குறுந்தொகை

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

மேல்
      0 -   50
    51 - 100
  101 - 150
  151 - 200
  201 - 250
  251 - 300
  301 - 350
  351 - 401
  தேவையான
  பாடல் எண்
  எல்லையைத்
  தட்டுக

  
சொற்பிரிப்பு மூலம்

# பாரதம் பாடிய பெருந்தேவனார்
# 0 கடவுள் வாழ்த்து 
தாமரை புரையும் காமர் சேவடி
பவழத்து அன்ன மேனி திகழ் ஒளி
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்
சேவல் அம் கொடியோன் காப்ப			5
ஏம வைகல் எய்தின்றால் உலகே
					மேல்
# திப்புத்தோளார்
# 1 குறிஞ்சி
செம் களம் பட கொன்று அவுணர் தேய்த்த
செம் கோல் அம்பின் செம் கோட்டு யானை
கழல் தொடி சேஎய் குன்றம்
குருதி பூவின் குலை காந்தட்டே
					மேல்
# இறையனார்
# 2 குறிஞ்சி
கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே		5
					மேல்
# தேவகுலத்தார்
# 3 குறிஞ்சி
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
					மேல்
# காமஞ்சேர் குளத்தார்
# 4 நெய்தல்
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே
					மேல்
# நரி வெரூஉத்தலையார்
# 5 நெய்தல்
அது-கொல் தோழி காம நோயே
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடை திரை திவலை அரும்பும் தீம் நீர்
மெல்லம்புலம்பன் பிரிந்து என
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே		5
					மேல்
# பதுமனார்
# 6 நெய்தல்
நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று
நனம் தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே
					மேல்
# பெரும்பதுமனார்
# 7 பாலை
வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்-கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்			5
வேய் பயில் அழுவம் முன்னியோரே
					மேல்
# ஆலங்குடி வங்கனார்
# 8 மருதம்
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம் இல் பெருமொழி கூறி தம் இல்
கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல				5
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே
					மேல்
# சுயமனார்
# 9 நெய்தல்
யாய் ஆகியளே மாஅயோளே
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யா பூவின் மெய் சாயினளே
பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்		5
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம் முன் நாணி கரப்பாடும்மே
					மேல்
# ஓரம்போகியர்
# 10 மருதம்
யாய் ஆகியளே விழவு முதலாட்டி
பயறு போல் இணர பைம் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினை
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின் நாணிய வருமே		5
					மேல்
# மாமூலனார்
# 11 பாலை
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது
குல்லை கண்ணி வடுகர் முனையது			5
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே
					மேல்
# ஓதலாந்தையார்
# 12 பாலை
எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலை_கல் அன்ன பாறை ஏறி
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே
அது மற்று அவலம் கொள்ளாது			5
நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே
					மேல்
# கபிலர்
# 13 குறிஞ்சி
மாசு அற கழீஇய யானை போல
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல்
பைதல் ஒரு தலை சேக்கும் நாடன்
நோய் தந்தனனே தோழி
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே		5
					மேல்
# தொல்கபிலர்
# 14 குறிஞ்சி
அமிழ்து பொதி செம் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு
அறிக தில் அம்ம இ ஊரே மறுகில்
நல்லோள் கணவன் இவன் என			5
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே
					மேல்
# ஔவையார்
# 15 பாலை
பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய
நால் ஊர் கோசர் நன் மொழி போல
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல்
சே இலை வெள் வேல் விடலையொடு		5
தொகு வளை முன்கை மடந்தை நட்பே
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுக்கோ
# 16 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொள்-மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போல
செம் கால் பல்லி தன் துணை பயிரும்
அம் கால் கள்ளி அம் காடு இறந்தோரே		5
					மேல்
# பேரெயின் முறுவலார்
# 17 குறிஞ்சி
மா என மடலும் ஊர்ப பூ என
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே
					மேல்
# கபிலர்
# 18 குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோள் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகு-மதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறு கோட்டு பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள்
உயிர் தவ சிறிது காமமோ பெரிதே		5
					மேல்
# பரணர்
# 19 மருதம்
எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர்
பூ இல் வறும் தலை போல புல்லென்று
இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்து
எல்_உறு மௌவல் நாறும்
பல் இரும் கூந்தல் யாரளோ நமக்கே		5
					மேல்
# கோப்பெருஞ்சோழன்
# 20 பாலை
அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே
					மேல்
# ஓதலாந்தையார்
# 21 முல்லை
வண்டு பட ததைந்த கொடி இணர் இடை இடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புது பூ கொன்றை
கானம் கார் என கூறினும்
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே		5
					மேல்
# சேரமான் எந்தை
# 22 பாலை
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய
யாரோ பிரிகிற்பவரே சாரல்
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும்
தேம் ஊர் ஒண்_நுதல் நின்னோடும் செலவே		5
					மேல்
# ஔவையார்
# 23 குறிஞ்சி
அகவன்_மகளே அகவன்_மகளே
மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல்
அகவன்_மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே		5
					மேல்
# பரணர்
# 24 முல்லை
கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல
குழைய கொடியோர் நாவே			5
காதலர் அகல கல்லென்றவ்வே
					மேல்
# கபிலர்
# 25 குறிஞ்சி
யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினை தாள் அன்ன சிறு பசும் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே		5
					மேல்
# கொல்லனழிசி
# 26 குறிஞ்சி
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போல தான் தீது மொழியானும்
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே		5
தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய்
வரை ஆடு வன் பறழ் தந்தை
கடுவனும் அறியும் அ கொடியோனையே
					மேல்
# வெள்ளி வீதியார்
# 27 பாலை
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமை கவினே		5
					மேல்
# ஔவையார்
# 28 பாலை
முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே		5
					மேல்
# ஔவையார்
# 29 குறிஞ்சி
நல் உரை இகந்து புல் உரை தாஅய்
பெயல் நீர்க்கு ஏற்ற பசும் கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவா_உற்றனை நெஞ்சமே நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல் உயர் கோட்டு		5
மகவு உடை மந்தி போல
அகன் உற தழீஇ கேட்குநர் பெறினே
					மேல்
# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 30 பாலை
கேட்டிசின் வாழி தோழி அல்கல்
பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே குவளை
வண்டு படு மலரின் சாஅய்			5
தமியென் மன்ற அளியென் யானே
					மேல்
# ஆதிமந்தி
# 31 மருதம்
மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண் தக்கோனை
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த		5
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே
					மேல்
# அள்ளூர் நன்முல்லையார்
# 32 குறிஞ்சி
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ
பொழுது இடை தெரியின் பொய்யே காமம்
மா என மடலொடு மறுகில் தோன்றி
தெற்றென தூற்றலும் பழியே			5
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே
					மேல்
# படுமரத்து மோசிகீரன்
# 33 மருதம்
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே
					மேல்
# கொல்லி கண்ணன்
# 34 மருதம்
ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர்
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே
முனாஅது
யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு	5
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்ன எம்
குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே
					மேல்
# கழார் கீரன் எயிற்றி
# 35 மருதம்
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்பு
சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழி துளி தலைஇய
தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே	5
					மேல்
# பரணர்
# 36 குறிஞ்சி
துறுகல் அயலது மாணை மா கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என
நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது			5
நோயோ தோழி நின் வயினானே
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 37 பாலை
நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
பிடி பசி களைஇய பெரும் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர் சென்ற ஆறே
					மேல்
# கபிலர்
# 38 குறிஞ்சி
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்று-மன் வாழி தோழி உண்கண்
நீரொடு ஒராங்கு தணப்ப			5
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே
					மேல்
# ஔவையார்
# 39 பாலை
வெம் திறல் கடும் வளி பொங்கர் போந்து என
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலை உடை அரும் சுரம் என்ப நம்
முலை இடை முனிநர் சென்ற ஆறே
					மேல்
# செம்புலப்பெயனீரார்
# 40 குறிஞ்சி
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்
யானும் நீயும் எ வழி அறிதும்
செம் புல பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே		5
					மேல்
# அணிலாடு முன்றிலார்
# 41 பாலை
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போல புல்லென்று			5
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே
					மேல்
# கபிலர்
# 42 குறிஞ்சி
காமம் ஒழிவது ஆயினும் யாமத்து
கருவி மா மழை வீழ்ந்து என அருவி
விடர்_அகத்து இயம்பும் நாட எம்
தொடர்பும் தேயுமோ நின்_வயினானே
					மேல்
# ஔவையார்
# 43 பாலை
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்
நல்_அரா கதுவி ஆங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக்கு_உறுமே		5
					மேல்
# வெள்ளிவீதியார்
# 44 பாலை
காலே பரி தப்பினவே கண்ணே
நோக்கி_நோக்கி வாள் இழந்தனவே
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற இ உலகத்து பிறரே
					மேல்
# ஆலங்குடி வங்கனார்
# 45 மருதம்
காலை எழுந்து கடும் தேர் பண்ணி
வால் இழை மகளிர் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என
மறுவரும் சிறுவன் தாயே
தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே		5
					மேல்
# மாமிலாடன்
# 46 மருதம்
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும்	5
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே
					மேல்
# நெடுவெண்ணிலவினார்
# 47 குறிஞ்சி
கரும் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலி குருளையின் தோன்றும் காட்டு இடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடு வெண்ணிலவே
					மேல்
# பூங்கணுத்திரையார்
# 48 பாலை
தாதின் செய்த தண் பனி பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு என
ஓரை ஆயம் கூற கேட்டும்
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்_நுதல் பசலை நீங்க அன்ன			5
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாது-கொல்லோ காதலர் தமக்கே
					மேல்
# அம்மூவனார்
# 49 நெய்தல்
அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே		5
					மேல்
# குன்றியனார்
# 50 மருதம்
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து
இலங்கு வளை நெகிழ சாஅய்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே		5 
					மேல்


 # குன்றியனார்
# 51 நெய்தல்
கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறி
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை
யானும் காதலென் யாயும் நனி வெய்யள்
எந்தையும் கொடீஇயர் வேண்டும்			5
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே
					மேல்
# பனம்பாரனார்
# 52 குறிஞ்சி
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்
சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டே
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல்
நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே	5
					மேல்
# கோப்பெருஞ்சோழன்
# 53 மருதம்
எம் அணங்கினவே மகிழ்ந முன்றில்
நனை முதிர் புன்கின் பூ தாழ் வெண் மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும்
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை		5
நேர் இறை முன்கை பற்றி
சூர் அர_மகளிரோடு உற்ற சூளே
					மேல்
# மீனெறி தூண்டிலார்
# 54 குறிஞ்சி
யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ
கான யானை கை விடு பசும் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே		5
					மேல்
# நெய்த கார்க்கியர்
# 55 நெய்தல்
மா கழி மணி பூ கூம்ப தூ திரை
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே		5
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 56 பாலை
வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர்
வருக தில் அம்ம தானே
அளியளோ அளியள் என் நெஞ்சு அமர்ந்தோளே	5
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 57 நெய்தல்

பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து			5
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே
					மேல்
# வெள்ளிவீதியார்
# 58 குறிஞ்சி
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல			5
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே
					மேல்
# மோசிகீரனார்
# 59 பாலை
பதலை பாணி பரிசிலர் கோமான்
அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனை
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ மற்றே முயலவும்
சுரம் பல விலங்கிய அரும் பொருள்		5
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே
					மேல்
# பரணர்
# 60 குறிஞ்சி
குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரை
பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன்
உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்து
சுட்டுபு நக்கி ஆங்கு காதலர்
நல்கார் நயவார் ஆயினும்			5
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே
					மேல்
# தும்பிசேர்கீரன்
# 61 மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல
உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர்
பொய்கை ஊரன் கேண்மை			5
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 62 குறிஞ்சி
கோடல் எதிர் முகை பசு வீ முல்லை
நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே		5
					மேல்
# உகாய்க்குடி கிழார்
# 63 பாலை
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என
செய்_வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே
					மேல்
# கருவூர் கதப்பிள்ளை
# 64 முல்லை
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என
புன் தலை மன்றம் நோக்கி மாலை
மட கண் குழவி அலம்வந்து அன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர் தோழி சேய்நாட்டோரே			5
					மேல்
# கோவூர் கிழார்
# 65 முல்லை
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகள
தான் வந்தன்றே தளி தரு தண் கார்
வாராது உறையுநர் வரல் நசைஇ
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே		5
					மேல்
# கோவர்த்தனார்
# 66 முல்லை
மடவ மன்ற தடவு நிலை கொன்றை
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதர
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த
வம்ப மாரியை கார் என மதித்தே			5
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 67 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே		5
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 68 குறிஞ்சி
பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே
					மேல்
# கடுந்தோட் கரவீரன்
# 69 குறிஞ்சி
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என
கைம்மை உய்யா காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்				5
வாரல் வாழியோ வருந்துதும் யாமே
					மேல்
# ஓரம்போகியார்
# 70 குறிஞ்சி
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறு_மகள்
நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன்
சில மெல்லியவே கிளவி
அனை மெல்லியல் யான் முயங்கும்_காலே		5
					மேல்
# கருவூர் ஓதஞானி
# 71 பாலை
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின்
கல் கெழு கானவர் நல்கு_உறு மகளே
					மேல்
# மள்ளனார்
# 72 குறிஞ்சி
பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தே மொழி திரண்ட மென் தோள் மா மலை
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே		5
					மேல்
# பரணர்
# 73 குறிஞ்சி
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழி கோசர் போல
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே		5
					மேல்
# விட்ட குதிரையார்
# 74 குறிஞ்சி
விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்பு தோய் பசும் கழை குன்ற நாடன்
யாம் தன் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆன் ஏறு போல
சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே		5
					மேல்
# படுமரத்து மோசிகீரனார்
# 75 மருதம்
நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண் கோட்டு யானை சோனை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர்
யார் வாய் கேட்டனை காதலர் வரவே		5
					மேல்
# கிள்ளிமங்கலங்கிழார்
# 76 குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டு
செல்ப என்பவோ கல் வரை மார்பர்
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெரும் களிற்று செவியின் மான தைஇ
தண் வரல் வாடை தூக்கும்			5
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே
					மேல்
# மதுரை மருதன் இளநாகனார்
# 77 பாலை
அம்ம வாழி தோழி யாவதும்
தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு			5
எளிய ஆகிய தட மென் தோளே
					மேல்
# நக்கீரனார்
# 78 குறிஞ்சி
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய் கோடியர் முழவின் ததும்பி
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப
நோ_தக்கன்றே காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும்			5
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே
					மேல்
# குடவாயி கீரனக்கன்
# 79 பாலை
கான யானை தோல் நயந்து உண்ட
பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை
அலங்கல் உலவை ஏறி ஒய்யென
புலம்பு தரு குரல புறவு பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்			5
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்கு
செல்லாது ஏகல் வல்லுவோரே
					மேல்
# ஔவையார்
# 80 மருதம்
கூந்தல் ஆம்பல் முழு_நெறி அடைச்சி
பெரும் புனல் வந்த இரும் துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர்
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி		5
முனை ஆன் பெரு நிரை போல
கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பே
					மேல்
# வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
# 81 குறிஞ்சி
இவளே
நின் சொல் கொண்ட என் சொல் தேறி
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை
புது நலன் இழந்த புலம்பு-மார் உடையள்
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும்		5
நிலவும் இருளும் போல புலவு திரை
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே
					மேல்
# கடுவன் மள்ளன்
# 82 குறிஞ்சி
வார்_உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார்
யார் ஆகுவர்-கொல் தோழி சாரல்
பெரும் புன குறவன் சிறுதினை மறுகால்
கொழும் கொடி அவரை பூக்கும்			5
அரும் பனி அற்சிரம் வாராதோரே
					மேல்
# வெண்பூதன்
# 83 குறிஞ்சி
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும்
தீம் பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே		5
					மேல்
# மோசிகீரன்
# 84 பாலை
பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள்
இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே		5
					மேல்
# வடம வண்ணக்கன் தாமோதரன்
# 85 மருதம்
யாரினும் இனியன் பேர் அன்பினனே
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்
தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்			5
யாணர் ஊரன் பாணன் வாயே
					மேல்
# வெண்கொற்றன்
# 86 குறிஞ்சி
சிறை பனி உடைந்த சே அரி மழை கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்		5
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே
					மேல்
# கபிலர்
# 87 குறிஞ்சி
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇ பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே		5
					மேல்
# மதுரை கதக்கண்ணன்
# 88 குறிஞ்சி
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி
தொன் முரண் சோரும் துன் அரும் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடு நாணலமே தோழி நாமே			5
					மேல்
# பரணர்
# 89 மருதம்
பா அடி உரல பகு வாய் வள்ளை
ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய		5
நல் இயல் பாவை அன்ன இ
மெல் இயல் குறு_மகள் பாடினள் குறினே
					மேல்
# மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்
# 90 குறிஞ்சி
எற்றோ வாழி தோழி முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி
வரை இழி அருவி உண்துறை தரூஉம்		5
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே
					மேல்
# ஔவையார்
# 91 மருதம்
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம்
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்
பல ஆகுக நின் நெஞ்சில் படரே
ஓவாது ஈயும் மாரி வண் கை			5
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போல
சில ஆகுக நீ துஞ்சும் நாளே
					மேல்
# தாமோதரன்
# 92 நெய்தல்
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து
அளிய தாமே கொடும் சிறை பறவை
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய் செரீஇய
இரை கொண்டமையின் விரையுமால் செலவே	5	
					மேல்
# அள்ளூர் நன்முல்லையார்
# 93 மருதம்
நன் நலம் தொலைய நலம் மிக சாஅய்
இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ
புலவி அஃது எவனோ அன்பு இலம்_கடையே
					மேல்
# கதக்கண்ணன்
# 94 முல்லை
பெரும் தண் மாரி பேதை பித்திகத்து
அரும்பே முன்னும் மிக சிவந்தனவே
யானே மருள்வென் தோழி பானாள்
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே		5
அருவி மா மலை தத்த
கருவி மா மழை சிலைதரும் குரலே
					மேல்
# கபிலர்
# 95 குறிஞ்சி
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகை ததும்பும் பன் மலர் சாரல்
சிறுகுடி குறவன் பெரும் தோள் குறு_மகள்
நீர் ஓர் அன்ன சாயல்
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே		5
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 96 குறிஞ்சி
அருவி வேங்கை பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ என்றி யான் அது
நகை என உணரேன் ஆயின்
என் ஆகுவை-கொல் நன்_நுதல் நீயே
					மேல்
# வெண்பூதி
# 97 நெய்தல்
யானே ஈண்டையேனே என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே
மறை அலர் ஆகி மன்றத்தஃதே
					மேல்
# கோக்குளமுற்றன்
# 98 முல்லை
இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர்
துன்ன சென்று செப்புநர் பெறினே
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை
நீர் வார் பைம் புதல் கலித்த
மாரி பீரத்து அலர் சில கொண்டே			5
					மேல்
# ஔவையார்
# 99 முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து
மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உண சென்று அற்று ஆங்கு		5
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே
					மேல்
# கபிலர்
# 100 குறிஞ்சி
அருவி பரப்பின் ஐவனம் வித்தி
பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என
கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும்
வல் வில் ஓரி கொல்லி குட வரை		5
பாவையின் மடவந்தனளே
மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே
					மேல்
 


# பரூஉ மோவாய் பதுமன்
# 101 குறிஞ்சி
விரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும்
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே
பூ போல் உண்கண் பொன் போல் மேனி
மாண் வரி அல்குல் குறு_மகள்			5
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே
					மேல்
# ஔவையார்
# 102 நெய்தல்
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி
வான் தோய்வு அற்றே காமம்
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே
					மேல்
# வாயிலான் தேவன்
# 103 நெய்தல்
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர்			5
வாழேன் போல்வல் தோழி யானே
					மேல்
# காவன்முல்லை பூதனார்
# 104 பாலை
அம்ம வாழி தோழி காதலர்
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப
தாளி தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பல ஆகுபவே			5
					மேல்
# நக்கீரர்
# 105 குறிஞ்சி
புனவன் துடவை பொன் போல் சிறுதினை
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள்
வெறி_உறு வனப்பின் வெய்து_உற்று நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை			5
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே
					மேல்
# கபிலர்
# 106 குறிஞ்சி
புல் வீழ் இற்றி கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்_வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு			5
தான் மணந்து அனையம் என விடுகம் தூதே
					மேல்
# மதுரை கண்ணனார்
# 107 மருதம்
குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல்
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர்		5
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே
					மேல்
# வாயிலான் தேவன்
# 108 முல்லை
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடி
கறவை கன்று_வயின் படர புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூ
செம் வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே		5
					மேல்
# நம்பி குட்டுவன்
# 109 நெய்தல்
முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை
புணரி இகு திரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது-மன்னோ நன் நுதல் கவினே
					மேல்
# கிள்ளிமங்கலம்கிழார்
# 110 முல்லை
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி நீர
நீல பைம் போது உளரி புதல
பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த		5
வண்ண துய்ம் மலர் உதிர தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்-கொல் என்னாதோரே
					மேல்
# தீன்மதிநாகன்
# 111 குறிஞ்சி
மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அது என உணரும் ஆயின் ஆயிடை
கூடை இரும் பிடி கை கரந்து அன்ன
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன்		5
வல்லே வருக தோழி நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே
					மேல்
# ஆலத்தூர் கிழார்
# 112 குறிஞ்சி
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நார் உடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே		5
					மேல்
# மாதீர்த்தன்
# 113 மருதம்
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்கு
சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே
இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்		5
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே
					மேல்
# பொன்னாகன்
# 114 நெய்தல்
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி
நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க
செல்கம் செல வியங்கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே
					மேல்
# கபிலர்
# 115 குறிஞ்சி
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரோ
ஒரு நன்று உடையள் ஆயினும் புரி மாண்டு
புலவி தீர அளி-மதி இலை கவர்பு
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்
மென் நடை மரையா துஞ்சும்			5
நன் மலை நாட நின் அலது இலளே
					மேல்
# இளங்கீரன்
# 116 குறிஞ்சி
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை
நுண் மணல் அறல் வார்ந்து அன்ன
நன் நெறியவ்வே நறும் தண்ணியவே
					மேல்
# குன்றியனார்
# 117 நெய்தல்
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளை செலீஇயர் அண்டர்
கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக			5
சிறியவும் உள ஈண்டு விலைஞர் கை வளையே
					மேல்
# நன்னாகையார்
# 118 நெய்தல்
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலை
பலர் புகு வாயில் அடைப்ப கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழி நம் காதலோரே			5
					மேல்
# சத்திநாதனார்
# 119 குறிஞ்சி
சிறு வெள் அரவின் அம் வரி குருளை
கான யானை அணங்கி ஆஅங்கு
இளையன் முளை வாள் எயிற்றள்
வளை உடை கையள் எம் அணங்கியோளே
					மேல்
# பரணர்
# 120 குறிஞ்சி
இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்கு
அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி
நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே
					மேல்
# கபிலர்
# 121 குறிஞ்சி
மெய்யே வாழி தோழி சாரல்
மை பட்டு அன்ன மா முக முசு கலை
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி ஆங்கு நாடன்
தான் குறி வாயா தப்பற்கு			5
தாம் பசந்தன என் தட மென் தோளே
					மேல்
# ஓரம்போகியார்
# 122 நெய்தல்
பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே
					மேல்
# ஐயூர் முடவன்
# 123 நெய்தல்
இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல்
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை
கரும் கோட்டு புன்னை பூ பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே		5
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுக்கோ
# 124 பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலை
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு
இன்னா என்றிர் ஆயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே
					மேல்
# அம்மூவன்
# 125 நெய்தல்
இலங்கு வளை நெகிழ சாஅய் யானே
உளெனே வாழி தோழி சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை		5
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு கண்மாறின்றே
					மேல்
# ஒக்கூர் மாசாத்தியார்
# 126 முல்லை
இளமை பாரார் வளம் நசைஇ சென்றோர்
இவணும் வாரார் எவணரோ என
பெயல் புறந்தந்த பூ கொடி முல்லை
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே தோழி நறும் தண் காரே			5
					மேல்
# ஓரம்போகியார்
# 127 மருதம்
குருகு கொள குளித்த கெண்டை அயலது
உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம்
கழனி அம் படப்பை காஞ்சி ஊர
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக
உள்ள பாணர் எல்லாம்			5
கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே
					மேல்
# பரணர்
# 128 நெய்தல்
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு
சேயள் அரியோள் படர்தி
நோயை நெஞ்சே நோய் பாலோயே		5
					மேல்
# கோப்பெருஞ்சோழன்
# 129 குறிஞ்சி
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் அத்தை
மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து
பசு வெண் திங்கள் தோன்றி ஆங்கு
கதுப்பு அயல் விளங்கும் சிறு நுதல்		5
புது கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மே
					மேல்
# வெள்ளிவீதியார்
# 130 பாலை
நிலம் தொட்டு புகாஅர் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின்
குடிமுறை_குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே		5
					மேல்
# ஓரேருழவனார்
# 131 பாலை
ஆடு அமை புரையும் வனப்பின் பணை தோள்
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே
நெடும் சேண் ஆரிடையதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்வி பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல				5
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 132 குறிஞ்சி
கவவு கடும்-குரையள் காமர் வனப்பினள்
குவவு மென் முலையள் கொடி கூந்தலளே
யாங்கு மறந்து அமைகோ யானே ஞாங்கர்
கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி
தாய் காண் விருப்பின் அன்ன			5
சாஅய் நோக்கினள் மாஅயோளே
					மேல்
# உறையூர் முதுகண்ணன் சாத்தன்
# 133 குறிஞ்சி
புனவன் துடவை பொன் போல் சிறுதினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என்
உரம் செத்தும் உளெனே தோழி என்
நலம் புதிது உண்ட புலம்பினானே			5
					மேல்
# கோவேங்கை பெருங்கதவன்
# 134 குறிஞ்சி
அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்ல
குறும் பொறை தடைஇய நெடும் தாள் வேங்கை
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி		5
நிலம் கொள் பாம்பின் இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 135 பாலை
வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
நமக்கு உரைத்தோரும் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே
					மேல்
# மிளைப்பெரும்கந்தன்
# 136 குறிஞ்சி
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள் மதம் போல
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே		5
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 137 பாலை
மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப
நின் துறந்து அமைகுவென் ஆயின் என் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக யான் செலவு_உறு தகவே
					மேல்
# கொல்லன் அழிசி
# 138 குறிஞ்சி
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே		5
					மேல்
# ஒக்கூர் மாசாத்தியார்
# 139 மருதம்
மனை உறை கோழி குறும் கால் பேடை
வேலி வெருகு இனம் மாலை உற்று என
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய
பைதல் பிள்ளை கிளை பயிர்ந்து ஆஅங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு			5
வாரல் வாழியர் ஐய எம் தெருவே
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 140 பாலை
வேதின வெரிநின் ஓதி முது போத்து
ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் உரன் அழிந்து
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று இ அழுங்கல் ஊரே		5
					மேல்
# மதுரை பெருங்கொல்லனார்
# 141 குறிஞ்சி
வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர்
செல்க என்றோளே அன்னை என நீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த
குறும் கை இரும் புலி கொலை வல் ஏற்றை		5
பைம் கண் செந்நாய் படு பதம் பார்க்கும்
ஆர் இருள் நடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே
					மேல்
# கபிலர்
# 142 குறிஞ்சி
சுனை பூ குற்று தொடலை தைஇ
புன கிளி கடியும் பூ கண் பேதை
தான் அறிந்தன்றோ இலளே பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன் உழையதுவே		5
					மேல்
# மதுரை கணக்காயன் மகன் நக்கீரன்
# 143 குறிஞ்சி
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன்
பழியும் அஞ்சும் பய மலை நாடன்
நில்லாமையே நிலையிற்று ஆகலின்
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின்
கடப்பாட்டாளன் உடை பொருள் போல		5
தங்குதற்கு உரியது அன்று நின்
அம் கலுழ் மேனி பாஅய பசப்பே
					மேல்
# மதுரை ஆசிரியன் கோடம்கொற்றன்
# 144 பாலை
கழிய காவி குற்றும் கடல
வெண் தலை புணரி ஆடியும் நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர
இ வழி படுதலும் ஒல்லாள் அ வழி
பரல் பாழ்படுப்ப சென்றனள் மாதோ		5
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே
					மேல்
# கொல்லன் அழிசி
# 145 குறிஞ்சி
உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடி
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி
ஆனா துயரமொடு வருந்தி பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவா
துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே	5
					மேல்
# வெள்ளிவீதியார்
# 146 குறிஞ்சி
அம்ம வாழி தோழி நம் ஊர்
பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர்
நன்று நன்று என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே		5
					மேல்
# கோப்பெருஞ்சோழன்
# 147 பாலை
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை
நுண் பூண் மடந்தையை தந்தோய் போல
இன் துயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணை பிரிந்தோரே		5
					மேல்
# இளங்கீரந்தையார்
# 148 முல்லை
செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெரும் தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின்			5
கனவோ மற்று இது வினவுவல் யானே
					மேல்
# வெள்ளிவீதியார்
# 149 பாலை
அளிதோ தானே நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே
வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு
தாங்கும் அளவை தாங்கி			5
காமம் நெரிதர கை நில்லாதே
					மேல்
# மாடலூர் கிழார்
# 150 குறிஞ்சி
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின்_வயின் இமைக்கும்
ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின் உள் நோய் மல்கும்
புல்லின் மாய்வது எவன்-கொல் அன்னாய்		5
					மேல்
 


# தூங்கலோரி
# 151 பாலை
வங்கா கடந்த செம் கால் பேடை
எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது
குழல் இசை குரல குறும் பல அகவும்
குன்று கெழு சிறு நெறி அரிய என்னாது
மறப்பு அரும் காதலி ஒழிய			5
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே
					மேல்
# கிள்ளிமங்கலம்கிழார்
# 152 குறிஞ்சி
யாவதும் அறிகிலர் கழறுவோரே
தாய் இல் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே
யாமை பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற விடினே			5
					மேல்
# கபிலர்
# 153 குறிஞ்சி
குன்ற கூகை குழறினும் முன்றில்
பலவின் இரும் சினை கலை பாய்ந்து உகளினும்
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே
ஆர் இருள் கங்குல் அவர்_வயின்
சாரல் நீள் இடை செலவு ஆனாதே		5
					மேல்
# மதுரை சீத்தலை சாத்தன்
# 154 பாலை
யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின்
உரி நிமிர்ந்து அன்ன உருப்பு அவிர் அமையத்து
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி
பொறி மயிர் எருத்தின் குறு நடை பேடை
பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டு		5
தயங்க இருந்து புலம்ப கூஉம்
அரும் சுர வைப்பின் கானம்
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே
					மேல்
# உரோடகத்து கந்தரத்தன்
# 155 முல்லை
முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர்
விதை குறு வட்டி போதொடு பொதுள
பொழுதோ தான் வந்தன்றே மெழுகு ஆன்று
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு		5
மாலை நனி விருந்து அயர்-மார்
தேர் வரும் என்னும் உரை வாராதே
					மேல்
# பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்
# 156 குறிஞ்சி
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே
எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும்		5
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 157 மருதம்
குக்கூ என்றது கோழி அதன்_எதிர்
துட்கென்றன்று என் தூ நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே
					மேல்
# ஔவையார்
# 158 குறிஞ்சி
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ
காலொடு வந்த கமம் சூல் மா மழை
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை			5
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனே
					மேல்
# வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
# 159 குறிஞ்சி
தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக
அம் மெல் ஆகம் நிறைய வீங்கி
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின
யாங்கு ஆகுவள்-கொல் பூ_குழை என்னும்		5
அவல நெஞ்சமொடு உசாவா
கவலை மாக்கட்டு இ பேதை ஊரே
					மேல்
# மதுரை மருதன் இளநாகன்
# 160 குறிஞ்சி
நெருப்பின் அன்ன செம் தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு
தடவின் ஓங்கு சினை கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்து
பெரும் தண் வாடையும் வாரார்			5
இஃதோ தோழி நம் காதலர் வரவே
					மேல்
# நக்கீரர்
# 161 குறிஞ்சி
பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலை
புலி பல் தாலி புதல்வன் புல்லி
அன்னா என்னும் அன்னையும் அன்னோ
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை		5
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே
					மேல்
# கருவூர் பவுத்திரன்
# 162 முல்லை
கார் புறந்தந்த நீர் உடை வியன் புலத்து
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போல காட்டல்			5
தகுமோ மற்று இது தமியோர் மாட்டே
					மேல்
# அம்மூவன்
# 163 நெய்தல்
யார் அணங்கு உற்றனை கடலே பூழியர்
சிறு தலை வெள்ளை தோடு பரந்து அன்ன
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை
வெள் வீ தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே		5
					மேல்
# மாங்குடிமருதன்
# 164 மருதம்
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாது
தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையின் புலக்கம்		5
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே
					மேல்
# பரணர்
# 165 குறிஞ்சி
மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டு ஆங்கு
விழைந்ததன் தலையும் நீ வெய்து_உற்றனை
இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே		5
					மேல்
# கூடலுலுர் கிழார்
# 166 நெய்தல்
தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறை
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும்
ஊரோ நன்று-மன் மரந்தை
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே
					மேல்
# கூடலூர் கிழார்
# 167 முல்லை
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவு_உறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய் புகை கழும
தான் துழந்து அட்ட தீம் புளி பாகர்
இனிது என கணவன் உண்டலின்			5
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்_நுதல் முகனே
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 168 பாலை
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசும் குடை பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டு அன்ன
நறும் தண்ணியளே நன் மா மேனி
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள்	5
மணத்தலும் தணத்தலும் இலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே
					மேல்
# வெள்ளிவீதியார்
# 169 மருதம்
சுரம் செல் யானை கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே
பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி			5
நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே
					மேல்
# கருவூர் கிழார்
# 170 குறிஞ்சி
பலரும் கூறுக அஃது அறியாதோரே
அருவி தந்த நாள்_குரல் எருவை
கயம் நாடு யானை கவளம் மாந்தும்
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே		5
					மேல்
# பூங்கணுத்திரையார்
# 171 மருதம்
காண் இனி வாழி தோழி யாணர்
கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட
மீன் வலை மா பட்டு ஆங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையே
					மேல்
# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 172 நெய்தல்
தாஅல் அம் சிறை நொ பறை வாவல்
பழு மரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்கு துறந்தோர்
தமியர் ஆக இனியர்-கொல்லோ
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த		5
உலை வாங்கு மிதி தோல் போல
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே
					மேல்
# மதுரை காஞ்சி புலவன்
# 173 குறிஞ்சி
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த
பல் நூல் மாலை பனை படு கலி_மா
பூண் மணி கறங்க எறி நாண் அட்டு
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்தது இது என முன் நின்று		5
அவள் பழி நுவலும் இ ஊர்
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே
					மேல்
# வெண்பூதி
# 174 பாலை
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்து
கவை முட கள்ளி காய் விடு கடு நொடி
துதை மென் தூவி துணை புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நம் துறந்து
பொருள்_வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து		5
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே
					மேல்
# உலோச்சன்
# 175 நெய்தல்
பருவ தேன் நசைஇ பல் பறை தொழுதி
உரவு திரை பொருத திணி மணல் அடைகரை
நனைந்த புன்னை மா சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மா நீர் சேர்ப்பற்கு
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று		5
பிறர் பிறர் அறிய கூறல்
அமைந்து ஆங்கு அமைக அம்பல் அஃது எவனே
					மேல்
# வருமுலையாரித்தி
# 176 குறிஞ்சி
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன்
பல் நாள் வந்து பணிமொழி பயிற்றி என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரை முதிர் தேனின் போகியோனே
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ		5
வேறு புல நன் நாட்டு பெய்த
ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சே
					மேல்
# உலோச்சன்
# 177 நெய்தல்
கடல் பாடு அவிந்து கானல் மயங்கி
துறை நீர் இரும் கழி புல்லென்றன்றே
மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்று அவர்
வருவர்-கொல் வாழி தோழி நாம் நக		5
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சி
தணப்பு அரும் காமம் தண்டியோரே
					மேல்
# நெடும்பல்லியத்தை
# 178 மருதம்
அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்பு உடை திரள் கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள்
இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர்
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு	5
அரியம் ஆகிய_காலை
பெரிய நோன்றனீர் நோகோ யானே
					மேல்
# குட்டுவன் கண்ணன்
# 179 குறிஞ்சி
கல்லென் கானத்து கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன
செல்லல் ஐஇய உது எம் ஊரே
ஓங்கு வரை அடுக்கத்து தீம் தேன் கிழித்த
குவை உடை பசும் கழை தின்ற கய வாய்		5
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கில் குவட்டு இடையதுவே
					மேல்
# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 180 பாலை
பழூஉ பல் அன்ன பரு உகிர் பா அடி
இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து
எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல்		5
அம் வரி வாட துறந்தோர்
வன்பர் ஆக தாம் சென்ற நாட்டே
					மேல்
# கிள்ளிமங்கலங்கிழார்
# 181 குறிஞ்சி
இது மற்று எவனோ தோழி துனி இடை
இன்னர் என்னும் இன்னா கிளவி
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்			5
திரு மனை பல் கடம்பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே
					மேல்
# மடல் பாடிய மாதங்கீரன்
# 182 குறிஞ்சி
விழு தலை பெண்ணை விளையல் மா மடல்
மணி அணி பெரும் தார் மரபில் பூட்டி
வெள் என்பு அணிந்து பிறர் எள்ள தோன்றி
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி
தெருவின் இயலவும் தருவது-கொல்லோ		5
கலிழ் கவின் அசை நடை பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே
					மேல்
# ஔவையார்
# 183 முல்லை
சென்ற நாட்ட கொன்றை அம் பசு வீ
நம் போல் பசக்கும்_காலை தம் போல்
சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்-கொல் நமரே
புல்லென் காயா பூ கெழு பெரும் சினை		5
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன்_புல வைப்பின் கானத்தானே
					மேல்
# ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன்
# 184 நெய்தல்
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை
குறுகல் ஓம்பு-மின் சிறுகுடி செலவே
இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டு
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம்
மயில் கண் அன்ன மாண் முடி பாவை		5
நுண் வலை பரதவர் மட_மகள்
கண் வலை படூஉம் கானலானே
					மேல்
# மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
# 185 குறிஞ்சி
நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி
நெடு மென் பணை தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி
பாம்பு பை அவிந்தது போல கூம்பி		5
கொண்டலின் தொலைந்த ஒண் செம்_காந்தள்
கல் மிசை கவியும் நாடற்கு என்
நன் மா மேனி அழி படர் நிலையே
					மேல்
# ஒக்கூர் மாசாத்தியார்
# 186 முல்லை
ஆர் கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லை புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்கு
துயில் துறந்தனவால் தோழி எம் கண்ணே
					மேல்
# கபிலர்
# 187 குறிஞ்சி
செ வரை சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன் தோழி
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே		5
					மேல்
# மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மன்னார்
# 188 முல்லை
முகை முற்றினவே முல்லை முல்லையொடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம்
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்று என் மாண் நலம் குறித்தே
					மேல்
# மதுரை ஈழத்து பூதன் தேவன்
# 189 பாலை
இன்றே சென்று வருதும் நாளை
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப
கால் இயல் செலவின் மாலை எய்தி		5
சில் நிரை வால் வளை குறு_மகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே
					மேல்
# பூதம்புல்லன்
# 190 முல்லை
நெறி இரும் கதுப்பொடு பெரும் தோள் நீவி
செறி வளை நெகிழ செய்_பொருட்கு அகன்றோர்
அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரி
வெம் சின அரவின் பைம் தலை துமிய
நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள்		5
நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலே
					மேல்
# 191 முல்லை
உது காண் அதுவே இது என மொழிகோ
நோன் சினை இருந்த இரும் தோட்டு புள்_இனம்
தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ள
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின் போதின்			5
பொம்மல் ஓதியும் புனையல்
எம்மும் தொடாஅல் என்குவெம்-மன்னே
					மேல்
# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 192 பாலை
ஈங்கே வருவர் இனையல் அவர் என
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி
மின்னின் தூவி இரும் குயில் பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப மா சினை
நறும் தாது கொழுதும் பொழுதும்			5
வறும் குரல் கூந்தல் தைவருவேனே
					மேல்
# அரிசில் கிழார்
# 193 முல்லை
மட்டம் பெய்த மணி கலத்து அன்ன
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை
தட்டை_பறையின் கறங்கும் நாடன்
தொல்லை திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்-மன் எம் தோளே			5
இன்றும் முல்லை முகை நாறும்மே
					மேல்
# கோவர்த்தனார்
# 194 முல்லை
என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்கு_உறுமே		5
					மேல்
# தேரதரன்
# 195 நெய்தல்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர்
இன்னாது இரங்கும் என்னார் அன்னோ
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தர		5
செய்வு_உறு பாவை அன்ன என்
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே
					மேல்
# மிளை கந்தன்
# 196 மருதம்
வேம்பின் பைம் காய் என் தோழி தரினே
தேம் பூம் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர்
தைஇ திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்			5
ஐய அற்றால் அன்பின் பாலே
					மேல்
# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 197 நெய்தல்
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர் பிரிந்த என் குறித்து வருமே		5
					மேல்
# கபிலர்
# 198 குறிஞ்சி
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைம் தாள் செந்தினை
மட பிடி தட கை அன்ன பால் வார்பு
கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல்
படு கிளி கடிகம் சேறும் அடு போர்		5
எஃகு விளங்கு தட கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை
வாரற்க தில்ல வருகுவள் யாயே
					மேல்
# பரணர்
# 199 குறிஞ்சி
பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று
உண்டு-மன் வாழிய நெஞ்சே திண் தேர்
கைவள் ஓரி கானம் தீண்டி
எறி வளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள்_வயின்			5
இன்றை அன்ன நட்பின் இ நோய்
இறு முறை என ஒன்று இன்றி
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே
					மேல்
# ஔவையார் 
# 200 நெய்தல்
பெய்த குன்றத்து பூ நாறு தண் கலுழ்
மீமிசை தாஅய் வீசும் வளி கலந்து
இழிதரும் புனலும் வாரார் தோழி
மறந்தோர் மன்ற மறவாம் நாமே
கால மாரி மாலை மா மலை			5
இன் இசை உருமின முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே
					மேல்
# 201 குறிஞ்சி
அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி
பால் கலப்பு அன்ன தே கொக்கு அருந்துபு
நீல மென் சிறை வள் உகிர் பறவை
நெல்லி அம் புளி மாந்தி அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்		5
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 202 மருதம்
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே		5
					மேல்
# நெடும்பல்லியத்தன்
# 203 மருதம்
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்
மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர்
கண்ணின் காண நண்ணு_வழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்கு			5
பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே
					மேல்
# மிளை பெரும் கந்தன்
# 204 குறிஞ்சி
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்த ஆங்கு
விருந்தே காமம் பெரும் தோளோயே		5
					மேல்
# உலோச்சன்
# 205 நெய்தல்
மின்னு செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு
பொலம் படை பொலிந்த வெண் தேர் ஏறி
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப
இனி சென்றனனே இடு மணல் சேர்ப்பன்		5
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என்
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே
					மேல்
# ஐயூர் முடவன்
# 206 குறிஞ்சி
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும் இன்ன
இன்னா அரும் படர் செய்யும் ஆயின்
உடன் உறைவு அரிதே காமம்
குறுகல் ஓம்பு-மின் அறிவுடையீரே			5
					மேல்
# உறையன்
# 207 பாலை
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி		5
நல் அடி பொறிப்ப தாஅய்
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே
					மேல்
# கபிலர்
# 208 குறிஞ்சி
ஒன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்து
பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார்
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன் தோழி ஒன்றினானே			5
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 209 பாலை
சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய்
மற புலி குருளை கோள் இடம் கரக்கும்
இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே
குறு நடை புள் உள்ளலமே நெறி முதல்
கடற்றில் கலித்த முட சினை வெட்சி		5
தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே
					மேல்
# காக்கை பாடினியார் நச்செள்ளையார்
# 210 முல்லை
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு		5
விருந்து வர கரைந்த காக்கையது பலியே
					மேல்
# காவன் முல்லை பூதனார்
# 211 பாலை
அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி		5
ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே
					மேல்
# நெய்தல் கார்க்கியன்
# 212 நெய்தல்
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடும் தேர்
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப
காண வந்து நாண பெயரும்
அளிதோ தானே காமம்
விளிவது மன்ற நோகோ யானே			5
					மேல்
# கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்
# 213 பாலை
நசை நன்கு உடையர் தோழி ஞெரேரென
கவை தலை முது கலை காலின் ஒற்றி
பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல்
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி	5
நின்று வெயில் கழிக்கும் என்ப நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே
					மேல்
# கூடலுலுர் கிழார்
# 214 குறிஞ்சி
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ்
அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி
திருந்து இழை அல்குற்கு பெரும் தழை உதவி
செயலை முழு_முதல் ஒழிய அயலது		5
அரலை மாலை சூட்டி
ஏமுற்றன்று இ அழுங்கல் ஊரே
					மேல்
# மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
# 215 பாலை
படரும் பைபய பெயரும் சுடரும்
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர்
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல்
வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ	5
கொடு வரி இரும் புலி காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே
					மேல்
# கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்
# 216 பாலை
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை
வாடா வள்ளி அம் காடு இறந்தோரே
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே
அன்னள் அளியள் என்னாது மா மழை		5
இன்னும் பெய்யும் முழங்கி
மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே
					மேல்
# தங்கால் முடக்கொல்லனார்
# 217 குறிஞ்சி
தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும்
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து
ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற		5
ஐதே காமம் யானே
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே
					மேல்
# கொற்றன்
# 218 பாலை
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு
கடனும் பூணாம் கை நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்று		5
இமைப்பு வரை அமையா நம்_வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே
					மேல்
# வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்
# 219 நெய்தல்
பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே
வல்லா கூறி இருக்கும் அள் இலை		5
தடவு நிலை தாழை சேர்ப்பற்கு
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே
					மேல்
# ஒக்கூர் மாசாத்தியார்
# 220 முல்லை
பழ மழை கலித்த புது புன வரகின்
இரலை மேய்ந்த குறை தலை பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை
வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி
குறு முகை அவிழ்ந்த நறு மலர் புறவின்		5
வண்டு சூழ் மாலையும் வாரார்
கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரே
					மேல்
# உறையூர் முதுகொற்றன்
# 221 முல்லை
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறி உடை கையர் மறி இனத்து ஒழிய
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடு உடை இடை_மகன் சென்னி
சூடிய எல்லாம் சிறு பசு முகையே			5
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 222 குறிஞ்சி
தலை புணை கொளினே தலை புணை கொள்ளும்
கடை புணை கொளினே கடை புணை கொள்ளும்
புணை கைவிட்டு புனலோடு ஒழுகின்
ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை		5
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்
துளி தலை தலைஇய தளிர் அன்னோளே
					மேல்
# மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகன்
# 223 குறிஞ்சி
பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல
தழலும் தட்டையும் முறியும் தந்து இவை
ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி		5
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே
					மேல்
# கூவன் மைந்தன்
# 224 பாலை
கவலை யாத்த அவல நீள் இடை
சென்றோர் கொடுமை எற்றி துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போல			5
துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே
					மேல்
# கபிலர்
# 225 குறிஞ்சி
கன்று தன் பய முலை மாந்த முன்றில்
தினை பிடி உண்ணும் பெரும் கல் நாட
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர்		5
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே
					மேல்
# மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்
# 226 நெய்தல்
பூவொடு புரையும் கண்ணும் வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்கு_உறூஉம் நுதலும் நன்றும்
நல்ல-மன் வாழி தோழி அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூ		5
குருகு என மலரும் பெரும் துறை
விரிநீர் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே
					மேல்
# ஓத ஞானி
# 227 நெய்தல்
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து இவண்
தேரோன் போகிய கானலானே
					மேல்
# செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்
# 228 நெய்தல்
வீழ் தாழ் தாழை ஊழ்_உறு கொழு முகை
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து
நெடும் சேண் நாட்டார் ஆயினும்			5
நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே
					மேல்
# மோதாசனார்
# 229 பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ
நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல்		5
துணை மலர் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே
					மேல்
# அறிவுடை நம்பி
# 230 நெய்தல்
அம்ம வாழி தோழி கொண்கன்
தான் அது துணிகுவன் அல்லன் யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ
வய சுறா வழங்கு நீர் அத்தம்			5
தவ சில் நாளினன் வரவு அறியானே
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 231 மருதம்
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதிலாளர் சுடலை போல
காணா கழிப-மன்னே நாண் அட்டு
நல் அறிவு இழந்த காமம்			5
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே
					மேல்
# ஊண்பித்தை
# 232 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும்
வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும்			5
மா இரும் சோலை மலை இறந்தோரே
					மேல்
# பேயன்
# 233 முல்லை
கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்		5
வரை கோள் அறியா சொன்றி
நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே
					மேல்
# மிளைப்பெரும் கந்தன்
# 234 முல்லை
சுடர் செல் வானம் சேப்ப படர் கூர்ந்து
எல் அறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கியோரே
குடுமி கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை			5
பகலும் மாலை துணை இலோர்க்கே
					மேல்
# மாயேண்டன்
# 235 பாலை
ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி
கல் உயர் நண்ணியதுவே நெல்லி
மரை_இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே		5
					மேல்
# நரிவெரூஉத்தலையார்
# 236 நெய்தல்
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ
நேர்ந்தனை ஆயின் தந்தனை சென்மோ
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்				5
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 237 பாலை
அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇய
நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும்
சேய அம்ம இருவாம் இடையே
மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு		5
கோள் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே
					மேல்
# குன்றியன்
# 238 மருதம்
பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றி
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே		5
					மேல்
# ஆசிரியன் பெருங்கண்ணன்
# 239 குறிஞ்சி
தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே
விடும் நாண் உண்டோ தோழி விடர் முகை
சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள்
நறும் தாது ஊதும் குறும் சிறை தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்		5
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே
					மேல்
# கொல்லின் அழிசி
# 240 முல்லை
பனி புதல் இவர்ந்த பைம் கொடி அவரை
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர்
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும் நோய் பொர
கண்டிசின் வாழி தோழி தெண் திரை		5
கடல் ஆழ் கலத்தின் தோன்றி
மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றே
					மேல்
# கபிலர்
# 241 குறிஞ்சி
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம்
கெழுதகைமையின் அழுதன தோழி
கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி
ஏறாது இட்ட ஏம பூசல்			5
விண் தோய் விடர்_அகத்து இயம்பும்
குன்ற நாடன் கண்ட எம் கண்ணே
					மேல்
# குழற்றத்தன்
# 242 முல்லை
கான கோழி கவர் குரல் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்ப
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே மடந்தை வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்		5
சேந்து வரல் அறியாது செம்மல் தேரே
					மேல்
# நம்பி குட்டுவன்
# 243 நெய்தல்
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே		5
					மேல்
# கண்ணனார்
# 244 குறிஞ்சி
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல்
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும
ஓரி முருங்க பீலி சாய
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம்		5
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே
					மேல்
# மாலை மாறன்
# 245 நெய்தல்
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும் நனி இன்னாதே
வாள் போல் வாய கொழு மடல் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம்புலம்பன் கொடுமை			5
பல்லோர் அறிய பரந்து வெளிப்படினே
					மேல்
# கபிலர்
# 246 நெய்தல்
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை
களிற்று செவி அன்ன பாசடை மயக்கி
பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர்
தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டு
ஓரும் அலைக்கும் அன்னை பிறரும்		5
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே
அலையா தாயரொடு நற்பாலோரே
					மேல்
# சேந்தம்பூதன்
# 247 குறிஞ்சி
எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம்
திறவோர் செய்_வினை அறவது ஆகும்
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை
வீயா மென் சினை வீ உக யானை		5
ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே
					மேல்
# உலோச்சன்
# 248 நெய்தல்
அது வரல் அன்மையோ அரிதே அவன் மார்பு
உறுக என்ற நாளே குறுகி
ஈங்கு ஆகின்றே தோழி கானல்
ஆடு அரை புதைய கோடை இட்ட
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை	5
குறிய ஆகும் துறைவனை
பெரிய கூறி யாய் அறிந்தனளே
					மேல்
# கபிலர்
# 249 குறிஞ்சி
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு
குன்றம் நோக்கினென் தோழி
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே		5
					மேல்
# நாமலார் மகன் இளங்கண்ணன்
# 250 பாலை
பரல் அவல் படு நீர் மாந்தி துணையோடு
இரலை நன் மான் நெறி முதல் உகளும்
மாலை வாரா அளவை கால் இயல்
கடு மா கடவு-மதி பாக நெடு நீர்
பொரு கயல் முரணிய உண்கண்			5
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே
					மேல்
# இடைக்காடன்
# 251 முல்லை
மடவ வாழி மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்து என அதன்_எதிர்
ஆலலும் ஆலின பிடவும் பூத்தன
கார் அன்று இகுளை தீர்க நின் படரே
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்			5
புது நீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே
					மேல்
# கிடங்கில் குலபதி நக்கண்ணன்
# 252 குறிஞ்சி
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை இன்முகம் திரியாது
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி
மடவை மன்ற நீ என கடவுபு			5
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
பழி யாங்கு ஒல்பவோ காணும்_காலே
					மேல்
# பூங்கண்ணன்
# 253 பாலை
கேளார் ஆகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல்
பூ சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ
ஒலி கழை நிவந்த ஓங்கு மலை சாரல்		5
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே
					மேல்
# பார்காப்பான்
# 254 பாலை
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன வாரா தோழி
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்
பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார்		5
செய்_பொருள் தரல் நசைஇ சென்றோர்
எய்தினரால் என வரூஉம் தூதே
					மேல்
# கடுகு பெரும் தேவன்
# 255 பாலை
பொத்து இல் காழ அத்த யாஅத்து
பொரி அரை முழு_முதல் உருவ குத்தி
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் தோழி		5
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும்
காமர் பொருள்_பிணி போகிய
நாம் வெம் காதலர் சென்ற ஆறே
					மேல்
# 256 பாலை
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி
மான் ஏறு உகளும் கானம் பிற்பட
வினை நலம் படீஇ வருதும் அ வரை
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் என		5
சொல்லா முன்னர் நில்லா ஆகி
நீர் விலங்கு அழுதல் ஆனா
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே
					மேல்
# உறையூர் சிறுகந்தன்
# 257 குறிஞ்சி
வேரும் முதலும் கோடும் ஓராங்கு
தொடுத்த போல தூங்குபு தொடரி
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின்
ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம்
அகலினும் அகலாது ஆகி			5
இகலும் தோழி நம் காமத்து பகையே
					மேல்
# பரணர்
# 258 மருதம்
வாரல் எம் சேரி தாரல் நின் தாரே
அலர் ஆகின்றால் பெரும காவிரி
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை
அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை		5
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே
					மேல்
# பரணர்
# 259 குறிஞ்சி
மழை சேர்ந்து எழுதரு மாரி குன்றத்து
அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள்
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல்
பல் இதழ் மழை கண் மாஅயோயே
ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும்		5
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல்
பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ
நெஞ்சம் நன்றே நின்_வயினானே
					மேல்
# கல்லாடனார்
# 260 பாலை
குருகும் இரு விசும்பு இவரும் புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே
சுரி வளை பொலிந்த தோளும் செற்றும்
வருவர்-கொல் வாழி தோழி பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை		5
வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே
					மேல்
# கழார் கீரன் எயிற்றி
# 261 குறிஞ்சி
பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள்
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
நள்ளென் யாமத்து ஐயென கரையும்
அஞ்சுவரு பொழுதினானும் என் கண்		5
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 262 பாலை
ஊஉர் அலர் எழ சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க தன் மனை யானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு	5
விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன்
கரும்பு நடு பாத்தி அன்ன
பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரே
					மேல்
# பெருஞ்சாத்தன்
# 263 குறிஞ்சி
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ
செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி
பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல்		5
நோ_தக்கன்றே தோழி மால் வரை
மழை விளையாடும் நாடனை
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே
					மேல்
# கபிலர்
# 264 குறிஞ்சி
கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்த_காலும் பயப்பு ஒல்லாதே			5
					மேல்
# கருவூர் கதப்பிள்ளை
# 265 குறிஞ்சி
காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது
வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டும்
தாம் அறி செம்மை சான்றோர் கண்ட
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்		5
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக
தான் நாணினன் இஃது ஆகா ஆறே
					மேல்
# நக்கீரர்
# 266 பாலை
நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ
மறப்பு அரும் பணை தோள் மரீஇ
துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே		5
					மேல்
# காலெறி கடிகையார்
# 267 பாலை
இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம்
ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின்
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்
கோல் அமை குறும் தொடி குறு_மகள் ஒழிய		5
ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே
					மேல்
# கருவூர் சேரமான் சாத்தன்
# 268 நெய்தல்
சேறிரோ என செப்பலும் ஆற்றாம்
வருவிரோ என வினவலும் வினவாம்
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின்
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து			5
நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே
					மேல்
# கல்லாடனார்
# 269 நெய்தல்
சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது
உசாவுநர் பெறினே நன்று-மன் தில்ல
வய சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய		5
உப்பு விளை கழனி சென்றனள் அதனால்
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள் என்னும் தூதே
					மேல்
# பாண்டியன் பன்னாடு தந்தான்
# 270 முல்லை
தாழ் இருள் துமிய மின்னி தண்ணென
வீழ் உறை இனிய சிதறி ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு		5
இவளின் மேவினம் ஆகி குவளை
குறும் தாள் நாள்_மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே
					மேல்
# அழிசி நாச்சாத்தனார்
# 271 மருதம்
அருவி அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனை தேறி
உற்றது மன்னும் ஒரு நாள் மற்று அது
தவ பல் நாள் தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே		5
					மேல்
# ஒருசிறைப்பெரியன்
# 272 குறிஞ்சி
தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி	5
குருதியொடு பறித்த செம் கோல் வாளி
மாறு கொண்டு அன்ன உண்கண்
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 273 பாலை
அல்கு_உறு பொழுதில் தாது முகை தயங்க
பெரும் காடு உளரும் அசை வளி போல
தண்ணிய கமழும் ஒண் நுதலோயே
நொந்தன ஆயின் கண்டது மொழிவல்
பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு		5
அறியாது ஏறிய மடவோன் போல
ஏமாந்தன்று இ உலகம்
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே
					மேல்
# உருத்திரன்
# 274 பாலை
புறவு புறத்து அன்ன புன் கால் உகாஅத்து
இறவு சினை அன்ன நளி கனி உதிர
விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும்	5
இன்னா கானமும் இனிய பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் உள்கினம் செலினே
					மேல்
# ஒக்கூர் மாசாத்தியார்
# 275 முல்லை
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு		5
வல் வில் இளையர் பக்கம் போற்ற
ஈர் மணல் காட்டாறு வரூஉம்
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே
					மேல்
# கூழி கொற்றன்
# 276 குறிஞ்சி
பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும்
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
முறை உடை அரசன் செங்கோல் அவையத்து	5
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல்
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானே இ அழுங்கல் ஊரே
					மேல்
# ஓரில் பிச்சையார்
# 277 பாலை
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர்
சேம_செப்பில் பெறீஇயரோ நீயே			5
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை
எ_கால் வருவது என்றி
அ-கால் வருவர் எம் காதலோரே
					மேல்
# பேரிசாத்தன்
# 278 பாலை
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டு அன்ன மெல்லென் சீறடி
சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார்
கொடியர் வாழி தோழி கடுவன்
ஊழ்_உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து		5
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே
					மேல்
# மதுரை மருதன் இளநாகனார்
# 279 முல்லை
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வரு மிடறு யாத்த பகு வாய் தெண் மணி
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல்		5
துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும்
இரும் பல் குன்றம் போகி
திருந்து இறை பணை தோள் உள்ளாதோரே
					மேல்
# நக்கீரர்
# 280 குறிஞ்சி
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என்
நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதி
பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணர புணரின்
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே	5
					மேல்
# குடவாயில் கீரத்தன்
# 281 பாலை
வெண் மணல் பொதுளிய பைம் கால் கருக்கின்
கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு
அத்த வேம்பின் அமலை வான் பூ
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி
குன்று தலைமணந்த கானம்			5
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே
					மேல்
# நாகம்போத்தன்
# 282 பாலை
செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின் கை வளை
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த		5
வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 283 பாலை
உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என
சொல்லிய வன்மை தெளிய காட்டி
சென்றனர் வாழி தோழி என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்		5
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே
					மேல்
# மிளைவேள் தித்தன்
# 284 குறிஞ்சி
பொருத யானை புகர் முகம் கடுப்ப
மன்ற துறுகல் மீமிசை பல உடன்
ஒண் செம்_காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும்
நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ		5
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலை குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இ சிறுகுடியோரே
					மேல்
# பூத தேவன்
# 285 பாலை
வைகல் வைகல் வைகவும் வாரார்
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ்
புன் புற பெடையொடு பயிரி இன் புறவு		5
இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே
					மேல்
# எயிற்றியனார்
# 286 குறிஞ்சி
உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்
பேர் அமர் மழை கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே		5
					மேல்
# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 287 முல்லை
அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோ
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லா பசும் புளி வேட்கை
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு		5
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி
செழும் பல் குன்றம் நோக்கி
பெரும் கலி வானம் ஏர்தரும் பொழுதே
					மேல்
# கபிலர்
# 288 குறிஞ்சி
கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன்
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற
இன்னாமையினும் இனிதோ
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே		5
					மேல்
# பெரும் கண்ணனார்
# 289 முல்லை
வளர்பிறை போல வழிவழி பெருகி
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி மான்று பட்டன்றே		5
பட்ட மாரி படாஅ_கண்ணும்
அவர் திறத்து இரங்கும் நம்மினும்
நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊரே
					மேல்
# கல்பொருசிறுநுரையார்
# 290 நெய்தல்
காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல்
யாம் எம் காதலர் காணேம் ஆயின்
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர்
கல் பொரு சிறு நுரை போல			5
மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே
					மேல்
# கபிலர்
# 291 குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனல்
படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே
அது புலந்து அழுத கண்ணே சாரல்		5
குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே
					மேல்
# பரணர்
# 292 குறிஞ்சி
மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை
புனல் தரு பசும் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல		5
வரையா நிரையத்து செலீஇயரோ அன்னை
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே
					மேல்
# கள்ளில் ஆத்திரையன்
# 293 மருதம்
கள்ளின் கேளிர் ஆத்திரை உள்ளூர்
பாளை தந்த பஞ்சி அம் குறும் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன
அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை		5
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப
வருமே சே_இழை அந்தில்
கொழுநன் காணிய அளியேன் யானே
					மேல்
# அஞ்சில் ஆந்தையார்
# 294 நெய்தல்
கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும்
தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும்
நொதுமலர் போல கதுமென வந்து
முயங்கினன் செலினே அலர்ந்தன்று-மன்னே
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல்		5
திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசும் குழை
தழையினும் உழையின் போகான்
தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல்லே
					மேல்
# தூங்கலோரி
# 295 நெய்தல்
உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
தழை அணி பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே இஃதோ
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை
பெரு நல குறு_மகள் வந்து என			5
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே
					மேல்
# பெரும்பாக்கன்
# 296 நெய்தல்
அம்ம வாழி தோழி புன்னை
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை
உறு கழி சிறு மீன் முனையின் செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவன் காணின் முன் நின்று		5
கடிய கழறல் ஓம்பு-மதி தொடியோள்
இன்னள் ஆக துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே
					மேல்
# காவிரிப்பூம் பட்டினத்து காரி கண்ணன்
# 297 குறிஞ்சி
அம் விளிம்பு உரீஇய கொடும் சிலை மறவர்
வை வார் வாளி விறல் பகை பேணார்
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனம் தலை நல்ல கூறி		5
புணர்ந்து உடன் போதல் பொருள் என
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே
					மேல்
# பரணர்
# 298 குறிஞ்சி
சேரி சேர மெல்ல வந்து_வந்து
அரிது வாய்விட்டு இனிய கூறி
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
இன் கடும் கள்ளின் அகுதை தந்தை		5
வெண் கடை சிறு கோல் அகவன்_மகளிர்
மட பிடி பரிசில் மான
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே
					மேல்
# வெண்மணி பூதி
# 299 நெய்தல்
இது மற்று எவனோ தோழி முதுநீர்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல்
புணர் குறி வாய்த்த ஞான்றை கொண்கன்
கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல்		5
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன்
மணப்பின் மாண் நலம் எய்தி
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 300 குறிஞ்சி
குவளை நாறும் குவை இரும் கூந்தல்
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்
குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி மாஅயோயே
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே		5
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே
					மேல்
# குன்றியன்
# 301 குறிஞ்சி
முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணை
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பை
கரும் கால் அன்றில் காமர் கடும் சூல்
வயவு பெடை அகவும் பானாள் கங்குல்
மன்றம் போழும் இன் மணி நெடும் தேர்		5
வாராது ஆயினும் வருவது போல
செவி முதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே
					மேல்
# மாங்குடி கிழார்
# 302 குறிஞ்சி
உரைத்திசின் தோழி அது புரைத்தோ அன்றே
அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை
பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ இன்னும் நன் மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும்		5
அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும் என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே
					மேல்
# அம்மூவன்
# 303 நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கரும் கால் வெண்_குருகு
அடைகரை தாழை குழீஇ பெரும் கடல்
உடை திரை ஒலியின் துஞ்சும் துறைவ
தொல் நிலை நெகிழ்ந்த வளையன் ஈங்கு
பசந்தனள்-மன் என் தோழி என்னொடும்		5
இன் இணர் புன்னை அம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே
					மேல்
# கணக்காயன் தத்தன்
# 304 நெய்தல்
கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி_உளி
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர் சுரத்து எறிந்து வாங்கு விசை
கொடும் திமில் பரதவர் கோட்டு_மீன் எறிய
நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்து		5
வெண் தோடு இரியும் வீ ததை கானல்
கைதை அம் தண் புனல் சேர்ப்பனொடு
செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பே
					மேல்
# குப்பை கோழியார்
# 305 மருதம்
கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும் அவரொடு பேணி
சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்		5
குப்பை கோழி தனி போர் போல
விளிவு ஆங்கு விளியின் அல்லது
களைவோர் இலை யான் உற்ற நோயே
					மேல்
# அம்மூவன்
# 306 நெய்தல்
மெல்லிய இனிய மேவரு தகுந
இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ
மறத்தியோ வாழி என் நெஞ்சே பல உடன்
காமர் மாஅத்து தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்			5
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே
					மேல்
# கடம்பனூர் சாண்டிலியன்
# 307 பாலை
வளை உடைத்து அனையது ஆகி பலர் தொழ
செம் வாய் வானத்து ஐயென தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர்-கொல்லோ தாமே களிறு தன்
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது		5
நிலை உயர் யாஅம் தொலைய குத்தி
வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழ பிரிந்தோரே
					மேல்
# பெருந்தோள் குறுஞ்சாத்தன்
# 308 குறிஞ்சி
சோலை வாழை சுரி நுகும்பு இனைய
அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து
மயங்கு துயர்_உற்ற மையல் வேழம்
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்		5
மா மலை நாடன் கேண்மை
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே
					மேல்
# உறையூர் சல்லியன் குமாரன்
# 309 மருதம்
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார்
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட
நீடிய வரம்பின் வாடிய விடினும்
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்		5
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்
நின் இன்று அமைதல் வல்லாம் மாறே
					மேல்
# பெருங்கண்ணன்
# 310 நெய்தல்
புள்ளும் புலம்பின பூவும் கூம்பின
கானலும் புலம்பு நனி உடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர்த்து ஆகி
எல்லை கழிய புல்லென்றன்றே
இன்னும் உளெனே தோழி இ நிலை		5
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உரைக்குநர் பெறினே
					மேல்
# சேந்தன்கீரன்
# 311 நெய்தல்
அலர் யாங்கு ஒழிவ தோழி பெரும் கடல்
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடும் தேர்
யான் கண்டன்றோ இலனே பானாள்
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னை		5
தாது சேர் நிகர் மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே
					மேல்
# கபிலர்
# 312 குறிஞ்சி
இரண்டு அறி கள்வி நம் காதலோளே
முரண் கொள் துப்பின் செ வேல் மலையன்
முள்ளூர் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம் ஓர் அன்னள்
கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்து		5
சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்தள் ஆகி
தமர் ஓர் அன்னள் வைகறையானே
					மேல்
# 313 நெய்தல்
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு
பூ கமழ் பொதும்பர் சேக்கும் துறைவனோடு
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே	5
					மேல்
# பேரிசாத்தன்
# 314 முல்லை
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல்
தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்
வாரார் வாழி தோழி வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க		5
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே
					மேல்
# மதுரை வேளாதத்தன்
# 315 குறிஞ்சி
எழுதரு மதியம் கடல் கண்டு ஆங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன்
ஞாயிறு அனையன் தோழி
நெருஞ்சி அனைய என் பெரும் பணை தோளே
					மேல்
# தும்பிசேர் கீரன்
# 316 நெய்தல்
ஆய் வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும்
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்
உளெனோ வாழி தோழி விளியாது
உரவு கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட			5
ஆய்ந்த அலவன் துன்புறு துனை பரி
ஓங்கு வரல் விரி திரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே
					மேல்
# மதுரை கண்டரதத்தன்
# 317 குறிஞ்சி
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து_உயிர்த்து
ஓங்கு மலை பைம் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக	5
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே
					மேல்
# அம்மூவன்
# 318 நெய்தல்
எறி சுறா கலித்த இலங்கு நீர் பரப்பின்
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இ		5
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள்
பிழையா வஞ்சினம் செய்த
கள்வனும் கடவனும் புணைவனும் தானே
					மேல்
# தாயம் கண்ணன்
# 319 முல்லை
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்
கை உடை நன் மா பிடியொடு பொருந்தி
மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும்
மாலை வந்தன்று மாரி மா மழை			5
பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே
					மேல்
# தும்பிசேர் கீரன்
# 320 நெய்தல்
பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின்
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு
நிலவு நிற வெண் மணல் புலவ பலவுடன்
எக்கர்-தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்		5
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்
புன்னை அம் சேரி இ ஊர்
கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே
					மேல்
# 321 குறிஞ்சி
மலை செம் சாந்தின் ஆர மார்பினன்
சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன்
நடுநாள் வந்து நம் மனை பெயரும்
மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன் துணை
மன்ற மரையா இரிய ஏறு அட்டு			5
செம் கண் இரும் புலி குழுமும் அதனால்
மறைத்தல் காலையோ அன்றே
திறப்பல் வாழி வேண்டு அன்னை நம் கதவே
					மேல்
# ஐயூர் முடவன்
# 322 குறிஞ்சி
அமர் கண் ஆமான் அம் செவி குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு		5
மருவின் இனியவும் உளவோ
செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே
					மேல்
# பதடி வைகலார்
# 323 முல்லை
எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ
பெய்த புலத்து பூத்த முல்லை
பசு முகை தாது நாறும் நறு நுதல்			5
அரிவை தோள் அணை துஞ்சி
கழிந்த நாள் இவண் வாழும் நாளே
			மேல்
# கவைமகன்
# 324 நெய்தல்
கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின்
நயன் உடைமையின் வருதி இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும் யான் அது		5
கவை_மக நஞ்சு உண்டு ஆங்கு
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே
					மேல்
# நன்னாகையார்
# 325 நெய்தல்
சேறும் சேறும் என்றலின் பண்டை தம்
மாய செலவா செத்து மருங்கு அற்று
மன்னி கழிக என்றேனே அன்னோ
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
கரும் கால் வெண்_குருகு மேயும்			5
பெரும் குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே
					மேல்
# 326 நெய்தல்
துணைத்த கோதை பணை பெரும் தோளினர்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு_மனை புணர்ந்த நட்பே தோழி
ஒரு நாள் துறைவன் துறப்பின்
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே		5
					மேல்
# அம்மூவனார்
# 327 குறிஞ்சி
நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்_வயின்
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும் நன்றும்
நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி
நம் மனை மட_மகள் இன்ன மென்மை		5
சாயலள் அளியள் என்னாய்
வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவே
					மேல்
# பரணர்
# 328 நெய்தல்
சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி
அலவன் சிறு_மனை சிதைய புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவ சிலவே அலரே
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்		5
வேந்தரொடு பொருத ஞான்றை பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே
					மேல்
# ஓதலாந்தையார்
# 329 பாலை
கான இருப்பை வேனில் வெண் பூ
வளி பொரு நெடும் சினை உகுத்தலின் ஆர் கழல்பு
களிறு வழங்கு சிறு நெறி புதைய தாஅம்
பிறங்கு மலை அரும் சுரம் இறந்தவர் படர்ந்து
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி		5
தெண் நீர் நிகர் மலர் புரையும்
நன் மலர் மழை கணிற்கு எளியவால் பனியே
					மேல்
# கழார் கீரன் எயிற்றியன்
# 330 மருதம்
நல_தகை புலைத்தி பசை தோய்த்து எடுத்து
தலை புடை போக்கி தண் கயத்து இட்ட
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும்
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ
இன் கடும் கள்ளின் மணம் இல கமழும்		5
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே
					மேல்
# வாடா பிரமந்தன்
# 331 பாலை
நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று
கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானை கானம் நீந்தி
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி		5
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நன் மா மேனி பசப்ப
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே
					மேல்
# மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்
# 332 குறிஞ்சி
வந்த வாடை சில் பெயல் கடை நாள்
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து
கூறின் எவனோ தோழி நாறு உயிர்
மட பிடி தழீஇ தட கை யானை
குன்றக சிறுகுடி இழிதரும்			5
மன்றம் நண்ணிய மலை கிழவோற்கே
					மேல்
# உழுந்தினைம் புலவன்
# 333 குறிஞ்சி
குறும் படை பகழி கொடு வில் கானவன்
புனம் உண்டு கடிந்த பைம் கண் யானை
நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணி குறை வருத்தம் வீட			5
துணியின் எவனோ தோழி நம் மறையே
					மேல்
# இளம் பூதனார்
# 334 நெய்தல்
சிறு_வெண்_காக்கை செ வாய் பெரும் தோடு
எறி திரை திவலை ஈர்ம் புறம் நனைப்ப
பனி புலந்து உறையும் பல் பூ கானல்
இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம்
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று			5
எவனோ தோழி நாம் இழப்பதுவே
					மேல்
# இருந்தையூர் கொற்றன் புலவன்
# 335 குறிஞ்சி
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இரும் கல் வியல் அறை செந்தினை பரப்பி
சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்து
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல்		5
வல் வில் கானவர் தங்கை
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே
					மேல்
# குன்றியன்
# 336 குறிஞ்சி
செறுவர்க்கு உவகை ஆக தெறுவர
ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப
கடு மா நெடும் தேர் நேமி போகிய
இரும் கழி நெய்தல் போல			5
வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளே
					மேல்
# பொது கயத்து கீரந்தையார்
# 337 குறிஞ்சி
முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின
சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என
யான் தன் அறிவல் தான் அறியலளே		5
யாங்கு ஆகுவள்-கொல் தானே
பெரு முது செல்வர் ஒரு மட_மகளே
					மேல்
# பெருங்குன்றூர் கிழார்
# 338 குறிஞ்சி
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ
வீ ததை வியல் அரில் துஞ்சி பொழுது செல
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை
பின்பனி கடை நாள் தண் பனி அற்சிரம்		5
வந்தன்று பெரு விறல் தேரே பணை தோள்
விளங்கு நகர் அடங்கிய கற்பின்
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே
					மேல்
# பேயார்
# 339 குறிஞ்சி
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை
உறை அறு மையின் போகி சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர் கோதை நன் மார்பு முயங்கல்
இனிது-மன் வாழி தோழி மா இதழ்		5
குவளை உண்கண் கலுழ
பசலை ஆகா ஊங்கலங்கடையே
					மேல்
# அம்மூவன்
# 340 நெய்தல்
காமம் கடையின் காதலர் படர்ந்து
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்		5
பெயர்தர பெயர்தந்து ஆங்கு
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே
					மேல்
# மிளைகிழான் நல் வேட்டன்
# 341 நெய்தல்
பல் வீ படரிய பசு நனை குரவம்
பொரி பூ புன்கொடு பொழில் அணி கொளாஅ
சினை இனிது ஆகிய_காலையும் காதலர்
பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து
கண்ணிய ஆண்மை கடவது அன்று என		5
வலியா நெஞ்சம் வலிப்ப
வாழ்வேன் தோழி என் வன்கணானே
					மேல்
# காவிரிப்பூம் பட்டினத்து கந்தரத்தனார்
# 342 குறிஞ்சி
கலை கை தொட்ட கமழ் சுளை பெரும் பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்
கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைம் சுனை
குவளை தண் தழை இவள் ஈண்டு வருந்த		5
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படா பண்பினை எனினே
					மேல்
# ஈழத்து பூதன் தேவன்
# 343 பாலை
நினையாய் வாழி தோழி நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என
மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றை
வெண் கோடு செம் மறு கொளீஇய விடர் முகை
கோடை ஒற்றிய கரும் கால் வேங்கை		5
வாடு பூ சினையின் கிடக்கும்
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே
					மேல்
# குறுங்குடி மருதன்
# 344 முல்லை
நோற்றோர் மன்ற தோழி தண்ணென
தூற்றும் துவலை பனி கடும் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து		5
ஊர் வயின் பெயரும் புன்கண் மாலை
அரும் பெறல் பொருள்_பிணி போகி
பிரிந்து உறை காதலர் வர காண்போரே
					மேல்
# அண்டர் மகன் குறுவழுதி
# 345 நெய்தல்
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர்
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇ
தங்கினிர் ஆயின் தவறோ தகைய
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல
தாழை தைஇய தயங்கு திரை கொடும் கழி		5
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே
					மேல்
# வாயில் இளங்கண்ணன்
# 346 குறிஞ்சி
நாகு பிடி நயந்த முளை கோட்டு இளம் களிறு
குன்றம் நண்ணி குறவர் ஆர்ப்ப
மன்றம் போழும் நாடன் தோழி
சுனை பூ குவளை தொடலை தந்தும்
தினை புன மருங்கில் படு கிளி ஓப்பியும்		5
காலை வந்து மாலை பொழுதில்
நல் அகம் நயந்து தான் உயங்கி
சொல்லவும் ஆகாது அஃகியோனே
					மேல்
# காவிரி பூம் பட்டினத்து சேந்தன் கண்ணன்
# 347 பாலை
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல்
குமரி வாகை கோல் உடை நறு வீ
மட மா தோகை குடுமியின் தோன்றும்
கான நீள் இடை தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்		5
நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே
					மேல்
# மாவளத்தன்
# 348 பாலை
தாமே செல்ப ஆயின் கானத்து
புலம் தேர் யானை கோட்டு இடை ஒழிந்த
சிறு வீ முல்லை கொம்பின் தாஅய்
இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர் எழில்
பூண் அக வன் முலை நனைத்தலும்		5
காணார்-கொல்லோ மாண்_இழை நமரே
					மேல்
# சாத்தன்
# 349 நெய்தல்
அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி
தடம் தாள் நாரை இருக்கும் எக்கர்
தண்ணம் துறைவன் தொடுத்து நம் நலம்
கொள்வாம் என்றி தோழி கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய		5
கொடுத்து அவை தா என கூறலின்
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே
					மேல்
# ஆலந்தூர் கிழார்
# 350 பாலை
அம்ம வாழி தோழி முன் நின்று
பனி கடும்-குரையம் செல்லாதீம் என
சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ
ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை
நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ		5
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்
மலை உடை கானம் நீந்தி
நிலையா பொருள்_பிணி பிரிந்திசினோரே
					மேல்
# அம்மூவன்
# 351 நெய்தல்
வளையோய் உவந்திசின் விரைவு_உறு கொடும் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென
உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே விரி அலர்		5
புன்னை ஓங்கிய புலால் அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரே
					மேல்
# கடியலூர் உருத்திரங்கண்ணனார்
# 352 பாலை
நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்ன
கொடு மென் சிறைய கூர் உகிர் பறவை
அகல் இலை பலவின் சாரல் முன்னி
பகல் உறை முது மரம் புலம்ப போகும்
சிறு புன் மாலை உண்மை			5
அறிவேன் தோழி அவர் காணா ஊங்கே
					மேல்
# உறையூர் முதுகூற்றனார்
# 353 குறிஞ்சி
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக
கோடு உயர் நெடு வரை கவாஅன் பகலே
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே
நிரை இதழ் பொருந்தா கண்ணோடு இரவில்
பஞ்சி வெண் திரி செம் சுடர் நல் இல்		5
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்க துயில் இன்னாதே
					மேல்
# கயத்தூர் கிழான்
# 354 மருதம்
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை ஆயின் எம் இல் உய்த்து கொடுமோ
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்			5
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே
					மேல்
# கபிலர்
# 355 குறிஞ்சி
பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலரே
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலரே
எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப		5
வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே
					மேல்
# கயமனார்
# 356 பாலை
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை
கழலோன் காப்ப கடுகுபு போகி
அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெம் வெம் கலுழி தவ்வென குடிக்கிய
யாங்கு வல்லுநள்-கொல் தானே ஏந்திய		5
செம் பொன் புனை கலத்து அம் பொரி கலந்த
பாலும் பல என உண்ணாள்
கோல் அமை குறும் தொடி தளிர் அன்னோளே
					மேல்
# கபிலர்
# 357 குறிஞ்சி
முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள்
மெல்லிய ஆகலின் மேவர திரண்டு
நல்ல என்னும் சொல்லை மன்னிய
ஏனல் அம் சிறுதினை காக்கும் சேணோன்		5
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம்
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே
					மேல்
# கொற்றன்
# 358 மருதம்
வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம் என்ற பருவம் உது காண்
தனியோர் இரங்கும் பனி கூர் மாலை		5
பல் ஆன் கோவலர் கண்ணி
சொல்லுப அன்ன முல்லை வெண் முகையே
					மேல்
# பேயன்
# 359 மருதம்
கண்டிசின் பாண பண்பு உடைத்து அம்ம
மாலை விரிந்த பசு வெண் நிலவின்
குறும் கால் கட்டில் நறும் பூ சேக்கை
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ
புதல்வன் தழீஇயினன் விறலவன்			5
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே
					மேல்
# மதுரை ஈழத்து பூதன் தேவன்
# 360 குறிஞ்சி
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணிய
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரல்
பிடி கை அன்ன பெரும் குரல் ஏனல்		5
உண் கிளி கடியும் கொடிச்சி கை குளிரே
சிலம்பின் சிலம்பும் சோலை
இலங்கு மலை நாடன் இரவினானே
					மேல்
# கபிலர்
# 361 குறிஞ்சி
அம்ம வாழி தோழி அன்னைக்கு
உயர்_நிலை_உலகமும் சிறிதால் அவர் மலை
மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழு_முதல் காந்தள்
மெல் இலை குழைய முயங்கலும்		5
இல் உய்த்து நடுதலும் கடியாதோளே
					மேல்
# வேம்பற்றூர் கண்ணன் கூத்தன்
# 362 குறிஞ்சி
முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல
சினவல் ஓம்பு-மதி வினவுவது உடையேன்
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு
சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய		5
விண் தோய் மா மலை சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே
					மேல்
# செல்லூர் கொற்றன்
# 363 மருதம்
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு
செம் கோல் பதவின் வார் குரல் கறிக்கும்
மட கண் மரையா நோக்கி வெய்து_உற்று
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அரும் சுரம் இறத்தல்			5
இனிதோ பெரும இன் துணை பிரிந்தே
					மேல்
# ஔவையார்
# 364 மருதன்
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி
என் புறங்கூறும் என்ப தெற்றென
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர்	5
துணங்கை நாளும் வந்தன அ வரை
கண் பொர மற்று அதன்_கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே
					மேல்
# மதுரை நல்வெள்ளி
# 365 குறிஞ்சி
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே
துன் அரும் நெடு வரை ததும்பிய அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின்			5
பெரும் கல் நாட நீ நயந்தோள் கண்ணே
					மேல்
# பேரிசாத்தன்
# 366 குறிஞ்சி
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்_வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ
வேறு யான் கூறவும் அமையாள் அதன்_தலை
பைம் கண் மா சுனை பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு		5
அழுத கண்ணள் ஆகி
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே
					மேல்
# மதுரை மருதன் இளநாகன்
# 367 மருதம்
கொடியோர் நல்கார் ஆயினும் யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்
உவ காண் தோழி அ வந்திசினே
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு
பூசல் ஆயம் புகன்று இழி அருவி			5
மண்_உறு மணியின் தோன்றும்
தண் நறும் துறுகல் ஓங்கிய மலையே
					மேல்
# நக்கீரர்
# 368 மருதம்
மெல் இயலோயே மெல் இயலோயே
நன்_நாள் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
சொல்லகிற்றாம் மெல் இயலோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே		5
நாள் இடை படாஅ நளி நீர் நீத்தத்து
இடி_கரை பெரு மரம் போல
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே
					மேல்
# குடவாயில் கீர்த்தனார்
# 369 பாலை
அத்த வாகை அமலை வால் நெற்று
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப
கோடை தூக்கும் கானம்
செல்வாம் தோழி நல்கினர் நமரே
					மேல்
# வில்லக விரலினார்
# 370 முல்லை
பொய்கை ஆம்பல் அணி நிற கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின்
வில் அக விரலின் பொருந்தி அவன்
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே		5
					மேல்
# உறையூர் முதுகூத்தன்
# 371 குறிஞ்சி
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழி அது காமமோ பெரிதே
					மேல்
# விற்றூற்று மூதெயினனார்
# 372 குறிஞ்சி
பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை
கணம்_கொள் சிமைய உணங்கும் கானல்
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி
கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை		5
புலர் பதம் கொள்ளா அளவை
அலர் எழுந்தன்று இ அழுங்கல் ஊரே
					மேல்
# மதுரை கொல்லன் புல்லன்
# 373 குறிஞ்சி
நிலம் புடைபெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்கு திரை பெரும் கடற்கு எல்லை தோன்றினும்
வெம் வாய் பெண்டிர் கௌவை அஞ்சி
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர்
கடும் பல் ஊக கறை விரல் ஏற்றை		5
புடை தொடுபு உடையூ பூ நாறு பலவு கனி
காந்தள் அம் சிறுகுடி கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே
					மேல்
# உறையூர் பல்காயனார்
# 374 குறிஞ்சி
எந்தையும் யாயும் உணர காட்டி
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே
முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ		5
நீடு இரும் பெண்ணை தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே
					மேல்
# 375 குறிஞ்சி
அம்ம வாழி தோழி இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே சாரல்
சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து
இரவு அரிவாரின் தொண்டக_சிறுபறை
பானாள் யாமத்தும் கறங்கும்			5
யாமம் காவலர் அவியா மாறே
					மேல்
# படுமரத்து மோசி கொற்றன்
# 376 நெய்தல்
மன் உயிர் அறியா துன் அரும் பொதியில்
சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே
வாங்கு கதிர் தொகுப்ப கூம்பி ஐயென
அலங்கு வெயில் பொதிந்த தாமரை		5
உள் அகத்து அன்ன சிறு வெம்மையளே
					மேல்
# மோசி கொற்றன்
# 377 குறிஞ்சி
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பே		5
					மேல்
# கயமனார்
# 378 பாலை
ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய
மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய்
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து
சுடர் வாய் நெடு வேல் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே			5
					மேல்
# 379 பாலை
இன்று யாண்டையனோ தோழி குன்றத்து
பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு
கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன்
அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி
எம் இல் வருகுவை நீ என			5
பொம்மல் ஓதி நீவியோனே
					மேல்
# கருவூர் கதப்பிள்ளை
# 380 பாலை
விசும்பு கண் புதைய பாஅய் வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழங்கி
பெயல் ஆனாதே வானம் காதலர்
நனி சேய் நாட்டர் நம் உன்னலரே
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய		5
வண்ண துய்ம் மலர் உதிர
முன்னர் தோன்றும் பனி கடு நாளே
					மேல்
# 381 நெய்தல்
தொல் கவின் தொலைந்து தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது
பசலை ஆகி விளிவது-கொல்லோ
வெண்_குருகு நரலும் தண் கமழ் கானல்
பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கி		5
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே
					மேல்
# குறுங்கீரன்
# 382 முல்லை
தண் துளிக்கு ஏற்ற பைம் கொடி முல்லை
முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசை
பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல
வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்று
கார் இது பருவம் ஆயின்			5
வாராரோ நம் காதலோரே
					மேல்
# படுமரத்து மோசி கீரன்
# 383 பாலை
நீ உடம்படுதலின் யான் தர வந்து
குறி நின்றனனே குன்ற நாடன்
இன்றை அளவை சென்றைக்க என்றி
கையும் காலும் ஓய்வன ஒடுங்க
தீ உறு தளிரின் நடுங்கி			5
யாவதும் இலை யான் செயற்கு உரியதுவே
					மேல்
# ஓரம்போகியார்
# 384 மருதம்
உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள்
நெடும் பல் கூந்தல் குறும் தொடி மகளிர்
நலன் உண்டு துறத்தி ஆயின்
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே
					மேல்
# கபிலர்
# 385 குறிஞ்சி
பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலை
சிலை வில் கானவன் செம் தொடை வெரீஇ
செரு உறு குதிரையின் பொங்கி சாரல்
இரு வெதிர் நீடு அமை தயங்க பாயும்
பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும்		5
அன்றை அன்ன நட்பினன்
புதுவோர்த்து அம்ம இ அழுங்கல் ஊரே
					மேல்
# வெள்ளிவீதியார்
# 386 நெய்தல்
வெண் மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணம் துறைவன் தணவா ஊங்கே
வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும்
மாலையோ அறிவேன்-மன்னே மாலை
நிலம் பரந்து அன்ன புன்கணோடு			5
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே
					மேல்
# கங்குல் வெள்ளத்தார்
# 387 முல்லை
எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின்
எவன்-கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே		5
					மேல்
# ஔவையார்
# 388 குறிஞ்சி
நீர் கால்யாத்த நிரை இதழ் குவளை
கோடை ஒற்றினும் வாடாது ஆகும்
கவணை அன்ன பூட்டு பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகை தோடு நிரைத்து அன்ன
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்		5
யானை கை மடித்து உயவும்
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே
					மேல்
# வேட்ட கண்ணன்
# 389 குறிஞ்சி
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர் பதம் பெறுக தோழி அத்தை
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர்
நன்றோ மகனே என்றனென்
நன்றே போலும் என்று உரைத்தோனே		5
					மேல்
# உறையூர் முதுகொற்றன்
# 390 பாலை
எல்லும் எல்லின்று பாடும் கேளாய்
செல்லாதீமோ சிறு பிடி துணையே
வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து என
வளை அணி நெடு வேல் ஏந்தி
மிளை வந்து பெயரும் தண்ணுமை குரலே		5
					மேல்
# பொன்மணியார்
# 391 முல்லை
உவரி ஒருத்தல் உழாஅது மடிய
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே
வீழ்ந்த மா மழை தழீஇ பிரிந்தோர்		5
கையற வந்த பையுள் மாலை
பூ சினை இருந்த போழ் கண் மஞ்ஞை
தாம் நீர் நனம் தலை புலம்ப
கூஉம் தோழி பெரும் பேதையவே
					மேல்
# தும்பிசேர் கீரனார்
# 392 குறிஞ்சி
அம்ம வாழியோ மணி சிறை தும்பி
நன் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு
அண்ணல் நெடு வரை சேறி ஆயின்
கடவை மிடைந்த துடவை அம் சிறுதினை
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை		5
தமரின் தீராள் என்மோ அரசர்
நிரை செலல் நுண் தோல் போல
பிரசம் தூங்கு மலை கிழவோற்கே
					மேல்
# பரணர்
# 393 மருதம்
மயங்கு மலர் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவ சிலவே அலரே
கூகை கோழி வாகை பறந்தலை
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை			5
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே
					மேல்
# குறியிறையார்
# 394 குறிஞ்சி
முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்ற
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி
முன்_நாள் இனியது ஆகி பின் நாள்
அவர் தினை புனம் மேய்ந்து ஆங்கு		5
பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே
					மேல்
# 395 பாலை
நெஞ்சே நிறை ஒல்லாதே அவரே
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போல
களையார் ஆயினும் கண் இனிது படீஇயர்		5
அஞ்சல் என்மரும் இல்லை அந்தில்
அளிதோ தானே நாணே
ஆங்கு அவர் வதி_வயின் நீங்கப்படினே
					மேல்
# கயமனார்
# 396 நெய்தல்
பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே
எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை
ஓமை குத்திய உயர் கோட்டு ஒருத்தல்
வேனில் குன்றத்து வெம் அறை கவாஅன்		5
மழை முழங்கு கடும் குரல் ஓர்க்கும்
கழை திரங்கு ஆரிடை அவனொடு செலவே
					மேல்
# அம்மூவன்
# 397 நெய்தல்
நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீ
நெய்தல் மா மலர் பெய்த போல
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப
தாய் உடன்று அலைக்கும்_காலையும் வாய்விட்டு
அன்னாய் என்னும் குழவி போல			5
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்
நின் வரைப்பினள் என் தோழி
தன் உறு விழுமம் களைஞரோ இலளே
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுக்கோ
# 398 பாலை
தேற்றாம் அன்றே தோழி தண்ணென
தூற்றும் திவலை துயர் கூர் காலை
கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை		5
அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்பு
மெய்ம் மலி உவகையின் எழுதரு
கண் கலிழ் உகு பனி அரக்குவோரே
					மேல்
# பரணர்
# 399 மருதம்
ஊர் உண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை காதலர்
தொடு_உழி தொடு_உழி நீங்கி
விடு_உழி விடு_உழி பரத்தலானே

# பேயனார்
# 400 முல்லை
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று
களைகலம் காமம் பெரும்_தோட்கு என்று
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி
முரம்பு கண் உடைய ஏகி கரம்பை
புது வழி படுத்த மதி உடை வலவோய்		5
இன்று தந்தனை தேரோ
நோய் உழந்து உறைவியை நல்கலானே
					மேல்
# அம்மூவன்
# 401 நெய்தல்
அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்
நக்கு விளையாடலும் கடிந்தன்று			5
ஐது ஏகு அம்ம மெய் தோய் நட்பே
  
 அடிநேர் உரை

# பாரதம் பாடிய பெருந்தேவனார்
# 0 கடவுள் வாழ்த்து 
தாமரை மலரைப் போன்ற அழகிய சிவந்த திருவடிகளையும்,
பவழத்தைப் போன்ற மேனியையும், திகழ்கின்ற ஒளியையும்,
குன்றிமணி போன்ற உடையையும், குன்றின்
நெஞ்சு பிளக்கும்படியாக எறிந்த அழகிய சுடர்விடும் நீண்ட வேலையும்,
சேவல் வரைந்த அழகிய கொடியையும் உடையோன் காத்து அருளுவதால்			5
இனிமையான வாழ்வை எய்திநிற்கின்றன உலகத்து உயிர்கள்.
					மேல்
# திப்புத்தோளார்
# 1 குறிஞ்சி
போர்க்களம் சிவப்பாகும்படி கொன்று அசுரர்களை அழித்த
சிவந்த கோலையுடைய அம்பினையும், சிவந்த கொம்புகளையுடைய யானையையும்
காலில் வீரக்கழலையும் தோளில் தொடியையும் கொண்ட முருகனின் குன்றம்
குருதிநிறம் வாய்ந்த காந்தள் பூக்குலைகளையுடையது.
					மேல்
# இறையனார்
# 2 குறிஞ்சி
பூந்துகளைத் தேர்கின்ற வாழ்க்கையையும் அழகிய சிறகுகளையும் உடைய தும்பியே!
உன் விருப்பத்தைச் சொல்லாமல் நீ கண்டதனை மொழிவாயாக!
என்னுடன் பழகுதல் பொருந்திய அன்பினையும் மயிலின் இயல்பினையும்
நெருங்கிய பல்லொழுங்கினையும் உடைய இவளது கூந்தலைப்போன்று
நறுமணமிக்க மலர்களும் இருக்கின்றனவோ நீ அறிந்த பூக்களில்.
					மேல்
# தேவகுலத்தார்
# 3 குறிஞ்சி
பூமியைக் காட்டிலும் பெரியது; வானத்தைக் காட்டிலும் உயரமானது;
கடலைக் காட்டிலும் அளத்தற்கு அரிய ஆழம் உடையது; மலைச் சரிவிலுள்ள
கரிய கொம்புகளை உடைய குறிஞ்சிச் செடியின் மலர்களினின்றும் எடுத்து
பெரிய (அளவு) தேனை (தேனீக்கள்) செய்யும் நாட்டைச் சேர்ந்தவனோடு யான் கொண்ட காதல்
					மேல்
# காமஞ்சேர் குளத்தார்
# 4 நெய்தல்
நோகின்றது என் நெஞ்சம்! நோகின்றது என் நெஞ்சம்!
கண்ணிமைகளைக் கருக்குவது போன்ற கண்ணீரைத் தாங்கிக்கொண்டு
(நாம்)பொறுத்திருத்தற்குக் காரணமான நம் காதலர்
பொறுப்பில்லாதவராய் இருத்தலை எண்ணி நோகின்றது என் நெஞ்சம்!
					மேல்
# நரி வெரூஉத்தலையார்
# 5 நெய்தல்
அதுதான் தோழியே! காம நோய் என்பதோ?
தன்னிடத்தில் தங்கும் கொக்குகள் உறங்கும்படியான இனிய நிழலையுடைய புன்னைமரம்
(கரையை)உடைக்கும் அலைகளினால் ஏற்படும் நீர்த்திவலைகளினால் அரும்பு விடும் இனிய நீர்ப்பரப்பையுடைய
நெய்தல் நிலத் தலைவன் பிரிந்துசென்றான் என
பல இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற மையுண்ட கண்கள் துயில் கொள்ளாதாகின.

# பதுமனார் 				மேல்
# 6 நெய்தல்
'கும்'மிருட்டையுடையது நள்ளிரவு! பேச்செல்லாம் முடிந்து
இனிதாக உறங்குகின்றனர் மக்கள்! வெறுப்பு இல்லாமல்
அகன்ற இடத்தையுடைய உலகத்து உயிர்களும் துயிலும்;
நான் ஒருத்திமட்டுமே துயிலாதிருப்பேன் போலும்!
					மேல்
# பெரும்பதுமனார்
# 7 பாலை
வில்லையுடையவனின் கால்களில் கழல்கள்! வளையலணிந்தவளின்
மெல்லிய அடிகளின் மேலே சிலம்புகள்! இந்த நல்லவர்கள்
யாராயிருப்பர்? இரங்கத்தக்கவர் அவர்கள்! ஆரியக் கூத்தர்
கயிற்றில் ஆடும்போது ஒலிக்கும் பறையினைப்போல், காற்று மோதுவதால் கலங்கி
வாகைமரத்தின் வெண் நெற்று ஒலிக்கின்ற
மூங்கில் அடர்ந்த பாலைநிலத்தில் செல்ல முனைந்தவர்கள்.
					மேல்
# ஆலங்குடி வங்கனார்
# 8 மருதம்
வயல்வெளியிலுள்ள மா மரத்தில் விளைந்து உதிர்ந்த இனிய பழத்தை
பொய்கையின் வாளைமீன் கவ்வும் ஊரையுடைய தலைவன்,
எமது இல்லத்தில் பெருமையான மொழிகளைக் கூறிவிட்டு, தமது இல்லத்தில்
கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்கும்
கண்ணாடிப் பிம்பம் போல
விரும்பியவற்றைச் செய்வான் தன் மகனுடைய தாய்க்கே!
					மேல்
# சுயமனார்
# 9 நெய்தல்
தாய் போன்ற இயல்பினள் ஆயினள், மாமை நிறத் தலைவி!
அழகிய பொருத்துவாய் அமைந்த செம்பினுள் தனித்து இருக்கும்
சூடாத பூவைப் போல உடல் மெலிந்தாள்;
பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும்
குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்களை ஒக்கும்
குளிர்ந்த துறையை உடைய தலைவனின் கொடுமையை
நம் முன்னே காட்டுதற்கு நாணி மறைத்து நடிக்கிறாள்.
					மேல்
# ஓரம்போகியர்
# 10 மருதம்
தாய் போன்ற இயல்பினள் ஆயினள், (வீட்டின்)விழாக்களுக்கு முதலானவள்!
பயற்றங்காய் போன்ற கொத்துக்களையுடைய இளம் பூந்தாதுகள் படியும்படி
உழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களையுடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட
காஞ்சிமரத்தை உடைய ஊரனின் கொடுமையை
மறைத்தவளாதலால் (அவனும்)நாணும்படியாக எதிரில் வருகிறாள்.
					மேல்
# மாமூலனார்
# 11 பாலை
சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட ஒளிரும் வளை நெகிழ, நாள்தொறும்
தூக்கம் இல்லாமல் கலங்கி அழும் கண்ணோடு தனித்து வருந்தி
இப்படி இங்கே தங்கியிருத்தலிலிருந்து விடுபடுவோம்; தலைவன் இருக்குமிடத்திற்கு
(செல்ல)எழுவாயாக, இனியே! வாழ்க என் நெஞ்சே! முன்னே உள்ள
கஞ்சங்குல்லையைக் கண்ணியாக அணிந்த வடுகரின் இடத்ததாகிய
வலிய வேலையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கும் அப்பால்
மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும்
(அங்குச்)செல்வதை எண்ணினேன் அவருடைய நாட்டினிடத்துக்கு
					மேல்
# ஓதலாந்தையார்
# 12 பாலை
எறும்பின் வளைகளைப் போன்ற சிறிய பல சுனைகளையுடைய
கொல்லனின் உலைக்கல் போன்ற பாறையின் மேல் ஏறி
வளைந்த வில்லையுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும்
கிளைத்துச் செல்லும் பல வழிகளைக் கொண்டது என்பர் அவரின் தேர் சென்ற வழி;
அதைப் பற்றிய துயரம் கொள்ளாது
அன்பற்ற மொழிகளைக் கூறும் இந்த ஆரவாரமுடைய ஊர்.
					மேல்
# கபிலர்
# 13 குறிஞ்சி
அழுக்கில்லாமல் கழுவப்பட்ட யானை போல
பெரும் மழையினால் சிறப்படைந்த கரிய சொரசொரப்பான குத்துப்பாறையின்
குளிர்ச்சியான பக்கத்தில் தங்கும் மலைநாட்டுத் தலைவன்
நோய் தந்தனனே! தோழி!
அதனால் பசலைநிறம் நிரம்பப் பெற்றனவே நம் குவளை போன்ற அழகிய கண்கள்!
					மேல்
# தொல்கபிலர்
# 14 குறிஞ்சி
அமிழ்தத்தின் இனிமை பொதிந்துள்ள செம்மையான நாவானது அஞ்சும்படி வந்த
நேராக வளர்ந்து ஒளிரும் கூரிய பற்களையுடைய, சில சொல் சொல்லும் பெண்ணைப்
பெறுவேனாக நானே! பெற்ற பின்பு
அறியட்டும் இந்த ஊரே! வீதியில்
நல்லவளின் கணவன் இவன் என்று
பலரும் கூற நான் சிறிதே வெட்கப்படுவேன்.
					மேல்
# ஔவையார்
# 15 பாலை
முரசு முழங்க, சங்கு ஒலிக்க, அமர்ந்து
மிகப் பழமையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றும்
நான்கு ஊரிலுள்ள கோசர்களின் நன்மொழியைப் போல
வாய்த்தல் ஆனது தோழி ஆய்ந்தெடுத்த வீரக் கழலையும்
செம்மையான இலையையுடைய வெள்ளிய வேலையும் உடைய இளைஞனோடு
தொகுத்த வளைகள் அணிந்த முன்கையையுடைய மடந்தையின் காதல்.
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுக்கோ
# 16 பாலை
(நம்மை)நினையாமல் இருப்பாரோ? தோழி! கள்வர்கள்
இரும்பினால் செய்த அம்பினைச் செப்பம் செய்யும்பொருட்டு
(தம்)நகத்தின் நுனியில் புரட்டும் ஓசை போல,
செம்மையான கால்களையுடைய பல்லி, தன்னுடைய துணையை அழைக்கும்
அழகிய அடியைக் கொண்ட கள்ளிகளை உடைய பாலைநிலத்தைக் கடந்து சென்றோர்.
					மேல்
# பேரெயின் முறுவலார்
# 17 குறிஞ்சி
குதிரை எனக்கொண்டு பனைமடலிலும் ஏறிச் செல்வர்; பூ எனக்கொண்டு
குவிந்த அரும்பினையுடைய எருக்கம்பூ மாலையையும் தலையில் சூடிக்கொள்வர்;
தெருவில் பிறரால் ஆரவாரிக்கவும்படுவர்;
வேறு செயல்களும் செய்வர், காமநோய் முற்றிப்போனால்.
					மேல்
# கபிலர்
# 18 குறிஞ்சி 
கெட்டி மூங்கினால் செய்த வேலியையுடைய வேரில் கொத்தாகப் பழுத்திருக்கும் பலாமரங்கள் (நிறைந்த)
மலைச் சரிவைச் சேர்ந்தவனே! தக்க பருவத்தில் திருமணத்தைச் செய்வாக:
யார் அதை(என் தலைவியின் நிலையை) அறிந்திருப்பார்? (இங்கு) மலைச் சரிவில்
சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவதைப் போன்று, இவளின்
உயிர் மிகவும் சிறியது, அவளின் காதலோ பெரியது.
					மேல்
# பரணர்
# 19 மருதம்
எவ்வி என்ற வள்ளலை இழந்ததால் வறுமையுற்ற யாழ்ப்பாணரின்
பொற்பூ இல்லாத வெறும் தலை போல, பொலிவின்றி
வருந்துவாயாக! வாழ்வாயாக நெஞ்சே! வீட்டு மரத்து(ப் படர்ந்த)
ஒளிவிடும் மௌவல் மணக்கும்
நிறைந்த கருங்கூந்தலையுடைய (இனி)இவள் யாரோ ஆகிவிட்டாள் நமக்கே!
					மேல்
# கோப்பெருஞ்சோழன்
# 20 பாலை
அருளையும் அன்பையும் கைவிட்டு (தம்)துணையைத் துறந்து
பொருள்தேடுவதற்காகப் பிரிந்துசெல்வோர் வலியோர் ஆயின்
வலியோர் வலியோராகவே இருக்கட்டும்!
பேதையர் ஆவோம் மங்கையராகிய நாமே!
					மேல்
# ஓதலாந்தையார்
# 21 முல்லை
வண்டுகள் மொய்ப்பதால் மலர்ந்த நீண்ட கொத்துக்கள் (தழைகளினிடையே) விட்டுவிட்டு,
பொன்னால் செய்யப்பட்ட தலைச்சுட்டி போன்ற அணிகள் அணிந்த பெண்களின்
கூந்தலைப்போல் தோன்றும் புதிய பூக்களையுடைய கொன்றை மரமுள்ள
(இந்த) நந்தவனம் (இது) கார்ப்பருவம் என்று தெரிவித்தாலும்
நான் ஏற்கமாட்டேன்; அவர் பொய் சொல்லமாட்டார்.
					மேல்
# சேரமான் எந்தை
# 22 பாலை
நீர் ஒழுகும் கண்ணையுடையவளே! நீ இங்கே தனித்திருக்க
யார்தான் பிரியவல்லார்? மலைச் சரிவில்
தாழ்ந்த பரப்பு அழகுகொள்ளுபடியாக வலப்பக்கம் சுரிந்த மரா மரத்து
வேனில்காலத்து அழகிய கிளைகள் போல் மணக்கும்
வண்டுகள் மொய்க்கும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய உன்னோடும்தான் பயணம்.
					மேல்
# ஔவையார்
# 23 குறிஞ்சி
கட்டுவிச்சியே! கட்டுவிச்சியே!
சங்குமணியைக் கோத்தது போன்ற நல்ல நெடிய கூந்தலையுடைய
கட்டுவிச்சியே! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே! அவருடைய
நல்ல நெடிய குன்றத்தைப் பாடிய பாட்டே!
					மேல்
# பரணர்
# 24 முல்லை
கரிய அடிமரத்தையுடைய வேம்பின் ஒள்ளிய புதுப்பூக்கள்
என் தலைவர் இல்லாமலேயே வீணே பூத்து ஒழியுமோ?
ஆற்றுப் பக்கத்தில் உயர்ந்து நிற்கும் வெள்ளைக் கிளைகளையுடைய அத்திமரத்தின்
ஏழு நண்டுகள் பற்றிக் குழைத்த ஒரு பழம் போல,
நான் குழைந்து நிற்க, கொடியோரின் நாக்குகள்
காதலர் அகன்றமை காரணமாகக் கல்லென்று ஒலிக்கின்றன.
					மேல்
# கபிலர்
# 25 குறிஞ்சி
ஒருவரும் இல்லை; அவர்தானே களத்திலிருந்தார்;
அவரே தனது உறுதிமொழியைப் பொய்க்கச்செய்தால் நான் என்ன செய்யமுடியும்?
தினைத் தாள் போன்ற சிறிய இளமையான கால்களையுடையன,
ஓடுகின்ற நீரில் இருக்கும் ஆரல்மீனைப் பார்க்கும்
நாரைகளும் இருந்தன தலைவர் என்னைக் களவுமணம் புரிந்தபொழுது.
					மேல்
# கொல்லனழிசி
# 26 குறிஞ்சி
அரும்புகளே இல்லாமல் மலர்ந்த கரிய காலையுடைய வேங்கைமரத்தின்
மேலே எழும் பெரிய கிளையில் இருந்த மயில்
பூக் கொய்யும் மகளிரைப் போல் தோன்றும் நாட்டையுடைய தலைவன்
தகுதியற்றவன் போல (எண்ணி) தலைவி தீதான சொற்களைச் சொன்னாலும்
தன் கண்ணால் கண்டதைப் பொய்யென்று சொல்லாது அல்லவா!
இனிய மாம்பழத்தை உண்ணும் கூரிய பற்களைக் கொண்ட சிவந்த வாயை உடைய
மலையில் ஆடும் வலிய குட்டியின் தந்தையாகிய
கடுவன் குரங்கும் அறியும்! அந்தக் கொடியவனையே!
					மேல்
# வெள்ளி வீதியார்
# 27 பாலை
கன்றும் உண்ணாமல், பாத்திரத்திலும் வீழாமல்
நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் சிந்தியதைப் போல்
எனக்கும் பயன்படாமல், என் தலைவனுக்கும் இன்பம் செய்யாமல், 
பசலைநோய் உண்பதை விரும்பும்
தேமல் படர்ந்த என் அழகிய பின்புறத்தின் மாந்தளிர் போன்ற அழகு.
					மேல்
# ஔவையார்
# 28 பாலை
தலையைப் பிடித்து முட்டுவேனோ! கையால் தாக்குவேனோ!
என்ன செய்வதென்று அறியேன்! நானும் ஏதாவது சாக்குவைத்து
ஆவென்றும் ஒல்லென்றும் உரக்கக் கூவுவேனோ!
சுழன்று வீசும் வாடைக்காற்று உடலை வருத்த என்னை
வருத்தும் காமநோயை அறியாது இனிதாக உறங்கும் இந்த ஊரை.
					மேல்
# ஔவையார்
# 29 குறிஞ்சி
நல்ல மொழிகள் நீங்கிப் புன்மையான மொழிகள் பரவி
மழைநீரை எதிர்கொள்ளும் பச்சையான மண்குடம் போன்று
உள்ளம் தாங்கமாட்டாத ஆசை வெள்ளத்தில் நீந்தி
பெறுதற்கரிய ஆசைப்பட்டாய் நெஞ்சமே! மிகவும் நன்மைபயக்கக்கூடியது
பெரிய உன் ஆரவாரம்! உயர்ந்த மரக்கிளையில்
குட்டியை உடைய குரங்கு போல
ஆரத் தழுவி (உன் குறையைக்)கேட்பவரை நீ பெற்றால்.
					மேல்
# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 30 பாலை
கேட்பாயாக! வாழ்க! தோழியே! நேற்று இரவில்
அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மருட்ட, நினைவு பெற்று எழுந்து
படுக்கையைத் தடவிப்பார்த்தேன்! குவளையின்
வண்டுகள் மொய்த்து உழக்கிய மலரைப் போல நலிவுற்று
தனித்திருப்பதனை உணர்ந்தேன் இரக்கத்திற்குரியவள் நானே
					மேல்
# ஆதிமந்தி
# 31 மருதம்
மறவர்கள் கூடியுள்ள சேரி விழாக்களிலும்,
மகளிர் தழுவியாடும் துணங்கைக்கூத்திலும்,
எங்குமே கண்டேனில்லை மாண்புக்குரிய தலைவனை!
நானும் ஒரு ஆடுகளமகள் ஆனேன்!
சங்கினை அறுத்துச் செய்த ஒளிரும் என் வளையல்கள் நெகிழுமாறு செய்த
பெருமை பொருந்திய தலைவனும் ஒரு ஆடுகளமகன் ஆனான்!
					மேல்
# அள்ளூர் நன்முல்லையார்
# 32 குறிஞ்சி
காலையும் பகலும் செயலற்ற மாலையும்
ஊர் உறங்கும் நள்ளிரவும் விடியலும் என்று இந்தப்
பொழுதுகள் இடையே தெரியின் பொய்யானது காமம்!
பனைமடலைக் குதிரை மா என்று கொண்டு தெருவில் தோன்றி
பலர் அறியத் தூற்றலும் தலைவிக்குப் பழிதருவதே!
அப் பழிக்கு அஞ்சி வாழ்தலும் பழிதருவதே பிரிவு வருமாயின்.
					மேல்
# படுமரத்து மோசிகீரன்
# 33 மருதம்
தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான்.
தன் ஊர் மன்றத்தில் எப்படி இருப்பானோ?
இரந்து உண்ணும் உணவினையுடைய நன்கு வளர்ச்சி பெறாத மேனியோடு
இந்தப் புது ஊரிலும் பெரும் சிறப்புடையவனாயிருக்கிறான்.
					மேல்
# கொல்லி கண்ணன்
# 34 மருதம்
தாயர் முதலானோர் இடித்துரைக்கவும், தந்தை முதலானோர் மறுத்துரைக்கவும்
தனியராக உறங்கும் துன்பம் இல்லாததாகி
இனியது கேட்டு இன்புறுக இந்த ஊரே!
முன்பே இவர் மறுத்த,
யானைக்கொக்கு எனப்படும் பறவைகளின் கடற்கரையின் பெருங்கூட்டம்
பகைவரைக் கொன்ற மறவரின் ஆரவார ஓசைக்கு அஞ்சியோடும்
குட்டுவனின் மாந்தை நகரத்தைப் போன்ற எனது
கூந்தல் புரண்டு விளங்கும் ஆய்ந்து நன்றெனக்கண்ட நெற்றியையுடையவளின் தலைவனும் அவனே!
					மேல்
# கழார் கீரன் எயிற்றி
# 35 மருதம்
நாணம் இல்லாமற்போவிட்டன எமது கண்கள்! வருததாகக் குறித்த நாள் வேறு என்று தெரிந்தும்
கருவுற்ற பச்சைப்பாம்பின் சூல் முதிர்ச்சி போன்ற
பருத்த கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி
நுண்ணிதாகத் தூவும் மிகுந்த துளிகளோடு கூடி
குளிர்ச்சியாக வரும் வாடைக்காலத்தில் பிரிந்திருப்போருக்கு அழுதலால்.
					மேல்
# பரணர்
# 36 குறிஞ்சி
குத்தாக நிற்கும் பாறாங்கல்லுக்குப் பக்கத்திலுள்ள மாணை என்னும் பெரிய கொடி
துயிலும் ஆண்யானையின் மேல் ஏறிப்படரும் குன்றுகளுள்ள நாட்டுக்காரத் தலைவன்
என் நெஞ்சு சாட்சியாக (உன்னைவிட்டு) நீங்கமாட்டேன் நான் என்று
என்னுடைய நல்ல தோளை அணைத்த பொழுது அவன்
குற்றமில்லாத சூளுரையைக் கூறியது
(இப்போது) நோயாகிப்போனதோ? தோழி! உன்னிடத்தில்.
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 37 பாலை
(உன்மீது) விருப்பம் மிகவும் உடைய தலைவர் (உன்பால்) அன்புசெய்தலும் செய்வார்
(தன்)பெண்யானையின் பசியைப் போக்க ,பெரிய கையையுடைய களிறுகள்
மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரிக்கும்
அன்புடையனவாம், தோழி! அவர் சென்ற வழியிலே.
					மேல்
# கபிலர்
# 38 குறிஞ்சி
காட்டு மயில் பாறையில் இட்ட முட்டையை
வெயிலில் விளையாடும் குரங்குக்குட்டி உருட்டும்
குன்றுகளையுடைய நாட்டுத்தலைவனின் நட்பு என்றும்
உறுதியாக நல்லதேயாகும்! வாழ்க! தோழி! மையுண்ட கண்களின்
கண்ணீரைக் கண்டும் ஒரேயடியாய்ப் பிரிந்து செல்ல
(அவரை)நினையாதிருக்கும் ஆற்றல் வன்மையுடையவர்க்கே!
					மேல்
# ஔவையார்
# 39 பாலை
வெப்பமிக்க வலிமையுடைய கடும் காற்று சோலைக்குள் நுழைந்தது போல்
நெற்றாக முதிர்ந்த வாகையின் வற்றல்கள் ஆரவாரிக்கும்
மலைகளையுடையன கடத்தற்கரிய பாலைவழிகள் என்பர்; நமது
மார்பினிடையில் துயில்வதை வெறுத்துச் சென்றவர் சென்ற வழி.
					மேல்
# செம்புலப்பெயனீரார்
# 40 குறிஞ்சி
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்?
நானும் நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்?
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே
					மேல்
# அணிலாடு முன்றிலார்
# 41 பாலை
காதலர் அருகிலிருப்பவராய் இருக்கும்போது பெரிதும் மகிழ்ந்து
திருவிழாக்காணும் ஊரைப்போல மகிழ்வேன், உறுதியாக;
பாலைவழிக்கு அருகிலுள்ள அழகிய சிற்றூரில்
மக்கள் கைவிட்டுப்போனபின், அணில்கள் ஓடியாடும் முற்றத்தையுடைய
தனிமைப்பட்ட வீட்டைப்போல பொலிவிழந்து
வருந்துகிறேன் தோழி அவர் பிரிந்துசென்ற போது.
					மேல்
# கபிலர்
# 42 குறிஞ்சி
(உன்னிடம் கூடி மகிழும்)அன்பு கிட்டாமற்போயினும், நள்ளிரவில்
இடிமின்னலுடன் கூடிய பெரிய மழை பொழிந்ததாக, அருவிநீர்
மலைக்குகைகளில் எதிரொலிக்கும் நாட்டையுடையவனே! நான்
உன்னிடத்தில் கொண்ட நட்பு குறைந்துபோகுமோ 
					மேல்
# ஔவையார்
# 43 பாலை
பிரிந்து செல்லமாட்டார் என்று நான் அலட்சியமாய் இருந்துவிட்டேன்.
பிரிந்தால் தாங்கமாட்டாள் என்று அவர் அதைப் பெரிதாக எண்ணவில்லை.
இந்த இரண்டுக்கும் இடையில், எங்கள் இருவரின் மனவலிமைகள் போட்டியிட்டதால்
நல்ல பாம்பு கௌவிக் கடித்ததைப் போல், என்
துயருறும் நெஞ்சம் மயங்குகிறது
					மேல்
# வெள்ளிவீதியார்
# 44 பாலை
கால்களோ நடை இழந்தன! கண்களோ
பார்த்துப் பார்த்துப் பூத்துப் போயின!
அகன்ற பெரிய வானத்தின் மீன்களைக் காட்டிலும்
பலர் இருக்கிறார்கள், இந்த உலகத்தின் பிற மாந்தர்!
					மேல்
# ஆலங்குடி வங்கனார்
# 45 மருதம்
காலையில் எழுந்து, வலிமையான தனது தேரைப்பூட்டி
ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த மகளிரைத் தழுவுவதற்குச் சென்ற
வளமிக்க ஊரனாகிய தலைவன் ஒப்பனையுடன் நன்கு விளங்கினா என்று
மனம் மறுகுகின்றான் சிறுவனின் தாய்!
துயரத்தருவது இந்த மருத நிலத்தில் பிறப்பது.
					மேல்
# மாமிலாடன்
# 46 மருதம்
ஆம்பல் பூவின் சாம்பிய இதழ் போன்ற
கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவி
முற்றத்தில் காயும் தானியங்களை வயிறார உண்டு, தெருவில் உள்ள
காய்ந்த சாணத்தின் நுண்ணிய துகளில் குடைந்து விளையாடி
வீட்டுக் கூரைச்சாய்ப்பில் தன் குஞ்சுகளுடன் தங்கும்
புல்லிய மாலைப் பொழுதும், தனிமையும்
இல்லையோ தோழி! அவர் சென்ற நாட்டில்!
					மேல்
# நெடுவெண்ணிலவினார்
# 47 குறிஞ்சி
கரிய அடிமரத்தை உடைய வேங்கை மரத்தின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் குத்துப்பாறை
பெரிய புலியின் குட்டியைப் போலத் தோன்றும் காட்டுவழியில்
இருளில் வருபவரின் களவொழுக்கத்திற்கு
நன்மையாய் இருக்கவில்லை நீண்டு ஒளிவீசும் வெண்ணிலவே!
					மேல்
# பூங்கணுத்திரையார்
# 48 பாலை
பூந்தாதுக்களால் செய்த மிகுந்த குளிர்ச்சியுள்ள பதுமை
காலையில் வாடிப்போகும், ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று கவலற்க!
எனேஉ விளையாட்டுத் தோழியர் கூறக் கேட்டும்
இத்தகைய தன்மையுடன் இவ்வாறு பெரிதும் வருந்துகிற,
நல்ல நெற்றியையுடையவளின் பிரிவுத்துன்பம் நீங்கும்படி, அப்படிப்பட்ட
விரும்பும் பண்புடைய ஒரு சொல்
கூறலாகாதோ காதலர் தமக்கு!
					மேல்
# அம்மூவனார்
# 49 நெய்தல்
அணிலின் பல்லைப்போன்ற பூந்தாதுக்கள் முதிர்ந்திருக்கும் முள்ளிச்செடியுள்ள
நீலமணியின் நிறம் போன்ற பெரிய கழியினுக்கு உரிமையாளனே!
இப் பிறவி போய் இனி எத்தனை பிறவியெடுத்தாலும்
நீயே என் கணவனாக இருக்கவேண்டும்,
நானே உன் நெஞ்சில் நிறைந்தவளாய் இருக்கவேண்டும்.
					மேல்
# குன்றியனார்
# 50 மருதம்
வெண்சிறு கடுகுபோன்ற சிறிய பூக்களைக்கொண்ட ஞாழல்
செம்மையான மருதமரத்தின் வாடி உதிர்ந்த மலரோடு பரவிக்கிடந்து
தலைவனின் ஊரின் நீர்த்துறையை அழகுசெய்கிறது; இறங்கும் தோள்களை விட்டு நீங்கி
ஒளிரும் தோள்வளைகள் கழலும்படி மெலிந்து
தனிமைத் துயரைப் பூண்டுநிற்கின்றன அவர் தழுவிய தோள்கள்.
					மேல்


 # குன்றியனார்
# 51 நெய்தல்
வளைந்த முட்களையுடைய கழிமுள்ளியின் நடுக்கும் பனிக்காலத்து கரும் மலர்
நூல் அற்றுச் சிதறிய முத்துக்களைப் போன்று காற்றால் சிதறி
நீர்த்துறைகள்தோறும் பரவிக்கிடக்கும் நிறைந்த மணலையுடைய கடற்கரைத்தலைவனை
நானும் காதல்கொண்டேன்; நம் தாயும் மிகுந்த விருப்புடையவள்;
நம் தந்தையும் அவனுக்குக் கொடுத்தலை வேண்டுகிறார்;
நம் மேல் பழிசொன்ன ஊரினரும் இப்போது அவனோடு சேர்த்துப் பேசுகின்றனர்.
					மேல்
# பனம்பாரனார்
# 52 குறிஞ்சி
ஆர்க்கும் களிறுகள் மிதித்து உழப்பிய நீர் விளங்கும் மலைச் சரிவின்
தெய்வமங்கையர் விரும்பி இறங்கியதைப் போல் நீ நடுங்குவதைக் கண்டு
நரந்தம் மணக்கும் கொழித்த கருமையான கூந்தலையும்
வரிசையாக அமைந்த மின்னுகின்ற வெள்ளைப் பற்களையும் உடையவளே!
உனக்காக வருந்தினேன் அல்லவா, கொஞ்சம்கொஞ்சமாகவேனும்!
					மேல்
# கோப்பெருஞ்சோழன்
# 53 மருதம்
எம்மை வருத்துகின்றன, தலைவனே! திறந்த வெளியில்,
அரும்புகள் முதிர்ந்த புன்கமரத்தின் பூக்கள் உதிர்ந்துகிடக்கும் வெள்ளை மணல்,
வேலன் ஒப்பனைசெய்த வெறியாடும் களங்கள்தோறும்
செந்நெல்லின் வெள்ளைப் பொரி சிதறியதைப் போல் தோன்றும்,
மணல்மேடுகள் அருகிலுள்ள எமது ஊரின் அகன்ற நீர்த்துறையில்
எனது நேரிய தோள்களின் முன்கையைப் பற்றி
சூரரமகளிர்மேல் நீ கூறிய வஞ்சினம்.
					மேல்
# மீனெறி தூண்டிலார்
# 54 குறிஞ்சி
என் உடம்பு மட்டுமே இங்கு இருக்கிறது. என் மனமோ
தினைப்புனக் காவலர் கவண்விடும் ஒலிக்கு அஞ்சிய
காட்டு யானை கைவிட்ட பச்சை மூங்கில்
பிடித்திழுத்த மீன் பின்னர் விட்டுவிட்ட தூண்டிலைப்போல நிமிர்ந்து உயர்கின்ற
காட்டையுடைய தலைவனுடன் அங்குச் சென்றுவிட்டது.
					மேல்
# நெய்த கார்க்கியர்
# 55 நெய்தல்
பெரிய கழியின் நீலமணி போன்ற பூக்கள் கூம்ப, தூவுகின்ற அலைகளினின்றும்
பொங்கி வரும் சிதறல்கள் கொண்ட துவலையோடு, தாழ்ந்த முகில்களையும் சேர்த்துக்கொண்டு
செயலற்றுப்போக வந்த தடவிச்செல்லும் வாடைக்காற்றோடு
இன்னல் மிக்க உறைவிடம் ஆகும்;
சில நாள்களே உடையது இந்த சிறிய நல்ல ஊர்.
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 56 பாலை
வேட்டையாடும் செந்நாய்கள் தோண்டி உண்ட மிச்சமாகிய
காட்டுமல்லிகை இலைகள் மூடியதால் அழுகிப்போன சிறிதளவு நீரை
வளையணிந்த கையையுடைவள் எம்மோடு சேர்ந்து குடிப்பதற்கு
வருவாளாக, அவளே
பெரிதும் இரங்கத்தக்கவள், என் நெஞ்சில் அமர்ந்தவள்.
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 57 நெய்தல்
(நீர்ப்பரப்பில் இணையாகப் பறந்து வரும்போது)
ஒரு பூ இடையில் வந்தாலும், (அதனால் ஏற்படும் பிரிவினால்) ஓர் ஆண்டு கழிந்ததைப் போன்ற
நீரில் வாழும் மகன்றில்களின் சேர்க்கை போல
பிரிவு என்பது அரிதாகிய துய்த்து அமையாத காமத்தோடே
பிரிவு ஏற்பட்டவுடனேயே உயிர் போவதாக; இல்லறக் கடமைகளை அறிந்து
இருவராய் வாழும் இவ்வுலகில்
ஒருவராய் வாழும் சிறுமையினின்றும் தப்புவதற்காக.
					மேல்
# வெள்ளிவீதியார்
# 58 குறிஞ்சி 
என்னைக் கடிந்துரைக்கும் நண்பர்களே! உங்கள் கடிந்துரையானது என் உடம்பைக்
குலைந்துபோவதினின்றும் நிறுத்த முடிந்தால் அதைப் போன்று நல்லது வேறில்லை.
சூரியன் காயும் சூடான பாறையின் ஒரு பக்கத்தில்
கையும் இல்லாது வாயும் பேசாத ஒருவன் தன் கண்களாலேயே பாதுகாக்க நினைக்கும்
காய்கின்ற வெண்ணெய் உருண்டை போல
என் மேல் இந்தப் பிரிவு நோய் படர்கின்றது, என் உடம்பு உருகாமல் காத்துக்கொள்ளல் கடினமாகும்.
					மேல்
# மோசிகீரனார்
# 59 பாலை
ஒருகண் கிணைப்பறையை முழக்கும் தாளத்தையுடைய இரவலரின் மன்னனுடைய
அதலையென்னும் குன்றத்தின் அகன்ற வாயையுடைய ஆழமான சுனையின்
குவளையோடு சேர்த்துக்கட்டப்பட்ட காட்டுமல்லிகை மணக்கும் உன் மணமுள்ள நெற்றியை
முற்றிலும் மறந்துபோவாரோ? முயன்றாலும்
பாலை வழிகள் குறுக்கே வர அரிய பொருள்
முற்றிலும் கைகூடாவாதலால் காலம் நீட்டித்தல் இல்லை.
					மேல்
# பரணர்
# 60 குறிஞ்சி
குறுகிய தாளையுடைய கூதளங்கொடி காற்றால் ஆடும் உயர்ந்த மலையில்
பெரிய தேன்கூட்டைக் கண்ட கரிய காலையுடைய முடவன்
உள்ளங்கையைச் சிறியதாகக் குடையாகக் குவித்து, தரையில் அமர்ந்தவண்ணம்
அந்தத் தேனடையை மறுகையால் சுட்டிக்கொண்டு, குடைத்த கையை நக்கியதைப் போல், காதலர்
நமக்கு அருளார், நம்மை விரும்பார் எனினும்
பலமுறை அவரைப் பார்ப்பதுவும் நம் உள்ளத்துக்கு இனிதாகும்.
					மேல்
# தும்பிசேர்கீரன்
# 61 மருதம்
தச்சன் செய்த சிறிய குதிரைகளையுடைய தேரினை
ஏறிச் செலுத்தி இன்பமடையாராயினும், கையினால்
இழுத்து இன்பமடையும் சிறுவர்களைப் போல்
சேர்ந்து இன்புறாவிட்டாலும் நல்ல தேரினையுடையவரும்
பொய்கையையுடைய ஊரினருமான தலைவனுடன் நட்பு
செய்து இன்புற்றேன், மீண்டும் செறிந்தன துவண்டுபோன வளையல்கள் . 
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 62 குறிஞ்சி
காந்தள் மலரையும், எதிர்த்து அரும்பும் பசிய பூக்களையுடைய முல்லையையும்
மணங்கமழும் இதழ்களுடைய குவளையோடு இடையிட்டுக் கலந்து
அழகிதாகத் தொடுத்தலில் சிறப்புற்ற மாலை போல
நறுமணமுள்ள நல்லோளது மேனி,
இளந்தளிரினும் மென்மையானது, தழுவுதற்கும் மிக்க இனியது. 
					மேல்
# உகாய்க்குடி கிழார்
# 63 பாலை
இரப்போருக்கு ஈதலும், இன்பத்தைத் துய்த்தலும், இல்லாதவருக்கு இல்லை என எண்ணி
பொருளீட்டும் செயலையே மிகுதியாக எண்ணுகின்றாய்; அந்தச் செயலுக்கு
அழகிய மாமை நிறமுள்ள தலைவியும் வருவாளோ?
என்னை மட்டும் போகச் சொல்லுகின்றாயே, உரைப்பாய் நெஞ்சே!
					மேல்
# கருவூர் கதப்பிள்ளை
# 64 முல்லை
பசுக்கூட்டம் மேய்தலை விட்டு திரும்பும் நீண்ட வழிக்கு வந்தது என,
பொலிவிழந்த மன்றத்தைப் பார்த்து, மாலையில்
மடப்பம் பொருந்திய கண்களையுடைய கன்றுகள் எதிர்நோக்கி ஏமாறுவதைப் போல
பிரிவு நோயால் வாடுகிறேன் என அறிந்தும்
நெடுங்காலம் தங்கிவிட்டார் தோழி! தொலைநாட்டில் இருக்கும் தலைவர்.
					மேல்
# கோவூர் கிழார்
# 65 முல்லை
கெட்டியான பரல்கற்களிடையே தெளிவாய் ஓடும் நீரைப் பருகிய ஆண்மான், தன்
இன்புறு துணையொடு மீண்டுவந்து துள்ளிக்குதிக்க,
தான் வந்தது மழைத்துளியைத் தரும் குளிர்ந்த கார்ப்பருவம்;
குறித்த காலத்தில் வராமல் தொலைவில் வசிப்பவரின் வருகையை விரும்பி
வருந்தி நொந்து உயிருடன் இருப்பதற்காக இருக்கிறாயோ என்று கேட்கும்வண்ணம்.
					மேல்
# கோவர்த்தனார்
# 66 முல்லை
அறியாமையுடையன, நிச்சயமாக! இந்த அகலமாய் நிற்கும் கொன்றை மரங்கள்!
மலைகள் விளங்கும் பாலைநிலத்து அரிய வழியில் சென்றோர் கூறிய
பருவம் இன்னும் வராதபோது, மிகச் செறிவாக
கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன,
காலமல்லாது திடீரென்று தோன்றிய மழையைக் கார்ப்பருவ மழை என்று கருதி.
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 67 பாலை
நம்மை நினைக்கமாட்டாரோ தோழி? கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்
புதிய நூலைக் கோக்கும்பொருட்டு முனை சிறந்த நன்றாக வளர்ந்த நகங்களில் கொண்ட
பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும்
நிலம் கரிந்துள்ள கள்ளியையுடைய பாலைநிலத்தைக் கடந்துசென்ற தலைவர்.
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 68 குறிஞ்சி
குறும்பூழ்ப் பறவையின் கால் போன்ற சிவந்த அடித்தண்டை உடைய உழுந்தின்
நெற்றான முதிய காய்களை மானினங்கள் தின்னும்
முன்பனிக்காலத்து வருத்தத்தைத் தீர்க்கும்
மருந்து வேறு இல்லை, என்னைத் தழுவிய அவரின் மார்பினை அன்றி.
					மேல்
# கடுந்தோட் கரவீரன்
# 69 குறிஞ்சி
கரிய கண்ணையுடைய தாவித்திரியும் ஆண்குரங்கு இறந்துபோனதாக,
கைம்மையுற்று வாழவிரும்பாத காதல்கொண்ட பெண்குரங்கு
தாவுந்தொழிலை இன்னும் கற்காத தன் வலிய குட்டியைச் சுற்றத்தாரிடம் சேர்த்துவிட்டு
உயர்ந்த மலைச் சரிவில் பாய்ந்து உயிரை மாய்க்கும்
சாரல் நாட்டைச் சேர்ந்தவனே! நள்ளிரவில்
வரவேண்டாம்! நீ வாழ்க! வருந்துகிறோம் நாம்.
					மேல்
# ஓரம்போகியார்
# 70 குறிஞ்சி
ஒடுங்கிய எண்ணெய்ப்பூச்சுடைய ஒள்ளிய நெற்றியையுடைய இளையவள்
நறிய மணமும் குளிர்ச்சியும் உடைய தன்மையள்; நிறைந்த வருத்தத்தைச் செய்பவள்;
இப்படிப்பட்டவள் என்று அவளின் நலத்தைப் புனைந்துரைக்கும் அளவையும் அறியேன்;
சிலவான மெல்லிய பேச்சு அவளது;
அப்படிப்பட்ட மென்மையானவள் நான் அவளைத் தழுவும்போது.
					மேல்
# கருவூர் ஓதஞானி
# 71 பாலை
என் காம நோய்க்கு மருந்து வேண்டும் எனின் அது அவளே; எனக்குச் செல்வமும் அவளே;
அரும்புகின்ற தேமலையும் அழகிய பெருமையையும் உடைய இளைய முலையினையும்
பெரிய தோள்களையும், நுண்ணிய இடையினையும் உடைய
மலைகள் சூழ்ந்த குறவர்கள் ஈன்றளித்த மகள்.
					மேல்
# மள்ளனார்
# 72 குறிஞ்சி
பூவினைப்போன்று சுழலும் தன்மையுடையன, அம்பினைப் போல்
எல்லாரும் அறிய துன்பத்தை உண்டாக்கின;
இனிய மொழியினையும், திரண்ட மெத்தென்ற தோளினையும் உடைய, பெரிய மலைப்பக்கத்தில்
பருத்தி விதைத்த தினைப்புனத்தில்
குருவிகளை ஓட்டுவாளின் பெரிய குளிர்ந்த கண்கள்.
					மேல்
# பரணர்
# 73 குறிஞ்சி
தலைவனின் மார்பை விரும்புகின்றாய், நீ
வருந்தவேண்டாம் தோழி! நன்னன் என்பவனின்
மணமுள்ள மா மரத்தை அழித்து நாட்டுக்குள் போக்கிய
சொல்தவறாக் கோசர் போல
கொடுமையான சூழ்ச்சியும் வேண்டும் சிறிதளவு.
					மேல்
# விட்ட குதிரையார்
# 74 குறிஞ்சி
அவிழ்த்துவிட்ட குதிரையின் வேகத்தைப் போல
வானத்தைத் தீண்டும் பசிய மூங்கில்கள் உள்ள குன்றைச் சேர்ந்தவன்
நாம் அவனை விரும்பியதை அறியான்; தானும்
வேனில் காலத்துக் காளையைப் போல
மெலிந்தான் என்பர், நம் சிறப்பான அழகினை விரும்பி.
					மேல்
# படுமரத்து மோசிகீரனார்
# 75 மருதம்
நீ நேரில் பார்த்தாயா? அல்லது பார்த்தவர் சொன்னதைக் கேட்டாயா?
உண்மையைத் தெரிந்துகொள்வதற்கு விரும்பினோம்; சொல்வாயாக!
வெண்மையான தந்தங்களையுடைய யானைகள் சோணையாற்றில் நீராடும்
பொன் மிகுந்த பாடலிபுத்திரத்தைப் பெறுவாயாக!
யார் கூறக் கேட்டாய்? காதலர் வந்துவிட்ட செய்தியை.
					மேல்
# கிள்ளிமங்கலங்கிழார்
# 76 குறிஞ்சி
காந்தளை வேலியாகக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டுக்குச்
செல்வேன் என்கிறாரோ மலைபோன்ற மார்பையுடையவர்;
மலைச் சரிவில் உள்ள சேம்பின் ஆடுகின்ற வளப்பமிக்க இலை
பெரிய களிற்றின் செவியை ஒக்கும்படி தடவிச்செல்லும்
குளிர்ந்த வாடைக்காற்று அசைக்கும்
கடுமையாகக் குளிர்கின்ற முன்பனிக்காலத்தில் நடுங்கிக்கொண்டு துன்பமடைய.
					மேல்
# மதுரை மருதன் இளநாகனார்
# 77 பாலை
தோழியே வாழ்க! ஒருசிறிதும்,
தவறுடையன என்பாயாகில், தவறுடையன ஆகமாட்டா; வெம்மையான நிலத்தில்
கொல்லப்பட்ட பயணியரின் தழையிட்டு மூடிய கற்குவியல்
நெடிய நல்ல யானைக்கு இடப்பட்ட நிழல் ஆகும்
அரிய காட்டுவழியில் சென்றோர்க்கு
மெலிந்திளைத்த பெரிய மெத்தென்ற தோள்களே!
					மேல்
# நக்கீரனார்
# 78 குறிஞ்சி
பெரிய மலையின் மேலுள்ள நீண்ட வெள்ளிய அருவி;
முதுமைவாய்க்கப்பெற்ற கூத்தரின் முழவைப் போலத் ததும்பி
மலைச் சரிவில் இறங்கும் ஒளிவிடும் மலைகளையுடைய தலைவனே!
வெறுக்கத்தக்கது காமம், ஒருசிறிதும்
நன்று என உணராதவரிடத்தும்
வலிந்து சென்று நிற்கும் பெரும் மடமையை உடையது.
					மேல்
# குடவாயி கீரனக்கன்
# 79 பாலை
காட்டு யானை பட்டையை விரும்பி உண்ட
பொரிந்த அடிமரத்தையுடைய ஓமையின் காற்றால் புடைக்கப்பட்ட நீண்ட கிளையின்
அசையும் காய்ந்த கொம்பில் ஏறி ஒய் என்று
தனிமைத்துயரைத் தோற்றுவிக்கும் குரலையுடைய பெண்புறா அழைக்கும் 
பயணவழிகள் பொருந்திய அழகிய குடிகளையுடைய சிறிய ஊரில்
தாம் தங்கிவிட்டாரோ? நாம் அவர் (பிரிந்து செல்வதாகக்)கூறுவதைப்
பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்று கூறிய தவறினால்
நம்மிடம் சொல்லாமல் போவதைச் செய்யக்கூடியவர்.
					மேல்
# ஔவையார்
# 80 மருதம்
கூந்தலில் ஆம்பலின் முழுப்பூவைச் செறுகி,
மிகுந்த வெள்ளம் வந்த பெரிய நீத்துறையை விரும்பி
நாம் அந்நீரில் விளையாடுவதற்குச் செல்வோம், தலைவி அதற்கு
அஞ்சுவாளாயின், கடும்போரில்
நன்முறையில் வெல்லும் பெரிய வேற்படையை உடைய எழினி என்பானின்
போரில் கைப்பற்றப்பட்ட பெரிய மாடுகளின் கூட்டம்போல
தன்னைச் சேர்ந்தவரோடும் காத்துக்கொள்வாளாக, தன் கணவனின் மார்பை.
					மேல்
# வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
# 81 குறிஞ்சி
இந்தத் தலைவி,
உனது சொற்களைக் கூறிய எனது சொற்களை ஏற்றுக்கொண்டு
இளமையான அரும்புகளைக் கொண்ட ஞாழல் மரத்தின் பல கிளைகளின் கீழே
தனது புதிய அழகினை இழந்து இப்போது தனிமைத் துயரத்திலுள்ளாள்;
நீ இவளின் தன்மையை எண்ணிப்பார்க்கவேண்டும்; இதோ பார்!
நிலவும் இருளும் போல புலவுநாறும் அலைகளுள்ள
கடலும் அதன் கரைநிலமும் தோன்றும்
மடல்கள் தாழ்ந்துள்ள இளம்பனைகளையுடைய எம்முடைய சிறிய நல்ல ஊர்.
					மேல்
# கடுவன் மள்ளன்
# 82 குறிஞ்சி
வாரப்பட்ட வளைந்த கூந்தலை விரலால் கோதிவிட்டு, முதுகைச் சேர்ந்து
அழவேண்டாம் என்று நம் அழுத கண்ணைத் துடைத்தவர்
இப்பொழுது யாரோ ஆகிவிட்டார், தோழி; மலைச் சரிவில்
பெரும் தினைப்புனத்தையுடைய குறவனின் சிறுதினையை அறுத்த மறுகாலில்
கொழுத்த கொடியுள்ள அவரை பூத்து நிற்கும்
பொறுக்கமுடியாத பனியையுடைய முன்பனிக்காலத்தில் வராமலிருப்பவர்.
					மேல்
# வெண்பூதன்
# 83 குறிஞ்சி
அரிதாகக் கிடைக்கும் அமிழ்தமே உண்ணும் உணவாக,
பெரும் புகழையுடைய தேவருலகத்தைப் பெறுவாளாக, அன்னை!
தமது வீட்டில் தாம் உண்டு இருப்பதைப் போல், கிளைகள்தோறும்
இனிய பழங்கள் தொங்கும் பலாமரங்கள் கொண்ட
உயர்ந்த மலநாட்டானான தலைவன் திருமணம் பேச வருகிறான் என்று சொன்னவள்.
					மேல்
# மோசிகீரன்
# 84 பாலை
முதுகோடு பெயர்த்தெடுத்துத் தழுவினேன், எனக்கு வியர்க்கிறது என்றாள்,
இப்பொழுது தெரிந்துகொண்டேன், அவள் அதை விரும்பவில்லை;
கழலும் தொடியும் அணிந்த ஆய் அரசனின் மேகங்கள் தவழும் பொதிகை மலையின்
வேங்கைப் பூவும் காந்தளும் கலந்து மணம் கமழ்ந்து,
ஆம்பல் மலரினும் அவள் குளிர்ச்சியானவள்.
					மேல்
# வடம வண்ணக்கன் தாமோதரன்
# 85 மருதம்
எவரையும் விட இனியவன்; மிகுந்த அன்பினன்;
உள்ளூர்ச் சிட்டுக்குருவியின் குதித்துக்குதித்து நடக்கும் ஆண்குருவி
சூல் நிறைந்த தன் பெட்டைக்குருவிக்கு அடைகாத்துக் குஞ்சுபொரிக்கும் கூடு கட்ட
இன்சுவையைத் தன்னுள் பொதிந்துவைத்துள்ள இனிய கழையான கரும்பின்
மணமில்லாத வெள்ளைநிறப் பூக்களைக் அலகால் கோதி எடுத்துவரும்
புதுவருவாயை உடைய தலைவன், தன் பாணனின் கூற்றில் மட்டும்.
					மேல்
# வெண்கொற்றன்
# 86 குறிஞ்சி
அடக்கிவைத்த கண்ணீர்த்துளி உடைந்து விழுகின்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ந்த கண்கள்
பொறுத்தற்கரிய நோயுடன் கலங்கித் தனிமையினால் வருந்தி,
என்னையன்றிப் பிறரும் கேட்பவர்கள் உண்டோ? மழைத்துளி மிக்கு
வாடைக்காற்றினால் தூறல்போடும் குளிர்நிறைந்த நள்ளிரவில்
பசுவானது ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்
நாவு ஒலிக்கும் வளைந்த மணியின் மெல்லிய ஓசையை.
					மேல்
# கபிலர்
# 87 குறிஞ்சி
ஊர்ப்பொதுவிடத்தில் உள்ள மரா மரத்தில் இருக்கும் அச்சந்தரும் கடவுள்
கொடியவரைத் தண்டிக்கும் என்று சொல்வர். கொஞ்சங்கூட
கொடியவர் அல்லர் எம் மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவர்;
அவர் அன்பைப் பெறும்பொருட்டு வெளுத்துப்போயிற்று என் நெற்றி;
அவர் மேல் என் உள்ளம் உருகியதால் மெலிந்தன என் பெரிய மெத்தென்ற தோள்கள்.
					மேல்
# மதுரை கதக்கண்ணன்
# 88 குறிஞ்சி
ஒலிக்கின்ற வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலை நாட்டுத் தலைவன்
சிறிய கண்ணையுடைய பெரிய களிறு வலிமையுள்ள புலியைத் தாக்கி
தனது முந்தைய வலிமை சோர்ந்துபோகும் எளிதில் அடையமுடியாத மலைச் சரிவில்
நள்ளிரவில் வந்தாலும் வருவான்
அந்தப் பழிக்கு நாம் நாணாதிருப்போம் தோழி நாமே!
					மேல்
# பரணர்
# 89 மருதம்
பரந்த அடிப்பகுதியையுடைய உரலிடத்து பகுத்த வாயாற் பாடும் வள்ளைப்பாட்டை
அயலோராகிய பெண்கள் குறையும் கூறுவர்;
கெடுதல்தான் யாது இந்த அறிவில்லாத ஊருக்கு?
பெரிய பூணையுடைய சேரனின் அச்சம் மிகுந்த கொல்லிமலையில்
கரிய கண்ணையுடைய தெய்வம் அம்மலையின் மேற்குப்பக்கத்தில் எழுதிய
நல்ல இயல்பையுடைய பாவையை ஒத்த இந்த
மென்மை மிக்க இயல்புடைய இளையவள் பாடிக்கொண்டு (உரலைக்) குற்றினாளாயின்.
					மேல்
# மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்
# 90 குறிஞ்சி
எத்தன்மையதோ தோழி? வாழ்வாயாக! முதிர்ந்து
மிளகுக் கொடி வளரும் மலைப்பக்கத்தில் இரவில் முழங்கிய
முகிலின் பெரிய மழை விழுந்ததாக, சிலிர்த்த மயிரையுடைய
ஆண்குரங்கு தொட்டவுடன் வீழ்ந்த பூ மணக்கும் பலாப்பழத்தை
மலையிலிருந்து விழும் அருவி நீர்உண்கிற துறையில் கொண்டுவந்து சேர்க்கும்
குறிஞ்சித் தலைவனின் நட்பு
உன் மெத்தென்ற தோளினை மெலிவித்தும் ஏற்கும் தன்மையிலுள்ளது-
					மேல்
# ஔவையார்
# 91 மருதம்
ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கிற கொடியாகிய பிரம்பின், புறத்தில் வரிகொண்ட விளைந்த கனியை,
ஆழமான நீரையுடைய குளத்தில் வாழும் கெண்டை கௌவும்
குளிர்ந்த துறைகளைக் கொண்ட ஊரைச்சேர்ந்தவனின் மனைவியாகிய நீ இப்படியிருந்தால்
உனது நெஞ்சின் துன்பம் மிகுதியாவதாக;
இடைவிடாமல் கொடுக்கும் மழையைப் போன்ற வள்ளல்தன்மையுள்ள கையும்,
கடுமையும் மிடுக்கும் உள்ள யானைகளையும், நீண்ட தேரினையும் உடைய அதிகமானின்
அச்சமுண்டாக்கும் போர்க்களத்தின்கண் இரவைக்கழிக்கும் ஊரினர் போன்று
சிலவே ஆகுக நீ துயிலும் நாட்கள்.
					மேல்
# தாமோதரன்
# 92 நெய்தல்
ஞாயிறு மறைந்த அகன்ற இடமுள்ள வானத்தில்
இரங்கத் தக்கன தாமே வளைந்த சிறகுகளையுடைய பறவைகள்;
தாம் தங்கும் உயர்ந்த, வழியைவிட்டு வெகுதூரம் விலகியிருக்கும் கடம்பமரத்தில் இருக்கும்
தம் குஞ்சுகளின் வாய்க்குள் ஊட்டுவதற்கு
இரையைத் தாம் கொண்டமையால் விரைந்து செல்கின்றன.
					மேல்
# அள்ளூர் நன்முல்லையார்
# 93 மருதம்
நல்ல பெண்மை நலம் தொலையவும், மேனியழகு மெலியவும்
இனிய உயிர் நீங்கினாலும் சொல்லவேண்டாம், அவர் நமக்கு
தாயும் தந்தையும் அல்லரோ?
ஊடல் என்பது எதற்கோ? அன்பு இல்லாதவிடத்து-
					மேல்
# கதக்கண்ணன்
# 94 முல்லை
அறியாமையுடைய பிச்சியானது பெரிய குளிர்ந்த மாரிப்பருவத்து
முன்னரேயே அரும்புகள் மிகச் சிவந்தனவாய் வந்தன,
நான் மனம் மயங்கி நிற்கிறேன், தோழி! நடு இரவில்
இன்னும் தனியாகவே இருக்கிறவர் கேட்டால் மறுபடியும்
என்ன ஆவாரோ? பிரிந்திருப்பவராகிய தலைவர்-
அருவிநீர் பெரிய மலையில் தத்திவீழ
கூட்டமான கரிய மேகங்கள் முழங்கும் ஓசையை-
					மேல்
# கபிலர்
# 95 குறிஞ்சி
பெரிய மலையிலிருந்து விழுகின்ற தூய வெள்ளிய அருவிநீர்
மலை முழைஞ்சுகளில் ஒலிக்கும் பல மலர்களையுடைய மலைச் சரிவின்
சிறுகுடியில் இருக்கும் குறவனின் பெரிய தோள்களையுடைய இளையவளின்
நீரின் தன்மை போன்ற மெல்லிய தன்மை
தீயைப் போன்ற என் வலிமையை அழித்தது.
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 96 குறிஞ்சி
அருவியின் ஓரத்தில் வேங்கை மரம் உள்ள பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவனுக்கு
(அவன் குறை தீர)நான் என்ன செய்வேன் என்று கூறுகிறாய்; நான் அச் சொல்லை
விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால்
நீ என்ன ஆவாய் நல்ல நெற்றியை உடைய தோழியே!
					மேல்
# வெண்பூதி
# 97 நெய்தல்
நான் இவ்விடத்தில் இருக்கின்றேன்; என் பெண்மை நலமோ
பொறுக்கமுடியாத காதல் நோயுடன் கடற்கரைச் சோலையில் உள்ளது;
தலைவன் தனது ஊரில் இருக்கின்றான்;
மறைவான எங்கள் நட்போ பலரும் தூற்றும் பழிச்சொல்லாகி தெருவிற்கிடக்கிறது.
					மேல்
# கோக்குளமுற்றன்
# 98 முல்லை
"இதுபோல் ஆகிவிட்டாள் நல்ல நெற்றியையுடையவள்" என்று அவர்
கிட்டச் சென்று கூறுவார் கிடைத்தால்,
நல்லது நிச்சயமாக, வாழ்க தோழி! நம் கொல்லைப்புறத்தில்
நீர் ஒழுகி வளர்ந்த புதரின்மேல் செழித்துப் படர்ந்த
கார்காலத்து பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சென்று -
					மேல்
# ஔவையார்
# 99 முல்லை
நான் சிந்தித்தேன் அல்லவா! நானே, சிந்தித்து
உன்னை நினைத்தேன் அல்லவா! பெரிதும் நினைத்து
மயங்கினேன் அல்லவா! இது உலகத்து இயற்கை;
உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொண்டு சென்ற பெருவெள்ளம்
இறைத்து உண்ணும் அளவுக்குக் குறைந்து அற்றுப்போய்விடுவது போல
அவ்வளவு பெரிய காமம் (உன்னைக் கண்டவுடன்) இங்கு வடிந்துவிடுதல்-
					மேல்
# கபிலர்
# 100 குறிஞ்சி
அருவி விழும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து
பெரிய இலைகளைக் கொண்ட மலைமல்லிகையொடு பசிய மரல் கொடியைக் களையெடுக்கும்
காந்தள் செடிகளைக் கொண்ட அழகிய மலைச் சரிவில் உள்ள சிறுகுடியிலுள்ளோர் பசித்ததாக
கடுமையான வேழத்தின் தந்தங்களைப் பண்டமாற்றாக விற்று உண்ணும்
வலிய வில்லையுடைய ஓரியின் கொல்லி என்னும் மேற்கு மலையின்
கொல்லிப்பாவை போன்று அழகும் மென்மையும் மிக்கவள் அவள்,
தழுவுவதற்கு அரியன அவளின் மூங்கில் போன்ற பெரிய தோள்கள்.
					மேல்
 


# பரூஉ மோவாய் பதுமன்
# 101 குறிஞ்சி
விரிந்த அலைகளையுடைய பெரிய கடலால் சூழப்பட்ட இந்த உலகமும்,
மிகவும் அரிதில் பெறக்கூடிய சிறப்புமிக்க தேவருலகமும்,
இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் இதற்கு ஒப்பாகமாட்டா -
பூப்போன்ற மைதீட்டிய கண்களும், பொன்னைப் போன்ற மேனியும்,
சிறப்பு மிக்க வரிகளைக் கொண்ட அல்குலும் உடைய தலைவியின்
தோள்கள் (தழுவுதலால்)மாறுபடும் நாளொடு எமக்கு-
					மேல்
# ஔவையார்
# 102 நெய்தல்
(பிரிந்து சென்ற தலைவரை) நினைத்தால் உள்ளம் வேகின்றது. நினைக்காமல்
இருந்தால் அது என்னால் முடிவது அன்று; என்னை வருத்தி
வானத்தைத் தொடும் அளவிலானது காமம்,
சான்றோர் அல்லர் நான் தழுவியவர்.

# வாயிலான் தேவன்					மேல்
# 103 நெய்தல்
விரைந்து ஓடும் வெள்ளம் குவித்துவைத்த நடுங்கவைக்கும் துன்பத்தைச் செய்யும் சேற்றில்
முள்முருங்கைப் பூவின் இதழ் போன்ற இறகுகளையும் சிவந்த வாயினையும் கொண்டு
இரைதேடும் நாரைக்குத் துன்பம் உண்டாக,
தூவும் மழைத்துளிகளையுடைய துயரந்தரும் வாடைக்காற்றுக் காலத்திலும்
வரமாட்டார் போலும் நம் காதலர்,
வாழமாட்டேன் போலும் தோழி! நானே!
					மேல்
# காவன்முல்லை பூதனார்
# 104 பாலை
தோழியே கேள்! காதல் கொண்ட தலைவர்
நூலினின்றும் அறுபட்ட முத்துக்களைப் போல குளிர்ந்த துளிகள் உதிர,
தாளிப் புல்லின் குளிர்ந்த படர்கொடியைக் காலையில் பசுக்கள் மேயும்
பனி விழும் நாளில் பிரிந்துசென்றார்;
பிரிந்து சென்ற நாள்களும் பல ஆகின்றன.
			மேல்
# நக்கீரர்
# 105 குறிஞ்சி
குறவனுடைய தோட்டத்தில் விளைந்த பொன் போன்ற சிறுதினையின்
பூசையுணவை உண்ணும் கடவுளுக்குப் படைத்த செழுமையான கதிரினை
அறியாது உண்ட மயில், ஆடுபவள்
வெறியாடும் அழகைப் போல துன்புற்று நடுங்கும்
தெய்வங்கள் வாழும் மலைநாட்டையுடையவனின் நட்பு
நீர்நிறைந்த கண்களுடன் நினைவாகிப்போனது.
					மேல்
# கபிலர்
# 106 குறிஞ்சி
புல்லிய விழுதைக்கொண்ட இற்றிமரத்தின் பாறையில் படர்ந்து வீழும் வெள்ளையான வேர்கள்
மலையிலிருந்து விழும் அருவியினைப் போல் தோன்றும் நாட்டைச் சேர்ந்த தலைவனின்
தீதில்லாத நெஞ்சத்தின் சொற்கள் நம்மிடம்
வந்தது வாழ்க தோழியே! நாமும்
நெய் ஊற்றிய தீயைப்போல் அதனை எதிர்கொண்டு
அவன் தன்னை மணந்தகாலத்து இருந்த நிலையிலுள்ளோம் என்று தூது விடுவோம்.
					மேல்
# மதுரை கண்ணனார்
# 107 மருதம்
குவிந்த கொத்தான செங்காந்தளின் ஒளிவிடும் பூவைப் போல
தொகுப்பான சிவந்த கொண்டையையுடைய கூட்டத்தோடு திரியும் சேவலே!
நள்ளிருளான நடுச்சாமத்தில் வீட்டில் இருக்கும் எலியைப் பார்க்கும்
குட்டிப் பூனைக்கு வைத்துண்ணும் உணவாகி
மிக்க துன்பப்படுவாயாக! நீயே! நீண்ட நீர்ப்பரப்பினால் கிடைக்கும்
புதுவருவாயுடைய ஊரைச் சேர்ந்தவனோடு தங்கிய
இன்பத்தைத் தரும் தூக்கத்தினின்றும் எழுப்பிவிட்டாயே! 
					மேல்
# வாயிலான் தேவன்
# 108 முல்லை
மேகங்கள் விளையாடும் குன்றினை அடுத்த சிறுகுடியில்
பசுமாடுகள் தம் கன்றை எண்ணித் திரும்ப, முல்லைநிலத்தில்
பசிய இலைகளைக் கொண்ட முல்லையின் குற்றமற்ற வெள்ளைப் பூக்கள்
செக்கர் வானத்தின் தன்மையைக் கொண்டன,
உயிர்வாழமாட்டேன் போலும் தோழியே நான்.
					மேல்
# நம்பி குட்டுவன்
# 109 நெய்தல்
முள் போன்ற கால்களைக் கொண்ட இறா மீனின் வளைந்த முதுகையுடைய பெரிய கூட்டத்தை
கடலில் தாழ்ந்த அலைகள் அடித்தொதுக்கும் துறையைச் சேர்ந்த தலைவன்
சந்திக்க உடன் இருந்த பொழுதிலும்
இவ்வாறு பொலிவிழந்துவிட்டதே உனது நல்ல நெற்றியின் அழகு.
					மேல்
# கிள்ளிமங்கலம்கிழார்
# 110 முல்லை
வராமற்போனாலும், வந்தாலும் , இனி அவர் நமக்கு
யாராவார் தோழி! நீரிலுள்ள
நீலக்குவளையின் இளம் மொட்டைத் தடவிக்கொடுத்து, புதரிலுள்ள
மயில்தோகையின் ஒளிரும் கண்ணினையுடைய கருவிளம்பூவை ஆட்டி
நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையின் சிவந்த அரும்புகள் மலர்ந்த
பலநிற வண்ணமுள்ள பஞ்சுபோன்ற மலர் உதிர, குளிர்ச்சியுடன்
துன்பந்தந்து வீசும் வாடைக்காற்றில்
என்ன ஆனாளோ என்று நினைக்காதவர்.
					மேல்
# தீன்மதிநாகன்
# 111 குறிஞ்சி
எனது மென்மையான் தோள்களை மெலியச்செய்த வருத்தத்தை, பூசாரி
வெற்றியுடைய முருகனால் வந்தது என்று சொல்வான்; என் தாயும்
அப்படியே என்று நினைப்பாளாயின், அப்பொழுது,
குட்டையான கரிய பெண்யானை தன் துதிக்கையை மறைத்து நிற்பதைப் போல்
நிறத்தால் கருமையான பாறாங்கல் இருக்கும் மலைநாட்டான்
சீக்கிரமே வருக! தோழி! நம்
வீட்டிலுள்ளோர் செய்யும் நகைப்பிடமான காரியத்தைக் கொஞ்சம் கண்டுகளிக்க.
					மேல்
# ஆலத்தூர் கிழார்
# 112 குறிஞ்சி
ஊராரின் பழிமொழிகளுக்கு அஞ்சினால் விருப்பம் மெலிவடையும்;
எள்ளுதல் அற்றுப்போகும்படி விருப்பதை விட்டுவிட்டால் என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே;
பெரிய களிறு வளைக்க வளைந்து நிலத்தில் படாத
பட்டையை உடைய ஒடிந்த கிளையைப் போன்றது
காண்பாயாக! தோழி! அவர் நுகர்ந்த என் பெண்மை நலன்.
					மேல்
# மாதீர்த்தன்
# 113 மருதம்
ஊருக்கு அருகில் உள்ளது பொய்கை; அந்தப் பொய்கைக்குத்
தூரமானதும் அன்று சிறிய காட்டாறு;
இரையைத் தேடும் வெள்ளைக் கொக்கு அன்றி, வேறு யாரும்
நெருங்கி வருதல் இல்லை அங்குள்ள சோலைக்கு; நாம் எமது
கூந்தலுக்கான எருமண்ணைக் கொண்டுவரச் செல்வோம்;
அங்கும் வருவாள் பெரிய பேதையாகிய தலைவி.
					மேல்
# பொன்னாகன்
# 114 நெய்தல்
நெய்தல் மணற்பரப்பில் எனது பாவையைக் கிடத்திவிட்டு
உனது குறிப்பிட்ட இடத்துக்கு வந்தேன், நன்கு செய்த தேரையுடைய தலைவனே!
அங்குப் போகின்றேன்; செல்ல நீ விடுப்பாயாக; இரவு வருவதால்
ஆரல் மீனைத் தின்று நிறைந்த வயிற்றையுடைய
நாரை மிதித்துவிடும் என் பாவையின் நெற்றியை.
					மேல்
# கபிலர்
# 115 குறிஞ்சி
பெரிய நன்மையை ஒருவர் செய்தால் அவரைப் போற்றாதவர் இல்லை.
சிறிய நன்மையைச் செய்தவளே ஆயினும், விருப்பம் மிகுந்து
ஊடல் தீரும்படி அருளுவாயாக! இலைகளைக் கவர்ந்துண்டு
ஆடுகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த குளிர்ந்த மணமுள்ள மலைச் சரிவில்
மெல்லிய நடையையுடைய மரையான்கள் துயிலும்
நல்ல மலைநாடுத் தலைவனே! நீயின்றி இவளுக்கு வேறு யாரும் இல்லை.
					மேல்
# இளங்கீரன்
# 116 குறிஞ்சி
நான் விரும்பி என்னுள் உறைவோளின் வண்டுகள் மொய்க்கும் கூந்தல்
வளம் பொருந்திய சோழரின் உறந்தையின் பெரிய நீர்த்துறையில்
நுண்ணிய கருமணல் நெளிநெளியாய் நீளமாய்ப் படிந்தாற்போல
நல்ல நெறிப்பை உடையன, நறியவும் குளிர்ந்தனவுமாம்.
					மேல்
# குன்றியனார்
# 117 நெய்தல்
மழைக்காலத்து ஆம்பல் பூவைப்போன்ற கொக்கின்
பார்வைக்கு அஞ்சிய துன்பத்தையுடைய ஈரமான நண்டு
தாழையின் வேர்களுக்குள் உள்ள தனது வளைக்குள் செல்வதற்காக, இடையர்களின்
கயிற்றினை அறுத்துச் செல்லும் எருதைப் போல விரையும் கடற்கரைத் தலைவன் 
வாராதிருப்பினும் இருக்க;
சிறியனவும் உண்டு, இங்கு விற்போரின் கைவளைகள்.
					மேல்
# நன்னாகையார்
# 118 நெய்தல்
பறவைகளும், விலங்குகளும் தனிமையில் தங்க
நள்ளென்று வந்த அன்பில்லாத மாலைக் காலத்தில்
பலரும் புகுவதற்குரிய வாசலை அடைக்க எண்ணி, வினாவுவோர்
உள்ளே வருவோர் இருக்கிறீர்களா என்று கேட்கவும்
வாரார் ஆயினர் நம் காதலர்.
					மேல்
# சத்திநாதனார்
# 119 குறிஞ்சி
வெண்மையான பாம்பின், அழகிய வரிகளைக் கொண்ட சிறிய குட்டி
காட்டு யானையை நிலைகுலையவைப்பது போல
இளையவள், முளை போன்ற ஒளிமிக்க பற்களையுடையவள்
வளையுடைக் கையினள் என்னை நிலைகுலையவைத்தவள்.
					மேல்
# பரணர்
# 120 குறிஞ்சி
பொருள் இல்லாதவன் இன்பத்தை விரும்பினாற் போல
பெறுவதற்கு அரியதை விரும்பினாய் நெஞ்சே! காதலி
நல்லவள் என்பதனை அறிந்ததைப் போல்
அரியவள் என்பதனை அறியாமற்போய்விட்டாயே!
					மேல்
# கபிலர்
# 121 குறிஞ்சி
உண்மையே தோழி வாழ்வாயாக!, மலைப்பக்கத்தில்
மையை ஊற்றியதைப் போன்ற கரிய முகத்தைக்கொண்ட ஆண்குரங்கு
தாங்கக் கூடிய கிளையில் தாவாத தவறு, அதனை ஏற்றுக்கொண்டு முறிந்த
கிளைக்கு ஆகினாற்போன்று, தலைவன்
தான் குறியிடத்துக்கு வாராமற் செய்த தவறுக்குத்
தாம் பசலைபாய்ந்தன எனது பரந்த மெல்லிய தோள்களே!
					மேல்
# ஓரம்போகியார்
# 122 நெய்தல்
இளமையான கொக்கின் புல்லிய முதுகினைப் போன்று
பள்ளத்து நீரில் உள்ள ஆம்பலும் கூம்பின; இப்பொழுது
வந்தது; வாழ்க இந்த மாலைக்காலம்;
தான் ஒன்று மட்டும் அன்று; அடுத்து வரும் இரவையும் உடையது அது!
					மேல்
# ஐயூர் முடவன்
# 123 நெய்தல்
இருள் செறிந்தாற் போன்ற ஈரமும் குளிர்ச்சியுமுடைய திரட்சியான நிழலையுடைய,
நிலவொளியைக் குவித்து வைத்தாற்போன்ற வெள்ளையான மணலின் ஒரு பக்கத்திலிருக்கும்,
கரிய கிளைகளையுடைய புன்னை மரங்களுடைய பூஞ்சோலை தனித்துக்கிடக்க
தலைவர் இன்னும் வரவில்லை, வருகின்றன
நிறைய மீன்களை வேட்டையாடிக்கொண்டு என் தமையன்மாருடைய படகுகள்.
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுக்கோ
# 124 பாலை
உப்பு வணிகர்கள் தங்கிச் சென்ற பக்கத்தையும், அகன்ற இடமுள்ள
ஊர் பாழ்பட்டுப்போனதைப் போன்ற ஓமை மரங்களையும் கொண்ட பெரிய பாலைநிலம்
இன்னாது என்று கூறுகிறீர், எனினும்
இனியவோ தலைவனே! தனியாய் இருப்போர்க்கு இந்த வீடு?
					மேல்
# அம்மூவன்
# 125 நெய்தல்
ஒளிவிடும் வளைகள் நெகிழ்ந்துபோக மெலிந்துபோய், நானே
இருக்கின்றேன்! வாழ்க தோழி! மலைப்பக்கத்து
தழையை அணிந்த அல்குலையுடைய மகளிர்களுக்குள்
திருவிழாவைப் போல் சிறந்த என் பெண்மை நலன், பழைய ஆற்றலாகிய
சிறகுகளின் வலிமையை இழந்த வருத்தமுடைய நாரை
அலைகளைத் தொட்டுக்கொண்டிருக்கும் வளைந்த கிளையில் இருக்கும்
குளிர்ந்த அழகிய துறையையுடையவனோடு இடம் மாறிப் போனது. 
					மேல்
# ஒக்கூர் மாசாத்தியார்
# 126 முல்லை
இளமையைப் பார்க்காமல், பொருளை விரும்பிச் சென்றவராகிய தலைவர்
இங்கும் வந்திலர், எங்கிருக்கிறாரோ என -
மழையால் வாழ்விக்கப்பட்ட பூங்கொடியையுடைய முல்லையின்
கொத்தான மொட்டுகளை ஒளிறும் பற்களாகக் கொண்டு
சிரிக்கிறதே தோழி! மணமுள்ள குளிர்ந்த கார்ப்பருவம்.
					மேல்
# ஓரம்போகியார்
# 127 மருதம்
கொக்கு கொத்த, தப்பிப்போய் மூழ்கிய கெண்டை, அருகிலிருக்கும்
நிறமுள்ள தாமரையின் வெள்ளையான மொட்டைக்கண்டு வெருளும்
வயல்வெளிகளையும் தோட்டங்களையும் கொண்ட காஞ்சி நகரத்துத் தலைவனே!
உன்னுடைய பாணன் ஒருவன் பொய்யன் ஆக,
ஊரில் உள்ள பாணர் எல்லாம் 
பொய்யரைப் போன்று தோன்றுவர் நீ அகன்றதால் தனித்திருக்கும் மகளிருக்கு.
					மேல்
# பரணர்
# 128 நெய்தல்
கிழக்குக் கடலின் அலைகளின் அருகிலிருக்கும் சிறகுகள் மெலிந்த நாரை
திண்ணிய தேரினைக் கொண்ட சேரனின் தொண்டியின் துறைக்கு முன் உள்ள
அயிரைக் கூட்டத்தை எண்ணி அண்ணாந்து பார்த்தாற்போல
தொலைவிலுள்ளவள், பெறுவதற்கு அரியவள் ஆகிய தலைவியை எண்ணிப்பார்க்கிறாய்,
நோயுடையவனாகிவிட்டாய் நெஞ்சே! இந்த நோய்க்குக் காரணமாகிய ஊழ்வினையின்பாற்பட்டாய்!
					மேல்
# கோப்பெருஞ்சோழன்
# 129 குறிஞ்சி
என் தோழனே! இளைஞர்கள் இன்புறுவதற்குக் காரணமாகிய நண்பனே!
அறிவுடையார்க்குத் தோழனே! கேட்பாயாக!
கரிய கடலின் நடுவில் எட்டாம் நாளுக்குரிய
இளமையான வெள்ளிய திங்கள் தோன்றியதைப் போல்
கூந்தல் பக்கத்தில் விளங்கும் சிறிய நெற்றி
புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப் போல் என்னைப் பிணித்துவிட்டது.
					மேல்
# வெள்ளிவீதியார்
# 130 பாலை
நிலத்தைத் தோண்டி அதனுள் புகமாட்டார்; வானத்தில் ஏறமாட்டார்;
குறுக்கிடும் பெரிய கடலில் காலால் நடந்து செல்லார்;
நாடுகள்தோறும், ஊர்கள்தோறும்
குடிமுறைகள்தோறும் தேடிப்பார்த்தால்
காணாமற்போவாரோ நம் காதலர்.
					மேல்
# ஓரேருழவனார்
# 131 பாலை
ஆடுகின்ற மூங்கிலைப் போன்ற அழகினையுடைய பெரிய தோள்களையும்,
பெரிதும் விரும்பப்படும் கண்ணையும் உடையவள் இருந்த ஊர்
நெடுந்தூரத்தில் அடைதற்கரிய இடத்தில் உள்ளது; எனது நெஞ்சு
ஈரமான தன்மையையுடைய உழுவதற்கேற்ற நிலத்தில்
ஒற்றை ஏர் உழவனைப் போல
பெரிதும் பரபரப்புக்கொள்கிறது; வருந்துகிறேன் நான்.
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 132 குறிஞ்சி
தழுவுவதில் விரைவுடையவள்; விருப்பம்தரும் அழகினள்;
குவிந்த மெல்லிய முலையினள்; நீளமான கூந்தலையுடையவள்;
எப்படி மறந்திருப்பேன் நான்? அருகில் நிற்கும்
நிறையச் சுரக்கும் நல்ல பசுவின் நடுங்குகின்ற தலையைக் கொண்ட கன்று
தாயைக் காணும் விருப்பதைக் கொண்டது போல
மெலிந்த பார்வையையுடையவள் மாமைநிறங்கொண்ட என் காதலி!
					மேல்
# உறையூர் முதுகண்ணன் சாத்தன்
# 133 குறிஞ்சி
புனத்தையுடைய குறவனின் தோட்டத்துப் பொன் போன்ற சிறுதினையைக்
கிளி முறித்து உண்டதால் ஏற்பட்ட குட்டையான இருவியாகிய தாள்,
பெரிய மழை பெய்ததால் இலைவிட்டுத் தழைத்ததைப் போல்
எனது வலிமை முழுதும் அழிந்தபின்னரும் இருக்கிறேனே தோழி! என்
பெண்மை நலத்தைப் புதிதான நிலையில் நுகர்ந்த தனிமை வருத்தத்தோடு-
					மேல்
# கோவேங்கை பெருங்கதவன்
# 134 குறிஞ்சி
கேட்பாயாக வாழி தோழி! நம்மைவிட்டுப்
பிரிதல் இல்லையென்றால் அது நல்லது நிச்சயமாக -
குட்டையான பாறைகளிடையே தழைத்து வளர்ந்த நீண்ட அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
பூக்களுடையவாய் ஆடும் கிளைகளை வருத்தித் தாக்கி
பெரும்பாறைகளை மோதி ஒலிக்கும் விரைந்து விழும் அருவி
மரத்திலிருந்து நிலத்தை நோக்கி விரையும் பாம்பைப் போல இறங்கும்
குறுக்கிட்டுக் கிடக்கும் மலைகளையுடைய நாட்டுத் தலைவனுடன் கலந்த நட்பு.
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 135 பாலை
தொழில்தான் ஆடவர்க்கு உயிர்; ஒளிபொருந்திய நெற்றியையுடைய
வீட்டில் வாழும் மகளிர்க்கு ஆடவரே உயிராவார் என்று
நமக்கு உரைத்தவரும் அத் தலைவரே!
அழவேண்டாம் தோழி! பயணத்தை மேற்கொள்ளமாட்டார்.
					மேல்
# மிளைப்பெரும்கந்தன்
# 136 குறிஞ்சி
காமம் காமம் என்று உலகினர் அதைக் கண்டு அஞ்சுகின்றனர்; அந்தக் காமம்
வருத்தமும் நோயும் அன்று; நுண்ணிதாகி
மிகுவதும் குறைவதும் அன்று; யானை
தழையுணவை மிகுதியாக உண்டு அதனால்கொண்ட மதத்தைப் போல
அது வெளிப்படும் தன்மையும் உடையது காணக்கூடியவரைப் பெற்றால்.
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 137 பாலை
மென்மையான இயல்புடைய நங்கையே! உன் நல்ல நெஞ்சு வருந்தும்படி
உன்னைத் துறந்து அமைந்திருப்பேனாயின், என்னை நீங்கி
இரப்போர் வராத நாட்கள்
பலவாகுக, எனது பயணத்தின் தகுதியில்-
					மேல்
# கொல்லன் அழிசி
# 138 குறிஞ்சி
பெரிய ஊரிலுள்ளார் தூங்கினாலும் நாம் தூங்கமாட்டோம்;
எமது வீட்டுக்கு வெளியேயுள்ள ஏழில்மலையின் உச்சியில்
மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின்
அழகுமிக்க மெல்லிய கிளைகளில் மலர்ந்த
நீல மணி போன்ற பூக்கள் உதிர்வதால் உண்டாகும் ஓசையை மிகவும் கேட்டு -
					மேல்
# ஒக்கூர் மாசாத்தியார்
# 139 மருதம்
வீட்டில் வாழும் கோழியின் குட்டைக் கால்களையுடைய பேடை,
வேலியில், காட்டுப்பூனைகள் மாலையில் வந்து இருக்க,
ஒளிந்துகொள்ளும் இடம் அறியாது ஒன்றுகூடிச் சேர்ந்துகொள்ளும் பொருட்டு
வருந்தும் குஞ்சுகளைக் அழைத்துக் கூவினாற் போன்று
செவிக்கு இன்னாதாகத் தூற்றப்படும் பழிச்சொல்லோடே
வராமலிருப்பாயாக! வாழியர் எம் தலைவ! எம் தெருப்பக்கம்-
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 140 பாலை
பன்னரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது
வழிச்செல்வோருக்கு நல் நிமித்தமாக ஒலியெழுப்பத் தங்கியிருக்கும்
பாலைநிலத்தில் சென்றனர் காதலர்; என் வலிமை அழிந்து
இங்கு நான் தாங்கிய துன்பத்தை
எப்படி அறியும் இந்த இரக்கமுள்ள ஊர்.
					மேல்
# மதுரை பெருங்கொல்லனார்
# 141 குறிஞ்சி
வளைந்த வாயையுடைய சிறிய கிளிகள் விளைந்த தினையின்மேல் வீழாதபடி விரட்டச்
செல்வாய் என்றாள் அன்னை என்று நீ
சொன்னால் என்ன தோழி! தினைக்கொல்லையிலுள்ள
நீண்ட கையையுடைய யானையின் கடிய பகையினால் வருந்திய
குறிய கைகளையுடைய, கொல்லுதலில் வல்ல ஆண் புலியை
பசிய கண்களையுடைய செந்நாய் உண்பதற்குரிய தருணத்தைப் பார்த்திருக்கும்
இருள் நிறைந்த நள்ளிரவில் வருகின்றாய்,
மலைச்சாரலைச் சேர்ந்தவனே! இவ்வாறு வரவேண்டாம் என்று-
					மேல்
# கபிலர்
# 142 குறிஞ்சி
சுனையில் மலர்ந்த பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து
தினைப்புனத்துக் கிளிகளை விரட்டும் பூப்போன்ற கண்ணையுடைய பேதை
தான் அறிந்தனளோ இல்லையோ? பாதியிரவில்
படுக்கப்போகும் யானையைப்போல் பெருமூச்சுவிட்டு என்
உள்ளம் பின்னரும் அந்தத் தலைவியினிடத்தே இருக்கிறது என்பதை.
					மேல்
# மதுரை கணக்காயன் மகன் நக்கீரன்
# 143 குறிஞ்சி
வருந்தாதே! ஆய்ந்த அணிகலன்களையுடையாய்! அன்பினைப் பெரிதும் உடையவன்;
பழியையும் அஞ்சுவான் அந்தப் பயன்தரும் மலைநாட்டுத் தலைவன்!
நிலையாமை ஒன்றே நிலையானதாகலின்
நல்ல புகழை விரும்பிய நன்மையுடைய நெஞ்சில்
கடமையுணர்ச்சி மிக்கவனிடம் உடைமையான பொருள் போல
நிலைத்து நிற்றற்கு உரியது அன்று, உன்
அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலைநோய்.
					மேல்
# மதுரை ஆசிரியன் கோடம்கொற்றன்
# 144 பாலை
கழியிலுள்ள கருங்குவளை மலரைப் பறித்தும், கடலிலுள்ள
வெள்ளிய தலையைக் கொண்ட அலைகடலில் விளையாடியும், நன்றாக
தன்னைவிட்டுப் பிரியாத தோழிகள் தத்தமக்கு உரிய ஒரு விளையாட்டை விளையாட
இப்படியாக இங்கு சேர்ந்திருப்பதற்கு உடன்படாள்; இதற்கு மாறுபாடான வழியில்
பரல் கற்கள் பாதத்தைப் பாழ்படுத்தச் சென்றுவிட்டாள்-
விரைந்து செல்லும் மேகங்கள் தவழும் உச்சியையுடைய
விண்வரை உயர்ந்த பெருங்கற்கள் குறுக்கிட்டுக்கிடக்கும் மலைநாட்டு வழியே.
					மேல்
# கொல்லன் அழிசி
# 145 குறிஞ்சி
தங்குதற்குரிய ஊர் அன்று, இந்தத் துறையை ஒட்டிய சிற்றூர்,
கடற்கரைச் சோலையையுடைய தலைவனது கொடுமையை எண்ணி
அடங்காத் துயரமொடு வருந்தி, நள்ளிரவில்
துயிலாமல் இருப்போரை ஏனென்று கேட்காமல்
துயிலுகின்ற கண்களையுடைய மக்களோடு, நீண்ட இரவையும் உடையது.
					மேல்
# வெள்ளிவீதியார்
# 146 குறிஞ்சி
கேட்பாயாக, வாழ்க தோழியே! நம் ஊரில்
பிரிந்தோரைச் சேர்த்துவைப்போர் இருக்கின்றார்களே!
தண்டினைப் பிடித்த கையினரும், நரைத்த தலையில் துகில்முடித்திருப்போரும்,
நன்று நன்று என்று சொல்வதற்கெல்லாம் ஒத்திசைக்கும் மக்களோடு
இன்று நல்லநாள் என்று கூறும் அங்குள்ள நம்மவர் அவை.
					மேல்
# கோப்பெருஞ்சோழன்
# 147 பாலை
வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று
மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாநிறமும்
நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையும் கொண்ட மடந்தையைத் தந்தவனைப் போல
இனிய துயிலினின்றும் எழுப்புகின்றாய், கனவே!
உன்னை இகழமாட்டார், தம் துணையைப் பிரிந்தோர்.
					மேல்
# இளங்கீரந்தையார்
# 148 முல்லை
செல்வர்களின் சிறுவர்களின் சிறிய கால்களில் அழகுற விளங்கிய
தவளையின் வாயைப் போன்ற பொன்னால் செய்த சதங்கையின்
காசைப் போன்ற அரும்புகளை ஈன்ற கொன்றை
குருந்த மரத்தோடு சேர்ந்து ஆடும் மிகுந்த குளிர்ச்சியையுடைய பருவத்தையும்
கார்ப்பருவம் அல்ல என்று சொல்வாயாயின்
காண்பது கனவோ? நான் கேட்கிறேன்.
					மேல்
# வெள்ளிவீதியார்
# 149 பாலை
இரங்கத் தக்கது நாணம்! நம்முடனே
மிகவும் நீண்டகாலம் வருந்திநிற்கிறது; இனிமேல்
வெள்ளைப் பூவைக்கொண்ட கரும்பினையுடைய உயர்ந்த மணலாகிய சிறு கரை
இனிய நீர் பெருகி நெருக்க கரைந்து விழுந்ததைப் போல்
தாங்கும் அளவு தாங்கி
காமம் மிகுந்து நெருக்கும்போது நில்லாதுபோய்விடும்.
					மேல்
# மாடலூர் கிழார்  
# 150 குறிஞ்சி
மரத்தின் உச்சிப்பரணில் இருப்போன் ஏற்றிய மணமுள்ள புகையை எழுப்பும் கொள்ளியானது
வானத்து மீன்களைப் போல் ஆங்காங்கே மின்னும்
உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தவனின் சந்தனம் பூசிப் புலர்ந்த மார்பினை
நினைத்தால் உள்ளத்தில் காமநோய் பெருகும்;
அந்த மார்பைத் தழுவினால் அது இல்லாமற்போது எப்படி தோழியே?
					மேல்
 


# தூங்கலோரி
# 151 பாலை
ஆண் வங்காப்பறவை நீங்கிய சிவந்த காலையுடைய பெடைவங்கா
புல்லூறு என்னும் பறவை தன்மேல் பாய்ந்ததாக, தன் சேவலைக்காணாமல்
குழல் போன்று இசைக்கும் குரலையுடைய அது குறிய பல ஓசைகளை எழுப்பும்
மலைகளுள்ள சிறிய வழிகள் கடப்பதற்கு அரியன என்று கருதாமல்,
மறக்கமுடியாத காதலியை விட்டுப்பிரிந்து
செல்வேன் என்று சொல்வது இங்கு நம் இளமைக்கு இறுதியாகும்.
					மேல்
# கிள்ளிமங்கலம்கிழார்
# 152 குறிஞ்சி
ஒருசிறிதும் அறியமாட்டார் என்னை இடித்துரைப்போர்;
தாய் இல்லாத முட்டை போல உள்ளத்துள்ளே கிடந்து
மெலிவதன்றி வேறு என்ன உடையது?
ஆமையின் குஞ்சைப் போன்ற
காமமானது, காதலர் நம்மைச் செயலற்றுப்போகப் பிரிந்து கைவிட்டால்?
					மேல்
# கபிலர்
# 153 குறிஞ்சி
குன்றிலுள்ள பேராந்தை குழறுவதுபோல் ஒலித்தாலும், முற்றத்திலுள்ள
பலாவின் பெரிய கிளையில் ஆண்குரங்கு தாவித் துள்ளினாலும்,
முன்பு அஞ்சும், இரங்கற்குரியது என் நெஞ்சு; இனியே
நிறைந்த இருளையுடைய இரவில் அவர்கூடவே
மலைச்சாரலிலுள்ள நீண்ட வழியில் செல்லுதலைத் தவிர்ந்திலது. 
					மேல்
# மதுரை சீத்தலை சாத்தன்
# 154 பாலை
எவ்வாறு தெரிந்துகொண்டனரோ தோழி! பாம்பின்
உரித்த தோல் மேலே எழுந்ததைப் போல வெப்பம் தகதகக்கின்ற நண்பகலில்
இரையை விரும்பிச் சென்ற தன் சேவலை நினைத்து
புள்ளிகளையுடைய, மயிர் பொருந்திய கழுத்தினைக்கொண்ட குறுநடைப் பேடை
பொரிந்த அடிமரத்தையுடைய கள்ளியின் வெடித்த காயையுடைய அழகிய கிளையில்
மனமழிந்து இருந்து தனிமைத் துயரத்தில் கூவும்
அரிய பாலைநிலமாகிய இடத்தையுடைய காட்டிடையே
பிரிந்து சென்று வாழும் ஆற்றல்பெறுவதற்கு - 
					மேல்
# உரோடகத்து கந்தரத்தன்
# 155 முல்லை
பழமையான தினைப்புனத்தை உழுத ஆரவாரம் மிக்க உழவரின்
விதைகளை வைக்கும் சிறிய வட்டிகள், முல்லைமொட்டுக்களால் நிறைய
கார்ப்பருவம் வந்துவிட்டது; மெழுகால் செய்த உருவத்தில் இட்டு
ஊதுகின்ற கொல்லன் உலையில் வைத்து இயற்றிய திறந்த வாயையுடைய தெளிந்த மணிகள்
மரங்கள் நெருங்கி வளர்ந்த காட்டில் மிகுந்து ஒலிக்க, கடினமான வழியைக் கடந்து
மாலையில் நல்ல விருந்தை உண்ணுவதற்குத்
தலைவனின் தேர் வரும் என்னும் சொல் வரவில்லையே!
					மேல்
# பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்
# 156 குறிஞ்சி
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
சிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து
தண்டாக்கி அதனுடன் பிடித்த தொங்கவிட்ட கமண்டலத்துடன்
நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!
எழுதாமல் வாய்ப்பாடமாகக் கற்கும் நின் பாடங்களில்
பிரிந்தவரைச் சேர்த்துவிக்கும் தன்மையுள்ள
மருந்தும் இருக்கிறதோ? இது ஒரு மயக்க நிலையோ?
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 157 மருதம்
குக்கூ என்று கூவியது கோழிச்சேவல்; அதைக் கேட்டு
துட்கென்றது என் தூய்மையான நெஞ்சம்;
எனது தோளைத் தழுவிக்கிடக்கும் காதலரைப் பிரிக்கும்
வாளைப் போன்ற வைகறைப் பொழுது வந்துவிட்டது என்றே!
					மேல்
# ஔவையார்
# 158 குறிஞ்சி
உயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள பாம்புகள் இறந்துபடும்படி இடிக்கும்
மிகுந்த வேகத்தையுடைய பேரிடியின் இடிக்கும் முழக்கத்தோடு கலந்து
காற்றோடு வந்த நிறைந்த கருக்கொண்ட பெரிய மழையே!
நிறைந்த இரக்கத்தை நீ பெறவில்லையோ? பெரும் புகழ்கொண்ட
இமயமலையையும் அசைக்கின்ற தன்மையையுடையாய்!
துணையின்றி இருக்கின்றனர், இரங்கத்தக்கவர், பெண்டிர், இது எதற்காக?
					மேல்
# வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
# 159 குறிஞ்சி
தழை அணிந்த அல்குலையும் தாங்கமாட்டாத
நுணுகிய சிறிய இடைக்குத் துன்பம் உண்டாக,
அழகிய மென்மையுடைய மார்பகம் நிறையும்படி பருத்து,
பெரிய, தேமல் வரிகளைக் கொண்ட முலைகள் செம்பினை ஒத்தன;
எந்நிலை எய்துவாளோ, பூ வேலைப்பாடமைந்த காதணிகள் கொண்ட இவள் என்னும்
கவலையையுடைய நெஞ்சத்தோடு கேட்காத
வேறு கவலையையுடைய மக்களையுடையது இந்தப் பேதைமை மிக்க ஊர்.
					மேல்
# மதுரை மருதன் இளநாகன்
# 160 குறிஞ்சி
நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில்
இறாமீனைப் போன்ற வளைந்த மூக்கினையுடைய பெண் அன்றிலோடு
தடா மடத்தின் உயர்ந்த கிளையிலுள்ள கூட்டிலிருந்து, பிரிந்தோர்
செயலற்று வருந்தும்படி ஒலிக்கும் நள்ளிரவில்
மிக்க குளிர்ச்சியுடைய வாடைக்காற்று வீசும் நேரத்திலும் வாரார்;
இதுதானோ தோழி! நம் காதலர் செய்துகொண்ட திருமணம்?
					மேல்
# நக்கீரர்
# 161 குறிஞ்சி
பொழுதோ இருண்டுவிட்டது; மழையும் ஓயாமல்
பேய்களும் கண்களை மூடிக்கொள்ள ஓங்கியடிக்கின்றது. அதற்குமேலும்
புலிப்பல் தாலியுடைய மகனைத் தழுவிக்கொண்டு
'அடி பெண்ணே' என்று கூப்பிடுகிறாள் அன்னையும்; 
என்ன செய்தானோ அவன்? தனது மலையின்
சந்தனம் மணக்கும் மார்பினன்
மழையில் நனைந்துநிற்கும் யானையைப் போல வந்து நின்றுகொண்டிருந்தான்.
					மேல்
# கருவூர் பவுத்திரன்
# 162 முல்லை
மேகங்களால் காக்கப்படும் நீர்வளம் உடைய அகன்ற முல்லைநிலத்தில்
பல பசுக்கள் புகுகின்ற பொலிவழிந்த மாலைப் பொழுதில்,
முல்லை! நீ வாழ்க முல்லையே! நீ உனது
சிறிய வெள்ளை அரும்புகளாலே புன்னகை செய்கின்றாய்;
சிரிப்பது போன்று காட்டுவது
உனக்குத் தகுமோ, அதுவும் தனித்திருப்போரைப் பார்த்து -
					மேல்
# அம்மூவன்
# 163 நெய்தல்
யாரால் பயந்துபோயிருக்கின்றாய்! கடலே! பூழியரின்
சிறிய தலைகளைக் கொண்ட வெள்ளாட்டுக்கூட்டம் பரவியதைப் போன்று
மீனைத் தின்னும் கொக்குகள் பரவிய அழகிய கடற்கரைத் துறையில்
வெள்ளைப் பூவையுடைய தாழையை அலைகள் மோதும்
நள்ளென்ற நடுராத்திரியிலும் கேட்கிறது உன் குரல்.
					மேல்
# மாங்குடிமருதன்
# 164 மருதம்
கணைபோன்று திரண்ட கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன்
கொத்துக்கொத்தானை தேமாமரத்தின் இனிய பழத்தைக் கௌவும்
பழமை முதிர்ந்த வேளிர்குலத்தின் குன்றூருக்கும் கிழக்கிலிருக்கும்
குளிர்ந்த பெரிய கடல் என்னை வருத்துவதாக! தோழி!
இல்லாள் அறியாமையில் ஊடல்கொள்ளும்
தன்மையுடைவளாய், தலைவனுக்கு நான் ஆகிவிட்டேன் என்றால்.
					மேல்
# பரணர்
# 165 குறிஞ்சி
களிப்பேறிய பின்னரும் கள்ளை உண்டாற்போல
விரும்பிய பின்னரும் மேலும் விரும்புகின்றாய்!
பெரிய மணற்கரையில் நின்றுபோன உப்பை எடுத்துச் செல்லும் வண்டி
பெரிய மழை பெய்தலால் அழிந்ததைப் போல், இவளின்
கரிய நிறைந்த கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு -
					மேல்
# கூடலூர் கிழார்
# 166 நெய்தல்
குளிர்ந்த கடலில் உண்டான அலைகள் மோதித்தள்ளியதால், வெள்ளைச் சிறகுகளைக் கொண்ட
நாரைக்கூடம் இடம்பெயர்ந்து வேறிடத்தில் அயிரை மீனை நிறைய உண்ணும்
ஊராகிய மரந்தை இனியது;
ஒருத்தியாய்த் தனியே இருந்தால் வருத்தத்தைத் தருவதாயிற்று.
					மேல்
# கூடலூர் கிழார்
# 167 முல்லை
முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் போன்ற மெல்லிய விரல்களைக்
கழுவாமலேயே தன் துவைத்த சேலையின் முன்றானையைச் சரிசெய்து,
குவளை போன்ற மையுண்ட கண்களில் தாளிதப்புகை நிறைய,
தானே முயன்று துழாவிச் சமைத்த சுவையான புளித்த மோர்க்குழம்பினை
“இனிது” என்று கணவன் உண்டலின்
மிக நுட்பமாக மகிழ்ந்தது ஒளிமிகுந்த நெற்றியையுடைய அவளது முகம்.
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 168 பாலை
மழைக்காலத்துப் பிச்சியின் நீர் ஒழுகும் கொழுத்த அரும்புகளைக்
கரிய பனையின் ஓலையாற்செய்த பசிய குடைக்குள் பலவாக வைத்து மூடி,
பெரிய மழைபெய்யும் விடியற்காலத்தில் விரித்துவிட்டதைப் போல்
மணமும் குளிர்ச்சியுமுள்ளவள் நல்ல மாமைநிறமுள்ள மேனியுள்ள தலைவி;
நீரில் விடும் தெப்பத்தைப்போல் வளைந்து இறங்கிய பருத்த தோள்களை
தழுவுதலும், பிரிதலும் இல்லையாயினோம்;
அவளைப் பிரிந்தாலோ உயிர் வாழ்தல் அதனினும் இல்லயானோம்.
					மேல்
# வெள்ளிவீதியார்
# 169 மருதம்
பாலைநிலத்தில் செல்லும் யானையின் பாறையைக் குத்திய கொம்பைப்போல்
விரைவாக முறிந்துபோகட்டும், ஐயனே! நாம்
உம்மோடு சேர்ந்த சிரித்த தூய வெள்ளிய பற்கள்;
பாணர் தாம் பிடித்த பச்சைமீனை இட்டுவைத்த ஓட்டைப் போன்று
எமக்கும் பெரும் வெறுப்பைத் தருவதாகி
உம்மையும் நாம் பெறாமலாகி, அழிந்துபோகட்டும் எமது உயிரே!
					மேல்
# கருவூர் கிழார்
# 170 குறிஞ்சி
பலரும் ஒவ்வொருவிதமாகக் கூறுவர், அதனை நன்கு அறியாதவரே!
அருவி கொணர்ந்த புதிய கதிரையுடைய கொறுக்கச்சியை
குளத்தை நாடிச்சென்ற யானை உணவாக உண்ணும்
மலைகள் சேர்ந்த நாட்டையுடையவனது நட்பு
கெட்டுப்போகாமையை நான் நன்கு அறிந்துகொண்டேன் -
					மேல்
# பூங்கணுத்திரையார்
# 171 மருதம்
இதனைக் காண்பாயாக, வாழ்க தோழியே! புதிதாய்
விரைந்துவரும் நீரை அடைக்கும் கரையையுடைய நீண்ட குளத்தில் இட்ட
மீன் வலையில் வேறு விலங்கு சிக்கியதைப் போல்
இது என்ன கூத்து? அயலாரிடத்தான (மணத்துக்கான இம் ) முயற்சி!
					மேல்
# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 172 நெய்தல்
வலிமையான அழகிய சிறகுகளையும், நொய்தான பறத்தலையும் கொண்ட வௌவால்
பழுத்த மரத்தைத் தேடித்திரியும் துன்பந்தரும் மாலையில்
நான் தனித்திருக்க இங்கு நம்மைவிட்டுச் சென்ற தலைவர்
தாம் அங்கு தனியே இருப்பது அவருக்கு இனிமையானதோ?
ஏழு ஊர்களிலுள்ள பொதுவான ஈயம்பூசும் தொழிலுக்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட
உலையில் மாட்டிய துருத்தியைப் போல
எல்லை அறியாமல் வருந்தும் என் நெஞ்சே!
					மேல்
# மதுரை காஞ்சி புலவன்
# 173 குறிஞ்சி
பொன்னைப்போன்ற நிறமுடைய ஆவிரையின் புதிய பூக்களைச் செறித்துக் கட்டிய
பலவாகிய நூல்களையுடைய மாலையை அணிந்த பனைமடலால் இயற்றிய குதிரையில்
பூட்டிய மணி ஆரவாரிக்கும்படி ஏறி, நாணத்தைக் கொன்று
மிக்க நினைவையுடைய உள்ளத்தே உள்ள நோயான காமம் மேலும் மேலும் மிகுதியாக
இன்னாளால் வந்தது இந்தக் காமநோய் என முன்னே நின்று
அவளைப் பழிதூற்றும் இந்த ஊர்,
அதனை உணர்ந்தமையால் இதனைவிட்டுப் போகவிருக்கின்றேன்.
					மேல்
# வெண்பூதி
# 174 பாலை
பெய்கின்ற மழை பெய்யாது நீங்கிய வருத்தமுள்ள பாலைநிலத்தில்
கவைத்த முள்ளையுடைய கள்ளியின் காய் வெடிக்கும் கடிய ஒலிக்கு
நெருக்கமான மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய புறாக்கள் அஞ்சியோடும்
கடும் வழிகள் கடத்தற்கு அரியன என்று கருதாமல், நம்மைத் துறந்து
பொருளைத் தேடிப் பிரிந்து செல்வாராயின், இவ்வுலகத்தில்
பொருள்தான் முக்கியமாகிப்போய்விட்டது,
அருளைத் தேட யாரும் இல்லை.
					மேல்
# உலோச்சன்
# 175 நெய்தல்
எடுக்கும் பருவத்திலுள்ள தேனை விரும்பி, பலசிறகுகளைக் கொண்ட வண்டுக்கூட்டம்
வலிமைமிக்க அலைகள் மோதி எழுப்பிய திணிந்த மணலைக் கொண்டு அடைத்த கரையில் உள்ள
நனைந்த புன்னையின் பெரிய கிளையில் கூடுகின்ற
மலர்ந்த பூக்களையும் கரிய நீரையுமுடைய கடற்கரைத் தலைவனுக்கு
இரங்கமாட்டேன் தோழி! இங்கு நீ ஏன் இப்படி ஆயினாய் என்று
மற்றவரெல்லாரும் அறியக் கூறவேண்டாம்;
அவர்கள் நினைப்புக்கேற்றவாறு அமையட்டும்; அவர்களின் வம்புமொழி என்னை என்ன செய்யும்?
					மேல்
# வருமுலையாரித்தி
# 176 குறிஞ்சி
ஒருநாள் வந்தான் அல்லன், இரண்டு நாள் வந்தானல்லன்;
பல நாள் வந்து பணிவான மொழிகளை மீண்டும் மீண்டும் சொல்லி, என்னுடைய
நல்ல நெஞ்சத்தை இளகச் செய்த பின்னர்,
மலையின் முதிர்ந்த தேன்கூட்டைப் போல மறைந்து போனான்,
எனக்குப் பற்றுக்கோடாக இருக்கும் என் தந்தையைப் போன்றவன் எங்கு உள்ளானோ?
அயலிடமாகிய ஒரு நல்ல நாட்டில் பெய்த
பெருத்த இடியுடன் கூடிய மழையின் நீரைப் போல என் நெஞ்சம் கலங்கி இருக்கிறது.
					மேல்
# உலோச்சன்
# 177 நெய்தல்
கடல் ஓசை அடங்கி, கடற்கரைச் சோலை இருளால் மயங்க,
துறையையும் நீரையும் உடைய கரிய கழி பொலிவிழந்து இருக்கிறது;
பொதுவிடத்தில் உள்ள அழகிய பனையின் மடலில் இருந்து வாழ்கிற
அன்றில் பறவையும் மெல்லக் கூவும்; இன்று அவர்
வருவாரோ? வாழ்க தோழியே! நாம் மகிழ்ச்சியுற,
ஊடல்கொள்ளினும், அதனால் பிரிவு வரும் என்று அஞ்சி
நீங்குதற்கு அரிய காம இன்பத்தை அமையப்பெற்றோர்
					மேல்
# நெடும்பல்லியத்தை
# 178 மருதம்
அயிரை மீன்கள் பரந்து திரியும் அழகிய குளிர்ந்த பொய்கையில்
எடுப்பான அழகையுடைய பூக்களைக் கொண்ட, உள்துளையுள்ள திரண்ட தண்டுகளையுடைய
ஆம்பல் மலரைக் கொய்பவர்களுக்குத் தாகம் எடுத்ததைப் போன்று
முலைகளிடையே படுத்திருந்தும் நடுங்குகின்றீர்;
தொழுது காணும் பிறையைப் போல உமக்குத் தோன்றி, நாம் உமக்கு
அரியவளாய் இருந்த பொழுதில்
பெரிதான வருத்தத்தைப் பொறுத்துக்கொண்டிருந்தீரோ? வருந்துகிறேன் நான்.
					மேல்
# குட்டுவன் கண்ணன்
# 179 குறிஞ்சி
கல்லென்ற ஓசையிடும் காட்டினில் கடமாவை விரட்டி
பகற்பொழுதும் இருளாகிவிட்டது; வேட்டைநாய்களும் இளைத்துவிட்டன;
உம் ஊருக்குச் செல்லவேண்டாம், தலைவனே! இதோ பக்கத்தில் இருக்கிறது எமது ஊர்;
உயர்ந்த மலையின் சரிவில் இனிய தேனிறாலைக் கிழித்த
திரளாயிருக்கும் பசிய மூங்கில் குருத்தைத் தின்ற பெரிய வாயையுடைய
பேதையான யானை சுவைத்த
குட்டையாகிப்போன மூங்கிலையுடைய உச்சிக்கு இடையில் இருக்கிறது-
					மேல்
# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 180 பாலை
பேயின் பல்லைப் போன்ற பருத்த நகங்களையும், பரந்த அடியினையும் கொண்ட 
பெரிய களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு வந்துபுகுந்ததால், அழிந்து
பாத்தியில் விழுந்த கரும்பின் நடுவே நிற்கும் ஒற்றைக் கரும்பு போல
துன்பத்தையுடைய ஒற்றை மூங்கில் உயர்ந்துநிற்கும் பாலைநிலத்தைக் கடந்து
ஈட்டிவிட்டாரோ பொருளை? அல்குலில்
அழகிய தேமல்வரிகள் கெடும்படி துறந்துசென்றோர்
கல்நெஞ்சினராக, தாம் சென்ற நாட்டில் - 
					மேல்
# கிள்ளிமங்கலங்கிழார்
# 181 குறிஞ்சி
இது என்ன பயனை உடையது, தோழி? புலவிக்காலத்தில்
தலைவர் இப்படிப்பட்டவர் என்னும் இனிமையற்ற சொற்கள்-
பெரிய கொம்பினையுடைய எருமையாகிய அண்மையில் ஈன்ற கரிய பெண்ணெருமை
உழவனால் கட்டப்பட்டுள்ள தன் கன்றைவிட்டு அகலாமல்
பக்கத்தேயுள்ள பசிய பயிர்களை மேயும் ஊரையுடைய நம் தலைவனின்
செல்வம் மிக்க வீட்டிலிருந்து பலவித இல்லறக் கடமைகளை மேற்கொண்டுள்ள
மிகவும் முதுமையினையுடைய பெண்டிராகிய நமக்கு -
					மேல்
# மடல் பாடிய மாதங்கீரன்
# 182 குறிஞ்சி
செழித்த உச்சியையுடைய பனையின் நன்கு விளைந்த பெரிய மடலால் செய்த குதிரைக்கு
மணிகள் அணிந்த பெரிய மாலையை மரபுப்படி அணிவித்து,
வெள்ளை எலும்புகளை அணிந்துகொண்டு, பிறர் எள்ளி நகையாடத் தோன்றி
ஒரு நாள் மட்டில் நமது பெரிய நாணத்தை விட்டு,
தெருவில் செல்லும் செயலைத் தருவதாயிற்றோ?
ஒழுகும் அழகையும் அசைகின்ற நடையையும் உடைய பேதை
மனம் நெகிழவில்லை; நாம் அவளிடம் விடுவதற்கு அமைந்த தூது - 
					மேல்
# ஔவையார்
# 183 முல்லை
தலைவர் பிரிந்து சென்ற நாட்டிலுள்ள கொன்றையின் அழகிய பருவத்துப் பூக்கள்
நம்மைப்போல பசலை நிறத்தையுடைய கார்ப்பருவத்தில், தம்மைப் போலச்
சிறிய தலையையுடைய பெண்மானைப் பிரிந்திருக்கும் நெறிந்த கொம்பினையுடைய
இரலை மானையும் காண்பாரோ?
பொலிவற்ற காயாவின் மலர்கள் நிறைந்த பெரிய கிளை
மெல்லிய மயிலின் கழுத்தைப் போல் தோன்றும்
புஞ்சை நிலத்தின்கண் இருந்த காட்டில் - 
					மேல்
# ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன்
# 184 நெய்தல்
தாம் அறிந்ததனை மறைத்துப் பொய்கூறுதல் சான்றோர்க்கு இயல்பில்லை;
சிறுகுடிக்கான பயணத்தால் அங்குச் செல்வதைத் தவிருங்கள், 
இதற்கு இது சிறந்தது என்னாமல், தலைவியின் கண்வலையில் பட்டு
அங்குத் தங்கிவிட்டது என் சிறப்புப்பெற்ற நெஞ்சம்; (எனவே)
மயில்தோகையின் கண்ணைப்போன்ற சிறந்த முடியைக் கொண்ட பாவைபோன்ற
நுண்ணிய வலையைக் கொண்ட மீனவரின் இளமையான மகளின்
கண்ணாகிய வலையில் மாட்டிக்கொள்ளும் கடற்கரைச் சோலையிடத்து இருக்கும் - 
(சிறுகுடிக்கான பயணத்தால் அங்குச் செல்வதைத் தவிருங்கள்,)
					மேல்
# 185 குறிஞ்சி # மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நெற்றியில் பசலை படர்ந்து, சுணங்கு நிறம் குன்றி
நீண்ட மென்மையான பருத்த தோள்கள் மெலிந்து, வளையல்கள் கழன்று,
இப்படி ஆவது உம்மாலே ஆனது என
சொன்னால் என்ன தோழி? பல கோடுகளையுடைய
பாம்பின் படம் குறைந்ததைப் போல் குவிந்து
கீழ்க்காற்றால் விழுந்த ஒளிரும் வெங்காந்தள் மலர்,
பாறையின்மேல் கவிழ்ந்துகிடக்கும் நாட்டினராகிய தலைவனுக்கு என்
நல்ல மாமைநிறமுள்ள மேனி துன்பமுறும் நிலையை - 
					மேல்
# ஒக்கூர் மாசாத்தியார்
# 186 முல்லை
மிகுந்த ஓசையுடைய இடியுடன் கார்காலம் கூடிவந்த
கொல்லைப் புனத்திலுள்ள முல்லையின் மெல்லிய கொடி
பற்கள் போன்று அரும்பிநிற்கும் நாட்டையுடைய தலைவனுக்காக
தூக்கத்தைத் தொலைத்தன தோழி, என்னுடைய கண்கள்.
					மேல்
# கபிலர்
# 187 குறிஞ்சி
செம்மையான மலையில் வாழும் வருடைமானின் குட்டி
தன் தாயின் மடியிலிருந்து பொழியும் இனிய பாலை வயிறாரக் குடித்து
பெரிய மலைப்பக்கத்து நிழலில் துள்ளிவிளையாடும் நாட்டைச் சேர்ந்தவன்
பாறையைக் காட்டிலும் வலிமைமிக்கவன் தோழி!
அவ்வாறு வலியவன் என்றுகொள்ளாது மெலியும் என் நெஞ்சு!
					மேல்
# மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மன்னார்
# 188 முல்லை
முதிர்ந்துவிட்டன முல்லையின் அரும்புகள்; முல்லையோடு
முற்றும் அழகுகொண்டன குளிர்ந்த கார்ப்பருவத்தின் அகன்ற தினைப்புனங்கள்;
என் நேர்த்தியான அணிகலன்களை நெகிழச் செய்தவர் வரவில்லை;
மாலையும் வந்தது; என் சிறப்புமிக்க பெண்மை நலத்தைக் குறிவைத்து -
					மேல்
# மதுரை ஈழத்து பூதன் தேவன்
# 189 பாலை
இன்றே சென்று நாளை வரவேண்டும்;
குன்றிலிருந்து விழும் அருவியைப் போல வெள்ளிய தேர் விரைந்து செல்க;
இளம்பிறையைப் போன்ற ஒளிவிளங்கும் சக்கரங்கள்
வானத்திலிருந்து விழும் நெருப்பைப் போன்று பசிய பயிர்களை அழித்து
காற்று வீசுவதைப் போன்று சென்று மாலையில் அடைந்து
சிலவே உள்ள வரிசையான வெள்ளிய வளைகளை அணிந்த இளையவளின்
பலவகையில் சிறப்புப்பெற்ற மார்பைத் தழுவி மகிழ்வோம்!
					மேல்
# பூதம்புல்லன்
# 190 முல்லை
நெறிப்புடைய கரிய கூந்தலோடு, பெரிய தோள்களையும் தடவிக்கொடுத்து,
செறிந்த வளைகள் நெகிழ, பொருள் செய்வதற்கு அகன்றோர்
அறிவாரா வாழ்க தோழியே! புள்ளிகளையும், கோடுகளையும் கொண்ட
கடுங்கோபமுள்ள பாம்பின் பசிய தலைகள் துண்டுதுண்டாக
வெள்ளை இடி முழங்கும் நள்ளிரவின் நடுச்சாமத்தில்
நல்ல காளை இயங்குதோறும் ஒலிக்கும்
பல பசுக்கள் கொண்ட தொழுவத்திலுள்ள ஒரு மணியின் குரலை-
					மேல்

# 191 முல்லை
இன்னும் சிறிது நாளில் பார்ப்பாய், அவ்வாறு செய்வதை; அவர் செயலை என்னவேன்று சொல்வேன்?
வலிய கிளையில் இருந்த பெரிய கூட்டமான பறவையினம்
தாம் சேர்ந்திருப்பதால் பிரிந்தவரைப் பற்றி நினைக்காமல்
இனிய குரலில் அழைத்து ஒலிக்க, அதனைக் கேட்டும் நீங்கிய
வேற்றுமனிதர் இங்கே வந்தால், மலர்மொட்டுகளால்
பொங்கிவரும் கூந்தலையும் புனையவேண்டாம்;
எம்மையும் தொடவேண்டாம் என்று சொல்வோம் - நிச்சயமாக!
					மேல்
# 192 பாலை # கச்சிப்பேட்டு நன்னாகையார்
அவர் இங்கு வருவார், வருந்தவேண்டாம் என்று சொல்வதால்
இனிமேல் அழாமலிருப்பேனோ? என் நோயினால் தானும் நொந்து என்னுடன் உறைபவளே!
மின்னுகின்ற இனிய இறகுகளையுடைய கரிய குயில், பொன்னின்
உரைத்த துகள் திகழ்கின்ற உரைகல்லைப் போன்று, மாமரத்தின் கிளையில்
நறிய பூந்தாதைக் கோதுகின்ற காலத்தும்
கொத்தான வெறுங்கூந்தலைத் தடவிக்கொண்டிருக்கின்றேனே!
					மேல்
# அரிசில் கிழார்
# 193 முல்லை
கள்ளை எடுத்துவைத்த நீல நிறக்குப்பியைப் போல்
சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்
பல மாதங்களுக்கு முன்னர் ஒரு நீண்ட வெள்ளைநிலாவொளியில்
தழுவினான் என் தோளை
இன்றைக்கும் அவன் குடுமியிற்சூடியிருந்த முல்லைமொட்டுகளின் மணம் நிற்கிறது.
					மேல்
# கோவர்த்தனார்
# 194 முல்லை
(இந்த நெஞ்சின் நிலையை)என்னவென்று சொல்வது தோழி? மின்னல்வர
முகில்கள் எழுந்து ஒலிக்கும், அதுமட்டுமோ? அதற்கு எதிராக
காட்டு மயில்கள் விரைவாக ஏக்கத்துடன் கூவும்
ஒன்றற்கொன்று தொடர்பிலாது கலந்த இந்த இரண்டு ஒலிகளாலும் என்
பேதை நெஞ்சம் பெரிய அளவில் கலக்கமடையும்.
					மேல்
# தேரதரன்
# 195 நெய்தல்
ஞாயிறு வெப்பம் தணிந்து குன்றினைச் சேர
நினைவுகூரும் துன்பத்தை மேற்கொண்டு தோன்றிய துன்பந்தரும் மாலையில்
எங்கு இருக்கின்றாரோ? வேண்டிய செயலை முடிக்கச் சென்றவர்,
மாலை துன்பத்தைத் தருவது, அதற்கு அவள் வருந்துவாளே என்று நினைக்கமாட்டார், அந்தோ!
தடவிக்கொடுத்து அசையும் காற்று மேனியிற் பாய்ந்து பரவ
அரக்கால் செய்யப்பட்ட பாவை போல, என்
மேனி மாறுபடுவதை அறியாதவர்.
					மேல்
# மிளை கந்தன்
# 196 மருதம்
வேப்பமரத்தின் பசிய காயை என் தோழி தரும்போது
இனிப்பான நல்ல வெல்லக்கட்டி என்று சொன்னீர்; இப்பொழுதோ,
பாரியின் பறம்பு மலையில் குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரை
தை மாதத்துக் குளிர்போன்று குளிரவைத்ததாகக் கொடுத்தாலும்
மிகவும் உவர்ப்பாய் இருக்கிறதென்று கூறுகின்றீர்;
தலைவனே! அப்படி ஆகிவிட்டது உம் அன்பின் தன்மை.
					மேல்
# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 197 நெய்தல்
என்ன செய்வோம் தோழி! துன்பம் தங்கியிருக்கும்படி
நீரைக் கொண்ட, மின்னல், இடி ஆகியவை சேர்ந்த கார்காலத்தைக் கொண்ட கிளைத்துவிழும் மழையையுடைய
வாடைக் காற்றின் குளிரோடு மனம் குழம்பி மயங்கிய
குளிர்காலம் என்னும் உருவில் உள்ள கூற்றுவன்
காதலரைப் பிரிந்திருக்கும் என்னை நோக்கி வருகிறது -
					மேல்
# கபிலர்
# 198 குறிஞ்சி
யா மரத்தை வெட்டிய மரங்களைச் சுட்ட வழியில்
கரும்பைப் போன்ற அடியைக் கொண்ட பசிய தாளைக் கொண்ட செந்தினையின்
இளமையான பெண்யானையின் அகன்றுருண்ட கையைப்போன்றனவாகி, பால் நிரம்பி
கரியை எடுக்கும் குறடுபோல வளைந்த, செறிந்த குலைகளையுடைய பசிய கதிரில்
வீழ்கின்ற கிளிகளை ஓட்டுவதற்கு அங்குச் செல்வோம்; கொல்லும் போர்க்குரிய
வேல் திகழும் பெரிய கையையுடைய மலையனின் காட்டிலுள்ள
சந்தனம் கமழும் மார்பையுடையவனே!
வரவேண்டாம், அங்கு வருவாள் எம் அன்னை.
					மேல்
# பரணர்
# 199 குறிஞ்சி
தலைவியைப் பெறுவது கூடாததாயினும், நடக்கப்போவது ஒன்று
உண்டு - உறுதியாக; வாழ்க நீ நெஞ்சே! திண்ணிய தேரினையும்
வள்ளண்மைமையும் மிக்க ஓரியின் காட்டினைத் தொட்டுக்கொண்டு
வீசுகின்ற காற்றுப் போல மணங்கழும் நெறிப்புள்ள கூந்தலும்,
கருமையான, நெய்ப்பினைக் கொண்ட கொண்டைமுடியையும் கொண்ட மாநிறமுள்ள தலைவியிடம்
இன்றிருப்பதைப் போன்ற காதலையுடைய இந்தக் காம நோய்
அழிந்துபோகும் வழி என்று ஒன்று இல்லாமல்
மறுமை உலகத்திலும் நிலைபெற்றிருக்கும். 
					மேல்
# ஔவையார் 
# 200 நெய்தல்
மழைபெய்த குன்றத்தில் மலர் மணக்கின்ற குளிர்ந்த கலங்கல்நீரின்
மேற்பரப்பில் பரவி வீசும் காற்று அந்த மணத்துடன்
விழுகின்றது வெள்ளம்; வந்திலர் தோழி!
மறந்துவிட்டார் நிச்சயமாக; மறக்கவில்லை நாம்;
கார்ப்பருவத்து மழை மாலையில் பெரிய மலையில்
இனிய ஓசையுடைய இடியுடன் முழங்கும்
முன்னரேயே வருவேன் என்ற பாதுகாப்பைச் செய்துவிட்டுப் போனவர் - 
					மேல்
# 201 குறிஞ்சி
அமிழ்தம் உண்பாளாக, நமக்கு அடுத்தவீட்டுக்காரி;
பாலைக் கலந்தது போன்ற தேமாங்கனியை உண்டு
நீலநிறமுள்ள மெல்லிய சிறகையும், வளைந்த நகங்களையும் கொண்ட வௌவால்
நெல்லியின் புளித்த காய்களை உண்டு, அருகிலிருக்கும்
முள் இல்லாத அழகிய பருத்த மூங்கிலில் தொங்கும்
மூங்கிழ் கழைகள் உயர்ந்து நிற்கும் சோலையுள்ள
மலையைச் சேர்ந்த நாட்டுக்காரன் (மணமுடிக்க)வருவான் என்று சொன்னதற்காக-
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 202 மருதம்
நோகும் என் நெஞ்சம்; நோகும் என் நெஞ்சம்;
புஞ்சை நிலத்தில் அடர்ந்து படர்ந்த சிறிய இலையைக் கொண்ட நெருஞ்சியின்
கண்ணுக்கு இனிய புதுமலர் பின்னர் முள்ளினைத் தருவதைப் போல்
இனியவற்றைச் செய்த நம் காதலர்
இப்பொழுது இன்னதனவற்றையும் செய்வதால், நோகும் என் நெஞ்சம்.
					மேல்
# நெடும்பல்லியத்தன்
# 203 மருதம்
மலைகள் இடையிட்டுக்கிடக்கும் தொலைவிலுள்ள நாட்டினர் அல்லர்;
மரங்களின் உச்சி காணப்படாத ஊர்க்காரரும் அல்லர்;
கண்ணில் காணும்படியான அருகிலுள்ள இடத்தில் இருந்தும்
கடவுளைச் சேர்ந்த துறவிகள் போல
ஒதுங்கியவனாய் வாழும் என் தலைவனுக்கு
இரங்கும் தன்மையுடையவளாய் இருந்தேன் முன்பு ஒரு காலத்தில் -
					மேல்
# மிளை பெரும் கந்தன்
# 204 குறிஞ்சி
காமம், காமம் என்று கூறுகிறார்கள், காமம்
தீண்டிவருத்தும் தெய்வமோ, தீராத நோயோ அல்ல; எண்ணிப்பார்த்தால்
பழைய மேட்டு நிலத்தில் செழித்துவளர்ந்த முற்றாத இளம் புல்லைப்
பல்லில்லாத கிழட்டுப்பசு நாவினால் நக்கிப்பார்ப்பதைப் போன்று
புதுமையுடையதே காமம், பெரிய தோளையுடைய தலைவனே!# மிளை பெரும் கந்தன்
					மேல்
# உலோச்சன்
# 205 நெய்தல்
மின்னுதலைச் செய்யும் கூட்டமான மழைபெய்யக்கூடிய மேகங்கள் தொங்கிநிற்க,
வானத்தில் திரியும் அன்னப்பறவை சிறகுகளை உயர்த்தி எழுவதைப்போல்
பொன் தகட்டால் பொலிந்த வெள்ளைத் தேரில் ஏறி
கலங்கிய கடலின் நீர்த்துளிகள் சக்கரங்களை நனைக்க,
இப்பொழுதுதான் பிரிந்து சென்றான், குவித்த மணலையுடை கடற்கரைத் தலைவன்;
(இவ்வளவு விரைவாக) எப்படி அறிந்துகொண்டதோ? தோழி! என்
தேன்மணம் கமழும் அழகிய நெற்றியில் படர்ந்தது (பிரிவினாலாகிய) பசலை - 
					மேல்
# ஐயூர் முடவன்
# 206 குறிஞ்சி
அமிழ்தத்தைப் போன்றன அழகிய இனிய சொற்கள்;
அப்படிப்பட்டன அந்த இனியவளின் குணமும்; இத்தகைய
இன்னாதனவாகிய பொறுத்தற்கரிய துன்பத்தைச் செய்யுமாயின்,
சேர்ந்து வாழ்வதற்கு அரியது இந்தக் காமம்;
காமப்படுவதைத் தவிருங்கள், அறிவுடையோரே!
					மேல்
# உறையன்
# 207 பாலை
சொல்லிவிட்டுச் சென்றால் செல்வது முடியாததாகும் என்று கூறி,
பாலைநிலத்திலுள்ள ஓமை மரத்தின் அழகிய கிளையில் இருந்த
தன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிந்த அழைப்பொலி
அவ்வழியில் செல்லும் மக்களுக்கு வழித்துணையாகும்
பாறைகளின் அருகே உள்ளது நீண்ட நாட்களாய் புழக்கத்திலிருக்கும் சிறிய வழியில்
தம் நல்ல கால்தடம் படுமாறு விரைந்து
சென்றார் என்று கேட்ட நமக்கு வேண்டியவர் பலரே!
					மேல்
# கபிலர்
# 208 குறிஞ்சி
(தலைவனோடு) ஒத்துப்போகமாட்டேன் அல்லேன்; ஒத்துப்போவேன்; குன்றினில்
சண்டையிடும் ஆண்யானைகள் மிதித்து நெரிந்துபோன அடிமரத்தையுடைய வேங்கைமரம்
குறவரின் மகளிர் தம் கூந்தலில் வைத்துக்கொள்வதற்காக,
நின்றுகொண்டே கொய்யும்படி மலரும் நாட்டைச் சேர்ந்தவனோடு
ஒத்துப்போகமாட்டேன், தோழி! (வேறு மணம் என்ற) அந்த ஒன்றனுக்குமட்டும்.
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 209 பாலை
பாலைநிலைத்து வழியில் உள்ள நெல்லியின் அழகிய பசிய காய்கள்
வீரமிக்க புலிக்குட்டி இரைகொள்ளுமிடத்தை மறைக்கும்
கடப்பதற்கு அரிய குன்றத்தைக் கடந்த நாம்
சிறுநடையாளே! பறவையின் நிமித்தத்தை எண்ணிப்பார்க்கவில்லை; வழியின் தொடக்கத்திலிருக்கும்
காட்டில் தழைத்த வளைந்த கிளைகளையுடைய வெட்சியின்
முறுக்கவிழும் பல அரும்புகள் மணங்கமழும்
கரிய, தழைத்த கூந்தலையுடைய தலைவியின் காதலையே (எண்ணியிருந்தோம்)-
					மேல்
# காக்கை பாடினியார் நச்செள்ளையார்
# 210 முல்லை
திண்ணிய தேரையுடைய நள்ளியின் புஞ்செய்க்காட்டிலுள்ள இடையர்களின்
கூட்டமான பசுக்கள் கொடுத்த நெய்யோடு, தொண்டி
முழுவதும் ஒருசேர விளைந்த வெண்ணெல்லால் ஆக்கிய சூடான	சோற்றை
ஏழு பாத்திரங்களில் வைத்து ஏந்திக் கொடுத்தாலும், அது சிறிதாகும் என் தோழியே!
உனது பெரிய தோள்களை நெகிழ்த்த துன்பம் தீர
விருந்தினர் வரும்படி கரைந்த காக்கைக்கு இடும் பலி - 
					மேல்
# காவன் முல்லை பூதனார்
# 211 பாலை
அழகிய, சிலவான முடிந்துவிட்ட கூந்தலையுடைய உனது ஆய்ந்தணிந்த வளைகள் நெகிழும்படி
வருந்தியும் நமக்கு அருளைச் செய்யாமல் பிரிந்துசென்றவரின் பொருட்டாக அஞ்சுதலைத்
தவிர்ந்தோம், வாழ்க தோழியே!, மீதமின்றி முற்றிலுமாகத்
தீய்ந்துபோன மராமரத்தின் ஓங்கிய வெம்பிப்போன கிளையில்
வேனிற்காலத்து ஒற்றைப் பூங்கொத்தினைத் தேனுடன் ஊதி
வயிறு நிரம்பாமல் திரும்பிச்செல்லும் தும்பியுடன்,
நீர் இல்லாத இடங்களையுமுடைய பாலைநிலத்துவழியில் சென்றோர் -
					மேல்
# நெய்தல் கார்க்கியன்
# 212 நெய்தல்
தலைவன் வந்த கொடுஞ்சியையுடைய நீண்ட தேர்
தெளிந்த நீரையுடைய கடலின் அடைந்தகரையில் தெளிந்த ஓசையுள்ள மணிகள் ஒலிக்க,
எம்மைக் காண வந்து, நாம் நாணியதால் (காணாமலேயே) திரும்பிச்செல்லும்,
இரங்கத்தக்கது (அவன் கொண்ட) காமம்; 
அழியக்கடவது நிச்சயமாக; வருந்துகிறேன் நான்.
					மேல்
# கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்
# 213 பாலை
(உன்பால்) விருப்பம் மிக உடையவர் தோழி! விரைவாக
கிளைத்த கொம்பையுடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான் காலால் உதைத்து
பசிநோயைத் தீர்த்துக்கொள்ள வளைத்த பருத்த பெரிய மரப்பட்டையைத்
தன் குட்டி உண்டபின் ஒழிந்ததை உண்டு குற்றமற்ற நெஞ்சத்தோடு
துள்ளி நடக்கும் இயல்பையுடைய தன் குட்டிக்கு நிழல் ஆகி
நின்று வெயிலைக் கழிக்கும் என்பர் நம்மோடு (கொள்ளும்)
இனிய துயிலையும் வெறுத்துச் சென்ற அவர் போன வழி - 
					மேல்
# கூடலுலுர் கிழார்
# 214 குறிஞ்சி
மரங்களை வெட்டிய குறவன், அந்த நிலத்தை உழுது விதைத்த
ஒளிரும் கதிரையுடைய தினையைக் காக்கின்ற, முதுகில் விழும்
அழகிய சிலவான கூந்தலையும் மெலிந்த சாயலையும் கொண்ட கொடிச்சியின்
திருத்தமான அணிகலனையுடைய அல்குலுக்குப் பெரிய தழையுடையை அளித்து,
அசோகின் பெருத்த அடிமரம் இலையற்று இருக்க, அதற்கு அடுத்து(ள்ள கடம்பமரத்துக்கு)
கழலை மாலை சூட்டி (முருகனுக்கு வெறியெடுத்து)
மயக்கமுற்றது இந்த ஆரவாரத்தையுடைய ஊர்.
					மேல்
# மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
# 215 பாலை
உன் துன்பமும் உன்னைவிட்டு மெல்லமெல்ல நீங்கும், ஒளிவிடும்
ஞாயிறும் பெரிய மலையில் சென்று மறையும்; இன்று அவர்
வருவார் அல்லவா தோழி? நீர் இல்லாத
வறிய குளத்தைத் துழாவிய ஒளிரும் கொம்புள்ள யானை
சிறிய மலையின் பக்கத்தில் தான் விரும்பிய துணையைத் தழுவி
வளைந்த வரிகளையுஇடைய பெரிய புலியினின்றும் காக்கும்
நெடிய மலையின் பக்கத்தேயுள்ள பாலைநிலத்தைக் கடந்து சென்றவர்-
					மேல்
# கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்
# 216 பாலை
தலைவர், கேடில்லாத சிறந்த பொருளைக் கொணருவதற்காக, பசிய இலைகளையுடைய
வாடாத வள்ளிக்கொடி படர்ந்த அழகிய காட்டைக் கடந்துசென்றார்;
நானோ, தொகுதியான ஒளியையுடைய வளையல்கள் நெகிழ்ந்துவீழ, ஒவ்வொருநாளும்
படுத்தலுக்குரிய கட்டிலில் வருத்தமுற்று இருக்கிறேன்;
அப்படிப்பட்டவள் இரங்கத்தக்கவள் என்று எண்ணாமல், பெரிய மழை
இன்னும் பெய்கிறது, இடிகளை முழக்கி
மின்னவும் செய்கிறது தோழி, என் இனிய உயிரைக் கொள்வதற்காக-
					மேல்
# தங்கால் முடக்கொல்லனார்
# 217 குறிஞ்சி
தினைக்காக வரும் கிளிகளை ஓட்டவேண்டியிருப்பின் பகலும் சரியாக அமையும்;
இரவில் நீ வந்தால் வழியிலேற்படும் துன்பங்களுக்காக அஞ்சுகிறேன்;இ
என்ன செய்யலாம் என் துன்பந்தரும் காமநோய்க்கு என்று
அங்கு நான் கூறிய அதற்கு, வேறொன்றை நினைத்து
உயர்ந்த மலைநாட்டுத் தலைவன் பெருமூச்சுவிட்டான்;
மிகவும் நுட்பமானது காமநோய், நான்
(அச்செயல்)மிக்க அறிவுடைமையும், பழியும் ஆவது என்று கூறினேன்.
					மேல்
# கொற்றன்
# 218 பாலை
பிளவுகளையும், குகைகளையும் உள்ள மலையின் சரிவிலுள்ள வலிமை பொருந்திய சூலையுடையவளுக்கு
பலிக்கடன் நேர்தலையும் செய்யோம்; காப்புநூலும் கட்டிக்கொள்ளோம்;
பறவை நிமித்தமும் பாரோம்; விரிச்சிகேட்கவும் நிற்கமாட்டோம்;
இவற்றை நினைத்துப்பார்க்கவும்மாட்டோம்; தோழி!
உயிர்க்கு உயிர் போன்றவர் ஆதலால், தம்மை இன்றி
இமைப்பொழுதும் பிரிந்திருக்காத நம்மை
மறந்து அங்கு இருப்பதற்கு ஆற்றலுள்ளோருக்காக - 
					மேல்
# வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்
# 219 நெய்தல்
பசலைநோய் என் மேனியில் இருக்கிறது; விருப்பமோ
தலைவருடைய அன்பில்லாத நெஞ்சமெனும் அடையமுடியாத இடத்தில் உள்ளது.
என் பெண்மை அடக்கமோ என்னைவிட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டது; என் அறிவும்
தலைவர் இருக்குமிடம் செல்வோம், எழுக என்று, இங்கு
நடக்காததைச் சொல்லிக்கொண்டு என்னுடன் இருக்கும்; முள்ளையுடைய இலை பொருந்திய
முடங்கிய நிலையையுடைய தாழைகளையுடைய நெய்தல் தலைவருக்கு
இதுதான் நேரம், தோழி! எப்படி இருக்கிறீர் என்று கேட்க-
					மேல்
# ஒக்கூர் மாசாத்தியார்
# 220 முல்லை
முன்பு பெய்த மழையால் தழைத்த புதிய நிலத்து வரகின்
ஆண்மான் மேய்ந்ததால் குறைந்த தலையையுடைய பாவையாகிய
கதிர் அரிந்த தாள் சேர்ந்த பக்கத்தில் பூத்த முல்லைக்கொடியின்
காட்டுப்பூனை சிரித்ததைப் போன்ற பசிய பூவின் மெல்லிய பிணிப்பையுடைய
குறிய அரும்புகள் மலர்ந்து நின்ற மணமுள்ள மலர்களையுடைய முல்லைநிலத்தில்
வண்டுகள் சுற்றித்திரியும் மாலையிலும் வாரார்;
கண்டாயா தோழி! பொருள்தேட நம்மைப் பிரிந்துசென்றோர் -
					மேல்
# உறையூர் முதுகொற்றன்
# 221 முல்லை
தலைவரோ வரவில்லை; முல்லையும் பூத்தன;
பறியோலையைக் கையிலுடைய இடையர்கள் குட்டிகளையுடைய மந்தையிடத்துத் தங்கி,
பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உணவோடு திரும்பிச்செல்லும்
ஆடுகளையுடைய இடையனது தலையுச்சியில்
சூடியிருப்பன எல்லாம் சிறிய பசிய மொட்டுக்களே!
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 222 குறிஞ்சி
(தோழியானவள்)தெப்பத்தின் தலைப்பைப் பிடித்தால், தானும் அத் தலைப்பைப் பிடிப்பாள்;
தெப்பத்தின் கடைப்பகுதியைப் பிடித்தால் தானும் அக் கடைப்பகுதியைப் பிடிப்பாள்;
தெப்பதைக் கைவிட்டு நீரோடு சென்றால்,
அங்கும் செல்வாள் போலவே இருந்தாள்; சிறப்புவாய்ந்த
மழைக்காலத்துப் பிச்சியின் நீரொழுகும் கொழுத்த அரும்பின்
சிவந்த முதுகைப் போன்ற செழித்த கடையையும் குளிர்ச்சியையும் உடைய கண்களைக் கொண்ட
மழைத்துளி தன்னிடத்தே பெய்யப்பெற்ற மாந்தளிரைப் போன்றவள் -
					மேல்
# மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகன்
# 223 குறிஞ்சி
நமது பெரிய ஊரினர் கொண்ட ஆரவாரம் மிக்க திருவிழாவுக்குப்
போவோம், போவோம் என்கிறாய்; முன்பு இங்கே
நல்லோர்கள் கூறிய பல நல்லசொற்கள் இருந்தன;
கிளிகளை விரட்டும் தழலும், தட்டையும் ஆகிவற்றோடே தழையும் தந்து இவை
உனக்குப் பொருந்துவன என்று பொய்யானவற்றைக் கூறி
அன்னை பாதுகாத்த ஆய்வதற்குரிய பெண்மை நலத்தை
தலைவன் கவர்ந்துகொண்டான், நாம் இப்படியானோம் இப்பொழுது.
					மேல்
# கூவன் மைந்தன்
# 224 பாலை
பிரிந்துசெல்லும் வழிகளில் யாமரங்களைக் கொண்ட அவலத்தைக் கொண்ட நீண்ட வெளியில்
சென்ற தலைவனின் கொடுமையை எண்ணித் தூங்காத
வருத்தத்தினும், மிகுந்த வருத்தமாகிறது; கிணற்றில் விழுந்த
கபிலைநிறப் பசு படுகின்ற துயரத்தை இரவில் கண்ட
ஊமை மகனைப் போல
துயரத்தைப் பொறுக்கமுடியவில்லை, தோழியின் வருத்தத்தைக் கண்டு -
					மேல்
# கபிலர்
# 225 குறிஞ்சி
கன்றானது, பாலுள்ள தன் மடியைக் குடிக்க, முற்றத்தில்
காயவைத்த தினையைப் பெண்யானை உண்ணும் பெரும் பாறைகளைக் கொண்ட நாட்டினனே!
தனக்குக் கேடுவந்தபோது தான் பெற்ற உதவியை, அரசுக்கட்டிலின்
சிறப்பைப் பெற்றபின் மறந்துபோன மன்னனைப் போல
யாம் செய்த நன்றியை மறந்து பிரியாமலிருந்தால், மெல்லிய சிறப்பையுடைய
ஆரவாரிக்கும் மயிலின் தோகையைப் போன்ற இவளின்
தழைத்த மென்மையான கூந்தல் உரியவாகும் உனக்கு - 
					மேல்
# மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்
# 226 நெய்தல்
பூவினை ஒத்திருந்தன கண்கள்; மூங்கிலோ என
ஈடில்லா அழகை எய்தியிருந்தன தோள்கள்; இளம்பிறை என்னும்படி
அறிவினை மயக்கியது நெற்றி; மிகவும்
நல்லவையாக இருந்தன - வாழ்க தோழியே!, நாள்தோறும்
மோதிச்செல்லும் அலைகள் தாக்கிய தாழையின் வெண்மையான பூ
கொக்கினைப் போல் மலரும் பெரிய நீர்த்துறையையுடைய
அகன்ற நீர்ப்பரப்பின் தலைவனோடு நாம் நகைத்து மகிழாததற்கு முன்பு - 
					மேல்
# ஓத ஞானி
# 227 நெய்தல்
புதிய பூணைப் பதித்ததைப் போன்ற பொன் விளிம்பினையுடைய சக்கரங்களின்
வாளைப் போன்ற முகம் துண்டாக்கியதால் கொழுத்த இதழ்கள் குறைப்பட்டு
மூளியாகிப்போன நெய்தலை உடையது, இங்கே
தேரில்வந்தவன் சென்ற கடற்கரையில் - 
					மேல்
# செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்
# 228 நெய்தல்
விழுதுகள் தொங்கும் தாழையின் மலரும்நிலையிலுள்ள செழுமையான மொட்டு
கொக்குகள் தம் சிறகைக் கோதும்போது விரியும் இறகுகள் போன்று மடல் அவிழும்
கடற்கரையை ஒட்டிய சிறுகுடியின் முற்றத்தில்
அலைகள் வந்து மோதிச் செல்லும் என்பார்கள்; நம்மைப் பிரிந்து
மிகவும் தொலைவிலுள்ள நாட்டில் இருந்தாலும்
நம் நெஞ்சிற்கு மிகவும் அருகில் உள்ளவரின் குளிர்ந்த கடலையுடைய இந்த இடத்தில் -
					மேல்
# மோதாசனார்
# 229 பாலை
இவன் இவளின் பின்னிய கூந்தலைப் பற்றி இழுக்கவும், இவள் இவனது
சீவப்படாத தலையின் மயிரைப் பற்றி வளைத்துவிட்டு ஓடவும்,
அன்புமிக்க செவிலித்தாயர் விலக்கிவிடவும் விலகாது
காரணமின்றி சிறிய சண்டையினைச் செய்வர்;
நல்லது செய்திருக்கின்றாய் ஊழ்வினையே! மென்மையான இயல்புகொண்ட
இரட்டை மலர்மாலைகள் போன்று, இவர்களின்
மணம்புரிந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் நிலையைக் காட்டியதால் - 
					மேல்
# அறிவுடை நம்பி
# 230 நெய்தல்
கேட்பாயாக தோழியே! வாழ்க! நம் தலைவன்
தானே அப்படிச் செய்யத் துணிபவன் அல்லன்: நான் என்
அறிவின்மையால் அந்தப் பெருந்தகையைப் பொருந்தி
அவன் வருந்தும்படி ஒன்று செய்துவிட்டேன் என நினைக்கிறேன்;
வலிமையுள்ள சுறாமீன்கள் திரிகின்ற நீரையுடைய வழியாக
மிகச் சில நாட்களாக வருவதை அறியாமற்போய்விட்டான்.
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 231 மருதம்
ஒரே ஊரில் இருந்தாலும் நம் தெருப்பக்கம் வாரார்;
அப்படியே நம் தெருப்பக்கம் வந்தாலும் நம்மை ஆரத்தழுவுவாரில்லை;
யாரோ ஒருவருடைய சுடுகாட்டைக் கண்டு செல்வார் போல
கண்டும் காணாததுபோலச் செல்கிறார். எனது நாணத்தைக் கொன்று 
நல்லறிவை இழந்த என் காமம்,
வில்லினின்றும் வெளிப்பட்ட அம்பினைப்போல் சென்று நெடுந்தொலைவு விழுந்தது.
					மேல்
# ஊண்பித்தை
# 232 பாலை
நம்மை நினைத்தாரோ? தோழி! நினைத்தும்
வாய்த்தல் கூடிவராததால் வராமலிருக்கிறாரோ?
மரல்கொடியை உணவாக அருந்திய பெரிய கழுத்தைக் கொண்ட இரலை மான்
உரலைப் போன்ற காலைக் கொண்ட யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாமரத்தின் வரிவரியான நிழலில் துயிலும்
பெரிய இருண்ட சோலைகளையுடைய மலைகளைக் கடந்து சென்றவர் -
					மேல்
# பேயன்
# 233 முல்லை
கவலைக் கிழங்கைத் தோண்டிய அகன்ற வாயையுள்ள சிறிய குழி,
கொன்றையின் ஒளிரும் பூக்கள் பரவியதால், செல்வரின்
பொன்னை இட்டுவைக்கும் பேழையின் மூடியைத் திறந்துவைத்ததைப் போன்று
கார்காலத்தை எதிர்கொள்ளும் முல்லைநிலத்தில் உள்ளது - பெரியவர்களுக்கு
நீருடன் சொரிந்து மிஞ்சிய பொருளையும், எல்லாருக்கும்
வரையறுத்துக்கொள்ளுதலை அறியாத சோற்றினையும் உடைய
வரிசைப்பட்ட திரண்ட குறிய வளையலையுடையவளின் தந்தையின் ஊர் - 
					மேல்
# மிளைப்பெரும் கந்தன்
# 234 முல்லை
ஞாயிறு சென்றுமறைந்த வானம் சிவந்து கிடக்கத் துன்பமுற்று
பகற்பொழுது அற்றுப்போகும் பொழுதினை முல்லை மலரும்
மாலைப்பொழுது என்று சொல்வர் அறிமயங்கியோர்;
கொண்டையையுடைய சேவல் நெடிய நகரில் கூவிஅறிவிக்கும்
பெரியதாகப் புலரும் விடியற்காலமும் மாலைநேரமே;
பகலெல்லாம் மாலைநேரமே, துணை இல்லாதவர்களுக்கு -
					மேல்
# மாயேண்டன்
# 235 பாலை
தலைவியை வருத்தாமல் காப்பாயாக! வாழ்க நீ வாடையே! பாம்பின்
தொங்குகின்ற சட்டையைப் போன்றிருக்கும் தூய வெள்ளிய அருவி ஓடும்
மலையின் உச்சிக்கு அருகிலுள்ளது - நெல்லிக்காயை
மரைக் கூட்டங்கள் உண்ணும் முற்றத்தையுடைய
புல் வேய்ந்த குடிசைகளையுடைய நல்லவளின் ஊர் - 
					மேல்
# நரிவெரூஉத்தலையார்
# 236 நெய்தல்
எம்மை விட்டுவிட்டுப் பிரியும் நாள் வருக! அதனை நீ
மிகவும் வேண்டிப் பெற்றிருந்தால், தந்துவிட்டுச் செல் -
மலையைப் போல குவித்திருக்கும் அடைத்தகரைமீது
நின்றிருக்கும் புன்னையின் நிலத்தைத்தோய்ந்த தாழ்ந்த கிளையில்
புதிய நாரை தங்கும்
குளிர்ந்த கடற்பகுதியையுடைய தலைவனே! நீ நுகர்ந்த எனது பெண்மைநலனை -
					மேல்
# அள்ளூர் நன்முல்லை
# 237 பாலை
அச்சம் என்பதை அறியாது, தான் விரும்பும் தலைவியைத் தழுவுவதற்காக,
நெஞ்சு நம்மைவிட்டுப் பிரிந்துசென்றது; ஆனாலும், எஞ்சி நின்ற
கைகளால் கட்டிக்கொள்ளுதல் நெகிழ்ந்தால் அதனால் என்ன பயன்? மிகவும்
தொலைவானது இருவருக்குக்கும் இடையேயுள்ள தூரம்,
பெரிய கடல் அலையைப் போன்று முழங்கி, வலப்பக்கமாய் எழுந்து,
கொலைசெய்யும் புலி திரியும் சோலை
எத்தனை என்று எண்ணுவேன், தலைவியை முயங்குவதற்கு இடையிலே உள்ள அந்தத் தடைகள்-
					மேல்
# குன்றியன்
# 238 மருதம்
பச்சை அவலை இடித்த கரிய வைரம்பாய்ந்த உலக்கைகளை
ஆராய்கின்ற கழனியின் வரப்பில் சாய்த்துக் கிடத்தி
ஒளிரும் வளையலை அணிந்த மகளிர் மணலில் விளையாடும்
தொண்டியைப் போன்ற என் பெண்மைநலத்தைத் தந்துவிட்டு
எடுத்துக்கொண்டு செல்க, தலைவனே! உனது சூளுரையை - 
					மேல்
# ஆசிரியன் பெருங்கண்ணன்
# 239 குறிஞ்சி
வளையல்கள் கழன்றி வீழ்ந்தன, தோள்கள் மெலிந்துபோய்விட்டன,
இனி விட்டுவிடுவதற்கான நாணமும் என்னிடம் உண்டோ? தோழி! பிளவுகளையும் குகைகளையும் கொண்ட
மலை முழுதும் மணக்கும் அசைகின்ற குலைகளையுடைய காந்தளின்கண்
மணமுள்ள பூந்தாதினை ஊதும் குறிய சிறகுகளைக் கொண்ட தும்பி
பாம்பு உமிழ்ந்த மணியைப் போன்று தோன்றும்,
மூங்கில் வேலியை உடைய மலைகளையுடைய நம் தலைவனுக்காக -
					மேல்
# கொல்லின் அழிசி
# 240 முல்லை
குளிர்ந்த புதரில் படர்ந்த பச்சைக் கொடியையுடைய அவரையின்
கிளி வாயைப் போன்று ஒளிவிடும் பலவாகிய மலர்கள்
காட்டுப்பூனையின் பல் போன்ற தோற்றமுடைய முல்லைப்பூவுடன் கலக்கும்படியாக
வாடைக்காற்று வந்ததன் மேலும், காமநோய் என்னை வருத்தும்படி
காண்பாயாக! வாழ்க தோழியே! தெளிந்த அலைகளையுடைய
கடலில் மூழ்குகின்ற மரக்கலம் போலக் காணப்பட்டு
மாலைப் பொழுதில் மறையும், அவரின் மணிகளையுடைய நெடும் குன்றம் -
					மேல்
# கபிலர்
# 241 குறிஞ்சி
நாம் நமக்குற்ற காமநோயைத் தாங்கிக்கொண்டிருக்கவும், தாம் தமது
நட்புரிமையினால் அழுதன தோழி!
கன்றுகளை நடத்திச் செல்லும் புல்லிய தலையையுடைய சிறுவர்கள்
ஊர்மன்றத்திலுள்ள வேங்கைமரத்தின் மலர்ந்த நிலை நோக்கி
மரத்தில் ஏறாமல் எழுப்பிய இன்ப ஆரவாரம்
விண்ணைத் தோய்ந்திருக்கும் மலையின் பிளவுகளில் ஒலிக்கும்
குன்றுகளையுடைய நாட்டினனைக் கண்ட எமது கண்களே-
					மேல்
# குழற்றத்தன்
# 242 முல்லை
காட்டுக்கோழியின் கவர்த்த குரலையுடைய சேவல்
ஒளிரும் தன் பிடரியில் குளிர்ந்த நீர்த்துளிகள் விழும்படி
புதரில் நீர் ஒழுகும் பூக்கள் மணக்கும் முல்லைநிலத்துச்
சிறிய ஊரிலுள்ளாள் தலைவி; வேறு ஊருக்கு
வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை முன்னிட்டு ச் சென்றாலும்
அங்குத் தங்கிவருவதை அறியாது தலைவனின் தேர்.
					மேல்
# நம்பி குட்டுவன்
# 243 நெய்தல்
மானின் அடியைப் போன்ற பிளவுபட்ட இலைகளையுடைய அடப்பங்கொடியின்
மாலையில் உள்ள மணியைப் போன்ற ஒளிரும் பூவைப் பறித்துக் கிழித்து,
ஒளிரும் வளையணிந்த மகளிர் மணலில் விளையாடும்
பறவைகள் ஒலிக்கும் பெரிய கடலின் கரைக்குத் தலைவனை
இனி நினைக்கமாட்டேன் தோழி! படுத்துத் தூங்கட்டும் என் கண்கள்.
					மேல்
# கண்ணனார்
# 244 குறிஞ்சி
பலரும் தூங்கும் நள்ளென்னும் நடு இரவில்
வலிமையுடைய ஆண்யானை போல வந்து இரவில் கதவைத் திறக்க முயன்றதை
நான் கேட்காமல் இல்லை, கேட்டேன், தலைவனே!
தலைக்கொண்டை சிதையும்படியும், தோகை மெலியும்படியும்,
நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல், நாம்
வருந்திப் புரளும்தோறும் தழுவிக்கொள்கிறாள் அறப்பண்பு இல்லாத எம் அன்னை.
					மேல்
# மாலை மாறன்
# 245 நெய்தல்
கடல் பக்கத்திலுள்ள அழகிய சோலையில் தோழியர் ஆராய்ந்து பாராட்டிய என்
பெண்மை நலத்தை இழந்ததைக் காட்டிலும் மிகவும் துன்பம் தருவது,
வாள் போன்ற விளிம்பையுடைய கொழுத்த மடலையுடைய தாழை
வளைவாக வேலை நட்டத்தைப் போல் வேலியாக அமையும்
நெய்தல் நிலத்துத் தலைவனின் கொடுஞ்செயல்
பலரும் அறியும்படி பரவி வெளிப்படுமாயின் - 
					மேல்
# கபிலர்
# 246 நெய்தல்
பெரிய கடற்கரையில் உள்ளன சிறிய வெண்ணிற நீர்க்காகங்கள்,
யானையின் காதைப் போன்ற பச்சை இலைகளைக் கலக்கி,
குளிர்ந்த கழிநீரைத் துழாவி மீன்தேடும் நள்ளிரவில், தனியே ஒரு
தேர் வந்து சென்றது என்று யாரோ சொல்ல, அதுமுதல்
என்னையே கூர்ந்து கவனிக்கிறாள் அன்னை, அலைக்கழிக்கவும் செய்கிறாள், வேறு பல
பின்னலிட்ட கூந்தலையும், மின்னுகின்ற அணிகலன்களையும் உடைய மகளிர்
இளையவர்களும், மடப்பமுடையோரும் இருக்கின்றனரே!
இப்படி அலைக்கழிக்காத அன்னையரோடு! அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்!
					மேல்
# சேந்தம்பூதன்
# 247 குறிஞ்சி
அழகு மிக உடையது; இங்கு நமக்கு அண்மையதாகும்;
திறமையுடையோர் செய்யும் காரியம் அறத்தொடு பொருந்தியது ஆகும்;
சுற்றத்தையுடைய மக்களுக்குப் பற்றுக்கோடும் இது என
அப்படி நான் அறிந்துள்ளேன்; வேங்கை மரத்தின்
கெடாத மெல்லிய கிளையிலுள்ள மலர்கள் உதிரும்படி, யானை
அரிய தன் தூக்கத்தில் மூச்சுவிடும் நாட்டைச் சேர்ந்தவன்
மார்பை நமக்கு உரித்தாகப் பெற்ற குற்றமற்ற நட்பு -
					மேல்
# உலோச்சன்
# 248 நெய்தல்
திருமணத்துக்குரிய நாள் வராமற்போவது அரிது; அவனது மார்பினைப்
பெறுக என்ற நாளே அண்மையில் இருக்கிறது;
இங்கு இவ்வாறு நிகழ்கின்றது, தோழியே! கடற்கரைச் சோலையின்
அசைகின்ற அடிப்பக்கம் புதைந்துபோகும்படி மேல்காற்று கொண்டுவந்து இட்ட
அடப்பங்கொடி படர்ந்த மணற் குவியல்கள் பரவ, உயர்ந்த பனைமரம்
குட்டையாகிப் போகும் கடல் துறையையுடைய தலைவனைப்
புகழ்ந்துகூறி அன்னை அவனைப் புரிந்துகொண்டாள் - 
					மேல்
# கபிலர்
# 249 குறிஞ்சி
திரளான மயில்கள் கூவித்திரியும் மரங்கள் நெருங்கிய காட்டில்
வெள்ளிய முகத்தையுடைய கருங்குரங்குகள் குட்டிகளோடு குளிரால் நடுங்க,
ஒலிக்கின்ற மழை பொழிந்த மலைச்சரிவையுடைய அவரின் நாட்டுக்
குன்றத்தை நோக்கினேன், தோழி!
(பசப்பூர்ந்த என் நெற்றி) முன்பு இருந்ததைப் போல் ஆனதோ, உற்றுப்பார் என் நெற்றியை.
					மேல்
# நாமலார் மகன் இளங்கண்ணன்
# 250 பாலை
பருக்கைக் கற்களையுடைய பள்ளத்தில் இருக்கும் நீரைக் குடித்து, தன் பெண்மானுடன்
இரலையாகிய நல்ல மான் வழியின் தொடக்கத்தில் துள்ளிவிளையாடும்
மாலைக் காலம் வருவதற்கு முன்னரேயே காற்றின் இயல்பைக் கொண்ட
விரையும் குதிரைகளை ஓட்டுவாயாக, பாகனே! நீண்ட தன்மையுள்ள,
ஒன்றற்கொன்று எதிர்த்துநிற்கும் கயல்களைப் போன்றிருக்கும் மையுண்ட கண்களையும்
தெரிந்தெடுத்த இனிய சொற்களையுமுடைய தலைவி வருந்துவதனின்றும் தப்பிக்க - 
					மேல்
# இடைக்காடன்
# 251 முல்லை
அறிவில்லாமற்போய்விட்டன! வாழ்க! மயிலின் பெரிய கூட்டம்
கார்ப்பருவத்து மழை பெய்தது என்று எண்ணி
ஆடவும் செய்கின்றன; பிச்சியும் பூத்தன;
இது கார்ப்பருவம் அல்ல, தோழி! தீர்க உன் துன்பம்;
சென்ற மழைக்காலத்தில் மிஞ்சிப்போன பழைய நீரை,
புதிய நீரைக் கொள்ளும்பொருட்டு, உகுத்துவிட்டுப்போகும்
நம்மீது பற்று இல்லாத வானத்தின் முழங்குகின்ற குரலைக் கேட்டு - 
					மேல்
# கிடங்கில் குலபதி நக்கண்ணன்
# 252 குறிஞ்சி
நீண்ட திரண்ட தோள்களில் உள்ள வளைகளை நெகிழும்படி செய்த
கொடுமையைச் செய்தவனாகிய குன்றுகள் சேர்ந்திருக்கும் நாட்டினன்,
வரும்பொழுது இனிய முகம் வேறுபடாமல்
தெய்வத்தன்மையுடைய கற்பினால் அவனுக்கு எதிர்சென்று உபசரித்து
அறிவில்லாமற் போய்விட்டாய், நிச்சயமாக, நீ என்று உனக்குள் கேட்டுக்கொண்டு
வருந்தவேண்டாம், வாழ்க, தோழியே! சான்றோர்
புகழும் முன்னர் நாணுவர்
பழிச்சொல்லை எப்படி பொறுத்துக்கொள்வர், யோசித்துப்பார்த்தால் - 
					மேல்
# பூங்கண்ணன்
# 253 பாலை
யாரும் சொல்லக் கேட்டிருக்கமாட்டார்; தோழி! கேட்டிருந்தால்
சிறந்த பொருள் இல்லாமற்போனாலும், நெகிழ்ந்த நூலால் கட்டிய
மலர் மாலைகள் சேர்ந்த படுக்கையில், சிறந்த அழகு நீங்கிய உனது
இந்நாளின் துயர் தீரும்படி இன்னும் நீட்டித்துக்கொண்டிராமல் திரும்ப வருவார்;
ஒலிக்கின்ற மூங்கில்கள் நிமிர்ந்து நிற்கும் உயர்ந்த மலைப் பக்கத்தில்
புலி தன் உணவைச் செறித்துவைத்த புலால் நாறும் கல் குகையில்
வழிச் செல்லும் மனிதர்கள் தங்கும்
சிகரங்கள் உயர்ந்த பாறைக் குன்றுகளைக் கடந்து சென்றோர் -
					மேல்
# பார்காப்பான்
# 254 பாலை
இலை இல்லாத அழகிய கிளையில் கூட்டமாய் வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்க,
முலையின் அழகைப் போன்ற மெல்லிய மொட்டுகள் மலர்ந்த கோங்கின்
முதற் பூக்களும் வந்தன! வரவில்லையே, தோழி! - 
துயில்வதற்கு இனிய இரவில் என்னோடு கொண்ட துயிலை அவர் மறந்துவிட்டவராய்,
தாம் பழகிய மணமுள்ள கூந்தலில் படுத்திருந்ததையும் நினைத்துப்பார்க்காதவராய்,
ஈட்டுவதற்குரிய பொருளைக் கொண்டுவரும்படி விரும்பிச் சென்றோர் 
நம் ஊரை வந்தடைந்தார் என்று வருகின்ற தூது-
					மேல்
# கடுகு பெரும் தேவன்
# 255 பாலை
பொந்துகள் இல்லாத வயிரம்பாய்ந்த, பாலைவழியில் உள்ள யாமரத்தின்
பொரிந்த அடிமரத்தை முற்றவும் உருவிச் செல்லக் குத்தி
வலிமையுள்ள தன் அகன்ற கையினால் வளைத்து, வருத்தமிக்க நடையையும்,
சிறுத்த கண்களையும் கொண்ட பெருங் கூட்டத்தின் மிகுந்த பசியைத் தீர்க்கும்
அகன்ற கொம்புகளைக் கொண்ட யானையைக் கண்டனர் தோழி!
தன்னுடைய கடமையை நிறைவேற்ற எண்ணி இடங்கள்தோறும்
தாம் விரும்பும் பொருளைத் தேடுவதற்குப் போன
நாம் விரும்பும் தலைவர் சென்ற வழியில் -
					மேல்
# 256 பாலை
நீல மணியின் கதிர்களை வரிசையாய் வைத்தாற்போன்ற கரிய கொடிகள் படர்ந்த அறுகம்புல்
செறிவாகப் பின்னிக்கிடந்ததை, மெல்லிய கொம்புகள் உள்ள தன் பெண்மானோடு உண்டு
ஆண்மான் துள்ளிவிளையாடும் காடு பின்னே செல்ல,
நாம் மேற்கொண்ட தொழிலின் பயனைப் பெற்றுக்கொண்டு வருவோம்; அந்நாள் வரை
பொறுத்திருக்க முடியுமா, பொலிவுள்ள குழையை அணிந்தவளே? என்று
சொல்லி முடிக்கும் முன்னர், நிற்காமல்
நீரைத் துடைக்கத் துடைக்க வரும் அழுகையைக் கொண்டு
தேரைத் தடுத்துநிறுத்தின என் தலைவியின் கண்கள். 
					மேல்
# உறையூர் சிறுகந்தன்
# 257 குறிஞ்சி
வேரிலும், அடிமரத்திலும், கிளையிலும் ஒன்றுபோல்
தொடுத்து வைத்தைதைப் போன்று தொங்கித் தொடர்ந்து
கீழே தாழ்ந்தாற்போன்ற தணிந்த குலைகளைக் கொண்ட பலாமரங்களையுடைய
நிறைந்த செழிப்பையுடைய மலைநாட்டன் இங்கே வருந்தோறும் வருகின்றது,
பின்னர் அவன் அகன்றாலும் அகலாதது ஆகி
நம்மோடே போட்டிபோடுகின்றது நம் காமம் என்னும் பகை.
					மேல்
# பரணர்
# 258 மருதம்
வரவேண்டாம் எமது சேரிக்கு; தரவேண்டாம் உனது மாலையை;
பழிச்சொல்லை ஏற்படுத்துகின்றது; பெருமானே! காவிரியின்
பலர் நீராடும் பெரிய நீர்த்துறையில் மருதமரத்தோடு கட்டிய
ஏந்திய கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட சேந்தனின் தந்தை
கள்ளாகிய உணவையும், அழகிய விலங்குக் கூட்டங்களை வேட்டையாடுதலையும்,
வரிசைப் பட்ட ஒளிவிடும் வாளைக் கொண்ட இளைஞர்களையும் கொண்ட பெருமகனான
அழிசி என்பானின் ஆர்க்காடு போன்ற இவளின்
குற்றம் தீர்ந்த சிறந்த பெண்மைநலம் தொலைவதைக் கண்டபின்னர் - 
					மேல்
# பரணர்
# 259 குறிஞ்சி
மேகங்கள் சேர்ந்து எழுகின்ற மழையையுடைய குன்றினில்
அருவியைப் பொருந்திய குளிர்ந்த மணமுள்ள காந்தள்
மொட்டு அவிழ்ந்தும் அமையாத அளவு மணங்கமழும் நறிய நெற்றியையும்,
பல இதழ்களைக்கொண்ட தாமரை மலர்போன்ற குளிர்ந்த கண்களையும் உடைய மாநிறத்தவளே!
என் செயலைப் பொறுத்தாலும் சரி, பொறுக்காமல் என்னைக் கொன்றுபோட்டாலும் சரி,
நீ அளந்து அறிவாய் உன் உயர்வினை; உண்மையைப் போல்
பொய்யான சொற்களைக் கூறுவதால் என்ன பயன்?
என் நெஞ்சம் நல்லதையே எண்ணியது உனக்காக - 
					மேல்
# கல்லாடனார்
# 260 பாலை
நாரைகள் கரிய வானத்தில் உயர்ந்து செல்லும்; புதர்களிலுள்ள மொட்டுகளும்
வரிகளையுடைய வண்டுகள் சுற்றிப் பறப்பதால் இதழ்கள் விரிந்திருக்கும்;
சுழித்த சங்கு வளையல்கள் பொலிந்த தோள்களும் செறிவுற்றிருக்கின்றன;
வந்துவிடுவார், வாழ்க தோழியே! போரிடுபவரின்
மண்ணைக்கொண்டு பயன்பெறுபவரும், தலைமைப் பண்புடைய யானையையும்
நிறைந்த தேர்களையும் உடையவரும் ஆகிய தொண்டைமான்களின் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கும் மலைப்பக்கத்தில்
கன்றினை இல்லாத ஒற்றைப் பசுவைத் தடுத்து நிறுத்திய
புல்லிய அடியைக் கொண்ட ஓமைமரத்தைக் கொண்ட பாலைநிலத்தைக் கடந்து சென்றவர் -
					மேல்
# கழார் கீரன் எயிற்றி
# 261 குறிஞ்சி
பழைய மழை பொழிந்ததாக, பதம் கெட்டு விழுந்த
உள்ளீடற்ற காயையுடைய எள் பயிருக்கான சிறிதளவு மழைபெய்யும் கார்காலத்து இறுதிநாட்களில்
சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
நள்ளென்கிற நடுச் சாமத்தில் 'ஐ'யென்று கத்தும்
அச்சந்தரும் பொழுதிலும் என்னுடைய கண்கள்
துயில்கொள்ளவில்ல, வாழ்க, தோழியே! இரவுக் காவலர்
நாழிகைக் கணக்கை ஆராய்வதைப் போல் நேரத்தை எண்ணிக்கொண்டு வருந்தி என்
நெஞ்சம் புண்பட்ட காரணத்தினால் -
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 262 பாலை
ஊரில் பழிமொழி உண்டாக, தெருவே கூடிப்பேச,
நிற்காமல் வருத்துகின்ற அறமற்ற அன்னை
தானே இருக்கட்டும், தன் வீட்டில்; நானோ
நெல்லிக்காயைத் தின்ற முள்போன்ற பற்கள் ஒளிர
நீ குடிப்பதாக எண்ணிப்பார்த்தேன்; தலைவனோடு தொலைநாட்டு
விண்ணைத் தொடும்படி உயர்ந்த குறுக்கிட்டுக்கிடக்கும் மலையின் உச்சிச் சரிவில்
கரும்பை நட்டிருக்கும் பாத்தியைப் போன்ற
பெரிய களிற்றின் பாதச் சுவட்டில் தங்கிய நீரினை -
					மேல்
# பெருஞ்சாத்தன்
# 263 குறிஞ்சி
ஆட்டின் கழுத்தை அறுத்தும், தினையின் பலியரிசியைப் படைத்தும்,
மக்கள் செல்லும் பாதையின் கவர்த்த வழிகளில் பல் வித இசைக்கருவிகள் முழங்க
தாம் வெளிப்படுதல் அன்றி நமது நோய்க்கு வேறு மருந்தாக ஆகாத
வேறான பெரிய தெய்வங்கள் பவற்றைச் சேர வாழ்த்தி,
பேய் பிடித்துவிட்டது இவளுக்கு என்று ஊரார் சொல்லுவது
வருந்துவதற்கு உரியதாகும் தோழி!, பெரிதான மலையில்
மேகங்கள் விளையாடுகின்ற நாட்டுக்குரியவனிடம்
தவறில்லாதவராகிய நாம் இந்த வெறியாட்டலுக்கு உட்படுதல் - 
					மேல்
# கபிலர்
# 264 குறிஞ்சி
ஆரவாரமிக்க மழை செறிந்த காட்டாற்றின் தாழ்கின்ற கரையில்
தழைத்த நெடிதான தோகை அசையுமாறு வேகமாக நடந்து
ஆடுகின்ற மயில்கள் அகவும் நாட்டினன், நம்மோடு
விருப்பமுடையவனாய்க் கொண்ட நட்பு
நமக்குப் பசலையைத் தந்தபோதும், நெஞ்சம் அந்தப் பசலையோடு பொருந்தி இராது.
					மேல்
# கருவூர் கதப்பிள்ளை
# 265 குறிஞ்சி
காந்தளின் அழகிய கொழுவிய மொட்டை, தானாக மலரட்டும் என்று காத்திருக்காமல்
வண்டு அதன் வாயைத் திறக்கும் போது, முன்பும்
தாம் அறிந்த செம்மையுள்ளம் கொண்ட சான்றோரைக் கண்ட
கடமைகளை அறிந்த மக்கள் போல, (காந்தள்) இடம் கொடுத்து,
இதழ்களைக் கட்டவிழ்க்கும் உயர்ந்த மலைகளையுடைய தலைவன்
நல்ல மனம் படைத்தவன்; தோழி! உனது நிலையை
நான் அவனுக்குச் சொன்னேனாக
அவன் நாணினான், இந்தக் களவொழுக்கம் இன்னும் நீட்டித்து நிகழாதபடி.
					மேல்
# நக்கீரர்
# 266 பாலை
நமக்காக ஏதேனும் ஒரு வார்த்தை சொல்லாவிடினும், தமக்கு ஒன்றான
இன்னாத இரவில் இனிய துணையாக இருந்த
கொல்லைப்புறத்து வேங்கை மரத்துக்கு ஒரு சொல் சொல்ல மறந்துவிட்டாரே!
மறக்கமுடியாத பருத்த தோளைத் தழுவி
நம்மைத் துறந்து செல்லும் ஆற்றலுள்ளோர் பறவைகள் மூலம் விடும் தூதின் வழியாக -
					மேல்
# காலெறி கடிகையார்
# 267 பாலை
பெரிய இடத்தையுடைய உலகில் தொகுத்த பயன் மிக்க பெரு வளம்
அனைத்தும் ஒன்றுசேர்ந்து வாய்த்தாலும், கரும்பின்
அடிப்பகுதியில் வெட்டிய துண்டினை உண்டது போன்ற
வெள்ளிய பற்களில் ஊறிய குற்றமற்ற இனிய நீரையும்
திரட்சி அமைந்த குறிய வளையலையும் கொண்ட இளையவள் நீங்கியிருப்ப
பொருளீட்டும் முயற்சியின் பொருட்டுப் பிரியார்; ஒவ்வொருநாளும்
நிகழ்த்தும் முறைமைகொண்ட வழக்கத்தையுடைய கூற்றுவனின்
அறமற்ற உயிர்வாங்கும் தொழிலை நன்கு அறிந்தவர்கள்.
					மேல்
# கருவூர் சேரமான் சாத்தன்
# 268 நெய்தல்
செல்கின்றீரோ என்று சொல்வதற்கும் வலிமையற்றோம்
வருவீரோ என்று கேள்விகேட்டலையும் செய்யோம்
எவ்வாறு செய்வோம்? தோழி! பாம்பின்
படத்தையுடைய பெரிய தலையைத் துண்டிக்கும் இடியோடு கூடிய
நள்ளிரவு என்று எண்ணாமல் வந்து
என் நீண்ட மென்மையான பருத்த தோள்களை அடைந்தவரை -
					மேல்
# கல்லாடனார்
# 269 நெய்தல்
நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து, விரைவான நடையினால் வருந்தாமல்
வருவீரா என்று கேட்பாரைப் பெற்றால் மிகவும் நல்லது;
வலிமையுடைய சுறா தாக்கியதால் உண்டான புண் ஆறி, என் தந்தையும்
நீல நிறத்தையுடைய பெரிய கடலுள் புகுந்தார்; என் தாயும்
உப்புக்கு மாற்றாக வெண்ணெல் வாங்கி வருவதற்காக
உப்பு விளையும் உப்பளத்திற்குச் சென்றாள்; அதனால்
குளிர்ந்த பெரிய கடற்கரைப் பரப்பையுடைய தலைவனுக்கு
இப்பொழுது வந்தால் என்னை எளிதில் காணலாம் என்னும் தூதினைச் சொல்ல - 
					மேல்
# பாண்டியன் பன்னாடு தந்தான்
# 270 முல்லை
தாழ்ந்திருக்கும் இருள் துண்டுபடுமாறு மின்னி, குளிர்ச்சியாக
விழுகின்ற துளிகளை இனிதாகச் சிதறி, மாறிமாறிக்
குறுந்தடியால் அடிக்கப்படும் முரசினைப் போல் முழங்கி பலமுறை இடித்து
பெய்க இனி வாழ்க! பெரிய மேகமே! நாமோ,
செய்யும் தொழிலை முடித்த மனநிறைவான உள்ளத்தோடு
இத்தலைவியோடு பொருந்தியவனாகி, குவளையின்
குட்டையான தண்டின் உள்ள அன்றைய மலர் மணக்கும்
நறிய மென்மையான கூந்தல் என்னும் மென்மையான படுக்கையில் இருக்கிறோம்.
					மேல்
# அழிசி நாச்சாத்தனார்
# 271 மருதம்
அருவியைப் போன்ற பெரிய துளிகளைச் சிதறி
ஆறுகள் நிறைந்த வெள்ளத்தைத் தரும் நாட்டினனைத் தெளிந்து
அவனோடு இருந்த காலம் ஒரு நாள்மட்டுமே, ஆனால் அது
மிகப் பல நாட்கள் தோளோடு கலந்து
அழகை வாரிச் செல்லும் நோயாக ஆகின்றது.
					மேல்
# ஒருசிறைப்பெரியன்
# 272 குறிஞ்சி
தொடுவதற்கும் வாய்க்குமோ? சிறந்த
வில்லை உடைய சீழ்க்கை ஒலியை எழுப்புவோர், கற்களை வீசி விலங்குகளை விரட்டிவிடும்
பரந்த பரப்பையுடைய காட்டில், தன் இனத்தைவிட்டுப் பிரிந்த
துன்பத்தைக் கொண்ட இளையமான் நேரே இருக்க, தன் தமையன்மார்
முழக்கமிடும், மிகுந்த வேகத்தையுடைய ஆண்மானின் மேல் அழுந்துமாறு எய்த,
குருதியோடு பிடுங்கிய சிவந்த கோலையுடைய அம்பானது
தன் முந்தைய நிலையிலிருந்து மாறுபட்டதைப் போல மாறுபட்ட மையுண்ட கண்களையும்
மணக்கின்ற கரிய கூந்தலையும் கொண்ட தலைவியின் தோள்களை -
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 273 பாலை
இரவில், தாதையுடைய மொட்டு ஒளிர
பெரிய காட்டைத் தடவிக்கொடுத்து வருகின்ற அசைகின்ற காற்றைப் போல
குளிர்ந்தனவாய் மணங்கமழும் ஒள்ளிய நெற்றியையுடையவளே!
(தலைவன் பிரிவானோ என்று)வருந்தினையாயின் நான் அறிந்ததைச் சொல்வேன்;
பெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின்மேல்
அறியாமல் ஏறிய அறிவிலியைப் போல
ஏமாந்தது இந்த உலகம்;
நாம் உயிரோடு இருக்குமளவும் தலைவன் உன்னைப் பிரியமாட்டான், தெளிவாயாக!
					மேல்
# உருத்திரன்
# 274 பாலை
புறாவின் முதுகைப் போன்ற புல்லிய அடியையுடைய உகாய் மரத்தின்,
இறால்மீனின் முட்டைகளைப் போன்ற செறிந்த பழங்கள் உதிரும்படியாக,
விடுவதற்கான அம்பினை வில்லோடும் கையினில் பற்றி, அந்த மரத்தின் கிளைகளில் ஏறி
வழியில் வருவோரைப் பார்க்கும் கொடுமைமிக்க ஆடவர்
நீரை விரும்பும் வேட்கையினால் மரப்பட்டையை மென்று தாகத்தைத் தணித்துக்கொள்ளும்
இன்னாமையுள்ள கானமும் இனிய ஆகிவிடுமே! பொன்னோடு
மணிகள் இடையிட்ட அல்குலை உடைய தலைவியின்
அழகிய முலையை உடைய மார்பை நினைத்துக்கொண்டே சென்றால் -
					மேல்
# ஒக்கூர் மாசாத்தியார்
# 275 முல்லை
முலை படர்ந்த கல்லின் மேலாக ஏறி நின்று
கண்டு வருவோம், செல்வோம் தோழி!
மாலையில் ஊர்வந்து சேரும் காளையையுடைய பசுவினங்களின்
புல்லை உண்ட நல்ல பசுக்கள் பூண்டிருக்கும் மணியோசையோ?
செய்யக் கருதிய கருமத்தை முடித்த மனநிறைவான உள்ளத்தோடு
வலிய வில்லையுடைய இளைஞர்கள் தன் இருபக்கமும் பாதுகாக்க,
ஈரமான மணலையுடைய காட்டாற்றுப்பக்கம் வரும்
தேரின் மணியோசையோ? அங்கு ஒலிப்பனவாக உள்ளவற்றை - 
					மேல்
# கூழி கொற்றன்
# 276 குறிஞ்சி
மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய இளையவளுக்காகப் பாவையைப் பண்ணியதையும்
அதற்குப் பஞ்சாய்க் கோரை இருக்கும் பள்ளத்தைச் சுற்றிவந்ததையும், மேலும் இவளின்
சினந்து எழும் அழகிய முலைகள் ஒளிபெற வரைந்த
தொய்யிலையும், அவளைக் காத்துநிற்போர் அறியவும் அறியார்,
நீதியையுடைய மன்னனின் செங்கோன்மையுடைய அரசவைக்குச் சென்று
நான் அத் தலைவியைக் கேட்குங்கால் என்னவாகும்?
பெரிதும் பேதைமையுடையதாய் இருக்கிறது,
இரங்கத்தக்கது, ஆரவாரத்தையுடைய இந்த ஊர்.
					மேல்
# ஓரில் பிச்சையார்
# 277 பாலை
குற்றமற்ற தெருவில் நாய் இல்லாத அகன்ற வாயிலில்
செந்நெல் சோற்றின் மிகுதியையையும், மிக வெள்ளையான வெண்ணெய்யையும்
ஒரு வீட்டிலேயே பிச்சையுணவாகப் பெற்று வயிரார உண்டு,
முன்பனிக்காலத்துக்காக விரும்பத்தக்க வெப்பத்தையுடைய நீரைச்
சேமித்துவைக்கும் செப்பில் பெறுவீராக! நீவிர்!
மின்னிடையாளான தலைவி நடுங்கக்கூடிய இறுதி மழைக்குப் பின்னர் வரும் வாடை
எப்போது வரும் என்று கூறுவீராக!
அப்போது வருவார் என்னுடைய தலைவர் -
					மேல்
# பேரிசாத்தன்
# 278 பாலை
மிகுந்த காற்று தடவிச் சென்ற அழகிய இளம் இலைகளையுடைய மாமரத்தின்
துளிரைப் பார்த்தது போன்ற மெத்தென்ற சிறிய அடியை உடைய
சிறிய பசிய பாவையையும் எம்மையும் நினையார்,
கொடியவர் அவர், வாழ்க! தோழியே! ஆண் குரங்கு
பழுத்த இனிய பழங்களை உதிர்க்க, கீழே இருந்து
பிடித்துப் பிடித்து உண்ணும்
குட்டிகளையுடைய பெண்குரங்குகள் உள்ள மலையைக் கடந்து சென்றோர் -
					மேல்
# மதுரை மருதன் இளநாகனார்
# 279 முல்லை
முறுக்கிய கொம்பையும் இருளின் நிறத்தையும் உடைய எருமை
வளரும் கழுத்தில் கட்டப்பட்ட பிளந்த வாயையும் தெளிந்த ஓசையும் உடைய மணி 
தனிமைத்துயர் உள்ள நடுயாமத்தில் அசையுந்தோறும் ஒலிக்கும்
இது வருவதற்குரிய நாளாக இருக்கவும் அவர் வரவில்லை!
மழை கழுவுதலை மறந்த கரிய பெரிய குத்துப்பாறை
தூசி படிந்த யானைப் போல பொலிவுற்றுத் தீன்றும்
பெரிய பல மலைகலைக் கடந்துபோய்
திருத்தமாக இறங்கும் பருத்த தோள்களை நினைத்துப்பார்க்காதவர் -
					மேல்
# நக்கீரர்
# 280 குறிஞ்சி
நண்பர்களே! வாழ்க! நண்பர்களே! ஒவ்வொரு நாளும் என்
நெஞ்சத்தைத் தன்பாற் பிணித்துக்கொண்ட அழகிய சிலவான கூந்தலையும்
பெரிய தோள்களையும் உள்ள இளையவளின் சிறிய மெல்லிய மார்பினை
ஒருநாள் கூடக் கூடுமாயின்
(அதன் பின்) அரைநாள் வாழ்க்கையையும் வேண்டேன் நான்.
					மேல்
# குடவாயில் கீரத்தன்
# 281 பாலை
வெள்ளிய மணற்பரப்பில் தழைத்த பசிய அடியையும், கருக்கினையும் உடைய
திரண்ட பனையின் உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையோடு சேர்த்து வைத்த
பாலைநிலத்து வேம்பின் நெருங்கிய வெள்ளிய பூவினை
சுருள் நிறைந்து ஆடும் மயிருள்ள தலையில் பொலிவுபெறச் சூடி
மலைகள் பொருந்திய காட்டினில்
சென்றுவிட்டாரோ? சிவந்த அணிகலன்கள் அணிந்தவளே! நம்தலைவர்.
					மேல்
# நாகம்போத்தன்
# 282 பாலை
பருவத்தே வளர்ந்த வரகின் சிவந்த மேட்டுநிலத்தில் தழைத்த
ஒலிக்கின்ற நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை
நவ்வி மானின் குட்டி கவ்வி அன்றைய காலையுணவை முடிக்கும்
கார்ப்பருவத்தை எதிர்கொண்ட குளிர்ந்த புனத்தைக் காணும்போது, கை வளையல்கள்,
நீர் விளங்கும் மலைச் சாரலில் மொத்தமாக மலர்ந்த
வெண்கூதாளத்தின் அழகிய உள் துளையுடைய புதிய மலர்கள்
தம் காம்பிலிருந்து கழன்று உதிர்தலைப் போன்று
கழன்று வீழ்வன அல்ல என்பாரோ நம் தலைவர்?
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 283 பாலை
இருக்கின்ற பொருளைச் செலவழிப்போர் செல்வமுடையோர் எனப்படார்;
பொருள் இல்லாதவர் வாழ்க்கை இரந்து வாழ்வதனினும் இழிவானதாகும் என்று
சான்றோர் சொல்லிய ஆண்மைச் சால்பினை புரியும்படி எடுத்துக் காட்டிச்
சென்றுவிட்டார், வாழ்க, தோழியே! எக்காலத்திலும்
கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர்
வழியில் இருந்து தங்கி வழிச்செல்வோரைக் கொன்றதனால்
உண்டான அழுகியபுலாலைப் பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும்
நீண்ட பழைய இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில் -
					மேல்
# மிளைவேள் தித்தன்
# 284 குறிஞ்சி
போரிட்ட யானையின் புள்ளியையுடைய முகத்தைப் போல
மன்றத்தில் உள்ள குத்துக்கல் மீது, பலவாகச் சேர்ந்து
ஒள்ளிய செங்காந்தள் மலரும் நாட்டினன்
அறவோன் ஆயினும், அப்படி அல்லன் ஆயினும்
நம்மைப் பழிப்பாரோ? தம்மிடத்தில் ஒரு பழிச்சொல்லும் அற்றவரோ?
மலையிலிருந்து விழும் தூய வெள்ளிய அருவி
அச்சந்தரும் நிலையிலுள்ள குடிலின் அருகில் இறங்கி ஓடும்
நமக்கு இன்னாததாக இருக்கும் இந்த சிறுகுடியிலுள்ளோர் -
					மேல்
# பூத தேவன்
# 285 பாலை
ஒவ்வொருநாள் விடியும்போதும் வாரார்;
எல்லாப் பகலின் எல்லையாகிய இரவிலும் தோன்றார்;
எங்கு இருக்கிறாரோ? தோழி! இங்கு இவர்
சொல்லிச்சென்ற பருவமோ இதுவே! பலமுறை
புல்லிய முதுகையுடைய பெடையை அழைத்து, இனிய ஆண்புறா
இமைப்பொழுதில் எத்தகைய இன்பத்தை அடைகின்றது! ஞெமை மரத்தின் உச்சியில்
ஊனை விரும்பி பருந்து அமர்திருந்து உயரே எழும்
வானளவும் உயர்ந்த ஒளிவிடும் மலையைக் கடந்து சென்றோர் - 
					மேல்
# எயிற்றியனார்
# 286 குறிஞ்சி
நினைத்துப் பார்க்கத்தான் முடியும் போலிருக்கிறது, முள் போன்ற கூர்மையான பற்களையுடைய
அமிழ்தம் சுரக்கின்ற சிவந்த வாயையும், கமழ்கின்ற அகிலும்
சந்தனமும் மணக்கும் கருமணல் போன்ற கூந்தலையும்,
பெரிய அமர்த்த குளிர்ச்சியான கண்களையும் உடைய தலைவியின்
இளநகையோடு கூடிய செருக்கிய பார்வையை -
					மேல்
# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 287 முல்லை
வாழ்க தோழியே! காதலர்
இங்கேயே கண்டபின்னரும் பிரிந்துசெல்வாரோ?
பன்னிரண்டு திங்கள் நிரம்பிய கருவினைத் தாங்கித் தளர்வெய்தி
நடக்கவியலாத பச்சைப் புளியின்மீது கொண்ட வேட்கையையுடைய
முதிர்ந்த சூல் கொண்ட மகளிர் போல, நீரினைச் சுமந்துகொண்டு
வானத்தில் ஏறமாட்டாது அந்தச் சூலினைத் தாங்கி ஒன்றோடு ஒன்று சேர்ந்து
செழிப்பான பல மலைகளை நோக்கி
பெருத்த ஆரவாரமுடைய மேகங்கள் எழுகின்ற இந்தக் கார்ப்பருவத்தை -
					மேல்
# கபிலர்
# 288 குறிஞ்சி
மிளகுக் கொடி வளர்கின்ற மலைச் சரிவில் தளிரைத் தின்கின்ற
குரங்குகள் பலவும் ஒன்றுசேர்ந்து இருக்கும் பெரிய மலைநாட்டினன்
இனியவன் ஆதலின் நமக்கு வேண்டியவர்களால் செய்யப்படும்
இன்னாத செயல்களிலும் இனியதோ,
இனிது எனப்படும் தேவருலகம்?
					மேல்
# பெரும் கண்ணனார்
# 289 முல்லை
வளர்பிறையைப் போல மென்மேலும் வளர்ந்து
இறங்குகின்ற தோளின் வளையல்களை நெகிழச்செய்த துன்பமாகிய காமநோயோடே
தளிரைப் பிசைந்தாற்போன்ற நிலையையுடையவளாகி, மெலிந்து,
பக்கத்திலிருப்போர் இல்லாததால் துயருழப்பதல்லாமலும்
தோழி! மழையும் மிகுந்து பெய்கின்றது;
இந்த மழை வருவதற்கு முன்னர்
தலைவருக்காக மனம்வருந்தும் நம்மைவிட,
நமக்காக மனம்வருந்துகிறது இந்த ஆரவாரமிக்க ஊர்.
					மேல்
# கல்பொருசிறுநுரையார்
# 290 நெய்தல்
காம நோயைப் பொறுத்துக்கொள்க என்போர், தாம் அதனைப் பற்றி
அறியமாட்டாரோ? அல்லது, அதனைத் தாங்கும் சக்தி படைத்தவரோ?
நாம் எமது தலைவரைக் காணமுடியாமல் இருந்தால்
செறிந்த துன்பம் பெருகிய நெஞ்சத்துடன், மிகுந்த நீர்
பாறையில் மோதும்போது எழும் சிறிய நுரை போல
கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து இல்லாமற்போகின்றோம்.
					மேல்
# கபிலர்
# 291 குறிஞ்சி
மரங்களை வெட்டிச் சுட்டெரித்துச் சீர்ப்படுத்திய புனத்தில் தழைத்த தினையில்
வந்து வீழும் கிளிகளை ஓட்டும் தலைவியின் கையிலுள்ள குளிர் என்னும் கருவி
இசை பாடும்போது இசைக்கும் இனிய தாளத்தை உடையது,
எனவே கிளிகள் தம்மை அவள் அழைப்பதாக எண்ணி தாம் வந்து விழுவதை நிறுத்தவில்லை;
அதற்காகக் கோபித்துக்கொண்டு அழுத தலைவியின் கண்கள், மலைச்சாரலில்
ஆழமான நீரையுடைய பசிய சுனையில் பூத்த குவளையின்
வண்டுகள் அடிக்கடி மொய்க்கும் பல இதழ்கள் கலைந்து
குளிர்ந்த மழைத்துளியை ஏற்றுக்கொண்ட மலர்களைப் போலிருப்பன.
					மேல்
# பரணர்
# 292 குறிஞ்சி
நீராடச் சென்ற ஒளிரும் நெற்றியையுடைய பெண்ணொருத்தி
ஆற்றுநீர் அடித்துக்கொண்டுவந்த பச்சைக் காயைத் தின்ற குற்றத்தினின்றும் தப்ப,
எண்பத்தொரு ஆண்யானைகளைகளோடு, அவளின் எடைக்குச் சமமான
பொன்னால் செய்யப்பட்ட பாவையையும் கொடுப்பவுமே ஏற்றுக்கொள்ளானாய்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
எல்லையற்ற நரகத்துள் செல்லட்டும் அன்னை!
ஒரே ஒருநாள் சிரித்த முகமுள்ள விருந்தினனாய் வந்ததற்காக
பகைமுகங்காட்டும் ஊரினரைப் போலத் தூக்கத்தை விட்டாள்-
					மேல்
# கள்ளில் ஆத்திரையன்
# 293 மருதம்
கள்குடிக்கும் விருப்பத்தையுடையவரின் பயணம், உள்ளூரில்
பாளை ஈன்ற நாரினைக் கொண்ட அழகிய சிறிய காயையுடைய
உயர்ந்த கரிய பனையின் நுங்கினை உண்டு திரும்பும்
ஆதி அருமன் என்பானின் மூதூர் போல,
நீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை
தேமலையுடைய தொடையில் மாறிமாறி அலைக்க
வருகிறாள் சிவந்த இழைகளை அணிந்த பரத்தை, அவ்விடத்தில்
தலைவனைக் காணும்பொருட்டு; இரங்கத்தக்கவள் நான்.
					மேல்
# அஞ்சில் ஆந்தையார்
# 294 நெய்தல்
கடலில் சேர்ந்து விளையாடியும், கடற்கரைச் சோலையில் தங்கியும்
மாலையையுடைய மகளிர் கூட்டத்தோடு தழுவிக்கொண்ட ஆட்டம் ஆடியும் இருக்கும்போது
அயலாரைப் போல விரைவாக வந்து
தலைவன் தழுவிச் சென்றதனால் பழிச்சொல் பரவிற்று;
புள்ளிகளையுடைய பாம்பின் படத்தைப் போன்ற அகன்ற அல்குலில்
திருத்தமான அணிகலன்கள் அசையும் பக்கத்தில் கட்டிய பசிய தளிராகிய
தழையுடையைக் காட்டிலும் அருகிலிருந்து அகலமாட்டான்
அவனால் உண்டானது இந்த அன்னையின் இற்செறிப்பு.
					மேல்
# தூங்கலோரி
# 295 மருதம்
உடுத்துக்கொண்டும், தொடுத்துக்கொண்டும், அணிந்துகொண்டும் செருகிக்கொண்டும்
தழையாற் செய்த அலங்காரத்தால் பொலிவுபெற்ற பரத்தையரோடு நெருங்கிச் சேர்ந்து
நீர்விழாவுக்குரிய அடையாளங்களோடு வருகின்றாய்! நீயே, இதனை,
ஒரு பசுவினால் வரும் வருமானத்தைக் கொண்டு வாழும் சிறப்பில்லாத வாழ்க்கை
மிக்க அழகையுடைய தலைவியான இளையவள் வந்தபின்னர்
இப்பொழுது விழாக்கோலம் பூண்டது என்று சொல்லும் இவ்வூர்.
					மேல்
# பெரும்பாக்கன்
# 296 நெய்தல்
தோழி! கேட்பாயாக! புன்னை மரத்தின்
ஆடுகின்ற கிளையில் இருந்த அழகிய சிறகுகளைக் கொண்ட நாரை,
நிறைந்த கழியில் இருந்த குறைந்த அளவு மீனை விரும்பாவிட்டால், வயலில்
கள் மணக்கும் நெய்தல் மலரையும் நெற்கதிர்களையும் விரும்பும்
குளிர்ந்த துறைக்கு உரியவனைக் கண்டால், அவன் முன்னே சென்று நின்று
கடுமையான சொற்களைக் கூறுவதைத் தவிர்ப்பாயாக! வளையணிந்தவள்
இவ்வாறு ஆகும்படிக்கு அவளைப் பிரிந்து செல்லுதல்
உமக்குத் தகுதியுடையதாகுமோ என்று துணிந்து - 
					மேல்
# காவிரிப்பூம் பட்டினத்து காரி கண்ணன்
# 297 குறிஞ்சி
மேல் விளிம்பை உருவிக்கொடுக்கும் கொடிய வில்லையுடைய மறவர்கள்
கூர்மையான நீண்ட அம்பின் வெற்றியையுடைய பகையை மதிக்காது
எதிர்த்து நின்று போரிட்டு இறந்த வழிச்செல்வோர் மீது
தழைகளை இட்டு மூடிய குவியல்கள் ஊரைப் போலத் தோன்றும்
மலைகள் ஓங்கி உயர்ந்த அகன்ற இடத்தில் நல்ல சொற்களைக் கூறி
சேர்ந்து போதல் செய்யத்தக்கது என்று
நான் உணர்ந்தேன், அவர் உணர்வதற்கு முன்னர் -
					மேல்
# பரணர்
# 298 குறிஞ்சி
நமது தெருவினை அடைய மெல்ல வந்து வந்து
அரிதாக வாயைத்திறந்து இனிய சொற்களைக் கூறி
ஒவ்வொருநாளும் தன் மேனியின் நிறம் வேறுபட்டுத் தங்கும் தலைவனின்
வருத்தம் தேங்கிய பார்வையினை நினைத்துப்பார் தோழி!
இனிமையும் கடுமையும் கொண்ட கள்ளையுடைய அகுதை தந்தையின் பின் நின்ற
வெள்ளிய முனையையுடைய சிறிய கோலையுடைய பாடல் மகளிர் பெற்ற
இளம் பெண்யானைகளாகிய பரிசிலைப் போல
வேறொன்றைக் குறித்தது அவன் பின்னிட்டு நிற்கின்ற நிலை.
					மேல்
# வெண்மணி பூதி
# 299 நெய்தல்
இது எப்படி ஆயிற்று தோழி! முதுமையான நீரையுடைய
அலைகள் வந்து தவழும் பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச் சோலையிலுள்ள
கொத்துக்கள் மலர்ந்த புன்னை வளர்ந்த மேட்டிலுள்ள நிழலில்
சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற பொழுது, தலைவனைப்
பார்த்தன என் கண்கள்; அவன் சொல்லைக்
கேட்டன என் செவிகள்; ஆனால் அவன்
தழுவினால் சிறந்த அழகைப் பெற்றுப்
பிரிந்தால் மெலிகின்றன என் அகன்ற மெத்தென்ற தோள்கள்.
					மேல்
# சிறைக்குடி ஆந்தையார்
# 300 குறிஞ்சி
குவளை மலரின் மணம் கமழும் கொத்தான இருண்ட கூந்தல்;
ஆம்பல் மலரின் மணம் கமழும் தேனைப் பொதிந்துவைத்த சிவந்த வாய்;
ஆழமான நீரில் உள்ள தாமரைமலரின் பூந்தாது போன்ற
நுண்ணிய பல தேமல் - இவற்றையுடைய மாநிறத்தவளே!
நீ, அஞ்சாதே என்ற என் சொல்லைக் கேட்டு அச்சம்கொள்ளாதே!
நான், குட்டையான கால்களையுடைய அன்னம் குவிந்துகிடக்கும் மணலில் தங்கும்
கடல் சூழ்ந்த நிலத்தைப் பெற்றாலும்
விட்டுப் பிரிவதை எண்ணிப்பார்க்கமாட்டேன் - உனது நட்பினை
					மேல்
# குன்றியன்
# 301 குறிஞ்சி
முழவைப் போல அடிமரத்தையுடைய வளைந்து நிற்கும் பனையின்
கொழித்த மடல்களில் செய்த சிறிய குச்சிகளையுடைய கூட்டில்
கரிய கால்களைக் கொண்ட ஆண் அன்றிலை, அது விரும்பும் முதிய சூல்கொண்ட
மசக்கைநோயால் வாடும் பெண் அன்றில் அழைக்கும் நடுராத்திரியாகிய இரவில்
மன்றத்தைப் பிளந்துகொண்டு வரும் இனிய மணியோசை கொண்ட நெடும்தேர்
வரவில்லையென்றாலும், வருவது போல
செவியில் ஒலிக்கும் சத்தத்தினால்
தூக்கத்தை விடுத்தன தோழி! என் கண்கள்.
					மேல்
# மாங்குடி கிழார்
# 302 குறிஞ்சி
உரைப்பாய் தோழி! அது உயர்வுடையதோ? இல்லையே!
பொறுத்தற்கரிய பிரிவுத்துயரால் வருந்துவதற்கு ஆற்றலற்றுப்போனேன்; அதற்குமேலும்
இறந்துபோவதை அதைக் காட்டிலும் அஞ்சுகிறேன்;
அந்தோ! நான் இந்த நிலை அடைந்த பின்னும், நல்ல மலையைச் சேர்ந்தவன்
பிரியா நட்புடையவர்கள் இருவரும் என்னும்
பழிச்சொல்லிற்கு அஞ்சினானோ? பலரும் ஒருங்கே
துயிலுகின்ற ஊரின் நள்ளிரவிலும் என்
நெஞ்சில் வருவதை அன்றி நேரில் வருவதை அறியான்.
					மேல்
# அம்மூவன்
# 303 நெய்தல்
கழியில் இரை தெரிந்து உண்டு இளைப்பாறிய கரிய காலையுடைய வெள்ளைக் கொக்கு
அடைத்தகரையில் உள்ள தாழையில் குழுமி, பெரிய கடலின்
உடைகின்ற அலையின் ஆரவாரத்தில் உறங்கும் துறையைச் சேர்ந்தவனே!
தம் பழைய நிலையினின்றும் நெகிழ்ந்த வளையல்களையுடையவளாய், இங்கு
பசலைநோய்வாய்ப்பட்டாள் என் தோழி, என்னோடு
இனிய கொத்துக்களையுடைய புன்னையின் அழகிய புள்ளிகளையுடைய நிழலில்
பொன்னிறமான வரிகளையுடைய நண்டுகளை அலைத்து விளையாடியபொழுதே -
					மேல்
# கணக்காயன் தத்தன்
# 304 நெய்தல்
கொல்லன் தொழிலால் பொலிவுபெற்ற கூரிய வாயையுடைய எறியுளி
முகத்தில் படும்படி கட்டப்பட்ட உலர்ந்த மூங்கிலின் வலிமையுள்ள கழியை,
தாங்குதற்கரிய நீர்வழியில் வீசிஎறிந்து, விசைத்து இழுக்கின்ற
வளைந்த திமிலையுடைய பரதவர் கொம்புடைய சுறாமீனைப் பிடிக்க,
நீண்ட கடற்கரையில் இருந்த குறிய கால்களையுடைய அன்னத்தின்
வெளுத்த தொகுதி அஞ்சிப்பறக்கின்ற பூக்கள் செறிந்த கடற்கரைச்சோலையினையும்
தாழைகளையும் அழகிய குளிர்ந்த நீர்நிலைகளையுமுடைய தலைவனோடு
செய்துகொண்டோம் நிச்சயமாக, ஒரு பகையைத் தருகின்ற நட்பை-
					மேல்
# குப்பை கோழியார்
# 305 மருதம்
கண்கள் தந்ததனால் உண்டான இந்தக் காதலாகிய எரியும் நெருப்பு
என் எலும்பையும் பொருந்திச் சுட்டு வருத்துகின்ற போதும், அவரை விரும்பிச்
சென்று நாம் தழுவிக்கொள்ள முடியாமற்போனவளானேன்;
இங்கு வந்து என் துன்பத்தைத் தீர்த்தற்கு அவராலும் இயலவில்லை!
ஏவிவிடுவாரும் இல்லாமல், பிரித்துவிடுவாரும் இல்லாமல்,
குப்பைக்கோழிகள் தாமாகச் சண்டைபோட்டுக்கொள்வது போல
(தாமாகத்)தணியும்போது தணிவதல்லாமல்
நான் படும் துன்பத்தைத் தீர்ப்பார் யாரும் இல்லையே!# குப்பை கோழியார்
					மேல்
# அம்மூவன்
# 306 நெய்தல்
மென்மையுடைய, இனிய, விரும்பத்தக்க
சொற்களைச் சொல்லமாட்டோம் என்று சொன்னாலும், அவற்றை நீ
மற்ந்துவிட்டாயோ வாழ்க! நெஞ்சமே! பலவும் ஒன்றுசேர்ந்து
அழகிய மாமரத்தின் தாதுக்கள் நிறைந்த பூவின்மீது
வண்டுகள் விழுந்து பொய்க்கும் கடற்கரைச் சோலைக்கும்,
தெள்ளிய கடல்நீருக்கும் உரிய தலைவனைக் கண்ட பின்னர்
					மேல்
# கடம்பனூர் சாண்டிலியன்
# 307 பாலை
வளையலை உடைத்தது போல ஆகி, பலரும் தொழ
சிவந்த இடத்தையுடைய வானத்தில் விரைவாகத் தோன்றி
இப்போது பிறந்தது பிறை! அந்தோ!
மறந்துவிட்டார் போலும் தாம்! ஆண்யானை தன்
வருந்திய நடையையுடைய இளம் பெண்யானையின் வருத்தத்தைப் பொறுக்கமாட்டாமல்
நிற்பதில் உயர்ந்த யா மரம் அழியும்படி குத்தி
வெண்மையான பட்டையை உரித்து, தன் துதிக்கையைச் சுவைத்துக்கொண்டு மேல்நோக்கி
வருந்திய நெஞ்சத்தோடு முழங்கும்
பாலைவழியின் நீண்ட இடையில் எம்மை அழவிட்டுப் பிரிந்துசென்றோர் -
					மேல்
# பெருந்தோள் குறுஞ்சாத்தன்
# 308 குறிஞ்சி
சோலை வாழையின் சுருண்ட குருத்து தான் வருந்துமாறு
தெய்வமேறிய தன் பெரிய மத்தகத்தைத் தடவியதால், வலிமைகெட்டு
கலங்கிய துயரத்தை அடைந்த மயக்கத்தையுடைய ஆண்யானை
வருந்தியபடி உயிர்க்கும் இளைய பெண்யானை தனது வருந்திய முதுகினைத் தடவிக்கொடுக்க,
நீர் விழும் மலைச்சரிவில் அரிதில் துயிலும்
பெரிய மலையைச் சேர்ந்தவனின் நட்பு
நாம் விரும்பியவற்றை நமக்குத் தரும் ஒரு நற்செயலில் வந்து நிற்கிறது.
					மேல்
# உறையூர் சல்லியன் குமாரன்
# 309 மருதம்
களையெடுக்கும் மாந்தர் தாம் செய்யும் தொழிலை முடிப்பதற்காக
வண்டுகள் மொய்ப்பதினால் மலர்ந்த மலரின் மணம் நிலத்தில் படும்படி
நீண்ட வரப்பில் வாடும்படி போட்டுவைத்தாலும்
கொடியவரின் நிலத்தைவிட்டு வேறு நிலத்துக்குப்போய் வாழ்வோம் என்னாமல்
எடுத்துப்போட்டும் தம்மைக் களைந்த கழனியில் பூக்கும்
உனது ஊரின் நெய்தலைப் போன்றவள் நான், தலைவனே!
நீ எனக்கு இன்னாதன பல செய்தாலும்
உன்னை அன்றி இருக்கும் வல்லமை எமக்கு இல்லை.
					மேல்
# பெருங்கண்ணன்
# 310 நெய்தல்
பறவைகள் தத்தம் கூட்டுக்குள் சேர்ந்தன; பூக்கள் இதழ் குவிந்தன;
கடற்கரைச் சோலையும் தனிமையில் கிடக்கிறது; வானமும்
நம்மைப்போன்று மயக்கமுடையதாகி,
பகற்பொழுது கழிய பொலிவிழந்து கிடக்கிறது;
இன்னும் உயிர்வாழ்வேன், தோழி! இந்த நிலையை,
குளிர்ந்தனவாய் மணங்கமழும் ஞாழல்களையுடைய
குளிர்ந்த அழகிய கடல்துறையை உடையவர்க்கு எடுத்துக் கூறுவாரைப் பெற்றால்-
					மேல்
# சேந்தன்கீரன்
# 311 நெய்தல்
பழிச்சொற்கள் எவ்வாறு ஒழியும்? பெரிய கடலின்
புலால்நாற்றத்தையுடைய அகன்ற துறையில் பாகன் தடுக்கவும்
நிற்காமல் கடந்துசென்ற கல்லென்னும் ஒலியைக் கிளப்பிக்கொண்டு விரைந்த தேரை
நான் பார்க்கவே இல்லை; நண்பகலில்
உயர்ந்து நிற்கும் வெள்ளை மணலில் தாழ்ந்த புன்னைமரத்தின்
பூந்தாதுக்கள் சேர்ந்த ஒளிபொருந்திய மலர்களைக் கொய்துகொண்டிருந்த
தோழிகள் எல்லாரும் சேர்ந்து பார்த்தார்களே!
					மேல்
# கபிலர்
# 312 குறிஞ்சி
இரண்டுவிதமாக நடந்துகொள்ளும் கள்ளத்தன்மையுடையவள் நம் காதலி!
மாறுபாடு கொண்ட வலிமையினையும், செம்மையான வேலினையும் உடைய மலையமானின்
முள்ளூர் மலைக்காட்டின் மணத்தைப்போல் மணங்கமழ வந்து
நள்ளென்ற இரவில் நம்மோடு ஒத்துப்போகிறாள்;
கூந்தலில் நாம் சூட்டிய பலவாய்க் கலந்த மலர்களை உதிர்த்துவிட்டு
மயிர்ச்சந்தனம் இட்டுக் கோதிவிட்ட நறிய கூந்தலில் எண்ணெய் தடவி
நம்மைத் தெரியாததுபோன்ற முகத்தவள் ஆகி
தன் வீட்டாரைப் போல் ஆகிவிடுகிறாள் விடிந்துவிட்டதும்.
					மேல்
# 313 நெய்தல்
பெரிய கடற்கரையில் இருக்கும் சிறிய வெள்ளைக் கடற்காக்கை
நீந்தக் கூடிய நீரையுடைய பெரிய கழியில் இரையைத் தேடி உண்டு
பூ மணக்கும் சோலையில் தங்கும் துறையைச் சேர்ந்த தலைவனோடு
எம்மைச் இணைத்துக்கொண்டோம், இணைந்த நட்பினை
அவிழ்த்துவிட முடியாது; அது முடிச்சிடப்பட்டு நன்றாக அமைந்துள்ளது.
					மேல்
# பேரிசாத்தன்
# 314 முல்லை
நெடுந்தொலைவு உயர்ந்த வானத்தில் நீர் மிக்க நிறைந்த சூலினையும்
குளிர்ச்சியையும் முழக்கத்தையும் கொண்ட மேகம் ஒளிரும் மின்னல்களை இமைக்க
மழை இறங்கி இருண்ட தனிமைகொண்ட மாலைப் பொழுதிலும்
வரவில்லை, வாழ்க, தோழியே! முளைத்தெழும்
இனிமை பொருந்திய இளம் முலைகள் அழுந்தத் தழுவிக்கொள்ள -
இன்னல் மிக்க இடங்களையுடைய பாலைநிலத்தைக் கடந்துசென்றோர்
					மேல்
# மதுரை வேளாதத்தன்
# 315 குறிஞ்சி
எழுகின்ற திங்களைக் கடலில் கண்டாற்போன்று
வீழ்கின்ற வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலை நாட்டினன்
ஞாயிற்றைப் போன்றவன் தோழி!
நெருஞ்சி மலர்களை ஒப்பன என் பெரிய மூங்கில் போன்ற தோள்கள்.
					மேல்
# தும்பிசேர் கீரன்
# 316 நெய்தல்
அழகிய வளையல்கள் நெகிழ்ந்துபோகவும், தளர்ச்சி மேனியில் நிலைக்கவும்
நோயால் மிக்க வருத்தத்தை அன்னை அறிந்தால்
நான் இருக்கமாட்டேன், வாழ்க, தோழியே! இடைவிடாமல்
வலிய கடல் மோதுகின்ற மணல் விரவிக்கிடக்கும் அடைத்தகரையில்
விளையாடும் மகளிர் ஒன்றுசேர்ந்து அலைக்கழிக்க
அதனால் மெலிந்த நண்டு துன்புற்று விரைகின்ற ஓட்டத்தை
உயர்ந்து வரும் விரிந்த கடலலை போக்கும்
கடல்துறையைச் சேர்ந்த தலைவனின் சொல்லோ வேறுபட்டுப்போயின.
					மேல்
# மதுரை கண்டரதத்தன்
# 317 குறிஞ்சி
விரும்புதற்குரிய இளைய மரையானின் கரிய பெரிய நல்ல ஏறு
இனிய புளிச்சுவையையுடைய நெல்லிக்காயைத் தின்று, அயலேயுள்ள
தேனொழுகும் பெரிய மலர்கள் நடுங்கும்படி பெருமூச்செறிந்து
உயர்ந்த மலையிலுள்ள பசிய சுனைநீரைப் பருகும் நாட்டையுடைய தலைவன்
நம்மை விட்டுப் பிரிந்திருப்பாரோ, மிகுதியாக
வடதிசையிலிருந்து வரும் வாடைக்காற்றுக்கு அழிந்த மேகங்கள்
தெற்குத்திசை நோக்கிச் செல்லுகின்ற குளிர்ந்த பனியையுடைய பருவத்தில் -
					மேல்
# அம்மூவன்
# 318 நெய்தல்
எதிர்த்துத் தாக்கும் சுறாமீன்கள் நிறைந்த ஒளிரும் நீர்ப் பரப்பில்
மணமுள்ள பூக்களைக் கொண்ட ஞாழலொடு, புன்னையின் மலர்கள் பரந்து
வேலன் வெறியாடும் களத்தைப் போல் தோன்றும் நாட்டினன் 
(மணம் முடிக்க)நினையானாயினும், நினைப்பினும், வேறெதனையும்
அறியாதவனுக்கு உணர்த்துவேனோ நான்? மெலிந்துபோன இந்த
மூங்கில் போன்ற அழகுடைய மென்மையான தோள்களை அணைத்த அந்த நாளில்
தவறாத வஞ்சினம் கூறிய
வஞ்சகனும், அதை வாய்க்கச் செய்பவனும், நமக்குப் புகலிடமானவனும் அவன்தானே!
					மேல்
# தாயம் கண்ணன்
# 319 முல்லை
ஆண்மான்கள் தம் மடப்பம் பொருந்திய பெண்மான்களைத் தழுவி, மயக்கம் மிக்கு
காட்டில் சேர்ந்த புதர்களில் மறைந்து ஒதுங்கவும்,
துதிக்கையையுடைய நல்ல களிறுகள் தன் பெண்யானைகளோடு பொருந்தி
முகில்களை அணிந்த பக்கத்தையுடைய மலையில் சேரவும்,
மாலையில் வந்தது, கார்காலத்துப் பெரிய மழை,
பொன்போன்ற அழகிய மேனியின் நல்ல நலத்தைச் சிதைத்தோராகிய தலைவர்
இன்னும் வரவில்லையென்றால்
என்ன ஆகும் தோழி! நம் இனிய உயிரின் நிலை?
					மேல்
# தும்பிசேர் கீரன்
# 320 நெய்தல்
பெரிய கடலில் பரதவர் கொண்ட மீன்களின் உலர்ந்த வற்றல்,
இருண்ட கழியில் கொண்ட இறாவின் வற்றலோடு
நிலவொளி போன்ற வெள்ளை மணற்பரப்பு புலால்நாறும்படி பலவும் சேர்ந்து
மணல்மேடுகள்தோறும் பரவிக்கிடக்கும் கடல்துறையைச் சேர்ந்த நம் தலைவனோடு ஒரு நாள்
சிரித்து விளையாடிய பழியும் நமக்கில்லை; மொட்டுகள் விரிந்த
பொன்னிற பூங்கொத்துகளைச் சேர்ந்த பறவைகள் ஒலிக்கும் கிளைகளுள்ள
புன்னை மரங்கள் சூழ்ந்த அழகிய சேரிகளையுடைய இந்த ஊரில் உள்ளோர்
வீணே பழி தூற்றுவர், தம் கொடுமையான தன்மையினால்.
					மேல்
# 321 குறிஞ்சி
மலையில் உண்டாகிய சிவப்புச் சந்தனத்தையும் முத்துமாலையையும் உடைய மார்பினன்;
சுனையில் பூத்த குவளையில் வண்டுகள் மொய்க்கும் தலைமாலையையுடையவன்;
நள்ளிரவில் வந்து நம் வீட்டுப்பக்கம் செல்வான் -
மடப்பம் உடைய பெண்ணே! உன் நெஞ்சு விரும்பும் இனிய துணைவன்;
மன்றத்திலுள்ள மரையாக்கள் அஞ்சியோட அவற்றின் ஏற்றினைக் கொன்று
சிவந்த கண்ணையுடைய பெரிய புலி முழங்கும்; அதனால்
நம் காதலை மறைக்கும் காலம் இதுவல்ல;
திறந்துவிடுவேன், வாழ்க! விரும்பிக்கேள் தலைவியே! நம் மனத்திலுள்ள இரகசியத்தை -
					மேல்
# ஐயூர் முடவன்
# 322 குறிஞ்சி
அமர்த்த கண்களையுடைய ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி
குறவர்கள் விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி
காட்டின்கண் சேர்ந்துள்ள சிறுகுடியில் அகப்பட்டுக்கொள்ள,
இளம்பெண்கள் அதனைப் பேண, அவருடன் கலந்து, அவ்விடத்தை விரும்பி
வீட்டில் வாழும் வாழ்க்கையைப் பற்றிக்கொண்டதைப்போல்
பழக்கப்பட்டுப்போனால் வேறு இனிமையுடையன உண்டோ?
(தலைவன் இருக்குமிடத்துக்குச்)செல்வோம் தோழி! இயன்ற அளவுக்கு நடந்து-
					மேல்
# பதடி வைகலார்
# 323 முல்லை
மற்ற எல்லா நாட்களும் என்ன பயனை உடையன? அவை வெற்று நாட்கள்;
பாணர்கள் படுமலை என்ற பாலைப்பண்ணை வாசித்த யாழிசையைப் போன்று
வானத்தில் அச்சம் வரும்படியான நல்ல இசை முழங்க,
மழை பெய்த புலத்தில் பூத்த முல்லையின்
பசிய மொட்டின் பூந்தாது மணக்கும் நறிய நெற்றியையுடைய
காதலியின் தோளே அணையாகக் கொண்டு உறங்கிக்
கழிந்த நாட்கள் மட்டுமே இங்கு வாழ்கின்ற நாட்கள் -
					மேல்
# கவைமகன்
# 324 நெய்தல்
வளைந்த கால்களையுடைய முதலையின் கொல்லுதலில் வல்ல ஆணானது
வழியில் பிறர் செல்வதை இல்லாமற்செய்யும் கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறையில்
திரளான மீன்களுள்ள கரிய கழியை நீந்திக் கடந்து, நீ உனது
அன்புடைமையால் வருகிறாய்; இவள் தனது
அறியாமை உடைமையால் மகிழ்கிறாள்; நானோ, அதற்கு,
இரட்டைப் பிள்ளைகள் நஞ்சு உண்டதைப் போல்
அஞ்சுகிறேன், பெருமானே! என் நெஞ்சத்தில்-
					மேல்
# நன்னாகையார்
# 325 நெய்தல்
செல்வோம், செல்வோம் என்று கூறியபோதெல்லாம், முன்பு அவரின்
பொய்யாகக் கூறிய பயணம் என்று நினைத்து, என்னைவிட்டு
ஒரேயடியாகப் போய்விடுங்கள் என்று கூறினேனே! அந்தோ!
நமக்குப் பிடிப்பாகிய நம் தலைவர் எங்கு இருக்கிறாரோ?
கரிய காலைக் கொண்ட வெள்ளைக்கொக்கு மேயும்
பெரிய குளம் ஆயிற்று என் முலைகளின் இடைப்பகுதி.
					மேல்
# 326 நெய்தல்
சேர்த்துக்கட்டப்பட்ட மாலையை அணிந்த, மூங்கிலைப் போன்ற பெரிய தோளையுடைய
கடலில் விளையாடும் மகளிர் கடற்கரைச் சோலையில் அமைத்த
மணல்வீட்டில் சேர்ந்திருந்த நட்பு, தோழியே!
ஒருநாள் தலைவன் நம்மைப் பிரிந்திருந்தாலும்
பலநாட்களில் வரும் துன்பத்தை உடையது.
					மேல்
# அம்மூவனார்
# 327 குறிஞ்சி
தாம் அருள்கூர்ந்தால் வாழ்கின்ற வறியோரிடம்
அன்பு இல்லாதவராதல் நல்லதென்று உணர்ந்த
மலைநாட்டினனைக் காட்டிலும், மிகவும்
உனது செயல் கொடியதாகும்; இனிதான கலங்கியநீரைக் கொணரும் ஆறே!
நம் மனையிலுள்ள இளையமகள் இன்னவாறான மெல்லிய
சாயலுடையவள், இரங்கத்தக்கவள் என்று பாராமல்
வாழைமரங்களைப் பெயர்த்துக் கொணர்கிறாய், மலைச்சரிவுகள் பொலிவற்றுப்போக -
					மேல்
# பரணர்
# 328 நெய்தல்
சிறிய மலரையுடைய ஞாழல்மரத்தின் வேரில் அமைக்கப்பட்ட வளையில் படுத்திருக்கும்
நண்டினுடைய சிறிய வீடு சிதையுமாறு, அலைகள்
குறுந்தடியால் அடிக்கப்பெறும் முரசைப்போல முழங்கும் துறையைச் சேர்ந்த தலைவன்
அருள்புரிந்த நாட்கள் மிகச் சிலவே!, இதனால் எழுந்த பழிச்சொல்லோ,
விற்படையைக் கொண்ட சேனைகளையுடைய விச்சியரின் தலைவன்
அரசர்களோடு போரிட்டபோது, பாணர்களின்
புலிப்பார்வை போன்ற நிலையினைக் கண்ட
ஆரவாரமிக்க குறும்பூர்க்காரர்கள் எழுப்பிய முழக்கத்தைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது.
					மேல்
# ஓதலாந்தையார்
# 329 பாலை
காட்டிலுள்ள இலுப்பை மரத்தின் வேனிற்காலத்து வெள்ளிய பூக்கள்
காற்று மோதிய நீண்ட கிளைகள் ஆடிஉதிர்த்ததனால் காம்புகள் கழலப்பெற்று
களிறுகள் திரியும் சிறிய வழிகள் புதைந்துபோகுமாறு பரவிக்கிடக்கும்
ஒளிர்கின்ற மலைகளையுடைய அரிய வழியைக் கடந்துசென்ற நம் தலைவரை நினைந்து
மிக்க இருளையுடைய நள்ளிரவில் தூக்கம் இல்லையாகி
தெளிந்த நீரிலுள்ள ஒளிவிடும் மலரைப் போன்ற
நல்ல மலராகிய குளிர்ந்த கண்ணுக்கு எளிதாய்ப் பெருகுகின்றன நீர்த்துளிகள்.
					மேல்
# கழார் கீரன் எயிற்றியன்
# 330 மருதம்
பெண்மை நலமும் அழகும் வாய்ந்த சலவைப்பெண், கஞ்சியில் தோய்த்து எடுத்து
ஒருதரம் கல்லில் அடித்து முடித்து, குளிர்ந்த குளத்தில் இட்ட,
நீரில் அலசிவிடாத பருத்த ஆடையின் முறுக்கைப் போன்றிருக்கும்
பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்
இனிமையும், கடுப்பையும் உடைய கள்ளைப் போன்று மணமின்றிக் கமழும்
துன்பத்தையுடைய மாலைப் பொழுதும், அதன் தனிமைத் துயரும்
இல்லையோ தோழி! அவர் சென்ற நாட்டில்.
					மேல்
# வாடா பிரமந்தன்
# 331 பாலை
நெடிய மூங்கில் வாடி உலர்ந்துபோன நீரற்ற அரிய பாலைவெளியில்
வழிச்செல்லும் பயணிகள் அழியுமாறு அவரை எதிர்த்து நின்று
வளைந்த வில்லையுடைய மறவர்கள் காட்டில் கொள்ளைப்பொருளைப் பகிர்ந்துகொள்ளும்
கடுமையான யானைகள் இருக்கும் பாலைநிலத்தைக் கடந்து
செல்வாரோ தோழி! வாழ்க! நறிய வடுவையும்
பசிய அடிமரத்தையும் உடைய மா மரத்தின் அழகிய தளிர் போன்ற
நல்ல மாமைநிறமுள்ள மேனியில் பசலை ஊர
நம்மைக்காட்டிலும் சிறந்த அரிய பொருளை ஈட்டுவதற்கு -
					மேல்
# மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்
# 332 குறிஞ்சி
வாடை வந்த சிறுமழை பெய்யும் கடைசி யாமத்தில்
வருத்தத்தில் உழல்கின்ற பொறுத்தற்கரிய துன்பம் நீங்கும்பொருட்டு, நீ விரும்பிக்
கூறினால் என்ன தோழி! மணக்கும்படி மூச்சுவிடுகின்ற
இளைய பெண்யானையைத் தழுவிக்கொண்டு, பெரிய கைகளையுடைய யானை
குன்றின் அடிவாரத்தில் இருக்கும் சிறுகுடிக்கு இறங்கிவரும்
மன்றங்கள் பொருந்திய மலைநாட்டினனிடம் -
					மேல்
# உழுந்தினைம் புலவன்
# 333 குறிஞ்சி
குறிய ஆயுதமான அம்பையும், வளைந்த வில்லையும் உடைய குறவனின்
தினைப்புனத்தை உண்டு விரட்டப்பட்ட பசிய கண்ணையுடைய யானை
நறிய தழையணிந்த மகளிர் ஓட்டும் கிளிகளோடு
குறிய பாறைகளாலான மலையின் உச்சியை நோக்கிப்பார்க்கும் குன்ற நாட்டினன்
மணம் புரியும் பணி குறைப்பட்டதனால் ஏற்பட்ட வருத்தம் நீங்க,
துணிந்துவிட்டால் என்ன தோழி! நம் இரகசியத்தை வெளிப்படுத்த -
					மேல்
# இளம் பூதனார்
# 334 நெய்தல்
சிறிய வெள்ளையான கடற்காக்கையின் சிவந்த வாயையுடைய பெரிய கூட்டம்
வீசுகின்ற அலைகளின் துளிகள் தம்முடைய ஈரமான முதுகை நனைப்பதால்
குளிர்ந்து வருந்தித் தங்கியிருக்கும் பல பூக்களையுடைய கடற்கரைச் சோலையையுடைய
பெரிய நீர்ப்பரப்பின் தலைவன் பிரிந்து சென்றால், ஒன்றாகிய நமது
இனிய உயிரை அல்லது வேறு ஒன்று
எதுவோ தோழி? நாம் இழப்பதுவே -
					மேல்
# இருந்தையூர் கொற்றன் புலவன்
# 335 குறிஞ்சி
வரிசையான வளையல்களை அணிந்த நேர்த்தியான அணிகலன்கள் அணிந்த மகளிர்
கரிய மலையில் உள்ள அகன்ற பாறையில் செந்தினையைப் பரப்பி
சுனையில் பாய்ந்து ஆடிய சோர்வுள்ள பொழுதை நோக்கி, கிளையிலிருந்து இறங்கி
பசிய கண்ணையுடைய மந்தி, தன் குட்டியோடு கவர்ந்து உண்ணும்
மலைக்குச் சற்று அப்பால் இருக்கிறது, நீண்ட அம்பினையும்,
வலிய வில்லினையும் உடைய வேட்டுவரின் தங்கையாகிய
பெரிய தோளினைக்கொண்ட நம் தலைவி இருந்த ஊர் -
					மேல்
# குன்றியன்
# 336 குறிஞ்சி
வேண்டாதவருக்கு மகிழ்ச்சி உண்டாக, நமக்குத் துன்பம் வர
இவ்வாறு (இரவில்) வருவாரும் உளரோ? தேன் பரவும் துறையையுடையவனே!
சிறிய நாவினையுடைய ஒளிரும் மணிகள் விளரிப்பண்ணை இசைப்ப
விரையும் குதிரைகள் பூட்டிய நெடிய தேரின் சக்கரம் அழுத்திய
பெரிய கழியின் நெய்தல்மலர் போல
வருந்தினாள், இரங்கத்தக்கவள், நீ பிரிந்துசென்றவள்.
					மேல்
# பொது கயத்து கீரந்தையார்
# 337 குறிஞ்சி
முலைகள் முகிழாய் முகிழ்த்தன; தலையின்
கிளைத்த கூந்தல்கொத்துக்கள் கீழே விழுந்து தொங்குகின்றன;
செறிவாக அமைந்த வெள்ளைப் பற்களும் விழுந்தெழுந்து நிற்கின்றன;
தேமலும் சில தோன்றின; வருத்தும் தெய்வம் என
நான் அவளை அறிவேன், அதனை அவள் அறியாள்;
எப்படி ஆவாளோ அவள்?
பெரிய பழைய செல்வரின் ஒப்பற்ற மடப்பத்தையுடைய மகள்.
				மேல்
# பெருங்குன்றூர் கிழார்
# 338 குறிஞ்சி
முறுக்கேறிய கொம்புகளையுடைய இரலையாகிய தலைமைப்பண்புள்ள நல்ல ஆண்மான்
மென்மையையும் மடப்பத்தையும் கொண்ட பெண்மானோடு தங்குதற்குரிய நிழலில் ஓய்வெடுத்து
பூக்கள் நெருங்கிய அகன்ற பின்னிவளர்ந்த சிறுதூறில் துயின்று, ஞாயிறு மறைய
செழுமையான பயற்றுப் பயிரைக் கறித்துத்தின்னும் துன்பமுடைய மாலைப்பொழுதினையும்
பின்பனியுள்ள கடைசி யாமத்தையும், குளிர்ந்த பனியையும் கொண்ட அற்சிரக்காலத்தில்
வந்தது பெரிய வெற்றியையுடைய தேர்! மூங்கிலைப் போன்ற தோள்களையும்
பொலிவுற்ற இல்லத்தில் அடக்கமான கற்பினையும் உடைய
பெண்மை நலம் பொருந்திய தலைவியின் தனிமைத்துயர் நீங்கும்படி -
					மேல்
# பேயார்
# 339 குறிஞ்சி
வாசனையையுடைய அகிலின் வளமையாகச் செறிந்த தினைப்புனத்தில் எழுந்த நறிய புகை
துளிகள் அற்ற மேகத்தைப் போலச் சென்று, மலைச்சாரலிலுள்ள
குறவர் குடியிருப்பில் இறங்கும் நாட்டினனாகிய தலைவன்
பலவகை மலர்கள் கலந்த மாலையை அணிந்த நல்ல மார்பைத் தழுவுதல்
இனியதாயிற்று வாழ்க தோழி! பெரிய இதழ்களைக் கொண்ட
குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்கள் கண்ணீர்விட
பசலை உண்டாவதற்கு முன்பு
					மேல்
# அம்மூவன்
# 340 நெய்தல்
காதல் மிகும்போது காதலரை நினைத்துச் சென்று,
நாம் அவரிடத்தே வருந்தும்போது நம்மோடு ஆகி,
ஒரு பக்கமாகச் சேர்தல் இல்லாது, இரண்டு பக்கமுமாக,
கடற்கரைப் பரப்பில் நின்ற மலர்கள் நிறைந்த தாழை
கழிநீர் ஓடிய பக்கத்தே வளைந்து, பொங்கும் கடல்நீர்
மீண்டுவரும்போது தானும் மீண்டுநின்றாற்போல
வருந்தும் தோழி! தலைவர் இருந்த என் நெஞ்சம்.
					மேல்
# மிளைகிழான் நல் வேட்டன்
# 341 நெய்தல்
பல பூக்கள் தோன்றிய பசிய அரும்புகளையுடைய குராமரம்
நெற்பொரி போன்ற பூக்களையுடைய புங்கைமரத்தோடு சோலையிடத்தில் அழகைக் கொண்டு
கிளைகள் காண்பதற்கு இனிதாக இருக்கின்ற இப் பருவத்திலும், காதலர்
தம் சொல்லைக் காவாராயினும், பெரியோர்களின் நெஞ்சத்தில்
கருதிய ஆண்மைச் செயல்கள் நிறைவேற்றப்படுவது இல்லை என்று
முன்னர்த் தெளிவாகாத என் நெஞ்சம் இப்போது தெளிவடைய,
வாழ்கின்றேன் தோழி என் மனவுரத்தாலே.
					மேல்
# காவிரிப்பூம் பட்டினத்து கந்தரத்தனார்
# 342 குறிஞ்சி
ஆண்குரங்கு கையால் தோண்டிய கமழ்கின்ற சுளையைக் கொண்ட பெரிய பலாப்பழத்தைக்
காக்க மறந்த குறவன், அதன் பின்னர்
மணமுள்ள மரங்கள்தோறும் குரங்குகள் மாட்டிக்கொள்ள வலையை மாட்டும்
குன்றைச் சேர்ந்த தலைவனே! உனக்குத் தகுமோ? பசிய சுனையில் தோன்றிய
குவளைப்பூக்களையும் குளிர்ந்த தழைகளையும் கட்டிய இவள் இங்கு வருந்த
உன்னை விரும்பியவர்களின் துன்பத்தைத் தீர்க்கும்
பயனேதுமற்ற பண்புடையவனாக இருந்தால் -
					மேல்
# ஈழத்து பூதன் தேவன்
# 343 பாலை
நினைத்துப்பார் வாழ்க தோழி! மதத்தால் நனைந்த கன்னத்தையுடைய
தலைமைப் பண்புள்ள யானையின் அழகிய முகத்தில் பாய்ந்ததாக,
மிகுந்த வலிமைகொண்ட பெரிய புலியின் பிளந்த வாயையுடைய ஆண்
யானையின் வெள்ளையான கொம்புகள் சிவந்த கறை கொள்ள, பிளவுபட்ட குகையிலுள்ள
மேல்காற்றால் வீழ்த்தப்பட்ட கரிய அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
வாடிய பூக்களைக் கொண்ட கிளையைப் போல் இறந்து கிடக்கும்
உயர்ந்த மலைகளையுடைய நாட்டினனோடு செல்லும் வழியை - 
					மேல்
# குறுங்குடி மருதன்
# 344 முல்லை
தவம் செய்தவர் ஆவர், நிச்சயமாக, தோழி! குளிரும்படி
தூற்றும் துளிகளாகிய பனியையுடைய கடுமையான திங்கள்களில்
மேய்புலங்களில் பயிரை மேய்வதற்கு, தலைமைப் பண்புள்ள காளைகளுடன்
நிலத்தில் தோயும்படி தாழ்ந்த கழுத்துத்தசைகளையும், வீங்கிய மடிகளையும் கொண்ட பசுக்கள்
பாலை ஒழுகவிட்டு, தம் கன்றுகளை நினைத்து, தம் கூட்டத்தைவிட்டு விலகி
ஊரை நோக்கிச் செல்லும் துன்பந்தரும் மாலைப்பொழுதில்
அரிதில் பெறக்கூடிய பொருளீட்டத்துக்காகச் சென்று
பிரிந்து வாழும் காதலர் திரும்பிவரக் காண்போர் -
					மேல்
# அண்டர் மகன் குறுவழுதி
# 345 நெய்தல்
அணிகலன்கள் அணிந்து இயங்கிவரும் கொடுஞ்சியையுடைய நெடிய தேரை
மலையைப் போன்ற நெடிய மணற்குவியலில் நிறுத்திவைத்து, இளைப்பாறித்
தங்கியிருந்தால் அது தவறோ? தகைமையுடையவரே!
தழையுடை தாழ்ந்திருக்கும் அல்குலையுடைய இவளின் தனிமைத்துயரம் நீங்கும்படி
தாழை உடுத்திய அசைவாடும் அலைகளைக் கொண்ட வளைந்த கழி
இழும்-என ஒலிக்கும் அவ்விடத்தில்
கடலை வேலியாக உள்ள எமது சிறைய நல்ல ஊரில்
					மேல்
# வாயில் இளங்கண்ணன்
# 346 குறிஞ்சி
இளமையான பெண்யானையை விரும்பிய முளைத்தெழும் கொம்புகளையுடைய இளம் ஆண்யானை
குன்றத்தைச் சேர்ந்து, அங்குள்ள குறவர்கள் ஆரவாரிக்க
ஊரிலுள்ள பொதுமன்றத்தை ஊடுறுவிப்போகும் நாட்டினன், தோழி!
சுனையில் மலர்ந்த குவளைமலர் மாலையைத் தொடுத்துத்தந்தும்,
தினைப்புனத்தின் பக்கத்தில் விழுகின்ற கிளிகளை ஓட்டியும்,
காலையில் வந்து, மாலைப் பொழுதில்
நமது நல்ல மார்பினை விரும்பி, தான் வருந்தி
அதனை நமக்குச் சொல்லவும் இயலாமல் மனம்குன்றினான்.
					மேல்
# காவிரி பூம் பட்டினத்து சேந்தன் கண்ணன்
# 347 பாலை
நீர் பெருகும் சுனைகள் வற்றிப்போன வறண்ட பாலைநிலத்தின் தொடக்கத்தில்
இளம் வாகைமரத்தின் காம்புடைய நறிய பூக்கள்
மடப்பத்தையுடைய பெரிய ஆண்மயிலின் உச்சிக்குடுமியைப் போல் தோன்றும்
காடாகிய நீண்ட வெளியில் தானும் நம்மோடு
சேரும் முயங்குவதாகிய மணத்தைச் செய்வாள் இவள் எனின்
நல்லது நெஞ்சமே! விரும்பிய உன் முடிவு.
					மேல்
# மாவளத்தன்
# 348 பாலை
தாம் மட்டுமே செல்வாராயின், காட்டினில்
மேய்புலத்தைத் தேடித்திரியும் யானையின் கொம்புகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட
சிறிய பூக்களைக் கொண்ட முல்லைக் கிளையைப் போல் பரவி
இமையின் விளிம்பைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளி, மதர்த்த அழகினையுடைய
பூண்களின் அகத்தே இருக்கும் அழகிய முலையை நனைக்கின்றதனையும்
பார்க்கமாட்டாரோ? சிறந்த அணிகலன்களை அணிந்தவளே! நம் தலைவர் -
					மேல்
# சாத்தன்
# 349 நெய்தல்
அடப்பங்கொடியின் அவிழ்ந்த அழகிய மலர் சிதையும்படி, மீனைத் தின்று
வளைந்த காலையுடைய நாரைகள் இருக்கும் மணல்மேட்டையுடைய
கடல்துறையையுடைய தலைவனைத் தொடர்ந்துசென்று நாம் இழந்த நமது பெண்மை நலத்தைப்
பெற்றுக்கொள்வோம் என்று கூறுகிறாய், தோழியே! அப்படியே கொள்வோம்,
தமக்கு இன்னல் வருமே என்று அஞ்சி, கேட்பவர் வேண்டியவற்றைக்
கொடுத்துவிட்டு, பின்னர் அவற்றைத் தா என்று கூறுவதனிலும்
இன்னாததோ நம் இனிய உயிரை இழத்தல்?
					மேல்
# ஆலந்தூர் கிழார்
# 350 பாலை
வாழ்க! தோழியே! தலைவரின் முன்னே நின்று
குளிரின் கடுமையினால் பாதிக்கப்பட்டோம், செல்லாதீர் என்று
சொல்லியிருந்தால் சென்றிருப்பாரோ?
வழிக்குச் சற்று அப்பால் இருந்த பெரிய மரக்கிளைகளில் இருக்கும் அழகிய சிறகுகளையும்
நெடிய கால்களையும் கொண்ட கணந்துள் பறவை, ஆறலைக்கள்வரின் இருப்பை அறிவித்து
வழிச்செல்லும் புதிய பயணிகள் கூட்டத்தை இடம் மாறச் செய்யும்
மலைகளையுடைய பாலைநிலத்தைக் கடந்து
நிலையாத பொருளை ஈட்டுவதற்காகப் பிரிந்துசென்றோர் -
					மேல்
# அம்மூவன்
# 351 நெய்தல்
வளையல்கள் அணிந்தவளே! நான் மகிழ்கின்றேன்! விரைகின்ற வளைந்த கால்களையுடைய
வளையில் வாழும் நண்டு தன் கூர்மையான நகத்தால் கீறிய
ஈரமான மணலையுடைய நீரொழுகும் வழி சிதைந்துபோகும்படி, இழும் என்று
இடியோசை போன்ற முழக்கத்தையுடைய அலைகள் உடைக்கும் கடல்துறைத் தலைவனுக்கு
உன்னை உரிமையாகக் கூறினர் நம் இல்லத்தார்; விரிந்த பூக்களைக் கொண்ட
புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த புலவு நாறும் சேரியிலுள்ள
இனிய சிரிப்பையுடைய மகளிர்கூட்டத்தோடு
இன்னும் முன்புபோல் பழிச்சொற்கள் கூறுமோ, இந்த ஆரவாரமுள்ள ஊர்?
					மேல்
# கடியலூர் உருத்திரங்கண்ணனார்
# 352 பாலை
ஆழமான நீரில் உள்ள ஆம்பல் இலையின் பின்புறத்தைப் போன்ற
வளைந்த மெல்லிய சிறகுகளையும், கூர்மையான நகங்களையுமுடைய பறவைகள்
அகன்ற இலைகளையுடைய பலாமரங்கள் இருக்கும் மலைச்சரிவை நினைத்து
தாம் பகலில் தங்கும் முதிய மரங்கள் தனித்திருக்கப் பறந்துபோகும்
சிறிய புல்லிய மாலை என்று ஒன்று உள்ளதை
அறிகின்றேன் தோழி! அவரைக் காணாத பொழுது -
					மேல்
# உறையூர் முதுகூற்றனார்
# 353 குறிஞ்சி
ஆரவாரம் மிகுந்த மலைநாட்டினனின் மார்பே தெப்பமாக
உச்சிகள் உயர்ந்திருக்கும் உயர்ந்த மலையின் சரிவுப்பக்கத்தில், பகலில்
இசைக்கும் இனிய அருவிநீரில் குளிப்பது இனியது;
வரிசையாய் இருக்கும் கண் இமைகள் மூடாத கண்ணோடு, இரவில்
பஞ்சினால் ஆன வெண்மையான திரி சிவப்புச் சுடரில் எரியும் நல்ல வீட்டில்
பின்னல் தாழ்ந்த முதுகைத் தழுவி
அன்னை அணைத்திருக்க தூக்கம் இன்னாததாகும்.
					மேல்
# கயத்தூர் கிழான்
# 354 மருதம்
நீரில் நீண்ட நேரம் விளையாடினால் கண்களும் சிவக்கும்;
நிறையக் குடித்தவர் வாய்க்குத் தேனும் புளிக்கும்;
பிரிந்துசெல்ல எண்ணினால் எமது இல்லத்தில் கொண்டுபோய் விடுவீர்!
அழகிய குளிர்ந்த பொய்கைகள் நிறைந்த எமது ஊரின்
கொடிய பாம்புகள் திரியும் தெருவில் வந்து
நடுங்குகின்ற மனக்கவலையினால் பட்ட துன்பத்தை முன்பு போக்கிய எம்மை - 
					மேல்
# கபிலர்
# 355 குறிஞ்சி
மழை பெரிதும் பொழிந்து மறைப்பதால் வானத்தைக் காண்பாரில்லை;
நீர் பரந்து ஓடுவதால் நிலத்தைக் காண்பாரில்லை;
ஞாயிறு மேற்கில் மறைந்துவிட்டதால் இருள் பெரிதும் கவிந்தது;
பலரும் துயிலும் நள்ளிரவின் இருளில்
எப்படித்தான் வந்தாயோ? உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தவனே!
வேங்கைப் பூக்கள் மணக்கும் எமது சிறுகுடியை
எப்படி அறிந்துகொண்டாயோ? வருந்துகிறேன் நான்.
					மேல்
# கயமனார்
# 356 பாலை
நிழல் அடங்கி அற்றுப்போன நீர் அற்ற கடக்கமுடியாத பாலைவெளியில்
காலில் கழல் அணிந்த தலைவன் காத்துவர, விரைந்து சென்று
நீர் அற்றுப்போன சுனையின் பக்கத்தில் முறுகிப்போய்ச் சூடான
மிகுந்த வெப்பமுடைய கலங்கிய நீரைத் தவ்வென்று குடிப்பதற்கு
எவ்வாறு முடியும் அவளால்? அவள்தான், கையிலேந்திய
செம்பொன்னால் செய்யப்பட்ட கலத்தில் அழகிய பொரியைக் கலந்த
பாலையும் மிகுதியாய் இருக்கிறது என்று குடிக்கமாட்டாள் -
திரட்சி அமைந்த குறிய வளையலையுடைய மாந்தளிர் போன்றவள் - 
					மேல்
# கபிலர்
# 357 குறிஞ்சி
வெறுக்கும்படியான துன்பத்தில் உழன்று தூக்கம் இல்லாத கண்களில் தோன்றிய
கண்ணிர்த்துளிகள் வாய்க்காலாய்ப் பிளந்துசெல்லும், மூங்கில்போன்ற அழகு குறைந்துபோன தோள்கள்
இப்போது மெலிந்துபோயிருப்பினும், கண்டார்க்கு விருப்பம் வரும்படி திரண்டு
நல்லனவாயிருந்தன என்னும் சொல்லை அடைந்திருந்தன -
ஏனல் என்ற அழகிய சிறுதினையின் பயிரைக் காக்கும் பரண்மீதிருப்பவன்
தீக்கடைகோலில் எழுப்பிய தீயினால் இடம்பெயர்ந்த நெடிய நல்ல யானை
விண்மீன் விழுவதால் ஏற்படும் சுடர்விடும் ஒளியினைக் கண்டு அஞ்சும்
விண்ணைத்தொடும் மலைநாட்டைச் சேர்ந்தவன் மணப்பதற்கு முன்னே -
					மேல்
# கொற்றன்
# 358 மருதம்
இறுக்கமான அணிகலன்கள் நெகிழ்ந்துபோக, அழுது இங்கே
நீரொழுகும் கண்களால் வருத்தமடையாதே! ஆய்ந்து எண்ணும் கோடுகளை இட்டு
சுவரைப் பிடித்துக்கொண்டிருக்கும் நின் துயரம் முற்றிலும் நீங்க
வருவேன் என்று சொன்ன பருவம் இதோ நெருங்கிவிட்டது பார்!
தனித்திருப்போர் துன்பமுறும் குளிர்ச்சி மிகுந்த மாலையில்
பல பசுக்களை மேய்த்துவரும் கோவலர்களின் தலைமாலையிலிருந்து
சொல்வது போன்றிருக்கின்றன, முல்லையின் வெண்மையான மொட்டுகள்.
					மேல்
# பேயன்
# 359 மருதம்
பார்ப்பாயாக பாணனே! பண்புள்ள இந் நிகழ்ச்சியை - 
மாலையில் விரிந்த பசிய வெண்மையான நிலவொளியில்
குட்டையான கால்களையுடைய கட்டிலில் விரித்த நறிய பூக்களைக் கொண்ட படுக்கையில்
படுத்திருக்கும் யானையைப் போன்று பெருமூச்சுவிடுகின்றவனாய், விரும்பிப்
புதல்வனைத் தழுவினான் வெற்றியையுடைய நம் தலைவன்; 
அந்தப் புதல்வனின் தாய் அவனின் முதுகை இருகைகளாலும் இறுக்கிக்கொண்டாள் -
					மேல்
# மதுரை ஈழத்து பூதன் தேவன்
# 360 குறிஞ்சி
காதல் நோய்க்குத் தீர்வு வெறியாட்டயர்தலே என்று நினைத்த வேலன், என் நோய்க்கு மருந்து
அறியாதவானாய் இருத்தலை அன்னை காணும்பொருட்டு,
பொறுத்தற்கரிய நினைவுகளால் ஏற்படும் துன்பத்தை இன்று நாம் அனுபவித்தாலும்
வரவேண்டாம் தோழியே! மலைச்சாரலில் உள்ள
பெண்யானையின் துதிக்கையை ஒத்த பெரிய கதிர்களைக் கொண்ட தினையை
உண்ணும் கிளையை ஓட்டும் குறத்தியின் கையிலுள்ள குளிர் என்னும் கிளிகடியும் கருவி
மலைப்பக்கத்தே எதிரொலிக்கும் சோலைகளையுடைய
ஒளிவிடும் மலைநாட்டைச் சேர்ந்தவன், இரவு வேளையில் -
					மேல்
# கபிலர்
# 361 குறிஞ்சி
வாழ்க தோழியே! நம் அன்னைக்கு
உயர்ந்த நிலையிலுள்ள தேவர்கள் உலகமும் கொடுப்பதற்குச் சிறிதாகும் - தலைவரின் மலையில்
மாலையில் பெய்த மணம் கமழும் வெள்ளத்தோடு
காலையில் வந்த முழுச்செடியான காந்தளை,
அதன் மெல்லிய இலைகள் குழைந்துபோகும்படி தழுவியதையும்,
அதனை வீட்டுக்குக்குக் கொண்டுவந்து நட்டதையும் கடிந்துகொள்ளாதாவள்.
					மேல்
# வேம்பற்றூர் கண்ணன் கூத்தன்
# 362 குறிஞ்சி
முருகனை வழிபட்டு வந்த முதுமை வாய்ந்த வேலனே!
கோபப்படவேண்டாம், கேட்பதற்கு ஒன்று உடையேன்;
பலவாக வேறுபட்ட நிறங்களுள்ள சிலவான சோற்றைப் பலியுணவாக,
சிறிய ஆட்டினைக் கொன்று, இவளின் மணமுள்ள நெற்றியைத் தடவிக்கொடுத்து,
தெய்வத்தைத் தொழுது கொடுத்தால், இவளை வருத்திய
விண்ணைத் தொடும் உயர்ந்த மலைகளையுடய தலைவனின்
ஒளிறும் மாலையை அணிந்த மார்பும் அப்பலியுணவை ஏற்றுக்கொள்ளுமோ?
					மேல்
# செல்லூர் கொற்றன்
# 363 மருதம்
கண்ணிபோல் வளைந்த கொம்பினையுடைய தலைமைப் பண்புள்ள நல்ல காளை,
சிவந்த தண்டையுடைய அறுகம்புல்லின் நீண்ட கதிரைக் கொறித்துமேயும்
மடப்பமுடைய கண்களையுடைய மரையா என்னும் காட்டுப்பசுவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு
புல்லிய அடியினைக் கொண்ட உகாய் மரத்தின் வரிவரியான நிழலில் தங்கும்
துன்பமுடைய கடத்தற்கரிய பாலைவழியைக் கடந்துசெல்லுதல்
இனியதாகுமோ? பெருமானே! உனது இனிய துணைவியை விட்டுப்பிரிந்து -
					மேல்
# ஔவையார்
# 364 மருதன்
இறுகப் பின்னிய கொடிப்பிரம்பினைப் போல் வரிவரியான முதுகினைக் கொண்ட நீர்நாய்
வாளை மீனை அன்றைய ஊணவாகப் பெறும் ஊரினனான தலைவனின்
பொன்னாலான திரண்ட ஒளிவிடும் வளையல் அணிந்த, தனக்குத்தான் தகுதியைக் கொண்ட பரத்தை
என்னைப்பற்றிப் புறங்கூறுகிறாள் என்று சொல்வர்; அது தெளியும்படி
வளைந்து இறங்கும், மூங்கிலைப் போன்ற தோள்களைக் கொண்ட ஒளியுடைய வளையணிந்த மகளிர்
துணங்கைக் கூத்தாடும் நாளும் வந்தது; அப்பொழுது
இருவர் கண்களும் சந்தித்துக்கொள்ள, அதனால் அவரை
மீண்டும் என்பால் சேர்த்துக்கொள்வதற்காக மெல்லமெல்ல வரும் மள்ளர்களுக்கான சேரிப்போர்.
					மேல்
# மதுரை நல்வெள்ளி
# 365 குறிஞ்சி
சங்கை அரிந்து செய்த ஒளிவிடும் வளையல்கள் நெகிழ்ந்துபோக, நாள்தோறும்
தூக்கமின்றி அழுது கலங்கிப்போய் நீர்த்துளிகள் நிரம்பியுள்ளன -
நெருங்குவதற்கு அரிதான நெடிய மலையில் நிரம்பிவழிந்த அருவி
தண்ணென்று ஒலிக்கிற முழவினைப் போன்று ஒலிக்கின்ற இசையினைக் காட்டுகின்ற
பக்கநிலத்தில் நிற்கின்ற பலாமரங்களையுடைய
பெரிய மலைகளையுடை நாட்டினனே! நீ விரும்பும் தலைவியின் கண்கள் -
					மேல்
# பேரிசாத்தன்
# 366 குறிஞ்சி
விதியால்தான் அவளின் காதல் அமைந்தது என்பதன்றி, அவரின்
இயல்பை அளந்து அறிவதற்கு நாம் யாரோ?
வேறு நான் என்ன கூறினாலும் அமைதியாகமாட்டாள்; அதற்குமேலும் 
பசிய இடத்தையுடைய பெரிய சுனையில் பலவாகிய கட்டுகள் அவிழ்ந்த
வளமையான இதழ்களையுடைய நீலமலரைப் பார்த்து, உள்ளே வருத்தங்கொண்டு
அழுத கண்ணையுடையவளாகி,
குற்றமற்றது, இந்த ஆய்ந்த அணிகலன்களை அணிந்தவள் எடுத்த முடிவு -
					மேல்
# மதுரை மருதன் இளநாகன்
# 367 மருதம்
கொடியவரான தலைவர் நமக்கு நல்மணத்தைத் தரமாட்டாரெனினும், உன்னுடைய
தோள்வளை விளங்கும் இறங்கிவரும் தோள்கள் அழகுபெறும்படி
இன்னும் சற்றுத்தொலைவுக்கு அங்கே வந்துபார் தோழி!
இறங்கிவரும் பெரிய மழை பெய்யத் தொடங்கியதால், அவர் நாட்டிலுள்ள
ஆரவாரத்தையுடைய மகளிர்கூட்டம் விரும்பி இறங்கும் அருவியினால்
கழுவப்பட்ட நீலமணிபோல் தோன்றும்
குளிர்ந்த நறிய குத்துப்பாறை உயர்ந்துள்ள மலையினை.
					மேல்
# நக்கீரர்
# 368 மருதம்
மென்மையான தன்மையுடையவளே! மென்மையான தன்மையுடையவளே!
ஒரு நல்லநாளில் நம்மைவிட்டுப்போன குற்றமற்ற மாமைநிறத்தின் இழப்பினை
நமது ஆற்றலால் பொறுத்திருத்தலன்றி, அதனைச் சொற்களால்
சொல்லமுடியாதிருந்தோம் மென்மையான தன்மையுடையவளே!
இனி, சிறியரும் பெரியரும் கலந்து வாழும் இந்த ஊரில்
ஒவ்வொரு நாளும் இடைவிடாமல் வரும் செறிந்த நீரையுடைய வெள்ளத்தில்
திண்ணிய கரையில் நிற்கும் பெரிய மரம் போல
தீதற்ற நிலைமையில் (தலைவனைத்)தழுவுவோம் பலமுறை
					மேல்
# குடவாயில் கீர்த்தனார்
# 369 பாலை
அரிய வழியில் உள்ள வாகையின் ஒலியெழுப்பும் வெண்மையான நெற்று
உள்ளீடான பரல்கள் நிறைந்த சிலம்பு போன்று அதன் விதைகள் ஒலிக்க
மேல்காற்று உயரஎழுப்பும் பாலைநிலத்தில்
தலைவனோடே செல்வோம் தோழி, அவர் இசைந்துவிட்டார்.
					மேல்
# வில்லக விரலினார்
# 370 முல்லை
பொய்கையில் உள்ள ஆம்பலின் அழகிய நிறத்தையுடைய கொழுத்த மொட்டுக்கள்
வண்டுகள் ஊதுவதால் வாய்திறக்கும் குளிர்ந்த நீர்த்துறைகளைக் கொண்ட தலைவனோடு
சேர்ந்திருந்தால் இரண்டு உடலைப் பெற்றிருப்போம். அவனோடு படுத்திருக்கும்போது
வில்லை அகப்படுத்திய விரல்களைப் போன்று ஒன்றிக்கிடந்து, அவனது
நல்ல மார்பினில் சேர்ந்திருந்தால் ஓருடலே உடையவராவோம்.
					மேல்
# உறையூர் முதுகூத்தன்
# 371 குறிஞ்சி
கைவளையல்கள் நெகிழ்ந்துபோதலையும், மேனியில் பசலை பாய்தலையும்,
மேகங்கள் படியும் மலைச்சரிவில் மலைநெல்லை விதைத்து
அருவிநீரால் விளைவிக்கும் நாட்டினனால்
பெறமாட்டேன் தோழி! அதைச் செய்த காம நோயோ மிகப் பெரியது.
					மேல்
# விற்றூற்று மூதெயினனார்
# 372 குறிஞ்சி
பனைமரத்தின் உச்சியிலுள்ள கருக்கினையுடைய நெடிய மடல்கள் குருத்தோடு மறைந்துபோக
கடும் காற்று தொகுத்துவைத்த நீண்ட வெள்ளை மணற்குவியல்கள்
கூட்டமான சிகரங்களையுடையவாய் வெயிலில் காயும் கடற்கரைச் சோலையில்
(இந்தச் சிகரங்களின்மேல்)கடலானது மேலெடுத்து வீசிய கருமணலான சேறு அருவியாய் இறங்கி
கூந்தலில் பெய்கின்ற மண்சேறுபோல் குவியப்பெற்ற குவியல்கள்
உலர்ந்த பதத்தை அடைவதற்கு முன்னர்
பழிச்சொல் எழுந்துவிட்டது இந்த ஆரவாரமுள்ள ஊரில்.
					மேல்
# மதுரை கொல்லன் புல்லன்
# 373 குறிஞ்சி
நிலம் இடம்பெயர்ந்தாலும், நீரானது தன் இயல்பில் மாறுபட்டு வேறொன்றாக ஆனாலும்
ஒளிரும் அலைகளையுடைய பெரிய கடலுக்கு எல்லை தோன்றினாலும் (கெட முடியாத நட்பு),
கொடிய வாயினராகிய பெண்டிரின் பழிமொழிக்கு அஞ்சி
என்ன கெடுதலை உடையதாகும்? தோழி! நீண்ட மயிரினையும்
கடிய பல்லினையும் கொண்ட கருங்குரங்கின் கறைவாய்ந்த விரல்களையுடைய ஆண்குரங்கு
பக்கத்தில் தோண்டியதால் உடைந்த பூமணம் கமழும் பலாப்பழம்
காந்தள் நிறைந்த அழகிய சிறுகுடி முழுக்கக் கமழும்
உயர்ந்த மலைநாட்டினனுடன் அமைந்த நம் நட்பு -
					மேல்
# உறையூர் பல்காயனார்
# 374 குறிஞ்சி
நம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து
மறைத்து வைத்திருந்த செய்தியை வெளிப்படையாகப் பேசிய பின்னர்
மலைகள் பொருந்திய இடத்தைச் சேர்ந்த நம் தலைவன் நம்மிடம் வந்து வேண்ட
நல்லதையே விரும்பும் கொள்கையினால் கருத்துகள் ஒன்றுபட்டன;
வளைந்த சிறகுகளையுடைய தூக்கணங்குருவி
உயரமான கருத்த பனைமரத்தில் கட்டிய
கூட்டைப் பார்க்கிலும் கதைபின்னிக்கொண்டிருந்த இந்த ஊரும் நம்மோடு ஒன்றிப்போயிற்று.
					மேல்
# 375 குறிஞ்சி
வாழ்க! தோழியே! இன்று நம் காதலர்
வராமலிருந்தால் நல்லது; மலைச்சரிவில்
சிறுதினை விளைந்த அகன்ற இடமுடைய பெரிய தினைப்புனத்தில்
இரவில் கதிரறுப்பாரைப் போன்று தொண்டகச் சிறுபறை
நள்ளிரவான நடுச்சாமத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கும் -
இரவுக்காவலர் உறங்காமலிருக்கும்பொருட்டு-
					மேல்
# படுமரத்து மோசி கொற்றன்
# 376 நெய்தல்
உயர்ந்த உயிரினங்கள் அறியாத நெருங்குவதற்குக் கடினமான பொதிகை மலையில் உள்ள
தெய்வங்களுடைய மலைப்பக்கங்களில் உள்ள சந்தனத்தைப் போன்று
வேனிற்காலத்தில் குளிர்ச்சியையுடையவள்; பனிக்காலத்திலோ
நீரினை வாங்கிக்கொள்ளும் சூரியனின் கதிர்கள் சுருங்குவதால் கூம்பி, அழகாக
அசையும் வெயிலை உள்பொதிந்த தாமரை மலரின்
உள்ளிடத்தைப் போன்று சிறிதளவு வெம்மையினையுடையவள்
					மேல்
# மோசி கொற்றன்
# 377 குறிஞ்சி
மலர் போன்ற அழகிய மையுண்ட கண்களின் சிறப்புமிக்க நலம் தொலைய,
வளையல்கள் அழகிய மென்மையான தோள்களில் நெகிழ்ந்துபோனபோதும்
என் நோய்க்கு மாற்றான மருந்துஆகின்றது தோழி! உனக்குப் பொறுக்கமுடியவில்லையா?
நம்மால் அறிந்துகொள்வதற்கு முடியாத தலைவனோடு
நாம் செய்துகொண்ட ஒரு சிறிய நல்ல நட்பு -
					மேல்
# கயமனார்
# 378 பாலை
சூரியனையே காணாத மாண்புள்ள நிழல் படுவதாக;
மலையில் தொடங்கும் சிறிய வழியும், மணல் மிகப் பரவியதாய்
குளிர்ந்த மழை பெய்வதாகவும் ஆகுக; நம்மைப் பிரிந்து
ஒளிவிடும் இலையைக் கொண்ட நெடிய வேலையுடைய தலைவனோடு
மடப்பம் உள்ள மாமைநிறமுள்ள நம் பெண் போகின்ற பாலைநிலத்தில் -
					மேல்
# 379 பாலை
இன்று எங்கிருக்கின்றானோ? தோழி! குன்றினிலுள்ள
பழைய குழியைத் தோண்டிய குறவன், கிழங்கோடு
இடம் அகன்ற தூய மணியையும் பெறுகின்ற நாட்டினனாகிய தலைவன்
உன் அறிவு முதிர்ச்சியடையும் காலத்தில், செறிந்த வளையல்களையுடையாய்!
எமது இல்லத்துக்கு வருவாய் நீ என்று
பொங்கிவரும் கூந்தலைத் தடவிக்கொடுத்தவன் -
					மேல்
# கருவூர் கதப்பிள்ளை
# 380 பாலை
வானத்தின் இடமெல்லாம் மறையப் பரவி, வேந்தர்கள்
வெற்றியடைந்து ஒலிக்கின்ற முரசைப்போன்று நன்றாகப் பலமுறை முழங்கி
மழையை நிற்காமல் பொழிகின்றது மேகம்; காதலர்,
மிகவும் தொலைவான நாட்டிலுள்ளார், நம்மை நினைத்துப்பாரார்,
என்ன செய்வோம் தோழி? ஈங்கையிலுள்ள
வண்ணங்களுள்ள பஞ்சுவிரிந்த மலர்கள் உதிரும்படி
இதோ நம் முன் வந்துவிட்டது பனி பெய்யும் கடுமையான நாட்கள்.
					மேல்
# 381 நெய்தல்
முன்பிருந்த அழகு தொலைந்துபோய், தோள்களின் நலமும் மெலிந்துபோய்
அல்லலுற்ற நெஞ்சமொடு இரவிலும் தூங்காது,
மேனியில் பசலை பரந்து அழிந்துகொண்டிருப்பது -
வெள்ளைக் கொக்குகள் ஒலியெழுப்பும் குளிர்ந்த மணங்கமழும் கடற்கரைச் சோலையில்
பூக்கள் மிகுந்த சோலையில் உள்ள புதிய மலர்களைக் கலக்கி
குறுக்கெழும் அலைகள் உடைகின்ற துறையைச் சேர்ந்த தலைவனோடு 
ஒளிர்கின்ற பற்கள் வெளித்தெரியும்படி சிரித்ததனால் உண்டான பலன்தான் -
					மேல்
# குறுங்கீரன்
# 382 முல்லை
குளிர்ந்த மழைத்துளிகளை ஏற்றுக்கொண்ட பசிய கொடியுள்ள முல்லை
மொட்டுகள் வாய் திறந்தததனால் ஏற்பட்ட நறுமணம், புதரின்மேல்
பூக்கள் செறிந்திருக்கும் செம்முல்லையொடு தேன் மணக்கும்படி நெருங்கியிருக்க
புதிதாகப் பெய்கின்றது மழையே! இது திடீர்மழை இல்லை,
கார்காலத்து மழையே இது கார்ப்பருவம் என்றால்
வந்திருக்கமாட்டாரோ நம் காதலர்?
					மேல்
# படுமரத்து மோசி கீரன்
# 383 பாலை
நீ சரியென்று சொன்னதால், நான் கூட்டிவர வந்து
குறிப்பிட்ட இடத்தில் நிற்கின்றான் குன்றுகளைச் சேர்ந்த தலைவன்;
இன்றுமட்டும் போகட்டும் என்கிறாய்;
என் கையும் காலும் செயலற்று வருந்த
தீயில் இடப்பட்ட தளிரைப்போல் நடுங்குவதைத் தவிர
வேறொன்றும் இல்லை நான் செய்யத்தக்கது.
					மேல்
# ஓரம்போகியார்
# 384 மருதம்
உழுந்துக்காயின் நெற்றை அடிக்கும் தழும்பேறிய கோல்போன்ற கரும்பு வரைந்த பருத்த தோள்களையும்
நீண்ட பலவான கூந்தலையும், குறிய வலையலையும் கொண்ட மகளிரின்
பெண்மை நலத்தௌ நுகர்ந்துவிட்டி அவரைக் கைவிடுவாயின்
மிகவும் நன்றாக இருக்கிறது தலைவனே! உனது வாக்குறுதிகள்!
					மேல்
# கபிலர்
# 385 குறிஞ்சி
பலாமரத்தில் பழுத்த பழங்களை நிறையத் தின்னும் கூட்டமான ஆண்குரங்குகள்
நாணொலி எழுப்பும் வில்லையுடைய குறவனின் செம்மையான அம்புக்கு அஞ்சி
போர்க்களத்தில் இருக்கும் குதிரையைப் போன்று பொங்கியெழுந்து, மலைச் சரிவில்
பெரிய மூங்கிலின் நீண்ட கோல்கள் அசையும்படி பாயும்
பெரிய மலைப்பக்கத்தையுடைய நம் தலைவன், என்றுமே
அன்றிருந்ததைப் போன்ற நட்பையுடைவன்,
என் மணம்குறித்து வரும் புதியவர்களையுடையது இந்த ஆரவாரத்தையுடைய ஊர்.
					மேல்
# வெள்ளிவீதியார்
# 386 நெய்தல்
வெள்ளை மணல் பரவிய மலர்கள் செறிந்துகிடக்கும் கடற்கரைச்சோலையில் உள்ள,
குளிர்ந்த அழகிய கடல்துறையையுடைய தலைவன், நம்மைப் பிரியாத காலத்தில்
தூய அணிகலன்களையுடைய மகளிர் விழாவின்பொருட்டு அணிகலன்களைத் தொகுக்கின்ற
மாலைக்காலத்தையே அறிந்திருந்தேன்; மலைக்காலமானது,
நிலம் பரந்துகிடப்பதைப் போன்ற துன்பத்தோடே
தனிமைத்துயரத்தையும் உடையது என்பதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை.
					மேல்
# கங்குல் வெள்ளத்தார்
# 387 முல்லை
பகற்பொழுது கழிய, முல்லை மலர,
ஞாயிறு தன் சினம் தணிந்த செயலற்ற இந்த மாலைப்பொழுதை
உயிரை எல்லையாகக் கொண்டு நீந்திக்கழித்தேனென்றால்,
என்ன பயன்? வாழ்க தோழியே!
இரவாகிய வெள்ளம் கடலைக்காட்டிலும் பெரியதாக இருக்குமே!
					மேல்
# ஔவையார்
# 388 பாலை
நீரின் காலடியில் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் வரிசையான இதழ்களைக் கொண்ட குவளை மலர்
மேல்காற்று மோதினாலும் வாடிவிடாதாகும்;
கவண் கயிற்றைப் போன்ற கழுத்தில் மாட்டிய பூட்டுக்கயிறு தேய்த்தலால் வருந்தும்
உமணர்களின் காளைகள் பூட்டிய வண்டிகளின் தொகுதியை வரிசையாக நிறுத்தினாற் போன்று தோன்றும்
உலர்ந்த கிளையைப் பிளக்கும் வலிமை இல்லாததினால்
யானை தன் துதிக்கைகையை மடித்துக்கொண்டு வருந்தும்
பாலைநிலமும் இனியதாகும் உம்மோடு வந்தால்-
					மேல்
# வேட்ட கண்ணன்
# 389 குறிஞ்சி
நெய்யொழுகும் காடையின் கறியைக் குழம்பாக வைத்த
அருமையான உண்ணும் சோற்றினைப் பெறுவானாக , தோழி! 
பெரிய மலைகளையுடைய நாட்டினன் மணமுடிக்க வருவான் எனக்கூறிய, அவன் எதிரே நின்றவனை
நலமோ மகனே என்றேன்;
நலமே என்று உரைத்த அவன் -
					மேல்
# உறையூர் முதுகொற்றன்
# 390 பாலை
ஞாயிறும் ஒளிமங்கிப்போயிற்று; முழக்கத்தைக் கேட்பாய்!
செல்லவேண்டாம், சிறிய பெண்யானை போன்ற இவளின் துணைவனே!
பகைவரின் இடத்தில் கொள்ளும் சீற்றத்தைப் போல, வணிகர்கூட்டம் வந்து சேர்ந்ததாக
வளையை அணிந்த நெடிய வேலை ஏந்தி,
காவற்காட்டில் வந்து மீள்கின்ற தண்ணுமை என்னும் முரசொலியின் - 
					மேல்
# பொன்மணியார்
# 391 முல்லை
வெறுத்துப்போன ஆண்பன்றிகள் நிலத்தைக் கிளறாமல் சோம்பியிருக்க,
புள்ளிமான்கள் வெப்பத்தால் புழுங்கிய மழை நீங்கிய முல்லைநிலத்தில்
விரைந்து இடிக்கின்ற இடியால் பாம்புகளின் படம் மடங்கும்படி,
இடியுடன் கலந்து மழை இனிதாகப் பெய்தது;
அப்படிப் பெய்த பெரிய மழையைத் தொடர்ந்து, பிரிந்துறையும் மகளிர்
செயலற்றுப்போக வந்த துன்பம் தரும் மாலைப்பொழுதில்
பூக்களையுடைய கிளையில் இருந்த பிளவுபட்ட கண்களையுடைய மயில்கள்
பாய்கின்ற நீருள்ள அகன்ற இடத்தில் தனிமைத்துயரம் தோன்றும்படி
கூவும் தோழி! மிக்க அறியாமையுடையன!
					மேல்
# தும்பிசேர் கீரனார்
# 392 குறிஞ்சி
வாழ்க! நீலமணி போன்ற சிறகுகளைக் கொண்ட தும்பியே!
நல்ல சொற்களைச் சொல்வதற்கு அச்சம் வேண்டாம்; தலைவரின் நாட்டிலுள்ள
மற்ற மலைகளைக்காட்டிலும் உயர்ந்த அந்த மலைக்குச் சென்றால்,
கடமை மான்கள் நெருங்கி இருக்கும் தோட்டத்திலுள்ள அழகிய சிறுதினையில்
களைக்கொத்தால் கொத்துவதால் எழுந்த நுண்ணிய புழுதி படிந்த களையெடுப்போரின் தங்கை
தம் வீட்டாரைவிட்டு இன்னும் விலகவில்லை என்று சொல்வாயாக! அரசர்களின்
வரிசையாகச் செல்லும் கேடயங்களைப் போல
தேன்கூடுகள் தொங்கும் மலையைச் சேர்ந்த தலைவருக்கு-
					மேல்
# பரணர்
# 393 மருதம்
கலந்து கோத்த மலர்களையுடைய மாலை குழைந்துபோகும்படியாக, தலைவன்
தழுவிய நாட்கள் மிகச் சிலவே; அதனால் எழுந்த பழிச்சொல்லோ,
கோட்டான்களாகிய கோழிகளையுடைய வாகை என்னும் போர்க்களத்தில்
பசும்பூண் பாண்டியனின் செயல்திறம் மிக்க அதிகன் என்பான்
தன் யானையோடு இறந்தபோது
ஒளிறும் வாள்களையுடைய கொங்கர் எழுப்பிய கூச்சலினும் பெரியது.
					மேல்
# குறியிறையார்
# 394 குறிஞ்சி
முழந்தாளையுடைய கரிய பெண்யானையின் மெல்லிய தலையையுடைய கன்று
கள் மிகுதியாக உள்ள பாக்கத்தில் உள்ள குறத்தி ஈன்ற
குட்டையான கைகளையுடைய புதல்வரோடு சுற்றிச்சுற்றி ஓடி,
முற்காலத்தில் இனியதாக இருந்து, பிற்காலத்தில்
அவரின் தினைப்புனத்தில் மேய்ந்ததைப் போல்
பகையாகிப்போனது அவர்கூட நாம் விளையாடிய நகை விளையாட்டு.
					மேல்
# 395 பாலை
என் நெஞ்சமோ, பொறுமையாயிரு என்று நான் சொல்வதைக் கேட்காது; தலைவரோ
நம்மிடத்தில் அன்பு இல்லாததினால் அருளை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை;
இரக்கமின்மையால் வலிந்து செல்லமுற்படுகிறார் -
பாம்பு விழுங்கும் திங்களுக்கு உதவமுடியாத உலகத்தோர் போல
என் துன்பத்தைக் களைய முடியாவிட்டாலும் கண்ணை மூடி இனிதே தூங்குகிறார்;
அஞ்சவேண்டாம் என்று சொல்பவரும் இல்லை; 
இரங்கத்தக்கது நாணம்!
அங்கே அவர் வசிக்கும் இடத்திற்கு நீங்கிச் சென்றால்-(நாணம் அழிந்துபோகும்)
					மேல்
# கயமனார்
# 396 நெய்தல்
பாலைப் பருகமாட்டாள்; பந்து விளையாட்டை விரும்பமாட்டாள்
விளையாட்டுத் தோழியருடன் விளையாடிக்கொண்டிருப்பவள், இப்பொழுதெல்லாம்
சுலபமானது என்று நினைக்கிறாள் போலும்! உலர்ந்த கிளைகளையுடைய
ஓமை மரத்தைக் குத்திய ஏந்திய கொம்பினைக் கொண்ட ஆண்யானை
வேனில்காலத்து மலையின் வெப்பமிக்க பாறைகளுள்ள சரிவில்
முகில்கள் முழங்கும் கடும் ஒலியை உற்றுக்கேட்கும்
மூங்கில்கள் வாடிப்போன செல்வதற்கரிய பாலைநிலத்தில் தலைவனோடு செல்லுதல் -
					மேல்
# அம்மூவன்
# 397 நெய்தல்
அரும்புகள் முதிர்ந்த ஞாழலின் தினைமணிகளைப் போன்ற திரண்ட பூக்கள்
நெய்தலின் பெரிய மலரில் பெய்தது போல
குளிர்காற்று தூவிவிடும் வலிய கடற்கரைத் தலைவனே!
தாய் மாறுபட்டுத் தன்னை வருத்திய பொழுதும் வாய்விட்டு,
அம்மா என்று கூவும் குழந்தை போல
இன்னாதவற்றைச் செய்தாலும், இனியவற்றை அளித்தாலும்
உன் எல்லைக்குட்பட்டவளே என் தோழி!
தானுற்ற மிக்க துன்பத்தைக் களைவார் அவளுக்கு இல்லை.
					மேல்
# பாலை பாடிய பெருங்கடுக்கோ
# 398 பாலை
நாம் அறிந்திலேம் தோழி! குளிரும்படி
தூவுகின்ற மழைத்துளியையுடைய துயரம் மிக்க பொழுதில்
கயல்மீனை ஒத்த மையுண்ட கண்களையுடைய பொன் குழைகளையுடைய மகளிர்
தம் கையினால் நெய்யை வார்த்து ஏற்றிய
விளக்குகள் துயரத்தை உண்டாக்குவதற்குக் காரணமான துன்பத்தையுடைய மாலைப்பொழுதில்
பெறுதற்கரிய தலைவர் வந்தாராக, விருந்து செய்து
உடம்பு பூரிக்கும் மகிழ்ச்சியினால் உண்டாகும்
கண்கள் கலங்கியதால் வீழ்கின்ற துளியைத் துடைப்போரை - 
					மேல்
# பரணர்
# 399 மருதம்
ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் கூடிய
பாசியைப் போன்றது பசலைநோய்; காதலர்
தொடும்பொழுதெல்லாம் நீங்கி,
அவர் விடும்பொழுதெல்லாம் மீண்டும் பரந்துவிடுகிறது.

# பேயனார்
# 400 முல்லை
தொலைவான வழியில் சென்றால், துன்பத்தை இன்றே
களையமாட்டோம் காமநோயையுடைய பெரியதோளையுடைய தலைவிக்கு என்று 
நல்லதை விரும்பி நினைத்த மனத்தையுடையவனாகி
பருக்கைக்கற்கள் நிறைந்த மேட்டுநிலப் பரப்பு நொறுங்கிப்போகும்படி சென்று, கரம்பை நிலத்தில்
புதுவழியை உண்டாக்கிய அறிவுடைய பாகனே!
இன்று நீ கொண்டுவந்து சேர்த்தது தேரினையோ?
நோயினால்,வருந்தி வாழும் தலைவியை எனக்குத் தந்தாய்!
					மேல்
# அம்மூவன்
# 401 நெய்தல் 
அடப்பங்கொடியின் ஆராய்ந்தெடுத்த மலர்களைக் கலந்து, நெய்தல் மலரின்
நீண்ட மாலையை அணிந்த நீர் ஒழுகும் கூந்தலையுடைய
விளையாட்டு மகளிரைக் கண்டு அஞ்சி, நீரமுள்ள நண்டு
கடலைநோக்கி ஓடும் துறையையுடையவனான தலைவனொடு ஒரு நாள்
சிரித்து விளையாடுதலையும் போக்கியது;
இது வியப்புக்குரியது! அவனுடைய மேனியில் தோய்ந்த நட்பு.