல,
காணுந்தோறும் பொலிவுற்று விளங்கும், விரைவான செயற்பாடு வாய்க்கப்பெற்ற யானை
கரிய நிறமுள்ள வலிமையான புலியை வெருட்டி ஓடச் செய்து, அருகிலிருக்கும்
கரிய அடிமரத்தைக் கொண்ட வேங்கை மரம் சிதையுமாறு முறித்துத்தள்ளி
தன்னுடைய பெரும் கோபத்தைத் தணித்துக்கொள்ளும் குன்றுகளையுடைய நாட்டினன்,
மிகப்பெரிதும் இனியவனாயினும், நம்மைவிட்டுச் சென்ற துயரம் மேற்கொண்டு
ஊடல் கொள்வேன் தோழி! நெடுநாளைய
தனிமைத் துயரத்தை வெகுதொலைவுக்கு அகன்று போகச் செய்து,
என் மனப்பிணக்கைப் போக்கப் பணிவுடன் உணர்த்தும் திறன்கொண்டவன் அவன் என்பதால் -
					மேல் 
# 218 நெய்தல் காவிதி கீரங்கண்ணனார்

ஞாயிறு மேற்கு அடிவானத்தில் தொங்கியவாறு தன் கதிர்கள் மழுங்கிப்போயிற்று;
இரவும் பூ வாடிய கொடியைப் போல ஞாயிற்றை இழந்து தனிமைத் துயரடைந்தது;
வௌவாலும் இடங்கள்தோறும் பறந்து திரியலாயின; ஆந்தைச் சேவலும்
மகிழ்ச்சி மிகப்பெற்று, தனது பேடை நகுவதுபோல கூவுந்தோறும் அதனை அழைக்கும்;
குறையாத காதலோடு முறைமையுடன் நம்மைத் தேற்றிய காதலர்
கூறிய பருவமும் கழிந்துகொண்டிருக்கிறது; நிழல் நீண்டு பரவிய
பருத்த அடியினைக் கொண்ட வேம்பின் பெரிய கிளைகளிருந்த
கபில நிறங்கொண்ட கூகையும் இரவில் ஒலியெழுப்பும்;
குன்றாத காதல் நோய் வருத்துவதால் வருந்தி, இன்னும்
தனித்திருக்கும் நான் கேட்பேனோ?
பருத்த அடியைக் கொண்ட பனைமரத்திலிருந்து கூவும் அன்றிலின் குரலை -
					மேல்
# 219 நெய்தல் தாயங்கண்ணனார்

கண்ணும் தோளும் குளிர்ந்த மணம்வீசும் கூந்தலும்
தம்முடைய பழைய நலத்தை இழந்து நிறம் மங்கி வெளுத்துப்போக,
இனிய உயிர் பிரிந்துபோவதாயினும், எவ்வளவேனும்
பிணக்குக்கொள்ளமாட்டேன் வாழ்க தோழி! சிறிய காலையுடைய
நண்டுகளை இழுத்துக்கொண்டு செல்லும் புலால் நாறும் அலைகளைக் கொண்ட பெரிய கடலில்
நிறைய மீன்களைப் பிடிக்கும், சிறுகுடியைச் சேர்ந்த பரதவர்
இரவில் தம் படகில் ஏற்றித்தூக்கிவைத்த செறிவான கதிர்களைக் கொண்ட ஒள்ளிய விளக்குகள்
இளம் ஞாயிற்றின், கடலில் பட்டு எதிர்வரும் ஒளியைப் போல் தோன்றும்
கடற்கரைச் சோலையையும் பெரிய கடல் துறையையும் உடைய தலைவனான நம் காதலன்
தனியனாய் வந்து என்னைச் சேர்ந்துகொண்டதனால் - 
					மேல்
# 220 குறிஞ்சி குண்டுகட்பாலியாதனார்

சிறிய மணிகளைத் தொடுத்துத் தொங்கவிட்டு, பெரிய கச்சினைச் சுற்றிக்கட்டி,
குறியதாக முகிழ்ந்திருக்கும் எருக்கம்பூவினால் தலைமாலை சூடிக்கொண்டு,
உண்ணாத நல்ல (பனைமடல்)குதிரையைச் செய்து அதில் ஊர்ந்து வர, எம்மோடு
தெருக்களில் சேர்ந்து திரியும் சிறிய பிள்ளைகள்
மிக்க சான்றோராவர், நிச்சயமாக; இழுத்து இறுக்கக் கட்டப்பட்ட
குடமுழவின் முகப்பு புலர்ந்துபோகாமல் எந்நேரமும் முழங்கும் விழாவுடைய ஊரில்
இந்த ஊரினர் என்று சொல்லிப் பெருமகிழ்ச்சி கொள்ளும் இச்சிறுவர்கள்
தாமே உலகநடப்பினைத் தெரிந்திருந்ததால், இனிக்கும் சொற்களையும்,
கயல் போன்ற அழகுடைய மையுண்ட கண்ணும் உடைய இளைய மகளாகிய தலைவிக்கு
(இத் தோழிகள்) அயலோராவர் என்ற எம் கருத்தோடு ஒத்துப்போவதால் -
					மேல் 
# 221 முல்லை இடைக்காடனார்

நீலமணியைக் கண்டாற்போன்ற கரிய நிறமுள்ள கருவிளை மலர்,
ஒள்ளிய பூவாகிய செங்காந்தளோடு குளிர்ச்சியுள்ள புதர்களை அழகுசெய்ய,
பொற்காசுகளைத் தொங்கவிட்டாற்போன்ற அழகுள்ள நல்ல மலராகிய
கொன்றையின் ஒள்ளிய பூங்கொத்துக்கள் கிளைகள்தோறும் தொங்க,
ஒரு புதிய மணத்தைப் பரப்பிவிட்டாற்போன்ற சிவந்த தரையையுடைய முல்லை நிலத்தில்
நீரால் மூடப்பெற்ற பெருவழியின் நீண்ட இடைவெளி பிளவுபட
செல்வாயாக பாகனே! உனது வேலைப்பாடு சிறப்பாக அமைந்த நெடிய தேரில்;
விருந்தோம்பலில் விருப்பமுள்ள பெரிய தோளையுடைய இளமகளான தலைவி,
மின்னலைப் போன்று ஒளிர்ந்து பளபளக்கும் அணிகலன்கள் நல்ல மாளிகையைச் சிறப்புறச் செய்ய
நடத்தலைப் புதிதாகச் செய்து இன்னும் பழகாத சிறிய அடிகளையும்,
பூப்போன்ற கண்களையும் உடைய புதல்வன் உறங்கும்போது அவன் முன் சாய்ந்து,
"வருவாய், என் அப்பனே!" என்று கூறும்
அந்த இனிய சொற்களைக் கேட்டு மகிழ்வோம் நாம் -
					மேல்
# 222 குறிஞ்சி கபிலர்

கருமையான அடிமரத்தையுடைய வேங்கையின் செம்மையான மலர்களையுடைய வளைந்த கிளையில்,
தழும்பு உண்டாகுமாறு இறுகக் கட்டிய சற்றுத்தளர்ந்த முறுக்கினைக் கொண்ட கயிற்றாலாகிய
கையால் செய்யப்பட்ட சிறிய வளைவைக் கொண்ட ஊஞ்சலை இழுத்து, மெதுவாக
விசும்பில் பறக்கும் அழகிய மயிலைப் போன்று, நான் இன்று
பசும்பொன்னால் ஆகிய மணிகள் பதித்த வடத்தையுடைய அல்குலைப் பற்றி, தள்ளிவிட்டு
உயரே செல்ல விடுக்கிறேன் தோழி! பலவான
வாழை மரங்கள் உயர்ந்து, சுரபுன்னை மரங்களுடன் பொருந்திய மலைச்சாரலில்
தூங்கும் தன் பெண்யானையின் பக்கத்தில் மேகம் சூழ்ந்திருக்க, அதனைக் காணாது
பெரும் களிறு பிளிறும் சோலையுள்ள தலைவனின்
தொலைவிலிருக்கும் உயர்ந்த குன்றினை நீ காண்பதற்காக - 
					மேல்
# 223 நெய்தல் உலோச்சனார்

இவள் தன் காதற்பெருக்கால் களவுக்காலமல்லாத காலை என்றும் நினைக்கமாட்டாள், உன்
அன்பு பெரிதாக உடைமையினாலே இவளுக்குக் கருணைகாட்டல் வேண்டி
பகலிலும் வருகிறாய்; பலவான பூக்களைக் கொண்ட இந்தக் கடற்கரைச் சோலையில்
இத்தன்மையராக இருத்தல் இனிதே! எனினும் இவள்
ஊராரின் பழிச்சொல்லுக்கு ஆளாகி அரிய கட்டுக்காவலுக்குட்படுத்தப்படுவாள்; அதனால்
இரவானபின் வருவாயாக, மென்புலமான நெய்தல்நிலத் தலைவனே!
சுறாமீன்கள் கலித்துப்பெருகிய நிறைவான பெரிய கடற்பரப்பின்
துறையினிடத்தும் உறங்காத விழியினரான
பெண்களையும் கொண்டது இந்தப் பழிதூற்றும் ஊர்.
					மேல்
# 224 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

நம்மிடம் அன்புகொண்டவர் மிகுதியும்; மிகவும் பெரியவர்; ஆனால் அதற்கு மேலும்
பின்பனிக் காலம் வரப்போகிறது என்று முன்பனிக்காலத்தில்
தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!
"சேர்ந்திருப்போர் சேர்ந்தே இருப்பீர்" என்பது போல, பூங்கொத்துகளின் மேலிருந்து
சிவந்த கண்களையுடைய கரிய குயில்கள் மாறிமாறிக் குரல் கொடுக்கும்
இன்பமான இளவேனிலும் வந்தது; நம்மிடம்
பிரியமாட்டோம் என்று தெளிவாகக் கூறியவரிடம்
இனி என்ன சொல்லுவேன் நான்? குளங்கள் வற்றிப்போக,
இடமெல்லாம் அழிந்து காய்ந்துபோன பல மரங்களையுடைய நீண்ட வழியில்
வில்லேந்தியவர்கள் மொய்த்துக்கிடக்கும் பல கிளை வழிகள் குறுக்கிட்டுக் கிடக்கும்
கொடிய முனையையுடைய செல்வதற்கரிய பாதையில் செல்ல முற்பட்டவருக்கு -
					மேல்
# 225 குறிஞ்சி கபிலர்

முருகனைப் போன்ற வலிமையோடு கடும் சினத்தைப் பெருக்கிக்கொண்டு
போரிட்ட யானையின் வெண்மையான கொம்பினைப் போல
வாழை மரம் ஈன்ற கூர்மையாக ஏந்திநிற்கும் கொழுத்த மொட்டு,
மென்மையான இயல்புகொண்ட மகளிரின் கூந்தலின் கொண்டை முடிப்பு போன்று
முகையை ஒட்டிய பூவுடன் மேலும்கீழும் அசையும் பெரிய மலைநாட்டைச் சேந்தவனை
இரந்து வேண்டுவோர் யாரும் உண்டோ? தோழி! திருத்தமான அணிகலன்களைக்கொண்டு,
தொய்யில் குழம்பால் தீட்டப்பட்ட அழகிய முலைகள் தம் மீது வரைந்த வனப்பை இழக்க,
பசலை பாய்ந்து எழுகின்ற துன்பம் தீர,
காதலித்தோர்க்கு உதவாத அவனது அன்பில்லாத மார்பினை -
					மேல்
# 226 பாலை கணி புன்குன்றனார்

ஒரு மருந்துமரம் பட்டுப்போகும் அளவுக்கு அதினின்றும் மருந்தைக் கொள்ளமாட்டார்கள்; மக்கள்
தம் உடல்வலிமை கெட்டுப்போகுமாறு செய்யமாட்டார்கள் உயர்ந்த தவத்தை; நாட்டின் வளம் குன்றிப்போக
மக்களிடமிருந்து வரிப்பணம் வாங்கமாட்டார் மன்னர்; நல்ல நெற்றியையுடையவளே!
நாம் அவர் இருப்பதால் உயிருடன் இருக்கிறோம்; அதனால்
தாம் ஈட்டும் பொருளுக்கு ஓர் எல்லையையும் அறியார்; தாமே அதில் நாட்டங்கொண்டு
வெயிலின் வெப்பம் நிலைகொண்டிருக்க, நீண்டுசெல்லும் நெறி பின்னே ஒழிய,
சென்றுவிட்டார் நம் காதலர்; என்றுமே
பொருளின்மீது கொள்ளும் நாட்டம் இப்படிப்பட்ட தன்மையது என்பார்கள்;
இதனை எல்லோருமே அறிவார்கள் இந்த உலகத்தில் -
					மேல்
# 227 நெய்தல் தேவனார்

நாலும் தெரிந்தவர்கள் எல்லாரும் நம்மை நல்வழி நடப்பவர் அல்லர் என்பதனால், சிறந்த
இனிய உயிர் பழிச்சொற்களால் பிரிந்தாலும் அது மிகவும் இன்னாதது;
புன்னை மரத்தின் அழகிய கடற்கரைச் சோலையில் உன்னைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற
பின்னலையுடைய நெய்ப்பதமிக்க கூந்தலையுடைய என் தோழி, பாவம்!
ஒலிக்கின்ற மணிகளைக் கொண்ட யானையையுடைய பசிய பூண்களைக் கொண்ட சோழரின்
கொடிகள் உயரத்தே மடங்கி ஆடும் தெருமுனைகளுள்ள ஆர்க்காடு என்னும் ஊரில்
கள்ளையுடைய குடத்தில் வண்டினங்கள் மொய்த்து ஒலியெழுப்புதல் நிற்காத,
தேர்கள் ஓடும் தெருவைப் போல,
ஊராரின் பழிச்சொல்லாய் எழுகின்றது, ஐயனே, உன் அருள் - 
					மேல்
# 228 குறிஞ்சி முடத்திருமாறனார்

என்னவென்று சொல்லப்படுமோ? தோழி! மின்னல் பிளக்க,
முழங்கும் இடியையுடைய சூல்கொண்ட மேகம், தன் முதிர்ந்த கடன் தீரும்படியாக
கண்கள் தூர்ந்துபோகுமாறு பரந்த, மிக்க இருள் பரவிய நள்ளிரவில்
பண்பற்ற அரிய வழியில் வருகின்ற நம்மிடம்
இரக்கம் கொள்ளமாட்டானோ அவன்? வேட்டுவனின்
முதுகைப் போன்ற பெரும் துதிக்கையைக் கொண்ட வேழம்
மிரட்சியூட்டும் வில்லானது எறிகின்ற அம்பினை அஞ்சி
ஆழ்ந்துபட மலைப்பிளவுகளில் பிளிறும்,
குதித்து விழும் அருவியைக் கொண்ட மலைக்கு உரிமையாளன்.
					மேல்
# 229 பாலை இளங்கண்ணனார்

"செல்வோம், செல்வோம்" என்று சொல்வதால் பலவாறாகப் பிணக்குண்டு பேசிச்
"செல்லுங்கள்" என்று சொல்வதற்கு அஞ்சுவேன்;
செல்லாதீர் என்று சொன்னால், பலரும்
உம்மை நோக்கி வீசும் புன்மையான சொற்களை நினைத்து அஞ்சுவேன்;
அதனால் செல்லுங்கள், சென்று பொருளீட்டும் வினையை முடியுங்கள், சென்றபின் அங்கு
அவ்விடத்திலேயே நீண்டநாள் தங்காமல் காத்துக்கொள்ளுங்கள்; நள்ளிரவில்
அணிகலன்கள் அணிந்த மார்பில் தழும்பு உண்டாகுமாறு தழுவிப்
பக்கத்திலேயே இருப்பவராய் இருந்தாலும் "பிரிவாரே" என்று இவள் நடுங்குவாள்; தனித்திருந்து
வாட்டமுறுமாறு, இடமெங்கணும் செறிவாய்க்கூடி, குளிரும்படியாக
அசைந்துவரும் இலேசான மழைக்குப் பின்னால்
வாடைக்காற்றும் கண்டீரன்றோ வந்து நிற்பதை - 
					மேல்
# 230 மருதம் ஆலங்குடி வங்கனார்

நெருக்கமாய்க்கிடக்கும், பெண்யானையின் காதைப் போன்ற பசிய இலைகளையும்,
குளத்தில் கூட்டமாய் நிற்கும் கொக்குகளைப் போன்ற குவிந்த மொட்டுக்களையும்
திரட்சியான தண்டினையும் உடைய ஆம்பலின் தேன் மணக்கும் குளிர்ந்த விரிநிலை மலரானது
கிழக்கில் தோன்றும் வெள்ளியைப் போல இருள் நீங்கிட மலரும்
மீன்கூட்டம் கலித்துப்பெருகிய பொய்கை உள்ள ஊரினனே!
உன்மேல் கோபம் இல்லாத உன் பரத்தைக்கு, என்னைத் துறந்து, அருள்செய்வாய்!
மிகுந்த தனிமைத் துயரம் வாட்டிய பேரளவு என்னைவிட்டு நீங்க,
புதிதாய் வற்றிக்காய்ந்த வயலுக்குள், மிகவும் குளிர்ச்சியுண்டாக
மிகுந்த புனல் பாய்ந்து பரவினாற்போன்று
இன்பமாகவே இருக்கின்றது உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் - 
					மேல்
# 231 நெய்தல் இளநாகனார்

மேகங்கள் சிறிதுமில்லாமல் விளங்கிய நீலமணி நிறத்ததான விசும்பில்
வணங்கக்கூடிய மரபினதான ஏழு மீன்களான சப்தரிஷிமண்டலம் போல
பெரிய கடற் பரப்பில் தமது அகன்ற முதுகு நனையுமாறு
சிறிய வெண்ணிறக் கடற்காக்கைகள் பலவும் சேர்ந்து நீராடும்
கடற்கரைத் துறை தனிமைத்துயரத்தை உடையது, தோழி! இதன் முன்னேயும்
ஊருள் வாழும் குருவியின் முட்டை உடைந்தது போல
பெரிய மொட்டு மலர்ந்த கரிய அடியைக் கொண்ட புன்னைமரங்களைக் கொண்ட
கடற்கரைச் சோலையில் நம் தலைவன் தந்த
காதலானது நம்மிடமிருந்து நீங்காமையினால் - 
					மேல்
# 232 குறிஞ்சி முதுவெங்கண்ணனார்

சிறிய கண்களைக் கொண்ட யானையின், பெரிய கையால் உறிஞ்சி இழுக்கும் கூட்டம்
காட்டு மல்லிகை உள்ள குளிர்ந்த குளம் கலங்குமாறு அடித்து,
சோலையிலுள்ள வாழையை வெறுத்து, பக்கத்திலிருக்கும்
சிறுமூங்கிலை வேலியாக உடைய சிறுகுடியினர் அலறும்படி,
செவ்விய அடிமரத்தையுடைய பலாமரத்தின் இனிய பழத்தைச் சுவைத்து உண்ணும்
பெரிய மலை நாட்டினனே! உன் காதலைத் தருவாயாக என்று
வேண்டுகிறேன், வாழ்க நீ! எம் தந்தையின், வேங்கையின்
மலர்கள் உதிரும்படி வரிக்கப்பட்ட முற்றம் உள்ள
பாறைகள் நிறைந்த எமது ஊரில் தங்கிச் சென்றால் - 
					மேல்
# 233 குறிஞ்சி அஞ்சில் ஆந்தையார்

தன் குடும்பத்தைப் பேணுவதைக் கல்லாத ஆண்குரங்கு நடுங்குமாறு, தன் முள் போன்ற பற்களைக் காட்டி
இளமையுடைய பெரிய பெண்குரங்கு, வளர்ச்சியுறாத தன் வலிய குட்டியோடு
உச்சி உயர்ந்த மலைப்பக்கத்தில் அசைவாடித்திரியும் மேகத்தில் தன்னை ஒளித்துக்கொள்ளும்
பெரிய மலைநாடனாகிய தலைமகன் மேல் அன்புடையவளாயின்,
இனி அவ்வாறு நிச்சயமாகக் கொள்ளவேண்டாம்; சிறந்த ஒன்றைக்
கூறுவேன், வாழ்க, தோழியே! இனி அவன் உன் முன்னால் நிற்கும்போது
உன் அன்புடைய நெஞ்சத்தில் இருக்கும் காதலை மறைத்து,
ஆன்றோர் செல்லும் வழியில் வழுவாது
சான்றோனாக அவன் இருத்தலை நன்கு அறிந்து தெளிந்துகொள்வாயாக.
					மேல்
# 234 குறிஞ்சி இறையனார் அகப்பொருள் 28 ஆம் சூத்திர உரை

தலைவனுக்காகப் பெண்கேட்டு வந்தோரின் வழிநடை வருத்தத்தையும், உமது
வானத்தைத் தொடுவதுபோன்ற குலப்பெருமையையும் நினைத்துப்பார்த்து,
அழகிய மணிகளைத் தேய்த்து அடித்துக்கொண்டு செல்லும் இவரின் குன்றத்தின் பெருமையைக் கொண்டு,
வளர்கின்ற முலைகளையுடைய மார்பினையுடையவளை வழங்கினால் நல்லது;
அதைவிட்டு, இவர் கொண்டுவந்த பரிசப்பொருள்களை எண்ணுவீராகில், பகைவரின் வெண்கொற்றக்குடையோடு
கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய நல்ல தேரையுடைய சோழனின்
பங்குனி விழாவின்போதான உறந்தைநகரோடு
உள்ளி விழாக் காலத்து வஞ்சியும் மிகவும் சிறியதே.
					மேல்
# 235 நெய்தல் வெள்ளிவீதியார்

வலிமையான அலைகள் மோதுகின்ற சொரசொரப்பான பெரிய அடியையும்,
அரத்தின் வாய்போன்றதாயுள்ள முள்ளாலான இலைகளையும் கொண்ட தாழை
பொன் போன்ற பூந்தாதுக்களையுடைய புன்னையோடு சேர்ந்து மணம்வீசும்
பலவான பூக்கள் உள்ள கடற்கரைச் சோலையே பகலில்சந்திக்கும் இடமாக வந்து, நமது
உடம்பின் அழகைச் சிதைத்துவிட்டுச் சென்றானாயினும்
குன்றைப் போல உயரமாகத் தோன்றும் குவியலான மணல்மேட்டில் ஏறி
பார்த்துவிட்டு வரலாம், போகலாமா தோழி! 
குளிர்ந்த மாலை அணிந்த மார்பினில் வண்டுகள் ஒலிப்புடன் தேனருந்த
ஒலிக்கும் மணிகளையுடைய குதிரைகளைச் செலுத்தியபடி
நெடிய நீரையுடைய நெய்தல்நிலத் தலைவன் மணமுடிக்க வருகின்ற வழியை -
					மேல்
# 236 குறிஞ்சி நம்பி குட்டுவன்

என் காதல் நோயும் கைமீறிப் பெரிதாகிவிட்டது; உடம்பும்
நெருப்பு வெளிவிடும் வெம்மையைக்காட்டிலும் சூடானதாய் உள்ளது;
விரைவாக, நான் சிறிதாகிலும் உயிர்த்திருக்க, "மெல்ல
முற்றத்தில் இவளை இருத்தினால் நலம்பெறுவாள் பெரிதும்" என்று
உள்ளிருப்போரை வெளிவிடாத நரகக் காவலர் போன்ற நெஞ்சத்தையுடைய அன்னைக்கு அறிவுறுத்தி, அங்கு
உரைப்பாயாக இனியே, வாழ்க தோழி நீ! குற்றமற்ற
நுண்ணிய நேரிய ஒளிபொருந்திய வளைகளை நெகிழச்செய்தவனின் குன்றத்து
மிகப்பெரிய உயர்ந்த கொடுமுடியில் தவழ்ந்து, குளிர்ச்சியுடன்
நம் மலையின் அகன்ற பாறைகளில் நிரம்பியுள்ள காற்று எனது
பசலை பாய்ந்த மார்பினைத் தீண்டுவதற்காக, சிறிதேனும் -
					மேல்
# 237 பாலை காரிக்கண்ணனார்

மிகவும் அதிகமாகப் பசந்து தோளும் மெலிந்துவிட்டன;
நீர் நிறைந்து கண்ணும் முன்பு போல் இல்லை;
இனிய உயிர் போன்ற பிரிவதற்கு அரிய காதலர்
நம்மை விட்டுப் பிரிந்து நெடுந்தொலைவு சென்றனர் என்ற பிணக்கம்
உள்ளத்தில் கொண்டு அவரிடத்தில் ஊடல்கொள்ளுதலும் இல்லையோ? பெண்ணே!
அதோ அங்கு பார்! தோன்றுகிறதே உயர்ந்து - வியப்பூட்டும்
இரவலர்கள் வரும்வரை, அண்டிரன் என்போன்
அவர்களுக்குக் கொடை கொடுப்பதற்காகச் சேர்த்துவைத்த யானைகள் போல
உலகம் மகிழ்ச்சியுற, சொல்லுதற்கரிய
வெவ்வேறான பற்பல உருவங்களில் எழுகின்ற மேகக்கூட்டங்கள் -
					மேல்
# 238 முல்லை கந்தரத்தனார்

கோடை வாட்டுவதால் பட்டுப்போன காட்டில், சிறிதளவு பூவேயுள்ள
மாலையை அணிந்த மகளிர் கூடிநிற்கும் கூட்டத்தைப் போல,
வண்டுகள் கிளறி முறுக்கவிழ்ப்பதனால் மலர்ந்த பிடவ மலர்கள்
அந்தி மாலையில் நான் காமநோய் கொள்ளுமாறு
கார்ப்பருவத்தைத் தோற்றுவித்த கூட்டமான கார்மேகமே!
"அவர் நிலை அறிவாயோ இங்கு" என்று வருதல்
உயர்ந்தவருக்கு ஒத்தது ஆகாது அன்றோ? மயங்கி ஒன்று சேர்ந்து
வலிய இடி முழங்கும் இயல்பினால், பரந்த
பாம்புகளின் படங்கள் அடங்கிப்போகின்றன, அதற்குமேலும், மாட்சிமைப் பண்புடைய
தலைவரின் நெஞ்சம் கனிந்துபோகாததினாலும்
இனிமையானது அல்ல உனது இடிமுழக்கம் எழுப்பும் குரல்.
					மேல்
# 239 நெய்தல் குன்றியனார்

மேலை அடிவானத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஞாயிறு மேற்கு மலையில் சென்று மறைய
இருள் மயங்கிய மாலையில் கள்குடித்து மகிழ்ந்த மீனவர்கள்
பகலில் எளிதாகப் பிடித்த நிறைய மீன்களை எளியவிலைக்கு விற்று,
நண்டுகள் ஓடித்திரிந்த புலால்நாறும் மணல் பரப்பிய முற்றத்தையுடைய
கண்டோர் விரும்பும் சிறுகுடிக்குச் செல்லும் ஒழுங்குபட்ட வழியில்
அழகான மணிகள் கொண்ட பொதியை அவிழ்த்துவிட்டாற்போன்ற, நெய்தலின்
புல்லிய புறஇதழ்கள் மூடிக்கொண்டிருக்கும் பூக்கள் கெட்டுப்போகுமாறு மிதித்துச் செல்லும்
வளம் மிக்க கரிய கழிகளில் நிறைந்த நீரையுடைய நெய்தல்நிலத் தலைவனுக்கு,
அவனது மனமொத்தவராய் அவன் சொற்படி கேட்டோம் இல்லை; முன்கையில்
நீண்ட திரட்சியான ஒளிவிடும் வளைகள் உடைந்துபோகுமாறு இறுக வளைத்துத்
தழுவினாய் என்று கண்ணீர்விட்ட இந்த ஊர் மக்கள்
என்னத்திற்கு ஆவார்கள்? நாம் உடன்போக்கு மேற்கொள்ளுதலான வேறொன்றைச் செய்துவிட்டால்.
					மேல்
# 240 பாலை நப்பாலத்தனார்

மெதுவாக நடந்து செல்லட்டும், இந்த உலகைப் படைத்தவன் -
கூர்மையான அழகுபொருந்திய வெண்மையான பற்களையும் ஒளிகொண்ட நெற்றியையும் உடைய இளையவளே!
நம் காதலர் தம் கைகளால் வளைத்துத் தழுவுவது உடம்போடு பொருந்துவதை விரும்பாமல்விட,
அதனால் ஏங்குகின்ற பெருமூச்சோடு பொருந்திய பருத்த கொங்கையை உடைய எனது மார்பு
தனித்துக்கிடந்து துயில் கொள்ளாது வருந்தும் தன்மையதாயினும்,
வெயிலால் வெப்பமுற்ற பரல் மிக்க பள்ளத்தின் ஒருபக்கத்தில்
குந்தாலியால் குழிவு ஏற்படுத்திய கிணற்றை அடைந்து
பசுக்களை நடத்திச்செல்பவர்கள் தோண்டிய குழிவான பள்ளத்தின் நீரை
யானைகளின் கூட்டமான திரள் கவர்ந்துண்ணும்
கானமானது திண்ணிய மலை போல் அழியாத தன்மையதாய் உள்ளது - அதில்
					மேல்
# 241 பாலை மதுரை பெருமருதனார்

நம்மை நினைத்துப்பார்க்கமாட்டாரோ தோழி? வளைந்த சிறகுகளையுடைய
பறவைகளின் உள்ளங்கால் சுவடுகள் பதித்த தடங்களையுடைய மேற்பரப்பினையுடையவாய்,
நீர் வற்றிக்கொண்டிருக்கும் இடங்கள்தோறும் ஈரமான நுண்மணல் தோன்ற,
மெல்லென வீசும் வாடை கோதிவிடுவதாக ஊன்றித் தீண்டுவதால்
கரும்பின் வெள்ளையான பூக்கள் பலவும் சேர்ந்து விரிவனவாய்,
அரசனுக்கு வீசும் கவரி விசிறியைப் போல பூக்கள் புதர்களை அழகுசெய்ய,
மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற விசும்பில் மாறிமாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல தோன்றித்தோன்றி மறைய,
பகற்பொழுது சென்ற மாலைப்பொழுதில் இரவு வந்துசேர,
பனி பெய்யத்தொடங்கிய துன்பத்தைத் தரும் நடுயாமத்தில்,
பல இதழ்களையுடைய மலர்போன்ற மையுண்ட கண்கள் நீர் சொரிய
நிலையில்லாத பொருளை ஈட்டுதற்காகப் பிரிந்துசென்றோர் -
					மேல்
# 242 முல்லை விழிக்கட்பேதை பெருங்கண்ணனார்

இலைகள் அற்ற பிடவமரங்களில் புதிய மலர்கள் அரும்பிநிற்க,
புதர்கள் மேல் ஏறிப்படர்கின்ற முல்லைக் கொடியின் பூக்கள் மலர,
பொற்காசுகள் போன்று கொன்றை மலர, நீலமணி போன்று
பல மலர்களையுடைய காயா சிறிய கிளைகளில் நெருக்கமாய்ப் பூக்க,
கார்காலம் தொடங்கிவிட்டது இன்று காலையில், மிக விரைவாகச்
செலுத்துக பாகனே! உன் தேரை, இதோ பார்!
கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான்
கண்களை அகலவைத்துப் பார்க்கும் தன் அறியாக் குட்டியோடு தன் கூட்டத்தை விட்டு வெருண்டு ஓட,
விருப்பங்கொண்ட நெஞ்சத்தோடு இருக்கின்ற இடத்தைவிட்டு அகலாமல்
பார்வையாலேயே தேடி நிற்கும் ஆண்மானை -
					மேல்
# 243 பாலை காமக்கணி பசலையார்

தேன் ஒழுகும் மலைச்சாரலில், தெளிந்த ஓடைநீர் சூழ்ந்த
குத்துப்பாறையின் அயலில் உள்ள தூய மணலையுடைய அடைகரையில்
ஆடுகின்ற கிளைகளில் நெருக்கமாய்த் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரத்துச்
சோலைதொறும் தங்கும் அழகிய கண்களையுடைய கரிய குயில்,
"சூதாடுகருவியை உருட்டிவிட்டாற்போன்ற நிலையில்லாத வாழ்க்கையை முன்னிட்டுப்
பிரிந்து செல்வதைத் தவிர்ப்பீர்! அறிவுள்ளவர்களே!" என்று
தம் காதலியர் செயலற்றுப்போக அவரைத் துறந்துசெல்வோருக்குக் இடித்துரைப்பது போல
தம் துணையோடு ஒன்றியிருந்து பொருத்தமானபடி கூற,
இன்னாததாகிய இந்த இளவேனிற்காலத்தில், பொருளீட்டுவதற்காகப்
பிரிந்து செல்லுதல் ஆடவர்க்கு இயல்பு எனின்
அரியதாய்ப் போய்விட்டது உறுதியாக, அறத்தைக்காட்டிலும் பொருள்.
					மேல்
# 244 குறிஞ்சி கூற்றங்குமரனார்

விழுந்த மழையால் பெரிதும் குளிர்ந்துபோன மலைச்சாரலில்
கூதிர்காலத்துக் கூதளத்தின் பூக்களுடைய மணத்தைக் கொண்ட,
அழகிய வண்டுகள் இசைக்கும் இனிய குரலை
மணம் கமழும் மலைச் சரிவில் உள்ள அசுணம் என்ற விலங்கு உற்றுக்கேட்கும்
உயர்ந்த மலைகளைக் கொண்டவனுக்கு எடுத்துச் சொல்லுவதையோ,
நாம் அடைந்துள்ள துயருக்கான காரணத்தை அறியாத அன்னைக்கு இந்தக் காதல்நோய்
தணிகின்ற வழி இதுதான் என்று சொல்லுவதையோ
செய்யமாட்டாய்; ஆகவே நீ கொடியவள் தோழி!
மணிகள் ஒளிவீசுகின்ற நெடிய மலை அழகு பெற உயர்ந்துநிற்கும்
அசோகமரத்தின் அழகிய தளிரைப் போன்ற என்
வலிமை அற்ற மாமைநிறங்கொண்ட மேனியில் பசலை நோயையும் பார்த்துவிட்டு -
					மேல்
# 245 நெய்தல் அல்லங்கீரனார்

சிரிப்பைத் தருகின்றது தோழி! உயர்ச்சிமிக்க
அழகிய மலரான கழிமுள்ளியின் ஆய்ந்தெடுத்த பூக்களைக் கொண்ட மாலையை
நீலமணி போன்ற கூந்தலில் வண்டுகள் மொய்க்கும்படி அணிந்து,
தெளிந்த நீர் உள்ள கடலில் தோழியரோடு விளையாடி.
நேரேஇறங்கும் நுண்ணிய இடுப்பும், அகன்ற அல்குலும்,
தெளிவான இனிய சொற்களும் உடையவளே! யாரோ, என்
அரிதாக அமைந்திருக்கின்ற இனிய உயிரைக் கவர்ந்த நீ என்று
பூண்கள் நிறைந்த நெடிய தேரின் புரவியை இழுத்துப்பிடித்தவாறு,
அவன்தான் நம்மைக் காதல்நோயால் வருத்துகிறான் என்பதனை அறியாதவனாய், நம்மால்
தான் காதல்நோயால் வருத்தமுற்றதைக் கூறி, கடற்கரைச் சோலையில்
வண்டினம் ஒலியெழுப்பும் ஒளிவிடும் என் நெற்றியை நோக்கிப்
பெரிய கடல்பகுதியைச் சேர்ந்தவன் நம்மைத் கைகூப்பித் தொழுது நின்ற காட்சி -
					மேல்
# 246 பாலை காப்பியம் சேந்தனார்

இது நடைபெறும் என்று சொன்ன இடங்களில் நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன;
நெடிய சுவரில் உள்ள பல்லியும் பக்கத்தில் ஒலித்து அதனை உறுதிப்படுத்தும்;
வீட்டிலுள்ள கரிய நொச்சிச்செடியின் உச்சிக்கு மேலேயிருக்கும் மாமரத்தின் கிளைகளில்
கூவுதலில் சிறந்த கரிய குயில்கள் திரும்பத்திரும்பக் கூவவும் செய்கின்றன;
உறுதியான நெஞ்சத்தோடு பாலைவழிகள் பலவற்றைக் கடந்து
பொருளீட்டுவதற்காகப் பிரிந்த்சென்றாராயினும், பொய்சொல்லமாட்டார்,
வந்துவிடுவார் வாழ்க தோழியே! முல்லைக்காட்டின்
பொன்போன்ற பூக்களையுடைய கொன்றையோடு பிடவமும் கட்டவிழ்ந்து மலர
இனியதாய் இசைக்கும் வானம் முழங்குகின்ற, அவர்
வந்துவிடுவேன் என்று சொல்லிச்சென்ற, கார்ப்பருவமே இது>
					மேல்
# 247 குறிஞ்சி பரணர்

இளைமைமுதல் இருக்கும் வலிமையோடு பகைமையும் மிகுந்து, சினங்கொண்டு
புலியைக் கொன்ற யானையின் சிவந்த கொம்புகளைக் கழுவுமாறு
மிகுந்த மழை பொழிந்த இனிய குரலையுடைய மேகம்
இரும்பு வில்லினால் அடிக்கப்பட்ட பஞ்சைப் போல் ஆகி, விடியற்காலையில்
உச்சி உயர்ந்த நெடிய மலையில் தவழும் நாடனே! நீ
நீ அன்புசெய்யாவிட்டாலும், பண்புடைமை இல்லாதவற்றைச் செய்தாலும்
உன் வழியில்தான் நடக்கிறாள் என் தோழி; நல்ல நெற்றியில்
புதிதாய் வந்து நிலையாய்க் குடியிருக்கும் பசலைக்கு
மருந்து வேறு இல்லை என்பதை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக!
					மேல்
# 248 முல்லை காசிபன் கீரனார்

சிறிய பூக்களைக் கொண்ட முல்லைக்கொடியின் தேன் கமழும் புதிய மலர்கள்,
பொறிக்கப்பட்டதைப் போன்ற வரிகளையுடைய நல்ல யானையின் புள்ளிகளையுடைய முகத்தைப் போன்று
குளிர்ச்சியான புதர்கள் அழகுபெற மலர்ந்துநிற்க, மிகுந்த மழையுள்ள
கார்காலமே திரும்பி வருகின்ற பருவம் என்று சொன்னார் உறுதியாக; இப்போது
மிகுந்த துயரத்தால் என் உள்ளம் நடுங்குவதைக் காண்பதற்காக,
என்மீது அன்பு இல்லாததால், பண்புக்கொவ்வாதவற்றை மீண்டும் மீண்டும் செய்யும்வகையில்
பொய்யாக இடிக்கும் அதிர்ந்த குரலை, கார்வாய்த்தது என்று எண்ணி ஆடுகின்ற
ஆண் இன மயில்களின் அறிவில்லாத கூட்டத்தைப் போல
உன்னை எண்ணி மயங்குவேனோ? நீ வாழ்க மழையே!
					மேல் 
# 249 நெய்தல் உலோச்சனார்

இரும்பைப் போன்ற கரிய கிளைகளையுடைய புன்னைமரத்தின்,
நீலம் போன்ற பசிய இலைகளுக்குள்ளேயெல்லாம்
வெள்ளியைப் போன்று ஒளிவிடும் பூங்கொத்துகளுக்கிடையே
பொன்னைப் போன்ற நறிய பூந்தாதுக்கள் உதிர்வதால்
புலியினதைப் போன்ற புள்ளிகளைப் பெற்ற பூக்கள் மணக்கும் நிறமுள்ள மணற்குன்றின்மேல்
வரிகளைக் கொண்ட வண்டுகள் ஒலியெழுப்பிப் பறப்பதால், அதனைப் புலி என்று எண்ணி வெருண்டு
குதிரையின், ஓட்டத்தையுடைய ஒளிவிடும் கால்கள் பந்தைப்போல் தாவ,
இழுத்துப்பிடிக்கவும் தடுத்துநிறுத்தமுடியாமல் நிற்காமல் ஓடுகின்ற அந்த இடத்தில்
வளப்பமுள்ள அழகிய சேரியின் மக்கள் ஆரவாரத்துடன் தோன்ற,
கூடிக் குசுகுசுக்கும் இந்த முதிய ஊரில் பலரறிய பழிச்சொற்கள் எழும்ப,
சென்றது அல்லவா நம் காதலனின் தேர்.
					மேல்
# 250 மருதம் மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்

சிரிக்கலாம், வாராய் பாணனே! பிளந்த வாயினையுடைய
உள்ளே பரல்கள் இடப்பெற்ற கிண்கிணி ஒலியெழுப்ப, தெருவில்
விளையாட்டுவண்டிகொண்டு நடைபயின்றுகொண்டிருந்த இனிய மொழிபேசும் என் புதல்வனின்
பூ மணக்கும் சிவந்த வாயின் நீர் சிதைத்த மார்புச் சந்தனத்தோடு 
ஆசைகொண்ட என் நெஞ்சம் தூண்டிவிட, நான் அவளை
அணைத்துக்கொள்ளும் விருப்பத்தோடு நெருங்கிச் செல்ல,
பிறையின் வனப்பைக் கொண்ட மாசில்லாத அழகிய நெற்றியையும்
மணக்கின்ற கரிய திரளான கூந்தலையும் உடைய என் மனைவி வேறாக எண்ணி,
வெருளும் பெண்மானைப் போல் ஒதுங்கிக்கொண்டு,
"யாரையா நீர்" என்று தள்ளி நின்ற கோலத்தை எண்ணி -
					மேல்





# 251 குறிஞ்சி மதுரை பெருமருதிள நாகனார்

நெடிதாய் விழும் நீரைக்கொண்ட அருவியையுடைய மிகுந்த ஒலி விளங்கும் இடத்தில் உள்ள
ஊன்றிப் பிணிப்புக்கொண்ட அடிப்பகுதியையுடையதும், பெரிய மலையில் உண்டானதுமான வாழையின்
முழுமையும் கொழுத்த அழகிய பழத்தை குரங்குகள் கவர்ந்துண்ணும்
நல்ல மலைக்குரிய நாடனை விரும்பிய நாங்கள், அவன்மீதுகொண்ட
மிகுந்த பேரளவான அன்பினால், உன்னுடைய கதிர்களைக் கிளிகள் கொத்தாதவாறு ஓட்டி
உன்னைப் பாதுகாத்து வருதலைக் காண்கிறாய்! நீ, எனது
தளிர் போன்ற அழகான மேனியின் நெடுநாளைய அழகு அழிந்துபோனதாக,
பலியைப் பெறும் கடவுளைத் தொழுது, ஆரவாரத்துடன் வெறியெடுக்க,
கதிர்களால் ஈர்க்கப்பட்ட பறவைகள் மொத்தமாக இளங்கதிர்களைக் கவர்ந்துபோகும்,
அதனால் தோடு பொதிந்த உன் கதிர்களை வளைக்காதே! நிமிர்ந்து நின்று
நெடுநாள் கழித்து விளைவாயாக, வாழ்க , தினையே!
					மேல்
# 252 பாலை அம்மெய்யன் நாகனார்

கிளைகள் பரந்த ஓமை மரத்தின் காய்ந்த நிலையில் அதனை ஒட்டிக்கொண்டு
சில்வண்டு ஓயாது ஒலிக்கும், தொலைவான நாட்டுக்குச் செல்லும் வழியில்
திட்டமிட்டுச் செயலாற்றும் கொள்கையுடன் சென்று பொருள்சேர்த்தால் அன்றி
அரிய பொருளைச் சேர்ப்பது சோம்பியிருப்போர்க்கு இல்லை என்று,
இதுவரை துணியாத நெஞ்சம் இப்போது முடிவுசெய்ய, ஆராய்ந்து தொடங்கிய
செயல்முனைப்பினைத் தடுக்கவில்லை போலும் - தீட்டப்பட்ட சுவரில் உள்ள
சித்திரப்பாவை போன்ற குற்றமற்ற தோற்றத்தையும்,
மென்மை பொருந்தி அகன்ற அல்குலையும், மையிட்டு
மலர்களைக் கட்டிவைத்தது போன்ற கரிய இமைகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களையும்,
முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின்
நல்ல நாவினை ஒத்த சிறிய பாதங்களையும்,
பொங்கிச் செறிந்த கூந்தலையும், புனையப்பட்ட அணிகலன்களையும் கொண்ட இவளது குணநலன் -
					மேல்
# 253 குறிஞ்சி கபிலர்

பறவைகள் தம் கூடுகளைச் சென்றடைவதைப் பார்த்தாலும், கணவனும் மனைவியுமாய்ச் சேர்ந்திருப்போரைக் கண்டாலும்,
படுத்திருக்கும் யானையைப் போல பெருமூச்சு விடுகின்றாய்!
மிகுதிப்பட வருத்தமுற்ற துன்பத்துடனே பெரிதும் மனங்குன்றி,
நான் சொல்லுவதையும் கேளாது, வேறு எதனையோ நினைக்கின்றாய் நீ! மிகவும்
நினைத்து நினைத்து மனம் நடுங்குகின்ற ஒள்ளிய அணிகலன்களைக் கொண்ட இளையவளான இவள் -
பெரிய முழக்கத்தைச் செய்யும் இடியுடன் மழை மிகுந்து பெய்யும்,
பலவான பனவோலைக்குடையில் உண்ணும் கள்ளினால் மிகுந்த மகிழ்ச்சியுற்ற பாரியின்
பலாமரங்கள் விளங்கும் பறம்பு மலையைப் போல
பெரும் அழகு வாய்க்கப்பெற்று இப்போது அரிய காவலுக்குட்படுத்தப்பட்டிருக்கிறாள்.
					மேல்
# 254 நெய்தல் உலோச்சனார்

குறுமணலில் வீடுகட்டி விளையாடியும், வருகின்ற அலைகளை எற்றிவிளையாடியும்,
குன்றைப் போல் ஓங்கிய வெள்ளிய மணலில் படர்ந்த அடும்பு மலர்களைக் கொய்தும்,
வெறுப்பை விளைக்காத நல்ல மொழிகளை இனிமையாகக் கூறியும்,
அச்சொற்களுக்கு மறுமொழி கிடைக்கப்பெறாதவனாய் மனம்துவண்டு, மெதுவாக
திரும்பிச் செல்வதற்காகப் புறப்படும், ஒலிக்கின்ற பெரிய கடற்பரப்பினைச் சேர்ந்தவனே!
உப்பு விற்பவர்கள் கொண்டுவந்த உப்புக்கு மாற்றான நெல்லைக் குற்றிச் செய்த
அரிசிக்குருணையை உன் குதிரைகள் இன்று உண்ண, நீல மலர்களின்
தொகுதி மணக்கின்ற பெரிய பூமாலை புரளுகின்ற மார்புக்குத்
துணையில்லாதவனாய் தனியனாய்த் தங்க மாட்டாய்!;
நேராக அமைந்த இடத்தையுடைய சிறிய பாத்திகளில் கடல்நீரைப் பாய்ச்சி
மழை தேவைப்படாத வேளாண்மை செய்யும் எமது
கடற்கரைச் சோலையிலுள்ள அழகிய சிறிய ஊருக்கு வந்துசேர்ந்து தங்கிச்சென்றால் -
					மேல்
# 255 குறிஞ்சி ஆலம்பேரி சாத்தனார்

பேயினங்கள் நடமாடித்திரிய ஊர் துயில்கொள்ளுகின்றது;
அச்சம்பொருந்திய மரபையுடைய குறிஞ்சிப்பண்ணைப் பாடியவாறு
காவலையுடைய அகன்ற ஊரின் கானவர் தூங்கமாட்டார்;
வலிமைகொண்ட யானையோடு போரிட்ட வாளைப்போன்ற வரிகளையுடைய புலி
பாறைக் குகைகள் கொண்ட மலைச்சரிவில் கூடியிருக்கும்; ஐயோ!
நமது மென்மையான தோள்கள் தளர்ந்து நாம் வருந்தினாலும், இன்று நம் காதலர்
வராமலிருந்தால் நல்லதுதான் -
உயர்ந்த மலைகளைக்கொண்ட மலைத்தொடரில் ஒளிறும்படி மின்னி,
மழை காற்றோடு கலந்தடித்த பொழுது சென்ற நள்ளிரவில்
அழகிய மணி கொண்ட பாம்பு அதனைத் தேடி வருந்த,
இடி சினந்து முழங்கும் உயர்ந்த மலைப்பாதையில் -
					மேல்
# 256 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

நீதான், புகழ்பெற்ற குற்றம் தீர்ந்த சிறிய அடிகளையும்,
நிலைத்திருக்கும் பெரிதான நலங்கள் உள்ள அமைதிகொண்ட கண்களையும் உடையவள்;
வேனிலின் காடோ, நிழல்தரும் அழகினை இழந்த, வேனில் வெம்மையால் கரிந்துபோன, மரங்களைக் கொண்டு,
நடமாட்டமற்ற வெறுமை வீற்றிருக்க பொலிவழிந்து இருக்கும்;
இந்த நிலையில் தவிர்த்துவிட்டோம் பயணத்தை; கூர்மையான நுனியையுடைய
களாவின் அரும்பு மலர்ந்து கமழ, பிடவமும் கட்டவிழ்ந்து மலர,
கார்காலம் மழை பொழிந்த இனிதான மாலைப்பொழுதில்,
தன்னுடைய இளம் பெண்மானைத் தழுவிய பெரிய பிடரியைக் கொண்ட ஆண்மான்
வயிரம் பாய்ந்த வேலமரத்தின் தாழ்ந்த கிளைகள் கொடுத்த
கண்ணைப் பறிக்கும் வரிகள்கொண்ட நிழலில் தங்கியிருக்கும்
குளிர்ச்சி பொருந்திய கார்காலத்துக் காட்டினிலும் தவிர்த்துவிட்டோம் பயணத்தை.
					மேல்
# 257 குறிஞ்சி வண்ணக்கன் சோருமருங்குமரனார்

குறையாத முழக்கத்துடன் மழைத்துளி மிகவும் பெய்து பரக்க, 
மழை முகில்கள் எழுந்து தங்கிய குளிர்ச்சி தவழும் மலைச் சரிவில்,
மூங்கில்கள் செறிவாக உயர்ந்துநிற்கும் வானளாவ உயர்ந்த நெடிய உச்சியில்
ஒளிறும் வெண்மையான அருவியையுடைய அகன்ற மலையுச்சியின் சரிவில்,
அரும்புகள் மலர்ந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
பொன்னைப் போன்ற மணமுள்ள பூக்கள் பாறை மீது பரவிக்கிடக்கும்
நல்ல மலைநாட்டைச் சேர்ந்தவனே! எம்மை விரும்பினையெனினும் அருள்செய்யமாட்டாய்!
வழிச்செல்வோர் அற்றுப்போன நீர் நிறைந்த பள்ளங்கள் உள்ள சிறிய வழியில்,
கொலைத்தன்மையுள்ள விலங்குகள் திரிவதை அறிந்திருந்தும்
நடுயாமத்தில் வருகிறாய், வருந்துகிறேன் நான்.
					மேல்
# 258 நெய்தல் நக்கீரர்

நிறையப் பூக்களைக்கொண்ட கடற்கரைச் சோலையில் நீங்கள் பகலில் சந்திக்கும் இடத்தைப் பார்த்துவிட்டுச்
செல்வாயாக, தலைவனே! தலைவியை வீட்டிற்குள் அடைத்துவைத்துவிட்டாள் அவளின் தாய்
கதிர்கள் கால்களை வெம்பிப்போகச்செய்ய, பாறைகளைச் சூடேற்றும் ஞாயிற்றுப் பகலில்
செல்வம் மிக்க தம் பெரிய வீட்டில், வந்திருக்கின்ற விருந்தினரை உபசரிக்க,
பொன் வளையல் அணிந்த மகளிர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உதிர்த்துவிட்ட,
கொக்கின் நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு, பொழுது மறைய
அகன்ற மீன்கடையில் நீண்டுசெல்லும் நிழலில் குவித்த
பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை,
அசைவாடிக்கொண்டிருக்கும் தோணியின் பாய்மரக்கூம்பினில் சென்றுதங்கும்
மருங்கூர்ப் பட்டினத்தைப் போன்ற இவளது
நெருக்கமாயுள்ள அழகிய ஒளிவிடும் வளையல்கள் கழன்றோடுவதைக் கண்டு -
					மேல்
# 259 குறிஞ்சி கொற்றம் கொற்றனார்

என்ன செய்வோம் தோழி? பொன்னிற மலர்களைக்கொண்ட
வேங்கை மரங்கள் உயர்ந்துவளர்ந்த தேன் மணக்கும் மலைச்சாரலில்
பெரிய மலைநாட்டினனோடு பெரிய தினைப்புனத்தில் தங்கி,
சிவந்த வாயையுடைய பச்சைக்கிளிகளை ஓட்டி, அங்கே உள்ள
பெரிய மலைகளின் மலையிடுக்கில் உள்ள அருவியில் நீராடி,
மலைச்சாரலில் உள்ள சந்தனத்தை வண்டுகள் மொய்க்கும்படி பூசி,
மிகவும் விரும்பிச் செய்துகொண்ட நட்பு, சிறிது காலத்தில்
அரியது ஆகிவிடுவது போலக் காண்கிறேன்; விரிந்த அலைகளையுடைய
கடல் பின்வாங்கிக் காய்ந்தநிலம் ஆகியது போல ஆகி
காய்ந்து புலரும் பருவத்தை எய்தின தினையின் கதிர்கள்.
					மேல்
# 260 மருதம் பரணர்

கழுநீர் மலரை மேய்ந்த கரிய அடியினையுடைய எருமை,
பொய்கையில் பூத்த தாமரையின் குளிர்ச்சியான மலரைத் திகட்டும்படி உண்டுவெறுத்து,
படையில் சேர்ந்த மறவரைப் போல் செருக்கோடு நடந்து, அருகிலிருக்கும்
குன்று போன்ற வெள்ளை மணலில் படுத்துறங்கும் ஊரினைச் சேர்ந்தவனே!
என்மேல் மிகவும் விருப்பமுள்ளவன் போல என்னைத் தழுவவருகிறாய், முனைப்பு மிக,
பகைவரை அழித்த சிவந்த வேற்படையையுடைய வலிமையுள்ள வீரனுடைய
மிகுந்த நீர் அமைந்த வாயிலைக்கொண்ட இருப்பையூர் போன்ற என்னுடைய
தழைத்த பலவான கூந்தல் அழகுபெற அலங்கரித்த
மொட்டுக்கள் மலர்ந்த பூமாலையை வாடும்படி செய்த
பகைவனல்லவா நீ? நான் மறக்கமாட்டேன்!
					மேல்
# 261 குறிஞ்சி சேந்தன் பூதனார்

அருள் இல்லாதவர் அவர், வாழ்க தோழியே! மின்னல் பிளக்க,
இருள் நிலைத்திருக்கும் வானத்தில் அதிரும் இடியுடன்
வெம்மையான ஞாயிற்றை மறைத்த நிறைந்த சூல்கொண்ட மேகங்கள்
நெடிய பலவான குன்றுகளில் சிறியதாகவும் பலவாகவும் அலைந்துதிரிந்து,
இடையறவு இன்றி பெரும் மழையாகப் பெய்யத்தொடங்கிய நடுயாமத்தில்,
யானையை இறுக வளைத்த பெரிய சினங்கொண்ட மலைப்பாம்பு
உட்கூடு இல்லாமல் நன்கு வயிரம் பாய்ந்த மரத்தோடு சேர்த்துப் பிணித்து மிகவும் புரண்டுகொண்டிருக்கும்
சந்தன மரங்கள் ஓங்கிவளர்ந்த தேன் கமழும் மலைப்பிளவுகளின் மொட்டுக்களைக் கொண்ட
எருவையின் நறிய பூக்கள் நெடுக மலர்ந்துள்ள
பெரிய மலையில் உள்ள சிறிய பாதையில் வருவதால் -
					மேல்
# 262 பாலை பெருந்தலை சாத்தனார்

குளிர்ச்சியான கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது
ஆடுகின்ற மயிலின் தோகை போல வாடைக்காற்றில் முன்னும்பின்னும் அசைய,
அத்துடன் சேர்ந்து தூறல்மழையும் கலந்து தூவ, ஊரே துயில்கொள்ளும் நடுயாமத்தில்,
நடுங்கவைக்கும் காதல்நோய் வருத்த, நல்ல அழகெல்லாம் தொலைந்து,
கசந்துபோன மனத்தினளாய் வெறுப்பும் துன்பமும் வருத்துகின்ற,
பருத்த தோள்களில் அரும்பிய தேமலும், திரட்சியையுடைய தண்டுகளையுடைய
குவளைமலர்கள் மணக்கும் கூந்தலும், இனிய மொழிகளும் கொண்ட
இவளை விட்டுப் பிரிந்தும், பொருளீட்டவேண்டும் எனும் ஆர்வம் தூண்டிவிட,
பிரிந்துசெல்வோம் என்று நெஞ்சு சொன்னால்
பொறுத்தற்கரியது நிச்சயமாக, இல்லாமையினால் பிறக்கும் இழிவான நிலை.
					மேல்
# 263 நெய்தல் இளவெயினனார்

பிறை போன்ற தன் வனப்பை இழந்த நெற்றியையும், உனது
முன்கையின் இறுதிவரை நில்லாத வளையையும், ஒளிக்காமல்
ஊரினர் பழிதூற்றும் அவதூறுகளைம், நாணத்தைவிட்டு
இவ்வாறாயின என்று அவருக்குச் சொல்லாதுவிட்டாலும், இரையை விரும்பி
முதிர்ந்த சூல்கொண்ட மசக்கைவிருப்போடு கடற்கரைச் சோலைக்குச் செல்லாமல்
வயற்காடுகளிலேயே தங்கிவிட்ட வளைந்த வாயைக் கொண்ட தன் பெண்நாரைக்கு
உடல்வளைந்த ஆண்நாரை கடலில் மீன்பிடித்துக்கொணர்ந்து கொடுக்கும்
மென்புலமான நெய்தல்நிலத்தலைவனைக் கண்டவுடன் நிலைகொள்ளாமல்,
மறைக்க மறைக்கக் கட்டுமீறிச்
சொல்லிவிட்டன தோழி! மையுண்டகண்களிலிருந்து வடிந்த கண்ணீர்.
					மேல்
# 264 பாலை ஆவூர் காவிதிகள் சாதேவனார்

பாம்புகள் தம் புற்றுக்குள் சென்று பதுங்குமாறு முழக்கமிட்டு, வலமாக மேலெழுந்து
வானம் மழையைப் பொழிந்த காண்பதற்கு இனிய பொழுதில்,
அழகு விளங்கும் தன் தோகையை மெதுவாக விரித்து நடந்துசெல்லும்
நீலமணி போன்ற கழுத்தைக் கொண்ட மயிலைப் போல, உன்
பூச்சூட்டப்பெற்ற கூந்தல் வீசுகின்ற காற்றில் அசைந்தாட,
விரைந்து நடப்பாய் மடந்தையே!, இருளடையத்தொடங்கிவிட்டது பொழுது;
மூங்கில்கள் நிறைந்த புதர்கள் உள்ள குறுங்காட்டில், மாடுமேய்ப்போர் கட்டிய
பசுக்கள் பூண்ட தெளிவான மணிகள் ஒலிக்கின்ற,
இதோ பார் தெரிகிறது, எமது சிறிய நல்ல ஊர்.
					மேல்
# 265 குறிஞ்சி பரணர்

காய்ந்து இறுகிப்போன கொல்லையில் மேய்ந்த, உதிர்ந்த கொம்பினையுடைய, முதிர்ச்சியையுடைய
சேற்றில் குளித்தெழுந்த, புள்ளியையும் வரியையும் கொண்ட கலைமானை எய்வதற்கு
சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பைக்கொண்ட வில்லோர்களின் தலைவனான,
பொலிவுள்ள தோளில் கச்சு மாட்டிய மிஞிலி என்பான் காவல்காக்கும்
பாரம் என்னும் ஊரைப் போன்ற -  ஆத்திமாலை சூடிய
செங்கோல் ஏந்திய சோழனுடைய சிற்றரசரை உபசரிக்கும் ஆரேற்றினைப்போன்ற -
மழை போன்று வளப்பமிக்க கள்ளுணவையையுடைய ஓரியின் கொல்லி மலையிலிருக்கும்
செருக்கிய மயிலின் தோகையைப் போன்ற - தலைவியின்
தழைத்த மென்மையான கூந்தல் நம்வசமே!
					மேல்
# 266 முல்லை கச்சிப்பேட்டு இளந்தச்சனார்

புன்செய்க்காட்டில் வாழும் கோவலருடைய சிறிய புனத்தைச் சார்ந்த
குட்டையான காம்பினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளையான பூ
ஆடு மேய்த்தலையுடைய இடையன் சூடிக்கொள்ளுமாறு மலரும்
அகன்ற உட்புறத்தையுடைய மனைகளையுடையே சிறிய ஊரில் இருக்கின்றோம்;
அதுவே பொருந்தியிருக்கும் எமது விருப்பத்துக்கு; மேலும்
எம்மைவிட்டுப் பிரிந்துபோவீர் என்றால், சிறந்த ஒன்றைக்
கூறுவேன், வாழ்க நீவிர் ஐயனே! என்னுடைய பிறந்த வீட்டினின்றும் வேறுபட்டு
எம்மை உம்முடைய வீட்டில் இருக்கவைத்த பொழுது, நான் வருந்தினால்
பெருமை உடையன அல்லவோ பெரிய குடிப்பிறந்தவர் இயல்புகள்?.
					மேல்
# 267 நெய்தல் கபிலர்

நொச்சியின் கரிய மொட்டுக்களைப் போன்ற கண்களையுடைய
மணல்மேட்டு நண்டின் பெரிய சுற்றத்தோடு கூடிய கூட்டம்,
ஒளிரும் பற்களையுடைய அழகிய இனிய நகையினை உடைய மகளிர்
வெயிலில் காயும் தினையைத் துழாவும் கையைப் போல், ஞாழலின்
மணம் கமழும் நறிய உதிர்ந்த பூக்களை வரிகள் தோன்ற இழுத்துச் செல்கிற துறையைச் சேர்ந்தவன்
தன்னோடு தலைவியைச் சந்தித்த இனிமை பொருந்திய கடற்கரைச் சோலைக்குத்
தனித்து வருவது மிகவும் வருத்தம் தருவதாம் என்று
வாராதிருந்தேன் நான், உறுதியாக; எனினும் ஒருநாள் அங்கே வந்தேன்;
சிறிய நாவைக்கொண்ட ஒளிவிடும் மணியின் தெளிந்த ஓசை போன்று
கூட்டமான மீன்களை உண்பதற்காக, ஒன்று கூடிப் பறவைகள் ஒலிக்கும் குரலைக் கேட்டு,
"இவை தலைமகனின் தேரின் மணிகளின் ஒலி அல்லவா" என்று கூறி முடிக்கும் முன்னர்,
வலிமை மிக்க குதிரைகளையுடைய அவன் தானே அங்கு வந்து நின்றான்.
					மேல்
# 268 குறிஞ்சி வெறி பாடிய காமக்கண்ணியார்

அச்சம் பொருந்திய அகன்ற இடத்திலுள்ள சுனையில் நீர் நிரம்பும்படி,
மிகுந்த மழை பெய்த மிகவும் உயர்ந்த குன்றினில்
கருத்த காம்புகளைக் கொண்ட குறிஞ்சியின் வலிமையற்ற ஒளிரும் பூவின் தேனைக்கொண்டு
ஓவியத்தைப் பார்த்தாற்போன்று வீட்டு உச்சியில் கட்டப்பட்டுள்ள
மணங்கமழும் தேன்கூட்டில் தேன் ஒழுகுகின்ற நாட்டினையுடைவனிடம்
நாம் காதல் செய்தபோதும், அவனுக்கு நம்மீது காதலில்லாமற்போனது
எதனாலோ? தோழி! கேட்போம்,
பரப்பி விட்ட புதுமணலைக் கொண்ட முற்றத்தில் பூசைக்குரிய ஏற்பாடுகளைச் செய்து
மெய்யை உரைக்கும் கழங்கினையுடைய வேலனை வருவித்து -
					மேல்
# 269 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்

குரும்பை போன்ற மணியையுடைய பூணாகிய பெரிய செம்மையான கிண்கிணியையும்
பால் பருகும் சிவந்த வாயையும், பைம்பொன் அணிகலன்களையும் கொண்ட புதல்வன்
மாலை அணிந்த மார்பினில் ஏறி இறங்கி விளையாட,
அழகிய பற்கள் வரிசையாக அமைந்த அழகிய வாயின் மாட்சிமையுள்ள நகைகொள்ளும்
குற்றமற்ற கற்பொழுக்கத்தையுடைய நம் உயிரான விருப்பமுள்ள காதலியின்
அழகிய முகத்தில் சுழலும் கண்கள் துன்பம் அடைந்து, நாளும்
பெரிய மரத்தின் வள்ளிக்கொடியைப் போல நம்மைக் கட்டிப்போடும் என்று கருதாராய்ச்
சிறிய பலவான குன்றங்களைக் கடந்து செல்வோர்;
அறிவார் யார் அவர் மனத்தில் கருதியதை -
					மேல்
# 270 நெய்தல் பரணர்

அகலமான அடிப்பகுதியைக் கொண்ட தாழையில் கட்டிய தன் கூட்டினில் தங்கமுடியாமல்
பூஞ்சோலை மலர்களின் மணங்கமழும், வண்டுகள் மொய்க்கின்ற நறிய மணத்தையுடைய,
இருளைப் போன்ற கூந்தல்களில் உள்ள மிகுதியான பூந்துகள்களில் மூழ்கியெழுந்து
கீழே விழுந்து, உருளும் பொறியைப் போல எம்மிடத்தில் வருதலையுள்ள,
தன்னை அழகுசெய்துகொள்வதைத் தவிர அதனால் உன்னைக் கட்டிப்போடுவதை அறியாத
பெரிய தோளாகிய செல்வத்தையுடைய இவளைக்காட்டிலும், தலைவனே!
என்பால் பெரிதும் அருள்செய்கின்றாய் நீ! அழகு பொருந்திய
விரிந்த பிடரிமயிர் பொலிவுபெற்ற விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரைப் படைகளையுடைய,
பகைவரை ஓட்டிய ஏந்திய வேற்படையை உடைய நன்னன்
பகைவரின் உரிமைமகளிரின் கூந்தலைக் கயிறாகத் திரித்த கொடுமையினும் கொடியது,
மறந்துவிடுவேன் உன் சிறப்பியல்பின் தகுதிப்பாட்டினை.
					மேல்
# 271 பாலை கயமனார்

கரிய, அண்மையில் ஈன்ற, எருமையின் பெரிய செவியினையுடைய கன்று,
புதிய பூந்தாது உதிர்ந்து சாணத்தின் துகள்போலக் கிடப்பதில் படுத்துத் துயில்கொண்டு உறங்கும்
செழுமையும் குளிர்ச்சியும் உள்ள வீட்டோடு நான் இங்கே தனித்திருக்க,
தன்னுடன் வருகின்ற பெரிய காளைபோன்றவனின் பொய்மொழிகளில் மயங்கி, தொலை நாட்டு,
சுவையுள்ள காயைக்கொண்ட நெல்லியின், வழிச்செல்வோரைப் போகவிடாமல் தடுக்கும் தோப்பில்
விழுந்துகிடக்கின்ற முற்றிலும் திரண்ட காய்களை இருவரும் சேர்ந்து தின்று,
வற்றியுள்ள சுனையிலுள்ள சிறிதளவு நீரைக் குடித்துவிட்டுக் கடந்து சென்ற
குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய என் மகள், ஒன்றுபோலிருக்கும்
சிவந்த பனங்குருத்தைப் பிளந்து பதனிடுவதற்குப் போடுகின்ற
மாலைக் காலத்து விரிந்த நிலவில் செல்ல, அவளைப் பின்சென்று தேடும்படியாக விட்டதற்கு,
பெரிய கரிய தாழியிலிட்டுக் கவித்து மூடும்படி
வலிமையற்று இறந்தொழிக என் உயிரை எடுத்துக்கொள்ளாத கூற்றம்.
					மேல்
# 272 நெய்தல் முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

கடலைச் சேர்ந்த காக்கையின் சிவந்த வாயையுடைய ஆண்பறவை,
நோன்பு மேற்கொண்ட மகளிர் கொய்து அழித்த
மிகவும் தழைத்த அடும்பு படர்ந்த வெண்மையான மணலின் ஒருபக்கத்தில்,
நிறைந்த சூல் கொண்டு தங்கியிருந்த அழகிய பேடைக்கு,
கரிய சேற்றில் இருக்கும் அயிரைமீனைத் தேடிக்கொணர தெளிந்த கழியில்
பூக்கள் மலர்ந்துள்ள ஆழமான பகுதியில் மூழ்கித் துழாவும் துறையைச் சேர்ந்தவன்
நமக்கு அருளாததினால் நமது விருப்பமெல்லாம் பழுதடைய
பெரிதாகச் செயலற்றுப்போன எனது கீழ்நிலை, பலர் வாயிலும்
குசுகுசுக்கும் அம்பலாகிப் பின்னர் ஊர்முழுக்கப் பலரறிய அலராகிய அவதூறாகி
நோய்தருவதாகிவிட்டது; அது பிரிவுதரும் நோயைக்காட்டிலும் பெரிதாயிருக்கிறது
					மேல்
# 273 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

இது என்னாகுமோ? தோழி! நம் உடம்பில் பரவி
துன்பத்தை உண்டாக்கி மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்திய துயரத்துக்காக,
நம்மேல் கொண்ட நாட்டத்தினாலே தானும் வருத்தம் மேற்கொண்டு, நமக்காக
அறியாமல் வெறியாட்டு எடுத்த அன்னைக்கு, "இது முருகுதான் உண்டாக்கியது" என்று
வேலன் கூறுவான் என்பர்; அதனால்
இயற்கை அழகு மிகுந்த தலைமைப்பண்புள்ள யானை
நீர் உண்ணும் நெடிய சுனையில் அமைந்து நீண்டநாள் இருக்கும், என்
கண் போன்ற நீல மலர்கள் குளிர்ச்சியுடன் மணங்கமழ்ந்து சிறந்துவிளங்கும்
குன்றுகளுக்குரிய நாடனை நினைக்கும்போதெல்லாம்
என் நெஞ்சை நடுங்கவைக்கும் அவனது நற்பண்பு தருகின்ற நட்பால் வரும் வருத்தமானது -
					மேல்
# 274 பாலை காவன் முல்லை பூதனார்

நெடிய மேகங்கள் மின்னி, சிறிய தூறலைப் போடத்தொடங்கி,
பெரிய மழையாய்ப் பொழிந்த அகன்ற பிளப்புகளை உடைய குன்றத்தில்,
உழை மானின் அழகிய பெண்ணானது உராய்தலால், இழை அணிந்த ஒரு பெண்ணின்
பொன்னால் செய்யப்பட்ட மேகலைக்காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும்
குமிழமரங்கள் செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில்
"என்னோடு வருகிறாயா? அடர்ந்த கூந்தலையுடையவளே" என்று
கூறியதும் உண்டல்லவா? தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு
பெரிய புலிகள் நடமாடித்திரியும் சோலைகளையுடைய
பெரிய மலைநாட்டைச் சேர்ந்த நிலமாகிய பாலைவெளியைக் கடந்துசென்றவர் -
					மேல்
# 275 நெய்தல் அம்மூவனார்

செந்நெல்லின் கதிர் அறுப்போரின் கூரிய அரிவாளால் காயப்பட்டு
அதைக் காணாதவரின் நெற்கதிர் கட்டுக்களோடு போனதினால், பூவானது
அரிவாளோடும், கதிர்க்கட்டோடும் கலந்து படுக்கையாய்க் கிடந்து
தனக்கு நேர்ந்த கதியை அறியாமல், மெல்லமெல்ல,
சுடுகின்ற கதிர் ஒளியில் தன் இனிய துயில் நீங்கித் தன் பசிய வாயைத் திறக்கும்
ஏமாளியான நெய்தலைக் கொண்ட கடற்கரைத் தலைவனுக்காக
நான் நினைத்து இரங்கமாட்டேன்; ஆதலால் என்னுடைய காதல் நோயை நீக்கி,
அந்த அறமற்றவனை ஊரார் புகழும்படி, என்னை
அவன் வேண்டிப் பெற்றாலும் உடன்படுவேன், உறுதியாக தோழி, நானே!
					மேல்
# 276 குறிஞ்சி தொல் கபிலர்

கொம்புகளை ஊதியவாறு, வேட்டையைப் பற்றிக்கொள்ளும் வாயையுடைய நாயுடன்
காட்டில் வேட்டையைத் தேடி, தளைர்ச்சியுற்ற வலிமையான விலங்குகளை வேட்டையாடும்
வேட்டுவரின் பெண்கள் என்று எம்மைச் சொல்வாயாயின்,
நாங்கள் குறவரின் பெண்களாவோம், மலைவாழ் கொடிச்சியர் ஆவோம்,
உயர்ந்த பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில்,
காட்டு மயில்கள் தம் இருப்பிடமாய்த் தங்கிவாழும்
மலைகளுக்கிடையே அமைந்தது எமது ஊர்; எனவே இப்போது புறப்பட்டுச்செல்லாமல்
எம் ஊரில் தங்கிச் செல்வாயாக நீயே! பெரிய மலையில் உண்டான
வளைந்த மூங்கிலாலான குப்பிகளில் விளைந்த கள்ளினை உண்டு
வேங்கை மரங்கள் இருக்கும் முற்றத்தில் நாங்கள் ஆடும் குரவைக்கூத்தையும் கண்டுவிட்டு -
					மேல்
# 277 பாலை தும்பி சேர் கீரனார்

நீ கொடியவள்! நன்றாக இரு! தும்பியே! எனது இந்த நோயினால்
நான் இறந்துபடுவேனாக , நான் உனக்கு என் துன்பத்தைச் சொல்லியதால் -
உன் உடம்புதான் கருப்பு! அன்றியும், செவ்வனே இருக்கும்
அறிவும் கருப்போ, நீதியற்ற உனக்கு?
வீட்டைப் பொருந்திநின்று காக்கும் மாண்பும் பெருமையும் பொருந்திய இடத்திலுள்ள
நுண்மையான முட்களாலாகிய வேலியில் படர்ந்த, தாதுடன் செழித்துத் தழைத்த,
கொத்துக்கொத்தாய்ப் பூக்கும் பீர்க்கின் மஞ்சள் நிறப் பூவில் தேன்குடித்து, அதினின்றும் வேறுபட
மணம் இல்லாததினால் என் நெற்றியில் பூத்த பசலையை ஊதாமற்சென்றாய்;
சிறிய குறுகிய பறவையான உன் பெடைக்காக அதன் பின்னே ஓடி, விரைவுடன்
அதன் நெஞ்சு நெகிழுமாறு செய்ததன் பயனோ இது? என்மீது அன்புகொள்ளாதவராய்
வெம்மையான மலையிலுள்ள அரிய பாலைநில வழிகளைக் கடந்துசென்றோர்க்கு
என் நிலையை உரைக்கவும்மாட்டாய், சென்று அங்கே, அவர் வருமாறு -
					மேல்
# 278 நெய்தல் உலோச்சனார்

விழுந்த விதை முளைத்து மரமாகிய பருத்த அடிமரத்தைக் கொண்ட புன்னையின்,
அடுத்து வளர்ந்த மரலின் பழம் போல், அரும்புகள் வாய் திறந்து
பொன் போன்ற மகரந்தம் உடைய பல மலர்களில்
சூடிக்கொள்பவர் பறித்துத்தொடுத்துக்கொண்டது போக மீதமானவை, கிளைகள்தோறும்
நெய்ப்பசை மிக்க பசிய காய்களாகத் தொங்கும் கடற்கரைத்துறையைச் சேர்ந்தவனை
நான் இப்போது அறிந்துகொண்டேன், அவன் கணவன் ஆகுதலை -
கழியின் சேறு படிந்த திரண்ட கால்களைக் கொண்ட அவனது கோவேறு கழுதையின்
விரைவான ஓட்டத்தால் அதன் குளம்புகளில் சிவந்த இறால் மீன்கள் சிக்கி மிதிபட்டன;
அந்த விரைவினால் அவனது மாலையெல்லாம் ஊதைக்காற்று எழுப்பிய வெள்ளை மணல் படிந்துள்ளது.
					மேல்
# 279 பாலை கயமனார்

வேம்பின் ஒள்ளிய பழத்தை உண்டு வெறுத்து, இருப்பையின்
தேனுள்ள, பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி,
நிலைகொண்டிருக்கும் பனியில் வருந்திய வௌவாலின் மேல், கிளைகளிலிருந்து
நெய்தோய்ந்த திரியில் எண்ணெய் துளிப்பது போல குளிர்ந்த பனித்துளிகள் சொட்டுகின்ற
விடியற்காலத்தில் பாலைநிலவழியில் சென்று வருந்திய ஒளிறும் நிறமுடைய புலியுடன்
போரிட்ட யானையின் புல்லிய காலைப் போன்ற,
பசிமிக்க பெண்யானை உதைத்துச் சிதைத்த ஓமையின் சிவந்த பட்டை இல்லாத அடிப்பகுதி
வெயிலடிக்கும்போது விட்டுவிட்டு ஒளிறும் காட்டு வழியின்
பாதையில் நடந்து வருந்தினவோ? செறிந்த வாயினையுடைய
சிலம்பைக் கழற்றும் விழாவின் சிறப்பு
பிறரிடத்துக் கழிந்த என் அழகிய அணிகலன் அணிந்த மகளின் அடிகள்.
					மேல்
# 280 மருதம் பரணர்

மாமரத்திலிருந்து உதிர்ந்து கீழே விழுந்த இனிய மாம்பழம், கொக்கின்
கூம்பிய நிலை போன்ற மொட்டுக்களையுடைய ஆம்பல் உள்ள
அசைவாடும் நீர் உள்ள ஆழமான பள்ளத்தில் 'துடும்' என்று விழுகின்ற
குளிர்ந்த ஆற்றுத்துறைகளைக் கொண்ட ஊரினனுடைய நீங்காத பரத்தைமை பொருட்டு
அவன் மீது பிணக்குக்கொள்ளவேண்டாம் என்கிறாய் தோழி! அவன் மீது கோபங்கொள்ளேன் -
நீர்நிலைகளில் வாழும் ஆமையின் பசிய கல்போன்ற முதுகின்மேல்வைத்து,
வயலைக் காப்பவர்கள் சுருக்கம் விழுந்த நத்தையை உடைக்கும்
பழமை முதிர்ந்த வேளிருடைய குன்றூரைப் போன்ற என்
நல்ல வீட்டில் மிகுந்துவரும் விருந்தினரை உபசரிக்கும்
கை ஓயாத வேலையால் என் கண்ணில் அவன் படவில்லை -
					மேல்
# 281 பாலை கழார் கீரன் எயிற்றியார்

அழுக்கில்லாத மரத்திலிருக்கும், படையல்சோற்றை உண்ணும், காக்கை
காற்று அலைக்கும் நீண்ட கிளையில் மழைத்துளியுடன் ஆடிக்கொண்டு,
வெல்லுகின்ற போரையுடைய சோழரின் கழார் என்ற ஊரில் கிடைக்கும்
நல்ல வகையில் மிகுந்த பலியுணவுப் படையலோடு வரும்
அளவுக்கதிகமான சோற்றுத்திரளுடன், அழகிய பலவாகிய புதிய
ஊன் துண்டங்களோடு கூடிய பெருவிருந்தை நினைத்துக்கொண்டு இருக்க,
மழை நின்று பெய்த மிக்க இருள் செறிந்த நள்ளிரவில்,
தாம் நம் பக்கத்தில் இருக்கவும், நாம் நமக்கு உண்டான
மிகுந்த குளிரின் கடுமையால் மிகப் பெரிதும் வருந்தி,
தூங்காதிருப்பதையும் அறிந்திருப்போர்
அன்பு இல்லாதவர் தோழி! நம் காதலர்
					மேல்
# 282 குறிஞ்சி நல்லூர் சிறு மேதாவியார்

தொகுப்பாக அமைந்து நன்கு செறிக்கப்பட்ட ஒளிரும் வளையல்கள் நெகிழவும்,
வளைவாக ஏந்திய அல்குலின் அழகிய வரிகள் சுருங்கிப்போகவும்,
நல்ல நெற்றி அழகுகெடவும், வருத்தம் மிக்க தாங்கற்கரிய காதல் நோய்
காதலன் நமக்குத் தந்தது என்பதனை அறியாமல், அதனை வேலனுக்கு அறிவிக்க,
தெய்வத்தன்மையுள்ள கழங்குகளைக் கொண்ட அனுபவசாலியான வேலனின்
சொற்களால் இது தணியுமானால் மிகவும் நல்லது, உறுதியாக - மலைச் சாரலில்
அகில் கட்டையை எரிக்கும் குறவன், முதலில் சருகளைக் கொளுத்துவதால் எழுகின்ற புகை
அசைகின்ற மழையின் மேகமூட்டம் போலப் பரந்து மறைக்கும்
நாட்டில் விளங்கும் தலைவனோடு அமைந்த நம் நட்பு - 
					மேல்
# 283 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்

ஒளியுள்ள நெற்றியையுடைய மகளிர், பரவிக்கிடக்கும் கழியில் பறித்த
கண்களை மிகச் சரியாக ஒத்திருக்கும் கமழ்கின்ற நறுமணமுள்ள நெய்தல் மலரால்
அகன்ற கோலமிட்ட சிறிய மனையை அழகுசெய்யும் துறைக்குத் தலைவனே!
அழகுசெய்வதில் வல்லவர்கள் ஆராய்ந்து கண்ட இவளின் பழைய அழகு கெடுமாறு
இத்தன்மையுடைவனாய் இருப்பது உனக்குத் தகுமோ? உயர்ந்த அலைகளைக் கொண்ட
கடலின் மேல் பலரும் தொழும்படியாகத் தோன்றி,
உயிர்கள் இன்புற விளங்கும் ஞாயிற்றைக் காட்டிலும்
உண்மை மிக்க உனது சொற்களை விரும்பியவருக்கு -
					மேல்
# 284 பாலை தேய்புரி பழங்கயிற்றினார்

முதுகில் தாழ்ந்து கிடக்கும் கரிய கூந்தலையும், நெய்தல் பூவின்
நிறத்தைப் பெற்ற ஈரமான இமைகளால் பொலிவடைந்த மையுண்டகண்களையும் கொண்டு
நம் உள்ளத்தை வசமாக்கிக்கொண்டவளிடம், நெஞ்சம்
"அவளின் துன்பத்தைத் தீர்க்கத் திரும்பிச் செல்வோம்" என்று சொல்லும்;
"மேற்கொண்ட பணியை முடிக்காமல் அதற்கு இடையூறு விளைவிப்பது
வந்த நோக்கத்தையும் அடையாமல், பழிச்சொல்லையும் கொண்டுசேர்க்கும்" என்று
உறுதிப்பாட்டை தூக்கிநிறுத்தித் தாமதித்து, அறிவானது
"சிறிதளவுகூட கூடுதல் அவசரப்படவேண்டாம்" என்று சொல்லும்; இவற்றுக்கிடையே,
ஒளிவிடும் ஏந்திய கொம்புகளைக் கொண்ட யானைகள் தமக்குள் மாறுபட்டு பற்றி இழுத்த
தேய்ந்த புரிகளைக் கொண்ட பழைய கயிற்றினைப் போல
இற்றுப்போவதோ? என் வருந்திய உடம்பு.
					மேல்
# 285 குறிஞ்சி மதுரை கொல்லன் வெண்ணாகனார்

பாம்புகள் இரைதேடித்திரியும் மிகுந்த இருள் நிறைந்த நள்ளிரவாகிய
இரவில் வருகின்றதல்லாமலும், வலிய அம்புகளையும்,
ஆற்றல் மிக்க கைகளையும் கொண்ட கானவன், தன் கடுமையான வில்லை வளைத்து,
மார்பில் செலுத்தி வீழ்த்திய ஆண் முள்ளம்பன்றியோடு,
வீட்டு நாய்கள் ஒன்றுசேர்ந்து பக்கத்தில் வந்து குதிக்க,
வேட்டையில் வெற்றிகொண்ட மகிழ்ச்சியுள்ளவனாய், காட்டிலுள்ள
கால்களை நட்டு எழுப்பிய குடிசைகளைக்கொண்ட தன் ஊருக்குச் செல்லுகின்ற
குன்றுகளுள்ள நாட்டினையுடையவனின் நட்பு, நமக்கு
நலம் தருவதாகும், வாழ்க! தோழியே! என்றும்
அயலோர் உரைக்கும் பழிச்சொற்களைக் கேட்டும் நம்மை விட்டு நீங்கான்,
பகலிலும் வருவான் காய்ந்த தூர்களை எறிக்கின்ற தினைப்புனத்துக்கு.
					மேல்
# 286 பாலை துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார்

ஊசலாடும் ஒள்ளிய காதணியான குழைகளை உடைமரங்கள் பெற்றாற் போன்ற,
வழியில் அமைந்த குமிழமரத்தின் அழகிய இதழையுடைய மலர்
மலையின் பாறைகளில் உதிர்ந்து கோலமாய்க் கிடக்கும் பொலிவழிந்த குன்றின்வழியே
காதலர் சென்றுவிட்டார், திண்ணமாக; சென்றொழியட்டும் என் உயிர் என்று
அணிந்த அணிகலன்கள் நெகிழ்ந்துபோகுமாறு விம்மி பலவாறு நொந்து
வருந்துகின்றதை மேற்கொள்கிறாய்; நினைத்துப்பார்த்தால்
தம் நண்பர்களுக்கு உதவி செய்யவும், அவரை அண்டியிருக்கும்
உனது தோள்கள் அணிகலன்களால் வனப்பெய்யவும்
அன்றோ தோழி! அவர் சென்றதன் நோக்கம்.
					மேல்
# 287 நெய்தல் உலோச்சனார்

வானத்தைத் தடவும்படியான கோட்டையைப் பகை வெம்மை தோன்ற முற்றுகையிட்டு,
பசிய கண்களையுடைய யானைப்படையுடன் வேந்தன் மதிலுக்கு வெளியே தங்கியிருக்க,
'நன்கு கோட்டையைக் காப்போரை நாம் உடையோம்' என்னும்
பெருமிதங்கொண்ட கோட்டைக் காவலன் போல, வளைந்த கழியிலுள்ள
பசிய இலையைக் கொண்ட நெய்தல் உள்ள குளிர்ந்த நீருக்கு உரிய தலைவன்
அச்சம்தரும் முதலையாகிய நடுங்கவைக்கும் பகைக்கும் அஞ்சாதவனாய்
நம் மீது கொண்ட காதலின் மிகுதியால், நம்மிடம் வந்த போது,
அஞ்சாதது ஆகி அவன்பால் சென்ற என் நெஞ்சம்,
நள்ளென்னும் ஓசையினையுடைய இரவில் பறவைகளின் ஒலி கேட்கும்போதெல்லாம்
அவனது தேர் மணியின் தெளிந்த ஓசை அல்லவா என்று
ஊரெல்லாம் உறங்கும் இரவிலும் துயிலை மறந்தது.
					மேல்
# 288 குறிஞ்சி குளம்பனார்

அருவி ஆரவாரமாய் ஒலிக்கும் தெய்வ மகளிர் வாழும் நெடிய மலையுச்சியில்
மேலிருந்துவரும் இளவெயிலைப் பெறுவதற்காக, உயர்ந்த கிளைகளிலிருந்து
தோகையையுடைய ஆண்மயில் தன் பெடையோடு ஆடும்
குன்றுகளையுடைய நாட்டினன் பிரிந்துசென்றதனால் அழகு விட்டுப்போக,
நல்ல நெற்றியில் பரந்த பசலையைக் கண்டு அன்னையானவள்
செம்மையும் முதுமையும் கொண்ட பெண்களோடு, கொட்டிய நெல்லுக்கு முன் நம்மை நிறுத்தி,
கட்டுவைத்துக் குறிகேட்டால், மலையில்
ஏனலாகிய செந்தினையின் பால் பிடித்த கொழுத்த கதிர்களில் படியும்
சிறிய கிளிகளை ஓட்டுவதற்காகச் சென்றிருந்தும் இந்த
முருகவேள் வருத்தியது என்று சொல்லுமோ அது?
					மேல்
# 289 முல்லை மருங்கூர் பட்டினத்து சேந்தன் குமரனார்

கேட்பாயாக! வாழ்க! தோழியே! காதலர்
நிலம் இடம்பெயர்ந்தாலும், தான் சொன்ன
சொல்லினின்றும் மாறுபடுகிறவர் இல்லை; மேகம்
படர்ந்த கடல்நீரை முகந்துகொண்டு செறிவுற்று இருண்டு
மிக்க மழையைப் பொழிந்து, பெரு முழக்கத்தை பன்முறை எழுப்பி,
கார்காலத்தைச் செய்து என் முன்னே நிற்கின்றது; அப்பொழுது
புன்செய்க்காட்டில் கோவலர் இரவில் கொளுத்திய
பெரிய மரத்துண்டைப் போன்று
அவர் அருளும் இல்லாமல் இரங்கத்தக்கவள் ஆனேன் நானே!
					மேல்
# 290 மருதம் மதுரை மருதன் இளநாகனார்

வயலிலுள்ள வெள்ளைநிற ஆம்பலின் நெற்கதிர்க்கட்டுகளோடு வந்த புதிய பூவை,
கன்றை உடைய அண்மையில் ஈன்ற பசு தின்றுவிட்டுப்போன மிச்சத்தை
ஓய்ந்துபோன நடையையுடைய முதிய காளை ஆவலுடன் தின்னும் ஊரைச் சேர்ந்தவனின்
தொடர்பினை நீ விரும்பினால், என் சொல்லைக்
கேட்பாயாக! முள்ளைப் போன்ற பற்களையுடையவளே!
நீயோ பெண்மை நலம் மிகுதியாகப் பெற்றவள்; உன் கணவனோ
ஆழமான நீரையுடைய பொய்கைக்கு நள்ளிரவில் சென்று
குளிர்ச்சியுடன் மணங்கமழும் புதிய மலரில் தேனுண்ணும்
வண்டு என்று சொல்வார்கள், அவனை நல்லவன் என்று யாரும் சொல்லமாட்டார்.
					மேல்
# 291 நெய்தல் கபிலர்

நீர் வற்றி மாறிப்போன செறிவான சேற்றுச் சகதியில் உள்ள
நெய்ப்பசை கொண்ட கொழுத்த மீன்களைத் தின்ற கூட்டமான குருகுகள்
குவிந்திருக்கும் வெள்ளை மணலில் ஏறி, அரசர்களின்
ஒள்ளிய காலாட்படையைப் போல விளங்கித் தோன்றும்
குளிர்ச்சியான பெரிய கடல் நீரின் துறைவனுக்கு நீயும்
கண்டது கண்டபடியே உரைப்பாய்! மனத்திற்கொள்வாயாக, பாணனே!
மிகவும் பெரிதாகிய முள்ளூரின் மன்னன் தன் குதிரையில் சென்று
இரவில் கொணர்ந்த ஆநிரைகளின் கூட்டத்துக்குரியவரான
ஆயர்களின் தலைவனைப் போல மனமழிந்துபோன இவளது பெண்மை நலனை -
					மேல்
# 292 குறிஞ்சி நல்வேட்டனார்

நெடிதுயர்ந்த குளிர்ச்சியான சந்தனமரத்தின் ஆடுகின்ற கிளைகளில் சுற்றிக்கொண்டிருக்கும்
பசுமை நிறங்கொண்ட இலைகளையுடைய மணமிக்க தமாலக்கொடியை
இனிய தேனை எடுக்கும் குறவர்கள் வளைத்து முறிக்கும்
எப்போதும் புதிய வருமானம் கொண்ட இடத்தையுடைய கானம் என்று கருதமாட்டாய்;
களிறுகள் சண்டையிட்டுக்கொள்வதால் கரைந்துபோன, பெரிய பள்ளங்கள் உள்ள குழிவான கரையில்
ஒளிறுகின்ற வெள்ளைப் பளிங்குக்கற்களோடு, செம்பொன்னும் மின்னும்
கருங்கற்களுக்கிடையே ஓடும் காட்டாற்றில் நீந்தமுடியாத சுழல்களில் திரியும்
முதலைகளையும் கருத்தில்கொள்ளாமல் இரவுக்காலத்தில் வந்தால்,
நான் உயிரோடு இருக்கமாட்டேன் ஐயனே! அதுவும் இந்த இருள் நிறைந்த பனிக்காலத்தில் -
					மேல்
# 293 பாலை கயமனார்

நீலமணி போன்ற பூங்கொத்துக்களையுடைய நொச்சியின் பூமாலையைச் சூடிக்கொண்டு
பலியாக இடப்பட்ட கள்ளைக் குடிக்கும் இந் நிலத்து முதுகுடியைச் சேர்ந்த குயவன்
இன்னும் இடவேண்டிய பலியைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும் அகன்ற இடமுள்ள மன்றத்தில்
திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த மூதூரில்
பூப்போல் கண்கொண்ட குமரிகளைக் காணும்போதெல்லாம், என்னைப் போல
பெரிதாக மனம் 'விதுக்'கென்று போகட்டும்; எமது வீட்டுப்
பொங்கிநிற்கும் கூந்தல்காரியான என் மகளைத் தன் சொற்களால் மயக்கித்
தன்னுடன் கூட்டிக்கொண்டுபோய்விடுவதற்கு மனத்தை மாற்றிய
கொடுமைக்கார இளைஞனைப் பெற்றெடுத்த தாய்க்கு -
					மேல்
# 294 குறிஞ்சி புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

தீயையும் தென்றலையும் ஒன்றுசேர ஆகாயம் பெற்றிருப்பதைப் போல,
நோயையும், இன்பத்தையும் கொண்டிருக்கிறதல்லவா!
பொய்த்தோற்றமில்லை இது தோழி! மூங்கில்கள் மிகுந்து,
கொறுக்கச்சியாய் உயர வளர்ந்த பெரிய மலைப்பக்கந்தோறும்
தொன்றுதொட்டு வரும் பகைமையுணர்ச்சியுடன், முரண்கொண்டு மிகவும் சினந்து
புலியைக் கொன்ற யானையின் கொம்பினைப் பார்த்ததைப் போன்ற
சிவந்த பக்கங்களையுடைய கொழுத்த மொட்டு மலர்ந்த காந்தளானது
மலைப்பக்கமெல்லாம் சேர்ந்து கமழும் மலைச்சாரல்
திகழ்கின்ற மலைநாடனின் அகன்ற மார்பு -
					மேல்
# 295 நெய்தல் ஔவையார்

உச்சி சரிந்து விழுந்த மலைப்பக்கத்தில் நசுங்கிப்போன வள்ளிக்கொடி போல
புற அழகெல்லாம் அழிந்துபோய், தழைத்துத் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய
தோழியர் கூட்டமும் மனம்வருந்தினர்; எம் தாயும் அதனை அறிந்துகொண்டாள்;
கடுமையான காவலையுடைய பாதுகாப்பை மேற்கொண்டாள்; எமது தந்தையின்,
வேறுபட்ட பல நாடுகளிலிருந்து காற்றால் உந்தித்தள்ளப்பட்டு வந்த
பலவாறான வேலைப்பாடுகள் கொண்ட நாவாய்கள் வந்து நிற்கும், பெரிய துறைமுகத்தில் இருக்கும்
செருக்குத்தரும் உணவான கள் இருக்கும் சாடியைப் போன்ற எமது
இளமை நலம் வீட்டுக்குள் அடங்கி ஒழியச்
செல்வோம், வாழ்க நீவிர், வயதாகிப்போகட்டும் எங்களுக்கு.
					மேல்
# 296 பாலை குதிரை தறியனார்

என்ன ஆகுமோ? தோழி! மன்னர்களின்
போர்த்தொழிலில் வல்லமையுள்ள யானையின் புள்ளிகள் நிறைந்த முகத்தில் அணிந்த
பொன்னால் செய்யப்பட்ட முகபடாத்தின் வேலைப்பாட்டின் சிறப்பைப் போன்று,
உள்ளீடற்ற காயைக் கொண்ட கொன்றையின் கிளைகளில், அழகாகக் கொடிபோன்ற பூங்கொத்து
பெரிய மலையின் மிக உயர்ந்த இடத்தில் மேன்மை பொலிய மலர்கின்ற,
பிரிந்திருப்போர் வருந்தும், அரிதினில் பெறும், கார்காலத்திலும்
மேற்கொண்ட பணியையையே நினைத்த உள்ளத்தோடு விரைவாகச்
செல்வார் என்பர் நம் காதலர்;
இங்கேயே இருந்து ஒழிவீர் என்பர், நாம் வருந்துகின்ற துன்பத்தில் உழன்று -
					மேல்
# 297 குறிஞ்சி மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

பொன்னால் செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்கும் பால் கீழே இருக்க,
உன் மேனியின் ஒளி மாறுபட்டுத் தோன்ற, உன் சிவந்த அடிகளால் ஒதுங்கிப்போனாய் இல்லை;
பலவகையில் சிறப்புற்ற படுக்கையை பகையாக நினைத்துக்கொண்டு,
வெறியேறாத அமைதியான உன் பார்வை, கள்வெறிகொண்டதுபோல் தோன்றுகிறாய்;
இது எதனால் என்று நினைத்துப்பார்க்கவும் இல்லை;
உன் உள்ளத்தில் தோன்றும் குறிப்பு மிகவும் பெரிதாக இருக்கிறது;
வண்டுகள் மொய்க்கும் அரும்புகளைக் கொத்தித் தூக்கியெறிந்த, கிளறுகின்ற கால்களையுடைய கோழி
முதிர்ந்த மிளகுக்கொடிகளின் பின்னலில் உறங்கிக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன்
மெல்ல வந்து உன் உள்ளத்தில் இடம்பெற்றதை
ஊகித்தறியும் மயக்கத்தைக் கொண்டிருக்கிறாள் அன்னை,
ஐயமின்றி அவள் கடுமையாக உன்னை வீட்டுக்குள்வைத்துப் பூட்டிவிடுவாள்.
					மேல்
# 298 பாலை விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

பாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து,
செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர் எழுப்பும்
மடித்துவிட்ட வாயையுடைய தண்ணுமைப் பறையின் முழங்குகின்ற ஓசையைக் கேட்ட
பருந்தின் சேவல் தன் சொந்தங்களை நோக்கிப் பறந்து செல்லும்
கடப்பதற்கரிய பாலைநிலத்தின் பலவாறாய்ப் பிரியும் பாதைகளைக் கொண்ட அச்சம் தரும் அகன்ற இடமான
பெரிய பலவான குன்றுகளை நினைத்துப்பார்த்தும் - அடுத்து இவளின்
கரும்பு வரைந்த பருத்த தோள்களை எண்ணிப்பார்த்தும், ஒரு பக்கமும்
உறுதியாக முடிவெடுக்கமாட்டாய், வாழ்க என் நெஞ்சே! நல்ல வெப்பமாலையை அணிந்த
பொன்னாலான தேரையுடைய செழியனின் கூடல் நகரில்
முன்பு பிரியேன் என்று ஒரே முடிவாகச் சொன்ன அருமையான முடிவு, வெண்மையான அரும்புகள்
பெரிய பூக்களாய்க் கமழும் கூந்தலையுடையவள்
நாம் பிரிந்து சென்ற பெரிய மலைகளை ஏக்கத்தோடு பார்க்கும் பார்வையோடு ஒத்துப்போகுமோ?
					மேல்
# 299 நெய்தல் வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

அச்சத்தை உண்டாக்கும் யானை உடைந்த கொம்பினைப் போன்ற
செறிந்த கட்டவிழ்ந்த தாழையின் வெள்ளைநிறப் பூ
வீசுகின்ற பெரிதான மேல்காற்று மோதுவதால், நுண்ணிய தாதுக்கள்
மின்னுகின்ற அணிகலன்களையுடைய மகளிரின் விளையாட்டு மணலின் மேல் பரவும்
அழகுமிக்க சிறிய ஊர் நம்மைத் தனிமைப்படுத்தினும், அவரே நம் தலைவர்;
நாம் இருந்தும் இல்லாமல் போவோம் என்பதை அறிவோம் திண்ணமாக -
வில்லால் அடிக்கப்பட்ட பஞ்சினைப் போல பெருகும் அலைகளில்
காற்று மோதுவதால் ஒளிறும் பிசிர்கள் மேலெழும்பும்
படர்ந்த கடலைச் சேர்தவனோடு நாம் மகிழ்ந்து இருக்காத போது -
					மேல்
# 300 மருதம் பரணர்

ஒளிர்கின்ற தோள்வளை அணிந்த அரசகுமாரி கோபங்கொள்ள, அதைத் தணிக்க
மடப்பத்தையுடைய தோழியர் கூட்டம் கைகூப்பி நின்றதைப் போல,
பெரிய காற்று தள்ளுவதால் தளர்ந்து, ஆம்பல் மலர்கள்
தாமரையின் எதிரில் சாய்ந்துநிற்கும் குளிர்ந்த துறையினையுடைய தலைமகன்
சிறுவளை அணிந்தவளுக்கு இது விலையாகும் என்று பெரிய தேரை அலங்கரித்து, எமது
வீட்டின்முன் நிறுத்திச் சென்றுவிட்டான்;
நீயும் அவனோடு தேருடன் வந்து திரும்பிச் செல்லாமல்,
நெய்யை ஊற்றிவிட்டாற் போன்ற பிசிர் அடங்கிய நரம்புகளைக் கொண்ட யாழை இசைக்கும்
பெரிய பாணர் சுற்றத்தாருக்குத் தலைவனே! பெரும் புண்பட்ட
அழகினைக் கொண்ட தழும்பனின் ஊணூர் என்னுமிடத்தில்
பிச்சைக்காக வந்த பெரிய களிறு போல, எம்முடைய
அடுப்படியின் கூரை ஓலையைத் தொட்டுக்கொண்டு நிற்கின்றாய்.
					மேல்





# 301 குறிஞ்சி பாண்டியன் மாறன் வழுதி

நீண்ட மலையில் செழித்து வளரும் பெரிய தண்டுகளையுடைய குறிஞ்சியின்
காலையில் பூக்கும் மலரைப் போன்ற மேனியையும், பெரிய சுனையில் பூத்த
பூக்களை இரண்டாகச் சேர்த்துவைத்தது போன்ற கரிய இமைகளைக்கொண்ட குளிர்ச்சியான கண்களையும்,
மயிலோடு ஒத்த தன்மையையுடைய சாயலையும், செந்நிறக் கழுத்துப்பட்டையைக் கொண்ட
கிளியின் தன்மையை ஒத்த சொற்களையும், பருத்த தோள்களையும்,
கொல்லிப்பாவை போன்ற வனப்பையும் கொண்டவள் என் மகள் என்று
அன்புடைய நெஞ்சத்தோடு பலவாறாகப் பாராட்ட,
எமது தாயின் கவனத்தைவிட்டுச் சிறிதும் அகலாத மடந்தை,
அகிலின் நெய்ப்பூச்சு நீங்குதல் இல்லாத மணங்கமழ்கின்ற கூந்தலையுடையவள்.
					மேல்
# 302 பாலை மதுரை மருதன் இளநாகனார்

அணிகலன்கள் அணிந்த மகளிரைப் போல விருப்பம் கொள்ளுமாறு பூத்த
நீண்ட சுருளான கொத்துக்களையுடைய ஒளிரும் பூக்களையுடைய கொன்றை மரங்கள்
காட்டை அழகுபடுத்தப் பூத்திருக்கின்றதாயினும், பெரிதும்
வருகின்ற மழையை எதிரேற்று நிற்கும் நீல மணியின் நிறங்கொண்ட பெரிய புதரில்
வெள்ளை நிறத்தில் பூத்த நல்ல பூங்கொத்துக்களையுடைய தெறுழமரத்தின் பூக்களைக் கண்டும்
இது கார்காலம் என்று தாம் தெளிந்தாரில்லை போலும்; தொலைநாட்டில்,
களிறு உதைத்து உழப்புவதால் கவிழ்க்கப்பட்ட மண்ணினால் எழுந்த நுண்ணிய மண்துகள்,
உட்புழல் இல்லாமல் நன்கு வயிரமேறிய வேலமரங்கள் உயர்ந்து வளர்ந்த
துன்பம் நிறைந்த பழைய பாதைகளை மறைக்கும்
செல்வதற்கரிய காட்டுவழியில் சென்றவர் -
					மேல்
# 303 நெய்தல் மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்

ஓசைகளெல்லாம் குறைந்து அடங்கிப்போய், நடுயாமம் நள்ளென்று இருக்க,
ஆரவாரம் மிக்க பாக்கம் துயில்கொள்ளலாயிற்று;
தொன்றுதொட்டு உறையும் கடவுள் சேர்ந்த பருத்த அரையைக் கொண்ட
மன்றத்தில் நிற்கும் பனைமரத்தின் வளைந்த மடலே இருப்பிடமாய்க்கொண்டு
துணையைச் சேர்ந்திருக்கும் அன்றில் பறவையின் வேட்கைக் குரலைக் கேட்கும்போதெல்லாம்
உறங்காத கண்ணையுடையவளாய், துயர் வருத்துதலால் மனம்நொந்து,
நம்மை எண்ணி வருந்துவாள் நல்ல நெற்றியையுடைய நம் காதலி என்ற எண்ணத்தைக்
கொண்டிருப்பாரோ? வாழ்க! தோழி! தெளிந்த கடலில்
வலிமையான கைகளைக் கொண்ட பரதவர் வீசிய நேரான கோலையும்
வளைந்த முடிச்சுகளையும் கொண்ட அழகிய வலையைக் கிழித்துக்கொண்டு தப்பிச்சென்று
கடுமையாக முரண்பட்டுப் பாய்ந்துசெல்லும் சுறாமீன்கள் சஞ்சரிக்கின்ற
ஆழமான நீர்த்துறையையுடைய தலைவன் தன் நெஞ்சத்தில் -
					மேல்
# 304 குறிஞ்சி மாறோக்கத்து நப்பசலையார்

நீண்ட மெல்லிய தினையின் புலர்ந்த கதிரினை நிறையத் தின்று
சரிவுள்ள மலையில் இருக்கும் தன் இனத்தோடே சேர்ந்து கூடி,
காற்று புகுந்து செல்வதால் ஒலிக்கும் வயிர் என்ற ஊதுகொம்பைப் போல கிளிகள் ஒலிசெய்யும்
செறிவான பெரிய மலைச்சாரல்களையுடைய நல்ல மலைநாட்டைச் சேர்ந்தவன்
நம்மை வந்து சந்தித்தால் நம்மிடம் வந்துகூடும் அழகு, பிரிந்துசென்றால்
நீலமணிகளின் இடைப்பட்ட பொன்னைப் போல, என் மாநிறம் மங்கிப்போக என்
அழகையும் நலத்தையும் சிதைத்துவிடும், பசலையானது; அதனால்
நல்லிசையால் அசுணப்பறவையை ஈர்த்து, வல்லிசையால் அதனைக் கொல்பவரின் கையைப் போல, மிகவும்
இன்பமும் துன்பமும் உடையது
குளிர்ச்சியுடன் கமழும் நறிய மாலையணிந்த வல்லவனான நம் தலைவனின் மார்பு.
					மேல்
# 305 பாலை கயமனார்

வரிந்து கட்டிய அழகிய பந்தும், நீரூற்ற ஆளில்லாமையால் வாடிப்போன வயலைக் கொடியும்,
மயிலின் கால்விரல்போன்ற இலைகளையும், கரிய பூங்கொத்துக்களையும் உடைய நொச்சியும்,
காவலையுடைய அகன்ற வீட்டில் கண்ணுக்கினிமையாய் மகளை நினைவூட்டித் தோன்ற,
என் மகளின்றி நான் மட்டும் தனியே சென்று பார்த்த சோலையும் வருத்திநிற்க,
எனக்கு வருத்தம் உண்டாக்குகிறது மகளே! உன் தோழி,
எரிக்கின்ற சினமுள்ள சூரியன் சிறிதே தணிந்த, இலையில்லாத அழகிய கிளையில்
வரிகளை முதுகில் கொண்ட புறாவின் தனிமைத்துயருடன் கூடிய தெளிந்த அழைப்பொலியைக் கேட்டு,
வெப்பம் அனலாய் வீசும் பொழுதில் கண்கள் மாறுபட்டவளாய்ப் பார்த்து,
ஒளிறுகின்ற இலைவடிவான வெள்ளிய வேலையுடைய தன் காதலனை
குறுக்கிட்டுக்கிடக்கும் மலைகளிடையே செல்லும் கடத்தற்கரிய வழியில் கேள்விகேட்டு நைப்பாளோ?
					மேல்
# 306 குறிஞ்சி உரோடோகத்து கந்தரத்தனார்

தந்தை விதைத்த மென்மையான தினைப்பயிரைக் காக்க, மெல்லமெல்ல வரும்
சிறிய கிளைகளை ஓட்டுதல் இனிமேல் என்ன ஆகுமோ?
"குளிர் என்னும் கிளியோட்டும் கருவி கையிலுள்ள கொடிச்சியே, வீட்டுக்குப் போ" என்று
நல்ல சொற்களை அன்புடன் கூறி, மெதுவாகக்
கதிர்களை அறுக்கத்தொடங்கிவிட்டனர் கானவர்; வளைந்த கதிர்களின்
முற்றிய சுமையைத் தாங்கிய திரண்ட உச்சியைக் கொண்ட தினைத்தாள்கள்
விழா முடிந்த அகன்ற களம் போல எம்மை வருத்த,
துயரந்தரும் அக் காட்சியைக் காணும் வேளையில்,
இனி எப்போது வருமோ? இனிய சொல்லையும்
செறிவான தோள்வளையும், ஒளிறும் வளையல்களையும் கொண்ட இளையவள்
சிறிய தினைப்புனத்தில் தங்கிக் காவல்காத்த அந்த நிலை --
					மேல்
# 307 நெய்தல் அம்மூவனார்

விருப்பம் தரும் ஓட்டத்தையுடைய நெடிய தேரின் மணியும் ஒலிக்கும்;
கூடவே ஓடிவரும் ஏவலரும் ஆரவாரிப்பர்;
கடலாட்டுவிழா நடைபெறும் அகன்ற இடத்தில், பெருமைமிக்க அணிகளால் பொலிவுபெற்ற
உன் தேமல் படர்ந்த அல்குலின் அழகைப் பாராட்டுவதற்கு
வருகின்றான் தோழி! நீண்ட மணல் பரந்த நெய்தல்நிலத் தலைவன்!
நம் வீட்டுக் கூரையின் சாய்ப்பில் படுமாறு வளைந்த முழவு போன்ற அடியையுடைய புன்னையின்
கரிய அடிப்பகுதியில் மறைந்துகொள்வோம் வா! பாதிநாளாகிய நண்பகலில்
பூக்கள் மலர்ந்த கடற்கரைச் சோலையில் நாம் சந்திக்கும் இடத்திற்கு வந்து நம்மை
மெல்லிய பூங்கொத்துக்களையுடைய நறிய பொழிலில் காணாத
அல்லல் மிகுந்த அரிய அவலத்தைக் காண்போம் நாம் சிறிதுநேரம்.
					மேல்
# 308 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்

பொருள்தேடிச் செல்வதற்காக நாம் விரைந்து முற்படும் பேச்சைக் கேள்வியுற்று மனத்திற்கொண்டு,
மலரைப் போன்ற அழகிய மையுண்ட கண்களில் கண்ணீர் வர, ஆய்ந்த அணிகலன்களை அணிந்தவளை
நாம் எம்மருகே வருமாறு அழைக்கவும், நாணங்கொண்டு வருகின்றவளாய்,
விருப்பம் இல்லாததினால் மெல்ல மெல்ல வந்து,
கேள்விகேட்கவும், தடுத்து நிறுத்தவும் செய்யாதவளாய் ஆகி
மணங்கமழும் அடர்ந்த கூந்தல் அசைய, நல்ல வேலைப்பாடான,
செலற்றுப்போன பாவையைப் போலக் கலங்கி, நீண்ட நேரம் நினைத்து,
எம் மார்பில் சாய்ந்தாள்; அதனைக் கண்டு,
ஈர மண்ணால் செய்யப்பட்டு நீர் நிறைந்திருக்கும் பச்சையான மண்குடம்
பெரிய மழை பெய்வதனில் நனைந்து கரைந்ததைப் போல, எம்முடைய
பொருள் பற்றிய நினைவு மிகுந்த நெஞ்சம் அவள் உணர்வுகளுடன் பொருந்தி மகிழ்ந்தது.
					மேல்
# 309 குறிஞ்சி கபிலர்

இளைத்துப்போன தோள்களையும், வாடிப்போன தோல் சுருக்கங்களையும்,
மாந்தளிர் போன்ற அழகினை இழந்த என் மேனி நிறத்தையும் நோக்கி,
'என்னால் அல்லவா இவளுக்குத் துயரம் ஏற்பட்டது' என்று, அன்பினால்
துயரத்தில் ஆழ்ந்துபோகாதே! வாழ்க, தோழி! வாழையின்
கொழுத்த மடலில் உள்ள அகன்ற இலையில் மழைத்துளிகள் சேர்ந்து ஒன்றாயிருக்கும்
பெரிய மலையைச் சேர்ந்தவனுடைய நட்பு நமக்குத்
துன்பமாக இருப்பதை அறிவார் யாருமில்லை என்று
கூறுகிறாய் திண்ணமாக நீயே!
தெளிவாக இருக்கிறேன் நிச்சயமாக நான், அவர் மீது கொண்ட நட்பினில்.
					மேல்
# 310 மருதம் பரணர்

விளக்கின் சுடரைப் போன்று சுடர்விட்டு நிற்கும் தாமரையின்
யானைச் செவியைப் போன்ற பசிய இலைகள் திடீரென அசைய,
நீருண்ணும் துறையில் நீர்மொள்ளும் மகளிர் வெருண்டு ஓட,
வாளை மீன் நீருக்குள் பிறழும் ஊரனாகிய தலைவனுக்கு,
பரத்தைகளை நேர்ந்துவிடும் அறிவில்லாத பெண்ணே!
உண்மையைத் தொலைத்த உன் நாவினால் குழறும் குறுமொழிக்கு
உடன்பட்டு உன் பொய்ம்மையை ஆராய்ந்து உணராத அவரின் தாய்மாரிடம் சென்று அணுகி
இன்னும் சொல்லவில்லையோ நீ? விரைவாக,
களிற்றைக்கொண்டு பிழைப்பு நடத்தும் பாணனின் கையில் உள்ள
பெரிதாக ஒலிக்கும் தண்ணுமை போல
உள்ளே உண்மை ஒன்றும் இல்லாத ஒரு மேற்போர்வையான சொற்களை -
					மேல்
# 311 நெய்தல் உலோச்சனார்

மழை பெய்தால், விடுபட்ட குதிரையின் பிடரிமயிரைப் போன்று செறிவாகச் சாய்ந்து அடித்து,
பெரிய கதிர்களையுடைய நெல்லின் புது அறுவடையைக் கொடுக்கும்;
பெய்யாது வறண்டுபோனால், கடற்கரையில் வளரும் நீர்முள்ளி படர்ந்து, சேறு காய்ந்து,
கரிய கழி சார்ந்த வயல்களில் வெள்ளை உப்பு விளையும்;
இத்தகைய ஆக்கம் குறையாத இயல்பைக் கொண்ட நம் மூதூர் நலமுடையதாகும்;
கொழுத்த மீனைச் சுடுகின்ற புகை தெருவெங்கும் பரக்க,
சிறிய பூக்களைக்கொண்ட ஞாழல் உள்ள துறையும் இனிமையாக மணக்கும்;
ஒன்றுதான் தோழி! நம் கடற்கரைச் சோலையின் குறை;
கரிய கிளைகளையுடைய புன்னை மலர்களின் பூந்தாதுக்களை அருந்தி
மிகுந்த களிப்புடன் தேனீக்கள் ஒலியெழுப்ப, அவரின்
நெடிய தேரின் இனிய ஒலி கேட்பது அரிதாயிருக்கிறது.
					மேல்
# 312 பாலை கழார் கீரன் எயிற்றியார்

நொந்துபோயிருக்கின்றேன் நான்! என்னை நொந்துகொள்ளும் என் நெஞ்சமே!
குளிர்ந்த புதராய் விளங்கும் ஈங்கையின் அழகிய தளிர்கள் வருடிவிட,
சிறகுகளைக் குவித்துவைத்திருக்கும் துன்பத்தையுடைய வெள்ளைக் குருகாகிய
பார்வைப் பறவையை வேட்டுவன் கால்கட்டை நீக்கி அருள்செய்ய நின்ற
கார்காலத்திலும், அது நின்று பகலிரவு என்று அறியாது மயங்கிய கூதிர்காலத்திலும் -
நாம் அவளின் பக்கத்தில் இருக்கும்போதும், அவள்தானே
மேலேறிப் படரும் தேமலையும், முற்றாத இளம் மார்புகளையும் உடையவளாய்
கோடை மாதத்திலும் நடுங்கிக்கொண்டிருப்பவள் -
வாடைக்காற்றடிக்கும் பெரும் பனிக்காலங்களிலும் என்ன பாடு படுவாளோ? என்று -
					மேல்
# 313 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

கருமையான அடிமரத்தையுடைய வேங்கை மரத்தின் காலையில் பூத்த புதிய பூக்கள்
பொன்வேலை செய்யும் பொற்கொல்லனின் சிறந்த கைவேலைப்பாட்டைப் போல
மிகவும் வனப்புற்றன; தடைகளை முற்றிலும் அழித்து,
தழைத்த பலவான கூந்தல் அழகுபெற அவற்றை அணிந்து,
அவர் காணவேண்டுமென்ற விருப்பம் அளவுமீறிப்போனதினால், நம்மைக் கைவிட்டுச் சென்றவரை
எவ்வாறு காண்போம் தோழி? காந்தளின்
கமழ்கின்ற பூங்கொத்துக்கள் மலர்ந்த விருப்பந்தரும் மலைச்சாரலின்
கூதளம் படர்ந்த நறிய சோலை நாமின்றித் தனித்திருக்க, ஊருக்குத்
திரும்பிச் செல்வோம் போலத் தோன்றுகிறது, இலைகள் காய்ந்துபோய்
அருவிநீரைப் போல ஓயாமல் சலசலத்துக்கொண்டிருக்க,
கொய்யக்கூடிய பருவத்தை அடைந்தன நாம் கிளிகளைக் கூவிக்கூவி விரட்டிய தினைக்கதிர்கள்.
					மேல்
# 314 பாலை முப்பேர் நாகனார்

வயது முதிர்ந்தோர் தம் இளமையை எவ்வளவு வருந்தியும் மீண்டும் பெறமாட்டார்கள்;
வாழ்நாளை வகுத்து இன்ன அளவுள்ளது என்னும் அறிபவரும் இங்கு இல்லை;
மாரிக்காலத்து ஈரமான இதழையுடைய பூவை,
நறிய வயிரம்பாய்ந்த முற்றிய சந்தனத்தோடு சூடிக்கொண்ட மார்பில்,
சிறிய புள்ளிகளைக் கொண்ட திரண்ட அழகிய நிறத்தையுடைய
கரிய கண்கள் அமைந்த வெம்மையான மார்பகங்கள் அமுங்குமாறு அணைத்தபடியே
கழியட்டும் இந்த இரவு என்று
தாம் கூறிய சொல்லின் உறுதிப்பாட்டில் பொய்த்துவிட்டார், அவர் வாழ்க!
விரல்களை நொடித்துவிட்டாற்போன்று காய்கள் வெடிக்கும் கள்ளியின்,
அசைகின்ற பாவையைப் போல கிளைகளில் ஏறி, தனித்திருக்கும்
புன்மையான புறா, தான் விரும்பும் தன் பெடையை அழைத்துக்கூவும்
வெயில் மாறாத நீண்ட பாலைநிலத்தின் வழிகளில் சென்றவர் -
					மேல்
# 315 நெய்தல் அம்மூவனார்

விரைந்து செல்லக்கூடிய, பெரும் தெய்வங்களுக்குரிய, ஆண்டுகள் பல கழிந்ததாக,
பாறைகளைக்கொண்ட துறையில் அலைகள் மோதுவதால் அடிபட்டு
பழையதாகி மீன்பிடிக்கத் தகுதியற்றுப்போன முரிந்த முன்பகுதியைக்கொண்ட தோணியை,
நல்ல எருது தன் நடையழகை இழந்ததாக, உழவர்கள்
புல் உடைய தோட்டத்தில், வேலைசெய்யாதபடி, மேயவிட்டதைப் போல,
நறு மணம் சேர்ந்த நல்ல புகையை ஏற்றாமல், சிறிய பூவைக்கொண்ட
ஞாழலோடு சேர்ந்த புன்னை மரத்தின் கொழுமையான நிழலில்,
அதன் முழவு போன்ற அடிமரத்தில் கட்டிவைத்திருக்கும் துறையைச் சேர்ந்தவனே! மிகவும்
சிறப்பைக்கொண்டதாகக் கருதப்பட்ட உறவு எளிதில்
தவறாகத் துன்பம் தருவதை நன்கு அறியாதிருக்கின்றாய், அதனால் எம்மைப் போல
நெகிழ்ந்த தோளும், கலங்கிய கண்ணையும் உடையவராய்
மலர்ந்தவுடன் பூவானது தீய்ந்துபோனாற்போல ஆவர் உன்னை விரும்பியவர்.
					மேல்
# 316 முல்லை இடைக்காடனார்

அறியாமையுடையது, இந்த நீலமணி நிறத்தைக்கொண்ட மேகம்;
மௌவல் மலரை அழகுற எடுத்துக்காட்டி,
மீனின் அழகையுடைய மையுண்ட கண்களைக் கொண்டு, பொன் குழைகளையும் அணிந்தவளே, இவை உனது
பற்களின் அழகைக்கொண்டு அரும்பாய்த் துளிரும் பொழுதில் மீண்டு வருவோம் என்று
இடம் அகன்ற வானத்துப் பிறைமதி எனக் கொள்ளத்தக்க உன்
நல்ல நெற்றியை நீவிவிட்டுச் சென்றோர், தம்முடைய பொருளிட்டும் விருப்பம்
வாய்க்கப்பெற்று திரும்பி வருவதற்கு முன்னரேயே, கடுமையான வழியில் இருக்கும்
மலை சேர்ந்த மலைத்தொடர்கள் மறைந்துபோகுமாறு, இறங்கி
மழைத்துளியைப் பெய்யும் குளிர்ந்த கார்காலத்தைச் செய்து
இடிமுழக்கத்தை எழுப்பியது அகன்ற வானப்பரப்பில்.
					மேல்
# 317 குறிஞ்சி மதுரை பூவண்ட நாகன் வேட்டனார்

நீண்ட பெரிய மலைச் சாரலில் தன் பெண்யானையுடன் உறவுகொண்ட
அழகிய வரிகளையுடைய ஆண்யானையின் உயர்த்திய கையைப் போன்று
தோகை நுனி பிரிந்து வளைந்த நீண்ட கதிர்களையுடைய பசிய தினையைப்
பவளம் போன்ற சிவந்த வாயையுடைய பச்சைக் கிளிகள் கவர்ந்துண்ணும்
உயர்ந்த மலைகளின் நாட்டைச் சேர்ந்தவனே! நீ காதலிப்பளிடம் கொண்ட நட்பை
அன்னை அறிந்தால், நீர் சொரிய
என்ன ஆகுமோ அது? எமது தந்தையின்
உயர்ந்த மலைச் சாரலிலுள்ள இனிய சுனைநீரில் குளித்து
தோழியரோடு பறித்த குவளையின்
கரிய இதழையுடைய அழகிய மலரைப் போன்ற கண்கள் -
					மேல்
# 318 பாலை பாலை பாடிய பெரும் கடுங்கோ

நினைக்கவும் செய்வீரா? ஐயனே! முன்பு ஒருநாள் நாம்
பருத்த அடிமரத்தைக் கொண்ட ஓமை மரத்தின் தாழ்ந்த கிளை தந்த
நிழல் என்ற சொல்லுக்கே பொருந்தாத வரிவரியான நிழலில் இருக்கும்போது
நம்மை நடுங்க வைக்காது நாமிருந்த இடத்து வழியாக வந்து,
தழையை ஒடித்துத் தன்மேல் போட்டுக்கொண்ட உயர்ந்த கொம்புகளையுடைய யானை
வரிகளையுடைய தன் நீண்ட கையினைச் சுருக்கி, வேறு ஒரு
பாதையில் சென்றுவிட்டதும், அதனை வேறாக உணர்ந்து
வெயில் பரவிய மலைப் பிளப்புகளில் எதிரொலிக்குமாறு
புல்லிய தலையைக்கொண்ட இளம் பெண்யானை பிளிறிக்கொண்டு புலம்பிய குரலை -
					மேல்
# 319 நெய்தல் வினைத்தொழில் சோகீரனார்

பொங்கிவரும் கடலும் ஓசை அடங்கிப்போயிற்று; ஊதைக்காற்று
பூந்தாதுக்களை உதிர்த்துவிடும் கடற்கரைச் சோலையும் பொலிவிழந்தது;
மணல் மிகுந்த பழமையான ஊரின் அகன்ற நெடிய தெருவில்
ஆண்கூகையானது தன் பெடையுடன் சென்று
நடமாட்டமில்லாத பெரிய நாற்சந்தியில் அச்சம்தோன்றக் குழறுகின்ற ஒலியை எழுப்பும்;
பேய்களும் நடமாடித்திரியும் தடுமாறவைக்கும் இருளைக்கொண்ட நள்ளிரவில்
கொல்லிப்பாவை போன்ற பலரும் கொண்டாடும் அழகினையுடைய
அகன்ற மென்மையான பருத்த தோள்களைக்கொண்ட பேதைமை மிக்க இளமகளின்
அழகுத்தேமல் படர்ந்த அழகிய மார்பகங்களைத் தழுவுவதை நினைத்தவாறு
மீன்கள் கண்துயிலும் போழுதிலும்
நான் கண்துயிலேன் என்னாகுமோ என் நிலை?
					மேல்
# 320 மருதம் கபிலர்

ஊரில் திருவிழாவும் முடிவடைந்தது; முழவுகளும் கட்டித்தொங்கவிடப்பட்டன;
எதனை நினைத்துக்கொண்டிருக்கிறாள் இவள் என்று கேட்பாயாயின்,
தழை அணிந்து அசைவாடும் அல்குலையுடையவளாய், தெருவில்
இளையோள் நடந்து சென்ற அந்த ஒரு நிகழ்ச்சிக்கே, பழமையான வெற்றிச் சிறப்பையுடைய
ஓரி என்பானைக் கொன்ற ஒரு ஒப்பற்ற தெருவில்
காரி புகுந்தபோது அவனை எதிர்கொள்ளாதமாட்டாதவரின் இடம் போல
கல்லென்ற ஓசையுடையதாயிருந்தது ஊர் முழுதும்; அதனைப்போல
வீட்டுக்கதவுகளை இறுக்கப் பூட்டி, அழகிய வளையணிந்த
எழில் மிக்க மாந்தளிர் மேனியையுடைய மகளிர்
தப்பித்தனர் தமது கணவன்மாரைக் காத்துக்கொண்டு.
					மேல்
# 321 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

செம்மண் நிலமான முல்லைக்காட்டில், புல்லிய மயிரைக்கொண்ட செம்மறியாடுகளின்
ஓசை இனிய தெளிந்த மணி கட்டப்பட்ட கூட்டம், மேயும் இடத்தைவிட்டு தொழுவத்துக்குத் திரும்ப,
கானகத்து முல்லையின் அகன்ற வாயையுடைய மலரைப்
பார்ப்பனப் பெண்கள் சாரலை அடுத்துள்ள வெளியில் சூடிக்கொள்ள,
மலையில் ஞாயிறு சேரும் கதிர்கள் மழுங்கிய மாலையில்
பொலிவிழந்து வெறுமையாய்த் தோன்றும் தன் இல்லத்தை நோக்கி, மெல்ல
வருந்தியிருப்பாள் திருத்தமான அணிகலன்களை அணிந்திருக்கும் நம் தலைவி,
எனவே, விரைந்து செலுத்துவாயாக தேரினை, செல்வாயாக!
குருந்த மரங்கள் பூத்து நிற்கும் காட்டினில், அடர்த்தியாக
பெருத்த ஆரவாரத்தையுடைய நமது பழமையான ஊரின் மரங்கள் தெரிகின்றன.
					மேல்
# 322 குறிஞ்சி மதுரை பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்

இவ்வாறு தணியுமானால், எங்குமே
இதனைக்காட்டிலும் கொடியது வேறு ஒன்றும் இல்லை;
இது உண்மையாகுமோ? வாழ்க தோழி! மூங்கில்கள் உயரமாய் வளர்ந்து,
வெட்டி அடுக்கியதைப் போல் அடர்த்தியாக பின்னிக்கிடக்கும் மலைப் பிளவாகிய குகையினில்
ஊனைத் தின்னுகின்ற பெண்புலியின் வருத்துகின்ற பசியைப் போக்குவதற்கு
ஆட்கள் நடமாடும் அரிய ஒடுக்கமான வழியில் மறைந்திருந்து ஒளிபொருந்திய வரிகளையும்
கடுமையான கண்களையும் உடைய வலிமை மிக்க புலி ஒடுங்கியிருக்கும் நாடனாகிய தலைவனின்
குளிர்ச்சியான மணங்கமழும் அகன்ற மார்பினை உடைமையாகப் பெறாததினால்
நல்ல நெற்றி பசந்துபோன துன்பம் மிகுந்த அரிய நோயை,
முருகு தீண்டியது என்று அறிந்து கூறி, வெறியாடும் வேலன்
இனிய இசைக்கருவிகள் ஒலிக்கப் பாடி
பலவகைப் பூக்களைச் சொரிந்து முருகனைத் துதித்துப்பாடும் பலிக்கொடைக்கு -
					மேல்
# 323 நெய்தல்# வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

உயர்ந்து தோன்றும் இனிய கள்ளையுடைய பனைமரங்களுக்கு
நடுவே இருக்கிறது - இளமை பொருந்திய
தோழியரும் நானும் யாருக்கும்தெரியாமல் அங்கு இருப்போம் - 
உன் மேல் மயக்கம் கொண்ட நட்பினால் சிறந்த பெண்மைநலத்தை இழந்து, உன்னுடைய
உறவைக் கொண்ட வளைகள் நிறைந்த முன்கையைக் கொண்ட
நல்லவளான தலைவியின் தந்தையின் சிறுகுடியை அடுத்துள்ள கடற்கரைப்பகுதி -
புலியினதைப் போன்ற வரிகள்கொண்ட மணல்மேட்டுப் புன்னைமரங்கள் உதிர்த்த
மிகுந்த பூந்தாதுக்களில் தேனுண்ணும் தேனீக்களோடு ஒன்றுகூடி
வண்டுகள் ஒலிக்கும் இனிய இசையும் கலந்துஒலிக்க, திண்ணிய தேரில்கட்டிய
தெரிவிக்கும் மணிகளின் ஓசையைக் கேட்பதும் மிக அரிதாகும்,
வரும் வழி இது அவ்விடத்துக்கு, மறக்கவேண்டாம்.
					மேல்
# 324 குறிஞ்சி கயமனார்

அந்தோ! மிகவும் இரங்கத்தக்கவள் இவளின் தாய்!
நொந்து அழிகின்ற துயரத்துடன் இனி என்ன ஆவாளோ?
பொன்னைப் போன்ற மேனியை உடைய தன் மகளை மிகவும் விரும்பியவள் அவள் -
கொம்புகள் முற்றிப்போன யானைகள் காடுகளில் சேர்ந்து கூட்டமாக வர
நெய் பூசினாற்போன்ற வலிய காம்பினையுடைய வேலினையுடைய
செல்வமுடைய தந்தையின் அகன்ற மலைப்பகுதியில்
ஆடும்போது பந்தை உருட்டுபவள் போல ஓடி,
அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளின் மிகுந்த
பஞ்சு போன்ற மென்மையான அடிகளால் நடந்துவருகின்றாள்.
					மேல்
# 325 பாலை மதுரை காருலவியம் கூத்தனார்

கவிழ்ந்த தலையையுடைய கரடியின் பருத்த மயிரையுடைய ஆண்கரடி
இரை தேடும் ஆசையால் இரவில் போய்,
நெடுநாள் செயல்புரியும் இயல்பினையுடைய கரையானின் கூட்டம் உருவாக்கிச் செய்த
பாம்புகள் வாழும் புற்று அழியும்படி, விரைவாக
முறிந்த நுனியையுடைய பெரிய நகங்களால் பறித்துப் புற்றாஞ்சோற்றை உண்ணும்
செல்லுதற்கு அரிய பிரிவுபட்ட வழிகளைக் கடந்து, இவளுடைய
பூவைப் போன்ற மையுண்ட கண்கள் தம் புதுமை அழகு குன்றிப்போகும்படி
மிகுந்த கண்ணீர் சொரிவதைப் பார்த்தும்
தகுந்ததோ?, பெருமானே! தவிர்ப்பீராக உமது பயணத்தை
					மேல்
# 326 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்

கொழுத்த சுளைகளையுடைய பலாவின் பழம் மிகுந்த உயர்ந்த மலைச்சரிவில்,
செழுமையான குலைகளால் வளைந்த கரிய கிளையில், கொக்குகள்
மீனைக் குடைந்து உண்பதால் ஏற்படும் புலவுநாற்றத்தைத் தாங்க மாட்டாத
மெல்லிய பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்முகின்ற நாட்டையுடையவனே!
உனக்குச் சொல்லவும் நான் நாணமடைகின்றேன், இவளுக்கு,
நுண்ணிய கொடியையுடைய பீர்க்கின் நன்கு மலர்ந்த பூவைப் போல்
பசலை உண்டாயிருக்கிறது அல்லவா! பலநாளும்,
அறியப்படுகின்ற அமைதலான அழகுடைய எமது தினைப்புனத்தை நீ அடைதலுண்டென்றாலும்
வண்டு என்று உணரத்தகாதவை ஆகி
பசலை போன்ற நிறமுடைய பீர்க்க மலர் என்று கருதியதைப் போலாகும் இவள் கண்கள்.
					மேல்
# 327 நெய்தல் அம்மூவனார்

நம்மை விரும்பி வந்த சான்றோரான நம் தலைவரை நம்புதல் பழியைத் தருமென்றால்,
உறக்கமில்லாதனவாய்க் கண்ணீர் சொரியும் கண்களோடு மெலிவுற்று
இறந்துபோதலும் நமக்கு இனிதாகும்; அன்புகொண்ட தோழியே!
அந்த நிலை இனியது அல்ல என்றாலும், சான்றோர்
தமக்குரிய கடனாற்றும் திறத்தில் குறைவுபடமாட்டார் என்று ஒருமனதாக
உலகம் கூறுவது உண்டு என்றுகொண்ட எமக்கு நிலைபெற்ற
உரிமைப்பொருள் ஆகுதலும் உரியதேயாகும் - அரும்புகள் மலர்கின்ற
புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த கடற்கரைச் சோலையின்
குளிர்ந்த அழகிய துறைகளைச் சேர்ந்தவனது மென்மையான மார்பு.
					மேல்
# 328 குறிஞ்சி தொல் கபிலர்

கிழங்குகள் கீழே வேர்கொண்டு இறங்க, தேனடைகள் மேலே மரக்கிளைகளில் தொங்க,
ஒருசில தினைவிதைகளை விதைத்து, அவை பலவாக விளைய,
அந்தத் தினைகளை உண்ணவரும் கிளிகளை ஓட்டுகின்ற பெரிய மலைநாடனான தலைவனின்
பிறப்பு நம்முடையதைப் போல் இல்லாமல் உயர்வானதாக இருக்க அறிந்தோம், அதனால்
அந்த உயர்வு இனி என்றும் வாழ்க, தோழி! ஒரு நாள்
சிறிய பலவான மின்னல், இடி போன்றவற்றைக் கொண்டு வலமாக ஏறி
பெரும் மழை பெய்வதாக, இங்கே - இனிமேல்,
எள்ளைப்பிழிந்து எடுக்கப்பட்ட நெய்யுடன், வெள்ளைத்துணியும் வேண்டாது
சந்தனமரங்களை உச்சியிலே கொண்ட உயர்ந்த பெரிய மலைச்சாரலில்
குறுக்கிட்டுக்கிடக்கும் மலை அடுக்கத்திலுள்ள
நல்ல கலன்களைப் பரிசிலாகப் பெறும் விறலி ஆடுகின்ற இவ்வூரில் உள்ள தினைப்புனத்தில் -
					மேல்
# 329 பாலை மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

அளவில்லாத அன்பினையுடையவர், நரகத்துள் உய்க்கும் தீயநெறிகளைக் கைக்கொள்ளாதவர்,
கள்வர்கள் கொன்று வழியில் போட்டுவிட்டுச் சென்ற மக்களின் உருக்குலைந்த பிணங்களின்
முடை நாற்றம் மிக்க உடலின் பாகங்களில் தோண்டித் தின்பதற்குரிய இடம் இல்லாததினால்
அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது
இறகுகளைத் தீவிரமாக அடித்துக்கொள்வதால் இற்று விழுந்த காற்றில் பறக்கும் புல்லிய அடி இறகுகளைத்
தம்முடைய செம்மையான அம்புகளில் இறுகக்கட்டிய கொடுமையான ஆண்கள்
கொலைத்தொழிலைச் செய்யும் எண்ணத்துடன் வழியைப் பார்த்துத் தங்கியிருக்கும்
பாலைநில வழியில் சென்றனர் என்றாலும், நம்மைத் துறந்து
அங்கேயே தங்கிவிடமாட்டார், வாழ்க, தோழியே! இதோ பார்,
பெரிய வானம் அதிரும்படியாக மின்னி
கூட்டமான பெரிய முகில்கள் கடல்நீரை முகந்துகொண்டுவருகின்றன.
					மேல்
# 330 மருதம் ஆலங்குடி வங்கனார்

அகன்ற கொம்புகளையுடைய எருமையின் சொரசொரப்பான பிடரியைக் கொண்ட கரிய ஆணானது,
இள நடையையுடைய நாரையின் பலவான கூட்டம் வெருண்டோட
நெடிய நீர் நிரம்பிய குளிர்ந்த குளத்தில் துடுமென்று விரைவாகப் பாய்ந்து
அந்த நாளிற்செய்த உழும் தொழிலின் வருத்தம் நீங்கும்படியாக நீராடி, நீண்ட கிளைகளையுடைய
இருள் நிரம்பியது போன்ற அடர்ந்த மருதமரத்தின் இனிய நிழலில் படுத்திருக்கும்
புதிய வருவாயையுடைய ஊரினைச் சேர்ந்தவனே! உன்னுடைய மாண்புமிக்க அணிகலன்களை அணிந்த மகளிரை
எம்முடைய வீட்டுக்கே அழைத்து வந்து நீ அவருடன் கூடியிருந்தாலும், அவர்களின்
புல்லிய மனத்தில் இடம்பிடித்திருப்பது அரிது, அந்த மகளிரும்
பசிய தொடியணிந்த புதல்வியரொடு, புதல்வரையும் பெற்றுத்தந்து
நன்மை மிகுந்த கற்போடு
எம்மைப்போல் குலமகளிரின் பெருமையை அடைதல் அதனினும் அரிது.
					மேல்
# 331 நெய்தல் உலோச்சனார்

உவர் நிலத்தில் விளையும் உப்பை உழாமல் விளைவிக்கும் பரதவர்
ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகளைச் செலுத்தும் உப்புவணிகர் வருகின்ற வேளையைப் பார்த்து
கடற்கரைச் சோலையில் இட்டுவைத்துக் காவல்காக்கும் குவியலான
புலவுநாற்றத்தையுடைய காய்ந்துகொண்டிருக்கும் மீனின் மீது படியும் பறவைகளை ஓட்டிக்கொண்டு
மடப்பம் பொருந்திய பார்வையையுடைய தோழியரோடு சேர்ந்து மேட்டினில் ஏறி
என் தந்தையின் படகு இது, உனது தந்தையின் படகு என்று சொல்லிக்கொண்டு
வளைத்து நிற்கும் கடலில் மீன் வேட்டைக்குச் சென்றுள்ள தம் சுற்றத்தாருடைய
திண்மையான படகுகளை எண்ணிக்கொண்டிருக்கும் குளிர்ந்த கடலைச் சேர்ந்தவனே!
மிகவும் இனிமையுடையது எமது வெறுப்புணர்வு இல்லாத நல்ல ஊர்;
இப்பொழுது வந்தாலும் தவறும் இல்லை; சிறிதளவுகூட
வேற்றூர்க்காரரின் வரவை மற்றவர்கள் அறிவது எப்படி?
சுற்றத்தவர்க்குள்ளேயே இவர் இவர் என்று அறியாமல் இருக்கும் சேரியையும் உடையதாயிருக்கும்போது-
					மேல்
# 332 குறிஞ்சி குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்

என் இளம்வயதுத் தோழியே! இது எப்படிப்போய் முடியுமோ?
நீருக்குள் குவளை மலரைக் கொய்பவர்கள் நீர் வேட்கை அடைந்தாற்போல
நாள்தோறும் உடனிருந்து தலைவன் தழுவவும், உனது தோள்களில்
முன்பிருந்த நிலையிலிருந்து வழுவுகின்றனவே உன்னுடைய தோள்வளைகள் என்று பலமுறை
சொல்வதை மேற்கொள்கிறாய் நீ; மலைப்பிளப்புகளில் உள்ள குழிவுகளில்
குட்டியீன்ற பெண்புலியை இருக்கவைத்த பெரிய, நிறத்தையுடைய வலிய புலி
இரையை விரும்பித்தேடி வருந்தியலையும் மலையடிவாரத்துச் சிறிய வழியில்
முதன்முதலில் என்னைக் காண வந்ததைப் போன்று உயிரைப் பொருட்படுத்தாதவனாய், பல நாட்கள்
நிறைந்த இருளில் வருவதைக் காண்கின்ற எனக்கு
எப்படி ஆகும், ஒளிரும் அணிகலன்கள் கழலாதவாறு செறிந்திருப்பது? -
					மேல்
# 333 பாலை கள்ளிக்குடி பூதம் புல்லனார்

மேகங்கள் தம் தொழிலில் குறைவுபட்டு, பெரிய வானத்தில் உயரச் சென்றதினால்,
மூங்கில்கள் தம் அழகை இழந்துபோன மலைகளினூடேஅமைந்த பாதையாகிய சிறிய நெறியில்
பருக்கைக் கற்கள் உள்ள பள்ளத்தில் ஊறிய சிறிதளவு நீரின் பக்கத்தில்
பொலிவுள்ள நெற்றியையுடைய யானையோடு புலி போரிட்டு உண்ணும்
பாலைவெளியைக் கடந்துசெல்வது கடினமானது என்று நினையாராய், வலிமையழிந்து
உள்ளே பொருளாசை பெருக்கெடுக்கும் நெஞ்சத்தோடு, தாம் வள்ளன்மை உள்ளவராய் இருப்பதற்காக,
அரிய பொருளை ஈட்டுவதற்குப் பிரிந்துசென்ற காதலர், உன்னைத் தழுவுவதை எதிர்பார்த்துவந்து
உன்னுடைய திருத்தமான அணிகளையுடைய பருத்த தோளை இன்று வந்து பெறுவர் போலும்,
நீங்குவதாக உன்னுடைய துயரம்! உயரமான இடத்தில்,
சிறந்த புகழையுடைய நல்ல இல்லத்தின் ஒளிபொருந்திய சுவரில் ஒட்டிக்கொண்டு
விரும்பத்தக்க குரரையுடைய பல்லி
நள்ளென்னும் நடு இரவில் நாம் நினைக்கும்போதெல்லாம் கௌளிசொல்லும்.
					மேல்
# 334 குறிஞ்சி ஐயூர் முடவனார்

கரிய விரல்களையுடைய மந்தியின், சிவந்த முகங்களையுடைய பெரிய கூட்டமானது,
பெரிய மலைகளின் சரிவில் அருவியில் குளித்து,
உயர்ந்த மூங்கில்கழைகளில் ஊசல் ஆடி, வேங்கைமரத்தின்
மலைக்கே அழகுதரும் நறிய பூக்கள் கல்லிடையேயுள்ள சுனையில் உதிர்ந்துவிழ,
தம் ஆண்குரங்குகளோடு களித்திருக்கும் மலையக நாடன்,
மாரிக்கால மழை நின்று பெய்யும் மிகுந்த இருளையுடைய நள்ளிரவில்
அருவியின் சரிவில் ஒரு வேலை ஏந்திக்கொண்டு
மின்னல் மேகத்தைப் பிளக்கும் ஒளியையே விளக்காகக் கொண்டு வருவான் எனில்
என்ன ஆகும் நம் இன்னுயிரின் நிலை?
					மேல்
# 335 நெய்தல் வெள்ளிவீதியார்

திங்களும் தான் திகழ்கின்ற வானத்தில் அழகைப் பொழியும்; ஒலிக்கும் நீரோடு
பொங்கியெழும் அலைகளுள்ள கடலும் தன் முழக்கத்தை நிறுத்தாது;
ஒலி மிகுந்துவர கடர்நீர்ப்பெருக்கும் கரையைத் தாண்டிவரும்; மிகுந்த நீரைக்கொண்ட
பலவான பூக்களையுடைய கடற்கரைச் சோலையின் முள் உள்ள இலைகளைக்கொண்ட தாழை
சோற்றை அள்ளிப்போடும் அகப்பையைப் போல கூம்பிய மொட்டு அவிழ,
காற்று எங்கும் பரக்க உண்டாக்கும் குறைவில்லாத நறுமணத்துடன்
கரிய பெரிய பனைமரத்தின் மேல் துன்புற்று வருந்தும்
அன்றில் பறவைகளும் தம் எலும்புகள் நடுங்கக் கூவும்; அன்றியும்
விரலால் தடவி வருந்தி இசைக்கக்கூடிய விருப்பந்தரும் நல்ல யாழ்
நடுயாமத்தும் ஒழியாமல் இசைக்கின்றது;
காம நோயோ பெரிதாக இருக்கின்றது; களைவோரைத்தான் காணோம்.
					மேல்
# 336 குறிஞ்சி கபிலர்

சொரசொரப்பான பிடரியைக் கொண்ட பன்றி, தோலாய் வற்றிப்போன முலைகளையுடைய தன் பெண்பன்றியுடன்
திரண்ட அடித்தாள்களையுடைய தினையை அளவின்றித் தின்றுதீர்த்ததால்
மலை வழியிலுள்ள கடினமான சிறிய ஒடுக்கமான வழியில் தன்னை ஒடுக்கிக்கொண்டு, கானவன்
வில்லெறிந்து கொன்று கொணர்ந்த வெண்மையான கொம்பினைக்கொண்ட ஆண்பன்றியை
இழுத்துச் செறுகிய பெரிய கூந்தலையுடைய இல்லாள் அறுத்துத்துண்டாக்கி
அண்டை அயலாருக்குப் பகுத்துக்கொடுக்கும் நெடிய மலை நாட்டினனே!
மிக்க சினத்தையுடைய களிறு, அங்கு வருகின்ற புலியை எதிர்பார்த்திருக்கும்
இரவில் இங்கு வருவதற்கு அஞ்சமாட்டாய்; நான் அஞ்சுகிறேன்; பாம்பின்
ஈரப்பதம் உள்ள குகைபோன்ற புற்றினைக் கார்காலத்து மேகம் போலச் சூழ்ந்துகொண்டு
இரையைத் தேடியுண்ணும் கரடிகளின் கூட்டம் தோண்டுகின்ற
மலையை அடுத்த சிறிய வழியில் வராமலிருப்பீராக!
					மேல்
# 337 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

உலகம் உண்டான காலத்திலிருந்தே, தலைவனே!
மறந்தனரோ? சிறந்தவரே அவர்கள்!
முற்றாத இளவேனில் காலத்தை எதிர்நோக்கிய காட்டுமல்லிகையையும்,
பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும்,
நறுமணம் கமழும் செங்கருங்காலி மலருடன் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அடைத்துவைத்துள்ள
செப்பினைத் திறந்துவைத்ததைப் போன்ற நறுமணம் சேர்ந்து, அதனுடன்
அழகிய நிறங்கொண்ட நீலமணி போன்ற ஐந்தாகப் பிரித்துக் கட்டிய
தாழ்ந்து இறங்கும் நறிய கூந்தலில் உடனிருந்து உறையும்
அரிதாய்க் கிடைக்கும் பெரிய பயனைக் கொள்ளாது
பிரிந்து வாழ்கின்ற இயல்பையுடைய பொருளீட்டி வாழ்கின்ற ஆடவர்கள் -
					மேல்
# 338 நெய்தல் மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்

கடுமையான கதிரையுடைய ஞாயிறு மேற்குத்திசையில் மலையில் சென்று மறைந்தது;
அடும்பின் கொடிகள் துண்டித்துப்போகும்படி, சக்கரங்கள் பிளக்க, அவரின்
நெடிய தேரின் இனிய ஒலி இரவிலும் கேட்கவில்லை;
மிகுதியான துன்பத்தினால் நலியும் உனது நிலையை
நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறாய்! அவ்வாறு நிலைத்திருக்க
எவ்வாறு இயலும்? எனது காம மயக்கம் பெருகிட,
அகன்ற கரிய கழிப்பரப்பில் இரைதேடி எழுந்து அருந்தும்
புலவு நாற்றத்தையுடைய சிறுகுடியின் மன்றத்தில் ஓங்கியுயர்ந்த
பருத்த அடியையுடையதுமான பனையின் ஓலையின் மட்டையில் ஏறி
வளைந்த வாயையுடைய தன்னுடைய பேடையைக் கூட்டுக்கு வரும்படி
உயிரே போகும்படியாக கூவிக்கொண்டு, தான் சேரும் துணையை
மீண்டும் மீண்டும் விடாது அழைக்கிறது, துயரத்தைக் கொண்ட அழகிய குருகு -
					மேல்
# 339 குறிஞ்சி சீத்தலை சாத்தனார்

எக்காலத்தும் தோல்வியையே அறியாத நம் காதலர் நம்மைத் துறந்து இரக்கமில்லாதவராயினார்;
ஊராரின் பழிச்சொல்லை  விளைவிக்கிறது இல்லையா இந்த உறவு என்று மிகவும்
அன்பு புலராத நெஞ்சத்துடனே புதிய புதிய காரணங்களைக் கூறிக்கொண்டு
இருவரும் வருந்தும் துன்பப் பெருக்கை
அறிந்துகொண்டாள் போலும் நம் அன்னை! சிறந்த
புகழ் பொருந்திய அகன்ற நம் வீட்டில் என்னருகில் வந்து என்னைத் தழுவிக்கொண்டு
நீர் அலைத்தலால் கலைந்துபோன குளிர்ந்த இதழ்களால் தொடுக்கப்பட்ட மாலையையும்
ஒளி பொருந்திய நெற்றியையும், பெதும்பைப் பருவத்து நல்ல அழகினையும் பெற்று
மின்னலைப் போன்ற கூந்தலையுடைய இவளோடு சென்று நாளை
பலவாகிய மலர்கள் செறிந்திருக்கும் மணங்கமழும் வேலியையுடைய
தெளிந்த நீர் நிறைந்த அழகிய சுனையில் நீராடினால்
பெரிதும் வேறுபடும் போலும் மகளிரின் மேனியும் நிறமுமாகிய பண்பு என்று உரைத்தாள்.
					மேல்
# 340 மருதம் நக்கீரர்

தழுவமாட்டேன், தலைவனே! உன்னை வெறுத்தேனும் இல்லை;
பாகன் மொழியைத் தவிர வேறொன்றைக் கல்லாத யானைப்படையையும் கடிய தேர்ப்படையையும் உடைய செழியனின்
சிறப்பாகச் செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத் திறந்துவிட,
வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்
சேற்றையுடைய அழகிய கழனியின் உட்பக்கம் ஓடி
காளைகள் சேற்றை மிதித்தலால் எழுந்த சேறுத்துகள் படிந்த தம் வெள்ளையான முதுகுடன்,
செம்மையாக நீள உழும் உழவர் தம் காளையைக் கோலால் அடிப்பதற்கும் அஞ்சாது செருக்குக்கொண்டு
பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும்
வாணனின் சிறுகுடி என்ற ஊரைப் போன்ற என்
அணிந்துகொள்வதற்கு நேராக இருக்கும் ஒளிமிகுந்த வளையல்கள் நெகிழும்படி செய்த உன்னை -
					மேல்
# 341 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்

வங்கா எனும் வீட்டுப்பறவையை ஓடவிட்டும், பறக்கவிட்டும் விளையாடி சிறிதுநேரங்கழித்து விட்டுவிட்டு
சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினால் செய்யப்பட்ட வட்டு எனும் விளையாட்டுக் கருவியை நாவில் தேய்த்து
விளையாட்டாக இனிய நகை குறையாமல், பாலைக் குடித்து,
அங்குமிங்கும் ஓடி, காய்ந்த குச்சியை எடுத்து அடிக்க ஓங்கிக்கொண்டு, சில சொற்களைக் கூறிக்கொண்டு இருக்கும்
குன்றக் குறவனின் மகனைச் சிறிய சைகையால் அழைக்கும்
நல்ல துணையை உடையவள் தலைவி! நானோ,
கொடிய பகைவர் கொண்ட அரிய போர் முனையில் குளிர்ந்த மழை பெய்ததாக,
நீர்கள் ஒலிக்கும் நள்ளிரவில் மயங்கிக் கூதிரோடு கலந்து
வேற்று நாட்டுள்ள வாடையும் துன்புறுத்துதலால்
துணை இல்லாதவ்னாய், தனிமையில் பாசறையில் இருக்கின்றேன்.
					மேல்
# 342 நெய்தல் மோசி கீரனார்

குதிரை எனக் கருதிப் பனைமடலால் செய்த குதிரையில் ஏறி வருவாரைப் போலவும்
கோட்டை மதில் எனக் கருதி பேய்த்தேரைத் தாக்கி மோதுவதைப் போலவும் என்னிடம் வருதலால்,
என் வாயால் நீ கூறவேண்டியதைக் கூறமாட்டேன்; உன்னுடைய இடமான
சேரியிடத்துக்கு வருகின்ற அவருக்கு எப்போதும்
நீ அருள்செய்தல் வேண்டும் அன்புடையவளே! என்று
கண்களால் இனிமையுறத் தலைசாய்த்துக் காட்டியும் தெளிகின்றாளில்லை
நான் கூறுவதை, ஒளிமிக்க வளையையுடையவள்; வேலி சூழ்ந்த கடற்கரைச் சோலையில்
வண்டுகள் உண்ணுகின்ற நறிய மலர்கள் உதிர்ந்து நுண்ணிதாகக் கோலஞ்செய்த
எனது தலையைத் தலைவியின் சிவந்த அடிகளிலே சேர்த்து வணங்கினால்
தலைவரின் செயல் இப்பொழுது எப்படியாய் இருக்கின்றது என்று என்னைக் கேட்கவும்படுமே!
					மேல்
# 343 பாலை கருவூர் கதப்பிள்ளை சாத்தனார்

முல்லைக்கொடி படர்ந்த மலை வழியாகிய சிறிய நெறியினை
அடையாது, அங்கிருந்த அழகிய குடிகளமைந்த சிறிய ஊரில்
பூந்தாதுக்களே எருவாக உதிர்ந்துள்ள தெருவில், பசுக்களின் முதுகுகளைத் தீண்டும்
நெடிய விழுதுகள் தொங்குகின்ற கடவுள் உறையும் ஆலமரத்தில்
படைத்துப்போடப்படும் பலிச்சோற்றைத் தின்ற தொகுப்பான விரல்களையுடைய காக்கைகள்
புன்மையான அந்திக் காலத்தில் தம்தம் சுற்றம் இருக்குமிடத்திற்குச் சென்றுசேர,
பிரிந்தாரைக் கொல்லும் படையுடன் வந்த துன்பம் நிறைந்த மாலைக் காலமானது
இல்லையோ? வாழ்க, தோழியே! நம்மைத் துறந்து
அரிய பொருளை ஈட்டுவதை விரும்பி
நம்மை விட்டுப் பிரிந்து வாழும் காதலர் சென்ற நாட்டில் -
					மேல்
# 344 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

அழகிய மலையின் பக்கத்தில் வியக்கும்படி வளர்ந்திட்ட
நீலமணி போன்ற கதிரின் தாள்களைக் கொண்ட கருமை பொருந்திய தினைக்கதிர்கள்
பெரிய பிடியானையின் பெருங்கையைப் போன்று வளைந்து தொங்கும் பெரிய தினைப்புனத்தினைக்
காவல் காப்பதை நினைத்தோமாயின், ஆராய்ந்த இழைகளை அணிந்தவளே!
நமது நிலையின் காலமும் இடமும் தெரிந்து உணராதவனாய், தன்னுடைய மலையில் விளைந்த
சந்தனத்தின் குழம்பைத் தடவிய அழகு பொருந்திய மார்பில்
மலைச் சாரலின் இடைவெளியில் மிகவும் வண்டுகள் ஆரவாரிக்க,
வருபவன் மீண்டும் போவான் போலும்! உயர்ந்த மலையிலுள்ள
பெரிய கற்களின் இடையேயுள்ள பிளவுகளில் எதிரொலிக்கும்படி, பெரிய புலியானது
களிற்றினைக் கொன்று முழங்கும் அச்சம் பயக்கும் முழக்கத்தை மழைமேகத்தின் முழக்கமென நினைத்து
செந்தினை காயப்போட்டதை வாரி அள்ளும்
இனிய பாறைகளின் மேலுள்ள புது அறுவடையையுடைய தம்முடைய வசிப்பதற்கு இனிய ஊருக்கு -
					மேல் 
# 345 நெய்தல் நம்பி குட்டுவனார்

கடற்கரைச் சோலையில் உள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசுமையான காய்கள்
கரிய நிறமுள்ள பெரிய கழியினுள் விழுந்ததாக,
தடித்த தண்டு உயர எழ அசைந்து ஆம்பலின் மொட்டுக்கள்
சிறிய வெண்ணிறமுள்ள கடற்காக்கைகள் கொட்டாவி விட்டது போன்று
வெள்ளையாக விரிகின்ற துறையைச் சேர்ந்தவனே! எக்காலத்தும்
கருணை செய்தலையுடைய பெரிய நட்பினையுடைய உம்மைப் போல,
நற்பண்புகளை எதிரேற்றுப் போற்றும் செம்மையான கொள்கையாரும்
தெளியாத உள்ளத்துடன் செயலற்று வாட,
நெடிய காலத்துக்கு வளர்தல் இன்றி, விரும்பாமல் செல்வார் எனில்
வாழ்வது எவ்வாறு? வீணாகிப்போகட்டும் உங்கள் விளக்கங்கள்.
					மேல்
# 346 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்

கிழக்குக் கடலில் நீரை முகந்து மேற்கில் எழுந்துசென்று, இருண்டு
குளிர்ந்த மேகங்கள் மழைபெய்து நிலத்தின் வெப்பம் தணிந்திருக்கும் நேரத்தில்,
இது அரசர்களின் பகையால் ஏற்பட்ட அவலம் என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் அரிய போர்முனையை அடுத்துள்ள வழியில்
அழிந்த வேலியையுடைய அழகாயிருந்த குடிகள் இருந்த சிறிய ஊரில்,
ஆட்கள் இல்லாத ஊர் மன்றத்தில் நிலைகொண்டிருக்கும் காற்று அசைக்க,
முயற்சியின் வலிமையினால் உண்டாக்கப்பட்ட மனவுரம் மிக்க பாசறையில்,
இன்று நினைத்து மகிழ்கின்றாய் போலும்! என்றும்
நிறைவோடு பொருந்தி விளங்கும் திங்களைப் போல ஒளிரும் பொறையனின்
மிகவும் குளிர்ச்சியுடைய கொல்லிமலையிலுள்ள சிறிய பசிய காட்டுமல்லிகையின்
மிகுதியான மணம் கமழும் கூந்தலையுடைய
இளைய மாமைநிறத்த அரிவையின் நீண்ட மெல்லிய தோள்களை -
					மேல்
# 347 குறிஞ்சி பெருங்குன்றூர் கிழார்

முழங்குகின்ற கடல் முகந்த நிறைந்த கருக்கொண்ட கரிய மேகம்
திசைகளெங்குமுள்ள பரந்த இடங்கள் மறையுமாறு பரந்து
உயர்ந்த மலைகள் ஒளிரும்படி மின்னலிட்டுத் தாக்கி, பாம்புகளைக் கொன்று,
வானத்தை ஊடுருவிச் செல்லும் உச்சிகளையுடைய குன்றுகளை வளைத்து,
மிக்க மழையைப் பொழிந்த பொழுதில், புலையனின்
அகன்ற வாயையுடைய தண்ணுமைப் பறையின் முகப்பைத் தட்டுவது போன்று
அருவிகள் ஒலித்துக்கொண்டு இறங்கும் பெரிய மலைகளையுடைய நாட்டினன்
நீர் போன்ற இனிய இயல்பினன், பேரன்பினன் என்று
பலவித சிறந்த மொழிகளால் கூறும் பரிசிலருடைய புகழ்மொழிகள்
வேனில் காலத்து மழைக்குக் கத்தும் தவளைகளின் ஒலியைக் காட்டிலும் இரங்கத்தக்கன;
அவை உண்மைதான் என்பதைக் காண்பதற்கு முன்னர் இல்லாமற்போகுமோ, தோழி! என் மேனிநலம்.
					மேல்
# 348 நெய்தல் வெள்ளி வீதியார்

நிலவானது, நீல நிற விசும்பில் பல கதிர்களைப் பரப்பி
பால் மிகுந்த கடலைப் போல ஒளியைப் பரப்பி விளங்குகிறது;
ஊரானது, தழைத்துவரும் பேரொலியோடு நிறைந்து ஒன்றாகக் கூடிச் செறிவுடன்
ஓசை மிக்க தெருவில் விழாவைக் கொண்டாடுகிறது;
காடானது, பூத்திருக்கும் மலர்கள் நிறைந்துள்ள பொழிலகங்கள்தோறும்
தாம் விரும்பும் துணையோடு வண்டுகள் ஒலிக்கின்றதானது;
நானோ, அணிந்திருக்கும் அணிகலன்கள் நெகிழும்படியான தனிமைத்துயர்கொண்ட வருத்தத்தோடு
மிகுதியான இருளையுடைய இரவுப்பொழுதிலும் கண்களில் தூக்கமில்லாதவள் ஆனேன்;
அதனால், என்னுடன் சேர்ந்து ஏன் மகிழ்ச்சியாக இல்லை என்று என்னோடு சண்டைபோடுகின்றதோ இவ்வுலகம்?
என்னுடன் சேர்ந்து ஏன் வருந்தவில்லை என்று அந்த உலகத்தோடு சண்டைபோடுகின்றதோ என் வருத்தம் மிக்க நெஞ்சம்?
					மேல்
# 349 நெய்தல் மிளை கிழான் நல்வேட்டனார்

விரைகின்ற தேரின்மேல் ஏறிச் சென்றும், காலால் நடந்து சென்றும்,
வளைவான கழியை அடுத்துள்ள அடும்பு மலர்களைக் கொய்துகொடுத்தும்,
தாழை மலரைப் பறிக்கும்படி தூக்கிப் பிடித்தும், நெய்தல் மலரைப் பறித்தும்,
ஒன்றானது போல உணர்ச்சிகொண்ட நெஞ்சத்தோடு
நாள்தோறும் இவ்வாறு நடந்துகொண்டும், தொடுக்கப்பட்ட மாலையையுடைய
புதிய பூண்களை அணிந்த வேந்தர், படையழிந்து வீழ்ந்த பாசறையில்
ஒளிறும் வேல்படை பொரும் போரில் களிறுகள் வீழும்படி போரிட்ட
பெரிய புண்ணுற்ற வீரரைக் காத்துநிற்கும் பேய்மகள் போல
வழிபட்டு நிற்கும் நிலையை வெறுக்காத நம்மை,
எத்தகையவன் என்று நினைப்பாளோ அந்தப் பரதவர் மகளாகிய தலைவி.
					மேல்
# 350 மருதம் பரணர்

வெண்ணெல் கதிர்களை அறுப்பவர்களின் தண்ணுமைப் பறையின் ஒலிக்கு வெருண்டு
பழனத்தில் உள்ள பலவான பறவைகள் பறந்தோட, வயல்வெளியில்
வளைந்த கிளைகளைக் கொண்ட மருதமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பூங்கொத்துக்கள் உதிர்கின்ற
தேர்க்கொடை கொடுப்பதில் சிறந்த விரான் என்பானின் இருப்பையூர் போன்ற என்
பழைய அழகு தொலைந்துபோனாலும் போகட்டும்; உன்னை நெருங்க
விடமாட்டேன்; அவ்வாறு விட்டால், தாவி
என்னை ஆரத் தழுவும் உன் கைகள் நான் விசும்பாதவாறு தாங்கும் வலிமையுடையன; பரத்தையின் குவிந்த முலைகள்
பாய்வதால் ஏற்பட்ட சந்தனத்தை மார்பில் கொண்டுள்ளாய்; அவள் தழுவியதால் வாடிப்போன மாலையை உடையாய்;
உன்னைத் தொடுதல், கழித்துப்போடப்பட்ட கலங்களைத் தொட்டது போலாகும்;
இங்கு நீ வரவேண்டாம்; வாழ்க உன்னைத் தழுவிநின்ற அந்தப் பரத்தை.
					மேல்




# 351 குறிஞ்சி மதுரை கண்ணத்தனார்

சிறுமிப் பருவத்தைக் கடந்துவிட்டாள் இவள் என்று நம் வளமுள்ள வீட்டில்
வெளியே போகாதவாறு காவலுக்குட்படுத்தினாய் என்றாலும் மிகவும் இவள்
மேனி நிறம் மாறினாள் என்பதனை உணராதவளாய், பல நாட்கள்
வருத்தங்கொண்ட நெஞ்சத்தோடு தெய்வத்தை வேண்டிக்கொண்டு
வருந்தவேண்டாம்; வாழ்க! வேண்டுகிறேன் அன்னையே! கரிய அடிமரத்தையுடைய
வேங்கை மரத்தின் பிரிகின்ற அழகிய கிளைகளுக்கிடையே சந்தனப் பலகையால் செய்த
களிற்றின் வலிமைக்கும் அஞ்சாத, புலித்தோல் விரித்த பரணில்
சிறுதினை விளையும் அகன்ற தினைப்புனத்தைக் காவல்காத்திருந்தால்
திரும்பப் பெறுவாள் உறுதியாக, என் தோழி தன்னுடைய மேனிநலத்தை.
					மேல்
# 352 பாலை மதுரை பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

இலை வடிவத்தில் உள்ள சிறந்த அம்பினை வில்லில் சிறப்பாகப் பொருத்திய
அன்பில்லாத ஆடவர் காயப்படுத்தியதால் வழக்கமாகச் செல்வோருடன்
பல புதியவர்களும் இறந்து கிடந்த அச்சம்தரக்கூடிய பலவாறாகப் பிரிந்து செல்லும் நெறியில்
நெருப்புருண்டை போல் சிவந்த காதினையுடைய கழுகின் சேவல்களை விரட்டி,
தன் நிழலைப் பார்த்துச் சினங்கொள்ளும், நிணத்தை விரும்பும் கிழட்டு நரி
புதிய ஊனை நிறைய உண்டு, நீர் வேட்கையால் வருத்தமுற்று
கானல்நீர் தெரியும் வறண்ட புலத்தில் தேடியலைந்து, நீரை விரும்பி,
பிணத்தை மூடியுள்ள கற்குவியலில் நிழலான ஒதுங்குமிடத்தைப் பெறாமல்,
கடப்பதற்கரிய பாலை நெறிகள் பலவாய்ப் பிரிந்துசெல்லும் இடத்திற்கு வந்துநிற்பதனால் வருந்திநிற்கும்
நமக்கும் கடந்துசெல்ல முடியாதன ஆயின; மூங்கில் போன்ற தோள்களுடைய
மாட்சிமை பொருந்திய இளமடந்தையான நம் காதலியும், தன் இருப்பிடத்தை விட்டு நீங்கி
இங்கே என் கண் முன் எப்படி வந்தாளோ? இரங்கத்தக்கவள் அவள்.
					மேல்
# 353 குறிஞ்சி கபிலர்

துணைக்கு ஆடவர் இல்லாத பெண்டிரான கைம்பெண்கள் தமது முயற்சியால் செய்த,
மிக மிக நுண்ணிதான பஞ்சுப்பொதி போல கூட்டமாகச் சேர்ந்து
அசைகின்ற மேகங்கள் தவழும் உயர்ந்த உச்சிகளைக் கொண்ட நெடிய மலையில்,
வளைந்து முதிர்ந்த பலாவின் குடம் போன்ற பெரிய பழத்தை,
மலையில் வாழும் குறவரின் அன்புக்குரிய இளைய மகள்
கரிய விரலையுடைய மந்திக்கு வீட்டுக்கு வந்த விருந்தாளியாய்ப் படைக்கும்
விண்ணைத் தோயும் மலைக்குரியவனே! சான்றோனாக இல்லை நீ! என்னுடைய
காதல் மிகவும் பெருகினாலும், நள்ளிரவில்
பெரிய புலியைக் கொன்ற பெரிய துதிக்கையையுடைய யானை
கொடுங் கோபத்தையுடைய இடி போல முழங்கும்
அஞ்சத்தக்க சிறிய வழியில் நீ வருவதால் -
					மேல்
# 354 நெய்தல் உலோச்சனார்

நான் அதனைப் பொறுத்துக்கொள்வது எவ்வாறு? கடற்கரைச் சோலையின்
ஆடி அசையும் அடிமரத்தை வெட்டியதால், நெடிய கரிய பனைமரத்திலிருந்து
விழுந்ததால் தோளில் சுமந்துகொண்டு சென்ற ஓலையால் சுற்றிலும் வேலியைக் கட்டின
கடற்கரைச் சோலையை அடுத்துள்ள நீண்டுகிடக்கும் மணலையுடைய முற்றத்தில்
இரவைப் போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னையின்
நல்ல அடிமரத்தின் அடிப்பக்கமான அவ்விடத்தில் கட்டப்பட்ட
காற்றால் அசையும் தோணியையுடைய நீர்த்துவலைகள் தெறித்துவிழும் கடற்கரையில்,
கடும் வெயிலினால் உப்பளத்துநீர் சூடாகி ஆவியாய் எழுந்ததினால் கல்லாக விளைந்து உப்பினை
நீண்ட வழியில் எடுத்துச் செல்லும் வண்டிகள் வரிசையாகச் செல்வதைப் பார்ப்பவர்கள்
உப்பளத்து வழியில் விரைந்தோடியவாறு எழுப்பும் ஆரவார ஒலியைப் போன்று
ஊரெல்லாம் உரக்கப்பேசும் பழிச்சொல்லாய் ஆகின்றது உன்னுடனான நட்பு -
					மேல்  
# 355 குறிஞ்சி மோசி கீரனார்

புதல்வனை ஈன்ற பூப்போன்ற கண்களையுடைய மடந்தை
தனது முலையைப் புதல்வனின் வாயில் ஊட்டிவிடக் குவிக்கும் கையைப் போன்ற காந்தளின்
பூங்கொத்தின் வாயில் தோயும் கொழுத்த மடலையுடைய வாழைப்பூவிலுள்ள
அந்த மடலின் வழியாகச் சொரியும் அருவிநீர் போன்ற இனிய நீரை
சிவந்த முகத்தையுடைய மந்தி வாய்வைத்து நிறையக் குடிக்கும் நாட்டைச் சேர்ந்தவனே!
முன்னதாக இருந்து நண்பர்கள் கொடுத்தால்
நஞ்சையும் உண்பர் மிகுந்த நாகரிகத்தையுடையவர்காள்.
அழகிய சிலவான கூந்தலையுடைய என் தோழியின் தோளில் துயில்வதில்
நெஞ்சத்தில் இன்புறாய் எனினும் அதனை நீ
என் மீது கொண்ட பரிவினாலாவது அவளுக்கு அளிப்பாய்,
உன்னுடைய பரிவைத் தவிர அவளுக்கு வேறு ஒன்றும் இல்லை.
					மேல்
# 356 குறிஞ்சி பரணர்

நிலத்தின் தாழ்ந்த பக்கத்தில் இருக்கும் தெளிந்த கடலில் இரைய அருந்திய,
ஒன்றற்கொன்று விலகிய மென்மையான இறகினையும், சிவந்த கால்களையுமுடைய அன்னங்கள்,
பொன்னாய் மின்னும் நெடிய சிகரங்களைக் கொண்ட இமயத்து உச்சியில்
தேவருலகத்துத் தெய்வ மகளிர்க்கு மிகவும் விருப்பமாக இருக்கும்
வளராத இளம் குஞ்சுகளுக்கு வைத்துண்ணும் உணவைக் கொடுப்பதற்குத்
தளர்ச்சியற்ற வலிய பறத்தலை மேற்கொள்வதைப் போல பலமுறை தலைவியைப் பார்ப்பதற்குச் சென்றுவர
வருந்தினாய், வாழ்க, என் உள்ளமே! ஒரு நாள்
காதலி எனக்குப் பக்கத்திலிருக்க,
கிழக்கில் தோன்றும் விடிவெள்ளியைப் போல எமக்கும் ஒரு விடிவுகாலம் வரும்.
					மேல்
# 357 குறிஞ்சி குறமகள் குறியெயினி

உன்னுடைய கருத்து என்னவோ? தோழி! என்னுடைய கருத்து,
என்னோடு அது நிலையாக நிலைத்திருக்கமாட்டாதாயினும் எந்நாளும்
நெஞ்சினைக் காயப்படுத்திக் கெட்டொழிவதை அறியாதது;
நெடுந்தொலைவுக்கு உயர்ந்து தோன்றும் குன்றிலுள்ள உச்சிமலைச் சரிவில்
மழையில் நனைந்து சிலிர்த்த மணி போன்ற புள்ளிகளையுடைய குடுமியையும்,
தோகையையும் கொண்ட மயில்கள் ஆடுகின்ற சோலையின்
அழகிய இடமான பாறையைக் கொண்ட அகன்ற வாயையுடைய புதுநீருள்ள சுனையில்
மையுண்ட கண்களுக்கு ஒப்பான குவளை மலர்களைக் கொய்து தலையில் செருகிக்கொண்டு,
சுனைநீரால் அலைக்கப்பட்டு கலைந்து போன தலைமாலையையுடைய
சாரல் நாடனான தலைமகனோடு நான் விளையாடிய நாள் - 
					மேல்
# 358 நெய்தல் நக்கீரர்

பெரிய தோள்கள் மெலிந்துபோகவும், மேனியின் அழகிய வரிகள் வாடிப்போகவும்,
சிறிய மெல்லிய மார்பகத்தில் பெரிய அளவில் பசலை பாயவும்,
நான் இத்தன்மையில் இருப்பதைக் கண்டு வெட்கப்பட்டு,
பிரிந்து செல்வதைப் பற்றி உன்னைத் தெளிவித்தாரெனினும் - சிறிதளவும்
வருத்துதல் செய்யவேண்டாம், வாழ்க நீ என்று
கூட்டமான கடவுளர்க்கெல்லாம் உயர்ந்த பலியுணவைக் கொடுத்துத்
தொழுது வருவோம் செல்வோமா தோழி!
பெரிய சிவந்த இறாமீனின் பஞ்சு போன்ற தலையையுடைய முடங்கிய உடலை
சிறிய வெண்ணிறக் கடற்காக்கை அன்றைய உணவாகப் பெறும்
பசும்பூண் பாண்டியனின் மருங்கூர்ப்பட்டினம் போன்ற என்
அரியதாய்ப் பெறக்கூடிய நுட்பமான அழகெல்லாம் தொலைந்துபோக
என்னைப் பிரிந்து அயல்நாட்டில் வாழ்வதற்கு வல்லவராகிய தலைவரை -
					மேல்
# 359 குறிஞ்சி கபிலர்

மலைச்சரிவில் மேய்ந்த சிறிய கொம்பையுடைய சிவந்த பசு,
அசைகின்ற குலையான காந்தள் பூவைத் தீண்டியதால், அதினின்றும் தாதுக்கள் பசுவின் மேல் உதிர
அதன் கன்று தாயைக் கண்டு மருளுகின்ற குன்றத்தைச் சேர்ந்தவன்
உடுத்திக்கொள்ளும் தழையுடையைத் தந்தான்; நாம் அதனை
உடுத்திக்கொண்டால் எமது தாய்க்கு அஞ்சுகின்றேன்; திருப்பிக் கொடுத்துவிட்டால்
நம் நண்பனுடைய வருத்தத்திற்காக அஞ்சுகின்றேன்; இதற்கிடையில்
வாடாமல் இருக்குமோ அது? - அவனது மலையின்
போரிற் சிறந்த வருடையாடுகளும் ஏறிச் செல்லாத
வருத்தும் தெய்வமிருக்கின்ற மலைச் சரிவுப்பக்கமுள்ள, கொய்வதற்கு அரிய அந்த தழையுடை -
					மேல்
# 360 மருதம் ஓரம்போகியார்

முழவின் முகத்தில் பூசும் சாந்து புலர்ந்துபோகும்படி அதனை முழக்க, முறையோடு கூத்தினை ஆடிய
திருவிழா நடந்து முடிந்த களத்தில் உள்ள பாவையைப் போல,
முந்தினநாள் உன்னைச் சேர்ந்தவரின் புதிய நலத்தைக் கொள்ளைகொண்டு,
இன்று பாணனால் கொணரப்படும் மகளிரின் மென்மையான தோளினைப் பெறுவதற்காகச்
செல்வாயாக பெருமானே! சிறந்து விளங்குக உன் பரத்தை!
பலரும் பழித்துக்கூறுவதனை நாணி, ஓங்கி
இரும்பு முள்ளால் குத்தி யானைப் பாகர்கள் வருத்துவதால்,
கொன்புகளிடையே வைத்தது மேனி முழுக்க வாரி இறைக்கின்ற
சினத்துக்கு உட்பட்ட கவளம் போல, மிகப் பெரிதும்
நீ அடைந்த உன் சிறப்பைக் கண்டு மகிழ்கிறேன்,
மற்றொரு காலத்தில் கூடிவரும் மனையிடத்து வந்து துயில்கின்ற இன்பம்.
					மேல்
# 361 முல்லை மதுரை பேராலவாயர்

சிறிய மலர்களையுடைய முல்லையின் பெரிதாய் மணக்கும் மலரினைத்
தலைவன் தானும் சூடியுள்ளான், அவனுடன் வரும் இளைஞரும் சூடியுள்ளனர்;
வானத்தையே தாவிக் கடப்பது போன்ற, பொன்னாலான முகபடாத்தை அணிந்துள்ள செருக்குள்ள குதிரைகள்,
மிகுதியான மழை பொழிந்த குளிர்ச்சியான நறிய முல்லைக்காட்டினில்
நீண்ட நாவினையுடைய ஒள்ளிய மணிகள் ஒலி மிக்கு இசைக்க,
மாலை நேரம் மயங்கிய வேளையில் மணம் மிகுந்த அகன்ற மாளிகையில்
கொண்டுவந்து நிறுத்தின நம் நெடுந்தகையின் தேரை; எப்பொழுதும்
தீர்த்தற்கரிய துன்பத்தை முற்றிலும் நீக்கி
அவனுக்கு விருந்து செய்யும் விருப்பினளாக உள்ளாள் திருத்தமான இழையணிந்த தலைவி.
					மேல்
# 362 பாலை மதுரை மருதன் இள நாகனார்

நடக்கும் திறன் அமைக்கப்பட்ட பாவையைப் போல் நடந்து, உன் தந்தையின்
வீட்டு எல்லையைக் கடந்து என்னோடு வந்துவிட்டாய்; எனவே,
கார்காலத்து முதல்மழையாகப் பெய்த குளிர்ந்த மழையையுடைய மேகங்களால்
அழகு மிகுந்துள்ள காட்டினில் உள்ள அகன்ற வெளியில் பரந்து திரியும்
மிகச் சிவந்த தம்பலப்பூச்சிகளைப் பார்த்தும், கையிலெடுத்தும்
நீ விளையாடிக்கொண்டிருப்பாயாக சிறிது நேரம்; நான்
இளங்களிறுகள் தம் உடலைத் தேய்த்துக்கொண்ட பருத்த அடிமரத்தைக்கொண்ட வேங்கை மரத்தின்கீழ்
மணல் குவிந்திருக்கும் மேட்டின் பெரிய பின்பக்கத்தில் சேர்ந்திருந்து
யாரும் போரிடுவதற்கு வருவாராயின் அஞ்சாமல் அவரை விரட்டுவேன்;
உன் வீட்டார் யாரும் வந்தால் மறைந்துகொள்வேன், மாமை நிறத்தவளே!
					மேல் 
# 363 நெய்தல்

கண்டல் மரங்களால் ஆன வேலியும், கழி சூழ்ந்துகிடக்கும் கொல்லையையுமுடைய
தெளிந்த கடலையுடைய நாட்டுக்குச் செல்வேன் யான் என்று
வழியினைத் தேர்ந்து போவாயாயின், சிறிதளவும்
மேற்கொண்டுள்ள தொழிலில் தளர்ச்சியடையாமல், சோர்வின்றி இருக்கும் கம்மியன்
மூட்டுகள் அற்றுப்போனவிடத்தில் அவற்றைச் சேர்த்து வார்ப்புச் செய்ய உருக்குமண்ணைக் கொண்டு
வருவீராக! தோழியே! மிகுந்த நீரையுடைய கடல்நிலத் தலைவனே!
உடுத்தியிருக்கும் பசிய தழையுடை உருக்குலைய, தலையில் கட்டிய மாலை வாடிப்போக,
நல்ல மாலைப் பொழுதில் நேற்று உன்னோடு
சிலவாகிய ஒளிரும் பளபளப்பான வளையல்கள் கழன்றோட,
நண்டை விரட்டி விளையாடுவோளின் காற்சிலம்பு நெளிந்துபோய்விட்டதால் -
					மேல்
# 364 முல்லை கிடங்கில் காவிதி பெரும் கொற்றனார்

திரும்புவேன் என்று தலைவர் சொல்லிச் சென்ற பருவமும் வந்துசென்றுவிட்டது; பகற்போதிலும்
இருள் கலந்த நள்ளிரவைப் போல மேகமூட்டத்துடன் சேர்ந்து
ஆரவாரத்தையுடைய மேகங்கள் நீர் நிறைந்து வானத்தில் இயங்க,
வாடைக்காற்றோடு பனிக்கு உண்டாகிய சினமெல்லாம் என் மீது வந்து தங்க,
இப்படியாக இன்னும் சிலநாட்கள் சென்றால், பலநாட்கள்
வாழமாட்டேன், வாழ்க, தோழியே! - முதிர்வுடைய
இடியோசை போன்ற ஓசையை அறியாத சிறிய செம்மையான நாக்கையுடைய
குளிர்ந்த மணிகளின் இனிய ஓசை ஊருக்கு அருகே ஒலிக்க,
பலவான பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்த, மேய்ப்பதைத்தவிர வேறொன்றைக் கல்லாத இடையர்களின்
கொன்றைப் பழத்தால் செய்த அழகிய இனிய குழலின் ஓசை ஊரின் மன்றங்கள்தோறும் ஒலிக்க
உயிரே போகுமாறு விரைந்துவரும் மாலை
சீற்றந் தீர்ந்த மழையோடு ஒன்று சேர்ந்து வருமானால் -
					மேல்
# 365 குறிஞ்சி கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்

மிகவும் அரிய காப்பினைச் செய்துள்ள அன்னையின் காவலையும் கடந்து,
பெரிய தலைவாயிலை நீங்கி, ஊர் மன்றத்துக்குச் சென்று,
பகலில் பலரும் காணும்படியாக, வாய்விட்டு,
அகன்ற வயல்களையும் தோட்டங்களையும் உடைய அவனது ஊருக்கு வழிகேட்டுப்
போவோமா? வாழ்க, தோழியே! - பலநாட்கள்
திரண்டுவரும் வானம் மழைபெய்யாமற்போனாலும்
அருவியில் ஆரவாரத்துடன் நீர் விழும் நீர்வளம் மிக்க மலைச் சரிவையுடைய
வானத்தை எட்டும் பெரிய மலைக்குரியவனை
நீ சான்றோன் இல்லை என்று சொல்லிவிட்டு வருவதற்கு -
					மேல்
# 366 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்

பாம்பு படமெடுத்து உயர்ந்ததைப் போன்ற, வேறுபட்ட பலவான மணிகளைக் கோத்து
நெகிழ உடுக்கப்பட்ட நுண்ணிய ஆடை இடையிடையே வந்து பளிச்சிடும்
திருத்தமான அணிகலன் அணிந்த அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளையமகளின்
நீலமணி போன்ற, ஐந்தாகப் பிரிக்கப்பட்ட, கூந்தலை மாசு போகக் கழுவி,
கூதிர்காலத்து முல்லையின் குட்டையான காம்பினைக் கொண்ட பூக்களை
அழகிய வண்டும் சுரும்பும் மொய்க்குமாறு முடித்த,
கரிய, பலவான மென்மையான கூந்தலைத் தலைக்கு அணையாகக் கொள்வதை விட்டு, கரும்பின்
வேல் போன்ற வெண்மையான முகை விரியும்படி தீண்டி
அறிவு முதிர்ந்த குருவி முயன்று செய்த கூட்டை
மூங்கிலினுடைய அழகிய கழை அசைந்து உராயும்படி அலைக்கும்
வடநாட்டிலிருந்து வாடை வீசும் காலத்தில் பிரிந்து செல்வோர்
அறிவில்லாதவர் ஆவார், வாழ்க நெஞ்சமே! இந்த உலகத்தில்.
					மேல்
# 367 முல்லை நக்கீரர்

வளைந்த பார்வையையுடைய காக்கையின், கூரிய வாயையுடைய பேடை
நடுங்குகின்ற சிறகுகளையுடைய தன் குஞ்சினைத் தழுவிக்கொண்டு, தன் சுற்றத்தைக் கரைந்து அழைத்து
கரிய கண்போன்ற பொறிக்கறியுடன், செந்நெல்லின் வெண்மையான சோற்றை
தெய்வத்துக்கு இடும் பலியுடன் கவர்ந்துகொள்ளும்பொருட்டு, குறிய கால் நாட்டிக் கட்டிய
உணவுடைய நல்ல வீடுகளில் கூட்டமாக இருக்கும்
பழமையான வீடுகளையுடைய அருமன் என்பவனின் பெரும்புகழ்பெற்ற சிறுகுடி என்ற ஊரைப் போன்ற
மென்மையான இயல்பையுடைய அரிவையே! உனது பலவாகிய கரிய கூந்தலில் இருப்பதைப் போன்று
குவளையோடு கலந்து தொடுத்த நறிய பூவான முல்லையின்
கட்டு அவிழும் மலராலாகிய குளிர்ந்த, மணங்கமழும் மாலையை
நம் தலைவருடன் சென்ற இளைஞரும் சூடிக்கொண்டு வந்தனர்; நம் காதலரும்
விரிந்த பிடரிமயிரையுடைய நல்ல குதிரையைச் செலுத்திக்கொண்டு
இடையீடு இல்லாமல் வருவார், இந்தப் பனி கொட்டும் நாளில்.
					மேல்
# 368 குறிஞ்சி கபிலர்

பெரிய தினைப்புனத்தின் கதிர்களைக் கொத்திச் செல்லும் சிறிய கிளிகளை விரட்டி,
கரிய அடிமரத்தைக் கொண்ட வேங்கைமரத்தில் ஊஞ்சல் ஆடி,
வளைந்து உயர்ந்த அல்குலில் தழையாடை அணிந்து, உம்மோடு
அருவியில் ஆடியும் வருவதைக் காட்டிலும் இனியதும் வேறு உண்டோ?
நெறிப்பு அமைந்த கூந்தலில் கருமை முதிர்ந்திருந்த
நறுமணம் கமழ்வதைக் கொண்ட புதிய நாற்றத்தையும், சிறிய அளவில்
பசலை பாய்ந்திருக்கும் நெற்றியையும் கண்டு
வீணே கரைந்துருகும் நெஞ்சத்தவளாய், வேறொன்றை எண்ணி,
பெருமூச்சுவிட்டாள் தாய்,
ஐயனே! அஞ்சுகிறோம், இரங்கத்தக்கவர் நாம்!
					மேல்
# 369 நெய்தல் மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்

ஞாயிறு தன் சினம் தணிந்து மலையினில் சேர,
நிறைவாகப் பறத்தலையுடைய குருகுக் கூட்டம் வானத்தில் உந்திக்கொண்டு ஒழுங்காகச் செல்ல,
பகற்பொழுதை மெல்லமெல்லக் கழித்து, முல்லையின்
அரும்பு வாய்திறக்கும் பெரிய புன்மையையுடைய மாலைக்காலம்
இன்றும் வருமானால் பெரிதும்
என்ன செய்வதென்று தெரியவில்லை, வாழ்க, தோழி! - எனக்குத் தெரியவில்லை,
ஞெமை மரங்கள் ஓங்கி வளர்ந்த உயர்ந்த மலையான இமையத்தின் உச்சியில்
வானிலிருந்து இறங்கும் ஒளிரும் வெள்ளிய அருவியையுடைய
கங்கை எனும் பெரிய ஆற்றின் கரையைக் கடந்து இறங்கிவரும்
அணையை உடைத்துச் செல்லும் விரைவான வெள்ளப்பெருக்கைப் போல என்
மனவுறுதியை உடைத்துச் செல்லும் காமவெள்ளத்தை நீந்திக்கடக்கும் வழி -
					மேல்
# 370 மருதம் உறையூர் கதுவாய் சாத்தனார்

வருக! பாணனே! சிறிது சிரிப்போம்! நேரிய இழை அணிந்த நம் தலைவி
தன் சுற்றத்தைச் சூழ உடைய முதிர்ந்த சூல் கொண்டு நம் குடிக்கு ஒரு புதல்வனை ஈன்று உதவினாள்;
நெய்யோடு பளிச்சிடும் வெண்சிறுகடுகின் திரண்ட விதைகள்
பளிச்சென்ற நம் மாளிகையில் பேய்க்காப்பாக எங்கும் சிதறிக்கிடக்கப் படுத்திருந்தோளின் அருகில் சென்று
புதல்வனை ஈன்றதனால் தாய் என்னும் வேறொரு பெயரைப் பெற்று, அழகிய வரிகளும்
அழகுத்தேமலும் உடைய அல்குலுடன் முதும்பெண் ஆகித்
தூங்குகின்றாயோ மென்மையான அழகிய சிலவான கூந்தலையுடையவளே என்று
பலவான மாட்சிமை கொண்ட அவளது வயிற்றில் குவளை மலரை ஒற்றியெடுத்துச்
சிறிது நேரம் சிந்தித்தபடி நின்றிருந்த என்னைக் கண்டு மெல்ல
மலரும் மொட்டு போன்ற நாணமுடைய முறுவலைக் காட்டி,
அழகிய மலர் போன்ற மையுண்ட கண்களைத் தன் கைகளினால் மூடிக்கொண்டாள்.
					மேல்
# 371 முல்லை ஔவையார்

காயா மரங்களைக் கொண்ட குன்றினில் கொன்றைப் பூக்களைப் போலப்
பெரிய மலையின் பிளவிடங்கள் விளங்கித் தோன்றும்படி மின்னி
மாமை நிறத்தவள் இருந்த இடத்தை நோக்கி
அகன்ற கரிய விசும்பிடம் எல்லாம் மறையும்படி பரவி
ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்மழை பெய்யத் தொடங்கின, இதுவரை பெய்யாத மேகங்கள்;
ஒளி விளங்கும் சுடரைப் போன்ற தொடிகள் கழன்று விழும்படியாக ஏங்கி
அழத் தொடங்கினாள் ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த தலைவி; அதற்கு மாறாகத்
தம் குழலை இசைக்கத் தொடங்கினர் கோவலர்கள்,
முழங்குகின்ற ஓசையுடன் இடி இடிக்கும் இரவுப்பொழுதில்.
					மேல்
# 372 நெய்தல் உலோச்சனார்

மனம் அழிந்து வருந்துதல் தக்கதல்ல, தோழியே! கழியைச் சேர்ந்த
கடற்கரைச் சோலையின் பனையின் தேனையுடைய மிக முதிர்ந்த பழம்
வளமையான இதழ்களையுடைய நெய்தல் பூ வருந்தும்படியாக, காம்பு இற்று
குழைவான கரிய சேற்றில் ஆழமாகப் புதைந்துபோகுமாறு வீழ்ந்ததாக,
கிளைகளுடன் இருந்த குருகு வெருண்டு பறந்தோடும் துறையைச் சேர்ந்தவனை, வளை செய்யும் சங்கினைப்
போன்ற வெண்மணலை உடைய இடத்தில், தழுவி மகிழ விரும்பிய உன்
பெருமை வாய்ந்த உள்ளத்தோடு பொருந்த, - உன்னை ஆசையுடன் இனிதாகப் பார்த்து -
அன்னை தந்த அசைகின்ற மெல்லிய கோல்
வளைந்து ஒடிந்ததற்கு வருந்துதலை அஞ்சி, - அவ்வாறு நேர்ந்ததற்கு
வருந்தவேண்டாம் என்று அன்னை தேற்றுவாள் என்று சொல்லுவர், - வீட்டிலிருந்து
கரிய கழியில் மீன்தேடும் நடுங்கும் தலையையுடைய பரதவரின்
திண்மையான படகிலிருக்கும் விளக்குகளை எண்ணிக்கொண்டிருக்கும்
கண்டல் மரத்தை வேலியாகக் கொண்ட கழியை அடுத்துள்ள நல்ல ஊர்மக்கள் -
					மேல்
# 373 குறிஞ்சி கபிலர்

வீட்டு முற்றத்தில் உள்ள பலாமரத்தின் பழுத்துள்ள சுளைகளைக் கையால் வளைத்து,
புல்லிய தலையைக் கொண்ட மந்தி உண்டபின் கொட்டைகளைக் கீழே உதிர்க்க, தந்தையின்
முகில் தவழும் பெரிய மலையைப் பாடியவளாய்க் குறமகள்
ஐவனம் என்னும் மலைநெல்லைக் குற்றும் நாட்டைச் சேர்ந்த தலைவனோடு,
வருத்தும் தெய்வங்கள் உள்ள மலைச் சரிவில் அருவியில் நீராடி
கார்காலத்து அரும்பி மலர்ந்த, சோதிடனைப் போன்று காலங்கூறும் வேங்கை மரத்தின்
பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தை
வளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு
வாய்ப்புக் கிட்டுமோ, நாளைக்கும் நமக்கு?
					மேல்
# 374 முல்லை வன் பரணர்

சரளைக் கற்கள் பரவிக்கிடந்த, சென்று முடியாத நீண்ட வழியில்,
உயர்ந்து தோன்றும் உமணர்கள் நிறைந்திருக்கும் சிறிய ஊரினரின்
களர்நிலத்துப் புளிச்சுவைகொண்டு, அவரின் வருத்தும் பசியைப் போக்க,
தலை உச்சியில் கொண்ட உயர்ந்த சோற்றுப்பொதிகளையுடைய அயலூர் மக்களே!
முன் நாளிலும் பெற்றிருக்கிறோம் - இப்பொழுது பெறப்போகும்,
விரும்பப்படும் கரிய மணியைப் போன்ற, புனையப்பட்ட நீண்ட கூந்தலையுடையவள்,
கண்ணீர் வடிந்து சொட்டுச் சொட்டாக மார்பினை நனைக்க,
நமக்கு விருந்து வைக்கும் விருப்பினளாய் தன்னை வருத்திக்கொள்ளும்
திருத்தமான அணிகலன்களை அணிந்த அரிவையாகிய இன்மொழிக்காரியின் நிலையை -
					மேல்
# 375 நெய்தல் பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி

நீண்ட கிளைகளையுடைய புன்னைமரத்திலிருந்து நறிய தாதுக்கள் உதிரும்படியாக,
மரக்கொம்பில் அணிசெய்வதுபோல் இருக்கும் குருகுகள் கூட்டமாகப் பறந்துசெல்லும்
பலவான பூக்களைக் கொண்ட கடற்கரைச் சோலையையும், மிகுந்த நீர்ப்பெருக்கையும் உடைய கடற்கரைத் தலைவனே!
உமக்கு எம்மீது அன்பு இல்லை; ஆதலினால், அவளுடைய விருப்பத்தையே என்னுடைய விருப்பமாக விரும்பிய
என்னிடத்தில் கூடத் தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூற வெட்கப்படும் இந்த நல்ல நெற்றியையுடையாள் மகிழும்படி
 - நீ மணம்பேச வருவாயானால் மிகவும் நல்லது; பெரிய கடலில்
இரவுப் பொழுதில் திங்கள் மண்டிலம் தோன்றியதால் வலிமிக்க அலைகள்
எழுந்து கரையை மோதுவது போல வரும்
உயர்ந்த மணல்மேட்டுப் பகுதியிலுள்ள எமது வாழ்வதற்கு இனிமையான ஊருக்கு -
					மேல்
# 376 குறிஞ்சி கபிலர்

முறம் போன்ற செவியினைக் கொண்ட யானையின் நீண்ட கையினைப் போல, வளைந்து
தலைசாய்த்த கதிர்களைக் கொண்ட பசிய தாள்களைக் கொண்ட செந்தினையை
வரையாது கொடுப்பவனின் வள்ளல்தன்மை போலக் கருதி, பலவும் ஒன்று சேர்ந்து
தம் சுற்றத்தோடு கொத்தித்தின்னும் வளைந்த வாயையுடைய பச்சைக் கிளிக்கூட்டமே!
கஞ்சங்குல்லை, காட்டு மல்லிகை, கூதாளி, குவளை
இல்லம் ஆகியற்றின் பூக்களோடு கலந்து கட்டிய மிகவும் குளிர்ந்த தலைமாலையையுடையவனும்,
வரிந்து கட்டிய வில்லையுடையவனும், அசோக மரத்தடியில் தோன்றுபவனுமாகிய
நல்ல மாலையணிந்த மார்பினையுடையவனைக் கண்டால், இந்தச் சிறிய செய்தியை
நன்கு அவனுக்குப் புரியும்படி சொல்லுங்கள்; - பின்னால் வந்து
வருத்துகின்ற தெய்வம் போல என்னை வருத்தி,
வெறுமையான தினைப்புனத்தில் காவல்காக்க விடாததை
அறிந்திருக்கிறீர் அல்லவோ? - எமது அறப்பண்பில்லாத தாயானவள் -
					மேல்
# 377 குறிஞ்சி மடல் பாடிய மாதங்கீரனார்

பனைமடலால் செய்த குதிரையில் ஏறி வந்தும், எருக்கம்பூ மாலையைச் சூடியும்
இடம் அகன்ற உலகத்தின் நாடுகள்தோறும், ஊர்கள்தோறும்,
ஒளிரும் நெற்றியையுடை அரிவையின் அழகினைச் சிறப்பித்துக்கூறியும்,
இவ்வாறு செய்வதை விரும்பியவனாய், என்னுள்ளத்தை அரிதின் முயன்று நிலைநிறுத்தி,
அதுவே பிணியாக நலிவிக்க இறந்துபோகமாட்டேனோ?
அகன்ற கரிய வானத்தில் பாம்பினால் விழுங்கப்பட்டுக் குறைபட்டுப்போன
பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல
கூந்தலோடு சேர்ந்த அழகிய நெற்றி,
தோழர்கள் இடித்துரைக்குமாறு என்னை மெலிவிக்கின்ற நோய் ஆகின்றது.
					மேல்
# 378 நெய்தல் வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

நள்ளிரவுப் பொழுதும் நீண்டுகொண்டே மெல்லச் செல்கிறது; காமநோயும்
கண்ணுறக்கம் தராமல் மிகுந்துகொண்டே செல்லும்; தெளிந்த கடலில்
முழங்கும் அலைகளும் முழவு இசைப்பது போன்று மெல்ல மெல்லப்
நெடுங்காலம் புண் பட்டவர்களைப் போல நீர்ப்பரப்பில் அசைந்துகொண்டிருக்கும்;
அவ்விதமாக நம்மை நலிவிக்கவும், இதனை நீங்கி எவ்விடத்தும்
இரவை முடித்துப் பகல் தோன்றினபாடில்லை; பழிசொல்லும்
அயல்வீட்டுப் பெண்கள் என் நெற்றியின் பசலையைக் குறிப்பிட்டுப் பாடுபேச
- இவ்வாறு ஆகிவிட்டது, தோழி! உயர்ந்த மணற்பரப்பில்
கோலமிட்ட சிறிய மணல்வீட்டைச் சிதைக்கும்படி வந்து,
நமக்கு அவன்மேல் பரிவு உண்டாகும்படி அவன் சொன்ன பணிவான சொற்களை நம்பி,
ஒலி முழங்கும் குளிர்ந்த நீர்ப்பெருக்கையுடைய கடற்கரைத்தலைவனோடு
சிந்திக்காமல் உடன்பட்ட நட்பின் அளவு -
					மேல்
# 379 குறிஞ்சி குடவாயில் கீரத்தனார்

புன்மையான தலையையுடைய மந்தியின் அறிவற்ற வலிய குட்டியானது
குன்றத்தின் பக்கமாகப் பொருந்திய முற்றத்தைவிட்டுப் போகாது
நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தாற்போன்ற பூக்கள் நெருங்கிய கொத்துக்களையுடைய
வேங்கை மரத்தின் அழகிய தாழ்ந்த கிளையில் பதுங்கியிருந்து, கையிலுள்ள
தேன் ஊற்றியது போன்ற இனிய பாலுள்ள கலத்தைப் பறித்துக்கொண்டுபோக, குறமகளான தலைவியின்
மை தீட்டிய கண்களின் அழகு குலைந்துபோகுமாறு அழுத கண்கள்,
தேர்களை இரவலர்க்கு வழங்கும் சோழரின் குடவாயில் என்னும் ஊரில் உள்ள
மழைபெய்து நிரம்பிய குளத்தில் குளிர்ச்சியாக மலர்ந்த
மழைநீரை ஏற்ற நீலமலரைப் போல ஆயின; விரல்களோ
பரந்துபட்டு, அழகிய வயிற்றில் அடித்துக்கொண்டதால், இடைவிடாமல்
அசைகின்ற மேகங்கள் தவழும் உச்சிகள் உயர்ந்த பொதிகை மலையின்
உயர்ந்த பெரிய மலைச்சரிவில் பூத்த
காந்தளின் அழகிய கொழுவிய மலர்கின்ற மொட்டைப்போல் சிவந்துபோயின.
					மேல்
# 380 மருதம் கூடலூர் பல்கண்ணனார்

நெய்யும், தாளிப்புப் புகையும் படிந்து, என் உடம்புடன்
அழுக்கடைந்துள்ளது என் ஆடையும்; தோள்களும்
தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;
தூய அணிகலன்கள் அணிந்த மகளிர் வாழும் சேரியில் தோன்றும்
தேரையுடைய தலைவனுக்கு நாம் ஒத்துவரமாட்டோம்; அதனால்,
பொன் போன்ற நரம்பைக் கொண்ட இனிய ஓசையைக் கொண்ட சிறிய யாழை
இசைப்பதில் வல்லவன் என்றாலும், என்னை வணங்கிநிற்கவேண்டாம்;
கொண்டுபோய்விடு, பாணனே! உன்னுடைய குளிர்ந்த துறையையுடைய மருதநிலத்தானை!
சிறந்த என் வீட்டிலிருந்து பாடவேண்டாம்; என் உள்ளம் அதற்கு ஒருப்படாது; நீண்ட நேரம் நிற்பதால்
குதிரைகளும் தாம் தேரில் பூட்டப்பட்டிருக்கும் நிலையை வெறுக்கின்றன;
பயனில்லாத சொற்களைச் சொல்லவேண்டாம், நான் விரும்பியது எனக்கு இல்லாத போது.
					மேல்
# 381 முல்லை ஔவையார்

மிகுந்த துன்பத்தில் உழன்றாலும் உயிரோடிருத்தலே போதும் என்றவாறு
எனக்குச் சாவு இல்லை என்பதால் நான் அன்பு இல்லாதளும் அல்லள்;
கரையை மோதிச் செல்லும் கட்டாற்றின் இடிந்துவிழும் கரையிலுள்ள
வேர்கள் வெளிப்பட்டுத்தோன்றும் மராமரத்தின் அழகிய தளிர் போல
நடுங்கிக்கொண்டே இருக்கும் நெஞ்சத்தோடு, துன்பத்தை
எவ்வாறு தாங்குவேன்? மிடுக்கான நடையையும்
மிகுந்த பெருமிதத்தையும் கொண்ட யானைப் படையையுடைய நெடுமான் அஞ்சி
இரக்கமுள்ள நெஞ்சத்தோடு, தனது புகழ் நெடுந்தொலைவுக்கு விளங்க
தேர்களை வாரிவழங்கும் அவனது அரசிருக்கையைப் போல
மேகங்கள் நிலைகொண்டு கொட்டுகின்றன மழையை.
					மேல்
# 382 நெய்தல் நிகண்டன் கலைக்கோட்டு தண்டனார்

கடற்கரைச் சோலையில் மாலையில் கழியிலுள்ள நீர் மிகுதியாகப் பெருக்கெடுக்க,
நீல நிறமுள்ள நெய்தல் தன் வரிசையான இதழ்கள் பொருந்துமாறு குவிய,
கொஞ்சமும் குறையாமல் அலைகள் மோதித்திரும்பும் கடலில் மீனை அருந்தி
பறவையினங்கள் தம் கூட்டுக்கு ஒன்று சேர்ந்து போவதை நினைத்துப்பார்க்காதவராய்,
நம்மைப் பிரிந்து சென்றவர் இருக்குமிடத்தில் இருக்க, மிகவும் வருந்தி
நம் அரிய உயிர் அழிவதாயினும், நேர்த்தியான அணிகலன்களை அணிந்தவளே!
மறைத்துக்கொள்ளவேண்டும்; பரவிக்கிடக்கும் நீரையுடைய
குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவனாகிய நம் தலைவன் நாணிப்போகும்படியாக,
நமக்குப் பகையானவர்கள் தூற்றுகின்ற பழிச்சொற்கள்தாம் இருக்கின்றனவே!
					மேல்
# 383 குறிஞ்சி கோளியூர் கிழார் மகனார் செழியனார்

மலையடிவாரத்தில் செழித்து வளர்ந்த கரிய அடிப்பகுதியையுடைய வேங்கைமரத்து மலரின்
அசைகின்ற அழகிய மாலையைப் போன்ற குட்டிகளை ஈன்ற
மசக்கை நோயால் வாடிய ஈன்றணிமையான பெரிய பெண்புலிக்குப் பசித்ததாக, வலிய ஆண்புலி
புள்ளிகளையுடைய முகம் உருக்குலைந்துபோகத் தாக்கிக் களிற்றினைக் கொன்று
இடி முழக்கத்தோடு முழங்கும் அச்சந்தரும் நள்ளிரவில்,
எம்மீது அருளுடையவன் போல் தோன்றினும், அருளற்றவனாவாய் அல்லவா!
மிகுந்த இருள் மூடிய அச்சந்தரும் பாதையில்
பாம்பின் மீது சினந்து விழுந்து கொல்லும் இடியுடன்,
உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தவனே, நீ வருவதால் -
					மேல்
# 384 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

இளமையான முதுகினைக் கொண்ட புறாவின் சிவந்த காலையுடைய சேவலானது
களர் நிலத்தில் உயரமாய் வளர்ந்த கவைத்த முடக்கள்ளியில்
முட்களைக்கொண்ட சுள்ளிக்குச்சியால் கட்டப்பட்ட அழகிய கூட்டில் குஞ்சுபொரித்து இளைத்துப்போன
வருத்தமிக்க நடையைக் கொண்ட பெண்புறா உண்பதற்காக, அரசர்
போர் முனையில் கவர்ந்ததால் முதிரப் பாழ்பட்டுப்போன நிலத்தில் சிந்திக்கிடக்கும் நெல்மணியைக் கொத்திக்கொணரும்
அரண்கள் இல்லாத தொலைநாட்டு வழியோரத்தில் மலர்ந்த
நல்ல நாளின் காலையில் வேங்கைமரத்தின் பொன்னைப் போன்ற புதிய பூக்கள்
பரவிக்கிடக்க, - அதன் மீது நடக்க நான் கண்டேன் -
காண்பாயாக இப்போது வாழ்க என் நெஞ்சமே! நாணத்தைவிட்டு
தீர்த்தற்கரிய துயரத்தில் நான் உழந்துகிடந்த போது
அதற்கு மருந்தாவாள் எனப்படும் இளமையோளாகிய இவளை -
					மேல்
# 385 நெய்தல் அஞ்சிலாந்தையார்

பகற்பொழுது சென்றபின் மலர்கள்கூம்பிவிட்டன;
புலால் நாறும் நீரையுடைய மணல்மேடுகளில் ஆமையின் குஞ்சுடன்
நண்டுகளும் தம் வளைக்குள் சென்று சேர்ந்தன; வளைந்த கழியினில்
இரைதேடித்திரிந்த வருத்தம் நீங்கிப்போகுமாறு மரத்தின் மேல்
பறவைகளும் தம் குஞ்சுகளுடன் தங்கின; அதனால்
இது சந்திப்பதற்குரிய பொழுது அன்று; எனினும் தனியனாய் வருகிறாய்;
மை தீட்டிய அழகிய குளிர்ந்த --
					மேல்
# 386 குறிஞ்சி

சிறிய கண்களையுடைய பன்றியின் மிகுந்த சினத்தைக்கொண்ட ஆணானது
நெருங்கத் தொடுக்கப்பட்ட தலைமாலையையுடைய கானவர் உழுது விதைத்த
வளைந்த கதிரையுடைய தினையை நிரம்ப உண்டு, அங்கு
மலைப்பிளவுகளில் தங்கியிருக்கும் வேங்கைப் புலிக்கு அஞ்சாது
மூங்கில் வளரும் மலைச் சாரலில் தூங்கும் நாட்டையுடையவன்
அச்சம்தரக்கூடிய அரிய சூளுரைகளை உனக்குத் தருவேன் என்று கூற, நீயோ
உம்மைப் போன்றவர்கள் மேற்கொள்ளமாட்டார் இந்தச் செயல்களை என்று
தெரிந்துரைத்தது உண்மையாகக் கண்டு, அதனைப் பற்றி வியப்படைந்தேன், தோழி, அவரைப் பணிந்து, நம்முடைய
மலையை ஒட்டிய சிறுகுடி மங்கலமாகத் தோன்றும்படியாகத்
திருமணம் பேசுவதற்காக அவர் வந்த பொழுது -
					மேல்
# 387 பாலை பொதும்பில் கிழார் மகனார்

சுருள் சுருளான, கரிய கூந்தலும், நீண்ட தோள்களும்
நாளுக்குநாள் அவற்றின் பழைய அழகு சிதைந்துபோகுமாறு,
செம்மையாக அம்புதொடுக்கத் தகுதியற்றவரும், சரியாகக் கட்டப்படாத தலைமாலையையுடையவரும்
தம் தொழிலைக்கூடச் சரியாகக் கற்காதவருமாகிய மழவர்களின் வில்கூடங்கள் குறுக்கிட்டுக்கிடக்கும்
செல்வதற்கு அரிதான கிளைவழிகளையுடைய கடினமான பாலைவழியில் சென்றோர்,
தவறாமல் திரும்ப வருவார், வாழ்க, தோழியே! போரில் வென்று
ஆலங்கானம் என்னுமிடத்தில் அச்சம்வரும்படியாக வீற்றிருந்த
வேல்வீரர் நிரம்பிய படையையுடைய செழியனின் பாசறையிலிருக்கும்
உறையிலிருந்து உருவப்பட்ட வாளைப் போல மின்னி, அங்கே பார்!
நீண்ட பெரிய குன்றத்தை வளைத்துக்கொண்டு
கடுமையான மழையைப் பொழிகின்றன, ஆரவாரம் மிக்க மேகங்கள்.
					மேல்
# 388 நெய்தல் மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

வாழ்க! தோழியே! என் நல்ல நெற்றிக்கு
எவ்வாறு உண்டாகும் பசப்பு? வலிமையான புரிகளால்
செய்யப்பட்ட கயிற்றின் முனையில் கட்டப்பட்ட விரைவான செலவையுடைய எறியுளிகளைக் கொண்ட,
திண்ணிய படகுகளையுடைய பரதவர், ஒளிரும் விளக்குக்குகளைக் கொளுத்திக்கொண்டு
நள்ளிரவில் மீன்வேட்டைக்குச் சென்று, அதிகாலையில்
தாம் பிடித்த கடல் மீன்களைக் கொண்டுவந்து, கடற்கரைச் சோலையில் குவித்து,
உயர்ந்த பெரிய புன்னைமரத்தின் வரிவரியான நிழலில் தங்கியிருந்து
தேன் மணக்கும் தெளிந்த கள்ளைச் சுற்றத்தாரோடு நிரம்பக் குடித்து,
பெருமகிழ்ச்சிகொள்ளும் துறையைச் சேர்ந்தவனாகிய காதலன், என்னுடைய
சிறிய நெஞ்சத்திலிருந்து நீங்காமலிருக்கிறான்.
					மேல்
# 389 குறிஞ்சி காவிரி பூம்பட்டினத்து செங்கண்ணனார்

வேங்கை மரங்களும் புலிபோல் தோன்றும் பூக்களை விளைவித்தன; அருவிகளும்
தேன் மணம் மிகுந்த நெடிய மலையில் நீலமணி போலத் தோன்றுகின்றன;
அன்னையும் இனிதாய்ப் பார்க்கிறாள்; என் தந்தையும்
களிற்றின் முகத்தைப் பிளக்கும் வில்தொழிலைத் தவிர வேறொன்றைக் கல்லாத, சிறப்பாக அம்பினைத் தொடுக்கும்
ஏவலாளிகளுடன் விலங்குகளின் வழியில் வேட்டையாடச் சென்றுவிட்டார்; எனவே
சிறு கிளிகள் கொத்தியழிக்கும் பெரிய கதிர்களையுடைய தினைப்புனத்தின்
காவல் நீதான் என்றுசொல்லிவிட்டாள்; தன் சேவலோடு
மலைச் சரிவில் சென்ற கிளறுகின்ற கால்களையுடைய கோழி,
பழங்கொல்லையின் மேல்மண்ணைக் கிளறிய புழுதி, மிகப் பலவாக
நல்ல பொன்துகள் போல் மினுமினுக்கும் நாட்டைச் சேர்ந்தவனுடன்
அன்பு பெருகும் காதலாக அமைக நம் தொடர்பு.
					மேல்
# 390 மருதம் ஔவையார்

வாளை மீன்கள் வாளைப் போல பிறழ, நாள்முழுதும்
பொய்கையில் இருக்கும் நீர்நாய் நிலைகொண்ட துயிலினை மேற்கொள்கின்ற,
வள்ளல்தன்மை உடைய கிள்ளிவளவனின் வெண்ணி என்னும் ஊரைச் சூழவுள்ள
வயல்களிலுள்ள வெள்ளாம்பலின் அழகான மடிப்புகளையுடைய தழையை
மெல்லியதான அகன்ற அல்குலில் அழகுண்டாக உடுத்திக்கொண்டு
திருவிழாவுக்குச் செல்லவேண்டும், உறுதியாக,
புதுவருவாயை உடைய மருதநிலத்துக்காரன் என்னைக் காண்பானாயின்
என்னை மணந்துகொள்ளாமற்போவது மிகவும் அரிது; அப்படி என்னை மணந்துகொண்டால்
மலை போலத் தோன்றும் யானைகளையும், வாய்மையான சொற்களையும் உடைய முடியன் என்பானின்
மலையில் உள்ள மூங்கிலைப் போன்ற பிற பெண்களின் நல்ல தோள்கள்
இரங்கத்தக்கன தோழி, தம் அழகினையும் இழப்பன மிகப் பல.
					மேல்
# 391 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

அழவேண்டாம் மடந்தையே! தவிர்த்துவிடுவார் பயணத்தை;
புலியின் புள்ளிகளைப் போன்று புள்ளிபுள்ளியாக நிழல் இருக்கும் அழகிய சோலையில்
குளிர்ச்சியான அடர்ந்த கொடிகளை மேய்ந்த பெரிய கரிய கொம்பினையுடைய
பருத்த தலையைக் கொண்ட காராம்பசு தின்னாதுவிட்ட குளிர்ந்த தழைகளை
ஒளிரும் வளையணிந்த மகளிர் தம் அணிகலன்களுக்கு அழகுண்டாகச் சேர்த்து அணியும்
பொன் விளையும் கொண்கானத்து நன்னனின் நல்ல நாட்டிலுள்ள
ஏழிற்குன்றத்தையே பெற்றாலும், பொருள் ஈட்டுவதற்காக
- யார்தான் பிரிந்துசெல்வார்? குவளையின்
நீர் ஒழுகும் ஒளிபொருந்திய மலரைப் போன்ற உனது
பெரிதான, அமைவடக்கமான, குளிர்ந்த கண்களில் தெளிந்த கண்ணீர் நிறையும்படியாக -
 					மேல்
# 392 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்

கொடிய சுறாமினை எறிந்து கொன்ற கடிய முயற்சியைக் கொண்ட தந்தை
பறவைகள் ஒலிக்கும் பெரிய கடலுக்குக் கூட்டிச் செல்லாமல் சென்றுவிட்டான் என்று
வீட்டில் அழுது ஓய்ந்த புல்லிய தலையை உடைய சிறுவர்கள்
கூட்டாக முயன்று பெற்ற இனிய கண்ணையுடைய நுங்கைத்
தாயின் பருத்த கதகதப்பான கொங்கையை உண்ணுவதுபோலச் சுவைத்து உண்டு மகிழும்
பனைமரங்களே வேலியாக உள்ள அகன்ற இடத்தையுடைய சிற்றூரிலுள்ள
நமது நல்ல மனையை அறிந்திருந்தால் மிகவும் நல்லது -
வீறு கொண்ட நெஞ்சத்தோடு முன்பு தான் வந்துபோன
கடற்கரைச் சோலையில் இன்று மனமழிந்து நிற்கிறார் போலும்; நள்ளிரவில்
நாம் வெறுக்கும் துன்பத்தைப் போக்கினாலும் போக்குவார்,
நம்மீது மிகப் பெரிய அன்பையுடைய நம் காதலர் -
					மேல்
# 393 குறிஞ்சி கோவூர் கிழார்

நெடிய மூங்கில்கள் உயர்ந்துநிற்கும் நிழல் படிந்த மலைச் சரிவில்
முற்றின சூலைக் கொண்ட வலிய பெண்யானை கன்று ஈன்று வருந்த,
பால் கொடுத்ததினால் பச்சைமேனியான ஈன்றணிமை தீர, மகிழ்ச்சி மிகுந்து
தீட்டுள்ள யானை வளைந்த தினைக்கதிரை உண்டதினால்,
குறவன் எறிந்த விரைவாகச் செல்லும் கொள்ளிக்கட்டை,
மூங்கில்கள் நிறைந்த மலைகளின்இடுக்கு ஒளிரும்படியாக மின்னி,
நிலைபெயர்ந்து விழும் எரிமீனைப் போன்று தோன்றும் நாட்டையுடையவன்,
இரவினில் நம்மைச் சந்திக்க வருவதால் நாம் அடையும் துன்பத்தினின்றும் நாம் உய்ய,
நம்மை மணம்பேச வந்த வாய்மையான செயலுக்கேற்ப
நம்மவர்கள் பெண்கொடுக்க இசைந்தால், அவருடன்
இசைவாகப் பேசுவார்களோ? வாழ்க, தோழியே!, நம் காதலர்
உனக்குப் புதியவரைப் போல் வந்து நின்றதையும், உன்னுடைய
மணநாளுக்கான நாணமுடைய அடக்கத்தையும் காணும்போது -
					மேல்
# 394 முல்லை ஔவையார்

மரங்களெல்லாம் நெருங்கி ஒன்றுகூடியுள்ள அகன்ற இடத்தையுடைய கானத்தில்,
காய்ந்துபோன உச்சியையுடைய ஞெமை மரத்தில் இருந்த பேராந்தை
பொன்வேலை செய்யும் கொல்லன் தட்டுவது போன்று இனிதாக ஒலித்துக்கொண்டிருக்க,
கட்டப்பட்ட மணிகள் பெரிதாய் ஒலிக்கும் அணிகளால் புனையப்பட்ட நெடிய தேரில்,
வன்மையான பரல்கற்களைக் கொண்ட சரளைக்கல் பூமியில் சக்கரங்கள் அதிரும்படியாகச்
சென்றான், வாழ்க! அந்த பனிமிக்க நாளில்;
இப்போது, நடுவழியில் மேகங்கள் மழை பெய்ததாக, மார்பிலுள்ள
சிறிய புள்ளிகளைக் கொண்ட சந்தனத்தோடு
நறிய, குளிர்ந்த நெஞ்சத்தினனாய்த் திரும்புகின்றான் போலும். இதற்கு நோவேனோ நான்?
					மேல்
# 395 நெய்தல் அம்மூவனார்

யார் நீ நண்பனே? யார்தான் நீ எங்களுக்கு?
நீ எமக்கு யாரும் இல்லை! அன்னியனே!
அவ்வாறுதான் உள்ளது, கொண்கனே! நமக்கு இடையேயுள்ள தொடர்பு, நினைத்துப்பார்த்தால்!
பெரும் வலிமை கொண்ட யானையையும், நெடிய தேரினையும் உடைய குட்டுவன்,
பகைவேந்தரைக் கொல்லும் வேளையில் முரசுகள் அதிர்வதைப் போல்
உயர்ந்து எழும் அலைகளுக்குள் பாய்ந்து விளையாடும் மகளிர்
அணிந்திருக்கும் பலவான பூக்கள் உதிர்ந்து கலந்துவர அவற்றை மேய்ந்த
பசுவானது மீண்டும் தன் இருப்பிடத்துக்குள் நுழையும் பெரிய சிறப்புள்ள மாலைக்காலத்தில்
கடல் சூழ்ந்த மாந்தை என்னும் நகரத்தைப் போன்ற எம்மை
நீதான் விரும்பவில்லை, எனவே உன்பொருட்டு இழந்த என் நலத்தைத் தந்துவிட்டுச் செல்வாயாக!
					மேல்
# 396 குறிஞ்சி முத்தூற்று மூதெயினனார்

மழையைப் பெய்துவிட்டுப் போகும் மேகங்கள் தாம் தங்கியிருக்கும் மலையைச் சென்றடைய,
தேனடைகள் தொங்குகின்ற உயர்ந்த மலையருவிகள் ஆரவாரத்துடன் ஒலிக்க,
வேங்கை மரம் பூத்ததினால் மலையிடம் அழகுபெற்றுத் திகழும் நல்ல நாள் காலையில்,
பொன் போன்ற பூக்களையுடைய அழகிய கிளைகளைத் துழாவிக்கொண்டு சென்றதால்
மணங்கமழும் பூந்தாதுக்கள் மேனியில் படிந்து அழகுபெற்றுத்திகழும் மயில்கள்,
பசுமை போர்த்த பாறையின் உச்சியிலிருந்து, கூட்டமாய் ஞாயிற்றின்
மிக்க கதிராகிய இளவெயிலில் காய்ந்துகொண்டிருக்கும் நாட்டினைச் சேர்ந்தவனே!
உன் மார்பு தாக்கியதால் வருத்தமுற்ற நீக்குவதற்கு அரிதான இந்தக் காமநோயை
யாரிடம் நொந்துபோய் உரைப்பேன் நான்? பலநாட்கள்
இனிமை மிகுந்த சொற்களைச் சொல்லியும்
எமக்கு நலமானதை அருளமாட்டாய்! நீ குழம்பிப்போயுள்ளாய்!
 					மேல்
# 397 பாலை அம்மூவனார்

என் தோள்கள் மெலிவடைந்து தம் நலம் அழிந்தன; குறித்துச் சென்ற நாளும் கடந்துவிட்டதாக,
நீண்ட பாலைநிலத்திடை அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து
கண்களும் பார்வை குன்றிப்போயின; என்னைவிட்டு நீங்கி
என் அறிவும் மயங்கி வேறொன்றாகிச் செயலற்றுப் போனது;
காதல்நோயும் பெருகுகின்றது; மாலைக்காலமும் வந்துவிட்டது;
என்ன ஆவேனோ நான்? இவ்விடத்திலேயே
இறந்துபோவதற்கு அஞ்சவில்லை; ஆனால் ஒன்றனுக்கு அஞ்சுகிறேன்! இறந்தால்
பிறப்பு வேறொன்றாகிவிடுமாதலால்,
மறந்துவிடுவேனோ என் காதலனை என்று -
					மேல்
# 398 நெய்தல் உலோச்சனார்

அச்சம் பொருந்திய தெய்வமும் மறைந்திருப்பதைவிட்டு உலவத் தொடங்கிவிட்டது;
விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மேற்குத்திசையில் சாயத்தொடங்கிவிட்டது;
நீராடியதால் அலைக்கப்பட்டுக் கலைந்துபோன கூந்தலின் நீரை வடித்துவிட்டு
சுருக்கி முடித்து, அழகிய வயிறு குலுங்க ஒன்றுசேர்ந்து
ஓரை விளையாடிய மகளிரும் ஊருக்குத் திரும்பிவிட்டனர்;
பல மலர்களையுடைய நறிய சோலையை வாழ்த்தி, நாம் முதலில்
கிளம்புவோம் சிவந்த அணிகலன்களை அணிந்தவளே என்று சொன்னேன்; அதற்கு விடையாக
சொல்லாமல் இருக்கிறாள் மென்மையான இயல்பினள் சில சொற்களைக் கூட; நல்ல தன் மார்பில்
புதியவாய் எழுந்த இளமையான முலைகள் நனையும்படி
மிக்க அழகுபடைத்த மலர் போன்ற கண்களில் தெளிந்த நீர் நிறைந்து நிற்க -
					மேல்
# 399 குறிஞ்சி தொல்கபிலர்

அருவிகள் ஆரவாரிக்கும் பெரிய மலைகளின் இடுக்குச் சரிவில்
குருதியைப் போன்ற மணங்கமழும் பூக்களையுடைய காந்தள்,
வரிகள் அழகுசெய்யும் சிறகைக் கொண்ட வண்டுகள் உண்பதற்காக மலர்கின்ற
வாழை மரங்களைக் கொண்ட மலைச் சரிவில், பன்றிகள் கிளறிய
நிலத்தில் மேலே கிடக்கும் பலவாகிய அழகிய மணிகளின்
ஒளி பரந்து விளங்கும் விளக்கொளியில் கன்றினை ஈன்ற இளமையான பெண்யானை
ஆண்யானை புறத்தே நின்று காவல்காக்கக் கன்றோடு தங்கியிருக்கும்
பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவன் விரும்பிக்கொண்டு வருகின்ற
பெருமை படைத்தவள் என்பதைத்
தருகின்றதல்லவா தோழி! உன்னுடைய அழகிய நெற்றியின் எழில்.
					மேல்
# 400 மருதம் ஆலங்குடி வங்கனார்

வாழையின் மெல்லிய இலை நீண்டு தாழ்ந்திருக்க,அதனை உயர்த்தும்
நெற்பயிர் விளையும் கழனியிலுள்ள நேரான இடம் பொருந்திய வயலில்
நெல்லறுப்போர் களத்தில் குவித்த நெற்கதிர்குவைக்கு அயலாக, பெரிய
கரிய பிடரியையுடைய வாளைமீன் துள்ளிப்பாயும் மருதநிலத்தலைவனே!
நீயின்றி வாழ்தல் எனக்குக் கூடுமாயின், இவ்விடத்திலிருந்து
இனிமையைத் தராத நோக்கத்துடன் எனக்கு என்ன பிழைப்புத்தான் உண்டு?
மறம் பொருந்திய சோழரின் உறையூரின் அரசவையில்
அறம் கெடுதல் என்பதை அறியாதது போல, சிறந்த
நட்புறவால் கலந்து நீயே
நீங்குதல் அறியாய் என் நெஞ்சத்தைவிட்டு.
					மேல்