ஐங்குறுநூறு

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

மருதம்
1 - 50
51 - 100

நெய்தல்
101 - 150
151 - 200

குறிஞ்சி
201 - 250
251 - 300

  பாலை
301 - 350
351 - 400

  முல்லை
401 - 450
451 - 500
தேவையான
பாடல் எண்
எல்லையைத்
தட்டுக

   
    சொற்பிரிப்பு மூலம்
# பாரதம் பாடிய பெருந்தேவனார்
# 0 கடவுள் வாழ்த்து 

நீல மேனி வால் இழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்
மூவகை உலமும் முகிழ்த்தன முறையே

# மருதம்      ஓரம்போகியார்

#1 வேட்கை பத்து
#1
வாழி ஆதன் வாழி அவினி
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
நனைய காஞ்சி சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க			5
பாணனும் வாழ்க என வேட்டேமே
					மேல்
# 2
வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோளே யாயே யாமே
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண் துறை ஊரன் கேண்மை		5
வழிவழி சிறக்க என வேட்டேமே
					மேல்
# 3
வாழி ஆதன் வாழி அவினி
பால் பல ஊறுக பகடு பல சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூ கஞல் ஊரன்_தன் மனை		5
வாழ்க்கை பொலிக என வேட்டேமே
					மேல்
# 4
வாழி ஆதன் வாழி அவினி
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
என வேட்டோளே யாயே யாமே
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
கழனி ஊரன் மார்பு			5
பழனம் ஆகற்க என வேட்டேமே
					மேல்
# 5
வாழி ஆதன் வாழி அவினி
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக
என வேட்டோளே யாயே யாமே
முதலை போத்து முழு_மீன் ஆரும்
தண் துறை ஊரன் தேர் எம்		5
முன்கடை நிற்க என வேட்டேமே
					மேல்
# 6
வாழி ஆதன் வாழி அவினி
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக
என வேட்டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை
தண் துறை ஊரன் வரைக		5
எந்தையும் கொடுக்க என வேட்டேமே
					மேல்
# 7
வாழி ஆதன் வாழி அவினி
அறம் நனி சிறக்க அல்லது கெடுக
என வேட்டோளே யாயே யாமே
உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும்
தண் துறை ஊரன்_தன் ஊர்		5
கொண்டனன் செல்க என வேட்டேமே
					மேல்
# 8
வாழி ஆதன் வாழி அவினி
அரசு முறை செய்க களவு இல் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும்
பூ கஞல் ஊரன் சூள் இவண்		5
வாய்ப்பது ஆக என வேட்டோமே
					மேல்
# 9
வாழி ஆதன் வாழி அவினி
நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
தண் துறை ஊரன் கேண்மை		5
அம்பல் ஆகற்க என வேட்டேமே
					மேல்
# 10
வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
பூத்த மாஅத்து புலால் அம் சிறு மீன்
தண் துறை ஊரன் தன்னோடு		5
கொண்டனன் செல்க என வேட்டேமே
					மேல்
# 2 வேழப்பத்து
# 11
மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும் என் தட மென் தோளே
					மேல்
# 12
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்க தில்ல என் தட மென் தோளே
					மேல்
# 13
பரி உடை நன் மான் பொங்கு உளை அன்ன
அடைகரை வேழம் வெண் பூ பகரும்
தண் துறை ஊரன் பெண்டிர்
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே
					மேல்
# 14
கொடி பூ வேழம் தீண்டி அயல
வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணி துறை வீரன் மார்பே
பனி துயில் செய்யும் இன் சாயற்றே
					மேல்
# 15
மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழை
புனல் ஆடு மகளிர்க்கு புணர் துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே
					மேல்
# 16
ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால்
சிறு தொழு_மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூ கஞல் ஊரனை உள்ளி
பூ போல் உண்கண் பொன் போர்த்தனவே
					மேல்
# 17
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே
					மேல்
# 18
இரும் சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்து மலர் அன்ன என் கண் அழ
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே
					மேல்
# 19
எக்கர் மாஅத்து புது பூ பெரும் சினை
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண் பனி உகுமே		5
					மேல்
# 20
அறு சில் கால அம் சிறை தும்பி
நூற்று இதழ் தாமரை பூ சினை சீக்கும்
காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்து
துறை நணி ஊரனை உள்ளி என்
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே	5
					மேல்
# 3 கள்வன் பத்து
# 21
முள்ளி நீடிய முது நீர் அடைகரை
புள்ளி களவன் ஆம்பல் அறுக்கும்
தண் துறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய்
					மேல்
# 22
அள்ளல் ஆடிய புள்ளி களவன்
முள்ளி வேர் அளை செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து இனி
நீயேன் என்றது எவன்-கொல் அன்னாய்

# 23
முள்ளி வேர் அளை களவன் ஆட்டி
பூ குற்று எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனி
தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய்
					மேல்
# 24
தாய் சா பிறக்கும் புள்ளி களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்
எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன்
பொலம் தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலம் கொண்டு துறப்பது எவன்-கொல் அன்னாய்	5

# 25
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய்
வயலை செம் கொடி களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு பலர்க்கு
இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்
					மேல்
# 26
கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன்
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்
எம்மும் பிறரும் அறியான்
இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய்

# 27
செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன்
தண் அக மண் அளை செல்லும் ஊரற்கு
எல் வளை நெகிழ சாஅய்
அல்லல் உழப்பது எவன்-கொல் அன்னாய்
					மேல்
# 28
உண்துறை_அணங்கு இவள் உறை நோய் ஆயின்
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண் தொடி நெகிழ சாஅய்
மென் தோள் பசப்பது எவன்-கொல் அன்னாய்

# 29
மாரி கடி கொள காவலர் கடுக
வித்திய வெண் முளை களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு உற மரீஇ
திதலை அல்குல் நின் மகள்
பசலை கொள்வது எவன்-கொல் அன்னாய்		5
					மேல்
# 30
வேப்பு நனை அன்ன நெடும் கண் களவன்
தண் அக மண் அளை நிறைய நெல்லின்
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள்
பெரும் கவின் இழப்பது எவன்-கொல் அன்னாய்
					மேல்
# 4 தோழிக்கு உரைத்த பத்து
# 31
அம்ம வாழி தோழி மகிழ்நன்
கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர்
முடம் முதிர் மருதத்து பெரும் துறை
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே

# 32
அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர்
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே
					மேல்
# 33
அம்ம வாழி தோழி மகிழ்நன்
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரும் துறை
பெண்டிரோடு ஆடும் என்ப தன்
தண் தார் அகலம் தலைத்தலை கொளவே

# 34
அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை பூத்த புழை கால் ஆம்பல்
தாது ஏர் வண்ணம் கொண்டன
ஏதிலாளற்கு பசந்த என் கண்ணே
					மேல்
# 35
அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே
இனி பசந்தன்று என் மாமை கவினே

# 36
அம்ம வாழி தோழி ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம்-மன்னே
கயல் என கருதிய உண்கண்
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே	5
					மேல்
# 37
அம்ம வாழி தோழி மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்து பனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்
தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லே

# 38
அம்ம வாழி தோழி மகிழ்நன்
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்
தண் தளிர் வௌவும் மேனி
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்தே
					மேல்
# 39
அம்ம வாழி தோழி ஊரன்
வெம் முலை அடைய முயங்கி நம் வயின்
திருந்து இழை பணை தோள் ஞெகிழ
பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னே

# 40
அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன்
பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப
கெண்டை பாய்தர அவிழ்ந்த
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே	5
					மேல்
# 5 புலவி பத்து
# 41
தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு
வெண் பூ பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால்
தன் சொல் உணர்ந்தோர் மேனி
பொன் போல் செய்யும் ஊர் கிழவோனே

# 42
மகிழ் மிக சிறப்ப மயங்கினள்-கொல்லோ
யாணர் ஊர நின் மாண் இழை அரிவை
காவிரி மலிர் நிறை அன்ன நின்
மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே
					மேல்
# 43
அம்பணத்து அன்ன யாமை ஏறி
செம்பின் அன்ன பார்ப்பு பல துஞ்சும்
யாணர் ஊர நின்னினும்
பாணன் பொய்யன் பல் சூளினனே

# 44
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு
தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு
அதுவே ஐய நின் மார்பே
அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே
					மேல்
# 45
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று நின் ஊரே
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே

# 46
நினக்கே அன்று அஃது எமக்கும்-மார் இனிதே
நின் மார்பு நயந்த நன் நுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை ஆகி
ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே
					மேல்
# 47
முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர
மாண் இழை ஆயம் அறியும் நின்
பாணன் போல பல பொய்த்தல்லே		5

# 48
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள்
வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர
வேண்டேம் பெரும நின் பரத்தை
ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலே	5
					மேல்
# 49
அம் சில் ஓதி அசை நடை பாண்_மகள்
சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம்
யாணர் ஊர நின் பாண்_மகன்
யார் நலம் சிதைய பொய்க்குமோ இனியே

# 50
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர
தஞ்சம் அருளாய் நீயே நின்
நெஞ்சம் பெற்ற இவளும்-மார் அழுமே      
					மேல்


 



# 6 தோழி கூற்று பத்து
# 51
நீர் உறை கோழி நீல சேவல்
கூர் உகிர் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்று நின்
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே

# 52
வயலை செம் கொடி பிணையல் தைஇ
செ விரல் சிவந்த சே அரி மழை கண்
செ வாய் குறு_மகள் இனைய
எ வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரே
					மேல்
# 53
துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே
சிறை அழி புது புனல் பாய்ந்து என கலங்கி
கழனி தாமரை மலரும்
பழன ஊர நீ உற்ற சூளே

# 54
திண் தேர் தென்னவன் நன் நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ
ஊரின் ஊரனை நீ தர வந்த
பஞ்சாய் கோதை மகளிர்க்கு		5
அஞ்சுவல் அம்ம அ முறை வரினே
					மேல்
# 55
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்
தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள்
நல் அணி நயந்து நீ துறத்தலின்
பல்லோர் அறிய பசந்தன்று நுதலே

# 56
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம் பெறு சுடர் நுதல் தேம்ப
எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழியே
					மேல்
# 57
பகலின் தோன்றும் பல் கதிர் தீயின்
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்ப பிரிய
அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே

# 58
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்
கைவண் விராஅன் இருப்பை அன்ன
இவள் அணங்கு உற்றனை போறி
பிறர்க்கும் அனையையால் வாழி நீயே
					மேல்
# 59
கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று_உற
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர
நினக்கு மருந்து ஆகிய யான் இனி
இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே

# 60
பழன கம்புள் பயிர் பெடை அகவும்
கழனி ஊர நின் மொழிவல் என்றும்
துஞ்சு மனை நெடு நகர் வருதி
அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே
					மேல்

# 61
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
நெடு நீர் பொய்கை துடுமென விழூஉம்
கைவண் மத்தி கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி
வதுவை அயர விரும்புதி நீயே		5

# 62
இந்திர விழவின் பூவின் அன்ன
புன் தலை பேடை வரி நிழல் அகவும்
இ ஊர் மங்கையர் தொகுத்து இனி
எ ஊர் நின்றன்று மகிழ்ந நின் தேரே
					மேல்
# 63
பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர
எம் நலம் தொலைவது ஆயினும்
துன்னலம் பெரும பிறர் தோய்ந்த மார்பே

# 64
அலமரல் ஆயமோடு அமர் துணை தழீஇ
நலம் மிகு புது புனல் ஆட கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர்
பலரே தெய்ய எம் மறையாதீமே
					மேல்
# 65
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்
சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர
புதல்வனை ஈன்ற எம் மேனி
முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே

# 66
உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ
யார் அவள் மகிழ்ந தானே தேரொடு
தளர் நடை புதல்வனை உள்ளி நின்
வள மனை வருதலும் வௌவியோளே
					மேல்
# 67
மடவள் அம்ம நீ இனி கொண்டோளே
தன்னொடு நிகரா என்னொடு நிகரி
பெரு நலம் தருக்கும் என்ப விரி மலர்
தாது உண் வண்டினும் பலரே
ஓதி ஒண் நுதல் பசப்பித்தோரே		5

# 68
கன்னி விடியல் கணை கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர
பேணாளோ நின் பெண்டே
யான் தன் அடக்கவும் தான் அடங்கலளே
					மேல்
# 69
கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின் பெண்டே
பலர் ஆடு பெரும் துறை மலரொடு வந்த
தண் புனல் வண்டல் உய்த்து என
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே

# 70
பழன பன் மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னி சேக்கும்
மா நீர் பொய்கை யாணர் ஊர
தூயர் நறியர் நின் பெண்டிர்
பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே		5
					மேல்
# 8 புனலாட்டு பத்து
# 71
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து
நின் வெம் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே அலரே
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே		5

# 72
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்
குவளை உண்கண் ஏஎர் மெல் இயல்
மலர் ஆர் மலிர் நிறை வந்து என
புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே		5
					மேல்
# 73
வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை
ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து என
கள் நறும் குவளை நாறி
தண்ணென்றிசினே பெரும் துறை புனலே

# 74
விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே
பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற
கரை சேர் மருதம் ஏறி
பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே
					மேல்
# 75
பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்
அலர் தொடங்கின்றால் ஊரே மலர
தொல் நிலை மருதத்து பெரும் துறை
நின்னோடு ஆடினள் தண் புனல் அதுவே

# 76
பஞ்சாய் கூந்தல் பசு மலர் சுணங்கின்
தண் புனல் ஆடி தன் நலம் மேம்பட்டனள்
ஒண் தொடி மடவரால் நின்னோடு
அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே
					மேல்
# 77
அம்ம வாழியோ மகிழ்ந நின் மொழிவல்
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி
நின்னொடு தண் புனல் ஆடுதும்
எம்மோடு சென்மோ செல்லல் நின் மனையே

# 78
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி
மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த
சிறை அழி புது புனல் ஆடுகம்
எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே
					மேல்
# 79
புது புனல் ஆடி அமர்த்த கண்ணள்
யார் மகள் இவள் என பற்றிய மகிழ்ந
யார் மகள் ஆயினும் அறியாய்
நீ யார் மகனை எம் பற்றியோயே

# 80
புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ
நல_தகு மகளிர்க்கு தோள் துணை ஆகி
தலை பெயல் செம் புனல் ஆடி
தவ நனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே
					மேல்
# 9 புலவி விராய பத்து
# 81
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
அரி_பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும்
மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ
என்னை நயந்தனென் என்றி நின்
மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே		5

# 82
வெகுண்டனள் என்ப பாண நின் தலைமகள்
மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார்
தாது உண் பறவை வந்து எம்
போது ஆர் கூந்தல் இருந்தன எனவே
					மேல்
# 83
மணந்தனை அருளாய் ஆயினும் பைபய
தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர்
ஒண் தொடி முன்கை ஆயமும்
தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே

# 84
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள்
கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல்
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇ தண் கயம் போல
பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே		5
					மேல்
# 85
வெண் நுதல் கம்புள் அரி குரல் பேடை
தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும்
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ
சிறுவரின் இனைய செய்தி
நகாரோ பெரும நின் கண்டிசினோரே		5

# 86
வெண் தலை குருகின் மென் பறை விளி குரல்
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர
எம் இவண் நல்குதல் அரிது
நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே
					மேல்
# 87
பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர நின் மனையோள்
யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ

# 88
வண் துறை நயவரும் வள மலர் பொய்கை
தண் துறை ஊரனை எவ்வை எம்_வயின்
வருதல் வேண்டுதும் என்ப
ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே
					மேல்
# 89
அம்ம வாழி பாண எவ்வைக்கு
எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்து
வண்டு தாது ஊதும் ஊரன்
பெண்டு என விரும்பின்று அவள் தன் பண்பே

# 90
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன-கொல்
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல்
அன்னது ஆகலும் அறியாள்
எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே
					மேல்
# 10 எருமை பத்து
# 91
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து
வெறி மலர் பொய்கை ஆம்பல் மயக்கும்
கழனி ஊரன் மகள் இவள்
பழன வெதிரின் கொடி பிணையலளே

# 92
கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்
நுந்தை நும் ஊர் வருதும்
ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே
					மேல்
# 93
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா
செய்த வினைய மன்ற பல் பொழில்
தாது உண் வெறுக்கைய ஆகி இவள்
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே	5

# 94
மள்ளர் அன்ன தடம் கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையோடு வதியும்
நிழல் முதிர் இலஞ்சி பழனத்ததுவே
கழனி தாமரை மலரும்
கவின் பெறு சுடர்_நுதல் தந்தை ஊரே	5
					மேல்
# 95
கரும் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும்
புனல் முற்று ஊரன் பகலும்
படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கே

# 96
அணி நடை எருமை ஆடிய அள்ளல்
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்
கழனி ஊரன் மகள் இவள்
பழன ஊரன் பாயல் இன் துணையே
					மேல்
# 97
பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டை
கரும் தாள் எருமை கன்று வெரூஉம்
பொய்கை ஊரன் மகள் இவள்
பொய்கை பூவினும் நறும் தண்ணியளே

# 98
தண் புனல் ஆடும் தடம் கோட்டு எருமை
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர
ஒண் தொடி மட_மகள் இவளினும்
நுந்தையும் யாயும் துடியரோ நின்னே
					மேல்
# 99
பழன பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி எருமை கதிரொடு மயக்கும்
பூ கஞல் ஊரன் மகள் இவள்
நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளே

# 100
புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை
மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகள் இவள்
பாணர் நரம்பினும் இன் கிளவியளே
					மேல்
 



நெய்தல்         அம்மூவனார்

# 11 தாய்க்கு உரைத்த பத்து
# 101
அன்னை வாழி வேண்டு அன்னை உது காண்
ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள்
பூ போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே		5
# 102
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர்
நீல் நிற பெரும் கடல் புள்ளின் ஆனாது
துன்புறு துயரம் நீங்க
இன்புற இசைக்கும் அவர் தேர் மணி குரலே
					மேல்
# 103
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே
தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவினே
# 104
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர்
பலர் மடி பொழுதின் நலம் மிக சாஅய்
நள்ளென வந்த இயல் தேர்
செல்வ கொண்கன் செல்வனஃது ஊரே
					மேல்
# 105
அன்னை வாழி வேண்டு அன்னை முழங்கு கடல்
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்து என
பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே
# 106
அன்னை வாழி வேண்டு அன்னை அவர் நாட்டு
துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்
தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே
					மேல்
# 107
அன்னை வாழி வேண்டு அன்னை என் தோழி
சுடர் நுதல் பசப்ப சாஅய் படர் மெலிந்து
தண் கடல் படு திரை கேள்-தொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே
# 108
அன்னை வாழி வேண்டு அன்னை கழிய
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன்
எம் தோள் துறந்தனன் ஆயின்
எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே
					மேல்
# 109
அன்னை வாழி வேண்டு அன்னை நெய்தல்
நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன்
எம் தோள் துறந்த_காலை எவன்-கொல்
பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே
# 110
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னை
பொன் நிறம் விரியும் பூ கெழு துறைவனை
என் ஐ என்றும் யாமே இ ஊர்
பிறிது ஒன்றாக கூறும்
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே	5
					மேல்
# 12 தோழிக்கு உரைத்த பத்து
# 111
அம்ம வாழி தோழி பாணன்
சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇ
சினை கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அரும் தவம் முயறல் ஆற்றாதேமே	5
# 112
அம்ம வாழி தோழி பாசிலை
செருந்தி தாய இரும் கழி சேர்ப்பன்
தான் வர காண்குவம் நாமே
மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சே
					மேல்
# 113
அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டு என மொழிய என்னை
அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னை
பைபய எம்மை என்றனென் யானே	5
# 114
அம்ம வாழி தோழி கொண்கன்
நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே
					மேல்
# 115
அம்ம வாழி தோழி பல் மாண்
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணம் துறைவன் மறைஇ
அன்னை அரும் கடி வந்து நின்றோனே
# 116
அம்ம வாழி தோழி நாம் அழ
நீல இரும் கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று மன்ற
காலை அன்ன காலை முந்துறுத்தே
					மேல்
# 117
அம்ம வாழி தோழி நலனே
இன்னது ஆகுதல் கொடிதே புன்னை
அணி மலர் துறை-தொறும் வரிக்கும்
மணி நீர் சேர்ப்பனை மறவாதோர்க்கே
# 118
அம்ம வாழி தோழி யான் இன்று
அறன் இலாளன் கண்ட பொழுதில்
சினவுவென் தகைக்குவென் சென்றனென்
பின் நினைந்து இரங்கி பெயர்தந்தேனே
					மேல்
# 119
அம்ம வாழி தோழி நன்றும்
எய்யாமையின் ஏது இல பற்றி
அன்பு இலன் மன்ற பெரிதே
மென்_புல கொண்கன் வாராதோனே
# 120
அம்ம வாழி தோழி நலம் மிக
நல்ல ஆயின அளிய மென் தோளே
மல்லல் இரும் கழி மல்கும்
மெல்லம்புலம்பன் வந்த மாறே
					மேல்
# 13 கிழவற்கு உரைத்த பத்து
# 121
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
முண்டக கோதை நனைய
தெண் திரை பௌவம் பாய்ந்து நின்றோளே
# 122
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என
வெள்ளாங்குருகை வினவுவோளே
					மேல்
# 123
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப
தண்ணென் பெரும் கடல் திரை பாய்வோளே
# 124
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
வண்டல் பாவை வௌவலின்
நுண் பொடி அளைஇ கடல் தூர்ப்போளே
					மேல்
# 125
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
தெண் திரை பாவை வௌவ
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே
# 126
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உண்கண் வண்டு இனம் மொய்ப்ப
தெண் கடல் பெரும் திரை மூழ்குவோளே
					மேல்
# 127
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
தும்பை மாலை இள முலை
நுண் பூண் ஆகம் விலங்குவோளே
# 128
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உறாஅ வறு முலை மடாஅ
உண்ணா பாவையை ஊட்டுவோளே
					மேல்
# 129 கிடைக்காத பாடல்
# 130 கிடைக்காத பாடல்

# 14 பாணற்கு உரைத்த பத்து
# 131
நன்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி இ ஊர்
கல்லென் கௌவை எழாஅ_காலே
# 132
அம்ம வாழி பாண புன்னை
அரும்பு மலி கானல் இ ஊர்
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே
					மேல்
# 133
யான் எவன் செய்கோ பாண ஆனாது
மெல்லம்புலம்பன் பிரிந்து என
புல்லென்றன என் புரி வளை தோளே
# 134
காண்-மதி பாண இரும் கழி பாய் பரி
நெடும் தேர் கொண்கனோடு
தான் வந்தன்று என் மாமை கவினே
					மேல்
# 135
பைதலம் அல்லேம் பாண பணை தோள்
ஐது அமைந்து அகன்ற அல்குல்
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே
# 136
நாண் இலை மன்ற பாண நீயே
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த
கானல் அம் துறைவற்கு சொல் உகுப்போயே
					மேல்
# 137
நின் ஒன்று வினவுவல் பாண நும் ஊர்
திண் தேர் கொண்கனை நயந்தோர்
பண்டை தம் நலம் பெறுபவோ மற்றே
# 138
பண்பு இலை மன்ற பாண இ ஊர்
அன்பு இல கடிய கழறி
மென்_புல கொண்கனை தாராதோயே
					மேல்
# 139
அம்ம வாழி கொண்க எம்_வயின்
மாண் நலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே
# 140
காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியை
துறை கெழு கொண்கன் பிரிந்து என
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே
					மேல்
# 15 ஞாழ பத்து
# 141
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ
துவலை தண் துளி வீசி
பயலை செய்தன பனி படு துறையே
# 142
எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினை
புள் இறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே
					மேல்
# 143
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை
இனிய செய்த நின்று பின்
முனிவு செய்த இவள் தட மென் தோளே
# 144
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்
தனி குருகு உறங்கும் துறைவற்கு
இனி பசந்தன்று என் மாமை கவினே
					மேல்
# 145
எக்கர் ஞாழல் சிறியிலை பெரும் சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன் இனியே
# 146
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்ற என் மாமை கவினே
					மேல்
# 147
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன்
தண் தழை விலை என நல்கினன் நாடே
# 148
எக்கர் ஞாழல் இகந்து படு பெரும் சினை
வீ இனிது கமழும் துறைவனை
நீ இனிது முயங்குதி காதலோயே
					மேல்
# 149
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோ
# 150
எக்கர் ஞாழல் நறு மலர் பெரும் சினை
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான் அரும் புணர்வினனே
					மேல்
 



# 16 வெள்ள குருகு பத்து
# 151
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல்
கள் கமழ்ந்து ஆனா துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே		5
# 152
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
கையறுபு இரற்றும் கானல் அம் புலம்பு அம்
துறைவன் வரையும் என்ப
அறவன் போலும் அருளும்-மார் அதுவே	5
					மேல்
# 153
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
உளர ஒழிந்த தூவி குலவு மணல்
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை
நன் நெடும் கூந்தல் நாடுமோ மற்றே	5
# 154
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
கானல் சேக்கும் துறைவனோடு
யான் எவன் செய்கோ பொய்க்கும் இ ஊரே
					மேல்
# 155
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்கு
பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே	5
# 156
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப ஒழிந்த செம் மறு தூவி
தெண் கழி பரக்கும் துறைவன்
எனக்கோ காதலன் அனைக்கோ வேறே	5
					மேல்
# 157
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
காலை இருந்து மாலை சேக்கும்
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான்
தான் வந்தனன் எம் காதலோனே		5
# 158
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
கானல் அம் பெரும் துறை துணையொடு கொட்கும்
தண்ணம் துறைவன் கண்டிகும்
அம் மா மேனி எம் தோழியது துயரே	5
					மேல்
# 159
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப
நின் ஒன்று இரக்குவன் அல்லேன்
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே	5
# 160
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ
பண்டையின் மிக பெரிது இனைஇ
முயங்கு-மதி பெரும மயங்கினள் பெரிதே	5
					மேல்
# 17 சிறுவெண் காக்கை பத்து
# 161
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
கரும் கோட்டு புன்னை தங்கும் துறைவற்கு
பயந்த நுதல் அழிய சாஅய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே
# 162
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு
பூ கமழ் பொதும்பர் சேக்கும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே
					மேல்
# 163
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
இரும் கழி துவலை ஒலியின் துஞ்சும்
துறைவன் துறந்து என துறந்து என்
இறை ஏர் முன்கை நீங்கிய வளையே
# 164
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
இரும் கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணம் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது அலர் பயந்தன்றே
					மேல்
# 165
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
அறு கழி சிறு மீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல் என்
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே
# 166
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்
மெல்லம்புலம்பன் தேறி
நல்ல ஆயின நல்லோள் கண்ணே
					மேல்
# 167
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போல கூறி
நல்கான் ஆயினும் தொல் கேளன்னே
# 168
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
துறை படி அம்பி அகம்_அணை ஈனும்
தண்ணம் துறைவன் நல்கின்
ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே
					மேல்
# 169
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ்
புன்னை அம் பூ சினை சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை அறிந்தும்
என் செய பசக்கும் தோழி என் கண்ணே	5
# 170
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
இரும் கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
நல்லன் என்றி ஆயின்
பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ
					மேல்
# 18 தொண்டி பத்து
# 171
திரை இமிழ் இன் இசை அளைஇ அயலது
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணை தோள்
ஒண் தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளே
# 172
ஒண் தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
வண்டு இமிர் பனி துறை தொண்டி ஆங்கண்
உரவு கடல் ஒலி திரை போல
இரவினானும் துயில் அறியேனே
					மேல்
# 173
இரவினானும் இன் துயில் அறியாது
அரவு உறு துயரம் எய்துப தொண்டி
தண் நறு நெய்தல் நாறும்
பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரே
# 174
அணங்கு உடை பனி துறை தொண்டி அன்ன
மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்கு இழை
பொங்கு அரி பரந்த உண்கண்
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே
					மேல்
# 175
எமக்கு நயந்து அருளினை ஆயின் பணை தோள்
நன் நுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியோ மடந்தை
தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே
# 176
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டி
தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி
ஐது அமைந்து அகன்ற அல்குல்
கொய் தளிர் மேனி கூறு-மதி தவறே
					மேல்
# 177
தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்ற
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டு
முண்டக நறு மலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள் உற்றோரே
# 178
தோளும் கூந்தலும் பல பாராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன
என் கண்டு நயந்து நீ நல்கா_காலே
					மேல்
# 179
நல்கு-மதி வாழியோ நளி நீர் சேர்ப்ப
அலவன் தாக்க துறை இறா பிறழும்
இன் ஒலி தொண்டி அற்றே
நின் அலது இல்லா இவள் சிறு நுதலே
# 180
சிறு நனி வரைந்தனை கொண்மோ பெரு_நீர்
வலைவர் தந்த கொழு மீன் வல்சி
பறை தபு முது குருகு இருக்கும்
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே
					மேல்
# 19 நெய்தல் பத்து
# 181
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம்
துறை கெழு கொண்கன் நல்கின்
உறைவு இனிது அம்ம இ அழுங்கல் ஊரே		5
# 182
நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇ
கை புனை நறும் தார் கமழும் மார்பன்
அரும் திறல் கடவுள் அல்லன்
பெரும் துறை கண்டு இவள் அணங்கியோனே
					மேல்
# 183
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்
குறும் பொறை நாடன் நல் வயல் ஊரன்
தண் கடல் சேர்ப்பன் பிரிந்து என பண்டையின்
கடும் பகல் வருதி கையறு மாலை
கொடும் கழி நெய்தலும் கூம்ப		5
காலை வரினும் களைஞரோ இலரே
# 184
நெய்தல் இரும் கழி நெய்தல் நீக்கி
மீன் உண் குருகு_இனம் கானல் அல்கும்
கடல் அணிந்தன்று அவர் ஊரே
கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பே
					மேல்
# 185
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்
அரம் போழ் அம் வளை குறு_மகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியனே
# 186
நாரை நல் இனம் கடுப்ப மகளிர்
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ
பொங்கு கழி நெய்தல் உறைப்ப இ துறை
பல்_கால் வரூஉம் தேர் என
செல்லாதீமோ என்றனள் யாயே		5
					மேல்
# 187
நொதுமலாளர் கொள்ளார் இவையே
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும்
நெய்தல் அம் பகை தழை பாவை புனையார்
உடல்_அகம் கொள்வோர் இன்மையின்
தொடலைக்கு உற்ற சில பூவினரே	5
# 188
இரும் கழி சே_இறா இன புள் ஆரும்
கொற்கை கோமான் கொற்கை அம் பெரும் துறை
வைகறை மலரும் நெய்தல் போல
தகை பெரிது உடைய காதலி கண்ணே
					மேல்
# 189
புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியின் பொற்ப தோன்றும்
மெல்லம்புலம்பன் வந்து என
நல்லன ஆயின தோழி என் கண்ணே
# 190
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம்புலம்பன் மன்ற எம்
பல் இதழ் உண்கண் பனி செய்தோனே
					மேல்
# 20 வளை பத்து
# 191
கடல் கோடு செறிந்த வளை வார் முன்கை
கழி பூ தொடர்ந்த இரும் பல் கூந்தல்
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள்
வரை அர_மகளிரின் அரியள் என்
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே		5
# 192
கோடு புலம் கொட்ப கடல் எழுந்து முழங்க
பாடு இமிழ் பனி துறை ஓடு கலம் உகைக்கும்
துறைவன் பிரிந்து என நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தோழி என் வளையே
					மேல்
# 193
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும்
துறை கெழு கொண்க நீ தந்த
அறை புனல் வால் வளை நல்லவோ தாமே
# 194
கடல் கோடு அறுத்த அரம் போழ் அம் வளை
ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க
நன் நுதல் இன்று மால் செய்து என
கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே
					மேல்
# 195
வளை படு முத்தம் பரதவர் பகரும்
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள்
கெடல் அரும் துயரம் நல்கி
படல் இன் பாயல் வௌவிளே
# 196
கோடு ஈர் எல் வளை கொழும் பல் கூந்தல்
ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின்
தெண் கழி சே_இறா படூஉம்
தண் கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ
					மேல்
# 197
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே
புலம்பு கொள் மாலை மறைய
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே
# 198
வளை அணி முன்கை வால் எயிற்று அமர் நகை
இளையர் ஆடும் தளை அவிழ் கானல்
குறும் துறை வினவி நின்ற
நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே
					மேல்
# 199
கானல் அம் பெரும் துறை கலி திரை திளைக்கும்
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே
# 200
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின
பொலம் தேர் கொண்கன் வந்தனன் இனியே
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி
நலம் கவர் பசலையை நகுகம் நாமே 
					மேல்



குறிஞ்சி      கபிலர்

# 21 அன்னாய் வாழி பத்து
# 201
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் ஐ
தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின
பொன் வீ மணி அரும்பினவே
என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே
# 202
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர்
பார்ப்பன குறு_மக போல தாமும்
குடுமி தலைய மன்ற
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே
					மேல்
# 203
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலை கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே
# 204
அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்-கொல்
வரை அர_மகளிரின் நிரையுடன் குழீஇ
பெயர்வு_உழி பெயர்வு_உழி தவிராது நோக்கி
நல்லள் நல்லள் என்ப
தீயேன் தில்ல மலை கிழவோர்க்கே	5
					மேல்
# 205
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி
நனி நாண் உடையள் நின்னும் அஞ்சும்
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல்
துஞ்சிய வெய்யள் நோகோ யானே	5
# 206
அன்னாய் வாழி வேண்டு அன்னை உவ காண்
மாரி குன்றத்து காப்பாள் அன்னன்
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்
பாசி சூழ்ந்த பெரும் கழல்
தண் பனி வைகிய வரி கச்சினனே	5
					மேல்
# 207
அன்னாய் வாழி வேண்டு அன்னை நன்றும்
உணங்கல-கொல்லோ நின் தினையே உவ காண்
நிணம் பொதி வழுக்கில் தோன்றும்
மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே
# 208
அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர்
கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு
மணி நிற மால் வரை மறை-தொறு இவள்
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே	5	
					மேல்
# 209
அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்
கொண்டல் அவரை பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடி
தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றே	5
# 210
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
புலவு சேர் துறுகல் ஏறி அவர் நாட்டு
பூ கெழு குன்றம் நோக்கி நின்று
மணி புரை வயங்கு இழை நிலைபெற
தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே		5
					மேல்
# 22 அன்னாய் பத்து
# 211
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன
வயலை அம் சிலம்பின் தலையது
செயலை அம் பகை தழை வாடும் அன்னாய்
# 212
சாந்த மரத்த பூழில் எழு புகை
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய்
					மேல்
# 213
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த
ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர்
உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல்
மீமிசை நன் நாட்டவர் வரின்
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய்	5
# 214
சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம்
இரும் கல் விடர் அளை வீழ்ந்து என வெற்பில்
பெரும் தேன் இறாஅல் சிதறும் நாடன்
பேர் அமர் மழை கண் கலிழ தன்
சீர் உடை நன் நாட்டு செல்லும் அன்னாய்	5
					மேல்
# 215
கட்டளை அன்ன மணி நிற தும்பி
இட்டிய குயின்ற துறை வயின் செலீஇயர்
தட்டை தண்ணுமை பின்னர் இயவர்
தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும்
புதல் மலர் மாலையும் பிரிவோர்		5
இதனினும் கொடிய செய்குவர் அன்னாய்
# 216
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை
நெடும் புதல் கானத்து மட பிடி ஈன்ற
நடுங்கு நடை குழவி கொளீஇய பலவின்
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு
கொய்திடு தளிரின் வாடி நின்		5
மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய்
					மேல்
# 217
பெரு வரை வேங்கை பொன் மருள் நறு வீ
மான் இன பெரும் கிளை மேயல் ஆரும்
கானக நாடன் வரவும் இவள்
மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய்
# 218
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம்
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி
எழுதரு மழையின் குழுமும்
பெரும் கல் நாடன் வரும்-கொல் அன்னாய்	5
					மேல்
# 219
கரும் கால் வேங்கை மா தகட்டு ஒள் வீ
இரும் கல் வியல் அறை வரிப்ப தாஅம்
நன் மலை நாடன் பிரிந்து என
ஒண் நுதல் பசப்பது எவன்-கொல் அன்னாய்
# 220
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு
முயங்காது கழிந்த நாள் இவள்
மயங்கு இதழ் மழை கண் கலிழும் அன்னாய்
					மேல்
# 23 அம்ம வாழி பத்து
# 221
அம்ம வாழி தோழி காதலர்
பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய
நன் மா மேனி பசப்ப
செல்வல் என்ப தம் மலை கெழு நாடே
# 222
அம்ம வாழி தோழி நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன்
இன் இனி வாரா மாறு-கொல்
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே
					மேல்
# 223
அம்ம வாழி தோழி நம் மலை
வரை ஆம் இழிய கோடல் நீட
காதலர் பிரிந்தோர் கையற நலியும்
தண் பனி வடந்தை அச்சிரம்
முந்து வந்தனர் நம் காதலோரே		5
# 224
அம்ம வாழி தோழி நம் மலை
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில்
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய-மன்னால் அவர்க்கு இனி
அரிய ஆகுதல் மருண்டனென் யானே	5
					மேல்
# 225
அம்ம வாழி தோழி பைம் சுனை
பாசடை நிவந்த பனி மலர் குவளை
உள்ளகம் கமழும் கூந்தல் மெல் இயல்
ஏர் திகழ் ஒண்_நுதல் பசத்தல்
ஓரார்-கொல் நம் காதலோரே		5
# 226
அம்ம வாழி தோழி நம் மலை
நறும் தண் சிலம்பின் நாறு குலை காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி நின்
வன்பு உடை விறல் கவின் கொண்ட
அன்பு இலாளன் வந்தனன் இனியே	5
					மேல்
# 227
அம்ம வாழி தோழி நாளும்
நன் நுதல் பசப்பவும் நறும் தோள் நெகிழவும்
ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி
நம் பிரிந்து உறைந்தோர் மன்ற நீ
விட்டனையோ அவர் உற்ற சூளே		5
# 228
அம்ம வாழி தோழி நம் ஊர்
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன்
இரந்து குறை உறாஅன் பெயரின்
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே
					மேல்
# 229
அம்ம வாழி தோழி நாம் அழ
பல் நாள் பிரிந்த அறன் இலாளன்
வந்தனனோ மற்று இரவில்
பொன் போல் விறல் கவின் கொள்ளும் நின் நுதலே
# 230
அம்ம வாழி தோழி நம்மொடு
சிறுதினை காவலன் ஆகி பெரிது நின்
மென் தோள் நெகிழவும் திரு நுதல் பசப்பவும்
பொன் போல் விறல் கவின் தொலைத்த
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே	5
					மேல்
# 24 தெய்யோ பத்து
# 231
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப
இரும் பல் கூந்தல் திருந்து இழை அரிவை
திதலை மாமை தேய
பசலை பாய பிரிவு தெய்யோ
# 232
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க
ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே
அழல் அவிர் மணி பூண் நனைய
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ
					மேல்
# 233
வருவை அல்லை வாடை நனி கொடிதே
அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி
ஒல்லென இழிதரும் அருவி நின்
கல் உடை நாட்டு செல்லல் தெய்யோ
# 234
மின் அவிர் வயங்கு இழை ஞெகிழ சாஅய்
நன் நுதல் பசத்தல் ஆவது துன்னி
கனவில் காணும் இவளே
நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ
					மேல்
# 235
கையற வீழ்ந்த மை இல் வானமொடு
அரிது காதலர் பொழுதே அதனால்
தெரி இழை தெளிர்ப்ப முயங்கி
பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ
# 236
அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று
நன் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும்
இன்னா வாடையும் மலையும்
நும் ஊர் செல்கம் எழுகமோ தெய்யோ
					மேல்
# 237
காமம் கடவ உள்ளம் இனைப்ப
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின்
ஓங்கி தோன்றும் உயர் வரைக்கு
யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ
# 238
வார் கோட்டு வய தகர் வாராது மாறினும்
குரு மயிர் புருவை நசையின் அல்கும்
மாஅல் அருவி தண் பெரும் சிலம்ப
நீ இவண் வரூஉம்_காலை
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ		5
					மேல்
# 239
சுரும்பு உண களித்த புகர் முக வேழம்
இரும் பிணர் துறுகல் பிடி செத்து தழூஉம் நின்
குன்று கெழு நன் நாட்டு சென்ற பின்றை
நேர் இறை பணை தோள் ஞெகிழ
வாராய் ஆயின் வாழேம் தெய்யோ	5
# 240
அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ
பொறி வரி சிறைய வண்டு_இனம் மொய்ப்ப
சாந்தம் நாறும் நறியோள்
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ
					மேல்
# 25 வெறிப்பத்து
# 241
நம் உறு துயரம் நோக்கி அன்னை
வேலன் தந்தாள் ஆயின் அ வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறி எயிற்றோயே
# 242
அறியாமையின் வெறி என மயங்கி
அன்னையும் அரும் துயர் உழந்தனள் அதனால்
எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ்
ஆய் மலர் உண்கண் பசப்ப
சேய் மலை நாடன் செய்த நோயே	5
					மேல்
# 243
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறி என கூறும்
அது மனம் கொள்குவை அனை இவள்
புது மலர் மழை கண் புலம்பிய நோய்க்கே
# 244
அம்ம வாழி தோழி பன் மலர்
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்
என் பயம் செய்யுமோ வேலற்கு அ வெறியே
					மேல்
# 245
பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்து கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கே
# 246
வெறி செறித்தனனே வேலன் கறிய
கல் முகை வய புலி கழங்கு மெய்ப்படூஉ
புன் புலம் வித்திய புனவர் புணர்த்த
மெய்ம்மை அன்ன பெண்_பால் புணர்ந்து
மன்றில் பையுள் தீரும்		5
குன்ற நாடன் உறீஇய நோயே
					மேல்
# 247
அன்னை தந்தது ஆகுவது அறிவென்
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே
# 248
பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி
மலை வான் கொண்ட சினைஇய வேலன்
கழங்கினான் அறிகுவது என்றால்
நன்றால் அம்ம நின்ற இவள் நலனே
					மேல்
# 249
பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு
முருகு என மொழியும் வேலன் மற்று அவன்
வாழிய இலங்கும் அருவி
சூர் மலை நாடனை அறியாதோனே
# 250
பொய் படுபு அறியா கழங்கே மெய்யே
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம்
மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன்
ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள்
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே      5
					மேல்




# 26 குன்ற குறவன் பத்து
# 251
குன்ற குறவன் ஆர்ப்பின் எழிலி
நுண் பல் அழி துளி பொழியும் நாட
நெடு வரை படப்பை நும் ஊர்
கடு வரல் அருவி காணினும் அழுமே
# 252
குன்ற குறவன் புல் வேய் குரம்பை
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி தோழி விரை பெயல்
அரும் பனி அளைஇய கூதிர்
பெரும் தண் வாடையின் முந்து வந்தனனே		5
					மேல்
# 253
குன்ற குறவன் சாந்த நறும் புகை
தேம் கமழ் சிலம்பின் வரை_அகம் கமழும்
கானக நாடன் வரையின்
மன்றலும் உடையள்-கொல் தோழி யாயே
# 254
குன்ற குறவன் ஆரம் அறுத்து என
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்டு இமிர் சுடர் நுதல் குறு_மகள்
கொண்டனர் செல்வர் தம் குன்று கெழு நாட்டே
					மேல்
# 255
குன்ற குறவன் காதல் மட_மகள்
வரை அர_மகளிர் புரையும் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே
# 256
குன்ற குறவன் காதல் மட_மகள்
வண்டு படு கூந்தல் தண் தழை கொடிச்சி
வளையள் முளை வாள் எயிற்றள்
இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே
					மேல்
# 257
குன்ற குறவன் கடவுள் பேணி
இரந்தனன் பெற்ற எல் வளை குறு_மகள்
ஆய் அரி நெடும் கண் கலிழ
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே
# 258
குன்ற குறவன் காதல் மட_மகள்
அணி மயில் அன்ன அசை நடை கொடிச்சியை
பெரு வரை நாடன் வரையும் ஆயின்
கொடுத்தனெம் ஆயினோம் நன்றே
இன்னும் ஆனாது நன்_நுதல் துயரே	5
					மேல்
# 259
குன்ற குறவன் காதல் மட_மகள்
மன்ற வேங்கை மலர் சில கொண்டு
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி
தேம் பலி செய்த ஈர் நறும் கையள்
மலர்ந்த காந்தள் நாறி			5
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே
# 260
குன்ற குறவன் காதல் மட_மகள்
மென் தோள் கொடிச்சியை பெறற்கு அரிது தில்ல
பைம் புற படு கிளி ஒப்பலர்
புன்_புல மயக்கத்து விளைந்தன தினையே
					மேல்
# 27 கேழ பத்து
# 261
மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி
வன் கல் அடுக்கத்து துஞ்சும் நாடன்
எந்தை அறிதல் அஞ்சி-கொல்
அதுவே மன்ற வாராமையே
# 262
சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி
துறுகல் அடுக்கத்து துணையொடு வதியும்
இலங்கு மலை நாடன் வரூஉம்
மருந்தும் அறியும்-கொல் தோழி அவன் விருப்பே
					மேல்
# 263
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும்
குன்று கெழு நாடன் தானும்
வந்தனன் வந்தன்று தோழி என் நலனே
# 264
இளம் பிறை அன்ன கோட்ட கேழல்
களங்கனி அன்ன பெண்_பால் புணரும்
அயம் திகழ் சிலம்ப கண்டிகும்
பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே
					மேல்
# 265
புலி கொல் பெண்_பால் பூ வரி குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும்
குன்று கெழு நாடன் மறந்தனன்
பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே
# 266
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தலொடு
குறு கை இரும் புலி பொரூஉம் நாட
நனி நாண் உடைமையம் மன்ற
பனி பயந்தன நீ நயந்தோள் கண்ணே
					மேல்
# 267
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி
ஐவனம் கவரும் குன்ற நாடன்
வண்டு படு கூந்தலை பேணி
பண்பு இல சொல்லும் தேறுதல் செத்தே		5
# 268
தாஅய் இழந்த தழு வரி குருளையொடு
வள மலை சிறுதினை உணீஇய கானவர்
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும்
நன் மலை நாடன் பிரிதல்
என் பயக்கும்மோ நம் விட்டு துறந்தே		5
					மேல்
# 269
கேழல் உழுது என கிளர்ந்த எருவை
விளைந்த செறுவில் தோன்றும் நாடன்
வாராது அவண் உறை நீடின் நேர் வளை
இணை_ஈர்_ஓதி நீ அழ
துணை நனி இழக்குவென் மடமையானே		5
# 270
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில்
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்
புல்லென் குன்றத்து புலம்பு கொள் நெடு வரை
காணினும் கலிழும் நோய் செத்து
தாம் வந்தனர் நம் காதலோரே		5
					மேல்
# 28 குரக்கு பத்து
# 271
அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்
பல் பசு பெண்டிரும் பெறுகுவன்
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே
# 272
கரு விரல் மந்தி கல்லா வன் பறழ்
அரு வரை தீம் தேன் எடுப்பி அயலது
உரு கெழு நெடும் சினை பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்
வரும்_வரும் என்ப தோழி யாயே		5
					மேல்
# 273
அத்த செயலை துப்பு உறழ் ஒண் தளிர்
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும்
நன் மலை நாட நீ செலின்
நின் நயத்து உறைவி என்னினும் கலிழ்மே
# 274
மந்தி கணவன் கல்லா கடுவன்
ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன்
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி தோழி என்
மென் தோள் கவினும் பாயலும் கொண்டே	5
					மேல்
# 275
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட
யாம் நின் நயந்தனம் எனினும் எம்
ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே	5
# 276
மந்தி காதலன் முறி மேய் கடுவன்
தண் கமழ் நறை கொடி கொண்டு வியல் அறை
பொங்கல் இள மழை புடைக்கும் நாட
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ
கல் முகை வேங்கை மலரும்		5
நன் மலை நாடன் பெண்டு என படுத்தே
					மேல்
# 277
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாட நின் மொழிவல் என்றும்
பயப்ப நீத்தல் என் இவள்
கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே		5
# 278
சிலம்பின் வெதிரத்து கண்விடு கழை கோல்
குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய் தந்து
கண்டோர் தண்டா நலம் கொண்டனனே		5
					மேல்
# 279
கல் இவர் இற்றி புல்லுவன ஏறி
குளவி மேய்ந்த மந்தி துணையோடு
வரை மிசை உகளும் நாட நீ வரின்
கல் அகத்தது எம் ஊரே
அம்பல் சேரி அலர் ஆங்கட்டே		5
# 280
கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு
இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி சிறு கோல்
மதி புடைப்பது போல தோன்றும் நாட
வரைந்தனை நீ என கேட்டு யான்
உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே	5
					மேல்
# 29 கிள்ளை பத்து
# 281
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய பலவே ஒள் இழை
இரும் பல் கூந்தல் கொடிச்சி
பெரும் தோள் காவல் காட்டிய அவ்வே
# 282
சாரல் புறத்த பெரும் குரல் சிறுதினை
பேர் அமர் மழை கண் கொடிச்சி கடியவும்
சோலை சிறு கிளி உன்னு நாட
ஆர் இருள் பெருகின வாரல்
கோட்டு_மா வழங்கும் காட்டக நெறியே	5
					மேல்
# 283
வன்கண் கானவன் மென் சொல் மட_மகள்
புன்_புல மயக்கத்து உழுத ஏனல்
பைம் புற சிறு கிளி கடியும் நாட
பெரிய கூறி நீப்பினும்
பொய் வலை படூஉம் பெண்டு தவ பலவே	5
# 284
அளிய தாமே செ வாய் பைம் கிளி
குன்ற குறவர் கொய் தினை பைம் கால்
இருவி நீள் புனம் கண்டும்
பிரிதல் தேற்றா பேர் அன்பினவே
					மேல்
# 285
பின் இரும் கூந்தல் நன் நுதல் குற_மகள்
மென் தினை நுவணை உண்டு தட்டையின்
ஐவன சிறு கிளி கடியும் நாட
வீங்கு வளை நெகிழ பிரிதல்
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே		5
# 286
சிறுதினை கொய்த இருவை வெண் கால்
காய்த்த அவரை படு கிளி கடியும்
யாணர் ஆகிய நன் மலை நாடன்
புகர் இன்று நயந்தனன் போலும்
கவரும் தோழி என் மாமை கவினே	5
					மேல்
# 287
நெடு வரை மிசையது குறும் கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட
வல்லை மன்ற பொய்த்தல்
வல்லாய் மன்ற நீ அல்லது செயலே
# 288
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து
யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர்
மெல் இயல் கொடிச்சி காப்ப
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே
					மேல்
# 289
கொடிச்சி இன் குரல் கிளி செத்து அடுக்கத்து
பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என
காவலும் கடியுநர் போல்வர்
மால் வரை நாட வரைந்தனை கொண்மோ
# 290
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூ கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும் அவள் ஒப்பவும் படுமே
					மேல்
# 30 மஞ்ஞை பத்து
# 291
மயில்கள் ஆல குடிஞை இரட்டும்
துறுகல் அடுக்கத்ததுவே பணை தோள்
ஆய் தழை நுடங்கும் அல்குல்
காதலி உறையும் நனி நல் ஊரே
# 292
மயில்கள் ஆல பெரும் தேன் இமிர
தண் மழை தழீஇய மா மலை நாட
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீ நயந்து
நன் மனை அரும் கடி அயர
எம் நலம் சிறப்ப யாம் இனி பெற்றோளே	5
					மேல்
# 293
சிலம்பு கமழ் காந்தள் நறும் குலை அன்ன
நலம் பெறு கையின் என் கண்புதைத்தோயே
பாயல் இன் துணை ஆகிய பணை தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே	5
# 294
எரி மருள் வேங்கை இருந்த தோகை
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட
இனிது செய்தனையால் நுந்தை வாழியர்
நன் மனை வதுவை அயர இவள்
பின் இரும் கூந்தல் மலர் அணிந்தோயே	5
					மேல்
# 295
வருவது-கொல்லோ தானே வாராது
அவண் உறை மேவலின் அமைவது-கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை
இருவி இருந்த குருவி வருந்து_உற
பந்து ஆடு மகளிரின் படர்தரும்			5
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே
# 296
கொடிச்சி காக்கும் பெரும் குரல் ஏனல்
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட
நடுநாள் கங்குலும் வருதி
கடு மா தாக்கின் அறியேன் யானே
					மேல்
# 297
விரிந்த வேங்கை பெரும் சினை தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாட
பிரியினும் பிரிவது அன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே
# 298
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி
தான் எம் அருளாள் ஆயினும்
யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே
					மேல்
# 299
குன்ற நாடன் குன்றத்து கவாஅன்
பைம் சுனை பூத்த பகு வாய் குவளையும்
அம் சில் ஓதி அசை நடை கொடிச்சி
கண் போல் மலர்தலும் அரிது இவள்
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே		5
# 300
கொடிச்சி கூந்தல் போல தோகை
அம் சிறை விரிக்கும் பெரும் கல் வெற்பன்
வந்தனன் எதிர்ந்தனர் கொடையே
அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே 
					மேல்



பாலை       ஓதலாந்தையார்

# 31 செலவு அழுங்குவித்த பத்து
# 301
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர்
அரும் சுரம் செல்வோர் சென்னி கூட்டும்
அ வரை இறக்குவை ஆயின்
மை வரை நாட வருந்துவள் பெரிதே
# 302
அரும் பொருள் செய்_வினை தப்பற்கும் உரித்தே
பெரும் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்
செல்லாய் ஆயினோ நன்றே
மெல்லம்புலம்ப இவள் அழ பிரிந்தே
					மேல்
# 303
புது கலத்து அன்ன கனிய ஆலம்
போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம்
தண்ணிய இனிய ஆக
எம்மொடும் சென்மோ விடலை நீயே
# 304
கல்லா கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர் பத்தல் யானை வௌவும்
கல் அதர் கவலை செல்லின் மெல் இயல்
புயல்_நெடும்_கூந்தல் புலம்பும்
வய_மான் தோன்றல் வல்லாதீமே		5
					மேல்
# 305
களிறு பிடி தழீஇ பிற புலம் படராது
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்து
சுடர் தொடி குறு_மகள் இனைய
எனை பயம் செய்யுமோ விடலை நின் செலவே
# 306
வெல் போர் குருசில் நீ வியன் சுரம் இறப்பின்
பல் காழ் அல்குல் அம் வரி வாட
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே
					மேல்
# 307
ஞெலி கழை முழங்கு அழல் வய_மா வெரூஉம்
குன்று உடை அரும் சுரம் செலவு அயர்ந்தனையே
நன்று இல கொண்க நின் பொருளே
பாவை அன்ன நின் துணை பிரிந்து வருமே
# 308
பல் இரும் கூந்தல் மெல் இயலோள்-வயின்
பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர்
கால் எறுழ் ஒள் வீ தாஅய
முருகு அமர் மா மலை பிரிந்து என பிரிமே
					மேல்
# 309
வேனில் திங்கள் வெம் சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே நன்றும்
நின் நயந்து உறைவி கடும் சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாட நீ இறந்து செய் பொருளே		5
# 310
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்
இலங்கு வளை மென் தோள் இழை நிலை நெகிழ
பிரிதல் வல்லுவை ஆயின்
அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினே
					மேல்
# 32 செலவு பத்து
# 311
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்
ஆரிடை செல்வோர் ஆறு நனி வெரூஉம்
காடு இறந்தனரே காதலர்
நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே
# 312
அறம் சாலியரோ அறம் சாலியரோ
வறன் உண்ட ஆயினும் அறம் சாலியரோ
வாள் வனப்பு உற்ற அருவி
கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே
					மேல்
# 313
தெறுவது அம்ம நும் மகள் விருப்பே
உறு துயர் அவலமொடு உயிர் செல சாஅய்
பாழ்படு நெஞ்சம் படர் அட கலங்க
நாடு இடை விலங்கிய வைப்பின்
காடு இறந்தனள் நம் காதலோளே		5
# 314
அவிர் தொடி கொட்ப கழுது புகவு அயர
கரும் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும்
நீள் இடை அரும் சுரம் என்ப நம்
தோள் இடை முனிநர் சென்ற ஆறே	5
					மேல்
# 315
பாயல் கொண்ட பனி மலர் நெடும் கண்
பூசல் கேளார் சேயர் என்ப
இழை நெகிழ் செல்லல் உறீஇ
கழை முதிர் சோலை காடு இறந்தோரே
# 316
பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்த
தேர் அகல் அல்குல் அம் வரி வாட
இறந்தோர் மன்ற தாமே பிறங்கு மலை
புல் அரை ஓமை நீடிய
புலி வழங்கு அதர கானத்தானே		5
					மேல்
# 317
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டு
பைது அற வெந்த பாலை வெம் காட்டு
அரும் சுரம் இறந்தோர் தேஎத்து
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே
# 318
ஆய் நலம் பசப்ப அரும் படர் நலிய
வேய் மருள் பணை தோள் வில் இழை நெகிழ
நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து
ஓடு எரி நடந்த வைப்பின்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே	5
					மேல்
# 319
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்
மண் புரை பெருகிய மரம் முளி கானம்
இறந்தனரோ நம் காதலர்
மறந்தனரோ தில் மறவா நம்மே
# 320
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ
முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து
உருமுப்படு கனலின் இரு நிலத்து உறைக்கும்
கவலை அரும் சுரம் போயினர்
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே	5
					மேல்
# 33 இடைச்சுர பத்து
# 321
உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து
மொழிபெயர் பல் மலை இறப்பினும்
ஒழிதல் செல்லாது ஒண்_தொடி குணனே	5
# 322
நெடும் கழை முளிய வேனில் நீடி
கடும் கதிர் ஞாயிறு கல் பக தெறுதலின்
வெய்ய ஆயின முன்னே இனியே
ஒண் நுதல் அரிவையை உள்ளு-தொறும்
தண்ணிய ஆயின சுரத்து இடை யாறே	5
					மேல்
# 323
வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்கு
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும்
வெம் சுர கவலை நீந்தி
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே
# 324
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை
சிறிது கண்படுப்பினும் காண்குவென் மன்ற
நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர்
வேங்கை வென்ற சுணங்கின்
தேம் பாய் கூந்தல் மாஅயோளே		5
					மேல்
# 325
வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ
போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும்
வெம்பு அலை அரும் சுரம் நலியாது
எம் வெம் காதலி பண்பு துணை பெற்றே
# 326
அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது
மட மான் அம் பிணை மறியொடு திரங்க
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின்
இன்னா மன்ற சுரமே
இனிய மன்ற யான் ஒழிந்தோள் பண்பே	5
					மேல்
# 327
பொறி வரி தட கை வேதல் அஞ்சி
சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே
அன்ன ஆரிடையானும்
தண்மை செய்த இ தகையோள் பண்பே	5
# 328
நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய்
தண்ணிய ஆயினும் வெய்ய மன்ற
மடவரல் இன் துணை ஒழிய
கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே
					மேல்
# 329
ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை
வெம் முனை அரும் சுரம் நீந்தி நம்மொடு
மறுதருவது-கொல் தானே செறி தொடி
கழிந்து உகு நிலைய ஆக
ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே	5
# 330
வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி
வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவே
அழுத கண்ணள் ஆய் நலம் சிதைய
கதிர் தெறு வெம் சுரம் நினைக்கும்
அவிர் கோல் ஆய்_தொடி உள்ளத்து படரே		5
					மேல்
# 34 தலைவி இரங்கு பத்து
# 331
அம்ம வாழி தோழி அவிழ் இணர்
கரும் கால் மராஅத்து வைகு சினை வான் பூ
அரும் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள
இனிய கமழும் வெற்பின்
இன்னாது என்ப அவர் சென்ற ஆறே	5
# 332
அம்ம வாழி தோழி என்னதூஉம்
அறன் இல மன்ற தாமே விறல் மிசை
குன்று கெழு கானத்த பண்பு இல் மா கணம்
கொடிதே காதலி பிரிதல்
செல்லல் ஐய என்னாது அவ்வே		5
					மேல்
# 333
அம்ம வாழி தோழி யாவதும்
வல்லா-கொல்லோ தாமே அவண
கல் உடை நன் நாட்டு புள் இன பெரும் தோடு
யாஅம் துணை புணர்ந்து உறைதும்
யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வே	5
# 334
அம்ம வாழி தோழி சிறியிலை
நெல்லி நீடிய கல் காய் கடத்து இடை
பேதை நெஞ்சம் பின் செல சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
பல் இதழ் உண்கண் அழ பிரிந்தோரே	5
					மேல்
# 335
அம்ம வாழி தோழி நம்-வயின்
நெய்த்தோர் அன்ன செவிய எருவை
கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும்
காடு நனி கடிய என்ப
நீடி இவண் வருநர் சென்ற ஆறே		5
# 336
அம்ம வாழி தோழி நம்-வயின்
பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற
நின்றது இல் பொருள்_பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே
					மேல்
# 337
அம்ம வாழி தோழி நம்-வயின்
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனி இரும் குன்றம் சென்றோர்க்கு பொருளே
# 338
அம்ம வாழி தோழி சாரல்
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்
மலை உறு தீயில் சுர முதல் தோன்றும்
பிரிவு அரும் காலையும் பிரிதல்
அரிது வல்லுநர் நம் காதலோரே		5
					மேல்
# 339
அம்ம வாழி தோழி சிறியிலை
குறும் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடே
# 340
அம்ம வாழி தோழி காதலர்
உள்ளார்-கொல் நாம் மருள்_உற்றனம்-கொல்
விட்டு சென்றனர் நம்மே
தட்டை தீயின் ஊர் அலர் எழவே
					மேல்
# 35 இளவேனி பத்து
# 341
அவரோ வாரார் தான் வந்தன்றே
குயில் பெடை இன் குரல் அகவ
அயிர் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே
# 342
அவரோ வாரார் தான் வந்தன்றே
சுரும்பு களித்து ஆலும் இரும் சினை
கரும் கால் நுணவம் கமழும் பொழுதே
					மேல்
# 343
அவரோ வாரார் தான் வந்தன்றே
திணி நிலை கோங்கம் பயந்த
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே
# 344
அவரோ வாரார் தான் வந்தன்றே
நறும் பூ குரவம் பயந்த
செய்யா பாவை கொய்யும் பொழுதே
					மேல்
# 345
அவரோ வாரார் தான் வந்தன்றே
புது பூ அதிரல் தாஅய்
கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே
# 346
அவரோ வாரார் தான் வந்தன்றே
அம் சினை பாதிரி அலர்ந்து என
செம் கண் இரும் குயில் அறையும் பொழுதே
					மேல்
# 347
அவரோ வாரார் தான் வந்தன்றே
எழில் தகை இள முலை பொலிய
பொரி பூ புன்கின் முறி திமிர் பொழுதே
# 348
அவரோ வாரார் தான் வந்தன்றே
வலம் சுரி மராஅம் வேய்ந்து நம்
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே
					மேல்
# 349
அவரோ வாரார் தான் வந்தன்றே
பொரி கால் மா சினை புதைய
எரி கால் இளம் தளிர் ஈனும் பொழுதே
# 350
அவரோ வாரார் தான் வந்தன்றே
வேம்பின் ஒண் பூ உறைப்ப
தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே
					மேல்




# 36 வரவுரைத்த பத்து
# 351
அத்த பலவின் வெயில் தின் சிறு காய்
அரும் சுரம் செல்வோர் அருந்தினர் கழியும்
காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனி
பல் இதழ் உண்கண் மடந்தை நின்
நல் எழில் அல்குல் வாடிய நிலையே	5
# 352
விழு தொடை மறவர் வில் இட தொலைந்தோர்
எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர்
பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும்
வெம் சுரம் அரிய என்னார்
வந்தனர் தோழி நம் காதலோரே		5
					மேல்
# 353
எரி கொடி கவைஇய செம் வரை போல
சுடர் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம்
நீ இனிது முயங்க வந்தனர்
மா இரும் சோலை மலை இறந்தோரே
# 354
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை
மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன் வந்தனரே
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே
					மேல்
# 355
திருந்து இழை அரிவை நின் நலம் உள்ளி
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என
சொல்லாது பெயர்தந்தேனே பல் பொறி
சிறு கண் யானை திரிதரும்
நெறி விலங்கு அதர கானத்தானே		5
# 356
உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்
யானை பிணித்த பொன் புனை கயிற்றின்
ஒள் எரி மேய்ந்த சுரத்து இடை
உள்ளம் வாங்க தந்த நின் குணனே
					மேல்
# 357
குரவம் மலர மரவம் பூப்ப
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ
அழுங்குக செய் பொருள் செலவு என விரும்பி நின்
அம் கலிழ் மாமை கவின
வந்தனர் தோழி நம் காதலோரே		5
# 358
கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும்
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து
துடை-தொறும் துடை-தொறும் கலங்கி
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே
					மேல்
# 359
அரும் பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்து
பெரும் கல் அதர் இடை பிரிந்த_காலை
தவ நனி நெடிய ஆயின இனியே
அணி_இழை உள்ளி யாம் வருதலின்
நணிய ஆயின சுரத்து இடை ஆறே	5
# 360
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை
அரிய ஆயினும் எளிய அன்றே
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி
கடு மான் திண் தேர் கடைஇ
நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே		5
					மேல்
# 37 முன்னிலை பத்து
# 361
உயர் கரை கான்யாற்று அவிர் மணல் அகன் துறை
வேனில் பாதிரி விரி மலர் குவைஇ
தொடலை தைஇய மடவரல் மகளே
கண்ணினும் கதவ நின் முலையே
முலையினும் கதவ நின் தட மென் தோளே		5
# 362
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலை
சிறு கண் யானை உறு பகை நினையாது
யாங்கு வந்தனையோ பூ தார் மார்ப
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
இருள் பொர நின்ற இரவினானே		5
					மேல்
# 363
சிலை வில் பகழி செம் துவர் ஆடை
கொலை வில் எயினர் தங்கை நின் முலைய
சுணங்கு என நினைதி நீயே
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே
# 364
முளவு_மா வல்சி எயினர் தங்கை
இள மா எயிற்றிக்கு நின் நிலை அறிய
சொல்லினேன் இரக்கும் அளவை
வெல் வேல் விடலை விரையாதீமே
					மேல்
# 365
கண மா தொலைச்சி தன் ஐயர் தந்த
நிண ஊன் வல்சி படு புள் ஓப்பும்
நலம் மாண் எயிற்றி போல பல மிகு
நன் நலம் நய வரவு உடையை
என் நோற்றனையோ மாவின் தளிரே	5
# 366
அன்னாய் வாழி வேண்டு அன்னை தோழி
பசந்தனள் பெரிது என சிவந்த கண்ணை
கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம்
அறிய ஆகுமோ மற்றே
முறி இணர் கோங்கம் பயந்த மாறே	5
					மேல்
# 367
பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ
விரி இணர் வேங்கையொடு வேறு பட மிலைச்சி
விரவு மலர் அணிந்த வேனில் கான்யாற்று
தேரொடு குறுக வந்தோன்
பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிரே	5
# 368
எரி பூ இலவத்து ஊழ் கழி பன் மலர்
பொரி பூ புன்கின் புகர் நிழல் வரிக்கும்
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ பெரும நின்
அம்_மெல்_ஓதி அழிவு இலள் எனினே	5
					மேல்
# 369
வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில்
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறி நீ செய்தனை என்ப அலரே
குரவ நீள் சினை உறையும்
பருவ மா குயில் கௌவையில் பெரிதே	5
# 370
வண் சினை கோங்கின் தண் கமழ் படலை
இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்ப
நீ நயந்து உறையப்பட்டோள்
யாவளோ எம் மறையாதீமே
					மேல்
# 38 மகட் போக்கிய வழி தாயிரங்கு பத்து
# 371
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇ
சுர நனி இனிய ஆகுக தில்ல
அற நெறி இது என தெளிந்த என்
பிறை நுதல் குறு_மகள் போகிய சுரனே	5
# 372
என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை
நெஞ்சு உண தேற்றிய வஞ்சின காளையொடு
அழுங்கல் மூதூர் அலர் எழ
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே
					மேல்
# 373
நினை-தொறும் கலிழும் இடும்பை எய்துக
புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை
மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும்
வெம் சுரம் என் மகள் உய்த்த
அம்பு அமை வல் வில் விடலை தாயே	5
# 374
பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ
மீளி முன்பின் காளை காப்ப
முடி அகம் புகா கூந்தலள்
கடுவனும் அறியா காடு இறந்தோளே
					மேல்
# 375
இது என் பாவைக்கு இனிய நன் பாவை
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல்
காண்-தொறும் காண்-தொறும் கலங்க	5
நீங்கினளோ என் பூ கணோளே
# 376
நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்று
காடு படு தீயின் கனலியர் மாதோ
நல் வினை நெடு நகர் கல்லென கலங்க
பூ புரை உண்கண் மடவரல்
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே	5
					மேல்
# 377
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்ற என் மகளே
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே
# 378
செல்லிய முயலி பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலை யாம் புலம்ப
போகிய அவட்கோ நோவேன் தே_மொழி
துணை இலள் கலிழும் நெஞ்சின்
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுமே	5
					மேல்
# 379
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின்
இனிதாம்-கொல்லோ தனக்கே பனி வரை
இன களிறு வழங்கும் சோலை
வயக்கு_உறு வெள் வேலவன் புணர்ந்து செலவே
# 380
அத்த நீள் இடை அவனொடு போகிய
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே	5
					மேல்
# 39 உடன்போக்கின் கண் இடை சுரத்து உரைத்த பத்து
# 381
பைம் காய் நெல்லி பல உடன் மிசைந்து
செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர்
யார்-கொல் அளியர் தாமே வார் சிறை
குறும் கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கை காதலோரே	5
# 382
புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள் வெள் வேல்
திருந்து கழல் காளையொடு அரும் சுரம் கழிவோள்
எல் இடை அசைந்த கல்லென் சீறூர்
புனை இழை மகளிர் பயந்த
மனை கெழு பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதே	5
					மேல்
# 383
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற
நெடும் கால் மராஅத்து குறும் சினை பற்றி
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே
பஞ்சாய் பாவைக்கும் தனக்கும்			5
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே
# 384
சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்
நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர்
யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின
ஆரிடை இறந்தனள் என்-மின்
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே		5
					மேல்
# 385
கடுங்கண் காளையொடு நெடும் தேர் ஏறி
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய
வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் என
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள்
நல் தோள் நயந்து பாராட்டி			5
என் கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே
# 386
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம்
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே
நெடும் சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறுவி நின் கடும் சூல் மகளே
					மேல்
# 387
அறம் புரி அரு மறை நவின்ற நாவில்
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே
கண்டனெம் அம்ம சுரத்து இடை அவளை
இன் துணை இனிது பாராட்ட			5
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே
# 388
நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணிய
கரும் கால் யாத்து வரி நிழல் இரீஇ
சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடி
பொன் ஏர் மேனி மடந்தையொடு
வென் வேல் விடலை முன்னிய சுரனே		5
					மேல்
# 389
செய்வினை பொலிந்த செறி கழல் நோன் தாள்
மை அணல் காளையொடு பைய இயலி
பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை
சென்றனள் என்றிர் ஐய
ஒன்றினவோ அவள் அம் சிலம்பு அடியே		5
# 390
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது
பல் ஊழ் மறுகி வினவுவோயே
திண் தோள் வல் வில் காளையொடு
கண்டனெம் மன்ற சுரத்து இடை யாமே
					மேல்
# 40 மறுதரவு பத்து
# 391
மறு இல் தூவி சிறு_கரும்_காக்கை
அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆர
பச்சூன் பெய்த பைம் நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெம் சின விறல் வேல் காளையொடு		5
அம்_சில்_ஓதியை வர கரைந்தீமே
# 392
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி
பரியல் வாழி தோழி பரியின்
எல்லை இல் இடும்பை தரூஉம்
நல் வரை நாடனொடு வந்த மாறே		5
					மேல்
# 393
துறந்ததன் கொண்டு துயர் அட சாஅய்
அறம் புலந்து பழிக்கும் அளை கணாட்டி
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக
வந்தனளோ நின் மட_மகள்
வெம் திறல் வெள் வேல் விடலை முந்துறவே	5
# 394
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற
வெம் சுரம் இறந்த அம்_சில்_ஓதி
பெரு மட மான் பிணை அலைத்த
சிறு நுதல் குறு_மகள் காட்டிய வம்மே		5
					மேல்
# 395
முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரி
சுடர் விடு நெடும் கொடி விடர் முகை முழங்கும்
இன்னா அரும் சுரம் தீர்ந்தனம் மென்மெல
ஏகு-மதி வாழியோ குறு_மகள் போது கலந்து
கறங்கு இசை அருவி வீழும்			5
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே
# 396
புலி பொறி வேங்கை பொன் இணர் கொய்து நின்
கதுப்பு அயல் அணியும் அளவை பைபய
சுரத்து இடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை
கல் கெழு சிறப்பின் நம் ஊர்
எல் விருந்து ஆகி புகுகம் நாமே			5
					மேல்
# 397
கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளை பன்றி கொள்ளாது கழியும்
சுரம் நனி வாராநின்றனள் என்பது
முன் உற விரைந்த நீர் உரை-மின்
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே		5
# 398
புள்ளும் அறியா பல் பழம் பழுனி
மட மான் அறியா தட நீர் நிலைஇ
சுரம் நனி இனிய ஆகுக என்று
நினைத்-தொறும் கலிழும் என்னினும்
மிக பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே		5
					மேல்
# 399
நும் மனை சிலம்பு கழீஇ அயரினும்
எம் மனை வதுவை நன் மணம் கழிக என
சொல்லின் எவனோ மற்றே வெல் வேல்
மை அற விளங்கிய கழல் அடி
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே		5
# 400
மள்ளர் அன்ன மரவம் தழீஇ
மகளிர் அன்ன ஆடு கொடி நுடங்கும்
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில்
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல்
வெம் சின விறல் வேல் காளையொடு		5
இன்று புகுதரும் என வந்தன்று தூதே
					மேல்




முல்லை     பேயனார்

# 41 செவிலி கூற்று பத்து
# 401
மறி இடைப்படுத்த மான் பிணை போல
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல்_அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே		5
# 402
புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்பு உளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்பும்-மார் உடைத்தே
					மேல்
# 403
புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெரும் சிறப்பின் தந்தை_பெயரன்
முறுவலின் இன் நகை பயிற்றி
சிறு_தேர் உருட்டும் தளர் நடை கண்டே		5
# 404
வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட
தான் அவள் சிறுபுறம் கவையினன் நன்றும்
நறும் பூ தண் புறவு அணிந்த
குறும் பல் பொறைய நாடு கிழவோனே
					மேல்
# 405
ஒண் சுடர் பாண்டில் செம் சுடர் போல
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனை பெயல்
பூ பல அணிந்த வைப்பின்
புறவு அணி நாடன் புதல்வன் தாயே
# 406
மாதர் உண்கண் மகன் விளையாட
காதலி தழீஇ இனிது இருந்தனனே
தாது ஆர் பிரசம் ஊதும்
போது ஆர் புறவின் நாடு கிழவோனே
					மேல்
# 407
நயந்த காதலி தழீஇ பாணர்
நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து
இன்புறு புணர்ச்சி நுகரும்
மென்_புல வைப்பின் நாடு கிழவோனே
# 408
பாணர் முல்லை பாட சுடர் இழை
வாள் நுதல் அரிவை முல்லை மலைய
இனிது இருந்தனனே நெடுந்தகை
துனி தீர் கொள்கை தன் புதல்வனொடு பொலிந்தே
					மேல்
# 409
புதல்வன் கவைஇயினன் தந்தை மென் மொழி
புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்
இனிது மன்ற அவர் கிடக்கை
நனி இரும் பரப்பின் இ உலகுடன் உறுமே
# 410
மாலை முன்றில் குறும் கால் கட்டில்
மனையோள் துணைவி ஆக புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்ப
பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே
மென் பிணித்து அம்ம பாணனது யாழே	5
					மேல்
# 42 கிழவன் பருவம் பாராட்டு பத்து
# 411
ஆர் குரல் எழிலி அழி துளி சிதறி
கார் தொடங்கின்றால் காமர் புறவே
வீழ்தரு புது புனல் ஆடுகம்
தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே
# 412
காயா கொன்றை நெய்தல் முல்லை
போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினி
பூ அணி கொண்டன்றால் புறவே
பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்தே
					மேல்
# 413
நின் நுதல் நாறும் நறும் தண் புறவில்
நின்னே போல மஞ்ஞை ஆல
கார் தொடங்கின்றால் பொழுதே
பேர் இயல் அரிவை நாம் நய_தகவே
# 414
புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள
கோட்டவும் கொடியவும் பூ பல பழுனி
மெல் இயல் அரிவை கண்டிகும்
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே
					மேல்
# 415
இதுவே மடந்தை நாம் மேவிய பொழுதே
உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே
இனிது உடன் கழிக்கின் இளமை
இனிதால் அம்ம இனியவர் புணர்வே
# 416
போது ஆர் நறும் துகள் கவினி புறவில்
தாது ஆர்ந்து
களி சுரும்பு அரற்றும் காமர் புதலின்
மட பிடி தழீஇய மாவே
சுடர் தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே	5
					மேல்
# 417
கார் கலந்தன்றால் புறவே பல உடன்
ஏர் பரந்தனவால் புனமே ஏர் கலந்து
தாது ஆர் பிரசம் மொய்ப்ப
போது ஆர் கூந்தல் முயங்கினள் எம்மே
# 418
வானம்பாடி வறம் களைந்து ஆனாது
அழி துளி தலைஇய புறவின் காண்வர
வான் அர_மகளோ நீயே
மாண் முலை அடைய முயங்கியோயே
					மேல்
# 419
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மை
பிரிந்து உறல் அறியா விருந்து கவவி
நம் போல் நயவர புணர்ந்தன
கண்டிகும் மடவரல் புறவின் மாவே
# 420
பொன் என மலர்ந்த கொன்றை மணி என
தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு
நன் நலம் எய்தினை புறவே நின்னை
காணிய வருதும் யாமே
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே	5
					மேல்
# 43 விரவு பத்து
# 421
மாலை வெண் காழ் காவலர் வீச
நறும் பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும்
புன்_புல நாடன் மட_மகள்
நலம் கிளர் பணை தோள் விலங்கின செலவே
# 422
கடும் பரி நெடும் தேர் கால் வல் புரவி
நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர
விரையுபு கடைஇ நாம் செல்லின்
நிரை வளை முன்கை வருந்தலோ இலளே
					மேல்
# 423
மா மழை இடியூஉ தளி சொரிந்தன்றே
வாள் நுதல் பசப்ப செலவு அயர்ந்தனையே
யாமே நின் துறந்து அமையலம்
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே
# 424
புறவு அணி நாடன் காதல் மட_மகள்
ஒண் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர்
போது அவிழ் தாமரை அன்ன நின்
காதலன் புதல்வன் அழும் இனி முலைக்கே
					மேல்
# 425
புன் புற பேடை சேவல் இன்புற
மன்னர் இயவரின் இரங்கும் கானம்
வல்லை நெடும் தேர் கடவின்
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே
# 426
வென் வேல் வேந்தன் அரும் தொழில் துறந்து இனி
நன்_நுதல் யானே செலவு ஒழிந்தனனே
முரசு பாடு அதிர ஏவி
அரசு பட கடக்கும் அரும் சமத்தானே
					மேல்
# 427
பேர் அமர் மலர் கண் மடந்தை நீயே
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே
போர் உடை வேந்தன் பாசறை
வாரான் அவன் என செலவு அழுங்கினனே
# 428
தேர் செலவு அழுங்க திருவில் கோலி
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே
வேந்து விடு விழு தொழில் ஒழிய
யான் தொடங்கினனால் நின் புறந்தரவே
					மேல்
# 429
பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின்
செல்வேம் தில்ல யாமே செற்றார்
வெல் கொடி அரணம் முருக்கிய
கல்லா யானை வேந்து பகை வெலற்கே
# 430
நெடும் பொறை மிசைய குறும் கால் கொன்றை
அடர் பொன் என்ன சுடர் இதழ் பகரும்
கான் கெழு நாடன் மகளே
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே
					மேல்
# 44 புறவணி பத்து
# 431
நன்றே காதலர் சென்ற ஆறே
அணி நிற இரும் பொறை மீமிசை
மணி நிற உருவின தோகையும் உடைத்தே
# 432
நன்றே காதலர் சென்ற ஆறே
சுடு பொன் அன்ன கொன்றை சூடி
கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே
					மேல்
# 433
நன்றே காதலர் சென்ற ஆறே
நீர் பட எழிலி வீசும்
கார் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே
# 434
நன்றே காதலர் சென்ற ஆறே
மறி உடை மான் பிணை உகள
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே
					மேல்
# 435
நன்றே காதலர் சென்ற ஆறே
நிலன் அணி நெய்தல் மலர
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே
# 436
நன்றே காதலர் சென்ற ஆறே
நன் பொன் அன்ன சுடர் இணர்
கொன்றையொடு மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தே
					மேல்
# 437
நன்றே காதலர் சென்ற ஆறே
ஆலி தண் மழை தலைஇய
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே
# 438
நன்றே காதலர் சென்ற ஆறே
பைம் புதல் பல் பூ மலர
இன்புற தகுந பண்பும்-மார் உடைத்தே
					மேல்
# 439
நன்றே காதலர் சென்ற ஆறே
குருந்த கண்ணி கோவலர்
பெரும் தண் நிலைய பாக்கமும் உடைத்தே
# 440
நன்றே காதலர் சென்ற ஆறே
தண் பெயல் அளித்த பொழுதின்
ஒண் சுடர் தோன்றியும் தளவமும் உடைத்தே
					மேல்
# 45 பாசறை பத்து
# 441
ஐய ஆயின செய்யோள் கிளவி
கார் நாள் உருமொடு கையற பிரிந்து என
நோய் நன்கு செய்தன எமக்கே
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே
# 442
பெரும் சின வேந்தன் அரும் தொழில் தணியின்
விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ
இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்து
அருந்ததி அனைய கற்பின்
குரும்பை மணி பூண் புதல்வன் தாயே		5
					மேல்
# 443
நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறி சென்று
இலங்கு நிலவின் இளம் பிறை போல
காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல்
விண் உயர் அரண் பல வௌவிய
மண்_உறு முரசின் வேந்து தொழில் விடினே		5
# 444
பெரும் தோள் மடவரல் காண்குவெம் தில்ல
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை
வென் வேல் வேந்தன் பகை தணிந்து
இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே		5
					மேல்
# 445
புகழ் சால் சிறப்பின் காதலி புலம்ப
துறந்து வந்தனையே அரும் தொழில் கட்டூர்
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சம்
வல்லே எம்மையும் வர இழைத்தனையே		5
# 446
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள
நல்ல காண்குவம் மாஅயோயே
பாசறை அரும் தொழில் உதவி நம்
காதல் நன் நாட்டு போதரும் பொழுதே
					மேல்
# 447
பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலே
பனி வளர் தளவின் சிரல் வாய் செம் முகை
ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப
பாடு சான்ற காண்கம் வாள்_நுதலே
# 448
தழங்கு குரல் முரசம் காலை இயம்ப
கடும் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே
மெல் அவல் மருங்கின் முல்லை பூப்ப
பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே
அம்_சில்_ஓதியை உள்ளு-தொறும்			5
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே
					மேல்
# 449
முரம்பு கண் உடைய திரியும் திகிரியொடு
பணை நிலை முணைஇய வய_மா புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே
ஒண்_நுதல் காண்குவம் வேந்து வினை முடினே
# 450
முரசு மாறு இரட்டும் அரும் தொழில் பகை தணிந்து
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன்
வெய்ய உயிர்க்கும் நோய் தணிய
செய்யோள் இள முலை படீஇயர் என் கண்ணே
					மேல்





# 46 பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
# 451
கார் செய் காலையொடு கையற பிரிந்தோர்
தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது
மாற்று அரும் தானை நோக்கி
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே
# 452
வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி
கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே
பகை வெம் காதலர் திறை தரு முயற்சி
மென் தோள் ஆய் கவின் மறைய
பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே		5
					மேல்
# 453
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும்
வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உது காண்
கார் தொடங்கின்றால் காலை அதனால்
நீர் தொடங்கினவால் நெடும் கண் அவர்
தேர் தொடங்கு இன்றால் நம் வயினானே		5
# 454
தளவின் பைம் கொடி தழீஇ பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி
கார் நயந்து எய்தும் முல்லை அவர்
தேர் நயந்து உறையும் என் மாமை கவினே
					மேல்
# 455
அரசு பகை தணிய முரசு பட சினைஇ
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து
மின் இழை ஞெகிழ சாஅய்
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே		5
# 456
உள்ளார்-கொல்லோ தோழி வெள் இதழ்
பகல் மதி உருவின் பகன்றை மா மலர்
வெண் கொடி ஈங்கை பைம் புதல் அணியும்
அரும் பனி அளைஇய கூதிர்
ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே	5
					மேல்
# 457
பெய் பனி நலிய உய்தல் செல்லாது
குருகு_இனம் நரலும் பிரிவு அரும் காலை
துறந்து அமைகல்லார் காதலர்
மறந்து அமைகல்லாது என் மடம் கெழு நெஞ்சே
# 458
துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன
அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர்
பாணர் பெரு_மகன் பிரிந்து என
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே
					மேல்
# 459
மெல் இறை பணை தோள் பசலை தீர
புல்லவும் இயைவது-கொல்லோ புல்லார்
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை
வெல் போர் வேந்தனொடு சென்ற
நல் வயல் ஊரன் நறும் தண் மார்பே	5
# 460
பெரும் சின வேந்தனும் பாசறை முனியான்
இரும் கலி வெற்பன் தூதும் தோன்றா
ததை இலை வாழை முழு_முதல் அசைய
இன்னா வாடையும் அலைக்கும்
என் ஆகுவன்-கொல் அளியென் யானே	5
					மேல்
# 47 தோழி வற்புறுத்த பத்து
# 461
வான் பிசிர் கருவியின் பிடவு முகை தகைய
கான் பிசிர் கற்ப கார் தொடங்கின்றே
இனையல் வாழி தோழி எனையதூஉம்
நின் துறந்து அமைகுவர் அல்லர்
வெற்றி வேந்தன் பாசறையோரே		5
# 462
ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய
பேதை அம் கொன்றை கோதை நிலை நோக்கி
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின்_வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே	5
					மேல்
# 463
புதல் மிசை நறு மலர் கவின் பெற தொடரி நின்
நலம் மிகு கூந்தல் தகை கொள புனைய
வாராது அமையலோ இலரே நேரார்
நாடு படு நன் கலம் தரீஇயர்
நீடினர் தோழி நம் காதலோரே		5
# 464
கண் என கருவிளை மலர பொன் என
இவர் கொடி பீரம் இரும் புதல் மலரும்
அற்சிரம் மறக்குநர் அல்லர் நின்
நல் தோள் மருவரற்கு உலமருவோரே
					மேல்
# 465
நீர் இகுவு அன்ன நிமிர் பரி நெடும் தேர்
கார் செய் கானம் கவின் பட கடைஇ
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க
வருவர் வாழி தோழி
செரு வெம் குருசில் தணிந்தனன் பகையே		5
# 466
வேந்து விடு விழு தொழில் எய்தி ஏந்து கோட்டு
அண்ணல் யானை அரசு விடுத்து இனியே
எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல்
காமர் சுடர் நுதல் விளங்கும்
தே மொழி அரிவை தெளிந்திசின் யானே		5
					மேல்
# 467
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து
இனையல் வாழியோ இகுளை வினை_வயின்
சென்றோர் நீடினர் பெரிது என தங்காது
நம்மினும் விரையும் என்ப
வெம் முரண் யானை விறல் போர் வேந்தே		5
# 468
வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட
கார் தொடங்கின்றே காலை இனி நின்
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக
வடி மணி நெடும் தேர் கடைஇ
வருவர் இன்று நம் காதலோரே			5
					மேல்
# 469
பைம் தினை உணங்கல் செம்பூழ் கவரும்
வன்_புல நாடன் தரீஇய வலன் ஏர்பு
அம் கண் இரு விசும்பு அதிர ஏறொடு
பெயல் தொடங்கின்றே வானம்
காண்குவம் வம்மோ பூ கணோயே	5
# 470
இரு நிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்
அரும் பனி அளைஇய அற்சிர காலை
உள்ளார் காதலர் ஆயின் ஒள்_இழை
சிறப்பொடு விளங்கிய காட்சி
மறக்க விடுமோ நின் மாமை கவினே	5
					மேல்
# 48 பாணன் பத்து
# 471
எல் வளை நெகிழ மேனி வாட
பல் இதழ் உண்கண் பனி அலை கலங்க
துறந்தோன் மன்ற மறம் கெழு குருசில்
அது மற்று உணர்ந்தனை போலாய்
இன்னும் வருதி என் அவர் தகவே	5
# 472
கைவல் சீறியாழ் பாண நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே
எம்மின் உணரார் ஆயினும் தம்_வயின்
பொய் படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல் நோகோ யானே		5
					மேல்
# 473
பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளி
செலவு நீ நயந்தனை ஆயின் மன்ற
இன்னா அரும் படர் எம்_வயின் செய்த
பொய் வலாளர் போல
கைவல் பாண எம் மறவாதீமே		5
# 474
மை அறு சுடர் நுதல் விளங்க கறுத்தோர்
செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு
கதழ் பரி நெடும் தேர் அதர் பட கடைஇ
சென்றவர் தருகுவல் என்னும்
நன்றால் அம்ம பாணனது அறிவே	5
					மேல்
# 475
தொடி நிலை கலங்க வாடிய தோளும்
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன்
எம் வெம் காதலொடு பிரிந்தோர்
தம்மோன் போலான் பேர் அன்பினனே	5
# 476
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப
பருவம் செய்தன பைம் கொடி முல்லை
பல் ஆன் கோவலர் படலை கூட்டும்
அன்பு இல் மாலையும் உடைத்தோ
அன்பு இல் பாண அவர் சென்ற நாடே	5
					மேல்
# 477
பனி மலர் நெடும் கண் பசலை பாய
துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள்
கையறு நெஞ்சிற்கு உயவு துணை ஆக
சிறு வரை தங்குவை ஆயின்
காண்குவை-மன்னால் பாண எம் தேரே	5
# 478
நீடினம் என்று கொடுமை தூற்றி
வாடிய நுதலள் ஆகி பிறிது நினைந்து
யாம் வெம் காதலி நோய் மிக சாஅய்
சொல்லியது உரை-மதி நீயே
முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கே	5
					மேல்
# 479
சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய
நாடு இடை விலங்கிய எம்_வயின் நாள்-தொறும்
அரும் பனி கலந்த அருள் இல் வாடை
தனிமை எள்ளும் பொழுதில்
பனி மலர் கண்ணி கூறியது எமக்கே	5
# 480
நினக்கு யாம் பாணரேம் அல்லேம் எமக்கு
நீயும் குருசிலை அல்லை மாதோ
நின் வெம் காதலி தன் மனை புலம்பி
ஈர் இதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டும் அருளாதோயே		5
					மேல்
# 49 தேர் வியங்கொண்ட பத்து
# 481
சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல்
சே இழை மாதரை உள்ளி நோய் விட
முள் இட்டு ஊர்-மதி வலவ நின்
புள் இயல் கலி_மா பூண்ட தேரே
# 482
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக
வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல்
வென்று அடு தானை வேந்தனொடு
நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே
					மேல்
# 483
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே
வேந்து விட்டனனே மா விரைந்தனவே
முன் உற கடவு-மதி பாக
நன் நுதல் அரிவை தன் நலம் பெறவே
# 484
வேனில் நீங்க கார் மழை தலைஇ
காடு கவின் கொண்டன்று பொழுது பாடு சிறந்து
கடிய கடவு-மதி பாக
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே
					மேல்
# 485
அரும் படர் அவலம் அவளும் தீர
பெரும் தோள் நலம் வர யாமும் முயங்க
ஏ-மதி வலவ தேரே
மா மருண்டு உகளும் மலர் அணி புறவே
# 486
பெரும் புன் மாலை ஆனாது நினைஇ
அரும் படர் உழத்தல் யாவது என்றும்
புல்லி ஆற்றா புரையோள் காண
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின்
புள் இயல் கலி_மா பூண்ட தேரே		5
					மேல்
# 487
இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே
செறி_தொடி உள்ளம் உவப்ப
மதி உடை வலவ ஏ-மதி தேரே
# 488
கருவி வானம் பெயல் தொடங்கின்றே
பெரு விறல் காதலி கருதும் பொழுதே
விரி உளை நன் மா பூட்டி
பருவரல் தீர கடவு-மதி தேரே
					மேல்
# 489
அம் சிறை வண்டின் அரி_இனம் மொய்ப்ப
மென்_புல முல்லை மலரும் மாலை
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப
நுண் புரி வண் கயிறு இயக்கி நின்
வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே		5
# 490
அம்_தீம்_கிளவி தான் தர எம் வயின்
வந்தன்று மாதோ காரே ஆ வயின்
ஆய்_தொடி அரும் படர் தீர
ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே
					மேல்
# 50 வரவு சிறப்புரைத்த பத்து
# 491
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு
வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்தே
# 492
நின்னே போலும் மஞ்ஞை ஆல நின்
நன் நுதல் நாறும் முல்லை மலர
நின்னே போல மா மருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென்
நன் நுதல் அரிவை காரினும் விரைந்தே		5
					மேல்
# 493
ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்க
மாதர் மான் பிணை மறியொடு மறுக
கார் தொடங்கின்றே காலை
நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே
# 494
வண்டு தாது ஊத தேரை தெவிட்ட
தண் கமழ் புறவின் முல்லை மலர
இன்புறுத்தன்று பொழுதே
நின் குறி வாய்த்தனம் தீர்க இனி படரே
					மேல்
# 495
செம் நில மருங்கில் பன் மலர் தாஅய்
புலம்பு தீர்ந்து இனிய ஆயின புறவே
பின் இரும் கூந்தல் நன் நலம் புனைய
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சமொடு
முள் எயிற்று அரிவை யாம் வந்த மாறே		5
# 496
மா புதல் சேர வரகு இணர் சிறப்ப
மா மலை புலம்ப கார் கலித்து அலைப்ப
பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர்
தோள் துணை ஆக வந்தனர்
போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே		5
					மேல்
# 497
குறும் பல் கோதை கொன்றை மலர
நெடும் செம் புற்றம் ஈயல் பகர
மா பசி மறுப்ப கார் தொடங்கின்றே
பேர் இயல் அரிவை நின் உள்ளி
போர் வெம் குருசில் வந்த மாறே		5
# 498
தோள் கவின் எய்தின தொடி நிலை நின்றன
நீள் வரி நெடும் கண் வாள் வனப்பு உற்றன
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு என
விரை செலல் நெடும் தேர் கடைஇ
வரை_அக நாடன் வந்த மாறே		5
					மேல்
# 499
பிடவம் மலர தளவம் நனைய
கார் கவின் கொண்ட கானம் காணின்
வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது
வந்தனரால் நம் காதலர்
அம்_தீம்_கிளவி நின் ஆய் நலம் கொண்டே	5
# 500
கொன்றை பூவின் பசந்த உண்கண்
குன்றக நெடும் சுனை குவளை போல
தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர்
வியல் நெடும் பாசறை நீடிய
வய_மான் தோன்றல் நீ வந்த மாறே	5
					மேல்
   
அடிநேர் உரை
# பாரதம் பாடிய பெருந்தேவனார்
# 0 கடவுள் வாழ்த்து 

நீல நிற மேனியினளான தூய அணிகலன்கள் பூண்ட மங்கையை தன் இடப்பாகத்தில் வைத்த
ஒப்பற்ற ஒரே இறைவனின் இரண்டு திருவடிகளின் நிழலின் கீழ்
மேல், நடு, கீழ் என்ற மூவகை உலகங்களும் தோன்றின முறைப்படியே.

# மருதம்      ஓரம்போகியார்

#1 வேட்கை பத்து
#1
வாழ்க ஆதன்! வாழ்க அவினி!
நெல் பலவாக விளைக; பொன்வளம் பெரிதும் சிறப்பதாக
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
அரும்புகள் கொண்ட காஞ்சி மரமும், கருவுற்று முட்டைகளையுடைய சிறிய மீன்களும் வாழும்
புதுவருவாய் மிகுந்த ஊரினைச் சேர்ந்த எம் தலைவன் வாழ்க,
அவனது பாணனும் வாழ்க என்று வேண்டினோம்.
					மேல்
# 2
வாழ்க ஆதன்! வாழ்க அவினி!
விளைக வயல்நெல்; வருக இரவலர்
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
பலவான இதழ்களைக் கொண்ட நீலமலரோடு, நெய்தலும் ஒப்பாக விளங்கும்
குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் நட்பு
வழிவழியாகச் சிறந்து விளங்கட்டும் என்று வேண்டினோம்.
					மேல்
# 3
வாழ்க ஆதன்! வாழ்க அவினி!
பசுக்களிடம் பால் பெருமளவு சுரக்கட்டும்; காளைகள் பலவாகப் பெருகிச் சிறக்கட்டும்
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
விதைவிதைத்த உழவர்கள் அவை விளைந்ததால் மிகுந்த நெல்லோடு திரும்பும்
பூக்கள் நிரம்பிய ஊரினைச் சேர்ந்த தலைவனின் மனையற
வாழ்க்கை சிறந்து விளங்கட்டும் என்று வேண்டினோம்.
					மேல்
# 4
வாழ்க ஆதன்! வாழ்க அவினி!
பகைவர் தோற்றுப் புல்லரிசியை உண்க; பார்ப்பனர் தம் மறைகளை விடாமல் ஓதுக
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
நன்கு பூத்த கரும்புப் பயிரையும், காய்த்து விளைந்த நெற்பயிரையும் உடைய
வயல்வெளிகளைக் கொண்ட ஊரினைச் சேர்ந்த தலைவனின் மார்பானது
ஊர்ப்பொதுவான நீர்நிலையாகாமல் எமது தலைவிக்கே உரித்தாட்டும் என்று வேண்டினோம்.
					மேல்
# 5
வாழ்க ஆதன்! வாழ்க அவினி!
பசி என்பது இல்லாமல் ஆவதாக; நோய்கள் நெடுந்தொலைவுக்கு நீங்கிப் போவதாக
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
ஆண் முதலையானது முற்ற வளர்ந்த மீன்களை நிறைய உண்ணும்
குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் தேர் எமது
வீட்டின் முன்வாயிலிலேயே நீங்காது நிற்பதாக என்று வேண்டினோம்.
					மேல்
# 6
வாழ்க ஆதன்! வாழ்க அவினி!
வேந்தன் பகை தணிவானாக; அவன் வாழ்நாள் பல ஆண்டுகளுக்கு நீளுக
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
அகன்று விரிந்த பொய்கையில் மொட்டுகள் விட்டிருக்கும் தாமரையையுடைய
குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் மணம்பேசி வருக,
எம் தந்தையும் இவளை அவனுக்குக் கொடுக்கட்டும் என்று வேண்டினோம்.
					மேல்
# 7
வாழ்க ஆதன்! வாழ்க அவினி!
அறவினைகள் மிகுதியாகச் சிறந்து விளங்கட்டும்; அறம் அல்லாதன கெட்டொழியட்டும்
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
மேலே பஞ்சுபோன்ற நார்முடியைக் கொண்ட பூவினையுடைய மருதமரத்தில் தம் இனத்துடன் பறவைகள் இருக்கும்
குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் தனது ஊருக்கு
இவளை மணமுடித்து அழைத்துச் செல்லட்டும் என்று வேண்டினோம்.
					மேல்
# 8
வாழ்க ஆதன்! வாழ்க அவினி!
அரசன் செங்கோல்முறையில் அரசாளுக, களவும் இல்லாதன ஆகுக
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
அசைந்தாடும் கிளைகளையுடை மாமரத்தில் அழகான மயில்கள் இருக்கும்
பூக்கள் நிரம்பிய ஊரினைச் சேர்ந்த தலைவனின் சூளுரைகள் இப்போது
நிறைவாக வாய்த்து நிற்கட்டும் என்று வேண்டினோம்.
					மேல்
# 9
வாழ்க ஆதன்! வாழ்க அவினி!
நன்மையாவன அனைத்தும் பெரிதும் சிறக்கட்டும்; தீங்கு தருவன இல்லாமற் போகட்டும்
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
கயல்மீன்களை நிறைய உண்ட நாரை, நெற்போரில் சென்று தங்கும்
குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் நட்பு
பிறர் அறிவதால் பழிச்சொல் எழுப்பாதிருக்கட்டும் என்று வேண்டினோம்.
					மேல்
# 10
வாழ்க ஆதன்! வாழ்க அவினி!
மழை காலம் தவறாமல் பெய்யட்டும்; வளம் மிகுந்து சிறக்கட்டும்
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
பூத்த மாமரங்களையும், புலால் நாறும் சிறுமீன்களையும் உடைய
குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் மணம் முடித்து இவளைத் தன்னோடு
அழைத்துச் செல்லட்டும் என்று வேண்டினோம்.
					மேல்
# 2 வேழப்பத்து
# 11
வீட்டில் நடப்பட்ட வயலைக்கொடி வெளியிற் சென்று கொறுக்கச்சியைச் சுற்றிக்கொண்டிருக்கும்
துறையைப் பொருந்திய ஊரினைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமைக்கு நாணி
நல்லவன் என்று சொல்லுவோம் நாம்,
அவன் நல்லவனல்லன் என்று காட்டிவிடுகின்றன என் பெரிய மென்மையான தோள்கள்.
					மேல்
# 12
கரையைச் சேர்ந்து வளர்ந்திருக்கும் கொறுக்கச்சியானது கரும்பினைப் போல் பூக்கின்ற
துறையைப் பொருந்திய ஊரினைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமையினைப் பெரிதும்
பொறுத்துக்கொண்டிருப்போம் நாம்,
தோற்றுப்போய் மெலிந்துவிட்டன என் பெரிய மென்மையான தோள்கள்.
					மேல்
# 13
விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரையின் பொசுபொசுவென்ற தலையாட்டம் போன்ற
திண்ணிய கரையில் வளர்ந்திருக்கும் கொறுக்கச்சியின் வெண்மையான பூக்களைக் கொடுக்கும்
குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் காதற்பெண்டிர்
ஊரே தூங்கும் நள்ளிரவிலும் தூக்கத்தை அறியாதிருப்பர்.
					மேல்
# 14
நீண்ட பூவினையுடைய கொறுக்கச்சி தீண்டுவதால், அருகிலிருக்கும்
வடுப்பிடித்த மா மரத்தின் வளமையான தளிர்கள் மடங்கி அசையும்
அழகிய துறையையுடைய வீரனான தலைவனின் மார்பு
குளிர்ந்த துயிலையும் செய்கின்ற இனிய தன்மையுடையது.
					மேல்
# 15
மணலைக் கொண்டுசேர்க்கும் மிகுந்த வெள்ளத்தில், தாம் விரும்பிய ஒளிவிடும் தழையுடை அணிந்து
நீராடுகின்ற மகளிருக்கு சேர்ந்து நிற்கும் துணையாக அமைந்து உதவுகின்ற
கொறுக்கச்சி நிறைந்த பழமையான ஊரினைச் சேர்ந்த தலைவன்
இந்த ஊரைச் சேர்ந்தவன்தான் என்றாலும் நம் நெஞ்சைச் சேர்ந்தவன் ஆகான்.
					மேல்
# 16
ஓங்கி உயர்ந்து நிற்கும் பூவையுடைய கொறுக்கச்சியின் உள்துளையையுடைய திரண்ட தண்டினில்
சிறுமியரான ஏவல் மகளிர் கண்மையையை இட்டுவைத்திருக்கும்
மலர்கள் நிறைந்த ஊரினைச் சேர்ந்த தலைவனை நினைத்து
பூப் போன்ற மையுண்ட கண்கள் பொன்னைப் போர்த்தது போன்று மஞ்சள்பூத்துவிட்டன.
					மேல்
# 17
புதரின் மேல் அசைந்து ஆடும் கொறுக்கச்சியின் வெண்மையான பூ
விசும்பில் பறந்து செல்லும் கொக்கினைப் போலத் தோன்றும் ஊரினைச் சேர்ந்த தலைவன்
புதிய பெண்களை நாடிச்செல்கின்றவனாய்விட்டதால்
வற்றிப்போய்விட்டது என் இளமை பொருந்திய நெஞ்சம்.
					மேல்
# 18
கருந்தட்டான்கோரையைப் போன்ற பஞ்சாய்க்கோரையோடு கொறுக்கச்சியும்
கரும்பைப் போல காற்றினால் அலைக்கழிக்கப்படும் வயல்வெளிகளையுடைய ஊரைச் சேர்ந்த தலைவன்
அளவொத்த மலர்களைப் போன்ற என்னுடைய கண்கள் அழும்படியாக
பிரிந்து சென்றுவிட்டான் அல்லவா, உன்னைப் பிரியமாட்டேன் என்று கூறிவிட்டு.
					மேல்
# 19
மணல் மேட்டிலுள்ள மா மரத்தின் புதிதாகப் பூ விட்டிருக்கும் பெரிய கிளையை,
புதிதாய் மணமுடித்தாரின் மேனியைப் போன்று மணங் கமழும் குளிர்ந்த பொழிலில்
கொறுக்கச்சியின் வெள்ளைப் பூவின் தலையிலுள்ள வெண்மையான பஞ்சுமுடி துடைத்துவிடும்
ஊரைச் சேர்ந்த தலைவனாதலால், கலக்கமுற்று
மழைக்காலத்து மலர்களைப் போல கண்கள் கண்ணீர்த்துளிகளை உகுக்கும்.
					மேல்
# 20
ஆறு சிறிய கால்களைக் கொண்ட அழகிய சிறகுகளைக் கொண்ட தும்பி
நூறு இதழ்களையுடைய தாமரைப் பூவில் இட்ட முட்டைகளைத் துடைத்து அகற்றும்
மூங்கிலைப் பார்த்தது போன்ற உள்துளையையுடைய கொறுக்கச்சி நிறைந்த
துறையை அடுத்துள்ள ஊரினைச் சேர்ந்த தலைவனை நினைத்து என்னுடைய
முன்கையில் உள்ள அழகிய ஒளிரும் வளைகள் கழன்று ஓடுகின்றன.
					மேல்
# 3 கள்வன் பத்து
# 21
முள்ளிச் செடிகள் உயரமாக வளர்ந்துள்ள பழமையான நீரினைக் கொண்ட திண்ணிய கரையில்
புள்ளிகளைக் கொண்ட நண்டானது ஆம்பலின் தண்டினை அறுத்துச் செல்லும்
குளிர்ந்த துறையைக் கொண்ட ஊரைச் சேர்ந்த தலைவன் தெளிவித்தானெனினும்
மையுண்ட கண்கள் பசந்து வேறுபடுவது எதனால்? அன்னையே!
					மேல்
# 22
சேற்றில் துளாவித் திரிந்த புள்ளிகளையுடைய நண்டு
முள்ளிச் செடியின் வேர்ப்பகுதியில் உள்ள வளையில் சென்று தங்கும் ஊரினைச் சேர்ந்த தலைவன்
மனத்துக்கு உகப்பான சொற்களைச் சொல்லி மணந்துவிட்டு, இப்பொழுது
நீங்கமாட்டேன் என்று சொன்னது என்னாவாயிற்று? அன்னையே!

# 23
முள்ளிச் செடியின் வேர்ப்பக்கத்து வளையிலிருக்கும் நண்டினை அலைத்து விளையாடி,
பூக்களைக் கொய்து முடிக்கும் நீர்நிலைகளால் அழகுபெறும் ஊரினைச் சேர்ந்த தலைவன்
நல்லவற்றைக் கூரி நம்மைத் தெளிவித்துக் கூடிய பின்னர் இப்போது
தீண்டி வருத்தும் தெய்வமாக மாறிவிட்டது எதனால்? அன்னையே!
					மேல்
# 24
தன் தாய் சாகத் தான் பிறக்கும் புள்ளிகளையுடைய நண்டினோடு,
தான் ஈன்ற குட்டியையே தின்னும் முதலையையும் கொண்ட தன் ஊரின் தன்மையைத்
தானும் கொண்டுள்ளான் போலும் நம் தலைவன்? அவன்,
தம் பொன்னாலாகிய வளையல்கள் அசைந்தொலிக்கத் தன்னைத் தழுவியவர்களின்
பெண்மை நலத்தைத் துய்த்துவிட்டுப் பின்னர் அவர்களைத் துறப்பது எதனாலோ? அன்னையே!

# 25
மழையினால் பேணி வளர்க்கப்பட்ட இளமையான வளர்கின்ற பச்சையான காயையுடைய
வயலையின் சிவந்த கொடியை நண்டு அறுத்துச் செல்லும்
வயல்வெளியைக் கொண்ட ஊரினைச் சேர்ந்த தலைவனின் மார்பானது, பல பெண்டிருக்கு
அவரின் அணிகலன்களை நெகிழ்ந்துபோகச்செய்வதாகும் அன்னையே!
					மேல்
# 26
கரந்தைக் கொடி படர்ந்த அழகிய வயலில், தன் துணையைத் துறந்த நண்டு
வள்ளைக்கொடியில் மெல்லிய தண்டினை அறுத்துச்செல்லும் ஊரினைச் சேர்ந்த தலைவன்
எமது இயல்பையும் பிறரது இயல்பையும் அறியமாட்டான்;
அவன் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் என்ன? அன்னையே!

# 27
செந்நெல் விளைந்த அழகிய வயலில் கதிரினை அறுத்துக்கொண்டு, நண்டு
குளிர்ந்த உட்புறத்தைக் கொண்ட மண்ணினால் ஆன தன் அளையில் புகும் ஊரினைச் சேர்ந்தவனுக்காக
ஒளிரும் வளைகள் கழன்றுபோகும்படி மெலிந்து
துன்பத்தில் உழலுவது எதற்காகவோ? அன்னையே!
					மேல்
# 28
நீருண்ணும் துறையிலுள்ள தெய்வந்தான் இவளிடத்து இருக்கும் நோய்க்குக் காரணம் எனில்
குளிர்ந்த சேற்றிலுள்ள நண்டு தன் கொடுக்குகளால் கோலமிடும் ஊரினைச் சேர்ந்தவனுக்காக
ஒளிரும் தோள்வளைகள் கழன்றுபோகும்படி மெலிந்து
மென்மையான தோள்கள் பசந்துபோவது எதற்காக? அன்னையே!

# 29
மழையும் மிகுதியாகப் பெய்ய, காவலர்கள் தம் தொழிலில் விரைந்து செயல்பட
விதைத்த வெள்ளிய முளையை நண்டு அறுத்துச் செல்லும்
வயல்வெளியைக் கொண்ட ஊரினைச் சேர்ந்த தலைவனின் மார்பினை மிகவும் பொருந்தித் தழுவியும்
தேமல் படர்ந்த அல்குலையுடைய உனது மகள்
பசலை கொள்வது எதற்காக? அன்னையே!
					மேல்
# 30
வேம்பின் அரும்பைப் போன்ற நெடிய கண்களையுடைய நண்டின்
குளிர்ந்த உட்புறத்தைக் கொண்ட மண்ணினால் ஆன அளை நிறையும்படியாக நெல்லின்
பெரிய பூக்கள் உதிரும் ஊரினைச் சேர்ந்த தலைவனுக்காக, இவள்
தனது பெரிதான அழகை இழப்பது எதற்காக? அன்னையே!
					மேல்
# 4 தோழிக்கு உரைத்த பத்து
# 31
தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
தன் கடமை இல்லை என்று சொல்வானோ? நமது ஊரின்
வளைந்து முதிர்ந்த மருதமரங்களுள்ள பெரிய நீர்த்துறையில்
நம்மோடு நீராடிய தோழியரிடம் கூறிய சூளுரைகளைக் காப்பது -

# 32
தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
ஒரே ஒருநாள் நமது வீட்டுக்கு வந்ததற்காக, ஏழு நாட்கள்
அழுதிருந்தனர் என்று சொன்னார்கள், அவனது பரத்தைப் பெண்டிர்,
தீயில் பட்ட மெழுகைப் போல வெகு விரைவாக உள்ளம் உருகிப்போய் -
					மேல்
# 33
தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
மருதமரங்கள் உயர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கும் மலர்ந்த பூக்களைக் கொண்ட பெரிய துறையில்
தன் காதற்பெண்டிரோடு நீராடி இன்புறுவன் என்று சொல்கின்றனர், அவனது
குளிர்ந்த மாலையணிந்த மார்பினை ஒவ்வொருவராகப் பற்றிக்கொண்டு -

# 34
தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த உள்துளையுள்ள தண்டினையுடைய ஆம்பல் மலரின்
தாதுக்கள் போன்ற நிறத்தைக் கொண்டன,
நமக்கு அயலானாகிவிட்டவனுக்காகப் பசந்துபோன எனது கண்கள்.
					மேல்
# 35
தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்
நிறத்தைக் காட்டிலும் ஒளியுடையதாக இருந்து,
இப்போது பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு.

# 36
தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
நம்மை மறந்து இருப்பவனாயின், நாமும் அவனை மறந்து
அவனை நினைக்காமல் இருப்பதற்கு நம்மால் இயலும் உறுதியாக -
கயல் என்னும்படியான மையுண்ட கண்கள்
பசலை நோய்க்கு ஆட்பட்டு சோர்வடைந்து போகாதிருந்தால் -
					மேல்
# 37
தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
தன்னை விரும்பியவரின் மையுண்ட கண்கள் பசந்து போய் கண்ணீர் மல்கச் செய்வதில்
வல்லவன்; வல்லவன் அவன் பொய்சொல்லுவதிலும்;
தெளிவில்லாதவன், தான் செய்த சூளுரையை வாய்க்கச்செய்வதில் -

# 38
தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
தான் கூறிய வாக்குறுதிகளை நம்பியோரை நன்றாய் அறிந்திருக்கவில்லை, என்றைக்கும்
குளிர்ந்த மாந்தளிர் போன்ற மேனியையும்
ஒளிவிடும் வளையல்களை அணிந்த முன்கையையும் உடைய நாம் அழும்படி பிரிந்து செல்வதால் -
					மேல்
# 39
தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
நம்முடைய விரும்பத்தக்க முலைகளைத் தன் மார்போடு சேர்த்ணைத்துப் பின், நம்மிடமிருந்து
திருத்தமான அணிகலன்கள் கொண்ட பருத்த தோள்கள் மெலியும்படி
பிரிந்து சென்றானெனினும், அவன் பிரிந்தவன் அல்லன் - உறுதியாக

# 40
தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
ஒளிரும் வளையணிந்த முன்கைகளையுடைய நாம் அழும்படியாகப் பிரிந்து, தன்
காதற் கிழத்தியரின் ஊரில் நிலையாகத் தங்கிவிட்டான் என்கின்றனர் - இந்தக்
கெண்டை மீன்கள் தம் மீது பாய்வதால் கட்டவிழ்ந்துபோய்
வண்டுகளைப் பிடித்துக்கொள்ளும் ஆம்பல் மலர்கள் நிறைந்த நாட்டிற்குரியவன் -
					மேல்
# 5 புலவி பத்து
# 41
தான் ஈன்ற குட்டியையே தின்னும் அன்பற்ற முதலையோடு
வெண்மையான பூக்களையும் உடைய பொய்கையை உடையது தலைவனின் ஊர் என்பார்கள். அதனால்
தன்னுடைய சொல்லை நம்பியவரின் மேனியைப்
பொன் போன்ற பசலை அடையச் செய்விக்கிறான் இந்த ஊருக்குச் சொந்தக்காரன்.

# 42
கள்ளுண்ட களிப்பி மிகவும் பெருகியதால் அறிவு மயங்கி இருக்கிறாளோ,
புதுவருவாயையுடைய ஊரினனே, மாண்புடைய அணிகலன்களை அணிந்த உன் பரத்தை?
காவிரி ஆற்றின் பெருக்கெடுக்கும் வெள்ளம் போன்ற உன்னுடைய
மார்பினை மிகுதியாக விலக்கத் தொடங்கினாளே!
					மேல்
# 43
மரக்காலைப் போன்ற ஆமையின் முதுகில் ஏறி
சிறு செம்பைப் போன்ற குஞ்சுகள் பல தூங்கும்
புதுவருவாயினையுடைய ஊரனே! உன்னைக்காட்டிலும்
உன்னுடைய பாணன் பொய்சொல்லுபவன்; பலவிதமாக பொய்யான சூளுரைகளைச் சொல்பவன்.

# 44
இனிய நீரையுடைய பெரிய பொய்கையிலுள்ள ஆமையின் இளமையான குஞ்சு
தன் தாயின் முகத்தைப் பார்த்தே வளர்வதைப் போல,
அப்படிப்பட்டது, ஐயனே! தலைவிக்கு உன் மார்பு,
இதனை உணர்ந்து அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வாய், நல்லொழுக்கமும் அதுவே!
					மேல்
# 45
குளிர் காலத்தில் குளிர்ந்த கலங்கல் நீரைத் தந்து,
வேனில் காலத்தில் நீலமணி போன்ற நிறத்தைக் கொள்ளும்
ஆற்றினைக் கொண்டுள்ளது உனது ஊர்;
ஆனால் எப்போதும் பசலையைக் கொண்டுள்ளன, தலைவனே! எனது கண்கள்.

# 46
உனக்கு மட்டுமல்ல, அது எனக்குமே இனிதானதுதான்!
உன் மார்பினை விரும்பிய நல்ல நெற்றியையுடைய மங்கை
விரும்பிய குறிப்பின்படியே நீயும் நடந்து
இங்கு நீ வந்தருளுதலை விட்டு அங்கேயே தங்கிவிடுவது -
					மேல்
# 47
முள்ளைப் போன்ற கூர்மையான பற்களைக் கொண்ட பாண்மகள் இனிய கெடிற்று மீனைக் கொண்டுவந்து தந்த
அகன்ற பெரிய வட்டி நிறையும்படியாக, இல்லத்தரசிகள்
நெல்லறுத்த வயலில் விளைந்த பெரும்பயற்றை நிரப்பித்தருகின்ற ஊரைச் சேர்ந்த தலைவனே!
சிறந்த அணிகலன்கள் அணிந்த என் தோழியர் அறிவர் உன்னுடைய
பாணனைப் போல நீயும் பலவாறு பொய்கள் கூறுபவன் என்று.

# 48
வலைவீசி மீன் பிடிப்பதில் வல்ல பாண்மகனின் வெண்மையான பற்களைக் கொண்ட இளைய மகள்
வரால் மீனைக் கொண்டுவந்து தந்த வட்டியினுள் இல்லத்தரசிகள்
நெடுநாள் கழிந்த பழைய வெண்ணெல்லை நிறைத்துத்தரும் ஊரைச் சேர்ந்த தலைவனே!
வேண்டவில்லை பெருமானே! உன்னுடைய பரத்தை
அங்கு உன் மேனியில் செய்த குறிகளுடன் இங்கு நீ வருவதை -
					மேல்
# 49
அழகிய சிலவான கூந்தலையும், அசைந்தசைந்து நடக்கும் நடையையும் கொண்ட பாண்மகள்
சிறிதளவு மீனைக் கொண்டுவந்து தந்து பெருமளவு நெல்லைப் பெற்றுக்கொண்டு போகும்
புதிய வருவாயைக் கொண்ட ஊரனே! உன் பாண்மகன்
வேறு யார் நலமெல்லாம் சிதையும்படி பொய்கூறித் திரிவானோ, இனிமேல்?

# 50
உன்னைத் துணையாகக் கொண்டோரின் செல்வமும் நாங்களும் குன்றிப்போய் இருக்கிறோம்,
வஞ்சி மரங்கள் ஓங்கி வளர்ந்த புதுவருவாய் உள்ள ஊரனே!
உன்னைத் தஞ்சம் என்று கொள்வோருக்கு அருள்செய்யமாட்டாய் நீயே! உன்
நெஞ்சையே வாழுமிடமாய்ப் பெற்ற இவளும் அழுகின்றாள்.
					மேல்


 



# 6 தோழி கூற்று பத்து
# 51
நீரில் வாழும் சம்பங்கோழியின் நீல நிறச் சேவலை
கூர்மையான நகத்தைக் கொண்ட அதன் பேடை வேட்கை மிகுதியால் நினைக்கும் ஊரனே!
புளியங்காய்க்கு ஆசைப்பட்டது போன்றது அல்ல, உன்னுடைய
அகன்ற மார்பானது இவளின் வேட்கை நோய்க்கு -

# 52
வயலையின் சிவந்த கொடியைப் பிணைத்து மாலையாகக் கட்டியதால்
சிவந்த இவளின் விரல்கள் மேலும் சிவந்துபோனவளும், சிவந்த வரிகளைக் கொண்ட குளிர்ந்த கண்களையும்,
சிவந்த வாயையும் உடையவளுமான இந்த இளைய மகள், இவ்வாறு அழுதழுது நிற்க
எவ்விடத்திற்குப் போக முனைந்ததோ, தலைவனே! உனது தேர்?
					மேல்
# 53
இந்த நீர்த்துறையின் தெய்வம் எதற்காக என்னை வருத்தப்போகிறது? நான் உற்ற நோய்க்குக் காரணம்,
தடுப்புகளை உடைத்துக்கொண்டு புதிய நீர்ப்பெருக்கு பாய்வதால் கலங்கிப்போய்
கழனியில் உள்ள தாமரை மலரும்
நீர்நிலைகளையுடைய ஊரனே! நீ கூறிய பொய்யான வாக்குறுதிகளே!

# 54
திண்மையான தேரினையுடைய பாண்டியனின் நல்ல நாட்டில் உள்ள
கோடைக் காலத்திலும் குளிர்ந்த நீர் வழிந்தோடும்
தேனூரைப் போன்ற இவளின் தெரிந்தெடுத்த வளையல்கள் கழன்றுபோகுமாறு
ஊரிலிருந்தும் சேரியில் வாழும் பெருமானே! உன்னால் தேடிக்கொள்ளப்பட்டு வந்த
பஞ்சாய்க் கோரை மாலையணிந்த மகளிர்க்காக
அஞ்சுகிறேன், என்னுடைய அந்த நிலை வருமே என்று -
					மேல்
# 55
கரும்பினைப் பிழியும் எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும்
தேரினையும், வள்ளண்மையையும் கொண்ட பாண்டியனின் தேனூரைப் போன்ற இவளின்
நல்ல அழகை விரும்பிப் பாராட்டிப் பின்னர் நீ இவளைத் துறந்து செல்வதால்
பலரும் அறியும்படியாகப் பசந்துபோனது இவளின் நெற்றி.

# 56
பகலாக எரியும் விளக்குகளால், இரவுக்காலம் என்பதையே அறியாத
வெல்கின்ற போரையுடைய சோழரின் ஆமூரைப் போன்ற, இவளின்
அழகு பெற்ற ஒளிவிடும் நெற்றி வாடிப்போக,
என்ன பயனைத் தரும் நீ ஆறுதலாகக் கூறும் பொய்மொழிகள்?
					மேல்
# 57
பகலைப் போலத் தோன்றும் பல கதிர்களையுடைய வேள்வித்தீயையும்,
ஆம்பல் மலர்கள் உள்ள கொண்ட வயல்களையும் கொண்ட தேனூரைப் போல
இவளின் பெண்மை நலத்தைத் தனிமையில் வாடவிட்டுப் பிரிந்துசெல்ல
அந்த அளவுக்குப் பெருநலம் உடையவளோ, தலைவனே! உன் பரத்தை?

# 58
மலை போலக் குவித்த வெண்ணெல் அறுத்த கதிர்க்குவியல்களையும்,
கொடைத்தன்மையிலும் சிறந்த விரான் என்பானின் இருப்பை நகரைப் போன்ற
இவள்மீது காதல்வேட்கை பெருகித் துன்பப்பட்டாய் போலும்!
பிற மகளிர் மீதும் நீ அவ்வாறே இருக்கிறாய், வாழ்க நீ.
					மேல்
# 59
கேட்பாயாக! வாழ்க தலைவனே! ஆறுதலாக
உனது மயக்கங்கொண்ட நெஞ்சிற்கு, அதன் துன்பமெல்லாம் தீர,
இவளை உன்னிடம் சந்திக்கவைத்து, உனக்கு மருந்தாக அமைந்த நான், இப்போது
உன்னைப் பிரிந்துவாடும் இவளுக்கு மருந்தாக இருக்கமுடியாததை எண்ணி நோகின்றது என் நெஞ்சம்.

# 60
நீர்நிலைகளில் வாழும் சம்பங்கோழி, விருப்பத்தோடு தன்னை அழைக்கும் தன் பெடையை நோக்கிக் கூவுகின்ற
வயல்வெளிகளைக் கொண்ட ஊரனே! உன்னை ஒன்று கேட்பேன். எப்பொழுதும்
வீட்டிலுள்ளோர் தூங்கிக்கொண்டிருக்கும் பெரிய இல்லத்திற்கு வருகிறாய்;
அஞ்சமாட்டாயோ, இவளின் தந்தையின் கையிலுள்ள வேலுக்கு?
					மேல்

# 61
மணமுள்ள வடுக்களைக்கொண்ட மாமரத்தில் விளைந்து கனிந்து கீழே விழுகின்ற இனிய பழம்
ஆழமான நீரையுடைய பொய்கையில் துடும் என்று விழுகின்ற,
வள்ளண்மை உள்ள மத்தி என்பானின் கழார் என்னும் ஊரைப் போன்ற
நல்ல நல்ல பரத்தையரைத் தேடி
மணம் செய்துகொள்ள விரும்புகின்றாய் நீ.

# 62
இந்திர விழாவில் கூடுவதைப் போன்று, பூவைப் போன்ற,
புல்லிய தலையைக் கொண்ட பெண்மயில் வரிவரியான நிழலின்கீழிருந்து அகவுகின்ற
இந்த ஊரின் பரத்தை மகளிரை ஒன்றுசேர்த்துக்கொண்டு இனிமேல்
எந்த ஊரில் போய் நிற்கப்போகிறது தலைவனே, உனது தேர்?
					மேல்
# 63
பொய்கையில் வாழும் புலவு நாற்றத்தையுடைய நீர்நாயானது
வாளை மீனை தன் அன்றைய இரையாகப் பெறும் ஊரைச் சேர்ந்த தலைவனே!
என்னுடைய அழகெல்லாம் முற்றிலும் இல்லாமற்போனாலும்
நாடமாட்டோம் பெருமானே! பிற மகளிர் அணைந்திருந்த மார்பினை.

# 64
தன்னைச் சுற்றிச் சூழ்ந்தவராய் வரும் மகளிரோடு, விருப்பமுள்ள துணையைத் தழுவிக்கொண்டு
இன்பம் மிகுந்த புதிய வெள்ளத்தில் நீ ஆடுவதைக் கண்டவர்கள்
ஒருவரோ, இருவரோ அல்லர்
மிகப் பலராவர், என்னிடமிருந்து மறைக்கவேண்டாம்.
					மேல்
# 65
கரும்பு நட்ட பாத்தியில் தானாகச் செழித்து வளர்ந்த ஆம்பல் மலரில்
வண்டினங்கள் தம் பசியைப் போக்கிக்கொள்ளும் பெரிய நீர்வளத்தையுடைய ஊரனே!
அண்மையில் புதல்வனை ஈன்ற என் மேனியைத்
தழுவவேண்டாம், அதனால், தீம்பால் பட்டு, உன் மார்பின் அழகு குலைந்துபோகும்.

# 66
கோபங்கொள்ளமாட்டேன், பொய்சொல்லாமல் கூறு,
யார் அவள் தலைவனே? நீ தானாகத் தேருடன்,
வீட்டில் தளர் நடை போடும் உன் புதல்வனை எண்ணியவனாய், உன்
வளம் பொருந்திய வீட்டுக்கு வந்தபோது பின்னாலேயே வந்து உன்னைப் பற்றிக்கொண்டு போனவள்.
					மேல்
# 67
அறியாமையுடையவள், நீ இப்பொழுது கொண்டிருப்பவள்;
தன்னோடு ஒப்பிடமுடியாத என்னைத் தனக்கு ஒப்பாகக் கூறிக்கொண்டு
தன்னுடைய பெண்மைநலம் பெரிது என்று பெருமைபேசிக்கொண்டிருக்கிறாள் என்கிறார்கள்; மலர்ந்த மலரில்
பூந்தாதுக்களை உண்ணும் வண்டுகளைக் காட்டிலும் பலர் இருக்கிறார்கள்,
கூந்தல் தவழும், ஒளிவிடும் நெற்றியைப் பசந்துபோகச் செய்பவர்கள் -

# 68
உதயத்திற்கு முற்பட்ட அதிகாலை வேளையில் திரண்ட தண்டினையுடைய ஆம்பல்
தாமரையைப் போல மலரும் ஊரினைச் சேர்ந்த தலைவனே!
அடக்கமாய் இருக்கமாட்டாளோ உன் காதற்பரத்தை?
நானே என்னை அடக்கிக்கொண்டிருக்கும்போது, அவள் அடங்காமல் என்னைப் பழித்துக் கூறுகிறாள்.
					மேல்
# 69
நேராகவே பார்த்துவிட்டேன் தலைவனே! உன் காதற் பரத்தையை;
பலரும் நீராடும் பெரிய நீர்த்துறையில் மலர்களை அடித்துக்கொண்டு வந்த
குளிர்ந்த வெள்ளநீர், தன் மணல்வீட்டை அழித்துவிட்டதாகத்
தன் மையுண்ட கண்கள் சிவந்துபோகும்படி அழுதுகொண்டிருந்தாள்.

# 70
நீர்நிலைகளிலுள்ள பலவான மீன்களை உண்ட நாரை
வயல்வெளியிலுள்ள மருதமரத்தின் உச்சியில் சென்று தங்கும்
மிக்க நீரையுடைய பொய்கையினையும், புதுவருவாயையும் உடைய ஊரனே!
தூய்மையும், நறுமணமும் கொண்டவர் உன் காதற்பரத்தையர்,
பேயைப் போன்றவளாகிவிட்டேன் நான், ஒரு சேயைப் பெற்றதால்.
					மேல்
# 8 புனலாட்டு பத்து
# 71
வஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான
உனது விருப்பத்திற்குரிய காதலியைத் தழுவியவாறு நேற்று
மகிழ்ந்தாடியிருக்கிறாய் என்கிறார்கள் ஆற்றுவெள்ளத்தில், இதனால் எழுந்த பழிச்சொற்களை
மறைத்துவிட முடியுமா? தலைவனே!
புதைத்துவிட முடியுமா ஞாயிற்றின் ஒளியை?

# 72
வயலில் மலர்ந்த ஆம்பல் மலரால் தொடுக்கப்பட்டு மூட்டுவாய் அமைந்த அசைகின்ற தழையினையும்,
தேமல் படர்ந்த அல்குலில் அசைந்தாடும் கூந்தலையும்,
குவளை போன்ற மையுண்ட கண்களையும் அழகும் மென்மையும் பொருந்திய இயல்பினையும் உடைய தலைவி
மலர்களைச் சுமந்துகொண்டு பெருவெள்ளம் வந்தபோது
அந்தப் புனலில் விளையாடுகையில் தழுவி விளையாடும் துணையாக இருந்தாள் எனக்கு.
					மேல்
# 73
நிறமமைந்த ஒளியையுடைய தழையுடை அசையும்படி, தூய அணிகலன்களையும்
ஒளிபொருந்திய நெற்றியையும் உடைய தலைவி, நீர்விளையாட்டு ஆடினபோது
தேனையுடைய மணங்கமழும் குவளை மலரின் நறுமணமே கமழ்ந்து
மிகவும் குளிர்ச்சியுடையதாயிற்று பெரிய துறையின் நீர்முழுதும்.

# 74
வானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகை அழகைப் போல இருந்தது
பைம்பொன்னாலான ஒளிவிடும் அணிகலன்கள் மெல்லென ஒளிவீச,
கரையைச் சேர்ந்த மருதமரத்தில் ஏறி,
நீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல்.
					மேல்
# 75
(கண்டவர்)பலர், இங்கு ஒத்துக்கொள்ளமாட்டாய், அதனால்
பழிச்சொற்களைப் பேசத்தொடங்கிவிட்டது ஊர், மலர்களையுடைய
நெடுங்காலம் நிற்கும் மருதமரங்களைக் கொண்ட பெரிய துறையில்
உன்னோடு ஒருத்தி நீர்விளையாட்டு ஆடினாள் குளிர்ந்த நீர்ப்பெருக்கில், என்பதனைக் -

# 76
பஞ்சாய்க் கோரை போன்ற கூந்தலையும், புதிய மலர் போன்ற தேமலையும் கொண்டு,
குளிர்ந்த நீர்ப்பெருக்கில் ஆடித் தன்னுடைய பெண்மை நலத்தில் மேன்மையுற்றாள்
ஒளிரும் வளையல்களையும் இளைமையையும் கொண்ட அவள், உன்னுடன் -
வானவர் மகளிர்க்குத் தெய்வமே போன்று -
					மேல்
# 77
வாழ்க தலைவனே! உனக்கு ஒன்று சொல்வேன்!
இந்தப் பெரிய ஊரில் நம்மைப்பற்றிய பேச்சு எழும்படியாக, நீர் அலைத்தலால் கலங்கி
உன்னுடன் குளிர்ந்த நீர்ப்பெருக்கில் விளையாடுவேன்;
என்னுடன் வா, செல்லவேண்டாம் உன் வீட்டுக்கு.

# 78
ஒளியையுடைய இலை அமைந்த நெடிய வேலையும், விரைந்து செல்லும் குதிரையையும் உடைய கிள்ளியின்
பகைவரின் மதிலை அழிக்கின்ற யானையைப் போல விரைவாகத் தன் வழியிலே வந்த
அணையை அழிக்கின்ற புதிய நீர்ப்பெருக்கில் விளையாடலாம்,
என்னோடு சேர்ந்து பற்றிக்கொள்வாயாக, எனது தோளைப் போன்ற தெப்பத்தை.
					மேல்
# 79
புதிய நீர்ப்பெருக்கில் ஆடியதால் மாறுபட்டுத்தோன்றும் கண்களையுடையவள்
யாருடைய மகள் இவள் என்று கையைப் பற்றிய தலைவனே!
இவள் யார் மகளாயினும் நீ அறியமாட்டாய்!
நீ யாருடைய மகனோ? எம் கையைப் பற்றியிருப்பவனே!

# 80
கோபித்துக்கொள்ளமாட்டேன்! பொய்யில்லாமல் சொல்க!
அழகு நலத்தில் தகுதியுடைய மகளிர்க்கு உமது தோளைத் துணையாக ஆக்கி
முதல் மழையில் வந்த சிவந்த நீர்ப்பெருக்கில் ஆடி
மிக மிகச் சிவந்துபோயுள்ளன, தலைவனே! உனது கண்கள்.
					மேல்
# 9 புலவி விராய பத்து
# 81
நாரை உடைத்து உண்டு கழித்த வெள்ளை வயிற்றினைக் கொண்ட ஆமையின் தசையை
அரித்து எழும் ஓசையைக் கொண்ட பறையையுடைய உழவர்கள் தமக்கு வைத்துண்ணும் உணவாகக் கொண்டுச் செல்லும்
மலர்களால் அழகுபெற்ற நீர்த்துறை அமைந்த பொய்கையை உடைய ஊரைச் சேர்ந்தவனே! நீ
என்னைப் பெரிதும் விரும்புவதாகக் கூறுகிறாய்; உனது
மனைவி இதனைக் கேட்டால் வருந்துவாள் மிகவும்.

# 82
வெகுண்டாள் என்று கூறுகின்றனர், பாணனே! உனது தலைவியாகிய பரத்தை,
தலைவனது மார்பில் உள்ள கட்டவிழ்ந்த பூங்கொத்துகளோடு கூடிய மணமுள்ள மாலையில் மொய்த்த
தேனுண்ணும் வண்டுகள் வந்து எமது
மலரும் நிலையிலுள்ள மொட்டுக்கள் நிறைந்த என் கூந்தலிலும் இருந்தன என்பதற்கே!
					மேல்
# 83
என்னை நீ மணந்தாய், ஆயினும் என்மீது அருள்செய்யவில்லை; மெல்ல மெல்ல
என்னைவிட்டுப் பிரிந்தவனாகி வாழக்கடவாய்! உனது ஊரில் உள்ள
ஒளிவிடும் வளையல்களை அணிந்த முன்கையையுடைய பரத்தை மகளிரெல்லாம்
குளிர்ந்த துறையையுடைய ஊரனின் பெண்டுகள் என்று சொல்லப்படுவதற்காக -

# 84
காதால் கேட்டாலும் பேச்சிழக்குமளவுக்குப் பெருஞ்சினங்கொள்வோள்,
கண்ணால் கண்டால் என்ன ஆவாளோ?
நறிய மலரணிந்த கூந்தலையுடைய மகளிர் ஆடும்
தைமாதத்துக் குளிர்ந்த குளத்தைப் போன்று
பலரும் தழுவிக்கிடந்து நுகரும் உன் பரத்தமை அடையாளமுள்ள மார்பினை -
					மேல்
# 85
வெண்மையான நெற்றியையுடைய கம்புள் பறவையின் அரித்தெழும் குரலையுடைய பேடை
குளிர்ந்த நறிய நீர்நிலையில் தன் கிளைகளோடு மகிழ்ந்து ஆரவாரிக்கும்
குறை சொல்லமுடியாத புதுவருவாயை மிகுதியாகப் பொருந்திய ஊரனே! நீ
சிறுவரைப் போல இத்தகைய செயல்களைச் செய்கிறாய்!
நகைக்கமாட்டார்களோ பெருமானே! உன்னைக் கண்டவர்கள்?

# 86
வெண்மையான தலையையுடைய நாரை மென்மையாகப் பறந்துகொண்டே அழைக்கும் குரலானது
நீண்ட வயல்வெளியை அடைந்து ஒலிக்கும் ஊரினைச் சேர்ந்த தலைவனே!
எமக்கு இங்கு இன்பம் நல்குதல் அரிது;
உம்முடைய வீட்டுப் பெண்ணோடே ஒன்றுசேர்ந்து இருப்பாயாக.
					மேல்
# 87
பகன்றைப்பூ மாலையைத் தலையில் சூடியவரும், பல பசுக்களை மேய்ப்பவருமான கோவலர்கள்
தாம் கடித்துத் தின்னும் கரும்புத் தட்டையைக் கொண்டு மாங்கனிகளை உதிர்க்கும்
புதுவருவாயையுடைய ஊரனே! உன் மனைவி
யாரையுமே சினந்து பேசுவாள் - என்னை மட்டும் சும்மா விடுவாளா?

# 88
வளம் நிரம்பிய நீர்த்துறைகளில் யாவரும் விரும்பும் வளமையான மலர்கள் பூத்துள்ள பொய்கையின்
தண்ணிய நீர்த்துறையுள்ள ஊரைச் சேர்ந்தவனை, எமது தமக்கை என்னிடத்திற்கு
வரவேண்டும் என்று கூறுகிறாள்;
அதனை விரும்பமாட்டாதவள் போல் நான் அதனையே வேண்டுகிறேன்.
					மேல்
# 89
கேட்பாயாக! வாழ்க! பாணனே! எம் தமக்கைக்கு
எதற்காகப் பெரிதும் அருள்செய்கின்றான் என்கிறார்கள்? நீர்நிலைகளில்
வண்டுகள் தேனுண்ணும் ஊரைச் சேர்ந்த தலைவன்
மனைவி என்று அவளை விரும்பியது அவளின் நற்பண்புகளுக்காகமட்டும்தான்.

# 90
புதுப்புதுப் பெண்டிரை நாடிச் செல்லும் தலைவனின் சிறந்த குணத்தை வண்டுகள் பற்றிக்கொண்டனவோ?
புதுப்புதுப் மலர்களைத் தேடிச் செல்லும் வண்டுகளின் சிறந்த குணத்தைத் தலைவன் பற்றிக்கொண்டானோ?
அவன் குணம் அப்படிப்பட்டது என்பதனை அறியாள்,
என்னோடு கோபித்துக்கொள்ளும் அவனுடைய மகனின் தாய்.
					மேல்
# 10 எருமை பத்து
# 91
அலையலையாய் வளைந்திருக்கும் கொம்பினையுடைய எருமையின் கரிய பெரிய கடாவானது
மணம் மிக்க மலர்களையுடைய பொய்கையில் உள்ள ஆம்பலைச் சிதைத்தழிக்கும்
வயல்வெளிகளையுடைய ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள்
நீர்நிலைகளின் மூங்கிலான கரும்பின் நீண்டமைந்த மணமற்ற பூவினால் தொடுத்த மாலையையுடையவள்.

# 92
கரிய கொம்பினையுடைய எருமையின் சிவந்த கண்ணையுடைய அண்மையில் ஈன்ற பெண்ணெருமை
தன் அன்புக்குரிய கன்றினுக்குப் பால் சுரக்கும் தன் முலையைத் தந்து ஊட்டிவிடும்
உனது தந்தை இருக்கும் உன் ஊருக்கு வருகிறேன்,
ஒளிவிடும் வளையல்களை அணிந்த மடந்தையாகிய உன்னை நான் பெறுதல் கூடுமாயின்.
					மேல்
# 93
எருமையின் நல்ல கடாக்களின் கூட்டம் மேய்ந்து நிறைய உண்டுவிட்டதாக,
பசிய செங்கருங்காலியோடு, ஆம்பலும் தேனுண்ண ஒவ்வாமல்போய்விட்டன;
இனி செய்யத்தக்க செயலாகத் தேர்ந்து, பல பொழில்களிலும்
தேனுண்ணுவதை வெறுத்தனவாகி, இவளின்
அரும்பாக இருந்து அப்போதுதான் மலர்ந்த பூக்களுள்ள தலையுச்சியை மொய்க்கின்றன வண்டுக்கூட்டம்.

# 94
மள்ளரைப் போன்ற வலிய பெரிய கொம்புகளையுடைய எருமை
மகளிரைப் போன்ற துணையோடு சேர்ந்து தங்கியிருக்கும்
நிழல் செறிந்த வாவியினைக் கொண்ட நீர்நிலையில் இருப்பதுவே
வயல்வெளியில் தாமரை மலர்ந்திருக்கும்
அழகுபெற்ற ஒளிவிடும் நெற்றியையுடையவளின் தந்தையின் ஊர்.
					மேல்
# 95
கரிய கொம்பினையுடைய எருமை, தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக்கொண்டு சென்று,
நீண்ட கதிர்களையுடைய நெற்பயிரை அன்றைக்கு உணவாக மேய்ந்து வயிற்றை நிரப்பும்
நீர்வளம் சூழ்ந்த ஊரைச் சேர்ந்த தலைவன், பகல்பொழுதிலும்
படர்ந்து பெருகும் தீராத நோயைச் செய்தான் எனக்கு.

# 96
அழகான நடையைக் கொண்ட எருமை புரண்டெழுந்த சேற்றில்
மணி போன்ற நீல நிற நெய்தல் ஆம்பலுடன் செழித்து வளரும்
வயல்வெளியைக் கொண்ட ஊரினைச் சேர்ந்தவனின் மகளான இவள்
நீர்நிலைகள் சார்ந்த ஊரினைச் சேர்ந்தவனின் படுக்கைக்கு இனிய துணையாவாள்.
					மேல்
# 97
பகன்றையின் வெண்மையான மலர்கள் சுற்றியிருந்த கொம்பினைக்
கரிய கால்களையுடைய எருமைக் கன்று கண்டு அஞ்சும்
பொய்கை இருக்கும் ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள்
அந்தப் பொய்கையில் பூத்திருக்கும் பூவைக்காட்டிலும் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்டவள்.

# 98
குளிர்ந்த புனலில் நீராடிக் களிக்கும் பெரிய கொம்பினையுடைய எருமை
திண்ணிய பிணிப்புடன் செய்யப்பட்ட தோணியைப் போலத் தோன்றும் ஊரினனே!
ஒளிவிடும் வளையல்களை அணிந்த இளமையான மகளான இவளைக் காட்டிலும்
உன் தந்தையும் தாயும் கடுமையானவர்களோ, உன்னிடத்தில்.
					மேல்
# 99
நீர்நிலைகளை ஒட்டிப் படர்ந்திருக்கும் பாகல் கொடியில், முசுற்றெறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை
வயல்வெளிகளில் மேயும் எருமை, நெற்கதிரோடு சேர்த்து உழப்பிவிடும்,
பூக்கள் நெருக்கமாய் அமைந்துள்ள ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள்
என் காம நோய்க்கு மருந்தாக அமையும் பெருத்த தோள்களையுடையவள்.

# 100
நீர்ப்பெருக்கில் விளையாடும் பெண்கள் கழற்றி வைத்த ஒளிரும் அணிகலன்கள்
மணல் பரந்து மூடிக்கிடக்கும் உச்சியில் எருமை கிளைத்து வெளிப்படுத்தும்
புதுவருவாயையுடைய ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள்
பாணரின் யாழ்நரம்பு எழுப்பும் இசையிலும் இனிய சொற்களையுடையவள்.
					மேல்
 



நெய்தல்         அம்மூவனார்

# 11 தாய்க்கு உரைத்த பத்து
# 101
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! அதோ பாருங்கள்!
அழகிய கொடிகளையுடைய பசுமையான அடும்பு அற்றுப்போகும்படி ஏறி இறங்கி
நெய்தலையும் சிதைத்து வந்தது, உன் மகளின்
பூப் போன்ற மையுண்ட கண்களில் பொருந்திய
நோய்க்கு மருந்தாகிய தலைவனின் தேர்.
# 102
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் ஊரிலுள்ள
நீல நிறப் பெரும் கடலில் உள்ள பறவையைப் போல, இடைவிடாது
துன்புறுதலாகிய துயரம் நீங்கிப்போகுமாறு
இன்பம் எய்தும்படி ஒலிக்கிறது தலைவனின் தேரில் கட்டப்பட்டுள்ள மணியின் குரல்.
					மேல்
# 103
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையோடு
ஞாழலும் பூக்கும் குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன்
இவளுக்கு உரியவனாக அமைந்துவிட்டான்; எனவே
இவளிடம் நிலைத்துவிட்டது இவளது மாநிற மேனியழகு.
# 104
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் ஊரிலுள்ள
பலரும் தூங்கும் பொழுதில் தன் சிறப்பெல்லாம் மிகவும் மங்கிப்போய்
நடு இரவில் வந்த பண்புநலன் மிக்க தேரின்
செல்வனாகிய தலைவனின் புதல்வனது ஊர் அதுவாகும்.
					மேல்
# 105
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! முழக்கமிடும் கடலின்
அலைகள் கொண்டுவந்த முத்துக்கள் வெண்மணலில் கண்சிமிட்டிக்கிடக்கும்
குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன் மணம்பேசி வந்தான் என்றதும்
பொன்னைக்காட்டிலும் அழகாகச் சிவந்துபோனது, இதோ பார், இவளின் நெற்றி
# 106
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! தலைவனின் நாட்டிலுள்ள
தோலுறை போன்ற கால்களையுடைய அன்னமானது தன் துணை என எண்ணி மேலேறும்
குளிர்ந்த கடலின் சங்கினைக் காட்டிலும் வெளுத்துப்போய்த் தோன்றுகிறது இவளின்
அழகொழுகும் மேனி, இதோ பார், அவனை நினைத்து.
					மேல்
# 107
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! என் தோழியான தலைவி
தன் ஒளிவிடும் நெற்றி பசந்துபோக மெலிவடைந்து துன்பத்தால் வாடி
குளிர்ந்த கடலில் ஒலிக்கும் அலைகளைக் கேட்கும்போதெல்லாம்
உறங்காமல் கிடக்கிறாள்; வருந்துகிறேன் நான்.
# 108
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! கழியிலுள்ள
நீர்முள்ளிகள் மலர்ந்திருக்கும் குளிர்ந்த கடற்பகுதிக்குத் தலைவன்
என் தலைவியின் தோளைப் பிரிந்துவிடுவானாயின்,
அந்த அளவுக்கு இளப்பமானவைகளா, அவன் விரும்பிய தோள்கள்?
					மேல்
# 109
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நெய்தலின்,
நீரில் படர்ந்த உள்துளையுள்ள தண்டுகளில் பூக்கள் பொருந்தியிருக்கும் துறையைச் சேர்ந்தவன்
என் தலைவியின் தோளைத் துறந்துசென்ற காலத்தில், எப்படி
பல நாள்களுக்கு நெஞ்சில் தோன்றுகிறது அவன் பரிவுடன் நம்மை இன்புறச் செய்த காலங்கள்?
# 110
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையின்
பொன்னின் நிறத்தில் மலர்ந்திருக்கும் பூக்கள் பொருந்திய துறையைச் சேர்ந்தவனை
என் தலைவிக்குரிய தலைவன் என்று கொண்டிருக்கிறோம் நாங்கள்; இந்த ஊரோ
வேறு விதமாகக் கூறுகிறது;
அப்படியே செய்துவிடுமோ, அந்த நல்ல ஊழ்.
					மேல்
# 12 தோழிக்கு உரைத்த பத்து
# 111
கேட்பாயாக, தோழியே! பாணனானவன்
ஊரைச் சூழ்ந்துள்ள கழியின் பக்கத்திலிருந்து தூண்டிலில் இரையை மாட்டி
கருவுற்ற மீனைப் பிடித்துக்கொல்லும் துறையைச் சேர்ந்த தலைவனின் நட்பினைப்
பிரிந்தும் வாழ்வோமா? -
அவ்வாறு பிரியாமல் வாழ்வதற்கான அரிய தவத்தை மேற்கொள்ள இயலாதவராகிய நாம்.
# 112
கேட்பாயாக, தோழியே! பசிய இலைகளைக் கொண்ட
செருந்தி மரங்கள் பரவிய கரிய கழியினையுடைய தலைவன்
தாமே மணம்பேச வருவதைக் காண்போம் நாம்!
அவன் கூறிய உறுதிமொழிகளை மறந்துவிட்டோம், நாணம் நிறைந்த நெஞ்சினையுடைமையால்.
					மேல்
# 113
கேட்பாயாக, தோழியே! நேற்று,
உயர்ந்தெழும் கடலலைகள் வெள்ளிய மணல் மீது மோதி உடைக்கும் துறையைச் சேர்ந்தவனுக்கு
இந்த ஊரார் நான் காதலி என்று கூற, என்னைப்பற்றி,
அதனைக் கேட்டு அப்படிப்பட்டவளா நீ என்றாள் தாய்;
மெதுவாக, என்னையா? என்றேன் நான்.
# 114
கேட்பாயாக, தோழியே! நம் தலைவன்
நேரில் எதிர்ப்படவில்லையெனினும், நாம் போகலாமா,
கடலோரத்திலுள்ள நாரை ஓங்கிக் குரலெழுப்பும்
மடல்கள் உள்ள அழகிய பனைகளைக் கொண்ட அவனுடைய நாட்டிற்கு?
					மேல்
# 115
கேட்பாயாக, தோழியே! பல தடவை
நுண்மணல் செறிந்த கரையில் நம்மோடு விளையாடிய
குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன், இப்போது மறைந்துகொண்டு
அன்னையின் அரிய காவலையும் மீறி இங்கு வந்து நிற்கின்றான்.
# 116
கேட்பாயாக, தோழியே! நாம் அழும்படியாக
கரிய பெரிய கழியின் நீலமலர்கள் கூம்பிநிற்க
மாலைக்காலம் வந்துவிட்டது உறுதியாக,
காலைப் பொழுதைப் போன்ற ஒளிக்கதிர்களை முன்னால் அனுப்பிவிட்டு.
					மேல்
# 117
கேட்பாயாக, தோழியே! பெண்மை நலன்
இவ்வாறு சிதைந்து போதல் கொடியதாம்; புன்னைமரத்தின்
அழகான மலர்கள் துறைகள்தோறும் கோலமிட்டுக்கிடக்கும்
நீலமணி போன்ற நிறமுள்ள கடலையுடைய தலைவனை மறக்காமலிருப்போருக்கு -
# 118
கேட்பாயாக, தோழியே! நான் இன்று
அறநெறியில்லாத அந்தக் கொடியவனைக் காணும்பொழுது
வெகுண்டு ஊடிக்கொள்வேன், இனி வரவேண்டாம் என்று சொல்வேன் என்று எண்ணிக்கொண்டு சென்றேன்;
பின்னர் அவனை நினைந்து அவனுக்காக இரங்கி ஒன்றும் சொல்லாமல் மீண்டேன்.
					மேல்
# 119
கேட்பாயாக, தோழியே! திருமணத்திற்குரிய நல்ல வழிகளை
அறியாமையினால், அதற்கு ஏதுவானவைகளைத் தவிர மற்ற வழிகளைப் பற்றிக்கொண்டிருப்பதால்
நம்மீது அன்பு இல்லாதவன், தெளிவாக, பெரிதும் -
மென்புலமாகிய நெய்தல் நிலத்துக்குரிய தலைவன் - நம்மை மணந்துகொள்ள இன்னும் வராதவன் -
# 120
கேட்பாயாக, தோழியே! நலம் மிகப் பெற்று
நன்றாக ஆகிவிட்டன, இரங்கத்தக்க என் மென்மையான தோள்கள்!
வளமிக்க பெரிய கழியில் நீர் நிறைந்திருக்கும்
நெய்தற்புலத்துத் தலைவன் வந்ததனால் -
					மேல்
# 13 கிழவற்கு உரைத்த பத்து
# 121
கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
கழிமுள்ளிப் பூவால் தொடுத்த மாலை நனையும்படி,
தெளிந்த அலைகளையுடைய கடலில் பாய்ந்து நீராடியவளை -
# 122
கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
தனது ஒளிரும் அணிகலன்கள் உயர்ந்த மணல்மேட்டில் விழுந்துவிட்டதாக
வெள்ளாங்குருகைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்தவளை -
					மேல்
# 123
கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
ஒளிவிடும் நெற்றியையுடைய தன் தோழிமார் ஆரவாரிக்கக்
சில்லென்ற பெரிய கடல் அலைகளில் பாய்ந்துகொண்டிருந்தவளை -
# 124
கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
மணற்பாவையைக் கடலலை கவர்ந்துசெல்ல
நுண்ணிய குறுமணலை வாரியெடுத்துக் கடலை நோக்கி வீசிக் கடலைத் தூர்க்க முயல்கின்றவளை -
					மேல்
# 125
கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
தெளிந்த அலைகள் மணற்பாவையை அடித்துச் செல்ல
மையுண்ட கண்கள் சிவந்துபோகுமாறு அழுதுகொண்டு நின்றிருந்தவளை -
# 126
கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
மையுண்ட கண்களை மலரென்று வண்டினம் மொய்க்க,
தெளிவான கடலின் பெரிய அலைகளில் மூழ்கிக்கொண்டவளை -
					மேல்
# 127
கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
தும்பை மலரால் தொடுக்கப்பட்ட மாலையைத் தன் இளமையான முலைகள் அமைந்த
நுண்ணிய பூண்கள் அணிந்த மார்பினில் குறுக்காகப் போட்டிருந்தவளை -
# 128
கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
நன்கு வளராத வறிய தன் முலையை வாயில் வைத்து,
உண்ணாத பாவைக்கு ஊட்டிக்கொண்டிருந்தவளை -
					மேல்
# 129 கிடைக்காத பாடல்
# 130 கிடைக்காத பாடல்

# 14 பாணற்கு உரைத்த பத்து
# 131
நல்லதாக இருக்கும் பாணனே! தலைவனது நட்பு!
தில்லை மரங்களை வேலியாகக் கொண்ட இந்த ஊரில்
கல்லென்று எங்களைப் பற்றிய வீண்பேச்சு எழாதவரையில்.
# 132
வாழ்க பாணனே நீ! புன்னை மரத்தின்
அரும்புகள் மிகுந்திருக்கும் கடற்கரைச் சோலையைக் கொண்ட இந்த ஊரில்
அனைவரும் தூற்றும் பழிச்சொல்லாகி நிற்கிறது அவர் நமக்கு அருளும் அழகு!
					மேல்
# 133
நான் என்ன செய்வேன் பாணனே? பொறுக்கமாட்டாமல்
மென்னிலமான நெய்தல்நிலத் தலைவன் எம்மைவிட்டுப் பிரிந்துசென்றான் என்பதற்காக
சிறுத்துப்போய்விட்டன என் முறுக்குண்ட வளையைக் கொண்ட தோள்.
# 134
இங்கே பார் பாணனே! கரிய கழியோரத்தில் பாய்ந்து செல்லும் குதிரைகளைக் கொண்ட
நீண்ட தேரையுடைய தலைவன் வர, அவனோடு
தானும் வந்துவிட்டது என் மாநிற மேனியழகு.
					மேல்
# 135
வருத்தப்படமாட்டேன் பாணனே! மூங்கில் போன்ற தோள்களையும்,
மென்மையாக அமைந்து அகன்றிருக்கும் அல்குலையும் கொண்ட
நெய்தல் போன்ற அழகிய கண்களையுடையவளை நேரிலே காண நேர்ந்தாலும் -
# 136
உனக்கு வெட்கம் என்பது இல்லை, நிச்சயமாக, பாணனே! 
இறுகப்பிடித்த அழகிய ஒளிரும் வளையல்கள் நெகிழும்படி செய்த
கடற்கரைச் சோலையையுடைய அழகிய துறையைச் சேர்ந்தவனுக்காக நீ பரிந்து பேசுகிறாயே!
					மேல்
# 137
உன்னை ஒன்று கேட்பேன் பாணனே! உன் ஊரைச் சேர்ந்த
திண்ணிய தேரைக் கொண்ட தலைவனை விரும்பிய மகளிர்
முன்பு தாம் கொண்டிருந்த அழகைத் திரும்பப் பெறுவார்களோ?
# 138
நல்ல குணம் இல்லை நிச்சயமாக, பாணனே! இந்த ஊருக்கு -
அன்பில்லாத, கடுஞ் சொற்களைக் கூறி
அந்த மென்புல நாயகனை கூட்டிக்கொண்டு வராமலிருக்கின்ற உனக்கு -
					மேல்
# 139
வாழ்க நீ தலைவனே! என்னிடம் உள்ள
சிறந்த அழகினைப் பாராட்டி மயக்குமொழி பேசும் உன்னைக் காட்டிலும்
உன் பாணன் நல்ல மகளிர் பலரின் பெண்மை நலத்தைச் சிதைக்கவல்லான்.
# 140
இங்கே பார் பாணனே! இதை நீ சொல்லவேண்டியது உன் கடமை!
துறையைப் பொருந்திய தலைவன் பிரிந்து சென்றானாக,
என் இறங்கும் தோள்களைப் பொருந்திய ஒளிவிடும் வளைகள் கழன்று போன நிலையை -
					மேல்
# 15 ஞாழ பத்து
# 141
மணல் மேட்டினில் உள்ள ஞாழல் மரத்தின் பூ, செருந்திப்பூவுடன் கமழ்ந்திருக்க,
மழைத்தூவலாகக் குளிர்ந்த நீர்த்துளிகளை என் மேல் வீசி,
என்னைப் பசக்கும்படி செய்தன குளிர்ச்சியைத் தோற்றுவிக்கும் நீர்த்துறைகள்.
# 142
மணல்மேட்டிலுள்ள தாழ்வான பூங்கொத்துகள் மலர்ந்த கிளையினில்
பறவைகள் வந்து நெடும்பொழுது தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனை
நினைத்துப்பார்க்கமாட்டேன் தோழி! உறங்கிப்போகட்டும் என் கண்கள்.
					மேல்
# 143
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் பறவைகள் ஒலிக்கும் துறையானது
முதலில் இன்பமானவற்றைச் செய்தன; சிறிது காலங்கழித்து, பின்னர்
வெறுப்பையும் தருகின்றன இவளின் பெரிய மென்மையான தோள்கள்.
# 144
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் பூங்கொத்துள் தோன்றும் பொழிலில்
தனியே ஒரு நாரை உறங்கும் துறையைச் சேர்ந்தவனை எண்ணி,
இப்போது பசந்துபோகிறது என் மாநிற மேனியழகு.
					மேல்
# 145
மணல்மேட்டிலுள்ள ஞாழல் மரத்தின் சிறிய இலைகளைக் கொண்ட பெரிய கிளையைப்
பெருகிவரும் கடல்நீர் உள்ளிழுத்து வளைக்கும் துறையைச் சேர்ந்தவன்
மாமை நிறத்தவளின் பசலையை நீக்கினான் இப்போது.
# 146
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள்
நறுமணத்தோடு கமழும் துறையைச் சேர்ந்தவனுக்கு
இன்பமானது, உறுதியாக,  என் மாநிற மேனியழகு.
					மேல்
# 147
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் மலர்கள் இல்லாததால் மகளிர்
ஒளிரும் தழையுடையை மட்டும் அணிந்து கடல்நீராடும் துறையைச் சேர்ந்தவன்
உனது குளிர்ச்சியான தழையுடைக்கு விலையாகத் தந்தான் தன் நாட்டையே!
# 148
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் நீட்டிக்கொண்டு நிற்கும் பெரிய கிளையில்
மலர்கள் இனிமையாக மணங்கமழும் துறையைச் சேர்ந்தவனை
நீ இனிமையுடன் தழுவிக்கொள்வாய் காதல்கொண்டவளே!
					மேல்
# 149
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தின் பொன்னிறப் பூவைப் போன்ற
அழகுத்தேமல் படர்ந்திருக்கும் இளமையான முலைகள் உள்ள தலைவிக்கு
முதலில் அழகைப் பெருகச் செய்து, பின்னர் பிரிந்து செல்லத் துணியாதீர்!
# 150
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தின் நறிய மலரைகொண்ட பெரிய கிளையில்
ஆரவாரிக்கும் கடலைகள் மூழ்கியெழும் துறையைச் சேர்ந்தவன்
சேர்ந்திருக்கும்போதும் பிரிவின் நினைவால் துன்பத்தைத் தருபவன், அதுவும் என்றோ ஒருநாள்தான் வருகிறான்.
					மேல்
 



# 16 வெள்ள குருகு பத்து
# 151
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
மிதித்துவிட, சிரிக்கின்ற கண்போல் மலர்ந்த நெய்தல்
தேன் மணத்தை ஒழியாமல் பரப்பும் துறையைச் சேர்ந்தவனுக்காக
உடைந்துபோன என் நெஞ்சத்துடன் அவனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
# 152
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
செயலற்றுப்போய் ஓங்கிக் குரலெழுப்பும் கடற்கரைச் சோலையுடைய அழகிய நிலப்பகுதியின்
துறையைச் சேர்ந்தவன் தன் காதற்பரத்தையை மணந்துகொள்வான் என்பார்கள்;
அறநெஞ்சினன்தான் போலும்! அவனது அருட்பண்பும் அதுவேயாகும்.
					மேல்
# 153
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
தன் சிறகைக் கோதியதால் உதிர்ந்த இறகுகள் திரண்டுயர்ந்த மணல்
குவியலில் எடுத்துக்கொள்ளப்படும் துறையைச் சேர்ந்தவனின் உறவினை
நல்ல நெடிய கூந்தலையுடையவள் நாடுவாளோ?
# 154
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனோடு
நான் எதனைச் செய்வேன்? பொய்கூறுகிறது இந்த ஊர்!
					மேல்
# 155
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக,
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
சிறகடித்து அங்குமிங்கும் பறந்துதிரிவதால் சிதைந்துபோன நெய்தல் மலர், கழியின்
நீர்ப்பெருக்கு வழியும்போது அதனோடு செல்லும் துறையைச் சேர்ந்தவனுக்கு
நான் பஞ்சாய்க் கோரைப் பாவையாகிய பிள்ளையை ஏற்கனவே பெற்றுவிட்டேன்.
# 156
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
சிறகடித்து அங்குமிங்கும் பறந்துதிரிவதால் உதிர்துவிட்ட சிவந்த மறுவையுடைய இறகுகள்
தெளிந்த கழியின் நீரில் பரவலாய்க் கிடக்கும் துறையைச் சேர்ந்தவன்
என்னைப்பொருத்தமட்டிலும் அன்புடையவன்தான்! ஆனால் என் அன்னை போன்ற தலைவிக்கு அப்படி இல்லையே!
					மேல்
# 157
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
ககலையிலிருந்து மாலைவரை அங்கு தங்கியிருக்கும்
தெளிந்த நீரையுடைய கடலைச் சேர்ந்த தலைவனாகிய தன் தந்தையோடு வராமல்,
தானே தனியாக வந்தான் என் அன்புக்குரிய புதல்வன்.
# 158
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறையில் தன் துணையோடு சுற்றித்திரியும்
குளிர்ந்த அழகிய துறைவனே! சென்று காண்பாயாக!
அழகிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய எமது தோழியாகிய உன் பரத்தையின் துயரத்தை -
					மேல்
# 159
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
பசி தன்னை வாட்டவும் அங்கேயே தங்கியிருக்கும் குளிர்ந்த கடல்நீர்ப்பரப்பின் தலைவனே!
உன்னிடம் ஒன்றனைக் கேட்கிறேன், ஆனால் இரந்து கேட்கவில்லை!
தந்துவிட்டுச் செல், நீ எடுத்துக்கொண்ட இவளின் பெண்மைநலத்தை.
# 160
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
வருந்தியதற்கு மேலும் மிகுந்த துயரநோய் கொள்ளும் துறையைச் சேர்ந்தவனே!
உன் பரத்தை முன்னைக் காட்டிலும் மிகவும் பெரிதாக வருந்துவதால்
சென்று அவளைத் தழுவிக்கொள்க பெருமானே! மனம் குன்றிப்போனாள் பெரிதும்.
					மேல்
# 17 சிறுவெண் காக்கை பத்து
# 161
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
கரிய கிளைகளையுடைய புன்னையில் தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனுக்காகப்
பசந்துபோன நெற்றி தன் அழகழிந்து வாட,
அவனை விரும்பிய நெஞ்சமும் காமநோய்வாய்ப்பட்டதே!
# 162
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
நீந்துமளவுக்கு நீரைக் கொண்ட கரிய கழியில் தன் இரையைத் தேடி உண்டு
பூ மணக்கும் பொழிலில் தங்கியிருக்கும்
துறையைச் சேர்ந்தவனின் சொல்லோ பொய்த்துப் போயினவே!
					மேல்
# 163
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
கரிய கழியில் அலைகள் நீர்திவலைகளைத் தெறிக்கும் ஒலியைக் கேட்டுத் தூங்கும்
துறையைச் சேர்ந்த தலைவன் பிரிந்து சென்றானாக, கழன்று விழுந்தன என்
இறங்கிவரும் அழகிய முன்கையிலிருந்து நீங்கிய வளையல்கள்.
# 164
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
கரிய கழியின் ஓரத்தில் அயிரை மீனை நிறைய உண்ணும்
குளிர்ச்சியான அழகிய துறையைச் சேர்ந்தவனின் தகுதியானது
நம்மை வருத்துவதோடு மட்டும் நில்லாமல், ஊரே பேசும் பழிச் சொல்லையும் உண்டாகிவிட்டது.
					மேல்
# 165
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
வற்றிக்கொண்டுவரும் கழியில் சிறிய மீன்களை வயிறார விரைந்துண்ணும்
துறையைச் சேர்ந்தவன் சொன்ன சொல் என்
இறங்கி வரும் தோள்களின் அழகிய ஒளிவிடும் வளையல்களைக் கழற்றிக்கொண்டுபோய்விட்டது.
# 166
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
வரிகளையுடைய வெண்மையான சோழிகளைக் கண்டு வலையோ என்று எண்ணி வெருளும்
மென்மையான நெய்தல்நிலத் தலைவனின் சொற்களை நம்பி
தம் நலம் இழந்தனவாயின இந்த நல்லவளின் கண்கள்.
					மேல்
# 167
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
கரிய கழியில் கூட்டமான கெடிற்றுமீன்களை நிறைய உண்ணும் துறையைச் சேர்ந்தவன்
முன்னர் விரும்பி அன்புசெய்பவன் போல இனிய மொழிகளைக் கூறி,
இப்போது அன்புசெய்யானாயினும் நெடுங்காலம் நம்மீது நட்புக்கொண்டவனல்லவோ?
# 168
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
துறையில் கிடக்கும் தோணியின் உள்கட்டைக்குள் கூடுகட்டி முட்டையிடும்
குளிர்ச்சியான அழகிய துறையைச் சேர்ந்தவன் விரும்பி அன்புசெய்தால்
ஒளிரும் நெற்றியை உடைய இந்தப் பெண் பால் மிக அருந்தும்.
					மேல்
# 169
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
பொன்னைப் போன்ற பூங்கொத்துக்களையுடைய ஞாழல் மரத்தை வெறுத்தால், அரும்புகள் மலர்ந்த
புன்னையின் அழகிய பூக்களைக் கொண்ட கிளையில் வந்து தங்கும் துறையைச் சேர்ந்தவனின்
நெஞ்சத்தில் இருக்கும் உண்மையான எண்ணத்தை அறிந்திருந்தும்
என்னத்திற்காகப் பசந்திருக்கின்றன தோழியே! என் கண்கள்?
# 170
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
கரிய கழியில் பூத்திருக்கும் நெய்தல் மலரைச் சிதைக்கும் துறையைச் சேர்ந்த தலைவன்
நல்லவன் என்று சொல்கிறாய், எனினும்
பல இதழ்களைக் கொண்ட மலர் போன்ற என் மையுண்ட கண்கள் பசப்பது எதனாலோ?
					மேல்
# 18 தொண்டி பத்து
# 171
கடலலைகள் முழங்கும் இனிய இசையோடு கலந்து, அடுத்திருக்கும்
முழவுகளும் முழங்கும் இனிய இசை தெருக்கள்தோறும் ஒலிக்கும்
தொண்டியைப் போன்ற பருத்த தோள்களைக் கொண்ட
ஒளிரும் தோள்வளை அணிந்த பெண்தான் என் நெஞ்சினைக் கவர்ந்தவள்.
# 172
ஒளிரும் தோள்வளை அணிந்த பெண் கவர்ந்தனள் என் நெஞ்சத்தை!
வண்டுகள் ஒலிக்கும் குளிர்ச்சியான துறையைக் கொண்ட தொண்டியில் இருக்கும்
எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் கடல் ஒலிக்கின்ற அலைகளைப் போல
இரவுநேரத்திலும் தூக்கத்தை அறியேன்.
					மேல்
# 173
இரவிலேயும் இனிய தூக்கத்தை அறியாமல்
பாம்பு தீண்டினாற் போன்ற துயரத்தை அடைவார்கள், தொண்டியின்
குளிர்ந்த நறிய நெய்தல் மலரின் மணம் கமழும்
பின்னப்பட்ட கரிய கூந்தலையுடையவளின் வருத்துகின்ற பார்வையால் தீண்டப்பட்டவர்கள்.
# 174
வருத்தும் தெய்வங்களை உடைய குளிர்ந்த துறையைக் கொண்ட தொண்டியைப் போன்ற
மணம் கமழும் பொழிலையே சந்திக்கும் இடமாகக் குறிப்பிட்டாள், நுண்ணிய அணிகலன்களைக் கொண்டவள்;
மிகுந்த செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களையும்,
அழகு ஒளிரும் மேனியையும் நினைந்து வருந்திய எமக்கு -
					மேல்
# 175
எனக்குக் கனிவோடு அருள்செய்வதென்றால், மூங்கில் போன்ற தோளையும்
நல்ல நெற்றியையும் கொண்ட உன் தோழியோடும் மெல்ல மெல்ல நடந்து
வரவேண்டும், வாழ்க மடப்பமுள்ள நங்கையே!
தொண்டியைப் போன்ற உன் பண்புகள் பலவற்றையும் கூடக்கூட்டிக்கொண்டு -
# 176
எனக்குரிய பண்புகளையும், என் உறக்கத்தையும் கவர்ந்துகொண்டாள், தொண்டியின்
குளிர்ந்த மணங்கமழும் புதிய மலர் போன்று மணக்கும் ஒளிரும் தொடி அணிந்தவள்;
மென்மையானதாக அமைந்த அகன்ற அல்குலையும்,
கொய்யப்பட்ட தளிர்போன்ற மேனியையும் உடையவளே! கூறுவாயாக! நான் செய்த தவறினை!
					மேல்
# 177
தவறு செய்யாதவராயினும் நடுங்குவர், உறுதியாய்;
உருண்டு எழும் அலைகள் மோதி மகிழும் மணல்திட்டுகளை உடைய நெடிய கரையில்
கழிமுள்ளிச் செடிகளின் பூக்கள் மணங்கமழும்
தொண்டியைப் போன்றவளின் தோள்களைத் தழுவியவர்.
# 178
தோளையும், கூந்தலையும் பலபடப் பாராட்டி
இவளுடன் வாழ்வது வாய்க்குமோ, செங்கோலையுடைய
குட்டுவனின் தொண்டியைப் போன்ற
என்னைக் கண்டு விருப்பத்துடன் நீ அன்புசெய்யாதபோது.
					மேல்
# 179
இவள் மீது அன்புசெலுத்துவாயாக, வாழ்க நீ, பரந்த கடல் நீர்ப்பரப்புக்குரியவனே!
நண்டு தாக்கியதால் துறையிலுள்ள இறாமீன் புரளும்
இனிய ஒலியைக் கொண்ட தொண்டியைப் போன்றது,
நீ இல்லாமல் தனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லாத இவளின் சிறிய நெற்றி.
# 180
மிகக் குறுகிய காலத்தில் மணந்து உரியதாக்கிக்கொள்! கடலில்
வலைவீசும் மீனவர் கொண்டுவந்த மிகுதியான மீனைத் தனக்கு உணவாகக் கொள்ள
பறத்தல் இயலாத முதிய நாரை பார்த்துக்கொண்டிருக்கும்
துறையைப் பொருந்திய தொண்டியைப் போன்ற இவளது நல்ல அழகை!
					மேல்
# 19 நெய்தல் பத்து
# 181
நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்களையும், அழகாக இறங்கும் பருத்த தோள்களையும் உடையவரான
மணல்வீடு கட்டி விளையாடிய, பொய்யுரையை அறியாத மகளிர்
குவிந்திருக்கும் வெண்மையான மணலில் குரவைக் கூத்துக்காக நின்றுகொண்டிருக்கும்
துறையைப் பொருந்திய தலைவன் நம்மீது அன்புசெய்தால்
வாழ்வதற்கு இனியதாயிருக்கும் இந்த ஆரவாரமுள்ள ஊர்.
# 182
நெய்தலின் நறுமணமுள்ள மலரைச் செருந்திப்பூவோடு கலந்து
கையால் புனையப்பட்ட மணமுள்ள மாலை கமழும் மார்பினையுடையவன்
அரிய செயல்களைச் செய்யும் ஆற்றல் உள்ள கடவுள் அல்லன்;
பெரிய துறையில் இவளைக் கண்டு வருத்தும் தெய்வத்தைப் போல் இவளை வருத்தமுறச் செய்தவன்.
					மேல்
# 183
திரண்ட நீரைக் கொண்ட அருவியையுடைய கானத்தைச் சேர்ந்த நாடனும்,
சிறிய குன்றுகளையுடைய நாடனும், நல்ல வயல்களைக் கொண்ட ஊரினையுடையவனும்,
குளிர்ந்த கடற்பரப்பின் உரிமையாளனுமாகிய தலைவன் பிரிந்து சென்றானாக, முன்னைக்காட்டிலும்,
இப்போது கடும் பகலிலேயே வரத்தொடங்கிவிட்டாய், பிரிந்தோரைச் செயலற்றுப்போகச் செய்யும் மாலையே!
வளைவான கழியில் உள்ள நெய்தல் மலர்களும் இதழ்குவிந்துபோக,
நீ காலையிலேயே வந்தாலும் என் துயரத்தைக் களைபவர் யாருமில்லை.
# 184
நெய்தல் நிலத்திலுள்ள கரிய கழியில் உள்ள நெய்தல் பூக்களை விலக்கிவிட்டு
மீனை உண்ணும் குருகுக் கூட்டம் கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கும்
கடலை அழகுறப்பெற்றது அவரின் ஊர்;
அந்தக் கடலினும் பெரியது எனக்கு அவருடைய நட்பு.
					மேல்
# 185
அசைகின்ற இதழ்களையுடைய நெய்தல் மலர்ந்திருக்கும் கொற்கையின் துறைமுகத்தில் காணப்படும்
ஒளிவிடும் முத்தினைப் போன்ற பற்கள் பொருந்திய சிவந்த வாயினையும்
அரத்தால் பிளவுபட அறுத்த அழகிய வளையணிந்த இள மகள்
யாழ் நரம்பை இசைத்தது போன்ற இனிய சொல்லினையுடையவள்.
# 186
நாரையின் நல்ல கூட்டத்தைப் போல, மகளிர்
தம் நீர் ஒழுகும் கூந்தலை கோதிவிட்டு உலர்த்தும் துறையைச் சேர்ந்தவனே!
நீர் மிகுந்து வரும் கழியின் நெய்தல் பூக்கள் நீர்த்துளிகளை உதிர்க்க, இந்தத் துறைக்குப்
பலமுறை வருகின்றது ஒரு தேர் என்பதற்காக,
அங்குச் செல்லவேண்டாம் என்று கூறினள் தாய்.
					மேல்
# 187
(நாங்கள் உம் தழையுடைகளை அணிந்தால்) அயலார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இவற்றை;
எம்மோடு வந்து கடலில் நீராடுகின்ற மகளிரும்
நெய்தல் பூவினின்றும் மாறுபட்ட இந்தத் தழையுடையைத் தம் பாவைக்கும் அணியமாட்டார்;
உடலுக்கு அகமாக இதனை அணிந்துகொள்வோர் யாரும் இங்கே இல்லையாதலால்,
மாலை தொடுப்போரும் தம் மாலைக்குத் தேவையாக வெகு சில பூக்களையே கொள்வார்கள்.
# 188
கரிய கழியில் சிவந்த இறால் மீன்களைக் கூட்டமான பறவைகள் நிறைய உண்ணும்
கொற்கைக் கோமானின் கொற்கையிலுள்ள அழகிய பெரிய துறையில்
வைகறைப் பொழுதில் மலரும் நெய்தல் பூவைப் போல
பேரழகு உடையது என் காதலியின் கண்கள்
					மேல்
# 189
புன்னை மலர்களின் நுண்ணிய பூந்துகள் உதிர்ந்துகிடக்கும் நெய்தல் பூ
பொன் துகள் படிந்த நீல மணியைப் போலத் தோன்றும்
மென்புலத் தலைவன் மணம்பேச வந்ததால்
நன்றாக ஆகிவிட்டன தோழி என் கண்கள்.
# 190
குளிர்ந்த நறிய நெய்தலின் முறுக்கு அவிழ்ந்த அழகிய பூவை
வெண்ணெல்லை அறுக்கின்ற உழவர்கள் நீக்கிவிட்டு அறுக்கும்
மென்புலத்துக்குத் தலைவனே எனது
பல இதழ்களைக் கொண்ட மலர் போன்ற மையுண்ட கண்களில் நீர் வரச் செய்தவன்.
					மேல்
# 20 வளை பத்து
# 191
கடலின் சங்கினால் செய்யப்பட்ட செறிவான வளைகள் ஒழுங்குபட இருக்கும் முன்கையினையும்
கழியிலுள்ள பூக்களால் தொடுக்கப்பட்ட மலர்ச் சரத்தை அணிந்த கரிய பலவான கூந்தலையும் கொண்ட,
கடற்கரைச் சோலையிலுள்ள ஞாழலின் அழகுபெற்ற தழையாடை அணிந்தவள்,
மலையில் வாழும் தெய்வப்பெண்டிரைக் காட்டிலும் காண்பதற்கு அரிதானவள் - அவள் என்
பொறுமையற்ற நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டு தன்னை ஒளித்துக்கொண்டவள்.
# 192
சங்கினங்கள் கடலோரநிலத்தில் சுழன்று திரிய, கடலலைகள் எழுந்து முழங்க,
ஓசை முழங்கும் குளிர்ந்த துறையில் ஓடுகின்ற கலங்களை தரையில் உதைத்துச் செலுத்தும்
துறையைச் சேர்ந்தவன் பிரிந்தான் என்றவுடன் தொளதொளவென்று ஆகி
பெரிதானவை போல் தோன்றுகின்றன தோழி! என் வளைகள்.
					மேல்
# 193
வலம்புரிச் சங்குகள் தரையை உழுதவாறு நகரும் நெடிய மணல் பரந்த அலைகளால் இறுக்கப்பட்ட கரையில்
ஒளிரும் கதிர்களையுடைய முத்துக்கள் இருள் நீங்குமாறு பளிச்சிடும்
துறையைச் சேர்ந்த தலைவனே! நீ தந்த
மோதியடிக்கும் நீரையுடைய கடலில் பிறந்த வெண்மையான வளையல்கள் நல்லவையோ தாமும்?
# 194
கடல் சங்கினை அறுத்த, அரத்தால் பிளக்கப்பட்ட அழகிய வளையல்களையும்
ஒளிரும் தோள்வளைகளையும் கொண்ட இளமை பொருந்தியவளைக் காண்பாயாக தலைவனே!
நல்ல நெற்றி இன்று மாறிப்போய்த் தோன்றியதாக,
இதில் ஏதோ ஒன்று உண்டு என ஐயம் கொண்டாள் அன்னை; அது இவளின் நிலையாகும்.
					மேல்
# 195
சங்கு ஈன்ற முத்துக்களைப் பரதவர் விலைக்கு விற்கும்
கடலைச் சேர்ந்த தலைவனின் அன்பிற்குரிய இளமையான மகள்
தீர்ப்பதற்கு முடியாத துயரத்தைக் கொடுத்து
படுத்துத்தூங்கும் இனிய உறக்கத்தைக் கவர்ந்துகொண்டாள்.
# 196
சங்கை அறுத்துச் செய்த ஒளிவிடும் வளையல்களையும், செழுமையான பலவான கூந்தலையும்,
ஆய்ந்தெடுத்த தோள்வளையையும் கொண்ட இளமையான மகள் வேண்டுமாயின்
தெளிந்த கழிநீரில் சிவந்த இறால் மீன் அகப்படும்
குளிர்ந்த கடல்பகுதிக்குச் சொந்தக்காரனே! மணம்செய்து அவளை உரிமையாக்கிக்கொள்.
					மேல்
# 197
ஒளிவிடும் வளைகள் கலகலக்க நண்டுகளை விரட்டி விளையாடி
தன் முகத்தைக் கூந்தலுக்குள் மறைத்துக்கொண்டவளாய்த் தலைகுனிந்து நின்றவள்,
தனிமைத் துயரத்தைத் தன்னகத்தே கொண்ட இந்த மாலைப் பொழுது மறையும்போது
நலம் பொருந்திய தனது மார்பினை வழங்குவாள் எனக்கு.
# 198
வளையல் அணிந்த முன்கையினையும், வெண்மையான பற்களில் கண்டோர் விரும்பும் சிரிப்பையும் கொண்ட
இளம்பெண்கள் விளையாடும் மலர்கள் கட்டவிழ்ந்த கடற்கரைச் சோலையில்
சிறிய துறை எங்கு உள்ளது என்று கேட்டுக்கொண்டு நிற்கும்
நெடிய தோள்களைக் கொண்ட பெருமகன் ஒருவனைக் காண்போம் நாம்.
					மேல்
# 199
கடற்கரைச் சோலையில் உள்ள அழகிய பெரிய துறையில் உள்ள ஆரவாரிக்கும் கடலலைகள் வந்துவந்து தழுவிச் செல்லும்
வானத்தளவு உயர்ந்த நெடிய மணல்மேட்டில் ஏறி நின்று ஓய்வின்றிப்
பார்த்துக்கொண்டிருப்போம், வருவாயாக, தோழியே!
செறிந்து கிடக்கும் வளையல்களைக் கழன்றுபோகச் செய்தவனின் அலைகள் மோதும் கடலையுடைய நாட்டினை.
# 200
ஒளிவிட்டுப் பெரிதாக இருக்கும் பளபளத்த வளையல்களை அணிந்தவளே! உன் ஒளி மங்கிய நெற்றி அழகு பெறும்படியாக
பொன்னாலான தேரினையுடைய தலைவன் வந்துவிட்டான் இப்போது;
குறுக்காக ஓடும் செவ்வரிகளைக் கொண்ட நீண்ட கண்களைத் திறப்பாயாக!
உன் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்ட பசலையைப் பார்த்து நகைப்போம் நாம்.
					மேல்



குறிஞ்சி      கபிலர்

# 21 அன்னாய் வாழி பத்து
# 201
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! என் தலைவன்
தானும் அணிந்துகொண்டான், எனக்கும் தழையுடை ஆயின;
பொன்னைப் போன்ற பூக்களையும், மணி போன்ற அரும்புகளையும் கொண்டன,
என்ன மரமோ? அவர் வாழும் மலைச் சாரலான அவ்விடத்தில் உள்ளன.
# 202
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் ஊரிலுள்ள
பார்ப்பனச் சிறுவர்களைப் போன்று, தாமும்
குடுமி பொருந்திய தலையினையுடையதாய் இருக்கின்றதே!
நெடுமலை நாட்டவனான தலைவன் ஓட்டி வந்த குதிரை.
					மேல்
# 203
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் தோட்டத்திலுள்ள
தேனைக் கலந்த பாலைக்காட்டிலும் இனிமையானது அவர் நாட்டிலுள்ள
இலைதழைகள் கிடக்கும் கிணற்றின் அடியிலுள்ள
விலங்குகள் உண்டு எஞ்சிய கலங்கல் தண்ணீர்.
# 204
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! அது எப்படியோ?
மலையில் வாழும் தெய்வமகளிரைப் போலக் கூட்டமாகக் கூடிக்கொண்டு
போகுமிடமெல்லாம் தவறாமல் என்னைப் பார்த்து,
நல்லவள், நல்லவள் என்று கூறுகிறார்கள்;
தீயவளாயிருக்கின்றேனே அந்த மலைநாட்டிற்கு உரிமையுடையவனுக்கு.
					மேல்
# 205
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! என்னுடைய தோழி
மிகவும் நாணம் உடையவள், உனக்கும் அஞ்சுவாள்;
ஒலிக்கின்ற வெள்ளிய அருவிகளையுடைய உயர்ந்த மலை நாடனின்
அகன்ற மார்பையே படுக்கையாகக் கொண்டு
தூங்குவதில் நாட்டங்கொண்டுள்ளாள், வருந்துகிறேன் நான்.
# 206
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! இதோ பார்!
மாரிக் காலத்துக் குன்றினைக் காப்பவன் போன்றவனான,
மழைத் தூறலில் நனைந்த மாலை போன்ற ஒளிவிடும் வாளையும்,
பாசி சுற்றிலும் படிந்த பெரிய கழலினையும்,
குளிர்ந்த நீர் தங்கிய மடிப்புள்ள கச்சினையும் உடையவனான இவனை -.
					மேல்
# 207
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நன்றாக
உலர்ந்துவிடவில்லையே உன் தினை! இதோ பார்!
நிணத்தைப் பொதிந்துவைத்து மூடியுள்ள மெல்லிய ஏடைப் போல் தெரிகிறது,
மேகங்களை உச்சியில் கொண்டுள்ளன, அவரின் மணிபோன்ற நெடிய குன்று -
# 208
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! கானவர்கள்
கிழங்கிற்காகத் தோண்டிய ஆழமான குழி நிறைய, வேங்கை மரத்தின்
பொன்னிற மிக்க புதிய மலர்கள் பரவிக்கிடக்கும் அவருடைய நாட்டின்
நீலமணி போன்ற நிறமுள்ள பெரிய மலை, மாலையில் மறையும்போதெல்லாம் இவளின்
சிறப்பித்துச் சொல்லக்கூடிய மலரைப் போன்ற நீண்ட கண்களில் நிரம்பின கண்ணீர்.
					மேல்
# 209
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நீதான்
நான் அவரை மறக்கவேண்டும் என்று வேண்டினாய்; ஆனால்,
கீழ்க்காற்றால் மலர்கின்ற அவரையின் பூவைப் போன்ற
வெண்ணிறமான உச்சியைக் கொண்ட கரிய மேகங்களைச் சூடிக்கொண்டு
என் கண்முன்னே காட்சியளிக்கும் இடைவிடாது, அவரின் நீலமணி போன்ற நெடிய குன்றம்.
# 210
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் பின் தோட்டத்திலுள்ள
புலால் நாற்றம் சேர்ந்துள்ள குத்துக்கல்லில் ஏறி, அவருடைய நாட்டின்
பூக்கள் பொருந்திய குன்றத்தை நோக்கி நின்று,
நீல மணிபோன்று ஒளிரும் அணிகலன்கள் அணிந்த இவள் நிலைபெற்றிருந்தால்,
தணிந்துபோவதற்கும் வழியுள்ளது, அவளைப் பீடித்த நோய் 
					மேல்
# 22 அன்னாய் பத்து
# 211
நெய்யுடன் கலந்து பிசைந்த உழுந்தின் மாவைக் கம்பியாக நூற்றால் போன்ற
வயலைக் கொடிகள் விளங்கும் அழகிய மலைச் சாரலின் உச்சியில் உள்ள
அசோகின் அழகிய நிறம் மாறுபட்ட தழையுடை வாடிப்போகிறது, அன்னையே!
# 212
சந்தனமரக் காட்டிலுள்ள அகில் கட்டைகளை எரிக்கும்போது எழுகின்ற புகை
சந்தனமும், அகிலும் கலந்த மணம் கமழும் நாட்டைச் சேர்ந்தவனாகிய
அறவாளனுக்கு ஏன் நாம் விலகிப்போகவேண்டும்? அன்னையே!
					மேல்
# 213
நறிய வடுக்களையுடைய மாமரத்திலிருந்து காம்பு அற்றுப்போய் உதிர்ந்த
பசுமையான குளிர்ந்த பெரிய வடுக்களைப் பாலைநிலத்துக் குறவர்கள்
மழையோடு விழும் ஆலங்கட்டியைப் பொறுக்குவது போல் சேர்த்து அள்ளும் மலைச்சாரலையுடைய,
மிக உயர்ந்த நல்ல நாட்டவரான நம் காதலர் மணம் பேசி வந்தால்
நான் உயிர்வாழ்தல் கூடும் அன்னையே!
# 214
மலைச் சாரலிலுள்ள பலாவின் கொழுத்த கொத்தான நறும் பழம்
பெரிய மலையின் பிளவுகளில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்ததாக, மலையில்
பெரிய தேன்கூடி சிதறிப்போகும் நாட்டினைச் சேர்ந்தவன்
பெரிய அமைதிநிறைந்த குளிர்ந்த கண்கள் கலங்க, தன்
சிறப்புடைய நல்ல நாட்டுக்குச் செல்வான், அன்னையே!
					மேல்
# 215
பொன்னுரைக்கும் கட்டளைக் கல் போன்ற வரிகளையுடைய நீல மணியின் நிறங்கொண்ட தும்பி
ஒடுங்கியவாகக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள நீர்த்துறை வழியே சென்று,
தட்டையும் தண்ணுமையுமாகிய தோல் கருவிகளின் பின்னே இசைவாணர்கள்
இனிமையுடைய குழல் ஆம்பலைப் போல, இனிமையாக இசைக்கும்
புதர்களில் மலர்கள் மலர்கின்ற மாலைப் பொழுதிலும் பிரிந்து செல்பவர்
இதைக் காட்டிலும் கொடியவற்றைச் செய்வார் அன்னையே!
# 216
குறிய முன்னங்கால்களைக் கொண்ட பெரிய புலியின் வேட்டையாடுவதில் வல்ல ஆணானது,
நெடிய புதர்களைக் கொண்ட காட்டினில், இளமையான பெண்யானை ஈன்ற
நடுங்குகின்ற நடையைக் கொண்ட கன்றினைப் பிடிக்கும்பொருட்டு, பலாமரத்தின்
பழங்கள் தொங்குகின்ற கொழுத்த நிழலில் ஒளிந்துநிற்கும் நாட்டினைச் சேர்ந்தவனுக்காகக்
கொய்யப்பட்ட தளிரைப் போல வாட்டமுற்று, உன்
மேனி மாறுபட்டுப்போவது எதனாலோ? அன்னையே!
					மேல்
# 217
பெரிய மலையிலுள்ள வேங்கை மரத்தின் பொன்னைப் போன்ற நறிய பூக்களை
மானினத்தின் பெரிய சுற்றம் மேய்ந்து பசியாரும்
கானத்தை உள்ளிட்ட நாட்டினைச் சேர்ந்தவன் வந்துவிட்ட பின்னரும், இவளின்
மேனி பசந்துநிற்பது எதனாலோ? அன்னையே!
# 218
நுண்ணிதான அழகினைப் பெற்ற புருவத்தையுடைய கண்ணும் துடிக்கும்;
மயிர் ஒழுகும் முன்கையிலுள்ள வளைகளும் செறிவுற்றிருக்கும்;
களிற்றைக் கொல்வதில் தவறிவிட்ட சினம் மிகுந்து எழுந்துவரும் புலி
எழுகின்ற மேகத்தைப் போல உரத்து முழங்கும்
பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவன் வருவானோ? அன்னையே!
					மேல்
# 219
கரிய அடிமரத்தையுடைய வேங்கை மரத்தின் பெரிய புறவிதழ்களையுடைய ஒளிரும் பூக்கள்
பெரிய மலையின் அகன்ற பாறையில் கோலமிட்டதாய்ப் பரவிக்கிடக்கும்
நல்ல மலைநாட்டைச் சேர்ந்தவன் பிரிந்து சென்றான் என்றவுடன்
ஒளிவிடும் நெற்றி பச்ந்துபோவது எதற்காக? அன்னையே!
# 220
அசைவாடும் மேகங்கள் பொழிந்த நீருள்ள அகன்ற இடத்தையுடைய அருவி
அசையும் மூங்கில்கள் உள்ள மலைச் சரிவிடுக்கில் விழுகின்ற நாட்டைச் சேர்ந்தவனின்
பெரிய மலை போன்ற மேன்மையும், வலிமையும் கொண்ட அகன்ற மார்பினைத்
தழுவாமல் கழிந்த நாளில், இவளின்
இணையொத்த மலரிதழ் போன்ற குளிர்ச்சியான கண்களில் கண்ணீர் வடியும் அன்னையே!
					மேல்
# 23 அம்ம வாழி பத்து
# 221
தோழியே கேள்! என் காதலர்
கொல்லிப்பாவை போன்ற என் சிறந்த அழகு கெட்டுப்போகவும்,
நல்ல மாநிற மேனியில் பசலை படரவும்,
பிரிந்து செல்வேன் என்கிறார் தம்முடைய மலைகள் பொருந்திய நாட்டுக்கு.
# 222
தோழியே கேள்! நம் ஊருக்கு
அடுத்தடுத்து வந்து நம்மோடு தங்கும் நறிய குளிர்ந்த மார்பினையுடையவன்
இப்போதெல்லாம் வருவதில்லையாதலாலோ என்னவோ
சிலவாய் ஒழுங்குபட்ட கூந்தலையுடைய என் நெற்றியில் பசலை பாய்ந்தது.
					மேல்
# 223
தோழியே கேள்! நம் மலையில்
உச்சியிலிருந்து நீர் வழிந்துவர, செங்காந்தள் வளர்ந்து நிற்க,
காதலரைப் பிரிந்தவர்கள் செயலற்று வாடிவருந்தும்
குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தையும்
முந்திக்கொண்டு வந்துவிட்டார் நம் காதலர்.
# 224
தோழியே கேள்! நம்மூர் மலையான
நீல மணியின் நிறம் கொண்ட பெரிய மலைக்குப் பக்கத்து மலையில் உள்ள
தெளிந்த நீரை உடைய அருவியில் நம்மோடு நீராடுதல்
எளிதாக இருந்தது அவருக்கு, இனியே
அதுவும் அரிதாகுப்போகும் என்று மனம்தடுமாறுகிறேன் நான்.
					மேல்
# 225
தோழியே கேள்! புதிய நீர்கொண்ட சுனையில் உள்ள
பச்சையான் இலைகளுக்கூடே உயர்ந்து நிற்கும் குளிர்ந்த மலராகிய குவளையின்
உள்ளிடத்தின் மணம் கமழும் கூந்தலைக்கொண்ட மென்மையான இயல்பினையுடையவளின்
அழகு திகழும் ஒளிவிடும் நெற்றி பசந்துபோதலை
நினைத்துப்பார்க்கமாட்டாரோ நம் காதலர்.
# 226
தோழியே கேள்! நம் மலையிலுள்ள
நறுமணமும், குளிர்ச்சியும் உள்ள மலைச் சரிவில் பூத்த மணமுள்ள பூங்கொத்துக்களைக் கொண்ட காந்தள் மலரில்
தேனை உண்ணும் வண்டைப் போல, பிரிந்து சென்று, வற்றிப்போய், உன்
வலிமையுடைய, பிறர் அழகை வெற்றிகொள்ளும் அழகினைக் கவர்ந்து கொண்ட
அன்பில்லாதவன் வந்திருக்கிறான் இப்போது.
					மேல்
# 227
தோழியே கேள்! ஒவ்வொரு நாளும்
உன் நல்ல நெற்றி பசந்துபோகவும், நறிய தோள்கள் மெலிவடையவும்,
பொறுக்கமாட்டேன் நான் என்று நாம் ஏற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு,
நம்மை பிரிந்து வாழ்ந்தவர் அவர் உறுதியாக - நீ
தள்ளிவிட்டாயோ அவர் கூறிய பொய்யான சூளுரைகளை.
# 228
தோழியே கேள்! நம் ஊரின்
நிரலாக விளங்கும் அருவிகளையுடைய நெடிய மலைநாட்டுக்குரியவன்
உன்னைப் பெண்வேண்டி வந்து அது கிடைக்கப்பெறாமல் திரும்பிச் சென்றால்
என்ன ஆகுமோ நம் இனிய உயிரின் நிலை?
					மேல்
# 229
தோழியே கேள்! நாம் அழும்படியாகப்
பல நாள் நம்மைப் பிரிந்திருந்த அந்த அறங்கெட்டவன்
வந்திருக்கிறான் பார், இரவில் -
பொன்னைப் போன்ற வெற்றிசிறந்த அழகைக் கொண்டிருக்கிறது உன் நெற்றி.
# 230
தோழியே கேள்! நம்மோடு
சிறுதினைக்குக் காவற்காரன் ஆகி, மிகவும் உன்
மென்மையான தோள்கள் மெலிவடையவும், அழகிய நெற்றி பசந்துபோகவும்
பொன்னைப் போன்ற வெற்றிசிறந்த உன் அழகைக் காணாமற்போக்கிய
குன்றினையுடைய நாடனுக்கே உன்னைக் கொடுப்பர், நல்மணம் முடித்து.
					மேல்
# 24 தெய்யோ பத்து
# 231
எப்படி உன்னால்முடிகிறத? உயர்ந்த மலைகளுக்குரியவனே!
கரிய, பலவான கூந்தலும், திருத்தமான அணிகலன்களும் உடைய இந்தப் பெண்
தன் அழகுத்தேமல் படர்ந்த மாநிற மேனிய மெலிந்துவாடவும்,
பசலை பாயவும் இவளைப் பிரிந்துசெல்வதற்கு - 
# 232
மலரும் நிலையிலுள்ள பூக்கள் நிறைந்த கூந்தலையுடையவளின் தகுதிவாய்ந்த அழகு குன்றிப்போக
அன்னியன் போன்ற நீ பிரிந்து சென்றதற்காக,
நெருப்பைப் போல் ஒளிரும் செம்மணி பதித்த மார்புப் பூண் நனையுமாறு
நீரை உகுத்தனை நிறுத்தாமல், என் கண்கள்.
					மேல்
# 233
விரைந்து மீண்டும் வருகின்றாயும் இல்லை; வாடையும் மிகக் கொடிதாக இருக்கிறது.
அரிய மலையின் பக்கங்களில் அழகுபெற்ற மணிகளைத் தேய்த்து இழுத்துக்கொண்டுபோய்
ஒல்லென்ற ஓசையுடன் கீழிறங்கும் அருவியையுடைய உனது
பாறைகளையுடைய மலைநாட்டுக்குச் செல்லவேண்டாம் -
# 234
மின்னலைப் போல் பளிச்சிட்டு ஒளிரும் அணிகலன்கள் நெகிழ்வடையுமாறு மெலிந்து
நல்ல நெற்றி பசந்துபோவது (எதனால்?), மிகவும் நெருக்கமாகக்
கனவில் காணும் இவள்
நனவில் காணப்பெறாள், உனது மார்பினை - (அதனால்)
					மேல்
# 235
செயலற்றுப்போக மழை பெய்த பின்னர் மேகங்கள் முற்றிலும் இல்லாமற்போகும் வானத்தைப் போல
அரிதானது காதலரோடு சேர்ந்திருக்கும் நேரமும் - அதனால்
ஆய்ந்தெடுத்த அணிகலன்கள் குலுங்க அவரைத் தழுவிக்கொண்டு
பிரியமாட்டேன் என்று சொல்வோமோ? அல்லது கூடப்புறப்படுவோமோ?
# 236
எம் அன்னையும் அறிந்துவிட்டாள்; ஊரெல்லாம் பேச்சாகிவிட்டது;
நல்ல மனையில் இருக்கும் நெடிய இல்லத்தில் தனிமைத்துயரத்தை நுகர ஏதுவாகிற்று
கொடிய வாடைக்காற்றும் வருத்துகின்றது.
உமது ஊருக்குச் செல்வோம், புறப்படுங்கள்!
					மேல்
# 237
நான் உன்மீது கொண்ட காதல் தூண்டிவிட, உள்ளமோ மிகவும் வருந்த,
நான் வந்து உம்மைக் காண்பதற்குச் சரியான நேரம் வந்தால்,
ஓங்கி மேலெழுந்து தோன்றும் உயரமான மலைக்கு
எந்தப்பக்கமாய் இருக்கிறது உனது ஊர்?
# 238
நீண்ட கொம்பினையுடைய வலிமையான ஆட்டுக்கிடா தன்னிடம் வராமல் மனம் மாறியிருந்தாலும்
நல்ல நிறமுள்ள மயிரையுடைய பெண் ஆடானது ஆசையுடன் எதிர்பார்த்துத் தங்கியிருக்கும்
பெரிய அருவிகளைக் கொண்ட குளிர்ந்த பெரிய மலைச் சரிவைச் சேர்ந்தவனே!
நீ இங்கு வரும்போதுதான்
தானும் சேர்ந்து வரும் இவளின் பெண்மை நலன்.
					மேல்
# 239
வண்டுகள் உண்ணுமாறு மதநீர் பெருகிய புள்ளிகளையுடைய முகத்தைக் கொண்ட யானை,
கரிய சொரசொரப்பான குத்துக்கல்லைத் தன் பெண்யானை என்று தழுவிக்கொள்ளும் உன்
குன்றுகள் பொருந்திய நல்ல நாட்டுக்குச் சென்ற பின்னால்
அழகாக இறங்குகின்ற பருத்த தோள்கள் மெலிவடையும்படி
நீ வாராமற் போனால் நான் வாழமாட்டேன்.
# 240
நான் ஒன்றும் அறியாதவள் இல்லை, அறிந்திருக்கிறேன்!
புள்ளிகளும் கோடுகளும் கொண்ட சிறகுகளையுடைய வண்டினம் மொய்க்கும்படியாகச்
சந்தனம் மணக்கும் இனிய வாசனையுடையவளின்
கூந்தலின் மணம் மணக்கும் உன் மார்பினை -
					மேல்
# 25 வெறிப்பத்து
# 241
நாம் படும் பாட்டைப் பார்த்து, அன்னை
வெறியாடும் வேலனை அழைத்து வந்தால், அந்த வேலன்
நறுமணம் கமழும் நாட்டினையுடைவனோடு நாம் கொண்டுள்ள நட்பை
அறிந்து சொல்வானோ? செறிவான பற்களைக் கொண்டவளே!
# 242
அறியாமையினால், தீயசக்தி தாக்கியதாகத் தவறாக எண்ணி
அன்னையும் நீக்குதற்கரிய துயரத்தில் ஆழ்ந்தாள்; அதனால்
இனியும் அவள் அறியாதபடி இதை விட்டுவிடுதல் கொடியது; வரிசையான இதழ்களைக் கொண்ட
அழகிய மலர் போன்ற மையுண்ட கண்கள் பசந்துபோகுமாறு
தொலைவிலுள்ள மலைநாட்டினன் செய்த இந்த நோயை -
					மேல்
# 243
மிளகுக் கொடிகள் வளர்ந்திருக்கும் மலைச் சரிவிலிருக்கும் கடவுளைத் தொழுது
உண்மையை அறியாத வேலன் இதனைத் தீயசக்தியின் தாக்கம் என்று கூறுவான்;
அதனையே உண்மையென்று உன் மனத்தில் கொள்கிறாய் அன்னையே! இவளின்
புத்தம் புதிய மலர் போன்ற குளிர்ந்த கண்கள் தனிமைத் துயரால் கொண்ட நோயினைப் பார்த்து -
# 244
தோழியே கேள்! பலவான மலர்கள் உள்ள
நறிய குளிர்ந்த சோலைகள் உள்ள நாட்டினைச் சேர்ந்த தலைவனின்
குன்றத்தை வாழ்த்திப் பாடவில்லை என்றால்
என்ன பயனைச் செய்யுமோ, வேலனுக்கு அந்த வெறியாட்டு?
					மேல்
# 245
பொய் உரைக்காத மரபினையுடைய நம் ஊரின் வயதான வேலன்
கழங்கினைப் போட்டுப்பார்த்து, நோய்தணிவதற்காக நேர்ந்த பொருளைப் படைத்து,
நோய்க்குக் காரணம் முருகனே என்று சொல்வானானால்,
உரித்தாகுமோ அது இவளுக்கு இந்நோய் வருவதற்குக் காரணமானவனுக்கும் -
# 246
வெறியாட்டத்துக்கு ஆயத்தமானான் வேலன், மிளகுக் கொடி படர்ந்த
மலையின் குகையில் வசிக்கும் வலிமிகுந்த புலி, கழங்குகளைக் கண்ணாகக் கொண்டு,
புன்செய் நிலமாகிய கொல்லையில் தினையை விதைத்த குறவர் செய்த
உண்மையானதுபோல் தோன்றிய பெண்புலிப் பொம்மையைப் புணர்ந்து
அக் கொல்லையின் நடுவில் தன் காமப்பிணி தீரப் படுத்திருக்கும்
மலைநாட்டையுடைய தலைவன் நமக்குச் செய்த நோயின் காரணமாக -
					மேல்
# 247
அன்னையானவள் வெறியாடும் வேலனை அழைத்து வந்ததுதான் இங்கு நிகழ்கிறது என்பதனை அறிவேன்,
அழகிய நம் வீட்டின் எல்லையில், நோய்தணிவதற்காக நேர்ந்த பொருளைப் படைத்து,
வேலன் முருகனால் இது நிகழ்ந்தது என்று கூறுவானாயின்,
அரிய மலைக்குரிய நாட்டினனின் பெயரும் அதுவோ?
# 248
புதுமணல் பரப்பிய முற்றத்தில் வெறியாட்டுக்களத்தை அழகு பெற நிறுவி,
மலையையும் வானத்தையும் வெற்றிகொண்ட சினமிகுந்த முருகனின் வேலைக் கையில் கொண்டவன்
கழங்குகளைப் போட்டுப் பார்த்து தெரிந்துகொள்வது என்றால்,
நன்றாயிருக்கிறது இவளிடம் நிலைபெற்ற கற்பு.
					மேல்
# 249
புதிதாய் மணல் பரப்பிய வீட்டோரத்தில், கழங்குகளைப் போட்டுப்பார்த்து, அன்னையிடம்
இது முருகனால் உண்டானது என்று சொல்கிறான் வேலன், அவன்
வாழ்க! ஒளிருகின்ற அருவியையுடைய
அச்சமிகுந்த மலை நாட்டினனை அவன் அறியமாட்டான்.
# 250
பொய்கூறுதலை அறியாத கழங்குகளே! உண்மையே!
நீலமணி போன்ற மலையைப் புகலிடமாகக் கொண்ட இள மயில்கள் ஆடிக்கொண்டிருக்கும் நம்
விரிந்த வள்ளிக்கிழங்குகள் உள்ள அழகிய கானத்திற்கு உரியவன்,
ஆண்தகைமை உள்ள வெற்றி சிறக்கும் முருகவேள் அல்லன் - இவளின்
பூண் விளங்கும் இளமையான முலைகளை நோயுறச் செய்தவன்.
					மேல்




# 26 குன்ற குறவன் பத்து
# 251
குன்றத்தின் குறவர்கள் கொண்டாடினால், மேகங்கள்
நுண்ணிய பலவான மிகுந்த துளிகளைப் பெய்யும் நாட்டினனே!
நெடிய மலையிடத்துள்ள தோட்டங்களையுடைய உமது ஊரிலிருந்து
வேகமாக வரும் அருவிநீரைக் கண்டாலும் இவள் அழுகின்றாள்.
# 252
குன்றத்தின் குறவர்களின் புல் வேய்ந்த குடிசையினை,
தோட்டத்தின் நடுவில் அசைவாடும் இளமையான வெண்மேகங்கள் மறைக்கும் நாட்டினன்
உயர்ந்தவன், வாழ்க, தோழியே! வீசியடிக்கும் மழையையும்
பொறுத்தற்கரிய குளிரையும் கலந்து, கூதிர்காலத்தின்
பெரிதான குளிர்ந்த வாடைக் காற்று வருவதற்கு முன்னர் திரும்பி வந்துவிட்டான்.
					மேல்
# 253
குன்றத்துக் குறவன் எழுப்பும் சந்தனக்கட்டைகளின் நறிய புகை
தேன் மணம் கமழ்கின்ற மலைச் சரிவின் பக்க இடங்களிலெல்லாம் மணம்பரப்பும்
கானக நாடன் மணம்பேச வந்தால்தான்
திருமணத்தைப் பற்றி யோசிப்பாள் போலும், தோழியே! எமது தாய்!
# 254
குன்றத்தின் குறவன் சந்தனமரத்தை அறுத்ததினால்
அதன் நறுமணம் நாடெல்லாம் சூழ்ந்து காந்தள் மலர்களின் மணத்தோடு சேர்ந்து மணக்கும் -
வண்டுகள் ஒலிக்கும் ஒளியுடைய நெற்றியையுடையவளே!
கூட்டிக்கொண்டு செல்வார்  - தம் குன்றுகளைப் பொருந்திய நாட்டுக்கு.
					மேல்
# 255
குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய இளமையான மகள்,
மலையிலிருக்கும் தெய்வ மகளிரைப் போன்ற சாயலையுடையவள்,
மென்மையானவள், அரும்பிவரும் முலைகளைக் கொண்டவள்,
சிவந்த வாயினை உடையவள், மார்பினில் அழகுத்தேமலைக் கொண்டவள்.
# 256
குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய இளமையான மகள்,
வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடையவள், குளிர்ச்சியான தழையுடையை அணிந்திருக்கும் குறிஞ்சிப்பெண்,
வளைகளை அணிந்திருப்பவள், முளையைப்போன்ற கூர்மையான பற்களைக் கொண்டவள்,
இளையவள் என்றாலும் கண்டாரைப் பெரிதும் வருத்துபவள்.
					மேல்
# 257
குன்றத்துக் குறவன், கடவுளை வழிபட்டு
இரந்து வேண்டிப் பெற்ற ஒளிவிடும் வளையல்களைக் கொண்ட சிறுமகள்,
அழகிய செவ்வரிகளையுடைய நீண்ட கண்கள் கலங்கி நீர்விட,
மிகவும் தொலைவிலுள்ளதே நீ பிரிந்து செல்லும் நாடு.
# 258
குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய இளமையான மகள்,
அழகான மயில் போன்ற அசைவாடும் நடையையுடைய குறிஞ்சிப் பெண்ணை,
பெரிய மலையைச் சேர்ந்தவன் மணம்பேச வருவானாயின்
அவனுக்குக் கொடுத்துவிடுதலே நன்றாகும்,
இன்னும் குறையவில்லை நல்ல நெற்றியையுடையவளின் பிரிவுத் துயரம்.
					மேல்
# 259
குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய இளமையான மகள்
ஊர்ப்பொதுவில் உள்ள வேங்கை மரத்தின் மலர்களில் சிலவற்றைக் கொண்டு
மலையில் வாழும் கடவுளான தங்களின் குலதெய்வத்தை வாழ்த்தி,
இனிய பலியுணவைப் படைத்த ஈரமுள்ள நறிய கையினையுடையவள்,
மலர்ந்த காந்தளைப் போல மணம்வீசி,
கலங்கி அழும் கண்களையுடையவள் என்னைப் பெரிதும் வருத்தியவள்.
# 260
குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய இளமையான மகளான
மென்மையான தோள்களைக் கொண்ட அந்தக் குறிஞ்சிப்பெண்ணை இனிப் பெறுவது மிகவும் அரியது,
பச்சையான முதுகினையுடைய, தினைக்கதிரில் வீழும் கிளிகளை இனி விரட்டமாட்டார்;
புன்செய்ப் பகுதியாகப் பதப்படுத்திய நிலத்தில் விளைந்துநிற்கின்றன தினைப்பயிர்கள்.
					மேல்
# 27 கேழ பத்து
# 261
மென்மையான தினைப் பயிரை மேய்ந்த எதற்கும் அஞ்சாத காட்டுப்பன்றி
வன்மையான பாறைகள் கொண்ட மலைச்சரிவின் இடுக்கில் உறங்கும் நாட்டினன்
எம் தந்தை தெரிந்துகொள்வானோ என்று அஞ்சியோ என்னமோ,
அதுவாகத்தான் இருக்கவேண்டும், வராமல் நின்றுபோனதற்குக் காரணம்.
# 262
சிறுதினைப் பயிரை மேய்ந்த எதற்கும் அஞ்சாத காட்டுப்பன்றி
குத்துக்கல்லையுடைய மலைச்சரிவின் இடுக்கில் தன் துணையோடு படுத்திருக்கும்
ஒளிரும் மலை நாட்டினன் மணம்பேச வருவதுதான்
என் நோய்க்கு மருந்தாகும் என்பதனை அறியுமோ தோழி! அவனது காதல்?
					மேல்
# 263
நல்ல பொன்னைப் போன்று நிறமுள்ள இளமை தீர்ந்து முற்றிய தினைக் கதிரைப்
பொன் உரைக்கும் கல்லைப் போன்று கருமைநிறங்கொண்ட காட்டுப்பன்றி வயிறு நிரம்ப உண்ணும்
குன்றுகளைச் சேர்ந்த நாட்டுக்குரியவனும்
வந்துவிட்டான், வந்துவிட்டது தோழி! எனைவிட்டுப் பிரிந்துசென்ற என் அழகு.
# 264
இளம்பிறையைப் போன்ற கொம்பினையுடைய காட்டுப்பன்றி
களங்கனியைப் போன்ற தன் பெண்பன்றியினைப் புணர்ந்திருக்கும்
சுனைகள் திகழும் மலைச்சரிவினைச் சேர்ந்தவனே! காண்பாயாக!
பசந்துபோயிருக்கின்றன நீ விரும்பியவளின் கண்கள்.
					மேல்
# 265
புலியால் கொல்லப்பட்ட பெண் பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை,
வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும்
குன்றினைச் சேர்ந்த நாட்டினன் மறந்துவிட்டான்,
பொன்னைப் போல் போற்றற்குரிய தன் புதல்வனோடு என்னையும் நீங்கிச் சென்றுவிட்டான்.
# 266
சிறிய கண்களைக் கொண்ட பன்றியின் மிகுந்த சினத்தையுடைய ஆணானது
குட்டையான முன்னங்கால்களையுடைய பெரிய புலியுடன் போரிடும் நாட்டுக்குரியவனே!
மிகுந்த நாணவுணர்ச்சி உடையவர்கள் நாங்கள் உறுதியாக,
அதனால் வெளியிற் சொல்ல முடியாமல் கண்ணீரை விடுகின்றன நீ விரும்பியவளின் கண்கள்.
					மேல்
# 267
சிறிய கண்களைக் கொண்ட பன்றியின் மிகுந்த சினத்தையுடைய ஆணானது
குத்துக்கல்லையுடைய மலைச்சரிவின் இடுக்கில் வில்லுடன் காவல்காப்போரை ஏமாற்றி,
ஐவன நெல்லைக் கவர்ந்து உண்ணும் குன்றங்களுள்ள நாட்டினன்
வண்டுகள் மொய்க்கும் கூந்தலை அன்புடன் தடவிக்கொடுத்துப்
பண்பற்ற பல சொற்களைச் சொல்வான், நீ அதை நம்புவாய் என்று எண்ணி -
# 268
தாயை இழந்த, நெருக்கமான வரிகளைத் தன் மேனியில் கொண்ட குட்டியுடன்
வளமையான மலையில் சிறுதினையை உண்டுவிட்டு, குறவர்களின்
மலையில் ஓங்கியெழும் உயர்ந்த உச்சியில் காட்டுப்பன்றி உறங்கும்
நல்ல மலநாடன் பிரிந்து செல்வது
என்ன பயனைத் தருமோ? நம்மைத் தனியே விட்டுவிட்டுத் துறந்து -
					மேல்
# 269
கிழங்குகளை எடுக்கக் காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிட அதில் செழித்து வளர்ந்த கோரைப்புல்
நன்றாக விளைந்த நெல்வயலைப் போலத் தோன்றும் நாட்டினையுடையவன்,
திரும்பி வராமல் அங்கேயே தங்கியிருப்பதை நீட்டித்தால், செம்மையான வளைகளை அணிந்த
இரு பிரிவுகளையுடைய வழவழப்பான கூந்தலையுடையவளே! நீ அழும்படி
உனக்குத் துணையாக இருப்பதை மிகவும் நான் இழப்பேன், உங்களைச் சேர்த்துவைத்த என் மடத்தனத்தால்-
# 270
கிழங்குகளை எடுக்கக் காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிடும் மலைச் சரிவில்
முதல் விளைச்சலைக் குறவர்கள் கொய்துகொண்டு செல்லும்
புன்மையான குன்றிலுள்ள தனிமையுற்றுக் கிடக்கும் நெடிய மலைப்பகுதியைக்
கண்டாலும் கண்கலங்கி நீர் உகுக்கும் நோயினையுடையவளாவாய் என்று எண்ணி
தாமே வந்துவிட்டார் நம் காதலர்.
					மேல்
# 28 குரக்கு பத்து
# 271
அவரையை நிறையத் தின்ற குரங்கு, பொருள்களின் விலைகூறி விற்பவரின்
பையைப் போன்று தோன்றும் நாட்டினையுடையவன் பெண்கேட்டு வந்தால்
பல பசுக்களையும், பெண்டிரையும் பெறக்கூடிய தகுதியையுடையவன்,
நீண்ட காலமாக உறவுவைத்திருந்தவன் என்ற முறையில் நீர் கேட்பதைத் தருவான் இவளுக்காக.
# 272
கரிய விரலையுடைய குரங்கின், இதுவரை எதனையும் கற்றுக்கொள்ளாத வலிய குட்டி,
ஏறுதற்கரிய மலையில் இனிய தேனை எடுத்து (தேனீக்கள் கொட்டியதால்), அருகிலிருக்கும்
அச்சம் பொருந்திய நீண்ட மரக்கிளைக்குத் தாவும் நாட்டினையுடையவன்
இரவு நேரத்தில் வருவதை அறியமாட்டான்,
ஆனால் பேச்சுவாக்கில் "வரும் வரும்" என்கிறாள் தோழி! நம் தாய்.
					மேல்
# 273
நெடுவழியில் உள்ள அசோகின் பவளம் போன்ற ஒளிவிடும் தளிரைப்
புல்லிய தலையைக் கொண்ட குரங்கின் வலிய குட்டி நிறையத் தின்னும்
நல்ல மலையைச் சேர்ந்தவனே! நீ பிரிந்து சென்றால்
உன்னையே விரும்பி இருக்கும் இவள் என்னைக்காட்டிலும் கலங்கிக் கண்ணீர்விடுவாள்.
# 274
மந்தியின் கணவனான, ஒன்றையும் கற்றுக்கொள்ளாத ஆண்குரங்கு
ஒளிரும் நிறத்தையுடைய வலிமையான புலி உறுமுவதால் வேகமாகத் தன் பெண்குரங்கையும் கூட்டிக்கொண்டு
குன்றில் உள்ள உயரமான சரிவின் இடுக்கத்தைச் சென்றடையும் நாட்டையுடையவன்
பிரிந்து சென்றான், வாழ்க தோழியே! என்
மென்மையான தோள்களின் அழகையும், கண்களின் உறக்கத்தையும் தன்னுடன் எடுத்துக்கொண்டு -
					மேல்
# 275
குரங்குகளின் தலைவனான, நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு
பிரம்பின் அழகிய சிறிய கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும்
மழைநீர்க் குமிழிகளை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!
நான் உன்னை விரும்புகிறேன், எனினும், எனது
அழகிய பெண்மை நலம் வாடிப்போகுமோ, நீயும் என்மீது அன்புசெலுத்தினால்?
# 276
பெண்குரங்கின் காதலனான, இளந்தளிர்களை மேயும் ஆண்குரங்கு
குளிர்ச்சியுள்ள மணங்கமழும் நறைக்கொடியினைக் கொண்டு அகன்ற பாறையில் படிந்திருக்கும்
பொங்கிவரும் நுரை போன்ற வெண்மையான மேகத்தினை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!
நீ விரும்பவில்லையெனினும், இவளை மணந்துகொண்டு கூட்டிச் செல்,
பாறைகளின் வெடிப்புகளில் வளர்ந்திருக்கும் வேங்கை மரம் பூவிடும்
நல்ல மலைக்கு உரியவனின் மனைவி என்று சொல்லப்படும் வகையில்.
					மேல்
# 277
குறவரின் வீட்டு முற்றத்தில் இருக்கும் விலங்குகள் தம் முதுகைத் தேய்த்துக்கொள்ளும் குத்துக்கல்லில்
எதனையும் கற்றுக்கொள்ளாத பெண்குரங்கு தன் ஆண்குரங்கோடு குதித்து விளையாடும்
குன்றத்தைச் சேர்ந்த நாட்டவனே! உனக்கு ஒன்று கூறுவேன். எப்பொழுதும்
பசந்துபோகும்படி பிரிந்துசெல்லுதல் என்னத்துக்காகவோ? இவளின்
குளத்தில் வளரும் குவளை மலர் போன்ற ஒன்றோடொன்று எதிர்நிற்கும் கண்கள் -
# 278
மலைச் சரிவிலிருக்கும் மூங்கிலின், கணுக்கள் விட்டுக் கழையாக வளர்ந்திருக்கும் கோலின் மேல்
குரங்கின் வலிய குட்டித் தாவியதாக, குளத்தில்
மீனுக்காக எறியப்படும் தூண்டிலைப் போல, அந்த மூங்கிற்கழை வளைந்து நிமிரும் நாட்டினைச் சேர்ந்தவன்
அனுபவிப்போர் மறக்கமாட்டாத நோயினைத் தந்து,
காணுவோர் கண்டது போதுமென்று கண்களை விலக்கிக்கொள்ளாத அழகினைக் கவர்ந்துகொண்டான்.
					மேல்
# 279
வேரினால் பாறையைப் பற்றிக்கொண்டு உயரும் இத்தி மரத்தில் கையில் கிடைப்பதைப் பிடித்துக்கொண்டு ஏறி
காட்டு மல்லிகையை மேய்ந்த பெண்குரங்கு தன் துணைவனோடு
மலை மேல் குதித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே! நீ எம் ஊருக்கு வந்தால்,
பாறைகளுக்கு நடுவே உள்ளது எம்முடைய ஊர்;
சும்மாவே கிசுகிசுக்கும் சேரியில் பலரறியப் பழிசுமத்தும் இடமும் அங்கு உண்டு.
# 280
கரிய விரலையுடைய குரங்கின், இதுவரை எதனையும் கற்றுக்கொள்ளாத வலிய குட்டி,
பெரிய மூங்கிலின் பச்சையான கழையில் ஏறி நீலாவுக்கு நேரே ஆடுவது, சிறிய கோலால்
நிலவினை அடிப்பது போலத் தோன்றும் நாட்டைச் சேர்ந்தவனே!
இவளை மணந்துகொண்டாய் நீ எனக் கேட்டு, நான்
முன்பேயே சொல்லிவிட்டேன் அல்லவா! அதனை எனது தாய்க்கு.
					மேல்
# 29 கிள்ளை பத்து
# 281
பல கோடிக்கணக்கான ஊழிக்காலம் சென்றாலும்
கிளியே நீ வாழ்க பல்லாண்டு! ஒளிரும் அணிகலன்களை அணிந்த,
கரிய பலவான கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண்
தன் பெரிய தோள்களால் காக்கும் காவலுக்குக் காரணமானாய்!
# 282
மலைச் சாரலை அடுத்த பெரிய கதிர்களைக் கொண்ட சிறுதினையைக் காத்துப்
பெரிய செழுமையான குளிர்ந்த கண்களையுடைய குறிஞ்சிப்பெண் விரட்டிவிடவும்,
சோலையிலுள்ள சிறிய கிளி விடாமல் கதிரைக் கொத்தித்தின்னும் நாடனே!
மிகவும் அதிகமான இருள் பெருகிவருவதால், வரவேண்டாம்,
கொம்புகளையுடைய யானைகள் நடமாடும் காட்டுக்குள்ளான வழியில் -
					மேல்
# 283
கொடும் சொற்களைக் கொண்ட குறவனின் மென்மையான சொற்களைக் கொண்ட இளைய மகள்,
புன்செய்ப் பகுதியாகப் பதப்படுத்திய நிலத்தில் உழுத தினைப் புனத்தில்
பச்சையான முதுகினையுடைய சிறிய கிளிகளை விரட்டும் நாட்டினனே!
பெற்றோர் வாய்மையுடைய உறுதிமொழிகள் பலவற்றைக் கூறி விலக்கினாலும்,
காதலரின் பொய்மொழிகளான வலையில் விழும் பெண்கள் மிகவும் அதிகமானோர்.
# 284
இரங்கத்தக்கனவாம், சிவந்த வாயினையுடைய பசிய கிளிகள்!
குன்றத்தின் குறவர்கள் கொய்துவிட்ட தினைப் பயிரின் பசிய தண்டுகளையுடைய
கதிரறுத்த வெறும் தட்டைகள் நீண்டிருக்கும் புனத்தைக் கண்டபின்னரும்
அப் புனத்தைவிட்டுப் பிரிந்துசெல்லத் துணியாத பெரிய அன்பினை உடையவை.
					மேல்
# 285
பின்னப்பெற்ற கரிய கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய குறமகள்
மென்மையான் தினையின் மாவினை உண்டபடியே தட்டை என்னும் கருவியை ஓங்கி முழக்கி,
ஐவன நெல் கதிரை உண்ணும் சிறிய கிளிகளை விரட்டிவிடும் நாட்டினனே!
செறிவுற்ற வளைகள் நெகிழ்ந்துபோகும்படியாகப் பிரிந்து செல்லுதல்
எப்படி உன்னால் முடிகிறது, இங்கு இவளைத் துறந்து -
# 286
சிறுதினையைக் கொய்து விட்டுப்போன கதிரறுத்த தாளின் வெள்ளிய அடிப்பகுதியில்
காய்த்த அவரையில் வந்து படியும் கிளிகளை ஓட்டும்
தொடர்ந்த புதுவரவினையுடைய நல்ல மலை நாட்டினன்
ஏதோ குற்றம் செய்ய இன்று விரும்பினான் போலும்!
மாறுபட்டுத் தோன்றுகிறது தோழி! என் மாநிற மேனியழகு!
					மேல்
# 287
நீண்ட மலையின் உச்சியில் உள்ளது குட்டையான கால்களையுடைய வரையாட்டைப் பார்த்து,
தினைக் கதிரில் வந்து வீழும் கிளிகள் வெருளும் நாட்டினனே!
வல்லவனாய் இருக்கிறாய், உறுதியாக நீ, பொய் பேசுவதில்,
வல்லவன் அல்லவனாயும் இருக்கிறாய், உறுதியாக, நீ நல்லது அல்லாததைச் செய்வதில்.
# 288
நன்றாகச் செய்த உதவியை, நன்றாக உணர்ந்து
நாம் என்ன கைம்மாறு செய்யலாம் நெஞ்சே! அழகிய
மென்மையான இயல்பினைக் கொண்ட இந்தக் குறிஞ்சிப்பெண் காவல்காக்க,
பல கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தின் மேல் பரவித்திரியும் இக் கிளிகள் -
					மேல்
# 289
இந்தக் குறிஞ்சி பெண்ணின் இனிய குரலைக் கிளியின் குரலாக எண்ணி, மலைச் சரிவிலிருக்கும்
பசிய கதிர்களையுடைய தினைப்புனத்தில் வந்து படர்கின்றன கிளிகள் என்று
காவலையும் நிறுத்திவிடுவார்கள் போலிருக்கிறது,
பெரிய மலைகளின் நாட்டவனே! சீக்கிரம் மணந்துகொண்டு செல்வாயாக.
# 290
அறத்தைப் புரியும் செங்கோல் ஆட்சியையுடைய மன்னனைக் காட்டிலும், தாம் மிகவும்
சிறந்தன போலும் இந்தக் கிளிகள், சுடர்விடும்
பூக்கள் மணக்கும் கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண்ணால்
கனிவுடன் பார்க்கவும் படும், அவளால் கடிந்து ஓட்டவும் படுமே!
					மேல்
# 30 மஞ்ஞை பத்து
# 291
மயில்கள் களிப்புடன் ஆட, பேராந்தைகள் இரட்டை இரட்டையாய்க் குரல் எழுப்பும்
குத்துக்கல்லை உடைய மலைச்சரிவின் இடுக்கத்தில் உள்ளதுவே, பருத்த தோள்களையும்,
அழகிய தழையுடை அசைவாடும் அல்குலையும் கொண்ட
என் காதலி வாழும் மிகவும் நல்ல ஊர்.
# 292
மயில்கள் களித்தாட, கூட்டமான வண்டினங்கள் ஒலிக்க,
குளிர்ந்த மேகங்கள் சூழ்ந்த பெரிய மலை நாட்டினனே!
உமக்கு இவள் சிறந்தவள் என்பதைக் காட்டிலும் எனக்கு அவள் சிறந்தவள், நீ மிகவும் விரும்பி
நம் நல்ல வீட்டில் சிறப்பான மணவிழா நடைபெற
என்னுடைய நலமும் சிறக்க, நான் இப்போது பெற்ற இளையவள்.
					மேல்
# 293
மலைச் சரிவில் கமழ்கின்ற காந்தளின் நறிய பூங்கொத்தினைப் போன்ற
அழகினைக் கொண்ட கையால் என் கண்களைப் பொத்துகின்றவளே!
என் படுக்கைக்கு இனிய துணையாகிய பருத்த தோள்களையும்,
மயில் போன்ற மாட்சிமையையும் கொண்ட பெண்
உன்னை அன்றி வேறு உள்ளார்களோ என் நெஞ்சில் அமர்ந்தவர்கள்?
# 294
தீச்சுடர் போன்ற வேங்கை மலர்களிடையே இருந்த மயிலானது
அணிகலன்கள் அணிந்த பெண்ணைப் போலத் தோன்றும் நாட்டினனே!
இனியது செய்தாய்! உன் தந்தை வாழ்வாராக!
நல்ல வீட்டில் மணவிழா நடைபெற, இவளின்
பின்னலிட்ட கரிய கூந்தலில் பூச் சூடிவிட்டாய்!
					மேல்
# 295
திரும்பி வருமோ அதுவாக? வராமல்
அங்கேயே தங்குவதை விரும்பியதால் நிலையாக இருந்துவிடுமோ?
தினைப்புனத்தார் கொளுத்திய நெருப்புக்கு அஞ்சிப் புகலிடம் தேடியோடும் மயில்,
கதிர் அறுத்த மொட்டைத் தாளின் மீது இருந்த குருவி வருந்தும்படியாக,
பந்தாடும் மகளிரைப் போன்று குதித்துக் குதித்துச் செல்லும்
குன்றுகளைச் சேர்ந்த நாட்டினனோடு சென்ற என் நெஞ்சம் -
# 296
குறிஞ்சிப் பெண் காக்கும் பெரிய கதிர்களைக் கொண்ட தினையை
மலைகளில் வாழும் மயில் கவர்ந்துசெல்லும் நாட்டினனே!
நடுயாமத்தில் நள்ளிருளில் வருகின்றாய்,
கொடிய விலங்குகள் தாக்கினால் என்ன நேருமோ? அறியேன் நான்.
					மேல்
# 297
மலர்ந்த வேங்கை மரத்தின் பெரிய கிளையில் இருக்கும் ஆண்மயில்
பூ கொய்யும் மகளிரைப் போல் தோன்றும் நாட்டினனே!
நீ பிரிந்து சென்றாலும் அவளைவிட்டுப் பிரிவதில்லை,
உன்னோடு விரும்பிக்கொண்ட அந்த மடந்தையின் நட்பு.
# 298
மலர்ந்த வேங்கை மரத்தின் பெரிய கிளையில் இருக்கும் ஆண்மயில்
பூ கொய்யும் மகளிரைப் போல் தோன்றும் நாட்டினனே!
நீ பிரிந்து சென்றாலும் அவளைவிட்டுப் பிரிவதில்லை,
உன்னோடு விரும்பிக்கொண்ட அந்த மடந்தையின் நட்பு.
					மேல்
# 299
குன்றுகளையுடைய நாட்டினனின் குன்றிலுள்ள மலையுச்சிச் சரிவில் உள்ள
புதிய நீரைக் கொண்ட சுனையில் பூத்த திறந்த வாயையுடைய குவளையும்,
அழகிய சிலவான கூந்தலையுடைய அசைகின்ற நடையையுடைய குறிஞ்சிப்பெண்ணின்
கண்ணைப் போல் மலர்வது அரியது, இவளின்
மேனியைப் போன்ற சாயலைக் கொள்வது மயிலுக்கும் அரியது.
# 300
இந்தக் குறிஞ்சிப் பெண்ணின் கூந்தலைப் போல, ஆண்மயில்
தன் அழகிய சிறகுகளை விரிக்கும் பெரிய பாறைகளைக் கொண்ட மலைநாட்டினன்
வந்தானாக, அவனுக்கு எதிர்கொண்டு சென்றனர் மகள்கொடைக்காக,
அழகிய இனிய பேச்சினை உடையவளே! பொலிவுற்று விளங்குக உன்னுடை பெண்மைச் சிறப்பு.
					மேல்



பாலை       ஓதலாந்தையார்

# 31 செலவு அழுங்குவித்த பத்து
# 301
பெரிதான வேள்ளோத்திர மரத்தின் கறைபடியாத வெண்மையான பூங்கொத்துகள்
கடத்தற்கரிய பாலை வழியில் செல்வோர் தம் தலையுச்சியில் அணிந்துகொள்ளுகின்ற
அத்தகைய மலையைக் கடந்துசெல்வாயாயின்
கரிய மலைகளையுடைய நாட்டினனே! இவள் வருந்துவாள் பெரிதும்.
# 302
அருமையான பொருளை ஈட்டுதற்குரிய செயல் தவறிப்போனாலும் போகலாம்;
பெரிய தோள்களைக் கொண்ட இந்தப் பெண் உன் செயலைத் தடுக்கவும் செய்யலாம்;
எனவே, நீ பயணத்தை மேற்கொள்ளாதிருந்தாலோ, அது நல்லது;
மென்மையான நிலத்திற்கு உரியவனே! இவள் அழுமாறு, இவளைவிட்டுப் பிரிந்து.
					மேல்
# 303
புதிய மண்பாண்டத்தைப் போன்ற நிறத்தையுடைய கனிகளைக் கொண்ட ஆலமரம்,
பறவைகள் தன்னைவிட்டுப் போவதைத் தடுத்து நிறுத்தும் தன்மையுடைய கடினமான பாலை வழி
குளிர்ச்சிபொருந்தியதாகவும், இனிமையானதாகவும் ஆகும்படி
என்னையும் அழைத்துக்கொண்டு செல்வாயாக, இளங்காளையாகிய நீ!
# 304
கல்வியறிவில்லாத இடையர்கள் தம் கையிலுள்ள கோலினால் தோண்டிய
பசுக்களுக்கான நீரையுடைய பள்ளத்தில் உள்ள நீரை யானை கவர்ந்து குடிக்கும்
பாறைகள் நிரம்பிய பலவகையாய்ப் பிரிந்து செல்லும் பாதையின் வழியே சென்றால், மென்மையான இயல்பினையுடைய
மேகத்தைப் போன்ற கரிய நீண்ட கூந்தலையுடைய இவள் தனிமையில் வாடுவாள்,
வலிமையான குதிரையையுடைய தலைவனே! பிரிந்துசெல்லத் துணியவேண்டாம்!
					மேல்
# 305
ஆண்யானையானது, தன்னுடைய பெண்யானையைத் தழுவிக்கொண்டு வேறு நிலப்பகுதிக்கும் செல்ல நினைக்காமல்
பசி தம்மை மேற்கொள்ள வருந்தியவாறு இருக்கும் பசுமையென்பதே இல்லாமற்போன குன்றினில்,
ஒளிவிடும் தோள்வளையைக் கொண்ட இளையமகள் வாடும்படியாக,
என்ன பயனைத் தருமோ, இளங்காளையே! உனது பயணம்?
# 306
போரில் வெற்றியையுடைய தலைவனே! நீ அகன்ற பாலைநிலத்துவழியே சென்றால்
பல காசுமாலைகள் கோத்த வடத்தையுடைய அல்குலின் அழகிய வரிகள் வாட்டமடைய,
அழுகைக் குரலில் இசைக்கும் ஆம்பல் குழலைக் காட்டிலும் அழுதுவருந்துவாள், மிகவும்,
இந்த விழாக்காலத்துப் பொலிவு பெற்ற கூந்தலையுடைய மாநிறத்தவள்.
					மேல்
# 307
ஒன்றையொன்று உரசிக்கொண்ட காய்ந்துபோன மூங்லிலில் பிடித்துக்கொண்ட நெருப்பைக் கண்டு வலிய புலி வெருளும்
குன்றுகளையுடைய கடத்தற்கரிய பாலைவழியில் பயணம் மேற்கொண்டாய்!
நன்மையானதல்ல, தலைவனே! நீ ஈட்டிவரும் செல்வம்,
கொல்லிப்பாவையைப் போன்ற அழகிய உன் துணையான இவளைப் பிரிந்து நீ கொணர்வதால் -
# 308
நிறைவான, கரிய கூந்தலையுடைய, இந்த மென்மையான இயல்பினையுடையவளை விட்டுப்
பிரியாமல் இருந்தாலும் நல்லதே! மலர்ந்த பூங்கொத்துகளைக் கொண்ட,
காம்புகளையுடைய எறுழ மரத்தின் ஒளிவீசும் பூக்கள் பரவிக்கிடக்கும்
முருகன் தான் விரும்பித் தங்கும் பெரிய மலையைப் பிரிந்துசெல்லும்போது நீயும் பிரிந்துசெல்வாயாக!
					மேல்
# 309
வேனில் காலத்து மாதத்தில், வெப்பமுள்ள பாலைவழியைக் கடக்கும்
பயணத்தை மேற்கொண்டுள்ளாய் நீ! பெரிதும்
உன்னையே விரும்பி வாழுகின்றவளின் முதிர்ந்த சூலில் வயிற்றுக்குள்ளிருக்கும் உன் மகனின்
இனிய நகையைப் பார்ப்பதைக் காட்டிலும் இனியதோ,
செங்குத்தான பள்ளங்களைக் கொண்ட மலைநாட்டினனே! நீ பிரிந்துபோய் சம்பாதிக்கும் பொருள்?
# 310
பொன்னாற் செய்த புதிய வட்டவடிவக் காசுக்களை வரிசையாகக் கோத்த வடம் தவழும் அல்குலையும்,
ஒளிவிடும் வளைகளையும், மென்மையான தோளையும் கொண்ட இவளின் அணிகலன்கள் தத்தம் நிலையிலிருந்து கழன்றுபோகும்படியாக,
பிரிந்துசெல்லத் துணிவாய் என்றால்
மிகவும் அரியதாகிப்போய்விடும், இவளின் அழகிய நெற்றியின் அழகு.
					மேல்
# 32 செலவு பத்து
# 311
வேங்கை மரத்தில் பூப் பறிப்போர் பஞ்சுரப்பண் இசையில் ஒருவரையிருவர் அழைத்துக்கொள்வதக் கேட்டாலும்
அரிய வழித்தடத்தில் செல்வோர் அந்த வழியில் மேலும் செல்வதற்கு அச்சங்கொள்ளும்
பாலைக்காட்டு வழியே சென்றார் நம் காதலர்;
அங்கே இருப்பதை நீட்டித்துக்கொண்டே செல்வாரோ என்று நினைக்கிறது என் நெஞ்சு.
# 312
அறத்தால் நிரம்புவதாக! அறத்தால் நிரம்புவதாக!
வறட்சி உண்டானபோதிலும் அறத்தால் நிரம்புவதாக!
ஒளிபொருந்திய அழகைக் கொண்ட அருவியையுடைய,
பகைவரைக் கொள்வதில் வல்ல என் தலைவனை என் வீட்டார் பார்க்காதவாறு மறைத்துக்கொண்ட குன்று -
					மேல்
# 313
சுட்டுப்பொசுக்குகிறது உம் மகளின் காதல்விருப்பம்,
மிக்க துன்பத்தைத் தரும் வருத்தத்தோடு உயிர்போகும் நிலையில் வாடிப்போய்
பாழாய்ப்போன நம் நெஞ்சங்கள் துன்ப நினைவுகள் வாட்டிவதைப்பதால் கலங்கிப்போகுமாறு,
நம் இடத்துக்கும், அவள் விரும்பிச் சென்ற இடத்துக்கும் இடைப்பட்டுக் குறுக்கிட்டுக்கிடக்கும் நிலப்பகுதியிலுள்ள
பாலைக் காட்டைச் கடந்து சென்றாள் நம் காதல் மகள்.
# 314
ஒளிவிடும் தோள்வளைகள் சுழலுமாறு, பேய்கள் தம் பிணமாகிய உணவை விரும்பியுண்ண,
கரிய கண்களையுடைய காக்கையோடு கழுகும் வானத்தில் ஒலியெழுப்ப,
சிறிய கண்களைக் கொண்ட யானை ஆட்களைக் கொன்று திரிந்துகொண்டிருக்கும்
நீண்ட இடைவெளியைக் கொண்ட கடத்தற்கரிய பாலைவழி என்று சொல்வார்கள், நம்முடைய
தோளிடத்தில் வெறுப்புக்கொண்டவராய் நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர் சென்ற வழியானது -
					மேல்
# 315
படுக்கையே கதியாகக் கொண்ட, குளிர்ந்த மலர் போன்ற நெடிய கண்களையுடையவளின்
அழுகுரலைக் கேட்கமாட்டார், தொலைதூரத்தில் இருக்கிறார் என்பார்கள் -
அணிகலன்கள் கழன்றோடுமாறு செய்துவிட்டு,
மூங்கில்கள் முதிர்ந்து வளர்ந்திருக்கும் சோலையுள்ள காட்டைக் கடந்து சென்றவர் -
# 316
பொன்னாற் செய்த வட்டக் காசுகளைக் கோத்த பொன்னணிகள் பொலிவிழக்கத்
தேர் போன்ற அகலமுடைய அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாடிப்போகச்
சென்றுவிட்டார் தாமே! ஒளிவிடும் மலையில்
புன்மையான அடிமரத்தைக் கொண்ட ஓமை மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்த,
புலிகள் நடமாடித் திரியும் வழிகளைக் கொண்ட காட்டுப்பக்கம் -
					மேல்
# 317
ஆராய்ந்து பார்ப்போம் வா, தோழியே! பாழடைந்து,
பசுமையே அற்று வெந்துபோய்க் கிடக்கும் பாலையாகிய வெப்பமான காட்டினில்
கடத்தற்கரிய பாலைவழியைக் கடந்து சென்றோர் இருக்கும் நாட்டுக்குச்
சென்ற என் நெஞ்சம் அங்கேயே நீண்டநாள் இருப்பதன் பொருளினை -
# 318
நம் அழகிய நலமெல்லாம் கெட்டுப் பசப்பினை எய்தவும், பொறுக்கமுடியாத துயரம் வருத்தவும்,
மூங்கிலைப் போன்ற பருத்த தோள்களின் ஒளிரும் அணிகலன்கள் கழன்றுபோகவும்,
நம் விருப்பத்தை முற்றிலும் கொன்றுவிட்டவர், உறுதியாக, வேகமாக உயர்ந்து
பலவிடங்களிலும் பரந்து செல்லும் நெருப்பு எரித்தழித்த இடங்களிலுள்ள
முகடு உயர்ந்த வெயிலில் பளபளக்கும் மலையினைக் கடந்து சென்றவர் -
					மேல்
# 319
கண்கள் கூசும்படி ஒளிவிடும் கதிர்கள் நெருப்பாய்ச்சுடும் இடைத்தினையுடையதாய்,
நிலத்தில் பொந்துகள் பெருகியுள்ள, மரங்கள் கருகிப்போன காட்டினைக்
கடந்து சென்றாரோ நம் காதலர்,
மறந்து சென்றாரோ, அவரை மறவாத நம்மை?
# 320
முட்களுள்ள அடிமரத்தையுடைய இலவமரத்தின் ஒளிரும் பூங்கொத்திலுள்ள பெரிய பூக்கள்,
முழங்கும் காட்டுத்தீயை அலைத்துக் காற்று மேலெழுவதால், வானத்து
இடியினால் பிறக்கும் நெருப்புப் போன்று பெரிய நிலத்தில் உதிர்ந்துவிழுகின்ற
பிரிவுபட்ட வழிகளைக் கொண்ட அரிய பாலை வழியில் சென்றார் -
கொஞ்சமும் குறையாத பொறுக்கமுடியாத பிரிவுத் துயரத்தைத் தந்தவர்.
					மேல்
# 33 இடைச்சுர பத்து
# 321
காய்ந்துபோன தலையையுடைய பருந்தின், உளியைப் போன்ற வாயைக் கொண்ட பேடை,
உச்சியில் பரந்த தலையைக் கொண்ட ஓமை மரத்தின் அழகிய பிரிந்திருக்கும் கிளையில் சென்று
தனிமைத் துயருடன் அழைப்பொலி விடுக்கும், நிலம் காய்ந்துகிடக்கும், காட்டைக் கொண்ட,
வேற்று மொழி பேசுவோரிருக்கும் பல மலைகளைக் கடந்துசென்றாலும்
நினைவை விட்டு அகலாது ஒளிரும் தோள்வளை அணிந்தவளின் குணநலன்கள்.
# 322
உயர்ந்த மூங்கில்கள் கருகிப்போகுமாறு வேனல் நீண்டு,
கடுமையான கதிர்களைக் கொண்ட ஞாயிறு பாறைகளும் வெடிக்குமாறு சுட்டுப்பொசுக்குதலால்,
வெப்பமாக இருந்தன, முன்னர் - இப்பொழுதோ
ஒளிவிடும் நெற்றியையுடைய காதலியை நினைக்க நினைக்க,
குளிர்ச்சி பொருந்தியவாய் ஆகிவிட்டன, பாலை நிலத்திடை இருக்கும் வழிகள் -
					மேல்
# 323
கூர்மையான பற்களைக் கொண்ட செந்நாயானது, தன் சூல்கால விருப்பம் கொண்டிருக்கும் பெட்டைக்காகக்
கள்ளிகள் நிறைந்த அழகிய காட்டு வழியிடையே காட்டுப்பன்றியை எதிர்பார்த்திருக்கும்
வெப்பமான பாலை வழியில் பிரிந்து செல்லும் பாதைகளைக் கடந்து
வந்துகொண்டிருக்கின்றன நெஞ்சமே! நீ விரும்பியவளின் பண்புநலன்கள்.
# 324
காட்டுத்தீ எரித்துவிட்டுச் சென்ற, வெப்பமுள்ள நீண்ட இடைவழியில்
சிறிது நேரம் கண்ணயர்ந்தாலும், காண்கிறேன், உறுதியாக,
நள்ளென்னும் நடுயாமத்து இரவில், பரந்த மனையில் உள்ள நீண்ட இல்லத்தில்
வேங்கைப் பூக்களையும் வென்றுவிடும் அழகுத்தேமலைக்கொண்ட,
தேனொழுகும் கூந்தலையுடையவளாகிய அந்த மாநிறத்தாளை -
					மேல்
# 325
வேனில் காலத்து அரசமரத்தின் இலைகள் எழுப்பும் ஒலியினைக் கேட்டு வெருண்டு
பறவைகள் தம் உணவினை உண்ணாமல், வேறிடத்துக்குப் பறந்து செல்லும்,
மிகுதியாகச் சூடாகி வருத்தும் கடத்தற்கரிய பாலை வழி வருத்தாது -
எனது விருப்பத்துக்குரிய காதலியின் பண்புகளைத் துணையாகப் பெற்றதனால் -
# 326
தீக்கொழுந்தாய் ஒளிவிடும் அகன்ற பரப்பில் நிழலுள்ள இடம் எதுவும் பெறாமல்,
இளைய மானின் அழகிய பெண்ணானது தன் குட்டியோடும் நலிவுற்று வாட,
மழைநீர் பக்கங்களை அறுத்துச் சென்றதால் தேய்ந்துபோன சிறிய வழியினைக் கொண்டு
இன்னாதது, உறுதியாக, இந்தப்பாலை வழி;
இனியது, நிச்சயமாக, நான் விட்டுவிட்டு வந்தவளின் பண்புநலன்.
					மேல்
# 327
புள்ளிகளையும், வரிகளையும் உடைய நீண்ட கையானது சுடுமே என்று பயந்து
சிறிய கண்களைக் கொண்ட யானை, நிலத்தைத் தொடாமல் செல்லும்,
வெயிலால் காய்ந்துபோன மரக்கூட்டத்தையுடையது மூங்கில்கள் உயர்ந்துநிற்கும் பாலைவழி;
அப்படிப்பட்ட அரிய வழியிலும்
குளிர்ச்சியை ஊட்டுகின்றன இந்த அழகுள்ளவளின் அருமையான குணநலன்கள்.
# 328
நுண்ணிதான மழைத்துளிகள் வீழ்ந்ததால் நறிய மலர்கள் உதிர்ந்து பரவி,
குளிர்ச்சியாக இருந்தாலும் வெம்மையாகவே இருக்கிறது -
கள்ளங்கபடமற்ற இனிய துணையை விட்டுவிட்டுப்
பாலைத்தன்மை முதிர்ந்த மரக்கூட்டங்களைக் கொண்ட இந்தப் பாலைக் காட்டினைக் கடந்து செல்பவனுக்கு -
					மேல்
# 329
மனிதர்கள் நடமாட்டமற்ற பாழ்பட்டுப்போன அகன்ற இடத்தையுடைய,
கொடுஞ்செயல்கள் நடைபெறும் இடமாகிய கடுமையான பாலைவழியைக் கடந்து, நம்மோடு
மறுப்புத்தந்து மீண்டும் சென்றுவிடுமோ, அதுவாக? - செறிவான வளையல்கள்
கழன்று விழும் நிலையினையுடையவாக,
வீட்டில் தனியே இருப்பவள் பற்றிக்கொண்ட என் உறுதி கொண்ட நெஞ்சம் -
# 330
பொசுக்குகின்ற புழுதிக்காடாகிய வெயில் காயும் இந்தப் பாலைவழியைக் கடந்து
வந்தோமாயினும், கைவிடுக, இனிமேலும் பயணம்செய்வதை;
அழுத கண்களையுடையவளாக, தன் அழகிய நலம் சிதைந்துபோக,
ஞாயிற்றுக் கதிர்கள் சுட்டெரிக்கும் இந்தக் கொடிய பாலை நிலத்தையே நினைத்துக்கொண்டிருக்கும் -
ஒளிர்வும் திரட்சியும் கொண்ட அழகிய வளையணிந்தவளின் உள்ளத்தின் எண்ணங்கள் -
					மேல்
# 34 தலைவி இரங்கு பத்து
# 331
தோழியே! கேட்பாயாக! மலர்ந்த பூங்கொத்துகளையுடைய
கரிய அடிமரத்தையுடைய மரா மரத்தின் நிலையான கிளையில் உள்ள வெண்மையான பூக்கள்
அரிய பாலைவழியில் செல்வோர், தாம் விட்டுப்பிரிந்தவர்களை நினைத்துப் பார்க்கும்படியாக,
இனிமையாக மணம்பரப்பும் மலையிலும்,
துன்பம் தருவது என்பார்கள் அவர் சென்ற வழி.
# 332
தோழியே! கேட்பாயாக! சிறிதுகூட
அறப்பண்பு இல்லாதன, உறுதியாக, அவை - சிறந்த உச்சிகளைக் கொண்ட
குன்றுகள் பொருந்திய காட்டிலுள்ள பண்பு இல்லாத விலங்கினங்கள் -
"கொடியது, உம் காதலியை விட்டுப் பிரிந்து செல்வது,
செல்லவேண்டாம் ஐயனே!" என்று கூறமாட்டா, அங்கு.
					மேல்
# 333
தோழியே! கேட்பாயாக! சிறிதளவும்
ஆற்றாதனவாகிவிட்டனவோ, அவை? - அங்குள்ள
கற்பாறைகளையுடைய நல்லநாட்டைச் சேர்ந்த பறவையினத்தின் பெருங்கூட்டம்,
"நாங்கள் என் துணையைச் சேர்ந்து வாழ்கிறோம்,
எவ்வாறு நீர் பிரிந்து வாழ்கிறீர்" என்று கேட்கமாட்டா, அங்கு.
# 334
தோழியே! கேட்பாயாக! சிறிய இலைகளைக் கொண்ட
நெல்லி மரங்கள் உயர வளர்ந்திருக்கும் பாறைகள் சுடுகின்ற பாலைவழியிடையே,
பேதையாகிய எனது நெஞ்சம் பின்தொடர்ந்து செல்ல, செல்கின்றவர்
பாறையினும் இறுகிய மனம்படைத்தவர், உறுதியாக,
பல இதழ்களையுடைய மலர் போன்ற மையுண்ட கண்கள் அழும்படி பிரிந்து சென்றோர்.
					மேல்
# 335
தோழியே! கேட்பாயாக! நம்மிடம் -
இரத்தம் போலச் சிவந்த செவியை உடைய கழுகுகள்
மலையின் பக்கவாட்டுப் பகுதியில் கடுமையான முடைநாற்றத்தைக் கொண்ட பிணங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்
 - காட்டுப்பகுதி மிகவும் கடுமைகொண்டது என்பார்கள் -
நீண்ட நாள் கழித்து இங்கு வருபவர் சென்ற வழியான -
# 336
தோழியே! கேட்பாயாக! நம்மைவிட்டுப்
பிரிந்து செல்லாதவர் போல நம்மைச் சேர்ந்திருந்தவர்தான்
நிலையில்லாத பொருள் மேல் ஆசை முற்றியதால்
கொடும் வெயில் மிகுந்துள்ள பாலைவழியைக் கடந்து சென்றோர்.
					மேல்
# 337
தோழியே! கேட்பாயாக! நம்மிடத்தில்
மெய்யோடு மெய் சேரும்படி விரும்பிக் கைகளினால் தழுவிக்கொண்ட அணைப்பைக் காட்டிலும்
இன்பத்தைத் தருவன ஆமோ,
கண்டால் நடுக்கந்தரும் பெரிய குன்றுகளைக் கடந்து சென்றவர்க்கு, அவர் நாடும் பொருள்.
# 338
தோழியே! கேட்பாயாக! மலைச் சரிவில்
இலைகளே இல்லாமல் பூவாக மலர்ந்த உயர்ந்த நிலையைக் கொண்ட இலவமரம்
மலையில் தீப்பிடித்தாற்போன்று வழியின் தொடக்கத்திலேயே தோன்றும்
பிரிவதற்கு அரிதாகிய இளவேனில் காலத்திலும் நம்மைப் பிரிந்து செல்வதாகிய
அரிதான செயலைச் செய்தலில் வல்லவர் நம் காதலர்.
					மேல்
# 339
தோழியே! கேட்பாயாக! சிறிய இலைகளையும்
குட்டையான கிளைகளையும் கொண்ட வேம்பின் நறிய பழத்தை உண்பதற்காக,
வௌவால் பறக்க முனைந்து உயர எழும் மாலைக்காலமும்
இல்லை போலும் தோழியே! அவர் சென்ற நாட்டில்.
# 340
தோழியே! கேட்பாயாக! காதலர்
நினைத்துப் பார்க்கவில்லையோ? நாம்தான் அவர் வரும் காலம் என்று தடுமாறுகிறோமோ?
விட்டுவிட்டுப் பிரிந்துசென்றார் நம்மை,
தட்டைக் குச்சிகளில் பற்றிக்கொண்ட தீயினைப் போன்று ஊரில் பழிச்சொற்கள் உண்டாகுமாறு.
					மேல்
# 35 இளவேனி பத்து
# 341
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது -
குயிலின் பேடையானது இனிய குரலில் தன் துணையைக் கூவியழைக்க,
கரிய நிறங்கொண்ட குறுமணல் காற்று வீசுவதால் வளைவு வளைவாக மடங்கித் தோன்றும் இளவேனில் பருவம் -
# 342
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது -
வண்டினங்கள் களிப்புடன் பாடிக்கொண்டு சுற்றித்திரிகின்ற, பெரிய கிளைகளையும்
கரிய அடிப்பகுதியையும் கொண்ட நுணா மரங்கள் நறுமணத்தைப் பரப்புகின்ற இனிய பருவம் -
					மேல்
# 343
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது -
உறுதியாக நிற்கும் கோங்க மரம் தோற்றுவித்த
அழகு மிக்க கொழுத்த மொட்டுகள் மலர்கின்ற பொழுது -
# 344
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது -
நறுமணமிக்க பூக்களைக் கொண்ட குரவமரம் உண்டாக்கிய
கையினால் செய்யப்படாத பாவையைப் போன்ற மலர்களைக் கொய்யும் காலம் -
					மேல்
# 345
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது -
புதிய பூக்களைக் கொண்ட காட்டுமல்லிகை பூக்களை உதிர்த்து,
கூந்தலைப் போன்று நெளிநெளியாக இருக்கும் கருமணலுக்கு அழகுசேர்க்கும் அழகான வேனிற்பொழுது -
# 346
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது -
அழகிய கிளைகளையுடைய பாதிரி மரம் பூத்துக்குலுங்க,
சிவந்த கண்களையுடைய கரிய குயில்கள் இளவேனிலின் வரவை அறிவிக்கும்வண்ணம் கூவுகின்ற பொழுது -
					மேல்
# 347
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது -
அழகும் நலமும் சேர்ந்த என்னுடைய இளம் முலைகள் பொலிவுபெறும்படியாக
பொரியைப் போன்ற பூக்களைக் கொண்ட புன்கமரத்தின் இளந்தளிர்களை அரைத்துப் பூசிக்கொள்ளும் பொழுது -
# 348
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது -
வலமாகச் சுழித்திருக்கும் மராமரத்துப் பூக்களை மேற்பகுதியில் பரப்பிக்கொண்டு, நம்முடைய
மணங்கமழ்கின்ற குளிர்ந்த பொழில் மலர்ந்து காட்சியளிக்கும் நேரம் -
					மேல்
# 349
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது -
பொரிந்துபோன அடிப்பகுதியைக் கொண்ட மாமரத்துக் கிளைகள் மறைந்துபோகும்படி
நெருப்பைக் கக்குவதுபோன்ற இளம் தளிர்கள் முளைக்கும் இளவேனிற்பொழுது -
# 350
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது -
வேம்பின் ஒளிவிடும் பூக்கள் உதிர்ந்து விழ,
தேன் ததும்பும் சொற்களால் அவர் வருவேன் என்று தெளிவித்த பொழுது -
					மேல்




# 36 வரவுரைத்த பத்து
# 351
காட்டு வழியிலுள்ள பலாமரத்தின், வெயில் தின்றதால் வெம்பிப்போன சிறிய காயை,
அரிய அந்தப் பாலைவழியே செல்வோர் பறித்து உண்டவாறே கடந்துசெல்லும்
காடு பின்னால் சென்று மறைய வந்துவிட்டார், முடிவுக்கு வரட்டும், இனிமேல் -
பல இதழ்களையுடைய மலர் போன்ற மையுண்ட கண்களைக் கொண்ட மடந்தையே! உன்
நல்ல அழகுள்ள அல்குல் வாடிப்போன நிலை -
# 352
சிறப்பாக அம்பினைத் தொடுப்பதில் வல்ல மறவர்கள் வில்லால் எய்ய, இறந்துபட்டோரின்
பெயர் பொறித்த எழுத்துகளைக் கொண்ட நடுகல்லைப் போன்று, சிறப்பும் சொரசொரப்பும் உள்ள
பெரிய கையை உடைய யானை, பெரும் சினம் கொண்டதாகத் தங்கியிருக்கும்
கொடிய பாலைவழி கடப்பதற்கு அரிது என்று சொல்லாராய்,
வந்துவிட்டார் தோழி! நம் காதலர்.
					மேல்
# 353
எரியும் தீச்சுவாலைகள் இறுக்கி அணைத்திருக்கும் சிவந்த மலையைப் போல
சுடர்விடும் பூண்கள் ஒளிரும் ஏந்திய அழகிய மார்பினை
நீ இனிதாக அணைத்துக்கொள்ள வந்துவிட்டார்,
இருளடர்ந்த பெரிய சோலைகளைக் கொண்ட மலைகளைக் கடந்து சென்றவர்.
# 354
தனது இனிமையான பெண்நாயைக் கூடிய செந்நாயின் ஆணானது,
குட்டியையுடைய பெண்மானை உணவாக்கிக் கொள்ளாமல் விலகிப்போகும்
அரிய பாலைவழியில் வந்தனர் -
தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்த அரிவையே! உன் பண்புகள் அவரை இழுத்துவர, விரைந்து -
					மேல்
# 355
திருத்தமான அணிகலன்களை உடைய அரிவையே! உனது நலத்தை எண்ணி,
செயற்கரிய செயலாகிய பொருளீட்டலை, "பெரும் நலம் பெறுக" என வாழ்த்திவிட்டு
சொல்லாமற்கொள்ளாமல் திரும்பிவிட்டேன்; பல புள்ளிகளையும்
சிறிய கண்களையும் கொண்ட யானைகள் நடமாடும்
வழிகள் குறுக்கும்நெடுக்கும் கிடக்கும் முறைமையினைக் கொண்ட காட்டினில் -
# 356
நினைத்துப்பார்க்கவே இனிக்கின்றது, நிச்சயமாக! செல்வம்படைத்தவர்கள்
தங்கள் யானையைக் கட்டிப்போடும் பொன்னால் செய்யப்பட்ட கயிற்றைப் போல
ஒளிரும் நெருப்பு சுருள்சுருளாக மேய்ந்து தீர்த்த பாலை வழியிடையே
என் நெஞ்சினை வளைத்துத் தடுத்து உன்பால் கொண்டுவந்த உன் குணநலன்களை -
					மேல்
# 357
குரவம் பூக்கள் மலர்ந்திருக்க, மரவ மலர்கள் பூத்திருக்க,
பாலை வழிமுழுதும் அழகுபெற்றுத் திகழும் காட்டினைக் கண்டபோது,
விலக்கிவிடுக, பொருளீட்டுவதற்கான பயணத்தை, என்று திரும்பிச் செல்ல விரும்பி, உன்
அழகொழுகும் மா நிற மேனி மேலும் பொலிவுபெற
வந்துவிட்டார் தோழி! நம் காதலர்!
# 358
உச்சிகள் உயர்ந்த பல மலைகளைக் கடந்து சென்றாராயினும்
நெடுநாள் அங்குத் தங்கியிருக்க விடுமோ? அந்த நீண்ட பிரிவை எண்ணி
துடைக்கத் துடைக்கக் கலங்கிப்போய்
உடைத்துக்கொண்டு வரும் வெள்ளமாய்ப் போய்விட்ட கண்கள் -
					மேல்
# 359
கிட்டுவதற்கரிய பொருள்மீது பற்றுடையவனாகி, உன்னைத் துறந்து
பெரிய பாறைகளின் வழியே செல்லும் பாதையினிடையே பிரிந்து சென்றபோது
மிக மிக நீண்டுகொண்டே சென்றது; இப்பொழுது
அழகிய அணிகலன்களை அணிந்தவளாகிய உன்னை எண்ணி நான் வருவதால்
குறுந்தொலைவுள்ளதாகத் தோன்றுகிறது - அந்தப் பாலைநிலத்திடையே செல்லும் வழி.
# 360
நெருப்பு முற்றிலும் எரித்துவிட்ட வெப்பம் நிலவும் நீண்ட இடைவெளி என்பது
கடப்பதற்கு அரியது என்றாலும், மிக எளிதாகப் போய்விட்டதல்லவா! -
ஆசை கொண்ட நெஞ்சம் உன்னை அணைத்துக்கொள்வதை மிகவும் விரும்பி,
விரைந்து செல்லும் குதிரைகளைக் கொண்ட திண்ணிய தேரை ஓட்டிக்கொண்டு,
நீண்ட மான்கண்ணினையுடையவளே! உன்னை நினைத்துக்கொண்டு நான் வருவது -
					மேல்
# 37 முன்னிலை பத்து
# 361
உயர்ந்த கரையைக் கொண்ட காட்டாற்றின் மின்னுகின்ற மணலைக் கொண்ட அகன்ற துறையில்
வேனில் காலத்துப் பாதிரியின் விரிந்த மலர்களைக் கூட்டிக் குவித்து,
மாலையாகத் தைக்கும் கபடமற்ற பெண்ணே!
உன் கண்ணைக்காட்டிலும் சினமுடையன உன் முலைகள்.
அந்த முலைகளைக் காட்டிலும் சினமுள்ளன உன் பெரிய மென்மையான தோள்கள்.
# 362
பிணங்களின் மீதான கற்குவியல்களைக் கொண்ட ஒதுங்கிச் செல்வதற்கும் அரிய கிளைத்த வழிகளில்,
சிறிய கண்களைக் கொண்ட யானையினால் ஏற்படும் கெடுதலையும் எண்ணிப்பாராமல்
எவ்வாறு வந்தாய் பூமாலை அணிந்த மார்பினையுடையவனே! -
எமக்கு அருள்செய்யவேண்டும் என்ற நெஞ்சம் தூண்டிவிட,
இருள் தடுத்து நிற்கும் இந்த இரவினில் -
					மேல்
# 363
சிலை மரத்தால் செய்யப்பட்ட வில்லையும், அம்புகளையும், செக்கச்செவேலென்ற ஆடையையும் கொண்ட
கொலை செய்யும் வில்லினைக் கொண்ட வாழ்க்கையினரான எயினரின் தங்கையே! உன் முலையிலிருப்பது
சுணங்கு என நினைத்துக்கொண்டிருக்கிராய் நீ!
என்னைத் தாக்கி வருத்தும் தெய்வம் என நினைக்கிறது அதனால் தாக்கப்பட்ட என் நெஞ்சம்.
# 364
முள்ளம்பன்றியை உணவாகக் கொண்ட எயினரின் தங்கையான
இளமையும் மாநிறமும் உடைய பாலைநிலப் பெண்ணுக்கு உன் நிலையைப் புரிந்துகொள்ளும்படி
எடுத்துக் கூறினேன்; அவளது உடன்பாட்டை நான் இரந்து பெறும் வரை
வெல்லுகின்ற வேலையுடைய இளங்காளையே! நீ அவசரப்படவேண்டாம்.
					மேல்
# 365
கூட்டமான மான்களைக் கொன்று, தன் அண்ணன்மார் தந்த
கொழுப்புள்ள தசையுணவினைக் கவர்ந்து செல்ல வரும் பறவைகளை விரட்டும்
நலங்களால் சிறந்த பாலைநிலப் பெண்ணைப் போல பலவான மிகுந்த
நல்ல அழகியல்புகளைப் பிறர் விரும்பும்வகையில் பெற்றுவைத்திருக்கிறாய்!
என்ன தவம் செய்திருக்கிறாயோ, மாந்தளிரே!
# 366
அன்னையே, வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! என் தோழியின் மேனி
பசந்துபோயிற்று பெரிதும் என்று சிவந்துபோன கண்ணையுடையவளாய்,
வீணே அவளைக் கேள்விகேட்டுக்கொண்டிருந்தால், எப்படியேனும்
அறிந்துகொள்ள முடியுமா?
கோங்கத்தின் தளிர்க் கொத்தை ஒருவன் கொண்டுவந்து கொடுத்ததினால் இது ஏற்பட்டதென்று -
					மேல்
# 367
பொரிந்துபோன அடிப்பகுதியை உடைய கோங்கின் பொன்னைப் போன்ற புதிய பூக்களை,
விரிந்த பூங்கொத்துகளை உடைய வேங்கையோடு மாறுபட்டுத்தோன்றும்படி அணிந்து,
பலவாகக் கலந்த மலர்களை அணிந்த இளவேனில்காலத்துக் காட்டாற்றில்,
தேரோடு குறுக்காக வந்தவனின்
பெயரோடு ஒன்றிக் கலந்திருப்பது, அன்னையே! இவளது உயிர்.
# 368
நெருப்பைப் போன்ற பூக்களைக் கொண்ட இலவமரத்திலிருந்து மலர்ந்து வாடிப்போய் உதிர்ந்த பல மலர்கள்
பொரியைப் போன்ற பூக்களைக் கொண்ட புன்கமரத்தின் புள்ளிபுள்ளியான நிழலில் கோலமிட்டுக்கிடக்கும்
குளிர்ச்சியான பக்குவம் கொண்ட வேனில் காலத்தின் இன்ப நுகர்ச்சியை
எம்மோடும் கொள்வாயாக, பெருமானே! உன்
அழகிய மென்மையான கூந்தலையுடையவள் பிரிவுத்துன்பம் இல்லாதவளாக இருந்தால் -
					மேல்
# 369
வளமையான மலர்கள் சிதைவுறும்படி வண்டுகள் மொய்க்கும் நறிய பொழிலில்
மூங்கிலின் முளை போன்ற வரிசையான பற்களுடன் முறுவல் செய்யும் ஒருத்தியை நேற்று
நீ குறிப்புக்காட்டி அழைத்தாய் என்று ஊரே பேசும் பேச்சு
குரவ மரத்தின் நீண்ட கிளையில் தங்கியிருக்கும்
வேனிற்பருவத்துக் கரிய குயில் கூவும் பேரொலியிலும் பெரிதாக இருக்கின்றது.
# 370
வளமுள்ள கிளைகளையுடைய கோங்க மரத்தின் மலரால் செய்த குளிர்ந்த மணங்கமழும் மாலையை,
கரிய சிறகினைக் கொண்ட வண்டின் பெருங்கூட்டம் மொய்க்க,
உன்னால் விரும்பி அணிவிக்கப்பட்டவள்
யாரோ? என்னிடம் மறைக்கவேண்டாம்.
					மேல்
# 38 மகட் போக்கிய வழி தாயிரங்கு பத்து
# 371
மள்ளர்களின் கொட்டுமுழக்கத்தைக் கேட்டு மயில்கள் களித்து ஆடுகின்ற
உயர்ந்து நீண்ட குன்றுகளிலெல்லாம் தொங்கும் மேகங்கள் மழைபெய்து,
பாலைவழிகள் இனிமையானவையாக ஆகுக;
அறம்சார்ந்த வழி இதுவே என்று சரியாக உணர்ந்த என்
பிறை போன்ற நெற்றியையுடைய சிறுமி போன பாலைவழிகள் -
# 372
என்னையும் நினைத்துப்பார்த்தாளோ? தன்னைத்
தன் மனம் ஏற்றுக்கொள்ளும்படி தெளிவித்த உறுதிமொழிகளைக் கூறிய இளைஞனோடு
ஆரவாரப்பேச்சுள்ள இந்த பழமையான ஊரில் பழிச்சொற்கள் உண்டாகுமாறு
செழித்த பலவான குன்றுகளைக் கடந்து சென்ற என் மகள்தான் -
					மேல்
# 373
நினைத்துநினைத்துக் கண்ணீர்விடும் துன்பத்தை எய்துவாளாக!
புலியின் பிடியிலிருந்து தப்பித்த கிளைப்பட்ட கொம்புகளையுடைய முதிய கலைமான்,
தன் பெண்மானைத் தன்னைநோக்கி வரும்படி ஆண்மைக்குரலில் அழைக்கும்
வெம்மையான பாலைவழியில் என் மகளைக் கூட்டிச் சென்ற
அம்பினைத் தொடுத்த வலிய வில்லையுடைய இளைஞனின் தாயும்.
# 374
பலமுறை நினைத்துப் பார்த்தாலும், நல்லதாகவே வாய்க்கட்டும் -
யமனின் வலிமை கொண்ட இளைஞன் காத்துவர,
தலையை முடிந்து உள்ளே கொண்டையாகச் சுருட்டி வைத்துக்கொள்ள முடியாத கூந்தலையுடையவள்
ஆண்குரங்கும் அறியாத காட்டுவழியைக் கடந்துசென்ற அவளுக்கு -
					மேல்
# 375
இது என் பாவை போன்றவளுக்குப் பிடித்த பாவை;
இது என் பச்சைக்கிளி போன்றவளுக்குப் பிடித்த பச்சைக்கிளி;
இது என் பூவை போன்றவளுக்குப் பிடித்த பூவை என்று
சுழல்கின்ற பார்வையினையும், அழகு மிகுந்த ஒளிவிடும் நெற்றியையும் உடையவளை எண்ணி,
இவற்றைக் காணும்போதெல்லாம் மனம் கலங்குமாறு
எனைவிட்டுப் பிரிந்து சென்றாளோ என் பூப்போன்ற கண்ணையுடையவள்.
# 376
நாள்தோறும் கலங்கி அழும் என்னைக் காட்டிலும், இடையில் சிக்கிக்கொண்டு
காட்டில் எழுந்த தீயில் வெந்துபோகட்டும் -
நல்ல வேலைப்பாடு அமைந்த நீண்ட வீட்டிலுள்ளோர் கல்லென்று கலங்கி அரற்ற,
பூப் போன்ற மையுண்ட கண்களைக் கொண்ட கள்ளமில்லாதவள்
வீட்டைவிட்டுப் போகுமாறு செய்த அறப்பண்பே இல்லாத விதி -
					மேல்
# 377
நீர் வேட்கையால் தூண்டப்பட்ட வருத்தங்கொண்ட யானை,
இசைக்கருவிகளோடு சேர்ந்த பெருவங்கியம் ஒலிப்பது போன்று பெருமூச்செறியும் காட்டுவழியில்
சென்றுவிட்டாள் என் மகள்,
பந்தையும், பாவையையும், கழங்குகளையும் எமக்கு விட்டுவிட்டு -
# 378
பறந்து செல்வதற்கு முயன்று விரித்துப் பரப்பிய சிறகினையுடைய
வௌவால் வானுக்கு உயர்ந்து செல்லும் மாலை நேரத்தில் நாம் தனித்து வருந்த,
போய்விட்ட அவளுக்காகவா வருந்துகிறேன்? இனிய பேச்சையுடைய தன் தோழியின்
துணையை இழந்தவளாய்க் கலங்கிப்போகும் நெஞ்சினோடே
இணை ஒத்த மையுண்ட கண்களைக் கொண்ட இவளுக்காக வருந்துகிறேன்.
					மேல்
# 379
தான் விரும்பும் தோழியருடன், நல்ல திருமணத்தைப் பெறும் இன்பத்தைத் துய்ப்பதைக் காட்டிலும்
இனிதாகப் போய்விட்டதோ அவளுக்கு? குளிர்ச்சியான மலைகளில்
கூட்டமான யானைகள் நடமாடித்திரியும் சோலைகளின் வழியாக
ஒளி மிகுந்த வெள்ளிய வேலினைக் கொண்டவனோடு சேர்ந்து செல்லுதல் -
# 380
கடினமான பாதையைக் கொண்ட நீண்ட வெளியில் அவனோடு போய்விட்ட
முத்தைப் போன்ற அழகிய வெண்மையான பற்களையும், முகிழ்க்கின்ற புன்னகையையும் கொண்ட அந்தப் பேதையின்
தாய் என்ற பெயரையே அரும்பாடுபட்டுப்
பெற்றிருக்கிறேன் நான்;
அவளை அவனுக்குக் கொடுத்து அனுப்பிவைத்தவர்கள் அவளின் தோழிமாரே!
					மேல்
# 39 உடன்போக்கின் கண் இடை சுரத்து உரைத்த பத்து
# 381
பசிய காய்களான நெல்லிக்காய் பலவற்றை வாயில் போட்டு மென்று தின்றுகொண்டு
சிவந்த அடிமரத்தையுடைய மரா மரத்தின் வரிவரியான நிழலின்கீழ் இருப்பவர்கள்
யாரோ? இரங்கத்தக்கவர்கள் அவர்கள்; நீண்ட சிறகுகளையும்,
குட்டையான கால்களையும் கொண்ட மகன்றில் பறவையைப் போல
சேர்ந்தே இருக்கும் கொள்கையினையுடைய காதலர்கள்!
# 382
பறவைகளின் ஒலிக்கே பயந்துபோகும் கண்களையுடையவள், ஒளிபொருந்திய வேலுடன்
திருத்தமான கழல்களை அணிந்த இளைஞனோடு அரிய பாலைவழியே செல்வோள்
பகற்பொழுதில் இங்கு வந்து தங்குவதால் கல்லென்ற பேச்சு எழுகின்ற சிற்றூரிலுள்ள
அலங்காரமான அணிகலன்கள் அணிந்த இளம்பெண்களைப் பெற்றுள்ள
இல்லத்தரசியாகிய பெண்டிருக்கு இதனால் உண்டாகும் நோவு பெரிதாகும்.
					மேல்
# 383
தேனை உண்ணும் சுரும்பினங்கள் ஒலிக்கும் நாள் காலையில் பாலைவழியில் செறிவான
நெடிய அடிப்பகுதியைக் கொண்ட குட்டையான கிளையைப் பிடித்து
வலமாகச் சுழித்துப் பூக்கும் வெண்மையான பூங்கொத்துகளைத் தன் காதலி பறித்துக்கொள்வதற்கு நின்ற
இளைஞனின் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது,
தனது பஞ்சாய்ப் பாவைக்கும், தனக்குமாக,
அழகாகத் தாழ்ந்திருக்கும் கூந்தலையுடையவள் அந்தப் பூக்களைப் பறிப்பதைக் கண்டு.
# 384
தொலைவான இடத்தை நோக்கித் தளர்வான நடைபோட்டுச் செல்லும் அந்தணர்களே!
உம்மை ஒன்று இரந்து கேட்கிறேன்! எமது ஊரிலுள்ள
என் தாய் ஆசையோடு பேணி வளர்த்த மிகச் சிறந்த பெண்மை நலமெல்லாம் பொலிவுற்று விளங்க,
கடிய பாதையைக் கடந்து செல்கின்றாள் என்று சொல்லுங்கள் -
ஒன்றுபோல் இறங்கும் முன்கைகளையுடைய என் தோழிமாரிடம் -
					மேல்
# 385
எதற்கும் துணிந்த இளைஞனோடு, அவனது நீண்ட தேரில் ஏறி,
விரட்டிப் பிடிப்பதில் வல்ல வேங்கைகளைக் கொண்ட மலை பின்புறமாகச் சென்று மறைய,
வேறு பல அரிய பாலைவழிகளையும் கடந்துசென்றாள் அவள் என்று
சொல்லுங்கள் - வாழ்க! வழியே செல்லும் மாந்தர்களே!
என்னுடய அழகிய தோள்களை விரும்பிப் பாராட்டி,
என்னை வீட்டில் பூட்டிவைத்திருந்த, தருமத்தை அறியாத என் தாய்க்கு -
# 386
துன்பம் தரும் யானைகளோடு, புலிகளும் நடமாடித்திரியும் கடினமான வழியில்
தான் விரும்பிய காதலனோடு சேர்ந்து சென்றாள் -
நெடிய சுற்றுச் சுவரைக் கொண்ட நல்ல இல்லத்தில், மனம் மயங்கி
துன்பம் அடைகிறவளே! உன் முதல் சூலில் பெற்ற மகள் -
					மேல்
# 387
அறத்தைச் சொல்லும் அரிய மறைகளைப் பலமுறை ஓதிப்பயின்ற நாவினையும்,
அந்த வேத முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களையும் உடைய அந்தணர்களே! உங்களைத் தொழுகிறேன் என்று
ஒளிரும் தோள்வளைகளை அணிந்த உன் மகள் பற்றிக் கேட்கும் பேதையாகிய பெண்ணே!
கண்டோம், வரும் வழியிடையே அவளை,
தனது இனிய துணையானவன் இனிமையுடன் பாராட்ட,
குன்றுகள் உயர்ந்துநிற்கும், வெயிலில் ஒளிவிடும் மலைகளைக் கடந்து சென்றாள்.
# 388
நெருப்பு தழலாய்த் தகிக்கும் சூரியனின் கொடுமையான சினம் தணியும்வரை
கரிய அடிப்பகுதியையுடைய யா மரத்தின் வரி வரியான நிழலில் தங்கியிருந்துவிட்டு,
சிறிய குன்றின் இறக்கத்தில் நின்று பார்த்தால் காணலாம், செறிவாக வளையல்கள் அணிந்த
பொன்னைப் போன்ற மேனியையுடைய சிறுபெண்ணுடன்
வெற்றிகொள்ளும் வேலினையுடைய இளைஞன் சென்ற வழியை -
					மேல்
# 389
வேலைப்பாட்டில் சிறந்த செறிவான கழலையுடைய வலிமைமிக்க காலினைக் கொண்ட
கரிய தாடியைக் கொண்ட காளையோடு மெதுவாக நடந்துகொண்டு
கொல்லிப்பாவை போன்ற என் அழகிய வளையல் அணிந்த சிறுபெண்
சென்றாள் என்று சொல்கிறீர்கள், ஐயன்மாரே!
தரையில் பதிந்து சென்றனவோ அவளது அழகிய சிலம்பணிந்த பாதங்கள்?
# 390
நல்லவர்களிடமெல்லாம் சென்று, உள்ளங்கையை விரித்தும், தொழுதும்
பல முறை, மனம் அலைமோத, கேட்பவளே!
திண்ணிய தோள்களில் வலிமையான வில்லைக்கொண்ட இளைஞனோடு
பார்த்தோம், மெய்யாக, வருகிற வழியிலே, நாங்கள்.
					மேல்
# 40 மறுதரவு பத்து
# 391
கறை படியாத இறகுகளையுடைய சிறிய கரிய காக்கையே!
ஒருவருக்கொருவர் அன்புகொள்ளும் மரபையுடைய உனது சுற்றத்தோடு வயிறார உண்ணும்படி
பச்சை ஊன் கலந்த புதிய கொழுப்புள்ள சோற்றினைப்
பொன்னால் செய்த கலத்தில் தருவேன், பார்!
கடுஞ்சினமுள்ள வெற்றிசூடும் வேலினையுடைய இளைஞனோடு
அழகிய சிலவான கூந்தலையுடையவள் வரும்படி கரைந்து அழைப்பாயாக!
# 392
மூங்கிலின் வனப்பை இழந்த தோள்களையும், வெயில் பொசுக்கியதால்
அழகிய நலம் தொலைந்த நெற்றியையும் பார்த்து
வருந்தவேண்டாம், வாழ்க, தோழி! அவ்வாறு வருந்தினால்
எல்லையற்ற துன்பத்தைத் தரும்,
நல்ல மலைநாட்டினனோடு நான் வந்த வரவு..
					மேல்
# 393
வீட்டைவிட்டுச் சென்றதன் முதற்கொண்டு வேதனை மேலிட மெலிந்துபோய்
தருமத்தின் மீது கோபங்கொண்டு அதனைப் பழித்துரைக்கும் குழிவிழுந்த கண்ணையுடையவளே!
உன் இன்னலுற்ற நெஞ்சத்திற்கு இன்பம் உண்டாகும்படி
வருகிறாளோ உன் இளைய மகள்? -
கடுமையான திறங்கொண்ட வெள்ளிய வேலினையுடைய இளைஞன் முன் நடக்க -
# 394
மாண்பு சிறிதும் இல்லாத நெறிமுறையோடு, மனம் கலங்க இன்னல் செய்த
அன்பே இல்லாத தருமமும் எனக்கு அருள்செய்வதாயிற்று, உண்மையாய் -
வெப்பமிக்க பாலைவழியில் சென்ற என் அழகிய சிலவான கூந்தலையுடைய,
பெரிதான பேதைமையால் பெண்மானையே நிலைகெடச்செய்யும்,
சிறிய நெற்றியையுடைய என் இளையமகளை என் கண்முன் காட்டிற்று, வந்து பாருங்கள்.
					மேல்
# 395
காய்ந்துபோன மூங்கிலில் உற்பத்தியாகி, காற்றால் வளர்க்கப்பட்ட கூர்மையான கொழுந்துகளையுடைய நெருப்பின்
ஒளிவிடும் நீண்ட கொடியானது மலைப் பிளவுகளின் பொந்துகளில் முழக்கமிடும்
கொடுமையான, கடத்தற்கரிய பாலைவழியைக் கடந்துவிட்டோம்; மெல்லமெல்ல
நடந்துவா! வாழ்க! இளம்பெண்ணே! மலரும் பருவத்துப் பூக்களைச் சுமந்துகொண்டு,
முழங்குகின்ற ஓசையையுடைய அருவி விழுகின்ற
வெயிலில் ஒளிவிடும் செறிவான சோலைகளுள்ள நம் மலைகள் பொருந்திய நாட்டுக்கு -
# 396
புலியின் புள்ளிகளைப் போன்ற வேங்கையின் பொன்னிறப் பூங்கொத்துகளைக் கொய்து உன்னுடைய
கூந்தலின் ஓரத்தில் சூட்டிவிடுவதற்குள்ளே, மெல்ல மெல்ல
வழி நடந்த வருத்தத்தை ஆற்றிக்கொள் மடந்தையே!
மலைகள் பொருந்திய சிறப்பினையுடைய நமது ஊருக்குப்
பகல் விருந்தாளியாய் நுழைவோம் நாம்.
					மேல்
# 397
தொங்கிக்கொண்டிருக்கும் மயிர்களைக் கொண்ட பிடரியையுடைய செந்நாயின் ஆணானது,
குட்டிகளைக் கொண்ட பன்றியினைத் தாக்காமல் ஒதுங்கிச் செல்லும்
பாலைவழியின் பெரும்பகுதியைக் கடந்துவந்துவிட்டாள் என்பதனை
எமக்கு முன்னாக விரைந்து செல்லும் நீங்கள் சொல்லுங்கள் -
இனிய நகையுடன் முறுவல் பூக்கும் என் விளையாட்டுத் தோழியருக்கு -
# 398
பறவைகளும் அறிந்துகொள்ளாதபடி பல பழங்கள் பழுத்து,
இளமையான மான்கள் அறிந்துகொள்ளாதபடி பெரிதான நீர்நிலைகள் நிலைபெற்று
பாலைவழிகள் மிகவும் இனியன ஆகுக என்று
நினைக்கும்போதெல்லாம் கண்கலங்கி அழுகின்ற என்னைக் காட்டிலும்
மிகவும் பெரிதாகப் புலம்புகின்றது தோழியே! நமது ஊர்!
					மேல்
# 399
உமது வீட்டில் காலின் சிலம்பைக் கழற்றும் சடங்கினைச் செய்தாலும்,
எமது வீட்டில் திருமணமாகிய நல்ல மணவிழாவை நடத்துக என்று
யாராவது சொன்னால் என்ன? வெற்றியுள்ள வேலினையும்
குற்றமற விளங்கும் கழல் அணிந்த காலினையும் உடைய,
பொய்கூறுவதில் வல்ல அந்த இளைஞனைப் பெற்ற தாயிடம் -
# 400
மள்ளரைப் போன்ற வலுவுள்ள வெண்கடம்ப மரத்தைத் தழுவிக்கொண்டு
மகளிர் அசைவது போல ஆடுகின்ற மெல்லிய கொடி வளைந்து அசைகின்ற,
அருமையான பக்குவத்தில் காய்கனிகளைக் கொண்ட பெரிதான புதுமைநலம் மிக்க இளவேனில் காலத்தில்,
காதலால் உடன்சேர்ந்தவளாகி, அழகிய கழலையும்,
கடும் சினத்தையும், வெற்றிகொள்ளும் வேலினையும் உடைய இளைஞனோடு
இன்று வீட்டுக்கு வருவாள் என்று வந்தது செய்தி.
					மேல்




முல்லை     பேயனார்

# 41 செவிலி கூற்று பத்து
# 401
குட்டியினை நடுவில்போட்டுப் படுத்த ஆண்மானும், பெண்மானும் போல
தம் மகன் நடுவில் இருக்க, மிகவும்
இனிமையானது, உண்மையாகவே, அவர்கள் படுத்திருப்பது; இடைவெளியின்றி
நீல நிற வானம் சூழ்ந்த
இந்த உலகத்திலும், மேலுகத்திலும் இத்தகைய காட்சியைப் பெறுதல் மிகவும் அரியது.
# 402
புதல்வனை அணைத்துக்கொண்டிருக்கும் தாயின் முதுகைத் தழுவிக்கொண்டு
ஆசையுள்ளவனாகப் படுத்திருந்த படுக்கைநிலை, பாணர்
யாழின் நரம்புகளை மீட்டும் இனிய இசையினைப் போல
இனிமையானது, இதுதான் இல்லறத்தின் இயல்பும் ஆகும்.
					மேல்
# 403
தான் மணந்த காதலியின் மேல் மட்டுமல்லாது, தன்னுடைய புதல்வனிடத்தும்
அன்புகொண்ட உள்ளம், விரிந்து நிற்கிறது -
மிகப் பெரிய சிறப்பினைக் கொண்ட தன் தந்தையின் பெயரைத் தாங்கியவன்
முறுவலோடுங் கூடிய இனிய நகைப்பினை எழுப்பியவாறு
நடை வண்டியை உருட்டியபடியே வரும் தளர்ந்த நடையைக் கண்டு -
# 404
ஒளிபொருந்திய நெற்றியையுடைய தன் மனைவி மகனுக்கு முலைப்பால் ஊட்டிக்கொண்டிருக்கும்போது
தான் அவளின் முதுகினைத் தழுவுவான் - பெரிதும்
நறிய பூக்களை உடைய குளிர்ச்சியான முல்லைநிலப் பகுதிகளால் அழகுபெற்ற
பலவான குறுமலைகளைக் கொண்ட நாட்டிற்கு உரிய தலைவன்.
					மேல்
# 405
ஒளிவிடும் சுடரினைக் கொண்ட பாண்டில் விளக்கின் சிவந்த சுடரைப் போல
வீட்டுக்கு விளக்காக இருக்கிறாள், மெய்யாகவே, பெரு மழையால்
பூக்கள் பலவற்றை அணிந்திருக்கும் ஊர்களால்
முல்லைநிலம் அழகுபெறும் நாட்டினனின் புதல்வனின் தாய் -
# 406
பேரழகு பெற்ற மை தீட்டிய கண்களையுடைய மகன் விளையாடிக்கொண்டிருக்க,
தன் காதலியாகிய மனைவியைத் தழுவிக்கொண்டு இன்பமுடன் இருந்தான் -
பூந்தாதுக்களை ஆர உண்ணும் வண்டினங்கள் மொய்த்துக்கொண்டிருக்கும்
மலர்கின்ற பருவத்துப் பூக்கள் நிறைந்த முல்லைக்காட்டினைக் கொண்ட நாட்டுக்கு உரியவன் -
					மேல்
# 407
தான் விரும்பிய காதலியாகிய தன் மனைவியைத் தழுவிக்கொண்டு, பாணரின்
இன்பந்தரும் இன்னிசைப்பண்ணால் இயற்றப்பட்ட பாடலின் சுவையை நன்குணர்ந்து
இன்பந்தரும் காதற்சுகத்தை நுகருகின்றான் -
மென்மையாக ஆக்கப்பட்ட முல்லைநிலங்களைக் கொண்ட ஊர்களையுடைய நாட்டிற்கு உரியவன் -
# 408
பாணர்கள் முல்லைப் பண்ணை யாழில் வாசிக்க, ஒளிரும் அணிகலன்களைக் கொண்ட
ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவி முல்லை மலரைச் சூடியிருக்க,
இனிமையாக இருந்தான் நெடுந்தகையாளன் -
வெறுப்புணர்வு அற்ற பண்பினையுடைய தன் புதல்வனோடு பொலிவுபெற்று -
					மேல்
# 409
புதல்வனைச் சேர்ந்து தழுவினான் தந்தை; மென்மையான மொழியைக் கொண்ட
புதல்வனின் தாயோ அந்த இருவரையும் சேர்த்துத் தழுவிக்கொண்டாள்;
இன்பமானது, மெய்யாகவே, அவர்கள் இருக்கும் இருப்பு,
மிகவும் பெரிய பரப்பினைக் கொண்ட இந்த உலகமே இக் காட்சிக்குப் பெறும்.
# 410
மாலைநேரத்தில், வீட்டு முற்றத்தில், குட்டையான கால்களையுடைய கட்டிலில்,
மனைவியானவள் பக்கத்தில் இருக்க, புதல்வன்
மார்பினில் தவழும் மகிழ்ந்த சிரிப்பின் இன்பமான
நேரத்திற்கு ஒப்பானது -
மென்மையாக உள்ளத்தைப் பிணிக்கும் பாணனது யாழிசை -
					மேல்
# 42 கிழவன் பருவம் பாராட்டு பத்து
# 411
ஆரவாரிக்கும் ஓசையுடன் மேகங்கள் மிகப்பெரும் மழையைப் பொழிய,
கார்காலம் தொடங்கிவிட்டது கண்ணைக்கவரும் முல்லைக் காடுகளில்,
பாய்ந்தோடி வரும் புதுவெள்ளத்தில் விளையாடலாம்,
நீண்டுதொங்கும் கரிய கூந்தலையுடையவளே! வா! விரைந்து!
# 412
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
மொட்டுக்கள் மலரும் தளவம் ஆகியவற்றோடு, பிடவமும் மலர்ந்து அழகுபெற்று
பூக்களை அணிந்துகொண்டது போன்றிருக்கிறது முல்லைக்காடு,
பெரிய செழுமையான கண்களையுடையவளே! பொழிலில் ஆடுவோம், வா, விரைவாக!
					மேல்
# 413
உன்னுடைய நெற்றியைப் போலவே மணங்கமழும் நறிய குளிர்ந்த முல்லைவெளியில்
உன்னைப் போலவே மயில்கள் களித்தாட,
கார்காலம் தொடங்கிவிட்டது, குறித்த பொழுதில்,
பெரும் பண்புகளைக் கொண்ட அரிவையே! நாம் விரும்பத்தக்கவாறு -
# 414
பறவைகளும் விலங்குகளும் ஒன்று சேர்ந்து இனிதாகக் குதித்து விளையாட,
கொம்புகளிலும், கொடிகளிலும் பூக்கள் பல பூத்துக் குலுங்க,
மென்மையான இயல்பினையுடைய அரிவையே, இதோ பார்!
செழிப்பே உருவாகி நிற்கும் சிறந்த மணங்கமழும் முல்லைநிலம் -
					மேல்
# 415
இதுதான், மடந்தையே! நாம் மிகவும் விரும்பிய பொழுது!
இன்னும் சற்றுத் தள்ளியிருப்பது, மடந்தையே! நாம் நினைத்துக்கொண்டிருந்த முல்லைநிலம்!
இன்பமாகச் சேர்ந்திருந்து கழித்தால், இளமை என்பது
இனிமையானதல்லவா! இனியவருடன் கூடிச் சேர்ந்திருப்பது!
# 416
மலர்கின்ற பருவத்துப் பூக்களில் உள்ள நறிய பூந்துகள்களால் மேனி அழகுற்று, முல்லைக் காட்டினில்
தேனை மிகுதியும் உண்டு
களிப்படைந்த சுரும்புகள் ஆரவாரிக்கும் அழகிய புதரோரத்தில்
உன் இளைய பிடியைத் தழுவி இன்புற்ற களிறே!
ஒளிவிடும் தோள்வளையைக் கொண்ட என் இளம் மனைவியைக் கூடிமகிழ்ந்தேன் நானும் -
					மேல்
# 417
கார் வந்து தழுவிக்கொண்டது முல்லைநிலத்தை; பலவாகச் சேர்ந்து
ஏர்கள் பரந்து உழுகின்றன தினைப்புனங்களில்; அழகொழுக,
தேனுண்ணும் வண்டினம் மொய்க்க,
மலர்கள் நிறைந்த கூந்தலினள் தழுவிக்கொண்டாள் என்னை.
# 418
வானம்பாடியின் நாவறட்சியைக் களைந்து, ஓயாமல்
பெரும் மழை பெய்த முல்லைக்காட்டைப் போலக் கண்ணுக்கினியதாய்த் தோன்ற,
வானுலக மங்கையோ நீ?
உன் சிறந்த முலைகள் அழுந்துமாறு என்னைத் தழுவியவளே!
					மேல்
# 419
உயிரோடு உயிர் கலந்து ஒன்றிப்போன குற்றமற்ற அன்புறவால்
பிரிந்திருத்தலையே அறியாத புத்துணர்வுடன் தழுவிக்கொண்டு
நம்மைப் போலவே ஆசையுடன் கூடிமகிழ்கின்றன -
காண்பாயாக, இளம்பெண்ணே! முல்லைக்காட்டு விலங்குகள்.
# 420
பொன்னோ என்று கூறுமாறு மலர்ந்த கொன்றை, மணியோ என்னத்தக்கதாகத்
தேனைக் கொண்ட காயா, மலர்ந்து நிற்கும் தோன்றி ஆகியவற்றோடு
அருமையான அழகைப் பெற்றிருக்கிறாய், முல்லைநிலமே! உன்னைக்
காண்பதற்கு வருகிறேன் நான் -
ஒளிரும் நெற்றியையுடைய அரிவையோடு, அவளது அழகிய நலத்தை நுகர்வதை எண்ணி -
					மேல்
# 43 விரவு பத்து
# 421
மாலை நேரத்தில் வெண்மையான வயிரம்பாய்ந்த குறுந்தடியைப் புனங்காவலர் ஓங்கி எறிய,
நறுமணமுள்ள பூக்களைக் கொண்ட முல்லைக்காட்டினில் பதுங்கியிருக்கும் முயல்கள் வெருண்டோடும்
புல்லிய நிலத்தையுடைய நாட்டினனின் இளைய மகளின்
அழகு மிகுந்த பருத்த தோள்கள் தடுத்தன, வெளியூர்ப் பயணத்தை.
# 422
விரைந்த ஓட்டத்தையுடைய, நெடிய தேரில் பூட்டப்பட்ட, கால்கள் வலிதான குதிரையை,
நீண்ட கொடியையுடைய முல்லையுடன் தளவ மலர்களும் உதிர்ந்து விழுமாறு
வேகமாகச் செலுத்தி நாம் சென்றால்,
வரிசையாக அடுக்கப்பட்ட வளையல்களையுடைய முன்னங்கையையுடையவள் வருத்தம் தீர்வாள்.
					மேல்
# 423
கரிய மேகங்கள் இடிஇடித்து மழையைப் பொழிகின்றன,
ஒளிவிடும் நெற்றி பசந்துபோகுமாறு பயணத்தை மேற்கொண்டாய்,
நானோ, உன்னைப் பிரிந்து இருக்கமாட்டேன்,
அழகிய மலர்போன்ற மையுண்டகண்களும் கண்ணீரினால் நிறைந்தனவே!
# 424
முல்லைநிலம் அழகுடன் தோன்றும் நாட்டினனின் அன்புக்குரிய இளைய மகளின்
ஒளிவிடும் நெற்றி பசந்துபோகும்படி, நீ வெளியூர் சென்றால், தெளிந்த நீரிலுள்ள
மொட்டாய் இருந்து மலர்கின்ற தாமரையைப் போன்ற உன்
அன்புக்குரியவனான புதல்வன் அழுவான் இனிமேல் - தாய்முலைப் பாலுக்கு.
					மேல்
# 425
புன்மையான முதுகைக் கொண்ட பெட்டைக் கோழி, தன் சேவல் தன்னைக் கூடி இன்பம்கொள்ள,
அரசர்களின் வாத்தியக்காரர்களைப் போல் களிப்புடன் ஒலியெழுப்பும் காட்டினூடே
விரைவாக நெடிய தேரைச் செலுத்தினால்
தலைவியின் அல்லலுக்குக் காரணமான அரிய நோயைத் தீர்த்தல் எமக்கு எளிதானதே!
# 426
- வெற்றிதரும் வேலினையுடைய வேந்தன், தன் அரிய தொழிலைத் தவிர்ந்தான், இனி,
நல்ல நெற்றியையுடையவளே! நானும் பயணத்தைக் கைவிட்டுவிட்டேன்;
முரசுகளின் பேரொலி அதிரும்படியாகப் படைகளைச் செலுத்தி
பகையரசர் மாண்டொழிய அவரை வெற்றிகொள்ளும் அரிய போர்க்களத்தின் -
					மேல்
# 427
பெரிதாக என்னுடன் மாறுபட்டு நிற்கும் மலர்போன்ற கண்களையுடைய மடந்தையே! நீயும்
கார்ப்பருவம் வருகின்ற காலம் என்று என்னைப் போக விடுவதற்கு உடன்படமாட்டாய்!
போரைத் தொடங்கிய வேந்தனும், போர்ப்பாசறைக்கு
வரமாட்டான் அவன் என்று போர்ப்பயணத்தைக் கைவிட்டுவிட்டான்.
# 428
தேரில் செல்லுதல் தவிர்க்கப்படவேண்டிய அளவுக்கு வானவில் வளைவாகத் தோன்றி
பெருத்த முழக்கத்துடன் மேகங்கள் மழையைச் சொரியத்தொடங்கிவிட்டன;
வேந்தன் எனக்குப் பணித்த விழுமிய போர்த்தொழில் கைவிடப்பட,
நான் தொடங்கிவிட்டேன் உன்னைப் பேணிப்பதுகாப்பதை.
					மேல்
# 429
பலவான கரிய கூந்தலையுடையவளே! பிரிவால் பசந்துபோவதை நீ நிறுத்திக்கொண்டால் மட்டுமே
செல்கிறேன் நான்; பகைவரின்
வெற்றிகுறித்து எழுப்பிய கொடிகளையுடைய கோட்டையை அழிக்கும்,
போரையன்றி வேறொன்றைக் கல்லாத யானைப்படையையுள்ள நம் வேந்தனின் பகைவரை வெல்வதற்கு -
# 430
நெடிய குன்றுகளின் மேலுள்ள குட்டையான அடிமரத்தையுடைய கொன்றையின்
தட்டிய பொன் என்னுமாறு ஒளிரும் இதழ்கள் பிரகாசிக்கும்
காட்டினைப் பொருந்திய நாட்டினனின் மகளே!
அழுவதை நிறுத்திக்கொள், தவிர்த்துவிட்டேன் பயணத்தை.
					மேல்
# 44 புறவணி பத்து
# 431
நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
அழகிய நிறம்பெற்ற பெரிய மலை, தன்னுச்சியில்
நீலமணி போன்ற தோற்றத்தையுடைய மயில்களையும் கொண்டுள்ளது.
# 432
நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
நெருப்பில் சுட்ட பொன்னைப் போன்று ஒளிவிடும் கொன்றை மலர்களை அணிந்துகொண்டு
திருமண வீட்டில் நுழைபவரைப் போன்ற மள்ளரையும் கொண்டுள்ளது.
					மேல்
# 433
நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
நீர்வளம் சிறக்க, மேகங்கள் வாரிவழங்கும்
கார்கால மழையை எதிர்கொள்ளும் கானத்தையும் கொண்டுள்ளது.
# 434
நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
குட்டியையுடைய பெண்மான்கள் குதித்து விளையாட,
குளிர்ச்சியான மழை பொழிந்த இன்பத்தையும் கொண்டுள்ளது.
					மேல்
# 435
நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
நிலத்தை அழகுசெய்யும் நெய்தல்பூக்கள் மலர,
பொன்னைப்போல் அழகிய கொன்றையையும் பிடவத்தையும் கொண்டுள்ளது.
# 436
நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
நல்ல பொன்னைப் போன்ற ஒளிவிடும் பூங்கொத்துகளையுடைய
கொன்றையோடு மலர்ந்த குருந்த மரங்களையும் கொண்டுள்ளது.
					மேல்
# 437
நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
ஆலங்கட்டிகளோடும் கூடிய குளிர்ச்சியான மழை பெய்தலால்,
வெண்மையாக மலர்ந்த முல்லையையும் கொண்டுள்ளது.
# 438
நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
பச்சையான புதர்களில் பலவிதப் பூக்கள் மலர,
இன்புறத் தகுந்த இயல்பினையும் கொண்டுள்ளது.
					மேல்
# 439
நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
குருந்தம் பூக்களைத் தலைமாலையாகச் சூடிய கோவலர்களின்
மிக்க குளிர்ச்சி நிலைபெற்ற குடியிருப்புகளையும் கொண்டுள்ளது.
# 440
நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
குளிர்ந்த மழையை உலகுக்கு அருளிய கார்காலத்தின்
ஒளிரும் சுடர் போன்ற தோன்றிப்பூக்களையும், தளவ மலர்களையும் கொண்டுள்ளது.
					மேல்
# 45 பாசறை பத்து
# 441
வியப்புடையவாயின, செம்மைப்பண்புடையோளின் தூதுமொழிகள்!
இந்தக் கார்காலத்து இடிமுழக்கத்தில், தன்னைச் செயலற்றுப்போக பிரிந்திருப்பதாகக் கூறியது
மிகுந்த துன்பத்தைச் செய்தன எனக்கு;
நான் படும் வேதனையை அவள் அறிந்தால் மிகவும் நல்லது.
# 442
மிக்க சினத்தையுடைய வேந்தன் தன் அரிய போர்த்தொழிலினை முடித்துக்கொண்டால்
மிகப்பெரிய விருந்தினைப் பெறுவதற்குரியவள் ஆவாள் -
கார்கால மேகங்களால் இருண்டு தோன்றும் வானத்திற்கும் உயரே உள்ள உலகத்து
அருந்ததியைப் போன்ற கற்பினையுடைய,
குரும்பை போன்ற மணிகளாலான பூணினை அணிந்திருக்கும் புதல்வனின் தாய்.
					மேல்
# 443
மிகவும் தொலைவில் உள்ளது என்ற தயக்கம் இல்லாமல், நல்ல தேரில் ஏறிச் சென்று
ஒளிவிடும் நிலவின் இளைய பிறையைப் போல -
காண்பேனே, அவளின் அழகுபெற்ற ஒளிவிடும் நெற்றியை;
வானளாவிய அரண்கள் பலவற்றைக் கைப்பற்றிய,
கழுவிப்பூசிக்கப்பட்ட முரசையுடைய வேந்தன் தனது போரைக் கைவிட்டால்.
# 444
பெரிய தோள்களையுடைய பேதையான காதலியைக் காண்பேன் -
நெடிய மதில்களையுடைய அரணைத் தாக்கியதால் கொம்பில் இறுக்கிய வளையம் பிளந்துபோக,
கூர்மையான நுனியும் மழுங்கிவிட்ட பெரிய கொம்பினைக் கொண்ட யானைப்படையையுடைய
வெற்றிதரும் வேலினையுடைய வேந்தன் தன் பகையுணர்வு தணிந்து
இப்பொழுதேனும் தன் நாட்டுக்கு புறப்பட எண்ணுவதை நாம் பெற்றால் -
					மேல்
# 445
புகழ் நிறைந்த சிறப்பினையுடைய மனைவி தனித்து வருந்த,
அவளை விட்டுவிட்டு வந்தாயே, இந்த அரிய போருக்கான பாசறைக்கு -
நல்ல காளையைத் தழுவிக்கொண்டு இளம்பசுக்கள் வீடுதிரும்பும் நேரத்தில்,
நினைக்குந்தோறும் கலங்குகின்ற நெஞ்சமே!
விரைந்து என்னையும் இங்கு வருமாறு செய்துவிட்டாயே!
# 446
முல்லை மணக்கும் கூந்தல் மேலும் மணங்கமழ,
நல்ல இன்பங்களைக் காண்போம், மாநிறத்தவளே!
பாசறையில் தங்கிச் செய்யும் அரிய போர்த்தொழிலில் மன்னனுக்கு உதவிவிட்டு, நம்
அன்புக்குரிய நல்ல நாட்டுக்கு நான் திரும்பும் பொழுது.
					மேல்
# 447
பிணிப்பிலிருந்து விடுதலை பெறுக, மன்னவனின் போர்த்தொழில்!
பனியினால் வளரும் செம்முல்லையின் மீன்கொத்தியின் மூக்கு போன்ற சிவந்த அரும்புகளைச்
சிறகடிக்கும் வண்டுகள் மலரச்செய்ய
முன்னினும் அழகு பெற்றன; காண்பேன் ஒளிபெற்ற நெற்றியையுடையவளை.
# 448
முழங்குகின்ற குரலில் முரசம் காலையில் ஒலிக்க,
கடும் சினத்தையுடைய வேந்தன் போரை எதிர்கொண்டான்;
ஆழமற்ற பள்ளங்களின் பக்கத்தில் முல்லை பூத்திருக்க,
பொங்கி எழுந்த மழையின் மிகுந்த துளிகளைக் கார்காலம் எதிர்கொண்டது;
அழகிய சிலவான கூந்தலையுடையவளை நினைக்கும்போதெல்லாம்
தூங்காமல் வருந்துவதை நான் எதிர்கொள்கிறேன்.
					மேல்
# 449
சரளைக் கற்கள் நிரம்பிய மேட்டுநிலம் பிளக்குமாறு இயங்கும் சக்கரங்களோடு,
கொட்டகையில் நிற்பதை வெறுத்த வலிய குதிரைகள் பூட்டப்பெற்று,
திண்மையாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளது தேர்;
ஒளிவிடும் நெற்றியையுடையவளைக் காணலாம், வேந்தன் தன் போரை முடித்துக்கொண்டால்.
# 450
முரசுகள் மாறி மாறி ஒலிக்கும் அரிய போர்த்தொழிலுக்கான பகைமை தணிந்து
நாட்டுக்குத் திரும்ப எண்ணிவிட்டான் பெருமை பொருந்திய வேந்தன்;
வெப்பமாகப் பெருமூச்செறிக்கும் பிரிவுநோய் தணியும்படியாக
செவ்விய பண்புடையாளின் இளமையான முலைகளுக்கிடையே படுத்துத்தூங்கட்டும் என் கண்கள்.
					மேல்





# 46 பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
# 451
கார்ப்பருவம் தொடங்கிய பொழுதில் நம்மைச் செயலற்றுப்போக விடுத்துச் சென்றவர்
தேரால் கொண்டுவரப்படும் விருந்தாளியாய்த் தங்குதல் எப்படி நடக்கும்?
வெல்ல முடியாத படையின் வலிமையைக் கருதி
மேலும் நீடித்திருத்தல் வேந்தனது ஆணையாயிருக்குபோது -
# 452
வறண்டுகிடந்த நிலம் வளம்பெறுமாறு பெருமழை பெய்து
முழங்கும் குரலையுடைய மேகங்கள் கார்காலத்தைத் தோற்றுவித்தன;
பகையை விரும்பிப் போரிடச் சென்ற காதலர் அவரிடமிருந்து திறையைப் பெற எடுக்கும் முயற்சி
மென்மையான தோள்களின் சிறந்த அழகு மறைந்துபோக
பொன்னால் செய்யப்பட்டது போன்ற பீர்க்கின் மலர் போன்ற பசலையைத் தோற்றுவித்தது.
					மேல்
# 453
பள்ளங்கள்தோறும் தவளைகள் ஆரவாரிக்க, மர உச்சிகளில்
இனிய குரலில் பறவையினங்கள் ஒலிக்க, அதோ பார்!
கார்காலம் தொடங்கிவிட்டது, சரியான பருவத்தில்; அதனால்
நீர் வரத் தொடங்கிவிட்டது என் நெடும் கண்ணில்; அவரின்
தேர் வரத் தொடங்கவில்லையே, நம் இடம் நோக்கி -
# 454
செம்முல்லையின் பசிய கொடியைத் தழுவிக்கொண்டு, மெதுவாக
நிலவைப் போன்ற அழகிய வெண்மையான அரும்புகளைக் கொண்டு
கார்ப் பருவத்தை விரும்பித் தோன்றியிருக்கின்றன முல்லை மலர்கள்; அவரின்
தேர் வருவதை விரும்பி இருக்கிறது என் மாநிற அழகெல்லாம்.
					மேல்
# 455
அரசனின் பகையுணர்வு தணியும்படியும், முரசின் ஒலிகள் ஓயும்படியும், சினங்கொண்டு
மிகுந்த முழக்கத்தோடு மேகங்கள் கார்காலத்தைத் தொடங்கிவிட்டன;
மிக மிக இரங்கத்தக்கன அவை - மேனியின் பளபளப்பு மங்கிப்போய்
மின்னிடும் அணிகலன்கள் நெகிழ்ந்துபோகும்படி மெலிவடைந்து
தம் பழைய அழகெல்லாம் இழந்த என் பெரிய மென்மையான தோள்கள் -
# 456
நினைத்துப் பார்க்கமாட்டாரோ தோழி! வெண்மையான இதழ்களை உடையதாய்,
பகலில் காணப்படும் மதியின் தோற்றத்தில் உள்ள பகன்றையின் பெரிய மலர்கள்
வெண்மையான கொடியைக் கொண்ட ஈங்கையின் பசுமையான புதர்களில் அழகாய் மலர்ந்திருக்கும்
பொறுக்கமுடியாத பனியோடும் கலந்து வரும் கூதிர்ப் பருவத்தில்
ஒன்றாக இங்கே தங்கியிருப்பதை உறுதிசெய்து அகன்றவர் -
					மேல்
# 457
பெய்யும் பனியினால் நலிவுற்று, அதினின்றும் உய்யும் வழியினைக் காணாது
குருகினங்கள் ஒலியெழுப்பும் பிரிந்திருக்க அரிதான கூதிர்ப் பருவத்தில்,
பிரிந்து வாழ்தலை ஆற்றார், நம் காதலர்;
மறந்து வாழ்தலை ஆற்றாது என் பேதைமை பொருந்திய நெஞ்சம்.
# 458
கொத்துக்கொத்தான காய்களைக் கொண்ட கொன்றையின் குழல் போன்ற பழங்கள் பழுத்து முதிர்ந்தன;
இடிமுழக்கத்தோடு சேர்ந்த மழையை எதிர்கொண்ட மழைத்துளிகளைக் கொண்ட குளிர்ச்சியான மலர்கள்
பாணர் பெருமகனான தலைவன் பிரிந்துசென்றதற்காக,
சிறந்த அழகினை இழந்த என் கண்களைப் போல் ஆயின.
					மேல்
# 459
மென்மையாகக் கீழிறங்கும் பருத்த தோள்களின் பசலைநிறம் மாறிப்போகும்படி,
தழுவுவதற்கும் பொருந்திவருமோ? பகைவரின்
கடினமான அரண்களையும் வெற்றிகண்ட சிறப்புப் பொருந்திய படையைக் கொண்ட
வெல்லும் போரினையுடைய வேந்தனோடு சென்ற
நல்ல வயல்களைக் கொண்ட ஊரினனின் நறிய குளிர்ந்த மார்பு -
# 460
மிகுந்த சினத்தையுடைய வேந்தனும் பாசறை வாழ்வை வெறுக்கமாட்டான்;
பெரிய ஆரவாரத்தையுடைய மலைகளைச் சேர்ந்தவனிடமிருந்து செய்தியும் இல்லை;
செறிவான இலைகளையுடைய வாழையின் மரம் முழுதும் அசையும்படி
துன்பத்தைத் தரும் வாடையும் வருத்துகின்றது;
என்ன ஆவேன், இரங்கத்தக்கவளான நானே!
					மேல்
# 47 தோழி வற்புறுத்த பத்து
# 461
மேகங்கள் சிதறிய நீரின் மிகுதியால் பிடவங்கள் அரும்புகளைத் தோற்றுவித்தன;
கானமும் நீர்த்துளிகளைத் தூவிவிட கார்காலம் தொடங்கிவிட்டது;
வருந்தவேண்டாம், வாழ்க தோழியே! சிறிதளவுகூட
உன்னைப் பிரிந்து இருக்கமாட்டார் -
வெற்றியையுடைய வேந்தனின் பாசறையிலிருப்பவர்.
# 462
காலமல்லாத காலத்தில் பெய்த மழையைக் கண்டு கார்காலம் என்று தவறாக எண்ணிய
பேதையாகிய அழகிய கொன்றை மாலையாய்ப் பூத்திருக்கும் நிலையை நோக்கி,
எதற்காக, இப்போது, மடந்தையே! உன் வருத்தம்? உன்னிடமுள்ள
மேம்பட்ட அழகினை வாடிப்போகச்செய்பவர் அல்ல அவர் -
மொட்டுகள் மலர்கின்ற முல்லைக்காடுகளைக் கொண்ட நாட்டைக் கடந்து சென்றவர்.
					மேல்
# 463
புதரின் மேல் பூக்கும் நறிய மலர்களை அழகுபெறத் தொடுத்து, உன்
வனப்பு மிகுந்த கூந்தல் பொலிவுபெறுமாறு சூட்டிவிட
வராமல் இருக்கமாட்டார்; பகைவரின்
நாட்டில் கிடைக்கும் நல்ல அணிகலன்களைக் கொண்டுவருவதற்காகவே
தம் வரவை நீட்டித்துள்ளார், தோழி, நம் காதலர்.
# 464
கண் என்னும்படியாகக் கருவிளை பூத்திருக்க, பொன் என்னும்படியாகப்
பற்றியேறும் கொடியினையுடைய பீர்க்கு பெரிய புதர்களில் மலர்ந்திருக்கும்
முன்பனிக் காலத்தை மறப்பவர் அல்லர், உன்
நல்ல தோள்களைத் தழுவுவதற்காக ஏங்கிக்கொண்டிருப்பவர்.
					மேல்
# 465
நீர் பள்ளத்தில் பாய்வது போல, நிமிர்ந்த ஓட்டத்தையுடைய நெடிய தேரைக்
கார்காலத்தால் அழகுபெற்ற கானம் பொலிவுபெறுபடியாகச் செலுத்தி,
நெருங்கிக்கிடக்கும் மலர்மாலைகள் உள்ள மார்பினை நீ இனிமையுடன் தழுவிக்கொள்ள
வருவார், வாழ்க, தோழியே!
போரை விரும்பும் அரசன் தணிந்துவிட்டான் தன் பகையுணர்வில்.
# 466
வேந்தன் விடுத்த சிறப்பான கடமையை முடித்து, ஏந்திய கொம்புகளையுடைய
தலைமைப் பண்புள்ள யானையையுடைய அரசனிடமிருந்து விடைபெற்று, இப்போது,
குறித்துச் சென்ற நாளில் வீட்டுக்கு வருவார் என்பதனை - பெண்ணின் நல்ல இயல்புகளுடன்
கண்டோர் விரும்பும் ஒளிவிடும் நெற்றி விளங்கும்
இனிய மொழிகளைக் கொண்ட பெண்ணே! தெளிவாக அறிவேன் நான்.
					மேல்
# 467
புனைந்திருக்கும் அணிகலன்கள் நெகிழுமாறு மெலிந்துபோய் மிகவும் நொந்து
வருந்தவேண்டாம் வாழ்க, தோழியே! போருக்காகச்
சென்றோர் மிகவும் நீண்டநாள் தங்கிவிட்டனர் என்று, இனியும் அங்கு இருக்காமல்
நாம் ஆசைப்பட்டதைக் காட்டிலும் விரைந்து வருவான் என்பர் -
கொடிய பகையுணர்வைக் கொண்ட யானைகள் வெற்றியைத் தரும் போரினை மேற்கொண்ட வேந்தன்.
# 468
வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க,
கார்காலம் தொடங்கிவிட்டது குறித்த பருவத்தில்; இனிமேல் உன்
அழகாய் இறங்கும் பருத்த தோள்களுக்கு நல்ல விருந்தாக
நன்கு வடித்த மணிகள் கட்டப்பட்ட நெடிய தேரைச் செலுத்தி
வருவார், இன்று, நம் காதலர்.
					மேல்
# 469
காய்ந்துகொண்டிருக்கும் பசிய தினையைச் செம்பூழ்ப் பறவைகள் கவர்ந்து செல்லும்
கடினமான நிலப்பகுதியைக் கொண்ட நாட்டினனை நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்காக, வலப்பக்கமாய் உயர்ந்து
அழகிய பரப்பைக் கொண்ட பெரிய வானம் அதிரும்படியாக, இடியுடன்
மழையைத் தொடங்கிவிட்டன மேகங்கள்.
காண்போம்! வா! பூப்போன்ற கண்ணினாய்!
# 470
இந்தப் பெரிய நிலம் குளிர்ந்துபோகுமாறு வீசி, நாள்முழுதும்
கடுமையான பனியைச் சேர்த்துக்கொண்டு வரும் முன்பனிக்காலப் பொழுதிலும்
நம்மை நினைத்துப்பார்க்கமாட்டார் காதலர் என்றால், ஒளிரும் அணிகலன்கள் அணிந்தவளே!
சிறப்போடு விளங்கும் தோற்றத்தையுடைய
உன் மாநிற மேனியழகு அவரை மறக்கவிடுமோ?
					மேல்
# 48 பாணன் பத்து
# 471
ஒளியுமிழும் வளைகள் கழன்று ஓட, மேனி வாடிப்போக,
பல இதழ்களைக் கொண்ட மலர் போன்ற மையுண்ட கண்கள் கண்ணீரால் அலைப்புண்டு கலங்கிப்போக,
பிரிந்துசென்றான், உண்மையாக, வீரம் பொருந்திய தலைவன்;
அதனைத் தெளிவாக உணர்ந்தவன் போல் இல்லை நீ,
இப்பொழுதும் வந்து நிற்கிறாய்; என்ன ஆயிற்று அவரின் தகுதி?
# 472
சீறியாழை இயக்குவதில் கைவன்மை பெற்ற பாணனே! உன் தலைவர்
தாமே சொல்லிச்சென்ற கார்ப்பருவம் வந்து நிலைபெற்றுவிட்டது;
என்னைப் பற்றி எண்ணிப்பார்க்கவில்லை என்றாலும், தம்மிடமுள்ள
பொய்பட்டுப்போன சொற்களுக்காக வெட்கப்படவும்
செய்யாமல் இருப்பதை எண்ணி வருந்துகிறேன் நான்.
					மேல்
# 473
பலரும் புகழ்கின்ற சிறப்பினையுடைய உன்னுடைய தலைவரை நினைத்து
அவரிடம் செல்பவதற்கு நீ விரும்பினால், கட்டாயமாக,
துன்பந்தரும் பொறுத்தற்கரிய வருத்தத்தை எனக்குச் செய்த,
பொய் கூறுவதில் வல்லவரான அவரைப் போல,
தேர்ச்சிபெற்ற பாணனே! என்னை மறந்துவிடாதே!
# 474
குற்றமற்ற என் ஒளிவிடும் நெற்றி முன்போல் விளங்க, பகைவர்கள்
கட்டிய அரண்களை அழித்த போர்வன்மை மிக்க படையுடன்
விரைவாக ஓடும் நெடிய தேரினைக் காட்டுவழிகள் வருந்துமாறு செலுத்திச்
சென்றவரை, அழைத்துவருவேன் என்று கூறும்
பாணனது அறிவு மிகவும் நன்றாய் இருக்கிறது!
					மேல்
# 475
தோள்வளைகள் தம் நிலையிலிருந்து நெகிழ்ந்துபோகுமாறு வாடிப்போன தோள்களையும்,
மாவடு போன்ற தம் அழகை இழந்த என் கண்களையும் நோக்கி,
பெரிதும் வருந்தினான் சீறியாழ்ப் பாணன்!
எம்முடைய விருப்பமான காதலோடு பிரிந்துசென்ற
தன் தலைவரைப் போன்றவன் அல்ல இவன்; பேரன்பினன்!
# 476
கூட்டமான மேகங்கள் கருமை மிகுந்து முழக்கமிட
கார்ப்பருவத்தைத் தோற்றுவித்தது, பசிய கொடியைக் கொண்ட முல்லை;
பல பசுக்களைக் கொண்ட கோவலர் படலைமாலையைச் சேர்த்துக்கட்டும்
பிரிந்தார் மேல் அன்பு இல்லாத மாலைக்காலத்தையும் உடையதோ,
என் மீது அன்பற்ற பாணனே! அவர் சென்ற நாடு?
					மேல்
# 477
குளிர்ச்சியான மலர் போன்ற நீண்ட கண்களில் பசலைநோய் பரவ,
பிணக்கம் கொண்ட துயரத்தோடு பொறுத்தற்கரிய துன்பத்தில் வாடுவோளின்
செயலற்றுப்போன நெஞ்சத்திற்கு ஆறுதலான துணையாகச்
சிறிது காலம் தங்கியிருப்பாயாயின்
காண்பாய் - நிச்சயமாக, பாணனே! எனது தேரினை.
# 478
பிரிவுக்காலத்தை நீட்டித்துக்கொண்டே செல்கிறேன் என்பதைக் கொடும் செயலாகத் தூற்றி,
வாடிப்போன நெற்றியையுடையவளாய் ஆகி, மனம் மாறுபட்டு
நாம் விரும்பும் என் காதலி பிரிவுநோய் மிகுந்து மெலிந்துபோய்ச்
சொல்லிவிட்டது என்ன என்று கூறுவாய் நீ! -
முல்லைப்பண்ணை இனிதாகப் பாடும் நல்ல யாழையுடைய பாணனே! மீண்டும் எனக்கு -
					மேல்
# 479
சொல்லுவாய் பாணனே! ஒவ்வொருமுறை சொல்லும்போதும் அது இனிக்கிறது!
நாடுகள் இடையே குறுக்கிட்டுக்கிடக்கும் - என்னை, நாள்தோறும்
பொறுத்தற்கரிய பனியோடு கலந்துவரும் இரக்கமற்ற வாடைக்காற்று,
என் தனிமையினை எள்ளி நகையாடும் பொழுதில்,
குளிர்ந்த மலர்போன்ற கண்ணையுடையவள் கூறியதை - எனக்கு -
# 480
உனக்கு நாங்கள் பாணர்கள் அல்ல; எங்களுக்கு
நீயும் தலைவனும் அல்ல;
உன்னை விரும்பும் காதலி, தன் வீட்டிலிருந்து தனிமைத் துயரில் வருந்தி,
ஈரமான இதழ்களையுடைய மையுண்ட கண்கள் வடித்த
அழுகையைக் கேட்டும் இரங்காதிருக்கிறாய்!
					மேல்
# 49 தேர் வியங்கொண்ட பத்து
# 481
வளைந்து இறங்கிய பருத்த தோள்களையும், அழகிய வரிகளைக் கொண்ட அல்குலையும் கொண்ட,
சிவந்த அணிகலன் அணிந்த தலைவியை எண்ணி, அவளின் நோய் தீர,
தார்க்குச்சியின் முள்ளால் குத்தி, விரைவாகச் செலுத்து, பாகனே! உன்
பறவைகளின் தன்மை கொண்டு விரைந்துசெல்லும் குதிரைகள் பூட்டிய தேரை.
# 482
தெரிந்தெடுத்த அணிகலன்கள் பூண்ட தலைவிக்குப் பெரிய விருந்தினனாய் ஆகும்படி,
மிகவும் விரைந்து செலுத்துவாயாக, பாகனே! ஒளிபொருந்திய வேற்படையால்
வென்றழிக்கும் படையினைக் கொண்ட வேந்தனோடு
ஒருநாளேனும் இடைவழியில் தங்கினால், அது ஊழிக்கால அளவிலும் நெடியது.
					மேல்
# 483
வழியெல்லாம் வனப்பெய்யுமாறு மலர்கள் பரவிக்கிடக்கின்றன;
வேந்தனும் தன் வினை முடித்து விட்டுவிட்டான்; குதிரைகள் விரைகின்றன;
அனைவரையும் முந்திக்கொண்டு தேரை ஓட்டு! பாகனே!
நல்ல நெற்றியையுடைய தலைவி தன் பழைய அழகினைப் பெறவே!
# 484
வேனிற்காலம் முடிந்துபோக, கார்காலத்து மழை பெய்யத்தொடங்கியதால்,
காடு வனப்புற்ற காலம்; நீ ஓட்டும் தேரின் பெருமை சிறக்க,
விரைவாக ஓட்டுவாயாக, பாகனே!
மிகவும் நீண்ட காலம் தங்கிவிட்டோம், அழகிய அணிகலன்களை அணிந்தவளை மறந்து -
					மேல்
# 485
பொறுத்தற்கரிய வருத்தத்தால் அடையும் துன்பத்தை அவளும் நீங்கப்பெற,
பெரிய தோள்களின் அழகு மீண்டும் வரும்படி நாமும் அவளைத் தழுவிக்கொள்ள,
விரைந்து செலுத்துவாயாக, வலவனே! தேரினை!
விலங்குகள் மருண்டுபோய் குதித்தோடும் மலர்கள் அணிசெய்யும் முல்லைக்காட்டில் -
# 486
பெரிதாக நிற்கும் இந்தப் புல்லிய மாலையில் ஓயாமல் நினைத்துக்கொண்டு,
பொறுத்தற்கரிய வருத்தத்தில் வாடுதல் எதற்காக? எப்பொழுதும்
தழுவியிருந்தும் ஆற்றியிராத உயர்குணத்தோளைக் காண்பதற்கு,
வார்களைப் பிடிப்பதின் வகைதெரிந்து செலுத்துவாயாக, வலவனே! உன்
பறவைகள் போல் பறக்கும் பாய்கின்ற குதிரைகளைப் பூட்டிய தேரினை -
					மேல்
# 487
இதுவே பிரிந்திருப்போர் ஒருவரையொருவர் நினைத்தேங்கும் மாலைக்காலம்;
செறிவான வளையல்களை அணிந்தவளின் உள்ளம் உவக்குமாறு
அறிவுடைய பாகனே! விரைந்து செலுத்துவாய் தேரினை.
# 488
கூடிவரும் மேகங்கள் மழைபொழியத் தொடங்கிவிட்டன;
பெரும் உணர்வுகளைக் கொண்ட காதலி நினைத்தேங்கும் பொழுது இது;
விரிந்த தலையாட்டத்தையுடைய நல்ல குதிரைகளைப் பூட்டி,
தலைவியின் துன்பம் தீர விரைந்து செலுத்துவாயாக, தேரினை.
					மேல்
# 489
அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டுகளின் அரித்தெழும் ஓசையினைக் கொண்ட கூட்டம் மொய்க்கும்படி,
உழுது பதமாக்கப்பட்ட நிலத்தில் முல்லைப்பூக்கள் மலர்கின்ற மாலைப்பொழுது;
மிகுந்த துன்பமுள்ள நெஞ்சத்தைக் கொண்ட பெண்மணி மகிழும்படியாக,
நுண்ணிய புரிகளைக் கொண்ட தடித்த கயிறுகளைச் சுண்டிவிட்டு, உன்
வளமையான குதிரைகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்துவாயாக, விரைந்து.
# 490
அழகும் இனிமையுமுள்ள பேச்சினையுடயவளை எம்மிடத்தில் தருவதற்கு
வந்துவிட்டது கார்காலம்! அங்கிருக்கும்
அழகிய தோள்வளை அணிந்தவளின் பொறுத்தற்கரிய துன்பம் தீர
அழகிய மணிகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்துவாயாக, விரைவாக.
					மேல்
# 50 வரவு சிறப்புரைத்த பத்து
# 491
கார்கால மேகங்கள் முழங்குகின்ற பொழுதில், நான் இடையறவின்றி நலிந்துகொண்டிருக்க,
நொந்து நொந்து வருந்தும் உள்ளத்தோடு,
வந்துவிட்டேன் மடந்தையே! உன் அழகு என்னை இழுத்துவர, விரைவாக.
# 492
உன்னைப்போலவே இருக்கும் மயில்கள் களித்தாட, உன்
நல்ல நெற்றியின் மணம் நாறும் முல்லை மலர்ந்திருக்க,
உன்னைப் போலவே அந்த மான்கள் மருண்டு நோக்க,
உன்னையே நினைத்து வந்தேன்,
நல்ல நெற்றியையுடைய அரிவையே! அந்தக் கார்காலத்தைக் காட்டிலும் விரைவாக!
					மேல்
# 493
இடிகள் மாறுபட்டு முழங்க, எருதுகள் அவற்றுக்கு எதிர்முழக்கமிட,
காதலையுடைய பெண்மான் தன் குட்டியோடு நிலைகுலைந்துபோக,
கார்காலம் தொடங்கிவிட்டது ஏற்ற காலத்தில்,
அழகிதாக இறங்கும் முன்னங்கையுடையடைவளே! உன்னை நினைத்து நான் வருவதற்காக.
# 494
வண்டுகள் பூந்தாதுக்களை உண்ண, தேரைகள் ஓயாது ஒலிக்க,
குளிர்ச்சியாக மணங்கமழும் முல்லைவெளியில் முல்லைமலர்கள் மலர,
இன்பத்தை ஊட்டுகிறது பொழுது;
உனக்குக் குறித்துக்கொடுத்துச் சென்ற நேரத்தில் சரியாக வந்துவிட்டேன், தீரட்டும் உன் துன்பங்கள்.
					மேல்
# 495
செம்மண் பூமியின் பக்கங்களில் பல மலர்கள் பரவிக்கிடக்க,
தம் வெறுமை தீர்ந்து இனிய ஆயின முல்லைவெளிகள் -
பின்னப்பட்ட கரிய கூந்தல் மேலும் நல்ல பொலிவு பெறுவதற்காக,
நினைத்து நினைத்துக் கலங்கும் நெஞ்சத்தோடு
முள் போன்ற கூர்மையான பற்களையுடைய அரிவையே! நான் வந்தபோது -
# 496
விலங்கினங்கள் புதர்களில் ஒதுங்க, வரகுப் பயிர்களில் கொத்தான கதிர்கள் சிறந்துவிளங்க,
பெரிய மலைகள் தனிமையுற்று நிற்க, கார்கால மேகங்கள் முழக்கமிட்டு வருத்த,
பெரிதும் மாறுபட்டிருக்கும் கண்ணையுடையவளே! உன்னைப் பிரிந்திருந்தோர்
உனது தோளுக்குத் துணையாக வந்துவிட்டார்!
உன் கூந்தலும் மலரும் பருவத்து விரிந்த பூக்களை விரும்பி அணியட்டும்.
					மேல்
# 497
குறிய பலவான மாலையாய்க் கொன்றை மலர்ந்திருக்க,
நெடிய செந்நிறப் புற்றுகளினின்றும் ஈசல்கள் வெளிப்பட,
விலங்கினங்கள் தம் பசியை மறக்க, கார்காலம் தொடங்கிவிட்டது;
பெருமை வாய்ந்த இயல்புகளையுடைய அரிவையே! உன்னை நினைத்து
போரை விரும்பும் தலைவன் வந்த போது -
# 498
தோள்கள் தம் பழைய அழகை அடைந்தன; தோள்வளைகள் தம் பழைய நிலையில் உறுதியாய் நின்றன;
நீண்ட வரிகளையுடைய நெடிய கண்கள் தம் ஒளியுள்ள வனப்பைப் பெற்றன;
ஏந்திய கொம்பினையுடைய யானைப்படையையுடைய வேந்தன் தன் போரை முடித்துக்கொண்டவுடன்
விரைவாகச் செல்லும் நெடிய தேரினைச் செலுத்திக்கொண்டு
மலையகத்து நாட்டினன் வந்துவிட்ட போது -
					மேல்
# 499
பிடவம் மலர, செம்முல்லைகள் அரும்புகள் விட,
கார்காலத்து அழகைப் பெற்ற கானத்தைக் கண்டால்,
வருந்துவாள் பெரிதும் என்று அரிய போர்த்தொழிலுக்குச் செல்லாமல்
வந்துவிட்டார் நம் காதலர் -
அழகும் இனிமையுமுள்ள பேச்சினையுடயவளே! உன் அழகிய பெண்மைநலத்தை மனத்திற்கொண்டு -
# 500
கொன்றைப் பூவைப் போல் பொன்னிறமாய்ப் பசந்துபோன மையுண்ட கண்கள்,
குன்றுகளின் அகத்தே உள்ள நெடிய சுனையிலுள்ள குவளை மலரைப் போலத்
தம் பழைய அழகைப் பெற்றன இவளுக்கு! வெல்லுகின்ற போரையுடைய
அகன்ற நெடிய பாசறையில் நீண்ட நாள் தங்கியிருந்த
வலிமையுள்ள புலியைப் போன்ற தலைவனே! நீ வந்த போது -
					மேல்